by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவை : கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது, அனைவரும் தமிழக போலீசாரை பாராட்டியுள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்று மற்றொரு நகராசுரன் கொல்லப்பட்ட நாள் என இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
nadesmani wrote:இது போன்ற சாத்தன்களை கல்லால் அடித்து கொள்ள வேண்டும். இங்கும் மலேசியாவில் இது போன்ற அல்லது இதை விட மோசமான இந்நாட்டு இந்திய இளையர்கள் செய்து வரும் அநியாயங்களும் அட்டகாசங்களும் கணக்கிலடங்கா. இது போன்ற என்கவுன்டர் வழி சுட்டுத்தள்ள வேண்டும்.
என்ன இருந்தலும், தமிழக காவல்துறைக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் இந்த என்கவன்டர் நடவடிக்கை.
நடேசமணியின் கருத்தை வழிமொழிகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொன்ற மோகன்ராஜ் என்கவுன்டரில் சுட்டு கொலை, இன்று அதிகாலை கோவையில் நடந்த சம்பவம் முழு விவரம்
#434982ராஜா wrote: இது பற்றிய மேலதிக தகவல் தெரிந்தால் கொடுங்கள் நண்பரே , .
கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது, அனைவரும் தமிழக போலீசாரை பாராட்டியுள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்று மற்றொரு நகராசுரன் கொல்லப்பட்ட நாள் என இப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவையில் நடந்த சம்பவம் முழு விவரம் : கொலை குற்றவாளிகளான மோகன்ராஜையும், மனோகரனையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றவாளிகளை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், சம்பவம் குறித்து விசாரித்ததுடன், போலீஸ் காவலில் செல்ல சம்மதமா? என குற்றவாளிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், போலீசுடன் செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.
சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான்: கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இன்று அதிகாலை போலீசார் குற்றவாளிகள் இருவரையும் விசாரனைக்காக செட்டிபாளையம் அழைத்து சென்றனர். வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே சென்றபோது, கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். அவன் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகிய போலீசார் காயம் அடைந்தனர்.
குற்றவாளி தப்பி ஓடுவதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மோகன்ராஜை சுட்டார். இதில் மோகன்ராஜ் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்தது. மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தான். மோகன்ராஜ் சுட்டதில் காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மோகன்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோகரன் போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் கஸ்டடியில் இருக்கின்றான். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி பெற்றோர்கள் கண்ணீர் மகிழ்ச்சி: கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர். இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது: எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி.
கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். குற்றவாளிக்கு சரியான தண்டவை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
தற்காப்புக்காகவே சுட்டோம் : கமிஷனர் பேட்டி ; இன்று போலீசார் நடத்தி முடித்த என்கவுன்டர் குறித்து கமிஷனர் சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் மற்றும் மனோகரன் ஆகிய இருவரையும் தனித்தனி வேனில் நேரிடை விசாரணைக்காக காலை 5. 30 மணி அளவில் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றோம். இந்த வழியில் ஈச்சனாரி ரயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து போத்தனூர் வழியாக மாற்று வழியில் செல்ல அழைத்து சென்றோம்.
மாநகராட்சி குப்பைத்தொட்டி அருகே சென்றபோது சப்.இன்ஸ்பெக்டர் ஜோதியின் பிஸ்டலை பிடுங்கி சுட்டு விடுவதாக மிரட்டி கேரளா நோக்கி செல்லுமாறு மிரட்டினான். இதனையடுத்து எஸ்.ஐ.,க்கள் ஜோதி, முத்துமாலை ஆகிய இருவரையும் நோக்கி சுட்டான். ஜோதிக்கு இடது கையிலும், முத்துமாலைக்கு வயிற்றுப்பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உஷாரான இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை கையில் இருந்த பிஸ்டல் துப்பாக்கி கொண்டு மோகனகிருஷ்ணனை சுட்டார். இதில் இவனுக்கு தலை யில் நெற்றிப்பகுதி மற்றும் மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இவனை ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டான். தற்காப்புக்காகவே இநத என்கவுன்டர் நடத்தி முடிக்கப்பட்டது . இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.
குழந்தைகள் கடத்தல் எப்படி நடந்தது ? : கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்; துணிக்கடை உரிமையாளர். இவருக்கு முஸ்கின் (11), ரித்திக் (9) ஆகிய குழந்தைகள் இருந்தனர். அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த முஸ்கினும், ரித்திக்கும் கடந்த 29ம்தேதி காலை வழக்கம்போல வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பினர். வழக்கமாக குழந்தைகளை அழைத்துச் செல்லும் கால் டாக்ஸிக்கு பதிலாக வேறு ஒரு கால் டாக்சி வந்தது. அதனை ஓட்டிய டிரைவர் இதற்கு முன்பு முஸ்கினையும், ரித்திக்கையும் பள்ளிக்கு அழைத்து சென்ற டிரைவர் என்பதால் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு அழைத்து செல்லத்தான் கால்டாக்ஸி வந்திருப்பதாக எண்ணி அதில் ஏறினார்கள். ஆனால் அந்த வேன் பள்ளிக்கு செல்லாமல் வேறு பாதையில் சென்றது.
குழந்தைகள் இருவரையும் கடத்தி, தந்தை ரஞ்சித்குமாரிடம் பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்துடன் கால்டாக்ஸி டிரைவர் அவர்களை கடத்திச் சென்றான். போகும் வழியில் தனக்கு துணையாக தனது நண்பனையும் அழைத்துக் கொண்ட அந்த டிரைவர், சிறுமி முஸ்கினை நண்பனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் போலீசில் மாட்டிக் கொள்வோமோ என பயந்த அவர்கள், குழந்தைகளை கொடூரமாக தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்தான்.
கோவையை உலுக்கிய சம்பவம் : கோவை நகரையே உலுக்கிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அரக்க கொலையாளிகளான கால்டாக்ஸி டிரைவர் மோகன்ராஜி என்ற மோகனகிருஷ்ணன் (33), அவரது நண்பன் மனோகரன் (23) ஆகியோரை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ஒன்றுமே அறியாத குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளிகள் என கேள்விப்பட்டதும், சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள், அவர்களை அடிக்க பாய்ந்த சம்பவமும் நடந்தது.
சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்து ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளி மோகன்ராஜையும், அவனது நண்பனையும் விசாரணை இன்றி தூக்கில் போட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். முஸ்கின் மற்றும் ரித்திக்கின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பலரும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது ; குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கி தூக்கில் போட வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோகன்ராஜ் போலீசாரால் சுட்டுக்கொன்ற சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுமக்கள் கூறுவது என்ன? : இல்லத்தரசி சுலோச்சனா விருதுநகர்: கோவையில் குழந்தைகள் முஸ்கின், ரித்திக்கை கடத்திக் கொலை செய்த டிரைவர் மோகன்ராஜ் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டது தவறு. குற்றவாளிகளுக்கு கோர்ட் மூலம் விரைந்து தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர போலீஸ் இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றார்.
ஆட்டோ டிரைவர் இசக்கிமுத்து, ராஜபாளையம் : கோவை குழந்தைகளை கடத்திக் கொலை செய்த டிரைவர் மோகன்ராஜை என்கவுன்டரில் கொலை செய்தது சரியே என்றார். போலீசார் மிகச்சரியான முடிவு எடுத்துள்ளனர் என கூறிய அவர் பெற்றோர்களுக்கு அடுத்து பள்ளிக்குழந்தைகள் தாங்கள் செல்லும் வாகனங்களின் டிரைவர்களே அதிக அளவு நம்புகின்றனர் , அப்படிப்பட்ட டிரைவர்கள் இது மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். மேலும் டிரைவர்களை தேர்வு செய்யும் போது பெற்றோர்கள் கவனத்துடன் இருப்பது இது போன்ற குற்றச்சம்பவங்களை குறைக்க உதவும் என தெரிவித்தார்.
மதுரை ஆட்டோ டிரைவர் கதிரவன்: கோவை கடத்தல் சம்பவம் மானுட சமுதாயம் சந்தித்த மிகவும் கொடூரமானது. குற்றவாளி மோகன்ராஜை என்கவுன்டரில் கொன்றது சரியே. இருப்பினும் கொலையாளியை பிடித்த அன்றைக்கே என்கவுன்டரில் கொலை செய்திருக்க வேண்டும் என மதுரை வடக்குமாசிவீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கதிரவன் தெரிவித்தார்.
மதுரை பி.பி.குளம் விஜயலட்சுமி : குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டது மிகவும் சரியானது. கோர்ட்டுக்கு சென்றிருந்தால் கூட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் போக வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் தற்போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெற்றோர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : http://tamilcnn.com
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குழந்தைகளை கொன்ற மோகன்ராஜை கொன்றதற்கு ஒரு பிரிவு வக்கீல்கள் எதிர்ப்பு, மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் வக்கீல்கல் போலீசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், என கோவை நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கடும் வாக்குவாதம். குற்றவாளியாக இருந்தாலும் சுட்டுக்கொல்ல போலீசுக்கு அதிகாரமில்லை.
இரு தரப்பினரின் எதிர்ப்பு மற்றும் ஆதரவு வாக்குவாதத்தால் நீதிமன்றம் பரபரப்பு அடைந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மோகன்ராஜ், அவனது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரையும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. கொலை நடந்த இடத்துக்கு இருவரையும் விசாரணைக்காக தனி தனி வேன்களில் போலீசார் அழைத்து சென்றனர். வெள்ளலூர் குப்பைமேடு என்ற இடத்தில் வேன் சென்றபோது மோகன்ராஜ் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டு விட்டு தப்ப முயன்றான்.
இதில் போலீஸ் அதிகாரிகள் முத்துமாலை, ஜோதி படுகாயம் அடைந்தனர். பின்னர் தப்பி ஓட முயன்ற மோகன்ராஜை, இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவன் சம்பவ இடத்திலேயே இறந்தான். படுகாயம் அடைந்த 2 போலீசாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
தமிழக காவல்துறைக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் இந்த என்கவன்டர் நடவடிக்கை.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:எது எப்படியோ கொலை காரன் செத்து மடிந்தான்
தமிழக காவல்துறைக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் இந்த என்கவன்டர் நடவடிக்கை.
தொடரட்டுமா? அவ்வாறென்றால் நீங்கள் தமிழகத்திற்குச் செல்ல முடியாதே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:புவனா wrote:Hats off to covai police
என்னங்கக்கா சொல்லுரிங்க ??!
வெயில் அதிகமாக இருக்கு , தொப்பி போட சொல்லுறங்க...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 3 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|