புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
29 Posts - 60%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
194 Posts - 73%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
8 Posts - 3%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "


   
   

Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


shivaca
shivaca
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 17/08/2011

Postshivaca Sun Aug 21, 2011 6:59 pm

வெறி வெறி யூஸ்புல் article. உங்கள் பாதங்களுக்கு வணக்கம் மற்றும் நன்றி



வாழ்க வளமுடன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 21, 2011 7:47 pm

இப்போதுதான் வாசிக்க துவங்கினேன் ! அருமையான பதிவு. வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் .பயன் கருதாது பயனுள்ள பதிவு தரும் ... அண்ணாமலை சுகுமாரன் ..அவசியம் .....பாராட்ட படவேண்டியவர் !

தொடருங்கள் உங்கள் அருள் பணியை ..... அருமையிருக்கு



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 21, 2011 8:31 pm

அருமையான பதிவு. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Image010ycm
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Aug 28, 2011 9:11 pm

[b]எனக்கு புரிந்தது இதுவே ! (33)-*
[/b]
*இதய பூர்வமாக கூறுகிறேன் !*

*ஒவ்வொரு மனிதனுள்ளும் அவனை மேன்மை படுத்திக்கொள்ளும்
வல்லமை அவனுள் பொதிந்தே உள்ளது !*

*அவனின் கர்ம வினையின் போக்கை மாற்றி அமைத்துக்கொள்ளும்
வழி அவனிடமே உள்ளது !*

*வாழ்வு என்பது தண்டனை கழிக்க வரும் சிறைச்சாலை இல்லை !
தன்னை மேன்மை படுத்திக்கொள்ளவரும் அற்ப்புதமான பாடசாலை !*

*இறைவன் ஒன்றும் தண்டனைதரும் சிறை வார்டன் அல்ல !
அறிவை நமக்கு தர நாளும் உழைக்கும் நல்லாசிரியன் !*

*செல்வந்தனாகவும் ,சுகமாக வாழ்வதும் நமது உரிமை !
ஒவ்வருவரின் வாழ்வின் வழி அதுதான் !*

*நம்மை நாமே துன்ப சிறையிலிட்டுகொள்ளவேண்டாம் !
மேலும் சில வாழ்வின் சிக்கலில் இருந்து மீளும் ,
சுலப வழிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம் *

இவ்வாறு சென்ற பகுதியை முடித்திருந்தோம் .

இடையேடையே தாமதம் சற்று ஆவதால்
முந்தய பகுதியின் இறுதி வரிகளை நினைவுப் படுத்தி
இன்னும் கொஞ்சம் மேலே செல்வோமே



மனம் என்பது எண்ணங்களின் கூட்டம் எனப்பார்த்தோம் .
எண்ணமே வாழ்வு என்பதும் நமது கிராமத்து பெரியவர் முதல்
நகரத்து உளவியல் அறிஞர் வரை அனைவருக்கும்
தெரிந்த விஷயம் தான் .

சாதாரண கிராமத்துப்பாட்டிக்கூட அடிக்கடிச் சொல்லும் தாரகமந்திரம் இது .
ஆனால் எண்ணமோ என்றும் நிக்ழ் காலத்தில் இருப்பதில்லை
அது வரும் காலத்தை இறந்தகாலமாகும் பெரு முயற்சியிலே
மும்முரமாக இருக்கிறது.
ஒரே ஷணம் நிகழ காலத்தில் இருப்பதே விழிப்புநிலை எனப்படுகிறது .
உடனே அதில் இருந்து வரும் காலத்தை நோக்கி மனம் சென்றுவிடுகிறது !

எப்போதும் உள்ளுக்குள் ஓயாத chating தான் !
அதை ஊன்றிக் கவனித்தால் ஓயாத இரைச்சல் !
மனதின் இரைச்சல் ஒரு மாளாத வாதை !

இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலும்
நமது மனம் வரும்காலத்தில் என்ன வேண்டும் ,
என்ன நடை பெற வேண்டும் என சிந்திப்பதில்லை ,
மாறாக என்ன என்ன நடை பெறக் கூடாது ,
என்ன என்ன நமது வாழ்வில் நடை பெற கூடாது
என்றுதான் ஆழமாக திட்டங்கள் போடும் !
இதன் மூலம் என்னநடக்ககூடாத்து
என்பதில் கவனமாக இருந்து அதையே
எண்ணி எண்ணி அதையே நம்முடைய வாழ்வில்
ஈர்க்கிறது !

குழியில் விழக்கூடாது என கவனமாக
குழியையே கவனமாகப் பாத்து நடந்து
தவறாமல் குழியிலேயே விழுகிறது !
என்ன எண்ணுகிறோமோ அது தான் நடக்கும்
அதுதான் LAW OF ATTRACTION .

மேலும் மனம் சென்றகாலத்திற்கும் ,வரும்காலத்திற்கும்
தொடர்த்து பயணம் செய்வதால் ,சென்ற காலத்தில்
பெற்ற அனுபவங்களையே ,வரும் காலத்திலும்
பரிமாறி , வரும்காலத்திலேயும்
அதே மாதிரி அனுபவங்களே ஏற்ப்பட செய்கிறது .

இன்னும் அதே மாதிரி அனுபவங்கள் ஏற்ப்பட்டதும் ,
தான் நினைத்ததே நடந்தது குறித்து மனம் பெருமைக் கூடபட்டுக்கொள்ளும் .

எனக்கு தெரியும் சார் ! இந்த பஸ் போறவிதம்
பார்க்கும் போதே கவிழ்த்து விடும் என நினைத்தேன்
என கையை முறித்து கொண்டும் ,வலியை
பொருட்படுத்தாமல் பெருமைப் பட்டுக்கொள்ளும்
சகோதரரை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாமே !

மனத்திற்கு இந்த மாதிரி பெருமைப் ,பீற்றி கொளவதும் ,
சந்தோஷப்படித்திக் கொள்வதும் அவசியம் தேவை !
இதுவே அதற்க்கு வாடிக்கை ! அதுவே அதற்க்கு ஒரு வேடிக்கையும் கூட !

நம்ம வீட்டு பெரியவர்கள் கூட சொல்லுவார்களே ,
எந்த ஒரு காரியமும் அது நடைபெறுமுன்
அதைப் பற்றி பேசாதே என்று !
அந்தக் காரியத்தைப் பற்றி பேசிவிட்டாலே ,
மனம் அதன் மூலம் அடையும் சந்தோஷத்தை
அனுபவித்துவிடும் , பிறகு மனத்திற்கு
அந்த காரியத்தை செயலாக செய்யும் வலிவை
தரும் ஆர்வம் சற்று குறைந்துவிடும் !

மேலும் பேசப் பேச மொத்தத்தில் அந்தக் காரியமே நடக்காது !
மனம் சந்தோஷத்தை அனுபவித்துவிட்டதால்
வேறு வேலையே நோக்கி செல்ல முனையும் .

எனவே செயல் புரியவேண்டும் என்ற கனலைப் பேணிவளருங்கள்

மாறாக அதைப்பற்றி பேசி மகிழ்ந்து அந்தக்கனலை அவித்துவிடாதீர்கள் .

இது ஒரு வாழ்வின் விதி .

தேவையற்ற பேச்சு வாழ்க்கைக்கு ,அதன் சாதனைகளுக்கு
பெரும் தடையாகும் .
எண்ணும் எண்ணங்கள் அத்தனையும் சக்தியின் வடிவம்
என்று பார்த்தோம் ! எண்ணமும் செயலும் வேறு வேறு அல்ல !
செயலின் சூக்ஷம வடிவம்தான் எண்ணம் !
எண்ணும் எண்ணத்தில் என்றும் விழிப்பு தேவை !
நாம் முனைதால் விழிப்புடன் இருந்தால் ,நம்மில்
தோன்றும் எண்ணங்களை நாம் நமது
கட்டுப்பாட்டில் வைக்கலாம் !

தும்பை விட்டு வாலை பிடிப்பது போல
இல்லாமல் செயல் நம்மை துன்பப் படுத்துமுன்
எண்ணத்திலேயே அதை கிள்ளி எறிந்து விடலாம் !

ஆனால் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் ,!
காணும் பொருள் , கேட்க்கும் பொருள் ,
உணரும் பொருள் இன்னும் நமது பொல்லாத
ஐந்து புலன்கள் வாயிலாக பெறும் உணர்ச்சிகள்
அத்தனையும் கிளை கிளையாக ஆயிரம்
எண்ணங்களை தூண்டுகின்றன.
அதில் நல்லதோ கெட்டதோ ,திருப்பித்திருப்பி
வரும் எண்ணங்கள் அதிக வலுப் பெற்று
செயல்களாக மாறுகிறது.
மனத்திற்கு நல்லது கெட்டது தெரியாது !
ஒயாமல் உழைக்கத்தான் தெரியும் .

மனம் ஒரு அப்பாவி உழைப்பாளி .

நடைப் பெற்ற செயல்களையும் ,அதன் மூலம் பெறும் உணர்வுகளையும்
பெறும் பட்டறிவு எனும் அனுபவத்தையும் தனித்தனியே ,
தவறாமல் பதிவு செய்து கொள்ளும் .

இவ்வாறு கிளைக்கும் ஆயிரம்ஆயிரம் எண்ணங்களை
கட்டுப்படுத்த வழி இல்லையா ?
மனத்தை அடக்க மனம் மட்டும் போதுமா ?
முதலில் மனம் தேவைதான் . வைராகியம் தான் முதல் தேவை .
மனதை மனத்தால் தான் அடக்க முடியும் .

ஆனால் தாவிக்குதிக்கும் இந்த மனதை அடக்க
ஒரு மாபெரும் கருவியும் இறைவன் நமக்கு
தந்திருக்கிறார் .
நாம் முன்பே பார்த்தோம் மூச்சிலே இருக்கு
சுஷமம் என்று ஒரு பகுதியிலே மூச்சின் மாண்பு பற்றி

எத்தனையோப் பார்த்துவிட்டோம் .

மூச்சைப் பற்றிய மெய்ப்பொருள் நமது இந்திய தத்துவ ஞானம்
உலகிற்கு தந்த மிகப்பெரும் கொடை

ஆயினும் அதன் பெருமையை நாமே அறியாமல் ,அதை வேறு ந்சாட்டார்கள்

நம்மிடம் கற்று நம்மிடமே விற்கக் காத்திருக்கிறோம் .

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மூச்சைப் பற்றி மூச்சின் வலிமை
அதன் ஆற்றல் ,மூச்சை வைத்து ஞானம் என நமது யோகியர்
பலவாறு நமக்கு அறிவை விட்டுச்சென்றுள்ளனர்.வேத காலத்திலேயே பிராணயாமம் எனும் மூச்சு பயிற்ச்சி வலியுறுத்தப் பட்டுள்ளது ..

வெற்றிகரமான வாழ்விற்கு அடிப்படைத தேவை
மனத் தெளிவு தான் .
சிந்திக்கின்ற மனம் தெளிவுபெறுகிறது
நல்லவிதமாக சிந்திக்க நல்ல விதமாக
பிராணன் உடலில் உலாவ வேண்டும் .

எதையும் சாதிக்க அதற்குரிய ஆற்றல் வேண்டும்
பிரார்த்தனையும் , பிராணனுமே ஆற்றலின் ஊற்று !

இதயம் என்பது பிராணனின் இருப்பிடம்
உணர்ச்சிகள், செயல்பாடு என்று வாழ்வின் அனைத்துமே
இங்கிருந்துகட்டுப்படுத்தப்படுகிறது .

ஆனால் இந்த இதயம் ரத்தத்தை செலுத்தும்
பௌதீக இதயம் இல்லை !
இது ஆன்மீக இதயம் !
இதற்க்கு மூன்று அடையாளங்களை நாராயண சூக்த்தம்
கூறுகிறது !
* தொப்புளுக்கு மேல் ஒரு ஜான் உயரம்
* சுடர்வரிசையால் சூழப்பட்டுள்ளது ,
* இதுவும் பிராகாசிக்கிறது !

இது சுஷமம் ஆனது !
இதுவரை நிரூபணம் ஆகாது !
இதை பார்க்கவோ ,படம் பிடிக்கவோ
முடியாது !
இந்த இதயத்தில் இருந்து தான் சுஷ்ம நாடிகள்
புறப்படுகின்றன !
இன்னும் நிரூபணம் ஆகவில்லையே தவிர
இது ரகசியம் அல்ல ! அணைத்து இந்தியருக்கும்
தெரியும் ,

வணங்கும் போதும் ,எந்த பிரமாணம் கூறும் போதும் ,
சந்தோசம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் போதும் ,
தவறாமல் எந்த பாமரரும் ,அரைகுறை பாமரரும்
இதயத்தில் கை வைத்தே பேசுவார்கள் .இது
பௌதீக இதயம் மீது இல்லை !
ஆன்மீக இதயம் மீதுதான் !

இனி பிராணனை கட்டுப்படுத்தும் ,மனதின்
கடிவாளத்தைப்பற்றி அடுத்த பகுதியில்
பார்க்கலாம் ! விரைவாக !
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


shivaca
shivaca
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 17/08/2011

Postshivaca Sun Aug 28, 2011 10:24 pm

நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவு கொடுத்தற்கு நன்றி .இன்னும் எதிர்பார்க்கிர்ன் உங்களிடம் இருந்து



வாழ்க வளமுடன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 29, 2011 12:58 am

நல்ல மனத்ன் ஓட்டங்கள் என்றுமே நல்லவைகளே சார்ந்திருக்கும்
நல்ல கட்டுரை தொடருங்கள் ஐயா காத்திருக்கிறோம் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Ila
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Aug 30, 2011 11:25 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (34)-



*செல்வந்தனாகவும் ,சுகமாக வாழ்வதும் நமது உரிமை,

ஒவ்வருவரின் வாழும் வழி அதுதான் .

ஏழ்மையுடனும் வறுமையுடனும் வாழச்சொல்லி இறைவன் எங்கும் கூறவில்லை .
*
வாழ்க்கை ஆனந்த மயமாக இருக்கவேண்டும்
ஏன் எனில் ஆண்டவனும் ஆனந்த மயம் தான்

ஆண்டவன் படைத்த இவ்வுலகின் உயரிய

படைப்பான மனிதனும் ஆனந்த மயமாகத்தானே
இருக்கவேண்டும் .

தகப்பனைப் போல்தானே பிள்ளையும் இருக்கவேண்டும் .

நாம் இறைவனின் படைப்பு ,

நாம் ஆனந்த மயமாகவே இருக்கவேண்டும்

அதுவே இறைப் பண்பு .



நாம் அடுத்தவரை ஆனந்தப்பட வைத்தால்
இறைவனின் பணியை சற்று குறைத்தவர் ஆவோம்
அவர்வேலையை நாம் பார்த்தால்
நம் நலனை இறைவன்நிச்சயம் பார்த்துக்கொள்வார்

நாம அடுத்தவரை ஆனந்தப் படுத்தினால்
நம்மை யாராவது ஆனந்தப் படுத்துவார்கள் .

ஆனால் நாம் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறோமா ?
என்ன status இல இருந்தாலும் நாம் என்ன state இல
இருக்கிறோம் என்பது தானே முக்கியம் !

நாம் தான் பிறந்ததில் இருந்து இருப்பது ஒரே
நிலை தானே ! மேலும் மேலும்
வேண்டும் என்பது தானே நமது நிலை

"இன்னும் கொஞ்சம்" இன்னும் கொஞ்சம் என்பதுதானே நமது இதயகீதம் ..

கிடைக்ககிடைக்க மேலும் ஒன்று தேவையாக
இருக்கிறதேத் தவிர கிடைத்ததினால் வரும்
சந்தோசம் நிலைப்பதில்லையே .

கிடைத்தவுடன் தான் தெரிகிறது நாம் அதை தேடவில்லை என்று.,

வேறு எதோ ஒன்று நமக்குத்தேவை எனப் புரிகிறது .
நமக்கு என்ன தேவை என்று நமக்கே புரியவில்லை !

அங்கும் இங்கும் அலைகிறோம் !
இது சந்தோஷத்தை தருமா ?
அது சந்தோஷத்தை தருமா ?
என TRIAL AND ERROR பார்ப்பதிலேயே
நம் காலம் கழிகிறது!

நமக்கு தக்கவழி காட்டும் சற்குருவும்
சட்டென்று வாய்ப்பதில்லை.
குருவோ தக்க மாணக்கனுக்காக
காத்திருக்கிறார் ! நமக்கோ இன்னும்
குருவின் அவசியம் தெரியவில்லை .

குருவின் அவசியம் புரிந்தவர்க்கே நல்லகுரு வாய்ப்பார்.

குருவை ஈர்க்க நம்மை நாம் அறியவேண்டும் ."அந்தநிலை"அடையவேண்டும் .

அந்தக்கரணங்கள் பிடிபடவேண்டும் .

வாழ்க்கை என்பது அந்தக்கரணத்தின்
அங்கத்தில் ஒன்றான " நான் " என்னும்
அங்கத்தில் கட்டுப்பாட்டில் இல்லாமல் ,

மனம் என்ற அடஙகாப்பிடாரியின்
வசப்பட்டு ஒரு கனவு நிலையிலேயே
பகல் கனவு காண்பதிலேயே கழிகிறது

ஜக்ரதம் என்னும் நிலை

"நானும்" ,மனமும் சேர்ந்த நிலை
ஆனால் அதில் "நானை" மனம்
ஆக்கிரமித்துக்கொண்டு
ஜக்ரத்தில் சற்று விழிப்பு நிலையில்
நம்மை இருக்கவிடாமல் பகல் கனவு
காணவைக்கிறது !

இந்த state இல நாம் இருப்பதால் ,
மனம் போகும் பாதையே அங்கும் இங்கும் போய்
மேன் மேலும் கர்ம பதிவையும்
சமஸ்காரத்தைப் பெற்று அந்த
சக்கரத்தில் இருந்து விடுபடாமல்
அதிலேயே சுழன்று வருகிறோம் !
நமது வாழ்வு நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை

இதில் வலிமையாக அதன் வழியில்

செலுத்தும் ஆற்றல் கொண்ட கர்ம வினை பதிவுகளையும் ,
சமஸ்கார தூண்டுதல்களையும் கொண்ட
மனதின் ,வலிமையில் இருந்து மீள ,அதை கட்டுப்படுத்த
நமக்கு கிடைத்துள்ள ஒரு வலிமையான
கருவிதான் நமது மூச்சு !

வாழ்கை என்றுமே விழிப்புடன் இருக்கவேண்டிய
போர்க்களம் தான் ! விழிப்புடன் இல்லையெனில்
நாம் விரும்பும் வெற்றி நமக்கு கிடைக்காது !


அதற்க்கு அந்தப்போருக்கு என்றும்
நாம் தயாராக இருக்கவேண்டும் !

இதைக்காட்டத்தானே நாம் வணங்கும்
இறைவனின் வடிவங்கள் எல்லாம்
ஆயுதம் தாங்கி தயார் நிலையில்
இருக்கின்றன .

நாமும் விழிப்புநிலையில் எப்போதும் இருக்கவேண்டும்

அதுவே இறைநிலை ,

இறையின் வடிவங்கள் என்பவை விழிப்புணர்வின் உதாரணங்கள் .

வாழ்க்கையில் விழிப்புணர்வுடன் ,
பிரச்சனைகளை எதிர்கொள்ள
தயாராக இருப்பதை வலியுறுத்தும் வடிவங்கள் தானே அவைகள்.


சுற்றி நில்லாதே பகையே துள்ளி வருகுது வேல் !
எனநமக்கு நம்பிக்கைத் தரத்தானே தெய்வ வடிவங்கள் !

ஒவ்வரு ஆயுதமும்
ஆழ்ந்த ஒரு உண்மையை
அதுகுறித்து தீவிரமாக வேண்டுபவருக்கு
அந்த ஞானம் தேவைப்படும் போது தருகின்றன .

மூச்சும் நாம் செய்யும் செயல்களும்

நேரடியாக தொடர்புடையவை !
எப்போதாவது பிறர் பேசும் பேச்சை ஒட்டுக்கேட்க்க முனைதிருக்கிரீர்களா ?

அபபோது மூச்சை அடக்கிக் கொள்கிறோம் .

புலன் அதிக தீவிரமாக வேலைசெய்கிறது .

உலக்கையில் இடிக்கும் போது மூச்சின் லயமே பாட்டுடன்க் கூடிஒலிக்கிறது ..
பளுவைத்தூக்க மூச்சை தம் கட்டுகிறோம் .
சந்தோஷமாக இருக்கும் போது மூச்சின் லயம் தனிதான்
பயம் வந்தால் மூச்சின் லயம் தனி !
செய்யும் ஒவ்வரு காரியத்திலும்
மூச்சின் போக்கு வரத்து விகிதம்தானே
மாறுகிறது !

நிதானமாக மூச்சு உள்ளே சென்று ,
நிதானமாக வெளியே வந்தால்
மனதில் தோன்றும் எண்ணங்களின்
எண்ணிக்கையும்தானே குறைகிறது !

எண்ணிக்கை குறைவான எண்ணங்கள்
வலிமை கொண்ட எண்ணங்கள்உருவாக்குகிறது .
அவைகள் கடந்த காலத்தையும் ,
வரும்காலத்தையும் தெளிவாக
உணரும் ஆற்றல் கொண்டவைகள்.

படிப்படியாக எண்ணங்கள் இல்லாத
ஒரு நிலையை அடையும் போது நாம்
அதை தியான நிலை என்கிறோம்

அதுவே துரியம் என்னும் ஒரு STATE
அது இதுவரை நாம் உணராத ஒரு
உன்னத நிலை !
அந்த நிலையில் தான் மனம் மசிகிறது
எண்ணங்கள் இருப்பதில்லை ,
ஆனால்அப்போது "நான்" மட்டும் இருக்கிறது !

இந்த உன்னத நிலை வாய்க்கும் போது
பிரபஞ்சத்தில் உள்ள COSMIC கதிர்கள்
நம் உடம்பில் பாயத்தொடங்கும் !
இந்த நிலை அடிக்கடி வாய்க்கும்
போது நமது வாழ்கையின் போக்கும்
மாறத்தொடங்கும் !
நமக்கும் பிரபஞ்ச சக்திக்கும்
தொடர்ந்த ஒரு தொடர்பு ஏற்ப்படும் !
நாமும் பிரபஞ்சமும் ஒன்றாக இணைவோம் !
பின் என்ன வானமும் நம் வயப்படும் !

*இன்னும் கொஞ்சம் மூச்சிப் பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 31, 2011 2:27 am

வாழ்க்கை என்பது அந்தக்கரணத்தின்
அங்கத்தில் ஒன்றான " நான் " என்னும்
அங்கத்தில் கட்டுப்பாட்டில் இல்லாமல் ,

மனம் என்ற அடஙகாப்பிடாரியின்
வசப்பட்டு ஒரு கனவு நிலையிலேயே
பகல் கனவு காண்பதிலேயே கழிகிறது

முற்றிலும் உண்மை மனதை கட்டுபடுத்த முடியாமல் தான் நான் என்கிற அகந்தையோடு ஆளாகிறோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 9 Ila
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Sep 03, 2011 1:40 am

எனக்கு புரிந்தது இதுவே ! (35)-


உலகமே உங்களுக்குச் சொந்தமாக வேண்டுமானாலும்அது கைகூடும் காலம் கருதி இடத்தார் செய்யின் என்கிறார் வள்ளுவர். இந்தக் காலம் இடம் பற்றி முன்பே இரண்டுமுறை இத்தொடரில் பேசப்பட்டுள்ளது .
இதுவே கதை அல்லது நாவல் என்றால் சம்பவங்களின் தொடர்பு வைத்து ஒரு நேர் கோட்டில் கொண்டு செல்லலாம் .
ஆனால் இதுவோ மனிதனின் மனதைப் பற்றிய தொடர் எனவே எண்ணத்தின்
ஓட்டம் போல் சற்று மாறி மாறி முன் பின் போகவேண்டிஇருக்கிறது, .பொறுத்தருள்க ..

எந்த ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் காலமும் ,இடமும்
இயைந்து இணைந்து வரவேண்டி இருக்கிறது.அப்போதுதான் அந்தக்காரியம் நடைபெறும் . .

அவை இரண்டும் சற்று ஒருமைபடாமல் ,சிறிய வேறுபாடு இருந்தாலும் நூலிழையில்
எண்ணும் காரியம் நழுவிப்போகிறது .

சென்னை செல்ல ரயில் பிடிக்கவேண்டும் என்றால் ,
ரயில் வரும் ரயில்வே நிலையத்திற்கு முதலில் போகவேண்டி இருக்கிறது .

போவது மட்டுமல்ல ரயில் வரும் சரியான நேரத்தில் இருக்கவேண்டி இருக்கிறது .
அப்போதுதான் நாம் எண்ணியபடி நாம் போகவேண்டிய ரயிலை பிடிக்கமுடிகிறது .
போவது அவசியமா ? போவதினால் பலன் விளையுமா ? என்பதெல்லாம் ஒரு தனி பிரிவு ,
தனிஆய்வு .

எண்ணியதை செய்ய இடமும் காலமும் ஒத்து இருக்கவேண்டி இருக்கிறது .
இது நடை பெறும் ஒவ்வொரு காரியத்திற்கும் போருந்திவரவேண்டி இருக்கிறது ..

ஆனால்இந்த அண்டத்தில் எத்தனையோ காரியங்கள் ஒவ்வொரு கணமும தொடர்ந்து நடைபெற்று வருகிறது
.
ஒவ்வொன்றும் நெறி முறை தவறாமல் நடந்து வருகிறது .
அண்டத்தில் நடப்பதுவே பிண்டத்திலும்ஒவ்வொன்றும் இருக்கிறது ,அவ்வாறேஎல்லாம் நடைபெறுகிறது .
நம் உடம்பில் நடைபெறும் காரியங்கள் பல ஆயிரம் இருக்கும் ,அல்லது ஒரு தினத்தில்
பல லட்சங்கள் இருக்குமா ?
அத்துணை காரியங்களும் ஒரு முறை கூட பிசகுவது இல்லை ..

எண்ணிப்பாருங்கள் மூச்சு விடுதல் ,உணவு ஜீரணித்தல் இப்படி எத்தனையோ ! .
மேலும் உள்ளத்தில் நடைபெறும் காரியங்களைப்பார்த்தால் சொல்லிவைத்தது போல்
உடனுக்குடன் நடக்கிறது .
நம்பவே கூட முடிவதில்லை .
பார்த்தல்
சிந்தித்தல்
அடையாளம் கண்டு இனம் பிரித்தல்
நினைவில்வைத்தல்
மறுத்தல்
யோசித்தல்
எலாமே அதிசயம் தான் . ! தானே நடக்கும் அற்ப்புதங்கள் !
உடலில் நடை பெறும் காரியம் மனதில் நடைபெறும் காரியம்
இவைகளுக்கு நாம் அதிகாரி இல்லை .
காலம் இடம் இவைகளை சேர்ப்பிக்க நாம் முயல்வதுமில்லை !

உண்மையில் காலம் என்பதுதான் என்ன ?
யாராவது இறந்துவிட்டால் காலமாயிட்டார் என்கிறோம் !
என்ன நினைத்து அப்படிக் கூறுகிறோம் ? அப்போ நமக்கு முன்பே காலம் என்றால் என்ன
என்று தெரியுமா ?

மனம் எப்போதும் இறந்த காலம் ,வரும் காலம் இவற்றில்
சஞ்சரிக்கிறது என்று பார்த்தோம் .
இந்த இறந்த காலம் , நிகழ்காலம் வரும்காலம்இவைத் தான் காலமா ?
இந்த முன்று காலத்தையும் பிரிக்கும் கோடு யார் போட்டது ?

இந்த நொடி ,நிமிஷம் மணி பகல் இரவு நாள் வாரம் மாதம்
பருவம் வருடம் எல்லாம் உண்மையில் இருக்கிறதா ?
யார் இதை பிரித்து எல்லை வகுத்தது ?
கொஞ்ச நாள் முன் நாழிகைஎன்றோம் ,
இப்போது மணி என்கிறோம் !.
இந்தியாவில் ஒரு மணி
அதுவே ஒவ்வொரு நாட்டிலும் வேறு மணி !
ஒரு இடத்தில் உறக்கம் விழிக்கிறான் ,
வேறு ஒரு இடத்தில் உறங்க செல்கிறார்கள் !

ஊருக்கு போக மனைவி மக்களை காண ஆவலுடன்
ரயிலுக்கு காத்திருக்கிறோம் , அரை மணி தாமதம் என்கிறார்கள்
அரை மணி போவது அரைநாள் போவதுபோல் இருக்கிறது !
ஒவ்வரு நிமிஷமும் ஒரு மணி போல் தெரிகிறது !
கை கடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்க்கிறோம் .

அதுவே ஊருக்குபோய இரண்டு நாட்கள் உறவுடன் ஆனந்தமாக
கழியும் போது நேரம் போனதே தெரியவில்லை !
இரண்டு நாள் எப்படி போனது என்று தெரியவில்லை !
காலத்தின் அளவுதான் என்ன ?

காலத்தைப் பற்றிய நினைவு வந்து விட்டால் துன்பமாக இருக்கிறது
அதுவே காலத்தை பற்றிய நினைவு இல்லை எனில் ஆனந்தமாக இருக்கிறது !

மனிதன் தோன்றி இயற்கையின் கருணையில் வாழத்தொடங்கி
ஆரம்ப கால பயங்கள் சற்று குறைந்த போது தான் அடைந்த அனுபவங்களை தொகுக்க ஆரமித்தான் .

பயம் தான் மனிதனின் அடிப்படை உணர்வு .
பரிணாம வளர்ச்சியில் ஐந்துஅறிவு ஜந்துவிடம்
இருந்து அவன் அடைத்த சீதனம் பயம் தான் !
பயத்தைப் போக்க அவன் கண்ட வழியே சமூகம் !
மனிதனின் பயத்தை நம்பியே அரசுகள் இயங்குகின்றன !
மதங்களும் பயத்தை வளர்த்தே வாழ்கின்றன !

சுழன்ற வண்ணம் சூரியனை சுற்றிவரும் பூமியில்
படும் வெளிச்சத்தினால் ஆகும் பகல் இரவை அனுபவித்து
ஒரு பகல் ஒரு இரவை ஒரு நாள் எனக்க கொண்டான் !

உருவாகும் பருவ வேறுபாடுகளை பருவங்கள் ஆறு என
அனுபவத்தால் கொண்டான் ! முழுநிலவு மீண்டும் மறுமுறை வருவதை
மாதம் என கொண்டான் !ஆறு பருவமும் தவறாமல் வருவதை அறிந்து
ஒரு சுற்று ஒரு வருடம் எனக் கொண்டான் !

நாள் மாதம் பருவம் வருடம் எல்லாம்
அனுபவத்தில் கணக்கில் கொண்டதுதான் !
உண்மையில்அவை இல்லை

அனுபத்து அறிந்ததை
உணர்வில் உணர்ந்ததை பொருள்களின்
இயக்கத்தினாலும் உணர்ச்சியாலும்
வருஷம் மாதம் ,நாள் மணி என்று வெளிப்படுகிறது .

இயக்கத்திற்கு அதில் பெறும் அனுபவத்திற்கு
காலம் என பெர்யர் சூட்டுக்றோம் !

இதில் நல்லகாலம் கெட்டகாலம் என்று வேறு
ஒவ்வருவருக்கும் பிரிக்கிறோம் ! அவன் நல்ல நேரம்
எல்லாம் நல்லா நடக்குது என்கிறோம் !

மனிதன்தான் காலத்தை உருவாகுகிறான் !பின் அதைப பிடித்துக்கொண்டு
வாழ்வை கழிக்கிறான் .

கடவுளைமட்டுமே காலம் கடந்தவர் என்கிறான் !
மனிதர்கள் காலத்திற்கு கட்டுப்பவர்கள் என்றோன் !

இப்படியேதான் இடத்திற்கு கட்டுப்படுத்தும் நமது மாயையும் !


நாம் எப்போதும் நமது அறிவு காலம் காலமாகக் குறித்து வைத்திருக்கும்
பழக்க வழக்கங்கள் ,சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள்
விதிமுறைகள் ஆகியவைக்கு உட்ப்பட்டு நடக்க
அநாதி காலமாக பழகயுள்ளோம் !

மனைவி மக்கள் உற்றார் உறவினர் வேண்டியவர் வேண்டாதவர் சமூகம் ,முதலாளி வேலையாள்
இவர்கள்அடங்கியதுதான் இடம் ! இவர்களை அனுசரித்துத்தான் வாழவேண்டி உள்ளது !
இவர்களால் ஆனதே இடம் ! அதற்க்கு
என்னபெயர் வேண்டுமானாலும் இருக்கலாம் !

மற்றபடி வடக்கு தெற்கு கிழ் மேல் வட்டம் சதுரம் சிதம்பரம் .சென்னை மும்பை
அமெரிக்க கொரியா எல்லாம் நாம் வைத்த பெயர் தான் ..

வரும் ஆண்டுகளில் வேறு பெயர் வைக்கப் படலாம் ! முன்னர்அந்த இடத்திற்கு இதே பெயர் இருந்ததா ?
தெரியாது !எவ்வளவு நாளைக்கு இதே பெயர் இருக்கும் , தெரியாது !

பின் ஏன் அந்த இடம் எதோ ஒன்று என் மனைவி மக்கள் உற்றார் உறவினர் வேண்டியவர்
வேண்டாதவர் சமூகம் ,முதலாளி வேலையாள் ஆகியோர்
உள்ளனர் ! எனவேஅந்த இடம் !

சுருக்கமாக

இரண்டு ஸெயல்கலூகு இடைப்பட்டதேக் காலம் .

இரண்டு பொருள்கள் , நபர்களுக்கு இடையில் உள்ளதே இடம் .

என்ன சற்று குழப்புகிறேனா ?
சற்று பொறுங்கள் இன்னமும் விளக்கம் தர பெரியோர் சொல் வரப்போகிறது
தகுந்த விளக்கம்அவைத்தரும்

உணர்ச்சிக்கும் அறிவுக்கும் கட்டுப்பாட்டு நடப்பதையே
காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பதாக கூறுகிறோம் !

கடவுள்போட்ட வேஷம் காலம் !
காலம் போட்ட வேஷம் இடம் !

*அகளமாய் யாரும் அறிவரித்து அப்பொருள்
சகளமாய் வந்ததென்று
உந்தீ பற :
தானாக வந்ததென உந்தீ பற* ::--
---திருஉந்தியார்

அகளமாய் -- நீள அகலம் என்றோ உயரம் ஆழம் என்றோ
நேற்று இன்று என்றோ
அறிவு ,அரிது காலம் இடம் இல்லாத
பரம்பொருள் --
சகளமாய் -- அப பரம்பொருள் சகலதத்துவனகளாகவும்
காலத்தோடும் இடத்தோடும் தோற்றம்
எடுத்தது



இதையே மாணிக்கவாசகர் தெளிவாக

மேலை வானவரும் அறியாததோர் கோலமே !
எனை ஆட்க்கொண்ட கூத்தனே !
ஞாலமே ! விசும்பே ! இவை
வந்து போம் காலமே உன்னை
என்று கொள் காண்பதே ! -------என்கிறார்

எனவே காலம் இடம் என்பவை மனிதனின் மாயா தன்மை எனலாம்
உணர்ச்சியும் அறிவும் காலத்தையும் இடத்தையும் உருவாக்குகிறது !
கடவுள் காலத்திற்கும் இடத்திற்கும் கட்டுப்படாதவர் !
நாம் காலத்திற்கும் ,இடத்திற்கும் கட்டுப்படாமல்
இருக்கமுடியுமா ?
முடியும் என்றுதான் நமக்கு தியானம் எனும் சாதனத்தை
கட்டிகொடுத்துள்ளார்கள் !

உண்மையான தியானம் காலங் கடக்கும் !
உண்மையான தியானம் இடம் இல்லாதது ! உண்மையானத் தியானம் எங்கும் நிறைந்ததுபோருளைப்பற்றியது .
உண்மையான தியானம் வேண்டுபவை
எல்லாம் தரும்வல்லமைக் கொண்டது , அது கடவுளைப்போன்றது .

இனி உண்மையான தியானம் பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம் .......

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்




sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Sep 09, 2011 8:29 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (36)-



சென்ற இழையில் காலம் ,இடம் இவைகளைப்பற்றிப்பார்த்தோம் .

நான் கூறியவை உங்களுக்கு எந்த அளவிற்கு பயனாக இருந்தது என்று எனக்கு சரிவர புலப்படவில்லை .இன்னும் கொஞ்சம் அவைகளைப்பற்றி மீண்டும் பேசுவோம் .



பரிணாம வளர்ச்சியை சற்று கவனமாக ஆழ்த்துப பார்த்தோமானால்
இயற்கையுடன் நடக்கும் போராட்டம் தான் அதன் மாற்றத்திற்கு
காரணமாக அமைந்து இருக்கிறது என்பதுபுலப்படும் .

எப்போதும் எல்லா உயிர்களும் தம்மை மேம்படுத்திக்கொள்ள சதா முயன்றுவருகின்றன .

இயற்கையுடன் சதா ஒரு போராட்டம் நிகழ்ந்துதான் வருகிறது .
எல்லா உயிர்களும் தம்மை மாற்றிக்கொள்வதன் மூலமே
இயற்கையை எப்படியாவது வெல்லுகின்றன .!


அதேப்போல் ஒவ்வருவரும் தன்னை மாற்றிக்கொள்வதன் மூலமே
சூழ்நிலையால் வரும் தீமையை வெல்லமுடியும் .!
சூழ்நிலை என்பது நமதிஷ்ட்டதால் வருவதில்லை ..

சூழ்நிலைகளை அப்படியே ஒப்புக்கொண்டு நாம் சும்மாஇருந்திடவும் இயலாது

எல்லா உயிரினமும் மாற்றத்திற்கு முயலும் போது நாமும் ஒருபடி மேலேப் போக முயலவேன்டாமா ?அப்படியானால் நமது சூழ்நிலைகளை நாம் எப்படி வெற்றிகொள்வது ?

வாட்டும் வறுமையையில் இருந்து எப்ப்டி வெளிவருவது ?
தொடரும் துன்ப சூழ்நிலையை எவ்வாறு மாற்றுவது என்றால் எல்லா சூழ்நிலையையும் நம்மால் மாற்ற முடியாது .!

இதை நாம் ஒப்பு கொள்வதும் புரிந்து கொள்வதும் தான் நல்லது !
இதை புரியவைக்கத்தான் கர்ம பலன் ,சமஸ்காரம் என
பல தத்துவகளை இதுவரை பார்த்தோம் .

ஆனால் மாற்றம் என்பது ஒரு படிபரிணாம வளர்ச்சியில் முன்னேபோகும் ,மனிதனில் இருந்து தேவனாகும் வழியில் இருக்கவேண்டும் .அகநிலை மற்றம் வேண்டும் .புரத்தில் வநது சேரும் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டால் அவை ,நமக்கு அத்தனை துன்பமாக இராது .

இந்த சூழ்நிலை நமக்கு வாய்ப்பதே நாம் பெறவேண்டியப்பாடத்தை பெறுவதகாகத்தான் .

நாம் இப்போது படித்துக்கொண்டிருப்பதும் நம்மிடையே ஒரு சரியானப் புரிதலை உண்டாக்கத்தான் .

ஆனால் நம்மிடம் உள்ள பெரிய குறைபாடு என்னவென்றால் படிப்பது எதுவும் நமக்கு சம்பந்தம் இல்லை என நினைப்பதே !

பெரும்பாலும் படிக்கும் இன்பத்திற்காகவே படிக்கிறோம் .
ஆனால் அதை உணர்வதோ படிப்பதில் இருக்கும்
படிப்பினைகளை உணர்வதோ மிகக் குறைவு .!
படிப்பினைகளை அவ்வப்போது தனது வாழ்வில்
பொருத்திப் பார்த்துக் கொண்டே இருப்பவன்
மட்டும் தான் மேலே மேலே போகிறான் .!

படித்து கொண்டே இருப்பவன் படித்துக்கொண்டே தான் இருக்கிறான் .
அவனுக்கு அதில் கிடைக்கும் இன்பம் மட்டும்
போதுமானதாக இருக்கிறது .இன்னும்
அதிகப்படியாக அதைப்பற்றி பேசி பேசி வேறு இன்பம் அடைகிறான் !
ஆனால் அவனது பூர்வ கர்மபலம் படி அவனது ஜீவிதம் அமைகிறது ,

இப்பிறவியின் புருஷார்த்தம் அவன் மேலே மேலே படித்து
மேலும் சில மடிப்புகளை மூளையில் பெருக்கிகொள்வதில் தான் முடிகிறது !
இந்தப் படிப்பு அடுத்தமுறை படிக்கும் போது அவனுக்கு சுலபமாக
புரியவைக்கும் ! ஆனாலும் அவன் அதை உணராதவரையில்
அதை தனது வாழ்வில் பொருத்தி அதை ஒரு அங்கமாக ஆக்காத
வரையில் அவனுக்கு அந்தப்படிப்பால் ஏதும் ஆதாயம் இல்லை !

ஆனால் படிப்பதனால் வரும் அகங்காரம் மட்டும்
மேலும் மேலும் சேர்ந்து கொண்டே வரும் !
அவனை அலட்டவைக்கும் !பிறரை அதிகாரம் செய்யும் !
பார்த்தாயா என் அறிவை, நானே அடக்கமாக
இருக்கிறேன் என வெளிச்சம் போடும் !
பின் மதிக்கவில்லை என கூச்சல் போடும் !
மற்றவர் கவனத்தை ஈர்ப்பதும் ,
அடுத்தவரின் பொறாமையை பெறுவதிலேயும் தானே
நமது வாழ்வின் வெற்றி உள்ளது என நினைக்கிறோம் இது தானே நமது வெற்றியின் இலக்கணம்எனக்கருதப்படுகிறது !
அப்படித்தானே உலகம் நினைக்கிறது !

videocon விளம்பரம் நினையில் உள்ளதா ? அது எப்போதும்
அடுத்தவர் பொறாமை படும் T. V வாங்க உங்களை தூண்டும் !

நாம் உண்பது உடுப்பது ,பிள்ளைகளை படிக்கவைப்பது ,
அவர்களை வாட்டி வதைத்து அவர்களின் இளமையை தொலைத்து ,
அவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைத்து
பெரியவேலையில் சேர்த்து பெரிய சம்பளம் வாங்க வைப்பது எல்லாம்
அடுத்தவர் மெச்ச வாழ துடிக்கும் அவாதானே !

நாம் பிறந்த பிறவியின் பலன் என்ன என்பது
நமக்கு நினைவில் இருப்பதில்லை !
நடப்பது எல்லாம் சென்ற பிறவியில் சேர்த்துவைத்த
இருப்பின் செலாவணிதான் ! ஆனால் பெருமை
மட்டும் எல்லாம் என் திறமையால் ,அறிவால்
வந்தது என சொல்லிசொல்லி நம்மை மெச்சிக் கொள்கிறோம்

சொல்லிக்கொடுத்த ஆசிரியர்
இன்னும் அழுக்கு சட்டையுடன் சுற்றுவது நினைவில் வராது .

ஆனால் அவர் சொல்லிக்கொடுத்த கல்விதான் நம்மை காசு சம்பாதிக்கவைத்தது என நினைக்கிறோம் .

நம்முடனேயே ப படித்த நம்மைக் காட்டிலும் நன்றாகப்படித்த எத்தனையோ பேர் இன்னமும் செல்வ நிலையிலும் ,பெரும் புகழிலும் கிழே இருப்பது நம் நினைவிற்கு வராது .

நாம் மட்டும் ஒருத்தனிப் பிறவி ,மேதை என நினைப்போம் .

நமக்க௮உ வாய்த்திருக்கும் நல்ல சூழலை வைத்து மேலேப்போகும் ,அதை மட்டும் மறந்து ,அந்த செல்வம் தரும் இன்பத்தில் வரும் கசடுகளால் ,இன்னமும் சுமையை சேர்ப்போம் .

நல்ல சூழல் அமைவது நமக்கு கிடைத்த வரம் ,ஆனால் நாம் வந்தது இன்னமும் மேலேப்போக .



ஏப்போதும் நமக்கிருக்கும் ,இடப்பட்டிருக்கும் ,சுதர்மம் எனும் கடமையை செய்யவேண்டியதான் !
கூடவே தனக்கும் கொஞ்சம் அடுத்தப் பிறவிக்கு என
சேர்த்துவைப்பது தானே நல்லது ! காஞ்சி பெரியவர்
முன்பெல்லாம் பார்ப்பவரை எல்லாம் கேட்டும் கேள்வி உனக்கு
என்ன செர்த்துவைதிருக்கிராய் ? என்பது தான் !

அப்போது வந்து வாய்த்த சுழ்நிலையில் அதனுடன்
சகித்துத்தான் வாழ வேண்டுமா ? வேறுவழி இல்லையா எனில் ,
கடலில் வாழும் சிறிய மீன் கூட தொடர்ந்து தன எதிரிகளால்
உண்ணப்படும் போது அது அதனிடம் இருந்து தப்ப முயல்கிறது !

அது கடலையோ ,தன எதிரிகளையோ மாற்ற முயற்சி செய்வதில்லை
மாறாக தொடர்ந்து உயரே பறந்து தப்பிக்க எண்ணுகிறது
பரிணாம வளர்ச்சியில் அது சிறிய இறக்கையை அடைந்துவிடுகிறது !

வளார்ச்சியின் உச்சக்கட்டத்தில் உள்ள மனிதனால்
சூழ்நிலையின் கொடுமையில் இருந்து மாற முடியும் !
அல்லது அதன் கொடுமையை உணராதுஇருக்குமாறு மாறமுடியும் !
அந்த வித்தையைவாழும் போதே பயிலமுடியும் ! பிறப்பு இல்லாத
இறப்பையும் கூடவே அடையமுடியும் !

ஆனால் அவன் சூழ்நிலையை மாற்ற முயல்வதை விடுத்து
அவன் தன்னை மாற்றிக்கொளவேண்டும் !
உலகத்தை மாற்ற முயற்சி செய்து கொண்டே இருக்கக் கூடாது !

உலகத்தையோ ,சூழ்நிலையையோ குறைகூறிக்கொண்டு சும்மா இருந்துவிடக்கூடாது .

இயன்றவரை ,இருக்கும் சூழ்நிலையில் ,அதிகபட்சம் எனன நல்லவைதனக்கு

செய்து கொள்ளமுடியுமோ அதைத் தொடர்ந்து செய்துவரவேண்டும் .

என்றும் விழிப்புணர்வுடன் வாழவேண்டும் .தளர்ந்துவிடக்கூடாது .

இந்தக் கோணத்தில் இருந்து பிரச்சனைகளை அணுகுவதுதான்
பிரச்னையை நீக்கும் வழியாகும் !]

கோபத்தையும் ,வெறுப்பையும் அலச்சியம் செய்யும் மனவலிமையை
நாம் பெற்றுவிட்டால் , நாம் கோபமோ வெறுப்போ அடைவதில்லை !
மாறாக கோபத்தை வெறுப்பை அழிப்பேன் என அதனுடன்
போராடுவது நமக்கு தளர்வையும் தோல்வியையுமே தரும் !

ஆகவே வெற்றியடைய ஒரே வழி
நம்மை முழுமை ஆக்கிக்கொள்வது தான் !
முழுமையடைய முதலில் முழுமையாக
நம்மை புரிந்து கொள்ளவேண்டும்.

நம்மை நாம் சரிவர புரிந்து கொள்ள நாம்
ஆன்மீக வாழ்வில் உயர்ந்த படிக்கு செல்லவேண்டும் .
ஆன்மிகம் என்பது உணர்வுடன் வாழ்தல், விழிப்புணர்வு தான் .


அந்தப்பாதையில் பல படிகள் உள்ளது ,இயமம் நியமம் என அஷ்டாங்க யோகத்தை
நமக்கு பதஞ்சலியும் திருமூலரும் அருளியிருக்கிறார்கள் !
இதில் தியானம் என்பது மிக உயர்ந்த நிலை அந்த நிலையை அடைவதற்கு
சில தகுதிகள் மனத்தளவிலும்
உடல் ரீதியிலும் தேவை
சில நிபந்தனைகள்கூடவே நிறைவேற்றப்படவேண்டும் !

தியானத்தை இருவகையாக பிரிக்கலாம் ,
உலகியல் தியானம் எனப்படும் மன ஒருமைப்பாடு

இரண்டாவது ஆன்மீகத் தியானம் .

மனதை ஏதாவது ஒரு புறப்பொருளில் குவிப்பது
உலகியல் தியானம் எனப்படும் .கருத்தூர்ன்றி ஒரு கதைப்புத்தகம் படிக்கும் போது கூட சில
சமயம் இந்த நிலை அமைத்து விடுகிறது .
மனம் இயல்பாகவே வெளியே செல்லுமாறு
படைக்கப்பட்டிருப்பதாக கடோபநிடதம் கூறுகிறது .

எனவே புறப்பொருள் மேல் பற்றி அதில் மனதை
குவிப்பது சற்று சுலபம் தான் ! மனதை புறத்தே இருக்கும்
எந்த பொருள் மேல் வேண்டுமானாலும் சுலபமாகவேக் குவிக்கலாம் !
இதனால் மன அமைதி கிடைக்கும் ! எண்ணத்தின் கொதிப்பு அடங்கும் !
இதனால் உடல் நலம் கிடைக்கும் ,
ரத்தக்கொதிப்பு குறையும் ,உணர்ச்சிகளின் கட்டுப்பாடு கிடைக்கும் !
இதுவே உலகியல் தியானம்.
அதுவும் பெருமைக்குரியதே .

ஆன்மீக தியானம் என்பது மனதை அதன் உண்மையான
பிறப்பிடம் அல்லது மையத்தில் குவிப்பது.
வெளிமுகமாக ஓடும் மனதை உள்முகமாக்கி
அதன் இருப்பிடத்தை நாடச்செய்வதே .

ஆன்மாவின் ஒளியால்தான் புறத்தில் இருக்கும்
பொருள்களையும் , மனத்தில் எழும் எண்ணத்தின்
ஓட்டங்களையும் நாம் உணரமுடியும்.
ஆன்மாவின் ஆன்மாவான இறைவைனை
காணவேண்டிடின் அந்த ஆன்மாவின் ஒளியை
உள்பக்கமாக செலுத்தவேண்டும் அதுவே
ஆன்மீக தியானம் .

அங்கும் இங்கும் புறேத்தே பாயும் மனம் என்னும்
அடங்காப்பிடாரியை உள்முகமாக்குவது அத்துணை சுலபமா எனன ?
மனத்தைதிருப்பி அதை உள்ளேக்குவிக்க நமக்கு
அகத்தே ஒரு இடம் வேண்டுமே ! உடலின் எந்த இடத்தில்
அகத்தில் குவிப்பது ?
அந்த மையம் இன்னும் நம்மில் உருவாகவில்லை !


பலருக்கு இது புதிராக இருக்கலாம் !
அந்த மையம் தான் இதயம்.
இதய தாமரை ! அதுவே ஆன்மீக இதயம் !

அங்குமட்டுமே உண்மையில் தியானிக்கமுடியும்.
நம்மில் பலருக்கு இந்த ஆன்மீக இதயம் இன்னும் மலரவில்லை !
இன்னும் மொட்டாகவே இருக்கிறது !
அதை முதலில் மலரச்செய்யவேண்டும் !
மலர்ந்த பின் அதை மேல்நோக்கி நிமிரச் செய்யவேண்டும் !
அதற்க்கு ஜபம் பக்தி பிரார்த்தனை ,பிரமச்சரியம் போன்ற நிபந்தனைகள்
நிறைவேற்றப்படவேண்டும் .
அஷ்டாங்க யோகமும் முறைப்படி சாத்னமாகவேண்டும் !
தக்க ஒரு குரு தொட்டுக்காடவேண்டும் !
அஷ்டாக யோகமும் முறைப்படி நிறைவேறும் போதே
அஷ்டமா சித்திகளும் உடம்பில் குடி கொள்ளும் !
ஆனால் சித்திகள் சாதகனின் சித்தமலவே !

மேலும் தியானத்தைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம் !
கூடவே பயணித்தற்கு நன்றி ! கூடவே ஒரு சொல் கூறினால்நீங்கள் கூடவே

வருவதும் என்க்கும் புரியும் .

அன்புடன்

அண்ணாமலை சுகுமாரன்

Sponsored content

PostSponsored content



Page 9 of 13 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக