புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
181 Posts - 77%
heezulia
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
10 Posts - 4%
prajai
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_m10இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 11:08 pm

இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Inter-mhs1

இந்தியர்கள் போதுமான அளவிற்கு பேசியுள்ளனர், போதுமான அளவிற்கு மனுக்கள் கொடுத்துள்ளனர் – ஆனால் போதுமான அளவிற்குச் செயல்படவில்லை. “ஆகவே, வாருங்கள், இப்போது செயல்படுவோம்!”

இண்டர்லோக் என்ற மலாய் பாடநூலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேற்று இரவு கூடியிருந்த இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்வாறான நிலைப்பாட்டை வலியுறுத்தினர்.

அரசாங்கம் இப்புத்தகத்தை மீட்டுக்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் பேசிய ஒவ்வொருவரும் அறைகூவல் விடுத்தனர்.

பெட்டாலிங் ஜெயா, மலேசிய இந்து சங்கத்தின் தலைமையகத்தில் நடந்த இக்கூட்டத்தில் 50 அமைப்புகளைச் சேர்ந்த 70 க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இரண்டு மணி நேரத்திற்குமேல் நடந்த அக்கூட்டத்தில் இண்டர்லோக் விவகாரத்தில் இந்து சங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்விதத் தடுமாற்றமும் இருந்ததில்லை என்று கூறப்பட்டது.


“நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்”

“மாணவ இளைஞர்களின் சிந்ததனை மாசுப்படுத்தி வன்முறை பண்பாட்டிற்கு வழிகாட்டும் இந்நூல் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும்”, என்று இந்து சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் பாலா தம்பிலிங்கம் அவரின் தொடக்க உரையில் கூறினார்.

“எங்களுடைய நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இவ்விவகாரத்தில் நமது பொதுவான நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு முன்பு இதர இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறோம்”, என்றாரவர்.

மஇகாவால் நியமிக்கப்பட்ட குழுவினர் கல்வி அமைச்சின் அதிகாரிகளோடு நடத்திய சந்திப்பு பற்றி குறிப்பிட்ட அவர், அப்பிரதிநிதிகள் அப்புத்தகம் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று ஏகமனதான கோரிக்கை விடுத்தனர் என்றார்.

ஆனால், கல்வி அமைச்சர் முகைதின் யாசின் வேறுபட்ட நிலையை குறிப்பிட்டுள்ளார். அந்நூலில் இந்திய சமூகத்தை இழிவுபடுத்தும் எதுவும் இல்லை என்ற ஒருமித்த கருத்தை அச்சந்திப்பு கண்டதாக தெரிவித்தார்.

“இது உண்மையல்ல”, என்று பாலா கூறினார். மஇகா தலைவர் ஜி. பழனிவேல் அந்நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இக்கோரிக்கை புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, என்ன முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு காத்திருப்போம்”, என்று அவர் மேலும் கூறினார்.

தெனாங் இடைத் தேர்தல் முடிவடைவதற்குமுன் அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்காது என்பதோடு இறுதியில் “அது இயற்கையாகவே மறைந்துவிடும்” என்று சிலர் வாதிட்டனர்.

இந்திய மலேசியர்கள் “எங்கு காயப்படுத்துமோ அங்கு அடிக்க வேண்டும்” என்று கூறிய செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன், அரசாங்கத்திற்குத் தேவைப்படும் வாக்குச் சீட்டுகளை அளிக்க இந்தியர்கள் மறுக்க வேண்டும் என்றார்.

“இண்டர்லோக் நூலுக்கு எதிராக போலீஸ் புகார் செய்வதற்கு தெனாங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது”, என்று அவர் தெரிவித்தார்.



“பிஎன்னின் 2008 பேரழிவு மீண்டும் வரும்”

2007 ஆம் ஆண்டில் அதன் நடத்தைக்கு 2008 ஆம் ஆண்டில் கற்றுக்கொண்ட பாடத்தை அரசாங்கம் மறந்து விட்டது. அடுத்த பொதுத் தேர்தல் வரட்டும், அதன் தற்போதைய நடத்தைக்கான தண்டனையைப் பெறும் என்று சில பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

“சமயத்தால் நான் ஒரு முஸ்லிம், தேசியத்தால் நான் ஒரு மலேசியன், மொழியால் நான் ஒரு தமிழன். இண்டர்லோக் நாவலில் இந்திய சமூகத்தின்மீது வீசப்பட்டிருக்கும் இழிவுகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்”, என்று வணிகரான ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராகிம் அவரது உரையில் கூறினார்.

முடிவு எடுக்கும் நிலையிலுள்ள சிலரிடம் தாம் இவ்விவகாரம் குறித்து தொடர்பு கொண்டு இந்நூலை மீட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“எனக்கு, ‘இண்டர்லோக்’ நூலுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள ஆட்சேபங்கள் குறித்து அரசாங்கம் கவலைப்படுவதாக தெரியவில்லை. அதைத்தான் 2007 ஆம் ஆண்டில் அது செய்தது. 2008 ஆம் ஆண்டில் அதற்கான விலையைக் கொடுத்தது. அது இப்போது செய்துக்கொண்டிருப்பதற்கான பலனை 2013 ஆம் ஆண்டில் அனுபவிக்கும்”, என்று அவர் மேலும் கூறினார்.

மலேசிய இந்தியர் இயக்கங்கள் ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர் டாக்டர் வி. சுப்பையா, பழனிவேலும் இதர மஇகா தலைவர்களும் இந்திய சமூகத்திற்கு அவர்களின் கடமையை ஆற்றத் தவறியதற்காக அவர்களைக் கடுமையாக சாடினார்.

“டிசம்பர் 29 ஆம் தேதி எங்களுடையப் புகாரை பழனிவேலுவிடம் கொடுத்தோம். பிரதமரிடம் பேசப்போவதாக அவர் கூறினார். ஆனால், இதுவரையில் எதுவும் நடைபெறவில்லை. இப்போது புத்தகம் மாணவர்களின் கைக்குச் சென்று விட்டது!”, என்று கடிந்துரைத்தார்.

இண்ட்ராப் ஐவரில் ஒருவரான கணபதி ராவ் எப்படி “இண்டர்லோக்” நூல் “ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும்” இழிவுபடுத்துகிறது என்பதை விளக்கியதோடு ஆளுங்கட்சியைக் காயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் இந்தியர்களை கேட்டுக்கொண்டார்.

உண்ணாவிரதம் மேற்கொள்ளுதல், சட்ட நடவடிக்கை எடுத்தல், கையெழுத்து வேட்டை போன்ற நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்த விவகாரம் அரசியலாக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்ட கருத்து நிராகரிக்கப்பட்டது. “எங்கு நலன்களுக்கிடையில் மோதல்கள் இருக்கின்றனவோ, அங்கு அரசியல் இருக்கும்”, என்று சுட்டிக் காட்டப்பட்டது.

அடுத்து, இவ்விவகாரத்தில் மெத்தனப் போக்கை விடுத்து உடனடியான நடவடிக்கைகள் எடுப்பதில் ஈடுபாடு காட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இண்டர்லோக் நூல் மீட்டுக்கொள்ளப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளயும் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“இண்டர்லோக் நடவடிக்கை குழு” (Interlok Action Committee) கீழ்க்கண்டவர்களை உறுப்பினராக் கொண்டிருக்கும்:

பாலா தம்பிலிங்கம், சிஎம் கோபாலன் மற்றும் அருண் துரைசாமி (மலேசிய இந்து சங்கம்), ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராகிம் (சுயேட்சை), ஜி.கிஷோர் (மலேசிய இந்திய மாணவர்கள் கழகம்), அழகேஷ் பத்துமலை (மலேசிய இந்திய இளைஞர் கழகம்), எ.முரளி (தமிழன் உதவும் கரங்கள்), எபி இராஜரத்தினம் மற்றும் வி.சுப்பையா (மலேசிய இந்தியர் இயக்கங்கள் ஒருங்கிணைப்பு பேரவை).

இண்டர்லோக் நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கோரும் கடிதம் ஒன்று இன்று பிற்பகல் மணி 12.30 அளவில் பிரதமர்துறை இலாகாவில் தாக்கல் செய்யப்படும் என்று பாலா தெரிவித்தார்.

மலேசியாஇன்று!



இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிப்பி
சிப்பி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011

Postசிப்பி Wed Jan 26, 2011 2:25 am

இந்த நூல் பத்தி இப்பத்தான் கேள்விப்ப்டுறேன். என்ன நூல் இது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 9:15 am

சிப்பி wrote:இந்த நூல் பத்தி இப்பத்தான் கேள்விப்ப்டுறேன். என்ன நூல் இது?

எப்படிப்பட்ட புத்தகம் என்பதை இங்கு பாருங்கள் சிப்பி!

http://www.eegarai.net/t50343-topic



இண்டர்லோக் நூலை அகற்றுவதற்கு நடவடிக்கை குழு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக