புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 4 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 4 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 4 Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 4 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 4 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 4 Poll_c10 
145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

kavithasankar

Shivanya

nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்

யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------

*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Feb 14, 2011 9:30 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (16)-*

சட்டைகள் ஐந்து எனக் கண்டாலும் ,
அவைகளில் ஸ்தூல சரீரம் ஒன்று ,
மற்றைய நான்கு சரீரமும் சுருக்கமாக
சூக்ஷும சரீரம் எனப்படும் !ஸ்தூல சரீரம்
எனப்படும் பருஉடலுக்கும் சூக்ஷும சரீரம்
எனப்படும் நுண் உடம்பிற்கும் இடையே
இதை இணைக்கும் இணைப்பானாக ஒரு
ஒளி சுழல் உள்ளது ! இதையே
ETHERIC DOUBLE என்கின்றனர் மேல் நாட்டோர் !

உடல் வாடி உயிர் நீக்கும் முன்
அதன் ஒளி சுழல் வாடி விழும் என கண்டுள்ளனர்
அதன் ஒளி சுழலை புகைப்படம் எடுக்கும்
கருவிகள் கூட வந்து விட்டன !

அந்த ஒளி சுழலை கண்டே வரும் நோய் களையும்
அவன் கொண்டுள்ள குணங்களையும் அறியலாம் என்கின்றனர் !
ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு தனி ஒளி வட்டம் !
கோபத்திற்கு ஒன்று ! கவலைக்கு ஒன்று !
இது மனிதனின் அனுபவத்திற்கும் ,அறிவிற்கும் தகுந்த படி
அளவில் சிறிதாகவும் ,பெரிதாகவும் விளங்குவதுண்டு !
இதைதான் புனிதர்களின் தலைக்கு பின்னே ஒளிவட்டமாக
போட்டனரா ? நம் பெரியவர்கள் !

இனி இன்னும் கொஞ்சம் மூளையையும் ,
மனத்தினையும் பற்றி பார்த்திடுவோம் !
மூளையை தலைமை செயலகம் என்றார்
சீரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள் !
ஆனால் அது நரம்புகளின் சங்கமமே தவிர ,
இதயமோ ,நுரையிரலோ சுவாசமோ
மூளையின் கட்டுப்பாட்டில் இல்லை !
மூளை செயல் படாமல் கோமாவிலேயே
ஆண்டுகள் பல ,சுவாசித்து ரத்தம் ஓடி உயிர் வாழும் பலரை
நாம் பார்கிறோமே !

நரம்புகளின் கட்டுப்பாட்டு அறையாக மூளை இருந்தும்
புலன்களையும் அது எப்போதும் ஆளுவதும்
இல்லை ! ஆழ்ந்த உறக்கத்தில் காதுகள் திறந்திருந்தாலும்
ஓசைகள் என்னவோ கேட்ப்பதில்லை !
மனதிற்கும் மூளைக்கும் சம்பந்தம் இருகிறதே தவிர
மூளையே மனம் இல்லை !
மனமும் மூளையில் இல்லை !
அது உடல்முழுவதும் பரவி செயல் படும் !
இடம்தோறும் மாறி வரும் ! அது தான் வாயுவின் அம்சமானதே !

எண்ணும் மனம் மூளையை சார்ந்தும் ,செய்யும் செய்யல்
உடலை சார்ந்தும் பிராண இயக்கம் இயங்குகிறது !
ஜீவனின் சகா மனமும் பிராணனும் ! !
சேர்ந்தே வரும் சேர்ந்தே போகும் !

மனம் நினைப்பு மறப்பு இரண்டும் கூடிய ரூபம் கொண்டதாகும்
நினைப்பதும் உடனே அதை விட்டு அடுத்ததை நினைப்பதும் ,
முன்பு நினைத்ததை உடனே மறுப்பதும் இதன் இயல்பே !
மனதிற்கு என்று ஆதாரம் இல்லாது அது ஆன்மாவையே கொண்டு
இருப்பதால் எதை நினைகிறதோ அதே மாத்ரி ஆகிறது !

மனம் ,அறிவன் ,அறியும் பொருள் இம்முன்றில்
மனம் நசிந்தால் அந்த இரண்டும் ஒன்றாகும் !
அதுவே இறைநிலை !

மனதிற்கு தானே அறியும் சக்தி இல்லை
ஆனால் அறிவானுக்கு அது அறியும் கருவியாகிறது !

மூக்கு கண்ணாடிக்கு பார்வை உண்டா ?ஆனால்
பார்ப்பவனுக்கு பார்வைதருகிறது ! அதே போல்
மனம் அறிபவனுக்கு அறிவைதருகிறது
மூளையை பயன்படுத்தி !

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

( உண்மையில் இந்தப்பகுதி போன பகுதிக்கு முன்னேயே வந்திருக்கவேண்டும் .எப்படியோ தவறி விட்டது ).

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 9:51 pm

மூச்சே பிரதானம் உண்மைதான் அய்யா நாம் கோபத்திலே பதட்டத்திலோ இருக்கும் போலுது நாம் மூச்சின் அளவும் அமைதியாக இருக்கும் பொழுது மூச்சின் ஆழமும் மிக அதிக வேறுபாடுகளை கொண்டாதாக இருக்கிறது மூச்சினை வாசி என்றும் இதாயே திருப்பினால் எம்பெருமான் சிவா சிவா மூச்சின் மீது நமது கட்டுப்பாடு வந்து விட்டால் மனம் நமது உணர்ச்சிகள் கோபம் காமம் போன்றவை நாம் கட்டுபாட்டுக்குள் வரும் பின் வாழ்வும் நமது கைகளுக்குள் இருக்கும் நமது ஆளுகைக்கு உட்பட்டு அதே சமயம் நம்மால் சரிவர கவனிக்காத மூச்சின் ஆற்றல்கள் அதிகம் உங்கள் வாழ்க்கை வழிகாட்டியை தொடருங்கள் மேலும் படிக்க ஆர்வம்கொண்டவனாயிருக்கிறேன் உங்கள் பண்பட்ட அறிவும் அனுபவமும் எங்களை வழி நடத்தட்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 14, 2011 9:56 pm

நமஸ்காரம் ! நான் உங்களை விட சின்னவ அதுதான் உங்களை போன்ற பெரியவாளை மாமா என் அழைத்தால் தப்பு இல்ல என் நினைக்கிறேன் புன்னகை
உங்களுக்கு அநேக தெண்டன்கள் ; ரொம்ப அற்புதமாக எழுதரேள. இன்று தான் இந்த திரியை பார்த்தேன். ஒரே மூச்சாக படித்தேன். ஆனால் பல முறை படிக்கணும் போல இருக்கு. ஒரே பிரமிப்பாக இருக்கு.
நான் இந்த போஸ்ட் எல்லாம் எடுத்து வெக்கலாமானு பார்க்கிறேன். அல்லது நீங்க புத்தகம் போடும் போது சொல்லுங்கோ அதை வாங்கிக்கறேன். நிறையா முறை படிக்க உத்வும்.
மேலும் மேலும் எழுத்துங்கோ படிக்க காத்து இருக்கோம். புன்னகை
உங்கள மாதிரி விஷ்யம் தெரிந்தவாளுடன் இப்படி "chat" பண்ண முடிவது பற்றி ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றி மாமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 10:10 pm

krishnaamma wrote:நமஸ்காரம் ! நான் உங்களை விட சின்னவ அதுதான் உங்களை போன்ற பெரியவாளை மாமா என் அழைத்தால் தப்பு இல்ல என் நினைக்கிறேன் புன்னகை
உங்களுக்கு அநேக தெண்டன்கள் ; ரொம்ப அற்புதமாக எழுதரேள. இன்று தான் இந்த திரியை பார்த்தேன். ஒரே மூச்சாக படித்தேன். ஆனால் பல முறை படிக்கணும் போல இருக்கு. ஒரே பிரமிப்பாக இருக்கு.
நான் இந்த போஸ்ட் எல்லாம் எடுத்து வெக்கலாமானு பார்க்கிறேன். அல்லது நீங்க புத்தகம் போடும் போது சொல்லுங்கோ அதை வாங்கிக்கறேன். நிறையா முறை படிக்க உத்வும்.
மேலும் மேலும் எழுத்துங்கோ படிக்க காத்து இருக்கோம். புன்னகை
உங்கள மாதிரி விஷ்யம் தெரிந்தவாளுடன் இப்படி "chat" பண்ண முடிவது பற்றி ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நன்றி மாமா புன்னகை

நன்றி மாமி! புன்னகை

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Feb 18, 2011 12:54 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (17)-*

*யோகம் எட்டிவிடும் தூரம் தான் !*

யோகம் என்றால் சேர்க்கை ! பல பொருள்களை
வாழ்வில் சேர விழைகிறோம் ,ஆனால் அந்த சேர்க்கை எதுவும் நிரந்தரமாக இருப்பதில்லை
ஆதலால் மனம் என்றும் அலை பாய்கிறது !
முடிவான முழு முதல் பொருளுடன் சேர்ந்து விட்டதால்
அதுவே யோகம் ஆகும் !

இப்போது இருக்கும் நிலையையும் , இருக்கபபோகும் அல்லது

இருக்க விரும்பும் நிலைஎன்பது மனதளவில் என்றும்முரண்பட்டே இருக்கிறது

மனம் என்றும் முரண்பட்டு அமைதி இழந்து தவிக்கிறது .

ஒருமையில் உயிர்ப்பது யோகம் ! உள்ளத்தில் நிலைப்பது
யோகம் ! உள்ளதிலேயே உண்மையை காண்பது யோகம் !

காரிருள் மினலைப்போல் உள்ளே கனலிடும்

முற்று முதல் பொருளை காண்பது யோகம் ! யோகம் வசமானால்
இயற்கையும் வசமாகும் !உடலை கருவியாக கொண்டு
மனதையும் உள்ளதையும் உயிரையும் பணபடுத்தி
மூலத்தை காண்பதுவே யோகமாகும் .!

அஷ்டாங்க யோகம் எனும் எட்டுவித படிகள் மனிதன் தன
நிலையில் இருந்து தேவனாகும் முயற்சியின் வழியாகும் !
யோகம் என்னும் முடிவை எட்டும் வழியிலே தான் இருக்கு
வாழ்வின் இன்பங்கள் அனைத்தும் !முடிவை அடையும் வழி
என்ன எனக் காண்பது தான் அஷ்டாங்க யோகம !

மூலத்தை அடைவதை விட செல்லும் பாதை தான் முக்கியம்
என்பர் ஞானியர் ! செல்லும் பாதை சிறப்புடன் இருக்குமானால்
அதில் பயிலும் பாடங்கள் நம்மை வாழ்வின் உச்சத்திற்கு
கொண்டு போகும் ! எண்ணியவை யாவையும் கைகூடும் !
கனவு மெய்ப்படும் ! அல்லலும் இல்லை அரற்றலும் இல்லை !
என்றும் ஆனந்த மயமாக இருக்கும் வழி செல்லும் பாதையே நம்மக்கு
புரியவைக்கும் ! இனி அந்த எட்டு யோகம் என்ன எனப் பார்ப்போம் !

*இயமம் ,நியமம் ,ஆசனம் , பிராணயாமம் பிரத்தியாகாரம் தாரணை
தியானம் சமாதி* இவைகளே அட்டாங்க யோகம் எனப் படும் !இந்த எட்டு வழிகளையும்
உறுதியான மனத்துடன் கடை பிடிப்பவன்
பிறப்பு இறப்பு எனும் சுழலில் இருந்து விடுபடுகிறான! ,
பயிலும் போதே உலகியலில் சீரும் சிறப்புமாக வாழும்
முறையையும் பயின்று விடுகிறான் !

*இயமம்* என்பது நாம் வாழும் வழியில் இருந்து தள்ள வேண்டியவை !
முதலில் தள்ளவேண்டியைகளை தள்ளினால் தான்
பெறவேண்டியவைகளை பெற இயலும் !
சிலை செய்ய கல்லில் இருக்கும் வேண்டாதவைகளை முதலில்
நீக்கியபின் தான் சிலையின் வடிவம் வெளிப் படும் !

இனி இயமத்தின் பத்து நீக்க வேண்டிய விதிமுறைகளைப் பார்ப்போம் !
இது யோகத்த்திற்கு மட்டுமல்ல ,வெற்றியை வேண்டும் மாந்தர்க்கும்
இதுவேஏறும் படி ! இவை கொள்ளத்தகும் வடிவில்
இந்தப் பத்தும் தரப்பட்டுள்ளது !

கொல்லாமை பொய் சொல்லாமை கள்ளாமை,
காமமின்மை ,பொறையுடைமை ,உறுதியுடமை இரக்கம்
நேர்மை, அளவோடு உண்ணுதல் ,அக,புறத்தூய்மை !
இதனையும் கொண்டால் இயமம் என்னும்
யோகத்தின் ஒரு படி ஏறலாகும் !

இனி நியமம் இதுவோ கொள்ளத்தக்கது அவைகளை தவறாது
கடைபிடிப்பது ஆன விதிகளை கூறுவதாகும் ! அவை
தவம் ஜபம் தானம் ,வேள்வி ,கேள்வி வழிப்பாடு என
குருமுகம் மூலம் தகுதிக்கு ஏற்ப விரியும் !
நியமம் கடை பிடிக்கும் வழி போதிக்கும் இரண்டாம் படி !

ஆசனம் யோகம் பயிலும் சாதகர்க்கு வரும் வாதனையில்
இருந்து தப்ப ஞானியர் தந்த சாதனம் ஆகும் ! இது ஒரு முன் எச்சரிக்கை !
தவம் பயிலும் போது ஆசனங்கள் மூலம் உடலின் நலனை
காப்பது மட்டுமன்றி தவம் இருக்கும் நேரத்தில்
இருக்கவேண்டிய இருக்கையின் உடலின் இருப்பையும் உணர்த்துவதாகும் !
ஞானியர் கண்ட அறிவுப்படி நமது வாதனை அனைத்திற்கும் ,
தவத்திற்கும் இடையூறாக இருப்பது ரஜோ குணமே !இது ஒரு சூடு ,

இது மேலோங்கி
செல்லாமல் ஒடுங்கச்செய்யும் சாதனமே ஆசனம் !
இவை முக்கிய ஆசனங்கள் எட்டும் ,இதர நூற்றுகனகானவைகள்
குருவின் திருவருளால் கற்கவேண்டியவை !
இந்த ஆசனங்கள் கைவப்பட்டவனே அட்டாங்க யோகத்தின்
அடுத்த படியே செல்ல முடியும் !

இனி அடுத்த படிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Feb 23, 2011 1:23 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (18)-

*தியானம் , குரு சில குறிப்புகள் *

தியானம் , குரு சில குறிப்புகள்
!

தியானம் என்ற சொல் இன்று உலகின் எல்லா பகுதி மக்களையும்
கவர்ந்திழுக்கும் ஒரு மந்திர சொல்லாக விளங்கி வருகிறது !
இதை ஒரு பயிற்சியாக உலகின் பல பாகங்களிலும்
இந்திய குருக்களாலும் மேலை நாட்டு மனவியல் படித்த மேதைகளாலும் மக்களுக்கு
பல்வேறு வழிகலேயே போதிக்கப் படுகிறது !ஆனால் எத்தனை பேர்
இதன் முழு பலனை அனுபவித்துஅறிகிறார்கள் என்று பார்த்தால்
அதன் தொகை என்னவோமிக குறைவே .!இந்த தியானம் எனும் பயிற்சிக்கு
சில தகுதிகள் வேண்டும் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் !

மனம் வெறுமனே ஒரு பொருளில் குவிப்பது தியானமல்ல !
அது மன ஒருமைப்பாடுதான் ! தியானத்தில் இருவகை உண்டு
உலகியல் ரீதியான தியானம் .,ஆன்மீக ரீதியான தியானம் !
முதல் பிரிவு மன அழுத்தத்தை குறைக்கிறது ரத்த அழுத்தத்தை குறைகிறது ,
நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு இவை வரப்பிரசாதம் தான் !
மற்றது ஆன்மீக தியானம் ,இதுவே உபாசனை எனப் படும் !

தியானம் என்பது ஒருமை அமைதி இவைகளை நோக்கிய ஒரு பயணம்
மன ஒருமைப்பாட்டில் செவி கண் போன்ற பொறிகள் அடக்கப் படாமல் இயங்கிவருக்ன்றன !
புற உலகுடன் அதன் தொடர்பு துண்டிக்கப் படவில்லை !

ஆனால் தியான வேளையில் பிற பொறிகள் அடக்கப் பட்டு மனம் மட்டும் செயல் படுகிறது
.புற உலகுடன் அதன் தொடர்பு துண்டிக்கப் பட்டு விடுகிறது .
இனி இந்தத் தொடரில் அதிகமாக கூறப் பட்டு வரும் இன்னும் இரண்டு பொருள்களைப்
பற்றி பார்த்துவிட்டு ,நாம் இதுவரை எதை நோக்கி வந்து கொண்டு இருக்கிறோமோ அதை
விரிவாக ஆராயப் போகிறோம் ! ஏன் நாம் விரும்புவது எல்லாம் நடை பெறுவதில்லை !

பிரபஞ்ச மனம் ஏன் நமது ஆசைகளை புறக்கணி கிறது ? என்ற வினாக்களுக்கு விரிவான
விடை காணப் போகிறோம் !எதிர்காலம் ஏன் நாம் விருபியவாறு இருப்பதில்லை ?

என்ன செய்தால் அதை விரும்பியவாறு இயங்கச்செய்யலாம் ?

அத்தனையும் விரிவாக விடை காணசேர்ந்து முயற்சிக்கப்
போகிறோம் !
அதற்க்கு இதுவரைமுன்னர் படித்ததுதான் துணை செய்யப் போகிறது !

இனி இப்போது குரு ,ஆத்மா இவைகளைப் பற்றி சுருக்கமாக சில தகவல்களிப்
பார்த்துவிட்டு பிறகு நமது தொடரின் மிக மிக்கிய கட்டத்திற்கு போகப் போகிறோம் .
அங்கே தான் பல புதிர்கள் விடுபட போகின்றன ! நாம் உடல் சம்பந்தப் பட்டபல தத்துவ

விஷயங்களை சற்று விரிவாக பார்ப்பதற்கு காரணம் ,ஒரு பொருளைப் பற்றிய ஆழமான

அறிவு இருந்தால்தான் நாம் அதைக்கடந்து அதற்க்கு மேலே அடுத்ததற்கு செல்ல முடியும்

.நாமும் உடலில் வெளிப்புறமாக செல்லும் புற உணர்வை சற்று ஒதுக்கி அகமுக பிரயாணம் செய்ய

நினைக்கிறோம் .எனவே உடலைப பற்றிய பரிபூரண அறிவு நமக்கு அவசியம் ஆகிறது .

குரு

சித்தர்கள் உலகிலே குரு எனும் சொல்லுக்கு மகிமை மிக்க உண்டு !
குரு என்றால் ஒளி அல்லது வெளிச்சம் எஅப் பொருள் !
குருவும் ஆசிரியரும் வேறுவேறு ! ஆசிரியர் குரு ஆகமாட்டார்

ஆசிரியர் ஆயகலை அத்தனையும்
கற்றுத்தந்தாலும் , குரு மட்டுமே தன்னைப பற்றிய உண்மையை வார்த்தைகளால்
கூறாமல் தொட்டு உணர்த்துபவரும் உள் பொருளாகிய பேருண்மையை
சுட்டிக்காட்டி ,பின் உள்ளே இருக்கும் குருவை தொழில் பட செய்பவர் !
ஆன்ம பாதையில் குருவின் பங்கு மேலானது !
குரு நேரில் சுட்டிக்காட்டாமல் பயணம் தொடரமுடியாது !

துரோணர் பாண்டவருக்கும்கவுரவர்களுக்கும் ஆசிரியறேத்தவிர குரு இல்லை !
அதனாலேயே செஞ்சோற்று கடன் தீர்க்க தவறு எனத்தெரிந்தும்
கவருவார்கள் பக்கம் போர் செய்ய நேர்ந்தது ! ஆனால் சத்குரு என்பவர்
கட்டுப் படுத்த முடியாதவர் ! அவர் கடவுளின் ரூபம் !
குருதான் சீடரை தேர்ந்தெடுக்கிறார் !தன வாழையடி வாழை
தொடர்பு அறுபடாமல் ஞானத்தை தகுந்த பாத்திரம் அறிந்து அளிக்கிறார் !

ஆனால் இவ்வுலகில் பல போலியான குருக்களும்
என்றும் இருக்கின்றனர் ,இருதிருக்கின்றனர் ,
எனவே தான் திரு மூலர் கூட ஒரு குருடன் மற்றோரூ குருடனுக்கு
எவ்வாறு வழிக்காட்ட முடியும் என்கிறார் !குருவின் வல்லமைக்கும் ,பெருமைக்கும்
இத்தனை முக்கியத்துவம் தரும் சித்தர்கள் குருவை போற்றிய பின் தான் தங்கள்
படைப்பை தொடருவார் ! குரு வணக்கம் செயல்களின் வெற்றிக்கு உரம் !

குருஅருள் இல்லாமல் இதுவும் சித்திப்பது அரிது !
நினையாமல் நினைப்பது ,தூங்காமல் தூங்குவது போல் ,
சொல்லாமல் சொல்வது என ஒன்று உண்டு ! குரு
பல ஞான பேருண்மைகளை சொல்லாமல் சொல்வது வழக்கம் !
அவருடைய செயல் உடலே பாடம் நடத்தும் ! வார்த்தைகளுக்கு அங்கு வேலை இல்லை !
மொத்தத்தில் குரு இல்லாமல் ஞான மார்க்கம் இல்லை !

குருவின் பெருமை சொல்லிலடங்காது
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 24, 2011 12:27 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (19)-*

*ஆத்மா எனும் ஆதாரம் !*

ஸ்தூல உடல் ,சூக்ஷம உடல் , காரண உடல் இவை முன்றிலும்
அதற்க்கு ஆதாரமாக அதன் ஜீவனாக விளங்கிவது ஆத்மா !
ஆத்மா இல்லாவிட்டால் மனம் வேலை செய்யாது !
மனமும் பிராணனும் ஆத்மாவின் இரு சகாக்கள் !

ஆத்மா அழிவற்றது ! பந்தம் இல்லாதது !
ஆத்மா சத் சித்து ஆனந்த ரூபம் கொண்டது
எங்கும் நிறைந்தது அஞஞானம் எனும் குறை இல்லாதது
சுத்த சைதன்யம் வடிவுள்ளது .

அது சுய ஒளி கொண்டது ! தத்துவங்களுக்கு மேம்பட்டது !
உடலில் நடக்கும் சுக துக்கம் இலாப நஷ்டம் ,இவை அனைத்திற்கும்
ஒரு மௌன சாட்சியாக விளங்குவது ! நம் உடலில் உள்ள
பொறிகள் கண் ,காது முதலியவை மனம் இல்லது இயங்காது !
ஆனால் மனமோ ஆத்மா இல்லாமல் இயங்குவது இல்லை .

அனைத்திற்கும் மூல சக்தியாக விளங்குவது ஆத்மா !

ஆத்மா இருக்கிறது என்பதற்கு மிக சக்திவாய்த சாட்சி ,
மரணம் தான் ! மனிதன் மரணம் அடைத்தும் உடலில்

ஆத்மா இருப்பதில்லை !

நான் ,நீ ,அவன் என்பது இந்த உடலையல்ல ,
உடலில் மறைந்திருக்கும் ஒரு உயர்ந்த உறு
பொருள் தான் ஆத்மா ! ஆத்மா மனிதனுக்கு
மட்டுமல்ல உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளிலும்
,ஏன் செடி கொடி,மரம் எல்லாவற்றிக்கும் ஆத்மா உண்டு !

மரணம் தேகத்திற்கு மட்டும் நடக்கும் செயலாகும் !
பழைய ஆடையை களைந்து புதிய ஆடையை உடுத்துவது போல்
ஆத்மா வேறுதேகம் சென்று குடியேறும் !
பஞ்ச பூதத்தினால் அகக்கப்பட்ட உடலின் மூலம் விஷயங்களை
சாட்சியாக இருந்து அனுபவிக்கிறது ! இந்த தேகத்தில்
எண்ணிய எண்ணங்களும் ,செய்த செயல்களும் குணங்களாக மாறுகிறது !
குணங்கள் ஆத்மா ஒரு உடலைவிட்டு பிரியும் போது கூடவே

பிரிந்து அதனுடன் செல்லும் !

அதுவே பிறவி குணங்கள் ! புதிய பிறவியின் மூலதனம் !

காற்று ஒரு நந்த வனத்தின் வழியே வீசும் போது, அவ்விடத்தில் உள்ள நறுமணகளையும்
செல்லும்போது சேர்த்து கொண்டு செல்வது போல் ஆத்மாவும் ஒரு உடலில் வாசம் செய்து பிரியும் போது

கர்ம வாசனைகளையும் சுஷும வடிவில் எடுத்து செல்லும் !

அதுவே எஜமானன் !அதற்க்கு மேல் எதுவும் நமது உடலில் இல்லை !
அதற்க்கு இந்த உடம்பு ,ஒரு தேர் போன்றது ! உடலின் பத்து இந்திரியங்களும்
இந்தத் தேரின் குதிரைகள் ! இந்த ஜீவன் புருவ நடு ஆகிய இடங்களில்
சஞ்சரிக்கும் !
மனம் இல்லாமல் ,ஜீவன் இருக்கும் ஆனால் பிராணன் இல்லாமல்
ஜீவன் இராது ! இந்த ஜீவ சக்தியைத்தான் கண்ணன் பரா பிரகிருதி
அபரா பிரகிருதி என கீதையில் கூறுகிறார் !

ஆத்மா நேரடியாக எந்தப் பொருளையும் தொடர்பு கொள்ளமுடியாது !
ஆத்மாவிற்கும் புறப் பொருளுக்கும் இடையில் மனம் ஒன்று வேண்டும் !
அந்த மனம் அந்த புறப் பொருளின் வடிவை எடுக்கவேண்டும் ,
ஆத்மாவின் ஒளி இந்த விருத்தி அல்லது எண்ண அலையில் விழும் போதுதான்
அந்தப் பொருளைப் பற்றிய அறிவு உதயமாகிறது !

அனைவரிடத்திலும் தான் ஆத்மா உள்ளது ! அது ஒரே மாதிரியானது !
பின் மனிதரில் ஏன் இத்தனை வேறுபாடு ? மனிதனின் மனத்தில் எழும் எண்ண அலைகளின்
விருத்தியின் வேறுபாடுதான் தான் மனிதருள் வேறுபாடு இருக்கக் காரணம் ! உள்ளத்தை
தூய்மை படுத்துவதாலும் ,தியானத்தாலும்
விருத்தியை செம்மைப் படுத்தி தேவனாகும் முயற்சி கை கூடும் !

இனி அடுதப்பகுதியில் இன்னும் கொஞ்சம் கர்ம வினைகளைப் பற்றி பார்த்துவிட்டு
அடுத்து மிக முக்கிய பகுதிக்கு செல்லலாம் ! அங்கே அஷ்ட லக்ஷ்மியும் செல்வமனைத்தும்
கொட்டவைக்கும் வித்தை காத்திருக்கிறதோ இல்லையோ ,

ஒவ்வருக்கும் ஒவ்வொரு அஷய பாத்திரம்
நிச்சயம் கிடைக்கும் !
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Feb 24, 2011 1:08 pm

காத்திருக்கிறோம் அய்யா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Feb 24, 2011 4:52 pm

அனைவருக்கும் வணக்கம்

அற்புதமான பதிவு. படித்தேன்
மனமகிழ்வெய்தினேன், கட்டுரையைத் தொடர வேண்டுகிறேன்

//அந்த ஒளி சுழலை கண்டே வரும்
நோய் களையும்
அவன் கொண்டுள்ள குணங்களையும் அறியலாம் என்கின்றனர் ! ஒவ்வொரு
குணத்திற்கும் ஒரு தனி ஒளி வட்டம் !
கோபத்திற்கு ஒன்று ! கவலைக்கு
ஒன்று !
இது மனிதனின் அனுபவத்திற்கும் ,அறிவிற்கும் தகுந்த படி அளவில்
சிறிதாகவும்
,பெரிதாகவும் விளங்குவதுண்டு ! இதைதான் புனிதர்களின்
தலைக்கு பின்னே ஒளிவட்டமாக
போட்டனரா ? நம் பெரியவர்கள் !//

ரஷ்ய விஞ்ஞானி கிர்லியன் என்பார் இதனைக் கண்டு பிடித்தார்
youtube ல் kirlian effect என்ற தேடு சொல் கொடுத்துப் பார்த்து அறியலாம்

என்றும் மாறா அன்புடன்

நந்திதா

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Feb 24, 2011 6:31 pm

கடிதத்திற்கு நன்றி ,

மனிதனைச் சுற்றி உள்ள ஒளிவட்டத்தையும் அதனைப்பார்த்து அவனினின் ஆரோக்கியம் வாழ்வின் முறை அவனின் குணாதிசியங்கள் இவைகளைக் கண்டுபிடிக்கும் முறை பல ஆயிரம் ஆண்டுகளாகவே நமது சித்தர்களும் ரிஷிகளும் அறிந்திருந்தனர் .
சமீபத்தில் தான் ரஷ்யாவை சேர்ந்த கிர்லியன்என்பவர் அதை அளக்கும் கருவியை ,பதிவு செய்யும் காமிராவை கண்டுபிடித்தார் .
நமது பெருமைகளை பெரும்பாலும் அயல் நாட்டவர் ஒப்புக்கொண்டு நமக்குக் கூரியபிறகே நாமும் அதில் கவனம் செலுத்தும் பாங்கு நம்மிடம் படித்துவிட்டது .
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு இணையம் தான் .
அடுத்த நூற்றாண்டை ஆட்சி செய்யப்போவது நமது சித்தர்கள் கண்ட மனதின் மாட்சிமைகல்தான் .

அன்புடன்
சுகுமாரன்
--

Sponsored content

PostSponsored content

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக