புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவே இறுதியாகட்டும்! Poll_c10இதுவே இறுதியாகட்டும்! Poll_m10இதுவே இறுதியாகட்டும்! Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
இதுவே இறுதியாகட்டும்! Poll_c10இதுவே இறுதியாகட்டும்! Poll_m10இதுவே இறுதியாகட்டும்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவே இறுதியாகட்டும்! Poll_c10இதுவே இறுதியாகட்டும்! Poll_m10இதுவே இறுதியாகட்டும்! Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
இதுவே இறுதியாகட்டும்! Poll_c10இதுவே இறுதியாகட்டும்! Poll_m10இதுவே இறுதியாகட்டும்! Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவே இறுதியாகட்டும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 6:40 pm

விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட, கையிலிருந்த துண்டால் வாயைப் பொத்தி, குலுங்கிக் குலுங்கி அழுதார் அருணகிரி.

அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் கடைநிலை ஊழியராகப் பணிபுரியும் அருணகிரி, பிரேதப் பரிசோதனைக்காக வெளியில் எடுத்துப் போடப்படும் மனித உடலின் உள்ளுறுப்புக்களை, பிரேத பரிசோதனை முடிந்ததும், மறுபடியும் அந்த உடலினுள்ளேயே திணித்து, கோணிப்பையைத் தைப்பது போல் தைத்து, வெள்ளைத் துணியில் சுருட்டி, மூட்டையாகக் கட்டுவது தான் அவரது வேலை.

அழுது கொண்டிருக்கும் அருணகிரியையே, வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சிவராசன், ''யோவ் பெருசு... ஒவ்வொரு தடவையும் உன்னோட இதே ரோதனையா போச்சு. ஊருப் பேரு தெரியாத யாரோ ஒருத்தரோட பொணத்த வெச்சுத் தைச்சிட்டு வர வேண்டியது... அப்புறம் என்னமோ உன்னோட சொந்தக்காரங்க சவம் மாதிரி நெனச்சுக்கிட்டு, குமுறிக் குமுறி அழ வேண்டியது...'' என்றான்.

வயதில் மிகவும் மூத்தவரான அருணகிரியுடன், சற்றும் வயது வித்தியாசம் பாராது, வெகு அன்னியோன்யமாகப் பழகுவான் சிவராசன். அதே மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாகக் பணியாற்றும் அவனுக்கும், அருணகிரிக்கும் இடையே ஒரு அன்பும், நட்பும் உண்டு.
சிவராசனின் பேச்சைக் காதில் வாங்காமல், அழுது கொண்டியிருந்த அருணகிரியின் தாடையை, 'வெடுக்' கெனத் திருப்பிய சிவராசன், ''பெருசு... இப்ப நீ அழுவறத நிறுத்தப் போறியா இல்ல, நாலு சாத்து சாத்தட்டுமா,'' என்றான் அதட்டலாக!

சட்டென்று தன் அழுகையை நிறுத்தினார் அருணகிரி.
''உன்ன என்னால புரிஞ்சுக்கவே முடியல பெருசு... யாரோ செத்துப் போறாங்க; அதை யாரோ அறுத்துப் போடறாங்க. அறுத்துப் போட்டதை தைக்கற நீ எதுக்கு அழணும்?'' என்று கேட்டான்.

''செத்துப் போனது யாராயிருந்தா என்னப்பா...அதுவும் ஒரு மனித உயிர் தானே... உயிரோட இருந்த கடைசி நிமிஷம் வரை, அந்த ஜீவன் எத்தனையெத்தனை கனவுகளை, ஆசைகளை தன்னோட மனசுல தேக்கி வச்சிருந்திருக்கும். எல்லாமே ஒரு மரணத்தில மாயமாப் போயிடுச்சேப்பா,''என்றார் ஆற்றாமையுடன்.
''இதெல்லாம் இயற்கை தானே பெருசு.''

''சக மனுசன் பொணமாக் கிடக்கும் போது, அதைப் பார்த்து மனம் தாளாம கண்ணீர் விடுறதும் இயற்கை தானேப்பா,''என்றார்.

''அய்யோ பெரிசு... சவக் கெடங்கு வாசல்ல உட்கார்ந்துகிட்டு சித்தாந்தம் பேசுறியே... உன்னைக் கொன்னா என்ன,'' என்று செல்லமாக கோபித்து, விளையாட்டாய் அருணகிரியின் கழுத்தை நெரித்தான் சிவராசன்.
அப்போது, ''என்ன கெழம்... இளவயசுக்காரன் கூடச் சேந்துக்கிட்டு கூத்தடிச்சிட்டிருக்க... கொழுப்பு ஏறிப் போச்சா?'' என்று கேட்டபடியே வந்து நின்றான், அருணகிரியின் மகன் அழகுப்பாண்டி.

வேலை வெட்டிக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவன் அழகுப்பாண்டி.
''வாப்பா அழகு... சாப்பிட்டியா?''என, அன்பொழுகக் கேட்டார் அருணகிரி.

'வயசான அப்பனைப் பாத்து, மகன் கேட்க வேண்டிய கேள்வியை, இங்க இந்த தறுதலய பாத்து, அப்பன் கேட்கறான்...' என்று தனக்குள், எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டான் சிவராசன்.

''த... நான் சாப்பிட்டா என்ன, சாப்பிடாட்டி உனக்கென்ன... சும்மா ரொம்ப அக்கறையுள்ளவனாட்டம் டயலாக்க வீசாதே,'' என்றபடி, காதில் செருகியிருந்த பீடியை எடுத்து, தந்தையின் எதிரிலேயே சற்றும் லஜ்ஜையின்றி பற்ற வைத்தான் அழகுப்பாண்டி.

பீடியை நாலு உறிஞ்சு உறிஞ்சு முடித்ததும், ''கெழம்... கைல எவ்வளவு வெச்சிருக்க?''என்று கேட்டான்.
''ஏம்பா... எதுக்குக் கேட்கறே?''
''ஒரு, 500 ரூபாய அட்ஜஸ்ட் செய்; அவசரமாத் தேவைப்படுது!''
''உனக்கில்லாததா...'' என்றபடி மடித்துக் கட்டியிருந்த வேட்டியைத் தூக்கி, பட்டாபட்டி அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்து, கசங்கிப் போன, 500 ரூபாய் நோட்டை எடுத்து, மகனிடம் தந்தார்.

'வெடுக்'கென்று அதை பறித்துக் கொண்டு, வேக வேகமாய் நடந்து சென்ற அழகுப்பாண்டியை எரித்து விடுவது போல் பார்த்த சிவராசன், அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், அருணகிரியின் பக்கம் திரும்பி, ''பெருசு... நான் ஒண்ணு சொல்றேன் கோவிச்சுக்காதே... உன் மகன் போற போக்கு ஒண்ணும் சரியில்ல... கொஞ்சம் கண்டிச்சு வை. ரயில்வே பாலத்துக்கடியில, கஞ்சா கசக்கற கோஷ்டியோட சேர்ந்துக்கிட்டு கஞ்சா உறிஞ்சிட்டிருக்கான்.''

''பச்... தெரியும்பா. தெரிஞ்சு என்ன செய்ய... கேட்டா, என்னையே அடிப்பான்; பொறக்கும் போதே தாயை முழுங்கிட்டு, தாயன்பே அறியாம தன்னிச்சையாய் வளந்த பய. கொஞ்சம் அப்படி, இப்படித் தான் இருப்பான்,'' என, மகனை விட்டுக் கொடுக்காமல் பேசினார் அருணகிரி.

''ஏதோ மனசு கேட்கல சொன்னேன்... இந்தக் கஞ்சா மயக்கம், மனிசன எங்க போய் நிறுத்தும் தெரியுமா... நீ வேணா பாரு... ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள், உன் மகன் இந்தக் கஞ்சா போதையில பெரிய தப்பு செய்துட்டு வந்து நிக்கப் போறான்,''என்றான்.

சிவராசன் சொன்னது மனதிற்கு வேதனையாய் இருந்தபோதும், அந்த வேதனையை விழுங்கி, விரக்தி சிரிப்பொன்றை உதிர்த்தபடி அங்கிருந்து நகர்ந்தார் அருணகிரி.

ஆஸ்பத்திரியெங்கும் போலீஸ் தலைகள். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உள்ளே ஒரு போஸ்ட் மார்ட்டம் நடந்து கொண்டிருந்தது. அது முடிந்ததும், தன் பணியைத் தொடர்வதற்காக, அறைக்கு வெளியே காத்திருந்தார் அருணகிரி.

வரிசையாக எல்லா போலீஸ்காரர்களுக்கும், சலாம் போட்டவாறே வந்த சிவராசன், அருணகிரியிடம் வந்து, ''என்ன பெருசு... ஒரே போலீஸ் கூட்டமாயிருக்கு; சவம் யாரு, யாராவது பெரிய அரசியல்வாதியா?'' என்று கேட்டான்.

''இல்லப்பா. நேத்திக்கு பேப்பர்ல நியூஸ் வந்திருச்சுல்ல... 11 வயசு பள்ளிக்கூடச் சிறுமிய யாரோ கடத்திட்டு போயி, நாசம் செஞ்சு, கொலை செஞ்சுட்டாங்கன்னு... அந்தச் சிறுமியோட சவம் தான் போஸ்ட்மார்ட்டம் ஆகிட்டிருக்கு. சே... இந்த உலகம் எங்க போயிட்டிருக்குன்னே தெரியல. சமூகமே பாவங்களோட குப்பைத் தொட்டியாப் போச்சு. இதுல பொழச்சுக் கிடக்கிறத விட, பேசாம நாண்டுக்கிட்டு சாவலாம் போலிருக்கு,'' என்றார்.

''கொலைகாரன பிடிச்சுட்டாங்களா?''
''வழக்கம் போல இன்னும் ரெண்டு, மூணு நாளுல பிடிச்சிடுவோம்ன்னு சொல்லியிருக்காங்க...'' என்றார் அருணகிரி அசுவாரசியமாய்.

''க்கும்... அதுக்குள்ள அவன் ஆயிரம் மைல் கடந்து போயிடுவான்; அப்புறம் எங்க போயி பிடிக்கிறது...''
''எங்க போயி ஒளிஞ்சாலும் செஞ்ச பாவத்துக்கு, தண்டனை அனுபவிச்சு தானே தீரணும். அந்த ஆண்டவன் எல்லாத்தையுமே பார்த்துட்டுத்தான் இருக்கான். அவன் கிட்டயிருந்து யாரும் தப்பிக்க முடியாது,''என்று கூறிக் கொண்டிருந்த போது, அருணகிரிக்கு அழைப்பு வந்தது; கனத்த இதயத்தோடு உள்ளே சென்றார்.
அவர் உள்ளே செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சிவராசன், 'ஹூம்... இன்னிக்கு பெருசு எத்தனை மணி நேரம் அழப் போகுதோ...' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

ஒரு மணி நேரத்திற்குப் பின், தள்ளாட்டமாய் வெளியே வந்த அருணகிரி, அப்படியே தரையில் அமர்ந்தவர், ''அய்யோ... எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சேனோ... இந்தக் கொடுமைகளையெல்லாம் என் கண்ணால பாக்க வேண்டியிருக்கே... இது நாடா இல்ல காடா... இங்கிருக்கவங்கெல்லாம் மனுஷங்களா இல்லை மிருகங்களா... கடவுளே... இதை எல்லாம் நீ பார்த்திட்டுத் தான் இருக்கியா இல்ல கண்ணை மூடிட்டு உட்காந்துட்டிருக்கியா...''என்று கூறி,'கோ'வென்று கதறி அழுதார்.

அங்கிருந்த போலீஸ்காரர்கள் முதற்கொண்டு எல்லாருமே அவரை விசித்திரமாகப் பார்க்க, தர்ம சங்கடமாகிப் போனான் சிவராசன். ''ச்சூ பெருசு... கொஞ்சம் அடக்கி வாசி; போலீஸ்காரங்க எல்லாரும் உன்னையவே பாக்கறாங்க,'' என்றான் மெல்லிய குரலில்.

''போதும்ப்பா.... போதும் எனக்கு இனிமே இந்த வேலையே வேணாம்,'' என்று கூறி முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தார் அருணகிரி.
''வீட்டுக்குப் போறியா பெருசு?''

சிவராசனின் கேள்விக்கு பதிலே கூறாமல், தள்ளாட்டமாய் நடந்து போனார் அருணகிரி.
இரவு முழுவதும் உறக்கமின்றித் தவித்தார் அருணகிரி. தன் வாழ்நாளில் எத்தனையோ பிரேதங்களைப் பார்த்திருக்கிறார். நெருப்பில் அரையும் குறையுமாய் கருகியவை, நீரில், நாள் கணக்காய் ஊறி, உப்பி வந்தவை, விபத்தில் சிக்கி, சின்னாபின்னமாகி வந்த பிரேதங்களையெல்லாம் கூடப் பார்த்து, தொட்டுத் தைத்திருக்கிறார்.

அப்போதெல்லாம் அவற்றின் தாக்கம் அவருக்கு, அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ தான் இருக்கும். ஆனால், இன்று அந்தச் சிறுமியின் பிரேதத்தைத் தைத்தது, அவரை உலுக்கி விட்டது. கண்களை மூடினால், சிறுமியின் முகமும், பிரித்துப் போடப்பட்ட அங்கங்களுமே கண்களுக்குள் தெரிந்தது. உடலெங்கும் மெல்ல சூடு பரவ, ஜுரம் அவர் மீதான தன் ஆக்கிரமிப்பைத் துவக்கியது.

அதிகாலையில், ஜுரம் அதிகமாக, எழுந்து நடக்க முடியாத நிலையில், உதவிக்கு மகனை அழைத்தார்; அவன் வரவில்லை என்றதும், தானே மெல்ல எழுந்து, பாத்ரூமை நோக்கி நடக்க முயன்றவர், அப்படியே தரையில் மயங்கிச் சரிந்தார்.

மாலையில் அவரைத் தேடி வந்த சிவராசன், மயங்கிக் கிடந்த அருணகிரியின் முகத்தில் நீரைத் தெளித்து, எழுப்ப கையைத் தொட்டவன், 'அடடே... உடம்பு நெருப்பா கொதிக்குதே...'என்று பதறி, தெருமுனைக்கு சென்று, ஆட்டோவுடன் வந்தான்.

அவர்கள் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, ஊசி போட்டு, மருந்து, மாத்திரைகள் வாங்கிய பின், வீட்டிற்கு அழைத்து வந்தவன், ''பெருசு... ரெண்டு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடு... அப்புறமா வேலைக்கு வரலாம். நான் சொன்ன மாத்திரைகளை மறக்காம சாப்பிடு,'' என்றவன், ''ஆமா... உன் அருமைப் புத்திரன் எங்க?'' என்று கேட்டான்.

உதட்டைப் பிதுக்கினார் அருணகிரி.
''ஹூம்... இப்படியொரு மகனைப் பெத்து, வளர்த்ததுக்கு பதிலா ஒரு மாட்டை வளர்த்திருக்கலாம்; பாலும், சாணியும் குடுக்கும்.''

''வேண்டாம்ப்பா... அவனைத் திட்டாத; அவன் ஒரு பாவப்பட்ட ஜென்மம். பொறக்கும்போதே தாயைப் பறி கொடுத்தவன்.''

''போதும் பெரிசு... இந்தக் கதையைக் கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு. அவனும் திருந்த மாட்டான், நீயும் திருந்த மாட்ட,'' என்று கூறிவிட்டு சென்று விட்டான் சிவராசன்.

மூன்று நாட்களுக்குப் பின், ஆஸ்பத்திரி கேன்டீனில் டீ குடித்தபடியே பேப்பர் படித்துக் கொண்டிருந்த சிவராசன், 'சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பிடிபட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டான்!' என்ற செய்தியைப் படித்ததும், ''இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் இப்படித் தான் சுட்டுத் தள்ளணும்; அப்பத்தான் எவனுக்குமே அப்படியொரு எண்ணமே தோணாது,'' என்று தன் பக்கத்திலிருந்த சக ஊழியனிடம் சொன்னான்.

''சரியாச் சொன்னீங்கண்ணே... செய்ற தப்பையும் செய்துட்டு, போலீஸ் பிடிச்சப்புறமாவது ஒழுங்கா இருந்திருக்கலாம். அதை விட்டுட்டு அவங்களையும் தாக்கிட்டு ஓடப் பாத்திருக்கான்; அதான் சுட்டுத் தள்ளிட்டாங்க,'' என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து சென்றான்.

அதன் பின், அந்தச் செய்தியை நிதானமாய் படிக்க ஆரம்பித்தான் சிவராசன். படித்துக் கொண்டே போனவன் செய்திக்கு கீழே வெளியாகியிருந்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும், அரண்டு போனான். புகைப்படத்தில் குண்டடிபட்டு இறந்து கிடந்தது, அருணகிரியின் மகன் அழகுப்பாண்டி.

'படக்'கென்று பேப்பரை மூடி, சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னைத் தவிர வேறு யாரும் அழகுப்பாண்டியை அடையாளம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. அங்கிருந்து மெல்ல அகன்றான் சிவராசன்.

தொடரும்..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 6:41 pm

கேன்டீனை விட்டு வெளியேறி, நேரே ஓய்வறைக்குச் சென்று, தனியே அமர்ந்து யோசனையில் ஆழ்ந்தான்.

'ஹூம்... எப்பேர்ப்பட்ட மனுஷன் அருணகிரி. அவருக்குப் போய் இப்படியொரு புள்ளயா... அய்யோ... இந்தச் செய்தி மட்டும் பெருசுக்குத் தெரிஞ்சா, உயிரோடவே இருக்க மாட்டாரே... அன்னிக்கு அந்தச் சிறுமியோட பொணத்த பாத்ததுக்கே மனசு நொந்து, உடம்புக்கு முடியாம போயி, இன்னும் வேலைக்கு வர முடியாம கெடக்கறாரு. இந்த நிலையில, அந்தச் சிறுமிய நாசம் செஞ்சது தன் மகன் தான்னு தெரிஞ்சா என்ன ஆவாரு... நெனச்சுப் பார்க்கவே பயமாயிருக்கே...' என, தனக்குள் புலம்பினான்.

மறுநாள் உடல் நிலை சற்றுத் தேவலாம் போலிருக்கவே, பணிக்கு வந்திருந்தார் அருணகிரி.
அவரை நேருக்கு நேர் பார்த்ததுமே, சிவராசன் கண்களில், அவனையுமறியாமல் நீர் கோர்த்தது.
''அட... என்னப்பா நான் என்ன செத்தா போயிட்டேன்... லேசா காய்ச்சல் அவ்வளவு தானே... இதுக்குப் போயி அழறியே,'' என்றார் அருணகிரி.
முகத்தை திருப்பி, விழிநீரைச் சுண்டினான் சிவராசன்.

மருத்துவமனை வளாகத்தில் நிறைய போலீஸ்காரர்களைப் பார்த்ததும், ''என்னப்பா... இன்னிக்கும் நிறைய போலீஸ்காரங்க இருக்காங்க... என்ன சமாசாரம்?''என்று கேட்டார். 'பெருசு,'டிவி' செய்தியோ, பேப்பரையோ பாக்கல போலிருக்கு... அதுதான் விஷயம் தெரியாம கேட்குது...' என்று நினைத்தவன்,''அது வந்து...'' என்று தயங்க, ''சொல்லுப்பா... ஏன் தயங்குறே?''

''வந்து... அந்த சிறுமிய சின்னாபின்னப்படுத்திய குற்றவாளியப் பிடிச்சு... என்கவுண்டர் செய்துட்டாங்க. பாடி உள்ளார இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல போஸ்ட்மார்ட்டம்!''
உடனே, அவர் முகம் பிரகாசமடைய, ''பாத்தியா... நான் அன்னிக்கே சொ
ன்னேன்ல்ல... பாவத்தைச் செஞ்சவன், அதுக்கான தண்டனையை அனுபவிச்சே தீரணும்; அவன் எங்க போனாலும், அந்த ஆண்டவன் கிட்டயிருந்து தப்பவே முடியாதுன்னு சரியாப் போச்சு பாத்தியா,'' என்று சந்தோஷத்தோடு சொன்னார் அருணகிரி.

அந்தப் பாவி, தான் பெற்ற பாவி தான் என்பதை அறியாமல் அவர் பேசிக் கொண்டே போக, சிவராசனுக்கு அழுவதா, சிரிப்பதா என்றே புரியவில்லை.

அடுத்த அரை மணி நேரத்தில், அரசு மற்றும் சில போலீஸ் உயர் அதிகாரிகளின் முன்னிலையில், அந்த பிரேத பரிசோதனை துவங்கியது. பத்திரிகைக்காரர்களும், தனியார் தொலைக்காட்சிக்காரர்களும், தகவல்களுக்காக காத்திருந்தனர்.

பிரேத பரிசோதனை மற்றும் லீகல் பார்மாலிட்டீசும் முடிந்த பின், அருணகிரி அழைக்கப்பட்டு, உள்ளே அனுப்பப்பட்டார்.
'திக் திக்' நெஞ்சுடன் வெளியில் காத்திருந்தான் சிவராசன்.

அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் ஆகியும், அருணகிரி வெளியே வராது போக, சிவராசனின் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. 'பெருசு மகனப் பார்த்ததும், அதிர்ச்சியில மயக்கம் போட்டுருச்சா... இத்தனை நேரமாகியும் காணலையே...'என்று நினைத்துக் கொண்டிருந்த போது, சகஜமான முகத்தோடு, நெற்றி வியர்வையைத் துடைத்தபடி நிதானமாக வெளியே வந்தார் அருணகிரி.
'என்ன இது... யார் யாரோட பொணத்தையெல்லாம் தைச்சிட்டு வெளியே வரும்போது, அழுதுக்கிட்டே வர்ற பெருசு, இன்னிக்கு தன்னோட சொந்த மகனோட சவத்தைத் தைச்சிட்டு வரும்போது, முகத்துல ஒரு அதிர்ச்சியோ, கவலையோ இல்லாம வருது; ஒரு வேளை பெருசுக்கு அடையாளம் தெரியலயோ...'என நினைத்துக் கொண்டான்.

வழக்கமாக அமரும் இடத்திற்குச் சென்று அமர்ந்த அருணகிரியை, கூர்ந்து பார்த்தான் சிவராசன். அவரிடமிருந்து ஓங்கிய பெருங்குரலில் எழப் போகும் அழுகைக்காகக் காத்திருந்தவன், கிட்டத்தட்ட, 20 நிமிடங்களுக்கு மேலாகியும், அவரிமிடருந்து எந்தவித ரியாக் ஷனும் வராது போகவே, மெல்ல அவரருகே சென்று, ''என்ன பெருசு வேலை முடிஞ்சுதா?'' என்று சன்னமான குரலில் கேட்டான்.

''ம்...''
''வந்து... உள்ளார பொணமாக் கெடந்தது... யாருன்னு...''
''பதினோரு வயசுச் சிறுமிய பலாத்காரம் செய்து கொன்ன குற்றவாளி!''
''அது தெரியும்; ஆள் யாருன்னு...''

''அழகுப்பாண்டி... என்னோட மகன்...'' அருணகிரியின் பார்வை ஒரே இடத்தில் நிலைக் குத்தி இருந்தது.
''யாருன்னே தெரியாதவங்களோட சவத்தைத் தைத்கும் போதெல்லாம் சொந்தக்காரன் மாதிரி, அழுது ஆர்ப்பாட்டம் செய்வே... இன்னிக்கு உன்னோட சொந்த மகனோட பொணத்த தைச்சுட்டு வந்து, அப்படியே பாறாங்கல்லாட்டம் இறுக்கமா உட்கார்ந்திருக்கியே... ஏன் பெருசு, அழுகை வரலையா?''
சிவராசனின் முகத்தை நேர்ப்பார்வை பார்த்து, ஒரு குறுஞ்சிரிப்பைக் காட்டிய அருணகிரி, ''எதுக்குப்பா அழணும்... இப்ப நான் தைச்சிட்டு வந்தது ஒரு மனிதனோட சவமல்ல; மனித மிருகத்தோட சவம். புராணக் கதைகள்ல படிச்சிருக்கோம்ல்ல அசுரர்கள், அரக்கர்கள், ராட்சசர்கள்ன்னு அது மாதிரி தான் இவன். இதெல்லாம் பிடுங்கி எறியப்பட வேண்டிய விஷச் செடி. தீ வைத்துக் கொளுத்த வேண்டிய நச்சுப்பாம்பு. இதோட சாவுக்கெல்லாம் அழக் கூடாது; சந்தோஷப்படணும்,''என்று அருணகிரி பேசிக் கொண்டே போக, அவரையே வியப்புடன் பார்த்த படி நின்றான் சிவராசன்.

சில நிமிடங்கள் அமைதி காத்த அருணகிரி, 'விருட்'டென்று ஒரு இளைஞனைப் போல் எழுந்து, ''சரிப்பா... நான் போறேன்,'' என்று சொல்லி கிளம்ப, ''எங்கே பெருசு?''என்று கேட்ட சிவராசனின் கேள்விக்கு பதில் சொல்லாமல், வேகமாக வீட்டை நோக்கி நடந்தார் அருணகிரி.

மதியம், 2:00 மணியளவில் அந்த செய்தி வந்தது... 'அருணகிரி தூக்குல தொங்கிட்டார்!' என்று!

முகில் தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 6:43 pm

அப்படிப்பட்ட ஒரு அப்பாவுக்கு இப்படி ஒரு மகன்............வாழ்க்கை இன் புரியாத புதிர் இது தான் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 01, 2015 7:18 pm

என்ன கதையா நிஜமா என.............

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2015 8:20 pm

தாயில்லாப் பிள்ளை...தறுதலையாய் போன கதை...
-
சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 9:03 pm

P.S.T.Rajan wrote:என்ன கதையா  நிஜமா  என.............

என்ன சந்தேகம் ?..கதை தான் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 9:03 pm

ayyasamy ram wrote:தாயில்லாப் பிள்ளை...தறுதலையாய் போன கதை...
-
சோகம்

ம்ம்... சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக