புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
44 Posts - 41%
heezulia
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
8 Posts - 7%
T.N.Balasubramanian
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
3 Posts - 3%
prajai
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
2 Posts - 2%
Barushree
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
21 Posts - 5%
prajai
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 9:52 am

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல் விளக்குகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 9:54 am

1.பறித்த தாமரை





பூங்குளம் என்று அந்தக் கிராமத்துக்குப் பொருத்தமாய்த்தான் பெயர் அமைந்திருந்தது. நீர்வளம் நிறைந்த ஊருக்கு உதாரணம் வேண்டுமானால், பூங்குளத்தைத் தான் சொல்ல வேண்டும். ஆடி, ஆவணி மாதத்தில் ஊருக்கு வெளியே சென்று பார்த்தால் குளங்களிலும், ஓடைகளிலும், வாய்க்கால்களிலும், வயல்களிலும் தண்ணீர் நிறைந்து ததும்பி அலைமோதிக் கொண்டிருக்கும். எங்கெங்கும் ஜலமாகவே காணப்படும்.

இந்த ஊருக்கென்று அவ்வளவு புஷ்பங்களும் எங்கிருந்து வந்து சேர்ந்தனவோ தெரியாது; குளத்தைத் தாண்டி அப்பால் போனோமோ இல்லையோ, கொன்றை மரங்களிலிருந்து சரம் சரமாய்த் தொங்கும் பொன்னிறப் புஷ்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. அந்த மங்களகரமான மஞ்சள் நிறப் பூக்களிடம் சிவபெருமான் அவ்வளவு காதல் கொண்டிருப்பதில் ஆச்சரியம் என்ன? அப்புறம் இந்தப் பக்கம் பார்த்தோமானால், வேலி ஓரத்தில் வளர்ந்திருக்கும் பொன்னரளிச் செடிகளில், பொன்னரளிப் பூக்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருப்பதைக் காண்கிறோம். அத்தகைய பத்தரை மாற்றுப் பசும் பொன்னின் நிறம் அந்தப் பூவுக்கு எப்படித்தான் ஏற்பட்டதோ என்று அதிசயிக்கிறோம். வேலிக்கு அப்பால் நெடிது வளர்ந்திருக்கும் கல்யாண முருங்கை மரத்தைப் பார்த்தாலோ, அதிலே இரத்தச் சிவப்பு நிறமுள்ள புஷ்பங்கள் குலுங்குவதைக் காண்கிறோம்.

சமீபத்திலுள்ள அந்தச் சிவன் கோயிலைத்தான் பாருங்கள். கோயில் பிரகாரத்தில் மதிலை அடுத்தாற் போல் வளர்ந்திருக்கும் பன்னீர் மரங்களிலே அந்தப் பன்னீர்ப் புஷ்பங்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன? பச்சைப் பசேலென்ற இலைகளுக்கு மத்தியில், இந்த வெண்ணிற மலர்கள் எப்படி சோபிக்கின்றன? அடுத்தாற்போலிருக்கும் பவளமல்லி மரத்தையும் அதன் அடியில் புஷ்பப் பாவாடை விரித்தாற்போல் உதிர்ந்து கிடக்கும் பவளமல்லிப் பூக்களையும் பார்த்து விட்டாலோ ஏன், அப்பால் போவதற்கே நமக்கு மனம் வருவதில்லை.

ஆனாலும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அதோ சற்றுத் தூரத்தில் தெரியும் குளக்கரையை நோக்கிச் செல்வோம். ஒற்றையடிப் பாதை வழியாகச் செல்லும் போது கம்மென்ற வாசனை வருவதைக் கண்டு அண்ணாந்து பார்க்கிறோம். அது ஒரு நுணா மரந்தான். பார்ப்பதற்கு ஒன்றும் அவ்வளவு பிரமாதமாயில்லை. எனினும் அந்த மரத்தின் சின்னஞ்சிறு பூக்களிலிருந்து அவ்வளவு நறுமணம் எப்படித்தான் வீசுகின்றதோ?

இதோ தடாகத்துக்கு வந்து விட்டோ ம். குளத்தின் கரையிலே உள்ள நந்தவனத்திலே மட்டும் பிரவேசித்து விட்டோ மானால் திரும்ப வெளியே வருவதே பிரயாசையாகிவிடும். ஆகையால், வெளியிலிருந்தே அதை எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம். அதோ நந்தியாவட்டைச் செடிகளில் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் வெண்ணிறப் பூக்கள் கண்ணைப் பறிக்கின்றன. அந்தப் புறத்தில் செம்பருத்திச் செடிகளும், வேலி ஓரம் நெடுக கொக்கு மந்தாரையும் இந்தண்டைப் பக்கம் முழுதும் மல்லிகையும் முல்லையும் பூத்துக் குலுங்குகின்றன. அதோ அந்தப் பந்தலில் ஒரு புறம் ஜாதி முல்லையும், இன்னொரு புறம் சம்பங்கியும் பூத்து, நந்தவனம் முழுவதிலும் நறுமணத்தைப் பரப்புகின்றன. அந்த ஈசான்ய மூலையில் ஒரே ஒரு ரோஜாச் செடி, வீட்டுக்குப் புதிதாய் வந்த விருந்தாளியைப் போல் சங்கோஜத்துடன் தனித்து நிற்கிறது. அதிலே ஒரு கிளையில் கொத்தாகப் பூத்த இரண்டு அழகிய ரோஜாப் புஷ்பங்கள்.

"ரோஜாப் பூவாம் ரோஜாப்பூ! பிரமாத அதிசயந்தான்!" என்று சொல்வது போல், குளத்தின் கரையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் அரளிச் செடிகளிலே அரளிப் புஷ்பங்கள் மண்டிக் கிடக்கின்றன. செண்டு கட்டுகிறார்களே, செண்டு! இயற்கைத் தேவி கட்டியிருக்கும் இந்த அற்புதப் பூச்செண்டுகளைப் பாருங்கள்! கரும் பச்சை இலைகளுக்கிடையில் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் இந்த செவ்வரளிப் பூக்களின் அழகை என்னவென்று சொல்வது? ஆகா! அந்தப் பூங்கொத்தின் மேலே இதோ ஒரு பச்சைக்கிளி வந்து உட்காருகிறது. கிளையும் அந்த இயற்கைப் பூச்செண்டும் சேர்ந்து ஊசலாடுகின்றன. ஏதோ தெய்வ லோகம் என்று உயர்வாய்ச் சொல்கிறார்களே, அந்தத் தெய்வ லோகத்தில் இதைவிடச் சிறந்த சௌந்தரியக் காட்சி இருக்க முடியுமோ?

கடைசியாக, அந்தக் குளத்தையும் பார்த்துவிடுவோம். அது குளமா அல்லது புஷ்பக் காடா? மலர்க் குலத்துக்கு ஒரு சக்கரவர்த்தி உண்டு என்றால் அது செந்தாமரைதான் என்பதில் சந்தேகமில்லை. எத்தனை பெரிய பூ! அதுவும் ஒன்றிரண்டு, பத்து, இருபது அல்ல; -ஆயிரம் பதினாயிரம்! அவை தலைதூக்கி நிற்கும் கம்பீரந்தான் என்ன? சௌந்தரிய தேவதை செந்தாமரைப் பூவைத் தன் இருப்பிடமாகக் கொண்டதில் வியப்பும் உண்டோ ?

புஷ்பராஜா கொலுவீற்றிருக்கும் இடத்தில் தாங்களும் இருக்கிறோமே என்று வெட்கப்பட்டுக் கொண்டு, அந்த மூலையில் சில அல்லிப் பூக்கள் ஒளிந்து நிற்கின்றன. இன்னும் சிறிது கூர்ந்து பார்த்தால், சில நீலோத்பலங்கள் இதழ் விரிந்தும் விரியாமலும் தலையைக் காட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வருகின்றன.

ஆமாம், அங்கங்கே வெள்ளை வெளேரென்று தோன்றுகின்றவை கொக்குகள்தான். ஆனால் அவை மீனுக்காகத் தவம் செய்கின்றனவா அல்லது அந்த அழகுக் காட்சியிலே மதிமயங்கிப் போய்த்தான் அப்படிச் சலனமற்று நிற்கின்றனவா, நாம் சொல்ல முடியாது.

இந்த அற்புத சௌந்தரியக் காட்சியிலிருந்து நமது பார்வையைச் சிறிது வேறு பக்கம் திருப்புவோம். குளத்தின் கரையில் படித்துறைக்குச் சமீபத்திலுள்ள ஒரு சிறு மண்டபத்தைப் பார்ப்போம். அந்த மண்டபத்தில் இப்போது விபூதி ருத்ராக்ஷதாரிகளான இரண்டு பெரியவர்கள் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தர்மகர்த்தாப்பிள்ளை; இன்னொருவர் அவருடைய சிநேகிதர் சோமசுந்தரம் பிள்ளை.

"சிவாய நம: சிவாய நம: சிவாய நம:... உமக்குத் தெரியுமோ, இல்லையோ! நமது சிற்றம்பலத்தின் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது" என்கிறார் தர்மகர்த்தாப் பிள்ளை.

"தெரியும், ஆனா அந்தப் பையன் முத்தையன் தான் ஏமாந்து போகிறான். அவனுக்கு முறைப் பெண் அல்லவா கல்யாணி?"

"முறைப்பெண்ணாவது ஒண்ணாவது; சுத்தத் தறுதலைப் பையன்! ஒரு காலணா சம்பாதிக்க யோக்யதை இல்லை. அவனுக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்?"

"இருந்தாலும் அவன் ரொம்ப ஆசை வைத்திருந்தான். காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போன கதைதான்."

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அந்த மண்டபத்தினருகே ஓர் இளைஞன் வருகிறான். அவன் காதில் மேற்படி பேச்சின் பின்பகுதி விழுகிறது. அவர்கள் பாராதபடி அந்த மண்டபத்தின் மேல் ஏறி உச்சியை அடைகிறான். அந்த இளைஞனுக்கு வயது இருபது, இருபத்திரண்டு இருக்கும். வாகான தேகமும் களையான முகமும் உடையவன். அவனுடைய தலைமயிரைக் கத்தரித்துக் கொஞ்ச நாள் ஆகியிருக்க வேண்டும். நெற்றியின் மேலெல்லாம் மயிர் விழுந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தலையை ஒரு குலுக்குக் குலுக்கிக் கண்களை மறைந்த மயிர்ச் சுருளை விலக்கிக் கொள்கிறான். உடனே 'தொபீர்' என்று நின்ற வாக்கிலேயே குளத்தில் குதிக்கிறான். அவன் குதித்த இடத்திலிருந்து ஜலம் வெகு உயரம் எழும்பி, நாலாபக்கமும் சிதறி விழுகிறது. சில திவலைகள் மண்டபத்தின் அடியில் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்த பெரியோர்கள் மேலும் விழுகின்றன.

"நல்ல பிள்ளை! நல்ல பிள்ளை! வால் ஒன்று தான் வைக்கவில்லை" என்கிறார் தர்மகர்த்தாப் பிள்ளை.

"முரட்டு முத்தையன் என்று பெயர் சரியாய்த்தான் வந்திருக்கிறது" என்கிறார் சோமசுந்தரம் பிள்ளை.

இருக்கட்டும்; குளத்தில் குதித்தவன் என்ன ஆனான், பார்ப்போம். ஆசாமியைக் காணவே காணோம்? ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம், மூன்று நிமிஷம்...ஐயோ முழுகியே போய் விட்டானோ, என்ன? - ஒரு கணம் நமது நெஞ்சு துணுக்குறுகிறது - இல்லை, அதோ ஜலத்தில் குமிழி வருகிறதே! கொஞ்ச தூரத்தில், நாலைந்து எருமை மாடுகள் சுகமாய்ப் படுத்துக் கொண்டிருந்த இடத்தில் முத்தையன் ஜலத்துக்கு வெளியே தலையைத் தூக்குகிறான். அந்த எருமைகளின் வாலைப் பிடித்து முறுக்கி விரட்டுகிறான். அவை கரையேறி நாலாபக்கமும் ஓடுகின்றன. மண்டபத்திலிருந்த இரண்டு பெரிய மனுஷர்களும் 'அடடே!' 'அடடே!' என்று கூவிக்கொண்டு எழுந்து அந்த மாடுகளை நோக்கி ஓடுகிறார்கள்.

முத்தையன் அங்கிருந்து நீந்திச் சென்று குளத்தில் தாமரைகள் பூத்திருக்கும் இடத்தை அடைகிறான். ஒரு தாமரைப் பூவைப் பறிப்பதற்காக அதனிடம் அணுகுகிறான். என்ன பிரமை இது? பூ இருந்த இடத்திலே ஓரிளம் பெண்ணின் சிரித்த முகம் காணப்படுகிறதே! முத்தையன் தலையை ஒரு தடவை குலுக்கியதும் முகம் மறைந்து மறுபடி பூ ஆகிறது. முத்தையன் அந்தப் பூவை அடிக்காம்போடு பலமாகப் பிடித்து இழுத்துப் பறிக்கிறான். அப்பா! என்ன கோபம்! என்ன ஆத்திரம்! கோபத்தையும் ஆத்திரத்தையும் அந்தப் பூவினிடமா காட்ட வேண்டும்? பூவைத்தான் பறிக்கலாம்! மனத்திலுள்ள ஞாபகத்தை அந்த மாதிரி பறித்து எறிந்துவிட முடியுமா? முத்தையன் பூவுடனே இரண்டு தாமரை இலைகளையும் பறித்துச் சுருட்டிக் கொண்டு கரையேறுகிறான். கிராமத்தை நோக்கி நடக்கிறான். அவனைப் பின் தொடர்ந்து நாமும் செல்வோம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 9:55 am

2.அண்ணனும் தங்கையும்





இடுப்பிலே, ஈரத்துணி, கையிலே சுருட்டிய தாமரை இலை, தோள் மேல் காம்புடன் கூடிய தாமரைப் பூ - இந்த விதமாக முத்தையன் பூங்குளம் கிராமத்து வேளாளர் வீதி வழியாகச் சென்றான். இயற்கையாகவே வேகமான அவனுடைய நடை, வீதி நடுவிற்கு வந்ததும் இன்னும் சிறிது விரைவாயிற்று. அப்போது அவன் முகம் சிவந்து, கண் கலங்கிற்று. பெருமூச்சு வந்தது. நேரே எதிர்ப்புறமே பார்த்துக் கொண்டு சென்றவன் சட்டென்று இடது புறம் நோக்கினான். ஏதோ அவனால் தடுக்க முடியாத ஒரு காந்தசக்தி அவனுடைய கண்களை அப்படி வலிந்து இழுத்ததாகவே தோன்றியது. அவன் பார்த்த இடத்துக்கு நேரே வாசலில் பந்தல் போட்ட ஒரு வீட்டின் காமரா உள் தெரிந்தது. அதன் ஜன்னலுக்குப் பின்னால் ஒரு பெண்ணின் முகம் காணப்பட்டது. அந்த முகத்தின் கரு விழிகளில் ததும்பி நின்ற ஜலத்துளியை ஊடுருவிக் கொண்டு ஒரு பார்வை கார்காலத்து மின்னலைப் போல் கிளம்பி வந்தது. அதன் வேகத்தைச் சகிக்க முடியாமல் முத்தையன் உடனே தன் கண்களைத் திரும்பிக் கொண்டான். முன்னைவிட விரைவாக நடந்து சென்று வீதியின் கோடியிலிருந்த தன் வீட்டை அடைந்தான்.

அவன் வீட்டுக்குள் நுழைந்த போது சமையலறை உள்ளிருந்து இனிய பெண் குரலில், பாபநாசம் சிவன் பாடிய குந்தலவராளி கீர்த்தனம் பாடப்படுவது கேட்டது.

"உன்னைத் துதிக்க அருள்தா - இன்னிசையுடன்
உன்னைத் துதிக்க அருள்தா!"

பாட்டைக் கேட்ட முத்தையன் தன்னையறியாமல் உற்சாகத்துடன் தலையை ஆட்டினான். மேற்படி பல்லவியை அடுத்து அநுபல்லவியைத் தானே பாடத்தொடங்கினான்.

"பொன்னைத் துதித்து மடப் பூவையரைத் துதித்து
சின்னத்தன மடைந்து சித்தமுங்க கலங்கிடாமல்" (உன்னைத்)

முத்தையன் இந்த அநுபல்லவியைப் பாடிக் கொண்டே ஈர வேஷ்டியைக் கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தான். அப்போது சமையலறையின் கதவைச் சற்றே திறந்து கொண்டு ஒரு பெண் நிலைப்படியில் நின்றாள். அவளுக்கு வயது பதினாலு பதினைந்து இருக்கும். முகத்தில் குறுகுறுப்பு. கண்ணிலே விஷமம். அவளைப் பார்த்ததும் முத்தையனின் உடன் பிறந்தவளாயிருக்க வேண்டுமெனத் தெரிந்து கொள்ளலாம்.

முத்தையன் அநுபல்லவியை நிறுத்தியதும் அவள், "அண்ணா! இந்தப் பாபநாசம் சிவன் ரொம்பப் பொல்லாதவராயிருக்க வேண்டும். அவர் என்ன, எங்களை அப்படித் திட்டுகிறார்? 'மடப்பூவையர்' என்கிறாரே! ஸ்திரீகள் எல்லாருமே மடத்தனமுள்ளவர்களா?" என்று கேட்டாள்.

முத்தையன் கலகலவென்று நகைத்தான். "இல்லை. அபிராமி! அதற்கு அப்படி அர்த்தமில்லை. 'மடப் பூவையர்' என்றால் 'மடம் உள்ள ஸ்திரீகள்' என்று அர்த்தம். 'மடம்' என்பது ஸ்திரீகளுக்கு வேண்டிய நாலு குணங்களில் ஒன்று. நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு. அதாவது, முக்கியமாக உன்னைப்போல் வாயாடியாயிருக்கக்கூடாது" என்றான்.

"போ, அண்ணா! நான் வாயாடிதான். நீ வாயேயில்லாத ஊமைப் பெண் ஒருத்தியைக் கட்டிக் கொள்... அது இருக்கட்டும்! ஸ்திரீகள் பேசத்தான் படாதே தவிர, பாடலாமோ கூடாதோ? அதையாவது சொல்லிவிடு" என்றாள் அபிராமி. அதற்கு அவன் பதிலை எதிர்பாராமலே சடக்கென்று சமையலறை உள்ளே போய் மேற்படி கீர்த்தனத்தின் சரணத்தைப் பாடத் தொடங்கினாள்.

முத்தையன் உலர்ந்த வேஷ்டி கட்டிக் கொண்டு, நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்துக் கொண்டு, கூடத்தில் போட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடலானான். அபிராமியுடன் சேர்ந்து சரணத்தின் பிற்பகுதியை அவனும் பாடினான். ஆனால், அவன் வாய் பாடிற்றே தவிர மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்ததென்பதை அவன் முகம் காட்டிற்று.

பாட்டு முடிந்ததும் அபிராமி மறுபடியும் நிலைப்படியண்டை வந்தாள்.

"அண்ணா! ஒரு சமாசாரம் கேட்டாயா?" என்றாள்.

"என்ன சமாசாரம்? எதிர்வீட்டுப் பூனைக்கு நாய்க் குட்டி பிறந்திருக்கிறதே, அந்தச் சமாசாரந்தானே?"

"இல்லை அண்ணா! கல்யாணிக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டதாமே; உனக்குத் தெரியுமா என்று தான் கேட்டேன்!"

முத்தையனுடைய முகத்தில் வேதனையின் அறிகுறி காணப்பட்டது. அவன் சற்றுக் கடுகடுப்போடு, "ஆமாம் அதுதான் இப்போது எனக்குத் தூக்கம் வராமல் கவலையாயிருந்தது. நீ போய் உன் காரியத்தைப் பார்!" என்றான்.

"மாப்பிள்ளை அப்படி ஒன்றும் கிழடு இல்லையாம், அண்ணா! நாற்பத்தெட்டு வயதுதான் ஆச்சாம்!" என்று சொல்லிவிட்டு, குதித்துக் கொண்டு உள்ளே சென்றாள் அபிராமி.

ஒரு நிமிஷத்துக்கெல்லாம் மறுபடி அவள் கதவண்டை முகத்தைக் காட்டி, "அண்ணா! மாப்பிள்ளை தலையிலே எண்ணிப் பத்துக் கறுப்புமயிர் இருக்காம். வெள்ளெழுத்து இப்போது தான் வந்திருக்காம். பத்து அடி தூரத்திற்குள் இருந்தால், தடவிப் பார்த்து எருமை மாடா, மனுஷ்யாளா என்று கண்டு பிடிச்சுடுவாராம்" என்று கூறிவிட்டு மறைந்தாள்.

மறுபடியும் திரும்பி நிலைப்படிக்கு வந்து "ரொம்பப் பணக்கார மாப்பிள்ளையாம், அண்ணா! அவர்கள் வீட்டிலே மரக்காலைப் போட்டுத்தான் பணத்தை அளப்பார்களாம்! மூத்த தாரத்தின் நகைகள் மட்டும் முப்பதினாயிரம் பெறுமாம். அவ்வளவு நகையையும் கல்யாணிக்குத்தான் போடப் போகிறாராம். அடே அப்பா! கல்யாணியின் அழகுக்கு அவ்வளவு நகைகளையும் பூட்டி விட்டால், தூக்கிக் கொண்டே போய்விடாதா?..." என்று அடுக்கிக் கொண்டே போனாள்.

முத்தையனுக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் எரிச்சல் அதிகமாகிக் கொண்டு வந்தது. அவன், "இந்தா அபிராமி! உன்னை யார் இந்தக் கதையெல்லாம் கேட்டார்கள்? உள்ளே போய் அடுப்புக் காரியத்தைப் பார்! நீ இங்கே வம்பு வளர்த்துக் கொண்டு நிற்பாய்! அங்கே சாதம் கூழாய்ப் போய்விடும்" என்றான்.

"இல்லை, அண்ணா! என்னதான் சொன்னாலும் இந்தக் காலத்திலே பணம் தான் பெரிதாயிருக்கிறது. அவர்கள் மேலே நாம் கோபித்துக் கொண்டு என்ன பண்ணுவது! கல்யாணியை இப்போது உனக்குக் கட்டிக் கொடுத்தால், நம்மால் ஒரு பொன் சரடாவது பண்ணிப் போட முடியுமா? பணக்காரன் பேச்சு பந்தியிலே, ஏழைப் பேச்சு சந்தியிலேதான்..."

இப்படிப் பேசிக் கொண்டே அபிராமி ஊஞ்சலின் அருகில் வந்துவிட்டாள். முத்தையனால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. சட்டென்று எழுந்திருந்து அபிராமியின் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய்ச் சமையலறைக்குள் தள்ளினான். கதவைத் தடாலென்று சாத்தி நாதாங்கியைப் போட்டு விட்டுத் திரும்பினான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 9:56 am

3.பாழடைந்த கோவில்




பூங்குளம் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள கிராமம். ஊருக்கு வடக்கே போகும் குறுகலான வண்டிப் பாதை வழியாகக் கொஞ்ச தூரம் போனோமானால் ராஜன் வாய்க்கால் எதிர்ப்படும். சாகுபடி காலத்தில் இந்த வாய்க்காலில் ஒரு ஆள் மட்டத்திற்கு மேல் ஜலம் அதிக விரைவாகப் போய்க்கொண்டிருக்கும். மூங்கில் பாலத்தின் வழியாக ராஜன் வாய்க்காலைத் தாண்டி அப்பால் சென்றால், கொள்ளிடத்தின் லயன் கரையை அடையலாம். லயன் கரையிலிருந்து வடக்கே பார்த்தால், வெகு தூரத்துக்கு நாலா பக்கமும் அடர்ந்த காடுகள் தென்படும். தண்ணீர்த் துறைக்குப் போக ஒரு குறுகலான ஒற்றயடைப்பாதை மட்டுந்தான். இந்தக் காட்டைப் பிளந்து கொண்டு போகின்றது. நீரோட்டத்துக்கு அருகே போகப் போக, மரம் செடி கொடிகளின் நெருக்கம் குறைந்து வந்து நீர்க்கரையில் ஒரே நாணல் காடாயிருப்பதைக் காண்போம்.

அந்தப் பிரதேசத்தில் லயன் கரைக்கும் நதியில் நீரோடும் இடத்துக்கும் வெகு தூரம் இருக்கிறது. சில இடங்களில் இரண்டு பர்லாங்கு தூரம் கூட இருக்கும். கிழக்கேயும் மேற்கேயும் பல மைல் தூரத்துக்கு அடர்த்தியான காடுதான். பல்வேறு காட்டு மரங்களும் முட்செடிகளும் கொடிகளும் செறிந்து வளர்ந்து, மனிதர்கள் அந்தக் காட்டிற்குள் நுழைவது அசாத்தியமென்றே தோன்றும். ஆனால் கொள்ளிடக் கரையிலே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அந்தக் காட்டுக்குள் பிரவேசிப்பது மிகவும் சகஜமான காரியமாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதோ அந்த இளநங்கை அவ்வளவு லாகவமாக அந்தச் செடி கொடிகளை விலக்கிக் கொண்டு செல்கிறாளே, அது எப்படி சாத்தியம்?

ஆமாம்! நேற்று முத்தையன் வீதி வழியே வந்த போது, பந்தல் போட்ட வீட்டின் காமரா உள் ஜன்னலுக்குப் பின்னால் கண்ணுங் கண்ணீருமாய் நின்றாளே, அந்தப் பெண்தான் இவள். முன் அத்தியாயத்தில் நடந்த சம்பாஷணையைக் கொண்டு இவள் தான் கல்யாணி என்று நாம் ஊகிக்கலாம். அவளுக்குப் பதினேழு, பதினெட்டுப் பிராயம் இருக்கும். அவளுடைய முகத்திலே எழிலுடன் கம்பீரமும் கலந்திருந்தது. அவள் நடையிலே அழகுடன் மிடுக்கும் காணப்பட்டது. நீண்டு பரந்த அவள் கண்களிலோ, தண்மையுடன் தணலின் ஜுவாலையும் வீசிற்று.

அடர்ந்த காட்டிற்குள் அலட்சியமாய் நுழைந்து செல்லும் கல்யாணியைப் பின் தொடர்ந்து நாமும் போகலாம். அதோ, அது என்ன யாரோ பாடுங் குரல் கேட்கிறதே! அந்தக் குரலில் தான் எவ்வளவு தீனம்; எவ்வளவு துயரம்? பாட்டின் ராகமும் விஷயமும் அந்தச் சோகமான குரலுக்குப் பொருத்தமாகவே யிருந்தன.

"உண்டானபோது கோடி உறன் முறையோர்கள் வந்து
கொண்டாடி தொண்டாகிக் கொள்வார் தனங் குறைந்தால்
கண்டாலும் பேசாரிந்தக் கை தவமான பொல்லாச்
சண்டாள உலகத்தில் சத்குருக்களைத் தேட
என்றைக்குச் சிவகிருபை வருமோ - ஏழை
என் மனச்சஞ்சலம் அறுமோ (என்றைக்கு)

பாட்டின் குரல் வந்த வழியே கல்யாணி சென்றாள். கொஞ்ச தூரம் போனதும் காட்டிலே கொஞ்சம் இடைவெளி தென்பட்டது. என்ன ஆச்சரியம்! இங்கே ஒரு பாழடைந்த கோவில் அல்லவா இருக்கிறது? இந்த மாதிரி கோவில் ஒன்று இங்கே இருப்பது அதற்கு சமீபத்தில் வரும் வரைக்கும் தெரியவேயில்லையே?

ஒரு காலத்தில் அது ஏதோ கிராம தேவதையின் ஆலயமாயிருந்திருக்க வேண்டும். இடிந்துபோன சுவர்களில் செடிகள் முளைத்து மண்டிக் கிடந்தன. ஒரு பக்கத்தில் வேண்டுதல் செய்து கொண்டவர்கள் கொண்டு வைத்த மண் குதிரைகளும், யானைகளும் உடைந்து கிடந்தன. இன்னொரு பக்கம் பெரிய கறையான் புற்றுக்கள் காணப்பட்டன. ஏதோ ஒரு சமயம் கொள்ளிடத்தில் பெரு வெள்ளம் வந்தபோது அந்தக் கோயில் இடிந்து போக, அதற்கு அப்புறம் அதை ஒருவரும் கவனிக்காமல் நாலாபுறமும் காடுமண்டி அது அங்கிருப்பதே தெரியாமல் போயிருக்க வேண்டும்.

இந்தக் கோவிலின் வாசலில் ஒரு சிறு திண்ணை பாதி இடிந்து கிடந்தது. அதன் பக்கத்தில் ஒரு பெரிய நாவல் மரம் கிளம்பி நிழல் தந்து கொண்டிருந்தது. அந்த இடிந்த திண்ணையின் மேல் உட்கார்ந்து மேற் சொன்னவாறு பாடிக் கொண்டிருந்தான் முத்தையன்.

கல்யாணி அடிமேல் அடிவைத்து ஓசை கேட்காதபடி நடந்து வந்தாள். முத்தையனுக்குப் பின்புறமாய் வந்து நின்று அவன் தலையில் கட்டியிருந்த முண்டாசின் பின் குச்சைப் பிடித்து இழுத்து விட்டு நாவல் மரத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டாள். முத்தையன் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தன்னுடைய உதடுகளை மடித்துக் கொண்டு ஏதோ பிடிவாதமான தீர்மானத்துக்கு வருபவன் போல் காணப்பட்டான். அடுத்த தடவை அவள் அம்மாதிரி முண்டாசைப் பிடித்து இழுத்த போது, முத்தையன் சட்டென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

கல்யாணி கலகலவென்று சிரித்தாள். ஆனால் முன்புறமாக வந்து, முத்தையனுடைய முகத்தைப் பார்த்ததும், அவளுடைய சிரிப்பு அப்படியே பாதியில் நின்று போயிற்று.

"கல்யாணி! இது என்ன பைத்தியம்? இங்கு ஏன் வந்தாய்?" என்றான் முத்தையன்.

கல்யாணிக்குத் துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது.

"ஏன் வந்தேனென்றா கேட்கிறாய்! வேறு எதற்காக வருவேன்? உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன்!" என்றாள்.

"என்னைத் தேடிக்கொண்டா? ஆச்சரியமாயிருக்கிறதே! எதற்காக இந்த ஏழையைத் தேடி வரவேணும்? தாங்கள் இனிமேல் ரொம்பப் பெரிய மனுஷாள் அல்லவா? எஜமானியின் வீட்டு வாசலில் என்னைப் போல் நூறு பேர் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்களே! - அடடா? இத்தனை நேரம் நான் பார்க்கவில்லையே? கழுத்திலே காசுமாலை; காதிலே வைரக்கம்மல், என்ன ஜொலிப்பு! என்ன ஜொலிப்பு! கண் கூசுகிறதே..."

கல்யாணி அந்தத் திண்ணையின் மேல் உட்கார்ந்து தீனமான குரலில், "அத்தான்!..." என்றாள்.

"அத்தானா? - அசட்டு அம்மாஞ்சி என்று வேண்டுமானால் சொல்!" என்றான் முத்தையன்.

"என் மனது ஏற்கனவே புண்ணாயிருக்கிறது. அதிலே நீ முள்ளை எடுத்துக் குத்துவதுபோல் பேசுகிறாய்" என்று கூறியபோது கல்யாணியின் கண்களில் நீர் ததும்பிற்று.

முத்தையன் பதில் ஒன்றும் கூறவில்லை. தரையைப் பார்த்துக் கொண்டு மௌனமாயிருந்தாள்.

கல்யாணி தொடர்ந்து கூறினாள்: "என்மேல் குற்றம் இருப்பதுபோல் நீ பேசுகிறாய். நான் செய்த குற்றம் என்ன? உன்னை நானாகத் தேடிக் கொண்டு வந்தது இது தானா முதல் தடவை? இந்த ஊரை விட்டு எங்கேயாவது கண்காணாத தேசத்துக்கு இரண்டு பேரும் போய்விடுவோமென்று எத்தனை நாளாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? அதற்கு வேண்டிய தைரியம் உனக்கு இல்லாவிட்டால், அதற்கு நானா பொறுப்பாளி? இப்போதுதான் என்ன...? நீ உன் மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். உன்னைவிடப் பெரியது எனக்கு இந்த உலகத்தில் ஒன்றுமில்லை. நீ கிளம்பத் தயாரா, சொல்லு! ஏன் பேசாமலிருக்கிறாய்?"

முத்தையன் கடுகடுப்பான குரலில், "ரொம்ப பேஷான யோசனைதான். நாம் இரண்டு பேரும் போய் விடலாம். ஆனால் அபிராமியை என்ன பண்ணுவது? அவளைக் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப் போய் விடுவோமா?" என்றான்.

"கிணற்றில் பிடித்துத் தள்ளுவானேன்? காலம் வரும் போது அவளை யாராவது வந்து கட்டிக் கொண்டு போகிறான். அவரவர்கள் தலையெழுத்துப் போல் நடக்கிறது. ஒருவருக்காக இன்னொருவர் ஏன் கஷ்டப்படவேண்டும்!"

"ஆமாம்! ஒருவருக்காக இன்னொருவர் கஷ்டப்படத்தான் வேண்டும். அம்மா செத்துப் போகும்போது, அபிராமிக்குத் தாயும் தகப்பனும் இல்லாத குறை தெரியாதபடி காப்பாற்ற வேணுமென்று சொன்னாள். அவ்விதமே வாக்களித்தேன். அந்த வாக்கை மறக்கமாட்டேன். அபிராமியை விட்டுவிட்டு என்னால் வரமுடியாது. நீ மகராஜியாய்க் கிழவனைக் கல்யாணம் செய்து கொண்டு சௌக்கியமாயிரு!"

கல்யாணியின் கண்களில் தீப்பொறி பறந்தது. அவள் எழுந்து நின்று, "இந்த வார்த்தை சத்தியந்தானா?" என்று கேட்டாள்.

"சத்தியந்தான்!"

"அப்படியே ஆகட்டும்; நான் கிழவனையே கல்யாணம் செய்து கொள்கிறேன். உன்னைப் போன்ற கோழையைக் காட்டிலும் தலை நரைத்த கிழவன் எவ்வளவோ மேல்" என்று சொல்லிவிட்டுக் கல்யாணி விரைந்து நடந்தாள். அளவற்ற ஆத்திரத்தாலும் துக்கத்தினாலும் அவளுடைய கண்களிலிருந்து ஜலம் பெருகி வழிந்தது. அதைக் காட்டிக் கொள்ள விரும்பாததினால்தானோ என்னமோ, அவள் திரும்பியே பார்க்கவில்லை.

முத்தையன் கல்யாணியைப் பின்பற்றி ஐந்தாறு அடி சென்றான். மறுபடி பல்லைக் கடித்துக் கொண்டு திரும்பி வந்து அந்த இடிந்த கோவிலின் திண்ணையில் தொப்பென்று உட்கார்ந்தான்.

மனிதர்களுடைய இதயந்தான் என்ன ஆச்சரியமான இயல்பு உடையது? யாரிடத்திலே நம்முடைய அன்புக்குக் கங்கு கரையில்லையோ, அவர் மேலேதான் நமக்குக் கோபமும் அளவு கடந்து பொங்குகிறது. யாருடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இதயம் கனிந்து உருகுகிறதோ, அவர் எதிரே வரும்போது வாயானது கடும் மொழிகளைச் சொல்கிறது. யாரைப் பார்க்க வேண்டும், பார்க்கவேண்டும் என்று உடம்பின் ஒவ்வொரு நரம்பும் துடித்துக் கொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்டவர் வந்த உடனே "ஏன் வந்தாய்?" என்று கேட்பது போல் நடந்து கொள்ளச் சொல்கின்றது. யாருடைய பிரிவினால் உயிரே பிரிந்து போவது போன்ற வேதனை உண்டாகிறதோ அத்தகையவரை உடனே போகச் செய்யும்படியான வார்த்தைகளையும் சொல்லத் தூண்டுகிறது! மனித இருதயம் உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான இயல்பு உடையதுதான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:06 am

4.விம்மலின் எதிரொலி


முத்தையன் அபிராமியுடனும் துரதிர்ஷ்டத்துடனும் கூடப்பிறந்தவன். அவனுடைய தகப்பனாருக்குப் பூர்வீகம் பூங்குளந்தான். ஆனால் அவர் இங்கிலீஷ் படித்து உத்தியோக வாழ்க்கையில் ஈடுபட்டவர். ரெவினியூ இலாகாவில் தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாக ஆரம்பித்து, படிப்படியாக மேல் ஏறி, டிபுடி கலெக்டர் ஆபீஸில் தலைமைக் குமாஸ்தாவாக வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம், யாரும் எதிர்பாராதபடி அவருக்கு மரணம் சம்பவித்தது. அப்போது முத்தையன் ஹைஸ்கூலில் மூன்றாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்தான். அபிராமி ஏழு வயதுக் குழந்தை. அவர்களுடைய தாயார் தன் கணவன் இறந்ததும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பூங்குளத்துக்கு வந்து சேர்ந்தாள்.

பூங்குளத்தில் அவர்களுக்குப் பிதிரார்ஜிதமாகப் பத்து ஏக்கரா நன்செய் நிலம் இருந்தது. ஆகையால் இந்தச் சின்னக் குடும்பம் சாப்பாட்டுக்குத் துணிக்குக் கஷ்டப்படாமல் சௌக்கியமாக வாழ்க்கை நடத்தியிருக்கலாம். ஆனால் முத்தையனுடன் கூடப் பிறந்த துரதிர்ஷ்டம் இங்கேயும் அவர்களை விடவில்லை. அவர்கள் ஊருக்கு வந்த மறு வருஷம் கொள்ளிடத்தில் பெருவெள்ளம் வந்து உடைப்பு எடுத்தது. அந்த உடைப்பினால் பூங்குளத்தின் சுற்றுவட்டத்தில் பலருடைய நிலங்களில் வண்டல் தங்கி அவை மிகவும் செழிப்பாகி விட்டன. வேறு சிலருடைய நிலங்களில் மணல் அடித்து அவை சாகுபடிக்கு லாயக்கற்றுப் போயின. முத்தையனுடைய நிலங்களுக்குப் பின் சொன்ன கதி தான் நேர்ந்தது. இரண்டு போகம் சாகுபடியாகி, மாவுக்கு இருபது கலம் கண்டு முதல் ஆகிக் கொண்டிருந்த முதல் தரமான அவனுடைய நிலம் முழுவதும் மண்மேடிட்டுப் போயிற்று!

ஆகவே, அந்தக் குடும்பம் நிராதரவான நிலைமையடைந்தது. ஏற்கனவே முத்தையனுடைய தகப்பனார் உத்தியோகம் பார்த்த காலத்தில் , பூங்குளத்தில் இருந்த அவனுடைய தாயாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் அவர் மேல் அசூயை இருந்தது. முத்தையன் கொஞ்சம் துடுக்கான சுபாவம் உள்ளவனாயிருந்தபடியால், அவன் பேரிலும் அந்த ஊர்க்காரர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. எனவே, அவனுக்குக் கஷ்டம் வந்த காலத்தில் யாரும் அவன் மேல் அனுதாபப்படவில்லை. "அவனுடைய திமிருக்கு நன்றாய் வேண்டும்" என்று தான் நினைத்தார்கள். மேலும் கிராமாந்தரங்களில் யாருக்கு யார் ஒத்தாசை செய்ய முடியும்? அப்போதோ நெல் விலை மளமளவென்று இறங்கிக் கொண்டிருந்த காலம். ஆகவே, அவரவர்கள் காலட்சேபம் நடத்துவதே கஷ்டமாயிருந்த போது மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்வது?

சுமார் இரண்டு வருஷ காலம் மணலடித்த பூமியைக் கட்டிக் கொண்டு மாரடித்தான் முத்தையன். அது ஒன்றும் பிரயோசனப்படாமல் போகவே, மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்துப் பாஸ் பண்ணி உத்தியோகம் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. அவனுடைய தாயார் வைத்திருந்த இரண்டொரு நகைகளுக்கு இதனால் சனியன் பிடித்தது. அவற்றை விற்று வந்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் ஹைஸ்கூலில் பழையபடி மூன்றாவது பாரத்தில் சேர்ந்தான். வருஷக் கடைசியில் அவனுக்குப் பரீட்சை தேறவில்லை.

இதில் வியப்பும் கிடையாது. வாழ்க்கையில் அடிபட்டு முதிர்ச்சியடைந்த அவனுடைய மனது, கேவலம் பள்ளிக்கூடத்துப் பாடங்களில் கவனம் செலுத்த மறுத்துவிட்டது!

அவ்வருஷம் பள்ளிக்கூடத்தில் படித்த போது, பெரிய மனுஷர்களின் பிள்ளைகள் சிலருடன் அவனுக்குச் சிநேகம் ஆகியிருந்தது. இதன் பலனாக, அவன் மோட்டார் வண்டி விடுவதற்குக் கற்றுக் கொண்டிருந்தான். பரீட்சை தேறாமற் போகவே அவன் படிப்பை விட்டுவிட்டு ஒரு பெரிய மிராசுதாரரிடம் மோட்டார் டிரைவராக அமர்ந்தான். அந்தக் காலத்தில் மிராசுதாரர்கள் வாங்கிய மோட்டார்களை எப்படிக் கையை விட்டுக் கழிப்பது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, அவன் டிரைவராகப் போய் ஆறு மாதத்துக்குமேல் யாரும் வண்டி வைத்துக் கொண்டிருக்கவில்லை. கடைசியாக அவன் டிரைவராக இருந்த பெரிய மனுஷரிடம் பலத்த சண்டை போட்டுக் கொண்டு "இனிமேல் ஒருவரிடமும் சம்பளத்துக்கு டிரைவராயிருப்பதில்லை" என்று சபதம் செய்துகொண்டு, கிராமத்துக்குத் திரும்பினான்.

ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்த துன்பங்களால் மனம் இடிந்து போயிருந்த முத்தையனுடைய தாயார், அவன் ஊருக்குத் திரும்பி வந்த சில நாளைக்கெல்லாம் பிள்ளையையும் பெண்ணையும் உலகில் தன்னந்தனியாக விட்டுவிட்டுக் காலஞ் சென்றாள்.


*****


இரண்டாவது தடவை முத்தையன் ஹைஸ்கூலில் சேர்ந்து படிக்கப் போனான் என்று சொன்னோமல்லவா? அதற்கு அவனுக்குத் தூண்டுகோலாயிருந்த மற்றொரு காரணமும் உண்டு, அந்தக் காரணம் கல்யாணிதான்.

கொள்ளிடத்தில் உடைப்பு எடுத்த வருஷத்தில் அவன் ஒரு நாள் வண்டி மாட்டுக்கு நல்ல தார்க்குச்சி சம்பாதிப்பதற்காகப் படுகைக் காட்டில் புகுந்து போய்க் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று, "ஐயோ! ஐயோ!" என்று ஒரு சிறு பெண்ணின் குரல் கேட்கவே, அந்தத் திசையை நோக்கி விரைந்து ஓடினான். முன் அத்தியாயத்தில் நாம் பார்த்த பாழடைந்த கோவிலை அடைந்தான். அங்கே ஆச்சரியத்தையும் திகிலையும் ஒருங்கேயளித்த ஒரு காட்சியைக் கண்டான். நாவல் மரத்தின் கிளைகளில் ஒன்றில் கல்யாணி உட்கார்ந்திருந்தாள். அந்தக் கிளைக்கு நேர் கீழே பாழும் கோவில் மண்டபத்தின் மீது ஒரு பெரிய குரங்கு உட்கார்ந்திருந்தது. அது கல்யாணி இருந்த கிளையின் மேல் தாவுவதற்கு யத்தனம் செய்து கொண்டிருந்தது.

முத்தையன் ஒரு பெரிய அதட்டல் போட்டான். குரங்கு அவனைப் பார்த்து 'உர்' என்று பல்லைக் காட்டி உறுமிவிட்டுக் காட்டில் ஓடி மறைந்தது.

மரக் கிளையின் மேலிருந்த கல்யாணியைப் பார்த்து மிகவும் கடுமையான குரலில் "இங்கே இறங்கி வா" என்றான் முத்தையன்.

கல்யாணி கலகலவென்று ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு, சாவதானமாய், நாவல் பழம் பறிக்கத் தொடங்கினாள். அப்போது அவளுக்குப் பதின்மூன்று, பதினாலு வயது தான் இருக்கும்.

முத்தையன், கோபத்துடன், ரொம்பவும் அதட்டி மிரட்டிய பிறகுதான் கல்யாணி இறங்கி வந்தாள். அவன் அவளுடைய மென்மையான காதைப் பிடித்து இலேசாக நிமிண்டிக் கொண்டே, "இனிமேல் இங்கெல்லாம் வராதே! வராதே!" என்றான்.

"இந்தக் காடு என்ன, உங்கள் பாட்டனார் சொத்தா? இங்கே வராதே என்று சொல்ல நீ யார்?" என்றால் கல்யாணி.

"அதெல்லாம் சரிப்படாது; இனிமேல் இங்கெல்லாம் வருவதில்லையென்று சொன்னால் தான் விடுவேன்" என்று முத்தையன் கூறி, காதை நிமிண்டிக் கொண்டேயிருந்தான்.

"அடாடா! ஒரு குரங்கினிடமிருந்து தப்பி, இன்னொரு குரங்கினிடம் அல்லவா அகப்பட்டுக் கொண்டேன்?" என்றாள் கல்யாணி.

அவ்வளவுதான்; முத்தையன் குபீரென்று சிரித்து விட்டான். கல்யாணியும் சேர்ந்து சிரித்தாள். இரண்டு பேருடைய சிரிப்பும் சேர்ந்து அந்த நிசப்தமான காட்டில் எதிரொலி செய்தன!

இதற்கு முன்னால் முத்தையன் கல்யாணியைப் பார்த்தது உண்டு; பேசியதும் உண்டு. ஆனால் இன்று அவளுடைய தோற்றத்திலும், பேச்சிலும் அவன் என்னமோ புதுமையைக் கண்டான். அவனுடைய இருதயத்தைப் பறிகொடுத்தான்.

நாளுக்கு நாள் அவர்களுடைய சிநேகம் வளர்ந்து வந்தது. கல்யாணியைக் கல்யாணம் செய்து கொண்டாலன்றி வாழ்க்கையில் தனக்கு நிம்மதியிராது என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அவள் சொத்துக்காரி; தானோ ஒன்றுமில்லாதவன். இதையெல்லாம் உத்தேசித்து அவளைக் கல்யாணம் செய்து கொள்ளத் தகுதி பெறும் பொருட்டே அவன் மறுபடியும் படிக்கச் சென்றது.

நன்றாய் படித்துப் பெரிய உத்தியோகத்துக்கு வந்து விட்டால் கல்யாணியைத் தனக்குக் கொடுக்க மறுக்க மாட்டார்களல்லவா! ஆனால் அதிர்ஷ்டம் அவன் பக்கத்தில் இருக்கவில்லை. ஐயோ! அந்த நாசமாய்ப் போன இங்கிலீஷ் பரீட்சையில் நாலு மார்க்கு மட்டும் குறைந்து போகாமலிருந்தால்?

கல்யாணி கோபமாய்த் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்ற பிறகு, திரும்பி வந்து அந்தக் கோயில் திண்ணையில் உட்கார்ந்த முத்தையனுக்கு அதே இடத்தில் முதன் முதலில் தான் கல்யாணியைச் சந்தித்த போது நடந்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. முகத்தைக் கையால் மறைத்துக் கொண்டு விம்மி அழுதான். அந்த விம்மலுக்கு எதிரொலியைப் போல், காட்டிலே போய்க் கொண்டிருந்த கல்யாணியின் தேம்பும் குரலும் கேட்டது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:09 am

5.பல்லி சொல்கிறது!


அபிராமியின் குழந்தை உள்ளமாகிய மகாராஜ்யத்தில் முத்தையன் ஏக சக்ராதிபதியாக அரசு புரிந்து வந்தான்.

பால் மனம் மாறாத ஒரு பெண் குழந்தை, தன்னுடைய தாயார், தகப்பனார், பாட்டன், பாட்டி, மாமன், மாமி, சித்தி, அத்தை முதலிய உறவினர் எல்லாரிடத்தும் செலுத்துவதற்குரிய அவ்வளவு நேசத்தையும் அவள் தன்னுடைய அண்ணன் மீதே செலுத்தி வந்தாள்.

தட்டுத் தடுமாறி நடக்கும் சின்னஞ் சிறு வயதிலே அண்ணன் பள்ளிக்கூடம் போகும்போது இவள் தானும் போவேனென்று அழுவாள். அவன் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும்போது, இவள் தான் வாசல் கதவைத் திறக்க வேணும். வேறு யாராவது திறந்து விட்டால் அன்று வீடு ரகளைப்பட்டுப் போகும்.

வீட்டில் தனக்குப் பட்சணம் கொடுத்தால், அதைத் தின்ன மாட்டாள். பத்திரமாய் வைத்திருந்து, அண்ணன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பிறகு, அவனுக்குக் கொடுத்து விட்டுத்தான் தின்பாள். இராத்திரியில் அவன் கையால் பால் கொடுத்தால் தான் குடிப்பாள்.

அவன் வைதாலும் அடித்தாலுங்கூட அவளுக்குச் சந்தோஷமே. அவள் பொறுக்காத விஷயம் ஒன்றே ஒன்று தான். முத்தையன் தன்னுடன் 'காய்' விட்டு விட்டால் அதாவது பேசமாட்டேனென்று சொன்னால் அதை மட்டும் அவளால் சகிக்க முடியாது! தாங்க முடியாத துக்கம் வந்து விடும்; அழுது கண் சிவந்து போய்விடும்.

ஏற்கனவே இவ்வாறு இரத்த பாசத்தினால் பிணைக்கப்பட்ட இந்தக் குழந்தைகள், உலகத்திலே அநாதைகளாக விடப்பட்டதனால், அவர்களுடைய பரஸ்பர வாத்ஸல்யம் ஆயிரம் மடங்கு அதிகமாயிருந்தது.


*****

இப்படியாகத் தன்னுடைய குழந்தை இருதயத்தின் அன்பு முழுவதையும் உரிமை கொண்ட அண்ணன் இப்போது கொஞ்ச நாளாக ஏதோ ஒரு மாதிரியாயிருந்து வருவதை அபிராமி உணர்ந்தாள். அவனுக்கும் தனக்கும் இடையில் ஏதோ ஒரு விதமான மானஸீகத் தடை ஏற்பட்டு வருவதாக அவளுக்குத் தோன்றிற்று.

அடிக்கடி முத்தையன் சிந்தனையில் ஆழ்ந்துவிடுவான். அபிராமி சொல்வது அவனுடைய காதில் விழாது. "என்ன அண்ணா யோசிக்கிறாய்?" என்று கேட்டால், "உனக்கு ஒன்றும் இல்லை போ!" என்பான். இவள் ஏதாவது விளையாட்டாய்ப் பேசினால், "என்ன விளையாட்டு? சும்மா இரு!" என்பான். சிரித்தால், கூடச் சிரிக்க மாட்டான்.

அபிராமிக்கு உலகம் கொஞ்சம் தெரிய ஆரம்பித்திருந்த சமயம். தங்களுடைய குடும்ப நிலை சரியில்லை, அண்ணனுக்கு உத்தியோகம் கிடைக்கவில்லை என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அதனாலெல்லாம் தன்னிடம் அவன் இப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன?

இளம் வயதிலே அவள் காதில் விழுந்த சில வார்த்தைகள் அவளுக்கு ஞாபகம் வந்தன. "இந்தத் துக்கிரி அபிராமி பிறந்தது முதல் குடும்பத்துக்குக் கஷ்ட காலந்தான்." ஒரு வேளை இது உண்மையாயிருக்குமோ? அண்ணன் கூட அப்படி நினைக்கிறானோ?

புத்தியிலும் யுக்தியிலும், சாமர்த்தியத்திலும் தன்னுடைய அண்ணனுக்கு நிகர் இந்த உலகத்தில் எங்குமே கிடையாதென்பது அபிராமியின் எண்ணம். ஆகவே, அவனுக்கு உத்தியோகம் கிடைக்காததற்குக் காரணம் தன்னுடைய துரதிர்ஷ்டம்தான் என்ற தீர்மானத்துக்கே அவள் வந்து விட்டாள்.

ஒரு நாள், இதைப்பற்றி முத்தையனிடம் பேசத் தொடங்கினாள். ஐயோ! அதனுடைய விபரீதமான விளைவை இப்போது நினைத்தாலும், அபிராமிக்கு உடம்பு நடுங்கிற்று. "அண்ணா! முன்னேயே எல்லாரும் சொல்லியிருக்கா, நான் பிறந்ததனாலேதான் உனக்கு எல்லாக் கஷ்டமும்? நான் தானே உன் துரதிர்ஷ்டத்துக் கெல்லாம் காரணம்?..." என்று அவள் சொல்ல ஆரம்பிக்கவும், முத்தையன் தன் சாவிக்கொத்தில் தொங்கிய பேனாக் கத்தியைச் சட்டென்று பிரித்துக் கொண்டு "அபிராமி! இதோ பார்! இந்த மாதிரி வார்த்தை இன்னும் ஒரு தடவை சொன்னாயோ, உன்னையும் கொன்று விட்டு நானும் செத்துப் போவேன்!" என்றான்.

அதற்குப் பிறகு அபிராமி அந்தப் பேச்சை எடுப்பதில்லை. ஆனாலும் அண்ணன் 'ஒரு மாதிரி' யாயிருப்பது மட்டும் அவளுக்கு அளவிலாத மன வேதனையை யளித்துக் கொண்டிருந்தது. முக்கியமாக இப்போது சில நாளாய் அவனுடன் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச அவள் துடிதுடித்துக் கொண்டிருந்தாள். கல்யாணியை முறைப் பிரகாரம் முத்தையனுக்குக் கட்டிக் கொடுத்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆகவே, கல்யாணிக்கு வேறு இடத்தில் கல்யாணம் நிச்சயமான செய்தி அபிராமிக்கு அளவில்லாத ஆத்திரத்தை மூட்டிற்று. அதைப் பற்றி முத்தையனிடம் பேச வேண்டுமென்றும், கல்யாணியையும் கல்யாணியின் தாயார் தகப்பனாரையும் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவனையும் வாயார, மனமாரத் திட்டவேண்டுமென்றும் அவளுக்கு ஆத்திரமாயிருந்தது. ஆனால், முத்தையன் தான் இப்போதெல்லாம் அருகில் நெருங்கினாலே எரிந்து விழுகிறானே?


*****

முன் அத்தியாயத்தில் சொன்ன சம்பவம் நடந்து இரண்டு நாள் முத்தையன் வீட்டிற்குள்ளேயே உடம்பு சரிப்படவில்லையென்று படுத்துக் கொண்டிருந்தான். மூன்றால் நாள் காலை எழுந்து வெளியே போய், வெகு நேரம் ஆறு, குளம், வயல் எல்லாம் சுற்றிவிட்டு வீடு திரும்பினான்.

அவன் வீட்டுக்குள் நுழைந்ததும், அபிராமி அவன் எதிரில் வந்து, "அண்ணா! என்னுடைய கையில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறேன்? சொல், பார்க்கலாம்" என்றாள். அவளுடைய கைகளை முதுகுக்குப் பின்புறத்தில் கோத்துக் கொண்டிருந்தாள்.

"சொன்னால் எனக்கு என்ன தருகிறாய்?" என்றான் முத்தையன்.

"சொன்னால் என் கையில் உள்ளதை உனக்குத் தந்து விடுகிறேன். சொல்லாவிட்டால், நீ எனக்கு ஒரு கிராம போன் வாங்கித் தரவேணும்; சரிதானா?"

"ரொம்ப சரி!"

"அப்படியானால் சொல்லு, என் கையிலே என்ன இருக்கு?"

"நிச்சயமாகச் சொல்லி விடுவேன்."

"சொல்லிவிடேன், பார்க்கலாம்."

"உன் கையிலே விரல் இருக்கு! - கொண்டா, விரலைத் தனியாய் எடுத்துக் கொடு."

அபிராமி, கொஞ்சுகின்ற குரலில், "போ அண்ணா! உனக்கு எப்போதும் விளையாட்டுத்தான். எனக்கு ஒரு கிராமபோன் பெட்டி வாங்கித் தரேன், வாங்கித் தரேன் என்று எத்தனை நாளாய் ஏமாற்றிக் கொண்டு வருகிறாய்?" என்று சொல்லி, தன் கையிலிருந்த இரண்டு கடிதங்களையும் அவன் கையில் வைத்துவிட்டுச் சமையலறைக்குள் சென்றாள்.

முத்தையன் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து கடிதங்களில் ஒன்றைப் பிரித்தான். அதன் உறையில் தபால் முத்திரை எதுவும் போட்டிருக்கவில்லை. அதற்குள் ஒரு கல்யாணக் கடிதம் இருந்தது. அதைப் பார்த்ததும் முத்தையனின் முகத்தில் கோபம் பொங்கிற்று. அந்தக் கடிதத்தைத் துண்டு துண்டாய் ஆயிரத்தெட்டு சுக்கலாகக் கிழித்துப் போட்டான். பிறகு, இன்னொரு கடிதத்தைப் பிரித்துப் படித்தான். அதைப் படித்த போது அவனுடைய முகம் மலர்ந்தது.

இச்சமயத்தில் வாசற் புறத்தில் மோட்டார் வண்டிகளின் குழல் ஊதும் சப்தமும், இன்னும் கட்டை வண்டிகள் பூட்டப்படும் சப்தமும் ஆரவாரமாய்க் கேட்கவே, அபிராமி உள்ளேயிருந்து வந்தாள். கூடத்தில் சற்று நின்று, முத்தையன் கல்யாணக் கடிதத்தைச் சுக்கல் சுக்கலாய்க் கிழித்துப் போட்டிருப்பதை வியப்புடன் கவனித்தாள். தலையை ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு வாசற்புறம் சென்றாள். ஒரு நிமிஷத்துக்கெல்லாம், "அண்ணா! இங்கே ஓடி வாயேன்! வந்து பாரேன்! கல்யாணப் பெண்ணுக்கு மோட்டார் வண்டி வந்திருக்கிறது. எல்லாரும் கல்யாணத்துக்குக் கிளம்புகிறார்கள் போலிருக்கிறது. வாயேன் வந்து பாரேன்!" என்று கத்தினாள்.

அதைக் கேட்ட முத்தையன் பரபரப்புடன் எழுந்து போய், வாசற்படிக்கு அப்பால் நின்ற அபிராமியைப் பிடித்து இழுத்து உள்ளே தள்ளினான். வாசல் கதவை படீரென்று தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவளைத் தரதர வென்று இழுத்துக் கொண்டு வந்து ஊஞ்சலில் உட்கார வைத்தான். அபிராமி கண்ணைக் கசக்கிக் கொண்டு அழத் தொடங்கினாள்.

"சீ! அசடே! என்னத்திற்காக அழுகிறாய்?" என்றான் முத்தையன்.

"நீதான் வெறுமனே வெறுமனே என்னிடம் கோபித்துக் கொள்கிறாயே? நான் என்ன தப்பு செய்து விட்டேன்..."

"அடடே, இதற்காகத்தானா? உன் பேரில் எனக்கு ஒரு கோபமும் இல்லை, அபிராமி! நீ வாசலில் போய் நின்றால், அந்தத் தரித்திரங்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளும். அந்தப் பீடைகளின் முகத்தில் நீ விழிக்க வேண்டாமென்று தான் அழைத்து வந்தேன்."


*****

அபிராமி கண்ணைத் துடைத்துக் கொண்டு சிரித்த முகத்துடன், "இல்லை அண்ணா, நம்ம கல்யாணி அக்காவுக்குத்தானே கல்யாணம்? பார்த்தால் என்ன என்றுதான்..." என்பதற்குள், முத்தையன் மிகவும் கடுகடுப்புடன் "கல்யாணி, கல்யாணி, கல்யாணி...உனக்கு வேறே பேச்சே கிடையாதா? அது கிடக்கட்டும், அபிராமி! நாம் இந்த ஊரை விட்டே போகப்போகிறோம், தெரியுமா? எனக்கு வேலை கிடைத்து விட்டது!" என்றான்.

"வேலையா? என்ன வேலை, அண்ணா! கலெக்டர் வேலையா?"

"கலெக்டர் வேலைக்குத் திருடப் போகணும். நான் கலெக்டர் வேலை பார்ப்பதாயிருந்தால் அப்பா ஏன் செத்துப் போகிறார்? உன்னை நாளைக்குக் கட்டிக் கொள்ள வருகிறவன் கலெக்டர் வேளை பார்ப்பான். எனக்குக் கணக்குப் பிள்ளை வேலைதான் கிடைத்திருக்கிறது. திருப்பரங்கோயில் மடத்தில். இதோ பார், உடனே புறப்பட்டு வரும்படி கடிதம் வந்திருக்கிறது" என்று சொல்லிக் கடிதத்தை அபிராமியிடம் கொடுத்தான்.

அபிராமி கடிதத்தைப் படித்துவிட்டு, "எந்தத் திருப்பரங்கோயில் அண்ணா? முன்னே அப்பா இருக்கிற போது தெப்ப உற்சவத்துக்குப் போனோமே, அதுதானே? ராட்டினத்திலே ஏறிச் சுத்திவிட்டு, மருக்கொழுந்து மிட்டாய் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தோமே, அந்த ஊர்தானே?" என்றாள்.

"ஆமாம்! அந்த ஊரேதான். இந்தச் சனியன் பிடித்த பூங்குளத்தைவிட்டு நாம் நாளைக்கே கிளம்பிப் போய் விடலாம். இங்கே திரும்பியே வரவேண்டாம்; இந்த ஊர் முகத்திலேயே விழிக்க வேண்டாம்!" என்றான் முத்தையன்.

'டுக் டுக் டுக்' என்று அப்போது சுவரிலிருந்த பல்லி சப்தித்தது.

"பல்லி சொல்கிறது, அண்ணா! நல்ல சகுனம்" என்றாள் அபிராமி.

உலகத்திலுள்ள ஜீவராசிகள் எல்லாம் தனக்காகவே படைக்கப்பட்டன என்று மனிதன் கருதுகிறான். உண்மையில், அந்தப் பல்லி அப்போது முத்தையனுடைய வருங்காலத்தை அறிந்து சொல்லிற்று என்று ஒப்புக்கொள்வோமானால், அது அவனைப் பரிகசித்துச் சிரித்தது என்றல்லவா வைத்துக் கொள்ளுதல் பொருந்தும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:10 am

6.இடிந்த கோட்டை


கொள்ளிடத்து 'லயன் கரைச் சாலை' இருபுறத்திலும் செழிப்பான புளிய மரங்கள் வானை அளாவி வளர்த்து, கிளைகள் ஒன்றோடொன்று அடர்த்தியாய்ப் பின்னி, கொட்டாரப் பந்தல் போட்டதுபோல் நிழல் தந்து கொண்டிருந்தன. சாலையின் ஒரு புறத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வயல்களும் வாய்க்கால்களுமான மருத நிலக் காட்சி. சில வயல்களில் பயிர் நட்டாகிக் கொண்டிருந்தது. வேறு சில வயல்களில் பயிர் வளர்ந்து பசேலென்றிருந்தது. இடையிடையே குளிர்ந்த தென்னந்தோப்புக்கள். ரமணீயமான அந்தச் சாலையில் உச்சி வேளையில் ஒரு கட்டை வண்டி மெதுவாய்ப் போய்க் கொண்டிருந்தது. அதில் குடும்பத்துக்கு அவசியமான தட்டுமுட்டுச் சாமான்கள் ஏற்றப்பட்டிருந்தன. பின்னால் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு அபிராமி உட்கார்ந்திருந்தாள்.

அந்த வேளையில் அந்தக் குளிர்ந்த சாலையில் பிரயாணம் செய்வதே ஒரு ஆனந்தம். அதிலும் குழந்தை உள்ளத்தின் குதூகலத்துக்குக் கேட்க வேண்டுமா? அபிராமி, 'ராதே கிருஷ்ண போல முகஸே' என்ற ஹிந்துஸ்தானிப் பாட்டு மெட்டில், தானே இட்டுக் கட்டிய பாட்டு ஒன்றை வெகு ஜோராகப் பாடிக் கொண்டிருந்தாள்.

"ஆலிலையின் மேல் துயிலுவான்
ஆழிவண்ணனென் அமுதனே
சாலையோரமே திரிவான்
ஜாடையாகவே - வருவான்"

அண்ணன், தங்கை இரண்டு பேரும் குழந்தைகளாய்ப் பட்டணத்தில் வளர்ந்த காலத்தில் அவர்களுக்கு பாட்டிலே பிரேமையும் பயிற்சியும் ஏற்பட்டிருந்தன. பின்னால், கிராமத்துக்கு வந்த பிறகு, அபிராமிக்குச் சங்கீதப் பயிற்சியை விருத்தி செய்து கொள்ளச் சௌகரியம் இல்லையென்றாலும், அங்கே இங்கே கேட்டும், கிராமபோன் பிளேட் மூலமும், ஏதாவது புதுசு புதுசாய்ப் பாட்டுக் கற்றுக் கொண்டுதானிருந்தாள்.

சங்கீதத்தின் சக்திதான் எவ்வளவு அதிசயமானது! குதூகலத்தை அநுபவிப்பதற்கு எப்படிக் கானம் சிறந்த சாதனமாயிருக்கின்றதோ, அது போலவே துக்கத்தில் ஆறுதல் பெறுவதற்கும் சங்கீதமே இணையற்ற சாதனமாயிருக்கிறது.

வண்டிக்குக் கொஞ்ச தூரத்துக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த முத்தையனும் பாடிக்கொண்டு தானிருந்தான்.

"எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
எட்டாத பேராசை கோட்டை கட்டி"

என்னும் வரிகளை அவனுடைய வாய் பாடிக் கொண்டிருந்தது. அவனது உள்ளத்திலோ ஒன்றின் மேலொன்றாக எத்தனை எத்தனையோ எண்ணங்கள் தோன்றிக் குமுறிக் கொண்டிருந்தன. எந்த ஊரிலே உள்ள ஒவ்வொரு மரமும், செடியும், கொடியும் அவனுடைய உற்ற துணைவர்களைப் போல் அவ்வளவு தூரம் அவனுடைய அன்பைக் கவர்ந்திருந்தனவோ, அந்த ஊரினுடைய மண்ணை உதறிவிட்டு அவன் இப்போது போகிறான். அதை நினைத்தபோது அவனுடைய கண்களில் ஜலம் துளித்தது. ஆனால், ஏதோ ஒரு வேலையென்று ஆகி, இனிமேல் பிற்கால வாழ்க்கையைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்கலாம் என்பதை எண்ணியபோது, ஒருவாறு ஆறுதல் ஏற்பட்டது. கட்டிய ஆகாயக் கோட்டை எல்லாம் என்ன ஆயிற்று? பொலபொலவென்று உதிர்ந்து மண்ணோடு மண்ணாக அல்லவா போய்விட்டது? கல்யாணியின் வாழ்க்கையும் இவனுடைய வாழ்க்கையும் திட்டமாகப் பிரிக்கப்பட்டுப் போயின அல்லவா? இனிமேல் அவை ஒன்று சேர்வதைப் பற்றி நினைக்க வேண்டியதே இல்லை!


*****

இந்த எண்ணத்தைச் சகிக்க முடியாதவனாய் முத்தையன் விரைந்து நடந்து வண்டியின் முன்புறமாக வந்து வண்டிக்காரனைப் பார்த்து, "சுப்பராயா! நான் கொஞ்சம் வண்டி ஓட்டுகிறேன்; நீ இறங்கி நடந்து வருகிறாயா?" என்றான். வண்டிக்காரன் இறங்கியதும், தான் மூக்கணையில் உட்கார்ந்து மாடுகளை விரட்டு விரட்டென்று விரட்டினான்.

வண்டிக்காரனுக்கு திகில் உண்டாகி விட்டது. அந்தச் சாலையோ ஆபத்தான சாலை. இரண்டு பக்கமும் கிடுகிடு பள்ளம். ஒரு புறம் நதிப் படுகை; மற்றொருபுறம் வாய்க்கால். மாடு கொஞ்சம் மிரண்டாலும் வண்டிக்கு ஆபத்துதான். இப்படிப்பட்ட நிலையில் இந்த முரட்டுப் பிள்ளையிடம் மூக்கணாங் கயிற்றைக் கொடுத்து விட்டோ மே என்று கதிகலங்கினான் வண்டிக்காரன். "ஐயா! ஐயா! நிறுத்துங்க ஐயா! கொஞ்சம் நிறுத்துங்க பிள்ளை! உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்" என்று கூவிக்கொண்டே லொங்கு லொங்கு என்று ஓடிவந்தான்.

ஆனால் வண்டி இப்படி வேகமாக ஓடியதில் அபிராமியின் குதூகலம் அதிகமாயிற்று. பின்னால் சுப்பராயன் குடல் தெறிக்க ஓடி வருவதைப் பார்த்து அவள் கலகலவென்று சிரித்தாள். அப்படிச் சிரித்துக் கொண்டிருக்கும்போதே அவளுக்கு என்ன ஞாபகம் வந்ததோ, என்னமோ, தெரியாது. திடீரென்று அவளுடைய சிரிப்பு பத்து மடங்கு அதிகமாயிற்று. குலுங்கக் குலுங்க வயிறு வலிக்கும்படி சிரித்தாள். முத்தையன் திரும்பி அவளைப் பார்த்து "ஏ பைத்தியம்! எதற்காகச் சிரிக்கிறாய்?" என்றான்.

"அண்ணா! அண்ணா! சுப்பராயன் தொந்தியைப் பார்த்ததும் எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. அதை நினைத்தால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை" என்றாள் அபிராமி.

"போதும், போதும்! பல்லைச் சுளுக்கிக் கொள்ளப் போகிறது. அது என்னவென்று சொல்லிவிடு" என்றான் முத்தையன்.

"சொல்லிவிடட்டுமா? கல்யாணி அக்காவைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறார், பாரு! அவருக்குப் பெரிய தொந்தி போட்டிருக்குமாம். இன்னிக்குத்தானே கல்யாணம், அண்ணா! இத்தனை நேரம் தாலிகட்டியாகிக் கொண்டிருக்கும்" என்றாள்.

அடுத்த நிமிஷத்தில் சம்பவங்கள் வெகு துரிதமாக நடந்தன.

முத்தையனுடைய மனக்காட்சியிலே ஐம்பது வயதுக் கிழவர் ஒருவர் கல்யாணியின் கழுத்தில் தாலியைக் கட்டிக் கொண்டிருந்தார். அக்காட்சி அவனை வெறி கொள்ளச் செய்தது. கையிலிருந்த தார்க்கழியினால் சுளீர் சுளீர் என்று மாடுகளை இரண்டு அடி அடித்தான். அடுத்த கணத்தில் தாலி கட்டுவதைத் தடுக்க யத்தனித்தவன் போல் மூக்கணையிலிருந்து குதித்தான்.

வண்டிக்கார சுப்பராயன் "ஐயோ! குடியைக் கெடுத்தீங்களே?" என்று ஒரு கூச்சல் போட்டான்.

அபிராமிக்கு வானம் இடிந்து திடீரென்று தன் தலையில் விழுந்து விட்டது போல் தோன்றிற்று.

வண்டி குடைசாய்ந்தது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:11 am

7.செல்வப் பெண் கல்யாணி


பூங்குளத்தை யடுத்த கொள்ளிடக் கரைக் காட்டில் ஒரு வனதேவதை இருக்கிறதென்று அந்தப் பிரதேசத்திலெல்லாம் ஒரு வதந்தி பரவியிருந்தது.

நதியில் வெள்ளம் சுமாராய்ப் போகும் காலத்தில் ஜில்லா கலெக்டர், எக்ஸிகியூடிவ் என்ஜினியர் முதலிய உத்தியோகஸ்தர்கள் அந்தப் பக்கம் 'காம்ப்' வரும்போது, நதிக் கரையோரமாய்ப் படகில் பிரயாணம் செய்வார்கள். அப்போது அவர்கள் சில சமயம் மேற்படி வனதேவதையைப் பார்த்து வியப்புறுவதுண்டு.

சில வேளைகளில் அந்தத் தேவதை ஜலக்கரையிலே ஓடுகிற தண்ணீரில் கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும். படகைக் கண்டதும் எழுந்து நாணற் காட்டிற்குள் ஓடி மறைந்துவிடும். வேறு சில சமயம் அந்தத் தேவதை நாணற் காட்டிற்குள் ஒளிந்த வண்ணம் புன்னகை பூத்த தனது முகத்தை மட்டும் காட்டிக் கொண்டிருக்கும். இன்னும் சில சமயம் தூரத்தில் மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, படகில் போகிறவர்களுக்கு அழகு காட்டும்!

ஆனால் பூங்குளம் கிராமவாசிகளிடம் இந்த வன தேவதையைப் பற்றிக் கேட்டால் மட்டும் அவர்கள் குப்பென்று சிரித்துவிட்டு, "வனதேவதையாவது ஒன்றாவது! நம்ம நடுப்பண்ணை வீட்டுப் பெண் கல்யாணிதான் ஆற்றோரம் திரிந்து கொண்டிருப்பாள்" என்று சொல்வார்கள்.

கல்யாணியின் குழந்தைப் பிராயத்திலேயே அவளுடைய தாயார் இறந்து போனாள். அதற்குப் பிறகு, அவளுடைய தாயாரின் ஸ்தானத்தில் இருந்து அவளை வளர்த்தது அந்த நதிப் பிரதேசந்தான்.

பகலில் பெரும் பொழுதைக் கல்யாணி நதிக்கரையிலும் நதிக்கரை காட்டிலுமே கழிப்பது வழக்கம். உயர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சுதந்திரம் கிடைத்திருந்தது அந்தப் பிரதேசத்தில் சற்று ஆச்சரியமான விஷயமே, ஆனால் அதற்குத் தக்க காரணம் இருந்தது.

கல்யாணியின் தாயார் இறந்த பிறகு அவளுடைய தகப்பனார் திருச்சிற்றம்பலம் பிள்ளை இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டார். மூத்த மனைவியின் சந்ததி கல்யாணி ஒருத்திதான்; அவள் மேல் அவளுடைய தகப்பனார் உயிரையே வைத்திருந்தார் என்று சொல்ல வேண்டும். "இம்மாதிரி, தகப்பனார் பெண்ணுக்குச் செல்லம் கொடுத்து வளர்ப்பதைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை" என்று ஊரார் பேசிக் கொண்டார்கள்.

மூத்த தாரத்தின் பெண்ணை மாற்றாந்தாய் படுத்துவதென்னும் உலக வழக்கம் அந்த வீட்டில் கிடையாது. உண்மையில், நிலைமை அதற்கு நேர்மாறாக இருந்து வந்தது. வீட்டில் கல்யாணி வைத்ததுதான் சட்டம். அவள் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு இல்லை. அவளுக்குப் பயந்து தான் அவளுடைய சிறிய தாயார் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், திருச்சிற்றம்பலம் பிள்ளை தம் மூத்த மகளிடம் வைத்திருந்த அபிமானமேயாயினும், கல்யாணி சொந்தத்தில் சொத்துடையவளாயிருந்ததும் ஒரு காரணம் என்பதைச் சொல்ல வேண்டும்.

கல்யாணியின் தாயார் கொண்டுவந்த மஞ்சள் காணி ஆறு ஏக்கரா முதல் தர நன்செய் நிலமும், அவளுடைய 5,000 ரூபாய் பெறுமான நகைகளும், கல்யாணிக்குச் சொந்தமாயிருந்தன. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, இது அவளுக்குக் கௌரவம் அளித்தது. ஒருவாறு சுதந்திரத்துடன் நடந்து கொள்ளவும் இடங் கொடுத்தது.


*****

திருச்சிற்றம்பலம் பிள்ளை இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டதிலிருந்து பெரிய குடும்பஸ்தர் ஆனார். கிட்டத்தட்ட வருஷத்துக்கு ஒரு குழந்தை வீதம் வீட்டில் ஜனத்தொகை அதிகரித்து வந்தது. அதே சமயத்தில் அவருடைய பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் சுருங்கி வந்தது. நெல் விலையும் நிலத்தின் விலையும் மளமளவென்று இறங்கிவர, கடனும் வட்டியும் அதி வேகமாய் ஏறிவந்தன.

போதாதற்குக் கொள்ளிடத்து உடைப்பில் அவருடைய நிலத்தில் ஒரு பகுதி நாசமாயிற்று. அதைச் சீர்திருத்துவதில் கடன் மேலும் வளர்ந்தது. கடைசியில் நிலைமை ரொம்ப நெருக்கடியான போது, கல்யாணியின் தாயார் அவளுக்கு வைத்துவிட்டுப் போன நகைகளை விற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.

விற்ற நகைகளுக்குப் பதில் நகை கல்யாணிக்குப் பண்ணிப்போட வேண்டும் என்றுதான் திருச்சிற்றம்பலம் பிள்ளை எண்ணியிருந்தார். முடிந்தால், செய்துமிருப்பார். ஆனால், மேலும் தரித்திரம் அதிகமாகி வருகையில், அந்தந்த வருஷத்து வரிப் பணம் கட்டிக் காலட்சேபம் செய்வதே கஷ்டமாயிருக்கையில், புது நகை எப்படி பண்ணிப் போடுவது?

கடைசியில், கல்யாணிக்குக் கல்யாண வயது வந்த போது, திருச்சிற்றம்பலம் பிள்ளையின் 'உள்ள நிறைவில் ஒரு கள்ளம் புகுந்தது' என்று சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. அவளை ரொம்பப் பணக்கார இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விட வேண்டும். அவளுக்கு அவள் தாயார் வைத்துப் போன மஞ்சள் காணி நிலத்தையும் நகைகளையும் பொருட்படுத்திக் கேட்காத மாப்பிள்ளையாயிருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இந்த நோக்கத்துடனேதான், வாலிபப் பிள்ளைகளுக்குப் பெண் கேட்க வந்த அநேகம் பேரை அவர் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார்.

கடைசியாக, தாமரை ஓடைப் பெரிய பண்ணையிலிருந்து மனுஷ்யாள் வந்து பெண் கேட்ட போது, இந்த இடந்தான் நாம் சம்பந்தம் பண்ணவேண்டிய இடம் என்று திருச்சிற்றம்பலம் பிள்ளை உடனே தீர்மானித்து விட்டார்.


*****

கல்யாணியிடம் அவளுடைய தகப்பனார் அளவிலாத பிரியம் வைத்திருந்தார் அல்லவா?

ஏறக்குறைய ஐம்பது வயதான தாமரை ஓடைப் பண்ணையாருக்கு அவளைக் கல்யாணம் செய்து கொடுக்கத் தீர்மானித்த போது பெண்ணைக் கொடுத்துத் தாம் சௌக்கியமாயிருக்க வேண்டுமென்னும் எண்ணம் அவருக்குக் கிஞ்சித்தும் இல்லை. அவ்வளவு பெரிய இடத்தில் வாழ்க்கைப்படுவதில் அவளுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றியே அவர் அதிகமாய் எண்ணி, அதிலுள்ள பிரதிகூலத்தை அலட்சியம் செய்தார்.

கல்யாணியின் விவாகம் சம்பந்தமாகக் கேவலம் முத்தையனைப் பற்றி அவர் ஒரு கணமும் சிந்திக்கவில்லை. ஊரிலே சிலர் பிரஸ்தாபித்தார்கள். ஆனால், அவர், அந்தப் பேச்சை ஒரேயடியாய் அடித்துப் போட்டு விட்டார். "நன்றாயிருக்கிறது! தாமரை ஓடைப் பண்ணைக்கு வாழ்க்கைப்பட்டால், முத்தையனைப் போல் நூறு பேர் 'ஏவல் கூவல் பணி' செய்யக் காத்திருப்பார்களே!"

வயதைப் பற்றி அவர் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. என்ன பிரமாதம்? தாமே நாற்பது வயதுக்கு மேல் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொள்ள வில்லையா? தமது இரண்டாவது மனைவியிடத்தில் தாம் உயிருக்குயிராய் இல்லையா? வாலிப வயதுள்ளவர்களுக்கு வாழ்க்கைப் பட்டவர்கள்தான் சுகப்படுகிறார்கள் என்று எந்தச் சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறது?

இப்படியெல்லாம் அவர் தம்முடைய மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாலும், "கல்யாணி பிடிவாதக்காரப் பெண் ஆயிற்றே! அவள் என்ன சொல்வாளோ?" என்று மட்டும் அவருக்கு திக்குதிக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. ஏற்பாடுகள் என்னவோ நடந்து கொண்டிருந்தன. கல்யாணிக்கு எல்லாம் தெரிந்து தானே இருக்கும். அப்படி ஆட்சேபிக்கிறதாயிருந்தால் அவளே வந்து சொல்லட்டுமே என்று அவர் முதலிலெல்லாம் சும்மா இருந்தார். அவள் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் இருக்கவே, சமயத்தில் ஏதாவது முரட்டுத்தனம் செய்துவிடப் போகிறாளோ என்ற பயம் உண்டாயிற்று. ஆகவே, கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்பு அவளைத் தனியாகக் கூப்பிட்டு, விஷயத்தைப் பிரஸ்தாபித்தார். அப்போது கல்யாணி, அவர் சற்றும் எதிர்பாராத உற்சாகத்துடனே, "பூரண சம்மதம், அப்பா! இவ்வளவு பெரிய இடமாகப் பார்த்து நீங்கள் எனக்குக் கல்யாணம் நிச்சயம் செய்கிறபோது எனக்கென்ன குறை வந்திருக்கிறது! நான் நன்றாயிருக்கவேண்டுமென்பதில் உங்களுக்குக் கவலையில்லையா? நீங்கள் பார்த்துச் செய்வதற்கு நான் மறுவார்த்தை சொல்வேனா?" என்று கூறவும், திருச்சிற்றம்பலம் பிள்ளை உண்மையில் திடுக்கிட்டே போனார். அச்சமயம் அவருடைய மனச்சாட்சி சற்று உறுத்தியபோதிலும், உடனே அதை மறந்துவிட்டு, கல்யாணத்துக்குரிய ஏற்பாடுகளைப் பலமாக செய்யத் தொடங்கினார்.

அவர் அப்பால் போனவுடனே, கல்யாணி காமரா உள்ளுக்குள்ளே போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தரையில் புரண்டு விசித்து விசித்து அழுதாள் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? நேற்று வரையில் அவள், முத்தையனைத் தவிர வேறொருவருக்கு வாழ்க்கைப்படுவதைக் காட்டிலும் கொள்ளிடத்து மடுவில் விழுந்து உயிரைவிடத் தீர்மானித்திருந்தாள் என்பதும், இன்று மத்தியானம் முத்தையனுக்கு முன்னால் செய்து விட்டு வந்த சபதத்தின் காரணமாகவே அவள் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதித்தாள் என்பதும் அவருக்கு என்ன தெரியும்? முத்தையனுடைய ஆத்திரமான மொழிகளால் தானும் ஆத்திரங்கொண்டு கல்யாணத்துக்குச் சம்மதம் கொடுத்துவிட்ட பின்னர், இப்பொழுது அவள் நெஞ்சு பிளந்துவிடும் போன்ற கொடிய வேதனையினால் துடித்துக் கொண்டிருந்தாள் என்பதைத்தான் திருச்சிற்றம்பலம்பிள்ளை எவ்வாறு அறிவார்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:13 am

8.மணப்பந்தலில் அமளி


தாமரை ஓடை கிராமத்தில் வீதியை அடைத்துக் கொட்டாரப் பந்தல் போட்டிருந்தது. பந்தல் அலங்காரத்துக்கு மட்டும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கும்.

அந்தப் பெரிய பந்தல் இடங்கொள்ளாதபடி ஜனங்கள் நெருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பந்தலுக்கு வெளியே குடியானவர்களும், குடியானவ ஸ்திரீகளும் தெருவை அடைத்துக் கொண்டு நின்றார்கள்.

இரண்டு கோஷ்டி தங்க நாயனமும் இரண்டு கோஷ்டி வெள்ளி நாயனமும் சில சமயம் தனித்தனியாகவும் சில சமயம் சேர்ந்தும் ஊதிக் காதைத் துளைத்துக் கொண்டிருந்தன. தவுல்காரர்கள் தங்கள் கையில் பலங்கொண்ட மட்டும் அடித்து காது செவிடுபடச் செய்தார்கள். சில சமயம் பாண்டு வாத்தியங்களும் நடுவில் கிளம்பி அலறின.

பந்தலுக்குள்ளே, சந்தன மழையும், பன்னீர் மழையும், பூமாரியும் மாறி மாறிப் பொழிந்து கொண்டிருந்தன.

புரோகிதர் மந்திரங்களைப் பொழிந்தார்.

திருமாங்கல்ய தாரணம் செய்ய வேண்டிய சமயம் வந்தது.

"ஊது, ஊது" என்று புரோகிதர் கூவினார். உடனே ஏக காலத்தில் நாலு நாயனக்காரர்கள் வாயில் வைத்து வாத்தியத்தை எடுக்காமல் ஊதினார்கள்; நாலு தவுல்காரர்கள் அடிஅடியென்று அடித்தார்கள்.

மாப்பிள்ளை தாலியை எடுத்து மணப் பெண்ணின் கழுத்தில் கட்டினார்.

தாலி கட்டிய அடுத்த நிமிஷத்தில், ஸ்திரீகள் கோஷ்டியிலிருந்து, "ஐயோ! கல்யாணிக்கு என்ன!" என்று ஒரு குரல் எழுந்தது. அப்படிச் சொன்ன ஸ்திரீயின் வாயை இன்னொருத்தி பொத்தி "அசடே! அபசகுணம் போல் என்ன சொல்கிறாய்?" என்றாள்.

ஆனால் வாஸ்தவத்திலேயே கல்யாணிக்கு என்ன?

அவளுடைய கண்ணைக் கொண்டு போய் அப்படிச் சொருகுகிறதே! ஐயோ! அவளுடைய தலை அப்படிச் சாய்கிறதே!

"கொண்டு போங்கள்! உள்ளே கொண்டு போங்கள்!"

நாலு பேராகப் பிடித்து மெதுவாய் அவளை ஓர் அறைக்குள்ளே கொண்டு போனார்கள். பாயில் படுக்க வைத்தார்கள்.

"கல்யாணிக்கு என்ன?" "கல்யாணிக்கு என்ன?" என்ற கேள்வி எங்கும் பரவியிருந்தது. பந்தலிலும் வீட்டுக்குள்ளும் புருஷர்களிடையிலும் ஸ்திரீகளிடையிலும் இதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

"கிளம்பும் போது சகுனம் சரியாக ஆகவில்லை" என்றார்கள் சிலர்.

"இந்தப் பெண் தான் உச்சி வேளையிலே கொள்ளிடக் கரை அரச மரத்தடையிலே போய் நிற்குமே! எந்தப் பேயோ, பிசாசோ, என்ன கண்றாவியோ?" என்றார்கள் வேறு சிலர்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. இராத்திரியிலிருந்து பெண் சாப்பிடவில்லையாம்! பசி மயக்கம்!" என்றார்கள் சிலர்.

கல்யாணி நினைவற்றுக் கிடந்தாள்.

டாக்டர் வந்து எல்லாரையும் விலகச் சொல்லிக் கொஞ்சம் காற்றோட்டம் உண்டு பண்ணினார்.

"ஒன்றும் அபாயமில்லை" என்று உறுதி சொல்லி, முகத்திலே கொஞ்சம் ஜலம் தெளித்து, மூக்கில் மருந்துப் புட்டியைக் காட்டினார்.

கல்யாணிக்கு ஸ்மரணை வரத் தொடங்கியது. அவளுடைய இதழ்கள் அசைந்தன. அவை ஏதோ முணு முணுத்தன.

அந்த முணுமுணுப்பு யார் காதிலும் விழவில்லை; விழுந்திருந்தாலும் அவர்களுக்குப் புரிந்திராது.

ஆமாம்; கல்யாணியின் இதழ்கள் முணுமுணுத்த வார்த்தைகள் இவைதான்: "வண்டி குடை சாய்ந்து விட்டது! வண்டி குடை சாய்ந்து விட்டது! வண்டி குடை சாய்ந்து விட்டது!"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:14 am

9.வெயிலும் மழையும்


சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்து இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன.

அபிராமி இப்போது இன்னும் ஒரு நாலு விரற்கடை உயரமாகியிருக்கிறாள். அத்துடன், நெற்றியிலே ஒரு வடு - வண்டி குடை சாய்ந்த ஞாபகார்த்தமாக - இலேசாய்த் தெரிகின்றது. மற்றபடி அதே குழந்தை முகம் தான்; கண்களில் அதே குறுகுறுப்புத்தான்.

திருப்பரங்கோவில் கிராமத்து வீதி ஒன்றில், ஒரு பழைய ஓட்டு வீட்டின் கொல்லைப் புறத்துக் கிணற்றங்கரையில் அவளை இப்போது நாம் பார்க்கிறோம். கிணற்றைச் சுற்றி ஒரு வரிசை கமுகு மரங்களும் அவற்றுக்கப்பால் சில தென்னை மரங்களும் வளர்ந்து அந்த இடத்தைக் குளிர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றன. சூரிய கிரணம் ஒவ்வொன்று அங்கங்கே எட்டிப் பார்க்கின்றது. சில நாரத்தை மரங்களும் இருக்கின்றன. செழித்து வளர்ந்த ஒரு பம்பளிமாஸ் மரத்தில் பெரிய பெரிய பம்பளிமாஸ் பழங்கள் தொங்குகின்றன. கிணற்றில் ஏற்றம் போட்டு இருக்கிறது. கிணற்றின் கைப்பிடிச் சுவரிலே அபிராமி உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதையும், தலை அசைவதையும் பார்த்தால், ஏதோ பாட்டு 'கவனம்' செய்யும் முயற்சியில் இருக்கின்றாள் என்று ஊகிக்கலாம்.

கமுகு மரத்தில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும் குயில் ஒன்று விட்டுவிட்டுப் பாடுகிறது. இடையிடையே அபிராமி நிமிர்ந்து பார்க்கிறாள். குயில் இருக்கும் இடம் தெரியவில்லை.

'சட சட சட சட'வென்ற சப்தத்துடன் திடீரென்று பெருந் தூறல்கள் விழுகின்றன. "அடாடா! முற்றத்தில் அப்பளம் காய்கிறதே?" என்று கூவிக் கொண்டு, அபிராமி எழுந்து உள்ளே ஓடுகிறாள். முற்றத்தில் உலர்த்தியிருந்த அப்பளங்களை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு போய்க் கூடத்தில் இருந்த கிராமபோன் பெட்டிக்கு அருகில் வைக்கிறாள். எல்லா அப்பளங்களையும் எடுத்து வைத்தாளோ இல்லையோ உடனே தூறல் நின்று பளீரென்று வெயில் காய்கிறது. அபிராமி தனக்குள் சிரித்துக் கொண்டு "அட நாசமாய்ப் போகிற வெயிலே!" என்று உரத்து வைகிறாள்.

அப்போது "அது யார் நாசமாய்ப் போகிற பயல்!" என்று சொல்லிக் கொண்டே முத்தையன் உள்ளே வந்தான். அபிராமி அவனைப் பார்த்து மறுபடியும் சிரித்துவிட்டு, "பயல் இல்லை, அண்ணா! வெயில் - வெயிலை வைதேன்!" என்று கூறினாள். அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் கூடத்தில் கிராமபோனுக்குப் பக்கத்தில் கிடந்த பலகையில் உட்கார வைத்து, "அண்ணா இந்தப் பாட்டைக் கேளு!" என்று சொல்லிப் பாடத் தொடங்கினாள்.

அவள் பாடி முடித்ததும், முத்தையன், "அடாடா! நேற்றுத்தானே பிலஹரி பிளேட் வாங்கி வந்தேன். அதற்குள்ளே அந்த மெட்டை அவ்வளவு நன்றாய்ப் படம் பிடித்தது போல் பாடுகிறாயே? 'கவனம்' கூடத்தான் எவ்வளவு நன்றாயிருக்கிறது! நம்முடைய வீட்டுக் கொல்லை இவ்வளவு அழகாயிருப்பது எனக்கு இதுவரையில் தெரியாது. நான் சொல்கிறேன், கேள், அபிராமி! ஒரு நாளைக்கு நான் நாடகத்தில் சேர்ந்துவிடப் போகிறேன். அப்போது நீயே எனக்கு எல்லாப் பாட்டுக்களும் இட்டுக் கட்டித் தரலாம்..." என்றான்.

அபிராமி வெட்கத்துடன் முகத்தைக் கையினால் மறைத்துக் கொண்டு "போ, அண்ணா!" என்றாள்.

"என்னைப் 'போ', 'போ' என்று சொல்லிக் கொண்டிருந்தாயோ, ஒரு நாளைக்கு நான் போயே போய் விடுவேன். அப்புறம் திரும்பி வரவே மாட்டேன்" என்றான் முத்தையன்.

என்ன ஆச்சரியம்! அபிராமியின் கண் முனைகளில் அந்த நீர்த்துளிகள் அதற்குள் எங்கிருந்துதான் வந்தனவோ?

மேலாடையினால் அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு "ஆமாம்; என்னால் உனக்குக் கஷ்டந்தான். நானொருத்தி இல்லாவிட்டால்..." என்பதற்குள் முத்தையன், "சரி, சரி, பல்லவி பாடியதே போதும்; அநுபல்லவி, சரணம் எல்லாம் இப்போது வேண்டாம்" என்று கூறிவிட்டு எழுந்தான்.

பிறகு, "வேலை தலைக்கு மேல் கிடக்கிறது. சீக்கிரம் போக வேண்டும். சமையல் ஆகி விட்டதா? அல்லது பாட்டு இட்டுக்கட்டிக் கொண்டே உட்கார்ந்திருந்து விட்டாயா?" என்று கேட்டான்.

"இலை போட்டுத் தயாராய் வைத்திருக்கிறேன்" என்றாள் அபிராமி.

முத்தையன் சமையலறைக்குச் சென்று இலையில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினான்.

"நிஜமாகவே என்னை விட்டுவிட்டுப் போய் விடுவாயா அண்ணா!" என்று அபிராமி கேட்டாள்.

முத்தையன் சிரித்தான். ஆனால் அந்தச் சிரிப்பிலே சந்தோஷமில்லை. இருதயத்தைப் பாதிக்கும் துக்கம் இருந்தது.

"அபிராமி! உன்னை விட்டுவிட்டுப் போகிறவனாயிருந்தால் இரண்டு வருஷத்துக்கு முன்பே போயிருப்பேன்" என்றான்.


*****

கொஞ்ச நேரம் கழித்து அபிராமி சொன்னாள்: "ஒரு சமாசாரம் அண்ணா! அந்தக் கார்வார் பிள்ளையை இங்கே அழைத்துக் கொண்டு வராதே! அவன் மூஞ்சியைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. நீ அந்தண்டை போகும் சமயம் அவன் என்னைப் பார்த்து வெறிக்க வெறிக்க முழிக்கிறான்..."

முத்தையன் நிமிர்ந்து பார்த்து, "என்ன சொல்கிறாய்? நிஜமாகவா?" என்று கேட்டான்.

"ஆமாம். நேற்றைக்கு நீ இல்லாதபோது அவன் இங்கே வந்து கதவை இடித்தான். நான் ஜன்னல் வழியாகப் பார்த்து, 'அண்ணன் இல்லை' என்றேன். 'அண்ணன் இல்லாவிட்டால் கதவைத் திறக்கக்கூடாதா?' என்று சொல்லிவிட்டுப் போனான். அவனுடைய நடவடிக்கை ஒன்றும் எனக்குக் கட்டோட பிடிக்க வில்லை."

அபிராமியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முத்தையன் திடீரென்று கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். அபிராமியின் கண்கள் மறுபடியும் "இதோ ஜலத்தைப் பெருக்கி விடுவோம்" என்று எச்சரிக்கை செய்தன.

முத்தையன் சிரித்துக் கொண்டே "ரொம்ப சரி, பேஷான யோசனை! அபிராமி, நான் சொல்வதைக் கேள். அந்தக் கார்வார் பிள்ளை அப்படியா பண்ணுகிறான்? பேசாமலிரு, அவனுக்கு உன்னைக் கட்டிக்கொடுத்து விடுகிறேன். அதுதான் அவனுக்குச் சரியான தண்டனை!" என்றான்.

இதைக் கேட்ட அபிராமி, அவன் சற்றும் எதிர்பாராத வண்ணம் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். முத்தையனுக்கோ கோபம் அசாத்தியமாய் வந்தது. "சீச்சீ! வரவர நீ மகா அழுமூஞ்சியாய்ப் போய்விட்டாய்! என்ன சொன்னாலும் அழுகைதானா? நான் தொலைந்து போகிறேன்..." என்று சொல்லிவிட்டுப் பாதி சாப்பாடு அப்படியே இலையில் இருக்க, எழுந்து போனான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக