புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_m10ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 02, 2011 9:09 am

First topic message reminder :

பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவர் ஒசாமாபின்லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பின்லேடனின் உடலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, விரைவில் அறிக்கை வெளியிட இருக்கிறார்.

பாகிஸ்தானில் கொலை : அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., பாகிஸ்தானில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது , தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு தங்கும் விடுதியில் சுற்றி வளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அண்மையில் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருப்பதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒசாமா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்ட பயங்கரவாதி. அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர் ஒசாமா தேடுதல் வேட்டையை அமெரிக்கா முடுக்கி விட்டது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக ஒசாமா செயல்பட்டது அமெரிக்க புலனாய்வில் தெரியவந்தது. ஒசாமாவின் இருப்பிடம் ரகசியமாகவே இருந்து வந்தது. அவ்வப்போது ஒசாமா தோன்றும் வீடியோ காட்சிகள் மட்டும் ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா தற்போது பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்குவைதா எச்சிக்கை : அண்மையில் அல்குவைதா பயங்கரவாத இயக்கம் வெளியிட்ட சி.டி., யில்., தங்கள் தலைவர் ஒசாமாவை கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நன்றி தினமலர்



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue May 03, 2011 10:47 am

10 வருட முன்பு தாடி நரைத்து உள்ளது... இப்போ கருப்பாக உள்ளது டைய் அடித்து இருப்பாரோ..? ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 838572



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 03, 2011 10:50 am

Tamilzhan wrote:10 வருட முன்பு தாடி நரைத்து உள்ளது... இப்போ கருப்பாக உள்ளது டைய் அடித்து இருப்பாரோ..? ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 838572
ஆகா என்ன அருமையான சிந்தனை நம்ம தமிழனுக்கு புன்னகை

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue May 03, 2011 10:59 am

எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பார்போம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 03, 2011 12:01 pm

ஆரம்பிச்சிட்டாங்கைய்யா! இது கொஞ்சநாள் வலம் வரும் புன்னகை

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 03, 2011 1:15 pm

vவாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் வீழ்த்தப்பட்டு விட்டார். ஒரு பயங்கர தீவிரவாதியை அமெரிக்கா வீழ்த்தி விட்டது. ஆனால் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால், ஒரு காலத்தில் இதே பின்லேடன் எந்த அளவுக்கு அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது தெரிய வரும், கூடவே ஆச்சரியமும் சேர்ந்து வரும்.


உலகிலேயே பெரும் விலை வைக்கப்பட்ட தீவிரவாதி பின்லேடன்தான். அவரது தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை வைத்திருந்தது அமெரிக்கா. அப்படிப்பட்ட லேடனை, அப்போத்தாபாத்தில் வைத்து வீழ்த்தி விட்டது அமெரிக்கா.

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 03osamazawahiri1200



சரி இப்போது கடந்த காலத்தை 'ரீவைண்ட்' செய்வோம்...

1979ம் ஆண்டு தனது கல்லூரிப் படிப்பை முடித்தார் செளதி அரேபியாவின் பெரும் செல்வந்தரான பின்லேடன். படிப்பை முடித்த சூட்டோடு, ஆப்கானிஸ்தானில் எழுந்த சோவியத் ஊடுறுவலுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்ந்தார் பின்லேடன். அந்தப் போராட்டத்திற்கு பின்புலமாக இருந்து முழு ஆதரவையும் அப்போது கொடுத்தது அமெரிக்காவின் சிஐஏ.

1979 முதல் 1989ம் ஆண்டு வரை அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க அதிபர்களாக இருந்த ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட் ரீகன் ஆகியோரின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவின் கீழ் நடந்து வந்த அந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆயுதம், நிதியுதவி உள்ளிட்டவற்றைக் கொடுத்து ஆதரித்து தூண்டி விட்டு வந்தது அமெரிக்கா.

அந்தப் போராட்டத்தின்போது, பின்லேடன் தனது தலைமையில் ஆப்கானிஸ்தானிலிருந்தபடி இஸ்லாமிய ஜிஹாத் முஜாஹிதின் என்ற அமைப்பை உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த அமைப்புக்குத் தேவையான பயிற்சிகளையும், ஆயுத உதவிகளையும் அமெரிக்காதான் முழுமையாக அளித்தது.

அதாவது பின்லேடனை ஆயுதப் போராட்டத்தில் திறம்பட செயல்பட பயிற்சி கொடு்ததது அமெரிக்கா. எப்படி நவீன ஆயுதங்களைக் கையாள்வது, எதிரிகளை எப்படி அழிப்பது உள்ளிட்ட பால பாடங்களை சொல்லிக் கொடுத்தது அமெரிக்கா.

ஆபரேஷன் சைக்ளோன், ரீகன் டாக்ட்ரைன் என்ற பெயர்களில் இந்த உதவிகளை அள்ளிக் கொடுத்தது அமெரிக்கா- பின்லேடன் குழுவுக்கு. அதாவது பின்லேடனை ஒரு முழுமையான போராளியாக, தீவிரவாதியாக வளர்த்து, வார்த்தெடுத்து, உருவாககியதே அமெரிக்காவின் சிஐஏ தான்.

அதை விட ஒரு படி மேலே போய், பின்லேடன் தலைமையிலான போராட்டக் குழுவினரை, ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று ரீகன் வானளாவ புகழ்ந்தார். வரலாற்றின் பக்கங்களில் இன்றளவும் அழிக்க முடியாத அளவுக்கு அது அழுத்தமாகவே பதியப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா- ரஷ்யா இடையிலான பனிப் போர் முடியும் வரையில்தான். அதன் பிறகு அமெரிக்கா பல்டி அடித்தது. ரஷ்யாவுடன் நட்பை உருவாக்கிக் கொண்டது அமெரிக்கா. ரஷ்யாவும் 1989ல் ஆப்கானிஸ்தானை விட்டு விலகியது.

இதனால் பின்லேடன் தலைமையிலான குழுவினரை ஆயுததாரிகளாகப் பார்க்க ஆரம்பித்தது அமெரிக்கா. அவர்களைக் கைவிட்டது. அதாவது தனது வேலை முடிந்ததும் அப்படியே திராட்டில் விட்டுவிட்டது அமெரிக்கா. ஆனால், அதுவரை சோவியத் யூனியனுக்கு எதிராக ஆயுத போராட்டங்கள் நடத்தி வந்த பின்லேடனும் அவரது சகாக்களும், ஓயவில்லை.

தங்களை உருவாக்கிய அமெரிக்காவுக்கு எதிராகத் திரும்பினர். அதற்கு முக்கிய காரணங்கள் 3. சோவியத் யூனியனை எதிர்க்க ஆப்கானிஸ்தானை ஒரு போர்க் களமாக பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்தவுடன் அந்த நாட்டுக்கு எந்த உதவியும் செய்யாமல் போனது, ஈராக் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பு, ஈராக் மக்களை குறிப்பாக குழந்தைதகளை மருந்து கூட கிடைக்காமல் கொடூரமாக உயிரிழ்க்கச் செய்த பொருளாதாரத் தடைகள் ஆகியவை 2 காரணங்கள்.

ஆனால், மிக முக்கியமான காரணம் பாலஸ்தீனப் பிரச்சனை. பாலஸ்தீனத்தை கைப்பற்றி, அந்த நாட்டிலேயே இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி, பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் அடிமையாக்கியதை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்கள் தான் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கரு.

இஸ்ரேல் என்ன செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல், இஸ்ரேலை தொடர்ந்து தட்டிக் கொடுத்த அமெரிக்காவுக்கு எதிராக தனது சக்தி முழுவதையும் திருப்பினார் பின்லேடன். பாலஸ்தீன மக்களை அடிமையாக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்க அல்கொய்தா தீவிரவாத அமைப்பை உருவாக்கினார் பின்லேடன். இப்படித்தான் பின்லேடன் அமெரிக்காவின் எதிரியாக மாறினார்.

ஆனால், இந்த இடத்தில் தான் சிஐஏ உளவு விஷயத்தில் தனது பெரும் தோல்வியைத் தழுவியது. தங்களால் கைவிடப்பட்ட பின்லேடன் என்ன செய்கிறார் என்பதை கவனிக்காமல் விட்டுவிட்டது.

இந் நிலையில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக விளங்கிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பியது. இதற்காக ஆப்கானில்தானின் மாணவர்களை முல்லா ஒமர் தலைமையில் ஒன்று திரட்டியது ஐஎஸ்ஐ. இந்த மாணவர்களுக்கு ஆயுத பயிற்சியும் பணமும் ஆயுதங்களும் தரப்பட்டன.

இந்த மாணவர் படை தான் தலிபான் ஆக உருவெடுத்தது. சோவியத் யூனியன் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த அதிபர் முகம்மத் நஜீபுல்லாவை இந்தப் படை எதிர்க்க ஆரம்பித்தது.

இவர் கம்யூனிஸ ஆதரவாளர் என்பதால், அவரை ஆட்சியை விட்டு விரட்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும் தலிபான்களுக்கும் அமெரிக்காவும் ஆதரவு தந்தது. 1992ம் ஆண்டு தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றி நஜீபுல்லாவை அடித்துக் கொலை செய்து, ஜீப்பில் உடலை கட்டி இழுத்து வந்து, காபூலில் ஒரு தெருவில் மின் கம்பத்தில் தொங்கவிட்டபோது, இப்படி ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமா என்று தலிபான்களைப் பார்த்து உலகம் அதிர்ந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் நஜீபுல்லா காலி என்று அமெரிக்கா மட்டும் மகிழ்ச்சியில் திளைத்தது.

இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கையில் நாடு சிக்கி சின்னாபின்னாமானது. ஆனால், தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை (லிபியாவில் கடாபியின் அடக்குமுறையை மட்டும் எதிர்ப்பார்களாம்!). ஆண்கள் கட்டாயம் தாடி வைக்க வேண்டும், தாடியை ட்ரிம் செய்தால் அடி-உதை, பெண்கள் தனியே வெளியே வந்தால் அடி, எந்தப் பெண் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் கல்லால் அடித்துக் கொல்வது என்று தலிபான்கள் வெறியாட்டம் போட்டபோதும் அமெரிக்காவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.

இப்படி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கே மிக மிக அமைதியாக தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் பின்லேடன். ஆட்சி நடத்த பணமில்லாமல் ஓட்டாண்டிகளான தலிபான்களுக்கு பணத்தைக் கொட்டிய பின்லேடன், அதற்குப் பிரதிபலனாக தனது அல்கொய்தா அமைப்பின் தீவிரவாதப் பயிற்சிகளை கண்டுகொள்ளக் கூடாது என்று நிபந்தனை போட்டார். இதை தலிபான்கள் ஏற்றனர்.

அல்கொய்தா மாபெரும் தீவிரவாதப் படையாக உருவெடுத்தது. உலகெங்கும் இந்தப் படைக்கு ஆள் திரட்டினார் பின்லேடன். குறிப்பாக தீவிர அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட பாலஸ்தீன இளைஞர்களை தன் பக்கம் கொண்டு வந்தார். அவர்களை வைத்து நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை பின்லேடன் தாக்கும் வரை அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் என்ற ஒரு நாடு இருந்ததே மறந்து போயிருந்தது தான் உண்மை.

முதல் முறையாக சூடானில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போரை தொடங்கினார் பின்லேடன். வெகு விரைவிலையே உலகின் மிகப் பெரிய தீவிரவாதியாக மாறிப் போனார்.

வளர்த்த கடா மார்பில் பாயந்த கதையாக, நியூயார்க் இரட்டை கோபுரங்களை அமெரிக்காவின் விமானங்களைக் கொண்டே தாக்கி அழித்தார் பின்லேடன். இதுதான் அமெரிக்காவை கடும் கோபம் கொள்ளச் செய்து, கடைசியில் அப்போத்தாபாத் வரை விரட்டி வந்து பின்லேடனை வீழ்த்தி ஓய்ந்துள்ளது.

அதேபோல அமெரிக்காவின் இன்னொரு முக்கிய 'நண்பர்' சதாம் உசேன். இரக்கமற்ற சர்வாதிகாரியாக அமெரிக்காவில் வர்ணிக்கப்பட்ட சதாம், ஆரம்பத்தில் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர். ஈரான்- ஈராக் இடையே 1980 முதல் 88 வரை நடந்த எட்டு ஆண்டு காலப் போரின்போது ஈராக்குக்கு முழுத் துணையாக இருந்தது அமெரிக்கா.

1979ல் ஈரானில் நடந்த புரட்சியைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளராக திகழ்ந்து வந்த மன்னர் ஷா முகம்மது ரெஸா பஹல்வி தூக்கி எறியப்பட்டார். அயத்துல்லா கொமேனி தலைமையின் கீழ் ஈரான் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈராக்கைத் தூண்டி விட்டு போரில் குதிக்க வைத்தது.

சதாம் உசேனும், அமெரிக்கா தந்த தெம்புடன்- அதன் உள்நோக்கத்தை அறியாமல்- படு உற்சாகத்துடன் ஈரானுடன் மோதினார். இதனால் சதாமுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. ஈரானும் சரி, ஈராக்கும் சரி பொருளாதார சீர்குலைவுக்குள்ளாகி, நாசமாகப் போனதுதான் மிச்சம். இத்தனைக்கும் காரணம் அமெரிக்காவின் குள்ளநரித்தனம்.

இதே சதாம் பின்னர் அமெரிக்காவின் பரம விரோதியானார். ஈரானுடன் நடந்த போரின்போது கிடைத்த புதிய தெம்பால் நாடு பிடிக்கும் ஆசைக்குத் தள்ளப்பட்ட சதாம், 1990ல் குவைத்துக்குள் ஊடுறுவினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, சதாமைக் கண்டித்தது. ஆனால் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை.

இதன் விளைவு இரண்டு முறை ஈராக்குடன் போரில் ஈடுபட்டது அமெரிக்கா. முதல் போரில் படு துணிச்சலாக அமெரிக்காவை எதிர்த்தார் சதாம். அவரது ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறியதே உண்மை. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அமெரிக்கப் படையின் தாக்குதலில் சிக்கிப் பலியானார்கள். இந்த முறை சதாமுக்கு பக்கபலமாக இருந்தது ரஷ்யா. ரஷ்யாவின் ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவை துணிச்சலுடன் சந்தித்தார் சதாம்.

இரண்டாவது முறையாக நடந்த அமெரிக்க- ஈராக் போரின்போது சதாமின் ஆட்சி அகற்றப்பட்டது. 2003ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பதுங்கு குழியில் சதாம் பிடிபட்டார். 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அவரை தூக்கிலிட்டது அமெரிக்க ஆதரவு ஈராக் கோர்ட்.

இப்படி எத்தனையோ விஷயங்களில் அமெரிக்காவின் இரட்டை வேடம், சுயநலத்தை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

பின்லேடன் மிகப் பயங்கரமான தீவிரவாதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களில் பலரால் அமெரிக்காவுக்கு ஆபத்து இல்லை என்பதால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறது அமெரிக்கா.

இப்படித்தான் 1990களில் பின்லேடனை கண்டு கொள்ளாமல் இருந்தது!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 Scaled.php?server=706&filename=purple11
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 03, 2011 2:17 pm

டி‌என்‌ஏ டெஸ்ட் எல்லாம் எடுத்து பிறகு தான் பின்லேடன் என்று உறுதி செய்தார்கள் என்று அறிவித்தார்கள் பார்போம்!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 2:21 pm

ஒசாமா மாதிரி ஏழு பேரை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பல இடங்களில் பதுக்கி வைத்து அமரிக்காவையே குழப்புவாத சொல்கிறார்கள். அதில் இரண்டாவது ஆள் தானாம் இது. இன்னும் ஐந்து ஒசாமாக்கள் இருக்கிறார்களாம்.



(ஏதோ நம்மலாள முடிஞ்ச ஒரு புரளியை கிளப்பி விடுவோம்)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 2:51 pm

ஒசாமா = ஒபாமா அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 03, 2011 3:09 pm

உலகுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒசாமா பின்லேடன்

ஆள்வதற்கு ஒரு சாம்ராஜ்யம் இல்லாத தனி மனிதரான பின்லேடன், பல சாம்ராஜ்யங்களிலும் தன் ஆதரவாளர்கள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்தார்.

அமெரிக்கா அவரை பிடிப்பதற்காக பல நூறு கோடிகளை செலவழித்தது. அவரை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட வேட்டையில் பல நூறு பேர் பலியானார்கள். அவர் தலைக்கு ரூ.12 கோடியை விலையாக அமெரிக்கா நிர்ணயம் செய்து இருந்தது. இந்த பணத்துக்காக அவரை காட்டிக்கொடுக்க யாரும் முன்வரவில்லை.

17-வது குழந்தையாக

54 வயதான பின்லேடன் கோடீசுவர தந்தைக்கு மகனாக சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் பிந்தார். இவர் தந்தை முகமது பின்லேடனுக்கு 22 மனைவிகள் அவர்களில் 11-வது மனைவியான அமிதியா அல் அட்டாஸ்க்கு பிந்தவர் தான் பின்லேடன். இவரது தந்தைக்கு இவர் 17-வது குழந்தையாக பிந்தார். இவர் தந்தைக்கு குழந்தைகள் பிந்தனர். பின்லேடன் பிந்தது 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி ஆகும்.

ஏமனில் வசித்த போது பின்லேடனின் தந்தை முகமது வறுமையில் திளைத்தார். குடும்பம் நடத்துவதற்கு போதிய அளவு வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டார். பின்லேடன் பிந்த பிகு தான் அவர் பிழைப்புக்காக சவுதிஅரேபியாவில் குடியேறினார். அங்கு அவர் கட்டிடம் கட்டும் காண்டிராக்ட் தொழிலில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று கோடிகளை குவித்தார். சவுதி அரேபிய மன்னருக்கு நெருக்கமானவராக திகழ்ந்தார்.

மேற்கத்திய கலாசாரத்தில் ஆர்வம்

படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டிய பின்லேடன் சவுதி அரேபியாவில் உள்ள மதீனா, ஜித்தா போன் இடங்களில் பள்ளிக்கூட படிப்பை முடித்தார். பின்பு ஜித்தாவில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் பற்றிய படிப்பில் சேர்ந்தார்.

தொடக்கத்தில் மேற்கத்திய நாட்டு பண்பாட்டில் திளைத்த ஒசாமா வாழ்க்கையை அனுபவிப்பதற்காக லெபனான் நாட்டில் பெய்ரூட் நகரில் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தார்.

அந்த கால கட்டத்தில் தான் அவர் தந்தை சவுதி அரேபியாவில் மதீனா, மக்கா நகரங்களில் உள்ள மசூதிகளை புதுப்பிக்கும் பணிகளை ஏற்Öர். இÛ நம்பிக்கையோடு அவர் அதை செய்ததால் பக்தி மார்க்கத்திலும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அப்போது தான் பின்லேடனின் வாழ்வில் பெரும் மாற்ம் ஏற்பட்டது. அவர் இஸ்லாமிய புனித நூல்களை படிக்க தொடங்கினார். பெய்ரூட்டுக்கு போவதை கைவிட்டார்.



22 வயதில் துப்பாக்கி தூக்கியவர்

பல்கலைக்கழகத்தில் படித்தபோதே துப்பாக்கியை தூக்கி விட்டார் பின்லேடன். அப்போது அவருக்கு வயது 22. மேற்கத்திய கலாசாரம் இஸ்லாமிய நம்பிக்கையாளர்களை தொடாமல் தடுப்பதற்கு புனிதப்போரும், துப்பாக்கியும் அவசியம் என்பதை படிக்கும்போதே உணர்ந்தார்.

1979-ம் ஆண்டு ரஷிய ராணுவம் ஆப்கானிஸ்தானில் உள்ள கம்ïனிஸ்டு ஆட்சியை காப்பாற்றுவதற்காக அந்த நாட்டுக்குள் நுழைந்தது. உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாடு முஸ்லிம் நாட்டை அடிமைப்படுத்தியது முஸ்லிம்களை கலவரப்படுத்தியது. எனவே, ஆப்கானிஸ்தானை மீட்பதற்காக புப்பட்ட புனிதப்போராளிகளுள் ஒருவராக பின்லேடன் பாகிஸ்தானுக்குள் நுழைந்தார். அங்கு தீவிரவாதிகளை உருவாக்குவதற்காக ஒரு பயிற்சி முகாமை தொடங்கினார்.

இந்த அமைப்புக்கு அல்கொய்தா என்று பெயரிடப்பட்டது. அல்கொய்தா என்Öல் அடித்தளம் என்று அர்த்தம். இதன் தலைமை நிதி ஆலோசகராக பின்லேடன் பணியாற்றினார்.

கோடி கோடியாக செலவழித்தார்

தீவிரவாதிகளை உலகம் முழுக்க தேடிப்பிடித்து கொண்டு வர ஒரே ஆண்டில் 90 நாடுகளில் பின்லேடனின் கிளைகள் தொடங்கப்பட்டன. பயிற்சி முகாமுக்கும், பயிற்சி பெறும் தீவிரவாதிகளுக்கும் உணவு, விமானக்கட்டண செலவு என அனைத்துக்கும் பின்லேடன் தன் பணத்தை கோடி, கோடியாக செலவழித்தார்.

ஆப்கானிஸ்தான் நிலைமையை பயன்படுத்தி பாகிஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து கோடி, கோடியாக பணம், பயிற்சி, ஆயுதம் என்று வாங்கி குவித்தது. இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக்கின் போக்கு பிடிக்காமல் பின்லேடன் சவுதிஅரேபியா திரும்பினார்.

ளகூஙுகீனகுஞ்ஞ்சி://ஞுஞுஞு.க்ஷஹகூஙீட்ஞ்குஹஙூஞ்குகூ.ஷச்ஙு/கூஙுஹகீக்சூ/ஙூக்ஞுசூ/20110503/ஙுசூ09.ங்சிகீள/கூஙுகீன

யுத்தத்தில் குதித்தார்

ரஷிய படைகளுக்கு எதிராக தீவிரவாதிகள் தலைதூக்கி கொரில்லா முÛயில் போர் செய்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல் ரஷிய ராணுவம் திணறுகிது என் தகவல் கிடைத்ததும் பின்லேடன் ஆப்கானிஸ்தான் திரும்பினார். நேரடியாக யுத்தத்தில் இங்கினார். ஜலலாபாத் போரில் துப்பாக்கி தூக்கி போரிட்டார். இந்த போரில் அவரது படையே வென்து.

இதை தொடர்ந்து நடந்த போரில் தீவிரவாதிகள் கை ஓங்கியதால், 1989-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி ரஷியப்படை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. அதன்பிகு மீண்டும் சவுதி அரேபியா சென்Öர். அங்கு அவர் தன் மனைவிகளோடும், குழந்தைகளோடும் வாழத்தொடங்கினார். அவருக்கு 4 மனைவிகள் மூலம் 16 குழந்தைகள் பிந்தனர்.

சூடான் சென்Öர்

ஈராக் போரின் போது அமெரிக்க படை சவுதி அரேபியாவில் முகாம் அமைத்து தங்கி இருந்தது. இது பின்லேடனுக்கு பிடிக்கவில்லை. அவர் சவுதி மன்னர் மீது கடும் கோபம் கொண்டார். அவரது கோபம் தங்கள் தொழிலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதால், அவரை குடும்பத்தினர் சூடானுக்கு மூட்டை கட்டி அனுப்பி விட்டனர். அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தீவிரவாதிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் சோமாலியாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது. அதை சமாளிக்க அமெரிக்கப்படை அங்கு இங்கியது. முஸ்லிம் நாட்டில் அமெரிக்க படையா அதை அங்கிருந்து அகற்வேண்டும் என் நோக்கத்தோடு பின்லேடன் சோமாலியா சென்Öர்.

அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்

அப்போது அமெரிக்க கப்பல் சோமாலியாவில் நங்கூரம் பாய்ச்சி நின்து. அதை பின்லேடன் படை தாக்கியது. இந்த தாக்குதல் 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி நடந்தது. இதில் 3 அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அந்த இடத்திலேயே இந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் யுத்தத்துக்காக அமெரிக்கா கொடுத்த ஸ்டிங்கர் ஏவுகணைகளை சோமாலியாவில் அமெரிக்காவுக்கு எதிராக பின்லேடன் பயன்படுத்தினார். இந்த ஏவுகணைகளை அவர் பாகிஸ்தான் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து தருவித்தார். இதில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானார்கள். 70 பேர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து 1994-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி அமெரிக்க படைகள் சோமாலியாவில் இருந்து வெளியேறின. இதுதான் பின்லேடனின் புகழை உலகம் முழுவதும் பரவச்செய்தது.

வெளியேற்றியது சூடான்

அந்த நேரத்தில் சூடானில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. அப்போது அதிபராக இருந்த பின்லேடனின் ஆதரவாளர் தனக்கு எதிராக இருக்கும் கோஷ்டியை அடக்க பின்லேடனின் ஆதரவை கேட்டார். இதற்கு பின்லேடன் மறுத்து விட்டார். இதனால் கோபம் அடைந்த அதிபர் அவரை நாட்டை விட்டே விரட்டிவிட்டார். அப்போது தான் அவர் பார்வை ஆப்கானிஸ்தான் மீது திரும்பியது.

தன் குடும்பத்துடன் அங்கு சென்று இங்கிய பின்லேடன் தன் பணத்தையும், ஆதரவுப்படையையும் கொடுத்து தலீபான்கள் ஆட்சிக்கு வர உதவினார். அங்கு வலுவாக காலூன்றிய பின்லேடன், கென்யா, தான்சானியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டு வீசி தாக்கினார். இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா பின்லேடனை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற் வேண்டும் என்று கோரியது. தலீபானும், பின்லேடனை பிடித்து வீட்டுக்காவலில் வைத்து இருக்கிÚÖம் என்று அறிவித்தது. ஆனால் அப்படி செய்யாமல் பின்லேடன் பல தீவிரவாத முகாம்களை தொடங்க அது ஒத்துழைப்பு கொடுத்தது.

நிïயார்க் நகரில் தாக்குதல்

2001-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகரில் உள்ள 111 மாடிகள் கொண்ட இரட்டைகோபுர கட்டிடத்தை தகர்க்க பின்லேடன் சதித்திட்டம் தீட்டினார். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டபோது 3 ஆயிரம் பேர் பலியானார்கள். இதுதான் அவரை பழி தீர்க்க வேண்டும் என் தீராக்கோபத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தான் அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியது. இதற்கு ஆப்கானிஸ்தான் மறுக்கவே அந்த நாட்டின் மீது அமெரிக்கா விமானத்தாக்குதல் நடத்தியது.

இதில் தலீபான்கள் ஆட்சியை இழந்தனர். பின்லேடனும் ஓடி ஒளிந்தார். அவர் பாகிஸ்தானில் பதுங்கிக்கொண்டார். இதை நன்கு அறிந்து இருந்த பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷரப், சண்டையில் பின்லேடன் இந்து இருக்கலாம் என்றும், பாகிஸ்தானில் இல்லை என்றும், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைகுன்றுகளில் அவர் பதுங்கி இருக்கலாம் என்று பொய்க்கதைகளை பரப்பினார். இப்போது அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த இடத்திலேயே பலியிடப்பட்டு இருக்கிÖர்.

நன்றி தினத்தந்தி [b]




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 3:22 pm

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 5 2825183110 அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக