புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல் விளக்குகிறது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
30.வஸந்த காலம்
மறு நாள் உச்சிப் போதில், ஜலம் வறண்ட ராஜன் வாய்க்காலின் மணலில், இருபுறமும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த புன்னை மரங்களின் நிழலில், முத்தையன் மேல் துணியை விரித்துக்கொண்டு படுத்திருந்தான். அப்போது இளவேனிற் காலம். சித்திரை பிறந்து சில நாட்கள் தான் ஆகியிருந்தன. மரஞ் செடி கொடிகள் எல்லாம் தளதளவென்று பசும் இலைகள் தழைத்துக் கண்ணுக்கு குளிர்ச்சியளித்தன. அவற்றின் மேல் இளந்தென்றல் காற்று தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. சற்றுத் தூரத்தில் ஒரு வேப்பமரம் பூவும் பிஞ்சுமாய்க் குலுங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து வந்த மனோகரமான வாசனையை முத்தையன் நுகர்ந்து கொண்டிருந்தான். அந்த மரத்தின் அடர்த்தியான கிளைகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டு ஒரு குயில் 'கக்கூ' 'கக்கூ' என்று கூவிக் கொண்டிருந்தது.
சென்ற சித்திரைக்கு இந்தச் சித்திரை ஏறக்குறைய ஒரு வருஷ காலம் முத்தையன், இந்தப் பிரதேசத்தில் திருடனாகப் பதுங்கி வாழ்ந்து காலங் கழித்தாகி விட்டது. அந்த நாட்களில் இரண்டு பெரிய தாலுக்காக்களிலுள்ள ஜனங்களெல்லாம் தன்னுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கதி கலங்கும்படியும் அவன் செய்திருந்தான். அத்தைகைய பிரதேசத்தை விட்டு இப்போது ஒரேயடியாகப் போய்விடப் போகிறோம் என்பதை எண்ணிய போது அவனுக்கு ஏக்கமாய்த் தானிருந்தது.
மேற்படி தீர்மானத்துக்கு அவன் வந்து சில தினங்கள் ஆகி விட்டன. திருடப் போன வீட்டில் எதிர்பாராதபடி கல்யாணியைச் சந்தித்து, அதனால் சொல்ல முடியாத அவமானமும் வெருட்சியும் அடைந்து, ஒரு வார்த்தை கூடப் பேசாமல், திரும்பி ஓடினான் என்று சொன்னோமல்லவா? போலீஸ் லாக் அப்பிலிருந்து தப்பிய அன்று எப்படி வழிதிசை தெரியாமல் ஓடினானோ அதே மாதிரி தான் இன்றும் ஓடினான். கடைசியாக எப்படியோ தன்னைச் சென்ற ஒரு வருஷமாக ஆதரித்துக் காப்பாற்றி வரும் கொள்ளிடக்கரை பிரதேசத்தை அடைந்தான். இரவுக்கிரவே ஆற்றைத் தாண்டி அக்கரைப் படுகைக்கும் வந்துவிட்டான். அந்த இரவிலேயே அவன் தன் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும் தொடங்கினான். இனி வெகு காலம் இப்படியே காலந்தள்ள முடியாது என்று அவனுக்கு நிச்சயமாகி விட்டது. போலீஸ் பந்தோபஸ்துகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தன. எப்படியும் ஒரு நாள் பிடித்துவிடுவார்கள். அப்படிப் பிடிக்காவிட்டாலும் இவ்வாறு நிர்ப்பயமாய் வெகு காலம் நடமாட முடியாது என்று அவனுக்குத் தோன்றிவிட்டது. கல்யாணியைப் பார்க்கும் ஆசைதான் அவனை இத்தனை காலமும் அந்தப் பிரதேசத்தில் இருத்திக் கொண்டிருந்தது. அந்த ஆசை இவ்வளவு விபரீத முறையில் நிறைவேறவே, முத்தையன் மனங்கசந்து போனான்.
தான் இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு எங்கேயாவது அக்கரைச் சீமைக்குக் கப்பல் ஏறிப் போய்விடுவதென்று அவன் தீர்மானித்தான். அதற்கு முன்னால், சென்னைக்குப் போய் அபிராமியை எப்படியாவது ஒரு தடவை பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையும் அவனுக்கு இருந்தது. ஆனால் இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும்?
இதைப் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தபோது தான் ராயவரம் உடையார் தன்னைப் பார்க்க விரும்புவதாகத் தகவல் தெரிவித்திருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அவர் வரச் சொன்னது எதற்காக இருக்குமென்பதை அவன் ஒருவாறு ஊகித்திருந்தான். அவருடைய யோக்கியதையை முன்பே அறிவானாதலால், அவரால் அபாயம் ஏற்படும் என்று அவன் சிறிதும் பயப்படவில்லை. ஆனால் அந்தத் திருடனுக்குப் போய் உதவி செய்வதில் அவனுக்கு இஷ்டமில்லாமலிருந்தது. அதனால் தனக்கு முடிவில் நன்மை ஏற்படாதென்று அவனுடைய உள்ளத்தில் ஏதோ ஒன்று சொல்லிற்று.
ஆனால் இப்போது கப்பலேறிப் போய்விட வேணுமென்ற ஆசை பிறந்ததும், உடையாருடைய ஒத்தாசையினால் தான் அது சாத்தியமாகக் கூடுமென்று அவன் தீர்மானித்தான். அதனால் தான் அவரை அவன் போய்ப் பார்த்ததும், அவருடைய 'சுங்கத் திருட்டு' வேலைக்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டதும், அதற்குப் புறப்பட வேண்டிய நாள் வரையில் கொள்ளிடக்கரைப் பிரதேசத்தில் இருப்பதே யுக்தமென்றும், அதுவரை எவ்வித சாகஸமான காரியத்திலும் இறங்குவதில்லையென்றும் முடிவு செய்து அந்தப்படியே நிறைவேற்றி வந்தான். ஆகவே கொஞ்ச நாளாக அவனுடைய சந்தடி அடங்கியிருந்தது.
*****
இன்று, ராஜன் வாய்க்கால் மணலில் படுத்துக் கிடந்த போது, அவனுக்கு மறுபடியும் கல்யாணியின் ஞாபகம் வந்தது. அவளுடைய நினைவைத் தன் மனத்தில் வளர்த்துக் கொண்டு வந்ததே பெரும் பிசகென்றும், அவளை மறந்துவிடத்தான் வேண்டுமென்றும் அவன் தீர்மானித்திருந்தானாயினும், அவனையறியாமலே அவனுடைய உள்ளம் அவள் பால் சென்றது. அன்று இரவு அவளைப் பார்த்தபோது, "முத்தையா! என் நகைகள் தானா உனக்கு வேண்டும்?" என்று அவள் சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவனுடைய நினைவுக்கு வந்தன. அவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்று அறிய அவன் தாபங் கொண்டான். அவள் ஏன் அவ்வீட்டில் தன்னந்தனியாக ஒரு கிழவியுடன் மாத்திரம் இருந்தாள் என்பதை நினைக்கும் போது அவனுக்கு வியப்பாயிருந்தது. "ஐயோ! ஒரு நிமிஷம் அவள் முகத்தை நன்றாய்ப் பார்த்துவிட்டு, 'சௌக்கியமாயிருக்கிறாயா?' என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத்தான் வந்தோமா?" என்று அவன் மனது ஏங்கிற்று.
இப்படியெல்லாம் நினைக்க நினைக்க, அவனுடைய மனத்தில் திடீரென்று ஓர் ஆசை எழுந்தது. தானும் கல்யாணியும் குழந்தைப் பருவந் தொட்டு ஓடி விளையாடி எத்தனையோ நாள் ஆனந்தமாய்க் காலங்கழித்த அந்தப் பாழடைந்த கோவிலை ஒரு தடவை பார்க்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. கல்யாணியின் கல்யாணத்துக்கு முன்பு அவளைத் தான் கடைசியாகப் பார்த்த இடமும் அதுவேயல்லவா? அன்று அவல் 'ஏன் வந்தேனென்றா கேட்கிறாய்? வேறு எதற்காக வருவேன்? உன்னைத் தேடிக் கொண்டுதான் வந்தேன்' என்று கண்ணில் நீர் ததும்பக் கூறிய காட்சி இப்போது அவன் கண் முன்னால் நின்றது. இந்தப் பிரதேசத்தைவிட்டு தான் அடியோடு போவதற்கு முன்பு, அந்தக் கோவிலை இன்னொரு தடவை பார்த்துவிட வேண்டுமென்று எண்ணினான். இந்த எண்ணம் தோன்றிச் சிறிது நேரத்திற்கெல்லாம், தன்னை மீறிய ஏதோ ஒரு சக்தியினால் கவரப்பட்டவன் போல் அவன் பூங்குளத்தை நோக்கி விரைந்து நடக்கலானான். அந்தச் சக்தி இத்தகையது என்பது அன்று சாயங்காலம் மேற்படி பாழடைந்த கோவிலை நெருங்கியபோது அவனுக்கே தெரிந்து போயிற்று. ஆம்; அந்தச் சக்தி கல்யாணிதான்!
முத்தையன் கோவிலை அடைந்தபோது, அங்கே, தான் எத்தனையோ நாள் உட்கார்ந்து ஆனந்தமாய்ப் பாடிக் காலங்கழித்த அதே மேடையின் மீது, கல்யாணி உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவனுடைய நெஞ்சு 'திக்திக்'கென்று அடித்துக் கொண்டது.

31.காதலர் ஒப்பந்தம்
கோவிலுக்குப் பக்கத்திலிருந்த மாமரத்தில் பட்டுப் போல் சிவந்த இளம் இலைகளுக்கு மத்தியில் கொத்துக் கொத்தாக மாம் பூக்கள் பூத்திருந்தன. அந்தப் பூக்கள் இருக்குமிடந் தெரியாதபடி வண்டுகளும், தேனிக்களும் மொய்த்தன. அவற்றின் ரீங்கார சப்தம் அந்த வனப்பிரதேசம் முழுவதிலும் பரவிப் பிரகிருதி தேவியை ஆனந்த பரவசமாக்கிக் கொண்டிருந்தது.
சற்றுத் தூரத்தில் ஒரு முட்புதரின் மேல் காட்டு மல்லிகைக் கொடி ஒன்று படர்ந்திருந்தது. அந்தக் கொடியில் குலுங்கிய பூக்களிலிருந்து இலேசாக வந்து கொண்டிருந்த நறுமணத்தினால் கவரப்பட்டுத்தான் போலும், அதன்மேல் அத்தனை பட்டுப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன! அவற்றின் இறகுகளுக்குத்தான் எத்தனை விதவிதமான நிறங்கள்! அவற்றில் எவ்வளவு விதவிதமான வர்ணப் பொட்டுக்கள்! நல்ல தூய வெள்ளை இறகுகளும், வெள்ளையில் கறுப்புப் பொட்டுக்களும், ஊதா நிற இறகுகளில் மஞ்சள் புள்ளிகளும், மஞ்சள் நிற இறகுகளில் சிவப்புக் கோலங்களும் - இப்படியாக ஒரே வர்ணக் காட்சிதான்! பிரம்ம தேவன் இந்தப் பட்டுப் பூச்சிகளைச் சிருஷ்டித்த காலத்தில் விதவிதமான வர்ணங்களைக் கலந்து வைத்துக் கொண்டு அவற்றை விசித்திரம் விசித்திரமாய்த் தீட்டி வேடிக்கை செய்திருக்க வேண்டும்.
பட்டுப் பூச்சிகள் ஒரு நிமிஷம் அந்தக் காட்டு மல்லிகைக் கொடியின் மீது உட்கார்ந்திருக்கும். அடுத்த நிமிஷம் ஒரு காரணமுமின்றி அவை கொல்லென்று கிளம்பி வானவெளியிலெல்லாம் பறக்கும். அவை பறக்கும் போது அவற்றின் இறகுகள் படபடவென்று அடித்துக் கொள்வதைப் பார்த்தால், "ஐயோ! இந்த அழகான பூச்சி இப்படித் துடிக்கின்றதே! அடுத்த கணத்தில் கீழே விழுந்து உயிரை விட்டுவிடும் போலிருக்கிறதே!" என்று நாம் தவித்துப் போவோம்.
பட்டுப் பூச்சியின் இறகுகள் எப்படித் துடித்தனவோ, அதைப் போலவே துடித்தது அந்த நேரத்தில் கல்யாணியின் இருதயம் என்று சொல்லலாம். பாழடைந்த கோவிலைச் சுற்றி அடர்த்தியாயிருந்த செடி கொடிகளை விலக்கிக் கொண்டு முத்தையன் வருவதை அவள் பார்த்தாள். பார்த்த கணத்தில் அவளுடைய உள்ளம் ஆனந்த பரவசம் அடைந்தது. ஆனால், அடுத்த கணம், முன் போல் அவன் மறுபடியும் தன்னைப் பார்த்துவிட்டு ஓடிப்போகாமலிருக்க வேண்டுமே என்று எண்ணியபோது அவளுடைய இருதயம் மேற்சொன்னவாறு துடிதுடித்தது.
*****
அன்றிரவு, முகமூடி தரித்த கள்வனாய் வந்த முத்தையன் அப்படி ஒரே நிமிஷத்தில் மாயமாய் மறைந்து போன பிறகு கல்யாணி அடைந்த ஏமாற்றத்துக்கும் ஏக்கத்திற்கும் அளவே கிடையாது. அவ்வாறு நேர்ந்து விட்டதற்குக் காரணம் தன்னுடைய புத்தியீனம் தான் என்று அவள் கருதினாள். இத்தனை நாளும் அவனைப் பார்க்கலாம், பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் ஒருவாறு காலம் போய்விட்டது. இனிமேல் அந்த நம்பிக்கைக்குக் கூட இடமில்லையே? முத்தையன் இப்படியே திருடனாயிருந்து ஒரு நாள் போலீஸாரிடம் அகப்பட்டுக் கொண்டு தண்டனையடைய வேண்டியது; தான் இப்படியே தன்னந் தனியாக உலகத்தில் வாழ்ந்து காலந்தள்ள வேண்டியது என்பதை நினைக்க நினைக்க அவளால் சகிக்க முடியவில்லை. இதற்கு முன்னெல்லாம் அவள் சாதாரணமாய்க் கண்ணீர்விட்டு அழுவது கிடையாது. பஞ்சநதம் பிள்ளையைக் கல்யாணம் செய்து கொண்டபோது அவள் தன்னுடைய நெஞ்சை இரும்பாகச் செய்து கொண்டாள் என்று பார்த்தோமல்லவா? ஆனால் அன்றிரவு சம்பவத்திற்குப் பிறகு அவளுக்குத் தன்னையறியாமல் அழுகை அழுகையாய் வந்தது.
கல்யாணியின் அத்தை இதையெல்லாம் பார்த்துவிட்டுப் பயந்து போனாள். அன்று இராத்திரியே அவள் கூச்சல் போட்டுத் தட புடல் பண்ணித் திருடனைப் பிடிக்க ஏற்பாடு செய்ய வேணுமென்று சொன்னாள். கல்யாணி அதெல்லாம் கூடவே கூடாதென்று பிடிவாதமாய்ச் சொல்லிவிட்டாள். அதற்குப் பிறகு கல்யாணி தானே அழுது கொண்டும் கண்ணீர் விட்டுக் கொண்டும் இரவு எல்லாம் தூங்காமல் புரண்டு கொண்டும் இருப்பதைப் பார்த்து அத்தை, "அடி பெண்ணே! உனக்கு என்னமோ தெரியவில்லை. அன்று இராத்திரி திருடன் வந்ததிலிருந்து பயந்து போயிருக்கிறாய். மாரியம்மனுக்கு மாவிளக்கு ஏற்ற வேண்டும். கொஞ்ச நாளைக்குப் பூங்குளத்துக்குப் போய் எல்லாருடனும் கலகலப்பாய் இருந்துவிட்டு வருவோம், வா! அப்போது தான் உனக்குப் பயம் தெளிந்து சித்தம் சரியாகும்" என்றாள்.
*****
பூங்குளத்துக்குப் போகலாம் என்றதும் அத்தை ஆச்சரியப்படும்படியாகக் கல்யாணி உடனே சம்மதித்தாள். அவளுக்கு என்னவெல்லாமோ பழைய ஞாபகங்கள் வந்தன. கொள்ளிடக்கரைக் காடும், பாழடைந்த கோயிலும் அவளைக் கவர்ந்து இழுத்தன. ஆகவே, தகப்பனாருக்குக் கடிதம் போட்டு வரவழைத்து எல்லாருமாகப் பூங்குளம் போய்ச் சேர்ந்தார்கள்.
கல்யாணி இரண்டொரு நாள் வீட்டுக்குள்ளேயே இருந்தாள். பிறகு, இடுப்பிலே குடத்தை எடுத்து வைத்துக் கொண்டு ஆற்றுக்குக் குளிக்கப் போகிறேன் என்று கிளம்பினாள். அவள் சிறு பெண்ணாயிருந்த காலத்திலேயே அவளை யாரும் எதுவும் சொல்ல முடியாதென்றால், இப்போது பெரிய பணக்காரியாய், சர்வ சுதந்திர எஜமானியாய் ஆகிவிட்டவளை யார் என்ன சொல்லமுடியும்?
*****
முத்தையனை இப்போது பார்த்ததும் கல்யாணி எழுந்து நின்றாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் சற்று நேரம் பிரதிமைகளைப் போல் நின்றார்கள். கல்யாணிக்கு எதிர்பாராமல் அவனைச் சந்தித்ததனால் ஏற்பட்ட திகைப்பு ஒரு புறம், ஏதாவது தான் தவறாகச் சொல்லி அல்லது செய்து அதனால் மறுபடியும் முத்தையன் போய்விடப் போகிறானே என்ற பயம் இன்னொருபுறம்.
ஆனால் முத்தையன் இந்தத் தடவை அப்படியொன்றும் ஓடிப் போகிறவனாயில்லை. திகைப்பு சற்று நீங்கியதும், கல்யாணியின் சமீபமாக வந்தான்.
"கல்யாணி! நீதானா? அல்லது வெறும் மாயைத் தோற்றமா? என்னால் நம்ப முடியவில்லையே!" என்றான்.
"அம்மாதிரிச் சந்தேகம் உன்னைப் பற்றி எனக்கு உண்டாவதுதான் நியாயம். இந்த நிமிஷம் நீ என் முன் இருப்பாய்; அடுத்த நிமிஷம் மாயமாய் மறைந்து போவாய்!" என்று கல்யாணி சொல்லி, சட்டென்று அவன் ஓடிப் போகாமல் தடுப்பவள் போல் கைகளை விரித்துக் கொண்டு நின்றாள்.
முத்தையன் கலகலவென்று சிரித்தான். கல்யாணிக்கும் தன்னையறியாமல் சிரிப்பு வந்தது. இருவரும் சிரித்தார்கள். எத்தனையோ காலமாகச் சிரிக்காதவர்களாதலால், இப்போது அதற்கெல்லாம் சேர்த்து வைத்துக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு, நாவல் மரத்தின் மேல் கூட்டிற்குள் இருந்த குருவிக் குஞ்சுகள் வெளியே தலையை நீட்டி, பயம் நிறைந்த சின்னஞ்சிறு கண்களால் அவர்களைப் பார்த்து விழித்தன.
முத்தையன் சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, "கல்யாணி! என்னால் நம்ப முடியவில்லை தான். எதற்காக நீ இங்கு வந்தாய்? பழைய முத்தையனைத் தேடிக் கொண்டா? அந்த முத்தையன் இப்போது இல்லையே! கொள்ளைக்கார முத்தையன் அல்லவா இப்போது இருக்கிறான்? அவனுக்கும் உனக்கும் நடுவில் இப்போது இந்தக் கொள்ளிடத்தைவிட அகண்டமான பள்ளம் ஏற்பட்டிருக்கிறதே!" என்றான்.
"முத்தையா! நானும் இப்போது பழைய கல்யாணி அல்ல; காட்டில் குதூகலமாய்த் திரிந்து கொண்டிருந்த 'வனதேவதை கல்யாணி' செத்துப் போய் விட்டாள். இப்போது இருப்பவள் கைம்பெண் கல்யாணி."
"ஐயோ! நிஜமாகவா! அந்தப் பாவி இதற்காகத்தானா உன்னைக் கல்யாணம் செய்து கொண்டான்?" என்று திடுக்கிட்டுக் கேட்டான் முத்தையன்.
"அவரை ஒன்றும் சொல்லாதே, முத்தையா! அவர் புண்ணிய புருஷர். அவரைப் போன்றவர்கள் சிலர் இந்த உலகத்தில் இருப்பதால் தான் இன்னும் மழைபெய்கிறது."
"புருஷனிடம் அவ்வளவு பக்தியுள்ளவள் இங்கே ஏன் வந்தாய், இந்தத் திருடனைத் தேடிக்கொண்டு?" என்று முத்தையன் ஆங்காரமாய்க் கேட்டான்.
கல்யாணியின் கண்களில் கலகலவென்று ஜலம் வந்தது. முத்தையன் மனம் உருகிற்று. "கல்யாணி! நான் சுத்த முரடன். 'முரட்டு முத்தையா' என்ற பெயர் எனக்குத் தகும். உன்னைக் காணாத போது ஒவ்வொரு நிமிஷமும் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். 'இந்த ஜன்மத்தில் காண்போமா?' என்று துடிதுடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உன்னைப் பார்த்த பிறகு முரட்டுத் தனமாய்ப் பேசி உன் கண்களில் ஜலம் வரச்செய்கிறேன். என்னால் உலகத்தில் எல்லோருக்கும் கஷ்டந்தான். எதற்காக இந்த உலகில் பிறந்தோம் என்று சில சமயம் தோன்றுகிறது.
"எதற்காகப் பிறந்தாய்? இந்தத் தாயில்லாப் பெண் கல்யாணியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளத் தான் பிறந்தாய், முத்தையா! வாழ்க்கையில் ஒரு தடவை நாம் பெரிய பிசகு செய்துவிட்டோ ம். கடவுள் நம் இருவருடைய இருதயத்தையும் ஒன்றாகச் சேர்த்து வைத்தார். அதற்கு விரோதமாக இருவரும் ஆத்திரத்தினாலும் பிடிவாதத்தினாலும் காரியம் செய்தோம். மறுபடியும் அம்மாதிரி தப்பு செய்யவேண்டாம். நான் சொல்வதைக் கேள். இப்படி வெகுகாலம் உன்னால் காலங் கழிக்க முடியாது. கட்டாயம் போலீஸார் ஒரு நாள் பிடித்து விடுவார்கள். கொஞ்ச நாள் அடக்கமாய் இருந்துவிட்டு, கலவரம் அடங்கியதும் கப்பலில் ஏறி அக்கரைச் சீமைக்குப் போய் விடு. சிங்கப்பூர், பினாங்கு எங்கேயாவது கண்காணாத தேசத்துக்குப் போய் சௌக்கியமாயிருக்கலாம்..."
முத்தையன் மறுபடியும் திடுக்கிட்டான். தன் மனத்திலிருந்ததையே அவளும் சொன்னதைக் கேட்டு அவன் வியப்படைந்தான். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "கல்யாணி! என்னை ஊரைவிட்டு ஓட்டுவதில் தான் உனக்கு எவ்வளவு அக்கறை" என்றான்.
"இன்னும் என்னை நீ தெரிந்து கொள்ளவில்லையா, முத்தையா! உன்னை மட்டுமா போகச் சொல்கிறேன் என்று நினைக்கிறாய்? நீ முதல் கப்பலில் போனால் நான் அடுத்த கப்பலில் வருவேன்."
"நிஜமாகவா, கல்யாணி! இன்னொரு தடவை சொல்லு. இவ்வளவு சொத்து சுதந்திரம், வீடு வாசல், ஆள்படை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இந்தத் திருடனுடன் கடல் கடந்து வருகிறேன் என்றா சொல்கிறாய்?"
"ஆமாம்; இவை எல்லாவற்றையும் விட நீதான் எனக்கு மேல். இந்தச் சொத்துக்களையெல்லாம் பண்ணியாரின் விருப்பத்தின்படி நல்ல தர்மங்களுக்கு எழுதி வைத்து விடுவேன். போகிற இடத்தில் நாம் உழைத்துப் பாடுபட்டு ஜீவனம் செய்வோம்."
"மறுபடியும் நீதானே எனக்காகத் தியாகம் செய்கிறாய், கல்யாணி! நான் என்னவெல்லாமோ எண்ணியிருந்தேன்! கொள்ளையடித்த பணத்தையெல்லாம் ஒரு நாள் உன் காலடியில், போடவேணுமென்று நினைத்தேன். ஆனால் நீயோ குபேர சம்பத்தைக் காலால் உதைத்துத் தள்ளிவிட்டு வருகிறேன் என்கிறாய். ஆனால் முன் தடவை மாதிரி இந்தத் தடவை நான் பிடிவாதம் பிடிக்க மாட்டேன். கப்பலேறிப் போய்விட நான் தயார். ஆனால், அதற்கு முன்னால் நான் ஒப்புக்கொண்ட காரியம் ஒன்றை மட்டும் செய்து விட வேண்டும். சென்னைப் பட்டணத்துக்குப் போய் அபிராமியை ஒரு தடவை பார்த்துவிட வேண்டும்! அதற்கு ஏற்பாடெல்லாம் செய்து விட்டேன். கல்யாணி! ஒரு மாதம், இரண்டு மாதம் பொறுத்துக் கொள்..."
"ஐயோ! அவ்வளவு நாளா? அதற்குள்ளே அபாயம் நேர்ந்துவிட்டால் என்ன செய்வது?"
"இல்லை, கல்யாணி! ரொம்ப ஜாக்கிரதையாயிருப்பேன். நேற்றுவரை இந்த உயிர் எனக்கு இலட்சியமில்லாமலிருந்தது. சாவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று உன்னைப் பார்த்த பிற்பாடு, இத்தனைக்குப் பிறகும் உன்னுடைய அன்பு மாறவில்லையென்று தெரிந்த பிறகு, இந்த உயிர் மேல் எனக்கு ஆசை பிறந்து விட்டது. வெகு ஜாக்கிரதையாயிருப்பேன்" என்றான் முத்தையன்.

32.கவிழ்ந்த மோட்டார்
அஸ்தமித்து ஒரு நாழிகையிருக்கும். மேற்குத் திசையில் நிர்மலமான வானத்தில் பிறைச் சந்திரன் அமைதியான கடலில் அழகிய படகு மிதப்பது போல் மிதந்து கொண்டிருந்தது. வெள்ளித் தகட்டினால் செய்து நட்சத்திரங்களுக்கு மத்தியில் பதித்த ஓர் ஆபரணம் போல் விளங்கிய அப்பிறைமதி அழகுக்காக ஏற்பட்டது என்றே தோன்றும்படி, அதன் வெளிச்சம் அவ்வளவு சொற்பமாயிருந்தது. ஆனால் அது கூட அதிகமென்று நினைத்து, எப்போது அந்த இளம்பிறை, அடிவானத்தில் மறையுமென்று கவலையுடன் எதிர்பார்த்த சில பிரகிருதிகள் இருக்கத்தான் செய்தார்கள். புதுச்சேரிக்குச் சமீபத்தில் ஏழெட்டு மைல் தூரத்தில் வயல் காடுகளின் வழியாக ஊர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் வண்டியில் இவர்கள் இருந்தார்கள். அந்த வண்டி சிவப்புச் சாயம் பூசப்பட்ட வண்டி; அதற்கு நம்பர் பிளேட் கிடையாது. அதனுடைய முன் விளக்குகள் மங்கலாக எரிந்தன. வண்டி கிளம்பி அரை மணி நேரமாகியிருந்தும், இதுகாறும் ஒரு தடவை கூட டிரைவர் அதன் ஹாரனை உபயோகப்படுத்தவில்லை.
வண்டியில் இருந்த நாலு பேரில் முத்தையனும் ஒருவன். அவன் கையில் ஒரு குழல் துப்பாக்கி இருந்தது. அவன் அதைத் தயாராய் கையில் பிடித்துக் கொண்டு, வண்டிக்குப் பின்புறமே பார்த்துக் கொண்டு வந்தான். பின்னால் போலீஸ் வண்டி தொடர்ந்து வந்தால் அதை நோக்கிச் சுட வேண்டுமென்பது அவனுக்கு உத்தரவு.
விதி என்றும், தலையெழுத்து என்றும், பூர்வஜன்ம கர்மம் என்றும் சொல்கிறார்களே, அதிலெல்லாம் ஏதோ உண்மையிருக்கத்தான் வேண்டும். இல்லாது போனால் கல்யாணியைப் பார்த்த பிறகு, அவளுடைய அழியாத காதலை அறிந்த பிறகு முத்தையனுக்கு இந்தக் காரியத்தில் ஈடுபட ஏன் புத்தி தோன்றுகிறது.
*****
பிறைச் சந்திரன் மறையும் தருணத்தில், இதுகாறும் காடு மேடுகளில் வந்து கொண்டிருந்த அந்த மோட்டார், நல்ல சாலையை அடைந்தது. அந்த இடத்தில் அச்சாலை ஒரு பெரிய ஏரியின் கரைமீது அமைந்திருந்தது. ஏரியில் ஜலம் நிறைந்து அலைமோதிக்கொண்டு காணப்பட்டது. சுமார் அரை மைல் தூரம் சாலை இப்படி ஏரிக்கரையோடு போய், அப்பால் வேறு பக்கம் திரும்பிச் சென்றது.
மோட்டார் அச்சாலையில் ஏறியதும், டிரைவர் வண்டியின் 'ஆக்ஸிலேட்ட'ரைக் காலால் ஒரு மிதி மிதித்தான். வண்டி பிய்த்துக் கொண்டு கிளம்பிற்று. "இனி அபாயம் இல்லை" என்று எண்ணி வண்டியிலிருந்தவர்கள் பெருமூச்சு விட்டார்கள். முத்தையன் கூட ரிவால்வரின் பிடியைச் சிறிது தளர்த்தினான்.
திடீரென்று, "ஹால்ட்" என்ற ஒரு சத்தம் கேட்டது. பல போலீஸ் விளக்குகளின் வெளிச்சம் பளீரென்று மோட்டாரின் மேல் விழுந்தது. சாலை, ஏரிக்கரையிலிருந்து திரும்பும் இடத்தில் இருபது முப்பது போலீஸ்காரர்கள் எழுந்து நின்றார்கள். அதே சமயம் பின்னாலிருந்து ஒரு மோட்டார் அதிவேகமாக வரும் சத்தம் கேட்டது. வண்டிக்குள், "நிறுத்தாதே; விடு" என்ற ஒரு உத்தரவு பிறந்தது. டிரைவர் 'ஆக்ஸிலேட்ட'ரை இன்னும் ஒரு அழுத்து அழுத்தினான். வண்டி பாய்ந்து சென்றது.
"ஷுட்" என்று ஒரு பெருங்குரல் அப்போது கிளம்பிற்று. அநேக துப்பாக்கிகளிலிருந்து ஏககாலத்தில் குண்டுகள் கிளம்பின. முத்தையன் சுட்டான். ஆனால், ஒரு தடவை அவன் விசையை இழுத்துவிட்டு இன்னொரு தடவை இழுப்பதற்குள்ளே எங்கேயோ அதல பாதாளத்தில் தான் விழுந்து கொண்டிருப்பதை உணர்ந்தான்.
போலீஸ்காரர்களுடைய குண்டுகளில் ஒன்று மோட்டாரின் டயரில் பட்டு, டயர் கிழிந்து, வண்டி ஒரு திரும்புத் திரும்பி ஏரியை நோக்கிச் சென்றது. இது ஒரு விநாடி; அடுத்த விநாடி வண்டி தண்ணீரில் தலைகீழாய் விழுந்து முழுகியே போயிற்று.
*****
முத்தையன் ஒரு கணம் திக்குமுக்காடினான். அடுத்த கணத்தில் நிலைமை இன்னதென்று ஒருவாறு உணர்ந்தான். மோட்டாருடன் தண்ணீரில் முழுகியிருக்கிறோம் என்பது அவனுக்கு ஞாபகம் வந்ததும், "சரி, பிழைத்துக் கொள்ளலாம்" என்று அவனுக்குத் தைரியம் வந்தது. தண்ணீர் என்பது அவனுக்குத் தாயின் மடியைப் போல் அவ்வளவு பிரியமானதல்லவா?
காலாலும் கையாலும், துழாவி, மோட்டாரின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தான். மெதுவாகத் தலையைச் சிறிதளவு தண்ணீரின் மேல் உயர்த்தினான். அநேக போலீஸ்காரர்கள் கையில் விளக்குடனும் துப்பாக்கிகளுடனும் சாலையிலிருந்து ஏரிக்கரைக்கு ஓடி வருவது தெரிந்தது. உடனே மறுபடியும் தண்ணீரில் அமுங்கி, உத்தேசமாகக் கரையோரமாகவே போகத் தொடங்கினான். மூச்சு நின்ற வரையில் அவ்வாறு போன பிறகு தலையை மறுபடி தூக்கினான். வண்டி விழுந்த இடத்தில் ஏக அமர்க்களமாயிருந்தது. வண்டியைத் தூக்கிக் கரையேற்றிக் கொண்டிருந்தார்கள்.
இவன் தப்பித்துக் கொண்டு சென்றதை யாரும் கவனிக்கவில்லையென்று தெரிந்தது. கவனித்திருந்தால் இதற்குள் தடபுடல் பட்டிராதா? ஏரிக்கரையோரமாகப் போலீஸார் ஓடி வரமாட்டார்களா? மோட்டாரில் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பது போலீஸாருக்கு தெரிந்திராது. தன்னுடைய சகபாடிகள் சொல்லாவிட்டால் அவர்களுக்குத் தான் தப்பிப் போனது தெரியவே நியாயமில்லை.
துரதிர்ஷ்டத்திலும் தனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருப்பதாக எண்ணிக் கொண்டே முத்தையன், மறுபடியும் தண்ணீரில் மூழ்கிக் கரையோரமே சென்றான். மோட்டார் விழுந்த இடத்திலிருந்து சுமார் அரை மைல் தூரம் சென்ற பிறகு, ஏரிக்கரையில் புதர்கள் அடர்ந்திருந்த ஓர் இடத்தில் கரையேறினான். துணிகளைப் பிழிந்து உலர்த்திய வண்ணம் ஏரிக்கரையோடு நடக்கலானான்.
*****
இராத்திரி சுமார் ஒரு மணி இருக்கும். கொஞ்ச தூரத்தில் ரயில் சத்தம் கேட்கவே, முத்தையன் அந்தத் திசையை நோக்கி நடந்தான். சித்திரை மாதமாகையால் அவனுடைய துணிகளெல்லாம் அதற்குள் நன்றாய் உலர்ந்துவிட்டன. அவனுக்கு என்னமோ அப்போது வெகு உற்சாகமாயிருந்தது. அவ்வளவு பெரிய துர்சம்பவம் நடந்துங்கூடத் தான் மட்டும் தப்பி வந்ததை நினைக்குங்கால், அவனுக்குத் தன்னிடம் ஏதோ ஒரு அற்புத சக்தியிருப்பதாகவே தோன்றிற்று. ஆகையால் அவனுடைய தைரியமும் துணிச்சலும் அதிகமாயின.
சமீபத்தில் கைகாட்டி மரத்தின் சிவப்பு வெளிச்சம் தெரிந்தது. அதை நோக்கி முத்தையன் சென்றான். அவன் ஸ்டேஷனை அடைந்ததும் சென்னைக்குப் போகும் ரயில் வந்து நின்றதும் சரியாயிருந்தது. நல்ல வேளையாய் அவன் இடுப்பில் கட்டியிருந்த பணப்பை பத்திரமாயிருந்தது. சென்னைக்கு ஒரு டிக்கட் எடுத்துக் கொண்டு ரயில் ஏறினான். அவன் ஏறிய வண்டியில் ஒரே கூட்டம். அத்துடன் பாட்டும் கூத்தும் பிரமாதப்பட்டன. அவ்வண்டியில் இருந்தவர்களுடைய நடை உடை பாவனைகள் எல்லாமே சிறிது விசித்திரமாயிருந்தன. முத்தையன் தன் பக்கத்திலிருந்தவனுடன் பேச்சுக் கொடுத்தான். அவர்கள் ஒரு பிரபல நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவர்களென்றும் சென்னையில் நாடகம் நடத்துவதற்காகப் போகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டான்.

33.முத்தையன் எங்கே?
முன் அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து சுமார் இரண்டு மாதம் ஆகியிருக்கும். திருப்பரங்கோவிலில் ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி ஒரு நாள் மாலை மிகுந்த மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தார். அவர் வரும்போது, உள்ளே,
"போது போகுதில்லையே - எனக்கொரு
தூது சொல்வாரில்லையே!"
என்று இனிமையாகப் பாடுங்குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சாஸ்திரியார் உற்சாகமாயிருந்திருக்கும் பட்சத்தில், நேரே கூடத்திற்குப் போய் தாமும் ஒரு அடி இரண்டடி தம் மனைவியுடன் சேர்ந்து பாடியிருப்பார். கொஞ்சம் அபிநயம் பிடித்துக் கூடக் காட்டியிருப்பார்! ஆனால் இன்றைய தினம் மிகவும் மனச் சோர்வுக்கு அவர் ஆளாகியிருந்தபடியால், கூடத்துக் காமரா உள்ளில் பிரவேசித்து, தலைப்பாகையை எடுத்து ஆணியில் மாட்டி விட்டு ஈஸிசேரில் பொத்தென்று விழுந்தார்.
அவர் மனச்சோர்வு கொள்வதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. அன்றைய தினம் அவரை ஜில்லா போலீஸ் சூபரின்டென்டெண்டு துரை மாட்டு மாட்டென்று மாட்டிவிட்டார். திருடன் முத்தையனை உயிருடனோ, உயிரில்லாமலோ கூடிய சீக்கிரத்தில் பிடிக்காத வரையில் சாஸ்திரியின் உத்தியோகத்துக்கே ஆபத்து வந்து விடலாமென்று தோன்றிற்று. துரை அவ்வளவு கடுமையாகப் பேசினார்.
முத்தையன் திருப்பரங்கோவில் லாக்-அப்பிலிருந்து தப்பி ஓடிய புதிதில் அவனைப் பிடிப்பதில் சாஸ்திரி அவ்வளவு சுறுசுறுப்புக் காட்டவில்லையென்பது உண்மைதான். அபிராமியின் மீது அவருக்கு ஏற்பட்ட வாத்ஸல்யம் முத்தையனைப் பிடிப்பதில் உள்ள ஆர்வத்தை ஓரளவு மழுங்கச் செய்திருந்தது. மேலும், முத்தையனுடைய துணிகரமான செயல்கள் மூன்று சர்கிள் இன்ஸ்பெக்டர்களுடைய எல்லைக்குள் நடந்தபடியால், இவருக்கு அவனைப் பிடிப்பதில் தனிப்பட்ட பொறுப்பு அப்போது ஏற்படவில்லை.
சமீபத்தில், அதாவது மூன்று மாதத்துக்கு முன்னால் தான் முத்தையனைப் பிடிப்பதற்கென்று ஸர்வோத்தம சாஸ்திரியை 'ஸ்பெஷல் டியூடி'யில் போட்டார்கள். இதில் இவருக்கு அவ்வளவு இஷ்டமில்லையென்றாலும் உத்தரவை மீற முடியாமல் ஒப்புக் கொண்டார்.
அவர் இந்த 'ஸ்பெஷல் டியூடி'யில் போடப்பட்டதிலிருந்து, மிகவும் ஆச்சரியமாக, களவுகளும் கொள்ளைகளும் நின்று போயின. சாஸ்திரி கொள்ளிடக்கரைப் படுகைகள், காடுகள், நாணல் காடுகள் எல்லாவற்றையும் ஒரு அடி இடம் கூட பாக்கியில்லாமல் தேடி விட்டார்; கொள்ளிடத்து மணலையே சல்லடை போட்டு சலித்து விட்டார். ஆனாலும் பலனில்லை. ஒரு வேளை அவன் கொள்ளிடத்து முதலைக்கு இரையாகி மாண்டு போனானோ என்று கூடச் சந்தேகப்படலானார்.
ஆனால், மேலதிகாரிகளுக்கு இந்த நம்பிக்கை ஏற்படவில்லை. ஏற்கனவே அவர்களுக்குச் சாஸ்திரியின் மீது ஒருவாறு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. முத்தையனுடைய துணிகரத் திருட்டுகளுக்குச் சாஸ்திரியும் உடந்தை என்பதாக அவர் மேல் 'மொட்டை விண்ணப்பங்கள்' வந்திருந்தன. இதன் உண்மையைப் பரிசோதிப்பதற்காகவே ஜில்லா சூபரின்டென்டெண்ட் துரை சாஸ்திரியை இந்த 'ஸ்பெஷல் டியூடி'யில் போட்டார். அவர் வந்ததிலிருந்து முத்தையனுடைய ஆர்ப்பாட்டம் ஓய்ந்திருக்கவே துரைக்கும் சாஸ்திரியின் மேல் சந்தேகம் உண்டாயிற்று. இவர் எச்சரிக்கை செய்துதான் முத்தையனை ஜாக்கிரதையாயிருக்கப் பண்ணி விட்டார் என்று ஊகிக்க இடமிருந்ததல்லவா?
உண்மையில் ஸர்வோத்தம சாஸ்திரி இந்த மூன்று மாதமும் சும்மா இருக்கவில்லை. குறவன் சொக்கனையும், அவனுடைய ஆட்கள் மூன்று பேரையும் கைது செய்திருந்தார். முத்தையனுக்குச் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த அங்காடிக் கடைக்காரியையும் அவர் கைது செய்து விட்டார். இவர்கள் எல்லாம் இப்போது ஸப்ஜெயிலில் இருந்தனர். இவர்களிடம் துப்பு விசாரித்து முத்தையன் கொள்ளையடித்து வைத்திருந்த பணம், நகை இவற்றில் ஒரு பகுதியைக்கூடக் கைப்பற்றி விட்டார். ஆனால், முத்தையனைப் பற்றி மட்டும் அவர்களிடமிருந்து எவ்விதத் தகவல்களும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இன்று பகல் முழுவதும் அவர்களைப் பயத்தினாலும் நயத்தினாலும் மற்றும் போலீஸார் வழக்கமாகக் கையாளும் முறைகளைக் கைக்கொண்டும் விசாரிப்பதில்தான் அவர் ஈடுபட்டிருந்தார். ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. அவர்களுக்கு ஏதாவது முத்தையனைப் பற்றித் தெரிந்தால்தானே சொல்வார்கள்.
இதனால் மனச்சோர்வு அடைந்துதான், ஸர்வோத்தம சாஸ்திரி அவ்வளவு அலுப்புடன் அன்று வீடு திரும்பி வந்து ஈஸிசேரில் படுத்துக் கொண்டது. படுத்துக் கொண்ட சற்று நேரத்திற்கெல்லாம், அன்று வந்த தினசரி பத்திரிகையை எடுத்துப் புரட்டினார். அதில் வெளியாகியிருந்த ஒரு செய்தியின் தலைப்பைப் பார்த்ததும் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து அதைக் கவனமாய்ப் படிக்கத் தொடங்கினார். அந்தச் செய்தி வருமாறு:
"மதுரை ஒரிஜனல் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் நாடகக் கம்பெனியின் 'சங்கீத சதாரம்' என்னும் நாடகம் இந்நகரில் சென்ற ஒரு மாதமாய்த் தினந்தோறும் மேற்படி தியேட்டரில் நடந்து வந்த போதிலும், இன்னும் அபரிமிதமான கூட்டத்தைக் கவர்ந்து வருகிறது. பிரசித்தி பெற்ற மைசூர் குப்பி கம்பெனியாரைக் கூட இந்தக் கம்பெனியார் மிஞ்சிவிட்டார்கள் என்று சொல்லலாம். இந்த நாடகத்தில் திருடனாக நடிப்பவர் சென்னைவாசிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டார் என்று சொல்வது மிகையாகாது. உண்மையில் சதாரம் அத்திருடன் மீது காதல் கொள்ளவில்லையென்பது நம்பத் தகாத ஆச்சரியமாகவே இருக்கிறது. நாடக மேடையில் இவர் நடிக்கும் போது அசல் திருடனாகத் தோன்றுகிறாரே தவிர திருடன் வேஷம் போட்டு நடிக்கிறார் என்பதே சபையோருக்கு ஞாபகம் இருப்பதில்லை..."
இந்தச் செய்தியைப் படித்து வரும்போது, ஸப்-இன்ஸ்பெக்டரின் முகத்தில் பெரிதும் பரபரப்புக் காணப்பட்டது. படித்து முடித்த பின் சுமார் ஐந்து நிமிஷ நேரம் அவர் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். பிறகு அவசரமாய் "மீனாக்ஷி! மீனாக்ஷி! இங்கே வா!" என்று அலறினார்.
அவருடைய மனைவி பாடிக் கொண்டிருந்த பாட்டை அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டு ஓடி வந்தாள்.
"என்ன? என்ன? திருடன் பிடிபட்டானா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.
சாஸ்திரி மறுபடியும் பத்திரிகையில் ஆழ்ந்தவராய், "திருடனுமில்லை; பிடிபடவுமில்லை; நீ சுருக்கா இரண்டு சட்டையிலே ஒரு பெட்டியை வச்சுக் கொண்டா!" என்றார்.
"அப்படியேயாகட்டும் நான் சட்டையிலே பெட்டியை வச்சுக்கொண்டு வந்தால், நீங்கள் செருப்பிலே காலைப் போட்டுண்டு, கண்ணாடியிலே மூக்கைப் போட்டுண்டு எவ்விடத்துக்குப் பயணப்படப் போறயள்! சொன்னால் தேவலை?"
"ஓகோ! அது தெரியாதா? பட்டணத்திலே யாரோ திருடனுக்குக் கலியாணம் என்று சொன்னாயே? அதற்குப் போகிறதற்குத்தான்."
"எங்கள் அக்காளுக்கு வரப்போகிற மாப்பிள்ளையை இப்படி நீங்கள் திருடன் என்று சொன்ன செய்தி தெரிந்தால் அவள் உங்களை இலேசில் விடமாட்டாள். போனால் போகட்டும். உங்களை எப்படியும் கல்யாணத்துக்கு அழைச்சுண்டு போகிறதென்று தீர்மானம் பண்ணி மூட்டையெல்லாம் கட்டி வைத்து விட்டேன். சாப்பிட்டு விட்டுக் கிளம்ப வேண்டியதுதான். ஆனால் ஒரு சமாசாரம். வண்டியிலே நீங்கள் ஏறிக்கொண்டு வரவேண்டுமே தவிர, 'வண்டி தான் என்மேல் ஏறிண்டு வரணும்' என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது..."
"மீனாக்ஷி! நீ மகாகெட்டிக்காரி; உன் சாமர்த்தியத்துக்குத் திருடப் போக வேண்டியதுதான்."
"ஆமாம், திருடனைப் பிடிக்கத்தான் யோக்யதையில்லை; திருடவாவது போகலாம்! சீக்கிரம் கிளம்புங்கள்."
இப்படியாக, இந்தக் குதூகலம் நிறைந்த தம்பதிகள் சென்னைக்குப் பிரயாணமானார்கள்.

34.சங்கீத சதாரம்
சென்னைப் பட்டணத்தில், ஸர்வோத்தம சாஸ்திரியின் மைத்துனி பெண்ணுக்குக் கல்யாணம் நடந்து முடிந்தது. ஒரு நாள் கல்யாணந்தான். அன்றிரவு சாஸ்திரி அவசரம் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வெளிக்கிளம்பினார். வழியில் ஒரு டிராம் வண்டி மின்சார விளக்குகளால் ஜகஜ்ஜோதியாக அலங்கரிக்கப்பட்டு, ஒளிமயமான நாடக விளம்பரத்துடன் போய்க் கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.
சங்கீத சதாரம் எங்களுடைய புதிய நட்சத்திர நடிகரை
திருடன் பார்ட்டில் கண்டு களியுங்கள்
என்று அந்த மின்சார ஜோதி விளம்பரம் பிரகாசப்படுத்திக் கொண்டு போயிற்று.
நாடகக் கொட்டகைக்கு அவர் போய்ச் சேர்ந்த போது அங்கே ஏராளமான கூட்டம் நின்று கொண்டிருக்கக் கண்டார். ஜனங்கள் டிக்கட் வாங்குவதற்கு "நான் முந்தி" "நீ முந்தி" என்று பிரமாதமான சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர்கள் சிலர் கையில் குண்டாந்தடிகளுடன் கூட்டத்தைச் சமாளிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் "ஸீட் காலியில்லை" என்று நோட்டீஸ் போடப்பட்டது. அநேகம் பேர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.
இந்த வேடிக்கையைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, சப்-இன்ஸ்பெக்டர் கொட்டகைக்குள் சென்று, தாம் ஏற்கனவே ரிஸர்வ் செய்திருந்த இடத்தில் உட்கார்ந்தார். ஆரம்பத்திலெல்லாம் நாடகம் ரொம்பவும் சாதாரணமாயிருந்தது. இதைப் பார்ப்பதற்குத்தானா இவ்வளவு ஜனங்கள் மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள் என்று அவர் ஆச்சரியப்பட்டார்.
நாடகத்தில், திருடன் வரும் கட்டம் வந்ததும் அவருக்கு மற்ற ஞாபகமெல்லாம் போய்விட்டது. தான் துரத்தி வந்த முயலைக் கொஞ்ச தூரத்தில் கண்டதும் ஒரு வேட்டை நாய்க்கு எத்தகைய பரபரப்பு உண்டாகுமோ அத்தகைய பரபரப்பு அவருக்கு உண்டாயிற்று. ஆனால் அந்த முயலைப் போய்ப் பிடிக்க முடியாமல் நடுவில் மிகவும் உயரமான ஒரு வேலி தடுத்துக் கொண்டிருந்தால், அந்த வேட்டை நாய் எப்படித் துடிதுடிக்கும்? அப்படித் துடித்தார் ஸர்வோத்தம சாஸ்திரி.
"இந்தத் திருடன் வேஷக்காரன் தான் முத்தையன்" என்று அவருடைய உள்ளுணர்வு சொல்லிற்று. ஆனால் அதை ஊர்ஜிதம் செய்து கொள்வதற்கு அவருக்கு வழி எதுவும் புலப்படவில்லை. முத்தையனைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு ஏற்கனவே இருந்த இடையூறு இதுதான்! அவர் முத்தையனைப் பார்த்தது கிடையாது. அங்க அடையாளங்களைக் கொண்டு ஓரளவு ஊகிக்கலாம். நிச்சயமாய் எப்படிச் சொல்லமுடியும்?
*****
முத்தையனைக் கைது செய்து லாக்-அப்பில் அடைத்த இரண்டு போலீஸ்காரர்களும் அன்றிரவு அஜாக்கிரதையாயிருந்து அவனைத் தப்பித்துக் கொண்டு போகவிட்டதற்காக 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டிருந்தார்கள். இது சாஸ்திரிக்குச் சம்மதமில்லை. அவர்கள் தான் முத்தையனைப் பார்த்திருக்கிறார்களாதலால், அவனைப் பிடிப்பதில் அவர்களுடைய உதவி மிகவும் உபயோகமாயிருக்குமென்று அவர் கருதினார். ஆதலின் அவர் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட பிறகுங்கூட, அவர்களை அவர் உபயோகப்படுத்தி வந்தார். அவர்களுடைய முயற்சியினால் திருடன் பிடிபட்டால், மறுபடியும் உத்தியோகம் வாங்கித் தருவதாகவும் வாக்களித்திருந்தார்.
அந்த இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவன் இரண்டு வாரத்துக்கு முன் சென்னைக்கு வந்திருந்தான். சென்னையில் இருந்த அவனுடைய மைத்துனன் வேலை தேடித் தருவதாகச் சொன்னதன் பேரில் அவன் வந்தான். வந்தவன் ஒரு நாள் "சங்கீத சதாரம்" பார்க்கப் போனான். அங்கே, திருடன் வேஷக்காரனைக் கண்டதும் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. "முத்தையன் மாதிரியல்லவா இருக்கிறான்?" என்று நினைத்தான். நினைக்க நினைக்க சந்தேகம் உறுதிப்பட்டது. உடனே, திருப்பரங்கோயிலுக்குத் திரும்பிச் சென்று சாஸ்திரியிடம் தன்னுடைய சந்தேகத்தைத் தெரியப்படுத்தினான்.
சாஸ்திரி முதலில் 'பூ பூ' என்றார். துளிக்கூட நம்பிக்கையில்லாமல் சிரித்துப் பரிகாசம் செய்தார். "திருடனை பிடிக்க உன்னைத்தான் அனுப்பவேண்டும்" என்றார்.
ஆனால் அவர் மனத்திலும் எப்படியோ சந்தேகத்தின் விதை போட்டாய்விட்டது. இரண்டு மாதமாய் முத்தையனுடைய ஆர்ப்பாட்டம் அந்தப் பக்கத்தில் ஒன்றுமே இல்லாததால், அவருடைய சந்தேகம் வளர்ந்து வந்தது. ஆனால், இத்தகைய ஆதாரமற்ற, சிரிப்புக் கிடமான சந்தேகத்தின் மேல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
மைத்துனி பெண்ணின் கல்யாணத்தை வியாஜமாக வைத்துக்கொண்டு, தாமே ஒரு முறை சென்னைக்குப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமா என்று ஒரு யோசனை தோன்றிற்று. இப்படி அவருடைய மனத்திலே உள்ளுணர்ச்சிக்கும், புத்திக்கும் போராட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்திலேதான், மேற்படி பத்திரிகைச் செய்தியை அவர் பார்த்தார். "சரி சரி! இதைப் போய்ப் பார்த்து விட்டு வந்தாலொழிய மனத்தில் அமைதி ஏற்படாது; வேறு எந்த வேலையிலும் மனம் செல்லாது" என்று தீர்மானித்துத்தான் அவர் சென்னைக்குக் கிளம்பி வந்தது.
நாடக மேடையில் திருடன் வந்ததிலிருந்து, அவருடைய தவிப்பு நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. சில சமயம் நாம் எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்; இதோ ஞாபகம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது; ஆனாலும் வருவதில்லை. ரொம்பவும் தெரிந்த விஷயம்; தெளிவான சங்கதி; சந்தேகமே இல்லாத செய்தி; ஆனால் அதென்ன? நெஞ்சாங்குழியில் இருக்கிறது; நினைவுக்கு வரமாட்டேனென்கிறதே! - இப்படி எத்தனையோ தடவைகளில் நாம் தவித்திருக்கிறோமல்லவா? ஸர்வோத்தம சாஸ்திரி இப்போது அந்த நிலைமையில்தான் இருந்தார். "இவன் முத்தையன் தான்; ஆனால் அதை நிச்சயம் செய்வது எப்படி? ஏதோ ஒரு வழி இருக்கிறது. ஆனால் அது என்ன?" சாஸ்திரி தலையைச் சொறிந்து கொண்டார்; நெற்றியை அமுக்கிப் பிடித்துக் கொண்டார். நல்ல வேளையாக அப்போது எல்லாரும் நாடகத்தில் மிகவும் ரஸமான கட்டத்தில் பூரணமாய் ஈடுபட்டிருந்தபடியால், சாஸ்திரியை யாரும் கவனிக்கவில்லை. யாராவது அவருடைய சேஷ்டைகளைக் கவனித்திருந்தால், இவருக்கு என்ன பைத்தியமா என்று தான் யோசிக்க வேண்டியிருந்திருக்கும்.
நாடகத்தில் மிகவும் ரஸமான கட்டம் சதாரமும், திருடனும் சந்திக்கும் இடம்தான். சதாரம் வேஷம் போட்டவனுக்கு ஸ்திரீ வேஷம் வெகு நன்றாய் பலித்திருந்தது. உண்மையில், அந்த வேஷம் போடுகிறவனுடைய பெயர் விளம்பரத்தில் கண்டிராமலிருந்தால், புருஷன் தான் ஸ்திரீ வேஷம் போட்டிருக்கிறான் என்று கருதவே முடியாது. அவனுடைய தோற்றத்தைப் போலவே பேச்சு, நடை, பாவனை எல்லாம் ஸ்திரீக்கு உரியனவாகவே இருந்தன. அவனுடைய கைகளின் ஒவ்வொரு அசைவிலும், உடம்பின் ஒவ்வொரு நெளிவிலும், புருவத்தின் ஒவ்வொரு நெறிப்பிலும், கண்ணின் ஒவ்வொரு சுழற்சியிலும் மெல்லியலாரின் இயற்கை பரிபூரணமாய்ப் பொருந்தியிருந்தது.
முகமூடியணிந்த திருடனைக் கண்டதும் சதாரம் பயந்து போனாள். அவளுடைய முகத்தில், கண்களில், நின்ற நிலையில், உடம்பின் நடுக்கத்தில் - திகைப்பும் பயமும் காணப்பட்டன. அப்போது அவளைப் பார்த்த யாருக்கும் புலியைக் கண்டு வெருண்டு நிற்கும் பெண்மானின் தோற்றம் உடனே ஞாபகம் வராமற் போகாது.
"ஐயோ! நீ யார்?" என்று சதாரம், குடல் நடுக்கத்துடன் கேட்டாள்.
"நானா? நான் மனுஷன்" என்று சொல்லிச் சிரித்தான் திருடன்.
அந்தச் சிரிப்பினால் சிறிது தைரியம் கொண்ட சதாரம், "நீ திருடனில்லையா?" என்றாள்.
"நான் திருடனில்லை, பெண்ணே! நான் கள்ளன்!"
"கள்ளனா? ஐயோ! உன்னைப் பார்த்தால் எனக்குப் பயமாயிருக்கிறது!" என்றாள் சதாரம்.
அப்போது, திருடன் தெம்மாங்கு மெட்டில் ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினான்.
"கண்ணே! உனக்குப் பயமேனோ?"
என்று ஆரம்பித்து, அமர்க்களமாய்ப் பாடினான். தன்னுடைய குல பரம்பரையின் பெருமையையெல்லாம் அவன் எடுத்துச் சொன்னான். தன்னுடைய குலத்தின் ஆதி புருஷன் கிருஷ்ணன் என்னும் கள்ளன் என்று கர்வத்துடன் கூறினான். "அப்பேர்ப்பட்ட கள்ளர் பரம்பரையில் வந்த வீரக்கள்ளன் நான். உனக்குக் கள்ளப் புருஷனாய் வாய்த்திருக்கிறேன்" என்று பாட்டை முடித்தான். அப்படிப் பாட்டை முடிக்கும்போது தன்னுடைய முகமூடியைச் சற்று அவன் விலக்கிச் சொந்த முகத்தைக் காட்டினான்.
அப்போது சதாரம் "ஆ!" என்று கூவி மூர்ச்சையடைந்து கீழே விழுந்தாள். ஆனால் சபையோர் எல்லாரும் அச்சமயம் பிரமாதமான குதூகலம் அடைந்து கை தட்டி ஆர்ப்பரித்தார்கள். அநேகர் "ஒன்ஸ் மோர்" என்று கத்தினார்கள். அவன் திருடனாகையால், முகமூடிக்குப் பின்னால் பயங்கரமான முகம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தவர்களுக்குக் களை சொட்டிய முத்தையனுடைய அழகான முகத்தைக் கண்டதும் அவ்வளவு உற்சாகம் உண்டாயிற்று. அச்சமயம் ஸர்வோத்தம சாஸ்திரியின் முகம் கூடப் பிரகாசம் அடைந்தது. ஆனால் அதற்குக் காரணம் மட்டும் வேறு. திருடனுடைய முகமூடி விலகிய அதே சமயத்தில் சாஸ்திரி தம்முடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஒரு வழி கண்டுபிடித்துவிட்டார்! "அபிராமி! அபிராமி!" என்று அவருடைய வாய் அவரை அறியாமலே முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

35.சகோதரி சாராதமணி
ஸர்வோத்தம சாஸ்திரிக்கு அன்றிரவெல்லாம் தூக்கம் வரவில்லை. கதைகளில் வரும் காதலர்களைப் போல் "எப்போது இரவு தொலையும், பொழுது விடியும்?" என்று அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். காலையில் முதல் காரியமாகத் தமது மனைவியை அழைத்து, "நேற்றிரவு ஒரு நாடகத்துக்குப் போயிருந்தேன். ரொம்ப நன்றாயிருந்தது. அப்படிப்பட்ட நாடகம் நான் பார்த்ததேயில்லை. இன்று இரவு உன்னையும் அழைத்துப் போக உத்தேசித்திருக்கிறேன், வருகிறாயா?" என்றார்.
"உங்களுக்கே இவ்வளவு கருணை பிறந்து ஓரிடத்துக்குக் கூட்டிக் கொண்டு போகிறேனென்று சொல்லும் போது, நான் மாட்டேனென்றா சொல்வேன்? அதற்கென்ன, போவோம். ஆனால், இன்றைக்கு அந்தப் பெண் அபிராமியைப் பார்க்க வேண்டாமா?" என்றாள் மீனாட்சி அம்மாள்.
"பார்த்தால் போகிறது. ஏன் அவளையும் நாடகத்துக்குக் கூட்டிக்கொண்டு போக வேண்டுமென்றாலும் போவோம்."
"என் மனத்திலிருக்கிறதை அப்படியே தெரிந்து கொண்டு விட்டீர்களே! ஆனால் உங்கள் தமக்கை சாரதாமணி என்ன சொல்வாரோ என்னமோ? ஒரு மாதிரி கிறுக்காயிற்றே? அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்று சொன்னாலும் சொல்வார்."
"ஆமாம்; அவளிடம் இதைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. 'ஒரு நாளைக்கு எங்களுடன் இருக்கட்டும். நாளைக்கு கொண்டு வந்து விட்டுவிடுகிறோம்' என்று சொன்னால் போயிற்று."
"போலீஸ்காரர்களுக்கு இதெல்லாம் சொல்லியா கொடுக்க வேணும்?" என்றாள் அவருடைய பத்தினி.
*****
சாஸ்திரி அன்றெல்லாம் வெகு சுறுசுறுப்பாக இருந்தார். நாடகக் கொட்டகைக்குப் போய்ப் பத்துப் பதினைந்து வரிசைக்குப் பின்னால் மூன்று ஸீட்டுகள் ரிஸர்வ் பண்ணினார். முன் வரிசையில் இடம் காலி இருக்கிறது என்று சொல்லியும், அவர் பிடிவாதமாக "வேண்டாம்; பின் வரிசையில் தான் வேண்டும்" என்று சொல்லிவிட்டார்.
பிறகு அவர் போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் போய், கமிஷனரைப் பேட்டி கண்டு, வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். இப்படிப் பல காரியங்கள் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
சாயங்காலம் அவரும் அவர் மனைவியும் சரஸ்வதி வித்யாலயத்துக்குச் சென்றார்கள். அந்த வித்யாலயத்தின் தலைவி சகோதரி சாரதாமணி நமது சாஸ்திரியினுடைய ஒன்றுவிட்ட தமக்கை. அவருடைய தகப்பனார் ஹைகோர்ட்டு ஜட்ஜாயிருந்து காலஞ் சென்றவர். துரதிர்ஷ்டவசமாக சாரதாமணியின் மணவாழ்க்கை அவ்வளவு சந்தோஷமானதாயில்லை. கல்யாணமான இரண்டு மூன்று வருஷத்துக்கு அப்புறம் அவருடைய கணவன் யாரோ ஒரு சட்டைக்காரியுடன் கப்பலேறிச் சிங்கப்பூருக்குப் போய்விட்டான். அப்புறம் அவன் திரும்பி வரவேயில்லை.
இவ்வாறு பெரும் துர்ப்பாக்கியத்துக்காளான சாரதாமணிக்கு அவருடைய தகப்பனார் நிறைய சொத்துக்கள் வைத்துவிட்டுக் காலஞ்சென்றார். சாரதாமணியும் நாளடைவில் தம்முடைய துக்கத்தை மறந்து சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். தம்மைப் போலவே பொது ஊழியத்தில் பற்றுக் கொண்ட இன்னும் சில ஸ்திரிகளுடன் சேர்ந்து இந்தச் சரஸ்வதி வித்யாலத்தை அவர் ஆரம்பித்தார். நாளடைவில் மற்றவர்களுடைய சிரத்தை குறைந்து போய்விட வித்யாலயத்தின் பொறுப்பு முழுவதும் கடைசியாக அவர் மேலேயே சார்ந்துவிட்டது.
அப்படிச் சார்ந்தது முதல், வித்யாலத்தில் அவருடைய சிரத்தையும் பன் மடங்கு அதிகமாயிற்று. அவரது உலகமே வித்யாலயத்துக்குள் அடங்கிவிட்டதென்று கூறலாம். ஒரு சங்கீத வித்வான் நன்றாய்ப் பாடுகிறார் என்று யாராவது சொன்னால், "அவர் நமது வித்யாலயத்துக்கு ஒரு 'பெனிபிட் பர்பார்மன்ஸ்' (உதவிக் கச்சேரி) கொடுப்பாரா?" என்று கேட்பார். யாராவது ஒரு தலைவர் சென்னைக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டால், அவரை வித்யாலயத்துக்கு வரச் செய்ய உடனே முயற்சி தொடங்கிவிடுவார். யாராவது ஒரு வக்கீலுக்கு நிறைய வரும்படி வருகிறதென்று கேள்விப்பட்டால், "அவரிடம் நமது வித்யாலயத்துக்கு ஏதாவது நன்கொடை வசூலிக்க வேண்டுமே!" என்று யோசனை செய்வார். யாராவது ஒரு பெண் முதல் வகுப்பில் பி.ஏ. பாஸ் செய்தாள் என்று அறிந்தால், "அவளை நமது வித்யாலயத்தில் வாத்தியாராகச் செய்துவிட்டால் தேவலை" என்று தான் எண்ணமிடுவார்.
*****
இத்தகைய அவருடைய சுபாவத்தை நன்கு அறிந்தவராதலால், சாஸ்திரி பேச்சின் ஆரம்பத்திலேயே, "சாரதா! இந்த வித்யாலயத்தைப் பார்க்கும் போது நாங்கள் எல்லோரும் எதற்காக ஜீவித்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. இப்பேர்ப்பட்ட உத்தமமான காரியத்துக்கு ஒரு உதவியும் செய்யாத ஜன்மமும் ஒரு ஜன்மமா?" என்று புகழுரையும் ஆத்ம நிந்தனையும் கலந்து கூறினார்.
"அதென்ன அண்ணா, அப்படிச் சொல்கிறாய்? நீயுந்தான் பெரிய உதவி செய்திருக்கிறாயே? அந்தப் பெண் அபிராமியை எங்கள் வித்யாலத்துக்கு அனுப்பியதே ஒரு உதவிதானே?" என்றார் சகோதரி சாரதாமணி.
"ஆனால் அந்த மாதிரி உதவி இன்னும் எத்தனையோ பேர் உங்களுக்குச் செய்யத் தயாராயிருப்பார்கள். பெண்களை அனுப்பி வைப்பதுதானா கஷ்டம்?" என்றாள் மீனாட்சி.
"அப்படியில்லை, அம்மா! அபிராமியைப் போன்ற புத்திசாலிப் பெண்ணை அனுப்பி வைத்ததே ஒரு உதவி தான்."
"நிஜமாகவா? அவள் சமர்த்தாயிருக்கிறாளா?"
"அபிராமி ரொம்ப சமர்த்து. வித்யாலயத்திலேயே சங்கீதத்தில் அவள் தான் முதல். இப்போது வித்யாலயத்துப் பெண்களைக் கொண்டு ஒரு நாடகம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு வேண்டிய பாட்டுக்கள் எல்லாம் அவள்தான் இட்டுக் கட்டுகிறாள். அடாடா! எவ்வளவு நன்றாயிருக்கின்றன!..."
"இதைக் கேட்க ரொம்பத் திருப்தியாயிருக்கிறது, அக்கா! எப்படியாவது அவள் சந்தோஷமாயிருக்க வேண்டும். இன்றைக்கு ஒரு நாள் அவள் எங்களோடு இருக்கட்டுமே. அழைத்துக் கொண்டு போய் நாளைக்குக் கொண்டுவிட்டு விடுகிறோம்" என்றார் சாஸ்திரியார்.
சாரதாமணி, "அதற்கென்ன? பேஷாகச் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு, அபிராமியை அழைத்து வர ஒரு பெண்ணை அனுப்பிவைத்தார்.
பிறகு, "அந்தப் பெண் விஷயத்தில் ஒரே ஒரு சிரமம் இருக்கிறது. திடீர் திடீரென்று நினைத்துக் கொண்டு அழத் தொடங்கிவிடுகிறாள். அப்போதெல்லாம் அவளைச் சமாதானம் செய்வது பெருங்கஷ்டமாயிருக்கிறது - அவளுடைய அண்ணன் சங்கதி என்ன ஆயிற்று?" என்று கேட்டார்.
"இன்னும் அகப்படவில்லை!" என்றார் சாஸ்திரி
"அதற்கென்ன, ஒரு நாளைக்குப் பிடித்து அந்தப் பையனை ஜெயிலுக்கு அனுப்பி விடுவீர்கள். உடனே போலீஸ் இலாகாவுக்கு ரொம்பக் கிதாப்பு வந்துவிடும்..."
"பின்னே என்ன சொல்கிறாய், அக்கா! திருடர்களைப் பிடித்து ஜெயிலுக்கு அனுப்பாவிட்டால், சமூகம் எப்படி நடைபெறும்?"
"ஆமாம்; திருடர்களையெல்லாம் பிடித்து ஜெயிலுக்கு அனுப்புவதென்றால், முதலில் இந்த ஊரிலே இருக்கிற ஐகோர்ட் ஜட்ஜுகள், வக்கீல்கள், உத்தியோகஸ்தர்கள், சட்டசபை மெம்பர்கள் எல்லாரையும் ஜெயிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நீயும் நானுங்கூடப் போக வேண்டியது தான். மகாத்மா காந்தி என்ன சொல்கிறார்? நம்முடைய கையால் உழைத்துப் பாடுபட்டுச் சம்பாதிப்பதைத் தவிர பாக்கி விதத்தில் பெறும் சொத்தெல்லாம் திருட்டுத்தான் என்கிறார். அந்தப்படி பார்த்தால் இன்றைய தினம் பங்களாக்களில் வாழ்ந்து மோட்டார் சவாரி செய்து கொண்டிருப்பவர்களெல்லாம் முதலிலே ஜெயிலுக்குப் போயாகவேண்டும், இல்லையா?"
"சாரதா! அவ்வளவு பெரிய தத்துவம் நமக்குக் கட்டி வராது. அது வருகிறபோது வரட்டும். ஆனால் இன்னொரு விதத்தில் நீ சொல்கிறதை நான் ஒப்புக்கொள்கிறேன். சாதாரணமாய் ஜெயிலுக்குப் போகிற திருடர்களை விட வெளியில் இருக்கும் திருடர்கள் தான் அதிகம். இதைக்கேள். எங்கள் ஜில்லாவில் ராவ் சாகிப் சட்டநாத உடையார் என்று ஒரு பெரிய மனுஷர் இருக்கிறார். அவர் சுங்கத் திருடர் என்பது எல்லாருக்கும் தெரியும். காரைக்காலிலிருந்தும் புதுச்சேரியிலிருந்தும் வரி கொடாமல் சாமான் கொண்டு வருவதுதான் அவருக்கு வேலை. இதிலேயே கொழுத்த பணக்காரராகி விட்டார். ஆனாலும் அவரை இதுவரையில் ஒன்றும் செய்ய முடியவில்லை. முதலிலே போலீஸையே கையில் போட்டுக் கொண்டு விடுகிறார். அது முடியாமற் போனால் - கொஞ்சம் மனச்சாட்சியுள்ள போலீஸ்காரன் நடவடிக்கை எடுக்க முயன்றால், மாஜிஸ்ட்ரேட்டும் யோக்யராயிருந்து விட்டால் உடையார் இன்னும் மேலே போய்க் காரியத்தை ஜயித்துக் கொண்டு வந்து விடுகிறார். எங்களுக்குத்தான் அசட்டுப் பட்டம் கிடைக்கிறது. இரண்டு மாதத்துக்கு முன்பு நடந்த ஒரு மோட்டார் கேஸில் அவர் கலந்திருந்ததற்கு நல்ல ருசு இருந்தது. ஆனாலும் பிரயோசனமில்லை. இரண்டு நாளைக்கு முன்பு அவருக்கு ஆனரரி மாஜிஸ்ட்ரேட் வேலை கொடுத்திருப்பதாய்ப் பத்திரிகைகளிலே வெளியாகியிருந்தது. இதற்கு என்ன சொல்கிறாய்?"
"என்னத்தைச் சொல்கிறது? உங்கள் உடையாரைப் போன்ற எத்தனையோ உடையார்கள் நமது சமூகத்தில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் விமோசனம் ஒன்றே ஒன்றுதான்; மகாத்மா சொல்கிறபடி அவரவர்களும் கையால் உழைத்து ஜீவனம் செய்யவேண்டும். ஒருவருடைய உழைப்பைக் கொண்டு இன்னொருவர் வாழ்வு நடத்துவது என்பது கூடாது. இந்த நோக்கத்துடனேதான், வித்யாலயத்தில் எல்லாப் பெண்களுக்கும் ஏதாவது ஒரு கைத்தொழில் கற்றுக் கொடுக்கிறோம். அவர்களுடைய கைவேலைகளையெல்லாம் நீங்கள் பார்க்கவில்லையே? வாருங்கள் காட்டுகிறேன்" என்று சகோதரி சாரதாமணி சொல்லி, சாஸ்திரியையும் அவருடைய மனைவியையும் வித்யாலயத்தைச் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றார்.

36.குயில் பாட்டு
அபிராமியை நாம் பார்த்து ஒரு வருஷத்திற்கு மேலாகிவிட்டதல்லவா? திருப்பரங்கோவிலிலிருந்து சென்னைக்குப் போகும் ரயிலில் ஸ்ரீமதி மீனாட்சி அம்மாளுடன் அவளை நாம் கடைசியாகப் பார்த்தோம். இப்போது, சரஸ்வதி வித்யாலயத்தின் மதில் சூழ்ந்த விஸ்தாரமான தோட்டத்தின் ஒரு மூலையில், பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த ஒரு மர மல்லிகை மரத்தின் அடியில், ஏறக்குறைய சம வயதுடைய ஒரு தோழியுடன் அவளைக் காண்கிறோம். ஒரு நிமிஷம் அபிராமியை அடையாளங் கண்டுபிடிப்பதுகூட நமக்குக் கஷ்டமாயிருக்கிறது. முன்னே அவளை நாம் பார்த்த போது இன்னும் குழந்தையாகவே இருந்தாள். இப்போது யுவதியாகி விட்டாள். முன்னே பட்டிக்காட்டுப் பெண்ணைப்போல் பாவாடை, தாவணி அணிந்து கொண்டிருந்தாள். இப்போது காலேஜ் மாணவியைப் போல் ஜோராகப் பின்னால் தலைப்புத் தொங்கவிட்டுப் புடவை உடுத்திக் கொண்டிருந்தாள். தலை மயிரைக் கோண வகிடு பிளந்து தளர்ச்சியாகப் பின்னி விட்டுக் கொண்டிருந்தாள். முகத்திலே இருந்த குறுகுறுப்பு மட்டும் அப்படியே இருந்தது. எதைப் பார்த்தாலும், எதைக் கேட்டாலும், அதிசயத்துடன் மிரண்டு விழிக்கும் கண்களும் அப்படியே மாறுதலின்றி இருந்தன.
அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு கிணறும், அதைச் சுற்றிச் சில கமுகு மரங்களும் இருந்தன. அந்த மரங்களில் ஒன்றிலிருந்து ஒரு குயில் 'கக்கூ' 'கக்கூ' என்று கூவிற்று.
"அபிராமி! பிலஹரியில் ஒரு குயில் பாட்டுப் பாடுவாயே! அதைப் பாடு" என்றாள் லலிதா.
ராகம்: பிலஹரி
தாளம் : ஆதி
வேலனையே அழைப்பாய்-விந்தைக் குயிலே
கோலக் கிளியைத் துணைகூட்டிச் சென்றாகிலுமென் (வேல)
நீல வெளிதனிலே நிமிர்ந்து பறந்து பாடி
நேரஞ் செய்யாமலிருந்த நிமிஷம் எழுந்துவர (வேல)
சோலையழகும் சொர்ணம் ஓடி ஒளிந்து பாயும்
ஓலைக் குருத்தும் தென்னம் பாளை வெடித்த பூவும்
மாலை வெயிலும் மஞ்சள் கோலமுங் கண்டு மனம்
பாலித்தருள் செய் யென்றிப் பேதையுரைத்ததாக (வேல)
நெடிது வளர்ந்து அடர்த்தியாகத் தழைத்திருந்த மர மல்லிகை மரத்தின் மேல் சற்று பலமான காற்று அடிக்க அதிலிருந்து புஷ்பங்கள் பொலபொலவென்று உதிர்ந்து, அபிராமியின் மேலும், அவள் தோழியின் மேலும் விழுந்தன.
"பார் அபிராமி! உன் மேல் புஷ்பமாரி பெய்கிறது. உன்னுடைய பாட்டைக் கேட்டுவிட்டுத் தேவர்கள்தான் பூ மழை பெய்கிறார்கள் போலிருக்கிறது!" என்றாள் லலிதா.
இப்படிச் சொன்னவள், அபிராமியின் கண்களில் ஜலம் துளித்திருப்பதைக் கண்டு மனம் கலங்கி, "இதென்ன அபிராமி! உன் கண்களில் ஏன் ஜலம் வருகிறது? இவ்வளவு உருக்கமாய்க் கூப்பிட்டும் அந்த வேலன் வரவில்லையேயென்றா?" என்பதாகப் பாதிக் கவலையுடனும் பாதி பரிகாசமாகவும் லலிதா கேட்டாள்.
"லலிதா! திருப்பரங்கோயிலில் நானும் என் அண்ணனும் சந்தோஷமாயிருந்த காலத்தில் இந்தப் பாட்டை நான் இட்டுக் கட்டினேன். அதைத் திருப்பித் திருப்பிப் பாடச் சொல்லிக் கேட்டு அவன் சந்தோஷப்படுவான். கடைசி நாள் அன்றைக்குக் கூட..." என்று அபிராமி கூறி மேலே பேச முடியாமல் விம்மினாள்.
"சற்று இரு, அபிராமி! - ஏதோ சத்தம் கேட்டதே! - அது என்ன?" என்று லலிதா நாலா பக்கமும் கலக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை.
"வேறு யாரோ விம்மி அழுதாற் போலிருந்தது. என்னுடைய பிரமையோ, அல்லது பக்கத்துச் சாலையில் தான் யாராவது அழுதுகொண்டு போகிறார்களோ?" என்றாள்.
அபிராமிக்கு என்னமோ அன்று பழைய ஞாபகங்கள் பொங்கிக் கொண்டு வந்தன. "லலிதா! பாவி நான் இங்கே சௌக்கியமாயிருக்கிறேன். சந்தோஷமாய் ஆடிப்பாடிக் கொண்டு காலங் கழிக்கிறேன். முத்தையன் எந்தக் காட்டில் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ? ஐயோ! என் அண்ணன்! உலகத்தில் ஒருவருக்கும் ஒரு தீங்கு நினைக்காதவன். அவனுக்கு வந்த கஷ்டமெல்லாம் என்னால்தான். ஆனாலும் நான் இங்கே சுகமாயிருக்கிறேன். பகவானே!" என்று பரபரப்புடன் பேசிக் கொண்டு போனாள்.
"ஏன் அபிராமி உன்னை நீயே அநாவசியமாய் நொந்து கொள்கிறாய்? உன் அண்ணனுடைய தலைவிதி அது. திருட்டுக் கொள்ளையில் ஒருவன் இறங்கின பிற்பாடு அவனைப்பற்றிக் கவலைப்படுவதில் என்ன பிரயோஜனம்?"
"லலிதா! உனக்கென்ன தெரியும்? என் அண்ணனா திருடன்? அவனா கொள்ளையடிக்கக் கூடியவன்! ஒரு நாளுமில்லை. எல்லாம் பொய். நான் பிறந்த வேளை, அவன் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமென்று ஏற்பட்டிருக்கிறது."
*****
அவள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, தூரத்திலிருந்து, "அபிராமி! அபிராமி!" என்று கூப்பிடும் குரல் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பெண் வந்து, "அபிராமி இங்கே என்ன செய்கிறாய்? உன்னைத் தோட்டமெல்லாம் தேடிக்கொண்டு வருகிறேன். யாரோ திருப்பரங்கோயிலிலிருந்து மனுஷாள் வந்திருக்கிறார்களாம். அம்மாள் உன்னை உடனே கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்கள்.
சாஸ்திரியும் அவர் மனைவியும் அபிராமியைச் சந்தித்தது குறித்து அதிகம் விஸ்தரிக்க வேண்டிய அவசியமில்லை. எத்தனையோ தினங்களுக்குப் பிறகு தன்னுடைய ஊர் மனுஷ்யர்களைக் கண்டதும் அபிராமிக்குச் சந்தோஷமாய்த் தானிருந்தது. அவர்கள் தங்களுடன் ஒரு நாள் இருக்கும்படி அழைத்தபோது உற்சாகத்துடன் சென்றாள். நாடகம் பார்க்கப் போகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.
அன்றிரவு நாடகக் கொட்டகையில் ஏற்கனவே 'ரிசர்வ்' செய்திருந்த இடங்களில் மூன்று பேரும் சென்று உட்கார்ந்தார்கள்.
உட்கார்ந்தவுடனே சாஸ்திரி சுற்று முற்றும் பார்த்தார். அவருக்குப் பின்னால் இரண்டு வரிசை தள்ளி நாலைந்து ஆசாமிகள் சேர்ந்தாற்போல் உட்கார்ந்திருந்தார்கள். குறிப்பிட்ட சங்கேதத்தின் மூலம் அவர்கள் போலீஸ்காரர்கள் என்பது அவருக்குத் தெரிந்து போயிற்று.
அபிராமி நாடகத்தின் ஆரம்ப முதலே மிக்க ஆவலுடன் பார்த்து வந்தாள். ஆனால் மேடைக்குத் திருடன் வந்ததிலிருந்து அவள் மகுடியின் சங்கீதத்தினால் கட்டுண்ட பாம்பைப் போல் ஆனாள். கண்ணைக்கூடக் கொட்டாமல் அவனைப் பார்த்த வண்ணமிருந்தாள். இடையிடையே அவளுடைய தேகத்தில் இன்னதென்று விவரிக்க முடியாத படபடப்பு உண்டாயிற்று. அப்போதெல்லாம், பக்கத்திலிருந்த மீனாட்சி அம்மாளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

37.கமலபதி
"கண் எல்லாவற்றையும் பார்க்கிறது; காது பேசுவோர் வார்த்தைகளை எல்லாம் கேட்கிறது; வாய், காரியம் இருக்கிறதோ இல்லையோ, பலரிடத்திலும் பேசுகிறது. ஆனால் கண்ணானது ஒருவரைப் பார்க்கும் போதும் மற்றயாரைப் பார்க்கும் போதும் அடையாத இன்பத்தை அடைகிறது. அவர் பேசுவது சாமானிய விஷயமானாலும், அவருடைய குரலில் விசேஷமான இனிமையிராவிட்டாலும், அவருடைய வார்த்தையைக் காது, தேவாமிருதத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரிடத்தில் பேசும்போது வாய் குளறுகிறது; நாக்கு கொஞ்சுகிறாது; இதெல்லாம் அன்பின் அடையாளம். ஆனால் இவ்வன்பு எப்படிப் பிறக்கிறது என்றாலோ, அது தேவரகசியம் - மனிதரால் சொல்ல முடியாது" என்று லைலா மஜ்னூன் கதையாசிரியர் வ.வெ.சு. ஐயர் சொல்கிறார். காதலுக்கு மட்டுமன்றிச் சிநேகத்துக்கும் இது ஒருவாறு பொருந்துவதைக் காண்கிறோம். சில பேரை வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பழகிக்கொண்டிருந்தாலும் அவர்களுடன் நமக்கு அந்தரங்கச் சிநேகிதம் ஏற்படுவதில்லை. ஆனால் வேறு சிலரை முதல் தடவை பார்த்தவுடனேயே நமக்குப் பிடித்துப் போய் விடுகிறது. பிறகு அவர்களிடமுள்ள குறைகளையெல்லாம் நாம் அலட்சியம் செய்யத் தயாராகி விடுகிறோம். அவற்றுக்குச் சமாதானம் கண்டுபிடிக்கவும் முயல்கிறோம். ஒருவர் என்னதான் குரூபியாகட்டும் அவரை நமக்குப் பிடித்துப் போனால் "முகம் எப்படியிருந்தாலென்ன? குணத்தையல்லவா பார்க்கவேண்டும்? என்ன சாந்தம்! என்ன அடக்கம்!" என்று எண்ணி மகிழ்கிறோம். படிப்பில்லாத நிரக்ஷரகுக்ஷியாயிருக்கட்டும், அவரிடம் பிரியம் உண்டாகிவிட்டால், "படிப்பாவது, மண்ணாங்கட்டியாவது? படித்தவர்கள் பரம முட்டாள்களாயிருக்கிறார்கள். இவரிடம் தான் என்ன புத்திசாலித்தனம்? என்ன சாதுர்யமாய்ப் பேசுகிறார்?" என்றெல்லாம் எண்ணிச் சந்தோஷப்படுகிறோம்.
இப்படி உண்டாகும் சிநேகத்தின் இரகசியந்தான் என்ன? ஏன் சிலர் மட்டும் வெகு சீக்கிரத்தில் பிராண சிநேகிதர்களாகி விடுகிறார்கள்? அவர்களைப் பார்ப்பதிலும் ஏன் அவ்வளவு ஆவல் உண்டாகிறது. நமது அந்தரங்க மனோரதங்களையும், நம்பிக்கைகளையும் அவர்களிடம் சொல்லவேண்டுமென்று ஏன் தோன்றுகிறது? "பூர்வ ஜன்மத்துச் சொந்தம்" "விட்டகுறை தொட்டகுறை" என்றுதான் அதற்குக் காரணம் சொல்ல வேண்டியிருக்கிறது.
*****
முத்தையனுக்கும், கமலபதிக்கும் ஏற்பட்ட சிநேகத்தை வேறு விதமாய்ச் சொல்வதற்கில்லை. கமலபதி, மதுரை ஒரிஜினல் மீனாட்சி நாடகக் கம்பெனியின் பிரசித்த ஸ்திரீ பார்ட் நடிகன். முத்தையன் மோட்டார் விபத்திலிருந்து தப்பிச் சென்ற இரவு ஏறிய ரயில் வண்டியிலேதான் முதன் முதலாக அவனைச் சந்தித்தான். பார்த்தவுடனே ஒருவருக்கொருவர் பிடித்துப் போய்விட்டது. கமலபதியின் வற்புறுத்தலின் பேரிலேயே முத்தையனை நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள்.
சில தினங்களுக்குள் அவர்களுடைய நட்பு முதிர்ந்து இணைபிரியாத தோழர்கள் ஆயினர். முத்தையன் ஒரு நாள் தன்னுடைய கதையையெல்லாம் உள்ளது உள்ளபடி கமலபதியிடம் சொன்னான். கப்பல் ஏறிப் போய்விடுவதென்ற தீர்மானத்தையும், அதற்கு முன்னால் அபிராமியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையையும் தெரிவித்தான். கமலபதி அவனுக்கு உதவி செய்வதாக வாக்கு அளித்தான். அத்துடன் அந்த நாடகக் கம்பெனியே கூடிய சீக்கிரம் சிங்கப்பூருக்குப் போகப் போவதாகவும் அப்போது சேர்ந்தாற்போல் முத்தையன் போய்விடலாம் என்றும் கூறினான்.
பின்னர், கமலபதி சென்னையிலுள்ள பெண்களின் கல்வி ஸ்தாபனம் ஒவ்வொன்றிற்கும் போகத் தொடங்கினான். தனக்கு விதவையான தங்கை ஒருத்தி இருப்பதாகவும், அவளை ஏதாவது ஒரு பெண் கல்வி ஸ்தாபனத்தில் சேர்க்க வேண்டுமென்றும், அதற்காக விவரங்கள் தெரிந்து கொள்ள வந்ததாகவும் அவன் ஒவ்வோரிடத்திலும் கூறினான். அத்துடன், அம்மாதிரி பள்ளிக்கூடங்களில் நடக்கும் நாடகங்கள், கதம்பக் கச்சேரிகள் முதலியவற்றுக்கும் தவறாமல் போய் வந்தான். எல்லாமும் அபிராமியைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் தான் என்று சொல்ல வேண்டியதில்லை. கடைசியாக, சரஸ்வதி வித்யாலயத்தின் தலைவி, சகோதரி சாரதாமணி அம்மையுடன் அவன் பேசிக்கொண்டிருந்த போது, தற்செயலாக அபிராமி அங்கு வரவே, முகஜாடையிலிருந்து அவள் முத்தையன் தங்கையாய்த்தான் இருக்க வேண்டுமென்று அவன் ஊகம் செய்தான். சாரதாமணி அவளை "அபிராமி" என்று கூப்பிட்டதும் அவனுடைய சந்தேகம் முழுதும் நீங்கி விட்டது. மிகவும் குதூகலத்துடன் அன்று திரும்பிச் சென்று, "பலராம்!* உன்னுடைய தங்கையைக் கண்டு பிடித்து விட்டேன்" என்று உற்சாகமாய்க் கூறினான். அதைத் தொடர்ந்து மெதுவான குரலில் "என்னுடைய காதலியையும் கண்டுபிடித்தேன்" என்று சொன்னான்.
[* முத்தையன் தன்னுடைய பெயரை மாற்றி "பலராம்" என்று கூறியிருந்தான். நாடக விளம்பரங்களில் அந்தப் பெயர் தான் அச்சிடப்பட்டிருந்தது. கமலபதிக்கு அவனுடைய சொந்தப் பெயர் தெரிந்த பிறகும், சந்தேகம் ஏற்படாதபடி "பலராம்" என்றே அழைத்து வந்தான்.]
முத்தையனுக்கு இருந்த பரபரப்பில் கமலபதி பின்னால் சொன்னதை அவன் கவனிக்கவில்லை.
*****
அபிராமியை முத்தையன் எப்படிப் பார்ப்பது என்பதைப் பற்றி அவர்கள் யோசிக்கத் தொடங்கினார்கள். நேரே போய்ப் பார்த்தால், கட்டாயம் அபிராமி முத்தையனைக் கண்டதும், "அண்ணா!" என்று அலறிவிடுவாள். அபாயம் நேர்ந்து விடும். கமலபதி அவளை அழைத்து வரலாமென்றால், அது எப்படி முடியும்? அந்நியனாகிய அவனுடன் அபிராமியை அனுப்பி வைக்க வித்யாலயத்தின் தலைவி சம்மதிப்பாளா? அபிராமிதான் வருவாளா?
ஏதேதோ யோசனைகளெல்லாம் செய்தார்கள். யுக்தியெல்லாம் பண்ணினார்கள். ஒன்றும் சரியாய் வரவில்லை.
*****
முத்தையனுக்கு அபிராமி படிக்கும் பள்ளிக்கூடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டாவது வரவேண்டும் என்று ஆவல் இருந்தது. கமலபதி அதெல்லாம் கூடாது என்று தடுத்து வந்தான். முத்தையனுடைய ஆவல் மேலும் மேலும் வளர்ந்தது. ஒரு நாள் கமலபதிக்குக் கூடச் சொல்லாமல் வெளியே போனான்.
முத்தையன் அன்று திரும்பி வந்ததும், அவசரமாகக் கமலபதியை அழைத்துத் தனி இடத்துக்குச் சென்று "கமலபதி நான் அபிராமியைப் பார்த்து விட்டேன்" என்றான். அவனுடைய கண்களில் ஜலம் ததும்பிற்று.
"ஐயோ! என்ன காரியம் செய்தாய்? இப்படிப் பண்ணலாமா?" என்று கமலபதி கவலையுடன் கேட்டான்.
"கமலபதி! நான் இன்றைக்கு அவளைப் பார்த்ததே நல்லதாய்ப் போயிற்று. இனிமேல் எனக்கு அத்தகைய சந்தர்ப்பம் கிடைக்குமோ, என்னமோ?" என்றான் முத்தையன்.
பிறகு, அவன் அன்று சாயங்காலம் நடந்ததையெல்லாம் விவரமாய்க் கூறினான். அபிராமியின் பள்ளிக்கூடத்தைத் தூரத்தில் இருந்து பார்த்து விட்டாவது வருகிறதென்றுதான் கமலபதியிடம் சொல்லிக் கொள்ளாமல் போனதாகவும், பள்ளிக்கூடத்து மதிற்சுவரைச் சுற்றி வருகையில்,
"வேலனையே அழைப்பாய் விந்தைக் குயிலே"
என்ற பாட்டை அபிராமியின் குரலில் கேட்டுப் பிரமித்து நின்றதாகவும், மதில் சுவரின் மேலாக எட்டிப் பார்த்த போது, மருதாணிப்புதர்களுக்கு அப்புறத்தில் மரமல்லிகை மரத்தடியில் அபிராமியும் இன்னொரு பெண்ணும் இருந்ததாகவும், அப்பால் போக கால் எழாமல் தான் அங்கேயே நின்றதாகவும் கூறினான்.
"கமலபதி! என் மனம் இன்று தான் ஆறுதல் பெற்றது. அபிராமியை நான் பார்த்துவிட்டேன். அவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும் அறிந்தேன். என்னை அவள் திருடன் என்று வெறுக்கவில்லை. என்னிடத்தில் அவளுடைய அன்பும் மாறவில்லை. இனிமேல் எனக்கு வேறு என்ன வேண்டும்...?"
"கல்யாணியைத் தவிர!" என்றான் கமலபதி.
முத்தையன் பெருமூச்சு விட்டான். "கமலபதி! நீ எனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும்" என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
"ஒன்றாய்ப் போவானேன்? எத்தனை வேணுமானாலும் தருகிறேன்."
"தயவு செய்து இப்போது விளையாட்டுப் பேச்சு வேண்டாம், கமலபதி! புராணங்களில் சொல்வார்களே, இடது கண் துடிக்கிறது, இடது தோள் துடிக்கிறாது என்றெல்லாம், அப்படியொன்றும் எனக்குத் துடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ விபரீதம் வரப்போகிறதென்று மட்டும் என் மனது சொல்கிறது. இதைக்கேள், அபிராமியும் அவள் தோழியும் பேசிக் கொண்டிருந்தார்கள் அல்லவா? நானும் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேனல்லவா? அப்போது இன்னொரு பெண் வந்து, 'அபிராமி உன்னைக் கூப்பிடுகிறார்கள்! யாரோ திருப்பரங்கோவிலிலிருந்து உன்னைப் பார்க்க மனுஷாள் வந்திருக்கிறார்களாம்' என்றாள். உடனே அபிராமி எழுந்து போனாள். அதைக் கேட்டது முதல் என் மனத்தில் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது. திருப்பரங்கோவில் மனுஷர்கள் இப்போது எதற்காக இங்கே வரவேணும்?"
கமலபதி சிரித்தான். "எத்தனையோ உற்பாதங்கள், அபசகுனங்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன். இது எல்லாவற்றையும் தூக்கி அடிப்பதாயிருக்கிறது" என்றான்.
முத்தையன், "அது எப்படியாவது இருக்கட்டும். என்னுடைய பயம் பொய்யாய்ப் போனால் ரொம்ப நல்லது. ஒரு வேளை நிஜமானால், என்னைப் போலீஸார் பிடித்து விட்டால், அல்லது நான் இறந்து போனால், அபிராமியை நீதான் காப்பாற்ற வேணும். கமலபதி அவளுக்கு வேறு திக்கே கிடையாது. அப்படி காப்பாற்றுவதாக எனக்கு வாக்குறுதி கொடுப்பாயா?" என்று கேட்டான்.
அப்போது கமலபதி, "கடவுள் சாட்சியாய் அபிராமியை நான் காப்பாற்றுகிறேன், பலராம்! பாதிக் கல்யாணம் ஆகிவிட்டது - அவளைக் காப்பாற்ற எனக்குப் பூர்ண சம்மதம். என்னைக் காப்பாற்ற அவள் சம்மதிக்க வேண்டியதுதான் பாக்கி!" என்றான்.

38."ஐயோ! என் அண்ணன்!"
அன்றிரவு வழக்கம் போல், "சங்கீத சதாரம்" நாடகம் நடந்து கொண்டிருந்தது. கமலபதி சதாரம் வேஷத்தில் மேடையில் வந்து நடித்துக் கொண்டிருந்த போது, தற்செயலாக அவனுடைய பார்வை அபிராமியின் மீது விழுந்தது. ஒரு நிமிஷம் அவன் மெய்ம்மறந்து போனான். அச்சமயம் மேடையில் சொல்ல வேண்டியதைக் கூட மறந்து போய் நின்றான். கோமுட்டி செட்டியாரின் மகன் வேஷம் போட்டவன் கெட்டிக்காரனாதலால், அவன் கமலபதியின் கால் விரலைத் தன் கால் விரலால் அமுக்கி, "என்ன நான் கேட்கிறேன், சும்மா இருக்கிறாயே?" என்று கூறி, மறுபடியும் கேள்வியைப் போட்ட போதுதான் கமலபதிக்கு நாடகக் கட்டம் ஞாபகம் வந்தது. அந்தக் காட்சி முடிந்து திரை விட்டதும், கமலபதி முத்தையனிடம் அவசரமாகச் சென்று, "முத்தையா! ஒரு அதிசயம்!" என்றான். முத்தையன் என்னவென்று கேட்கவும், அபிராமி நாடகம் பார்க்க வந்திருக்கிறாள் என்பதைத் தெரிவித்து, "நல்ல வேளை நான் முதலில் அவளைப் பார்த்தேன். எனக்கே ஒரு நிமிஷம் திணறிப் போய்விட்டது. நீ மேடையிலிருக்கும் போது திடீரென்று அவளைப் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பாயோ என்னமோ?" என்றான்.
முத்தையன் அளவிலாத ஆவலுடனும் பரபரப்புடனும் மேடையின் பக்கத் தட்டிக்குச் சமீபம் வந்து, இடுக்கு வழியாக, கமலபதி காட்டிய திக்கை நோக்கினான். அடுத்த நிமிஷம் அவன் கமலபதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவன் உடம்பு நடுங்கிற்று. கமலபதியை அவன் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று, "கமலபதி! நான் சாயங்காலம் சொன்னது நிஜமாய்ப் போய்விடும் போலிருக்கிறது. அபிராமியின் பக்கத்திலிருப்பது யார் தெரியுமா? அவர்தான் திருப்பரங்கோயில் போலீஸ் ஸப்-இன்ஸ்பெக்டர். ஏதோ சந்தேகம் தோன்றித்தான் அவர் அபிராமியை இந்த நாடகத்துக்கு அழைத்து வந்திருக்க வேண்டும்" என்றான்.
ஸர்வோத்தம சாஸ்திரி முத்தையனைப் பார்த்ததில்லையே தவிர, முத்தையன் திருப்பரங்கோயிலில் இருந்த போது பல தடவை சாஸ்திரியைப் பார்த்திருக்கிறான். ஒரு ஊரில் ஸப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்ப்பவரை அந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?
நண்பர்கள் இருவரும் கவலையுடனே ஆலோசனை செய்தார்கள். முத்தையன் நாடகம் முழுவதும் நடித்து விடவேண்டியதுதான் என்று தீர்மானித்தார்கள். அவன் அபிராமியின் பக்கம் திரும்பிப் பார்க்கக் கூடாது. பார்த்தாலும் தெரிந்தவளென்பதாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. வேறு வழி ஒன்றுமில்லை. இப்போது மேடைக்கு வரமாட்டேனென்றால், எல்லாம் ஒரே குழப்பமாக முடிவதோடு சந்தேகமும் ஊர்ஜிதமாகுமல்லவா?
ஏதாவது அபாயத்துக்கு அறிகுறி தென்பட்டால் என்ன செய்ய வேண்டுமென்பதையும் அவர்கள் யோசித்து முடிவு செய்தார்கள். கமலபதி சென்னைக்கு வந்ததும், ஒரு 'ஸெகண்ட் ஹாண்ட்' மோட்டார் கார் வாங்கியிருந்தான். நடிகர்கள் வருவதற்கென்று கொட்டகைக்குப் பின்னால் ஒரு தனி வழியிருந்தது. அவனுடைய காரை அங்கே தான் நிறுத்தி வைப்பது வழக்கம். அவசியம் ஏற்பட்டால், முத்தையன் அந்தக் காரில் ஏறி ஓட்டிக் கொண்டு போய் விட வேண்டியது. அப்புறம் பகவான் விட்ட வழி விடுகிறார்.
"கமலபதி! உன் வாக்குறுதியை மறந்து விடாதே!" என்று கடைசியாகக் கேட்டுக் கொண்டான் முத்தையன்.
*****
நாடகம் நடந்து கொண்டு வந்தது. சதாரமும் திருடனும் சந்திக்கிறார்கள். திருடன் பாடுகிறான்:
"கண்ணே உனக்குப் பயம் ஏனோ-நீ
கவலை கொள்ளவும் விடுவேனா - அடி
பெண்ணே பிரமாதம் பண்ணிடாதே-கள்ளப்
பிறப்பென்று அவமதிக்காதே!
கண்ணன் என்பானொரு கள்ளன் - முன்னம்
கன்னியர் மனங்களைக் கவர்ந்தான் - அவன்
கன்னமிடா இதயமில்லை - காதல்
கொள்ளையிடாத உள்ள மில்லை
வெண்ணெய் திருடி அந்தக் கள்வன் - எங்கள்
வம்சத்துக்கே வழி முதல்வன் - அந்தக்
கண்ணன் குலத்தில் பிறந்தேனே - ஏற்ற
கள்ளப் புருஷனாய் வாய்த்தேனே!"
கடைசி அடியைப் பாடும்போது, திருடன் தன் முகமூடியை விலக்குகிறான். உடனே சதாரம் மூர்ச்சித்து விழுகிறாள்.
அதே சமயத்தில் சபையில் குடிகொண்டிருந்த நிசப்தத்தைப் பிளந்து கொண்டு, "ஐயோ! என் அண்ணன்!" என்று ஒரு குரல் எழுந்தது. அடுத்த கணத்தில் அபிராமி நிஜமாகவே மூர்ச்சையடைந்து விழுந்தாள். மீனாட்சி அம்மாள் அவளைத் தாங்கிக் கொண்டாள்.
ஸப்-இன்ஸ்பெக்டர் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து பின் புறம் நோக்கிச் சமிக்ஞை செய்தார். உடனே அங்கிருந்த நாலு பேரும் எழுந்து விரைந்து சென்றார்கள்.
இதற்குள் சபையில் பாதிப் பேருக்குமேல் எழுந்து நிற்கவும், "என்ன? என்ன?" என்று ஒருவரையொருவர் கேட்கவும் காரணந் தெரியாமல் சில பேர் விழுந்தடித்து வெளியே ஓடவும் - இம்மாதிரி அல்லோல கல்லோலமாகிவிட்டது. மேடையிலும் திரையை விட்டுவிட்டார்கள்!
உடுப்பணியாத போலீஸார் நாலு பேரும் வெளியே சென்று அங்கே தயாராயிருந்த உடுப்பணிந்த போலீஸ்காரர்களையும் அழைத்துக் கொண்டு மேடைக்குள் ஓடினார்கள். அங்கே மூலை முடுக்குகளில் எல்லாம் தேடியுங் கூடத் திருடன் அகப்படவில்லை!
கமலபதி கவலை தேங்கிய முகத்துடன், ஆவலுடன் எதையோ எதிர் நோக்குபவன் போல் இருந்தான். சில நிமிஷங்களுக்குப் பிறகு, சற்று தூரத்துக்கப்பாலிருந்து அவனுடைய மோட்டார் ஹாரனின் சப்தம் வரவும் அவனுடைய முகம் பிரகாசம் அடைந்தது!

39.திருப்பதி யாத்திரை
திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கு உலகத்திலே நாம் எங்கும் கேட்டறியாத ஓர் அபூர்வமான சபலம் இருந்து வருகிறது. தம்மிடம் வரும் பக்தர்களின் தலையை மொட்டையடித்துப் பார்ப்பதில் அவருக்கு ஒரு திருப்தி. வேறே எங்கேயாவது மொட்டையடித்துக் கொண்டு வந்தால் பிரயோஜனமில்லை. அவருடைய சந்நிதியிலேயே மொட்டையடித்துக் கொண்டு தலைமயிரையும் அவ்விடமே தான் அர்ப்பணம் செய்யவேண்டும். சாதாரணமாய்க் குழந்தைகளை அப்படிப் பார்ப்பதிலேதான் அவருக்கு அத்தியந்த ஆசை. ஆனால் சில சமயம் மீசை முளைத்த, தலை நரைத்த பெரியவர்களுங் கூட அங்கே போனதும் கடவுளுக்கு நாம் குழந்தைகள் தானே என்ற எண்ணத்திலே தலையை மொட்டையடித்துக் கொண்டு விடுகிறார்கள். "சாமியாவது, பூதமாவது? அப்படி ஒரு சாமி இருந்தால், அவர் தான் என்னை வணங்கட்டுமே? நான் ஏன் அவரை வணங்க வேண்டும்?" என்று பேசும் பகுத்தறிவுப் பெரியவர்கள் கூடத் திருப்பதிக்குப் போனதும் பகுத்தறிவெல்லாம் பறந்துபோகத் தலையை மழுங்கச் சிரைத்துக் கொண்டு விடுகிறார்கள். கூந்தல் வளரும் தைலங்கள் தடவி அருமையாக வளர்த்த அளகபாரத்தை எத்தனையோ ஸ்திரீகள் அங்கே பறிகொடுத்து விட்டு வருகிறார்கள்.
அந்த வருஷம் கல்யாணியின் தகப்பனார் திருச்சிற்றம்பலம் பிள்ளைக்குக் குடும்பத்துடனே திருப்பதி போய் வர வேணுமென்ற விருப்பம் ஏற்பட்டது. தலை மொட்டையடிப்பதற்கு அவருடைய இளைய தாரத்தின் குழந்தைகள் ஏராளமாய் இருந்தார்கள். வெங்கடேசப் பெருமாளுக்குக் குடும்பத்திலே வேண்டுதலும் இருந்தது. கல்யாணி அவ்வளவு பெரிய சொத்துக்காரியா யிருக்கும் போது, செலவுக்குப் பணத்துக்குத்தான் என்ன குறைவு? திருப்பதிக்குப் போய் வந்து, விமரிசையாகக் 'கம்ப சேர்வை' நடத்தி, கூத்துவைக்க வேணுமென்றும் அவர் முடிவு செய்திருந்தார். கல்யாணியிடம் இதைப் பிரஸ்தாபித்தபோது, அவள் ஆவலுடன் தானும் வருவதாகத் தெரிவித்தாள்.
கல்யாணி பூங்குளத்துக்கு வந்து மூன்று மாதம் ஆயிற்று. ஆரம்பத்தில் முத்தையனைச் சந்தித்துப் பேசியதன் பயனாக அவளுடைய உள்ளத்தில் சிறிது அமைதி ஏற்பட்டிருந்தது. நாளாக ஆக அந்த அமைதி குன்றி, பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. "முத்தையன் ஏன் இன்னும் வரவில்லை? அவன் எங்கே போனான்? என்ன செய்கிறான்?" என்று அவள் உள்ளம் ஒவ்வொரு கணமும் கேட்டுக் கொண்டிருந்தது. அவனைப் பார்க்க வேணுமென்ற தாபத்தினால் அவளுடைய தாபம் மிதமிஞ்சிப் போகாத வண்ணம் ஒருவாறு ஆறுதல் அளித்து வந்தது அந்த நதிக்கரைப் பிரதேசந்தான். இந்த இரண்டு மூன்று மாத காலமாகக் கல்யாணி பழையபடி கொள்ளிடக்கரை வனதேவதையாக விளங்கினாள். தினந்தவறினாலும் அவள் நதிக்குக் குளிக்கப் போவது தவறுவதில்லை. அப்படிப் போகிறவள் திரும்பி வீட்டுக்கு வர அவசரப்படுவதுமில்லை. நெடுநேரம் காடுகளில் சுற்றிக் கொண்டிருப்பாள். அவள் கன்னிப் பருவத்தில் பழம் பறித்துத் தின்ற நாவல் மரம், இலந்தை மரம் இருக்குமிடமெல்லாம் இப்போதும் தேடிச் செல்வாள்; கிளைகளை உலுக்குவாள். உதிர்ந்த பழங்களை ஓடிஓடிப் பொறுக்கிச் சேர்ப்பாள். அப்போது முத்தையனுடைய ஞாபகம் வந்து விடும். அப்படியே தரையில் உட்கார்ந்து பகற்கனவில் ஆழ்ந்து விடுவாள். ஐயோ! தன்னை மட்டும் முத்தையனுக்குக் கட்டிக் கொடுத்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்த மயமாக இருந்திருக்கும்?
தினம் ஒரு தடவை பாழடைந்த கோவிலுக்குச் சென்று பார்ப்பாள். ஒவ்வொரு நாளும், "இன்றைக்கு வந்திருப்பானோ?" என்ற அடங்காத ஆவலுடனே செல்வாள். படபடவென்று அடித்துக் கொள்ளும் மார்பை அமுக்கிப் பிடித்துக் கொண்டு போய்ப் பார்ப்பாள். முத்தையன் வழக்கமாய் உட்காரும் மேடை வெறியதாயிருக்கக் கண்டதும் அவள் நெஞ்சு துணுக்கமடையும். ஒரு வேளை தன்னை அலைக்கழிப்பதற்காகப் பக்கத்தில் எங்கேயாவது ஒளிந்திருப்பானோ என்று கூட நாலா புறமும் தேடிப் பார்ப்பாள்.
ஏன் இன்னும் வரவில்லை? அபிராமியை ஒரு தடவை பார்த்து வரவேணுமென்றுதானே போனான்? பார்த்தானோ இல்லையோ? ஒரு வேளை அவள் அவனைப் பிரிய மாட்டேன் என்று சொல்லிவிட்டாளோ? இருவருமாகக் கப்பலேறிப் போய் விட்டார்களோ?
சகிக்க முடியாத இந்த எண்ணம் தோன்றும் போது அவளுக்கு அபிராமியின் மீது கோபம் அசாத்தியமாக வரும். அந்தப் பாழும் அபிராமியினாலேதான் தன்னுடைய வாழ்க்கை பாழானதெல்லாம்! அவள் எதற்காக பிறந்தாள்? அவள் பிறக்கவேண்டியது அவசியமென்றால் தன்னை எதற்காகப் பகவான் படைக்கவேணும்?
இப்படி ஒவ்வொரு நாளும் கல்யாணிக்கு முடிவில்லாத ஒரு யுகமாகப் போய்க் கொண்டிருந்தது. இத்தகைய சந்தர்ப்பத்திலேதான் திருச்சிற்றம்பலம் பிள்ளை குடும்ப சகிதமாகத் திருப்பதி யாத்திரை கிளம்பினார். ஆடி பிறந்து நடவு ஆரம்பமாகிவிட்டால் அப்புறம் எங்கும் கிளம்ப முடியாதென்றும் யாத்திரை புறப்பட இது தான் சரியான தருணம் என்றும் அவர் எண்ணினார்.
நாளுக்கு நாள் உள்ளக் கிளர்ச்சி அதிகமாகிக் கொண்டிருந்த கல்யாணிக்குத் தான் பூங்குளத்திலேயே இன்னும் இருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் போல் தோன்றிற்று. யாத்திரை கிளம்பிச் சென்றால், பல இடங்களைப் பார்ப்பதில் சிறிது மனத்தைச் செலுத்தலாமல்லவா? ஒரு வேளை போகுமிடங்களில் ஏதாவது முத்தையனைப் பற்றிய செய்தி காதில் விழுந்தாலும் விழலாமல்லவா - இந்த எண்ணத்துடனே தான் கல்யாணியும் திருப்பதிக்குக் கிளம்பச் சித்தமானாள்.
குறிப்பிட்ட நல்ல நாளில் திருச்சிற்றம்பலம் பிள்ளையின் குடும்பம் திருப்பதிக்குப் பிரயாணமாயிற்று.

- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6