புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10 
77 Posts - 36%
i6appar
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10 
2 Posts - 1%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 13 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "


   
   

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Wed Mar 06, 2013 7:52 am

"படிப்பினைகளை அவ்வப்போது தனது வாழ்வில்
பொருத்திப் பார்த்துக் கொண்டே இருப்பவன்
மட்டும் தான் மேலே மேலே போகிறான்"-நன்றி ஓரக்கண் பார்வை

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Mar 12, 2013 10:26 pm

நன்றி ஞான சுந்தரி அவர்களே ,

நடப்பவைகளை ,வெறும் சம்பவங்களாக மட்டும் கொள்ளாமல்
அத்தனையும் படிப்பினையாகக்கொண்டு ,
அதில் பெறவேண்டிவைகளை,தன்க்குத்தகுந்ததைப்புரிந்து ,
அதையே மூளையின் அனுபவப் பதிவுகளாகககொண்டு,
வரப்போகும் சம்பவங்களை ,பெற்ற அனுபவங்கள் மூலம்
மாற்றி சம்பவங்களை தான் போகும் பாதைக்கு
தகுந்த மாதிரி மாற்றத் தெரிந்தவனே ,
ஞானி !

நீங்கள்தான் ஞான சுந்தரி ஆயிற்றே ?
புரிந்துகொண்டீர்கள் .நன்றி
முழுவதும் படித்தாகிவிட்டதா ?
அன்புடன்
சுகுமாரன்




sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Mar 13, 2013 12:08 am


எனக்குப் புரிந்தது இதுவே -40
-அண்ணாமலை சுகுமாரன்

நாம் வாழும் இந்த உலகம் தோன்றி எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன ,
அதில் முதல்முதலில் உயிரினங்கள் தோன்றிஎத்தனையோஆண்டுகள் ஆகிவிட்டன
பின் பல ஆயிரம் ஆண்டுகள் அத்தகைய உயிரினங்கள்
மீண்டும் மீண்டும் தோன்றி பின் மறைந்து ,
அப்போது பெற்ற அனுபவப்பதிவுகளால் சற்று மேம்பட்டு
அந்த முதலில் தோன்றியஉயிரினங்களில் ,
அந்த இனத்தில் சிலமட்டும் பரிணாம வளர்ச்சி பெற்று ,
சக உயிரினங்களை விட மேம்பட்ட ஒரு புதிய ,
அடுத்த உயிரினம் உண்டாகி ,பின் மீண்டும் அந்த புதிய உயிரினம்
மேம்பட்டு ,மீண்டும் அடுத்த புதிய "வெர்சன்'
போல் வேறு ஒரு உயிரினம் உண்டாகி ,
இப்படியே பல்லாயிரம் ஜீவா பேதங்கள் ஏற்ப்படுத்தி .
பின் மனித இனம் ஆக உருப்பெற்றது .

இந்த மனித இனத்தின் அடுத்த "வெர்சன்'
தான் என்ன ?
அதன் அடுத்த பரிணாம வளர்ச்சி என்ன ?
அது வாழும் வழி மூலம் தேவன் ஆகும் முயற்சிதான் ?

ஆனாலும் இந்த பரிணாம வளர்ச்சியில் கட்டுறாமல் ,
படைப்பின் மூலத்தை ,
தான் புறப்பட்ட இடத்தைப் புரிந்து கொண்டு ,
வாழும் காலத்திலேயே ,
முக்தி எனும் விடுதலை
பெற்று "தான் "அதுவாகவே மாறும் வாய்ப்பு ,
அத்தகு வல்லமை இந்த மனிதப்பிறவிக்கு மட்டுமே இருப்பதாகக்
ஞானியர் கூற்று தெரிவிக்கிறது .

மனிதனைத்தவிர வேறு யாருக்கும் ,எந்த விலங்குகளுக்கும்
பிராணிகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை .
மனிதனின் வாழ்வு ஒன்றுக்கே ,வாழும் போதே வாழும் தன்மை , முறைக்கொண்டு
இத்தகைய பிறவிப பிணியில் இருந்தும் ,
பரிணாம மாற்றத்தில் இருந்தும்
விடுபடும் வாய்ப்பு இருக்கிறது .

அப்படி மாறியவர்கள் இதற்க்கு முன் உண்டா ?
அவர்கள் எப்படி மாறினார்கள் என்ப்தை
தாங்களேக் கூறி இருக்கிறார்களா ?என்றால் ,
இல்லாமலா இவ்வளவும் இத்தனை
நாளாகப் பேசிவருகிறோம் ?

கர்ம வினையையும் ,பிறவி சங்கிலியையும்
,பரிணாமச் சுழற்சியையும் தாண்டி அதில் இருந்து
விடுபட்டு அதுவாகவே மாறும் ,மூலத்தை அறியும் வித்தையை
என்றும் ஜீவிதமாக வாழ்ந்து ,
நம்மை வழிநடத்திவருபவர்களையே
நாம் சித்தர்கள் என்கிறோம் .
சித்தத்தை அறிந்தவர்களே ,வென்றவர்களே சித்தர்கள் .

நம் மரபு படி சித்தர்கள் என்றால் 18 பேர்கள்தானே
அப்போது இத்தனை ஆயிரம் ஆண்டுகள் மனித்த குலத்தில் ,
வெறும் 18 பேர் தான் பிறவியை அறுத்து
புறப்பட்ட இடமாகிய ,மூலமாகவே மாறும் வாய்ப்பு பெற்றார்களா ?என்றால்
அது அப்படி இல்லை ?

சித்தர்கள் அநேகம் கோடி பேர் உண்டு ,
அவர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் திருக்கூட்டம் .

நமது வானவியியலில் ,ஜோதிட சாஸ்திரத்தில்
மொத்தமே 27 நட்சத்திரம் மட்டுமே உள்ளதாக
கணக்கிடுகிறோம் ,ஆனால் தினம் தினம்
அண்ணாந்து பார்த்தால் வெறும் கண்களுக்கே ,
தெளிவான வானில் ஆயிரக்கணக்கில் நட்சத்திரங்கள் தெரிகின்றதே ,
அப்படி என்றால் நமது ஜோதிட சாத்திரம் என்பது
தவறான கணகெடுப்பா ? அது அறிவியலுக்கு அப்பர்ப்பட்டதா என்றால் .
ஜோதிட சாஸ்திரத்தில் குரிப்பியாப்படும் நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றும் பல ஆயிரம் நட்சத்திரங்கள் அடங்கிய
நட்சத்திர கூட்டங்கள் .
அவைகளுக்கு அஸ்வனி .பரணி என ஒவ்வொரு
கூட்டத்திற்கும் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது .

அவ்வாறே 18 சித்தர்களும் ,ஒரு குறியீடே .
அதில் ஆயிரம் ஆயிரம் சித்தர்கள் அடக்கம் .

அகஸ்த்யர் .மச்சமுனி ,கோரக்கர் என்பவை யாவையும் ,
தனியேயும் , ஒருவரையும் அவர்தம் மரபில் வந்த பல ஆயிரம் சித்தர்களையும்
சேர்த்தே குறிக்கும் ஒரு மந்திரத் திருநாமம் .

சித்தர்கள் என்பவர்கள்
கர்மவினையை புரிந்து அதன் கணக்கை அறுக்க அறிந்தவர்கள்
சேரும் இடம் அறிந்து அதுவாகவே மாறியவர்கள் /
மரணமில்லா பெருவாழ்வு ,தனது இலக்கை அடையும் வரை
தனது விருப்பப்படி வாழத்தெரிந்தவர்கள்.
வாழும் வரை இளமையாக ,முதுமை இன்றி இலக்கை அடைய வழிமுறை தெரிந்த
காயத்தை கல்ப்பமாக மாற்றி கல்ப்பகாலம் வாழ்க்கற்றவர்கள் ..
காயகல்ப்பம் அறிந்தவர்கள் .
வாழும் காலம் எல்லாம் எத்தகைய நோயும் வாராமல் காக்க
சித்தவைத்தியம் எனும் சிறப்பான வைத்தியம் அறிந்தவர்கள் .

தனது உடம்பை ,அதன் பண்பை மாற்றி ,உயர்வடையச் செய்வதுபோல்
அத்தனை தாழ்ந்த உலோகங்களை ,பொருள்களை ,அவைகளின்
பண்பை மாற்றி உயர் உலோகமாக மாற்றதெரிந்த ரசவாதிகள் .

அத்தனையும் சிறப்பாகச் செய்ய ஆற்றல் பெற
மணி மந்திர ஔஷதம் எனும் உயர் மார்க்கம் அறிந்தவர் .
வாழ்க்கை எனும் சமரில் வெல்ல
இலக்கினை அடைய அத்தனை ஆயுதமும் ,
அத்தனை வியுகங்களையும் சரிவர தெரிந்தவர்கள்

அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக
ஏடுகளில் நமக்காக அடுக்கடுக்காக
நம் பால் கொண்ட அன்பினால்
விரிவாக தந்து சென்றவகள் .

ஆனால் நாம் தான் அவர்களை எழுதிய ஏடுகளை .
அதன் பெருமையும் அவசியமும் புரியாமல் ,
கல்வி எனும் பெயரால் வெறும் தகவல்களை
சேர்த்து ஒரு டேட்டா சேமிப்பு நிலையமாக நம்மை மாற்றி
அதைவைத்து தேடி நிதம் சோறு தின்று வாழ்வைப்போக்கி வருகிறோம் .
வாழ்க்கை கல்வி பயிலாமல் வீணே வாழ்கிறோம் .

இனியும் அறிவு என்பது வெறும்
அறிவது மட்டுமாக இருக்கக்கூடாது .
அறிவு புரிதலாக அனுபவமாக மாறவேண்டும் .

தன்னை அறியும் அறிவே உயர்தரமான
அறிவு என உணரவேண்டும் .
இதை தெரிந்து பயனில்லை .
தெரிந்தால்அது தகவல் மட்டுமே ஆகும்
உணர்ந்தால் மட்டுமே அது அனுபவமாகும் .

மீதியை விரைவில் சேர்ந்தே சிந்திப்போம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்





றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Mar 13, 2013 10:32 am

நல்லது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Jun 11, 2013 4:49 pm


எனக்குப் புரிந்தது இதுவே -41

-அண்ணாமலை சுகுமாரன்



""தன்னை அறியும் அறிவே உயர்தரமான
அறிவு என உணரவேண்டும் .
இதை தெரிந்து பயனில்லை .
தெரிந்தால்அது தகவல் மட்டுமே ஆகும்
உணர்ந்தால் மட்டுமே அது அனுபவமாகும் .

மீதியை விரைவில் சேர்ந்தே சிந்திப்போம் .""

இவ்வாறு கடந்த மார்ச் 13 அன்று பதிவிட்ட பிறகு "விரைவு "என்பதற்கு இத்தனை நாள் -அல்லது காலம் ஆகும் என்பது அப்போது எனக்குப்புரியாமல் போய்விட்டது .

-காலில் முள் குத்தியதாக எண்ணி சிறிய வைத்தியங்கள் பார்த்துவந்த நான்

அது இடது உள்ளங்கால் முழுவதும் கட்டியாக விரைவாகப்பரவி ,
மருத்துவர்களை பதறவைத்தது விட்டது .
ஏப்ரல் ஒன்றாம் தேதி உள்ளங்காலில் அறுவை சிகிச்சை செய்து பத்து நாட்கள்
மருத்துவ மனை வாசியாக்ஆக்கி முடக்கிப்போட்டுவைத்தது

வீட்டுக்கு வந்தும் , நாளும் ஒரு புதியகட்டும் தினமும் ,
காலை சுரண்டி சுத்தம் செய்யும் மருத்துவர்களின் பிடியில் மேலும் நாட்கள் கடந்தன .

இத்தனையும் மிகு சக்கரையின் விளைவு என்றும் சிறிது தாமதித்திருந்தாலும் ,
காலை இழந்திருப்பேன் என மருத்துவர்கள் வேறு தினமும் என் குடும்பத்தினரை
நன்றாக மிரட்டி வந்தனர் .
காலில் தினமும் புதியகட்டுடன் நோயாளியாக எனது மனைவியாலும் ,
மருத்துவர்களாலும் பத்திரமாகப் பேணப்பட்டு வந்த நான்
திடீரென "ரோலை "மாற்றிக்கொள்ளும்
விதி யும் மாற்றமும் வலிய வந்து சேர்ந்தது .
மே 14
அன்று முதல் என் மனைவி நோயாளி ஆனாள்
நான் கவனித்துக்கொள்ளும் அட்டெண்டர் ஆனேன் .

எனக்கு பழங்கள் வாங்க சாலைக்கு சென்ற எனது மனைவியை ,
சாலையிலே அந்தக்காலைவேளையில்
கோணலும் மாணலும் ஆகவந்த இரண்டு மாணவிகள் ,
இருசக்கரவாகனத்தில் வந்து
மோதிததள்ளி முன் கையில் ,
இடது கையில் இரண்டு எலும்புகள்
முற்றிலுமாக முறிந்து போகச் செய்து விட்டனர்

விட்டில் இருந்து 100 அடியில் ஏற்ப்பட்ட இந்த விபத்தினால் ,
இடது பாதத்தில் நிததிய கட்டுடன்
நிம்மதியாக இருந்த என்னை ,
இடது கரத்தில் எலும்பு முறிந்த
என் மனையைக்காக்க விரைதொடச் செய்து விட்டது .

கால் கட்டுடன் ஓடிச் சென்று ,மனைவிடம் சேர்ந்தேன்

உடனே தீவிர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சையில் இருந்த
என்மனைவிக்கு ,
மே 20 அன்று இரண்டு உலோகப்பட்டைகள் ,
புதிதாக எலும்பில் இணைத்து .
இரும்புக்கை கொண்டவளாக
மாற்றி அமைத்துவிட்டது .

மே மாதம் 31 தேதிவரை "ரோல் "மாற்றம்
வெற்றிகரமாக நடை பெற்றது .

எனது மனைவி எனது அறுவை சிகிச்சைக்காக
மருத்துவ மனையே கதியாகக் கிடந்ததுபோல்

நானும் மருத்துவனை வாசியாகஅவருக்காக காத்துக்கிடந்தேன்
ஆனாள் நோயாளியாக இல்லை
noyaaliyai கவனிக்கும் அட்டெண்டராக .

காலில் கட்டுடன் வலம் வந்த என்னை நோயாளி என்று நினைத்து எத்தனையோ
நகைச்சுவைகள் மருத்துவ மனையில் நடை பெற்றன .

நானும் என்னை பார்க்க வரும் நண்பர்களுக்கு ,உறவினருக்கு எல்லாம் ,

"ஒன்று வாங்கினால் ஒன்று ப்ரீ " எனும் ஜவுளிக்கடை ஆபர் போல்

ஒருவரை பார்க்க மருத்துமனை வந்தால்
இருவரையும் பார்த்துக்கொள்ளலாம்
என்று சிறப்பு "ஆபர்" அறிவித்தேன் .

எப்படியோ நானும் என் மனையும் இப்போது வீட்டில் இருக்கிறோம்
எனது கால் கட்டு இப்போது காலில் இல்லை .
ஆனால் எனது மனைவியின் கைகட்டு இன்னமும்
மூன்று மாதங்கள் உண்டு .
எனக்குக் கட்டுப்போட்ட" கம்பொண்டர்"
இப்போது எனது மனைவிக்குப்போடுகிறார் .

எல்லோரும் குடும்ப "டாக்டோர் " தான் வைத்துக்கொள்வார்கள் .
நாங்கள் தற்காலிகமாக குடும்ப கம்பொண்டர் வைத்துள்ளோம் .

எனக்கும் என்மனைவியிடம் பெற்ற உதவிகள் \உபச்சாரங்கள்
அத்தைனையும் திருப்பிச் செய்ய வாய்ப்பு வாய்த்தது .
கணக்குகள் டாலி செய்ய வாய்ப்பா இது ?
அன்பை தெரிவிக்கும் வாய்ப்பா இது ?
எப்படியோ ஆழமான அனுபவங்கள் ..

அத்தனையும் அனுபவம் என்றால் ,
இதில் பெற்றது அதிகம் ,உணர்த்தும் அதிகம் .

இப்போது மனதில் தெளிவு ,
இடையில் ஜூன் 9 வந்து எனக்கு இன்னும்
ஓர் ஆண்டு முடிந்துவிட்டது என நினைவூட்டியது .

இனி எனக்குப்புரிந்ததை ,
தன்னை அறியும் அறிவை
அது எத்தகயது எப்படிப்பட்டது என்பவைகளை
விளக்கமாக காண்போம்
.
அன்பர்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்







sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jul 14, 2013 10:30 pm

எனக்குப் புரிந்தது இதுவே -42

-அண்ணாமலை சுகுமாரன்


" தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனருளாலே "
--திருமந்திரம்
முன்வினையின் முடிசுகளை அவிழ்ப்பதற்க்கும்
பின்னே வரப்போகும் வினைகளையும் பிடித்து
பிசைவதும் ,அதை வடிவமைப்பதும் தன்னை
அறியும் ஞானிளினால் மட்டுமே இயலும்
என திருமந்திரம் இயம்புகிற்து.



தன்னை அறிதல் என்றால் என்ன ?
நம்மைப்பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே,
நமது பெயர் நமக்குத்தெரியும் ,என்னபடித்திருகிறோம் ,
என்ன வேலை பார்க்கிறோம் அத்தனையும் நாம்தான் அறிவோமே,
இன்னும் என்ன தன்னை தான் அறிவது என்ற ஐயம் அடிப்படை நிலையில் இருக்கும் சிலருக்கு எழத்தான் செய்யும் .
இன்னும் நமக்கு "தன்னைப்பற்றி" அறியாதது பலதும் இருக்கிறது .
தன்னை என்பது தனது உடலையோ ,நமது தற்ப்போதய நிலையைமட்டும்
அறிதால் தன்னை முழுவதும் அறிந்தது ஆகுமா ?

"உதிக்க நின்றது எவ்விடம் ?
ஒடுங்குகின்றது எவ்விடம் ?
கதிக்க நின்றது எவ்விடம் ?
கண்ணூறக்கம் எவ்விடம் ?
மதிக்க நின்றது எவ்விடம் ?
மதிமயக்கம் எவ்விடம் ?
விதிக்க வல்ல ஞானிகள் விரித்துரைக்க வேணூமே."

சிவவாக்கியர் எனும் சித்தர் ,நமக்காக வேண்டி , நாம் அறியவேண்டிய
அத்தனை கேள்விகளையும் அடுக்கி நம் தேடுதலை ஒருவாறு தொடங்கி வைக்கிறர்ர்.

மனம் என்று ஒன்று இருப்பதலேயே மனிதன் என்று அழைக்கபபடும்
நாம் அந்த மனம் எங்கே பிறக்கிறது ?
,எங்கே ஒடுங்குகிறது என்று சரிவர ஆய்தோமா?
உயிர் என்று இருப்பலேயே ஆற்றலுடன் மனிதனாக உலவிவரும் நாம் .
அந்த உயிர் எப்படி உதித்தது ?,எங்கனம் நமது உடலில் புகுந்தது ?
நமது உடலில் எங்கே அதனது இருப்பிடம் ?
எப்போது உடலை விட்டு நீங்குகிற்து ?
போகும் உயிருடன் உடன் செல்வது எது ?
மனத்துக்கு மட்டும் தானா பதிவுகள் அந்த உயிருக்கும்
சில பதிவுகள் உண்டா ?

தன்னை அறிதல் என்றால் என்ன ?
நம்மைப்பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே,
நமது பெயர் நமக்குத்தெரியும் ,என்னபடித்திருகிறோம் ,
என்ன வேலை பார்க்கிறோம் அத்தனையும் நாம்தான் அறிவோமே,
இன்னும் என்ன தன்னை தான் அறிவது என்ற ஐயம் அடிப்படை நிலையில் இருக்கும் சிலருக்கு எழத்தான் செய்யும் .
இன்னும் நமக்கு "தன்னைப்பற்றி" அறியாதது பலதும் இருக்கிறது .
தன்னை என்பது தனது உடலையோ ,நமது தற்ப்போதய நிலையைமட்டும்
அறிதால் தன்னை முழுவதும் அறிந்தது ஆகுமா ?

"உதிக்க நின்றது எவ்விடம் ?
ஒடுங்குகின்றது எவ்விடம் ?
கதிக்க நின்றது எவ்விடம் ?
கண்ணூறக்கம் எவ்விடம் ?
மதிக்க நின்றது எவ்விடம் ?
மதிமயக்கம் எவ்விடம் ?
விதிக்க வல்ல ஞானிகள் விரித்துரைக்க வேணூமே."

சிவவாக்கியர் எனும் சித்தர் ,நமக்காக வேண்டி , நாம் அறியவேண்டிய
அத்தனை கேள்விகளையும் அடுக்கி நம் தேடுதலை ஒருவாறு தொடங்கி வைக்கிறர்ர்.

மனம் என்று ஒன்று இருப்பதலேயே மனிதன் என்று அழைக்கபபடும்
நாம் அந்த மனம் எங்கே பிறக்கிறது
,எங்கே ஒடுங்குகிறது என்று ஆய்தோமா?
உயிர் என்று இருப்பலேயே ஆற்றலுடன் மனிதனாக உலவிவரும் நாம் .
அந்த உயிர் எப்படி உதித்தது ?,எங்கனம் நமது உடலில் புகுந்தது ?
நமது உடலில் எங்கே அதனது இருப்பிடம் ?
எப்போது உடலை விட்டு நீங்குகிற்து ?
போகும் உயிருடன் உடன் செல்வது எது ?
மனத்துக்கு மட்டும் தானா பதிவுகள் அந்த உயிருக்கும்
சில பதிவுகலள் உண்டா ?
மனம் என்று ஒன்று இருப்பதலேயே மனிதன் என்று அழைக்கபபடும்
நாம் அந்த மனம் எங்கே பிறக்கிறது ?
எங்கே ஒடுங்குகிறது என்று ஆய்தோமா?
உயிர் என்று இருப்பலேயே ஆற்றலுடன் மனிதனாக உலவிவரும் நாம் .
அந்த உயிர் எப்படி உதித்தது ?,எங்கனம் நமது உடலில் புகுந்தது ?
நமது உடலில் எங்கே அதனது இருப்பிடம் ?
எப்போது உடலை விட்டு நீங்குகிற்து ?
போகும் உயிருடன் உடன் செல்வது எது ?
அதுவரை வாழ்க்கையை ஆட்டிப்படைத்த மனம் எனும் துணையுடன்
இந்த பிறவியில்பெற்ற புதிய பதிவுகளுடன் ,இவ்வாழ்வில்அனுபவித பழய பதிவுகளின் கழிவையும்கூடப்பெற்ற
ஜன்மங்கள் தோறும் மனம் எனும் காணாப்பொருளும் கூடவே
உயிருடன் செல்கிறது.

மனத்துக்கு மட்டும் தானா பதிவுகள்
அந்த உயிருக்கும்
சில பதிவுகள் உண்டா ?

தாயின் உடம்பில் கருதரிக்கும் போது,புதியஉயிருடன் சேர்ந்து
சென்ற பிற்வியில் இடம் பெற்ற மனதின் தொடர் பதிவுகளும்
இணைந்தே புதிய பிற்வியாக் வடிவம் பெறகிற்து .
மனத்தின் முந்தய பதிவுகளும்,உயிரின் பதிவுகளும் சேர்ந்தே
புதிய வாழ்வின் பாதயை நிர்ண்யம் செய்கிற்து.

96 விரகடை அளவு உள்ள் இந்த உடலானது
96 தத்துவங்களைக் இயக்கமாகக் கொண்டது

மூலாதாரத்தில் இருந்து பிடரிவரை
47 1/2 விரகடை அளவான முட்டுத் தூண்
கொண்டுஎழுப்பிய ஊண் உடம்பு ஆலயம்
47 1/2 விரகடை அளவான இந்ததூணே
முதுகெலுபு எனும் வீனா தண்டம்.

இருபுற்மும் அழகுற் எலும்புகளை அடுக்கி
72,000 நரம்புகலாள் அதை இறுக்கி ,
360 பலம் மாமிசத்தை குருதி எனும்
நீரால் கலந்து கட்டப்பட்ட சுவருக்கு,
3 1/.2 கோடி ரோமக்கற்றையால் ஆன கூரைக் கொண்டது..
அந்த வீட்டுக்கு ஒன்பது வாசல் ,
( 2 கண் ,2 செவி, 2 மூக்குத் துளை,வாய்
மலவாவாசல், கருவாசல் ஆக 9)

கர்மேந்திரம், ஞானேந்திரம், தன்மாதிரைகள்,
ஆகிய வினை துணைகள்

உடனிருந்தே கெடுக்கும் பகையாளிகள்
காமம் ,குரோதம், மதம் ,மாச்சரியம்,லோபம்
போன்றவையும்.
நாள் ஒன்றிக்கு 21600சுவசமும் கொண்ட உடல் இது.

இத்தனை புள்ளிவிபரங்கள் உடலைப் பற்றி அறிதல் தான் தன்னை அறிதலா ?
நிச்சயம் இல்லைதான்..

பிற்கு தன்னை அறிய இன்னும் எதையெல்லாம்
அற்யவேண்டும் என்பதை அடுத்தப் பகுதியல்
பார்க்கலாம்.
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்.




















யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 10:31 pm

வாங்க சுகுமாரன் - கொஞ்ச நாளா காணோமே!!!




sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jul 14, 2013 10:39 pm

முதல் பதிவை கொஞ்சம் பாருங்களேன்
எனது தாமததின் காரணம் புரியுமே .
இனி அடிக்கடி வருவேன் இனியவரே
அன்பிற்க்கு நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Mon Jul 15, 2013 9:08 am

அருமையான பதிவு ஐயா ........சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jul 15, 2013 6:21 pm

நன்றி திரு மணிகண்டன் ,
நீங்கள் எல்லாம் படிக்கிறீர்கள் என்கிறசெய்திதான்
எனக்கு ஊக்கம் தரும் டானிக்

படிப்பவர்களிடம் இருந்து பாராட்டுகள் மட்டுமல்ல விவாதமும் ,ஐயமும்
எனக்கு விருப்பமே ,அப்போதுதான் எனது எழுதும் எழுதும்
பாணியையும் தேவையெனில் மாற்றிக்கொள்ள முடியும் .
மீண்டும் நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

Sponsored content

PostSponsored content



Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக