புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_lcapசுவாமி விவேகானந்தர் - Page 4 I_voting_barசுவாமி விவேகானந்தர் - Page 4 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:35 pm

First topic message reminder :

1. இந்தியப் பெண்கள் 1



இந்தியாவிலுள்ள என் தாயினத்தையும் என் சகோதரிகளையும் பற்றி மற்றொரு இனத்தைச சார்ந்த பெண்களிடம் பேசப் போகிறேன். நீங்களும் எனக்குத் தாயையும் சகோதரிகளையையும் போன்றவர்களே, துரதிர்ஷ்டவசமாக சமீபகாலத்தில் எங்கள் நாட்டுப் பெண்களைச் சபிப்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன். என்றாலும் அவர்களை வாழ்த்தவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் கடந்தகால வரலாற்றைச் சற்று பார்ப்போம். அங்கே தனித்துவம் வாய்ந்த ஒன்றை நாம்காண்கிறோம். அமெரிக்கர்களாகிய நீங்களும், இந்துக்களாகியநாங்களும், ஐஸ்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணியும் (மிசஸ் ஸிக்ரிட் மேக்னுஸன்) ஆரியர்கள் என்ற பொது மூதாதையரின் சந்ததியினரே என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் ஆரியர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மூன்று கருத்துக்களைக் காணலாம்; கிராம சமுதாயம், பெண்ணுரிமை, மற்றும் இன்பகரமான மதம்.

முதல் கருத்து கிராம சமுதாயங்களின் அமைப்பு இதுபற்றி வட நாடுகள் சம்பந்தமான விஷயங்களை இப்போதுதான் மிசஸ் புல் கூறினார். நிலம் சொந்தமாக இருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தானே தலைவனாக இருந்தான். நாம் தற்போது உலகில் காணும் இது எல்லா அரசியல் அமைப்புகளும் அந்த கிராம அமைப்புகளின் பரிணாமமே. ஆரியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியபோது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஒருவிதமான அமைப்புகளை உருவாக்கின; வேறு சூழ்நிலைகள் வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கின.

ஆரியர்களின் அடுத்த கருத்து பெண்கள் சுதந்திரம் பண்டைய நாட்களில் ஆணைப்போல் பெண்ணுக்கும் சம இடம் அளிக்கப்படுவதை ஆரிய இலக்கியங்களில் மட்டுமே காண்கிறோம்; வேறு எந்த இலக்கியங்களிலும் அத்தகைய நிலையைக் காண முடியாது.

வேதங்களைப் பார்ப்போம். அது உலகின் மிகப் பழைய இலக்கியம்; உங்களுக்கும் எங்களுக்கும் பொது முன்னோரால் தொகுக்கப்பட்டது. அது இந்தியாவில் எழுதப்படவில்லை; ஒருவேளை பால்டிக் கடற்கரை நாடுகளிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ எழுதப் பட்டிருக்கலாம். எங்கேயென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

வேதங்களின் மிகப் பழைய தகுதி பாடல்களால் ஆனது. ஆசிரியர்கள் தாங்கள் வழிபட்ட தேவர்களை இதப் பாடல்களால் போற்றனார்கள். god என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியல்ல; இதற்குரிய சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ‘ஒளி பொருந்தியவர்’ என்பதாகும். இந்தப் பாடல்கள் அக்கினி, சூரியன், வருணன் போன்ற பல்வேறு தேவர்கள் மீது பாடப்பட்டது. ‘இன்ன தெய்வத்தின் மீது இன்ன ரிஷி இயற்றிய பாடல்’ என்பதாக அவற்றின் தலைப்பு காணப்படுகிறது.

பத்தாம் அத்தியாயத்தில் வருகின்ற பாடல் சற்று வித்தியாசமானது - அதை இயற்றியவர் ஒரு பெண்ரிஷி; தேவர்கள் அனைவருக்கும் ஆதாரமான ஒரே கடவுளின் மீது இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் எல்லாம் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது பாடுவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு திருப்பத்தைக் காண்கிறோம். கடவுள் (தேவி வடிவில்) தமக்குத்தாமே பேசிக் கொள்வதுபோல் இந்தப்பாடல்கள் உள்ளன. ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘பிரபஞ்சத்தின் தலைவி நானே.


avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:54 pm

இந்துப் பெண்களின் சிரமங்களைக் குறித்து வெளி நாட்டுப் பெண்கள் சதா அழுகிறார்கள். ஆனால் இந்து ஆண்களின் சிரமங்களைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் அழுகிறார்ள். ஆனால் சிறுமிகளை யாருக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார்கள்? அவர்கள் வயதானவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள் என்றார் ஒருவர். அதற்கு இன்னொருவர், ‘என்ன, எல்லா பெண்களையும் வயதானவர்களுக்கே மணம் செய்து கொடுக்கிறார்கள்? அப்படியானால் வாலிபர்கள் என்ன செய்கிறார்கள்?’ என்று கேட்டார். ஒருவேளை அங்கு நாங்கள் எல்லோரும் வயதானவர்களாகப் பிறக்கிறோமோ என்னவோ! இந்திய இனத்தின் லட்சியம் ஆன்ம முக்தி. இந்த உலகம் பெரிய விஷயமில்லை. அது ஒரு மாயை, ஒரு கனவு. கோடிக்கணக்கான வாழ்க்கையில் இந்த வாழ்க்கையும் ஒன்று. இயற்கை முழுவதுமே மாயை, தோற்றம், கற்பனைக் காட்சிக்கூடம். இதுதான் எங்கள் த்த்துவம். வாழ்க்கையைப்பார்த்து, குழந்தைக் புன் முறுவல் பூக்கன்றனர். ஆகா எத்தனை அழகு, எத்தனை நன்மை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில ஆண்டுகள்தான், அவர்கள் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிவர வேண்டும். அழுதுகொண்டே வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அழுதுகொண்டேதான் அதிலிருந்து விலகவும் செய்கிறார்கள்.

நாடுகள் தங்கள் இளமைத் துடிப்பின் காரணமாக எதையும் சாதித்துவிட முடியும் என்று நினைக்கின்றன. ‘மண்ணுலகத் தேவர்கள் நாங்கள், நாங்களே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.’ உலகம் முழுவதையும் ஆளவும், தன் திட்டங்களை நிறைவேற்றவும், தங்கள் விருப்பப்படி எதையும் செய்யவும், உலகத்தைத் தலைகீழாக மாற்றவும் எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குச் சாசனம் எழுதிக் கொடுத்திருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். கொள்ளையடிக்க, கொலை செய்ய, உயிர்போக்க எல்லா வற்றிக்கும் உரிமை சாசனம் அவர்களிடம் உள்ளது. கடவுள்தான் அதை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார், அதனால் அப்படிச்செய்கிறார்கள். ஆனால் அவர்கள் வெறும் குழந்தைகள். பெருமையும் புகழும் படைத்த பேரரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ தோன்றின. இன்று மறைந்துவிட்டன; அழிந்துவிட்டன; எங்கே போயின என்பது யாருக்கும் தெரியாது. அவற்றின் அழிவும் அதிசயப்படடத் தக்கதாகவே உள்ளது.

தாமைரையிலையில் தண்ணீர்த் துளிகள் அங்கும் இங்கும் சிறிது உருள்கிறது. பிறகு கண நேரத்தில் கீழே விழுந்து விடுகிறது. அதுபோல்தான் மனித வாழ்வும். எங்குத் திரும்பினாலும் அழிவின் சின்னங்களே இன்று காடு மண்டிக் கிடக்கின்ற இடத்தில் ஒரு காலத்தில் பெரிய நகரங்களைக் கொண்ட வல்லரசு ஆட்சி செய்தது. இவையே இந்திய முக்கியக் கருத்து, குரல் போக்கு எல்லாம்.

மேலை நாட்டினராகிய உங்களிடம் இளமைரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். மனிதர்களைப் போல் அந்த நாடுகளுக்கும் ஒரு காலம் உண்டு. கிரீஸ் எங்கே? ரோமாபிரி எங்கே? நேற்று இருந்த வல்லமைமிக்க ஸ்பானிஷ்காரன் எங்கே? இந்தியாவிற்கும் என்ன கதி ஏற்படும் என்று யார் கண்டார்கள்?

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:56 pm

எல்லாம் இப்படித்தான் பிறக்கின்றன. இப்படித்தான் இறக்கின்றன; எழுகின்றன, விழுகின்றன. யாராலுமே எதிர்த்துத் தடுத்து நிறுத்த முடியாத முகலாயப் படை யெடுப்பாளர்களைப் பற்றி, குழந்தைப் பருவத்திலிருந்தே இந்தியன் அறிந்திருக்கிறான் - Tartar (தார்த்தாரி) என்ற கொடிய சொல்லை உங்கள் மொழிக்குக் கொடுத்தவர்களையே நான் சொல்கிறேன்.

இந்தியன் இப்போது புரிந்துகொண்டுவிட்டான். இன்று பிறந்த குழந்தைகளைப்போல் அவன் உளற விரும்பவில்லை. மேலைநாட்டு மக்களே, நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள். இது உங்கள் நாள். குழந்தைகளே, உம், ஆகட்டும்; பேச வேண்டியதைப் பேசித்தீருங்கள். இது குழந்தைகள் மழலை மொழிகளை உளறிக்கொட்டும் காலம். நாங்கள் எங்கள் பாடத்தைப் படித்துவிட்டோம், அமைதியாக இருக்கின்றோம். இன்று உங்களிடம் சிறிது பணம் இருக்கிறது, அதனால் எங்களை அலட்சியமாகப் பார்க்கிறீர்கள். நல்லது, இது உங்கள் காலம். உளறுங்கள், குழந்தைகளே, உளறுங்கள், இதுதான் இந்தியாவின் மனப்பான்மை.

வெற்றுப் பேச்சுக்களால் தேவதேவனை அடைந்துவிட முடியாது. அறிவின் ஆற்றலாலோ, வெற்றி கொள்ளும் வல்லமையினாலோ அவனை அடைய முடியாது. யார் அனைத்திற்கும் மூல காரணத்தை அறிந்தவனோ, மற்ற அனைத்தும் அழியக் கூடியவை என்பதை அறிந்தவனோ அவனிடமே இறைவன் வருகிறான்; வேறு யாரிடமும் அல்ல. தான் கற் வேண்டிய பாடத்தைப் பல்லாயிர வருட அனுபவத்தின் மூலம் இந்தியா கற்றுக் கொண்டுவிட்டது. அது தன் முகத்தை இறைவனை நோக்கித் திருப்பிக் கொண்டுவிட்டது. அது எத்தனையோ தவறுகள் செய்துள்ளது. சுமை சுமையாகக் குப்பைகூளங்கள் இந்தியினத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன. இருக்கட்டும், அதனால் என்ன? குப்பைகளைக் களைவதும், நகரங்களைத் துப்பரவு செய்வதும் பெரிய விஷயமா என்ன? அது வாழ்வைத் தருமா? அருமையான அமைப்புகளைப் படைத்த நாடுகளே அழிகின்றன. அப்படி இருக்க தகரத்தலான இந்த மேலை நிறுவனங்களைப் பற்றி என்ன சொல்ல? அவை ஐந்து நாட்களில் உருவாகின்றன, ஆறாவது நாள் அழிகின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய இதர நாடகள் இரு நூற்றாண்டு காலம் கூட உயிர்வாழ முடியவில்லை. ஆனால் எங்கள் நிறுவனங்களோ காலத்தை வென்று நிற்கின்றன. இந்து கூறுகிறான்: ‘ஆம், உலகின் பழைய நாடுகளையெல்லாம் நாங்கள் புதைத்துவிட்டோம். புதிய இனங்கள் அனைத்தையும் புதைக்க இங்கே காத்திருக்கிறோம். ஏனெனில் எங்கள் லட்சியம் இந்த உலகம் அல்ல; மறுஉலகம், உங்கள் லட்சியம் என்னவோ அப்படித்தான் நீங்களும் இருப்பீர்கள். உங்கள் லட்சியம் அழியக் கூடிய பொருட்களைப் பற்றியதாக, இந்த உலகத்தைப் பற்றியதாக இருக்குமானால், நீங்களும் அப்படித்தான் இருப்பீர்கள். உங்கள் லட்சியம் ஜடப்பொருளானால் நீங்களும் ஜடமே ஆவீர்கள். கவனியுங்கள், எங்கள் லட்சியம் ஆன்மா, அது ஒன்று தான் உள்ளது. வேறு எதுவும் இல்லை. அந்த இறைவனைப்போல் நாங்களும் என்றும் வாழ்வோம்’

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:57 pm

3. பெண்மை லட்சியங்கள்



உலக வரலாற்றின் மிகவும் புராதனமான இந்திய ஆரிய இனத்திலேயே பெண்மை லட்சியங்கள் மையம் கொண்டுள்ளன. வேதங்கள் சொல்வதுபோல், இந்த இனத்தில் பெண்கள் ‘சக தரிமிணி’யாக இருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் யாக குண்டம் ஒன்று இருந்தது. திருமணத்தின்போது அதில் வளர்க்கப்படுகின்ற அக்கினி, தம்பதியருள் ஒருவர் மரணம் அடையும்வரை அணையாமல் பாதுகாக்கப்படுகிறது; சிதைக்கு வேண்டிய நெருப்பு இதிலிருந்தே எடுத்துச் செல்லப்படுகிறது. யாக குண்டத்தில் வளர்கின்ற இந்த அக்னியில் கணவனும் மனைவியும் ஆஹூதி அளித்தார்கள். மனைவி இல்லாமல் கணவன் தனித்துப் பிரார்த்தனைகள் செய்ய முடியாது. ஏனெனில் கணவன் ஒரு பாதியாகவும், மனைவி அவனது மறுபாதியாகவும் கருதப்படுகிறார்கள். இதன் காரணமாக திருமணம் ஆகாத ஒருவர் புரோகிதர் ஆக முடியாது. பண்டைய ரோமிலும் கிரீஸிலும் இதே கருத்து நிலவியது.

புரோகிதர் என்ற ஒரு தனி வகுப்பினர் உருவாகிய போது, மதச் சடங்குகளுக்கு மனைவி அவசியம் என்ற கருத்து படிப்படியாக மறையத் தொடங்குகியது. செமிட்டிக் ரத்தத்திலிருது உருவாகிய அஸ்ஸரிய இனம்தான், பெண்களுக்கு அதிகாரம் கிடையாது, திருமணம் ஆனாலும் அவளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று முதல் குரல் எழுப்பியது. இந்த பாபிலோனியக் கருத்தை பாரசீர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். அவர்கள் மூலம் இது ரோமிற்கும் கிரீஸிற்கும் பரவியது. எல்லா இடங்களிலும் பெண்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதற்கு இன்னொரு காரணம் திருமண முறையில் வந்த மாற்றம். ஆரம்பகால முறை பெண்வழி மரபாக (Matriarchy) இருந்தது; அதாவது குடும்பத் தலைவி தாயாக இருந்தாள், அவளது நிலையை அடைவது பெண்களின் நோக்கமாக இருந்தது. ஒரு பெண் பலரை மணக்கின்ற வழக்கத்திற்கு (Polyandry) இது வழிவகுத்தது. ஐந்தாறு சகோதர்ர்கள் ஒருத்தியை மணந்துகொண்டனர். வேதங்களிலும் இது அனுமதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். குழந்தைகள் இல்லாமல் ஒருவன் இறக்க நேர்ந்தால், அவனது விதவ இன்னொருவனுடன் வாழந்து குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டாள்; ஆனால் இறந்த கணவனே இநக் குழந்தையின் தந்தையாக அங்கீகரிக்கப்படுவான். பிற்காலத்தில் விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது அந்த வழக்கம் இல்லை.

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:58 pm

இத்தகைய தேவையற்ற பழக்கவழக்கங்களுடன், தனி மனிதனின்தூய வாழ்வு என்ற கருத்து நாடு முழுவதும் தீவிரமாக எழுந்தது. வேதங்களின் ஒவ்வொரு பக்கத்திலும் தூய வாழ்வு வற்புறுத்தப்படுவதைக் காணலாம். இதற்குக் கடுமையான சட்டங்கள் வகுக்கப்பட்டன. கல்வக்காக எல்லா ஆண்களும் பெண்களும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டனர், இருபது அல்லது முப்பது வயதுவரை அவர்கள் அங்கே கல்வி பயின்றனர், ஒழுக்கத்திலிருந்து சிறிது பிறழ்வதற்கும்கூட கொடூரமான தண்டைனைகள் அளிக்கப்பட்டன. இந்த ஒழுக்க உணர்வு, இனத்தின் இதயத்திலேயே புகுந்து, ஒரு வெறியாகவே(Mania) ஆகிவிட்டது. முகமதியர்கள் சித்தூரைப் படித்தபோது நடந்த நிகழ்ச்சியை இதற்கு ஒரு நிதரிசன மான எடுத்துக்காட்டாகக் கூறலாம். போரில் ஆண்கள் மிகவும் ஒரு பொது இடத்தில் பெருந்தீ வளர்த்தனர், முகமதியர்ள் வாலை உடைத்து உள்ளே நுழைந்தபோது 74,500 என்று இடப்பட்ட கடித்த்தை அனுமதியின்றி வாசிப்பவன், எந்தக் குற்றத்தின் காரணமாக அந்தக்கற்புக்கரசியர் உயிர்விட நேர்ந்ததோ அந்தக் குற்றத்தை இழைத்தவனாக்க் கருதப்பட்டான்.

அடுத்து வருவது துறவியர் காலம். புத்த மதத்தின் ஆதிக்க காலம் அது. நிர்வாண நிலையைத் துறவியர் மட்டுமே அடைய முடியும் எறு அது போதித்தது. கிறிஸ்தவர்கள் கூறுகின்ற சொர்க்கக் கருத்தை ஏறக்குறைய ஒத்தது அது. வீளைவு? இந்தியா முழுவதும் ஒரு மடம் ஆகியது; தூய வாழ்க்கை - அது ஒன்றே நோக்கம், அது ஒன்றே போராட்டம். தவறுகள் அனைத்தும் பெண்கள்மீது சுமத்தப்பட்டது. பெண்களுக்கு எதிராகப் பழமொழிகள் கூட இயற்றப்பட்டன. ‘நரகத்தின் வாசல் எது?’ ‘பெண்’, ‘நம்மைப் பிணைத்து ஒன்றுக்கும் உதவாதவர்கள் ஆக்கின்ற சங்கிலி எது?’ ‘பெண்’, ‘குருடரில் குருடன் யார்?’ ‘பெண்களால் ஏமாற்றப்பட்டவன்’.

மேலைநாட்டுத் துறவியர் அமைப்புகளிலும் இத்தகைய கருத்துக்களைக் காண முடியும். துறவு நெறியின் வளர்ச்சி என்றாலே பெண்களின் வீழ்ச்சி என்றுதான் பொருள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:58 pm

கடைசியில் பெண்மை பற்றிய மற்றொரு கருத்து உருவாகியது. மேலைநாட்டில் பெண்மை தனது லட்சியத்தை மனைவியில் கண்டது; கீழை நாட்டில் பெண்மையின் லட்சியம் தாய். இந்த மாற்றத்திற்குப் புரோகிதர்கள் மட்டுமே காரணம் என்று எண்ணிவிடக் கூடாது. அவர்கள் உலகிலுள்ள அனைத்திற்கும் உரிமை கொண்டாடக் கூடியவர்கள்தான் என்பது எனக்குத்தெரியும்,நானும் ஒரு மத ஆசிரியன்தான் - இருந்தும் இதைச் சொல்கிறேன். எல்லா மதங்களிலும் எல்லா இனங்களிலும் உள்ளதீர்க்கதரிசிகள் அனைவரையும் நான் வணங்குகிறேன். மேலைநாட்டைப் பொறுத்தவரை, பெண்களின் முன்னேற்றம் ஜான் ஸ்டூவர்ட் மில் மற்றும் பிற புரட்சிவாதிகளான பிரெஞ்சு தத்துவவாதிகளின் காரணமாகவே ஏற்பட்டது என்பதைக் கூறுமாறு நேர்மை என்னை வற்புறுத்துகிறது. மதம் சில காரியங்களைச் சாதித்துள்ளது. சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் அதுதான் சாதித்தது என்று கிடையாது. ஏன், ஆசியாமைனரில் கிறிஸ்தவ பிஷப்களுக்கு ஓர் அந்தப்புரம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது.

ஆங்கிலோ - சாக்ஸன் இனத்தில் காணப்படுவதுதான் கிறிஸ்தவ லட்சியம். முகமதியப் பெண் மேலைநாட்டுப் பெண்களிலிருந்து மிகவும் வேறுபடுகிறாள். சமூகரீதியான, அறிவு சம்பந்தமான வளர்ச்சிகளில் முகமதியப் பெண்ணின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க அளவிற்கு இல்லை. அப்படி இல்லை என்பதற்காக முகமதியப் பெண்மகிழ்ச்சியற்று இருக்கிறாள் என்று நினைத்துவிடக்கூடாது. இங்கே கணவனின் சொத்து மனைவிக்குச் சேர்வதில்லை. இந்தியாவில் கணவன் இறந்துவிட்டால் அவனது சொத்து அனைத்தும் மனைவிக்கே; அவனது சொந்தச்சொத்து கட்டாயமாக அவளுக்கே உரியது.

இந்தியாவில் குடும்பத்தின் ஆதாரம் தாய், எங்கள் லட்சியமும் அவளே. கடவுள் பிரபஞ்சத்தின் தாய், எனவே தாய் எங்களுக்குக் கடவுளின் பிரதிநிதி. கடவுள் ஒருவரே என்பதைக் கண்டு, அதை வேதங்களின் ஆரம்பக் கவிதைகளின் ஒரு கோட்பாடாக அமைத்தது ஒரு பெண் - ரிஷியே ஆவார். எங்கள் கடவுள் அறுதிநிலையிலும், தனி நிலையிலும் அவர் பெண், இவ்வாறுதான், தொட்டிலை ஆட்டுபவளான பெண்ணே கடவுளின் முதல் வெளிப்பாடு’ என்று நாங்கள் சொல்கிறோம். பிரார்த்தனையின்மூலம் பிறந்தவனே ஆரியன், காமத்தின் மூலம் பிறந்தவன் ஆரியன் அல்லாதவன்.

பிறப்பிற்கு முந்தையதான இந்த ஆதிக்கப்பற்றிய கோட்பாடு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. விஞ்ஞானமும் மதமும், ‘உங்களைப் புனிதர்களாக, தூயவர்களாக வைத்துக்கொள்ளுங்கள்’ என்று ஓங்கிய குரலில் கூறுகின்றன. இந்தக் கருத்து எங்களிடம்மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது. பிரார்த்தனையில் நிறைவுறாத திருமணத்தை நாங்கள் ஒரு இழிசெயலாகவே கருதுகிறோம். தாய் என்பவள் தூயவள், புனிதமானவள் என்பதை நானும் சரி, நல்ல இந்து ஒவ்வொருவரும் சிர நம்புகிறோம். நான் இன்று நானாக இருக்கபதற்கு அவளே காரணம். கற்பு - இதுதான் இந்து இனத்தின் ரகசியம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:59 pm

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச்சிறந்த கருவி அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பை அறிவதாகும். பண்டைய நிலையில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. பரிபூரணக் கருத்து அங்கே நிலவியது. திருமணம் ஆகும்வரை எந்த இந்துவும் புலோகிதன் ஆக முடியாது; திருமணம் ஆகாதவன் அரை மனிதன், குறைவுடையவன் என்பதே இதன் பொருள். பரிபூரண சுதந்திரத்துடன் இருப்பவளே நிறைவான பெண்ணாக இருக்க முடியும். தற்கால பிந்துப் பெண்ணின் வாழ்க்கையினுடைய மையக் கருத்து அவளுடைய கற்பு. வட்டத்தின் மையம் மனைவி; அந்த மையத்தை நிர்ணயிப்பது அவளது கற்பு. இந்தக் கருத்தை அளவுக்கு மிஞ்சி நீட்டியதே இந்து விதவைகளை எரித்ததற்கான காரணம். இந்துப் பெண்கள் உலகின் மற்ற எந்தப் பெண்களையும்விட ஆன்மீக நாட்டம் உடையவர்கள், மத விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், இந்த அற்புதமான பண்புநலன்களைப் பாதுகாப்பதுடன், அவர்களது அறிவையும் வளர்த்தோமானால், எதிர்கால இந்துப் பெண் உலகிற்கே லட்சியப் பெண்ணாக விளங்குவாள்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:00 am

4. இந்தியப் பெண்களின் பண்டைய, நிகழ்கால, எதிர்கால வாழ்வு



சுவாமிஜி: ஆரியர் மற்றும் செமிட்டிக் பெண்மை லட்சியங்கள் எப்போதும் முரணாகவே இருந்து வருகிறது. பெண்கள் உடனிருப்பது பக்திக்குப் பகை என்று செமிட்டிக்குகள் கருதுகிறார்கள். மதச் சடங்கு எதையும் செமிட்டிக்குள் கருதுகிறார்கள். மதச் சடங்கு எதையும் பெண் செய்யக்கூடாது. உணவிற்காக ஒரு பறவையைக்கூட கொல்லக் கூடாது. ஆரியர்களின் கருத்தின்படியோ மனைவி இல்லாமல் ஒருவன் எந்த மதச்சடங்கையும் செய்ய முடியாது.

நிருபர்: ஆனால் சுவாமிஜி, இந்து மதம் ஆரிய மதம் அல்லவா?

சு: நவீன இந்துமதம் பெரும்பாலும் பௌராணிக மதமே, அதாவது புத்த மதத்திற்குப் பிறகு தோன்றியதே, வேதச்சடங்குகளைச் செய்யும்போது, மனைவி கட்டாயமாக பக்கத்தில் வேண்டும். என்றாலும் அவள் சாளக் கிராமங்களையோ வழிபாட்டு உருவங்களையோ தொடக்கூடாது. ஏனெனில் சாளக்கிராம வழிபாடு பௌராணி காலத்தின் பிற்பகுதியில் தோன்றியது என்று தயானந்த சரஸ்வதி சுட்டிக் காட்டியுள்ளார்.

நி: எனவே நம்மிடையே ஆண், பெண் சமத்துவமின்மைக்குக் காரணம் புத்த மத்ததின் ஆதிக்கமே என்று நீங்கள் கருதுகிறீர்களா?

சு: ஆம். அதுவே நிச்சயமான காரணம். ஆனால் திடீரென்று புகுந்த ஐரோப்பிய எண்ணங்களாலும், அதனால் நம்மிடையே விளைந்த வேறுபாட்டு உணர்ச்சியாலும் நம் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்னும் கருத்திற்கு நாம் எளிதில் இசைந்துவிடக் கூடாது. பெண்களுக்குப்பாதுகாப்பு தேவை என்பதைச் சூழ்நிலை பல நூற்றாண்டுகளாக நம்மீது சுமத்தி வந்துள்ளது.

நி: சுவாமிஜி, அப்படியானால் நமது பெண்களின் தற்போதைய நிலைமையில் நீங்கள் மனப்பூர்வமாக திருப்தி அடைகிறீர்களா?

சு: ஒருபோதும் இல்லை. அவர்களுக்குக் கல்வி கற்பிக்கலாம், அந்த மட்டில்தான் நாம் அவர்கள் பிஷயத்தில் தலையிடும் உரிமை உள்ளது. தங்கள் பிரச்சினைகளைத்தாங்களே தீர்த்துக் கொள்ளும் நிலைமையில் அவர்கள் வைக்கப்படவேண்டும். இதனை அவர்களுக்காகப் பிறர் செய்யமுடியாது, முடியவும் கூடாது. அதை நிறைவேற்றிக் கொள்வதில் நம் இந்தியப் பெண்கள் உலகின் பிறரைப்போல் திறமையுடைவர்களே.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:01 am

நி: புத்த மத்த்தின் தீய ஆதிக்கம் என்று கூறியதன் உட்பொருள் என்ன?

சு: அந்த மதம் சீரழிந்த போதுதான் தீமை விளைந்தது. ஒவ்வோர் இயக்கமும் ஒரு தனிச் சிறப்பியல்பினால் வெற்றி பெறுகிறது. அது வீழ்ச்சியுறும்போது, அதற்குப் பெருமை சேர்த்த அதே இயல்புதான் அதன் முக்கியமான பலவீனமும் ஆகிறது. மனிதருள் சிறந்தவரான புத்தர் வியக்கத்தக்க அமைச்சுச்சக்தி பெற்றவர் (organiser). அவர் இந்த முறையால் உலகமே தம்மைப் பின்பற்றுமாறு செய்தார். அவரது மதம் துறவை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் அதில் துறவுக்கோலத்தை மட்டுமே பெருமை செய்யும் ஒரு தீய விளைவு ஏற்பட்டு விட்டது. மடங்களில் துறவிகள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து விட்டது. மடங்களில் துறவிகள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து கலந்து வாழும் வழியை முதன்முதலில் ஏற்படுத்தியவர் புத்தரே. ஆனால் அந்தச் சங்கத்தில் பெண்களுக்கு ஆண்களைவிடத் தாழ்ந்த நிலையைதான் அவரால் தர முடிந்தது. மடத்துத் தலைவியர் எவ்வளவுதான் சிறப்புற்றிருந்தாலும், தலைவர் சிலரது அனுமதியில்லாமல் இன்றியமையாத எந்தப் பணியையும் செய்ய இயலாதவர்களாக அவர்கள் இருந்தனர். இந்த ஏற்பாடு தற்காலிகமாக புத்த மதத்திற்கு உறுதியளிக்கவே செய்தது. ஆனால் அதன் நீண்ட கால விளைவுகள் வருத்தம் தரத்தக்கனவே.

வேதங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டு தான் இருக்கிறது; ஆனால் அங்கே ஆண் பெண் வேறுபாடு காட்டப்படவில்லை. ஜனக மன்னரின் அவையில் யாஜ்ஞவல்கியர் கேள்வி கேட்கப்பட்ட விதம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவரைக் கேள்வி கேட்டவருள் முதன்மையானவனள் வாசக்னவி - வாதில் வல்லவள்; அவர்கள் பிரம்மவாதினி என்று அழைக்கப்பட்டர். ‘திறமைஆன வில்வீரனின் கையில் உள்ள ஒளிவீசும் இரு அம்புகளை ஒத்தவை என் கேள்விகள் என்கிறாள் அவள். அங்கு அவளது பெண்பிறவியைப் பற்றிய கேள்வியே எழவில்லை. காடுகளில் இருந்த நம் பண்டைய குருகுலப் பல்கலை கழகங்களில் சிறுவர் சிறுமியரிடையே நிலவிய சமத்துவத்தைப்போல் முழுமை பெற்றது வேறு ஏதாவது உண்டா? நமது சம்ஸ்கிருத நாடங்களைப் படியுங்கள். சாகுந்தலத்தைப்படித்த பிறகு டென்னிசன் Princess (இளவரசி) நமக்கு ஏதாவது கற்பிக்க முடியுமா?

நி: நம் பண்டைய பெருமைகளை மிகவும் அருமையாக நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள், சுவாமிஜி!

சு: அது ஒருவேளை உலகின் இரண்டு பகுதிகளையும்நான் பார்த்ததால் இருக்கலாம். சீதையைத் தோற்றுவித்த இனம் - அவள் கற்படைப் பாத்திரமாக இருந்தாலும் - உலகிலேயே பெண்களுக்கு இணையற்ற மரியாதை அளிப்பது என்பதில் சந்தேகமில்லை. மேலைநாட்டுப் பெண்களின் தலையில் சட்டத்தால் இறுக்கிக் கட்டப்படுள்ள பல சுமைகள் உள்ளன; அவை நமக்குச் சற்றும் புரியாதவை. நம்மிடம் குற்றங்களும் குணங்களும் இருக்கின்றன; அதுபோலவே அவர்களிடமும் இருக்கின்றன. அன்பு, மென்மை, நேர்மை இவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்பதே உலகினர் அனைவருடைய பொதுவான முயற்சி என்பதை மறந்து விடக்கூடாது. இந்தக் குணங்களை வெளிப்படுத்துவதில் மிகப்பெரிய இடம் வகிப்பது ஒரு நாட்டின் வழக்கங்களே. நற்பண்புகளைப் பொறுத்தவரையில் நமது இந்திய முறைகள்தான் மற்றவர்களின்முறைகளைவிடப் பல வழிகளில் மேம்பட்டவை என்று நான் தயக்கமின்றிக் கூறுவேன்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:02 am

நி: சுவாமிஜி, அப்படியானால் நம் பெண்களுக்குப் பிரச்சினையே இல்லையா?

சு: ஏன் இல்லை, பல உள்ளன, முக்கியமான பல முடியாத பிரச்சினையே இல்லை. ஆனால் உண்மையான கல்வியை என்னவோ இன்னும் நம்மால் வகுக்க முடியவில்லை.

நி: அதற்கு நீங்கள் வகுக்கும் இலக்கணம் என்ன?

சு: (புன்முறுவலுடன்): நான் எதற்கும் இலக்கணம் வகுப்பது இல்லை; ஆனால் அதை ஒருவாறு கூறலாம் - உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது மனத்தின் இயல்பான ஆற்றலை வளரச்செய்வது; அல்லது மனிதனைச் சரியாக, திறமையாகச சிந்திக்கப் பயிற்றுவிப்பது. எனவே இந்திய நாட்டின் தேவைக்காக நாம் அச்சமற்ற வீராங்கனைகளைப் படைப்போம்; சங்கமித்திரை, லீலா, அகல்யாபாய், மீராபாய் முதலியவர்களின் சந்ததியினர் என்று சொல்வதற்குத் தகுதிவாய்ந்த பெண்களை உருவாக்குவோம்; தூயவர்களான, தன்னலமற்றவர்களான, இறைவனின் திருவடிகளைப் பற்றியதால் வருகின்ற ஆற்றலைப் படைத்தவர்களான வீரர்களைப் பெறுகின்ற தாயாக இருக்கத்தக்கவர்களை உண்டுபண்ணுவோம்.

நி: சுவாமிஜி, அப்படியானால் கல்வியில் மத அம்சமும் கலந்திருக்க வேண்டும் என்பது உங்கள் கருத்து?

சு: மதம் என்பதுதான் கல்வியின் உட்சாரம் என்றே தான் கருதுகிறேன். இது மத்த்தைப்பற்றி என்னுடைய அல்லது வேறொருவருடைய கருத்து அல்ல. மற்ற விஷயங்களைப் போலவே ஆசிரியர் மாணவியின் தரத்தை அறிந்து, அவளை வழிநடத்த வேண்டும்; மிகக் குறைந்த எதிர்ப்பு உள்ள சொந்த வழியில் அவள் சென்று முன்னேற வகை செய்ய வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 06, 2008 12:03 am

நி: தாய், மனைவி போன்ற உயர்ந்த இடங்களை, அவற்றை அடையாத பிரம்மச்சாரிணிகளுக்கு மதம் அளிப்பது பெண்ணினத்திற்குச் செய்யும் நேரடியான நீங்காகாதா?

சு: மதம் பெண்களுக்கு பிரம்மச்சரியம் உயர்வென்று கூறுகின்ற அதேவேளையில் ஆண்களுக்கும் அதையே விதிக்கிறது. இதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் மனத்தில் குழப்பம் நிலவுவதைக் காட்டுகிறது. இந்து மதம் மனிதனுக்கு ஒரு கடமையை, ஒரேவொரு கடுமையையே குறிப்பிடுகிறது; நிலையற்ற உலகில் நிலையானதைத் தேடி அடைவதே அது. அதனை அடைவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட வழியை யாராலும் காட்ட முடியாது. திருமணம் திருமணமின்மை, நன்மை - தீமை, அறிவு - அறியாமை என்று எதுவாயினும் சரி,லட்சியத்திற்கு இட்டுச் செல்லுமானால் அது சரியான பாதையே. இதில்தான் இந்து மதமும் புத்த மதமும் பெரிதும் வேறுபடுகின்றன. புற உலகின் நிலையாமையை உணர்வதற்கு வழிகாட்டுவது புத்த மத்தின் முக்கியமான கொள்கை; பொதுப்படையாகக் கூறினால், அதனை ஒரே வழியில்தான் அடைய முடியும் என்கிறது புத்த மதம். மகாபாரதத்தில் கூறப்படும் யோகியின் கதை ஞாபகம் உள்ளதா? அவன் தனது மன ஆற்றலால் ஒரு காகத்தையும் கொக்கையும் எரித்தால் அகங்காரம் கொண்டான். பிறகு நகருள் சென்று கணவனுக்குப் பணிவிடைசெய்யும் பத்தினி மற்றும் தர்ம வியாதன் என்னும் கசாப்புக் கடைக்காரனையும் கண்டான். அவர்கள் கற்பு, கடமை என்று சாதாரண வழிமூலமே உள்ளொளி பெற்றதை உணர்ந்தான்.

நி: சுவாமிஜி, இந்த நாட்டின் பெண்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

சு: பெண்களுக்கு மட்டும் என்ன? ஆண்களுக்கும் கூறுகிறேன் - பாரத நாட்டை நம்புங்கள், பாரதத்தின் மதத்தை நம்புங்கள், வலிமையுடன் வாழுங்கள், நம்பிக்கை வையுங்கள். எதற்கும் வெட்கப்பட வேண்டாம். இந்தியா ஏற்றுக் கொள்வதற்குச் சிறிதே உள்ளது. ஆனால் பிறருக்கு வழங்க உலக மக்களினங்கள் அனைவரிலும் அதிகம் அதனிடம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக