புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
15 Posts - 71%
heezulia
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
3 Posts - 14%
Barushree
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
4 Posts - 5%
heezulia
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Barushree
தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்ஷன் கவிதைகள்


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 12:56 pm

First topic message reminder :

காதல்


காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது

காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா

காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே

இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே

உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே


j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:30 pm

அகதிமுகாமில் ஓர் அபலைப்பெண்





அழுகையும் கண்ணீரும்
இறைவன் இவளுக்களித்த
இலவச இணைப்புக்களோ?

இருபத்தைந்து வயதுப் பெண்ணுக்கு
இரவுகள் கனவுகளோடு பயணிக்கும்
ஆனால் இவளுக்கு வாழ்க்கையெனும் பயணமே
கனவாகிப் போய்விட்டது.

பள்ளியில் அன்று துள்ளித்திரிந்த முகம்தான்
ஆனால் இன்று அள்ளி முடிய மறந்திட்ட தலைமுடியோடு
பிள்ளையைக் கையில் அள்ளியணைத்தபடி
வெயிலில் நிற்கிறாள் ஒருவேளை உணவுக்காய்.

தெற்கிருந்து வடக்குநோக்கி
வேகமாக வீசிய யுத்தப்புயல் இவளது
குங்குமத்தையுமல்லவா அடித்துச் சென்றுவிட்டது.

அவள் கன்னங்களில்
காய்ந்துபோன கண்ணீர்த்துளியின் எச்சங்கள்
அவள் சோகத்தைச்
சொல்லாமல் சொல்லியது.

முன்பெல்லாம் பள்ளியில்
என்னையிவள் கண்டுவிட்டால்
நாணப்பட்டு கிளைகளுக்குப் பின்னால்
ஒழிந்துகொள்ளும் மலரைப்போல
தன் தோழிபின்னால் ஒழிந்துகொள்வாள்

ஆனால் இன்று
என்றோ தொலைந்துபோன புன்னகையை
ஞாபகித்து உதிர்த்துவிட்டு நிறகிறாள்.
ஏனெனில் உணவுக்காக வரிசையில்

காத்துநிற்கவேண்டுமென்ற
தமிழனின் தலைவிதிக்கு
அவள் மட்டும் விலக்கா என்ன?

சினேகிதியே! என்னால் முடிந்தது,
உனக்காகவும் என் அனுதாபத்தின் ஒரு பகுதியை
பங்குபோடத்தான் முடியும்.

வெற்றிக் கழிப்பில் போதையாடும்
சிங்களச் சகோதரர்களே உங்கள் கழியாட்டத்திற்கு
எங்கள் ஈழம்தான் “கொலோசியமா”?
விலையாக எங்கள் பெண்களின்
குங்குமத்தையும் பூவையுமா எடுக்கவேண்டும்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:31 pm

விடுதலை வேண்டும்



விடுதலைவேண்டும்
இவ்வுலகில் இருந்து
விடுதலைவேண்டும்
எனக்கு!

என்னைக் கட்டுப்படுத்தும்
இவ்வுலகில் இருந்து
விடுதலை வேண்டும்
எனக்கு!

அன்பு என்னைக்
கட்டுப்படுத்துகிறது!
ஆசை என்னை
திசைத்திருப்புகிறது!

ஆசையை
அடக்கி விடலாம்
அல்லது
அகற்றி விடலாம்!
அன்பை
என்ன செய்வது?

என்னைப்பற்றி
அறிந்துக்கொள்ள
எனக்கு
அவகாசம் கொடுப்பதில்லை!

என்
அறிவு ஆற்றல்
அனுபவம்
எல்லாவற்றிற்குமே
சவாலாக இருக்கிறது
இந்த அன்பு!

வேண்டாம் இனிமேல்
இவைகள்
விடுதலை வேண்டும்
இவ்வுலகில் இருந்து
விடுதலை வேண்டும்
எனக்கு!

அன்பும் ஆசையும்
இல்லா உலகம் வேண்டும்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:32 pm

சொல்லிவிடு




எனை வெட்கப் பூக்கள்
சூடிக்கொள்கின்றன
உன் கண்களை நேராய்
சந்திக்க நேரும் தருணங்களில்!

பெண்மையே....!
உனக்குள் எத்தனை மென்மை
வியந்து போகின்றேன்
விடை காணாமலும் போகின்றேன்!

உன் குரலை கடன் வாங்கித் தான்
குயில்களின் கானமோ?
உன் நடையின் நளினம் வாங்கித் தான்
மயில்களின் நடனமோ?

உன் ஒவ்வொரு அசைவும்
அகிலத்தின் அசைவாக
உன் ஒவ்வொரு செயலும்
அலை மோதும் கடலாக
எனை ஆட்சி செய்கின்றன!

என்னவளே....!
எத்தனை நாட்கள் தூரமாய்
உனை அணைப்பேன்?
உன் பார்வைக் கணைகள் பட்டு
"பியுஸ்" இழந்தும்
பிரகாசமாய் ஒளிக்கிறது
என் நாட்கள்!

பிரபஞ்சத்தின் பேரழகி நீயில்லை தான்
ஏனோ;
பிரம்மை இவன் நாட்களை
ஆட்சி செய்யும் பேரழகி ஆகிப்போனாய்!

மௌனத்தால் மொழி பேசும்
என் மங்கையே;
உன் மௌனப் பூட்டை உடைத்து
மனதார சொல்லிவிடு
ஓரு வார்த்தை
"ஐ லவ் யூ" என....

எனக்கானவள் நீயென்பதை
என்றோ உணர்ந்து விட்டேன்
உனக்கானவன் நானென்பதை
நீ அறியும் நாளெதுவோ?



அழுகை அழுகை அழுகை

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:32 pm

திசைமாறிய பறவைகள்


சிறகிரண்டும் வலிக்கிறதே...!
இறகொதுக்கி
அமரலாமா...?
மரங்களே...!

தொலைதூரம்
பறந்துவிட்டோம்
தொலைத்து விட்டோம்
முகவரியை..!

இளைப்பாறிச் செல்லலாமா?
இருபதாண்டுப் பயணம்
இது ..!

இரத்தக் கறையோடு
வந்த பறவைகளே...!
யுத்தம் செய்து விட்டா
வந்தீர் இங்கே..
கூடுகளைத் தேடாமல்
குனிந்து நிற்பதென்ன..!

காடு நாடெல்லாம்
கயவர் எரித்துவிட்டால்
தயவுக்கு யாரிடம்
போவோம்
மரங்களே ....!
தவிக்கிறோம்
புவிக்கு வந்ததை எண்ணி...!

ஏன் இந்த அவலம்
பறவைகளே.....!
இணைந்து வாழாமல்
இருப்பதும் ஏனோ..?
எரியும் நெருப்பென்று
விலகி நின்றோம்
எரிந்தது எங்கள்
கூரையல்லவா....

எரிவது கண்டு
திரியானோம்
அது
எங்களை மட்டுமா....
தீபமென்னும்
தேசத்தையல்லவா..
தின்றது..

கொலையுண்ட புறாக்களின்
குருதி எம்மில்
பட்டுப் பட்டு
நிறம் மாறியதல்லவா
எம் பறவைக்கூட்டம்

கழுகுக் கூட்டங்களே
கண்டு அலறியதும்...
குழறி ஓடிப்போய்
குமிறி அழுத ஞாபகமும்
வெள்ளைக் கொடிகளின்
வளைவு நெளிவு தன்னில்
தெளிவாகத் தெரியும்

களங்கம் துடைக்க
கழுத்தில் புலிச்சின்னம்
துலங்கி நிற்கையிலே
கலங்கி ஓடி வந்த
வெள்ளைப்புறாக்கள்
கண்ணீரோடு நாம் கதற
கண்மூடிப் போனார்களே..!

கொள்கைப் பறவைகளே..!
கூண்டை விட்டு உமை
மீட்க....
ஆண்டெல்லாம்
அவதிப் பட்டோர்
எங்கே...?

தெற்குநதித் தொந்தரவால்
வடக்கில் அணை
கட்டினோமே.....
அன்னை தேசம்
அதை உடைத்து
அந்நியன் ஆகிவிட்டே......!

எதிர்காலம் இனிமேல்
எப்படியிருக்கும்
பறவைகளே...?

அது தான்
இருளடைந்து விட்டதே
எந்தத் திசையில்
எம் பறவையினம் பறந்ததுவோ..
அந்தத் திசையில்
நாம் பறப்போம்
ஆயுள் வரை மாறமாட்டோம்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:33 pm

கண்ணாளனுக்கு ஒரு மடல்


மறக்க முடியா கண்ணாளனே
எப்படி இருக்கிறாய்?
எப்படி உன்னவள்?
அதாவது சுதந்திராபுரி தேவதை
யாராவது சந்தித்தார்களா?
ஏதாவது கேள்விப்பட்டாயா?

ஒ!!! இது யார் என்று எண்ணுவது புரிகிறது.
நான் சிவசுந்தரி.
தெரியுமா?
உனக்கு தெரியுமோ இல்லையோ
சிவசுந்தரம்பிள்ளை முதலியாரைக் கேட்டுப்பார்
அவருக்கு என்னை நன்றாகவே தெரியும்.

எனக்கு உன் மீது கோபம் அதிகம்.
நான் உன்னிடம் எதிர்பார்த்தது
ஒரே ஒரு வார்த்தையை - அது
என்னைக் காதலிக்கிறாய் என்றல்ல,
வேறு யாரையும் காதலிக்கவில்லை என்ற
பொன் வார்த்தையை

இனி என்ன சொல்ல்வது
எல்லாம் முடிந்தது.
உன்னால் முடிந்தால் ஒரு நண்பனாய்
பதில் எழுது
எல்லா இடமும் தேடிக்களைத்து
இப்படி ஒரு முயற்சி.

கண்டு பிடித்தேன் என்றால்
நான் கொடுத்து வைத்தவள்
முயற்சியின் பலன் கிடைத்த மகிழ்வில்
நிம்மதி கொள்வேன்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:34 pm

வட்டக் கண்ணழகி...


வாழ்த்துக்கள் கூற வந்தோம்
வட்டக் கண்ணழகி...
பாட்டுக்கள் பாட வந்தோம்
பாவை முத்தழகி...

உற்றார் உறவு உலா வர...
உள்ள நட்பு உன்னைப் பாராட்ட...
உனக்குள் ஒரு நாணம்.
அது வந்தே... பல மாதம்.
உன் பாதம் பட்ட பூமி
வைரக்கல்லாய் மாறும்.
உன் பாசம் பட்ட பார்வை
உன்னை நோக்கி நகரும்.

தொட்டில் கட்டி தொட்ட கவி...
தோகை விரித்து ஆடுது பார்...
உனக்குள் பல திறமை
அது வந்ததே... எமக்கு பெருமை.
நீ பேசும் மொழிகள் எல்லாம்.
நீந்திப் போகுது நிலாவிற்கு.
மழையாய் விழும் உன் கவித்துளிகள்.
மண்ணில் மயங்குது மதுவாய்.

அழகிற்காய் அகராதியை புரட்டினேன்
அந்த நேரம் நீ... அவதரித்தாய்
உலக அழகியில் நீயும் ஒருத்தி...
உலகிற்கு மகிமையாம் உன் விருத்தி.
உன்னைப் பெற்ற உயிரும்.
ஊட்டி வளத்த உறவும்.
உதிரம் கலந்த பந்தபாசமும்
உன் உயர்விற்கு உயிர் கொடுக்கும்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:35 pm

அடுத்த பிறவியில்


நம்பிக்கை இல்லை
அடுத்த பிறவியில்
உனக்கு.
ஆனால்
நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க.

மனதில் மட்டுமல்ல
உன்னையே முழுதும்
என்னுள் சுமக்க
உன் தாயாக !

காலை விடியலின்
முதல் உருவம் நானென்றாய்
முதல் உறவாகவே…..
உன் தாயாக !

உன் விழியில் நானென்றாய்
கண்ணுக்குள் வைத்துன்னை
பாதுகாப்பேன்…..
உன் தாயாக !

கவிதைகளின் தொடக்கம் நானென்றாய்
வாழ்க்கையே தொடங்கிவைப்பேன்
உன் தாயாக !

மடி சேர விரும்பினாய்
என் மடியிலே சேர்த்துன்னை
தாலாட்டு பாடுவேன்
உன் தாயாக !

உடனிருந்தால் அனைத்தையும்
வெல்வேன் என்றாய்
கற்றுக்கொடுத்து எல்லாவற்றிலும்
வெற்றி காணவைப்பேன்
உன் தாயாக !

உலகை
பரிசளிப்பேன் என்றாய்
இந்த உலகையே உனக்கு
அறிமுகப்படுத்துவேன்
உன் தாயாக !

என்னை போலொரு
பெண்குழந்தை
வேண்டுமென ஆசை உனக்கு.
உன்னையே
என் சாயலில்
பெற்றெடுப்பேன்
உன் தாயாக !

நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க
உன் தாயாக !

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:35 pm

எங்கிருக்கிறாய்… என்னவளே….


யார் நீ?
எப்படி இருப்பாய்?
ஒல்லிக்குச்சியா?
பூசணிக்காயா?
பனைமரமா?
குள்ளக் கத்தரிக்காயா?

ஆனால்
நிச்சயமாய் கேள்விக்குறிகளின்
நிரந்தரப் பதிலாய்…
பெண்ணாய்,
பெண்ணியத்தோடு…

தோள்களில் சாய்ந்தும்,
தலைமுடியைக் கோதியும்,
மூக்கோடு மூக்கை உரசியும்,
என் உயிரைப் பிழியப்போகின்றாய்…

தனிமையை…
அழுகையை…
அன்பை…
ஆண்மையை….
முழுமையாய் ஆக்கிரமிக்கப் போகின்றாய்..

நம் சிசுவை வயிற்றிலும்,
உன் நினைவுகளை என் இதயத்திலும்
பாரமின்றி நிரப்பப்போகின்றாய்…

நினைக்க… நினைக்க
இனித்தாலும்…

தொட்டிக்குள் நீந்தும்
மீனைப் போல

உன்னையே சுற்றும் என்
கற்பனைத் தாளில்

ஏனோ நீ மட்டும்
விவரிக்கப்படாத விபரமாய்…

நானோ கிறுக்கப்படாத
வெற்றுக் காகிதமாய்…

முகம் தெரியாத உனக்காக,
முகவரி இடப்படாத
வாழ்த்து அட்டைகள்,
பரிசுப் பொருட்கள்…
கூடவே நானும்…

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:36 pm

ஏன் இந்த மாற்றம்


குளிர்கின்ற தென்றலும்
அனல் காற்றாய் ஆனது
மனம் வீசும் மலர்களும்,
வாசனையற்றுப் போனது.
சுழல்கின்ற உலகமும்
தள்ளாடத் தொடங்கியது
காரணம் கண்டன காட்சிகளாக
பூமியில் ஏழைகளின் கண்ணீர்
அதனால் நாடே சீர்கெட்டுப் போனது
கொட்டுகின்றான் பணத்தை கோவிலில்
குறைகள் நீங்குமென்று!
பக்கத்து வீட்டுப் பச்சிளங்குழந்தை
பாலுக்கு அழுவதைக் கண்டும்,
வழுக்கி விழுந்த வயதானவரை
படிதாண்டிப் போகிறான்
தூக்கிவிட்டால் தொற்றிவிடுமாம்
பட்டகைகளில் நோய் என்று!
தமிழ் இளைஞர்களை ஈழத்தில்
கிடங்கு தோண்டி பெட்ரோல் உற்றி,
உயிரோடு கொளுத்துகின்றனர்
அவலக் குரல் அடங்கும்வரை!
ஆறறிவு படைத்த மனிதனே
ஜந்தறிவை மட்டும் பயன்படுத்துவதேன்?
தீமைகள் விட்டுவிடு தீர்வுகளை எடுக்கவிடு
மனிதநேயம் வளர்த்துக்கொள்
மனிதனாக மாறிவிடு

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:37 pm

எங்கே....


கண்ணிமைக்கும் நேரத்தில்,
கரை புரண்டோடும்,...
இரத்த வெள்ளத்தில்,
குளித்துக் குளிர் காய,
நினைக்கும்...
மானிடன் மனதில்,
மாண்டு போனதா???
மனித நேயம்...

அகதி வாழ்வே!!! அவலம்,
அதில் அடிமையாய், அடிமாடுகளாய்,
எம்மவற்கு இந்நிலைமை, -இன்னும்
தரங் கெட்டுப் போன,
மாற்றான் கையில்,
மாதரின் "பெண்மை"
'பறிபட்டுப் போன...'
மனித நேயமாய்....

பார்பார்!!! பசித்தால்,
கொட்டாவி விடுவார்,
பலனில்லை பாரினிலே...
உரிமை கொண்டு,
உறவோடு...
குரல் கொடுத்தால்,!!!
அறை பட்டுப் போவார்.
சிலுவையிலே.....

அன்புக்கு இலக்கணம் சொன்ன,
புனித புத்த பிரானின்...
மனித நேயம் எங்கே...?
உரமாக மண்ணில் புதைந்து விட்டதா...?
உருமாறி ஊமையாய்,
மறணித்து விட்டதா...?
காலந்தான் பதில்,
சொல்ல வேண்டும்,...

எழுத்து சுதந்திரம்,
பேரளவில் இருக்க,
எழுதிய மொழி வரிக்கு...
எனது "பெயரை" இட்டிடுவேன்.
நாளை நான் சாப்பிட,
எனக்கு....
"கை"
வேண்டும் அல்லவா???

Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக