புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
61 Posts - 43%
heezulia
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 9:52 am

First topic message reminder :

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல் விளக்குகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:25 am

10.கார்வார் பிள்ளை


திருப்பரங்கோவில் மடம் மிகவும் புராதனமானது. மிக்கச் செல்வாக்குள்ளது. மடத்துக்குச் சொந்தமாக ஆயிரம் வேலி நிலமும், மடத்தின் ஆதீனத்தின் கீழ் உள்ள கோவில்களுக்கு ஏழாயிரம், எட்டாயிரம் வேலி நிலமும் இருந்தன.

இப்போதுள்ள பண்டார சந்நிதிக்கு முந்தி இருந்தவரைப் பற்றிப் பலவிதமான வதந்தி உண்டு. ஆனால் இப்போது அப்பதவியை வகித்தவர் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கினார். மடத்தின் நிர்வாகத்திலுள்ள ஊழல்களையெல்லாம் போக்கவும், மடத்தின் சொத்துக்களைச் சமய வளர்ச்சி, கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவும் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார்.

இந்த முயற்சிகளையெல்லாம் அதிகம் பயன்படாதபடி செய்து கொண்டிருந்த புண்ணியவான் ஒருவர் அந்த மடத்தில் இருந்தார். அவர்தான் கார்வார் பிள்ளை. முன்னிருந்த சந்நிதானத்தின் காலத்திலே இந்த மனுஷர் வைத்ததே எல்லா விஷயங்களிலும் சட்டமாயிருந்தது. இப்போதுங்கூட அவருடைய அதிகாரம் தான் அதிகமாய்ச் சென்று கொண்டிருந்தது. மடத்தின் ஏராளமான சொத்துக்கள் ஒரு தாலுகா பூராவிலும் பரவியிருந்தபடியால் ஏதாவது கோர்ட் விவகாரங்கள் நடந்து கொண்டேயிருக்கும். கார்வார் பிள்ளைக்கு அந்த விவகாரங்களின் நுட்பங்கள் எல்லாம் தெரியும். அவர் இல்லையென்றால், மடத்தின் நிர்வாகம் உடனே பலவிதச் சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும். ஆதலால், அவர் மேல் அநேக புகார்கள் அவ்வப்போது வந்த போதிலும், பண்டார சந்நிதி அவரைப் போகச் சொல்ல முடியாத நிலைமையில் இருந்தார்.

அப்பேர்ப்பட்ட திருப்பரங்கோவில் மடத்தில் சர்வாதிகாரம் நடத்திய மகா-௱-௱-ஸ்ரீ கார்வார் பிள்ளையை இதோ பார்த்துக் கொள்ளுங்கள். காதில் வைரக்கடுக்கன், கன்னத்திலே புகையிலைக் குதப்பல், கழுத்திலே சரிகைத் துப்பட்டா, இடுப்பில் சொருகிய மணிபர்ஸ், நெற்றியில் சவ்வாதுப் பொட்டு, கைவிரல்கள் எல்லாவற்றிலும் வைர மோதிரம், அப்புறம் தங்கச் சங்கிலி கோத்த ரிஸ்ட் வாட்ச், இத்தகைய அலங்காரத்துடன் இதோ இளந்தொந்தி விழுந்து தலையில் இளநரை கண்டு விளங்குகிறவர்தான் கார்வார் பிள்ளை. பார்த்தால் சாது மனுஷராய், அப்பாவியாய்த் தோன்றுகிறார் அல்லவா? ஆனால், எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ, நமக்கென்ன தெரியும் பார்த்துக் கொண்டே இருங்கள்.


*****

"முத்தையா! இங்கே வா!" என்று கார்வார் பிள்ளை கூப்பிட்டதும், கொஞ்ச தூரத்தில் கீழே மேஜைப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த முத்தையன் எழுந்து வந்து பணிவுடன் நின்றான்.

"வேலம்பாடிக் கிராமத்திலிருந்து பகுதிப் பணம் வரவில்லை. நீ உடனே போய்க் காரியஸ்தனைப் பிடித்து எத்தனை நேரமானாலும் இருந்து வாங்கிக் கொண்டு வா! வெறுங்கையுடன் வரக்கூடாது!" என்றார்.

முத்தையன் தயக்கத்துடன், "பத்து நாள் கணக்கு எழுத வேண்டியது பாக்கியிருக்கிறது. வேறு யாரையாவது..." என்பதற்குள், "எல்லாம் நாளைக்கு எழுதலாம், போ! சும்மா மேஜைப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தால் எப்படி எழுதியாகும்?" என்று எரிந்து விழுந்தார் கார்வார் பிள்ளை.

முத்தையன் மேஜைப் பெட்டியில் கணக்குகளை எடுத்து வைத்து விட்டுக் கிளம்பினான். ஊரின் ஒரு கோடிக்கு வந்ததும் மத்தியானம் சாப்பிடும்போது அபிராமி தேம்பித் தேம்பி அழுது கொண்டு நின்ற தோற்றம் அவன் மனக்கண்ணின் முன்பு வந்தது. அவனுடைய நடையின் வேகம் வரவரக் குறைந்து, கடைசியில் சற்றுத் தயங்கி நின்றான். பிறகு வீட்டுக்குப் போய் அபிராமிக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி விட்டு, தான் அன்று மாலை திரும்பி வர நேரம் ஆகும் என்று தெரிவித்துவிட்டுப் போவது தான் சரி என்று நினைத்தான். அவ்வாறே தீர்மானித்துத் தன்னுடைய வீடு இருந்த வீதியை நோக்கிச் சென்றான்.


*****

சற்று நேரத்துக்கெல்லாம், வீட்டின் வாசலை அடைந்தான், அச்சமயம், உள்ளே, "ஐயோ! ஐயோ!" என்று அபிராமியின் தீனமான குரல் கேட்கவே, அவனுடைய உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது. ஓடிப்போய் கதவைத் திறக்க முயன்றான். கதவு தாழிட்டிருந்தது. ஜன்னலண்டை சென்று பார்த்தான். உள்ளே, கூடத்தில் அவனுடைய கண் விழிகள் தெரிந்து விழுமாறு செய்த பயங்கர காட்சி ஒன்று தென்பட்டது. கார்வார் பிள்ளை அபிராமியினுடைய மேலாடையின் தலைப்பைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். அபிராமி, "ஐயோ! ஐயோ!" என்று பரபரப்புடன் அவரிடமிருந்து ஓட முயல்கிறாள். அப்போது முத்தையனுக்கு உடம்பு நடுங்கிற்று. அவனுடைய தேகத்தில் இருந்த இரத்தத்தில் ஒவ்வொரு துளியும் கொதித்தது. அடுத்த நிமிஷம் அவன் வீட்டு வாசலில் போட்டிருந்த பந்தல்காலைப் பிடித்துக் கொண்டு கூரையின் மேல் ஏறினான். இரண்டே பாய்ச்சலில் தாவிச் சென்று வீட்டின் முற்றத்தில் குதித்தான்.

அவனுடைய உடம்பில் அப்போது ஆயிரம் யானைகளின் பலம் உண்டானது போலிருந்தது. ஒரே தாவலில் கார்வார் பிள்ளையண்டை சென்று அவர் கழுத்தைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளினான். பிள்ளை சுவரில் மோதிக் கொண்டு கீழே விழுந்தார். அவருடைய தலையைச் சுவரில் இன்னும் நாலு மோது மோதினான். பிறகு காலைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து வாசற்படிக்கு வெளியே தள்ளினான்.

அபிராமி கூடத்துத் தூண் ஒன்றைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அவளுடைய உடம்பு இன்னும் நடுநடுங்கிக் கொண்டிருந்தது.

முத்தையன் அவளை ஏறிட்டுப் பார்க்கவும் முடியாதவனாய், தாழ்வாரத்தில் முன்னும் பின்னுமாய் நடந்து கொண்டிருந்தான்.

அபிராமி தேம்பிக் கொண்டே, "அண்ணா! பூங்குளத்துக்கே நாம் திரும்பிப் போய்விடலாம். இங்கே இருக்க வேண்டாம்" என்றாள்.

முத்தையன் ஒரு நிமிஷம் நின்று யோசித்து விட்டு, "கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் ஜாக்கிரதையாயிரு, அபிராமி! அந்தப் பாவியை இப்படியே விட்டுவிட்டுப் போகக் கூடாது. இன்னும் எத்தனை பேருடைய குடியைக் கெடுப்பானோ, யார் கண்டது? நான் போய் சந்நிதானத்தில் சொல்லி முறையிடப் போகிறேன். அந்த அநியாயத்துக்கு ஏதாவது பரிகாரம் உண்டா, இல்லையாவென்று பார்த்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.

அபிராமி ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டு "அண்ணா! என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகாதே!" என்றாள்.

முத்தையன் "இந்த ஒரு தடவை மட்டும் போய் வருகிறேன்; தடை சொல்லாதே. அப்புறம் உன்னைவிட்டுப் பிரிகிறதேயில்லை; நாளைக்கே பூங்குளத்துக்குப் போய் விடுவோம்" என்றான்.

பிறகு, அவளிடமிருந்து விடுவித்துக் கொண்டு, அன்புடன் அவளுடைய முதுகில் தட்டிக் கொடுத்து, "சற்று நேரம் பல்லைக் கடித்துக் கொண்டிரு, அபிராமி! இதோ ஒரு நிமிஷத்தில் திரும்பி வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.

அபிராமி! துர்பாக்ய அபிராமி! உன் அண்ணன் ஒரு நிமிஷத்தில் திரும்பி வருவான் என்று எண்ணிக் கொண்டு இராதே! அவன் திரும்பி வரவே மாட்டான்! இனிமேல் பகவான் தான் உனக்குத் துணை!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:27 am

11.போலீஸ் ஸ்டேஷன்

தெரு வாசற்படியில் தள்ளப் பெற்ற கார்வார் பிள்ளை மெதுவாகத் தள்ளாடிக்கொண்டு எழுந்திருந்தார். மேல் வேஷ்டியை எடுத்துத் தூசியைத் தட்டிப் போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லையென்பதைக் கவனித்துக் கொண்டு, அவசரமாய்க் கிளம்பி நடந்தார்.

கார்வார் பிள்ளையின் வாழ்க்கையில் இம்மாதிரி சம்பவங்கள் சாதாரணமானவை. பல தடவைகளில் அவர் ஏழை எளியவர்களின் வீடுகளிலே இதைவிட அதிகமான தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார். அதையெல்லாம் அவர் லட்சியம் செய்வது கிடையாது. இது விஷயத்தில் அவர் தாமரை இலைத் தண்ணீர் போல் வாழ்க்கை நடத்தினார் என்றே சொல்லலாம்.

ஆனாலும் இன்று நடந்த சம்பவத்தை அவர் அவ்வாறு உதறித் தள்ளிவிட முடியவில்லை. இந்த முத்தையன், மடத்தில் தம் கீழே வேலையில் இருப்பவன். இனி மேல் அவனிடம் எப்படி வேலை வாங்க முடியும்? அவனிடம் தலை நிமிர்ந்து, பேசுவதுதான் எவ்விதம் சாத்தியம்?

எப்படியோ சமாளித்துக் கொள்கிறோமென்றாலும் அந்தப் பையன் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பானா? சந்நிதானத்திடம் போய் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வைத்தால் என்ன செய்கிறது? ஏற்கெனவே, தம் பேரில் புகார்களுக்குக் குறைவில்லை.

வீதியில் போய்க் கொண்டிருக்கும்போதே கார்வார் பிள்ளை இதையெல்லாம் பற்றிச் சாங்கோபாங்கமாக ஆலோசனை செய்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். அதன் பலனாக, அவர் நேரே மடத்தின் காரியாலயத்துக்குப் போகாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்.


*****

போலீஸ் ஸ்டேஷனில், ஸப் இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி அப்போதுதான் 'டிரஸ்' பண்ணிக் கொண்டு வெளியே வந்தவர், கார்வார் பிள்ளையைப் பார்த்ததும், "வாரும், சங்குப் பிள்ளை! நீர் வருகிறீர் என்று கால்மணி நேரத்துக்கு முன்பே எனக்குத் தெரிந்து போச்சு. 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பதை 'சங்குப்பிள்ளை வருவார் பின்னே, சவ்வாது வாசனை வரும் முன்னே' என்று மாற்றிவிட வேண்டியது தான்'. ஆனால் என்ன ஒரு மாதிரியாயிருக்கிறீர்? நெற்றியிலே என்ன அவ்வளவு பெரிய வீக்கம்? விஷயம் என்ன?" என்று கேட்டார்.

"ஸார்! அசந்தர்ப்பமாய் ஒரு காரியம் நடந்து போச்சு. நீங்கள் பார்த்து உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால், அப்புறம் இந்த ஊரிலே யாரும் இருக்க யோக்யதையில்லை. மடத்தை மூடிக் கொண்டு நாங்கள் எல்லாம் கிளம்பி விட வேண்டியதுதான்" என்றார் கார்வார் பிள்ளை.

"சங்குப் பிள்ளை! அப்படி ஏதாவது நடந்து விட்டால், இந்த ஊர் செய்த பாக்கியந்தான். ஆனால் அது நடக்காது என்று எனக்குத் தெரியும். என்ன சமாச்சாரம், சீக்கிரம் சொல்லும். கலெக்டர் துறை வருகிறாராம் சேந்தனூருக்கு, நான் போக வேண்டும், அவசரம்!" என்றார்.

"நல்ல வேளையாகப் போச்சு, நான் உடனே கிளம்பி வந்தது. பாருங்கள்; மடத்திலே ஒரு தறிதலைப் பயல் - யாரோ சிபார்சு பண்ணினார்களென்று - வேலைக்கு வைத்தோம். முத்தையன் என்று பெயர். அந்தப் பையன் நாளடைவிலே மடத்துப் பணத்தைக் கையாடி வந்தான் என்று தெரிந்தது. இன்றைக்கு மத்தியானம் பெட்டியில் ஐம்பது ரூபாய் பணம் குறைந்தது. பையனை விசாரிக்கலாமென்று பார்த்தால் ஆளைக் காணவில்லை. உடனே புறப்பட்டு அவன் குடியிருக்கிற வீட்டுக்குப் போனேன். அங்கே பாருங்கள், இந்தத் தடிப்பயல், அவன் தங்கச்சி கிட்ட ரூபாய் நோட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தான். கையும் மெய்யுமாய்ப் பிடித்துக் கொண்டு வந்து போலீஸில் ஒப்புவிப்பதற்காக அவனைப் பிடித்தேன். அந்தத் தடிப்பயல் என்னைப் பிடித்துத் தள்ளிச் சுவரிலே வச்சு மோதிவிட்டான், ஸார்ன்னா! கொஞ்சம் நான் உஷாராயில்லாமற் போனால், மென்னியைப் பிடித்துக் கொன்றிருந்தாலும் கொன்றிருப்பான். நீங்கள் உடனே அவனை அரெஸ்ட் பண்ணியாக வேணும்."

அப்போது ஸப்-இன்ஸ்பெக்டர், "அந்தக் கதையெல்லாம் வேண்டாம், ஐயா! நீர் சொல்கிறதற்கெல்லாம் சாட்சி உண்டா சொல்லும்" என்றார்.

"பேஷாய் உண்டு. உங்களுக்கு யார் எப்படி சாட்சி சொல்ல வேணுமோ, அப்படிச் சொல்லச் செய்கிறேன்."

"பொய்ச் சாட்சி தயார் பண்ணுகிறீரா?"

"சிவ சிவா! ஆண்டவனே; பொய்சாட்சியா? கண்ணாலே பார்த்தவாளைக் கொண்டு சாட்சி சொல்லச் சொல்கிறேன்; அப்புறம் என்ன உங்களுக்கு?"

ஸப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு, "நாயுடு இந்தச் சங்குப் பிள்ளையிடம் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு அவர் சொல்கிற பையனை அரஸ்டு செய்து கொண்டு 'லாக்-அப்'பில் வையும். நான் வந்து மற்ற விஷயம் விசாரித்துக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார்.

முத்தையன் வீதியோடு மடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் ஒரு புறம் கொதிப்பும், மற்றொரு புறம் வருங்காலத்தைப் பற்றிய ஏக்கமும் குடிகொண்டிருந்தன. "பண்டார சந்நிதியை உடனே பார்க்க முடியுமா, பார்த்தாலும் தான் சொல்வதில் அவருக்கு நம்பிக்கை உண்டாகுமா, நியாயம் பிறக்குமா" என்று பலவித எண்ணங்கள் தோன்றி மறைந்தன. அப்போது எதிரே கொஞ்ச தூரத்தில் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் வருவதை அவன் பார்த்தான். உடனே பண்டார சந்நிதியிடம் போய்ச் சொல்வதைக் காட்டிலும் ஏன் போலீஸில் போய்ச் சொல்லக்கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. அப்படி எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே அந்த போலீஸ்காரர்கள் அவனண்டை வந்து நின்றார்கள். அவர்களில் ஒருவன் "தம்பி! நீ தானே முத்தையன் என்கிறது?" என்றான். முத்தையன் "ஆமாம்" என்றதும், "இன்ஸ்பெக்டர் ஐயா உடனே அழைச்சுண்டு வரச்சொன்னாரு, ஒரு சமாசாரம் கேட்க வேணுமாம்" என்றான் போலீஸ்காரன்.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்து விட்டது என்று எண்ணினான் முத்தையன். கார்வார் பிள்ளை அபிராமியை உபத்திரவப்படுத்துவதைத் தான் வருவதற்கு முன்னாலேயே வேறு யாராவது பார்த்துவிட்டுப் போலீஸில் போய்ச் சொல்லியிருப்பார்களோ என்று எண்ணினான். கான்ஸ்டபிளைக் கேட்டதற்கு, அவர்கள் தங்களுக்குத் தகவல் ஒன்றும் தெரியாது என்று சொல்லி விட்டார்கள்.

போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும், ஹெட் கான்ஸ்டபிள் நாயுடு அவனை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு அவர் உட்கார்ந்திருந்த கூடத்துக்கு எதிரில் இருந்த ஒரு அறையைத் திறந்து, "தம்பி! இந்த ரூமுக்குள் போ!" என்றார். முத்தையன் அந்த அறையில் தன்னிடம் இரகசியமாக ஏதோ கேட்கப் போகிறார் என்று நினைத்தவனாய், உள்ளே போனான். உடனே அந்த ஹெட்கான்ஸ்டபிள் வெளிக் கதவைச் சாத்திப் பூட்டியதைப் பார்த்ததும், முத்தையனுக்குச் 'சொரேர்' என்றது.

"என்ன ஸார், இது! ஏன் என்னை வைத்துப் பூட்டுகிறீர்கள்?" என்று பரபரப்புடன் கேட்டான்.

"ஏனா? களவாணிப் பயலே! மடத்துப் பணம் ஐம்பது ரூபாயை அமுக்கிவிட்டு, ஏன் என்றா கேட்கிறாய்? போதாதற்குக் கார்வார் பிள்ளை மேலும் கை வச்சுட்டயாமே? திருட்டுப் பயலே!" என்றார் ஹெட்கான்ஸ்டபிள்.

"ஐயோ! இது என்ன படுமோசம்!" என்று அலறினான் முத்தையன்.

ஹெட்கான்ஸ்டபிள் இதற்குள் வெளியே போய் விட்டார்.

முத்தையன் "ஸார்! ஸார்!" என்று கதறிக் கொண்டே கதவைப் பிடித்து உலுக்கினான்.

அப்போது, "இரும்புக் கதவு, சாமி! வெறுங் கையாலே ஒடிக்க முடியாது, சாமி!" என்ற குரலைக் கேட்டு அவன் திடுக்கிட்டான். குரல் வந்த பக்கம் பார்த்தான். அதே அறையின் மூலையில், கந்தல் துணியுடன் செம்பட்டை படர்ந்த மீசை தாடியுடனும், குறவன் ஒருவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:28 am

12.ஓட்டமும் வேட்டையும்




இரவு நேரம், எங்கும் நிசப்தமாயிருந்தது. அந்த நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் கடிகாரம் பத்து மணி அடித்தது.

முத்தையன் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் வெளிச்சம் கிடையாது. ஸ்டேஷன் தாழ்வாரத்தில், ஒரு லாந்தர் மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது.

கடிகாரத்தில் மணி அடிக்கத் தொடங்கியபோது, முத்தையன் அந்த அறைக்குள், கூண்டில் அடைபட்ட புலியைப் போல் முன்னும் பின்னுமாய் நடந்து கொண்டிருந்தான். கடிகாரத்தின் மணி ஓசை கேட்டதும் அவன் நின்று, "ஒண்ணு, ரெண்டு, மூணு..." என்று எண்ணிக் கொண்டு வந்தான்.

பத்து மணி அடித்து நிறுத்தியதும், மறுபடியும் அவன் பரபரப்பாக நடந்தான். "பத்து மணி, பத்து மணி; அபிராமி தனியாயிருப்பாள்; தனியாயிருப்பாள். அந்தக் கிராதகன் ஒரு வேளை வந்தால்?..." இப்படித் தனக்குள் தானே சொல்லிக் கொண்டு முன்னும் பின்னுமாக நடந்தான்.

"அப்போது, பாரா 'டியூடி'யில் இருந்த போலீஸ் சேவகன் அந்தப் பக்கம் வரவே, முத்தையன் ஆவலுடன் கதவண்டை வந்து, தேம்பும் குரலில், "ஸார்! ஸார்!" என்றான்.

போலீஸ்காரன் அவனை உற்றுப் பார்த்து, "என்னடா அப்பா, ஸார், மோர்! என்ன சமாச்சாரம்?" என்று கேட்டான்.

"எனக்கு ஒரு உபகாரம் நீங்கள் செய்ய வேண்டும். அதை என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்க மாட்டேன். என் தோலை உங்களுக்குச் செருப்பாகத் தைத்துப் போடுவேன்."

இதற்குள் அந்தச் சேவகன், "வேண்டாமடா, அப்பா! வேண்டாம். எங்களுக்கெல்லாம் சர்க்காரிலேயே செருப்புத் தைத்துக் கொடுக்கிறார்கள். ஏதோ உபகாரம் என்றாயே, அது என்ன சொல்லு!" என்றான்.

"ஐயா, அரைமணி நேரத்துக்கு என்னை விடுதலை பண்ணுங்கள். வீட்டுக்குப் போய் பார்த்துவிட்டு உடனே திரும்பி வந்து விடுகிறேன். உங்களுக்கு ஒன்றும் கெடுதல் வராது. நீங்கள் வேணுமானாலும் என் பின்னோடு வாருங்கள்..."

போலீஸ்காரன் சிரித்தான். "ரொம்பப் பேஷான யோசனை! அப்படி என்னப்பா வீட்டிலே அவசரம்? என்னத்தையாவது வைத்துவிட்டு மறந்து போய் வந்து விட்டாயா?" என்று கேட்டான்.

"ஐயா நீங்களும் அக்கா தங்கைகளுடன் பிறந்திருப்பீர்கள். என்னுடைய தங்கை வீட்டிலே தனியாய் இருக்கிறாள். அதுவோ, தெருக்கோடி வீடு. அவளை யாராவது தெரிந்தவர்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு உடனே திரும்பி வந்து விடுகிறேன்..."

போலீஸ்காரன் இதற்கு இடிஇடியென்று சிரிக்கத் தொடங்கி விட்டான்.

"அண்ணே! அண்ணே! இங்கே வா!" என்று கூப்பிட்டுக்கொண்டே சிரித்தான்.

இதைக் கேட்டு, லாந்தரின் அடியில் டைரி எழுதிக் கொண்டிருந்த இன்னொரு போலீஸ்காரன் எழுந்து வந்தான்.

"அண்ணே! இந்தப் பையனுக்கு அவசரமாய் வீட்டுக்குப் போக வேணுமாம்!"

"ரொம்ப அவசரமாய்ப் போகவேணுமோ? அப்படி என்ன அவசரமாம்?"

"இந்தப் பையனுடைய தங்கை வீட்டில் தனியாயிருக்கிறாளாம். நீ வேணாத் துணைக்குப் போகிறாயா அண்ணே?"

இதைக் கேட்டதும் இரண்டாவது போலீஸ்காரனும் விழுந்து விழுந்து சிரித்தான். இரண்டு பேரும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து போனார்கள்.

முத்தையன் முகத்தில் சொல்ல முடியாத கோபம் ஜொலித்தது. அவன் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றான். இதுவரைக்கும் மூலையில் உட்கார்ந்திருந்த குறவன் அச்சமயம் எழுந்து வந்து, முத்தையனை முகத்துக்கு நேராக உற்றுப் பார்த்தான். "இப்போ என்ன சாமி சொல்றீங்க?" என்றான்.

முத்தையன் பேசாமலிருக்கவே, "நான் சொல்கிறபடி கேட்டீங்கன்னா, கட்டாயம் தப்பிச்சுக் கொள்ளலாம். சரிதானா?" என்றான்.

"சரி" என்றான் முத்தையன்.

கடிகாரத்தில், பத்தரை மணி ஆவதற்காக 'டங்' என்று ஒரு தடவை அடித்தது.

ஸ்டேஷன் தாழ்வாரத்தில் படுத்து ஒரு கான்ஸ்டபிள் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். இன்னொருவன் உட்கார்ந்தபடி ஆடிவிழுந்து கொண்டிருந்தான்.

ஏதோ இரும்புக் கதவு ஓசைப்பட்ட சத்தம் கேட்கவே, உட்கார்ந்திருந்தவன் திடுக்கிட்டு நிமிர்ந்து, "என்ன அது?" என்றான். பேச்சு மூச்சு இல்லை. ஆனால் அவன் மன நிம்மதியடையாமல் , எழுந்திருந்து 'லாக்-அப்' அறையின் கதவண்டை சென்றான். அந்தக் கதவின் இரும்புக் கம்பிகள் இரண்டு மூன்று இடத்தில் சிறிது விலக்கப்பட்டிருப்பதை. அவன் கவனிக்கவில்லை. கதவுக்கப்பால் நின்று கொண்டிருந்த குறவனைப் பார்த்து "என்னடா, குறவா, என்ன சத்தம்?" என்று கேட்டான்.

குறவன் "என்ன சாமி, கேட்கறீங்க?" என்று கேட்டுக் கொண்டே கதவண்டை வந்தான். வந்தவன் பளிச்சென்று கைகளைக் கம்பிகளின் வழியாய் வெளியே நீட்டி அந்தப் போலீஸ் சேவகனின் கழுத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். போலீஸ்காரன் என்ன திமிறியும் அந்தப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை. அவனுடைய விழிகள் பிதுங்கின.

இதற்குள் முத்தையன், கம்பி விலக்கப்பட்டிருந்த இடத்தின் வழியாய்க் கையை நீட்டி, போலீஸ்காரன் பையிலிருந்து சாவியினால் பூட்டைத் திறந்து தாழ்ப்பாளையும் விலக்கினான். உடனே வெளியில் வந்து, குறவன் சொன்னபடி போலீஸ்காரன் வாயில் துணியை வைத்து அடைத்தான். தன்னுடைய மேல் துணியினால் அவன் கைகளையும் இறுக்கிக் கட்டினான்.

குறவன் மின்னல் மின்னும் நேரத்தில் வெளியே வந்து அந்த போலீஸ்காரனுடைய கால்களையும் கட்டிக் கீழே உருட்டியதும், இரண்டு பேரும் ஓடிப்போய் வாசல் கதவைத் திறந்தார்கள். அந்தச் சப்தம் கேட்டுத் தூங்கிக் கொண்டிருந்த போலீஸ்காரன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். வாசல் கதவைத் திறந்து கொண்டு இரண்டு பேர் ஓடுவதைப் பார்த்ததும், "டேஞ்சர்! எஸ்கேப்! ஷுட்! ஷுட்!" என்று கத்திக் கொண்டே தன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட்டான். குண்டு, ஸ்டேஷன் கூரை மேல் போய்த் தாக்கி, கட்டிடம் கிடுகிடுக்கச் செய்தது.

வெளியில் வந்த முத்தையன், குறவன் என்ன ஆனான் என்று கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. கோதண்டத்திலிருந்து கிளம்பிய ராமபாணம் என்பார்களே, அதுபோல அவன் நேரே தன்னுடைய வீட்டை நோக்கி ஓடினான். இரவு நேரமாகையால், வீதிகளில் ஜன நடமாட்டமில்லை. ஆனால் அவன் ஓடிய வழியில் தெருநாய்கள் எல்லாம் குரைத்தன. சில நாய்கள் அவனைத் தொடர்ந்து ஓடிவந்தன. அதையெல்லாம் அவன் பொருட்படுத்தாமல் சந்து பொந்துகள் வழியாகப் புகுந்து அதிவேகமாய் ஓடினான். கடைசியில் வீட்டை அடைந்தான். கதவு சாத்தியிருந்தது. வீட்டிற்குள் விளக்கு இல்லை. முதலில் கதவை மெதுவாக இடித்தான். பிறகு ஓங்கி இடித்தான். 'அபிராமி! அபிராமி!' என்று கம்மிய குரலில் அலறி அழைத்தான். பேச்சு மூச்சு இல்லை. கொஞ்ச தூரத்தில் போலீஸ்காரர்கள் கூச்சலிட்டுக் கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்டது. சட்டென்று கதவின் நாதாங்கி இருக்கும் இடத்தைப் பார்த்தான். கதவு வெளிப்புறம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டான்.

ஐயோ! அபிராமி! அபிராமி! நீ என்ன ஆனாய்? எங்கே போனாய்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:38 am

13.பயம் அறியாப் பேதை


முத்தையனைப் போலீஸ் சேவகர்கள் வீதியில் சந்தித்து அழைத்துக் கொண்டு போனதை அச்சமயம் தற்செயலாக அந்தப் பக்கம் போக நேர்ந்த செங்கமலத்தாச்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்தச் செங்கமலத்தாச்சி, முத்தையன் குடியிருந்த அதே வீதியில், அவனுடைய வீட்டுக்கு ஐந்தாறு வீட்டுக்கு அப்பால் வசித்தவள். அவள் ஒரு ஏழை ஸ்தீரீ. காலை வேளையில் இட்டிலி சுட்டு விற்று ஜீவனோபாயம் நடத்திவந்தாள். அவளுக்குப் பதின்மூன்று, பதினாலு வயதான ஒரு மகன் மட்டும் உண்டு.

சில சமயம் அவள் அபிராமி வீட்டுக்குப் போய் அவளுடன் பேசிக் கொண்டிருப்பாள். அபிராமியின் இனிய சுபாவமும், சமர்த்தும் அவளுடைய மனத்தைக் கவர்ந்திருந்தன. அபிராமி போன்ற ஒரு பெண் தனக்கு இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று அவள் ஒவ்வொரு சமயம் எண்ணுவதுண்டு.

அபிராமி அந்த மாதிரித் தனி வீட்டில் இருப்பதைப் பற்றிக்கூடச் செங்கமலத்தாச்சி சில தடவை பிரஸ்தாபித்திருக்கிறாள். அந்தத் தெருவிலே ஒரு வரிசைதான் வீடுகள். அநேகமாக எல்லாம் மடத்தைச் சேர்ந்தவையே. முத்தையன் குடியிருந்த வீட்டுக்கு ஒரு புறத்தில் தோட்டம். இன்னொரு புறத்தில் பாழாகி விழுந்து கிடந்த ஒரு வீடு. அதற்கப்புறம் அந்த வீதியில் வீடே கிடையாது.

"இம்மாதிரி கோடி வீட்டில் போய்க் குடியிருக்கிறாயே அம்மா! நீயோ பச்சைக் குழந்தை. அண்ணன் எங்கேயாவது ஊருக்குக் கீருக்குப் போக வேண்டியிருந்தால் என்ன பண்ணுவாய்? பேசாமல் என் வீட்டுக்கு வந்து என்னோடேயே இருந்து விடுங்களேன்!" என்று பல தடவை சொல்லியிருக்கிறாள் செங்கமலத்தாச்சி.

ஆனால், அபிராமி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. பயம் என்றால் இன்னதென்று அவளுக்குத் தெரியாது. மேலும், அண்ணன் முத்தையன் இருக்கும் போது அவளுக்கு என்ன பயம்? யாரால் என்ன செய்ய முடியும் அவளை?


*****

முத்தையனுக்கு இரண்டு பக்கமும் இரண்டு போலீஸ்காரர்கள் நின்று அவனை, அழைத்துக் கொண்டு போனதைப் பார்த்ததும் செங்கமலத்தாச்சிக்குச் சொரேல் என்றது. அவள் விரைந்து நடந்து நேரே அபிராமியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். தாழ்ப்பாள் போட்டிருந்த கதவை இடித்தாள். அபிராமி, அண்ணன் தான் வந்து விட்டான் என்று எண்ணிக்கொண்டு, சட்டென்று கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்தாள். ஆனால் அண்ணன் குரல் கேட்காமலிருக்கவே, கொஞ்சம் சந்தேகம் தோன்றி, "யார் அது?" என்று கேட்டாள்.

"நான் தான், அபிராமி! கதவைத் திற!" என்று செங்கமலத்தாச்சியின் குரல் கேட்கவும், ஜன்னலில் எட்டிப் பார்த்து, வேறு யாரும் இல்லையென்று தெரிந்து கொண்டு, கதவைத் திறந்தாள். அபிராமியின் கண்கள் அழுது அழுது சிவந்திருப்பதையும், கன்னமெல்லாம் கண்ணீர் வழிந்த அடையாளங்கள் இருப்பதையும் கண்ட செங்கமலத்தாச்சிக்குப் பரபரப்பு அதிகமாயிற்று.

"அடி பெண்ணே! என்ன விபரீதம் நடந்துவிட்டதடி? அங்கேயோ உன் அண்ணனைப் போலீஸ்காரர்கள் அழைத்துப் போகிறார்கள்! இங்கேயோ நீ அழுது அழுது கண் கோவைப் பழமாய் ஆகியிருக்கிறது! முத்தையன் என்னடி பண்ணிவிட்டான்? நல்ல பிள்ளையாச்சே!" என்றாள்.

அபிராமிக்குத் திக்குத்திசை புரியவில்லை. போலீஸ்காரர்களா? அண்ணனையா அழைத்துப் போகிறார்கள்? ஏன்? எதற்காக?


*****

செங்கமலத்தாச்சி மெள்ள மெள்ள விசாரித்து அன்று நடந்ததையெல்லாம் தெரிந்து கொண்டாள். கடைசியில் "ஐயோ! அந்தப் படுபாவி சங்குப் பிள்ளையின் கண் உன் மேலும் விழுந்துவிட்டதா? அவன் பொல்லாத ராக்ஷசனாச்சே! அவனுடைய சூழ்ச்சிதான் எல்லாம்! என்னமோ பொய்க் கேசு எழுதி வைச்சு முத்தையனைப் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறான். ஐயோ, பெண்ணே! உனக்கு இப்படி எல்லாமா வரவேணும்?" என்று அவள் புலம்பிக்கொண்டிருக்கும்போதே, வாசலில் "எங்க அம்மா இங்கே இருக்காளா?" என்று ஒரு சிறு பையனுடைய குரல் கேட்டது. "வாடா தம்பி!" என்றாள் செங்கமலத்தாச்சி.

உள்ளே வந்தவன் அவளுடைய மகன். அவன் வரும் போதே, "அம்மா! அம்மா! நம்ம முத்தைய அண்ணனைப் போலீஸ்காரங்க பிடிச்சுண்டு போய்விட்டார்களாம். மடத்துப் பணத்தை அண்ணன் திருடிட்டான் என்று கேஸாம். போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு வைச்சு, அடி, அடி என்று அடிக்கிறாங்களாம், அம்மா!..." என்று சொல்லிக் கொண்டு வந்தான்.

இதைக் கேட்டதும், அபிராமி 'ஹோ' என்று அலறி தரையிலே தலையை முட்டிக் கொள்ளத் தொடங்கினாள். செங்கமலத்தாச்சி சட்டென்று அவள் தலையைப்பிடித்துத் தன் மடியின் மேல் வைத்துக் கொண்டு, "அசட்டுப் பெண்ணே! இந்த முட்டாப் பயல் ஏதோ உளறினால் அதைக் கேட்டுக் கொண்டு இப்படிச் செய்யலாமா? இவனுக்கு என்ன தெரியும்? போலீஸ் ஸ்டேஷனில் அடிக்கிறதெல்லாம் அந்தக் காலம். இப்போ, கவர்னராயிருந்தால் கூட ஒருத்தன் மேலேயும் கை வைக்கக்கூடாது. கை வைச்சால் கண்ணைப் பிடுங்கி விடுவார்கள். இதோ பார்! நீ கவலைப்படாதே. நான் வழி சொல்கிறேன். இந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டு அம்மாளை எனக்குத் தெரியும். உன்னை நான் அவளிடம் அழைத்துக் கொண்டு போகிறேன். அவளிடம் ஒன்று விடாமல் நடந்தது நடந்தபடி எல்லாம் சொல்லு. அந்த அம்மாள் ரொம்ப நல்லவள். வீட்டுக்காரரிடம் சொல்லி முத்தையனை விடுதலை செய்யப் பண்ணுவாள். கிளம்பு, போகலாம், இனிமேல் இந்த வீட்டிலே நீ இருக்கிறது கூட அபாயம்!" என்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:41 am

14.அபிராமியின் பிரார்த்தனை




அன்று இரவு சுமார் பத்து மணிக்கு ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி கலெக்டரின் காம்பிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, உள்ளே மிகவும் இனிமையான பெண் குரலில் யாரோ உருக்கமாகப் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு வியப்பு அடைந்தார். சற்று நேரம் வாசலிலேயே நின்று கேட்டுக் கொண்டிருந்து விட்டு உள்ளே சென்றார். கூடத்தில் ஸ்வாமி படங்களின் முன்னால், குத்து விளக்கு ஏற்றி வைத்திருப்பதையும் ஓர் இளம் பெண் உட்கார்ந்து பாடுவதையும் தமது மனைவியும் குழந்தைகளும் அந்தப் பாட்டில் அமிழ்ந்து போயிருப்பதையும் கவனித்தார்.

சாஸ்திரி கொஞ்சம் தொண்டையைக் கனைத்து, இரண்டு தடவை தரையைத் தட்டிய பிறகுதான் அவர்களுக்கெல்லாம் இவர் வந்திருப்பது தெரிந்தது. அபிராமி சட்டென்று பாட்டை நிறுத்தினாள். இன்ஸ்பெக்டரின் மனைவி உடனே எழுந்திருந்து அவரிடம் வந்து, "இந்தப் பெண்ணுக்குப் பெரிய கஷ்டம் வந்திருக்கிறது. எல்லாம் உங்களுடைய அழகான போலீஸ் இலாகாவினால் தான். இந்தப் பாவம் எல்லாம் யாருடைய தலையில் விடியப் போகிறதோ, தெரியவில்லை..." என்று படபடப்புடன் பேசத் தொடங்கினாள்.

"முதலில் சமாசாரம் என்னவென்று சொன்னால் அப்புறம் பாவபுண்ணியத்தைப் பற்றி விசாரிக்கலாம்" என்றார் சாஸ்திரி.

"அதெல்லாம் சொல்ல முடியாது. முதலில் இந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதாக நீங்கள் பிரமாணம் செய்யுங்கள், அப்புறம் தான் சமாசாரம் சொல்வேன்."

"இதென்ன, சித்திரசேனன் கதையாக அல்லவா இருக்கிறது? நான் என்ன கிருஷ்ணனா, அர்ச்சுனனா? யாருடைய தலையையாவது யாராவது நாளைச் சாயங்காலத்துக்குள் வாங்கி விடுவதாகச் சொல்லியிருக்கிறார்களா?"

"போதும், போதும்! அர்ச்சுனனாயிருங்கள், கிருஷ்ணனாயிருங்கள், மன்மதனாய் வேண்டுமானாலும் இருங்கள், இவளுடைய அண்ணனை உடனே ஜெயிலிலிருந்து விடுதலை பண்ணிக் கொடுத்தால் சரி" என்றாள்.

"இவளுடைய அண்ணனா? யார், மடத்துப் பணத்தைத் திருடிவிட்டதாகக் கார்வார் பிள்ளை வந்து ரிப்போர்ட் செய்தானே, அந்தப் பையனா?"

"ஆமாம் அந்தக் கார்வார் பிள்ளையைத் தூக்கிலே போட்டாலும் பாதகமில்லை. அவன் வந்து சொன்னான் என்று நீங்களும் அந்தப் பையனை அரஸ்ட் செய்யச் சொன்னீர்களே!"

பிறகு, மீனாட்சி அம்மாள், அபிராமியும் செங்கமலத்தாச்சியும் தெரிவித்தபடி எல்லா விவரங்களையும் ஸர்வோத்தம சாஸ்திரியிடம் சொன்னாள். சாஸ்திரி எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "அந்தச் சங்குப்பிள்ளை பெரிய அயோக்கியன் என்று எனக்குத் தெரியும். அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கிறேன். பொய் வாக்குமூலம் கொடுத்ததற்காகப் பிடித்துத் தண்டித்து விடுகிறேன். முத்தையன் 'லாக்-அப்' பில் இரண்டு மூன்றுநாள் இருந்தால் கூட மோசம் இல்லை. அப்படி இருந்தால் தான் அந்த அயோக்கியன் மேல் கேஸ் வலுப்படும். இந்தப் பெண்ணைச் சமாதனப்படுத்தி அனுப்பு" என்றார்.

அதற்கு மீனாட்சி அம்மாள், "ரொம்ப நன்றாயிருக்கிறது! இவள் எங்கே போவாள், இத்தனை நேரத்துக்குப் பிறகு? அண்ணனைத் தவிர வேறு நாதி கிடையாது, இந்தப் பெண்ணுக்கு. இட்டிலிக் கடை செங்கமலத்தாச்சி தற்செயலாகப் பார்த்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தாள். இல்லாவிட்டால் என்ன நேர்ந்திருக்குமோ தெரியாது. இராத்திரி இங்கே தான் இந்தப் பெண் இருக்க வேண்டும்" என்றாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபிராமிக்கு, முத்தையன் இப்போது உடனே விடுதலையடைந்து வரமாட்டான் என்பது மட்டுந்தான் மனத்தில்பட்டது. மீனாட்சியம்மாளின் ஆறுதல் மொழியினால் தேறுதலடைந்திருந்த அவளுக்கு இப்போது துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. எவ்வளவோ அடக்கிப் பார்த்தும் முடியாமல் விம்மினாள்.


*****

அந்தச் சமயம் வீட்டு வாசலில் ஆள் ஓடிவரும் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷம் ஒரு போலீஸ்காரன் உள்ளே வந்து ஸப்-இன்ஸ்பெக்டருக்கு ஸலாம் வைத்து நின்றான். ஸப்-இன்ஸ்பெக்டர், "என்னடா இது தடபுடல்? போலீஸ் ஸ்டேஷனைத் திருடன் கொண்டு போய்விட்டானா?" என்றார்.

"இல்லை, எஜமான்!"

"என்னடா பின்னே?"

"ஒன்றுமில்லை, எஜமான்...!"

"ஒன்றுமில்லாததற்கா இவ்வளவு தடபுடல்?"

"இல்லை, எஜமான்!"

"என்னடா இல்லை, முட்டாள்!"

"தடபுடல் இல்லை, எஜமான்! இரண்டு கைதிகள் லாக்கப்பிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள், எஜமான்!"

"என்ன? என்ன? நிஜமாகவா?"

"ஆமாம்! எஜமான்; குறவன் சொக்கனும் இன்று சாயங்காலம் அரெஸ்ட் செய்த முத்தையனும் ஓடி விட்டார்கள், எஜமான்!"

இதைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர், அவருடைய மனைவி, அபிராமி மூன்று பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இந்தச் செய்தி வெவ்வேறு வித உணர்ச்சிகளை உண்டாக்கிற்று. 'பாவிப் பயல்' காரியத்தைக் கெடுத்து விட்டானே' என்று நினைத்தார் இன்ஸ்பெக்டர். கான்ஸ்டபிளைப் பார்த்து, "போ ஓடு! உங்களையெல்லாம் முதலில் தொலைத்துவிட்டு, மறுகாரியம் பார்க்கிறேன்" என்று கூவினார். அவன் போனதும் உள் அறையில் இருந்த ரிவால்வரை எடுப்பதற்காக விரைந்து சென்றார்.

மீனாட்சி அம்மாளின் மனத்தில் பெருங்கலக்கம் உண்டாயிற்று. முத்தையன் ஓடிப் போனதன் விளைவுகளை நன்கு அறியவில்லையென்றாலும், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதென்று மட்டும் அவளுக்குத் தோன்றிற்று.

பேதைப் பெண் அபிராமியோ, அந்தச் செய்தியைக் கேட்டுப் பெரிதும் சந்தோஷமடைந்தாள். தன் அண்ணன் ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொண்டு போய்விட்டான் என்பது மட்டுமே அவளுக்குத் தெரிந்தது. அதனுடைய பலாபலன்களை அவள் என்ன கண்டாள்? இன்ஸ்பெக்டர் ரிவால்வரை எடுத்து வர உள்ளே போனபோது, அவர் மனைவியும் அவரைத் தொடர்ந்து போனாள். அப்போது அபிராமி கூடத்திலிருந்த படத்தின் முன்னால் கைகூப்பி நின்று, "ஸ்வாமி, பகவானே! என் அண்ணன் போலீஸ்காரர்கள் கையில் அகப்படக்கூடாது" என்று வாய்விட்டுப் பிரார்த்தித்தாள். உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டே வந்த ஸப்-இன்ஸ்பெக்டர், அபிராமியை இரக்கத்துடனே பார்த்துவிட்டு, "ஐயோ! துரதிர்ஷ்டம் பிடித்த பெண்ணே!" என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டு வெளியே சென்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:42 am

15.பசியும் புகையும்

வீட்டுக் கதவு பூட்டியிருப்பது கண்டு ஒரு கணம் திகைத்து நின்றான் முத்தையன். இதை அவன் எதிர் பார்க்கவேயில்லை. நின்று யோசிக்கவும் நேரமில்லை. கைகளை நெறித்துக் கொண்டான். உதட்டைக் கடித்துக் கொண்டான். கணத்துக்குக் கணம் போலீஸ்காரர்களின் ஆர்ப்பாட்டக் கூச்சல் சமீபத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அவன் உள்ளத்தில் மற்ற எல்லா நினைவுகளையும் அமுக்கிக் கொண்டு ஒரு பேருணர்ச்சி எழுந்தது. அது என்னவெனில் போலீஸார் கையில் தான் மறுபடியும் அகப்படக்கூடாது என்பதுதான். கடவுளை நினைத்துக் கைகூப்பி, "ஸ்வாமி! ஸ்வாமி! ஒரு தடவை என் கண்ணால் அபிராமியைப் பார்த்துவிடுகிறேன். அப்புறம் எனக்கு என்ன வந்தாலும் வரட்டும். அதுவரையில் அவர்கள் கையில் அகப்படாமல் என்னைக் காப்பாற்று!" என வேண்டிக் கொண்டான்.

எங்கேயாவது ஒளிந்து கொள்ளலாம் என்று ஒரு கணம் தோன்றிற்று. சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்குள் ஏறிக் குதிக்கலாமென்றால், ஏறுவதற்குள்ளேயே வந்து பிடித்து விடுவார்கள். சமீபத்தில் எங்கேயும் ஒளிந்து கொள்ளுவது சாத்தியமில்லை. இப்போதைக்கு ஓட வேண்டியதுதான். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

முத்தையன் ஓடத் தொடங்கினான். வழி, திசை ஒன்றையும் கவனிக்காமல் கால் போன போக்கில் ஓடினான். ஊருக்கு அடுத்தாற்போல் ஒரு மைதானம். மைதானத்தில் மங்கலான நிலவு வீசிக்கொண்டிருந்தது. அந்த மைதானத்தைத் தாண்டும் வரையில் அபாயந்தான். அதற்கப்பால் இருபுறமும் மரங்களடர்ந்த சாலை. அதைப் பிடித்துவிட்டால் தப்பலாம்.

மைதானத்தில் முக்கால் பங்கு அவன் தாண்டிவிட்ட போது, பின்னால், போலீஸ்காரர்களின் ஆரவாரம் கேட்டது. இன்னும் விரைந்து ஓடிச் சாலையைப் பிடித்தான். பிறகு சாலையோரமாக, இருளடர்ந்த பக்கமாகவே பார்த்து ஓடிக்கொண்டிருந்தான். போலீஸ் ஆரவாரங்கள் நின்று வெகு நேரம் ஆன பிறகும் அவன் நிற்கவில்லை. ஏழெட்டு மைல் தூரத்துக்கப்பால் அந்தச் சாலையானது கொள்ளிடத்து லயன்கரைச் சாலையுடன் சேர்ந்தது. முத்தையன் அவ்விடம் வந்த போது சந்திரன் அஸ்தமித்து, நன்றாக இருளடர்ந்து விட்டது. அங்கே சாலை ஓரத்தில் ஒரு சுமைதாங்கி இருந்தது. அதில் சற்று உட்காரலாமென்று முத்தையன் உட்கார்ந்தான். அப்படியே தலையைச் சற்றுச் சாய்த்தான். அடுத்த நிமிஷம் நித்திரையில் ஆழ்ந்து விட்டான்.


*****

பலபலவென்று பொழுது புலர்ந்தது. நாலாவிதமான பட்சிகளின் கானம் கேட்டது. வயல்களின் மடைகளிலே பாய்ந்து கொண்டிருந்த தண்ணீர் தம்புரா சுருதியைப் போல் இனிமையாக ஒலித்தது. கொஞ்ச தூரத்தில் ஒரு குடியானவன் தோளில் கலப்பையுடன் உழவு மாடுகளை ஓட்டிக் கொண்டு தெம்மாங்கு பாடிக்கொண்டு வந்தான்.

"அபிராமி! உன் தொண்டை எப்போது இவ்வளவு லட்சணமாச்சு?" என்று சொல்லிக் கொண்டே முத்தையன் கண்களை விழித்தான். அந்தண்டையும் இந்தண்டையும் பார்த்து முழித்தான். உடனே நேற்றைய சம்பவங்கள் எல்லாம் ஞாபகம் வந்தன. சட்டென்று கீழே குதித்து பக்கத்தில் கொள்ளிடத்துப் படுகையில் இறங்கி அவ்விடம் அடர்ந்து வளர்ந்திருந்த நாணற் காட்டில் மறைந்து கொண்டான்.

குடியானவன் அந்தச் சுமைதாங்கியின் அருகில் வந்த அதே சமயம், இன்னொரு பக்கத்திலிருந்து இரண்டு போலீஸ் சேவகர்கள் வந்தார்கள். பாவம்! அவர்கள் இராத்திரியெல்லாம் கண்ணை விழித்து அலைந்து ரொம்பவும் களைத்துப் போய்க் காணப்பட்டார்கள்.

"அடே! இங்கே எங்கேயாவது ஒரு ஆளைக் கீளைப் பார்த்தாயா?" என்று ஒரு போலீஸ்காரன் அந்தக் குடியானவனைப் பார்த்துக் கேட்டான்.

குடியானவன் திருதிருவென்று விழிக்கவே, இன்னொரு போலீஸ்காரன், "அடே! என்னடா முழிக்கிறாய்? ஆளு, தேளு எதையாவது பார்த்தாயா?" என்று அதட்டுங் குரலில் கேட்டான்.

குடியானவன் தன் கையில் வைத்திருந்த ஒரு காகிதப் பொட்டலத்தைச் சட்டென்று பின்புறமாக எறிந்து விட்டு, "சாமி! நான் பார்க்கலேங்க! நான் பார்க்கவே இல்லைங்க!" என்று அலறினான்.

அவள் பொட்டலத்தை எறிந்ததைப் போலீஸ்காரர்களில் ஒருவன் பார்த்துவிட்டான். அதை எடுத்துப் பிரிக்கத் தொடங்கினான். குடியானவன், "ஐயோ! சாமி நான் இல்லை! நான் போடவே இல்லை!" என்று இன்னும் அதிகமாய்க் கதறினான். பிரித்த பொட்டலத்திற்குள் ஒரு தேளைக் கண்டதும், போலீஸ்காரன் அலறி அடித்துக் கொண்டு அதைக் கீழே போட்டான். இரண்டு கான்ஸ்டபிள்களும் அந்தக் குடியானவனுடைய இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டார்கள்.

"என்னடா சமாசாரம், நிஜத்தைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால்..."

"சாமி, சாமி, சொல்லிடறேனுங்க - எங்க துரைச்சாமி இருக்கானுல்ல, துரைச்சாமி! - அவன் நேத்தி நான் தூங்கிட்டிருந்த போது என் காதிலே கட்டெறும்பைப் போட்டானுங்க - அதற்குப் பதிலாய் அவன் மேலே போடறதுக்காகத் தேளைப் பிடிச்சுட்டு வந்தேனுங்க - சாமி, அது உங்களுக்கு எப்படியோ தெரிஞ்சுக்கிடுத்தே! அதல்ல ஆச்சரியமாயிருக்கு?" என்று மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட்டான் குடியானவன். போலீஸ்காரர்கள் அவனைப் பிடரியைப் பிடித்து ஒரு நெட்டு நெட்டித் தள்ளிவிட்டு மேலே சென்றார்கள்.


*****

சற்றுத் தூரத்தில் மறைவிலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்தையன், நாணற் காட்டின் வழியாக மேலே நடக்கலானான். நடக்கும்போது யோசித்துக் கொண்டே போனான். இன்றெல்லாம் போலீஸ் நடமாட்டம் அதிகமாய்த்தானிருக்கும். ஆகையால், சாலைப் பக்கம் தலை காட்டக்கூடாது. ஒருவன் கொள்ளிடக்கரை நாணற் காட்டில் மட்டும் புகுந்து விட்டால் அவனைக் கண்டு பிடிக்க யாராலும் முடியாது என்று முத்தையன் கேள்விப்பட்டதுண்டு. அது உண்மையென்று இப்போது நன்றாய்த் தெரிந்தது. நாணலில் பத்து அடி தூரத்தில் உள்ளவனைக் கூடப் பார்க்க முடியாது. பல மைல் விஸ்தீரணம் படர்ந்திருக்கும் அக்காட்டில் மறைந்திருப்பவனை எங்கே என்று தேடுவது? எத்தனை பேர் தேடினால் தான் ஆகிற காரியமா?

ஆகவே, எவ்வளவு நாள் வேண்டுமானாலும் அங்கே நாணற் காட்டில் அவன் அகப்படாமல் இருக்கலாம். ஆனால் இருந்து என்ன செய்வது? எதற்காக இருக்க வேண்டும்? எத்தனை நாள் அப்படி இருப்பது? அபிராமியைப் பார்ப்பதற்கு வழி என்ன?

அபிராமியின் நினைவு வந்ததும் அவள் வீட்டை விட்டு எங்கே போயிருப்பாள் என்று சிந்திக்கத் தொடங்கினான். அப்போது நேற்று மத்தியானம் கான்ஸ்டபிள்கள் தன்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகையில் வழியிலே செங்கமலத்தாச்சி வீதியின் மறுபக்கம் போய்க் கொண்டிருந்ததும், அவள் தன்னை வியப்புடனே பார்த்துவிட்டுச் சென்றதும் ஞாபகம் வந்தன. 'ஐயோ! அந்தப் பாவிகள் என்னைக் கைது செய்து கொண்டு போகிறார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தால் ஆச்சியிடம் அபிராமியைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லியிருப்பேனே?' என்று நினைத்தான். ஆனால் தான் சொல்லாது போனாலும் செங்கமலத்தாச்சியேதான் அபிராமி ஒண்டியாயிருக்கக் கூடாதென்று சொல்லி அவளைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துப் போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அபிராமி வேறு எங்கே போயிருப்பாள்?

ஒரு வேளை...ஒரு வேளை... கார்வார் பிள்ளைதான் மறுபடியும் வந்திருப்பானோ? அந்த நினைவே அவனுக்கு எல்லையில்லாத துன்பத்தையளித்தது. நூறு தேள்கள் சேர்ந்தாற்போல் கொட்டிவிட்ட மாதிரி இருந்தது. தலையை அதிவேகமாக ஆட்டி அசைத்து அந்த நினைவைப் போக்கிக் கொண்டான். அப்படி ஒரு நாளும் இராது. அவ்வளவு துணிச்சல் அவனுக்கு ஒரு நாளும் வராது. ஆனால் ஏற்கனவே அவன் தனக்குச் செய்த தீங்கு தான் கொஞ்சமா? பாவி, போலீஸில் பொய் கேஸ் எழுதி வைத்துத் தன்னைக் கைது செய்தானே? அடே கொலைபாதகா!

அப்போது முத்தையனுக்கு வந்த கோபத்தில் பக்கத்திலிருந்த நாணலையெல்லாம் பிய்த்தெறியத் தொடங்கினான். நாணலின் கூரிய முனை அவன் உள்ளங்கையை அறுத்து, அதனால் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது கூட அவனுக்குத் தெரியவில்லை. அப்போது 'பட்' என்று அவனுக்குச் சமீபத்தில் ஒரு கல் வந்து விழுந்தது. தூரத்தில் சாலையில் "சூ! சூ!" என்று சத்தம் கேட்டது. சாலையில் போகிறவன் யாரோ நாணல் அசைவதைக் கண்டு நரியாக்கும் என்று நினைத்துக் கல்லை விட்டு எறிந்திருக்க வேண்டும்.

நாணற் காட்டிற்குள்ளே கூட ஜாக்கிரதையாய்த் தானிருக்க வேண்டுமென்று முத்தையன் அப்போது அறிந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:43 am

16."திருடன்! திருடன்!"


அன்று சாயங்காலம் கையெழுத்து மறையும் நேரத்துக்கு முத்தையன் நாணற் காட்டிலிருந்து லயன் கரைச் சாலைக்கு வந்தான். நேற்று மத்தியானத்துக்குப் பிறகு அவன் சாப்பிடவில்லையாதலால், கோரமான பசி அவனை வாட்டிக் கொண்டிருந்தது. உடம்பு சோர்ந்து போயிருந்தது. தள்ளாடித் தள்ளாடி நடந்தான். லயன் கரைக்குப் பக்கத்தில் இராஜன் வாய்க்காலுக்கு அப்பால் ஒரு வாழைத் தோட்டம் இருந்தது. அதில் வாழைக்குலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. முத்தையன் அங்கே சென்று, ஒரு வாழைத்தாரில் சற்றுச் சிவந்திருந்த ஒரு காயைப் பறித்துக் கடித்தான். தின்ன முடியாமல் துப்பி விட்டான்.

கொஞ்ச தூரத்தில் தென்னந் தோப்புக்கு மத்தியில் ஒரு கோயிலின் ஸ்தூபி தெரிந்தது. அதற்கு அருகில் புகை கிளம்பிற்று. அங்கே ஒரு கிராமம் இருக்க வேண்டும். கிராமத்திலுள்ள வீடுகளில் இப்போது சமையல் நடந்து கொண்டிருக்க வேண்டும். இதை நினைத்தபோது முத்தையனுடைய பசி அதிகமாயிற்று. அவனை அறியாமலேயே முத்தையனுடைய கால்கள் அந்தக் கிராமத்தை நோக்கி நடந்தன.


*****

திருப்பரங்கோவில் லாக்-அப்பிலிருந்த இரண்டு கைதிகள் தப்பி ஓடிவிட்டார்களென்ற செய்தி ஊருக்கு ஊர் வாய்மொழியாகவே பரவி நெடுந் தூரத்துக்கு எட்டி விட்டது. தப்பியோடியவர்கள் இரண்டு பேரும் பொல்லாத திருடர்கள் என்றும் கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர்கள் என்றும் செய்தி பரவிற்று. அவர்கள் எந்தெந்த ஊரில் எந்தெந்த மாதிரிக் கொடுமைகளைச் செய்தார்கள் என்பதாகக் கதைகளும் பரவின. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் கேட்டிருந்த திருடர் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்

பனங்குடி கிராமத்தில் சுப்பையா முதலியார் வீட்டில், முதலியார் தாழ்வாரத்தில் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தாயார் - வயதான கிழவி - முற்றத்தின் குறட்டில் படுத்துக் கொண்டிருந்தாள். கூடத்தில் மாடத்தில் மண்ணெண்ணெய் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. முதலியாரின் மகன் அந்த விளக்கின் வெளிச்சத்தில் பாடப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு ராகம் போட்டு வாசித்துக் கொண்டிருந்தான்.

"ஆகையால், பிள்ளைகளே! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!" என்று பையன் பாடத்தை முடித்தான்.

அந்தச் சமயம் பார்த்து, வாசலிலே நாய் குரைத்தது!

முதலியார், தமது மனைவியைக் கூப்பிட்டு, "ஏய்! கொல்லைக்கதவைப் பார்த்துத் தாளிட்டாயா! ஊரெல்லாம் திருட்டுப் பயமாயிருக்கிறது. திருப்பரங்கோயில் ஜெயிலிலிருந்து இரண்டு பக்காத் திருடர்கள் தப்பி ஓடிப்போயிருக்கிறார்களாம்" என்றார்.

"திருடன் வந்தால் வரட்டும். இங்கே என்னத்தைக் கொண்டு போவேன்? கைக் கொலுசைக் கூடத்தான் வாய்தாப் பணத்துக்கு விற்றாய் விட்டதே?" என்றாள் அவர் மனைவி.

அச்சமயம், வாசற்கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டார்கள். மறுபடியும், அந்தச் சத்தம்.

முதலியார், "யார் அது?" என்று இரைந்தார்.

"நான் தான்."

"நான் தான் என்றால் யார்?"

"நான் தான் என்றால் நான் தான். கதவைத் திறங்க, ஐயா!"

"யாரடா அவன் அவ்வளவு திமிராகப் பேசுகிறது?" என்று சொல்லிக் கொண்டு முதலியார் எழுந்திருந்தார்.


*****

குறட்டில் படுத்திருந்த கிழவி தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து, "இந்தாடாப்பா, சுப்பையா! நீ போவாதே! சொல்லிவிட்டேன். அதெல்லாம் நீ போகவே கூடாது" என்று வழி மறித்தாள். முதலியார் அதைப் பொருட்படுத்தாமல் திமிறிக் கொண்டு போனார். கிழவி சட்டென்று கூடத்துக்குப் போய் அங்கிருந்த சிம்னி விளக்கை எடுத்துக் கொண்டு முதலியாரைப் பின் தொடர்ந்தாள்.

முதலியார் கதவைத் திறந்து, "யாரடா அது?" என்றார்.

"ரொம்பப் பசிக்கிறது. ஐயா! கொஞ்சம் சாதம் போடுவீர்களா?" என்றான், வாசலில் நின்ற முத்தையன். அவன் பேச்சு ரொம்பவும் ஈனஸ்வரத்தில் இருந்தது.

அவன் அப்படிச் சொன்னானோ இல்லையோ, பின்னால் சிம்னி விளக்குடன் வந்து கொண்டிருந்த கிழவி, "ஐயோ! திருடன்! திருடன்!!" என்று கூவிக்கொண்டே விளக்கைக் கீழே போட்டாள். விளக்கு அணைந்தது. இருள் சூழ்ந்தது.

"திருடன்! திருடன்!" என்று அந்தக் கிழவி போட்ட கூச்சலுக்கு நாலா பக்கங்களிலிருந்தும் எதிரொலி கிளம்பியது.

அடுத்த வீடு, அண்டை வீடு, எதிர் வீடுகளில், "திருடன்! திருடன்!" என்ற ஒலி எழுந்தது. அது வீடு வீடாகப் பரவி, கிராமத்தின் கடைசி வீடு வரையில் சென்றது. "திருடன்! திருடன்!" என்று கூவிக் கொண்டே சிலர் வீட்டுக் கதவை அவசரமாய்த் தாழ்ப்பாள் போட்டார்கள். வேறு சில தீர புருஷர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பி ஓடி வந்தார்கள். அவரவர்களும் கையில் அகப்பட்டதை - தடி, உலக்கை, அரிவாள், மண்வெட்டி - இப்படிக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

விளக்கு அணைந்ததோ இல்லையோ, சுப்பையா முதலியார் சட்டென்று உள்ளே புகுந்து கதவைப் படார் என்று சாத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டார். முத்தையன் ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்றான். அப்புறம, கிராமத்தாரெல்லாம் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்து இனி அங்கு நிற்பது அபாயம் என்று அறிந்து ஓடத் தொடங்கினான்.

"அதோ ஓடறான்!" "அதோ ஓடறான்!" "விடாதே! பிடி!" என்று கூக்குரல்கள் எழுந்தன. தெருவிலிருந்த நாய்கள் எல்லாம் ஏக காலத்தில் குரைத்தன.

முத்தையன் வீதியில் கொஞ்ச தூரம் ஓடியதும் நாலாபுறமிருந்தும் ஜனங்கள் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டான். இனி, ஓடுவதில் பயனில்லை என்று தோன்றிற்று. கோவிலுக்கெதிரில் இருந்த லாந்தர் கம்பத்தினடியில் போய் வெளிச்சத்தில் நின்று, தான் திருடனில்லையென்றும் திருடுவதற்கு வரவில்லை என்றும் அவர்களுக்குச் சொல்லிவிடுவது தான் சரியென்று எண்ணினான். அந்த லாந்தர் வெளிச்சத்தண்டை அவன் போன போது யாரோ ஒருவன் கையில் சூரிக் கத்தியுடன் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டான். அடுத்த கணத்தில் அவ்வாறு ஓடிவந்தவன் கத்தியை ஓங்கினான். முத்தையன் அவன் கையைத் தாவிப் பிடித்துக் கத்தியைப் பிடுங்கினான். அப்படி பிடுங்கும்போது, கத்தி வைத்திருந்தவனின் தோளில் காயம்பட்டு இரத்தம் பீறிட்டது. அவன் கீழே விழுந்தான்.

முத்தையனுடைய கையிலே இப்போது கத்தி இருந்தது. அதில் இரத்தம் தோய்ந்திருந்தது. முத்தையனுடைய கையிலும் துணியிலுங்கூட இரத்தம். லாந்தர் வெளிச்சத்தில் முத்தையன் இதையெல்லாம் பார்த்தான். அவன் முகம் ஒரு நொடியில் பயங்கரமாக மாறிற்று. கண்கள் திருதிருவென்று விழித்தன. பற்கள் நறநறவென்று சப்தித்தன. இரத்த வெறியென்பது இது தான் போலும்!

அதற்குள்ளே கிராமத்தார் அநேகர் கையுந் தடியுமாக அவனை அங்கு வந்து சூழ்ந்தார்கள். முத்தையன் சூரிக்கத்தியைத் தூக்கிக் காட்டி, "வாருங்களடா" என்று ஒரு கர்ஜனை செய்து பல்லைக் கடித்தான். வந்தவர்கள் அவனுடைய பயங்கரத் தோற்றத்தைப் பார்த்தார்கள். இரத்தம் தோய்ந்த கத்தியைப் பார்த்தார்கள். கீழே காயம்பட்டுக் கிடந்தவனையும் பார்த்தார்கள். ஒருவன் "ஐயோ!" என்று கூச்சலிட்டுக் கொண்டு திரும்பி ஓடினான். அவ்வளவுதான்; எல்லாரும் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். முத்தையன் பயங்கரமாகக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்களைத் துரத்தத் தொடங்கினான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:44 am

17.தண்ணீர்க் கரையில்


ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் அந்தத் தெரு வீதியில், மனுஷ்யர் யாரும் இல்லாமல் போயினர். காயம் பட்டுக் கீழே கிடந்தவன் கூட எழுந்து ஓடிப் போனான். நாய்கள் மட்டுந்தான் ஆங்காங்கு தூரதூரமாய் நின்று குரைத்துக் கொண்டு இருந்தன.

முத்தையன் சாவதானமாய் ஊரைவிட்டு நடந்து சென்றான். அவன் வந்த காரியம் நிறைவேறவில்லை. சாப்பாடு கிடைக்கவில்லை; பசி தீரவில்லை. ஆனாலும் அவன் உள்ளத்திலே ஒரு பெரிய உற்சாகம் தோன்றியிருந்தது. அவனுடைய உடம்பிலிருந்த சோர்வெல்லாம் அந்த நேரம் எங்கேயோ போய்விட்டது. இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு கிளர்ச்சி அவன் உள்ளத்தில் தோன்றியது போலவே உடம்பிலும் ஏற்பட்டிருந்தது. சுருக்கமாகச் சொன்னால், அவன் அப்போது வெற்றி வெறியில் முழுகியிருந்தான்.

உலகத்திலே கோழைகள் தான் அதிகம்; உயிருக்குத் துணிந்த ஒருவன் உயிர்ப்பற்றுள்ள நூறு பேருக்குச் சமானம் என்பதை அவன் அப்போது அநுபவத்தில் கண்டான். ஏற்கெனவே முரட்டுச் செயல்களில் பிரியமுள்ள அவனுக்கு இந்த அறிவு அளவிலாத உற்சாகத்தை உண்டு பண்ணியது.

நட்சத்திரங்களின் மங்கலான வெளிச்சத்தில் குருட்டாம் போக்காய் வழியைக் கவனியாமல் நடந்து கொண்டு போனவன், அறுவடையான ஒரு சோளக் கொல்லையை அடைந்தான். அதிலே குருவி ஓட்டுவதற்காகப் போட்டு இருந்த பரண் ஒன்று இருந்தது. அதில் ஒருவரும் இல்லையென்பதைக் கண்டு ஏறிப் படுத்துக் கொண்டான். வெகுநேரம் வரை தூக்கம் பிடிக்கவில்லை; புரண்டு கொண்டிருந்தான். அவனுடைய உள்ளத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக எத்தனயோ எண்ணங்கள் அலையெறிந்து வந்து கொண்டிருந்தன. அவற்றில் அபிராமியும், கல்யாணியும் அதிகமாக இடம் பெற்றிருந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?


*****

முத்தையனுக்கு முன்னால் ஒரு பெரிய தலை வாழை இலை போட்டிருக்கிறது. அதில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் வீட்டில் குசேலருக்குப் பரிமாறி இருந்தது போல் உணவு வகைகள் பரிமாறப்பட்டிருக்கின்றன. சாதம், கறிவகைகள் பட்சணங்கள் எல்லாம் போர்போராய்க் குவிந்திருக்கின்றன. முத்தையன் அவற்றை அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். சமையற்காரக் குண்டோ தரன் ஒருவன் தட்டில் சாதம் கொண்டு வருகிறான். அவன் சாதம் போடப் போட, முத்தையன் "இன்னும்போடு" என்று சொல்கிறான். பரிசாரகனுக்குக் கோபம் வந்து, "இனிமேல் உன் தலையிலே தான் போடவேணும்!" என்று தாம்பாளத்தை முத்தையன் தலையில் போடுகிறான்...

இச்சமயத்தில் முத்தையன் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தான். பரணின் மேற்கூரையில் இருந்து சில சோளத் தட்டைகள் நழுவி அவன் தலையில் விழுந்திருந்தன. கொஞ்ச தூரத்தில் "மே" என்று ஆடு கத்திற்று. மேலே வெயில் சுளீரென்று அடித்தது.

'இத்தனை நேரமா தூங்கிப் போய்விட்டோ ம்?' என்று முத்தையன் எண்ணியதும், முதல் நாள் இராத்திரி சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்தில் வந்தன. பக்கத்தில் கிடந்த கத்தி அவையெல்லாம் உண்மைதான் என்று ருசுப்படுத்திற்று.

பசியோ காதை அடைத்துக் கொண்டு போயிற்று. பரண் மீதிருந்தே நாலா பக்கமும் பார்த்தான் முத்தையன். கொஞ்ச தூரத்தில் கொள்ளிடம் தெரிந்தது. அதன் நீரோட்டத்திற்குச் சமீபமாய் ஒரு கட்டை வண்டி நின்றது. அதனுள்ளிருந்து ஒரு ஸ்திரீயும் புருஷனும் இறங்கினார்கள். அவர்கள் வண்டிக்குள்ளிருந்து ஒரு மூட்டையை எடுத்தார்கள். சரி, சரி அது கட்டுச் சாத மூட்டைதான் என்று முத்தையன் தீர்மானித்துக் கொண்டான். அவனுடைய பசி நூறு மடங்கு அதிகமாயிற்று.

ஒரு நிமிஷம் யோசனை செய்தான் முத்தையன். அந்த பரண்மேலே கிடந்த ஒரு பழைய கம்பளியின் மேல் அவனுடைய பார்வை தற்செயலாய் விழுந்தது. சினிமாக்களில் டக்ளஸ் பேர்பாங்ஸ் போன்ற திருடன் வேஷக்காரர்களை அவன் பார்த்ததுண்டு. அவர்களுடைய வேஷம் அவன் மனக்கண் எதிரே தோன்றவே, கத்தியினால் அந்தக் கம்பளியில் ஒரு துண்டு கிழித்துக் கொண்டான். அதன் நடுவில் இரண்டு கண்ணுக்கும் இரண்டு துவாரம் செய்து, அதை முகத்தில் கட்டிக் கொண்டான். மேற்படி கட்டை வண்டி நின்ற இடத்தை நோக்கி வேகமாக நடந்தான்.


*****

புருஷனும் பெண்சாதியும் சாவகாசமாய்ப் பல் துலக்கிவிட்டு, நீர்க்கரையில் மணல்மேல் சாவதானமாய் உட்கார்ந்து கட்டுச் சாத மூட்டையை அவிழ்த்தார்கள். முதல் நாள் இரவு பிசைந்த புளியஞ் சாதத்தின் வாசனை கமகமவென்று வந்தது. சாதத்தின்மேல் இருந்த இலைகளை எடுத்துத் தண்ணீரில் அலம்பிப் போட்டான் கணவன். "இதோ பார்! தினந்தான் நீ எனக்குச் சாதம் போடுகிறாயே! இன்றைக்கு நான் உனக்குப் போடுகிறேன்" என்றான் அவன்.

"என்னமோ, இன்னிக்கு மழைதான் வரப்போகுது. இல்லாட்டிப் போனா, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போனாலும் போயிடும்!" என்றாள் மனைவி.

அந்தச் சமயம் "ஹா!" என்று ஒரு பயங்கரமான குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டார்கள். பக்கத்தில் இருந்த நாணற் காட்டிலிருந்து முகமூடியணிந்த ஒரு பயங்கர உருவம் கையில் கத்தியுடன் வந்து கொண்டிருந்தது. உடனே இருவரும் கதிகலங்கிப் போய் எழுந்து, வண்டி கிடந்த கரையை நோக்கி ஒரே ஓட்டமாய் ஓடினார்கள். அந்த உருவம் பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டும், இடையிடையே பயங்கரமாகக் கூவிக்கொண்டும் அவர்களை கொஞ்ச தூரம் துரத்திற்று. பிறகு திரும்பித் தண்ணீர்க் கரைக்குச் சென்று, கூடையிலிருந்த சாதத்தை எடுத்து 'லபக்' 'லபக்' என்று விழுங்கத் தொடங்கியது. ஏறக்குறைய பாதி கூடை காலியான பிறகு கை கழுவிற்று அந்த உருவம். மறுபடி அந்தக் கூடையைத் துணியைப் போட்டுச் சுற்றிக் கட்டி, அதைக் கையில் எடுத்துக் கொண்டு நாணற் காட்டிற்குள் புகுந்து மறைந்தது.

வண்டியின் அருகில் நின்று பிரமை கொண்டவர்கள் போல் இதைப் பார்த்துக் கொண்டிருந்த தம்பதிகள், அந்தப் பயங்கர உருவம் மறைந்ததும் வண்டியைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:45 am

18.அபிராமியின் பிரயாணம்


முத்தையனும் குறவனும் தப்பிச் சென்ற செய்தி கேட்ட உடனே வீட்டை விட்டுக் கிளம்பிய ஸர்வோத்தம சாஸ்திரி அன்றிரவு திரும்பி வரவில்லை. அப்புறம் ஐந்து ஆறு நாள் வரையில் அவர் வரவில்லை. கடைசியில் ஒரு நாள் சாயங்காலம் வந்து சேர்ந்தார். ரொம்பவும் அலைந்து களைத்துப் போய், அவர் முகம் பார்க்க முடியாமல் கோரமாயிருந்தது.

அவர் வந்து கூடத்தில் கிடந்த சாய்மான நாற்காலியில் "அப்பாடா!" என்று உட்கார்ந்ததும், மீனாட்சி அம்மாள் வெறுமனே அவரிடம் போனால் எரிந்து விழுவார் என்று அறிந்தவளாதலால், கையில் ஒரு டம்ளர் தீர்த்தத்துடன் போய் அருகில் நின்றாள். அவர் தீர்த்தம் சாப்பிட்டதும் "என்ன இத்தனை நாளாய் இப்படி வராமலிருந்து விட்டீர்கள்? ரொம்பக் கவலையாய்ப் போயிற்று. அந்தப் பெண்ணானால் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாயிருக்கிறாள்..." என்று சொல்ல, சாஸ்திரி, "அழறாளா? நன்னா அழச் சொல்லு!... இன்னும் அந்தப் பெண் இங்கே தான் இருக்கிறாளா, என்ன?" என்றார்.

"ஆமாம்; அவளுக்குத்தான் வேறு திக்கு கிடையாதே! எங்கே போவாள்?"

"ரொம்ப நன்றாயிருக்கிறது; அதற்காக நாம் என்னத்தைச் செய்கிறது? எங்கே அவள்? கூப்பிடு, பார்க்கலாம்?"

கதவின் ஓரத்திலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி அப்போது கண்ணைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.

சாஸ்திரி அவளைப் பார்த்து, "ஆஹா! பெண்ணே! அழுகிறாயா? அழு அழு! உன் அண்ணன் அகப்படக் கூடாது என்று பிரார்த்தனை செய்தாயல்லவா? அவன் அகப்படவில்லை. இப்போது உனக்குச் சந்தோஷந்தானே?" என்றார். பிறகு, "ஐயோ பைத்தியமே!" என்று சொல்லித் தலையில் அடித்துக் கொண்டார்.

அபிராமிக்கு ஒன்றுமே புரியவில்லை. முத்தையன் அகப்படவில்லையென்று மட்டும் தெரிந்தது. ஆனால் இன்ஸ்பெக்டர் பேசிய தினுசிலிருந்து ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டதென்றும் நினைக்க வேண்டியதாயிருந்தது.

"அவளை ஏன் மிரட்டுகிறீர்கள்? அவளுக்கு என்ன தெரியும், குழந்தை!" என்றாள் மீனாட்சி அம்மாள்.

"அவளுக்கு ஒன்றும் தெரியாது; அவள் அண்ணனுக்கும் ஒன்றும் தெரியாது...பெண்ணே! இனிமேல் உன் அண்ணனை நீ மறந்துவிடு. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. அவன் லாக்-அப்பிலிருந்து தப்பித்துப் போகாமலிருந்திருந்தால் மறுநாளே நான் விடுவித்திருப்பேன். தப்பித்துப்போன குற்றத்தோடிருந்தாலும் சொற்பத் தண்டனையோடு போயிருக்கும். இப்போதோ அவன் மேல் ஐந்து கொள்ளைக் குற்றங்கள் இருக்கின்றன. இந்தப் பழைய 'கேடி' குறவனையும் அவனுடைய சகாக்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறான். கொலை ஒன்றைத் தவிர, 'பீனல் கோ'டிலுள்ள எல்லாக் குற்றங்களும் செய்துவிட்டான். கட்டாயம் ஒருநாள் அவனைப் பிடித்தே தீருவோம். அப்போது தீவாந்திர சிட்சைக்குக் குறைந்து விதிக்க மாட்டார்கள்...இனிமேல் உனக்கு அண்ணன் இல்லையென்று நினைத்துக் கொள்" என்றார் ஸர்வோத்தம சாஸ்திரி.

இதைக் கேட்ட அபிராமி விம்மி விம்மி அழத் தொடங்கினாள். மீனாட்சி அம்மாள் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே போய், "நீ அழாதே, அம்மா! அவர் கோபத்தில் ஏதோ சொல்கிறார். அப்படியெல்லாம் உனக்கு ஒன்றும் வராது" என்று தேறுதல் சொல்லிவிட்டு மறுபடியும் கூடத்திற்குத் திரும்பி வந்தாள்.

"இந்தப் பெண்ணை என்ன செய்கிறதென்று தெரியவில்லையே? அவளை நம் வீட்டில் எத்தனை நாளைக்கு வைத்துக் கொண்டிருப்பது? ரொம்பவும் பிசகாயிற்றே. இவளுக்குப் பந்துக்கள், வேண்டியவர்கள் யாரும் இல்லையா?" என்றார் சாஸ்திரி.

"ஒருவரும் கிடையாது, பெரிய சங்கடந்தான்... எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, சொல்லட்டுமா?"

"பேஷாய்ச் சொல்லு! 'யோசனை சொல்வதில் மந்திரிக்குச் சமானம்' என்று உத்தம பத்தினியைப் பற்றி சாஸ்திரம் கூறுகிறது."

"பாருங்கள்! சென்னைப் பட்டணத்தில் என் நாத்தனார் சரஸ்வதி வித்யாலயம் நடத்துவதுதான் தெரியுமே? அதற்கு ஒத்தாசை செய்ய வேண்டும், ஒத்தாசை செய்ய வேண்டும் என்று பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா? இந்தப் பெண்ணை அனுப்பி வைக்கலாமே? அதுவும் ஒரு உதவிதானே?"

"பேஷான யோசனை. இப்போதே சாரதாமணிக்குக் கடுதாசி எழுதிவிடு."

"பார்த்தீர்களா? உலகத்திலே நாத்தனார்களுக்குக் கூட உபயோகம் இருக்கிறதே?" என்று சொல்லி மீனாட்சி அம்மாள் சிரித்தாள்.

இவ்வாறு செய்து கொண்ட தீர்மானத்தை மேற்படி தம்பதிகள் விரைவிலேயே நிறைவேற்றி வைத்தார்கள். மீனாட்சி அம்மாள், அபிராமியின் புத்திசாலித்தனத்தைப் பற்றியும் நற்குணங்களைப் பற்றியும் வர்ணனை செய்து எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, சரஸ்வதி வித்யாலயத்தின் தலைவி சகோதரி சாரதாமணி அம்மாள் அவளை உடனே அனுப்பிவைக்கும்படி பதில் எழுதினாள். மீனாட்சி அம்மாள் கூடச் சென்று அபிராமியை வித்தியாலயத்தில் சேர்த்துவிட்டு வரவேணுமென்று ஏற்பாடாயிற்று.

அவ்வாறே ஒரு நாள் மீனாட்சி அம்மாளும் அபிராமியும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் ஏறிச் சென்னைக்குப் பிரயாணமானார்கள். ரயில் போகத் தொடங்கியதும் அபிராமிக்கு அவளையறியாமல் கண்ணீர் வந்தது. அண்ணனை ஆபத்தான நிலைமையில் விட்டுவிட்டு நாம் தூரதேசம் போகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு வேதனையளித்தது. முத்தையனுக்கு இந்தத் துன்பமெல்லாம் தன்னால்தான் வந்தது என்று எண்ணியபோது அவளுடைய வேதனை பன்மடங்கு அதிகமாயிற்று. 'ஆகா; இப்போது தன் அருகில் முத்தையன் மட்டும் உட்கார்ந்து கொண்டு வந்தால், இந்த ரயில் பிரயாணம் எவ்வளவு உற்சாகமாயிருக்கும்?'

இப்படி இவள் எண்ணியபோது, "முத்தையன்" என்ற வார்த்தை காதில் விழவே உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள்.


*****

"பேப்பர்லே முத்தையனைப் பற்றி ஏதாவது போட்டிருக்கா?" என்று அதே வண்டியில் உட்கார்ந்து கொண்டிருந்த பிரயாணி ஒருவர் கேட்டார்.

"ஊரிலே இருக்கிற திருடனையெல்லாம் பற்றிப் போடுவதுதான் பத்திரிகைகளுக்கு வேலையாக்கும்" என்றார் ஒருவர்.

"இவன் அப்படியொன்றும் சாமான்யபட்ட திருடன் இல்லை. நேற்றைய சமாசாரம் கேட்டீர்கள் அல்லவா?"

"இல்லையே? இன்னும் எங்கேயாவது கொள்ளை நடந்ததோ?"

"இல்லை; இல்லை. சங்கரமடத்தில் இரண்டு நாளைக்கு முன்பு ஒரு கல்யாணம் நடந்ததாம். கல்யாணத்துக்குப் பிறகு நேற்றைக்கு, பெண் மாப்பிள்ளை முதலியவர்கள் சாலையோடு போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது விளக்கேற்றுகிற நேரத்தில், திடீரென்று முத்தையனும் ஐந்தாறு திருடர்களும் வந்து சூழ்ந்து கொண்டார்களாம். பெண் மாப்பிள்ளையுடன் வந்த ஆண் பிள்ளைகள் எல்லாம் பயந்து ஓடியே போய்விட்டார்களாம். ஆனால் கல்யாணப் பெண் மட்டும் தைரியமாய் முன்னால் வந்து, முத்தையனிடம், 'அண்ணா! என்னை உன் தங்கச்சி என்று நினைத்துக் கொள். முந்தா நாள் தான் தாலி கட்டிக் கொண்டேன். எங்களை ஒன்றும் பண்ணாதே!' என்றதாம். 'நான் உன் தங்கச்சி' என்றதும் முத்தையன் திடீரென்று அழுது விட்டானாம். அவர்களை ஒன்றும் பண்ணாமல் மற்றத் திருடர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு நொடியில் மறைந்து போய் விட்டானாம். என்ன ஆச்சரியம், பார்த்தீர்களா?"

"முத்தையனுக்கு ஒரு தங்கை உண்டு என்றும், அவள் மேல் அவன் உயிராயிருந்தானென்றும் சொல்கிறார்களே, இது நிஜமா, ஸார்!"

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி, பொங்கிக் கொண்டு வந்த அழுகையை மிகவும் பிரயத்தனப் பட்டுத் தடுத்துக் கொண்டாள்.

"அண்ணா! அண்ணா! உன்னை மறுபடியும் இந்த ஜன்மத்தில் காண்பேனா?" என்று அவள் நெஞ்சம் அலறிக் கொண்டிருந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:47 am

19.கச்சேரியில் கள்ளன்


'மகா-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ மகாகனம் பொருந்திய முத்தையப் பிள்ளை அவர்கள் நாளது ஜுலை மீ 20வ புதன் கிழமை இராத்திரி 11 மணிக்கு உம்முடைய வீட்டுக்கு விஜயம் செய்வார்கள். அவர்களை தக்கபடி உபசரித்து வரவேற்பதற்குச் சித்தமாயிருக்க வேண்டியது. கொஞ்சமாவது அலட்சியமாய் இருப்பதாய்த் தெரிந்தால், கடுமையான சிட்சை அனுபவிக்க நேரிடும்.'

இம்மாதிரிக் கடிதங்கள் அந்தத் தாலுக்காவிலுள்ள ஐம்பது அறுபது பெரிய மனிதர்களுக்கு ஒரே நாளில் கிடைத்தன. கடிதம் பெற்றவர்கள் கதிகலங்கிப் போனார்கள். அந்தச் செய்தி வாய்மொழியாகத் தாலுகா முழுவதும் பரவிற்று. ஜனங்கள் அடைந்திருந்த பரபரப்பைச் சொல்லி முடியாது.

குடித்தனக்காரர்கள் வீட்டுக் கதவுகளுக்கு இரட்டைத் தாள்ப்பாள் போட ஆரம்பித்தார்கள். இரும்புப்பெட்டிகளை இழுத்து இழுத்துப் பார்த்துப் பூட்டினார்கள். அநேகம் பேர் தலைமாட்டில் பெரிய தடியை வைத்துக் கொண்டு தூக்கினார்கள். ரொம்பப் பெரிய மனுஷர்கள் சிலர் துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பம் போட்டார்கள். வேறு சிலர் வஸ்தாதுகளுக்குச் சம்பளம் கொடுத்து வீட்டில் வைத்துக் கொண்டார்கள். சிலர் தாங்களே சிலம்பம் பழகத் தொடங்கினார்கள்.

இராத்திரியில் வீதியில் நாய் குரைத்தால் தீர்ந்தது; அன்றிரவு ஊரில் யாருக்கும் தூக்கம் கிடையாது.

சாலைகளில் அஸ்தமித்த பிறகு பிரயாணம் செய்வது அநேகமாக நின்று போயிற்று. அப்படிப் பிரயாணம் செய்தாலும், கையில் தடிகளுடன் தீவட்டி கொளுத்திக் கொண்டுதான் கிளம்பினார்கள். ஒரு தடவை, இப்படி எதிரும் புதிருமாய் வந்த இரண்டு கோஷ்டியினர், ஒருவரையொருவர் திருடர் கூட்டம் என்று நினைத்துக் கொண்டு அடித்துக் கொண்டார்கள்!


*****

திருடன் முத்தையனும் மேலும் மேலும் துணிகரமான செயல்களைச் செய்துகொண்டு வந்தான். சில சமயம், கடிதம் அனுப்பிய பெரிய மனிதர்களின் வீட்டுக்குக் கடிதத்தில் குறிப்பிட்ட தேதியிலேயே அவன் தைரியமாகப் போவான். வேறு சில சமயம் முன் பின்னாகப் போய் அவர்களைத் திடுக்கிடச் செய்வான்.

அவன் போகுமிடங்களுக்கெல்லாம் தன்னந்தனியாகவோ, இரண்டொருவரை மட்டும் அழைத்துக் கொண்டோ தான் போவான். ஆனால், அவனுடைய ஆட்கள் கொஞ்சம் தூரத்தில் நின்று கொண்டிருப்பதாய் எண்ணிக்கொண்டு, குடித்தனக்காரர்கள் அவன் கேட்டபடி நகை நாணயங்களைக் கொடுத்து விடுவார்கள்! புருஷர்கள் ஒரு வேளை மார் தட்டிக் கொண்டு சண்டைக்குக் கிளம்பினாலும், ஸ்திரீகள் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சி, கொள்ளைக்காரன் கேட்டதைக் கொடுத்து அனுப்பிவிடச் சொல்வார்கள்.

"அங்கே அப்படிச் செய்தான்", "இங்கே இப்படிச் செய்தான்" என்ற கதைகள் பரவப் பரவ, ஜனங்களின் பீதி வளர்ந்தது. அவ்வளவுக்கு முத்தையனுடைய துணிச்சலும் அதிகமாகிக்கொண்டு வந்தது. ஆனால் கோவிந்த நல்லூரில் அவன் செய்த காரியந்தான் அவனுடைய துணிச்சலான காரியங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போலிருந்தது.

கோவிந்தநல்லூரில் ஒரு பெரிய வீட்டில் கல்யாணம். வீதியை அடைத்துப் போட்டிருந்த கொட்டாரப் பந்தலில் சங்கீதக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இரவு சுமார் எட்டு மணியிருக்கும். காஸ் லைட்டுகள் கண்ணைப் பறிக்கும்படியான பிரகாசம் அளித்தன. புருஷர்களின் கை விரல் மோதிரங்களும் ஸ்திரீகளின் காதுக் கம்மல்களும் காந்த விளக்கின் வெளிச்சத்தில் டால் வீசின. சந்தனம், பன்னீர், ஊதுவத்திகளின் வாசனை கமகமவென்று இருந்தது.

ஒரு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸோபாவில் பெண்ணும் மாப்பிள்ளையும் அமர்ந்திருந்தார்கள். அந்தச் சபையில் வாயசைக்காமல் உட்கார்ந்திருந்தவர்கள் இவர்கள் தான். மற்றபடி பந்தலில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் ஒன்று வெற்றிலை புகையிலையாவது மென்று கொண்டிருந்தார்கள்; அல்லது பேசிக்கொண்டாவது இருந்தார்கள்.

பாடகர் வெகு நன்றாய்ப் பாடிக்கொண்டு வந்தார். தியாகராஜ கீர்த்தனம் ஒன்றை, அக்கு வேறு ஆணி வேறாய்ப் பிய்த்தெறிந்துவிட்டு, "முத்துக் குமரய்யனே!" என்ற பழந்தமிழ்க் கீர்த்தனத்தை எடுத்தார்.

உடனே, சபையில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் பாடகரை நோக்கினார்கள். ஒரு நிமிஷ நேரம் சபையில் நிசப்தம் குடிகொண்டிருந்தது.

ஆனால் அடுத்த நிமிஷத்தில், அப்படி மௌனமாயிருந்ததில் வெட்கமடைந்தவர்கள் போல் அவ்வளவு பேரும் சேர்ந்தாற்போல் பேச ஆரம்பித்திருந்தார்கள். ஒவ்வொருவரும் மெதுவாய்த்தான் பேசினார்களென்றாலும், அத்தனை பேரும் மெதுவாய்ப் பேசின சப்தம் சேர்ந்து, ஒரு பெரிய பேரிரைச்சலாகி, பாடகரின் பாட்டை மூழ்க அடித்து விட்டது.

அவர்கள் அவ்வளவு பேரும் பேசின விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது, முத்தையனின் விஷயந்தான்.

இப்படி எல்லாரும் முத்தையனைப் பற்றியே பேசினார்கள் என்றாலும் அவர்களின் இரண்டு பேருடைய பேச்சை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள். ஒருவர் பூங்குளம் தர்மகர்த்தாப் பிள்ளை; இன்னொருவர் சாக்ஷாத் திருப்பரங்கோயில் மடத்துக் கார்வார் சங்குப் பிள்ளை.

"அந்தப் பயலுக்கு நம் ஊர்தான்னா! பாலியத்திலிருந்தே ரொம்ப துஷ்டன். நான் அப்போதே சொல்லியிருக்கேன்! இந்தப் பயல் பெரியவனாய் போனால் தீவட்டிக் கொள்ளை அடிப்பான் என்று!" என்பதாகத் தர்மகர்த்தாப் பிள்ளை கூறினார்.

"நான் சொல்கிறேன் கேளுங்கள். எல்லாம் இந்தப் போலீஸ்காரர்களின் கையாலாகாத்தனந்தான். இவனை நான் நன்னா உதைச்சு, போலீஸ் ஸ்டேஷனிலே கொண்டு விட்டேன். போலீஸ்காரர்கள் கையாலாகாமல் அவனைத் தப்பிச்சுக்க விட்டுவிட்டார்கள்..." என்று கார்வார் பிள்ளை சரடு விட்டார்.

"ஆமாம்; போலீஸிலே கூட அவனுக்கு யாரோ உடந்தை. அதனால்தான் அவனை இதுவரையிலும் பிடிக்கவில்லை என்கிறார்களே!" என்றார் தர்மகர்த்தா.

"இருந்தாலும் இருக்கும், இந்தக் காலத்திலேதான் யோக்யனுக்குக் காலமில்லையே! திருட்டுப் பயல்களுக்குத் தானே காலமாயிருக்கு! திருப்பரங்கோவில் சப் - இன்ஸ்பெக்டர் மட்டும் மாற்றலாகாமற் போனால், இவனைப் பிடிக்க முடியவே போறதில்லை. இப்போ எங்கிட்ட மட்டும் போலீஸ் அதிகாரத்தைக் கொடுக்கட்டும்! ஒரு நொடியில் பிடிச்சுத் தரேன். இந்த நிமிஷம் அவன் எங்கேயிருக்கான்னு எனக்குத் தெரியும்..."

இப்படிக் கார்வார் பிள்ளை சொல்லிக் கொண்டிருக்கும்போது, சபையில் சட்டென்று மறுபடியும் நிசப்தம் குடி கொண்டது. பாடகர் பாட்டை நிறுத்தி விட்டார். பக்க வாத்தியங்களும் நின்றன. சபையோர் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். எல்லோரும் ஒரே போக்காக, கார்வார் பிள்ளை இருந்த திக்கையே நோக்கினார்கள். அவர்களுடைய கண்கள் மிரண்டு விழித்தன. அவர்களுடைய முகத்திலே பயங்கரம் குடிகொண்டிருந்தது.

இதைப் பார்த்த கார்வார் பிள்ளையும் கலவரமடைந்தார். எல்லோரும் தம் தலைக்குமேல் நோக்குவதைப் பார்த்து அவரும் தலை நிமிர்ந்து பார்த்தார்.

அந்த க்ஷணத்தில் அவருடைய உடம்பு சொட்ட வியர்த்து விட்டது. ஏனெனில் அவருக்குப் பின்னால், கண் மூடி அணிந்த ஓர் உருவம், கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தது. "ஐயோ!" என்று ஒரு கூச்சல் போட்டார் சங்குப் பிள்ளை. எழுந்து ஓட ஆரம்பித்தார்.

அடுத்த கணத்தில் பந்தலிலிருந்த அவ்வளவு பேரும் எழுந்தார்கள்; நாலா புறமும் சிதறி ஓடினார்கள். விளக்குகள் விழுந்து உடைந்தன. குழந்தைகள் அழுதன. ஸ்திரீகள் கூச்சலிட்டார்கள். அல்லோல கல்லோலமாய் போய் விட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக