புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
29 Posts - 60%
heezulia
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
194 Posts - 73%
heezulia
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 9:52 am

First topic message reminder :

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல் விளக்குகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:48 am

20.சங்குப்பிள்ளை சரணாகதி


தெறிகெட்டு ஓடினவர்களுக்குள்ளே மிகவும் விரைவாக ஓடினவர் நமது கார்வார்ப் பிள்ளைதான். அவரைத் தொடர்ந்து முத்தையனும் ஓடினான். ஒரு தாவுத் தாவி அவரை முத்தையன் பிடித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி உடனே அவரைப் பிடிக்க அவன் இஷ்டப்படவில்லை. கூட்டமில்லாத தனி இடத்தில் பிடிக்கவேண்டுமென்று கருதிப் பின்னோடே சென்று கொண்டிருந்தான். கடைசியில் ஊருக்குக் கொஞ்ச தூரத்தில் விளக்கு வெளிச்சம் ஒன்றுமில்லாத இடத்தில், ஒரு வைக்கோல் போருக்கு அருகில் அவரைப் பிடித்து வீழ்த்தினான். அவருடைய மார்பின் மேல் ஒரு முழங்காலை ஊன்றி உட்கார்ந்து கொண்டான். கத்தியைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டான்.

"சங்குப் பிள்ளைவாள்! நான் இந்த நிமிஷம் எங்கே இருக்கிறேன், சொல்லும் பார்க்கலாம்!" என்று கூறிப் பற்களை நறநற வென்று கடித்தான்.

சங்குப் பிள்ளைக்குப் பயத்தினால் பாதிப் பிராணன் போய்விட்டது. "தம்பி என்னை விட்டுவிடு! நான் ஒன்றும் பண்ணவில்லை. ஐயோ! என்னை விட்டு விடேன். நான் உன் வழிக்கு வரவில்லை" என்று விம்மிக் கொண்டே கூறினார்.

"என் வழிக்கு வரவில்லையா? அடாடா! பெரியவாள் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. என் வழிக்கு வந்து தான் ஆகவேணும்" என்று சொல்லி முத்தையன் பயங்கரமாய்ச் சிரித்தான்.

பிறகு கடுமையான குரலில், "அடே படுபாவி! நிஜத்தைச் சொல்லு! அபிராமி என்ன ஆனாள்? எங்கே இருக்கிறாள்? - நிஜத்தைச் சொன்னால் பிழைப்பாய். இல்லாவிட்டால், ஒரே குத்தில் செத்துப் போவாய்" என்றான்.

"ஐயோ! நிஜத்தைச் சொல்லுகிறேன். அப்புறம் நான் அவளைப் பார்க்கவேயில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு யாரோ அழைத்துப் போனார்களாம். இன்ஸ்பெக்டர் வீட்டு அம்மா அவளைச் சென்னைப் பட்டணத்திலே கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்திலே சேர்த்திருக்கிறாளாம். மற்றபடி எனக்கு ஒன்றும் தெரியாது. முத்தையா! நான் பிள்ளைக் குட்டிக்காரன் என்னை விட்டுவிடு!" என்று கதறினார் சங்குப்பிள்ளை.

"நீ இப்போ சொன்னது நிஜந்தானா! பொய் என்று தெரிந்ததோ கொன்னுடுவேன்!"

"இல்லை, இல்லை. பொய்தான் சொல்லி விட்டேன். கோவிச்சுக்காதே, தம்பி! எனக்குப் பிள்ளைக்குட்டி ஒன்றும் கிடையாது..."

"சீச்சீ! நீ நாசமாய்ப் போக! உனக்குப் பிள்ளைக்குட்டி வேறு கேடு!...அபிராமியைப் பற்றி நீ சொன்னது நிஜந்தானா? அப்புறம் நீ அவளைப் பார்க்கவே இல்லையா?"

"இல்லவே, இல்லை! சத்தியமாய் இல்லை. விட்டு விடு. நீ மகாராஜனாயிருப்பாய்..." என்று சங்குப் பிள்ளை விம்மி அழத் தொடங்கி விட்டான்.

முத்தையன், "போ, தொலைந்து போ! உன்னைத் தொட்ட பாவத்துக்கு நான் தலை முழுகவேணும். ஆனால் மறுபடியும் ஏதாவது துர்க்கிருத்யம் பண்ணினாய் என்று தெரிந்ததோ, என் கை அழுக்காய்ப் போனாலும் போகிறதென்று உன் தொண்டையை நெறித்துவிடுவேன். தெரியுமா?" என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்தான். அவ்வளவு தான்! கீழே கிடந்த சங்குப் பிள்ளை வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து ஒரே ஒட்டம் பிடித்து ஓடிவிட்டார்.

முத்தையனிடம் சங்குப்பிள்ளை தனியாக அகப்பட்டுக் கொண்டபோது, அவன் வெகு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பம் கிடைத்தது. "அந்த அயோக்யன் மட்டும் என்னிடம் அகப்படட்டும் பார்க்கலாம்; என்ன பாடுபடுத்துகிறேன்!" என்று அவன் தனக்குத் தானே எத்தனையோ தடவை சொல்லிக் கொண்டு பல்லைக் கடித்திருக்கிறான்! கையை நெறித்திருக்கிறான். ஆனால் அத்தகைய சந்தர்ப்பம் கிடைத்ததும் அவனால் பழி வாங்கமுடியவில்லை. கார்வார் பிள்ளையின் கோழைத்தனம் அப்படி அவனைச் சக்தியற்றவனாக்கி விட்டது.

அது மட்டுமல்ல; அபிராமியைப் பற்றிச் சங்குப்பிள்ளை சொன்ன செய்தி முத்தையனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கிற்று. அது உண்மையென்பதை அவன் உணர்ந்தான்; அவன் மனத்திலிருந்த கசப்பும் குரோதமும் சட்டென்று விலகிச் சென்றன. அவன் நெஞ்சை அமுக்கிக் கொண்டிருந்த ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. அன்று வீட்டை விட்டுக் கிளம்பியதற்குப் பிறகு இதுவரை இல்லாத குதூகலம் இப்போது அவனுடைய உள்ளத்தில் பொங்கி எழுந்தது.

இத்தகைய மனோநிலையில் அவன் தன் கையைக் கறையாக்கிக் கொள்ள உண்மையிலேயே விரும்பாதபடியால் தான் கார்வார் பிள்ளையை விட்டுவிட்டான். அவர் எழுந்து ஓடிப் போனதும், ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு, குஷாலாகச் சீட்டி அடித்துக் கொண்டு சென்றான்.

இங்கே கல்யாணப் பந்தலில், கள்ளன் மறைந்ததும் எல்லோரும் மறுபடியும் ஒன்று திரண்டு கும்பல் கூடிப் பேசினார்கள். முக்கிய விருந்தினரில் ஒருவரான தர்மகர்த்தாப் பிள்ளை, மற்றும் சிலரைப் பார்த்து, "இத்தனையுண்டு வாண்டுப் பயல் தனியாய் வந்து இவ்வளவு காபரா பண்ணிவிட்டுப் போகிறான், நாம் எல்லோரும் வாயிலே விரலை வச்சுண்டுதானே நிற்கிறோம்?" என்று இரைந்தார். கும்பலில் அவர் சமீபத்தில் நின்ற ஒரு சிறுவன், சட்டென்று தன் வாயிலிருந்த விரலை எடுத்தான். அந்தப் பையனுக்கு வந்த கோபத்தைப் போலவே, அங்கிருந்த இன்னும் பலருக்கும் ரோஸம் பிறந்தது. அவரவர்களும் "வாங்க, போகலாம்!" "வாங்க போகலாம்!" என்று சொல்லிக் கொண்டு, தடிகளுடனும் லாந்தர்களுடனும் கிளம்பினார்கள்.

ஊருக்குக் கொஞ்ச தூரம் மேற்கே அவர்கள் போன போது சங்குப் பிள்ளை எதிரே வந்தார். அவர் இவர்களைப் பார்த்து, "ஏன், ஐயா, நீங்கள் எல்லாம் மனுஷர்கள்தானா? ஏதடா, ஒருத்தன் முன்னாலே போறானே, நாம்பளும் போவோம் என்று பின்னால் வந்திருக்கக் கூடாதா? வந்திருந்தால் அந்தத் திருட்டுப்பயலைக் கைப்பிடியாய்ப் பிடிச்சிருக்கலாமே?" என்றார். அப்போது தூரத்திலே மறுபடியும் சிரிப்பு ஒலி கேட்டது. சங்குப் பிள்ளையின் உடம்பு நடுங்கிற்று. அவரைக் கவனிக்காமல், சிரிப்புச் சத்தம் வந்த திசையை நோக்கி எல்லாரும் ஓடினார்கள்.

ஊருக்கு அரை மைல் மேற்கே இராஜன் வாய்க்கால் இருந்தது. அதில் அப்போது பிரவாகம் நிரம்பப் போய்க் கொண்டிருந்தது. வாய்க்காலின் மேல் மூங்கில் கழிகளினால் பாலம் போட்டிருந்தது. முத்தையன் அந்தப் பாலத்துக்குச் சமீபம் வந்தபோது, கொஞ்ச தூரத்தில் "அதோ போகிறான்", "விடாதே", "பிடி" என்ற சத்தத்துடன் ஜனங்கள் ஓடி வருவதைப் பார்த்தான். பாலத்தின் முக்கால் பகுதி வரை அவன் சென்று, அங்கே உட்கார்ந்து, சில மூங்கில் கழிகளைப் பிடுங்கி ஆற்றில் விட்டான். பிறகு அக்கரைக்குத் தாவிச் சென்று ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றான்.

அவனைத் தொடர்ந்து ஓடிவந்தவர்கள் பாலத்தின் கழிகள் பெயர்க்கப்பட்ட இடத்துக்கு வந்ததும் தொப்தொப்பென்று தண்ணீரில் விழுந்தார்கள்.

முத்தையன் "ஹா ஹா ஹா" என்று உரக்கச் சிரித்து விட்டு இருட்டில் சென்று மறைந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:49 am

21.சுமைதாங்கி


தை மாதம். அறுவடைக் காலம். சென்ற மாதம் வரையில் பசுமை நிறம் பொருந்தி விளங்கிய வயல்கள் எல்லாம் இப்போது பொன்னிறம் பெற்றுத் திகழ்கின்றன. நெற்கதிர்களின் பாரத்தால் பயிர்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கின்றன. காலை நேரத்தில் அவற்றின் மீது படிந்திருக்கும் பனித் துளிகளின் மீது சூரியக் கிரணம் படுங்கால் எண்ணிலடங்காத வெண் முத்துக்கள் சிதறிக் கிடப்பது போல் தோன்றிற்று. வயல் வரப்புகளில் நடந்து போனால், பசும் புல்லில் படிந்திருக்கும் பனித் துளிகள் காலில் படும்போது ஜிலு ஜிலுவென்று வெகு சுகமாயிருக்கிறது. சில வரப்புகளில் துவரஞ் செடிகள் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன. அந்தச் செடிகளில் சிலுசிலுவென்று பூத்திருக்கும் சின்னஞ்சிறு பூக்களுக்குத்தான் என்ன அழகு, எத்தகைய பசும்பொன் நிறம்!

இன்னும் சில வரப்புகளில் சேம்புச் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கின்றன. அவற்றின் இலைகளுக்கு என்ன மிருதுத் தன்மை? அந்த இலைகளின் மீது அப்படியும் இப்படியும் ஊசலாடிக் கொண்டிருக்கும் பனித் துளிகளை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது. ஆனால், அந்தத் துளிகள் தான் நேரம் ஆக ஆக, வெயில் ஏற ஏற, மாயமாய் மறைந்து போகின்றன.

கதிர்கள் நன்றாக முற்றிவிட்ட வயல்களில் அதிகாலையில் ஆட்கள் இறங்கி அறுக்கத் தொடங்குகிறார்கள். அப்படி அறுவடையாகும் வயல்களிலிருந்து கம்மென்று புது வைக்கோலின் மணம் வீசுகின்றது. அந்த வாசனையை முகர்ந்து கொண்டு, அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு வாழ்நாளெல்லாம் கழித்து விடலாம் போல் தோன்றுகிறது.

சூரியன் உச்சி வானத்தை அடையும் போது அறுப்பதை நிறுத்துகிறார்கள். அறுத்த பயிர்களைக் கட்டுக் கட்டாய்க் கட்டுகிறார்கள். பிறகு அக்கட்டுக்களைத் தலையில் சுமந்து கொண்டு போய்க் களத்தில் போடுகிறார்கள்.

திருமகள் செந்தாமரையில் வசிப்பதாகக் கேட்டிருக்கிறோம். வருஷத்திலே பத்து மாதத்துக்கு இது உண்மையாயிருக்கலாம். ஆனால், தை, மாசி மாதங்களில் மட்டும் நன்செய் நிலப் பிரதேசங்களிலுள்ள நெற்களங்களிலே தான் அவள் வசிக்க வேண்டும். அந்த மாதங்களில், நெற்களங்களின் காட்சி அவ்வளவு அழகாகவும் லக்ஷ்மி விலாசம் பொருந்தியும் இருக்கும். களத்தில் சில இடங்களில் டபார் டபார் என்று அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தானியம் உதிர்ந்ததும், வைக்கோலைப் போர் போராய்ப் போடுகிறார்கள். நெல்லைக் குவித்துக் குவியல் குவியலாய்ச் செய்கிறார்கள்.

களத்துக்கு நடுவில் ஒரு பெரிய ஆலமரம் விழுதுகள் விட்டு இறங்கி விஸ்தாரமாகப் படர்ந்திருக்கிறது. அதன் கிளைகளில் காக்கைகளும், குருவிகளும், இன்னும் பலவிதமான பட்சிகளும் அமர்ந்து கீதமிசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆமாம்; அவ்வேளையில் காக்கை கத்துவது கூட நல்ல சங்கீதமாகவே தோன்றுகிறது. புள்ளினங்கள் தங்களுடைய இறகுகளை அடித்துக் கொள்ளும் சப்தம் காதுக்கு இன்னிசையாய்த் தொனிக்கின்றது.

அந்த ஆலமரத்தின் அடியில் அங்கங்கே சில ஸ்திரீகள் எதிரில் கூடைகளுடன் உட்கார்ந்திருப்பதைக் காணலாம். இவர்களுக்கு அங்காடிக்காரிகள் என்று பெயர். இவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கூடையும் ஒரு சின்னக் கடை. அதில் வறுத்த கடலைக் கொட்டை, வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சுட்ட சோளக் கொண்டை, வெற்றிலைப் பாக்கு புகையிலை - இவையெல்லாம் இருக்கும். இவற்றை அவர்கள் நெல்லுக்கு விற்பார்கள். லாபம் தம்பிடிக்குத் தம்பிடிதான்! ஆனாலும் மொத்தத்தில் லாபம் ஒன்றும் பிரமாதமாயிராது. நாலணா சாமான்கள் கொண்டுவந்தால் எட்டணா நெல்லுடன் திரும்பிச் செல்வார்கள். அவ்வளவுதான்.

இம்மாதிரி அங்காடி விற்கும் பெண்பிள்ளை ஒருத்தியைத் தொடர்ந்து போகும் அவசியம் நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அவள் களத்தில் தனக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு அங்காடிக்காரியிடம் சண்டை போட்டுக் கொண்டு, "சீச்சி! உன்னைச் சொல்லி என்ன பிரயோசனம்? உன்னைப் படைச்சானே பிரம்மா அவனைச் சொல்லணும்!" என்று கடுமையாய்ப் பேசி விட்டு, அங்காடிக் கூடையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, விருவிரு என்று நடக்கத் தொடங்கினாள். அவள் வயல் வரப்புகள் வழியாகவே நடந்து சென்று, கடைசியில் ஒரு வாய்க்காலின் கரையை அடைந்தாள். அந்த வாய்க்காலின் இருபுறமும் அடர்த்தியாகக் காடு மண்டியிருந்தது. கரையோடு ஓர் ஒற்றையடிப் பாதை போயிற்று. கூடைக்காரி அந்தப் பாதையோடு போனாள். கொஞ்சதூரம் நடந்த பிற்பாடு, அந்தப் பெரிய வாய்க்காலிலிருந்து இன்னொரு சின்ன வாய்க்கால் பிரியும் இடம் வந்தது. அப்படிப் பிரியும் இடத்தில் ஒரு மதகு இருந்தது. கூடைக்காரி அந்த மதகண்டை வந்ததும் ஆவலுடன் உற்றுப் பார்த்தாள். அந்த மதகின் மேல் ஒரு முழு ரூபாய் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. கூடைக்காரி அந்த ரூபாயை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, "என் அப்பனே! மவராசா! நீ யாராயிருந்தாலும் சரி, தெய்வமாயிருந்தாலும் சரி, மனுஷனாயிருந்தாலும் சரி! நீ நன்றாயிருக்கணும். உன்னை நான் பார்த்து அறிய மாட்டேன். ஒரு நாளைக்கு நீ அசரீரி வாக்கு மாதிரி சொன்னாய். அதன்படியே நானும் இரண்டு நாளைக்கு ஒரு தடவை இங்கே வாரேன். நீயும் ஒவ்வொரு ரூபாய் படி அளக்கிறாய். சாமி! ஆண்டவனே! என் காலமெல்லாம் இப்படியே போயிண்டிருந்தா - நான் சாகிறதுக்குள்ளே முழுசா ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்துடுவேன். அப்புறம் என்னை யார் என்ன கேட்கிறது?" என்று இவ்விதம் புலம்பிக் கொண்டே கூடையிலிருந்த நிலக்கடலை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு எல்லாவற்றையும் எடுத்து மதகின்மேல் வைத்துவிட்டு, கடைசியாக ஒரு சோற்று மூட்டையும் எடுத்து வைத்தாள். பிறகு, "சாமி! ஆண்டவனே! காப்பாத்து!" என்று இரண்டு கன்னத்திலும் போட்டுக் கொண்டு, வெறுங்கூடையுடன் கிளம்பிச் சென்றாள்.

அவள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் புதரை விலக்கிக் கொண்டு முத்தையன் வெளியில் வந்தான். மதகின் மேல் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். சாவகாசமாக நிலக்கடலையை உரித்துத் தின்னத் தொடங்கினான்.

அப்போது ஒரு மரத்தில் ஏதோ சலசலவென்று சத்தம் கேட்கவே, முத்தையன் பளிச்சென்று குதித்து எழுந்து இடுப்பில் செருகியிருந்த கத்தியைக் கையில் எடுத்தான். "சாமி! சாமி! நான் தான், சொக்கன்" என்று சொல்லிக் கொண்டே, குறவன் சொக்கன் முன்வந்தான்.

"அடே! முட்டாள்! கண்ட இடத்தில் எல்லாம் நீ என்னைத் தேடிக்கொண்டு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனே? ஏன் இங்கு வந்தாய்?" என்று கேட்டான் முத்தையன்.

"இல்லைங்க, சாமி! அந்த ஆளு சொன்னேனே, அது வந்திருக்கு, பணத்தோட வந்திருக்கு" என்றான் சொக்கன்.

"சரி, சாயங்காலம் கையெழுத்து மறைகிற சமயத்துக்கு சுமை தாங்கிக்கிட்ட அழைத்துக் கொண்டு வா. இப்போ இங்கே நிற்காதே, போ!" என்றதும் சொக்கன் "அப்படியே ஆகட்டும், சாமி!" என்று சொல்லிவிட்டுப் போனான்.


***** அன்று சாயங்காலம், முன்னே 'லாக்-அப்'பிலிருந்து முத்தையன் தப்பிச் சென்ற இரவில் அவன் படுத்துத் தூங்கிய அதே சுமைதாங்கி மேடையில் ஓர் ஆசாமி உட்கார்ந்து அப்புறம் இப்புறம் பார்த்து முழித்துக் கொண்டிருந்தான். பொழுது சாயச் சாய, அவனுடைய கவலையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடைசியில் சுமைதாங்கியின் பின் புறத்தில் ஏதோ சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க, அங்கே முகமூடியணிந்த ஓர் உருவம் கையில் கத்தியுடன் நிற்கக் காணவும், உதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தான். நல்ல வேளையாக, அந்த உருவத்துக்குப் பின்னால், குறவன் சொக்கனும் தென்படவே அவனுடைய படபடப்பு ஒருவாறு அடங்கியது.

"என்ன, ஐயா, எங்கே வந்தே! சீக்கிரம் சொல்லு!" என்றான் முத்தையன்.

"ஒ ஒ ஒ ஒ - ஒண்ணுமில்லை... வ வ வ வ - வந்து..." என்றான் அந்த ஆசாமி.

"ந ந ந ந - நாசமாய்ப்... போ போ போ போச்சு!" என்றான் முத்தையன்.

"கொ கொ கொ கொஞ்சம்... நே நே நேக்கு... தே தே தே தெத்து..."

"கொஞ்சம் தெத்தா? ஜாஸ்தியாயிருந்தால் இன்னும் அது எப்படியிருக்குமோ? போகட்டும்; எங்கே வந்தே, சொல்லித் தொலை."

"ஒ ஒ ஒ ஒ - ஒன்னை... ப ப ப ப - பாக்கத்தான் வந்தேன்."

"சரி, பார்த்தாச்சா? போகலாமா?"

"பொ பொ பொ - பொறு அப்பா! பு பு பு - புலிப்பட்டி எஜமான் - ப ப ப - பணம் கொடுத்திருக்காரு..."

"சரி கொடுத்துத் தொலை."

அந்த ஆசாமி மடியிலிருந்த பண நோட்டுக்களை எடுத்து முத்தையனிடம் கொடுத்தான்.

"வ வ வ வ - வந்து... கா கா கா கா - காரியத்தை மு மு மு மு - முடிச்சுட்டாக்க..."

இந்தச் சமயத்தில் குறவன் குறுக்கிட்டு, "இதோ பாருங்க, ஐயா! நீங்க சமாசாரம் சொல்றதுக்குள்ளே போது விடிஞ்சு போயிடும், எங்கிட்டதான் எல்லாச் சமாசாரமும் சொல்லிட்டீங்களே! நான் விவரமாய்ச் சொல்லிப்புடறேன். நீங்க போய் வாருங்க" என்றான்.

அந்த ஆசாமி, "அ அ அ - அப்படியானால் சரி" என்றான். பிறகு குறவனைச் சமிக்ஞை செய்து அருகில் அழைத்து, அவன் காதோடு, "அந்தப் பொ பொ பொ - பொம்பளையை... ப ப ப - பைஸல் பண்ணிவிடணும்" என்று கூறினான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:50 am

22.நிலவும் இருளும்



முத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே பூரண சந்திரன் உதயமாகிச் சற்று நேரம் ஆகியிருந்தது. மேற்கே இருட்ட இருட்ட, நிலவு வெண்ணிறம் பெற்றுப் பிரகாசித்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த நதிப் பிரதேசம் முழுவதும் ஒரு மோகன மாய உலகமாக மாறி விட்டது. வெண்ணிலவு; வெண் மணல்; வெண்மையான நாணல். ஜலமும் நெடுந்தூரத்துக்கு வெள்ளியை உருக்கி வார்த்தது போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

அந்த வேளையில் அந்த நதிக்கரையோரமாய் வெண்மணலில் நடந்து கொண்டிருந்த முத்தையனுக்குக் கல்யாணியின் ஞாபகம் வந்தது. "கல்யாணி! கல்யாணி! என்னிடம் பணமில்லையென்றுதானே என்னை நீ நிராகரித்தாய்? கிழவனைப் போய்க் கல்யாணம் செய்து கொண்டாய்? இப்போது என்னிடம் பணம் இருக்கிறது. வேண்டிய அளவு இருக்கிறது. இரு, இரு, ஒரு நாளைக்கு உன்னை நான் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. இவ்வளவு பணத்தையும் உன் தலையிலே போடுகிறேன். அப்போது நீ என்ன சொல்லப் போகிறாய், பார்க்கிறேன்!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

"நீ என்ன சொல்லப் போகிறாய்? என்னைத் திருடன், கள்ளன் என்று சொல்லப் போகிறாய். என்னைப் பார்க்கவே பயப்படுவாய். உளறியடித்துக் கொண்டு போலீஸ்காரனைக் கூப்பிடுவாய். ஹா ஹா ஹா!" என்று சிரித்தான். அந்த நிசப்தமான நதிப் பிரதேசத்தில் அந்தச் சிரிப்பின் ஒலி பயங்கரமாய்க் கேட்டது.

"ஆனால், என்னைத் திருடனாகப் பண்ணியது யார்? நீதான், நீயும், உன் தகப்பனாரும், உன் உற்றாரும், உன் ஊராருந்தான்! ஹா! ஹா! என்னை எவ்வளவு கேவலமாய் எண்ணினார்கள்? இப்போது?"

மறுபடியும் முத்தையன் சிரித்தான். அன்று சாயங்காலம் நடந்த பேரத்தை நினைக்க நினைக்க அவனுக்கு அடங்காத சிரிப்பு வந்தது. யாரோ ஒரு பெண் பிள்ளை, ரொம்பத் திமிர் பிடித்தவள் - அவளோடு சண்டை பிடிக்கத் திறமையில்லாத ஒரு பெரிய மனுஷன் - அவள் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறான்! இது ரொம்பக் கேவலந்தான். அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு சமயம் புத்தி கற்பிக்க வேண்டியது தான்.

ஆனால் இந்தப் பெண் பிள்ளைக்கு என்ன இவ்வளவு அகந்தை! கொள்ளிடக்கரைக் கள்ளனைப் பிடித்துப் போலீஸில் ஒப்பிக்கப் போகிறதாக அவள் சபதம் கூறியிருக்கிறாளாமே? அவள் எப்படிப்பட்ட திமிர் பிடித்த ஸ்திரீயாயிருக்கவேணும்? அவளுடைய கர்வத்தையும் அடக்க வேண்டியதுதான்.


*****

இப்படி பேசிக்கொண்டே போன முத்தையன், ஓரிடத்தில் தண்ணீர்க் கரையிலிருந்து விலகி, நாணற்காட்டிற்குள் பிரவேசித்தான். கொஞ்ச தூரம் போனதும், அங்கே ஒரு பெரிய மரத்தின், அடிப்பாகம் கிடக்க, அதனருகில் சென்றான். எப்போதோ நதியில் பெருவெள்ளம் வந்தபோது, அந்தப் பெரிய மரம் வேருடன் பெயர்த்துக் கொண்டு வந்து அவ்விடத்தில் மணலில் தட்டிப் போய்க் கிடந்திருக்க வேண்டும்.

அந்த மரத்தில் வாய் குறுகலான ஒரு போறை இருந்தது. முத்தையன் அந்த மரத்தின் அருகில் உட்கார்ந்து அந்தப் போறையில் கையை விட்டான். அதற்குள்ளிருந்த விலையுயர்ந்த நகைகளையும், ரூபாய்களையும், நோட்டுகளையும் வாரி வாரி எடுத்து மடியில் போட்டுக் கொண்டான். இரண்டு கையினாலும் அவற்றை அணைத்துக் கொண்டே, "கல்யாணி! கல்யாணி! ஒரு நாளைக்கு இவ்வளவு பணத்தையும் உன் காலினடியில் போடப் போகிறேன், பார்!" என்றான்.

கிருஷ்ண பக்ஷத்து சந்திரன் நாளுக்கு நாள் தேய்ந்து வந்தது. சந்திரோதயமும் நாளுக்கு நாள் இரவின் பிற்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அமாவாசைக்கு முதல் நாள் இரவு நடு ஜாமத்தில் முத்தையனும் குறவன் சொக்கனும் ஒரு வீட்டின் புறக்கடையில் நின்று கொண்டிருந்தார்கள். கன்னங்கரிய இருள் சூழ்ந்திருந்தது. சொக்கன் முத்தையனுக்கு வீட்டின் அடையாளம் எல்லாம் சொல்லிக் காட்டிவிட்டு, "நானும் வரட்டுமா, சாமி?" என்று கேட்டான். "கூடாது; நான் ஒரு தடவை விஸில் அடித்தால் உள்ளே வா; இரண்டு தடவை அடித்தால் ஓடிப் போய்விடு! தெரிகிறதா?" என்றான் முத்தையன், சட்டைப் பையிலிருந்து ஒரு சின்ன டார்ச்சு லைட்டை எடுத்து ஒரே ஒரு நிமிஷம் வெளிச்சம் போட்டு ஓட்டின் மீது ஏறவேண்டிய இடத்தைப் பார்த்துக் கொண்டான்; உடனே விளக்கை அணைத்துவிட்டு, ஓட்டின் மீது ஏறினான்.

முற்றத்தில் அவன் குதித்த போது அதிகச் சத்தம் உண்டாகவில்லை. ஆனாலும் "யார் அது?" என்று ஒரு பெண் பிள்ளையின் கலவரமான குரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்று, சட்டென்று டார்ச் லைட்டைக் கொளுத்திக் காட்டினான். அவள் ஒரு வயது வந்த ஸ்திரீ. முகமூடி தரித்துக் கையில் கத்தி பிடித்து நின்ற உருவத்தைத் திடீரென்று கண்டதும், "ஐயோ! திருடன்!" என்று அவள் அலறினாள். முத்தையன் கத்தியைக் காட்டி "சத்தம் போட்டாயோ, கொன்று விடுவேன்!" என்று சொல்லி விளக்கை அணைத்தான்.

இதற்குள் கூடத்தில் படுத்திருந்த இன்னொரு ஸ்திரீ எழுந்திருந்து முற்றத்தின் பக்கமாய் ஓடி வந்தாள். முற்றத்தில் நட்சத்திரங்களின் இலேசான வெளிச்சம் சிறிது இருந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் ஓடுவதைப் பார்த்து, முத்தையன் பாய்ந்து சென்று அவளுடைய தோளைப் பிடித்தான். உடனே நின்றுவிட்டாள்.

"சத்தம் போடாதே! நகைகளையெல்லாம் உடனே கழற்றிக்கொடு; இல்லாவிட்டால்..." என்று முத்தையன் ஆரம்பித்தான். ஆனால் அவனுடைய குரல் தழுதழுத்தது. மேலே பேச ஓடவில்லை. ஏனென்றால், அந்தப் பெண்ணினுடைய தோளைத் தொட்ட மாத்திரத்தில் அவனுடைய உடம்பு ஒரு முறை சிலிர்த்தது. தனக்கு என்ன நேர்ந்து விட்டதென்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அந்த மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். "என் நகைகள் தானா உனக்கு வேண்டும் முத்தையா?" என்று கேட்டாள்.

முத்தையனுடைய காலின் அடியிலிருந்து பூமியே நழுவிவிட்டது போல் அவனுக்குத் தோன்றிற்று. அந்தக் குரல்?...அது யாருடையது?

டார்ச் லைட்டை அவள் முகத்துக்கு நேரே பிடித்தான். ஆமாம்; அவள் கல்யாணிதான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:51 am

23.பண்ணையாரின் தவறு


கல்யாணியின் கல்யாணத்தன்று திருமாங்கல்யதாரணம் ஆனதும், அவள் மூர்ச்சையாகி விழுந்தாளென்று சொல்லி விட்டு, பிறகு அவளை நாம் கவனியாமலே இருந்து விட்டோ ம். அதன் பின்னர் இன்று வரையில் அவளுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொள்வது இப்போது அவசியமாகிறது.


*****

தாமரை ஓடைப் பண்ணையார் பஞ்சநதம் பிள்ளை இந்த உலகில் தப்பிப் பிறந்த உத்தம புருஷர்களில் ஒருவர். அவர் தமது வாழ்க்கையில் ஒரே ஒரு தவறு தான் செய்தார். அது, அந்த முதிய வயதில் ஓர் இளம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டது தான். இது பெரும் பிசகு என்றாலும் அவருடைய பூர்வ சரித்திரத்தை நாம் தெரிந்து கொள்ளுவோமானால் அவரிடம் கோபம் கொள்வதற்குப் பதில் அநுதாபமே அடைவோம்.

பஞ்சநதம் பிள்ளை படித்தவர்! விசால நோக்கமும் உயர்ந்த இலட்சியங்களும் உள்ளவர். கொஞ்ச நாளைக்கு அவர் பிரம்ம ஞான சங்கத்தில் சேர்ந்திருந்தார். பிறகு அச்சங்கத்தின் கொள்கைகள் சில பிடிக்காமல் விட்டு விட்டார். தேசிய இயக்கத்திலே கூட அவருக்கு ஒரு சமயம் சிரத்தை இருந்தது. ஆனால் அந்த இயக்கம் ரொம்பத் தீவிரமாகி, சட்டம் மறுத்தல், சிறைக்குச் செல்லுதல் என்றெல்லாம் ஏற்பட்டபோது, இது நமக்குக் கட்டி வராது என்று ஒதுங்கிவிட்டார்.

ஒரே ஒரு தடவை அவர் ஜில்லாபோர்டு தேர்தலில் நின்று ஜயித்து அங்கத்தினர் ஆனார். ஆனால் ஒரு வருஷ அனுபவத்தில் அதிலே நடந்த அக்கிரமங்களையும் ஊழல்களையும் சகிக்க முடியாதவராய் ராஜினாமா கொடுத்து விட்டார்.

சொந்த வாழ்க்கையில், அவருடைய நடத்தை மாசற்றதாய், அப்பழுக்கு சொல்ல இடமற்றதாய் இருந்தது. லக்ஷ்மணனைப் பற்றிச் சொல்லியிருக்கிறதே ராமாயணத்தில் - சீதா தேவியின் பாதகங்களையன்றி அவளுடைய திருமேனியை அவன் பார்த்ததேயில்லையென்று - அம்மாதிரியே, "பரஸ்திரீகளை நான் கண்ணெடுத்தும் பார்த்தது இல்லை" என்று அவர் உண்மையுடன் சொல்லிக் கொள்ளக் கூடியவராயிருந்தார்.


*****

அவருடைய மாசற்ற வாழ்க்கைக்குப் பன்மடங்கு பெருமையளிக்கக்கூடியதான இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். பணக்காரக் குடும்பங்களில் சாதாரணமாய் நடப்பதுபோல் அவருக்குச் சின்ன வயதிலேயே கல்யாணம் ஆயிற்று. அந்தக் கல்யாணம் அவருடைய வாழ்க்கையின் பெரிய துர்ப்பாக்கியமாக ஏற்பட்டது.

இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து செத்துப்போன பின்னர், அவருடைய மனைவியை, மனுஷ்யர்களுக்கு வரக்கூடிய வியாதிகளுக்குள்ளே மிகக் கொடியதான வியாதி பீடித்தது. அவளுக்கு சித்தப் பிரமை ஏற்பட்டது.

சுமார் இருபது வருஷ காலம் அந்தப் பைத்தியத்துடன் அவர் வாழ்க்கை நடத்தினார். அவளுக்காக அவர் பார்க்காத வைத்தியம் கிடையாது; கூப்பிடாத மந்திரவாதி கிடையாது; போகாத சுகவாசஸ்தலம் கிடையாது.

சில சமயம் அவளுக்குப் பிரமை சுமாராயிருக்கும்; அப்போதெல்லாம் சாதாரணமாய் நடமாடிக் கொண்டு இருப்பாள். வேறுசில சமயம் பைத்தியம் முற்றிவிடும்! சங்கிலி போட்டுக் கட்டி அறையில் அடைத்து வைக்க வேண்டியதாயிருக்கும். இம்மாதிரி சமயங்களில் பஞ்சநதம் பிள்ளையைத் தவிர வேறு யாரும் அவள் சமீபம் போக முடியாது.

இன்னும் சில சமயம் அவள் பிரம்மஹத்தி பிடித்தவளைப் போல் சிவனே என்று உட்கார்ந்திருப்பாள். அப்போதெல்லாம் பஞ்சநதம் பிள்ளைதான் அவளுக்கு வேண்டிய சிசுருஷைகளையெல்லாம் செய்தாக வேண்டும்.

அந்தக் காலத்தில், வேறே கல்யாணம் செய்து கொள்ளும்படியாக அவரை எவ்வளவோ பேர் வற்புறுத்தினார்கள். "இந்தப் பிரம்மஹத்தியைக் கட்டிக் கொண்டு வாழ்நாளெல்லாம் கழிக்க முடியுமா?" என்றார்கள். "இவ்வளவு சொத்தையும் ஆள்வதற்குச் சந்ததி வேண்டாமா?" என்று கேட்டார்கள்.

அதையெல்லம் பஞ்சநதம் பிள்ளை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. தொட்டுத் தாலி கட்டிய மனைவிக்குத் தாம் செலுத்த வேண்டிய கடமை இது என்று கருதினார்.

சில சமயம் அவர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிக் கவலைபடுவதுண்டு. தமது மனைவிக்கு முன்னால் தாம் காலஞ்செல்ல நேர்ந்தால் அவளுடைய கதி என்ன ஆகும் என்று எண்ணிப் பெருமூச்சு விடுவார். "ஸ்வாமி! இவள் எத்தனைக் காலம் இப்படிக் கஷ்டப்படுவாள்? இவ்வளவு போதாதா? இவளுடைய துன்பங்களுக்கு முடிவு உண்டு பண்ணக்கூடாதா?" என்று சில சமயம் பிரார்த்திப்பார்.

கடைசியாக, அவருடைய பிரார்த்தனை நிறைவேறிற்று! ஒரு நாள் ஊரில் இல்லாத சமயம் அந்தப் பைத்தியக்காரி திடீரென்று கூச்சலிட்டுக் கொண்டு ஓடி, கொல்லையிலிருந்த கிணற்றில் விழுந்து உயிரைவிட்டாள்.

பஞ்சநதம் பிள்ளைக்கு இது ஒருவாறு மன ஆறுதல் அளித்தது என்றே சொல்ல வேண்டும். ஆயுள் கைதிக்குத் திடீரென்று விடுதலை கிடைத்ததுபோல், கொஞ்ச நாள் வரையில் அவருக்கே பிரமையாயிருந்தது. பின்னர் தாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டதை அவர் உணர்ந்ததும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்.

அவர் மனைவி உயிரோடிருந்தவரையில், "இவள் மட்டும் இறந்து போனால், நம்முடைய சொத்துக்களை யெல்லாம் நல்ல தர்ம ஸ்தாபனங்களுக்குச் சேர்த்துவிட்டு நாம் சந்நியாசியாகி விட வேண்டும்" என்று அவர் எண்ணமிடுவதுண்டு. இப்போதும் அவருக்கு அந்த எண்ணம் மாறிவிடவில்லை. புதிதாய் கிடைத்த சுதந்திரத்தை இன்னும் கொஞ்சநாள் அனுபவிக்க வேணுமென்ற ஆசையினால், சந்நியாசியாவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும், தேசத்திலுள்ள முக்கியமான தர்ம ஸ்தாபனங்கள், சந்நியாசி மடங்கள் இவற்றையெல்லாம் பற்றி அவர் விசாரிக்கவும் விவரங்கள் சேமிக்கவும் தொடங்கினார்.

இந்த மாதிரி நிலைமையில்தான் பஞ்சநதம் பிள்ளை கல்யாணியைப் பார்க்கவும், அவளுடைய குதூகலமான சிரிப்பின் ஒலியைக் கேட்கவும் நேர்ந்தது. உடனே, அவருடைய வாழ்க்கை நோக்கம் முழுவதும் அடியோடு மாறிப்போய் விட்டது.


*****

கொள்ளிடத்தில் பிரவாகம் போகும்போது சில சமயம் பெரிய உத்தியோகஸ்தர்கள் கரையோரமாகப் படகில் பிரயாணம் செய்வதுண்டு என்று சொல்லியிருக்கிறோமல்லவா? ஒரு சமயம், டிபுடி கலெக்டர் ஒருவர் அவ்வாறு படகில் பிரயாணம் செய்தபோது பஞ்சநதம் பிள்ளையும் அவருடன் கூடப் போகும்படி நேர்ந்தது. இவர்கள் பழைய சிநேகிதர்கள், சந்தித்துச் சில காலமானபடியால், படகில் போகும்போது பேசிக்கொண்டிருந்தார்கள்.

வழியில், பூங்குளம் கிராமத்து ஸ்நானத் துறையண்டை படகு சென்றபோது, துறையில் இரண்டு இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதையும், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஜலத்தை வாரி இறைத்துக் கொண்டு சிரித்து விளையாடுவதையும் அவர்கள் கண்டார்கள். அப்படி அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கரையில் இருந்த குடங்களில் ஒன்று மெதுவாய் நகர்ந்து ஆற்றில் மிதந்து செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்து விட்ட பெண்களில் ஒருத்தி "ஐயோ! கல்யாணி! குடம் போகிறது! எடு! எடு!" என்றாள். கல்யாணி "நீதான் எடேன்!" என்று சொல்லி ஜலத்தை வேகமாய் மோதவும், குடம் இன்னும் ஆழத்துக்குப் போய்விட்டது. அப்போது படகானது, மிதந்து போய்க் கொண்டிருந்த குடத்துக்குச் சமீபத்தில் வர, டிபுடி கலெக்டர் குனிந்து அந்தக் குடத்தைப் பிடிக்க முயன்றார். அம்முயற்சியில் அவர் தலையிலிருந்த தொப்பி நழுவித் தண்ணீரில் விழுந்தது. உடனே அவர் குடத்தை விட்டுவிட்டுத் தொப்பியைப் பிடிக்க முயன்றார். ஆனால் குடமும் போய்விட்டது; தொப்பியும் போய் விட்டது. குடத்தைப் பஞ்சநதம் பிள்ளை பிடித்துக் கொண்டார்; தொப்பி அரோகரா!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் கல்யாணி, முதலில் அவளுடைய முகத்தில் இதழ்கள் விரிந்து குறுநகை ஏற்பட்டது. அந்தக் குறுநகை இளஞ்சிரிப்பாயிற்று. பின்னர், அந்த நதி தீரமெல்லாம் எதிரொலி செய்யும்படி கலகலவென்று ஒரு சிரிப்புச் சிரித்தாள். அவ்வளவு சந்தோஷமான, குதூகலமான சிரிப்பைப் பஞ்சநதம் பிள்ளை தமது வாணாளில் கேட்டது கிடையாது.

கன்னங்கள் குழியும்படி சிரித்த அந்த அழகிய முகத்தின் தோற்றமும், கிண்கிணியின் இனிய ஓசையையொத்த அவளுடைய சிரிப்பின் ஒலியும் அவருடைய உள்ளத்தில் நன்கு பதிந்துவிட்டன. அந்த நிமிஷம் முதல் அவருடைய வாழ்க்கை நோக்கமும் மாறுதல் அடைந்தது. "இத்தனை வருஷகாலமாய் முடிவேயில்லாதது போன்ற துன்பத்தின் மத்தியில் உழன்றாயிற்றே, இனிமேலாவது ஏன் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்தக் கூடாது?" என்று அவர் கருதத் தொடங்கினார்.

ஒரு வேளை, பஞ்சநதம் பிள்ளைக்கு வயது வந்த புதல்வன் ஒருவன் இருந்திருந்தால் அவனுக்குக் கல்யாணியை மணம் செய்வித்து, அவர்கள் சந்தோஷமாயிருப்பதைப் பார்த்தே தாமும் மகிழ்ந்திருப்பார். அப்படி இல்லையாதலால், அவர் தமக்கே அவளை உரிமை கொள்ளச் சொன்னவர்களின் வாதங்களையெல்லாம் நினைவு கூர்ந்து, அவற்றின் நியாயங்களைப் பற்றிச் சிந்திக்கலானார்.

முடிவில், கல்யாணியைப் பற்றி விசாரித்து அறிந்து, அவளைக் கல்யாணமும் செய்து கொண்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:52 am

24.கைம்பெண் கல்யாணி


கல்யாணம் ஆன ஒரு வாரத்துக்குள்ளே, பஞ்சநதம் பிள்ளை தாம் செய்து விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதைத் தெரிந்து கொண்டார்.

கல்யாணத்தன்று, கல்யாணி மூர்ச்சையாகி விழுந்த போது, அவருக்குக் கொஞ்சம் நெஞ்சு திடுக்கிடத்தான் செய்தது. ஆனால் அவள் மூர்ச்சை தெளிந்து எழுந்ததும் அவருக்குப் பழையபடி உற்சாகம் ஏற்பட்டது. சௌந்தரிய தேவதையாய், இன்ப விளக்காய், நிலவு வீசும் முகத்தில் நீலக் கருவிழிகள் ஊசலாட நின்ற கல்யாணி இனிமேல் தமக்கே முழுமையும் உரியவள் என்பதை எண்ணிய போது, அவருக்குச் சொல்ல முடியாத பெருமை உண்டாயிற்று. அந்தச் செய்தியை கூரை மீது நின்று கூறி, சகலரும் அறியச் செய்ய வேண்டுமென்று அவருக்கு ஆசையாயிருந்தது.

கல்யாணத்தை யொட்டி அந்த ஜில்லாவிலுள்ள பெரிய உத்தியோகஸ்தர்களுக்கும், பெரிய மனுஷர்களுக்கும் பிரபலமான விருந்து நடத்தினார். அந்த விருந்துக்கு வந்திருந்த பெரிய மனிதர்களை உட்கார வைத்து நடுவில் மாப்பிள்ளையுடன் ஒரு குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. அந்தச் சமயம் யாரோ சொன்னார்கள், மணமகனும் மணமகளும் சேர்ந்து உட்கார்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டுமென்று. பஞ்சநதம் பிள்ளைக்கும் இது விருப்பமாகவேயிருந்தது. அப்படியே, அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்க கல்யாணி பக்கத்தில் நிற்க, ஒரு போட்டோ எடுக்கப்பட்டது.

கல்யாணம் நடந்த ஒரு வாரத்திற்கெல்லாம் அந்த போட்டோ தபாலில் வந்தது. அதைப் பஞ்சநதம் பிள்ளை ஆவலுடன் எடுத்துப் பார்த்தார். அவருடைய முகத்தில் ஒரு பெரிய மாறுதல் உண்டாயிற்று; எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோ மென்பதை அந்தக் கணமே அவர் உணர்ந்தார்.

இதற்கு முன்னால் அவர் தம்மைத் தனியாகக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். கல்யாணியை எதிரே வைத்துப் பார்த்திருக்கிறார். ஆனால் தம்மையும் அவளையும் சேர்த்துப் பார்த்தது கிடையாது. இப்போது படத்தில் சேர்த்துப் பார்த்தவுடன் அவருக்குப் பகீர் என்றது! 'வயதிலும், தோற்றத்திலும் எவ்வளவு வித்தியாசம்! ஐயோ! ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையை அநியாயமாய்ப் பாழாக்கி விட்டோ மே?'

இம்மாதிரி அவருக்கு ஏற்பட்ட கவலையை ஊர்ஜிதப் படுத்துவதற்கு இன்னொரு சந்தர்ப்பமும் சேர்ந்து கொண்டது. கல்யாணி தம்முடைய வீட்டுக்கு வந்ததிலிருந்து சிரிப்பதில்லை யென்பதை அவர் கண்டார். எந்தக் குறுநகையைக் கண்டும், குதூகலமான சிரிப்பைக் கேட்டும் அவர் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தாரோ, அதெல்லாம் இப்போது எங்கே? யார் கொண்டு போனார்கள்? அந்த அழகான மிருதுவான கன்னங்களில் இப்போது குழி விழுவதே இல்லையே அது ஏன்?

சிரிப்பது தான் இல்லை; அழவாவது செய்கிறாளா? அதுவும் கிடையாது. சிரிக்காவிட்டாலும் அழுதாலாவது தேவலையென்றுதான் பஞ்சநதம் பிள்ளை எண்ணினார். அழுதால் அருகில் சென்று சமாதானம் செய்யலாம்; கண்ணீர் பெருக்கினால் கண்களைத் துடைக்கலாம்; விசித்தாலும் விம்மினாலும் மடியில் எடுத்துப் போட்டுக் கொண்டு ஆறுதல் சொல்லலாம். அப்படி எல்லாம் தமது எல்லையில்லாத அன்பையும் ஆசையையும் வெளியிடுவதற்குச் சந்தர்ப்பமாவது கிடைக்கும்.

ஆனால் கல்யாணியோ சிரிப்பதுமில்லை; அழுவதுமில்லை. பஞ்சநதம் பிள்ளையிடம் மிக பயபக்தியுடன் அவள் நடந்து கொண்டாள். தன்னுடைய நடத்தையில் எவ்விதக் குறையும் சொல்வதற்கு அவள் இடம் வைக்கவில்லை. அந்த வீட்டின் எஜமானியாய், அந்தக் குடும்பத்தின் தலைவியாய் அந்த வயோதிகரின் மனைவியாய் வாழ்வது தனக்குரிய கடமை என்று உணர்ந்தவளைப் போல் அவள் நடந்து வந்தாள். ஆனால் அவளுடைய குதூகலத்தையும் இருதயத்தையும் ஏன், ஜீவனைக்கூட, பூங்குளத்திலேயே விட்டுவிட்டு இங்கே வெறும் உடம்புடன் மட்டும் வந்து நடமாடிக் கொண்டிருப்பது போலப் பஞ்சநதம் பிள்ளைக்குத் தோன்றியது.

கல்யாணியின் முகத்தில் மறுபடியும் சிரிப்பை வரவழைக்க வேணுமென்று பஞ்சநதம் பிள்ளை எவ்வளவோ முயற்சி செய்தார். எள் என்று சொல்லுமுன் எண்ணெயாக நின்றார். நகைகளும் புடவைகளும் கணக்கில்லாமல் கொண்டு வந்து குவித்தார். ஆயினும் கல்யாணி சிரிக்கவில்லை. அவள் எப்பொழுதும் போலவேயிருந்து வந்தாள்.

நாளாக ஆக, பஞ்சநதம் பிள்ளையின் மனசு உடைய ஆரம்பித்தது. அதன் பலனாய் அவர் படுத்த படுக்கையானார். கல்யாணி இரவு பகல் பாராமல் அவருக்குச் சிசுருஷை செய்தாள். பிள்ளைக்கு நோய் முற்றிக் கொண்டு வந்தது. கடைசியாக ஒரு நாள் பஞ்சநதம் பிள்ளை படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். கல்யாணியின் கையை எடுத்துத் தம்முடைய கையில் வைத்துக் கொண்டார்.

"கல்யாணி! முக்கியமான விஷயத்தை இப்பொது சொல்கிறேன், கேள். நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன்; இந்தக் கல்யாண பந்தத்திலிருந்து, கடவுள் சாட்சியாக உன்னை விடுதலை செய்கிறேன். வருங்காலத்தில் உன் மனதுக்குப் பிடித்த வாலிபன் யாரையேனும் நீ கல்யாணம் செய்து கொண்டால், என்னுடைய ஆத்மாவுக்கு அதனால் அதிருப்தி ஏற்படாது; திருப்தி தான் உண்டாகும்" என்றார்.

இத்தனை நாளைக்குப் பிறகு இப்போது தான் கல்யாணியின் கண்களில் ஜலம் வந்தது. அவளுடைய உள்ளத்தில் அப்போது ஒரு ஆசை, ஒரு வேகம் உண்டாயிற்று. எழுந்திருந்து பஞ்சநதம் பிள்ளையைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாள். கட்டிக் கொண்டு அவரை "மாமா!" வென்று கூப்பிட்டு, தன்னுடைய இருதயத்தின் கதவைத் திறந்து, அதிலுள்ள இரகசியத்தை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று எண்ணினாள். ஆனால் அத்தகைய எண்ணத்துடனே எழுந்து நின்றதும், அவளுடைய இருதயம் மறுபடி வைரமாகி விட்டது. அந்த இரகசியம் தனக்கு மட்டும் உரியதல்லவென்றும் முத்தையனுக்கும் அதில் உரிமை உண்டென்றும், தங்கள் இருவரையும் பகவானையும் தவிர வேறு யாருக்கும் அது தெரியக்கூடாது என்றும் ஒரு கணத்தில் அவள் உறுதி கொண்டாள்.

ஆகவே, எழுந்து நின்றவள், கை கூப்பியவண்ணம் அவரைச் சுற்றி வந்து, தன்னுடைய தலை அவருடைய பாதங்களில் படும்படியாக வணங்கி நமஸ்கரித்தாள். அவருடைய பாதங்கள் அவளுடைய கண்ணீரினால் நனைந்தன.

இது நடந்து ஐந்தாறு தினங்களுக்கெல்லாம் பஞ்சநதம் பிள்ளை காலமானார். கல்யாணி உலகத்தாரின் முன்னிலையில் கைம்பெண் ஆனாள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:53 am

25.புலிப்பட்டி பிள்ளைவாள்


கதைகளிலும் இதிகாசங்களிலும் கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு விரோதிகள் சிலர் தோன்றுவார்கள். கதை முடியும் வரையில் அவர்கள் கதாநாயகர்களுக்கு இன்னல் விளைவிக்க முயன்று கொண்டேயிருப்பார்கள். கடைசியில், கதை முடியும் சமயத்தில், தங்களுடைய தீச்செயல்களுக்கு அவர்கள் தண்டனையடைவார்கள்.

ஆனால், வாழ்க்கையில் சாதாரணமாய் இவ்வாறு நடப்பதில்லை. அவ்வப்போது நமக்குச் சில சிநேகிதர்களோ, விரோதிகளோ ஏற்படுகிறார்கள்; அவர்களால் சில நன்மைகளும், தீமைகளும் விளைகின்றன. அத்துடன் அவர்களுடைய சிநேகமோ, விரோதமோ தீர்ந்து போகிறது.

நமது வாழ்க்கையில் இன்னல் விளைவிப்பவரும் உதவி புரிகிறவரும் எப்போதும் ஒருவராகவே இருப்பதில்லை.


*****

முத்தையன் - கல்யாணியின் வாழ்க்கையிலும் இப்படித்தான் இருந்தது. முத்தையனுடைய வாழ்க்கையில் கார்வார்பிள்ளை பிரவேசித்ததையும் அதனால் விளைந்த பலனையும் பார்த்தோம். முத்தையனுடைய வாழ்க்கையைப் பொறுத்த வரையில், அபிராமி சென்னைக்குச் சென்ற செய்தியை அவனுக்கு அறிவித்ததுடன் சங்குப் பிள்ளையின் லீலை முற்று பெற்றது. பிறகு, அந்தப் புண்ணிய புருஷர் வேறு எந்த இளம் பெண் அநாதையாகவோ நிராதரவாகவோ இருக்கிறாள்; எந்த ஏழையின் குடியைக் கெடுக்கலாம், எந்தக் குடிசையில் தீயை வைக்கலாம் என்று பார்த்துக் கொண்டு போய் விட்டார். அவருடைய பாபகிருத்தியங்களுக்குத் தக்க தண்டனையளிக்கும் பொறுப்பை நாமும் பகவானுக்கே விட்டுவிட வேண்டியதாயிருக்கிறது.

முத்தையனுடைய வாழ்க்கையில் அந்த ஆட்டுத்தோல் போர்த்த காட்டுப் பூனை பிரவேசித்தது போலவே, கல்யாணியின் வாழ்க்கையில் பிரவேசித்த ஒரு மகா பாவியைப் பற்றி நாம் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது. அவனுக்குப் புலிப்பட்டி ரத்தினம் பிள்ளை என்று பெயர். தாமரை ஓடைப் பண்ணையாருக்கு நெருங்கிய தாயாதி உறவு பூண்டவன் அவன். அவனுடைய தகப்பனார் காலத்தில் தாமரை ஓடைப்பண்ணைக்குச் சமமான சொத்து இந்தக் குடும்பத்துக்கும் இருந்தது. ஆனால் பிள்ளையாண்டான் தலையெடுத்ததும், அந்த நிலைமை மாறிற்று. பையன் சென்னைப் பட்டணத்தில், காலேஜில் படித்துக் கொண்டிருந்தபோதே டம்பாச்சாரித்தனம் எல்லாம் கற்றுக் கொண்டான். பிறகு சீமைக்குப் போய் விட்டு வந்தான். சென்னையிலும், சீமையிலும், தான் கற்றுக் கொண்டு வந்த நாகரிகத் தோரணையுடனே புலிப்பட்டியில் அவன் வாழ்க்கை நடத்தத் தொடங்கினான்.

பெரிய மனுஷர்களுடைய சிநேகம் அதிகமாயிற்று; அவர்களுக்கெல்லாம் அடிக்கடி 'பார்ட்டி'கள் நடத்த வேண்டியிருந்தது. நாகரிகமாய் டிரஸ் பண்ணிக் கொள்வதிலும், உயர்தர விருந்துகள் நடத்துவதிலும், பிறத்தியாருடைய எலெக்ஷன்களில் முன்னின்று உழைத்து வேலை செய்வதிலும் புலிப்பட்டி பிள்ளைவாளுக்கு இணையானவர் அந்த ஜில்லாவிலேயே கிடையாது என்று பெயர் வந்தது.

பிறகு, கேட்பானேன்? பிதிரார்ஜித சொத்து நாளுக்கு நாள் குறைந்து வந்தது; கடனோ நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

ஆனாலும், ரத்தினம் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல், எப்போதும் போல் டாம்பீகச் செலவுகள் செய்து வந்தான். அவன் கவலையின்றி இருந்ததற்கு ஒரு காரணமும் இருந்தது. தாமரை ஓடைப் பண்ணையாருக்குச் சந்தானம் இல்லாதபடியால், அவருடைய திரண்ட சொத்தெல்லாம் தனக்கே வரப்போகிறதென்று அவன் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தான்.

ரத்தினம் சென்னையில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் பஞ்சநதம் பிள்ளைக்குக்கூட அத்தகைய அபிப்பிராயம் இருந்துதான் வந்தது. ஆனால் அவன் புலிப்பட்டிக்கு வந்த பிற்பாடு, அவனுடைய நடை உடை பாவனைகள் பஞ்சநதம் பிள்ளைக்கு அளவில்லாத வெறுப்பை உண்டாக்கின. தன்னுடைய சொத்தில் ஒரு காலணாக்கூட இந்தத் தூர்த்தனுக்குச் சேரக் கூடாது என்று அவர் தீர்மானித்து விட்டார். ஆனால் இது அவனுக்குத் தெரியாது. "சொத்து எங்கே போகிறது? இவருக்குக் கொள்ளியிட நம்மைத் தவிர வேறு யார்?" என்று எண்ணி அவன் நிர்சிந்தையாய் இருந்தான்.

எனவே திடீரென்று ஒரு நாள், தாமரை ஓடைப் பண்ணையார் இரண்டாந்தாரமாகக் கல்யாணியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறார் என்ற செய்தியை அறிந்ததும் ரத்தினம் பிள்ளைக்கு இடி விழுந்தாற் போலிருந்தது. அவன் கோபங்கொண்டு கல்யாணத்துக்குக் கூட வரவில்லை. "கிழவனுக்கு என்ன கல்யாணம் வேண்டிக் கிடக்கிறது?" என்று கண்டவர்களிடமெல்லாம் தூற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது வந்த ஆத்திரத்தில், இந்த மாதிரி வயதானவர்கள் சிறு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளும் அக்கிரமத்தைப் பற்றிப் புனை பெயருடன் பத்திரிகைகளுக்குக் கூட ஒரு கடிதம் எழுதினான். அது வெளியானதும், தனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரையும் கூப்பிட்டு வைத்து, "பத்திரிகையில் இது ஒரு விஷயம் வந்திருக்கிறது, பார்த்தீர்களா?" என்று அதைப் படித்துக் காட்டினான்.

சில மாதங்கள் இப்படிக் கோபத்தில் ஆழ்ந்திருந்த பிறகு ஒரு நாள் தாமரை ஓடை வீதி வழியாகப் போன போது அவன் தற்செயலாகக் கல்யாணியைப் பார்க்க நேர்ந்தது. அவளுடைய திவ்ய சௌந்தர்யத்தைப் பார்த்ததும் அவன் பிரமித்தே போனான். "ஆகா! இப்பேர்ப்பட்ட அழகியையா இந்தத் தலை நரைத்த கிழவன் மணந்து கொண்டிருக்கிறான்?" என்று எண்ணினான். இயற்கையிலேயே காமுகனும் ஒழுக்கத்தில் தூர்த்தனுமான அவனுடைய உள்ளத்தில், அக்கணமே பாப சிந்தை குடி கொண்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:54 am

26."சூ! பிடி!"


சில நாளைக்கெல்லாம் ரத்தினம், பஞ்சநதம் பிள்ளையிடம் சென்று, தான் தெரியாத்தனமாகச் செய்த குற்றங்களை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான். பஞ்சநதம் பிள்ளை அவன் முன் செய்த குற்றங்களையும் பொருட்படுத்தவில்லை; இப்போது மன்னிப்புக் கேட்பதையும் பொருட்படுத்தவில்லை. அவன் அவ்வளவு பணிவு கொண்டு பேசியது அவருக்குச் சிறிது வியப்பு அளித்ததாயினும், அதைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்யாமல், "தம்பி! நீ என்னை மன்னிப்புக் கேட்கவாவது? நான் உன்னை மன்னிக்கவாவது? இதெல்லாம் எதற்காக? உன் மேல் எனக்கு ஒரு கோபமும் இல்லை; போய் வா!" என்று சொல்லி விட்டார். அவருடன் சிநேகம் செய்து கொண்டு அடிக்கடி அவர் வீட்டுக்கு வருவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடனே ரத்தினம் வந்தான். அந்த நோக்கம் நிறைவேறாமற் போகவே, சலிப்புடன் திரும்பிச் சென்றான்.

பிறகு, அவன் இன்னும் இரண்டு மூன்று தடவை மானத்தை விட்டு பஞ்சநதம் பிள்ளையின் வீட்டுக்குப் போனான். அப்போதெல்லாம் தூரத்தில் கல்யாணி அங்குமிங்கும் நடமாடுவதைப் பார்க்கத்தான் முடிந்தது. அவளுடைய அருகில் நெருங்கவோ அவளுடன் பேசவோ சௌகரியம் ஏற்படவில்லை. இதனால், அவனுடைய உள்ளத்தை எரித்துக் கொண்டிருந்த தீ இன்னும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

பஞ்சநதம் பிள்ளை காலஞ் சென்றபோது, ரத்தினம் ஊரில் இல்லை. ஆனால் அவருடைய மரணச் செய்தி கேட்டதும் அவன் பரபரப்புடன் ஊருக்கு ஓடி வந்தான். பஞ்சநதம் பிள்ளை உயில் ஒன்றும் எழுதி வைக்காமல் இறந்திருந்தால் கல்யாணிக்குப் பிற்காலம் அவருடைய சொத்துக்கெல்லாம் இவனே உரியவன். ஆகவே, சொத்துகளின் மேற்பார்வையை இப்போதே தான் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இதன் மூலம் கல்யாணியுடன் பேசிப் பழகுவதற்கும் அவசியம் ஏற்படும். இவ்வாறு தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பம் எதிர்பாராத முறையில் வந்துவிட்டதாகவே அவன் கருதினான்.

தாமரை ஓடைக்கு வந்து விசாரித்து உயில் எழுதப்பட்டிருக்கும் விவரம் தெரிந்ததும், அவனுடைய உற்சாகம் வெகுவாகக் குறைந்தது. உயிலே பொய் உயில், போர்ஜரி செய்தது, செல்லாதது என்றெல்லாம் வழக்காடலாமா என்று சிந்தனை செய்யத் தொடங்கினான். ஆனாலும், இதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், கல்யாணியின் வீட்டுக்குச் சென்று உத்தரக் கிரியைகளில் ஒத்தாசை செய்தான். கல்யாணியின் தகப்பனார் திருச்சிற்றம்பலம் பிள்ளைக்கு அவனுடைய பூர்வோத்தரம் ஒன்றும் தெரியாதபடியால், இறந்து போனவருக்கு முக்கியமான பந்துவாகவே அவனைக் கருதி, எல்லா விஷயங்களிலும் அவனுடன் கலந்து யோசனை செய்யத் தொடங்கினார். அவன் அபிப்பிராயப்படியே சகல காரியங்களும் செய்து வந்தார்.


*****

கருமங்கள் எல்லாம் ஆனதும், நில புலன்களின் சாகுபடியைப் பற்றித் தீர்மானிக்க வேண்டி வந்தது. நிலங்களைப் பிரித்துப் பிரித்துக் குத்தகைக்கு விட்டுவிடவேணுமென்றும் அதற்கு ஏற்பாடுகள் தாம் செய்வதாகவும் ரத்தினம் பிள்ளை சொன்னார். திருச்சிற்றம்பலம் பிள்ளையும் இதற்குச் சம்மதித்தார்.


*****

அன்றிரவு சாப்பிடும்போது அவர் இவ்விஷயத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். அது கல்யாணியின் காதில் விழுந்தது. அவள் உடனே, "அப்பா! சாகுபடி எல்லாம் இத்தனை நாளாக நடந்து வந்தது போலவே இனிமேலும் நடக்க வேண்டும், மாறுதல் ஒன்றும் கூடாது" என்றாள்.

அதிகாரத் தோரணையுடன் அவள் இவ்வாறு பேசியது திருச்சிற்றம்பலம் பிள்ளைக்கு அதிசயமாயிருந்தது; சிறிது கோபத்தையும் உண்டு பண்ணிற்று.

"உனக்கென்ன தெரியும் இதெல்லாம்? 'சொந்தப் பண்ணை வைத்து நடத்தமுடியாது; ஆள்களை மேய்ப்பது ரொம்பக் கஷ்டம்' என்று ரத்தினம் பிள்ளை சொல்றாரே?"

"அது யார் அது ரத்தினம் பிள்ளை? நம்முடைய வீட்டுக் காரியத்துக்கு அவர் என்ன யோசனை?" என்றாள் கல்யாணி.

திருச்சிற்றம்பலம் பிள்ளை திகைத்துப் போனார். ஆனாலும் அவர் சமாளித்துக் கொண்டு, "என்ன அப்படித் தூக்கி எறிந்து பேசுகிறாய்! புலிப்பட்டிப் பிள்ளையைத் தான் சொல்கிறேன். இந்த ஊர் நெளிவு சுளுவு எல்லாம் அவருக்குத்தானே தெரியும்! நான் ஊருக்குப் புதிது. நீயோ சிறுபெண்! உலகம் தெரியாதவள், உன்னால் என்ன முடியும்...?" என்று சொல்கையில் கல்யாணி குறுக்கிட்டு, "அப்பா! இந்த யோசனையெல்லாம் உங்கள் பெண்ணைக் கிழ மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதற்கு முன்னாலேயே உங்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்" என்றாள்.

திருச்சிற்றம்பலம் பிள்ளையின் வாய் அடைத்துப் போய் விட்டது. கல்யாணியின் குணத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல் அவருக்கு அர்த்தமாகவேயில்லை. இந்த வீட்டில் கல்யாணிதான் சர்வ சுதந்திர எஜமானி, தமக்கு ஒரு அதிகாரமும் இல்லையென்று அவருக்கு இரண்டொரு நாளில் ஸ்பஷ்டமாகத் தெரிந்து போகவே, அவர் கோபித்துக் கொண்டு பூங்குளத்துக்கே போய் விட்டார். பிறகு கல்யாணியும் அவளுடைய வயதான அத்தை ஒருத்தியும் அந்த வீட்டில் வசித்து வந்தார்கள். காரியங்கள் எல்லாம் எப்போதும் போலவே நடந்து வந்தன. காரியஸ்தர்கள் குடிபடைகள் எல்லாரையும் கல்யாணி அடிக்கடி வீட்டுக்குத் தருவித்து, நேரில் உத்தரவு இட்டு வந்தாள். அவர்கள் எல்லாரும் பண்ணையாரின் எதிர்பாராத மரணத்தினால் என்ன விபரீதமான மாறுதல் ஏற்படுமோ என்று திகிலடைந்தவர்கள், இப்போது மிகவும் குதூகலத்துடன் தங்கள் வேலைகளைச் சரிவரச் செய்து வந்தார்கள்.


*****

ரத்தினம் பிள்ளைக்கு இதெல்லாம் ஒன்றும் பிடிக்கவே இல்லை. அவனுடைய உத்தேசங்கள் எல்லாம் தவறிப்போயே வந்தன. ஆனாலும் அவன் நிராசை அடைந்து விடவில்லை. பல தடவை அவன் தாமரை ஓடைப் பண்ணையின் வீட்டுக்குப் போய் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, ஆச்சியுடன் சில முக்கியமான விஷயங்கள் பேச வேண்டியிருக்கிறதென்று வேலைக்காரியிடம் சொல்லி அனுப்புவான். ஆச்சிக்கு உடம்பு சரியில்லையென்றும், ஏதாவது முக்கியமான விஷயம் இருந்தால் காரியஸ்தரிடம் தெரிவிக்கச் சொன்னதாகவும் வேலைக்காரி வந்து கூறுவாள்.

கடைசித் தடவை ரத்தினம் பிள்ளை அவ்வாறு வந்திருந்த போது ஒரு விசேஷ சம்பவம் நடந்தது. பண்ணையாரின் வீட்டு வாசலில் எப்போது ஒரு நாய் கட்டியிருக்கும். அது உயர்ந்த ஜாதி நாய். பார்த்தால் சாது மாதிரிதான் இருக்கும். குரைக்காது; யாரையும் அநாவசியமாகக் கடிக்காது. ஆனால் எஜமான் மட்டும் ஏவி விட்டால் முழங்கால் சதையில் குறைந்தது ஒரு ராத்தல் சதை எடுத்துப் பட்சணம் செய்தாலொழிய அதற்குச் சரிக்கட்டி வராது.

அந்த நாய் வீட்டின் முன் ஹாலில் ஜன்னல் கம்பியில் அன்று சங்கலியால் கட்டப்பட்டிருந்தது. ரத்தினம் பிள்ளை வாசல் அருகில் வந்ததும், அந்த ஜன்னலண்டை ஒரு பெண்ணின் கை தெரிந்தது; அது பொன் வளையல் அணிந்த அழகான கை. அந்தக் கை நாயைக் கட்டியிருந்த சங்கிலியை அவிழ்த்து விட்டது. "சூ!" என்ற மெல்லிய சத்தமும் கேட்டது. அவ்வளவுதான், நாய் ஒரே ஒரு தடவை "லொள்" என்று குரைத்துவிட்டு, வாய்ப் பேச்சில் அதிக நம்பிக்கையில்லாத வீரனைப் போல், புலிப்பட்டிப் பிள்ளைவாளின் மேல் பாய்ந்தது. பிள்ளைவாள் ஓடினார். நாயும் பின் தொடர்ந்தது. சீக்கிரத்தில் அவருடைய கால் சட்டையை அது பற்றிற்று; ஒரே கடியில் சட்டையைக் கிழித்து, சதையைக் கவ்விற்று. பிள்ளைவாள் மும்மடங்கு வேகமாய் ஓடினார். நாயும், அவருடைய முழங்கால் சதையை ருசி பார்த்துக் கொண்டே தொடர்ந்து ஓடிற்று. அவரைத் தெரு முனை வரையில் கொண்டு போய் வழியனுப்பிய பிறகுதான் திரும்பி வந்தது.

துரத்தப்பட்டு ஓடுகிறவனிடம் சாதாரணமாய் அனுதாபம் உண்டாவது கிடையாது. இது மனித சுபாவம். இந்த சுபாவத்தையொட்டி புலிப்பட்டிப் பிள்ளைவாள் நாயினால் துரத்தப்பட்டு ஓடியபோது, வீதியில் நின்றவர்கள் - பிள்ளைகள் பெரியவர்கள் கூட - சிரித்தார்கள். சில துஷ்டப் பிள்ளைகள் "சூ! பிடி!" என்று நாயை உற்சாகப் படுத்தினார்கள். நாயின் பல்லினால் பிள்ளைவாளுக்குக் காலிலே புண்ணும், ஊராருடைய சிரிப்பினால் அவருடைய உள்ளத்திலே புண்ணும் ஏற்பட்டன. கல்யாணியிடம் அவர் அளவிலாத துவேஷம் கொண்டார். எப்படியும் அவளைப் பழி வாங்குவதென்று தீர்மானித்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:55 am

27.பிள்ளைவாளின் பழி


கல்யாணியைப் பழி வாங்குவதற்குப் புலிப்பட்டி ரத்தினம் அநேக குருட்டு யோசனைகள் செய்துவிட்டுக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். தாமரை ஓடைப் பண்ணையின் நிலங்களைப் பலாத்காரமாய்த் தன் வசப்படுத்திக் கொண்டு விடுவதென்றும், கல்யாணியைக் கோர்ட்டுக்குப் போகும் படியாகவோ தன்னுடன் ராஜி பேச வரும்படியாகவோ செய்து விடுவதென்றும் தீர்மானித்தான்.

பண்ணையின் நிலங்கள் எல்லாம் அந்த வருஷம் நன்றாய் விளைந்திருந்தன. அறுவடையாகிவிட்டது. ஆனால் நெல் எல்லாம் இன்னும் களத்திலேயே கிடந்தது. களத்திலிருந்தபடியே நெல்லை விற்றுவிடுவதா அல்லது எடுத்துக் கொண்டு போய்ச் சேர் கட்டி வைத்திருப்பதா என்பதைப் பற்றிக் கல்யாணி யோசனை செய்து கொண்டிருந்தாள்.

நெல்லைப் போட்டு விடும்படியாக நெல் வியாபாரி ஒருவன் வந்து அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். பண்ணையின் காரியஸ்தருக்கு இது பிடிக்கவில்லை. "நம்முடைய பண்ணையில் எப்போதும் ஆனி மாதத்திலே தான் நெல்லுப் போடுகிற வழக்கம்" என்று அவர் சொன்னார்.

இம்மாதிரி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு ஆள் குடல் தெறிக்க ஓடி வந்து, "ஆச்சி! ஆச்சி! மோசம் வந்துட்டுது!" என்று கதறினான். என்னவென்று கேட்கவும், "புலிப்பட்டி ஆட்கள் வந்து களத்திலிருக்கும் நெல்லை அள்ளறானுங்க. இருபது முப்பது வண்டி வந்து கிடக்கு. தடியுங் கையுமாய் நூறு ஆட்கள் வந்து நிற்கிறானுங்க. எல்லாரும் நன்னாப் புட்டிப் போட்டுட்டு வந்திருக்கானுங்க. கிட்ட வந்தால் மண்டையை உடைச்சுடுவேன் என்கிறானுங்க. பாருங்க, அங்கே புடிச்ச ஓட்டம் இங்கே வந்துதான் நின்னேனுங்க" என்றான்.

அதைக் கேட்ட காரியஸ்தர் முதலியார், "ஐயோ!" என்று அப்படியே உட்கார்ந்து போய்விட்டார். அவர் சாது மனுஷர். பண்ணையாரின் காலத்தில் இம்மாதிரிச் சங்கடம் ஒன்றும் நேர்ந்தது கிடையாது. ஆகவே, இந்த நிலைமையை எப்படிச் சமாளிக்கப் போகிறோமென்று அவர் ஏங்கிப் போனார்.

நெல் வியாபாரி இது தான் சமயம் என்று, "அப்பவே நெல்லைப் போட்டுடுங்க போட்டுடுங்க என்று அடிச்சுண்டேனே, கேட்டீங்களா? இப்படி ஒரு பேச்சு காதில் படக் கொண்டுதானே அவ்வளவு தூரம் வற்புறுத்தினேன்?..." என்று சரடு விட்டான்.

கல்யாணி சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். சட்டென்று அவளுடைய முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது. "முதலியார்! கிளம்புங்கள் களத்துக்குப் போகலாம்!" என்றாள்.

முதலியார் திகைத்துப் போனார். "ஆச்சி! என்ன சொல்றீங்க?"

"ஆமாம்; களத்துக்கு நானே வருகிறேன். வாருங்கள் போகலாம்" என்று சொல்லி, அவளே முதலில் கிளம்பினாள்.

உள்ளேயிருந்த அத்தையின் காதில் இது விழுந்தது. அவள் ஓடி வந்து, "கல்யாணி, கல்யாணி! நான் சொல்கிறேன், நீ போவாதே" என்று குறுக்கே மறித்தாள் கல்யாணி அதைப் பொருட்படுத்தாமல் அத்தையை இலேசாக வழியை விட்டு நகர்த்தி விட்டு விரைந்து நடந்தாள்.

அப்போது காரியஸ்த முதலியாருக்கும் ரோஸம் பிறந்து, "அடே! ஓடு! நம்ம ஆளையெல்லாம் தடியுங்கையுமாய்க் களத்துக்கு வரச்சொல்லு!" என்று கூறினார். அதற்குக் கல்யாணி, "முதலியார்! ஆளும் வேண்டாம், தடியும் வேண்டாம். நீங்கள் மட்டும் என் பின்னோடே வாருங்கள், போதும்" என்றாள்.


*****

தூரத்தில் கல்யாணியைக் கண்டதும், நெல் அள்ளியவர்கள், தடியுங் கையுமாய் நின்றவர்கள், வண்டிக்காரர்கள் எல்லாருக்கும் ஆச்சரியமாய்ப் போயிற்று. அந்தப் பக்கங்களில் சாதாரணமாய்ப் பண்ணை வீட்டு ஸ்திரீகள் வயல்வெளிகளுக்கு வருவது கிடையாது. அதுவும் இம்மாதிரி சந்தர்ப்பத்தில் கல்யாணி ஆள்படை ஒன்றும் இல்லாமல் வருவதைப் பார்த்ததும் அவர்கள் எல்லோருக்குமே காரணம் சொல்ல முடியாத திகில் உண்டாய் விட்டது. எல்லாரும் அப்படியே நின்று கல்யாணி வரும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கல்யாணி கம்பீரமாய் நடந்து நேரே அவர்களுக்கு மத்தியில் வந்து நின்றாள். "அடே! நீங்கள் எல்லாம் யார்?" என்று கேட்டாள்.

கொஞ்ச நேரம் பதில் ஒன்றும் வரவில்லை. அவர்களில் பெருங்குடிகாரனும் வாயாடியுமான ஒருவன் "நாங்களெல்லாம் மனுஷங்க" என்றான்.

"நீங்கள் எந்தப் பண்ணை ஆட்கள்?" என்று கல்யாணி கேட்டாள்.

"புலிப்பட்டி ஆட்களுங்க."

"சரி, இது எந்தப் பண்ணைக் களம்?"

"தாமரை ஓடைப் பண்ணைக் களம்."

"பின்னே, ஏன் அப்பா இந்தக் களத்தில் வந்து நெல் வாருகிறீங்க?"

ஆட்கள் மௌனமாயிருந்தார்கள்.

"அடே! எல்லோரும் என்னை நன்றாய்ப் பாருங்க. நான் யார் தெரிகிறதா?" என்று கம்பீரமாய்க் கேட்டாள் கல்யாணி.

அப்போது அந்தப் பெருங்குடிகாரன், "அம்மா! நீ மாரியம்மனாச்சே! எனக்குத் தெரியாமே போச்சே! அடே ஆளுங்களா! எல்லாரும் விழுந்து கும்பிடுங்கடா!" என்று சொல்லி முதலில் தானே திடீரென்று தரையில் விழுந்து கும்பிட்டான். "அம்மா! தாயே! காப்பாத்தணும்" என்று புலம்பத் தொடங்கினான். மற்ற ஆட்கள் எல்லாம் பிரமை பிடித்தவர்கள் போல் நின்றார்கள்.

"அடே! உங்களையெல்லாம் காப்பாற்றத்தான் நான் வந்தேன். நீங்கள் இப்போது செய்வதற்கு வந்தது, பெரிய தப்புக் காரியம். பகல் கொள்ளை அடிப்பதற்காக வந்திருக்கிறீர்கள். இதற்காக உங்களைப் பிடித்துக் காலிலேயும் கையிலேயும் விலங்கு மாட்டி, ஏழு ஏழு வருஷம் ஜெயிலிலே போட்டு விடுவார்கள். நீங்கள் ஜெயிலுக்குப் போய் விட்டால், உங்கள் பெண்சாதி, பிள்ளைகளை உங்கள் எசமான் காப்பாத்தி விடுவாரா?" என்றாள் கல்யாணி.

"ஐயோ! எங்க எசமானா? செய்யற வேலைக்கு வயத்திலே அடிக்காமே கூலி கொடுத்தால் போதாதா?"

"பின்னே, அவர் சொல்றதைக் கேட்டுக் கொண்டு இந்தத் திருட்டு வேலைக்கு வந்தீர்களே! எல்லாரும் திரும்பிப் போய்ச் சேருங்கள். சாயங்காலம் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை வரச் சொல்லுங்கள் தலைக்கு பதக்கு நெல் கொடுத்தனுப்பச் சொல்கிறேன். ஏன் நிற்கிறீர்கள்? போங்கள்!" என்றாள்.

"ஆமாண்டா, போகலாம் வாங்கடா! நமக்கென்னத்துக்கடா தண்டா!" என்றான் ஒருவன். முதலில் பத்துப் பேர் கிளம்பினார்கள். அவர்கள் பின்னால் இன்னும் சிலர் போனார்கள். பிறகு பாக்கியுள்ளவர்களும் "நமக்கு மாத்திரம் என்னடா?" என்று சொல்லிக் கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.

பிறகு, கல்யாணி வண்டிக்காரர்களை அழைத்துப் பேசினாள். அதன் பயனாக, எல்லா வண்டிக்காரர்களும் நெல் மூட்டைகளுடன் தாமரை ஓடை வீதிக்குச் சென்று, அங்கே, பண்ணையில் சேர் கட்டும் முற்றத்தில் நெல்லைப் போட்டுவிட்டு வண்டிச் சத்தத்தை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.

இந்த விவரமெல்லாம் புலிப்பட்டி ரத்தினத்தின் காதுக்கு எட்டியபோது, அவன் அவமானத்தினால் குன்றிப் போனான். அவ்வளவுக்கு அவனுடைய குரோதமும் அதிகமாயிற்று. அப்போதுதான், கொள்ளிடக்கரைத் திருடனுக்குப் பணம் கொடுத்துக் கல்யாணி வீட்டில் கொள்ளையடிக்கச் செய்ய வேண்டுமென்ற அபூர்வ யோசனை அவனுடைய மூளையில் உதயமாயிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:56 am

28.சந்திப்பு


பஞ்சநதம் பிள்ளை ஜீவியவந்தராயிருந்த காலத்தில் கல்யாணி தன்னுடைய இருதயமாகிய கோட்டையை கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தாள். அதில் முத்தையன் பிரவேசிப்பதற்கு அவள் இடங்கொடுக்கவில்லை. அவ்வாறு இடங்கொடுப்பது பாவம் என்று அவள் கருதினாள். ஆகவே, முத்தையனுடைய நினைவு வரும்போதெல்லாம் சட்டென்று வேறு குடும்ப காரியங்களில் மனத்தைச் செலுத்தி அந்த நினைவை போக்கடித்துக் கொள்வாள். "ஸ்வாமி பாவ எண்ணம் என் மனத்தில் தோன்றாமல் காப்பாற்று" என்று கடவுளை வேண்டுவாள். சீதை, தமயந்தி, நளாயினி முதலிய கற்பரசிகளை நினைத்து, மனத்தை உறுதிப்படுத்திக் கொள்வாள். இப்படிச் சதா விழிப்புடனிருந்து மனத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதிலேயே கவனமாயிருந்தவளுடைய முகத்தில் பஞ்சநதம் பிள்ளை சிரிப்பையும் குதுகலத்தையும் காணாமற் போனது வியப்பில்லையல்லவா?

புருஷன் உயிர் வாழ்ந்த காலத்தில் கல்யாணி தன்னுடைய உள்ளத்தை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தி வைத்திருந்தாளோ, அவ்வளவுக்கு அவருடைய மரணத்திற்குப் பிறகு அதைக் கட்டில்லாமல் சுயேச்சையாக விட்டுவிட்டாள். அதிலும் அவர் தன்னை விவாக பந்தத்திலிருந்து விடுதலை செய்வதாகச் சொல்லி விட்டபடியால், இனி முத்தையனைப் பற்றி நினைப்பதில் யாதொரு தவறுமில்லையென்று அவள் கருதினாள். அப்படிக் கட்டவிழ்த்து விடப்பட்ட அவளுடைய உள்ளம் தட்சணமே முத்தையனைச் சென்று அடைந்து, பிறகு அவனை விட்டு அசையவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. கனவிலும் முத்தையனுடைய நினைவைத் தவிர வேறு நினைவே அவளுக்கு இல்லாமல் போயிற்று.


*****

முத்தையன் இப்போது எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான் என்று அறிய அவள் அளவில்லாத ஆவல் கொண்டாள். ஒரு வேளை அவன் கல்யாணம் செய்து கொண்டிருப்பானோ என்ற நினைவு தோன்றும்போது, அவளுடைய நெஞ்சில் யாரோ ஈட்டியினால் குத்துவது போன்றிருக்கும்.

"இருக்காது; ஒரு நாளும் இருக்காது" என்று எண்ணி மனத்தைத் திடப்படுத்திக் கொள்வாள். "அவன் எங்கேயோ? நாம் எங்கேயோ? இனிமேல் எங்கே அவனைக் காணப் போகிறோம்?" என்று எண்ணி ஒரு சமயம் ஏக்கமுறுவாள். "இல்லை! இல்லை! கட்டாயம் இந்த ஜன்மத்தில் அவனை மறுபடியும் பார்க்கத்தான் போகிறேன். அவனிடம் நான் கொண்ட அன்பு உண்மையானதானால், அவனை எப்படிப் பார்க்காமலிருக்க முடியும்?" என்று தேற்றிக் கொள்வாள். "அந்தக் காலத்திலேயே 'நீ பணக்காரி; நான் ஏழை' என்று சொல்லிக் காட்டினானே! இப்போது பெரிய பணக்காரியாகி விட்டேனே! அதனால் அவனுடைய வெறுப்பு அதிகமாகுமோ என்னமோ?" என்று ஒரு சமயம் பீதியடைவாள். "அதெல்லாம் இல்லை. இதற்குள் முத்தையன் தன் மேல் தவறு என்று உணர்ந்திருப்பான். 'இவ்வளவு செல்வமும் உன்னுடையது; உன் இஷ்டம் போல் செய்யலாம்' என்று நான் சொல்வேன். உடனே அவனுடைய மனது இளகிவிடும்" என்று இன்னொரு சமயம் உற்சாகப்படுவாள்.

முத்தையன் பூங்குளத்தில் இல்லை, எங்கேயோ மடத்தில் கணக்குப் பிள்ளையாய்ப் போய்விட்டான் என்ற சமாசாரம் மட்டும் அவளுக்கு அவள் தகப்பனார் மூலமாய்த் தெரிந்திருந்தது. அவன் இருக்குமிடம் எப்படிக் கண்டு பிடிப்பது, அவனை எப்படிச் சந்திப்பது என்பது பற்றி அவள் ஆயிரம் யோசனை செய்தாள். ஆனால் ஒவ்வொன்றிலும், ஏதாவது ஒரு குறை தோன்றிற்று.

இப்படிப்பட்ட நிலைமையிலேதான், கொள்ளிடக் கரைத் திருடனைப் பற்றி வதந்தி அவள் காதில் விழுந்தது. அவனுடைய பெயர் முத்தையன் என்று கேட்டதும், அவள் உடம்பு சிலிர்த்தது. அவனுடைய பூர்வோத்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் விசாரித்து, மடத்தில் கணக்குப் பிள்ளையாயிருந்தவன் என்று தெரிந்ததும், அவளுடைய சந்தேகங்கள் நிவர்த்தியாயின. அப்போதே, முத்தையனைச் சந்திப்போமா என்ற கவலையும் அவளுக்குத் தீர்ந்து போயிற்று. கட்டாயம் ஒரு நாள் தன்னுடைய வீட்டிலும் அவன் திருட வருவான் என்ற எண்ணம் அவள் மனத்தில் தோன்றி, அது நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வந்தது. அப்போது எவ்வாறு அவனை வரவேற்பது, என்ன பேசுவது என்றெல்லாம் சிந்திக்கலானாள்.

அப்படி அவன் வருங்காலத்தில் வீட்டில் மனுஷர்கள் அதிகமாக இருக்கக்கூடாதல்லவா? இதற்காகவே, கோபித்துக் கொண்டு ஊருக்குப் போன அவளுடைய தகப்பனாரை அவள் திரும்பிக் கூப்பிடவில்லை. திருச்சிற்றம்பலம் பிள்ளை தம்முடைய இளைய சம்சாரம், குழந்தைகளுடன் தாமரை ஓடைக்கே வந்துவிடத் தயாராயிருந்தார் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தும், அதைப் பற்றி அவள் பிரஸ்தாபிக்கவில்லை.

முத்தையனை எதிர்பார்த்து அவள் இராத்திரியில் அநேக நாள் தூங்குவதே கிடையாது. அப்படித் தூங்கினாலும், ஏதாவது கொஞ்சம் சத்தம் கேட்டால் திடுக்கென்று எழுந்து விடுவாள். அவன் எப்படி வருவான்? ஓட்டு மேலால் ஏறிக் குதித்து வருவானா? கன்னம் வைத்து வருவானா? அல்லது தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப் போல் பகிரங்கமாய் வந்து வாசல் கதவை இடித்து, "கதவைத் திற" என்று அதட்டுவானா? - இப்படியெல்லாம் எண்ணமிடுவாள். அப்படி வாசல் கதவை அவன் இடித்து, தான் கையில் விளக்குடன் போய்க் கதவைத் திறந்தால் அவன் எப்படித் திகைத்து நிற்பான் என்பதை நினைத்து நினைத்துத் தானே சிரித்துக் கொள்வாள்.

நிலவு எரிக்கும் இரவு நேரங்களில் அவள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். "இந்த நிலவு முத்தையன் இருக்கும் இடத்திலும் இருக்குமல்லவா? இந்தச் சந்திரனை அவனும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பானல்லவா?" என்று எண்ணமிடுவாள். "ஒரு வேளை இந்த நேரத்தில் அவனும் என்னைப் பற்றி நினைக்கக் கூடுமல்லவா?" என்று எண்ணும் போது அவளுக்கு உடல் சிலிர்க்கும்.

இருட்டுக் காலத்தில் அவள் முற்றத்தில் உட்கார்ந்து, வானத்தில் மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பாள். "இந்த நேரத்தில் முத்தையன் கொள்ளிடக் கரையில் எங்கேயோ தன்னந் தனியாய்ப் படுத்திருப்பான்; இந்த நட்சத்திரங்களுடனே அவன் பேசிக் கொண்டிருப்பான்" என்று எண்ணுவாள். அச்சமயம் இரவு நேரங்களில் கொள்ளிடக்கரையில் நரிகள் ஊளையிடுமென்பது அவள் நினைவுக்கு வரும். "ஒரு வேளை இருபது முப்பது நரிகளாகச் சேர்ந்து முத்தையனை வளைத்துக் கொண்டால்..." என்று நினைக்கும் போது அவளுடைய உடம்பெல்லாம் பதறும். சில சமயம் அவளுடைய மனோபாவத்தில், நரிகள் போலீஸ்காரர்களாக மாறிவிடும். "ஐயோ! அப்படி ஒன்றும் நேராமல் இருக்க வேண்டுமே!" என்று அவள் பதை பதைப்பாள்.

முத்தையன் திருடனாய்ப் போனது பற்றி அவளுக்கு அவனிடம் எவ்விதத்திலும் அவமதிப்பு ஏற்படவில்லை. முத்தையன் தப்புக் காரியம் எதுவும் செய்வானென்று அவளால் எண்ண முடியவில்லை. 'இந்தப் புலிப்பட்டி ரத்தினத்தைப் போன்ற பாதகர்களைக் கொள்ளையடித்தால் என்ன பிசகு' என்ற நினைவே மேலிட்டிருந்தது.

முத்தையனைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதில் அவள் இப்போது ரொம்பவும் விருப்பம் கொண்டிருந்தாள். காரியஸ்தர் முதலியாரிடமும் அக்கம் பக்கத்தாரிடமும் அடிக்கடி அவனைக் குறித்துப் பேசுவாள். பிரசித்தமான அத்திருடனைப் பற்றி அச்சமயம் எல்லாரும் பேசிக் கொண்டிருந்தார்களாதலால், இவளும் எவ்விதச் சந்தேகத்துக்கும் இடமின்றி அவனைப் பற்றிப் பேசுவது சாத்தியமாயிருந்தது. அவனுடைய பிரதாபங்களை யாராவது வியந்து பேசினால் இவள் அவனை இகழ்ந்து பேசுவாள். யாராவது அவனைத் தூற்றினாலோ, இவள் அவனுக்காக பரிந்து பேசுவாள். "ஆமாம்; உங்கள் வீட்டுக்கு வந்து கொள்ளையடித்தால் தெரியுமே" என்று அவர்கள் சொன்னால், "என் வீட்டுக்கு அவன் வரமாட்டானே? ஓடுகிற ஆண் பிள்ளைகளைக் கண்டால் தான் திருடர்கள் விரட்டுவார்கள்! பெண் பிள்ளைகளைக் கண்டாலே பயந்து ஓடிப் போவார்கள்!" என்பாள்.

முத்தையன் திருடனாகப் போனதன் காரணம் பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட வதந்தியாகப் பரவியிருந்தது. அவனுடைய தங்கையை பண்டார சந்நிதியே கெடுக்கப் பார்த்தாரென்றும், முத்தையன் அவரைக் குற்றுயிராய்ப் பண்ணி விட்டான் என்றும், இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டார்கள். அபிராமிக்குக் கஷ்டம் நேர்ந்த விஷயம் கல்யாணியின் உள்ளத்தில் சிறிது மகிழ்ச்சியை ஊட்டிற்று. "அந்த அபிராமிக்காகத்தானே என்னை முத்தையன் புறக்கணித்தான்? இப்போது என்ன ஆயிற்று?" என்று ஒரு கணம் உவகையோடு எண்ணினாள். அப்புறம் அந்தப் புத்தி மாறிற்று. "ஐயோ! அந்தப் பெண் இப்போது எங்கே அநாதையாய்த் தவிக்கிறாளோ?" என்று உருகினாள். அவளை அழைத்துக் கொண்டு வந்து தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள். ஆனால் அதனால் என்ன சந்தேகம் உண்டாகுமோ என்னமோ? முதலில் முத்தையனைப் பார்த்து, அவனைத் திருட்டுத் தொழிலை விடச் சொன்ன பிறகு தான், அபிராமியைத் தேட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

நாளாக ஆக, முத்தையனைப் பார்க்க வேண்டுமென்ற அவளுடைய ஆவல் அளவிலடங்காமல் பெருகிற்று. "முத்தையா! முத்தையா! நீ எங்கெங்கேயோ, யார் யார் வீட்டுக்கெல்லாம் திருடப் போகிறாயே? இந்தப் பாவியின் வீட்டுக்கு வரக்கூடாதா?" என்று அவளுடைய இருதயம் கதறியது.


*****

இப்படிப்பட்ட நிலையில்தான், ஒரு நாள் இராத்திரி முத்தையன் உண்மையாகவே அவளுடைய வீடு ஏறிக்குதித்து வந்தான். அவளைப் பார்த்து அவன் பிரமித்து நின்றான். அந்த சந்தர்ப்பத்தில் அவனுடன் என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கல்யாணி எத்தனையோ நாளாக யோசித்து வைத்திருந்தாளாதலால், பளிச்சென்று "முத்தையா! உனக்கு என் நகைகள் தானா வேண்டும்?" என்று கேட்டாள்.

அதன் பிறகு அவள் தொடர்ந்து சொல்ல எண்ணியிருந்த வார்த்தைகளெல்லாம் அவளுடைய நெஞ்சிலேயே அமுங்கிப் போயின. அவற்றைச் சொல்ல அவளுக்குச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

கல்யாணியைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போன முத்தையன் அடுத்த கணத்தில் சொல்ல முடியாத அவமானம் அடைந்தான். "ஆகா! இவள் வீட்டிலா திருட வந்தோம்?" என்று நினைத்த போது அவன் உடம்பும் உள்ளமும் குன்றிப் போயின. தட்சணமே அவன் வந்த வேகத்துடனே திரும்பினான். ஒரு தாவுத் தாவிக் கூரை மீதேறி அடுத்த கணம் மாயமாய் மறைந்து போனான்.

ஓடு நொறுங்கிய சத்தமும் கொல்லையில் இரண்டு தடவை விஸில் அடித்த சத்தமும் மட்டும் கேட்காமலிருந்திருந்தால் கல்யாணி இது அவ்வளவும் தன்னுடைய மனப்பிராந்தியில் ஏற்பட்ட சம்பவங்களே என்று எண்ணியிருப்பாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:57 am

29.ராவ்சாகிப் உடையார்


ராவ் சாகிப் சட்டநாத உடையார் ராயவரம் தாலுகாவில் ஒரு பெரிய பிரமுகர், முனிசிபல் கௌன்சிலர், ஜில்லா போர்டு மெம்பர், தேவஸ்தான கமிட்டி பிரஸிடெண்ட் முதலிய பல பதவிகளைத் திறமையுடன் தாங்கிப் புகழ் பெற்றவர். இம்மாதிரிப் பொது ஸ்தாபனத் தேர்தல்களில் ஈடுபட்ட அநேகர் அந்தத் தாலுகாவில் வெகுவாகச் சொத்து நஷ்டமும் கஷ்டமும் அடைந்திருக்க, இவர் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கி வந்தார். இவருடைய செல்வமும் செல்வத்தைப் போல் செல்வாக்கும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தன. இதற்குக் காரணம் அவர் பிறந்த வேளை என்றார்கள் சிலர் . "மகா கெட்டிக்கார மனுஷன், வாயைப் போல் கை; கையைப் போல வாய்" என்றார்கள் வேறு சிலர். "ஆசாமி திருடன்; ஸ்தல ஸ்தாபனங்களைக் கொள்ளையடித்தும், கோவில்களைச் சுரண்டியுமே இப்படிப் பணம் சேர்த்து விட்டான்" என்றனர் வேறு சிலர். இன்னும் பலர் பலவிதமாகச் சொன்னார்கள்.

அன்றைய தினம் உடையார், ராயவரம் டவுனை அடுத்துச் சாலை ஓரத்தில் பெரிய தோட்டத்தின் மத்தியில் கட்டியிருந்த தமது புதிய பங்களாவில் டிராயிங் ரூமில் உட்கார்ந்து தினசரி பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உடையார் அவ்வளவு பிரபலமாகித் தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளக் காரணமாயிருந்த வழிகளில் இது ஒன்றாகும். அடிக்கடி அவர் பத்திரிகைகளுக்குக் காரசாரமான கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். சர்க்கார் விவசாய இலாகா கவனிக்க வேண்டிய காரியங்களிலிருந்து, சர்வதேச சங்கம் உலக யுத்தத்தைத் தடுப்பதற்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் வரையில் அவர் சகல விஷயங்களையும் பற்றிப் பிய்த்து வாங்கி எழுதும் சக்கையான கடிதங்கள் வாரம் இரண்டு தடவையாவது பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கும். அம்மாதிரியாக, அன்றைய தினம் அவர் எழுதி முடித்த கடிதத்தை இதோ கீழே படியுங்கள்.

"மகா-௱-௱-ஸ்ரீ...பத்திரிகாசிரியர் அவர்களுக்கு,

ஐயா!

இந்தக் கொள்ளிடக் கரை பிரதேசத்தில் முத்தையன் என்னும் துணிச்சலுள்ள திருடனின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகியே வருகின்றன. சமீபத்தில் கோவிந்த நல்லூரில் நடந்த பிரபல விவாகத்தின் போது, அவன் செய்த சாகஸச் செயல்களினால் இந்தத் தாலுக்கா முழுவதும் கதிகலங்கிப் போயிருக்கிறது. ஜனங்கள் தங்கள் சொத்துக்கும் உயிருக்கும் எந்த நிமிஷத்தில் ஆபத்து வருமோ என்று சதா சர்வகாலமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

நேற்றைய தினம் முத்தையனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவன் என்னுடைய வீட்டுக்கு ஒரு நாள் விருந்தாளியாக வரப் போவதாகவும், வரவேற்புக்கு ஏற்பாடு செய்யும்படியும் எழுதியிருக்கிறான்.

திருடன் ஒருவனுக்கு இவ்வளவு தைரியமும் துணிச்சலும் ஏற்படுவதற்குக் காரண புருஷர்களாகயிருக்கும் இந்தத் தாலுகா போலீஸ்காரர்களின் சாமர்த்தியத்தை ஜனங்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள்! கூடிய சீக்கிரத்தில், அவர்கள் எல்லோருக்கும் தக்க 'பிரமோஷன்' கொடுக்க வேணுமாய் ஜனங்கள் கோருகிறார்கள்!



இப்படிக்கு,
ராவ் சாகிப் கே.என்.சட்டநாத உடையார்"


உடையார் மேற்படி கடிதத்தை எழுதி முடித்து உறையில் போட்டுக் கொண்டிருக்கையில், ஒருவன் உள்ளே வந்து, "எஜமான்! அந்த ஆசாமி வந்திருக்கிறான்" என்றான். உடையாரின் முகத்தில் ஒரு சிறிது திகிலின் சாயை காணப்பட்டது. அதை அவர் உடனே மாற்றிக் கொண்டு, "வரச் சொல்லு, இங்கு வேறு யாரையும் உள்ளே விடாதே! தலைபோகிற காரியமானாலும் சரிதான்!" என்றார்.

அவன் போனவுடன் உள்ளே வந்தவன் வேறு யாரும் இல்லை; முத்தையன் தான். முகமூடித் திருடனாய் வராமல் சாதாரண முத்தையனாய் இப்போது வந்தான்.

வந்தவன், "குட்மார்னிங், சார்!" என்று சொல்லி விட்டு நின்றான்.

உடையார் அவனைச் சற்று நேரம் அதிசயத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். "அடே அப்பா! இவ்வளவூண்டு இருந்து கொண்டு என்னவெல்லாம் அமர்க்களம் செய்து வருகிறாயடா!" என்றார்.

"உடையார்வாள்; கொஞ்சம் மரியாதையாகவே பேசி விட்டால் நல்லதில்லையா?" என்றான் முத்தையன்.

"அப்படியே யாகட்டும், ஸார்! உட்காருங்கள், ஸார்! தங்களை இங்கு விஜயம் செய்யச் சொன்னது எதற்காக என்று ஏதாவது தெரியுமா, ஸார்?" என்று ராவ் சாகிப் கேட்டார்.

"உங்கள் ஆள் எனக்கு அதெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்ப்பதற்கு ரொம்ப ஆவலாய் இருப்பதாய் மட்டும் தான் சொன்னான். ஆனால் காரியமில்லாமல் தாங்கள் அப்படியெல்லாம் ஆசைப்பட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்" என்றான் முத்தையன்.

உடையார் சற்று யோசனை செய்தார். அவனிடம் எப்படி விஷயத்தைப் பிரஸ்தாபிப்பது என்று அவர் தயங்குவது போல் காணப்பட்டது. அப்போது முத்தையன் அவரைத் தைரியப்படுத்துகிற பாவனையாக, "என்ன யோசிக்கிறீர்கள்? தாராளமாய்ச் சொல்லுங்கள், திருடர்களுக்குள் ஸங்கோசம் என்ன?" என்றான்.

உடையார் திடுக்கிட்டு, "என்ன அப்படிச் சொல்கிறாய்?" என்றார்.

"ஆமாம்; அதைப் பற்றி என்ன? நான் வெறுந்திருடன்; தாங்கள் மிஸ்டர் திருடர். அவ்வளவுதான் வித்தியாசம்! பரவாயில்லை, சொல்லுங்கள்."

"எல்லோரும் உன்னைப் பற்றிச் சொல்வது சரியாய்த் தானிருக்கிறது. வெகு வேடிக்கை மனுஷனாயிருக்கிறாய். இருக்கட்டும். உன்னைக் கூப்பிட்ட காரியத்தைச் சொல்கிறேன். என் சிநேகிதர் ஒருவருக்குப் புதுச்சேரியிலிருந்து இரகசியமாய்க் கொஞ்சம் சரக்குக் கொண்டு வரவேணுமாம். அதற்கு உன் ஒத்தாசை வேண்டுமென்கிறார். இதிலே எனக்கு ஒரு சம்பந்தமும் கிடையாது. உனக்குச் சம்மதமானால் சொல்லு. அபாயம் அதிகம்தான்; வரும்படியும் அதற்குத் தகுந்தபடி ஜாஸ்தி. என்ன சொல்கிறாய்?"

இதைக் கேட்ட முத்தையன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான். இடையிடையே உடையாரையும் பார்த்தான்.

உடையார் தம்முடைய ஆடை அலங்காரங்களில் அதிகக் கவலையுள்ளவர். அவற்றில் ஏதாவது கோளாறா என்ன என்று அவர் சுவரிலிருந்த நிலைக் கண்ணாடியில் தம்மைப் பார்த்துக் கொண்டார்.

முத்தையன், "அலங்காரமெல்லாம் சரியாய்த்தான் ஸார் இருக்கிறது. ஒன்றும் பிசகில்லை. நான் சிரிக்கிறது வேறு விஷயம். ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால், இதே மாதிரி திருட்டு வேலைக்காக என்னை நீங்கள் கார் ஓட்டச் சொன்னீர்கள். நான் மாட்டேன் என்றேன். அதற்காக என்னை டிஸ்மிஸ் பண்ணி விட்டீர்கள். அப்போதும் இதே மாதிரிதான் 'ஒரு சிநேகிதருக்காக, இதில் எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை' என்று சொன்னீர்கள். இதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்டான்.

உடையார் குதித்து எழுந்தார். "அடே பாவிப் பயலே! நீ தானா!" என்றார். பிறகு அவர் நின்றபடியே கூறினார்.

"உன்னைக் கோவிந்த நல்லூர் கல்யாணத்தில் ஒரு நிமிஷம் பார்த்த போதே நீயாய்த்தான் இருக்க வேண்டுமென்று சந்தேகப்பட்டேன். அதனால் தான் உன்னை எப்படியாவது கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருந்தேன். ஜில்லென்று மீசை வைத்துக் கொண்டு விட்டாயல்லவா! அதனால் நிச்சயமாக அடையாளந் தெரியவில்லை. போகட்டும்; அப்போது வெகு யோக்கியன் மாதிரி, 'திருட்டுப் புரட்டிலே இறங்க மாட்டேன்' என்று சொன்னாயே? இப்போது என்ன ஆயிற்று? பெரிய பக்காத் திருடனாய் ஆகிப் போனாய். என்னோடு இருந்திருந்தால் உனக்கு அபாயமே கிடையாது. இப்போது நித்யகண்டம் பூரணாயுசாயிருக்கிறாய். நான் சொல்கிறதைக் கேள். இப்போதாவது என்னோடு சேர்ந்துவிடு. நான் ஒரு விதத்திலே சூரனாயிருந்தால், நீ இன்னொரு விதத்திலே சூரன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்தோமானால் உலகத்தையே விலைக்கு வாங்கிவிடலாம்; என்ன சொல்கிறாய்?" என்றார்.

"ஆமாம். அதெல்லாம் எனக்குத் தெரியும். இப்போது இப்படிச் சொல்வீர். சமயத்தில் கழுத்தை அறுத்து விடுவீர். என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு நீர் மேலே அழுக்குப் படாமல் தப்பித்துக் கொள்வீர். உத்தியோகஸ்தர்களுக்கோ உம்மைக் கண்டால் பயம். அவர்கள் யாராவது முறைத்தால், மேலே ஹோம் மெம்பர் வரையில் உம்முடைய கட்சி. எப்படியாவது தப்பித்துக் கொண்டு விடுவீர். நான் பலியாக வேண்டியதுதான். ஆனால் அதற்கெல்லாம் இப்போது நான் துணிந்த கட்டை. ஒரு தடவை பாண்டிச்சேரி போய் வந்தால் என்ன கொடுப்பீர்? சொல்லும் பார்க்கலாம்!"

"முழுசாய் ஒரு நோட்டு. ஆயிரம் ரூபாய் தருகிறேன்."

"சீ; இதுதானா? நான் இப்போது வந்ததற்குப் பதிலாக உம்முடைய வீட்டிற்கே இராத்திரி வந்தேனானால் அடித்த அடியில் ஐயாயிரம் ரூபாய் கொண்டுபோய் விடுவேன்!"

இதைக் கேட்டதும் சட்டநாத உடையார் திடுக்கிட்டார்.

"தீட்டிய மரத்திலே கூர் பார்ப்பாய் போலிருக்கிறதே!" என்றார்.

"பயப்படவேண்டாம், உடையார்! அப்படியெல்லாம் செய்யமாட்டேன். திருடன் வீட்டில் திருடன் புகுவது தொழில் முறைக்கு விரோதமல்லவா? போகட்டும், நான் உமக்கு உதவி செய்கிறேன். உம்மால் எனக்கு ஒன்று ஆக வேண்டியதாயிருக்கிறது. உம் வேலையெல்லாம் முடிந்த பிறகு எனக்கு ஒரு மோட்டார் வண்டி நீர் கொடுக்க வேண்டும். நான் ஒரு தடவை சென்னைப் பட்டணம் போய் வர விரும்புகிறேன்" என்றான் முத்தையன்.

உடையார் சற்று நிதானித்து, "ஆகட்டும்; பார்க்கலாம்" என்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக