புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
70 Posts - 77%
heezulia
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
8 Posts - 9%
mohamed nizamudeen
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
235 Posts - 76%
heezulia
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_lcapரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_voting_barரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி உடல் நலச்செய்திகள் ..!


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 14 May 2011 - 16:32

First topic message reminder :

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 14-rajinikanth300-1

சென்னை: வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

நேற்று அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.

இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவர் முழு உடல் பரிசோதனைக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவாரா அல்லது உடனடியாக வீடு திரும்புவாரா என்பது தெரியவரும்.

இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக ராமச்சந்திரா மருத்துவமனை சென்றுள்ளார், என்றனர்.
தட்ஸ்தமிழ்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 18 May 2011 - 11:25

ரஜினிக்கு என்னதான் பிரச்சினை... ஒரு முழு ரிப்போர்ட்!

ரஜினிக்கு என்னதான் பிரச்சினை என்று நாடு முழுவதிலும் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.ரஜினி ஆரம்பத்தில் அஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்றவற்றால் அவதிப்பட்டார்.

இது அவர் ராணாவுக்காக 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாக மேற்கொண்ட கடும் உடற்பயிற்சி மற்றும் டயட்டின் விளைவு. அதன் தொடர்ச்சியான விளைவுகளாக, நுரையீரலில் நோய்த் தொற்று மற்றும் இரைப்பை அழற்சி போன்றவை அவரைச் சற்று கடுமையாக பாதித்துள்ளன.

நுரையீரலில் தேங்கும் திரவம்

ரஜினிக்கு நீண்ட காலமாக புகைப் பழக்கம் இருப்பதால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவரது அண்ணன் சத்யநாராயணாராவ் கெய்க்வாடும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் மூலம் நோய் எதிர்ப்புக்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள நோய்த் தொற்றை அடியோடு நீக்கி வருகின்றனர்.


இந்தப் பிரச்சினை காரணமாக அவருக்கு நுரையீரலுக்கும் இதயப் பகுதிக்கும் இடையே திரவம் (Fluid) அதிகளவு தேங்குகிறது. இந்த திரவம் நுரையீரல்களை அழுத்தி மூச்சு விட சிரமப்பட வைக்கும்.

மேலும் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் தேங்கும் திரவத்தை பெருமளவு அகற்ற முயன்று, அதில் நல்ல வெற்றியும் கிடைத்துள்ளது மருத்துவர்களுக்கு. இந்த சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ரஜினி தெம்பாகியுள்ளார்.

சிறுநீரகம் செயல்படுவதில் சிக்கல்

நுரையீரலில் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை காணப்படுகிறதாம். காலில் வீக்கம் ஏற்பட முக்கிய காரணம் இதுவே.

ஆனால் இது மிக ஆரம்ப நிலை என்பதால் சீக்கிரமே சரிப்படுத்திவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நுரையீரல் பிரச்சினை சரியாகிவிட்டாலே, சிறுநீரக ஒழுங்கின்மையும் ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புற்றுநோய் அறிகுறி இல்லை

இப்போது ரஜினியின் திசுக்கள் சோதனை முடிவும் வந்துவிட்டன. ரஜினிக்கு புற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய நடத்தப்பட்ட சோதனை இது. ஆனால் அவருக்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துள்ளது.

உற்சாகத்தில் ரஜினி - மருத்துவமனை அறிக்கை

ராமச்சந்திரா மருத்துவமனையின் இரண்டாவது செய்திக் குறிப்பில், பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ரஜினிக்கு இப்போது கிசிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலத்தை முழுமையாக கண்காணிப்பதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நூரையீரலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பிறகு ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது முக்கிய உறுப்புகள் அனைத்தும் இயல்பாக செயல்படுகின்றன.

பார்வையாளர்களை சந்திப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ளும்படி ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவரை முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள், என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வது எப்போது?

நுரையீரல் பிரச்சினை முற்றாக சரியாகிவிட்டால் வெளிநாட்டுக்குச் செல்ல தேவையில்லை என்கிறார்கள். சிறுநீரகக் கோளாறுகளை இங்கேயே சரி செய்துவிட முடியும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



cnn




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 18 May 2011 - 14:03

ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 678642 ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 678642 ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 678642



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 18 May 2011 - 14:05

புன்னகை ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 154550




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed 18 May 2011 - 20:50

சென்னை: சுவாச கோளாறு மற்றும் இரைப்பை அழற்சியை சரிசெய்ய தேவையான-முழுமையான சிகிச்சைகள் இப்போது ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஹீமோகுளோபின் அளவிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது," என்று ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுவாச கோளாறு மற்றும் இரைப்பை அழற்சி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார் ரஜினி.

அவருடைய உடல்நிலை பற்றி ஒரு நாளைக்கு இருமுறை மருத்துவமனை நிர்வாகமும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் மருத்துவ அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் குழு வெளியிட்ட நேற்றைய செய்திக் குறிப்பு:

"பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13-ந் தேதி மாலை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாச குழாய் தொற்று மற்றும் குடல் நோய்க்காக உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, டாக்டர்கள் குழு தேவையான-முழுமையான சிகிச்சை அளித்தார்கள்.

அவருடைய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது. அவர் குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.''

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எப்போது வீடு திரும்புவார்?

ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு, 'ஹீமோகுளோபின்' அளவு குறைவாக இருந்தது என்றும், சிகிச்சைக்குப்பின், அவருக்கு 'ஹீமோகுளோபின்' அளவு அதிகரித்திருப்பதாகவும், எனவே இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்றும் சிகிச்சை அளிக்கும் டாக்டர் தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed 18 May 2011 - 20:51

சென்னை: "ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வருவார். திரையுலகை ஆள்வார். நவீன மருத்துவத்தின் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது,'' என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

ரஜினி உடல்நிலை பற்றி அவரது மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:

"உள்ளூர் தமிழர்கள் பலரும், உலக தமிழர்கள் சிலரும் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து என்னோடும், என் அலுவலகத்தோடும் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக ஆழ்ந்த கவலை தெரிவிப்பதனால் இந்த அறிக்கை வெளியிட நேர்கிறது.

அனைவருக்கும் ஆறுதல் வழங்கும் என்பதனால் மருத்துவமனைக்கே நேரில் சென்று திரட்டிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால் பரபரப்பாக பரப்பப்படும் அளவுக்கு அவர் உடல்நிலை சீர்கெடவில்லை.

பக்க விளைவுகள்

நுரையீரல் தொற்று காரணமாக அவரது சுவாசத்தில் சிறிது சிரமம் ஏற்பட்டது என்றும், அதனால் நேர்ந்த சிறிய பக்கவிளைவுகளுக்கு அவர் உரிய மருந்து உட்கொள்கிறார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு உடற்சோர்வு உள்ளது. மனச்சோர்வு இல்லை.

குடும்ப உறுப்பினர்களைப்போல் மருத்துவர்களும், மருத்துவர்களைப்போல் குடும்ப உறுப்பினர்களும் அவரை பொறுப்போடும், பரிவோடும் பார்த்துக்கொள்கிறார்கள்.

13-ம் தேதி என்னோடு பேசிய ரஜினி...

வதந்திகளை பரப்பாதீர்கள். நம்பாதீர்கள். அவரை பற்றிய மிக மோசமான வதந்தி பரப்பப்பட்ட 13-ந் தேதி மாலை 6-10 மணிக்கு என்னோடு அவர் தொலைபேசியில் பேசினார். தேர்தல் முடிவுகள் குறித்த சில கருத்துகளை சிறிது நேரம் என்னோடு பகிர்ந்து கொண்டார்.

வதந்தி பற்றி நானும் சொல்லிக்கொள்ளவில்லை. அவரும் கேட்டுக் கொள்ளவில்லை. மறுநாள் அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறியப் பெற்றேன்.

நவீன மருத்துவம்

"நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'' என்பதனால் மருத்துவர் குழு, அவர் நோய்க்கான வேர்களை ஆய்ந்து வருகிறது.

நவீன மருத்துவத்தின் மீதும், நம் நாட்டு மருத்துவர்களின் மீதும் நமக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. ரஜினி விரைவில் மீண்டு வருவார். தமிழ் திரையுலகை தொடர்ந்து ஆண்டு வருவார் என்று ரசிகர்கள் நம்பலாம்.

உணர்ச்சி வசப்பட்டு எந்த ரசிகரும் வதந்திகளை நம்பி தவறான முடிவுக்கு தள்ளப்பட்டு விட வேண்டாம். ஏனென்றால் ரஜினியின் உயிரைப் போலவே உங்கள் உயிரும் உயர்ந்தது. உடல்களில்தான் பேதம் உண்டு. உயிர்களில் பேதம் இல்லை. எனவே மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான அறிக்கையை மட்டுமே நம்புங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரஜினி உடல் நலச்செய்திகள் ..! - Page 4 Scaled.php?server=706&filename=purple11
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Thu 19 May 2011 - 1:20

வைரமுத்து சொல்வார் அவருக்கென்ன என் தலைவர் எனக்கு வேண்டும் - அன்புடன் மாஸ் பாலக்கோடு

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Thu 19 May 2011 - 1:22

சச்சின் வருவார் பிரகாசிப்பார் நான் எதாவது சொன்னேனா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 19 May 2011 - 1:25

சூப்பருங்க மகிழ்ச்சி சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 19 May 2011 - 7:37

முத்தியாலு மாதேஷ் wrote:வைரமுத்து சொல்வார் அவருக்கென்ன என் தலைவர் எனக்கு வேண்டும் - அன்புடன் மாஸ் பாலக்கோடு
வைரமுத்து சொன்னதில் என்ன தவறு ! அநியாயம் ரஜினி குணமடைய நாமும் பிரார்த்தனை செய்வோம் ஐ லவ் யூ

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Thu 19 May 2011 - 9:52

கவிப்பேரரசின் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை நம்புவோம்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக