புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
89 Posts - 38%
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
manikavi
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
prajai
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
340 Posts - 48%
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
24 Posts - 3%
prajai
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள இந்துமதம்


   
   

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 11:36 am

First topic message reminder :

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் I


1. உறவு


அர்த்தமுள்ள இந்துமதம் - Page 8 Kanari10

‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்

காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது.
அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.

தனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.

தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.

கணவன் - மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.

வார்த்தைகளை கவனியுங்கள்.

தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.

இந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.
இந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?

இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமத்த்தத்துவம்

பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

பெற தந்தையைப் பிச்சைகு அலையவிடும் மகன் இருக்கின்றான்.
கட்டிய தாரத்தையும் பட்டின் போடும் கணவன் இருக்கின்றான்.

தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கடக்கும் பிள்ளை இருக்கிறான்.

கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

சமூக மரபுகள் இவற்றை ஒழுக்க் கேடாக்க் கருதவில்லை.

முதலில் நமது சமூகங்களுக்கு, ‘இவையும் ஒழுக்க் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.

கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளில் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்கமுடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

அந்த உறவு இரவுக்கு மட்டுமே!


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:53 pm

ஒருநாள், வீட்டில் அந்த இசைத் தட்டைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, என் இளைய சகோதரி வந்தார்கள்.

“ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கிறது; அலமுவுக்கு கல்யாணம் பேசலாமா?” என்றார்கள்.

“இந்த வயதி என்ன கல்யாணம்?” என்றேன் நான்.

“சுபம் சீக்கிரம் என்பார்கள். பெண் திருமணத்தைச் சீக்கிரம் முடித்துவிடுவது நல்லது” என்றார்க்.
“சரி, பேசுங்கள்” என்றேன்.

கிராமத்துக்குச் சென்ற என் இளைய சகோதரி, எனது ஒன்றுவிட்ட சகோதரியிடம் சொல்லி, “அந்த மாப்பிள்ளையைப் பேச வேண்டும்” என்றார்க்க்.

அதற்கு என் ஒன்றுவிட்ட சகோதரி, “எங்கள் வீட்டில் செய்யக்கூடாதா?” என்று கேட்டுவிட்டு நேரே சென்னைக்குப்புறப்பட்டு வந்துவிட்டார்க்க்.

என் சகோதர்ரும், “அந்தச் சகோதரிவீட்டில்தான் செய்ய வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

அன்றைக்கே திருமணமும் பேசி முடிந்தது.

அப்போது 1967 தேர்தல் முடிந்த நேரம். தேர்தலில் வாங்கிய அடி; இரண்டு படங்களில் பட்ட கடன் எல்லாம் என்னைப் பின்னி எடுத்த நேரம்.

செட்டி நாட்டுத் திருமணம் என்றால் செலவு எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியும்.

“காலணாக்கூட கையில் இல்லாமல் கல்யாணம் பேசி விட்டோமே!” என்று நான் கலங்கினேன்.

எங்கிருந்தெல்லாம் எனக்க ஆறுதல் வந்தது தெரியுமா?

யாரிடமிருந்தெல்லாம் எனக்கு உதவி வந்தது தெரியுமா?”

நான் எதிர்பாராத இடமெல்லாம் எனக்குக்கை கொடுத்தன.

நான் பிறருக்குத் திருமணம் செய்து வைத்தது வீண் போகவில்லை.

என் மகளின் திருமணத்தைக் கண்ணனே முன்னின்று நடத்தி வைத்துவிட்டா.

திருமண வரவேற்பில் ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்ற பாடலைச் சௌந்தர்ராஜன் பாடும்போது,

‘கைத்தலம தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாண மாக’

-என்ற என்னுடைய அடிகளே, என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தன.

அப்படியேதான் இரண்டாவது பெண்ணின் திருமணத்தைப்பற்றியும் நான் சிந்திக்கவில்லை.

“காசி விசாலாட்சி” என்றொரு கதையும் வசனமும் எழுத பெங்களூர் உட்லண்டஸ ஓட்டலில் தங்கியிருந்தேன்.

பாதிவரை எழுதிவிட்டேன்.

கிராமத்திலிருந்து காசிக்குச் சென்ற ஒருதாயும் தகப்பனும் காலராவினால் பாதிக்கப்பட, காசி விசுவநாதரும் விசாலாட்சியுமே தாய்தகப்பனாக வந்திருந்து, ஒரு பெண்ணின் திருமணத்தைப் பேசி முடிக்கிறார்கள்.

அதிலே முடிவாக நான் எழுதிய வசனம், ‘இந்த ஆடி போய் ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்வோம்’ என்பதாகும்.

அதை எழுதி நிறுத்தியபோது சென்னையிலிருந்து டிரங்கால் வந்தது.

“சில பத்திரங்களில் கையெழுத்துப் போட வேண்டும். ஒருநாள் வந்துவிட்டுப் போங்கள்” என்றார்கள்.

நான் வந்தபோது, என் வீட்டிற்குச் சில உறவினர்கள் வந்திருந்தார்கள்.

அவர்கள் “தம்பி நல்ல பையன் இருக்கிறான்; குடும்பமும் சென்னையிலே இருக்கிறது; பேசலாமா?” என்றார்கள்.

பேசினார்கள்; மறுநாள் பெண்பார்க வந்தார்கள்.

“மாலையிலேயே நான் பெங்களூர்போக வேண்டும் ” என்றேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 1:18 pm

பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள், “நாளைக்கே பேசி முடித்துக் கொள்வோம்; பெங்களூர்ப் பயணத்தை ஒருநாள் ஒத்திப் போடுங்கள்” என்றார்கள்.

திருமணம் பேசி முடிந்து விட்டது.

அப்போதும் பணம் இல்லாத நிலைதான்.

கண்ணன் எனக்கு வழி காட்டினான்.

தேவர் எனக்குக் கைகொடுத்தார்.

கேட பக்கமெல்லாம் உதவி கிடைத்தது.

திருமணம் மங்கலமாக முடிந்துவிட்டது.

“ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று காசி விசுவநாதன் சொல்வதாக நான் வசனத்தில் எழுதினேன். ஆவணியிலேயே திருமணம் நடந்துவிட்டது.

நன்றியுடமை, தெய்வபக்தி, வஞ்சகமற்ற உள்ளம் இவற்றுக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்கிறான்.

“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” “நம்பினோர் கெடுவதில்லை,நானகு மறை தீர்ப்பு” என்பதெல்லாம் இந்துக்களில் பழமொழிகள்.

விதையைப்போட்டுவிட்டுக் கனி வராதா என்று நான் ஏங்கி எதிர்பார்த்ததில்லை.

விதைத்துக்கொண்டே போனேன். திரும்பி வந்து பார்த்தபோது மரங்கள் பழுத்துக் குலுங்கின.

என்னால் நடத்த முடியாத நற்காரியங்கள் என் வீட்டிலே நடைபெறுமானால், இறைவனைத்தவிர வேறு காரணம் ஏது?

கண்ணனை நினைக்கிறேன்.

சொன்னதுபலிக்கிறது.


17. பூர்வ ஜென்மம்



பூர்வ ஜென்மம் என்று ஒன்று உண்டா? பூர்வஜென்மத்தில் தொடர்ச்சியாக இந்த ஜென்மத்தில் நாம் நன்மைத்தீஐகளை அனுபவிக்கிறோம் என்பது உண்மையா?”

“ஜென்மங்கள் பற்றிய விஷயத்தில் கடவுளுக்குச் சம்பந்தம் என்ன?”

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதிலைக் கூறுமுன் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பராமாசாரிய சுவாமிகள் எழுதியுள்ள ஒரு சிறு நூலிலிருந்து விஷயங்களை வைக்கிறேன்.

“கடவுளை நோக்கிச் செய்கின்ற பிரார்த்தனை அல்லது வேண்டுகோள் பலனுடையதாக இருக்குமா? அப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா? அப்படி இருப்பாரன்றால், நமக்கும் அவருக்கும் எவ்விதத்தொடர்பும் இருக்கின்றதாகத் தெரியவில்லையே! அவ்வித மூட நம்பிக்கை நமது நாடைவிட்டுப்போனாலன்றிநம் நாடு முன்னேற முடியாது என்று சொல்கின்ற பலர், ஆலய வழிபாட்டிலும், வீட்டு வழிபாட்டிலும் தலை சிறந்த நமது தமிழகத்திலேயே உற்பத்தியாகி இருக்கிறார்கள். இவை வெளி நாடுகளிலிருந்து விதைத்த விதைகளால் ஏற்பட்டவனை. இப்படிப்பட்ட கேள்விகளையும் இதற்கு மேலதிகமான கேள்விகளையும் பல்லாயிரம் வருஈங்களுக்கு முன்பே கேட்டு, அவர்களுக்கெல்லாம் பல நியாயங்களும் நிரூபணங்களும் கொடுத்து ஒத்துக்கொள்ளுமாறு மது அலுளாளர்களும் ரிஷிகளும் செய்து, அவற்றைப் பின் சந்ததியார்கள் யாவரும் உணர்ந்து கொள்ளுமாறு ஏடுகளில் எழுதியும் உதவியிருக்கிறார்கள். அந்த உண்மைகளை நாம் திருவருளால் கண்டுணர்ந்து இன்று வெற்றிமுரசு கொட்டிகையாண்டு வருகிறோம்.

அவ்வாறு கேட்கின்ற ஒருவரிடம்,நாம் முதலாவதாக ஒரு கேள்வி கேட்கிறோம்; “நீ இந்த உலகத்தில் பிறந்து, நன்றாக உண்டு வளர்ந்து, இவ்வாறு பேசுவதற்கு மூல காரணம் உன்னுடைய அப்பாவும் அம்மாவும்தான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா?” என்பதே அந்தக் கேள்வி. ‘ஆம்’ என்று ஒப்புக் கொண்டால் மட்டும் மேற்கொண்டு பேசுவோம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 1:18 pm

மனிதனான எவனும் ஒப்புக்கொள்ளாதிருக்க முடியாது. “உன்னை உன்னுடைய அம்மாதானே பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்துப் பாலூட்டித்தாலாட்டி உணவு கொடுத்து வளர்த்து வந்தாள்? அப்படியிருக்க ‘நீ யாருடைய குழந்தை’ என்று கேட்டால், ‘நீ ஏன் அம்மாவின் பெயரச் சொல்லாமல் அப்பாவின் பெயரைச் சொலி, அவருடைய மகன் என்று சொல்கிறாயே’ என்று கேட்போம். உன்னைப்பெற்றெடுத்து உனத தாயார்தான் என்பதே அவள் சொல்லத்தான் தெரியுமே தவிர, நீ அறியாதிருக்க, தகப்பனார் பெயரை உன் தாயார் சொன்னதைக் கேட்டுத் தானே ஒப்புக்கொண்டு சொல்லிவருகிறாய்?” என்போம். ‘ஆம்’ என்று சொல்லாமல் தீராது.

தாயாருக்கே தான் பெற்ற பிள்ளையின் தகப்பானர்யார் என்று தெரியாத நிலையிலிருந்தால், தாயார் விலாசத்தைப் போட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை., தாயார் பெயரைச்சல்லாத்தும், தகப்பனார் பெயரைச் சொல்லாத்தும் உலக முழுவதிலும் நடைபெறுவதாகும். அதற்குமூல காரணம் ஒன்று உண்டு. அதாவது, ஒரு விளைநிலம் ஒருவனுகுச்சொந்தமாக இருக்க, அதில் உழுவு செய்து வித்திட அவனுக்குத்தான் அந்த நிலத்தில் விளைந்து வந்த பயிர் சொந்தமாகும். அதுபோல் மனைவி, கணவனுடைய உடைமை, வித்திட்டவனும் கணவன், ஆகவே, கணவனது உணைமையாக மனைவியிடத்தில் உற்பத்தியான குழந்தைகள் சொந்தத் தந்தையின் குழந்தைகளாகின்றன.

அதனாலேயே பெண்களெல்லாம் கற்புடையவர்களாக இருக்க வேண்டுமென்பது உலக நீதி.

இரண்டாவது கேள்வி: உனக்குக்கல்யாண மாகியிருக்கிறதா?” என்பதாகும். ‘ஆம்’ என்பான். “பிள்ளைகள் இருக்கின்றனவா” ‘ஆம், இருக்கின்றனர்!’ “நீயும் உன் மனைவியும் விரும்பிய வண்ணம் குழந்தைகள் பிறந்தனவா?” ‘இல்லவே இல்லை” என்பான்.

நேருஜிக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் ஆண் குழந்தைகள் கிடையாத என்பதும், பல பெரிய பணக்கார்ர்களுக்கும்,பதவியில் உள்ளவர்களுக்கும், சில வைத்திய நிபுணர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் குழந்தையே கிடையாது என்பதும், யாவரும் அறிந்த உண்மையாகும்.

அதற்கும் உண்மையான காரணம் உண்டு. அது எந்த மனிதனும் தனது விருப்பம்போல் ஆண் மகவுக்குரிய வித்தையோ, பெண் மகவுக்குரிய வித்தையோ உற்பத்தி செய்து உண்டாக்கிக் கொள்ள முடியாததேயாகும். அந்த வித்தை, எல்லாம் வல்ல கடவுள் கொடுத்துத்தான் எந்தத் தந்தையும் பெறவேண்டியிருகிறது. கடவுள் கொடுக்கத்தந்தை பெற்று,தாயார் அதனைப் பெற்றதன் காரணத்தினாலேயே தாய் தந்தையரைப் ‘பெற்றவர்கள்’ அல்லது ‘பெற்றோர்கள்’ என்று சொல்லுகின்றோம்.

இந்த உண்மையை உணர்ந்த அருளாளர்கள், தந்தை இரண்டு மாதம் தங்குகின்ற நாற்றங்காலாகவும், தாயாரைப் பத்து மாதம் வளர்கின்ற விளைநிலமாகவும், இரண்டையும் உடையவர்கள் கடவுளே என்றும், அவற்றில் வித்திட்டவரும் கடவுளே என்றும் கண்டு, ஆண்டனே உலகத்தில் பிறந்திருக்கிற எல்லா மனிதர்களுக்கும் எல்லா பிறவிகளுக்கும் உண்மையான அம்மையப்பன் ஆகின்றான் என்றும் அருளியிருக்கின்றார்க்க்.

இந்துக்கள், கடவுளை ‘அம்மையே அப்பா’ என்றும், ‘எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவருக்கும் ‘தந்தை தாய் தம்பிரான்’ என்றும், கிறிஸ்தவர்கள் ‘நாமெல்லாம் பரமண்டலத்திலிருக்கின்ற பிதாவினது குழந்தைகளே’ என்றும்; இஸ்லாமியர்கள் ‘கடவுளே மனிதர்களைப் படைத்தார்’ என்றும் கூறி வருகிறார்கள். யாரும் உயிர்களைக் கடவுள் படைத்ததாகச் சொல்லவில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 1:19 pm

மூன்றாவது கேள்வி: “உனக்கு ஒரு பெயரிடப்பெற்றிருக்கிறதல்லவா? அந்தப் பெயர் கண்ணுக்குத் தெரியாத உயிருக்கு இடப்பட்டதா? கண்ணுக்குத் தெரிகின்ற பாரமுள்ள உடலுக்கு இடப்பட்டதா?அல்லது வேறொரு பாரமில்லாத உன் உடலுக்கு இடப்பட்டதா? எப்பொழுத் இடப்பட்டது? யாரால் இடப்பட்டது?” என்று கேட்போம். ‘நான் பிறந்த பின்தான் பெயரிட்டிருக்கிறார்கள்; ஆணா பெண்ணா என்று பார்த்து என் பெற்றோர்கள்தான் பெயரிட்டிருக்கிறார்கள்.’ என்றுதான் (நாம் எழுதியிருகிற புத்தகத்தைப் படித்தறியாத) எவரும் சொல்வர்.

ஆனால் உண்மையில் மனிதராகப் பிறந்திருக்கிற எவருகும் பெயரிட்டவர் கடவுளே யாவர். ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிற்றக்கச்செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப்பிராமாணமுள்ள அதிசூக்கும்மான வித்தைச்செலுத்தி, முன்னரேயே அருதைய வினைகளுக்குத்தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு சுருக்கெழுத்துப் போன்ற இரேக்களாகப்பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு, இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னி கிரக நிலையில் பிறக்க வேண்டுமென்று கடவுளே தீர்மானித்து, அதன்படி பிறக்கச் செய்து, அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்பம் துன்பம் அனுபவிது வருமாறும் ஆட்சி புரிந்து வருகிறார். அந்தப்பெயரும் சொப்பனத்தில் பாரமுள்ள உடலின் உதவியின்றி, இன்பம் துன்பம் அனுபவிக்கின்ற, பாரமில்லாத உள்ளுடலுக்கே இட்டிருக்கிறார்.

இந்த அரிய பெரிய பேருண்மையை முதல் முறையாகக் கேட்கின்ற அனைவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஒருவேளை, நம்கு மூளைகுகோளாறாக இருக்கலாமோ என்றுகூடச்சில ஆத்திரக்கார்ர்கள் நினைக்கக் கூடும். நாம் இதனுடைய உண்மையைச் சோதித்து உணருவதற்காக ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்த பின் இவ்விதம் கூறுகின்றோம்.

திருவள்ளுவர்:

“எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”


என்றும்,

“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”


என்றும் கூறியிருப்பதனால், நாம் கூறும் இந்த உண்மையைச் சோதித்துப்பார்த்தபின், அதைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமே தவிர, கேட்ட மாத்திரத்தில் யாரும் எதையும் மறுத்தால் அது அறிவுடைமையாகாது.

பெயர்களைக்குறித்துக் கிறிஸ்துவ வேத நூலில் பிரசங்கி ஆகம்ம், அதிகாரம் 6, வசனம் 10 - ல் இருக்கின்றவன்எவனும் தோன்று முன்னமே பெயரிடப்பெற்றிருக்கிறான். அவன் மனுஷன் என்பது தெரிந்திருக்கிறது” என்றும், இரேகை சாஸ்திரத்தைக் குறித்து யோபு ஆகம்ம், அதிகாரம் 37, வசனம் 7-ல் “தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படி, அவர் சகல மனுஈருடைய கையையும் அறியும்படி, முத்தரித்துப் போடுகிறார்” என்றும் கூறியிருக்கிறது.

உதாரணமாக நாகர்கோவில் ஸ்ரீ ஆறுமுக நாவலரது நாடி சாஸ்திர ஏட்டில், அவருடைய பெயரை ‘ஐந்தும் ஒன்றும் வதனமெனப் பெயரும் சூட்டி ‘ என்று கண்டிருந்தது. ஐந்து +ஒன்று +ஆறு; வதன் என்றால் முகம்; ஆறுமுக்ம் என்பது ஆண்டவன் இட்ட பெயர்.

ஸ்ரீவைகுண்டத்திலுள்ள ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவ அன்பருக்கு, ‘சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் இவன் தன் நாம்ம்’ என்று கண்டிருந்தது. ‘ச’ என்று எழுத்து வரிசையில் ஆறாவது எழுது ‘சூ’; ஒன்பதாவது எழுது ‘சை’ அவரது தந்தை இட்ட பெரும் ‘சூசை’ என்பதாகும். ஆண்டவன் கொடுத்த பெயரும் சூசை என்பதாகும்.

ஓர் இந்துவைப்போல் மாறுவேஈம் போட்டுக்கொண்டு சென்ற, மதுரையிலுள்ள இஸ்லாமியருக்கு ‘அப்துல் ரஹ்மான்’ என்று பெயர் கூறப் பெற்றிருக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 1:19 pm

ஓர் ஆங்கிலேயர் பார்த்தபொழுது, ‘முழத்தில் பாதி இவன் தன் நாம்ம்’ என்றிருந்தது. அவரது பெயர் ‘ஜான்’ என்பதாகும். கோவையில் கௌமார மடதை நிறுவிய தலைவருக்கு இராமக் குட்டி’ என்றும், பின் துறவு பூண்டு ‘இராமானந்தர்’ ஆவார் என்றும் கண்டிருந்தது. இவற்றின் உண்மைகளை, சென்னை அரசாங்கத்தார் கை ரேகைகள் சம்பந்தமாக, ‘சபதரிஷி நாடி’யின் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்து பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கந்தர் நாடி, காக்கையர் நாடி, கௌசிகர் நாடி, சீவக-சிந்தாமணி, அநாகத வேம் முதலிய பிற இரேகை சாஸ்திரங்களும் இருக்கின்றன.

கடவுள் கொடுத்திருக்கும் அவ்வித்த்தீர்ப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்குக் காரணம், அவரவர் சுய அறிவு கொடு முன் பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளில் ஏற்பட்ட வேற்றுமைகளே தவிர, கடவுளது பட்சபாதமுள்ள செயலால் அல்ல என்பதற்குரிய நிரூபணங்களும், இரேகை சாஸ்தி, ஏடுகளில் காணப்பெறுகின்றன.
கடவுள் கொடுக்கிற நியாயத் தீர்ப்பில் தவறு ஏதும் இருக்க முடியாது.”

மதுரை ஆதீன கர்த்தர் மேற்கூறிய கருத்துப்படி, நம்முடைய பிறப்பும், நமக்குப் பெயரிடப்படுவதும், நமது வளர்ப்பும், முற்பிறவியும் மறுபிறவியும் ஆக எல்லாமுமே இறைவன் கையில்தான் இருக்கின்றன.

“ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ” என்றும் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள்.

“முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை.
முதல் இடை கடைநமது வசத்திலில்லை

என்றான் மகாகவி பாரதி.

எந்தத்தாயின் வயிற்றில்,எந்த நேரம் நாம் பிறக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன பெயர் சூட்டப்புடும் என்பதையும் இறைவன் குறிக்கிறான்.

பின்னாளில், நாம் வைத்துக்கொள்கிற புனைப் பெயரைக்கூட இறைவனே குறித்திருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.

உதாரணமாக,
என் பெற்றோர் எனக்கிட்ட பெயர் முத்தையா.

இது வைத்தீசுவரன் கோயி சுவாமியின் பெயர்.

அந்த சுவாமி எங்கள் குலதெய்வம்.

என் சகோதர்ருக்குமறுபெயர் முத்துக்குமரன்.

என் பெயரை மாற்றி ஒருபுனைபெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியபோது ‘கண்ணதாசன்’ என்று பெயர் எனக்கேன் தோன்றிற்று?

அப்போது பாரதிதாசன், சக்திதாசன், கம்பதாசன் என்றெல்லாம் பலர் இருந்ததால் அதுமாதிரி ஒரு பெயரை வைத்துக்கொள்ள விரும்பினேன்.

உண்மைதான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 1:20 pm

காலங்களால் அந்தப் பெயர் பொருத்தமாகிவிட்டது.

கண்ணனும் தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை!

நானும் எட்டாவது குழந்தை.

கண்ணனை வணங்கத் தொடங்கிய நாளில் இருந்து எனக்கு அமைதியும் ஞானமும் வரத் தொடங்கின.

சரியாகத் தேடிப் பார்த்தால் ஏதாவது ஒருநாடி சாஸ்திரத்தில் இதை நான் காணக்கூடும்.

பூர்வ ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன் என்பதும் தெரியக்கூடும்
நாடி சாஸ்திரம் அதையும் சொல்கிறது என்கிறார் ஆதீனகர்த்தா.

உதாரணமாக,

“எகிப்து தேசத்தில் முன் பிறவியில் மன்னராக இருந்த ஒருவரே, இன்று திருநெல்வேலி ஜில்லாவில் சிங்கப் பட்டி ஜமீன்தாராகப் பிறந்திருக்கிறார்” என்று”அநாகத வேதம்” என்று நாடி சாஸ்திரத்தல் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

தில்,முன் செய்த தீவினை இன்னதென்றும், அதற்குரிய பரிகாரம் இன்னதென்றும் குறிப்பிடப் பெற்று அந்தப் பரிகாரம் செய்தபின் அவருடைய விதி பூரண மாக்க் குணமாகி விட்டதாம்.

“ஒவ்வொரு உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறதும என்னும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.

‘பதவீம் பூர்வ புண்ணியானால்’ என்பது வடமொழி சுலோகம்.

‘மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்’ என்பதும், தமிழ் மூதுர.

முற்பிறப்பின் வகரும வினைகளை அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.

அலகாப்பாதில் செல்வந்தர் மகனாக் பிறந்தவர் பரத கண்டத்தில்பிரதம மந்திரியானதும், சேரிவாழ் மக்களிடையே பிறந்தவர் பாதுகாப்பு மந்திரியானதும், மராட்டியக் குடிமகன் ஒருவர் நிதி மந்திரியானதும், காஞ்சியிலும் திருவாரூரிலும் நடுத்தரக் குடம்பத்தில் பிறந்தவர்கள் முதல் மந்திகளானாதும் அவர்களூடைய திறமையினாலா? முயற்சியினாலா?

எட்டாம் வகுப்பை எட்டிப் பார்க்காத ஓர் ஏழை தமிழகத்தின் தலைனாகி, ஆயிரம் பள்ளிக் கூடங்கள் கட்டி நூற்றுக்குத்தொண்ணூறு பேரப் படிக்க வைத்தது எப்படி முடிந்தது.?

“இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி விட்ட சிவன்”


என்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன?

ஒவ்வொரு உயிரின் வாழ்வும் தாழ்வும், வறுமையும் வளமும், நோயும் சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனில் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன? முற்றி முதிர்ந்த ஞானம் இவற்றை அடையாளம் கண்டு கொள்கிறது.

முயற்சியால் ஆக்க்கூடிய திருவும், தெய்வத்தின் இயக்கத்தால் கிடைப்பதே.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 1:43 pm

ஆண்டவனில் ஆக்க்கூடிய யாரும் தப்ப முடியாது.

ஒருதலைவருக்குப் புற்றுநோய் வந்தபோது “நாத்திகம் பேசியதால் வந்தது” என்றார்கள்.

ஆத்திகம் பேசிய ரமணருக்கு ஏன் வந்தது?

சிலருக்கு பொடி போட்டதால் வந்தது என்றார்கள்.

பொடி போடாதவர்களுக்கு ஏன் வந்தது?

‘புகையிலை உபயோகிப்பதால் வருகிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதை உபயோகிக்காதவர்களுக்கு ஏன் வருகிறது?

ஆத்திகராக இருந்ததால், ஒருவர்நீண்ட நாள் வாழ்ந்ததாக்க கூறுகிறார்கள்.

நாத்திகர்களும் நீண்ட நாட்கள் வாழ என்ன காரணம்?
அளவோடு சாப்பிடுகிறவர்கள் அதிக நாள் வாழலாம் என்கிறார்கள்.

அளவின்றிச்சாப்பிடுவோரும் வாழ்வதற்கு என்ன காரணம்?

இன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத்தவிர வேறு என்ன காரணம்?

எந்தக கணக்கைக்கொண்டு தெய்வம் வழங்குகிறது?

ஒவ்வொரு பிறவியின் கணக்கைக்கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது.

நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன்.

ஆகவே, நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.

நாம்பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப்பிறப்பில்பாத்யையும், அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப்புடைத்து”


என்றான் வள்ளுவன்.

ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பாகவே, நம்மவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த பிறப்பு என்பது நம்முடைய ஆசையின் படியே விளையிறைவன் அனுமதிப்பானானால, அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்து, இந்தப் பிறவியில் என்னிடம் நன்றியோடு நடந்தவர்களுக்கெல்லாம், அந்த நன்றியைத் திரும்பிச்செலுத்த விரும்புகிறேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 1:44 pm

18. பிற மதங்கள்


இந்து மதம் பிற மதங்களை வெறுப்பதில்லை. சொல்லப்போனால் எல்லா மதங்களையும் தன்னோடு சமமாகவே கருதுகிறுது.

மதத் துவேஷம், எந்தக் காலத்திலும் இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டதில்லை.

அதன்பரந்த கரங்கள், அத்தனை மதங்களையும் அணைத்துக்கொண்டே வளர்ந்திருக்கின்றன.

ஓர் ஏரியின் நீரைப்போல் பரம்பொருளையும், அதில் இறங்குனிற் பல படித்துறைகளைப்போல் எல்லா மதங்களையும் பரமஹம்ஞர் காணுகின்றார்

அன்பின் மூலம் அன்பு வளர்வதைப்போல், வெறுப்பின் மூலம் வளர்வதில்லை என்கிறது இந்து மதம்.

வெறுப்பு ஒருகுறுகிய கூட்டுக்ள் சதிராடுகிறது. அன்போ, வானையும் கடலையும்போல், அறிவை விரியச்செய்கின்றது.

நிலத்தைப்பங்கு போட்டுக் கொள்வதுபோல் வானத்தைப் பங்கு போட முடிவதில்லை.

‘நிலம்’ என்பது மதம்? ‘வானம்’ என்பது பரம்பொருள் என்கிறார் பரம ஹம்சர்;

‘சமண மதம் பரவ் கிடந்த காலத்தில் அதைக் கருவறுத்து, சமணர்களைக் குழுவிலேற்றிய கூன் பாண்டியனும், மங்கையர்கரசியும்தான் பிற மதங்களைத் துவேஷித்த முதலாவதும் கடைசியுமான இந்துக்கள்.

அர்களுக்கு முன்னாலும் சரி. பின்னாலும் சரி, இந்து மதம் யாரையும் வெறுத்ததில்லை.

“வீட்டின் உச்சி முகட்டுக்குப்போக ஏணி, மூங்கில் படி, கயிறு- இவற்றில் ஏதேனும் ஒன்றன் உதவியைக் கொண்டு ஏறலாம். அதுபோலப் பரம்பொருளை அடைவதற்கு ஒவ்வொரு மதம்மு அப்படிப்பட்ட மார்க்கங்களில் ஒன்றைத்தான் காட்டுகிறது.

அதுபோலவே, வெவ்வேறு காலத்தில் தேசத்தோறும் தோன்றிய மதபோதகர்கள் அனைவரும், சர்வ சக்தியுள்ள ஒரேயொரு மூலப்பொருளிடமிருந்து இடைவிடாது பெருகிக் கொண்டிருக்கும் ஒளியை வெளியிடும் தீப ஸ்தம்பம் போன்றவர்களே” என்றார் பரமஹம்சர்.

எல்லா மதங்களாலும் போற்றப்படும் இறைவன் ஒருவனாகவே இருந்தால் ஏன் அவனைப் பல மடங்கு ம்ப மாதிரி வருணிக்கின்றன?

இங்கு பரமஹம்சரின் பதில்:

“நீ வீட்டு எஜமான்: உன் மனைவிக்குக்கணவன்; மகனுக்குத் தந்தை; வேலைக்காரனுக்க முதலாளி; ஆனால்மு நீ ஒருவன்தான்.

அவரவரும் உன்னிடம் கொண்ட உறவு முறையை வைத்து உன்னைப் பார்ப்பதுபோல், பலமத்த்தவரும் ஆண்டவனைப் பல விதத்தில் பார்க்கிறார்க்கள்.”

ராமகிருஷ்ணரின் இந்த வாக்கு இந்துவின் விரிந்த ஞானத்துக்கு எடுத்துக்காட்டு.

இந்து மதத்திற்கு எதிராகப் பல கட்டங்களில்தோன்றிய நாத்திகவாதம், தானாகவே மடிந்து போனதற்குக்காரணம் இதுதான்.

சகிப்புத் தன்மையையும், அரவணைப்பையும் இந்து மதம் வலியுறுத்தியது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 1:45 pm

“உடலில் பட்ட காயம் மறைந்துவிடும். உள்ளத்இல் பட்டால்மறையாது. ஆகவே,பிறரை நீ புண்படுத்தாதே” என்கிறது இந்து மதம்.

தண்டனையைக் கடவுளின் பொறுப்பில் விட்டு விடுவதால், நடைமுறைகளைத்தாங்கிக்கொள்கிற சக்தி இயற்கையாகவே வந்து விடுகிறது.

“காலப்போக்கில் ஒவ்வொன்றும் மாறுகிறது” என்று விஞ்ஞான உண்மயை, வேதாந்த உண்மையாக இந்துக்கள் எப்போதோ சொல்லிவிட்டார்கள்.

‘மாறும்வரை பொறுத்திரு’ என்பதே இந்து மத்த்தின் உபதேசம்.

மனப்பக்குவம் இல்லாதவன், நினைத்தபடி எல்லாம் நடக்கிறான்.

வழியில் கிடைக்கும் அனுபவங்கள், அவனுக்கு அந்தப் பக்குவத்தை உண்டாக்கி விடுகின்றன.

‘வெறுபை வளர்ப்பவனும் என்றோ ஒருநாள் பக்குவம் பெறுவான்; அதுவரை அவனை நாம் சகிப்போம்’ என்பதே இந்து மத்தின் சாரம்.

இவற்றை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இந்தத் தொடர் கட்டுரையில், நான்பிற மதங்களை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி வந்த கடிதமே.

இந்து மத்த்தின் சிறப்பியல்புகளை நான் விவரித்துக் கொண்டுபோகும்போது, வேறு மதங்களுக்உ அந்தச்சிறப்பில்லை என்ற கருதக்கூடாது.

நான் ஓர் இந்து என்ற முறையில், எனது மத்த்தின் மேன்மைகளை நான் குறிப்பிடுகின்றேன்.

அவை பிற மதங்களில் இருக்கலாம்; நான் மறுக்க வில்லை.

உதாரணமாக, ‘கல்லானாலும் புல்லானாலும்’ என்ற கட்டுரையில், இந்துப் பெண்களின் கற்பியல்புகளை நான் விவரித்ததைப் படித்துவிட்டு, “எங்கள் மத்த்தில் கற்புள்ள பெண்கள் இல்லையா?” எனுற் ஒரு கிறிஸ்துவ நண்பர் எனக்கு எழுதியிருக்கிறார்.

நான் அப்படிச்சொன்னேனா?

‘கற்பை வலியுறுத்தும் கதைகள் இந்து மத்த்தில் அதிகம்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.

எனது மூதாதையர்க் எப்படி எந்த மத்த்தையும் வெறுக்கவில்லையோ, அப்படியே நானும் வெறுக்க மாட்டேன்.

சாதாரண மனிதன் தன் அறியாமையால் தன் மதமே பெரியதென்று எண்ணி ஆரவாரம் செய்கிறான்.

உண்மை ஞானம் எனக்கு இன்னும் உதிக்கவில்லை. அது உதிக்கும் முன்னாலேயே எல்லா மதங்களையும் நேசிக்கும் அறிவை நான் பரமைம்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஆகவே, இந்தக் கட்டுரையில், தொடர்ச்சியாக இந்து மத்த்தின் மேன்மையை நான் குறிப்பிடும் போதெல்லாம், பிற மதங்களில் அவை இல்லை என்று சொல்வதாக்க்கருதக்கூடாது.

‘என் மனைவி அழகானவள்’ என்று சொன்னால் ‘அவன் மனைவி கோரமானவள்’ என்று அர்த்தமல்ல!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 1:45 pm

19. சமதர்மம்


‘ஏழை ஏழையாகவே இருப்பது, அவன்தலையெழுத்து’ என்று இந்து மதம் சொல்கிறதா?

ஏழை முயற்சி செய்து முன்னுக்கு வரக்கூடாதென்று இந்துமதம் தடுக்கிறதா?

‘பணக்காரன் தேவைக்கு மேல் சொத்து வைத்திருப்பதை இந்து மதம் அனுமதிக்கிறாதா?

இல்லை!

தர்ம்ம் சரியாக விநியோக்கப்படவேண்டும் என்பதே இந்து மத்த்தின் சாரம்.

கடந்த நூற்றாண்டுகளில் பணக்கார்ர்களாக இருந்தவர்கள், தங்கள் சுயநலத்துக்கக ஏழ்மையைத் தலைவிதி’ என்றார்கள்.
ஆனால், ஏழையின் அளவைப் பணக்கார்ர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஏழ்மை என்பது நிரந்தரமாக இருக்குமானால், அது இறைவன் விதித விதியாக இருக்கலாம்.

எப்போது ஏழையும் பணக்காரனாக வாய்ப்பிருக்கிறதோ, அப்போது அந்த வாய்ப்புகள் தடுக்கப்ட்டவன் தான் ஏழையாக இருக்கிறான் என்று அர்த்தம்.

‘பேரசைக்கார்ர்களை மோட்சத்துக்குப் போவதில்லை’ என்று இந்து மதம் கூறுகிறது.

ஒருவனது அறிவை இறைவன் நிர்ணயிக்கலாம்; ஆனால்பொருளை அவன் நிர்ணயிப்பதில்லை.

‘ஏழ்மை என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது அல்ல’ என்று இந்துமதம் அறுதியிட்டுக்கூறுகிறது.

அந்தக்கால உபன்யாசகர்கள் இதுபற்றி என்ன சொன்னார்களோ, எனக்குத் தெரியாது.

ஆனால், இந்தக் காலத்தில், இந்துமத்தத்துவங்களை லௌகீக வாழ்க்கை உகந்த வகையில் விமர்சிக்கும் காஞ்சி ஆசார்ய சுவாமிகளே, அதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

தெளிவான சமதர்ம்மே இந்து மத்த்தின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

பொருளாதார சமதர்மத்தையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அவர்களது கருத்தை, அவர்களது வார்த்தைகளிலேயே அப்படியே தருகிறேன்.

இது துறவியின் பேச்சு என்று அப்போது படிக்காமல் இருந்தவர்க், இப்போது படியுங்கள்.

அவர்கள் சொல்கிறார்கள்;

“ஸாயா தோயம் வஸநம் அஸநம்”

ஸாயா என்றால் நிழல்: தோயம் என்றது ஜலம்; வஸநயம் என்பது உடுத்திக்கொள்கிற வஸ்திரம்; அஸநம் என்றால் ஆகாரம்.

மனுஈர்களுடைய மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள, இந்த நான்கும் மிகவும் அவசியமானவை. நிழல் கொடுப்பு இந்தப்பூமிதான். பூமியிலிருந்த மண், கல், சுண்ணாம்பு எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு வீடு கட்டிக்கொள்கிறோம். பூமியிருருந்து ஊலம் வருகிறது. ஆகாரம், பூமியிலிருந்துதான் கிடைக்கிறது. வஸ்திரமும் பூமியிலிருந்து வரும்படியான பருத்தியினால்தான் கிடைக்கிறது. முடிந்த முடிவில், நாம் ‘பூமி’யில்தான் மறைந்து போகிறோம் நமக்குத்தேவையானவற்றை எல்லாம் பூமிதான் கொடுக்கிறது. என்றாலும், ‘பூமி’யில் தான் மறைந்து போகிறோம். நமக்குத் தேவையானவற்றை எல்லாம் பூமிதான் கொடுக்கிறது என்றாலும்
‘பூமி’யிலிருந்து கிடைக்கும்படியான பொருள்களில், நமக்கு மிகவும் குறைச்சலாக எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் மானத்தைக் காப்பாற்க்க்கொள்ள ஆடை கட்டிக்கொள்ள வேண்டும். நமக்கு ஒரு வருஷத்திற்குக் குறைந்தது எவ்வளவு ஆடை வேண்டமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில்தான் நாம் கவனம் செலுத்துவதில்லை.

ஆடை எதற்கு? மானத்தைக்காத்துக் கொள்வதற்காக, அதற்கு நல்ல கெட்டித் துணியாக,பருத்தி ஆடையாக இருந்தால் போதும். பகட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டால், மற்றவர்கள் கௌரவமாக நினைப்பார்கள் என்ற தப்பாக எண்ணிக் கொண்டு, அவ்வாறு செய்கிறோம். அதனால் மானத்தையும் மறைபதா நினைகமுடியாது. ‘பாருடா எவ்வளவுஇறுமாப்பு’ என்றாதான் பார்கிறவர்களுக்குத்தோன்றும். இந்த விஈயத்தில் குடம்பம் செலவழிக்கிற பணத்தைக்கணக்கெடுத்தால், அந்த் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மானத்தைக்காத்துக்கள்ளத் தேவைப்படும் திணி போக, பாக்கியை வைத்துக்கொண்டு, ஐந்து குடும்பங்களுக்கு வேண்டிய துணியைக்கூட சப்ளைபண்ணலாம்.

Sponsored content

PostSponsored content



Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக