புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 6 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 6 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:35 pm

First topic message reminder :

1. இந்தியப் பெண்கள் 1



இந்தியாவிலுள்ள என் தாயினத்தையும் என் சகோதரிகளையும் பற்றி மற்றொரு இனத்தைச சார்ந்த பெண்களிடம் பேசப் போகிறேன். நீங்களும் எனக்குத் தாயையும் சகோதரிகளையையும் போன்றவர்களே, துரதிர்ஷ்டவசமாக சமீபகாலத்தில் எங்கள் நாட்டுப் பெண்களைச் சபிப்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன். என்றாலும் அவர்களை வாழ்த்தவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் கடந்தகால வரலாற்றைச் சற்று பார்ப்போம். அங்கே தனித்துவம் வாய்ந்த ஒன்றை நாம்காண்கிறோம். அமெரிக்கர்களாகிய நீங்களும், இந்துக்களாகியநாங்களும், ஐஸ்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணியும் (மிசஸ் ஸிக்ரிட் மேக்னுஸன்) ஆரியர்கள் என்ற பொது மூதாதையரின் சந்ததியினரே என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் ஆரியர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மூன்று கருத்துக்களைக் காணலாம்; கிராம சமுதாயம், பெண்ணுரிமை, மற்றும் இன்பகரமான மதம்.

முதல் கருத்து கிராம சமுதாயங்களின் அமைப்பு இதுபற்றி வட நாடுகள் சம்பந்தமான விஷயங்களை இப்போதுதான் மிசஸ் புல் கூறினார். நிலம் சொந்தமாக இருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தானே தலைவனாக இருந்தான். நாம் தற்போது உலகில் காணும் இது எல்லா அரசியல் அமைப்புகளும் அந்த கிராம அமைப்புகளின் பரிணாமமே. ஆரியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியபோது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஒருவிதமான அமைப்புகளை உருவாக்கின; வேறு சூழ்நிலைகள் வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கின.

ஆரியர்களின் அடுத்த கருத்து பெண்கள் சுதந்திரம் பண்டைய நாட்களில் ஆணைப்போல் பெண்ணுக்கும் சம இடம் அளிக்கப்படுவதை ஆரிய இலக்கியங்களில் மட்டுமே காண்கிறோம்; வேறு எந்த இலக்கியங்களிலும் அத்தகைய நிலையைக் காண முடியாது.

வேதங்களைப் பார்ப்போம். அது உலகின் மிகப் பழைய இலக்கியம்; உங்களுக்கும் எங்களுக்கும் பொது முன்னோரால் தொகுக்கப்பட்டது. அது இந்தியாவில் எழுதப்படவில்லை; ஒருவேளை பால்டிக் கடற்கரை நாடுகளிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ எழுதப் பட்டிருக்கலாம். எங்கேயென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

வேதங்களின் மிகப் பழைய தகுதி பாடல்களால் ஆனது. ஆசிரியர்கள் தாங்கள் வழிபட்ட தேவர்களை இதப் பாடல்களால் போற்றனார்கள். god என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியல்ல; இதற்குரிய சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ‘ஒளி பொருந்தியவர்’ என்பதாகும். இந்தப் பாடல்கள் அக்கினி, சூரியன், வருணன் போன்ற பல்வேறு தேவர்கள் மீது பாடப்பட்டது. ‘இன்ன தெய்வத்தின் மீது இன்ன ரிஷி இயற்றிய பாடல்’ என்பதாக அவற்றின் தலைப்பு காணப்படுகிறது.

பத்தாம் அத்தியாயத்தில் வருகின்ற பாடல் சற்று வித்தியாசமானது - அதை இயற்றியவர் ஒரு பெண்ரிஷி; தேவர்கள் அனைவருக்கும் ஆதாரமான ஒரே கடவுளின் மீது இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் எல்லாம் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது பாடுவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு திருப்பத்தைக் காண்கிறோம். கடவுள் (தேவி வடிவில்) தமக்குத்தாமே பேசிக் கொள்வதுபோல் இந்தப்பாடல்கள் உள்ளன. ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘பிரபஞ்சத்தின் தலைவி நானே.


avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:13 am

சீடர்: ‘ஆம். சுவாமிஜி.’

சுவாமிஜி: ‘பரப்பிரம்மத்தில் பால்வேறுபாடு இல்லை. இந்த “நான்-நீ” என்ற நிலையில்தான் பால்வேறு பாட்டைக் காண்கிறோம். மனம் அகமுகமாகச் செல்லச் செல்ல இந்த வேறுபாடு மறைந்துவிடும். இறுதியாக வேறுபாடற்றதான பிரம்மத்தில் மனம் ஒன்றும்போது ஆண், பெண் என்னும் எண்ணம் இருக்கவே இருக்காது. ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் நாங்கள் இதைத் தெளிவாகக் கண்டோம். புறத்தோற்றத்தில் ஆணுக்கும் பெண்ணக்கும் வித்தியாசம் இருந்தாலும் அவர்களின் உண்மையான இயல்பில் வேற்றுமை எதுவும் இல்லை. எனவே, ஆண்கள் பிரம்மஞானம் பெறலாம் என்றால் பெண்ணால் ஏன் முடியாது? அதனால்தான் நான் சொல்கிறேன்: ஒரே ஒரு பெண் பிரம்மஞானத்தை அடைந்தால் கூட, அவளிடம் தோன்றிப்பரவும் அந்த ஒளியால் ஆயிரக்கணக்கான பெண்கள் உற்சாகம் கொண்டு, பிரம்மஞானத்தை அடைய முயல்வார்கள். அப்போது இந்த நாட்டிற்கும் சமுதாத்திற்கும் மகத்தான நன்மை ஏற்படும், புரிந்துகொண்டாயா?’

சீடர்: ‘உங்கள் உபதேசம் இன்று என் கண்களைத் திறந்தது.’

சுவாமிஜி: ‘இப்போது கூடத்திறந்துவிட்டதா என்ன! எல்லாவற்றையும் ஒளிமயமாகச்செய்யும்பிரம்மத்தை உணரும்போது, இந்த ஆண்பெண் வேறுபாடு ஒரேயடியாக உன்னிடமிருந்து மறைந்து போவதைக் காண்பாய். அதன்பிறகே நீ பெண்களைப் பிரம்ம ரூபிணியாகிய தேவியாக்க் காண்பாய். ஸ்ரீராமகிருஷ்ணரிடம் நாங்கள் கண்டோம் - எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும், பெண்கள் என்றால் அவருக்கு ஆதிபராசக்திதான். இதை நானும் நேரில் கண்டேன். அதனால்தான் அந்த நிலையை அடையும்படி உங்களை இவ்வளவு வற்புறுத்திக் கூறுகிறேன்; ஒவ்வொரு கிராமத்திலும் பெண்களுக்கான பள்ளிகளைத் திறக்கச் சொல்கிறேன்: அவர்களையும் மனிதப் பிறவிகாளக்கும் படிச் சொல்கிறேன். அவர்களின் நிலை உயர்ந்தால் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் மகத்தானவர்களாக வளருவார்கள். அவர்களின் மூலம் நாடு மேன்மையுறம்; கல்வி, ஞானம், ஆற்றல் பக்தி ஆகியவற்றில் எழுச்சி ஓங்கும்.’

சீடர்: ‘ஆனால் இன்றைய கல்வியின் பலன்மாறாக இருப்பதாகவே தோன்றுகிறது. பெண்கள் ஏதோ சிறிது கல்வி பெற்ற உடனே கௌனைப் (Gown) போட்டுக் கொள்ளிக் கற்றுக்கொள்கிறார்கள். பிரம்மஞானத்தை அடைவதற்குச் சாதகமான தியாகம், புலனடக்கம், தவம், பிரம்மச்சரியம் போன்ற குணங்களில் அவர்கள் முன்னேறுகிறார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.’

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:13 am

சுவாமிஜி: ‘ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். ஒரு புதிய கருத்தைப் பிரச்சாரம் செய்யும்போது ஆரம்பத்தில் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், சில தவறுகள் நேரலாம். அதனால் இந்தப்பரந்த சமுதாயத்திகு ஏதாவது நேர்ந்துவிடுமா என்ன? இப்போது நாட்டில் உள்ள பெண்கல்வியை வளர்ப்பதற்கு முன்வந்தவர்கள் பரந்த நோக்கு உடையவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒன்று தெரிந்துகொள்: கல்வியாகட்டும் எதுவுமாகட்டும், தர்மத்தை அடிப்டையாக்க்கொள்ளவில்லை என்றால் அதில் சில குற்றங்களும் குறைகளும் நேர்வது இயல்பே. இப்போது தர்மத்தை மையமாக்க் கொண்டே பெண்கல்வியைப் பரப்ப வேண்டும். மற்ற பயிற்சிகளெல்லாம் இரண்டாம் பட்சமாகவே கொண்டுள்ளது. அதனால்தான் நீ சொன்ன குறைகள் ஏற்பட்டுள்ளது. அதில் பெண்களின் குற்றம் என்னவென்று சொல் பார்க்கலாம். பெண்கல்வியை ஆரம்பித்த சீர்திருத்தவாதிகள் பிரம்மச்சாரிகள் அல்ல. ஆதலால் இத்தகைய தவறுகள் நேர்ந்துவிட்டன. எந்த நற்பணியைச் செய்பவர்களும், தாங்கள் விரும்பிய செயலைத் தொடங்குமுன் கடினமான தவத்தில் ஈடுபட்டு ஆன்மஞானம் பெற வேண்டும். இல்லாவிடில் அவர்கள் செயலில் தவறுகள் ஏற்படத்தான் செய்யும், புரிகிறதா?

சீடர்: ‘ஆம, கல்வி கற்ற பெண்களுள் பலரும் நாவல்களையும் நாடகங்களையும் படிப்பதிலேயே தங்கள் நேரத்தைச்செலவிடுகின்றனர். கிழக்கு வங்காளத்திலோ, கற்ற பெண்களும் விரதங்களையும் ஆசாரங்களையும் கைவிடுவதில்லை. ந்தப் பக்கங்களில் அப்படி உண்டா?

சுவாமிஜி: ‘எல்லா நாடுகளிலும் எல்லா இனங்களிலும் நன்மை,தீமை இரண்டும் உண்டு, நமது வாழ்வில் நல்லவற்றைச் செய்து பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இதுவே நமது கடமை. நிந்திப்பதால் எந்தச் செயலும் வெற்றி பெறுவதில்லை; அது மனிதர்களின் மனத்தில் வெறுப்பை உண்டாக்கவே வழிவகுக்கும் யாரும் எதுவும் சொல்லட்டும்; மறுத்துப் பேசாதே. இந்த மாய உலகத்தில் எந்த முயற்சியைச் செய்தாலும், அதில் சில குறைகள் இருப்பது இயல்பே. “ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேனாக்னிரிவாவ்ருதா:- நெருப்பைப் புகை மூடியிருப்பதுபோல், எல்லா முயற்சிகளையும் குறைகள் மூடியுள்ளன. நெருப்பு இருந்தால் புகை எழவே செய்யும். ஆனால், அதற்காக நீ சும்மா இருப்பதா? உன்னால் இயன்றவரை நறசெயல்களைச் செய்.’

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:14 am

7. திருமணம்



கேள்வி: ‘சிறு வயதிலேயே திருமணம் செய்வதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?’

சுவாமிஜி: ‘வங்காளத்தின் படித்த வகுப்பினரிடையில் மகன்களுக்கு சிறு வயதில் மணம் செய்விக்கும் வழக்கம் படிப்படியாக்க் குறைந்து வருகிறது. பெண்களும் முன்னைவிட ஓரிரு வயது ஏறிய பின்னரே மணமுடித்துக் கொடுக்கப்படுகிறார்கள் - அது பணமில்லாத்தால்தான் என்பது வேறு விஷயம்; காரணம் எதுவுமாகட்டும். பெண்களின் திருமண வயது இன்னும் உயர்த்தப்பட வேண்டும். பாவம், தந்தைதான் என்ன செய்வான்? பெண் சிறிது வளர்ந்துவிட்டால் போதும், தாய் உறவினர், அண்டைப் பெண்கள் என்று ஒவ்வொருவரும் அவளுக்கு வரன் தேடும்படிக் கூக்குரலிடத் தொடங்கிவிடுவார்கள். தேடி முடிக்கும்வரை அவனை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.

‘இந்த விஷயத்தில் உங்கள் தர்மக்காவலர்களான மதவாதிகளை பற்றி எதுவும் சொலவதைவிடச்சொல்லாதிருப்பதே நல்லது. இப்போது அவர்கள் சொல்வதை யாரும் கேட்பதில்லை. எனினும் அவர்கள் தங்களைத் தாங்கே தலைவராக்க் காட்டிக் கொள்கிறார்கள். பன்னிரண்டு வயதிற்குக்குறைந்த பெண்களைத் திருமணம் செய்துகொள்பவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறும் திருமண வயது நிர்ணயச் சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்த போது, “ஐயோ மதம் தொலைந்துவிட்டது, அழிந்து போய்விட்டது” என்று அன்று அவர்கள் இட்ட ஓலம் இருக்கிறதே! அட்டா, அதனை என்னெறு சொல்வது! பன்னிரண்டு பதின்மூன்று வயதிலேயே பெண்ணைத் தாயாக்குவதில் தான் மதமே உள்ளது போலும்! “அடக் கடவுளே! இது என்ன மதம்? இந்த லட்சணத்தில் இவர்கள் கலவரம் செய்து அரசியல் உரிமைகளை வேறு கேட்கிறார்களே!’ என்று அரசாங்கம் எண்ணுவதும் இயல்புதானே!”

கேள்வி: ‘அப்படியானால் ஆண்களும் பெண்களும் வயது ஏறிய பின்தான் மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதா தங்கள் கருத்து?’

சுவாமிஜி: ‘ஆம். அதனுடன் கல்வியும் புகட்டப்பட வேண்டும். இல்லாவிடில் ஒழுக்கநெறி தவறுதல் போன்ற சீர்குலைவுகள் ஏற்படும். கல்வி என்றால் இக்காலக் கல்வி என்பது எனது கருத்தல்ல. உடன்பாட்டு முறையிலான கல்வியையே நான் குறிப்பிடுகிறேன். வெறும் புத்தகப் படிப்பால் எந்தப் பயனும் இல்லை. சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற கல்வியே தேவை.’

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:15 am

கேள்வி: ‘பெண்களிடையே பல சீர்த்திருத்தங்கள் வேண்டியுள்ளது.’

சுவாமிஜி: ‘இத்தகைய கல்வி பெற்றால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக்கொள்ள முடியும். எதற்கெடுத்தாலும் ஒப்பாரி வைப்பதற்குத்தான் அவர்கள் இதுவரை கற்பிக்கப்ட்டிருக்கிறார்கள். ஏதாவது ஒன்றானால் போதும், அழத்தொடங்கி விடுவார்கள். வீர உணர்வை அவர்களுக்குப் போதிக்க வேண்டும். இந்தக்காலத்தில் தற்காப்பு முறைகளைக் கூட அவர்கள் அறிய வேண்டியுள்ளது. ஜான்சி ராணியின் வீரத்தை எண்ணிப்பாருங்கள்!’
கேள்வி: ‘நீங்கள் சொல்வது முற்றிலும் புதியமுறையாக இருக்கிறது. இந்த முறையில் நமது பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு நீண்ட காலம் ஆகும் என்று எண்ணுகிறேன்.’

சுவாமிஜி: ‘நம்மால் இயன்ற அளவு முயல வேண்டும். அவர்களுக்குக் கற்பிப்பது மட்டுமல்ல, நாமும் கற்க வேண்டியவை உள்ளன. தந்தையாகிவிட்டால் எல்லாம் ஆகிவிட்டதா? பல பொறுப்புகளைச் சுமக்க வேண்டும். நமது பெண்களுக்கு ஒரு விஷயத்தைச் சுலபமாகச் சொல்லிக்கொடுக்க முடியும். அது கற்பு நெறி. அது அவர்களின் பாரம்பரியப் பண்பு. அதை அவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். அதை அவர்களிடம் வேரூன்றச் செய்து, அவர்களிடம் பண்புநலத்தை உருவாக்க வேண்டும். அதன்மூலம், வர்கள் இல்லறத்திலிருந்தாலும் சரி, திருமணம் செய்யாமல் இருந்தாலும் சரி, கற்பைக் காப்பதற்காக உயிரை வேண்டுமானாலும் விடத் தயங்காதவர்களாகச் செய்ய வேண்டும். ஒரு லட்சியத்திற்காக உயிரைத் தியாகம் செய்யவது என்பது சாதாரண வீரமா? இன்றைய நிலைமையைப் பார்த்தால், சில பெண்களாவது துறவு வாழ்க்கையில் பயிற்சி பெற வேண்டும் என்று தோன்றுகிறது. பண்டைக்காலம் முதலே அவர்களது ரத்தத்தில் கலந்து ஓடும் கற்பு என்னும் பண்புநலத்தின் ஆற்றலால் அவர்கள் துறவு நெறியில் நிலை பெற வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல. பிறருக்கும் நன்மை தரும். இதை அறிந்தால் அவர்கள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியுடனும் கற்பார்கள். நமது தாய்நாட்டின் நன்மைக்காகப் பாரத்த் தாயின் மக்களுள் சிலராவது புனிதமான பிரம்மச்சாரிகளாகவும் பிரம்மச் சாரிணிகளாகவும் வாழ வேண்டும்.’

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:16 am

கேள்வி: ‘இவர்களால் நாட்டிற்கு எப்படி நன்மை உண்டாகும்?

சுவாமிஜி: ‘அவர்களைப் பார்ப்பதாலும் அவர்களின் முயற்சிகளாலம் தேசீய நிலைமையில் ஒருதலைகீழ் மாற்றம் உண்டாகும். இப்போதுள்ள நிலைமை என்ன? பெண்ணுக்கு ஒன்பது அல்லது பத்து வயதானால் போதும். எப்படியாவது அவளை ஒருவனிடம் கைப்பிடித்துக் கொடுத்துவிட வேண்டும். பதின்மூன்று வயதில் ஒரு குழந்தை பிறந்துவிட்டாலோ குடும்பம் முழுவதிலுமே கொண்டாட்டமும் குதூகலமும்தான். இந்த நிலைமையைத் தலைகீழாக்கினால் போதும், நாட்டில் சிரத்தை என்பது படிப்படியாக மீண்டும் வந்துவிடும். நாம் முன்பு கூறியது போல் பிரம்மச்சரிய நெறியில் நிற்பவர்களைப் பற்றி என்ன சொல்வேன் - அவர்களிடம்தான் எவ்வளவு சிரத்தையும் தன்னம்பிக்கையும் வளரும்!’

இளமை மணத்தால் சிறு வயதிலேயே பிள்ளைகளைப் பெற நேர்கின்றது. இதன்விளைவாகப் பெண்களைப் பெற நேர்கின்றது. இதன்விளைவாகப் பெண்கள் இளம் வயதிலேயே அதிகமாக இறந்து போகிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் நோஞ்சான்களாகி, நம் நாட்டுப் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையைத்தான் அதிகமாக்கும். பெற்றோரின் உடம்பு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இல்லாவிட்டால், வலிமையும், நல்ல உடல் வளமும் நிறைந்த குழந்தைகள் அவர்களுக்கு எப்படிப் பிற்க்க முடியும்? கல்வியளித்து, சிறிது வயது சென்றபிறகு பெண்களுக்குத் திருமணம்செய்தால் நாட்டிற்கு உண்மையிலேயே நன்மை செய்யும் நல்ல பிள்ளைகளைப் பெறுவார்கள். இன்று விதவைகள் இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் இந்த இளம் வயதுத் திருமணம்தான். இளமைத் திருமணங்கள் குறைந்தால் விதவைகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.’

ஒரு பக்கம் புதிய இந்தியா சொல்கிறது. கணவனையும் மனைவியையும் தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் வேண்டும். எங்கள் எதிர்கால வாழ்க்கையில் முழு சுதந்திரம் வேண்டும். எங்கள் எதிர்கால வாழ்க்கையின் சுகதுக்கம் திருமணத்தில் அடங்கியிருப்பதால் விருப்பப்படி தேர்ந்தெடுக்க எங்களுக்கு உரிமை வேண்டும். மறு பக்கம் பழைய இந்தியா கட்டளையிடுகிறது. திருமணம் என்பது இன்ப நுகர்ச்சிக்காக அல்ல; அது இன விருத்திக்காக, இதுதான் திருமணத்தைப்பற்றிய நமது நாட்டின் கருத்து. குழந்தைகளைப் பெறுவதன் மூலம் நீங்கள் எதிர்காலச் சமுதாயத்தின் நன்ம தீமைகளுக்குப் பொறுப்பாகிறீர்கள். எனவே சமுதாயத்திற்கு எது அதிக நன்மை பயக்குமோ அத்தகைய திருமண முறைதான் அனுமதிக்கப்படும். பெரும்பாலோரின் நன்மைக்காக உன் சொந்த இன்பத்தைத் துறந்துவிடு.

நமது நாட்டில் விதவைத்திருமணம் தடை செய்யப்பட்டிருப்பதைப் பாருங்கள். அதுபற்றிய நியதியை ஏதோ ரிஷிகளோ தீயவர்களோ புகுத்தியதாக நினைக்காதீர்கள். பெண்களைப் பூரணமாகத் தங்கள் ஆதிக்கத்தில் வைக்க வேண்டுமென்று ஆண்கள் விரும்பினாலும், அந்தக் காலத்திற்கு வேண்டிய சமுதாயத் தேவையின் உதவியை மேற்கொள்ளாமல் இந்த நியதிகளைப் புகுத்துவதில் ஒருபோதும் வெற்றியடைந்திருக்க முடியாது. இந்த வழக்கத்தைப் பற்றிய இரண்டு விவரங்களை முக்கியமாக்க் கவனிக்க வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:16 am

i. விதவைத்திருமணம் சமுதாயத்தின் கீழ் ஜாதிகளில் நடைபெற்று வருகிறது.

ii. உயர் ஜாதிகளில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உள்ளனர்.

ஒவ்வொரு பெண்ணையும் மணம் செய்து கொடுப்பதே சமுதாய நியதி என்று வைத்துக்கொளவோம். ஒர பெண்ணிற்கு ஓர் ஆணைத் தேடித் தருவதே எவ்வளவு கஷட்ம்! இதில் ஒரு பெண்ணிற்கு அடுத்தடுத்து இரண்டு மூன்று ஆண்களைத் தேடித் தருவது எப்படி? எனவேதான் சமுதாயம் ஒரு பிரிவினரைப்பிரதிகூலத்தற்கு உட்படுத்தி வைத்திருக்கிறது. அதாவது, ஒரு கணவனை அடைந்த பெண் இரண்டாம் கணவனை அடைய சமுதாயம் அனுமதிப்பதில்லை; அனுமதித்தால் ஒரு கன்னி கணவனை அடையமுடியாமல் போக நேரும். எந்தச் சமுகங்களில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதோ, அவற்றில் விதவைத் திருமணம் வழக்கத்தில் உள்ளது. ஏனெனில் அங்கே இந்த ஆட்சேபத்திற்கு இடமில்லாமல் போகிறது. மேலை நாட்டிலும் திருமணமாகாகத பெண்களுக்குக் கணவன் கிடைப்பு வரவர மிகுந்த கஷ்டமாகிறவருகிறது.

திருமணத்தைப்பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துக்களே, மனித இனத்திற்கு உண்மையாக நாகரீகம் தரக்கூடியவை என்பதை மட்டும் இப்போத சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒவ்வோர் ஆணும் பெண்ணம் தனது சுகத்திற்காக, தனது மிருக இச்சையைப்பூர்த்தி செய்து கொள்வதற்காகத் தான் விரும்புவரை, மனைவி அல்லது கணவனாக ஏற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை அளித்தால்தீமையே அதன் விளைவாக இருக்கும். அத்தகைய திருமணத்தின் பயனாகப்பிறக்கும் குழைந்தைகள் தீயவர்களாக, கொடியவர்களாக, அசரத்தனம் கொண்டவர்களாக, இருப்பார்கள். ஒவ்வொரு நாட்டிலும் மனிதன் ஒருபுறம் இத்தகைய மிருகதனமான குழந்தைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறான், மறுபுறம் இவர்களை அடக்கியாள போலீஸ்படையை அதிகரித்துக் கொண்டிருக்கிறான். பிரச்சினை, தீமையை எப்படி அழிப்பது என்பதல்ல, எப்படி தீமையே உண்டாகாமல் தடுப்பது என்பதுதான். நீங்கள்சமுதாயத்தில் இருக்கும்வரை, உங்கள்திருமணம் சமுதாயத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் நிச்சயமகப்பாதிக்கவே செய்யும். எனவே நீங்கள் யாரை மணக்க வேண்டும், யாரை மணக்கக்கூடாது என்றுசட்டம் செய்ய சமுதாயத்திற்கு அதிகாரம் இருக்கிறது. நமு திருமண அமைப்பிற்குப் பின்னால் இதுபோன்ற மிகவுயர்ந்த கருதுக்கள் இருக்கின்றன. இவற்றயே ஜோதிட சாஸ்திரம் ‘ஜாதி’ அதவாது பொருத்தம் என்று அழைக்கிறது. காம்போகத்தின் விளைவாகப் பிறக்கின்ற குழந்தை ஆரியன் அல்ல என்பது மனுவின் கருத்து என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். வேத முறைகளின்படி கருவுற்று, நாட்டிலும் இத்தகைய குழந்தைகள் மிகக் குறைவாகவே பிறக்கிறார்கள். அதன் பயனாகவே இன்றுநாம் கலியுகம் என்று கூறும் இவ்வளவு கெடுதல்கள் உலகில் இருக்கின்றன.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:17 am

இந்த லட்சியங்கள் அனைத்தையும் நாம் இழந்துவிட்டோம். இன்று இந்தக் கருத்துக்களை முழுவதுமாகப் பின்பற்ற முடியாது என்பது உண்மை. அந்த உன்னத லட்சியங்களுள் சிலவற்றை இன்று வெறும் கேலிச் சித்திரங்களாக்கியுள்ளோம் என்பது உண்மையே. தற்கால தாய்தந்தையரும் முன்போல் இல்லை, சமுதாயம் அன்றிருந்தது போலன்றி கல்வியறிவில் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளது. மக்களும் முன்போல் ஒருவருக்கொருவர் அன்புடையவர்களாக இல்லை என்பது வருத்தம் தரக்கூடிய உண்மை. ஆனால் இந்தக் கருத்துக்கள் எவ்வளவுதான் தவறான முறைகளில் கடைப்பிடிக்கப்ட்டாலும் அதக் கோட்பாடுகள் அப்பழுக்கற்றவை; அவை செயல்முறை தவறாகி விட்டால், ஒரு வழி தோற்றுவிட்டால், கோட்பாட்டை எடுத்துக்கொண்டு இன்னொரு வழியைக் கடைப்பிடித்து நன்றாகச் செய்ய முயல வேண்டும். வழிகளில் தவறிருந்தால், அதற்காகக் கோட்பாட்டை விட்டுவிடுவது எப்படி நியாயமாகும்?

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:18 am

8. லட்சியப் பெண்மணிகள்



1. ராணி சம்யுக்தை

எங்கள் பழைய நூல்களிலிருந்து ஒரு வரலாற்றை உங்களுக்குச் சொல்கிறேன். முகமதியர் படையெடுப்பின்போது ஒரு ராஜபுதனப்பெண்ணே அவர்களது வெற்றிக்குக் காரணமாக இருந்தான்.

ராஜபுதனத்தில் ஒரு புராதன நகரம் கனோஜ். அந்த நாட்டு மன்னனுக்கு ஒரு மகள் (சம்யுக்தை) இருந்தாள். (அஜ்மீர் மற்றும் டில்லி மன்னனான) பிருதிவிராஜின் பெருமைகளையும் அவனது படைபலத்தையும் கேளவிப்பட்ட அவள் அவன்மீது காதல் கொண்டாள்.

அவளது தந்தை ராஜசூய யாகம் செய்ய எண்ணினார். அதற்காக நாட்டிலுள்ள மன்னர்களை எல்லாம் அழைத்தார். அந்தயாகம் கனோஜ் மன்னனின் தலைமையை நிலைநிறுத்துவதற்காகச் செய்யப்படுவது. எனவே வருகின்ற மன்னர்கள் அவனது தலைமையை ஏற்று, அவன் இடுகின்ற பணிகளைச்செய்ய வேண்டும். அந்த யாகத்தின் போது தன் மகளுக்குச் சுயம்வரமும் நடைபெறும் என்று அவன் அறிவித்தான். ஆனால் சம்யுக்தை ஏற்கனவே பிருதிவிராஜிடம் காதல் கொண்டிருந்தாள்.

பிருதிவிராஜ் ஒரு மாபெரும் வீரன்; அவன் கனோஜ் மன்னனின் தலைமையை ஏற்க விரும்பவில்லை. எனவே யாகத்திற்கான அழைப்பை நிராகரித்துவிட்டான். அவனை அவமதிப்பதற்காக கனோஜ் மன்னன் அவனைப் போல் பொற்சிலை ஒன்று செய்து, அதனை வாசலில் காவல் காப்பதுபோல் நிற்கச் செய்தான். ‘இந்த யாகத்தில் பிருதிவிராஜிக்கு வாசலைக் காவல் காப்பதுதான் நான் கொடுத்த வேலை’ என்று கூறினான் அவன்.

அப்போத அவன்மன்னுக்கு விவரம் தெரிந்ததும் தன் படையுடன் பிருதிவிராஜைத் துரத்தினான். இருவருக்கும் பெரிய யுத்தம் நடந்தது. இதில் இரண்டு பக்கத்திலும் பெரும்பாலான படைவீர்ர்கள் மாண்டனர். இவ்வாறு (ராஜபுத்திரர்கள் பலவீனமுற்றதால்) இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாயிற்று.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:19 am

2. சித்தூர் ராணி

வட இந்தியாவில் முகமதியப் பேர்ரசு உருவாகி வளர்ந்தது. அப்போது சித்தூர் ராணியின் (ராணி பத்மினி) அழகு நாடெங்கும் பிரபலமாக இருந்தது. அது சுல்தானின் காதுகளையும் எட்டியது. உடனடியாக அவளைத் தனது அந்தப் புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான் சுல்தான். அதன் விளைவாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் மூண்டது மாபெரும் போர். முகமதியர்கள் சித்தூரை முற்றுகையிட்டனர். இனி எதிர்த்து போரிட முடியாது என்று கண்ட ராஜபுத்திர்ர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக்கொண்டு மாண்டார்கள்; பெண்கள் தங்களைத் தீக்கு இரையாக்கினார்கள்.

ஆண்கள் அனைவரும் மாண்ட பிறகு சுல்தான் நகரத்திற்குள் நுழைந்தான். அங்கே தெருவில் எழுந்தது ஒரு மாபெரும் நெருப்பு. ராணியே தலைமை தாங்கிச் செல்ல, ஏராளம் பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். (அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ) சுல்தான் சென்று ராணியைத் தடுத்தான். அதற்கு அவள், ‘இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்றுகூறிவிட்டுத் தீயில் பாய்ந்தாள்.

முகமதியர்களிடமிருந்து தங்கள் கற்பைக் காத்துக்கொள்வதற்காக அன்று 74,500 பெண்கள் அந்த் தீயில் வீழ்ந்து உயிர் தறந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்றும் நாங்கள் கடிதம் எழுதும்போது, கடித்த்தை மூடி அதன்மீது ‘741/2 என்று எழுதிவிட்டால், அதை யாராவது (அனுமதியின்றித்) திறந்தால், அவன் 74,500 பெண்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகிறான்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:20 am

3. ரூபமதி

மற்றொரு அழகிய ராஜபுத்திரப் பெண்ணின் கதையை உங்களுக்குச் சொல்கிறேன். எங்கள் நாட்டில் ‘ராக்கி’ கட்டுவது என்ற வழக்கம் உள்ளது. பட்டுநூலால் செய்யபட்ட, வேலைப்பாடு மிக்க, கையில் கட்டிக் கொள்ளத்தக்க அதனைப் பெண்கள் ஆண்களுக்கு அனுப்புவார்கள் அப்படி ஒரு பெண் ஓர் ஆணுக்கு ராக்கியை அனுப்பினால், அவன் அவளது சகோதரன் ஆகிவிடுவான்.

அது முகலாயப் பேரரசின் கடைசி மன்னர்களுள் ஒருவனது ஆட்சிக்காலம். இந்தியாவின் அற்புதமான மகிமை பொருந்திய பேரரசை அழித்த கொடியவன் அவன். அவனும் ராஜபுத்திர மன்னனின் மகளுடைய அழகைப்பற்றிக் கேள்விப்பட்டான். அவளைத் தனது அந்தப்புரத்திற்கு அனுப்பச் சொல்லி ஆணை பிறப்பித்தான்.

தூதன் ஒருவன் அவனது படத்துடன் வந்து அதை அவளுக்குக் காட்டினான். அந்தப் படத்தைக் கையில் வாங்கிய அவள் ஏளனமாகச் சிரித்துவிட்டு, அதனைத் தன் காலிலிட்டு மிதித்தாள். பிறகு அந்தத் தூதனிடம், ‘உனது முகலாயச் சக்கரவர்த்தியை ஒரு ராஜபுத்திரப் பெண் இப்படித்தான் நடத்துவாள்’ என்று கூறினாள். விளைவு? சுல்தானின் படை ராஜபுதனத்தில் நுழைந்தது.

எதுவும் செய்வதறியாமல் திகைத்த மன்னன் மகள் ஒரு தந்திரம் செய்தாள். ஏராளம் ராக்கிகளை எடுத்து, பல்வேறு ராஜபுதன மன்னர்களுக்கு, ‘வந்து எங்களுக்கு உதவுங்கள்’ என்ற செய்தியுடன் அனுப்பினான். ராஜபுத்திரர்கள் திரண்டனர். சுல்தானின் படை திரும்ப வேண்டியதாயிற்று.

Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக