புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
85 Posts - 77%
heezulia
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
250 Posts - 77%
heezulia
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_m10தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-3


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 03, 2010 1:11 am

1985
ஒரு நீண்ட போருக்கு நாங்கள் அணியமாகவே இருக்கிறோம்

நாங்கள் ஒரு அரசை நடத்துகிறோம். அதன் பொருள், “தாக்கு-பதுங்கு” என்ற நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டோம் என்பதுதான். நாங்கள் தொடக்கத்தில் அந்த உத்தியைப் பின்பற்றினாலும் அடுத்தடுத்து நாங்கள் இராணுவ நகர்வைத் தடுத்ததோடு, நாட்கள் செல்ல செல்ல எமது மக்கள் போராட்டமாக மாறிவிட்டது. தற்போது யாழ் போன்ற பகுதிகளில் அது மக்கள் போராக மாறிவிட்டது.

அது தவிர, நாங்கள் ஒரு கெரில்லா படையணியும் வகுத்துள்ளோம். கெரில்லா போரின் பல்வேறு உத்திகளில் “தாக்கு-பதுங்கு” என்பதும் ஒன்று. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்தில் நாங்கள் அந்த உத்தியில் தாக்குதலை நடத்தினோம். ஆனால், இப்போது மக்களுக்கு இராணுவத் தாக்குதலிலிருந்து பாதுகாப்புத் தருகிறோம். இலங்கை இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதன் காரணம், நாங்கள் அவர்களுடன் ஒன்றறக் கலந்திருப்பதனால்தான்.


நீங்கள் எவ்வாறு விடுதலை இயக்கத்தினால் கவரப்பட்டீர்கள்? இந்த இலட்சியத்தை நோக்கி உங்களை உந்திய காரணிகள் எவை?
அது ஒரு நீண்ட கதை. என் சிறுவயதில், 1958-ல் நடைப்பெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி எனது பெற்றோர் பேசிக்கொள்வது வழக்கம். நான் அப்போது சென்னையிலிருந்து வரும் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற பல இதழ்களைப் படிப்பது வழக்கம். எல்லா இதழ்களிலும் இந்திய விடுதலைப் போர் பற்றி வரும் பல செய்திகள் என்னைக் கவர்ந்தன. தவிரவும், மகாபாரதம் போன்ற புத்தகங்கள் சொல்லும், “நன்மை தீமையை ஒழித்து வெல்லும்” என்ற கருத்து என்னிடத்தில் ஆழமான பதிவை உருவாக்கியது. நான் பள்ளியில் பயிலும்போது, தனிப் பயிற்சிக்காக ஹோம் கார்டு வி நவரத்தினம் என்ற ஆசிரியரிடம் போவேன். அவர் தமிழ் சமஷ்டிக் கட்சியிலிருந்து வெளியேறியவர். பல இளைஞர்கள் அவரைத் தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறினர். அவர் பல நாடுகளில் நடந்துவரும் போராட்டங்கள் பற்றிக் கூறுவதோடு பாராளுமன்றத்தால் எதுவும் நடக்காது என்பது போன்ற பல செய்திகளைப் பேசுவார். அப்போது எனக்கு 15 வயது. ‘நமக்கென ஒரு தனி நாடு வேண்டும். நாமும் திருப்பித் தாக்க வேண்டும்’ என்ற உணர்ச்சி வரும்.

LTTEயின் கோட்பாடு என்ன? மற்றவைகளைப் போலன்றி, அது ஒரு இராணுவக் குழுவாகத் தொடங்கப்பட்டு பிறகு மார்க்சியம், லெனினியச் சார்பு பெற்றது. EPRLF போன்றவை ஒரு பொதுவுடமைக் கட்சியாகத் தொடங்கி பிறகு ஒரு இராணுவக் குழுவை சேர்த்துக்கொண்டது…
தொடக்கத்திலிருந்தே எங்களுக்கு ஒரு கோட்பாடு இருந்தது. அது ஒரு சோசலிச அரசை அமைப்பது என்பதே. ஆனால், அக்கோட்பாட்டுக்கு ஒரு வடிவமைப்பு கொடுக்க இயலாமற் போனதற்கு, நாங்கள் நேரடியாக களத்தில் இறங்கியதே காரணம்.

ஈழம் பற்றிய உங்கள் கண்ணோட்டம், போராட்டம் பற்றிய உங்களது துயரங்கள் பற்றி…? ஈழத்தை அடையமுடியும் என நினைக்கிறீர்களா?
ஈழத்தை அடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஏனெனில், மக்களின் மனவுறுதி வலுவாக உள்ளது. நாங்கள் ஒரு நீண்ட போராட்டத்திற்கு அணியமாக உள்ளோம்.

உங்களது பொதுவான போர்முறை, “தாக்கு-பதுங்கு” என்ற உத்தியாக உள்ளது. ஆனால், நீங்கள் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றபிறகு, இராணுவம் மக்கள் மீது திரும்பிவிடுகிறது. உதாரணமாக, 13 இராணுவத்தினரை மடக்கி கொன்றதுதான் 1983 தமிழர்களுக்கு எதிரான பெருங்கலவரத்திற்குக் காரணம் என பொதுவாக நம்பப்படுகிறது பிற நாடுகளிலுள்ள, பாலத்தீன விடுதலை இயக்கமோ, ஐரிஷ் புரட்சி இராணுவமோ, இந்த இராணுவ உத்தியை பின்பற்றவில்லை. மேலும், மக்களிடம் தங்கள் ஆதரவை விரிவுபடுத்திக் கொண்டனர். உங்களது மக்கள் ஆதரவை பெறுக்கிக் கொண்டீர்களா?
பாலத்தீன விடுதலை அமைப்பு ஒரு அயல் மண்ணிலிருந்து கொண்டு போராடுவதால், அது “தாக்கு-பதுங்கு” உத்தியைக் கைக்கொள்ளத் தேவை எழவில்லை. ஆனால், ஐ.ஆர்.ஏ. முழுக்க முழுக்க இந்த இராணுவ உத்தியைத் தான் பின்பற்றுகிறது. ஆனால், பிரித்தானிய இராணுவம் சாதாரண மக்களைத் தாக்குவதில்லை. ஆனால் நாங்கள் கடும் நிதி நெருக்கடியிலும், இலங்கை இராணுவத்தின் கடும் எதிர்ப்புக்கிடையிலும் போராட வேண்டியுள்ளது. இருந்தும் யாழ், மற்ற சில பகுதிகளில் இராணுவத்தை முறியடித்து அப்பகுதிகளை விடுதலைப் பெற்ற பகுதிகளாக மாற்றியுள்ளோம். ஏனெனில், எங்களுக்கும் மக்களுக்குமிடையில் பிளவு இல்லை. குறிப்பாக, யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலுள்ள நிலவேலியிலும். இப்பகுதிகள் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. அரசுக் கட்டுப்பாடு அங்கு இல்லை.

நாங்கள் ஒரு அரசை நடத்துகிறோம். அதன் பொருள், “தாக்கு-பதுங்கு” என்ற நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டோம் என்பதுதான். நாங்கள் தொடக்கத்தில் அந்த உத்தியைப் பின்பற்றினாலும் அடுத்தடுத்து நாங்கள் இராணுவ நகர்வைத் தடுத்ததோடு, நாட்கள் செல்ல செல்ல எமது மக்கள் போராட்டமாக மாறிவிட்டது. தற்போது யாழ் போன்ற பகுதிகளில் அது மக்கள் போராக மாறிவிட்டது.

அது தவிர, நாங்கள் ஒரு கெரில்லா படையணியும் வகுத்துள்ளோம். கெரில்லா போரின் பல்வேறு உத்திகளில் “தாக்கு-பதுங்கு” என்பதும் ஒன்று. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்தில் நாங்கள் அந்த உத்தியில் தாக்குதலை நடத்தினோம். ஆனால், இப்போது மக்களுக்கு இராணுவத் தாக்குதலிலிருந்து பாதுகாப்புத் தருகிறோம். இலங்கை இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதன் காரணம், நாங்கள் அவர்களுடன் ஒன்றறக் கலந்திருப்பதனால்தான். மேலும், எங்களுக்கும் மக்களுக்குமிடையே ஒரு பிளவை உருவாக்கத்தான். மக்கள் ஆதரவு இல்லையெனில், காட்டிக் கொடுக்கப்பட்டு, இந்த இயக்கமே இல்லாதுபோயிருக்கும்.

முந்தைய கேள்விக்கு வருவோம். மக்களிடையே உங்களுக்கு ஆதரவு பெருகியுள்ளதா? தொழிற்சங்கம் போன்ற அமைப்புகள் உண்டா?
தொழிற்சங்க போன்ற அமைப்புகள் வெளிப்படையாக இல்லை. எல்லா இடங்களிலும் LTTEக்கு ஆதரவு பெறுகியுள்ளது.

இந்திய அரசைப் பற்றியும், இச்சிக்கலுக்குத் தீர்வு காண அது எடுக்கும் முயற்சிகள் பற்றியும் உங்கள் அணுகுமுறை என்ன? உங்களை ஒரு உடன்பாட்டிற்கு ஏற்க வற்புறுத்துகிறதா?
இப்போதுவரை, எங்களை நிர்பந்திக்கவில்லை. அதேவேளை. இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண பேச்சுவார்த்தை மூலம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், எங்கள் அனுபவம் பேச்சுவார்த்தை மூலம் எந்த தீர்வும் வராது என்பதுதான். இருப்பினும், இந்திய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு தருகிறோம். அதனால் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்கிறோம்.

ஆனால், அதேநேரம் இலங்கை இதுவரை எந்தவிதமான அர்த்தமுள்ள தீர்வுக்கும் வரவில்லை. உதாரணத்திற்கு, போர் நிறுத்தத்தை மீறி வருகிறது. போர்நிறுத்தம் முறையாக அமுலாகவில்லை. பேச்சுவார்த்தைக்கு போர்நிறுத்தம் என்பது ஒரு முன்நிபந்தனையல்லவா? ஆனால், இலங்கை அரசு எம்மக்களை நாள்தோறும் கொன்றுவருகிறது.

இந்தியாவிலிருந்து அனைத்து தமிழீழ விடுதலைக் குழுக்களும் வெளியேறும்படி கூறப்பட்டால், என்ன செய்வீர்கள்?
எங்களது எல்லா முக்கியத் தளங்களும் இலங்கையிலேயே உள்ளன. அங்குள்ள அரசியல் நிலைமைகளை தோலுரித்துக் காட்டவே இங்கு உள்ளோம். எந்த நேரமும் எங்கள் நாட்டிற்குத் திரும்ப நாங்கள் தயார். இலங்கை அரசு குற்றஞ்சாட்டுவது போல் எங்களுக்கு எந்த பயிற்சி முகாமோ அல்லது மற்ற அமைப்புகளோ இல்லை. எல்லாவித பயிற்சி முகாம்களும், ஆளெடுப்புகளும் எங்கள் நாட்டிலேயே நடைபெறுகிறது. இந்தப் பிரச்சனைகள் எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது.

அண்மையில் நீங்கள் தமிழ்ப்பகுதிகளைப் பார்வையிட்டு வந்துள்ளீர்கள். உங்கள் பகுதி தலபதிகளையும் சந்தித்துள்ளீர்கள். அவர்களது மனஉறுதி எவ்வாறு உள்ளது? அங்குள்ள நிலைமை என்ன?
அங்கு எல்லாம் முன்னேறியே உள்ளன. எங்கள் போராட்டத்திற்கு எந்தத் தளர்ச்சியும் இல்லை. எங்கள் மக்கள் மத்தியிலுள்ள முக்கிய கருத்து என்னவெனில், மெல்ல மெல்லச் சிறு குழுக்கலாக சாவதை விட மொத்தமாகப் போராடி மொத்தமாக அழிவோம் என்பதுதான்.

எங்கள் பையன்களும், தோழர்களும், மக்களுடன் மிக நெருக்கமாக உள்ளனர். அதனால், வலுவாகவும் உறுதியாகவுமுள்ளனர். மனஉறுதி, உணர்வு பற்றிய எந்தப் பேச்சும் அங்கில்லை. கடைசிவீரன் இருக்கும்வரை எங்கள் இலட்சியத்திறிகாகப் போரிடுவோம். கடைசி தோழன் உள்ளவரை விடுதலைக்கு, சுதந்திரத்திற்காகப் போராடுவோம்.

இந்தப் பேச்சுவார்த்தை மூலம் ஏதெனும் பயன் உருவாகும் என நினைக்கிறீர்களா?
எங்களுக்கு நம்பிக்கையில்லை. எங்களுக்கு 30 ஆண்டு வரலாறும் ஜெயவர்தனேவின் வரலாறும் தெரியும். சாதாரண மக்கள் வரையிலும், இந்தப் பேச்சு வார்த்தையில் ஏதேனும் பலன் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. இந்திய அரசு எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதால் ஒரு அரசியல் ஆதரவு கிடைக்கிறது. இந்திய அரசின் திருப்திக்காகவே நாங்கள் கலந்துகொள்கிறோம். ஆனால், முடிவு ஜெயவர்தனேவின் கைகளில்தான் உள்ளது. அவர் ஏதேனும் காரிய சாத்தியமான யோசனைகளை முன்வைப்பார் என நான் நம்பவில்லை.

இராசீவ் காந்தியுடையதும், வெளியுறவுச் செயலர் ரமேஷ் பண்டாரியினதும் அணுகுமுறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இராசீவ் காந்தியைப் பொறுத்தவரை சமாதான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என எண்ணுகிறார். போரினால் அழிவுதான். அவர் சேதங்களைக் குறைத்து சிக்கலைத் தீர்க்கவே விரும்புகிறார். போர் எனில், அது மிக மிக நீண்டதாக இருக்கும். அகதிகள் சிக்கலும் இந்தியாவுக்கு கூடுதல் சுமையாகும். எனவே, இராசீவ் வார்த்தை மூலமே தீர்வு காண விரும்புகிறார். ஆனால், அவரது முயற்சிகளை ஜெயவர்தனே தோல்வியுறவே செய்கிறார். ரமேஷ் பண்டாரி இந்திய அரசின் தூதர். அவரால் முடிந்த அளவு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முயற்சிக்கிறார். ஆனால், இதுவரை போர் நிறுத்தத்தின் எந்த நிபந்தனையையும் ஜெயவர்தனே நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, ரமேஷ் பண்டாரி போர்நிறுத்த முயற்சிகளில் வெற்றி பெற முடியவில்லை.

திம்பு பேச்சுவார்த்தை குறித்தும் ஜெயவர்தனேவின் ஆலோசனைகள் குறித்தும் உங்கள் கணிப்பு என்ன?
இறுதிவரை பேசிக்கொண்டே இருக்க முடியாது. முடிவற்ற திம்புப் பேச்சுவார்த்தைகள், மக்கள் எங்களை வெறுக்கச் செய்துள்ளது. இலங்கை அரசு சமாதானச் சூழல் பற்றி எந்த அக்கறையும் காட்டாத நிலையில், முன்வைக்கப்படும் எந்த ஆலோசனையையும் செயல்படுத்தும் என எவ்வாறு நம்பமுடியும்?

உங்கள் அமைப்பிலோ, மற்ற போராளி அமைப்புகளிலோ சனநாயகம் இல்லை எனப் பேசப்படுகிறதே?
எங்கள் குழு உறுப்பினர்களிடம்தான் இக்கேள்வியைக் கேட்க வேண்டும். அவர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளோம். அப்படி ஒரு பிரச்சனை இல்லை.

த.ஐ.வி.மு., பிளாட், ஈழத் தேசிய விடுதலை முண்ணனி பற்றி உங்கள் அணுகுமுறை என்ன?அவர்களும் எங்களைப் போலவே விடுதலைக்குப் போராடுகிறார்கள்.

ஃப்ரண்ட்லைன்
௩௦-௧௨-௧௯௮௫


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Nov 14, 2010 1:03 pm

1986

புரட்சிகர சோசலிசமே எனது அரசியல் கோட்பாடு

”தமிழ் மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையே என்னை ஆயுதங்களை எடுக்க நிர்பந்தித்தது. ஒரு தவறும் செய்யாத அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு பதறிப் போனேன்.” தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமிடையிலான இனமோதல் முடிவதாகத் தெரியவில்லை. தமிழ்த் தீவிரவாதிகள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்கள் இராணுவ நடவடிக்கையில் உறுதியாக உள்ளனர். வேலுப்பிள்ளை பிரபாகரன், LTTEயின் இராணுவத் தலைவர், யாழ்ப்பாணத்தின் அடர்ந்த கானகத்தில் இருந்து, போரினால் பாதிக்கப்பட்டுள்ள தீவின் எதிர்காலம் பற்றி ‘செண்டில்மேன்’க்கு அளித்த அரிய நேர்காணல்…

ஆயுதங்களை எடுக்க உங்களைக் கட்டாயப்படுத்தியது எது?
தமிழ் மக்களின் அவலமான வாழ்நிலையே என்னை ஆயுதங்களை எடுக்க கட்டாயப்படுத்தியது. ஒரு தவறும் அறியாத அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்பட்ட கொடும் தாக்குதல்களைக் கண்டு பதறிப் போனேன். எங்கள் மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொலையுண்டதும், அழித்து ஒழிக்கப்பட்டதும், ஊனமாக்கப்பட்டதும் அவர்களது வீடுகளும் சொத்துக்களும் பெருமளவு அழிக்கப்பட்டதும் கண்டுதான் நாங்கள் திட்டமிட்ட ஒரு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்படுகிறோம் என உணர்ந்தேன். ஒரு முற்றாதிக்க பாசிச அரசின் இனப்பேரழிவுக்கு ஆளாக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி விடுதலை செய்ய, ஆயுதப் போர் ஒன்றே வழி எனக் கருதிகிறேன்.

உங்களது கோரிக்கைகளை, பாராளுமன்ற சனநாயகக் கட்டமைப்பிற்குள்ளும், சுதந்திரமான ஊடக வெளிக்குள்ளும் தெரிவித்திருக்க முடியாதா?
மூன்றுபதின் ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வந்துள்ளனர். அது சூனியத்தில் விழுந்த குரலாகவே போயிற்று. எங்களது தேவைகளை வலுவாகத் தெரிவிப்பதற்கான நாடாளுமன்ற சனநாயகம் இலங்கையிலில்லை. இலங்கையில் பாராளுமன்றத்தின் பெயரால் நடைபெற்றுவருவது, பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையில் உருவாக்கப்பட்ட பேராதிக்க ஆட்சியே. தமிழர் பிரதிநிதிகள் இறுதியில் பாராளுமன்றத்தின் நுழைவதே தடை செய்யப்பட்டது. பத்திரிக்கைச் சுதந்திரம் இலங்கையிலில்லை. ஊடகங்கள் அரசுக்கட்டுப்பாட்டிலும், இனவெறிப் பத்திரிக்கையாளர் கையிலும் உள்ளது. தமிழர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்புவதற்கான எந்த ஒரு சனநாயக அமைப்பும் இல்லை.

மக்களின் ஆதரவையும், சிங்கள மக்களின் ஆதரவையும் பெற முயற்சித்தீர்களா?
சிங்கள மக்களின் ஆதரவைப் பெறவே விரும்புகிறோம். எங்களது நோக்கம் நியாயமானதும், சட்டவழிப்பட்டதும் ஆகும். ஆனால், இனவெறி பிடித்த அரசியல்வாதிகளாலும், புத்தமத குருமார்களாலும், தமிழர்களுக்கெதிராக நச்சுட்டப்பட்ட சிங்கள மக்களை எங்களுக்காதரவாக திரட்ட முடியவில்லை. இருப்பினும், எங்களது கோரிக்கையின் நியாயத்தை சிங்கள மக்களை ஏற்கச் செய்ய தொடர்ந்து பாடுபடுவோம்.

சிங்கள மக்களும் தமிழர்களும் ஒரேமாதிரியான சமூகப் பொருளாதாரக் கோரிக்கைகளை உடையவர்கள்தான் என்று நீங்கள் கருதவில்லையா?
ஆம். உணமைதான். சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் ஒரே மாதிரியான சமூகப் பொருளாதாரச் சிக்கல்களும், கோரிக்கைகளும் உள்ளவர்களே. அவர்களைப் பிளவுபடுத்துவது இனத் தேசியச் சிக்கல். சிங்கள ஆளும் வர்க்கம், தங்கள் அரசியல் அதிகாரத்தை உறுதிபடுத்திக் கொள்ள இந்த இனவேறுபாட்டை, தமிழர்களையும் சிங்கள மக்களையும் பிரிக்க ஊக்குவித்து வருகின்றனர்.

இராணுவ நடவடிக்கைகளில் இணையத் தூண்டிய காரணங்கள் என்ன?
சிறுவயதிலிருந்தே தமிழக மக்கள் மீது ஏவப்படும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களைப் பற்றிய நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகிறேன். எனது கல்லூரி நாட்களில் இந்த இனவெறியை நேரடியாக எதிர்கொண்டேன். எனது இளமைப் பருவத்திலேயே தமிழர்களைச் சூழ்ந்துள்ள அரசு அடக்குமுறை பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டு, அதன்பிறகுதான் நமது மக்களை இக்கொடுமையிலிருந்து மீட்க ஆயுத எதிர்ப்பியக்கமே சரியானது என அறிந்தேன். அப்படித்தான் இந்தப் புலிகள் இயக்கத்தை உருவாக்கி ஆயுதப்போரில் ஈடுபட்டேன்.

உங்கள் குடும்பச் சூழல், பெற்றோருடனான உறவு… அவர்கள் உங்களோடுதான் இருக்கிறார்களா? என்பதைப் பற்றி…
நான் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்தவன். என் தந்தை ஒரு அரசு ஊழியர். எனது இரு சகோதரிகளும் திருமணமாகி குடும்பமாக உள்ளனர். இளைஞராக இருந்தபோதே புரட்சிகர அரசியலில் ஈர்க்கப்பட்டு ஒரு “தேடப்படும்” நபர் ஆனேன். 19 வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டேன். அதன்பிறகு பெற்றோருடனான தொடர்பு போய்விட்டது.


தமிழ்த் தீவிரவாதத்தின் சின்னமாக நீங்கள் வருணிக்கப்படுகிறீர்கள். உங்கள் அமைப்பேகூட உங்களை மாவீரராக வருணிக்கிறது. ஒரு பகுத்தறிவாளர் என்ற முறையில் இந்த தனிநபர் வழிபாட்டை எப்படி நியாயம் என நினைக்கிறீர்கள்?
இதுபோன்ற வருணிக்கப்படுவதையும், சித்திரிக்கப்படுவதையும் என்னால் தவிர்க்க முடியாது. நான் கவலைப்படுவதெல்லால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விடுதலை, சமூக விடுதலை பற்றித்தான். எனது இலட்சிய உறுதி பற்றியும், சரியான பாதையில் வழிநட்த்துவேன் என்பதிலும் எம்மக்கள் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால்தான் என்மீது பேரன்பு காட்டுகின்றனர். இந்தச் சித்தரிப்புகள் மக்கள் அன்பின் வழிப்பட்டதாக இருக்கலாம்.

இலங்கையின் இன்றைய நிலை பற்றிய உங்கள் கணிப்பு என்ன?
இலங்கையின் இன்றைய அரசியல் சூழல் மிகவும் சிக்கலானது. தமிழ்த்தேச மக்கள் ஓர் இன அழிப்பு தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். இலங்கை அரசின் இராணுவம் தமிழ் மக்கள் மீதான கொடுமையான தாக்குதலை தொடர்கின்றனர். கொடுமையான கொலைகள், கும்பல் கும்பலான சிறைப் பிடிப்புகள், சொத்து அழிவு, சூறையாடல், கற்பழிப்பிற்கு எம்மக்கள் ஆட்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் பாரம்பரிய வசிப்பிடங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர். போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசு ஈவிரக்கமற்ற தாக்குதல், இராணுவ அடக்குமுறை, இனஒழிப்புக் கொள்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய சிங்கள வெறிபிடித்த தலைமைக்கு அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு நியாயமான, நேர்மையான தீர்வைக் கொண்டுவருவதில் எந்தவிதமான அக்கறையும் இல்லை என்பதோடு, தமிழ் மக்களை ஒடுக்க இராணுவத்தைப் பயன்படுத்துவதையே நம்பியுள்ளனர். அரசின் அந்தக் கொள்கையே இன்றைய சூழ்நிலையை சிக்கலானதாகவும், ஆபத்தானதாகவும் ஆக்கியுள்ளது.

தமிழர் பிரதிநிதிகளுக்கும், இலங்கை அரசுக்குமான பேச்சுவார்த்தைகளின் இன்றைய கட்டத்தை எப்படி காண்கிறீர்கள்?
சமாதானப் பேச்சுவார்த்தை என்பது ஒரு பயனற்ற முயற்சி. உலகை ஏமாற்ற ஜெயவர்தனே அரசு நடத்தும் ஒரு நாடகம். சமாதான விரும்பிப்போலத் தன்னைக் காட்டிக்கொண்டபோதும், ஜெயவர்தனே ஒரு சமாதான உடன்பாட்டை விரும்பவில்லை. எங்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவு செய்யும் வகையில் எந்த ஒரு உறுதியான ஆலோசனையும் தரத் தவறியுள்ளார். சமாதான முயற்சி என்ற போர்வையில் இராணுவத் தாக்குதலை எங்கள் மக்களின் இன அழிவு நோக்கில் தொடுத்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் போர்நிறுத்த உடன்படிக்கையை பயன்படுத்திக் கொண்டு தனது இராணுவ வலிமையை ஜெயவர்தனே உறுதிப்படுத்திக் கொள்வதாக குற்றம் சாற்றியிருந்தார்களே?
நிச்சயமாக. போர்நிறுத்த உடன்படிக்கை என்ற பெயரில், பெரும் இராணுவ விரிவாக்கத்தில் இறங்கியுள்ளது ஜெயவர்தனே அரசு. அரசு தனது வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தொகையை இராணுவ அமைப்புக்கு செலவிட்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்கள் பெருமளவில் பெருஞ்செலவில் வாங்கப்படுகின்றன. அரசு கட்டாய இராணுவ சேவைக்காக சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்த சிங்கள தேசமும் போர் ஆயுத்த நிலையில் திரட்டபடுகிறது. தமிழ்ப்பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் கட்டப்படுகின்றன. வெளிநாட்டு கூலிப்படையினரும், பாக்கிஸ்தானும் எதிர்ப்புரட்சி போர் பயிற்சியினை சிங்களவர்களுக்கு தந்து வருகிறது. பெருமளவிலான இராணுவக் குவிப்பு காட்டுவது, ஒரு பேச்சுவார்த்தை வழியிலான சமாதான உடன்படிக்கையைவிட இராணுவத்தீர்வையே ஜெயவர்தனே சார்ந்துள்ளார் என்பதே.


கடந்த முறை தில்லி வந்தபோது, போர்நிறுத்த மீறல்களை ஆய்வு செய்வதற்கென ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க இலங்கை அரசை ஏற்றுக்கொள்ளச் செய்வதன் மூலம் ஒரு பெரும் அரசியல் வெற்றியை அடைந்தீர்கள். மீறல்களைக் கட்டுப்படுத்த உகந்த சூழலை உருவாக்கிட அமைக்கப்பட்ட அந்தக் குழுக்கள் உதவுகின்றனவா?
(பொறுமையிழந்து) எந்தக் கண்காணிப்புக் குழுவைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்? இதுவரை அவர்கள் ஒரே ஒரு அறிக்கையையாவது வெளியிட்டுள்ளார்களா? ஜெயவர்தனே அரசின் இராணுவக் கையாட்கள் நடத்திவரும் மீறல்களில் ஒன்றைப் பற்றியாவது விசாரணை நடத்தியுள்ளார்களா? எங்கள் மீனவர்களைக் கொல்ல சிங்கப்பூரிலிருந்து ஆயுதப் படகுகளை வாங்கியுள்ளனர். பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மேலும் மேலும் அப்பாவி மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம், கப்பல் மற்றும் விமானப்படையுடன் இணைந்து இராணுவத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

எனவே, நடைமுறையில் இந்த சமாதான முயற்சி தோல்வி எனக் கருதுகிறீர்களா?பேச்சுவார்த்தைகள் இதுவரையில் எந்த ஒரு சாதகமான, ஆக்கபூர்வமான முடிவையும் தரவில்லை.

அப்படியெனில், இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாடு சாத்தியமில்லை எனப் பொருளாகுமா?
அது சூழலைப் பொறுத்தது.

இந்தியாவின் நிலையைப் பொறுத்தா?
ஒருவகையில், ஆமாம்.

இரத்தக்களரியைத் தவிர்த்துவிட ஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு இருப்பதாக நம்புகிறீர்களா?
பழைய அனுபவங்களும், வரலாறும் ஜெயவர்தனே ஒரு நியாயமான தீர்வுக்கு வரமாட்டார் என்பதையே காட்டுகின்றன. தன்னை ஒரு சமாதான விரும்பியாக காட்டிக் கொள்ளவே இந்த நாடகம். ஜெ.ஆர். அரசின் பிடிவாதமான போக்கால் இந்திய அரசு இதுவரைதான் விரும்பிய முடிவை எட்டவில்லை. இந்தச் சூழலில் நாம் ஒரு முட்டுக்கட்டை நிலையிலேயே உள்ளோம். ஆனாலும், இந்தியா இரு தரப்பையும் ஒன்று சேர்க்க முயலலாம். அதற்கு இன்னும் வலுவாக முயற்சிக்க வேண்டும்.

இந்தக் கருத்தை ரமேஷ் பண்டாரியுடன் நீங்கள் பேசியபோது தெரிவித்தீர்களா?
ஆம். தெரிவித்தேன்.

சில நாட்களுக்கு முன் சில சிங்களர்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டதாக செய்தி வந்தது. இந்த ஆயுதப் போராட்டத்தில் சிவிலியன்கள் பற்றிய உங்களது அணுகுமுறை என்ன?
அந்த செய்திகளில் உண்மையில்லை. விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்த இந்தப் பொய்களைப் பரப்பி வருகிறார்கள். நாமல்வட்டே சம்பவங்களில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. வேறு ஏதேனும் அமைப்புகளுக்கு இதில் தொடர்புண்டா என்பதும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சிவிலியன்களை ஒருபோதும் நெருங்குவதில்லை. எங்களது மக்களை அவர்கள் தாக்கும்போது அதிலிருந்து எங்கள் மக்களை பாதுகாப்போம்.

சிவிலியன்களை தீவிரவாதிகள் தாக்குவதான சில நிழற்படங்களை இலங்கைத் தூதரக பொதுத்தொடர்பு அதிகாரி தில்லியில் காட்டினாரே…?
பாருங்கள். இந்த “ஹோம் கார்டு” அடியாட்களை இராணுவம்தான் ஆயுதந் தந்து பயிற்சியளிக்கிறது. அவர்கள் சிவிலியன் போல் உடையணிவார்கள். ஆனால், அவர்கள் கூலிக்கான கொலைப்படைகள். தமிழர்கள் மீது கொள்ளை, தீவைப்பு, சேதாரம் செய்ய அனுப்பப்படுவார்கள். சில வேளைகளில் நாங்கள் அவர்களைத் தாக்கினோம். சில பகுதிகளில் சிங்களவர்களை வலிந்து குடியேற்றும்போது மட்டிமே சிங்கள தமிழ் மக்களிடையே மோதல்கள் நடக்கும். எங்கள் வாழ்விடங்களை காக்க மோதல் வரும். ஜெயவர்தனே அரசு அத்தகைய தாக்குதலின்போது எடுக்கப்பட்ட படங்களை சிவிலியன்களை போராளிகள் தாக்குவதாக கூறப் பயன்படுத்துவார்கள். ஆனால், அவை எப்போதும் உண்மையல்ல.


பேச்சுவார்த்தைகள் கிட்டதட்ட முடங்கும் நிலைக்கு வந்துவிட்ட்தெனவும், அவை மீண்டும் தொடங்கப்பட்டால் ஒழிய, ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு எனவும் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். இந்த இடைவெளியில் உங்கள் உத்தி என்ன? உங்களது கெரில்லா போரை மீண்டும் தொடங்குவீர்களா?
தற்போது எங்கும் போர் இல்லை. நாங்கள் தாக்கப்படும் போது மட்டும் தற்காத்துக் கொள்கிறோம். நாங்களாக தாகுதலில் ஈடுபடுவதில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் உழவர்களை அங்கிருந்து வெளியேற்றி, சிங்களவர்களைக் குடியேற்றும் முயற்சியில் இலங்கை இராணுவம் இறங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இச்செய்திகள் உண்மையாயின் உங்கள் நிலை என்ன?
அவர்களைத் திருப்பி அடித்து விரட்டுவதைத் தவிர மாற்று இல்லை. நாங்கள் வலுவாக திருப்பித் தாக்கி அவர்கள் திட்டங்களை முறியடிப்போம்.

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறை குறித்தும், இருதரப்பினர்கிடையிலான நடுநிலையாளர் என்ற பங்களிப்பு குறித்தும் உங்களுக்கு நிறைவு இருக்கிறதா?
ஒரு நடுநிலையாளர் ஆக சமாதானப் பேச்சுக்கள் மூலம் இனமோதலுக்கு ஒரு உடன்பாடு ஏற்படுத்த இந்தியா நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் அணுகுமுறை பற்றி நாங்கள் மனநிறைவுடன் இருக்கிறோம். ஆனால், ஜெயவர்தனேவின் அணுகுமுறை பற்றி ஆழமான வேறுபாடு கொண்டுள்ளோம். மண்டைக்கனம் பிடித்த பிடிவாதப் போர்குணமுடைய ஜெயவர்தனேவின் அணுகுமுறை, தமிழர் பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வு காண முயற்சிக்கும் இந்தியாவின் மனப்பூர்வமான முயற்சிகளுக்கு ஒரு தடைக்கல்லாகவே உள்ளது.

அப்படியெனில், திம்பு பேச்சுவார்த்தையிலிருந்து போராளிக்குழுக்கள் ஏன் வெளியேறின?
எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள இராணுவ அடக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் எதிராகவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம். இன்றும் இலங்கையில் அதே நிலை நீடிப்பதாக எண்ணுகிறேன்.

தமிழர் சிக்கல் இத்துணைக் கண்டத்தின் நலன்களை பாதிப்பதாக அடிக்கடி கூறிவருகிறீர்கள். உங்களுக்கு ஆதரவு பெறுவதற்காகவே இதக் கூறுகிறீர்களா?
ஒரு உள்நாட்டு போதல் எனப்பட்டது இன்று அனைத்து நாடுகளின் அளவில் பிரச்சனையாக மாறியுள்ளது. இது இந்தியாவிற்கும் பெரும் கவலையளிக்கும் செய்தி. தமிழர் விடுதலை இயக்கத்தை ஈவிரக்கமின்றி அடக்கிவிடும் கொள்கையைப் பின்பற்றும் இலங்கை அரசு, அயல்நாட்டு ஆட்சிக் கவிழ்ப்பு சக்திகளை இராணுவத்திற்குள் நுழைத்து வருகிறது. இஸ்ரேல் உளவுத் துறையில் ஊடுருவல், பிரிட்டன் கூலிப்படைகளின் நுழைவு, பாக்கிஸ்தானின் தலையீடு மற்றும் பெருமளவிலான இராணுவக் குவிப்பு ஆகியன இப்பகுதியில் அமைதியையும் உறுதிப்பாட்டையும் குலைக்கிறது. இந்த ஆபத்தான மாற்றங்கள் இந்துமாக்கடல் பகுதியை ஒரு அமைதிப் பகுதியாக உருவாக்குவதான இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களை நிச்சயம் பாதிக்கும்.

இலங்கையின் இன்றைய மோதலில் அமெரிக்க அரசின் பங்கு பற்றி என்ன கருதுகிறீர்கள்?அமெரிக்கா அரசுக்கு இப்பகுதியில் இராணுவ நலன் சார்ந்த புவியியல் அரசியல் சார்ந்த நலன்கள் உள்ளன. திருகோணமலையில் உள்ள இயற்கைத் துறைமுகம் இந்திய மாக்கடல் பகுதியில் படை முக்கியத்துவம் பெற்றதாக அமைதுள்ளது. அமெரிக்க வல்லாண்மையின் இலக்கு மெல்ல மெல்ல இலங்கைக்குள் ஊடுருவி இறுதியில் தனது செல்வாக்கிலும் ஆதிக்கத்திலும் இப்பகுதியைக் கொண்டுவந்து விடவேண்டும் என்பதே. முறுகி வரும் இனப்போராட்டம் ஜெயவர்தனே அரசை அமெரிக்க உதவியை நாடி ஓட வைத்துள்ளது. அமெரிக்கா தனது நேச நாடுகளான இஸ்ரேல், பாக்கிஸ்தான், தென் கொரியா, சைனா மூலம் நேரடியாக உதவிவருகிறது. அமெரிக்காவின் இலக்கு இந்த இனச் சிக்கல் தொடர்வதோடு, பரவிடவும் வேண்டும் என்பதே. அதன்வழி மெல்ல மெல்ல இலங்கை மண்ணில் காலூன்றி, திருகோணமலையில் ஒரு படைத்தளம் அமைப்பது என்பதே


சோசலிச நாடுகள் உங்கள் கோரிக்கை மீது அக்கறை கொண்டுள்ளனவா?
ஆம்… அந்நாடுகள் அக்கறை கொண்டுள்ளன.

உங்கள் அரசியல் கோட்பாடு என்ன? உங்களை பெரிதும் கவர்ந்த கெரில்லா வீரர் யார்?
புரட்சிகர சோசலிசமே எனது அரசியல் கோட்பாடு. சோசலிசம் என்பதாக நான் விளக்கிக் கொள்வது, வர்க்க வேறுபாடற்ற, மனிதனை மனிதன் சுரண்டாத, மானுட விடுதலையும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்ட, ஒரு சுதந்திரமான, பகுத்தறிவு பெற்ற சமூகமே. சேகுவேரா என்னை மிகவும் வசீகரித்த கெரில்லா வீரர்.

தமிழ் மக்களின் போராட்டத்தை எவ்வாறு வகைப்படுத்துகிறீர்கள்?
தமிழ் மக்களின் போராட்டத்தை தன்னுரிமைப் போராட்டமாக வகைப்படுத்துகிறேன். ஒரு அரசியல் விடுதலைக்கும், தனது அரசியல் இலக்குக்குமான போராட்டமே அது.

இலங்கையின் இன்றைய இனப் போராட்டத்துக்கான வரலாற்றுப் பின்னணி என்ன?
இன்றைய இனப் போராட்டத்துக்கு நாற்பதாண்டு கால வரலாறு உண்டு. பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற நாள் முதல் இலங்கையின் ஆளும் வர்க்கம் தமிழ் மக்கள் மீது அரசு அடக்குமுறை எனும் நாசகரமான கோட்பாட்டையே கடைபிடித்து வருகிறது. தமிழ் இனத்தின் இன அடையாளத்தை அழைப்பதற்கான இன அழிப்பு நோக்கைக் கொண்டதே இந்த அடக்குமுறை. இந்த திட்டமிடப்பட்ட அரசு அடக்குமுறை, தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைகளான மொழி, பண்பாடு, பொருளியல் வாழ்க்கை, பாரம்பரிய வாழ்விடம் ஆகியவற்றை அழிப்பதே. இக்கொள்கை சொல்லமுடியாத துயரங்களை நமக்குத் தந்தது. மேலும் நம் மக்கள் மீது ஏவப்படும் அடக்குமுறை அவ்வப்போது எழுந்து பெரும் உயிரிழப்பையும், உடைமை இழப்பையும் உருவாக்கும். இப்பேரழிவு இன்றுவரை தணியாத வெறியுடன் தொடர்கிறது.

தொடக்க நாட்களில் காந்தியக் கோட்பாடான அகிம்சை வழியிலான அமைதியான முறைகளில் எம்மக்கள் கிளர்ச்சிகளை மேற்கொண்டனர்.

அரசு வன்முறைக்கெதிரான சத்தியாகிரகம், பரப்புரைகள், ஒத்துழையாமைப் போராட்டமுறைகளை வகுத்தனர். இருபதாண்டுகளுக்கு மேலாக எங்கள் அரசியல் உரிமைகளுக்காக பிராந்திய தன்னுரிமையையே கோரினர். ஆனால், அக்கோரிக்கைகள் பரிவோடு ஒருபோதும் கேட்கப்படவில்லை. ஒப்பந்தங்களும் உடன்பாடுகளும் தொடர்ந்து வந்த அரசுகளால் மீறப்பட்டன. அமைதியான வழிகளில் போராட்டங்களைத் தீர்ப்பதற்கு பதில் இலங்கை ஆட்சியினர் ஈவிரக்கமற்ற இராணுவ ஒடுக்குமுறையைக் கைக்கொண்டனர்.

இத்தகு தொடர் ஒடுக்குமுறையின் பின்னணியில், எங்கள் மக்களது அனைத்து அமைதி வழியிலான அரசியல் போராட்டங்களும் பயனற்றுப்போன நிலையில் ஆயுதப் போராட்டம் 70களின் தொடக்கத்தில் தோற்றம் கொண்டது. புலிகள் இயக்கம் ஆயுதப் போராட்டத்தின் முதல் அணியாகவும், தேசிய விடுதலைப் போரின் முன்னணிப் படையாகவும் ஆனது. எங்களது ஆயுதப் போராட்டம் விடுதலைக்கான நோக்கத்தை விரிவுபடுத்தியது. அடக்குமுறை அரசுக்கு தீவிர எதிர்ப்பைக் காட்டியது. தமிழர் பிரச்சனை மீது உலகின் கவனத்தை ஈர்த்தது. சுருக்கமாக இதுதான் எங்கள் போராட்டத்திற்கான பின்னணி.

இந்தச் சிக்கலில் சிங்கள அரசியல்வாதிகளும், பவுத்த பிக்குகளும் எத்தகு பங்கினை ஆற்றினர்?

சிங்கள அரசியல்வாதிகளும் பவுத்த பிக்குகள் இருவருமே இந்தக் கிளர்ச்சியை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வகித்தனர். சிங்கள மக்களிடம் தங்கள் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள சிங்கள அரசியல்வாதிகள் இனவெறியை விதைத்தனர். புத்த பிக்குகள் தங்கள் பங்காக மதஉணர்வை, கண்மூடித்தனமான மதவெறியாக மாற்றினர். எனவே, சிங்கள, பவுத்த தீவிரவாதத் தத்துவம் ஒரு வலுமிக்க சக்தியாக மாறி, தமிழர் எதிர்ப்பு நிலைக்குத் தள்ளவும், இன்றைய சிக்கலுக்கான அடித்தளம் ஆனது.


இன்றைய சிக்கல் யாருடைய நலனுக்கு உதவுகிறது?
இன்றைய அமெரிக்க முற்றாதிக்கத்திற்கும், சிங்கள முதலாளியத்திற்குமே உதவுகிறது. இதன் விளைவு, இப்பகுதியில் இந்தியாவின் புவிசார் அரசியலையே பாதிக்கும்.

அனைத்துத் தமிழர் குழுக்களும் தமிழர் நலனுக்காகப் போராடினாலும் அவர்களுக்குள்ளும் பெரும்பிளவுகள் இருக்கின்றன. இப்போக்கிற்கு என்ன காரணம் எனக் கருதுகிறீர்கள்? அதைத் தீர்க்க வழிமுறையாக நீங்கள் கூறிவது என்ன?
கோட்பாடு வழியிலான வேற்றுமைகள் அனைத்து விடுதலைப் போராட்டங்களிலும் ஒரு பொதுநிலை. தற்போது, ஈழ விடுதலை முன்னணி எனும் கூட்டணி உருவான பின் நிலைமை சீரடைந்துள்ளது.

உங்களுக்கும், உமா மகேஸ்வரனுக்கும் இடையில் எப்படி பிளவு உருவானது?
இன்றைய அரசியல் சூழலில் அதைப் பற்றிக் கருத்துரைக்க விரும்பவில்லை. இன்றைய பிரதான நோக்கம், விடுதலைப் போராட்ட குழுக்களிடையே ஒற்றுமை. பழைய பிரச்சனைகளைப் பேசுவது பொருத்தமற்றது.

உங்களுக்கிடையில் ஏதேனும் கோட்பாடு வழியிலான வேறுபாடுகள் இருப்பின், அவை தீர்க்கப்பட்டுள்ளனவா?
கடந்த காலத்தைக் கிளறுவதில் பொருளில்லை. என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஈழவிடுதலை முன்னணியில் அவரது குழுவும் கூடிய விரைவில் இணையும் சாத்தியம் உள்ளதா?
அதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.

தமிழகத்தில் உங்களது செல்வாக்கைக் கண்டு அதிச்சியடைந்த எம்.ஜி.ஆர். உமாமகேசுவரனைப் பாராட்டுவதாக சில செய்திகள் வருகின்றனவே?
உண்மையில் அப்படி ஒன்றுமில்லை.

தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி மீது போராளிகளுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? அவர்களை சந்தர்ப்பவாதிகள் என நீங்கள் கூறியது ஏன்?
த.ஐ.வி.மு.வின் சந்தர்ப்பவாதம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். தங்கள் சுயநல அரசியல் வேட்கைக்காக மக்களை ஏமாற்றி வரும் பதவி ஆசைப் பிடித்தவர்கள். 1977 பொதுத்தேர்தலில் தமிழர்களுக்கான தனிநாடு அமைக்கப் போராடுவதாக மக்களிடம் ஆனைபெற்றே வெற்றிபெற்றனர். ஆனால், அந்த வாக்கை நிறைவேற்ர எதுவும் செய்யவில்லை. மாறாக, சில்லரைச் சலுகைகளுக்காக பேரம் பேச முனைந்தார்கள். எனவே, அவர்கள் செயலை முழுநம்பிக்கைத் துரோகம், சந்தர்ப்பவாதம் எனக் கருதுகிறேன்.

தமிழகத்தின் சில தலைவர்களின் இனவெறியைத் தூண்டும் முயற்சியை பற்றி என்ன கருதுகிறீர்கள்? இந்தப் பிரிவினைப் போக்கு உங்கள் நோக்கங்களுக்கு ஊறு விளைவிக்காதா?
அந்தக் கண்ணோட்டத்தில் நாங்கள் அவர்களைப் பார்க்கவில்லை. அண்டை நாடான இலங்கையிலுள்ள தமிழர்களின் மோசமான நிலையைப் பற்றி உண்மையாகவே கவலையும், அக்கறையும் கொண்டுள்ளனர். எப்போதெல்லாம் சிங்கள இராணுவத்தினால் எங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அபோதெல்லாம் தமிழக மக்களைத் திரட்டி தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். ஈழத் தமிழர்க்களின் போராட்டத்திற்கான சகோதர வாஞ்சையும், ஆதரவு உணர்வும் உடையவர்கள் அவர்கள். அவர்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவ வேண்டும், தனிழர்களை இன அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள்.

போராளிகளுக்கு இந்தியாவில் இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், பயிற்சி முகாம்கள் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவைகளைப் பற்றி உங்கள் பதில்…
அச்செய்திகளில் உண்மையில்லை. இந்தியாவில் எந்தப் பயிற்சி முகாமும் எங்களுக்கு இல்லை. எங்கள் மண்ணிலேயே அனைத்து முகாம்களும் உள்ளன.

தமிழர் சிக்கலுக்கான ஒரு ஏற்கக்கூடிய தீர்வை உருவாக்குவதில் இந்தியாவின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
இந்திய மக்கள் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை ஆதரித்து வந்துள்ளனர். நியாயத்தினையும் மனித உரிமைகளையும் உயர்த்திப் பிடிக்கும் மிகப்பெரும் பாரம்பரிய மரபு இந்தியாவுக்கு உண்டு. பாலத்தீனம், நமீபியா, தென் ஆப்பிரிக்க மக்களின் விடுதலைப் போரை அவர்கள் ஆதரித்தே வந்துள்ளனர். அண்மையில் விடுதலைப் போரையும் அங்கீகரித்துள்ளனர். அண்டை நாடான எங்கள் நாட்டில் நடைபெறும் விடுதலைப் போராட்டத்தினை இந்தியா ஆதரிக்கும், எங்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.


வீக் இதழ்
௨௩, மார்ச் 1986


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Nov 28, 2010 2:15 pm

1986
இந்தியாவில் அரசியல் அகதிகளாக வாழ்கிறோம்

கடந்த 14 ஆண்டுகளாக இலங்கையின் கொந்தளிப்புமிக்க வடகிழக்கு பகுதியில் தமிழர்களுக்கென ஒரு தமிழ்நாடு அமைவதற்காக ஒரு ஆயுதப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வருகிறார் பிரபாகரன்(32). விடுதலைப் புலிகள்(LTTE) எனும் தமிழ் விடுதலைக் குழுக்களின் வலுமிக்க ஒரு குழுவுக்குத் தலைவர். விடுதலைப் புலிகளின் பங்கேற்பு இல்லாமல் இலங்கையில் எந்த ஒரு சமாதானப் பேச்சுவார்த்தையும் பயனுள்ளதாக இருக்காது என பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இலங்கை அரசால் கடந்தவாரம் தரப்பட்ட சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கான ஆலோசனையை ஏற்க மறுத்து, வெளியேறுவதற்குமுன் ‘நியூஸ்வீக்’ இதழுக்கு தீப் மஷீம்தாருடன் நடத்திய நேர்காணல்…


சாதாரண(சிவிலியன்) மக்கள் உங்கள் இராணுவத் தாக்குதலால் கொல்லப்படுவதாக உங்களுக்கு எதிரான குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன. இதற்கு உங்கள் பதிலென்ன?
விடுதலைப் புலிகள் சாதாரண பொதுமக்களை ஒருபோதும் கொல்வதில்லை. அத்தகு தாக்குதல்களை நாங்கள் எதிர்க்கிறோம். சில வேளைகளில் சில ஊர்க்காவல் படையினரைக் கொல்ல வேண்டிவருகிறது. அவர்கள் சாதரண மக்கள் அல்ல. போர்முனையில் தேவைப்படாத, ஆனால் பயிற்சி பெற்று துப்பாக்கி அளிக்கப்பட்ட இராணுவ வீரர்கள்.

உங்களிடம் எவ்வளவு வீரர்கள் உள்ளனர்? அவர்களுக்கு எங்கு பயிற்சி தரப்படுகிறது?
அது இரகசியம். 51,000 பேர்கொண்ட வலுமிக்க இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ளும் வலிமை உடையவர்கள் நாங்கள். மேலும் சிக்கல் மிகுந்த கெரில்லா யுத்தத்தை நடத்துவதற்கான முழுமையான தயார் நிலையில் உள்ளவர்கள்.

மற்ற குழுக்களுக்கிடையில் L.T.T.E.தான் முன்னணிப்படையாக உள்ளதாக எவ்வாறு கருதுகிறீர்கள்?
ஒழுக்கமும், படைஒழுங்கும் தலையாயது. தனிநபர் ஒழுக்கத்திற்கும், தேசபக்திக்கும் முதன்மை தருகிறோம். எங்கள் படைவீரர்கள் எதிரியின் கையில் சிக்கிவிடாமலிருக்க சயனைட் குப்பிகளை வைத்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் எங்களோடு உள்ளனர்.

உங்களை விமர்சிப்பவர்கள், உங்கள் இராணுவ நடவடிக்கைகளுக்காக போதைப்பொருள் கடத்துவதாகச் சொல்கிறார்கள். இதற்கு உங்கள் பதில்?
எங்களுக்குத் தேவையான நிதியை எங்கள் மக்கள் அளிக்கிறார்கள். எதிரிகளிடமிருந்து ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றுவதோடு, சர்வதேச சந்தையில் வாங்குகிறோம். எந்த நாட்டிலிருந்தும் ஆதரவு பெறுவதில்லை. இங்கு இந்தியாவில் நாங்கள் அரசியல் அகதிகளாக வாழ்கிறோம். இந்திய அரசு நாங்கள் இங்கு இருப்பதற்கான அனுமதியை மனமுவந்து அளிக்கிறது. நாங்கள் எங்களுக்கிடையே கடுமையான ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிக்கிறோம். குடிப்பதே கூடாது. எனில், நாங்கள் கடுமையான வெறுக்கும் போதைப் பொருளை கடத்துவதாக எவ்வாறு சந்தேகிக்கலாம்.

கியூபாவிலிருந்து இராணுவப் பயிற்சியினை நீங்கள் பெறுவதாக செய்திகள் வருகின்றனவே?முழுக்க முழுக்க எங்கள் சொந்த முறையிலான பயிற்சியே பெறுகிறோம். எனது இயற்கையான நுண்ணுணர்வுகள் வழியும் போர்த்திரைப்படங்களையும், கிளிண்ட் ஈஸ்ட்வுட் போன்ற அமெரிக்க ஹாலிவுட் நடிகர்களையும் பார்த்துக் கற்றுக் கொள்கிறேன். எனக்கு கியூப இராணுவப் பயிற்சி கிட்டிருப்பின் இன்னும் சிறந்த போராளியாகிருப்பேன்.

தமிழர்களுக்கான அதிகாரப் பிரிவினை தொடர்பாக மற்ற மிதவாதக் குழுக்களுடன் இலங்கை அரசு அண்மையில் நடத்திய பேச்சு வார்த்தையை எப்படிக் கணிக்கிறீர்கள்?
இலங்கை முன்வைத்துள்ள யோசனைகள் ஒரு பேச்சுவார்த்தையை தொடங்குவதற்குக்கூடக் போதுமானவையல்ல. நாங்கள் பேச்சுவார்த்தைக்கென அடிப்படையாக நான்கு கோட்பாடுகளை வகுத்துள்ளோம்.
• தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
• தமிழர்கள் ஒரு தனி இனமாக(அரசால்) ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
• அவர்களுடைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
• குடியுரிமையற்ற தமிழர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இக்கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு முன்வடிவு உருவாக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் பரிசீலிப்போம்.

தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இலங்கை அதிபர் செயவர்தனே உண்மையிலேயே அக்கறை காட்டுகிறாரா?
செயவர்தனேவின் சமாதானத்திற்கான முன்மொழிவுகள் உலக நாடுகளை ஏமாற்றுவதற்கான ஒரு முயற்சியே. இப்பேச்சு வார்த்தைகள் ஒரு கண்துடைப்பு என்பதை பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே 150 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதிலிருந்தே தெளிவாகிறது. செயவர்தனேவுடன் பேச்சுக்கள் என்பது இரு நாடுகளுக்கான எல்லைகள் பற்றிய முடிவுக்கு பிறகுதான் சாத்தியம்.

இந்திய அரசு நீங்கள் இங்கிருந்து செயல்பட ஏன் அனுமதிக்கிறது?
முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில்தான். இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடந்து கொண்டுள்ளது. அந்த இன அழிப்புக்கெதிரான எங்கள் மக்களை பாதுகாக்கப் போராடி வருகிறோம்.

இந்திய அரசு பயங்கரவாதிகளுக்குப் புகலிடம் கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்போது சீக்கிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சி தருவதாக பாக்கித்தானைக் குறைக்கூறுகிறதே, இது பற்றி உங்கள் பார்வை என்ன?
இதில் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. எங்கள் மக்கள் ஒரு அரசுப்படையின் இன அழிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்திய இராணுவம் பஞ்சாப்பில் இன அழிப்பைச் செய்யவில்லை.

இந்தியா இந்த இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை வழியிலான ஒரு உடன்பாட்டை விரும்புகிறது. ஆனால், உங்கள் இலக்கான தனி ஈழத்தை எதிர்க்கிறது. இது பற்றி உங்கள் கருத்து?
உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. அதுபோலத்தான் அரசியலும். மாறிவரும் சூழல்களால் இந்தியா எங்கள் போராட்டத்தை அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தியா பல்வேறு விடுதலைப் போராட்டங்களை அங்கீகரித்துள்ளது. பாலத்தீன விடுதலை இயக்கத்தையும் “சுவாபோ”வையும் அங்கீகரித்ததைப் போல எங்களையும் அங்கீகரிக்க வேண்டிய நிலை வரும்.

அமெரிக்காவிடமிருந்து நீங்கள் எதை எதிர்ப்பார்க்கிறீர்கள்?
ஒரு இன அழிவை எதிர்நோக்கியுள்ள ஒரு இனம் என்பதை அமெரிக்க மக்கள் உணர வேண்டும் என வேண்டுகிறோம். எங்கள் மக்களை அழிப்பதற்கு இலங்கை அரசு பயன்படுத்தும் அனைத்து உதவிகளையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் எனக் கோறுகிறோம்.

சுதந்திரம் பெற்ற தமிழீழ அரசின் ஆரசியல் அமைப்பு எவ்வாறு அமையும்?
ஒரு சோசலிச சமூகத்தை நிறுவ விரும்புகிறோம். எங்களது சமூகம் சோவியத் யூனியன் போலவோ, சீனா போலவோ அல்லது வேறு எந்த நாட்டைப் போலவோ அன்றி ஒரு தனிவகைப்பட்டதாக இருக்கும்.

நீங்கள் கூறும் இன அழிப்பதைத்தடுக்க இந்திய இராணுவம் தலையிட வேண்டும் என்று எப்போதாவது யோசித்தீர்களா?
இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ளும் வலிமை படைத்த ஒரு போர்ப்படையாகிய எங்களுக்கு இந்திய இராணுவத் தலையீடு அவசியமில்லை. உண்மையில், இந்தியாவின் தலையீடு மற்ற தேசப்படைகளும் தலையிட அனுமதித்து மேலும் குழப்பங்கள் உருவாகும்.

வீக் இதழ்
சந்திப்பு : தீப் மஷும்தார்
23, மார்ச் 1986


[wow][/wow]


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Dec 04, 2010 12:23 pm

1986

ஒரு போராளி தலைவர் உருவாகிறார்





செப்ரம்பர் 1986 இந்தியாவிற்கு மிக முக்கியமான காலக்கட்டம். ஏனெனில், அப்பொழுது தான் இலங்கை தமிழர்கள், ஆயுதக் குழுக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவருடனான கேள்விகள் நிறைந்திருந்த காலக்கட்டம் அது. தி இந்துவிற்காக என்.ராம், சென்னையில் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் எடுத்த பேட்டியின் தமிழ் வடிவம் இது. பேட்டி 1986 செப்ரம்பர் 4 மற்றும் 5 ஆகிய தினங்களில் ‘தி இந்து’ நாளேட்டில் பிரசுரமானது.

திரு.பிரபாகரன், இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடக்கும் இராணுவ நடவடிக்கைகளையும் மக்களின் பிரச்சனைகளையும் நீங்கள் எவ்வாறு வகைப்படுத்துகிறீர்கள்? இப்பிரச்சனையின் தன்மை என்ன? எங்கள் மண், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலப்பகுதி. எங்கள் பகுதிகளை உற்று நோக்கினால், சிறு பகுதிகளில் கூட பெரும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும். இராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளும் உண்டு. இன்றைக்கு கூட மட்டக்களப்பில் ஆர்மி 5 அப்பாவி நிராயுதபாணிகளை சுட்டுக் கொன்றுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுகிறது. தெருக்களில் நடக்கும் பொழுது எந்நேரமும் சுட்டுக் கொல்லப்படலாம் என்ற பயத்துடனேயே அங்குள்ள மக்கள் வாழ்கிறார்கள்…

பொதுவாகப் பரந்துபட்ட நிலையில், மற்ற ஆயுதக் குழுக்களின் நிலைப்பாடு மற்றும் செல்வாக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தமிழ்ப் பகுதிகளில் உங்களது நடவடிக்கைகள் குறித்து அவர்கள் நிலைப்பாடு என்ன? மேலும் இராணுவத்துடன் அவர்கள் கொண்டுள்ள உறவுகள் குறித்தும்?இராணுவத்தைப் பொறுத்த மட்டில், பொது நிர்வாகம் குறித்த உடன்பாடுகளோ ஒப்பந்தங்களோ அங்கு இல்லை. அதுதான் அங்கு நிலை. பொது மக்கள் பங்களிப்பு அங்கு இல்லை. மக்கள் அவர்களது இல்லங்களில் அமைதியாக வாழ முடிவதில்லை. எந்த நேரமும் அவர்களது வீடுகள் தாக்கப்படலாம். எந்த நேரமும் இராணுவம் அங்குள்ள கிராமங்களைச் சுற்றி வளைத்து அங்குள்ளவர்களை சுட்டுக் கொல்லலாம். நேர்மையான எந்த ஒரு விசாரணையும் அது போன்ற சம்பவங்களுக்கு நடத்தப்படாது. இது போன்ற அத்துமீறல்களுக்கு இராணுவம், இதுவரை எந்தவித விசாரணையும் நடத்தாத நிலையில் நாங்கள் அந்த நிர்வாகத்தை நடுநிலையானது எனச் சொல்ல முடியுமா? எங்களைப் போன்ற இயக்கங்களைப் பொறுத்தவரை, இந்த பெரும் பகுதியில் நாங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தாலும், மற்ற இயக்கங்கள் சிறு சிறு பகுதிகளில் அதனை முன்னெடுத்துள்ளனர். பொதுவாக, எங்களைப் போன்ற இயக்கங்களின் நிலை என்ன? மக்களின் பாதுகாப்புக்காகவும் தற்காப்புக்காகவும் செயல்படும் போர்ப்படைகளாகவே அவர்கள் செயல்படுகிறார்கள். அரசின் இராணுவம் ஒரு பாசிச, அழிவு ஆயுதச் சக்தியாக செயல்படுகிற நிலையில், நாங்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கான தேசிய மக்கள் இராணுவமாக செயல்படுகிறோம்.

சிறீலங்கா அரசிற்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையிலான உடன்படிக்கைக் குறித்து உங்கள் பார்வை என்ன? அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? அந்தப் பேச்சுவார்த்தைகள் முழு வடிவத்தைப் பெறவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, பேச்சுவார்த்தையில் பங்கு பெற்றவர்கள்கூட முழுமையான நிலைக்கு வரவில்லை. ஒரு முழுமையான செயல்வடிவம் பெற்றதாக அது தெரியவில்லை. அவை முழுமையான செயல் வடிவம் பெற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

ஒரு செய்தித்தாள் அறிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஒருவர் இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடுவதில் உள்ள கஷ்டங்கள் என குறிப்பிட்டிருந்தார்…அவர்கள்தான் அக்கேள்வியை எழுப்பியிருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு வரையரை கிடையாது. தாயகத்தை பற்றி பேசும் பொழுது, எமது தாயகம் எது? எதைப் பற்றி ஒருவர் பேச வேண்டும்? மாகாண கவுன்சில்கள் மற்றும் மாகாணங்கள் பற்றியா அல்லது அதற்கு மேலான அதிகாரங்களைப் கைவிடுவது பற்றியா? அவர்கள் இது பற்றி எந்தத் திட்டமும் வைத்திருக்கவில்லை.

இதற்கு முன்னர் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துனீர்கள். அந்தப் பேச்சுவார்த்தை நீர்த்துப் போகச் செய்யமாட்டோம் என்று இந்திய அரசிற்கு உத்திரவாதம் கொடுத்திருந்தீர்கள். அந்நிலைமை மாறக் காரணம் என்ன? பேச்சுவார்த்தைக்கு எங்களால் தடங்கல்கள் ஏற்படக் கூடாதென்ற நல்லெண்ணத்தில் இந்தியா அவ்வாறு செய்ததினால், பேச்சுவார்த்தையின் போது, தமிழர் விடுதலைக் கூட்டணி குறித்து எங்களால் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்க முடியாமல் போனது. அதே நேரத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், முதல் சுற்று பேச்சுவார்த்தைக் குறித்து எங்களிடம் விளக்கிய பின்பு ஆலோசனைக்காக தில்லி சென்றார்கள், அதன் பின்பு எங்களிடம் தகவல்கள் ஏதும் தெரிவிக்காமல் கொழும்பு சென்றார்கள். எங்களிடம் பேசுகையில், அவர்களால் ஒரு முழுமையான முடிவுக்கு வரமுடியாதென தெளிவுபடுத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளில் நாங்கள் மறைமுகமாக பங்கேற்கிறோமா என்பதே அது. சிறீலங்கா அரசுடன் திட்டமிடாத பேச்சுகளில் அவர்கள் ஈடுபட்ட போது, தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான உறவு குறித்து மக்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதன் மூலமும் தமிழர் விடுதலைக் கூட்டணியை அம்பலப்படுத்துவதன் மூலமும் மக்கள் மனதில் உள்ள குழப்பத்தை நீக்க முடியும் என நம்பினோம். அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பங்கை மக்களுக்கு அறிவிக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப் பட்டோம்.

தமிழர் பிரச்சனைக்கான இறுதித் தீர்வாக நீங்கள் முன் வைக்கும் தமிழீழம் என்பது புலிகளுக்கும் உங்களுக்கும் மட்டுமானதா? அல்லது இதற்கு நிகரான தீர்வை முன்வைக்கும் வரைக்குமான குரைந்தபட்ச அரசியல் தீர்வா? தற்போதைய சூழ்நிலையில் தமிழீழத்திற்கான போராட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நீங்கள் நம்புகிறீர்களா? நிச்சயமாக. எங்களது வரலாற்றுப் பின்னணியை நீங்கள் பார்த்தீர்களானால், எங்களது 30 ஆண்டு காலப் போராட்டமே எங்களை இந்த முடிவிற்குக் கொண்டு வந்திருக்கிறது. என்வே, தமிழீழம் மட்டுமே எங்களுக்கு பாதுகாப்பான தீர்வாக இருக்கும் என்றும், இதற்கு மாற்றாக வேறெந்த தீர்வும் இருக்காது என்றும் நம்புகிறோம். எங்கள் தேவைகள் வலிந்து உருவாக்கப்பட்டவை அல்ல. கூட்டாட்சி அமைப்பிற்காக எமது மக்கள் 1961 ஆண்டில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதின் விளைவாக அரசு நிர்வாகம் முடக்கப்பட்டது. அபொழுதே, கூட்டாட்சிக்கான கோரிக்கை வலுவுடனும் கூர்மையாக எழுந்தது. அப்படியெனில் இன்றென்ன நிலைமை?(பலமாகச் சிரிக்கிறார்…) ஒரு பின்னோக்கியப் பார்வை…

உங்கள் தத்துவப் பார்வை மற்றும் அரசியல் குறித்து சில கேள்விகள். எவ்வளவோ விடயங்கள் உங்களைப் பற்றியும் புலிகளைப் பற்றியும் எழுதப்பட்டுவிட்டன. எல்லோரும் ஏதோ ஒரு விதமான அரசியல் தீர்வை முன்வைக்கின்றனர். அதே போல், உங்களது அரசியல் தீர்வாகவும், தத்துவமாகவும் எதனை நீங்கள் முன்வைக்கிறீர்கள்? சோசலிசமும் தமிழீழமுமே எங்களது அரசியல் தத்துவமும் தீர்வும் ஆகும்.

பத்திரிக்கையாளர்களும் வெளிப்பார்வையாளர்களும் தமிழ் ஆயுதக் குழுக்களைப் பற்றி குறிப்பிடுகையில். ஒரு சில இயக்கங்களை ‘தேசியவாத’ முனைப்பு மற்றும் நடைமுறை கொண்டவை அல்லது ‘சோசலிச’ அல்லது ‘இட்துசாரி’ இயக்கங்கள் என்று கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக. புலிகள்(இதற்கு முன்னர் டெலோ) போராட்டத்தில் இணைந்ததற்கு ‘தேசியவாத’ பார்வை இருந்ததாகவும், ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.ஃப். போன்ற இயக்கங்களுக்கு சோசலிசம் மற்றும் இடதுசாரி அரசியல் குறித்து ஓரளவு பார்வை இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த பாகுபடுத்தல் குறித்து தங்கள் கருத்து என்ன?என்னைப் பொறுத்தவரை எல்லா ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளும் ஒன்று தான். நடைமுறையில் ‘தேசியவாதிகள்’ எனப்படுவோர்க்கும் ஏனையோர்க்கும்(சிரிக்கிறார்) இடையில் என்ன வேறுபாடுகளைக் காண முடியும்? சோசலிசத்தின் தன்மை அதை நடமுறைபடுத்துவோர்க்கும் நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்பவர்களுக்கும் வேறுபடும். எல்லோரும் தன்னை சோசலிஸ்ட் என்கிறார்கள். அதனை அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அதனை நீங்கள் தீர்மானிக்க முடியும். மக்களின் ஆர்வத்தையும் உணர்வுகளையும் முழுமையாக பிரதிபலிக்கும் ஒரு சோசலிசத்தைத்தான், பெருந்திரள் மக்களின் உணர்வுகளை மதிக்கும் ஓர் சோசலிசத்தைத்தான், ஒரு முறை, “யூகோஸ்லோவியா நடைமுறை” பற்றி குறிப்பிட்டேன். அதை நாங்கள் சோசலிச அரசியலில் சனநாயகத்தை மேம்படுத்துவது குறித்த சோதனையாக அதனைப் பார்க்கிறோம். உழைக்கும் மக்கள் அதிகாரத்திலுள்ளபோது, சோசலிச கட்டமைப்பில் சநாயகப் பங்களிப்பும் அனுமதிக்கப்படுவதுண்டு.

எங்களது நோக்கம், சோசலிச அமைப்பில் மக்கள் சனநாயகத்திற்கு அதிகளவு பங்களிப்பை ஏற்படுத்துவது அனுமதிப்பதுதான். யூகோஸ்லோவியா நடமுறையை நம்முடையதாக நாம் ஏற்கவில்லை. எங்களுக்கான செயல் வடிவத்தை அது எதிர்காலத்தில் நடைபெறும்பொழுது நாம் உருவாக்குவோம். யூகோஸ்லோவியா செய்ய முயன்ற இன்னொன்றையும் நாம் பார்க்கலாம். நேரு காலத்தில் அவருடைய ஒத்துழைப்புடன் ஒரு ‘மூன்றாவது அணியை’ ஏற்படுத்த யூகோஸ்லோவியா முயன்றது. அதுவே ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கமானது. போராட்டக் களத்தில் பங்கெடுத்துக் கொண்ட அதேவேளையில், யாரையும் சார்ந்திராத நடுநிலையை அவர்களால் எடுக்க முடிந்தது. இவை எங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் அவற்றை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டோம். அவ்வழியிலேயே சிந்தித்தோம். எங்கள் மக்களுக்கு பொருந்துகின்ற, எங்கள் பண்பாட்டிற்கு ஏற்ற ஒரு புதிய வகை சோசலிசத்தை நாங்கள் சிந்திக்கிறோம். பெரும் முதலாளிகள் இல்லாத எங்கள் மண்ணில், எங்களுக்கு ஒரு புதுவிதமான சமூகக் கட்டமைப்பு உள்ளது இருந்த போதும், நடுத்தர வர்க்கத்தினர் இங்கு அதிகம்.

உங்களது அமைப்பு ஒரு கட்சி ஆட்சிமுறையில் நம்பிக்கை வைத்துள்ளதால், விடுதலைக்குப் பிறகு அதனையே செயல்படுத்துவீர்கள் என ஒரு கருத்து உள்ளதே. அது விவாதங்களையும் எழுப்பியுள்ளது… அது அந்த மக்கள் எதை வேண்டுகிறார்கள் என்பதை சார்ந்தே இருக்கிறது. அவர்கள் எந்தக் கட்சியை வேண்டுமானாலும் சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அரசியல் காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தவில்லையா? இன்றைக்கும் அது ஆளவில்லையா? எங்கள் நிலைப்பாடு எழுப்பும் சந்தேகங்களையும், ஊகங்களையும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். உயர்ந்த வழிநடத்தும் கொள்கைகளுடன் போராட்டத்தில் ஒதுங்கி இருந்த பலரின் மீதும் நாங்கள் கூறியவை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து சோசலிச நாடுகளையும் பாருங்கள். அங்கு என்ன நடக்கிறது? புரட்சிக்கான பணி செய்து, மக்களின் அங்கீகாரம் பெற்று ஆட்சி செய்யும் கட்சிகள் இல்லையா? க்யூபா, சோவியத் யூனியன் பற்றும் அனைத்து சோசலிச தேசங்களையும் பாருங்கள். எப்படியோ, இது ஒரு அவசியமான தேர்வாகவே இயல்பில் நான் பார்க்கிறேன்.

உங்கள் நிலைபாட்டிற்கு ஏராளமான புறநிலைக் காரணிகள் உள்ளன. நிறையப் பேர், தங்களை ஒழுக்கமான, தியாகங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் சாதுர்யமான தலைவராக காண்கிறார்கள். அதேவேளை, அவர்கள் உங்கள் “கருணை இல்லாத்தன்மை” பற்றியும் நினைவுபடுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக. நியூயோர்க் ரைம்ஸ் ஏட்டில் அண்மையில் வெளியான ஒரு கொழும்புத் தகவல், “உலகின் எண்ணத்தக்க கெரில்லாத் தலைவர்கள் பட்டியலில், இரக்கமில்லாத் தன்மையுடன், இராஜதந்திர மதிநுட்பத்தையும் கொண்ட ஒரு புதிய பெயரை மக்கள் சேர்த்துள்ளனர். வேலுப்பிள்ளை பிரபாகரன்…” உங்களது நடவடிக்கைகள் மனிதநேயத்தையோ, விரிந்த சனநாயகத் தன்மைகளை உள்ளடக்கியோ நடக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டிற்கு நீங்கள் சொல்வது என்ன? வெளிப்படையாக சொல்லப்போனால், இராணுவ ஒழுக்கம் என்பது இயல்பாகவே இரக்கமில்லாத் தன்மையுடையது. எந்த ஒரு நாட்டிலும், ஒழுக்கம் என்பது பல சிறப்புக் காரணிகளையும் உடையது. அது கம்யூனிச நாடாகட்டும், சனநாயக நாடாகட்டும், இராணுவத்தின் கட்டுப்பாடுகளும் விதிகளும் இயற்கைக்கு எதிரானவையே. எல்லா இராணுவ நடவடிக்கைகளையும் பாருங்கள், எதிர்விளைவுகளை விட வெற்றியின் நோக்கமே பெரிது. இராணுவ விவகாரங்களில் வெற்றிக்கே அதிக முக்கியத்துவம். இன்னொரு புறத்தில், நாங்கள் மக்களுக்கான போர்ப்படையினர். எதிரியின் மீதான எங்களது இரக்கமற்றத்தன்மை குறித்தே எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இரக்கமற்ற எதிரியை எதிர்கொள்ளும் பொழுது அமைதிவழிகளை எப்படிக் கையாள முடியும்? எங்களால் அது முடியாது. அது தான் உண்மை. ஆனால், எங்களது நடைமுறைகளிலிருந்து நாங்கள் கடைபிடிக்கும் ஒழுக்கம் மற்றும் இலட்சியம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

ஒழுக்கம் குறித்து சில எடுத்துக்காட்டுகள் அளிக்க முடியுமா? ஒழுக்கம் என்பது என்ன? மக்களுக்கெதிரான, சமூக விரோத, நடவடிக்கைகளுடன் இதனை தொடர்புபடுத்திப் பாருங்கள். எங்களது இயக்கத்தில் இருப்பதால், ஒருவர் மக்களுக்காக போராடுபவராக அவர் இருக்கிறார் என்று பொருள். ஒருவேளை அவர் மக்களுக்கு எதிரான காரியங்களில் அவர் இறங்கினாலோ அல்லது சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாலோ, அதனை நாங்கள் ஆதரித்தாலோ அல்லது கண்டுகொள்ளாமல் விட்டாலோ, அது இந்த போராட்டத்தையே தவறான வழிக்கு கொண்டு செல்லும், மேலும், எதிர்திசைக்கு இதனைக் கொண்டு சென்றுவிடும். மக்களுக்காக போராடுபவராக இல்லாமல் அவர் மக்களின் எதிரியாகிறார். இந்த வழியிலும் பாருங்கள். ஆயுதம் தரித்தவர்களின் நிலையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள். ஆயுதங்கள் கொண்டவர்கள் அதிகாரங்களையும் கைக்கொள்கின்றனர். இந்த அதிகாரம் தவறான வழியில் வழிநடத்தப்பட்டால், அது சர்வாதிகாரத்தில் தான் முடியும். அதனால் தான், எங்களது இராணுவ இயக்கத்தை மிகவும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்ட்தாக வைத்திருக்கிறோம். இரக்கமற்றவர்களுக்கு எதிராகவே நாங்கள் இரக்கமற்றத் தன்மையை கடைபிடிக்கிறோம் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் எங்களால் வெல்ல முடியாது.

ஆனால், சில சமயங்களில் உங்களது இயக்கத்தால் அப்பாவி சிங்களர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அனுராதாபுரம் படுகொலை…? நாங்கள் அதனை மறுத்துவிட்டோம், அதனி கண்டித்தும் இருக்கிறோம்.

முக்கிய கேள்வி. உங்களது போராளிகள் கழுத்தில் சயனைட் குப்பிகள் கட்டியிருப்பதாக அறிகிறோம். இது கவர்ச்சிக்காக செய்யப்பட்டதா? ஆம், நாங்கள் இதனை வெகு தொடக்கத்திலிருந்தே கடைப்பிடித்து வருகிறோம். இதன் விளைவாக பல தோழர்கள் தங்களை தியாகம் செய்திருக்கிறார்கள். எங்களது இயக்கத்தினர் யாரையும் நீங்கள் சிறையில் பார்க்க முடியாது. எந்த நிலையிலும், நீங்கள் இதனை விரல்விட்டு எண்ணலாம். விதிவிலக்காக, இரண்டு அல்லது மூன்று நபர்கள், எங்களது நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளாதவர்கள். எங்கள் போராளிகளுக்கு சொல்வதெல்லாம் இதுதான், நமது உயிரை விடுவதன் மூலம், எமது அனுதாபிகள், தொடர்புகள் மற்றும் எங்களுக்கு உதவியாகவும் துணையாகவும் நிற்கும் மக்களைக் காக்கின்றோம். இல்லையெனில், எமக்கு உதவி புரிந்த பெருங்கூட்டமான எமது மக்கள் அவர்தம் குடும்பங்கள் சிறையிலிருக்க நேரிடும். ஆனால், இந்த நடைமுறைக்கு இது மட்டுமே காரணம் அல்ல.

இந்த சயனைட் தான் எமது இயக்கத்தை வேகமாக வளர்க்க உதவியது. சயனைடை அணிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் நமது ஈடுபாட்டை, நமது இலட்சியத்தை, நமது பற்றுதலை அடையாளப்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணப் பகுதி கமாண்டர் கிட்டு ஒரு நேர்காணலில் கூறினார். “எங்களது கழுத்தில் சயனைட் இருக்கும் வரை, இந்த உலகில் வேறு எந்த சக்திக்கும் நாம் பயங்கொள்வதில்லை”. உண்மையில் சொல்லப்போனால், எங்கள் போராளிகளுக்கு, எமது செயல்பாடுகளின் மீதான நம்பிக்கையை இது அதிகரிக்கிறது. ஒரு சிறப்பு உந்துசக்தி. முழுமையாக நமது உயிரையும், மற்ற அனைத்தையும் எமது செயல்பாடுகளுக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதை இது உணர்த்துகிறது. தாக்குதல்களின் போது, எங்கள் போராளிகள் அவர்களது உயிர்களை பொருட்படுத்துவதில்லை. பீரங்கித் தாக்குதலைப் போலவோ குண்டுக் குவியலாகவோ அவர்கள் முன்னேறிச் செல்வார்கள்.

உங்களது புரட்சிகரப் போராட்டத்திலோ அல்லது விடுதலை இயக்கங்களிலோ அல்லது இந்த பூமிபந்திலோ நீங்கள் காணும் கதாநாயகர்களை அறியத் தர முடியுமா? மற்றும், பள்ளிப் பருவத்திலிருந்து நீங்கள் காணும் அரசியல் பரிமாணங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்… எனது பள்ளிப் பருவத்திலிருந்து, என்னை மிகவும் பாதித்தது இந்திய விடுதலைப் போராட்டமே. நேதாஜியின் பங்கு என்னை மிகவும் கவர்ந்தது. பள்ளிப் பருவத்திலிருந்தே நான் மிகவும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் மிகுந்த சூழலில் தான் வளர்ந்தேன். வெளியாட்களுடன் பழகுவதற்கு நான் அனுமதிக்கப்படவில்லை. எனக்கு பெண்களுடன் பழகுவதில் கூச்சம் இருந்தது. நேர்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவை என்னை அடைத்து வைத்திருந்தன. எனது தந்தை அவரது நடத்தையை எனக்கு முன்மாதிரியாக்கினார். அவர் கருவேப்பிலைகூட உண்ண மாட்டார். அவரையே நான் முன்மாதிரியாகக் கொண்டேன். அவர் ஓர் அரசாங்க அதிகாரி. ஒரு நேர்மையான மனிதர். அவர் நடந்து சென்றால், புல்வெளிக்குக்கூட காயம்படாதவாறு நடந்து செல்வார் என எம்பகுதி மக்கள் கூறுவார்கள். என்னை குற்றம்சாட்டும் பொழுதுகூட, அப்படிப்பட்டவருக்கு இப்படியொரு பிள்ளையா என்பார்கள். அவர் மிகவும் கடுமையானவர். ஆனால், மென்மையாகவும் சொல்வன்மையுள்ளவராகவும் இருந்தார். எனது விடயங்களிலேயே அவர் தோழனாகவும், காரணகர்த்தாவாகவும் விளங்கியவர். நிறைய அறிவுரைகளும், விவாதங்களும் என்னிடம் செய்வார். முன்பு சொன்னது போல, குறிப்பாக நான் பெண்களைக் கையாளுவதில், கூச்ச சுபாவத்துடனேயே, வளர்ந்தேன்.

சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவயதில் கூட, நான் காந்திஜியின் சத்தியத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் நடத்திய சோதனைகளை புத்தகங்களில் படித்திருக்கிறேன். குறிப்பாக, சுபாஷ் என்னை சிறுவயதிலேயே கவர்ந்திருக்கிறார். அவர் ஆன்மீகத் தேடலில் இருந்த போதும், தனிமையில் இருந்த போதும், திரும்பியதும்…(சிரிக்கிறார்…) நான் இந்த வரலாற்றையும் கதைகளையும் ஆர்வத்துடன் பின்பற்றினேன். அவர் எனது சிறப்புக் கதாநாயகன் ஆனார். அது மட்டுமின்றி, அவரது பல பேச்சுகள் என்னை கவர்ந்திழுத்தன. எடுத்துக்காட்டாக, “எனது கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை எமது மண்ணின் விடுதலைக்காக நான் போராடுவேன்”. இந்த வார்த்தைகள் என்னை வந்தடைந்தபோது துளைத்தெடுத்தன. பிறகு, பகத்சிங்கின் கதை என்னை மிகவும் கவர்ந்தது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், எதிரிகளை திருப்பித் தாக்கியவர்கள், அநீதிக்கு எதிராக திரும்பத் தாக்கியவர்கள் என பலரது வரலாறும், வாழ்க்கையும் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஏனெனில், எமது மண்ணில், சிங்களர்கள் எம்மீது மிகவும் குரூரமாக நடந்து கொண்டனர். இதைப் பற்றிய கதைகளை, அந்த குரூர நடவடிக்கைகளை நாம் புத்தகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாயிலாக கேட்டிருக்கலாம்… பின்பு, 1958இல் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல் அத்தியாயத்தை நான் உன்னிப்பாக படித்தேன்… பனடுராவில் ஒரு கோயிலை உடைத்துச் சென்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஒரு பிராமண புரோகிதரை ஒரு கட்டிலில் கட்டி, பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்தார்கள். நம்முடையது கடவுளுக்கு பயந்த ஒரு சமூகம். மற்றும் மக்கள் மதக் கருத்துக்களில் இருப்பவர்கள். அப்பொழுது பெருமளவில் பரவிய உணர்வு என்னவெனில்: ஒரு புரோகிதர் உயிருடன் எரிக்கப்பட்டிருக்கிறார். நம்மால் ஏன் திருப்பியடிக்க முடியவில்லை? மக்களை ஆழ்ந்து சிந்திக்க வைத்த ஓர் அத்துமீறல் அது. இன்னொரு சூழலில், ஒரு குழந்தையை கொதிக்கும் தாரில் தூக்கி வீசினார்கள். இவை என் மனதிலும் என்னை சுற்றியிருந்தோர் மனதிலும் ஓர் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்தியது. இப்படியான அப்பவி உயிர்கள் அழிக்கப்பட்டால், நாம் ஏன் திரும்பத் தாக்கக் கூடாது? அநீதிக்கு எதிரான ஆயுதத் தாங்கியப் போராட்ட அனுபவத்தில் கவரப்பட்ட நான், அகிம்சையின் சக்தியாலும் கவர்ந்திழுக்கப்பட்டேன். நேர்முகப் படுத்தப்பட்ட தேடல் குறித்த எடுத்துக்காட்டுகளால் ஈர்க்கப்பட்டேன். இந்த கண்ணோட்டத்துடனேயே எனது கடந்த கால வாழ்க்கை சிந்தனைகள் ஓடின… நாம் ஏன் அவர்களைப் பின்பற்றக் கூடாது? நாம் ஏன் ஆயுதந் தாங்கிய போராட்டத்தில் ஈடுபடக் கூடாது?

நெப்போலியனின் எழுச்சி மற்றும் அவரது வழித்தோன்றல்களின் புத்தகங்களை நான் படித்தேன்… இவ்வகையான வரலாறு எனக்குள் ஓர் புத்துணர்வை ஏற்படுத்தியது. மகாபாரதத்தில், பீமன் மற்றும் கர்ணரின் பாத்திரங்கள், என்னை மிகவும் கவர்ந்தன. தியாகத்தின் வலிமையை உணர்ந்தேன். மகாபாரதத்தின் பாத்திரங்களை மக்கள் வெவ்வேறு விதங்களில் காணுவர். நான் கர்ணரின் குணத்தையும் பாத்திரத்தையும், முழுமையான தியாகத்திற்குத் தயாராகவிருந்த கோணத்தில் பார்த்தேன். விவேகானந்தரின் சில சொற்பொழிவுகளையும் கருத்துகளையும் படித்தபோது, ஒரு வலிமையான இளைஞர் சக்தியை உருவாக்கும் எண்ணம் எனக்குள் வளர்ந்தது. இந்த வழிகளில் நான் சிந்தித்தேன். என்ன வயதென்றால்? சுமார் 16 வயதாயிருக்கும் பொழுது இந்த உணர்வுகளும் சிந்தனைகளும் செயல்வடிவம் பெறத்துவக்கின. கிருபானந்த வாரியாரின் ஆன்மீக சொற்பொழிவுகளை நான் கேட்டதுண்டு… நான் இது போன்ற மதத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கெல்லாம் சென்று கொண்டுதானிருந்தேன்… அரசியல் கூட்டங்களுக்கு சென்று கவனிப்பேன், எங்கள் பகுதியில், சாக்ரடீஸ் பற்றிய நாடகங்கள் நடப்பதுண்டு…

மிகவும் சிறுவயதிலிருந்து நடந்த விடயங்கள் ஏற்படுத்திய தாக்கம், நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருந்தது. எங்களது வரலாற்றுப் பின்னணியைப் பார்த்தால், எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் ஆயுதங்களை எடுக்க வேண்டியிருந்தது. நாங்கள் தற்காப்பில்லாமல், ஆயுதங்கள் இல்லாமல் இருந்ததால், எங்களை எதுவேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதை பாடமாகக் கற்றோம். நாங்கள் ஏன் இப்படியே இருக்க வேண்டும்? வன்முறையை வன்முறையால் எதிர்கொண்டு திருப்பி அடித்தோம். அதன் பின்னர் தான், இந்த இயக்க நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டேன்.

விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை உற்று நோக்கும் நோக்கர்கள் பலரும், அதன் தலைவராகிய நீங்கள் அண்மைக்காலமாகத் தான் அரசியல் நடவடிக்கைகளில் ஆழ்ந்த ஆர்வம் காட்டுவதாகவும், அதற்கு முன்னர் நீங்கள் ஆயுத சிந்தனைகளில் மட்டுமே வாழ்ந்ததாகவும்(நீங்கள் கூச்ச சுபாவமுள்ளவர், மக்களை எளிதில் சந்திப்பதில்லை என்பதால் அரசியலில் இது கடினமாக்கியது) சொல்லப்படுகிறது. தற்பொழுது, பல அரசியல் பிரச்சனைகள் பற்றி நீங்கள் பேசுவதைக் காணமுடிகிறது. நிஜத்தில், ஓர் அரசியல் பின்னணியால் தன் ஆயுதப் போராட்டம் வடிவம் பெறும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அரசியல் தெளிவுடன் நான் இருந்திராவிட்டால்… 1973களில் நான் தலைமறைவாக இருந்த பொழுது, உங்களுக்குத் தெரியும் தலைமறைவு வாழ்க்கை எவ்வளவு கடினமானதென்று. ஒரு நீண்ட காலத்திற்கு நான் தலைமறைவாக இருந்தேன். 1973லிருந்து 1983 வரை, அது எங்களுக்கு கடினமான காலகட்டம், இராணுவம் வெறியுடன் இருந்தது… அவர்களது பொறியிலிருந்து தப்புவது கடினம். இந்த அனுபவங்களின் ஊடாக வந்து இன்றைக்கு நிலையாக நிற்கிறோம் என்றால், நாங்கள் அரசியல் அப்பாவிகள் அல்ல என்பதையும் அரசியல் பின்னணி தெரியாமல் செயல்பட்டவர்கள் அல்ல என்பதையும் உணர முடியும்.

ஆனால், இந்த அரசியல் பின்னணிகளுக்கு அப்பால் ஒரு விடயம் உண்மையானது, எனது இயல்பான குணாதிசயம், வார்த்தைகள் மீது முக்கியத்துவம் அளிப்பதில்லை. தீவிர அரசியலில், பேசுவதால் மட்டுமே வளரமுடியாது. செயல்பாடுகள் வளர்ந்த பின்னர்தான் பேச முடியும். எங்களை கவனித்தீர்களென்றால், களத்தில் எங்கள் செயல்பாடுகள் வளர்ந்த பின்னர்தான் நாங்கள் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்தோம். எங்கள் கொள்கைகளை விளக்கினோம். அதன் பின்னர் தான் எங்கள் வார்த்தைகள் அர்த்தமுள்ளதாயின. வார்த்தைகள் அவற்றின் அர்த்தங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். எமது மக்களுடனான உறவில் அது மிகவும் முக்கியம். மக்கள் எமது போராளிகளை மதிக்கிறார்கள் என்றால், அது இந்த கூடுதல் ஒழுக்கத்திற்காகத் தான். தனிப்பட்ட வாழ்வின் தன்மைகள், நேர்மையான வாழ்க்கைமுறை ஆகியவற்றினால் தான் எங்கள் புலிப் போராளிகள் மக்களை கவர்கிர்றார்கள். ஓர் அரசியல் கண்ணோட்டத்தைப் பற்றி பேசும்பொழுது, அவற்றை நம் செயல்பாடுகளால் நிரூபணம் செய்யும் பொழுதுதான் மக்கள் நம்மை மதிப்பார்கள். நமது செயல்கள்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் அர்த்தங்களை வழங்குகின்றன. இப்பொழுது சொல்வதென்றால், “அவர்கள் இராணுவத்தைக் கொண்டு எங்களைத் தாக்க முயல்வார்கள், நாங்கள் தடுப்போம், திருப்பி அடித்து மக்களைக் காப்போம்”, அது போலவே நாங்கள் செயல்படுகின்ற போது தான் எங்களுக்கான அரசியல் பெருமிதத்தையும் பங்கையும் உணர்கிறோம்.

அதனால்தான் நாங்கள் இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். உங்களுக்கு எங்கள் போராட்டத்தின் நோக்கம் தெரியும். சிறீலங்கா அரசு தனது இராணுவத்திற்கு இனவெறியையும் இனவாதத்தையும் புகட்டி வரும் சூழ்நிலையில், இராணுவ வலிமை கொண்ட ஓர் அரசியல் இயக்கமே உண்மையான தற்காப்பாக விளங்கும். உலகின் சுற்றிலும் பாருங்கள்.. அனைத்துப் போராட்டங்களும் இராணுவப் பின்னணியுடன் தான் இயங்கின. இந்திய விடுதலைப் போராட்டம் அகிமசை வழியில் நிகழ்த்தப்பட்டாலும், நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்திற்கு அதில் முக்கிய பங்குண்டு.. இந்திய வரலாற்றில் சுபாஷ்ஷிற்கு நிச்சயமாக ஓர் இடமுண்டு!

இன்றைய இந்திய அரசை எடுத்துக் கொள்ளுங்கள் தேசங்களுக்கிடையிலான போட்டியில், இந்தியாவின் இந்திய ஆயுதப் படைகள் எந்தளவிற்கும் சிறியதாக இல்லாததால் தான், இந்தியா எழுந்து நிற்கிறது. இல்லையெனில், சீனர்கள் தில்லி வரை வந்திருப்பார்கள்.



தி இந்து

சந்திப்பு:என்.ராம்

4,5-9-1986

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Dec 14, 2010 12:57 am

1986

இறுதிவரை போர்


வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் புலிகள் அமைப்பின் வலுமிக்க தலைவர். வெல்லமுடியாத ஒருவராக தோற்றமளிக்கிறார். பெரும்பான்மைத் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் எதிர்ப்போரில்லாத, ஆளுமைமிக்க, அந்த மூர்க்கமான கெரில்லா போராளி. நண்பர்களே அற்ற அவரது சென்னை ‘கோட்டையில்’ அவரைத் தங்க வைத்து உதவி செய்து வரும் தமிழக அரசு, அவரை மதிப்புமிக்க பீடத்திலிருந்து அப்போதுதான் கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டிருந்தது.



அவருக்குப் பொறுத்தமற்ற காந்திய நெறியிலான ஒரு போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். போராளி குழுக்களின் மீது தமிழக அரசு பாய்ந்ததை எதிர்த்து அவர் மேற்கொண்ட உண்ணாநிலை போராட்டம் வெற்றிபெற்றது. 24 மணி நேரத்தில் தமிழக அரசு இறங்கி வந்தது.

‘வீக்’ இதழுக்கான நேர்காணலுக்குச் சென்றபோது உண்ணாநிலைப் போராட்ட சோர்வு எதுவும் தென்படவில்லை. அவரது நிலைப்பாடு உறுதியாகவும், எச்சரிக்கையோடும், வெளிப்படையாகவும் இருந்தது. அவரது நேர்காணலிலிருந்து சில பகுதிகள்…



தமிழகத்தை தலைமயகமாகக் கொண்டு பல அலுவலகங்களோடு இயங்கிவரும் போராளிகள் மீது தமிழக அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கான பின்னணி என்ன என்பது எங்களுக்கே புரியவில்லை. ஆனால், இதற்கு மைய அரசின் ஒப்புதல் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. இத்தகு நடவடிக்கைகளுக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்கள் இந்திய அரசை ஒரு நெருக்கடியில் தள்ளியிருக்கிறார்கள் என்பதோடு, இலங்கைப் பிரேமதாசா போன்றவர்கள் தமிழகத்தில் இருந்துதான் போராளிகள் செயல்படுகிறார்கள் என்று ஹராரே மாநாட்டில் தெரிவித்த புகார்களுக்குத்தான் இது உதவியுள்ளது.

உலக நாடுகளின் கருத்தில் உருவாகியுள்ள இந்தியா ஒரு நடுநிலை நாடு என்ற தோற்றத்தை இது அச்சுறுத்தியுள்ளதோடு, இந்தியா எங்களுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் உள்ளதோ என இந்திய அரசின் நோக்கம் பற்றி எங்கள் மனதிலும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அண்மையில் அரசு தந்துள்ள உறுதிமொழி ஓரளவு மீண்டும் நம்பிக்கையைத் தந்துள்ளது.

இங்குள்ளவர்கள் நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்யப் போகிறீர்கள்?

குழுக்கள் தங்களது தவறான நடவடிக்கைகளைச் சரி செய்து கொள்வதோடு, இங்குள்ள மக்களோடு எந்தவித பிரச்சனையும் வராத அளவு நடந்து கொள்ள வேண்டும். எங்கள் குழுவைப் பொறுத்தவரை நாங்கள் இங்கு போரிட வரவில்லை. எங்களுடைய பிரச்சனைகளை அமைதியான வழியில் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று கருதுகிறோம்.

பேச்சுவார்த்தை முனையில் தற்போதைய நிலைமை என்ன?

தமிழர்களுக்கான தனி மாநிலம் என்பது எங்கள் அடிப்படைக் கோரிக்கை. எனவே, நாங்கள் விரும்புவது போல அந்தப் பிரச்சனை முடியாதவரை தொடர்ந்த பேச்சுக்கள் சாத்தியமில்லை. கொடுக்கல், வாங்கல் முறையில் சில பிரச்சனைகளை இறுதியில் சரிசெய்து கொள்ளலாம். போராளிகள் மட்டுமல்ல, ஈழத்தமிழ்க் குழுக்களில் உள்ள மிதவாதிகள் கூட தனிநாடு பிரச்சனையில் தெளிவாக உள்ளனர். ஜெயவர்தனே தனி மாநிலப் பிரச்சனையைத் தொடாமல் தொடர்ந்து ஆலோசனைகளை முன்மொழியும் வரை உடன்பாட்டிற்கு ஏது வழி?

ஆனால், ஜெயவர்தனே ‘இந்தத் தீவில் உள்ளோர் அனைவரும் சிறீலங்கா மக்களே. அவர்கள் ஒற்றைத் தேசிய அடையாளத்தில்தான் வரமுடியும். என்வே, தனிமாநிலம் என்பது எந்த வகையில் பொருந்தும்?, என்கிறாரெ…?

அது அவர் கருத்து. நாங்கள் அதை ஏற்கவில்லை. நான் சொல்வது என்னவென்றால், இலங்கையில் இருமொழி வழிப்பட்ட மக்கள் உள்ளனர். எனவே இத்தீவினை இருமொழிப் பகுதிகளாகப் பிரிப்பதில் சிக்கல் ஏதுமிருக்கமுடியாது. இந்தியா எப்படி மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதோ அது போன்ற மொழிவாரிப் பிரிவுகளை உருவாக்க ஏற்றுக் கொள்ளவேண்டும். ஜெயவர்தனே சொல்வது போல இந்தத் தீவில் உள்ள அனைவரும் இலங்கையர்கள் எனில் தமிழ்பகுதிகளிலுள்ள அப்பாவி மக்களை இராணுவம் கொல்வது ஏன்?

அப்படி ஒரு உடன்பாடு உருவானால் சிங்கள் மக்களுக்கும் தமிழர்களுக்கும் மத்தியில் அமைதியும் நல்லுறவும் ஏற்படுமா?

அது சிரமமானது. சேர்ந்து வாழ்வது ஏறத்தாழ வாய்ப்பில்லாதது. நீண்டகாலமாகவே புத்தத் துறவிகளாலும் அரசியல்வாதிகளாலும் மத எதிர்ப்பு ஒரு நீண்ட வரலாற்று வழியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இரு இனமக்களும் இணைந்து வாழ்வது சாத்தியமற்றது என்பதைப் புரிந்து கொண்ட பிறகுதான் தனி மாநிலத்திற்காக போராடத் தொடங்கினோம்.

ஜெயவதனே உண்மையில் ஒரு அரசியல் தீர்வின் வழியில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து ஒரு தேச மக்களாக வாழமுடியும் எனக் கருதினால் தமிழ்ப் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்றுவதைத் தொடர்ந்து செய்து வருவது ஏன்? வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழர்களைத் தனியாக வாழவிட வேண்டியதுதானே? அதைச் செய்ய முடியாது எனில், எந்தவித அரசியல் உடன்பாடும் ஏற்படாது. இறுதியில் தமிழ் ஈழம் அமையப்போவது உறுதி. எனவே அதற்குள் தமிழர்கள் பகுதிகளை இயன்றவரை கைப்பற்றிட வேண்டும் என்றும் உணர்ந்தே விரைவாக குடியமர்த்தலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இத்தமிழர் தாயகத்தில், முஸ்லிம்கள் சேர விரும்பவில்லையே. மேலும் மத்திய மாநிலங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்களும் இலங்கைக் குடியுரிமை பற்றியே சிந்தித்து வருகின்றனர்.

அச்செய்தி முழுக்க முழுக்க தவறானது. முஸ்லிம்கள் எங்களோடுதான் உள்ளனர். இலங்கை அரசின் ஆதரவிலுள்ள ஒரு சில முஸ்லிம்களே இப்படி மக்களைக் குழப்புகின்றனர். மற்ற போராளிக் குழுக்களிலும், எங்களுடனும் பல்வேறு முஸ்லிம் இளைஞர்கள் உள்ளனர். முஸ்லிம்களும் தமிழர்களே.. அவர்கள் சிங்களம் பேசுபவர்கள் அல்ல. அவர்கள் மற்ற தமிழர்களுடன் ஒற்றுமையாக இல்லையெனில் எளிதாகத் தாக்கப்படுவர். நாங்கள் இந்துக்களாகவும் முஸ்லிம்களாகவும் இருப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. முக்கியமானது எதுவெனில், நாம் அனைவரும் தமிழர்கள். நமக்கு எதிரான அடக்குமுறைக்கு ஒரு வரலாறு உள்ளது. இந்த பெரும் முக்கியத்துவமற்ற மதவேறுபாடுகளுக்காக நாம் இந்த அடக்குமுறையை ஒதுக்கவே முடியாது. முஸ்லிம் தமிழர்கள் எங்களுடன் பாதுகாப்புடனிருப்பார்கள். அது அவர்களுக்கே தெரியும்.

தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை எனது கருத்துப்படி அவர்கள் அங்கிருந்து வெளியேறி வடக்கே நாங்களிருக்குமிடத்திற்கு குடிபெரந்திட வேண்டும். அப்பொழுது தமிழர் வாழும் தொடர்பிரதேசம் ஒன்றாக ஆகி விடுவதோடு அனைவரும் பாதுகாப்பாக வாழலாம். ஜெயவர்தனே தனது அலோசனைகளை முன்வைக்கும் அதே நேரம் 18 தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இராணுவத்தால் சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதனாற்றான் தமிழர்கள் இந்துவோ முஸ்லிமோ அல்லது தோட்டத் தொழிலாளர்களோ ஒழுங்கிணைந்து அமைதியாக மதிப்புடன் ஒரே தமிழ்ப் பகுதியாக வாழலாம்.

அண்மையில் தமிழக முதல்வர், ஜெயவர்தனாவின் அலோசனைகளை நீங்கள் நிராகரித்ததாலும், தமிழர் குழுக்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாலும் தீர்வுக்கு வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறாரே?

இன்றைய இலங்கையின் அலோசனைகளிலிருந்து எந்த ஒரு உடன்பாடும் சாத்தியமில்லை என்று சரியாகவே சொல்லியுள்ளார். கெடுவாய்ப்பாக தமிழர் குழுக்களுக்கிடையிலும் கருத்து வேற்றுமைகள் உள்ளன என்பதும் உண்மையே. எவ்வாறாயினும் தமிழர்களுக்கென தனிநாடு என்ற கோரிக்கையில் முழு உடன்பாடு உள்ளது.

உங்கள் போராளிக்குழு ஏவுகணை செலுத்திகள், தொலைஇயக்க எறிகணை தளங்கள் போன்ற நவீன ஆயுதங்களுள்ள ஒரு பெரிய கெரில்லாக் குழுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், இலங்கை இராணூவத்தை வெல்லமுடியும் என்ற நம்பிக்கை உள்ளதா?

இன்றைய போரின் தன்மையையும், நாங்கள் போரிடும் பகுதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் பகுதி என்பதாலும் அதுபோன்ற ஒரு முற்று முழுதான போரைப் பற்றி பேச முடியாது. இது ஒரு நீண்ட போராக ஆனால் இறுதியான போராக எங்களுக்கு வெற்றி தரும் போராகவே இருக்கும். எம்மை இலங்கை இராணுவத்தால் வெல்ல முடியாது. நீங்கள் இதை உறுதியாக நம்பலாம்.

இந்தியாவிலிருந்து வெளியேறி ஈழத்திற்கு திரும்பிப் போரைத் தொடர்வது என எடுத்த முடிவையும், யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு ‘சுதந்திர தனிஈழம்’ என்ற பிரகடனம் வெளியிடுவதையும் ஏன் தள்ளி வைத்தீர்கள்?

(பலத்த சிரிப்புடன்) நான் வெளியே போகவேண்டும் என விரும்புகிறீர்களா? உண்மைதான். எங்கள் மக்களையும் தலைவர்களையும் மெல்ல மெல்ல ஈழத்திற்கு அனுப்பிவிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அண்மையில் இந்திய அரசின் சில அறிவிப்புகள் எங்களது கோரிக்கைக்கு நல்லெண்ணமும் ஆதரவும் இருப்பதாகச் சுட்டுகின்றன. எனவே அவசரமாக நாங்கள் வெளியேறுவதாக இல்லை. தவிர, நான் போவதானால், எப்போது போகிறேன் என்பதை அறிவிக்கமாட்டேன். பிரபாகரனை சில நாட்கள் காணவில்லையென்றால் நான் போய்விட்டேன் என்று தெரியும்.

சுதந்திரப் பிரகடனம் என்று அறிவிக்கப்போவதாக நாங்கள் எப்போதும் முடிவு செய்யவில்லை. ஊடகங்களில் தவறாக அறிவிக்கப்பட்டது. தீபகற்பப் பகுதியில் எங்கள் முழுக்கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில், மக்கள் எங்களுக்கு வரி செலுத்தும் பகுதிகளில், நிர்வாகத்தை சீரமைக்கப்போவதாகத் தான் நாங்கள் சொன்னோம். அத்தகு பகுதிகளில் நடமுறையில் எங்கள் அரசே இயங்கிவருகிறது.

நீங்கள் அண்மையில் கையிலெடுத்த சத்தியாகிரகம் என்ற போராட்ட ஆயுதம் உங்கள் மூலம் உங்களது தொலைதொடர்புக் கருவிகளையும் மற்ற குழுவினருடையவற்றையும் மீட்க முடிந்துள்ளது. உங்களது இதே சத்தியாகிரக ஆயுதத்தை தில்லியிலிருந்தும் சென்னையிலிருந்தும் செருக்கடிகள் வந்தால் பயன்படுத்துவீர்களா?

ஏன் கூடாது? இது ஒரு மிக மிக நாகரிகமான எதிர்ப்பு. அதன் வழியாகத்தான் புலிகளுடியது மட்டுமின்றி மற்ற குழுக்களின் தொடர்பு சாதனங்களைத் திரும்பப் பெற முடிந்தது. இதன்வழி நாங்கள் கெரில்லா போராளிகள் மட்டுமல்ல. தேவைகளையொட்டி வேறு வகைப் போராட்டங்களிலும் செல்லத் தயங்க மாட்டோம் என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளோம். இந்திய அரசோ, தமிழக அரசோ எங்கள் மக்க்ளுக்கு நன்மை தராத ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நெருக்கடி தந்தாலும் இதே போன்ற காந்திய வழியிலான போராட்டத்தை கையிலெடுப்பேன். எனது மக்களுக்காக உயிரைத் தர ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன். ஆனால், என்னை ஏற்றுக்கொண்ட இந்த நாடு நான் பட்டினியில் கிடந்து சாவதை அனுமதிக்காது என்பதும் தெரியும்.

அண்மையில் இசுரேல் அதிபர் கொழும்புவுக்கு வருகை தந்து சென்றுள்ளார். இராணுவ ரீதியில் இதற்கு முக்கியத்துவம் உண்டா?

அமெரிக்க அரசு எங்கள் பிரச்சனையில் முழுக்க முழுக்க தலையிட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி இலங்கைத் தீவில் நுழைய எண்ணுகிறது. அமெரிக்க இராணுவ ஆயுதங்களை ஜெயவர்தனேவுக்கு நேரடியாக வழங்க விரும்பவில்லை. ஆகவே, இசுரேல், பாக்கிஸ்தான், சீனா ஆகிய தனது முகவர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்தியப் பெருங்கடற் பகுதியில் தனது இராணுவத் தளம் ஒன்றிணை அமைக்க அமெரிக்காவுக்கு திருகோணமலை மிக முக்கியமானது. ஆனால், திருகோணமலைதான் தமி ஈழத்தின் தலைநகர். எனவே அதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை.

உங்கள் போராளிக்குழு டெலோ, பிளோட் போன்றவற்றுடன் மோதியுள்ளார்கள். இ.பி,ஆர்.எல்.ஃப் உடனும் மோதல் தொடங்கியுள்ளது. ஈரோஸ் ஒன்றுடன் மட்டுமே நட்புறவு உள்ளது. உங்களை விமர்சிப்பவர்கள் உங்களை சர்வாதிகாரி எனவும், சகிப்புத்தன்மையற்றவர் என கூறுகின்றனர். இது பற்றி உங்கள் பதில்?

எங்கள் மக்கள் விடுதலைக்காக உண்மையாகவே பாடுபடும் எந்த ஒருவருக்கும் தீங்கிழைக்க நான் விரும்புவனல்ல. ஆனால், எப்போது ஒரு போராளிக்குழு தனது இலக்கைவிட்டு விலகி, சமூக விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்கள் மத்தியில் ஒரு வெறுப்பை, சில நேரங்களில் விடுதலைப் போரின் தேவையையே கேள்விக்குள்ளாக்குமளவுக்கு உருவாக்குகிறதோ, அத்தகு குழுக்களுக்கெதிராக நடவடிக்கையில் இறக்குகிறேன். அதனால்தான் கடந்த காலத்தில் சில குழுக்களோடு மோதல் வந்தது. தாங்கள் காப்பாற்ற வேண்டிய மக்களுக்கெதிராக எப்போதெல்லாம் ஈடுபடுகிறார்களோ, கண்டிப்பாக அப்போது தலையிடுவேன்.

தமிழீழ ஐக்கிய வி.மு. பற்றிய உங்கள் கருத்து என்ன?

தமிழீழ மக்கள் மத்தியில் அது மதிப்பிழந்து விட்டது. என்வே அதற்கொரு எதிர்காலம் இல்லை. இந்தியாவில் மட்டுமே அதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

வீக்(இந்தியா)
சந்திப்பு: பகவான் ஆர்.சிங்
07-12-1986

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக