புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
85 Posts - 79%
heezulia
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
250 Posts - 77%
heezulia
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_m102015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்..

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 05, 2011 10:26 am

தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் 10 அணிகள் மட்டுமே 2015 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும். மின்னோஸ் எனப்படும் குட்டி அணிகள் அனுமதிக்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Getty Imagesஇதன் மூலம் ஹாலந்து, அயர்லாந்து போன்ற அணிகள் ஆஸ்திரேலியா , நியூசிலாந்தில் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணிகள் நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியவை என்பது நினைவிருக்கலாம்.
10 அணிகளை மட்டுமே அனுமதிப்பது என்ற முடிவுக்கு ஐசிசியின் செயற்குழு நேற்று ஒப்புதல் அளித்தது.

மேலும் 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிக்கு, அனைத்து அணிகளுமே - இந்த 10 அணிகள் உள்பட - தகுதி அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் தற்போது முழு நேர உறுப்பினர்களாக உள்ள (டெஸ்ட் ஆடும்) 10 நாடுகளை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 2019 உலக்க கோப்பைப் போட்டிக்கு தகுதி அடிப்படையி்ல்தான் அணிகள் தேர்வு செய்யப்படும் என்று இந்த பத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், குட்டி அணிகளும் ஐசிசியின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வகை செய்யும் விதத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அவர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பத்து முழு நேர உறுப்பினர்கள் தவிர 6 அசோசியேட் உறுப்பு நாடுகளும் கலந்து கொள்ள முடியும்.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்திய 10வது உலகக் கோப்பைப் போட்டி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும்தான் முக்கியக் காரணம். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்காக நன்றி கூறிக் கொள்கிறோம்.

50 ஓவர் ஒரு நாள் போட்டிகளுக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை என்பதை இது வெளிக்காட்டியுள்ளது. மேலும், ஒரு நாள் போட்டிக்கான மிகச் சிறந்த, மிகப் பிரமாண்டமான விளம்பரமாகவும் இந்தப் போட்டித் தொடர் மாறியுள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 10:42 am

சின்ன சின்ன அணிகளை சேர்த்து அவை பெரிய அணிகளை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஜெயித்துவிடுகிறது அது பெரிய அணிகளுக்கு மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது. அதனால் தான் ஐசிசி இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 05, 2011 10:43 am

Manik wrote:சின்ன சின்ன அணிகளை சேர்த்து அவை பெரிய அணிகளை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஜெயித்துவிடுகிறது அது பெரிய அணிகளுக்கு மிகவும் பாதிப்புக்குள்ளாகிறது. அதனால் தான் ஐசிசி இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கும்

appadiya sir ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 11:05 am

அப்படித்தான் சார் நம்பினால் நம்புங்கள் நம்பாவிடில் அடி விழும் 2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்.. 246975

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Apr 05, 2011 11:08 am

அயர்லாந்து போன்ற அணிகளுக்கு இது கொடுமையான செய்தி தான்.

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 11:56 am

சிறிய அணிகளுக்கு இது பெரிய எழப்பு தான்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 05, 2011 12:07 pm

ஆஸ்திரேலியா , நியூசிலாந்து இணைந்து 2015ம் ஆண்டு நடத்தவுள்ள 11வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பதற்கு அயர்லாந்து கடும் ஆட்சேபனையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது.

Getty Imagesஇந்தியாவில் முடிவடைந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், ஆச்சரியமூட்டிய அணிகளில் ஒன்று அயர்லாந்து. வலுவான இங்கிலாந்தையே தோற்கடித்து ஆப்படித்தது அயர்லாந்து.
ஆனால் அயர்லாந்து போன்ற அணிகளின் வருகையை ரசிக்காத ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் உள்ளிட்ட சிலர் அடுத்த உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்த குட்டி அணிகளை சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில்தான் ஐசிசியின் முடிவு வந்துள்ளது. இதற்கு அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்ட் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இது மிகவும் அவமானமாக இருக்கிறது. வளரும் அணியான எங்களை அவமானப்படுத்தியுள்ளது ஐசிசி.

ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் என்பது புரியவில்லை. நாங்கள் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியை விட மேலே, 10வது இடத்தில் இருக்கிறோம். நாங்கள் மேலும் வளர மாட்டோம் என்று கூற எந்தக் காரணமும் இல்லை. ஆனால் வளர வாய்ப்பே தராமல் இப்போது கதவை மூடி விட்டது ஐசிசி. இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

நாங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டோம். இங்கிலாந்தை தோற்கடித்தோம். உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றிலேயே விரைவான செஞ்சுரியை அடித்தது எங்களது அணிதான். ஆனால் திறமைகளை வளர்த்துக் கொண்டு வரும் எங்களுக்கு வாசலை அடைத்து விட்டனர். இது என்ன நியாயம் என்று குமுறலோடு பேசினார் போர்ட்டர்பீல்ட்.

டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் குட்டி அணிகளை சேர்க்கலாம் என்று ஐசிசி கூறியிருப்பதையும் ஆட்சேபித்துள்ளார் போர்ட்டர்பீல்ட். இதுகுறித்து அவர் கூறுகையில்,

இது மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது. அனைவருக்குமே ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதுதான் கனவாக இருக்குமே தவிர டுவென்டி 20 உலகக் கோப்பை நிச்சயம் கனவாக இருக்க முடியாது.

மேலும் ஐசிசியின் இந்த முடிவால் உலக அளவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கும். கிரிக்கெட் ஆர்வம் உள்ள பல நாடுகள் இப்போது பெருகியுள்ளன. அந்த நாடுகள் எல்லாம் பின்வாங்கும் நிலை உருவாகும்.

அயர்லாந்து மட்டுமல்ல, கனடா, ஹால்ந்து உள்ளிட்ட நாடுகளும் கூட ஐசிசியின் இந்த முடிவால் அப்செட் ஆகியுள்ளன என்றார்.

அயர்லாந்து கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி வாரன் டியூட்ரம், ஐசிசியின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த முடிவு கடும் கோபத்தை கொடுப்பதாக உள்ளது. இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இது மிகப் பெரிய துரோகச் செயலாகும். உலக்க கோப்பையில் அயர்லாந்து மிக அருமையாக விளையாடியது. பெரிய நாடுகளுடன் மோதி அவர்களை திணறடித்தது. இதை யாரும் மறந்து விடக் கூடாது.

உலகின் மிகச் சிறந்த அணிகளுடன் சிறப்பாக விளையாடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றார் அவர்.

thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக