புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Poll_c10இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Poll_m10இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Poll_c10இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Poll_m10இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Poll_c10 
375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Poll_c10இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Poll_m10இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sun Jan 23, 2011 7:58 am

கடந்த செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சில் இண்டர்லோக் நாவல் பற்றி நடந்த கூட்டத்தில் அந்நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மஇகாவால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள், நேற்று மாலை மஇகா தலைமையகத்தில் கூடி அந்நாவல் மாணவர்களின் பயனீட்டிற்கு உகந்ததல்ல என்பதால் அது மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

நேற்று அக்கூட்டம் மஇகா கல்விக்குழுவின் தலைவர் டாக்டர் டி. மாரிமுத்துவின் தலைமையில் நடந்தது.

கல்வி அமைச்சில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த டாக்டர் எஸ். குமரன், டாக்டர் ஆறு நாகப்பன், எஸ்.வி. லிங்கம் ஆகியோருடன் மலாயா பல்கலைக்கழக் இந்திய ஆய்வியல்துறையைச் சேர்ந்த கிருஷ்ணன் மணியம், பாட மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த இஎம் சகாதேவன் மற்றும் சில அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய செயற்குழு கூட்டப்பட வேண்டும்

இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவர்களின் முன்னைய கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துதல் அக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மாலை மணி 5.30க்கு தொடங்கி இரண்டு மணி நேரத்திற்கு மேல் அந்நாவல் மீண்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சின் கூட்டத்தில் ஒருமித்த மனதுடன் எடுத்த முடிவை மீண்டும் விவாதித்து அம்முடிவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இம்முடிவை மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேலுக்கும் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்திற்கும் தெரிவிக்குமாறு டாக்டர் மாரிமுத்து கேட்டுக்கொள்ளப்பட்டார். தொடர்பு கொண்டபோது இம்முடிவை குமரனும் நாகப்பனும் உறுதிப்படுத்தினர்.

இக்கூட்டம் இன்னொரு முக்கியமான முடிவையும் எடுத்துள்ளது. மஇகா அதன் மத்திய செயற்குழுவின் கூட்டத்தை நடத்தி இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அங்கீகாரம் அளித்து அதனைப் பகிரங்கமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது அம்முடிவாகும்.

“மஇகா ஆளுங்கட்சியின் பங்காளி. இவ்விவகாரத்தில் அதன் முடிவு முக்கியமானதாகும். அதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது”, என்று டாக்டர் குமரன் கூறினார்.

“இவ்விவகாரம் ஒட்டுமொத்த சமூகத்தையும் சார்ந்தது. மஇகா சமூகத்தைப் பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வதால் இவ்விவகாரத்தில் அதன் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்”, என்பதை டாக்டர் ஆறு. நாகப்பன் ஆமோதித்தார்.

இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் மஇகா பின்வாங்கினால், “தாங்கள் இவ்விவகாரம் சம்பந்தமான எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளப்போவதில்லை”, என்று குமரனும் நாகப்பனும் அக்கூட்டத்தில் அறிவித்தனர். 'மலேசியா இன்று'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 23, 2011 9:05 am

இதுவரை இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்ளும் நிலைப்பாட்டை அரசு கொண்டிருக்கவில்லை, இனிமேலும் அவர்கள் மீட்டுக் கொள்ளப் போவதில்லை!

துணைப்பிரதமரும், கல்வியமைச்சருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தியுள்ளபடி சிறு மாற்றங்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். மலாய் இனத்தின் வலிமையை நிலைநிறுத்தவும், மலேசிய இந்தியர்களால் மலேசியாவில் எதையும் மலாய்க்காரர்களுக்கு எதிராக செய்துவிட முடியாது என்பதை நிரூபிக்கவும் இந்தப் புத்தகத்தை தடை செய்ய மாட்டார்கள்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Sun Jan 23, 2011 9:39 am

சிவா wrote:இதுவரை இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்ளும் நிலைப்பாட்டை அரசு கொண்டிருக்கவில்லை, இனிமேலும் அவர்கள் மீட்டுக் கொள்ளப் போவதில்லை!

துணைப்பிரதமரும், கல்வியமைச்சருமான டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வலியுறுத்தியுள்ளபடி சிறு மாற்றங்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். மலாய் இனத்தின் வலிமையை நிலைநிறுத்தவும், மலேசிய இந்தியர்களால் மலேசியாவில் எதையும் மலாய்க்காரர்களுக்கு எதிராக செய்துவிட முடியாது என்பதை நிரூபிக்கவும் இந்தப் புத்தகத்தை தடை செய்ய மாட்டார்கள்!
முற்றிலும் உண்மை அண்ணா!!!! ஒற்றுமையில்லா சமூகம் ஒடுக்கப்படுவது ஆச்சிரியமா என்ன? மனவேதனை தான் மிஞ்சுகிறது....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 11:36 am

தகவலுக்கு நன்றி நண்பரே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 23, 2011 11:44 am

sivasangker wrote:முற்றிலும் உண்மை அண்ணா!!!! ஒற்றுமையில்லா சமூகம் ஒடுக்கப்படுவது ஆச்சிரியமா என்ன? மனவேதனை தான் மிஞ்சுகிறது....

மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! நாம் எப்பொழுதுமே ஒற்றுமையில்லாத இனமாகவே வாழ்ந்து வருகிறோம்! ஒற்றுமையாக இணைந்து செயல்படும்வரை தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழர்கள் ஒடுக்கப்படுவார்கள், நசுக்கப்படுவார்கள்! ஏனெனில் உலகத் தமிழர்கள் கேட்க நாதியற்ற இனமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கைத் தமிழனுக்கு பிரச்சனை என்றால் தமிழ்நாட்டிலுள்ள தமிழனுக்கு வலிப்பதில்லை, அதுபோலத்தான் மலேசிய தமிழர்களின் நிலையும்.

உலகத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்றால் நமக்கென்று தனி நாடு வேண்டும்.

இண்டர்லோக் நாவல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும்: மலேசிய இந்தியர் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Fri May 06, 2011 3:35 pm

மிகுந்த சர்ச்சையை உண்டுபண்ணிய ஐந்தாம் படிவ இலக்கிய பாடநூலான இண்ட்ர்லோக் மீது இன்று மூன்றாவது நாளாக பினாங்கு சட்டமன்றத்தில் விவாதங்கள் தொடர்ந்தன.

இன்று மாநில அரசு, அந்நூலை மாநில நூலகத்தில் பாடநூல் வரிசையில் வைப்பதற்குத் தடை விதித்து அதன்மீது தனக்குள்ள வெறுப்பைக் காண்பித்துக் கொண்டது.

அம்முடிவு நேற்று மாநில ஆட்சிக்குழுவில் செய்யப்பட்டதாக துணை முதல்வர் II பி.ராமசாமி கூறினார். அம்முடிவு விரைவில் நூலகத்துக்குத் தெரிவிக்கப்படும்.

மாநில .அரசு அந்நூலுக்குத் தடை விதிக்கவில்லை என்றும் நூலகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள பாடநூல் பகுதியில் அது இடம்பெறாது என்றும் ராமசாமி கூறினார்.
அந்நூல் எல்லா இனங்களையும் இழித்துரைக்கிறது என்றாலும் அம்னோ குறிப்பாக துணைப் பிரதமரும் அம்னோ துணைத்தலைவருமான முகைதின் யாசின் அதற்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறார் என்றவர் குறிப்பிட்டார்.

“பிஎன் இந்த நூலுக்காக வாதாடுவது ஏன்…(மலாய்உரிமைக்காகப் போராடும் அமைப்பான) பெர்காசாவைக் கண்டு அது அஞ்சுகிறதா?”, என்றவர் வினவினார்.

நூலாசிரியருக்கு மலேசியாவின் பல்வேறு இனங்களின் வரலாறுகூட சரியாகத் தெரிந்திருக்கவில்லை என்று முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியரான ராமசாமி குறிப்பிட்டார்.

அந்த நூல் எஸ்பிம் மாணவர்களுக்கு இலக்கிய பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் அதிர்ச்சியளிக்கிறது. மற்றபடி அந்நூலால் வேறு பிரச்னை இல்லை என்றாரவர்.

ஆர்எஸ்என் ராயர் (டிஏபி-ஸ்ரீ டெலிமா) பள்ளியில் இலக்கியம் பயின்றது உண்டு என்றும் எஸ்பிம் தேர்வில் இலக்கியத்தில் ‘ஏ’ பெற்றுத் தேர்ச்சி பெற்றதாகவும் கூறினார். ஆனாலும் இண்டர்லோக் போல் மோசமான ஒரு நூலைக் கண்டதில்லை என்றார்.

அந்நூலின் சில பகுதிகளை வாசித்துக் காண்பித்த அவர் இனங்களைப் பற்றி நூலாசிரியர் நல்லதாக எதுவும் சொல்லவில்லை என்றார்.

“இந்நூல் சீனர்களும் மலாய்க்காரர்களும் எதிரிகள் என்று காண்பிக்க முயல்கிறது. இதை நாம் அனுமதிக்கலாமா? குந்தா கிந்தே பற்றிய நூலைப் போல் இருக்கிறது….”என்றார்.

குந்தா கிந்தே, ரூட்ஸ் என்னும் நாவலின் மைய பாத்திரம் அக்கால அமெரிக்காவில் நிலவிய அடிமைவாழ்க்கையைச் சித்திரிக்கும் அந்நாவலை எழுதியவர் அலெக்ஸ் ஹாலி.

ஜஹாரா ஹமிட்(பிஎன் -தெலுக் ஆயர் தாவார்) குந்தா கிந்தா பற்றிய நூலிலும் பல விசயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆப்ரிக்க சமூகத்தினர் அதற்காக ஆத்திரப்படவில்லை என்றார்.

“இவையெல்லாம் வரலாற்று உண்மைகள். அவற்றிலிருந்து கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இந்தியர்கள் மலேசியாவில் இப்போது வளமாக வாழ்கிறார்கள்….இது ஒரு நல்ல செய்திதானே.

“இந்தியர்கள் அன்று தங்களைப் பிணித்திருந்த சங்கிலியிலிருந்து விடுவித்துக்கொண்டிருக்கிறார்கள். அன்றிருந்த நிலையையும் இன்றுள்ள நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து அதை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் அந்நூல் கவனப்படுத்துகிறது”, என்று ஜஹாரா கூறினார்.

'மலேசியா இன்று'

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக