புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
85 Posts - 77%
heezulia
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
250 Posts - 77%
heezulia
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 9:53 am

காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி

இரண்டாவது மாநில மாநாடு -
பொதுச் செயலாளர், நாவலர் நெடுஞ்செழியன்

தம்பி!

"கப்பலிலா போகப்போகிறீர்கள் - எந்தெந்தத் தேசம் - எவ்வளவு நாளாகும் திரும்பிவர - மாநிலமாநாடு நடைபெற வேண்டுமே'' - என்றெல்லாம் கேட்டிருக்கிறாய், - கனிவு ததும்பும் கடிதம் மூலம். தினத்தந்தியிடம் மட்டும் சொல்லிவிட்டா நான் வெளிநாடு பயணமாவேன் - உன்னிடம் கூறாமலா - என் உள்ளத்துக்கு மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டும் தம்பிமார்களின் "அனுமதி' பெறாமல், வெளிநாடு போகத்தான் முடியுமா?

ஆமாம் - வெளிநாடுகளுக்குப் போய்வருவது என்பது என்ன எளிதான காரியமென்றா எண்ணுகிறாய் - பத்திரிகைகளில் தலைப்புப் போடுவதும் - படம் போடுவதும் எளிது - பாஸ்போர்ட் கிடைப்பது அவ்வளவு எளிது என்றா எண்ணுகிறாய்! நான், அவ்வளவு சுலபத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்று எண்ணவில்லை. வேண்டுமானால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு "பாஸ்போர்ட்' கேட்டால் கிடைக்கக்கூடும்! பிறகு? பணம் வேண்டும். "பாஸ் போர்ட்' போலவேதானே அதுவும். "அண்ணா! இப்படியா கூறுவது, நாங்கள் இருக்கிறோம்'' என்று, அடுத்த கடிதத்தில் எழுதிட எண்ணுவாய் - ஆனால், முதலில் பணம் திரட்டு தம்பி, என் வெளிநாட்டுப் பயணத்துக்காக அல்ல, மாநில மாநாட்டுக்கு!

ரூபாய் இருபத்து ஐயாயிரம் தேவை!

ஒரு ஆயிரம் மட்டுமே தரப்பட்டிருக்கிறது - இந்த இலட்சணத்தில், பொருளாளர் என்று பட்டம் தரப்பட்டு விட்டிருக்கிறது.

நான் வெளிநாட்டுக்கு போவது என்பது இப்போதைக்கு இல்லை - இருபத்து ஐயாயிரம் சேர்த்து - இரண்டாவது மாநில மாநாட்டைச் சிறப்புற நடத்திவிட்டு, பொதுத் தேர்தல் குறித்துக் கலந்தாலோசித்து. பணியாற்றிவிட்டு - பிறகே வெளிநாடு - இடையில் சிறைக்குள் தள்ளப்படாமலிருந்தால்!

எனவே நடைபெற வேண்டிய காரியத்தைக் குறித்து, நண்பர்களுடன் கலந்தாலோசித்துக் காரியமாற்று; நான் போகும் கப்பல் தினத்தந்தியில் படமாக வரும் - வேடிக்கையாகப் பார்த்துக் கொள்ளலாம்!

நடைபெற்றாகிவிட்ட பிறகு, சர்வசாதாரணமாகத் தோன்றும்; ஆனால் சிறிது எண்ணிப் பார்த்தால்தான், நாம் எவ்வளவு அருமையான "கட்டம்' வந்திருக்கிறோம் என்பது விளங்கும்.

நாவலர் நெடுஞ்செழியன், இப்போது நமக்குப் பொதுச் செயலாளர்!

தஞ்சையிலும் மதுரையிலும் நான், பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, புயலே கிளம்பிற்று - எனக்குச் சிறிது சீற்றம் கூடப் பிறந்தது. ஆனால் மெள்ள மெள்ள ஆனால் வெற்றிகரமாகச் சபலத்தைக் கடந்து விட்டோம் கழகம் புதியதோர் கட்டம் வந்து சேர்ந்திருக்கிறது - நாம் வலிவும் பொலிவும் கொண்டதோர் அமைப்புப் பெற்றிருக்கிறோம் என்கிற நம்பிக்கை நமக்கெல்லாம் ஏற்பட்டுவிட்டது பெருமைக்குரிய செய்தி.

தோழர் நெடுஞ்செழியன் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது இரண்டாண்டுக் காலமாகவே என் உள்ளத்திலே வளர்ந்த வண்ணம் இருந்த எண்ணம்.

ஓராண்டுக்கு முன்பு இலங்கை "சுதந்திரன்' ஆசிரியர் சென்னை வந்திருந்த போது, அவரிடம் கூறினேன் - அவர் தமது இதழில் வெளியிட்டிருந்தார்.

நான் மட்டுமல்ல, நமது கழகத்திலே பெரும்பாலானவர்கள் புதிய பொதுச் செயலாளராகத் தோழர் நெடுஞ்செழியன் வர வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றனர்.

இந்த எண்ணம் எனக்குத் தோன்றிய நாள்தொட்டு நான் தோழர் நெடுஞ்செழியனை இந்தப் பொறுப்புக்குப் பக்குவப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு, அவருடைய இல்லத்தை என் இருப்பிடமாக்கிக் கொண்டேன்! சிறிதளவு, என்னிடம், பழகுவதில் கூச்சமுள்ள சுபாவம் அவருக்கு - எனவே, அவருடைய இல்லத்தை இருப்பிடமாக்கிக் கொண்டால்தான், என் எண்ணங்கள், நான் சரியென்று கருதும் முறைகள், என் ஆசைகள், எனக்குள்ள அச்சங்கள், இவை பற்றியும், துணைக் கழகங்கள், துளைக்கும் கழகங்கள், தூதுவிடும் கழகங்கள், வம்புக்கு இழுக்கும் கழகங்கள் ஆகியவை பற்றி என் கருத்து யாது என்பது பற்றியும், உரையாடி உரையாடி எடுத்துக்காட்ட முடியும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, அவர் வீட்டுச் "சைவத்' தைத் தாங்கிக் கொண்டிருந்தேன்!!

அவரிடம் நேரடியாகக்கூட பிரச்னைகளைப்பற்றிப் பேசுவதில்லை - பிரச்னைகளை நான் மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் உடன் இருப்பார்! மிக முக்கியமான கட்டங்களின் போது, புன்னகையாவது பிறக்கும், புருவத்தையாவது நெறிப்பார்! இவ்வண்ணம் இரண்டாண்டுகள்.


துவக்கத்திலே நான் கொண்ட நம்பிக்கை வளர்ந்து, கனியாகி விட்டது. நமது கழகத்தை அதன் கண்ணியம் கெடாத வகையில் மட்டுமல்ல, வளரும் வகையில், நமது புதிய பொதுச் செயலாளர்
நடத்திச் செல்வார் என்ற உறுதியை என்னால் நிச்சயமாக அனைவருக்கும் அளிக்க முடியும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது.

உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் - நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணுகிறேன் - தாடியுடன் நெடுஞ்செழியனை!

அப்போது, தோழர் அன்பழகன் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றி வருபவர் - தோழர் நெடுஞ்செழியன் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் போக்கினராகத் தோற்ற மளித்து வந்தார். நான் அப்போது தோழர் அன்பழகன், கல்லூரியிலிருந்து வெளியேறியதும் கழகத்தில் வந்து சேருவார்,தோழர் நெடுஞ்செழியன் எங்காவது கல்லூரியில் கம்பனின் கவித்திறமை பற்றி (கட்டாயத்தாலும்) இளங்கோ அடிகள் பற்றி (விருப்பத்துடனும்) எடுத்துரைத்துக் கொண்டு, தமிழின் எழிலைக் கண்டும் காட்டியும் பணியாற்றி வருவார் என்றே எண்ணிக்கொண்டேன். அதுபோல நடந்திருக்கக் கூடாதா என்று ஆயாசத்துடன் கேட்கும் அவர் துணைவியார் தெரிகிறார்கள்!!

என்ன செய்யலாம்! அவரோ புயலில் குதித்து விட்டார்!!

தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம் பேச்சுடன் கலந்து வரும்போது எத்தகைய இன்பமளிக்கும் என்றெல்லாம் நான் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு - மனதிலே உருவெடுத்துக் கொண்டிருந்த ஆசை நடமாடக் கண்டேன், தோழர் நெடுஞ்செழியன், கழக மேடையில் பேசத் தொடங்கியதும்.

கருவூர் ஆற்று மணலில் - நினைவிருக்கிறது - பெரியாரும் இருந்தார் - தோழர் நெடுஞ்செழியன் இலக்கியத்தை இனிய முறையிலே எடுத்தளித்தார். நல்ல விருந்து - ஆயினும் என்ன செய்வது?

நாளாவட்டத்தில், தரத்தைச் சிறிதளவு தளர்த்தச் சொல்லி வற்புறுத்த வேண்டித்தான் வந்தது. தரத்தை வளரச் செய்யும் போக்கிலா ஆளவந்தார்கள் நம்மை விட்டு வைக்கிறார்கள்!!

நடை இருக்கட்டும், நண்பரின் திறம் இருக்கிறதே, அது கண்டு நான் வியப்புற்றேன்.

என்னிடம் இல்லாத - நான் விரும்பாததால், அல்ல, இயலாததால் - ஒரு அருங்குணம் அவரிடம் உண்டு - கண்டிருப்பீர்கள். ஓயாது உழைப்பது! எப்போதும் எங்கேயும் எதையாவது, எப்படியாவது செய்து கொண்டே இருப்பது.

என்னாலே இதைக் கண்டு இரசிக்க முடியும் - ஆனால் என்னை அந்நிலைக்கு மாற்றிக் கொள்ள இயலவில்லை. நான் அடிக்கடி கனவு காண்கிறேன், சோலையில் சொகுசாக உலவுவதுபோல அல்ல - அந்தக் காலம் மலை ஏறிவிட்டது - பொதுப் பிரச்னை களைப்பற்றி. தோழர் நெடுஞ்செழியன் எப்போதும் காரியமாற்றிக் கொண்டே இருக்கும் இயல்பினர். நேரம் வீணாகிவிட்டது என்று கூறத்தக்க போக்கிலே, அவர் இருந்ததை நான் கண்டதே இல்லை. இந்த இயல்பு, கழகத்துக்குப் பெருந்துணையளிக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

வீட்டிலே என் குறும்புப் பார்வையைக் கண்டு தளருவார், எனினும் இயல்பு அவரை விடாது, மறுகணம், ஏதாவது வேலையைத் துவக்கிக் கொள்வார்.

சிறையில் மூன்று திங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம் - அங்கு என்ன வென்று கருதுகிறீர்கள் - ஆச்சாரியார் ராஜினாமாச் செய்வது போல, அவசரச் சட்டம் பிறப்பிப்பது போல, பாதுகாப்புக் கைதியாக ஆக்கப்படுவதைப் போல, பெரியார் கட்டித் தழுவிக் கொள்வது போல, இப்படிப் பலப்பல "கனவுகள்' - விழித்தபடி - நான் கண்டு கொண்டி ருப்பேன். அவர்? - வேலை! வேலை! வேலை! ஏதாவது செய்தபடி இருப்பார்.

இந்த அருங்குணத்தை நாம் நன்றாகப் பயன்படுத்தி, கழகத்தை மேன்மையுறச் செய்து கொள்ள வேண்டும்.

என்னிடம் சில குறைபாடுகள் உண்டு - குறைபாடுகள் என்று சம்பிரதாய முறையில் சொல்கிறேன் - அதிலே ஒன்று தான் கனவு காண்பது; மற்றொன்று மிகக் கஷ்டமான நெருக்கடியின்போது சர்வ சாதாரணமாகக் கருதிக் கொண்டு சிரித்துக் கிடப்பது. இதிலே எனக்குச் சரியான ஜோடி சம்பத்துதான்! பெரியாரின் "சர்டிபிகேட்டே' உண்டு இதற்கு.

திருச்சியிலே திராவிடர் கழக மாநில மாநாடு - அதற்காக வேலை செய்வதற்காக ஒரு மாளிகையில் தங்கியிருக்கிறோம், நானும் சம்பத்தும் - பெரியார் வேலை செய்கிறார் - விசாரப்படுகிறார் - தொல்லைப் படுகிறார். நானும் சம்பத்தும் மாடியில் ஏதேதோ பேசுகிறோம், சிரிக்கிறோம், பாடுகிறோம்.

(யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்) கவலையற்று! பெரியாருக்குக் கோபம் பொங்கி வழிந்தது! எப்படிப்பட்ட சமயம்! இந்த இரண்டு பசங்களும் சிரித்துக் கொண்டு இருக்கிறார்களே! துளியாவது கவலை இருக்கிறதா? ஒரு பெரிய மாநாடு நடக்கவேண்டும், அது பற்றித் துளியும் கவலைப்படாமல், தின்பதும், திரிவதும், ஆடுவதும், பாடுவதும், செச்சே! - என்று பேசினார்.

அப்போது நான் செல்லப் பிள்ளை! இகழப்பட்ட போதும் பழிக்கப்பட்ட போதும், அன்பு காட்ட வேண்டிய வர்கள் பகைக்கும்போதும் சிரித்துச் சோகத்தைச் சிதறடிப்பது என் முறை - மிகச் சிறியவனாக இருந்தது முதலே சம்பத்துக்கும் இது முறை. "விளையாட்டுப் பிள்ளைகள்' என்று இதனைக் கொண்டு பெரியார் கூறுவதுண்டு. அதற்கும் நாங்கள் இருவரும் சிரித்தோம். அவரால் சகிக்கவே முடியவில்லை. எனவே, டிக்கட் விற்பனை என்ற ஏற்பாட்டின்படி, சம்பத்தைக் கருவூருக்கே அனுப்பிவிட்டார்!

சிரிக்கத் தெரியாமலிருந்தால் எனக்குப் பொதுவாழ்க்கை யிலே ஏற்பட்ட சங்கடங்களால், பைத்தியமே பிடித்துவிட்டிருக்கும். விளையாட்டுத்தனமல்ல, அது - விசாரத்திலே மூழ்கிக் குழப்பமடைந்து போகாமலிருக்க, அது தகுந்த முறையாக அமைந்திருந்தது.

குறைபாடுகள் என்று இவைகளைக் கருதலாம் - விவரம் கூறப்படா முன்பு.

தோழர் நெடுஞ்செழியனைப் பெரியார், தமது மேற்பார்வையில் வைத்திருந்து பார்த்தார் - அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம், அவராலும் ஒரு குறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை.

அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார்.

அவருக்குக் கிடைத்திருக்கும் கழகமோ, சாமான்யமான தல்ல!

ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகள்!

இடைவிடாத பொதுமக்கள் தொடர்பு கொண்ட இயக்கம்.

களம் கண்ட காளைகள், தியாகத் தழும்பேற்ற தீரர்கள், கண்ணியத்தைக் காப்பாற்றும் பண்பினர் எண்ணற்றவர்கள்.

விழியில் நீர் வழிய வீதியில் விரட்டப்பட்டோம் - இன்று நமக்கென்று ஒரு தலைமை நிலையம், நம்முடையது என்று பெருமையுடன் கூறிக்கொள்ளத் தக்க ஒரு அச்சகம், நாம் செய்தோம் என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொள்ளத் தக்க செயல் பட்டியல் - இவைகளைப் பெறுகிறார் தோழர் நெடுஞ்செழியன் - பன்மடங்கு இந்த வனப்பை, வலுவை, அதிகமாக்கிக் காட்டப் போகிறார்.

நமக்கென்று ஒரு தலைமை நிலையம், என்றேன் - மகிழ்கிறீர்கள் - நானோ, அந்த இடத்தில் சில பகுதி கலனாகி வருவதையும், ஆகவே கட்டிடம் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அதற்கான செலவினையும் எண்ணிக் கவலைப் படுகிறேன். தோழர் நெடுஞ்செழியனை, அந்த இடத்திலே அழைத்துக் கொண்டுபோய் அமர்த்திவிட்டோம். அவருடைய "நாட்களில்' நிலையம் புதிய உருவும் எழிலும் பெற வேண்டும் - அதற்கான வசதியை நாம் அவரிடம் தேடித் தர வேண்டும்.

நமக்கென்று ஒரு அச்சகம் என்று பெருமையுடன் பேசுகிறோம் - ஆனால் நான் எவ்வளவு முயன்றும் "நம் நாடு' பெரிதாகி விடவில்லை. அந்தப் பொறுப்பும், அவரிடம், இப்போது, அதற்கான ஆதரவு திரட்டி அவரிடம் ஒப்படைக்க வேண்டியது, நமது கடமை.

மாநில மாநாடு! மிகப் பெரிய பொறுப்பு, நம்மை எல்லாம் அறைகூவி அழைக்கிறது. அதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு நமது பொதுச் செயலாளருக்கு நாம் துணை நிற்கவேண்டும்.

இவைகளையும் இவை போன்ற வேறுபல கடமைகளையும் நாம் நிறைவேற்றிக் கொடுத்தால்தான், நமது பொதுச் செயலாளர் மூலம் நமது கழகம் பெறவேண்டிய புதிய பொலிவுக்கும் வலுவுக்கும் வழி செய்தவர்களாவோம்.

நேற்றுத்தான், கண்ணீருடன் வெளிவந்தது போல் இருக்கிறது.

இதற்குள் என்னென்ன கட்டங்கள்!! எவ்வளவு எதிர்ப்புகளைத் தாண்டி, இந்தக் கட்டம் வந்திருக்கிறோம்!

இதுகளாவது - கட்சி நடத்துவதாவது - என்ற ஏளனம் ஈட்டி போலக் குத்திற்று. இதோ இரண்டாவது பொதுச் செயலாளர் - இரண்டாவது மாநில மாநாடு!!

இதுகளாவது ஒன்றுகூடி வாழுவதாவது - என்ற சாபம் மிரட்டிற்று.

ஒன்றுகூடி வாழ்வது மட்டுமா - ஒருவரை நம்பி ஒருவர் வாழக் கற்றுக் கொண்டோம் - தனி மனிதர்களைவிட ஒரு அமைப்பே முக்கியம் என்ற தத்துவம். நடைமுறைக்கு வந்து விட்டது. வளர்ச்சி சாதாரணமானதல்ல!!

ஏ! அப்பா! பாரேன், இதுகளுக்குள் மூண்டுவிடப் போகிற வம்பு வல்லடிகளை, போட்டி பொறாமைகளை, பூசல் ஏசல்களை என்று கருவினர் - இதோ ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து உடனிருந்து பணியாற்றுகிறோம், புதிய பொதுச் செயலாளருடன்.

தம்பி! நான் இந்த மகிழ்ச்சியிலே திளைத்திருக்கிறேன்.

வெளிநாடு போகும் திட்டம் பற்றி எண்ணிக் கொண்டில்லை.

ஒரு திங்கள் ஓய்வு கொடு - பிறகு மாநில மாநாட்டுக்கு நிதி திரட்டி வைத்துக் கொண்டு, எந்தப் பட்டி தொட்டிக்கு வேண்டுமானாலும் கூப்பிடு, வருகிறேன்.

ஓய்வு எடுத்துக் கொண்டு உல்லாச வாழ்வு நடத்தவா, உள்ளத்திலே ஓராயிரம் ஈட்டிகள் குத்துவது போல, மாற்றார் நடந்து கொண்டதைச் சகித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும், கழகத்தை அமைத்து, இந்தக் கவர்ச்சிகரமான கட்டத்திற்கு வந்திருப்பது! கழகம் பணியாற்ற வேண்டிய துறைகள் பல உள வெளிநாடு சென்று தெரிந்துகொண்டு வந்து பணியாற்ற வேண்டிய கட்டம் இது அல்ல - இப்போது உள்ள கட்டம், நமது நாட்டை முழுதும் நாம் பார்த்துப் பாடம் பெறும் கட்டம். அந்தக் கட்டத்தில், நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி உன் சீரிய யோசனையைக் கூறுவதுடன் - சிறிதளவு பணமும் சேர்த்துத் தர வேண்டுகிறேன், மாநில மாநாட்டுக்கு, புதிய கட்டம், புதிய பொதுச் செயலாளர், அவர் தலைமையில் இரண்டாவது மாநில மாநாடு - அதைச் சிறப்புற நடத்தித் தருவதிலேதான், கழகத்தின் மற்றோர் கட்டம் மலர இருக்கிறது.

அணிவகுத்து நின்று, நாம் நம் கடமையைச் செய்ய வேண்டும். சில்லரைத் தகராறுகளைச் சிரித்து விரட்டுங்கள் - பெரிய இலட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம் என்ற எண்ணம் கொழுந்து விட்டெரியட்டும்.

புதிய பொதுச் செயலாளரின் திறத்தையும் அருங் குணத்தையும் கழகம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் நமது கடமையைத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும், முயற்சி எடுக்க வேண்டுமென்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில்,
தம்பி! முயற்சி எடுத்தால் போதும்; முடித்தே காட்டுவீர்கள் என்பதை அனுபவத்தில் கண்டவனல்லவா நான், அதனால்தான்.

சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டிலே கூடியது போல, குறைந்தது இரட்டிப்பு மடங்கு மக்கள் கூடுவர், திருச்சியில் - நடு நாயகமல்லவா, அதனால்.

அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்திக் கொடுக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்தில், காகிதக் கப்பலின் மீது கவனம் செலுத்தலாகாது; மாநாட்டுக்கான யோசனைகளை நண்பர்களுடன் கலந்து பேசி, தலைமை நிலையத்துக்குத் தெரியப்படுத்து. மாநில மாநாட்டிலே கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை இப்போதிருந்தே உள்ளூர்க் கிளைக் கழகத்தில் கலந்து பேசுங்கள் - திட்டம் தயாரித்து அனுப்புங்கள் - தம்பி! - பணமும் அனுப்பு!


அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Anna_sign
05-08-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 9:56 am


புதிய உற்சாகம்


மாஸ்டர் தாராசிங்கும் பாஞ்சாலமும் - கழகத்தில் தோழமை

தம்பி!

முன்பு எழுதிய கடிதம் கண்டு மகிழ்ச்சி தெரிவித்ததற்கு என் நன்றி. நமது இயக்கம் நன்றாகத் தழைத்திருப்பது கண்டு அருவருப்பு அடைபவர் பலர் உண்டல்லவா- அவர்கள், அவர்களின் பண்புக்குத் தக்கபடி பழிசுமத்துவதும், புகார் கிளப்புவதும், வதந்திகளை உலவ விடுவதும், வம்புக்கு இழுப்பதுமாகத்தான் இருப்பர், நாம் அவைகளைப்பற்றிக் கவலைப்படக் கூடாது; நாம் கவலைப்பட வேண்டும், கோபமடைய வேண்டும் என்பதற்காகத்தானே அவர்கள் அவ்விதமெல்லாம் பேசுவதும் எழுதுவதும்! அந்த வலையில் நாம் விழலாமா? நமக்கு நிரம்ப வேலை இருக்கிறதே தம்பி! நமது சக்திக்கு மீறிய காரியத்தை அல்லவா நாம் மேற் போட்டுக் கொண்டிருக்கிறோம். உன் நினைவு முழுவதும் அதிலே செல்லவேண்டும். ஆமாம், சில்லரைகளில் சிந்தனையைச் செலவிடக் கூடாது.

நாட்டு நடவடிக்கைகள் பலவற்றிலும் தொக்கிக் கிடக்கும் உண்மைகளைக் கண்டறிந்தால் நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சி எவ்வளவு தூய்மையும், வாய்மையும் கொண்டது என்பது விளக்கமாகும்.

சென்ற கிழமை வடக்கே ஒரு கிழவர் சிறைக் கோட்டம் அழைத்தேகப்பட்டார். மாஸ்டர் தாராசிங் பன் முறை சிறை சென்றவர். சீக்கிய பெருங்குடி மக்களின் ஒப்பற்ற தலைவர் காங்கிரஸ்காரர் அல்ல. அவர் காங்கிரஸ்காரராகி இருந்தால், பாபு ராஜேந்திரப் பிரசாத், அபுல்கலாம் ஆசாத் போன்றாரின் வரிசையில் இடம் பெற்றிருப்பார். ஆனால் அவருக்குக் குறிக்கோள் இருக்கிறது - கருவிலே உள்ள குழவி போன்ற தாகத்தான் இன்னமும் இருக்கிறது - முழு வளர்ச்சி அடைய வில்லை. அந்தக் கருவையே சிதைத்திடத்தான் அவர்மீது கடுமையான அடக்குமுறை வீசப்பட்டு வருகிறது.

தாராசிங், சீக்கியர்களுக்காக ஒரு தாயகம் கேட்கிறார். சீக்கிய மொழி, கலாச்சாரம், மார்க்கம் ஆகியவைகள் பாதுகாக்கப்பட்டு வளமடைய வேண்டுமானால், "பஞ்சாபி மொழி பேசும் பிராந்தியம்' ஏற்படவேண்டும் என்று கிளர்ச்சி செய்து வருகிறார்; சில ஆண்டுகளாகவே, சீக்கியர்களிலே, காங்கிரஸ் கட்சிக்குப் பலதேவ்சிங்குகள் அடிக்கடி கிடைக்கத்தான் செய்கிறார்கள்; நேரு பண்டிதரும் அடிக்கடி அந்தப் பகுதி சென்று பவனி வரத்தான் செய்கிறார் என்றாலும், தாராசிங்கின் "தாரகம்' பஞ்சாபில் வெற்றி பெற்று வருகிறது.

பஞ்சாப் மாகாணம், வங்காளம் போலவே, பாகிஸ்தான் அமைப்பின் போது, இரண்டாக்கப்பட்டது. உனக்குத் தெரியும், இந்திய பூபாகத்துடன் இணைந்து இருக்கும் பஞ்சாபிலே அமிர்தசரஸ் இருக்கிறது - இது சீக்கியர்களின் காசி! தங்கக் கோயில் ஒரு தடாகத்தின் நடுவே இருக்கிறது. கோயிலில் இராமன் - கிருஷ்ணன் - முருகன் - நான்முகன் இப்படிச் சிலைகள் கிடையாது - சீக்கியரின் வேத புத்தகம் வைக்கப்பட்டிருக்கிறது - சீக்கியர்கள் அங்குச் சென்று தூய மன நிலை பெறுகிறார்கள். காலைச் சூரியன் ஒளியில், தங்கக் கோயிலின் நிழலுருவம் தடாகத்தில் தெரிகிறது. காண்பதற்கு அருமையானதோர் காட்சி நான் அக்காட்சியைக் கண்டு களித்திருக்கிறேன். சீக்கியர் களிடையே உள்ள ஒற்றுமை உணர்ச்சியையும் அதுபோது காணமுடிந்தது.

மொழி வழி அரசு அமைந்தால்தான், சுயராஜ்யம் பொலிவும் வலிவும் பெறும் என்று காங்கிரஸ் தலைவர்களே பேசி வந்தனர். அந்த முறையிலே பார்க்கும்போது, தாராசிங் கேட்கும் "பாஞ்சாலம்' அமைக்கப்பட வேண்டியதுதான் நியாயமாகும். ஆனால் காங்கிரஸ் சர்க்கார் இதை எதிர்க்கிறது பிடி ஆட்களைப் பெற்று, இந்தக் கிளர்ச்சியை ஒழித்துக் கட்டப் பார்க்கிறது. தாராசிங் பணிய மறுக்கிறார்! சிறையில் தள்ளுகிறார்கள் - தணலில் தங்கமாகிறார். சீக்கியர்களிலே சிலரைப்பிடித்து அவரை நிந்திக்க வைக்கிறார்கள்; அவர், அவர்களின் நிலைமையைக் கண்டு பரிதாபப்படுகிறார். அவர் எப்போது கிளர்ச்சி துவங்கினாலும் இளைஞர் அணிவகுப்புத் துணைக்கு நிற்கிறது. அறப்போரில் ஈடுபட ஏராளமானவர்கள் முன்வருகிறார்கள். எனினும் மாஸ்டர் தாராசிங் பற்றியும், அவர் நடத்திவரும் இயக்கத்தைப் பற்றியும், நமக்கெல்லாம் அதிகமாகத் தெரியாது - தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதில்லை. இருட்டடிப்பு! ஆமாம் இங்கே, திராவிடநாடு பிரிவினை எவ்வளவு வேகமாக வளர்ந்திருக்கிறது என்பது எப்படி மற்ற பகுதியினருக்குத் தெரியாதபடி "இருட்டடிப்பு' இருக்கிறதோ, அதுபோல பாஞ்சாலக் கிளர்ச்சி பற்றிய முழுத்தகவலும் நமக்குத் தெரிவது இல்லை - இருட்டடிப்புத்தான்!

நாகநாடு கிளர்ச்சி பற்றி ஒவ்வோர் சமயம் துண்டு துணுக்குகளாகச் செய்திகள் வருகின்றன - தொடர்ந்து அங்கே என்ன நடைபெறுகிறது என்பது தெரிவதில்லை - காரணம் இருட்டடிப்புத்தான்!

மணிப்பூரில் தனிநாடு கிளர்ச்சி அரும்பியிருக்கிறது - சேதி தாராளமாகக் கிடைப்பதில்லை - இருட்டடிப்பு!

பர்மாவில், பல ஆண்டுகாலமாகக் கிளம்பி, படை பலத்துடன் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, கரேன்நாடு கிளர்ச்சி - இதுவும் இருட்டடிப்பின் காரணமாக, முழுவதும் நமக்குத் தெரிவதில்லை.

இந்தோனேμயாவில் தாருல் இஸ்லாம் என்றோர் கிளர்ச்சி இருக்கிறது.

பயங்கரமான நிகழ்ச்சிகள் ஏற்படும்போது மட்டுமே இவைபற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது - தொடர்ச்சியாகச் செய்திகள் தரப்படுவதில்லை.

திராவிடநாடு கிளர்ச்சி குறித்தும் இது போலத்தான் - எப்போதாவது திடுக்கிடக்கூடிய சம்பவங்கள் நேரிட்டால், இந்திய பூபாகத்தின் மற்றப் பகுதிகளில் ஒரு சிறிது தெரியும்; மற்றச் சமயத்தில் இருட்டடிப்பு! சென்ற ஆண்டு, "இரயில் நிறுத்தக் கிளர்ச்சி' நடைபெற்றபோது, இந்தியாவின் எல்லாப் பகுதியிலும், திராவிடநாடு கிளர்ச்சி பற்றி, ஓரளவு தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. பிறகு, எப்போதும் போல மூடிவிட்டனர்.

இந்தக் குறைபாடு நீங்க, திராவிடநாடு கிளர்ச்சி பற்றி, பிற இடங்களில் அறிந்து கொள்ளத்தக்க வகையில், ஆங்கில ஏடு நடத்துவது என்ற எண்ணம் எனக்கு நீண்டகாலமாக உண்டு. இருமுறை அதற்கான முயற்சி எடுத்து முறிந்து போனதுமுண்டு இப்போதும் அந்த எண்ணம் இருந்தபடிதான் இருக்கிறது - தக்க வாய்ப்பு ஏற்படவில்லை. தம்பி! நமக்கிருக்கும் குறைபாடுகள் இவை போன்றவையேதவிர, இல்லாததும் பொல்லாததுமாக நம்மைப் பற்றி இடுப்பொடிந்ததுகளும், இஞ்சி தின்றதுகளும், பேசுவதாலும் எழுதுவதாலும் இல்லவே இல்லை என்பதை முதலில் மனதிலே நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். அந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டோம். வீசப்படவேண்டிய பழிச்சொல் அவ்வளவும், எவ்வளவு வேகமாகவும் திறமையுடனும் வீசப்படவேண்டுமோ அவ்விதம் வீசிப் பார்த்தாகிவிட்டது. இப்போது கிடைப்பதெல்லாம் மறுபதிப்புகள் - எளிய பதிப்புகள் - இலவச வெளியீடுகள்!! இவைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய நிலையில் நாம் இல்லை.

அங்கே வெடிப்பு, இங்கே கொந்தளிப்பு, இங்கே குழப்பம், என்றெல்லாம் எழுதுகிறார்கள். படிக்கும்போது ஆத்திரமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறாய். தம்பி! இதற்கு ஏன் ஆத்திரம், ஆயாசம்? நம்மைப்பற்றிய "செய்திகள்' பிற கட்சிக்காரர்களும் இதழ்களும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய அளவுக்கு, நாட்டில் முக்கியத்துவம் பெற்றுவிட்டன என்பதுதானே அதன் பொருள். இதற்கு ஆயாசப்படுவதா!! பேதமும் பிளவும், வெடிப்பும் குழப்பமும் ஏற்பட்டால்தான், நமது இயக்கத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று கிலி கொண்டவர்கள், இப்போது கீறலைக் கண்டு வெடிப்பு என்று கூவிக் களிப்படைகிறார்கள்! இங்கிருந்து செல்பவர்களும், இங்கு இருந்துவிட்டு வந்தவர்கள் என்ற காரணத்தாலேயே வாழ்த்தும் வரவேற்பும் பெறுகிறார்கள் - இந்த உபசரிப்பும் உலாவும் சிலநாட்களுக்கு நடைபெறும். நமது மாஜி நண்பர்கள் என்ற முறையில் அவர்கள் எப்படியோ ஒன்று மகிழ்ச்சி பெறட்டும் என்பதுதான் என் எண்ணம். அவர்களை எத்தனை நாளைக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது தெரியாததா!! இவ்விதம் "பயணம்' நடத்தியவர் பலர்; அவர்களிலே யார் இன்று உருவம் தெரியும் நிலையில் இருக்கிறார்கள். ஆயினும் எனக்கு - உண்மையில் கூறுகிறேன் - நமது இயக்கத்தைவிட்டு யாராவது பிரிந்து செல்கிறார்கள் என்றால், வருத்தந்தான். கூடுமான வரையில் கூடி வாழ்வதைத்தான் நான் விரும்புகிறவன்- சுவரிலிருந்து சிறு ஆணி பெயர்க்கப்பட்டாலும், ஆபத்து இல்லை என்றாலும், பார்க்க நன்றாக இராது என்று எண்ணுபவன். இந்த நோக்குடனேயே நான், சிலர் வெளியேற எண்ணும்போதெல்லாம், சமரசத்திற்காக முயன்றிருக்கிறேன். அவர்கள் ஏற்கனவே, வேறு இடத்தில், "அச்சாரம்' வாங்கி விட்டார்கள் என்று தெரிகிற வரையில், சமரசம் பேசுவேன் - "கைமாறி விட்டது' என்று தெரிந்தால் என்ன செய்வது சரி அவ்வளவுதான்! என்று எண்ணிக்கொள்வது. அவர்கள் வெளியேறி வேறிடம் சென்றதும், அங்கு கொஞ்சம் காரசாரமாகப் பேசி, கண்டித்துத்தானே "சபாஷ் பட்டம் பெறவேண்டும். எனவே பேசுகிறார்கள். ஏசுகிறார்களே என்று வருத்தப்படலாமா - இங்கே இருந்தபோது எவ்வளவு புகழ்ந்திருக்கிறார்கள்! எவ்வளவு பற்றுப் பாசம் காட்டி யிருக்கிறார்கள்! வழியே போகிறதுகள், வம்புக்கு வருபவர்கள் தொடர்பே அற்றதுகள், இப்படிப்பட்டவர்க ளெல்லாம், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நம் இயக்கத்தைப் பற்றிப் பேசித்திரியும்போது, இருந்துவிட்டுப் போனவர்கள், இயன்றதைச் செய்தவர்கள், நண்பர்களாயிருந்தவர்கள், பிரிந்த காரணத்தால் இரண்டோர் இடத்தில் கடுமையாகத் தாக்கினால், குடிமுழுகிவிடாது. அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டுமே பாவம்!

இந்தச் சம்பவங்களைப் பற்றி எல்லாம் படிக்கும்போது தம்பி! நாம் இயக்கத்தை நடத்திச் செல்வதில் இதுவரை காட்டிவரும் தோழமையைவிட, அதிக நேர்த்தியான தோழமையைக் காட்டிவரவேண்டும் என்ற பாடத்தைத்தான் பெறவேண்டும். மற்ற எந்த இயக்கத்திலும் இல்லாத அளவு தோழமை உணர்ச்சி நமது கழகத்திலே இப்போது இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பண்பு மேலும் வளரவேண்டும். தேர்தல் எனும் முறையே இன்றி, ஒரு இயக்கத்தின் தலைவர் பார்த்து வைத்ததுதான் சட்டம் என்றிருக்கும்போது தோழமை உணர்ச்சி அல்லது, பயம் போதும். நாமோ, சிற்றூர் கிளைக் கழகம் முதற்கொண்டு, பொதுச் செயலாளர் வரையில் தேர்தல் முறை வைத்திருக்கிறோம். தேர்தல் என்றால் போட்டி, கட்சி சேர்த்தல் என்பதுதான் உடனடிப் பொருள் எனவே தேர்தலின் காரணமாகச் சிறுசிறு சச்சரவுகள் எழத்தான் செய்யும். இந்தச் சச்சரவும் தேர்தல் ஊழல்களும் நம்முடைய கழகத்திலே மிகமிகக் குறைந்த அளவிலேதான் இருக்கிறது - வேறு அமைப்புகளுடன் ஒப்பிடும்போது சின்னாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற தேர்தலில் போது - வாய்ச் சண்டை வளர்ந்து மேஜை நாற்காலிகள் வீசிக்கொள்ளப்பட்டன என்று படித்திருப்பாய். இது, காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில், அதுபோலவே வடாற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தேர்தலிலும் "ரசாபாசம் நேரிட்டதாகச் செய்தி வந்தது. இலங்கையில் தொழிலாளர் அமைப்பிலே நடைபெற்ற தேர்தலிலும், போட்டி, பூசல் அளவுக்குச் சென்று, தேர்தல் வேலையே வெற்றிகரமாகச் செய்ய முடியாமற் போய்விட்டது. இவைகளை எடுத்துக் காட்டுவதன் காரணம், நமக்குள்ளாகத் தேர்தல் தகராறு எழுவது சரிதான் என்று வாதாட அல்ல. தேர்தல் தகராறுகள் நம்மில் பிறரிடம் இருக்கும் அளவுக்கு இல்லை என்பதை நினைவுபடுத்தி, இப்போது எழும்பியுள்ள சிறு தகராறுகளும் எழாத வகையில் இனி நாம் பணியாற்ற வேண்டும் என்பதைக் கூறத்தான். ஏனெனில், நமது இயக்கத்திலே காணக்கிடக்கும் மாண்புகளை, மாற்றார்கள் போற்ற மாட்டார்கள்; ஆனால், ஒரு சிறு தகராறு தெரிந்தாலும் போதும், சுட்டிக் காட்டிச் சிரிப்பார்கள். இதற்கு இடமளிக்கும் முறையில் யாரும் நடந்துகொள்ளக்கூடாது. தேர்தல் காரணமாகச் சிறு மனத்தாங்கல் ஏற்பட்டுவிட்டி ருந்தாலும், தாங்கிக்கொள்ளும் பெரிய மனமும், மீண்டும் ஒன்றுபட்டுப் பணியாற்றும் தோழமையுள்ளமும் வேண்டும். கழகத்தின் பொதுப் பிரச்சினை பற்றிக் கவனம் செலுத்திக் காரியமாற்ற, நமது பொதுச் செயலாளருக்கு நேரமும் நினைப்பும், திறனும் வாய்ப்பும் பயன்பட இடமளிக்க வேண்டுமேயல்லாமல், இத்தகைய தேர்தல் தகராறுகள் இடம்பிடிப்பதில் ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவற்றையெல்லாம் கவனித்து ஆவன செய்யும் தொல்லையை, அவருக்கு நாம் தருவது முறையாகாது. இதிலே, தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குத்தான் முழுப் பொறுப்பு இருக்கிறது. அவர்கள்தான் தத்தமது வட்டாரத்தில் காணப்படும் மனத்தாங்கைத் துடைத்திட முயற்சிக்க வேண்டும். கழகத்துக்குள் அடிப்படை பிரச்சினைமீது அல்ல, தவறான எண்ணம், மனச் சங்கடம் ஆகியவற்றின் காரணமாக எழும் சிக்கலைத் தீர்க்கும் திறம் இல்லாமற் போய்விட்டால் பிறகு எங்ஙனம், பொதுமக்களை அணுகி, அவர்களின் சந்தேகங்களைப் போக்கி, அவர்களை இயக்கத்தில் கொண்டுவந்து சேர்ப்பது? எனவே, வெற்றி பெற்ற தோழர்கள், தத்தமது வட்டாரத்தில் ஒற்றுமையும் தோழமையும் மலருவதற்குப் பாடுபட்டு, அதிலே வெற்றி காணவேண்டும் தேர்தலில் பெற்ற வெற்றியை விட இந்த வெற்றியையே பெரிதென்று எண்ணவேண்டும்.

வடநாடு தென்னாட்டைச் சுரண்டிக் கொண்டுதான் வருகிறது; ஐந்தாண்டுத் திட்டத்திலே ஓரவஞ்சனையாகத்தான் நடந்து கொண்டது என்ற கருத்தும்,

இந்தியைத் திணிப்பது, எதேச்சாதிகார முறை, மொழிவெறி, ஏக பாஷைப் பித்தம், இதைக் கண்டித்தே தீர வேண்டும், இந்த முயற்சியை எதிர்த்தேயாக வேண்டும் என்ற கருத்தும்,

இப்போது காங்கிரஸ் வட்டாரத்திலேயே வெகுவாகப் பரவிவிட்டது - வெளிப்படையாகவே பேசப்படுகிறது.

இந்த நல்ல சூழ்நிலையைக் கழகத் தோழர்கள் தக்கவிதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திராவிட நாடு கேட்பதற்கான காரணங்களை, முன்பு, காதால் கேட்பதும் "பாபம்', தேசியத்துக்கு விரோதமான காரியம் என்று எண்ணிக்கொண்டிருந்த காங்கிரஸ்காரர்களலேயே ஒரு பகுதியினர், இப்போது திராவிட நாடு பிரச்சினையைத் தெரிந்துகொள்ள ஆவல் காட்டுகிறார்கள். அவர்கள் உணரும் படியும் ஒப்பும்படியும் எடுத்துக் காட்ட நம்மிடம் ஏராளமான காரணங்கள், புள்ளி விபரங்கள் உள்ளன. அவர்களின் மனதைப் பக்குவப்படுத்தும் முறையில், நாம் அவைகளை எடுத்துக் கூறவேண்டும். இந்தப் பெரிய பொறுப்பை ஏற்றக் கொள்ளும் நாம், அதற்கேற்றபடி பெரிய மனம் படைத்தவர்களாகித் தீர வேண்டும்.

இருட்டடிப்புப் பற்றிக் குறிப்பிட்டேன்.

அது, வெளியே நமது கருத்தும் வளர்ச்சியும் தெரியவிடாமல் செய்வது பற்றி மட்டுமல்ல, இங்கேயே உள்ள இருட்டடிப்பு பற்றியுந்தான்.

இங்குள்ள "பத்திரிகைகள்' நமது மூலாதாரக் கொள்கையை மறுப்பன. எனவே, அந்தக் கொள்கையை இருட்டடிப்பு மூலம் சாகடிக்கலாம் என்று எண்ணுகின்றனர். இதிலிருந்து நாம் தப்ப வேண்டுமானால், ஒவ்வொரு கிளைக் கழகமம் தனிப்பட்டவர் களும் கூட, இயக்க கருத்துக்களையும் அக்கருத்துக்களுக்கு ஆக்கம் தரும் நிகழ்ச்சி பற்றியும், அவ்வப்போது துண்டு அறிக்கை வெளியிட்டு வீடு தோறும் வழங்க வேண்டும். நமது இயக்கக் கருத்துக்கள் பொதிந்த பாடல்களையும், நாடகங்களையும் மேலும் வளமும் வண்ணமும் உள்ளதாக்க வேண்டும் புள்ளி விவரங்களைத் தயாரித்து. முச்சந்திகளில் பொறித்து வைக்க வேண்டும் கழகத் தோழர் ஒவ்வொருவரும் இம்முறையில் ஏதேனும் ஒரு பணியாற்றி, இயக்கத்துக்குத் தொண்டாற்ற வேண்டும். ஒரு திங்கள் இம்முறையில் பணியாற்றிப் பாருங்கள். உங்கள் மனதுக்கே புதியதோர் உற்சாகம் பிறக்கும். நோக்கம் இவ்வகையில் திரும்பினால், பிறகு, சிறு சச்சரவுகள் பற்றிய சிந்தனையும் அற்றுப்போகும், சீரழிவானவர் வீசும் சிறு சொல்லும் நம்மைச் சுடாது.

அன்புள்ள
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Anna_sign
22-5-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 9:57 am

மத்தாப்பூ

நேருஜியின் புகழ்! -
டிட்டோவிற்கு வரவேற்பு!-
ஐந்தாண்டுத் திட்ட ஊழல்.

தம்பி!

உலகமெல்லாம் எங்கள் நேருஜியைப் புகழ்கிறது - உதவாக்கரைகளே! நீங்கள் அவருடைய ஆட்சியை, அவர் நடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கிறீர்களே, இது முட்டாள்தனமல்லவா, போக்கிரித்தனமல்லவா, என்றெல்லாம் மேடை அதிர அதிரக் காங்கிரசார் பேசுகிறார்கள் என்று எடுத்துக் காட்டியிருக்கிறாய். உலகம் புகழ்கிறதே, என்பதற்கு ஆதாரமாக, நேரு பண்டிதர் சர்வதேச விவகாரங்களிலே கலந்து கொள்வதையும், அவர் பல்வேறு நாடுகளிலே பவனி வருவது, ராஜோபசாரம் பெறுவது ஆகியவற்றையும் சுட்டிக் காட்டு கிறார்கள். அமெரிக்கா சென்றார், சீனா சென்றார், இந்தோசீனா சென்றார், இந்தோனேμயர் சென்றார். சீமைக்குப் பல தடவை சென்றார், இதோ இப்போது ரஷ்யாவுக்குப் போகப் போகிறார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள்.

உலகம் இருவேறு முகாம்களாகி இருப்பது உனக்குத் தெரியும்.

ஒரு முகாமில் கம்யூனிஸ்ட் ஆட்சிமுறை நாடுகளும், மற்றொரு முகாமில் அதற்கு எதிரிடையான ஆட்சி முறை நாடுகளும் உள்ளன.

இரு முகாம்களும், தத்தமது கட்சிக்கு ஆள் பிடிக்கும் காரியத்தில் ஈடுபட்டுவிட்டிருக்கின்றன. தம் கட்சியில் சேரா விட்டாலும் பரவாயில்லை, எதிர்க்கட்சியில் சேராதிருந்தால் போதும், நடு நிலைமை வகித்தால் போதும் என்று பாடுபடுகின்றன.

இதற்காக, புகழுரை, பாராட்டுரை, உபசாரம், விருந்து இவைகளை அள்ளி அள்ளி வீசுகின்றன.

பணம் தேவையா, தாராளமாகத் தருகின்றன! நிபுணர்கள் வேண்டுமா, கப்பல் கப்பலாக அனுப்பி வைக்கிறார்கள்!

இந்தப் புகழுரை, போதை தருமளவு தரப்படுகிறது! நேரு பண்டிதர் இதிலே மயங்கிவிட்டாரோ இல்லையோ தெரிய வில்லை. காங்கிரஸ் ஏடுகளிலே வெளியிடப்படும் படங்களையும் செய்திகளையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிறார்கள். இதே விதமான உபசாரம் நேரு பண்டிதருக்கு மட்டும் அல்ல, இலங்கை கொத்தலாவலைக்கும், பிலிப்பைன் தீவு ராமு லோவுக்கும் வழங்கப்படுவதைக் காங்கிரசார் கவனிக்கவில்லை. நேரு பண்டிதரின் பீக்கிங் விஜயத்தின் போது ராஜோபசாரம் நடந்ததென்றால், அதே விதமான உபசாரம் பர்மிய பிரதமர் சென்ற போதும் நடக்கிறது!

தம்பி! டிட்டோ இங்கு வந்தார்! ராஜோபசாரம் எப்படி எப்படிச் செய்தார்கள்! அவர் வருகிற கப்பலை நமது கப்பல்கள் சென்று எதிர்கொண்டு அழைத்தன! டில்லியில் மக்கள் கூடி டிட்டோ ஜிந்தாபாத் போட்டனர்! மாலைகள் குவிந்தன! விருந்துக்கு மேல் விருந்து! வரவேற்பு வைபவம், டிட்டோவைத் திணரடிக்கும் அளவுக்கு நடந்தது. ஆவடி காங்கிரசிலும், ராஜபவனத்திலும் அவருக்கு நடைபெற்ற பல்வேறு வகையான விருந்துகளும், கலா காட்சிகளும் சாமான்யமா!

இப்போது ஆறு நாட்கள் நேரு பண்டிதர் டிட்டோவின் விருந்தாளியாக, யுகோ நாடு செல்கிறார். டிட்டோ என்ன, பண்பு அறியாதவரா! நேரு பண்டிதரின் மனம் குளிரும் வண்ணம், தனக்கு இந்தியாவிலே கிடைத்த வரவேற்பு சாமான்யம் என்று கூறத்தக்க விதமாக, விருந்தும், உபசாரமும் ஏற்பாடு செய்யாமல் இருப்பாரா?

பார், பார்! எங்கள் பண்டிதருக்கு யுகோவில் கிடைக்கும் ராஜோபசாரத்தை என்று பேசிப் பூரித்துப் போவதால் என்ன பலன்! டிட்டோ இங்கு வந்திருந்த போது, இங்கே அவருக்கு நடைபெற்ற ராஜோபசாரத்தைப் பற்றி, யுகோ நாட்டுப் பத்திரிகைகள் சக்கைப் போடு போட்டன!

டிட்டோவுக்கு இந்தியாவில் இணையில்லா வரவேற்பு!
ராஜபவனத்தில் ரசமான விருந்து!
மகாராஜாக்கள் மலர்மாரி பொழிந்தனர்!
மதுரமான இசை விருந்து அளிக்கப்பட்டது!
நேர்த்தியான நாட்டியம்!
இந்தியாவின் தொழில் முயற்சியை டிட்டோ
பார்வையிட்டார்

இவ்விதமெல்லாம் யுகோ நாட்டுத் தினமணிகள் தலைப்புகள் தரத்தான் செய்தன தம்பி!

இவ்வளவு என்ன, இங்கே உள்ள பத்திரிகைகள், பாண்டுங் மகாநாடு நேருவின் வெற்றி என்று புகழ்ந்தன அல்லவா, எகிப்து நாட்டிலே நாசிர், பாண்டுங் மகாநாட்டுக்குப் பிறகு சென்றதும், அவரை வரவேற்க மோட்டாரிலும் குதிரை மீதும் ஒட்டகை மீதும் கால் நடையாகவும் பல்லாயிரக் கணக்கான எகிப்தியர் வந்தனர். அவர்கள் என்ன முழக்கம் இட்டனர் தெரியுமோ?

பாண்டுங் வீரரே வருக!
இந்தியாவை வசீகரித்த இணையில்லாத் தலைவரே வருக!

இப்படித்தான்.

இந்தோனேசியாவில் தெரியுமா! இருபத்தொன்பது நாடு களும் பெருமைப்படுத்திய தலைவர்களே, வாழ்க! என்று அந்த நாட்டு இதழ்கள் சுகர்னோ, ஜோஜோ ஆகிய தலைவர்களை புகழ்ந்து எழுதின!

ஒருவர்க்கொருவர் உபசாரத்தைப் பொழிந்து கொள்வது, இன்றைய உலகிலே கொழுந்துவிட்டெரியும் புதுமுறை. இதைக் கொண்டு, தப்புக் கணக்குப் போடுகிறார்கள் தம்பி! அவ்வளவு தான்!

அமெரிக்கா உறவு பற்றியும், அந்த நாட்டினிடம் உதவியும் கடனும் பெறுவதால் ஏற்படக்கூடும் இழிவு, ஆபத்து பற்றியும் ஆச்சாரியாரே சொல்லிச் சோதிக்க வேண்டி நேரிட்டதைக் காங்கிரஸ் நண்பர்கள் மறந்து விடுகிறார்கள்.

உலகமே உள்ளன்புடன் நேரு பண்டிதரைப் புகழ்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அதனால் அவருடைய ஆட்சியிலே காணக்கிடக்கம் அவலட்சணங்களை, அதனால் எற்படும் அவதிகளை, குறிப்பாக திராவிடத்திற்கு ஏற்படும் தீமைகளை எடுத்துக் காட்டாமல் இருக்க முடியுமா! எடுத்துக் காட்டாதிருப்பது அறிவுடைமை தானாகுமா?

"மத்தாப்பு' கொளுத்தும்போது பார்த்திருப்பாயே தம்பி! எவ்வளவு வண்ணம்! எத்துணை ஒளி! ஆனால் தம்பி! எவ்வளவு சீக்கிரத்தில் தீர்ந்து போய் விடுகிறது! அது போலத்தான் ராஜ தந்திர முறை காரணமாக நடத்தப்படும் உபசாரம் தரும் ஒளி! சிறு அகல் விளக்கானாலும் பரவாயில்லை, மத்தாப்புப் போல அல்ல, நின்று நிதானமாக ஒளிவிட்டு இருளை அகற்றும். அதுபோலத்தான் உள்நாட்டிலே மக்களின் உள்ளம் குளிரும்படி ஆட்சி நடத்தினால், நிரந்தரமான பெருமையும் நிலையான செல்வாக்கும் கிடைக்கும். வெறும் நேத்திரானந்தத்தால் பலன் என்ன?

நேரு பண்டிதரின் "உலகப் புகழ்'' பற்றி ஓயாமல் பண்பாடும் பத்திரிகைகளே, உள்நாட்டு விவகாரத்தில், ஆட்சியின் கோணல் காரணமாக ஏற்படும் அவதிகளைச் சுட்டிக்காட்டி, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடித் திணறுவது தெரியாததா! பழமொழி சொல்வார்களே, உப்புக் கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி என்று. அது போலல்லவா தேசிய ஏடுகளில் நிலைமை ஆகிவிடுகிறது!

நாற்றமடிக்குமளவுக்கு ஊழல்கள் நிர்வாகத் துறையில் நாலு நாளைக் கொரு முறை மாற்றித் தீர வேண்டியவிதமாக அவசரமாகத் தீட்டப்படும் திட்டங்கள்.

முன்யோசனை இல்லாததால் ஏற்படும் கோடிக்கணக்கான பொருள் நஷ்டம்.

வீண் ஆடம்பரத்துக்காக விரயமாகும் பெரும் பணம்.

காகிதத் திட்டங்கள்! அவரைப் பற்றிக் கவைக்குதவாப் பாராட்டுரைகள்!

தம்பி! பார், பார், பண்டிதரின் புகழொளியைப் பார்! என்று படம் காட்டுகிறார்களே காங்கிரஸ் நண்பர்கள், அவர்கள் மறந்து விட்டிருப்பார்கள், அல்லது தெரியாததுபோலப் பாவனை காட்டுவார்கள். நீ மறந்திருக்கமாட்டாயே, பத்து நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளிலே வெளிவந்த செய்தியை.

உலகமே கண்டு வியக்கிறது. எங்கள் பெரும் பெரும் அணைத்திட்டங்களை என்று பெருமை பேசினார்களே. அதிலே காணக்கிடக்கும் கோளாறு வெளிவந்து விட்டது.

கோடி கோடியாகப் பொருள் செலவிட்டு, பெரும் பெரும் நூதனமாக யந்திரங்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன, இந்தத் திட்டங்களுக்காக.

முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே செலவிடப்பட்ட பணத்திலே பெரும்பகுதியை, அணைகள் கட்டும் திட்டம்தான் விழுங்கிவிட்டன! அதிலே நடைபெற்றுள்ள அவலட்சணத்தைக் கேள் தம்பி! பொறுப்பும் திறனும் உள்ள ஆட்சியிலே இப்படி நடைபெறுமா என்று யோசித்துப் பார்! கோபம் அடையாத காங்கிரஸாரைக் கேட்டு வேண்டுமானாலும் பார்! இந்த அணைத்திட்டங்களுக்காக, கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து வாங்கினார்களே யந்திரங்கள், அவைகளில் கிட்டத் தட்ட பாதி சும்மா கிடக்கின்றனவாம்! கேட்டாயா, விபரீதத்தை! ஏழை மக்களின் வியர்வை, பணமாக்கி இந்தக் கருவிகள் வாங்கப்பட்டன! ஆனால் வேலைக்கு உபயோகமாகவில்லை. பொய்க்கால் குதிரை! அச்சு முறிந்த வண்டி! அஸ்திவாரமற்ற கட்டிடம்! இது போலாகி விட்டது. ஏன்? கல்யாணம் செய்தும் பிரமச்சாரியாக இருக்கக் காரணம்? இந்தக் கருவிகள் பழுதாகிப் போனால், பொருத்தக்கூடிய சில்லறை சாமான்கள் கிடைக்க வில்லையாம்! எப்படி இருக்கிறது நிர்வாகம்! இலாடம் கிடைக்கவில்லை, குதிரை கொள்ளு தின்கிறது, கொட்டிலில் கொழுக்கிறது. வண்டியும் மேட்டில் கிடக்கிறது! ஆணி கிடைக்க வில்லை, அதனால் ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கிய அழகான படம், பரணில் கிடக்கிறது! சாவி இல்லை, எனவே பூட்டு மூலையில் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது! ஓடு கிடைக்க விலலை; ஆகவே தளத்துக்குத் தேவையான சாமான்கள் துருப்பிடித்துக் கொண்டு கிடக்கின்றன! பாய்மரமில்லை; எனவே கப்பல் பாழாகிக் கொண்டிருக்கிறது! கூந்தல் இல்லை, மலர் வாடி உதிர்கிறது. இப்படி இருக்கிறது அணைத்திட்டத்திற் கென்று பெரும் பொருள் செலவிட்டு வாங்கிய யந்திரங்கள் சிறு துணைச் சாமான்கள் கிடைக்காததால், தூங்கித் துருப்பிடித்து போகும் காட்சி! எந்த நாட்டிலாவது இந்த அக்கிரமம் நடக்குமா? இவ்வளவு திறனற்று, அக்கறையற்று எந்த தனிப்பட்ட முதலாளியாவது நடந்து கொள்வானா? பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே? அவர்களுக்குப் பதில் கூற வேண்டி வருமே? என்ற அச்சம் கொண்ட எந்த சர்க்காரிலாவது இப்படி ஊழல் நடை பெறுமா? இந்நேரம் பொது மக்கள் சீறி இருப்பார்கள் பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகள் தேளாகி இருக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவியிலிருந்து விரட்டப் பட்டிருப்பார். இங்கு? இதோ பண்டிதரின் அடுத்த பவனி, ரஷ்யாவில் என்று வேடிக்கை காட்டுகிறார்கள். பணம் பாழாகிறது, ஊழல் தலை விரித்தாடுகிறது.

இது மட்டும்தான் என்று எண்ணிவிடவேண்டாம் - இது இப்போது தெரியு ஊழல். இது போல் ஏராளம்! ஆட்சி - அப்பழுக்கற்றது, அதைக் குறைகூறுவது கூடாது, என்று கூறுகிறார்களே காங்கிரஸ் நண்பர்கள், சரியாகுமா!

அரசாங்க நிர்வாகம் ஒழுங்காக இல்லை. நாடகமேடையில் நடிக்கப்படும் கேலிக்கூத்தாக இருக்கிறது, சர்க்காரின் போக்கு. பொது மக்களின் பணம் விரயமாகிறது!

இவ்விதம் சொன்னால், காங்கிரஸ் நண்பர்களுக்குக் கண்கள் சிவந்து விடுகின்றன.

அரசாங்கம் திறமைக் குறைவாக நடந்து கொள்கிறது!

என்று கூறுங்கள் பக்கத்தில் கல் இருக்கிறதா நம்தலைமீது தூக்கிப்போட, என்று தேடுவார்கள், தெளிவை இழந்துவிடும் அளவுக்கு தேசியம் கொண்டுள்ள காங்கிரஸ்காரர்கள்!

முட்டாள்தனம்.

என்று சொல்லுங்கள். . .! ஏ! அப்பா. ஆவேசம் வந்தவர் போல் ஆடி, அடிப்போம், உதைப்போம் என்றெல்லாம் ஏசுவர்.

ஆனால் இவ்வளவும் உண்மை. நாம் சொன்னால் கோபம் கொப்பளிக்கும் - அடக்கி வைக்க முடியாமல் ஒரு காங்கிரஸ் ஏடு நேரு ஆட்சியைப் பற்றி சில தினங்களுக்கு முன் இவ்விதமாக வெல்லாம் கூறியிருக்கிறது. காங்கிரஸ் நண்பர்கள் போலவே இந்த ஏடு எமது பண்டிதருக்கு உலகமே பாதபூஜை செய்கிறது என்று பராக்குக் கூறுவதுதான்! எனினும், அதனாலேயே சகித்துக் கொள்ள முடியாமல், ஆட்சி கே-க்கூத்தாக இருக்கிறது; பொதுமக்கள் பணம் விரயமாகிறது; திறமைக் குறைவாக நடந்து கொண்டிருக்கிறது என்று கண்டித்து எழுதிவிட்டது. முட்டாள் தனத்துக்கு முதல் பரிசு பெறுகிறதாம் சர்க்கார்!! நாம் கூற அஞ்சுகிறோம். ஆனால் இதோ "கல்கி''யின் கண்டனத்தைப் பாருங்கள்:-

"ஏழு வருஷ காலமாக பாங்கிச் சிப்பந்திகள் கிளர்ச்சி செய்யும் போதெல்லாம் இந்திய சர்க்கார் பாங்கி முதலாளியின் கட்சியில் இருக்கிறார்கள் என்று புகார் சொல்லி வந்தார்கள். இதை அவ்வளவாக பொதுமக்கள் நம்பவில்லை.

ஆனால் ஸ்ரீ வி. வி. கிரியின் ராஜினாமா மேற்படி புகாரை இதுவரை நம்பாதவர்களையும் ஓரளவு நம்பும்படி செய்துவிட்டது.''

இந்த பாங்கிச் சிப்பந்திகள் தகராறு விஷயமாகக் கையாளப் பட்டிருக்கும் மௌடிகத்தனம் எல்லாவற்றையும் தூக்கி அடிப்பதாக இருக்கிறது. அரசாங்க நிர்வாகச் சரித்திரத்தில் திறமை இன்மைக்கும் மௌடிகத்துக்கும் முதற் பரிசு கொடுப்பதாக இருந்தால் இதற்குத்தான் கொடுக்க வேண்டும். டிரிபுனலுக்குமேல் டிரிபுனல் நியமிப்பது, விசாரணைக்கு மேல் விசாரணை நடத்துவது, இதற்காக கோடிக் கணக்கில் பொது மக்களின் பணம் விரயமாவது, கடைசியாக வெளியாகும் தீர்ப்பை அவசர உத்தரவு போட்டு நிறுத்தி வைப்பது என்றால், இவையெல்லாம் உண்மையில் அரசாங்க நிர்வாகத்தைச் சேர்ந்ததா, நாடக மேடையில் நடிக்கப்படும் கே-க்கூத்தா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.

இப்போது என்ன சொல்கிறார்கள், நம்மீது எரிந்து விழும் காங்கிரஸ்காரர்கள்.

கோபுரமேறி கொடி காட்டுவது பற்றிக் குதூகலிப்பது இருக்கட்டும், நண்பர்களே! இதோ கூரையேறிக் கோழி பிடிக்காததற்கு என்ன சமாதானம் சொல்கிறீர்கள்!

உலகம் புகழ்கிறது என்கிறீர்கள் - மெத்தச்சந்தோஷம், ஆட்சியிலே இந்த அவலட்சணம் இருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்? ஊர்க்கோடியில் கோதானம் கொடுக்கிறார் என்று புகழ்கிறீர்கள்! இங்கே மாதா மடிப்பிச்சை எடுக்கிறாளே இதற்கென்ன சொல்கிறீர்கள்! என்றெல்லாம் கேட்டால், காங்கிரஸ் நண்பர்களுக்கு வெட்கமும் துக்கமும் சேர்ந்துதாக்கும். வேறென்ன செய்வார்கள், நம்மீது சீறி விழுகிறார்கள்! ஒரு உண்மையைத் தெரிந்து கொள் தம்பி! நம் மீது கோபிக்கி றார்களே தவிர அவர்கள் மனதிலேயும் உண்மை உறுத்தாமலில்லி, "இந்தப் பாவிகள் நடந்து கொள்வதும், இந்தப் பயல்கள் கே- செய்வது போலத்தான் இருக்கிறது. பண்டித நேருகூட அடிக்கடி அந்த மாநாடு இந்த மாநாடு என்று அலைந்து கொண்டிராமல், ஆட்சியை ஒழுங்காக்கி ஊழலை ஒழித்து, நிர்வாகத்தைச் சரிப்படுத்தி, மக்கள் சுபிட்சமடையும் மார்க்கத்தை கவனித்தால் நன்றாகத்தான் இருக்கும் அந்தப் பயல்கள் குத்திக் கிளறிக் காட்டும்போது கோபமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆர அமர யோசித்துப் பார்த்தால், வெட்கமும் துக்கமு மாகத்தான் இருக்கிறது'' என்று அவர்கள் மனம் எண்ணாமல் இல்லை. அதை மறந்து விடாதே! ! உண்மை, அவர்களையும் நம் பக்கம் மெள்ள மெள்ள ஆனால் நிச்சயமாகக் கொண்டுவந்து சேர்த்துவிடும். அந்த பக்குவம் ஏற்படுகிற வரையில், பழித்துத்தான் பேசுவார்கள், பகைவர் போல்தான் நடந்து கொள்வார்கள். நாம்தான் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தை பிறக்கும் வேளை நெருங்க நெருங்கத் தாயின் கூச்சல் அதிகமாகத்தான் இருக்கும்.

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Anna_sign
29-5-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 9:59 am

ஆவடியும் காவடியும்

ஆவடிக் காங்கிரஸ் மாநாடு பாண்டுங் மாநாடு. தம்பி ! ஆவடியில் நடைபெற்ற காங்கிரசின் அலங்காரத்தைக் கண்டதாலே சொக்கிப் போனேன்! அங்கு நேரு பண்டிதரைப் பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல "தலைவர்கள்'' மொய்த்துக் கொண்டிருந்தனர். மோட்டார்கள் மட்டும், இதுவரை யாரும் பார்த்திராத அளவு அங்கு! ஏ! அப்பா அப்படிப்பட்ட ஒரு மகாநாட்டை இதுவரை யாரும் கண்டிருக்க முடியாது. லலிதா பத்மினியின் நாட்டிய நாடகமென்ன, வேறு பல கலா நிகழ்ச்சிகள் என்ன-நேர்த்தியான காட்சிகள், மிக நேர்த்தியான காட்சிகள்! அப்படிப்பட்ட மகத்தான செல்வாக்கை எதிர்த்து வேலை செய்ய முடியுமென்று எண்ணுகிறீர்களே, அப்பாவிகளே! முடிகிற காரியமா!

இவ்விதம் சில காங்கிரஸ்காரர்கள் பேசுவது பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறாய்; தம்பி! நீயேகூட ஆவடியால் ஓரளவுக்கு மயக்கம் அடைந்திருக்கிறாய் என்று தெரிகிறது. இது சகஜமும் கூட!

இன்று காங்சிரஸ், சர்க்கார்! எனவே, எப்போதும் சர்க்காரின் தயவினாலே, சொத்து சுகம் ஆகியவற்றை காப்பாற்றிக் கொள்ளவும் அதிகமாக்கிக் கொள்ளவும் விரும்பும் "கனதனவான்கள்'' யாவரும் அங்கு சென்று, கட்டியம் கூறி நின்றனர். அதனாலே அங்கு பெரிய திருவிழா! அதைக் கண்டு சிலர் சொக்கி விடுவதும் சகஜந்தான்! ஆனால், இலட்சியத்துக் காகப் போரிடும் யாரும், இத்தகைய திருவிழா கண்டு மயக்க மடைந்து விடமாட்டார்கள்.

தம்பி! எங்கள் ஊர் "கருட சேவை'' உற்சவத்துக்கு இலட்சக் கணக்கிலே மக்கள் வருகிறார்கள்! கும்பகோணம் மகா மகம், மதுரைச் சித்திரைத் திருநாள், திருவண்ணாமலை தீபம், திருமலை புரட்டாசி, தில்லை ஆருத்ரா இப்படி இருக்கிறது ஒரு பெரிய பட்டியல்! இதிலே கூடும் மக்கள் இலட்சக் கணக்கில். இவைகளைக் கண்ட பிறகும், ஆண்டு தோறும் இவை நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரிந்தும் தான், சுயமரியாதை இயக்கம் துவக்கப்பட்டது என்பதை மறந்துவிடாதே! இவ்வளவு இலட்சம் இலட்சமாக மக்கள் தேர் திருவிழாவுக்குக் குவியும் போது, சுய மரியாதை இயக்கம் நடத்துவதாலே பயன் என்ன என்று ஆயாசப்படுவது சரியல்ல - இவ்வளவு கோலாகலமான திருவிழாக்கள் நடைபெற்றும், சுயமரியாதை இயக்கம் எழுவது தடைபடவில்லை! அதை எண்ணிப்பார் உண்மை விளங்கும். இலட்சக் கணக்கான பொருள் செலவிட்டு இரசமான விழாக்களை நடத்துகிறார்கள். தங்க மயிலில் தகப்பன் சாமி வருகிறார் தையல் நாயகியோ தங்கப் பல்லக்கில்! வெள்ளித்தேர்! தங்க ரிஷபம்! பொற்கவசமிட்ட கருடன்! இப்படிக் கண்ணுக்குக் கவர்ச்சிகள்! வேத கோஷ்டிகள்! பஜனைக் கூட்டங்கள்! பக்தர்கள் வெள்ளம்போல்! சீமான்கள் சீமாட்டிகள்! வேல்விழி சுழற் கண், குழல் அழகி, குயிலி இப்படிப்பட்ட பட்டாளம் பவனிவரக் காண்கிறோம். அமெரிக்காவில் ஆறு ஆண்டு, இங்கிலாந்தில் ஏழாண்டு, சென்ற மாதம் ஜெர்மனி, இப்படி மேல் நாடுகள் சென்று திரும்பிய மேதாவிகள் கலந்துகொள்வதைக் காண்கிறோம். கவர்னரின் காரியதரிசி, சர்க்காரின் பிரதம இஞ்சினீயர், டாக்டர், பிரபல வக்கீல், உயர் நீதிமன்றத்தின் அதிபர் இப்படிப்பட்ட பதவியாளர்களைக் காண்கிறோம். ஆடை அணிகள் அலங்காரங்கள் அமோகமாக! நாத வெள்ளம்! வாணவேடிக்கை! - இவ்வளவும் இருந்திடக் காண்கிறோம். எனினும், இவைகளாலே நாம் மயக்கம் அடையவில்லை சொக்கிப் போகவில்லை, சோர்வு கொள்ளவில்லை, கும்பலோடு கோவிந்தா போட்டுவிடவில்லை, இவைகளைக் காண்கிறோம். என்னே இவர்தம் போக்கு! எரியும் தணலில் கற்பூரக் கட்டியைத் தேடிக் கொண்டிருக்கிறார்களே! என்னே இவர் தம் விசித்திர சித்தம்! என்று எண்ணிக் கொள்கிறோம். - இவ்வளவும் வீண் ஆரவாரம், சுவைக்குதவாதவை, என்று எடுத்துக் கூறுகிறோம். இங்கு சென்றீரே இன்னவிதமாகத் தொழுதீரே, அங்கு சென்றீரே அந்தத் தேவனை வேண்டிக் கொண்டீரே, வேலழகன் விழாவிலும் வேழ முகத்தான் உற்சவத்திலும் கலந்து கொண்டீரே, அன்பரீர்! கண்ட பலன் இன்னது என விண்டிட இயலுமா? உலகுக்குக் கிடைத்த பலன் இன்னது என எடுத்துரைக்க இயலுமா? என்று கேட்கிறோம். திருவிழா சென்று திரும்பியவரும்கூட அசட்டுச் சிரிப்புடன் - ஆமாம் - ஒரே கூட்டம் - இடியும் இடர்ப்பாடும்தான் கண்டோம் என்று கூறிடக் கேட்கிறோம். சுயமரியாதைப் பணியினை தொடர்ந்து நடத்துகிறோம். ஒரு ஆவடி கண்டு, சொக்கிப் போனவர்கள் பேசுவது கிடக்கட்டும். ஒவ்வோர் தலத்திலும் ஆண்டுக்கோர் ஆவடி நடை பெற்ற வண்ண மிருக்கிறது எனினும் பகுத்தறிவு பரப்பும் பணி பட்டுப் போகவில்லை, வளர்ந்த வண்ணம் இருக்கிறது. உனக்குத் தெரியுமோ தெரியாதோ, இலட்சக் கணக்கான மக்களை இழுக்கும் வைகுண்ட ஏகாதசி, சீரங்கத்தில் "ரொம்பப் பிரமாதம்'' என்கிறார்கள் அல்லவா, அந்த ஏகாதசியின்போது, அந்தஊரிலே உள்ள சுயமரியாதை இயக்கத் தோழர்கள், ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைவு, இரயில் நிலையத்துக்கு எதிர்ப்புறத்தில், ஒரு பெரிய ஓவியம் தயாரித்து வைத்திருந்தனர். என்ன ஒவியம் என்று எண்ணுகிறாய். ஏசுநாதர் சிலுவையில் அறைபடும் காட்சி ஒரு புறமும், புன்னைமரத்தில் அமர்ந்து புல்லாங்குழல் ஊதும் கண்ணனிடம், களவாடிய சேலைகளைத் தந்தருளும்படி, கோபிகையர் குளத்திலிருந்தபடி கேட்கும் காட்சி மற்றோர் புறமும்! ஏகாதசி காண வந்தவர்கள், இந்தப் பகுத்தறிவு ஓவியக் காட்சியைக் கண்டு,

அடே!
அடடே!
இதைப் பாருடோய்!
அட, இப்படித்தான் இருக்கு!
செச்சே, மானத்தை வாங்கித் தொலைக்கிறானுங்க!
இப்படிக் கடவுள் செய்வாரா?
இப்படிச் செய்பவர் கடவுள் ஆவாரா?
இப்படி என கதை கட்டினார்கள்?
நாம் என்னத்தைக் கண்டோம்!

அவரவர் மனப்பக்குவத்திற்குத் தக்கபடி, பேசிச் சென்றனர்.

ஆவடியில் நடைபெற்ற திருவிழாவைப் பிரமாதப்படுத்திப் பேசுவதாலே, காங்கிரசிலே மலிந்து கிடக்கும் குறைபாடுகளை ஒரேயடியாக மறைத்து விடவும் முடியாது; ஆட்சியிலே காணக் கிடக்கும் அவலட்சணங்களையும் மறுத்துவிட முடியாது.

ஒரு ஊரிலே தொடர்ந்து ஒரு பத்து நாளைக்கு நாடகம் நடைபெற்றால், அந்த ஊரிலே உள்ள "சபல புத்தி'' படைத்தவர்கள், நடை நொடிபாவனை, உடை, உரையாடல் ஆகியவைகளிலே, தங்களையுமறியாமல் நாடக பாணியைக் கலந்து கொள்வார்கள்! ஒட்டுவார் ஒட்டிபோல, நாடகபாணி வேலை செய்யும் - சில நாளைக்கு - பலர் பார்த்துக் கேலிபேசி அதைப் போக்கும் வரையில்.

ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்துவிட்டால் போதும், அந்த ஊரில் உள்ள வாலிபவர்களுக்கு, உடலிலே "காயம்'' ஏற்பட்டே விடும் - உயரத் தாண்டுதல், தாவிக் குதித்தல், சைகிள் சவாரியில் வேலை காட்டுவது, இப்படிச் சர்க்கஸ் செய்வதால்!

அதுபோலவே தம்பி, ஆவடி போய்விட்டுவந்தவர் சில நாளைக்கு அந்தப் பாணியில்தான் பேசுவார்கள். பிறகு, நிலைமை அவர்களுக்கும் உண்மையை உணர்த்தும்.

நேரு பண்டிதருடைய பிரத்யேகத் திறமையே, இத்தகைய "சொக்க வைக்கும்'' காரியத்தைச் சோர்வில்லாமல் செய்வது தான்!

பாண்டுங் மகாநாடு பற்றிப் பத்திரிகைகளிலே பார்த்தாயல்லவா!

இதிலே காட்டிய வர்ண ஜாலங்களுக்காகச் செலவழிக்கப் பட்ட தொகையின் அளவு தெரியுமா என்று கேளுங்கள் காங்கிரஸ் நண்பர்களை!

தலைவர்கள் தங்குவதற்காக இரண்டு பெரிய ஓட்டல்கள் ஒதுக்கப்பட்டன. அந்த ஓட்டல் அறைகளைப் புதுப்பித்து வசதிகளைப் பெருக்க 15 இலட்சம் ரூபியா அதாவது 80 இலட்சத்து 60 ஆயிரம் வெள்ளி (மலாய் நாணயம்) செலவிட்டனர்.

மகாநாட்டுக்காக மொத்தம் 6 கோடி ரூபியா, அதாவது 160 இலட்சம் வெள்ளி இதுவரை செலவாகி இருக்கிறது என்று, ஏப்ரல் 9ஆம் தேதி மலாய் பத்திரிகை ஒன்று தெரிவித்தது.

இப்படிப் பணத்தை வாரியிறைத்து நடத்தப்படும் மகாநாடுகள், பவனிகள், கண் காட்சிகள், இவையாவும், அடிப்படைக் குறைபாடுகளை மக்கள் சில காலம் உணராமல் இருக்கச் செய்ய உதவுமே தவிர, கடைசிவரை காப்பாற்றிவிடாது.

திறமைமிக்க ஓவியனொருவன், பழக் கொத்து தொங்குவது போலத் திரையிலே தீட்டித் தொங்கவிட்டிருந்தானாம். பறவைகள் சில பழத்தைக்கொத்தித் தின்பதற்காக வட்டமிட்டனவாம்! ஓவியனுடைய கைத்திறனை அனைவரும் பாராட்டத் தானே செய்வர். ஆனால், பறவைகளும் பாராட்டுரை வழங்கினோரும், ஓவியத்திலே கண்ட பழமே போதும் என்றா இருந்து விட முடியும். பாராட்டுவர், பிறகோ பழச்சுவை தேடி வேறிடம் செல்வர். பறவைகளே கூடப் பறந்துபோகும் பழத்தோட்டம் நோக்கி.

அதுபோலத்தான் ஆவடிகள்! ஆவடிபோல வேறு எந்த கட்சியினாலும் நடத்திக் காட்டவே முடியாது என்பதல்ல. ஆவடிபோல விமரிசையாக மாநாடுகள் நடத்தவே கூடாது என்பதல்ல தம்பி! ஆவடி நடத்திக் காட்டிவிட்டு, இத்துடன் திருப்தி பெருக! இன்னலை மறந்திடுக! இன்பம் பெற்றதாக எண்ணிக் கொள்க! என்று கூறுவது கூடாது என்பதைத்தான் கூறுகிறேன். "ஆவடி கண்டேன், ஆனந்தம் கொண்டேன், இனி நான் காவடி தூக்கி ஆடிடுவேன், களிப்புச் சிந்து பாடிடுவேன், காங்கிரஸ் கட்சியினருடன் கூடிடுவேன்' என்ற பேசிடும் போக்கினர் பற்றிக் கவலை கொள்ளாதே. நமக்கென்று ஒரு மகத்தான குறிக்கோள் இருக்கிறது - அதிலே வெற்றி பெறுவதற்காகப் பணியாற்றும் நாம், ஆவடி கண்டு அயர மாட்டோம், பாண்டுங் பசப்புக்கும் பலியாகி விடமாட்டோம்.

ஆவடியிலும் பாண்டூங்கிலும், அலங்காரம் கண்டு அன்பர் சிலர் சொக்கிப் போகின்றனர். நாமோ இவ்வளவு ஆவடிகளுக்குப் பிறகும்கூட, அங்கோர் சமயம் இங்கோர் சமயம் என்ற அளவிலாவது, சிலர் பலர், அரசியலில் இன்று காணப் படும் அவலட்சணத்தையும், வடநாட்டு ஆதிக்கத்தையும், கண்டிக்க முன்வருவது காண்கிறோம், மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொள்கிறோம். ஆவடி, அனைவரையுமல்ல, வழி தவறியோர், வழுக்கி விழுந்தோர், வாழ்த்திப் பரிசு பெறுவோர் ஆகியோரைத்தான் சொக்கிடச் செய்கிறதே தவிர, கொள்கையில் உறுதி படைத்த எவரையும் காவடி தூக்கியாக்கிடாது - மாறாக, காவடி தூக்கிடும் போக்கினை அத்தகையோர் கண்டித்த வண்ணம்தான் இருக்கிறார்கள்.

"ஐயன்மீர்! ஆவடி நடத்திக் காட்டினீர், இருபது இலட்சம் செலவிட்டீராம்! உங்களிடம் வசதி இருக்கிறது, செலவிட்டீர்கள்! பாண்டுங் பற்றிப் பேசுகிறீர்கள் பரவசத்துடன். கோடி என்கிறார்கள் அதற்கான செலவு! சரி! ஆனால் இவைகளில் பலனாக, ஏழை கண்டது என்ன? இடர்பாடு எது களையப் பட்டது? எதேச்சாதிகார முறை ஒழிக்கப்பட்டதா! இல்லாமை இயலாமை துடைக்கப்பட்டதா! ஓவியத்தில் உள்ள பழக்கொத்துதானே, உங்கள் ஆவடிகள்,'' என்று கேட்கிறார்கள், சொக்குப் பொடியால் மயக்கமடையாதவர்கள்.

"இங்கே நடைபெறும் ஆவடியைக் காட்டி, இந்நாட்டிலே செல்வாக்கு எவ்வளவு செழிப்பாக இருக்கிறது காணீர் என்றும், பாண்டுங் காட்டி வெளிநாடுகளில் கிடைக்கும் மகத்தான செல்வாக்கைக் காணீர் என்றும் விளம்பரம் பேசி வருகிறீர்கள் - எனினும் காய்ந்த வயிறுடன் இங்கும், கண்ணீருடன் வெளி நாடுகளிலும் இந்நாட்டு மக்கள் வதைபடுகின்றனர். அதை இம்மியளவு போக்கவும் இந்த ஆவடிகளும், பாண்டுங்குகளும் பயன்படக் காணோமே'', என்று கேட்கின்றனர், திருவிழாக் கண்டு தெளிவை இழக்காதவர்கள்.

பர்மியப் பிரதமர் இருக்கிறாரே நூ, அவர் நேரு பண்டிதருக்கு அத்யந்த நண்பர்!

சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர் அங்கு வந்து அளவளாவுகிறார். பண்டிதரும் அந்தப் பக்கம் போகும் போதெல்லாம், நூவினால் உபசரிக்கப்படுகிறார். பத்திரிகைகள் பத்தி பத்தியாக இந்த "நேசம்'' பற்றிச் செய்திகளைத் தருகின்றன.

ஆசியாவிலே கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளை மட்டுமல்ல, ஆப்பிரிக்காவிலே மூண்டு கிடக்கும் பிரச்சினை களையும் ஒரு சேரத் தீர்த்துவைக்கும் "அபாரமான'' வேலையின் நிமித்தம் கூடினரே, பாண்டுங்கில். அதற்காகப் புறப்பட்ட போதுகூட நேரு பண்டிதர், இரங்கூனில் தங்கி, அங்கு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொண்டார். நூவுடன் பண்டிதர் பர்மிய உடையில், சிரித்துப் பேசி மகிழும் சினிமாக் காட்சி போன்ற படம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இவ்வளவு நேசம், பாசம், இருக்கிறது இரு தலைவர்களுக்கு இது தந்துள்ள பலன் என்னவென்று கேட்டுப் பார்த்ததுண்டா, தம்பி இவ்வளவு தோழமையின் விளைவாக, பர்மா வாழ் மக்களுக்குக் கிடைத்துள்ள உரிமைகள், வசதிகள் சலுகைகள் என்னவென்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா?

"இந்தியர்கள் விட்டுவந்த பிறகு பர்மாவில் அநேக விஷயங்கள் நடந்து விட்டன. வீடுகளையும் நிலங்களையும் பர்மியர்கள் வந்து ஏற்றுக் கொண்டு அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள்; யுத்தம் காரணமாக விட்டுச் சென்ற நிலபுலன்களை, வீடு வாசல்களை சுவான்தார்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்று சட்டம் இருப்பினும், இரங்கூனில் மட்டும் அது செல்லுபடியாகாது. நகருக்கு வெளியே விஷயம் எப்படியென்றால், வீட்டுக்காரர்களுக்குக் குடித்தனக்காரர்களை வெளியேற்றும் உரிமை சட்ட பூர்வமாக மறுக்கப்பட்டது. பார்க்கப்போனால் வீட்டுக் குடையவர்கள் எல்லாரும் இந்தியர்கள். அதிலே வசிப்பவர்கள் பர்மியர்கள். இப்போது இன்னொரு பெரிய கண்றாவி. ஒரு குடித்தனக்காரன் தன் ஜாகையை மற்றொரு குடித்தனக்காரனுக்கு மாற்றி விடுவான். வீட்டுக்காரன் கையைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். ஒன்றும் சொல்வதற்கில்லை. அட, வீடே வேண்டாம், நிலமே வேண்டாம், விற்றுவிட்டுப் போவோம் என்றாலும், இன்னொரு சட்டம் இருக்கிறது. பர்மியப் பிரஜைகளுக்குத் தவிர வேறொருவனுக்கு ஸ்தாவார சொத்துக்களை விற்பனை செய்யவோ அடைமானம் வைக்கவோ குத்தகைக்கு விடவோ அனுமதிகிடையாது. இந்தியரிடம் விலைக்கு வாங்கவும் பர்மியர் எவரும் தயாராக இல்லை இதனால் அங்கு அடைமானத்தில் கடன் வாங்கியுள்ள இந்தியர்கள்கூட தங்கள் ஸ்தாவரச் சொத்துக்களைக் கடனுக்கு ஈடாக மாற்றிக் கொள்ள முடியாத நிலையில் செய்வதின்னதென்றறியாமல் இருக்கிறார்கள். சுதந்திர சட்ட அரசியல் சட்டப்படி உத்தியோகம் இனி பர்மியர்களுக்கே என்று ஆகிவிடவே, அனேகர் வேலை இழக்கும் திண்டாட்டத்திலும் சிக்கியிருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த மாதிரி ஒரு புதிய பெரிய மசோதாவையும் பர்மியப் பார்லிமெண்டு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. விவசாயத்தில் ஈடுபட்டிராத நிலச்சுவான்தார்களின் நிலங்களை எல்லாம் சர்க்கார் எடுத்துக் கொண்டு விடுவது என்பதே இதன்சாராம்சம். விவசாயிகளாக இருந்தால் தலா ஐம்பது ஏக்கர் வைத்துக் கொள்ளலாம். இங்கே சுமார் ஐயாயிரம் இந்தியர் வரை 26 இலட்சம் ஏக்கராவுக்குச் சொந்தக்காரர்கள். அதன் வருமானம் நாற்பது கோடி வரை மதிக்கப் படலாம். பர்மிய விவசாயி மந்திரி சட்டதிட்டமாக, நிலம் எல்லாம் ராஜ்ய சர்க்காருக்கே சொந்தம்; நிலச்சுவான் தாரருக்கு அதை வைத்துக் கொண்டு அதில் சாகுபடி செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது; சர்க்கார் உசிதம் போல் இந்த ஏற்பாட்டை ஒழுங்கு செய்யவோ, மாற்றவோ, ரத்துச் செய்யவோ உரிமை பெற்றது. . . என்றார்.

பொதுவாக இந்தியர் நிலைமை திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அந்நிய நாட்டவர் களாகவே மதிக்கப்படுகிறார்கள்; வருமானம் மிகவும் குறைவு; ஆகையால் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுகிறது; எனவே பர்மியரிடையே அந்தஸ்து என்பது அவர்களுக்கு அதிகம் இல்லை.

தம்பி! பர்மாவில் உள்ளவர்களில் தமிழரே அதிகம். பர்மாவில் இன்றுள்ள நிலைமை இது. அறுபது நாட்களில் ஐந்து நாடுகளைச் சுற்றிவிட்டு வந்த ஆனந்தவிகடன் எழுத்தாளர் ஒருவர் தீட்டியதைத்தான் தந்திருக்கிறேன்.

இத்தனை இன்னலுக்கு ஆளாகியிருக்கிறீர்களே, இங்கிருந்து சென்றவர்கள், நேரு பண்டிதருக்கு பர்மிய முதல்வரிடம் உள்ள நேசமும் பாசமும் என்ன பலன் கொடுத்திருக்கிறது? நேரு பண்டிதரைக் காணும்போதே, பர்மிய முதல்வரின் முகம் மலருகிறது, கட்டித் தழுவிக் கொள்கிறார், ஆசியாவின் வழிகாட்டி நீரே என்று உபசாரம் பொழிகிறார், விருந்து நடத்துகிறார், ஆனால் தன் சொந்த நாட்டுப் பிரச்சினை எழுகிறபோது, இந்த நேசமும் பாசமும் ஓடி ஒளிகிறது. பர்மியரின் உரிமைக்களுக்காகவே பணியாற்றுகிறார். எமது பண்டிதருக் குள்ள செல்வாக்கினைப் பாரீர், அவர், "செக்கு மாடென உழைத்திடுவீர், செல்வம் கொழித்திடச் செய்திடுவீர், அதை டாடாவும் பிர்லாவும் செல்லாக அரித்தாலும் சீறி எழாதீர்' என்று கூறினாலும் அதுதான் சோஷியலிசம் என்று எண்ணிப் பூரித்திடுவீர் என்று பேசுகிறார்கள். ஒரு நாட்டின் தலைவருக்கு வேறொரு நாட்டிலே அபாரமான செல்வாக்கு இருக்குமானால் செல்வாக்குள்ள தலைவரின் நாட்டவருக்கு அந்த வேற்று நாட்டிலே, மதிப்பு உயரும், வசதிகள் கிடைக்கும், சலுகைகள் கூடப் பெறவழி ஏற்படும். இவர்களோ, பர்மாவில் பண்டிதருக்கு மிகுந்த செல்வாக்கு என்று பண் இசைக்கிறார்கள் என்று ஆனந்த விகடனைச் சேர்ந்தவரே ஆயாசத்துடன் கூறுகிறார். பண்டிதரின் செல்வாக்கின் பொருள்தான் என்ன?

ஆவடி காட்டியும் பாண்டுங் பற்றிப் பாராட்டிப்பேசியும் தென்னாட்டவர் காணும் பலன் என்ன? காவடி தூக்கித் திரிய வேண்டி இருக்கிறது, எதற்கும் எப்போதும்!

டில்லி நிதி மந்திரி தேஷ்முக் நாமெல்லாம் ஏதோ விளக்க மறியாதார் என்ற எண்ணத்தோடு பேசுகிறார். முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலே வடநாட்டுக்கே அதிகத் திட்டங்கள் செய்து தரப்பட்டன என்று குறை கூறுகிறார்கள் - ஏன் அப்படிச் செய்ய நேரிட்டது என்றால், திட்டம் முதலில் வடநாட்டுக்காகத் தீட்டினோம், என்கிறார். இது சமாதானம் என்று அவர் கருதுகிறார். அவ்வளவு பெரியவர் சொல்லுகிறாரே என்பதற்காக, இங்குள்ள அடிவருடிகளும், "ஆமாம் சாமி'' போடுகிறார்கள். திட்டம் தீட்டும்போது, ஏன் வடநாட்டின் கவனம் மிகுந்திருந்தது. தென்னாடுபற்றி ஏன் அக்கறையற்ற போக்கு, அலட்சியம் ஏற்பட்டது என்பதற்கு அவரும் காரணம் கூறவில்லை; இங்கு உள்ளவர்களும் கேட்கக் காணோம். உங்களுக்கு இரண்டாவது பந்தியிலே சாப்பாடு போடப்படும் என்று விருந்து சாப்பிட்ட "தெம்பில்'' ஏப்பம் விட்டபடி தேஷ்முக் கூறுகிறார். இங்குள்ள "பிக்ஷாந்தேஹி''களும் ஏதோ பின் கட்டில் உட்காரவைத்துப் போட்டாலும் பரவாயில்லை, பசி வயிற்றைக் கிளறுகிறது என்று கூறுகிறார்கள்!! இது தானே ஆவடி தந்த அந்தஸ்து!

"பிக்ஷாந்தேஹி'' என்ற நாம் சொன்னால் காங்கிரஸ் நண்பர்களுக்குக் கோபம் கொதித் தெழுகிறது. ஆஹா! எங்களையா பிச்சைக்காரர்கள் என்ற ஏசுகிறீர்கள், என்பார்கள். மைசூர் ராஜ்ய முதலமைச்சர் பேசியிருக்கிறார் இது போல!! டில்லி சர்க்காரின் போக்கை மைசூர் சட்ட சபையில் மிக வன்மையாகக் கண்டித்துப் பேசுகிறார்! டில்லி, தென்னாட்டுத் தலைவர்களை, அவர்களை இங்க நாம் பட்டேல் என்று புகழ்ந்தாலும் சரி, திலகர் என்று கொண்டாடினாலும் சரி, அவருக்காகக் கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு மேலே விழுந்து வேலை செய்தாலும் சரி அவர் மேனியில் துளி தூசி பட்டாலும் என் கண்ணிலே மிளகாய்ப்பொடி விழுவது போல உருகி இருக்கிறது என்று உருகிப் பேசினாலும் சரி, "அவருடைய ஆட்சியை ஆதரிப்பதையே என் தவமாகக் கொண்டுவிட்டேன்' என்று பேசிப் பணியாற்றி வந்தாலும் சரி, எப்படிப்பட்ட செல்வாக்கை இங்கே பெறக்கூடியவராக இருந்தாலும், அந்தத் தலைவர்களை அங்கு பிச்சைக்காரர்கள் போலத்தான் நடத்து கிறார்கள் என்பதை உணர்ந்து, சற்றுக் கோபமாகவே பேசுகிறார்.

"மத்திய சர்க்காரிடம் நாம் சொல்லும் போதெல்லாம், நாமும் நமது யோசனையைக் கூற வேண்டும்; ஏதோ பிச்சைக்காக வாங்கப் போகும் போக்கிலே நடந்து கொள்ளக் கூடாது.''

என்று இடித்துரைக்கிறார். இதன் பொருள் விளக்கமாக இருக்கிறதே, தம்பி! ஏன் காங்கிரஸ் நண்பவர்களுக்கு மட்டும் விளங்கவில்லை! டில்லியில் தென்னகத்துத் தலைவர்களைப் பிச்சை வாங்க வருபவர்களை நடத்துவதுபோல நடத்துகிறார்கள் என்பதைத் தோழர் அனுமந்தையா, தனியான தோர் பாணியில் எடுத்துரைக்கிறார்.

"அவ்வப்போது, கடன் வேண்டும், மானியம் வேண்டும் என்றெல்லாம், மத்திய சர்க்காரிடம் கெஞ்சிக் கேட்டபடி இருக்க வேண்டிய நிலைமை எப்படி இருக்கிற தென்றால், மத்திய சர்க்கார் "வசதிகளை'' குவித்து வைத்துக் கொண்டிருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இராஜ்ய சர்க்காருக்கே உரிமையானதான விஷயங்களில்கூட, இப்படிச் செய்யுங்கள் அப்படிச் செய்யுங்கள் என்று வற்புறுத்துகிறது, கடன் தருகிறேன் மானியம் தருகிறேன் என்று ஆசைகாட்டி!!

தன்னிடம் உள்ள ஏராளமான "வசதிகளை'' வைத்துக் கொண்டு, மத்திய சர்க்கார், மெள்ள மெள்ள, ஆனால் வெற்றிகரமாக, இராஜ்ய சர்க்காரின் நடவடிக்கைகளிலே புகுந்து, ஆதிக்கம் செலுத்துகிறது.

மத்திய சர்க்காரின் போக்கு எப்படி இருக்கிறது என்றால், அமெரிக்கா, பணம் கடனாகவும் இனாமாகவும் கொடுத்துத் தன் ஆதிக்கத்தை இங்கும் வேறு பல நாடுகளிலும் புகுத்துகிறதே, அதுபோல இருக்கிறது.''

தம்பி! இவ்வளவும் கூறுபவர், வகுப்புவாதி, விஷமி அல்ல. பிற்போக்கு வாதியல்ல; காங்கிரஸ்காரர் தான்! ஆனால் இவருக்கு முதுகெலும்பு இருக்கிறது. வடநாட்டுத் தலைவர் களுக்கு வால்பிடித்தால் நமது அரசியல் வாழ்வு ஒளிவிடும் என்ற அடிமைப் புத்தியில்லை. ஆகவே, அஞ்சாமல் நிலைமையைக் கூறுகிறார். ஆவடி பார்! அதன் அற்புதம் கேள்! என்று தெம்மாங்கு பாடிக் காட்டினாலும், காவடி தூக்கித் திரியும் நிலைக்குத் தென்னாடு வருவது கண்டு மனம் வெதும்பிப் பேசுகிறார்.

பிச்சைக்காரரை நடத்துவது போல நடத்துகிறார்கள்.

இராஜ்ய விவகாரங்களிலே நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

அமெரிக்கா பணத்தை வீசி, பல்லிளிக்கச் செய்து, தன் படைவீடாகப் பல நாடுகளை அமைத்துக் கொள்வது போல டில்லியும் செய்கிறது.

இவ்வளவு குற்றச்சாட்டுகளை ஏவுகிறார் தோழர் அனுமந்தையா!

ஆவடிகள் நடத்துவதால் கிடைக்கும் பலன் இதுதானே, தம்பி! வேறென்ன?

திருவிதாங்கூர்-கொச்சியில், முதலமைச்சராக முன்பு இருந்த தோழர் கேசவன் என்பவர் ஓரிரண்டு திங்களுக்கு முன்பு மலாய் நாடு சென்றார். கோலாலம்பூரில் மலையாளிகள் அவருக்கு வரவேற்பும் விருந்தும் நடத்தினர். அங்கு அவர் பேசியது என்ன தெரியுமா? ஆவடியின் பெருமையைப்பற்றியும் அலகாபாத் பண்டிதரின் அளவற்ற செல்வாக்கைப் பற்றியுமா? இல்லை; இல்லை டில்லியின் மாற்றாந் தாய்ப் போக்கினைக் குறித்துத்தான் பேசினார். தாயகத்திலிருந்து வந்த தலைவரை, வாழ்த்தி வரவேற்று, ஏதோ நாங்கள்தான் பிழைப்புக்கு வழிதேடிக் கொண்டு இந்தக் கண்காணாச் சீமைக்கு வந்து சேர்ந்தோம், அங்கே தாயகம் தலைகள் ஒடித்தெறியப்பட்ட நிலையில் தன்னரசு நடத்துகிறதே, தரணியெங்கும் பரணி பாடிவரும் நேரு பண்டிதரின் ஆட்சி நடக்கிறதே, எப்படி இருக்கிறது? தாயகம் இன்பம் வழிந்தோட வேண்டுமே? என்று கேட்கிறார்கள். தோழர் கேசவன் முன்னாள் முதலமைச்சர், அதையா கேட்கிறீர்கள் அன்பர்களே? என்று கூறி பெருமூச் செறிகிறார்.

"நாங்கள் புதிய கைத்தொழில்களைத் தொடங்க இடையறாது மத்திய சர்க்காரின் உதவியை நாடி வந்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு புதிய கைத்தொழிலும் வடஇந்தியாவிலே தொடங்கப்படுகிறது. பிரம்மாண்டமான பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் தற்போது, பம்பாய்க்கு அருகில் உள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டு வருவதையும், மண் ஆராய்ச்சிப் பாக்டரியும் அப்பகுதியில் அமைக்கப்படுவதையும் இதற்கு உதாரணமாகக் காட்டலாம். மத்திய அரசாங்கம் இத்தகைய மாற்றாந்தாய்ப் போக்கை அனுஷ்டிப்பது கண்டிக்கத் தக்கதாகும்.'' தோழர் கேசவன் என்பவரின் பேச்சு, இது!! கண்டிக்கத்தக்கது என்கிறார், காரணமும் காட்டுகிறார். கண்டனம் பிறக்கிறது, அது பிறவாதிருக்கத் தான் ஆவடி அலங்காரம் காட்டப்பட்டது.

ஆவடி மூலம், காவடி தூக்கிகளாக இருக்கத் தென்னாடு இசைகிறதா, இணங்குகிறதா, என்பதுதான் பரிட்சை பார்க்கப்பட்டது. இந்தச் சூட்சமத்தைப் புரிந்து கொள்ளாமல் ஆவடியைப் பார்த்தீர்களா, என்று கண்ணையும் வாயையும் அகலத் திறந்து கொண்டு, அன்பர் சிலர் கேட்கிறார்கள். என்ன செய்யலாம் தம்பி! அவர்களின் மனமயக்கம் தெளிய வேண்டும் - அதற்கான முறையில் நாம் பணியாற்ற வேண்டும்.

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Anna_sign
5-6-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:00 am

வளை ஒலி கேட்கிறதா!!

அண்ணாவின் வடநாட்டுப்பயணம் -
ஹரித்துவாரமும் சாதுக்களும்

தம்பி!

சில தினங்களுக்கு முன்னர் நேரு பண்டிதர் ஹரித்துவாரம் எனும் ஊருக்குச் சென்றிருந்தார்; இமயமலையின் அடி வாரத்திலே இருக்கிறது இந்த ஊர்; இந்துக்கள் இதைப் புண்ணிய ஸ்தலம் என்று கொண்டாடுகிறார்கள். இங்கு வந்து இமயத்திலே இருக்கும் ரிμகேசம் போன்ற ஸ்தலங்களுக்குப் போகிறார்கள். சிறிய ஊர்தான். நான் அங்குப் பத்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்திருக்கிறேன், பெரியாரின் அன்புப் பாத்திரமாக இருந்தபோது! - அந்தப் பழைய நாட்களில். அப்போது நான் "விடுதலை''யில் எழுத்தாளன். பெரியாருடன் வரும் பேச்சாளன். ஆமாம், மறந்து போகிறேன் பார் தம்பி, திராவிடர் கழகச் செயலாளனாகவும் இருந்து வந்தேன். பார்ப்பனரை இந்த நாட்டை விட்டு ஓட்டும் ஒரே அபார சேவை செய்வதற்காகவே, இன்று அல்லும் பகலும் கடுமையான நோயைத் தாங்கிக் கொண்டு, எவ்வளவோ லாபகரமான தொழில்கள் வருந்தி அழைத்தும், வருக! வருக! என்று பலர் பணத்தைக் கொட்டி ஆசை காட்டியும், "லட்சியத்தைக் கைவிடேன்! துரோகிகளை ஒழித்துக்கட்டியே தீருவேன்! என்று முழக்கம் (ஆறு திங்களில் நான்கு முறையேனும்), செய்து கொண்டும், நாள் தவறாமல் எழுதிக் கொண்டும் வரும் சிலம்புக் கூட்டத்தார், என்னைக் கேபேசி யும் பெரியாரைப் பின்பற்றும் "பேதமை''யை எடுத்து விளக்கிக் கொண்டும், இதை நாம் உட்கொள்வதற்காக வேண்டி, இடையிடையே சுவையுள்ள விருந்து (அன்புடன்தான், மறக்க முடியுமா!) அளித்துக்கொண்டும் இருந்த நாட்கள்! திடீரென்று ஒரு தினம் பம்பாயிலிருந்து எனக்கோர் தந்தி வந்தது. "உடனே கிளம்பி ஹரித்துவாரம் வந்து சேரவும்'' என்று. தந்தி தந்தவர்கு பெரியார்; அவர் பம்பாய் பகுதி சென்று அங்கிருந்து ஹரித்துவாரம் சென்றுவிட்டு, வடநாட்டிலே வேறு பல ஊர்போக திட்டம் இட்டு இருந்தார் போலிருக்கிறது, எனக்கென்ன தெரியும்? யாருக்குத்தான், எப்போதுதான் அவர் போடும் திட்டம், அவராகச் சொல்லுமுன் தெரிகிறது?

ஹரித்துவாரம் வந்து சேர் - எனக்கு இப்படி ஒரு தந்தி.

என் சுபாவம், "உனக்குத் தெரியும், ஏன், ஏறக்குறைய கழகத் தோழர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதானே. பக்கத்திலே உள்ள ஆற்காடு போவதானாலும் நாலு நண்பர்கள் கூட வேண்டுமே எனக்கு. அப்படிப் பழகிப்போன என்னை ஹரித்துவாரம் வரச் சொல்கிறார்: என்ன செய்வது? கிளம்பினேன்: தோழர் குருசாமி இரயிலடி வந்திருப்பதாக நினைவு.

பத்து நாட்கள் ஹரித்துவாரத்தில் இருந்தோம், ஒரு ஐயர் வீட்டில்.

அவர் காலஞ்சென்ற பேரறிஞர் எம். என். ராய் அவர்களின் இயக்கத்தவர். எனவே, எங்களை அன்புடன் தமது இல்லத்தில் வைத்து, உபசரித்தார்.

உங்களில் பலருக்குத் தெரிந்திராது தம்பி! பெரியார் அங்குதான், வால்மீகி இராமாயணம் பற்றிய குறிப்புரைகள் தயாரித்தார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுதின கவனம் இருக்கிறது.

அந்த ஹரித்துவாரம் "சாதுக்களின்'' கோட்டை! எந்தத் தெருவுக்குச் சொன்றாலும், சந்நியாசிகள்! எவ்வளவு "கம்பீரமாக'' நடந்து செல்கிறார்கள் தெரியுமா! அவர்களும் சரி, கொழுத்துக் கிடக்கும் பெரிய பெரிய பசுக்களும் சரி. ஹரித்துவாரத்து வீதிகளிலே நடமாடும் உரிமை தமக்கே என்ற தீர்மானத்துடன் இருப்பது போலத்தான் தோன்றும்.

கங்கை-நடுப்பகல் இரண்டு மணிக்குக் கால் வைத்தாலும் "ஐஸ்'' போல இருக்கிறது, கொட்டுகிறது.

ஹரித்துவாரத்தில், ஆற்றோரத்தில் அழகான சோலைகள் - பழமுதிர் சோலைகள்! சோலைகளை வேலிகளாகக் கொண்ட பெரிய மடங்கள் - ஒவ்வொரு மடத்திலும் நூற்றுக்கணக்கான சாமியார்கள்: உலக மாயையை மிக நன்றாக உணர்ந்து உலகோர்க்கு உபதேசம் செய்யும் "புனிதத் தொண்டு'' புரியும் அவர்களுக்காக, நாள்தோறும் மூட்டை மூட்டையாகக் கோதுமை மாவும், டின் டின்னாக மணம் கமழும் நெய்யும்! இந்த மடங்களில் ஒரு குறையும் இருத்தல் ஆகாது என்பதற்காக ஏராளமான "சொத்து'' சாசனப்படுத்தப்பட்டிருக்கிறது.

மாலை வேளைகளிலே பெரியார் உலாவச் செல்வார். சாலையில் உடன் நான் சொல்வேன். வெண்ணிறத் தாடி; பொன்னிறமேனி; ஆரஞ்சு நிறச் சால்வை நான் கொட்டும் குளிருக்குப் பயந்து முரட்டுத்துணிச் சட்டை போட்டுக் கொண்டு, அதற்குள் கரங்களை விட்டுக் கொண்டு, கை கட்டிய வண்ணம் அவர் பின்னால். சாது சந்நியாசிகளைக் காண்பதையே வேலையாகக் கொண்ட அந்த நாட்டு மக்கள், ஹரித்துவாரம் இதுவரை காணாத மகிமை பொருந்திய குரு மகான், தன் பிரதம சீடனுடன் செல்கிறார் என்று எண்ணிக் கொண்டு, பக்தியுடன் கைகூப்பித் தொழுவர். இப்போதும் மனக்கண் முன்னால் அக்காட்சியைக் காண முடிகிறது; எங்களுடன் மணி இருப்பார். ஓஹோஹோ! மணி என்றதும், ஆச்சரியத்தால் கண்களை அகலத் திறக்கிறாயா தம்பி! விடுதலை அச்சகத்தில் மணி என்றோர் அச்சுக் கோர்ப்போர் இருந்தார். அவர் பெரியாருக்குப் பணிவிடை செய்வதற்காக வந்திருந்தார், அவரைக் குறிப்பிட் டேன்; அப்போது ஈ.வெ.ரா. மணியம்மையார் பற்றிய நிழல் உருவச் செய்தியும் கிடையாது.

இவ்வளவு மடங்கள் - கவாத்துக் கொடுத்து, காக்கி உடை அணிவித்து, கையில் துப்பாக்கியைக் கொடுத்து விட்டால், பட்டாளத்திலே "சர்தார்களாக'க் கூடிய உடற் கட்டமைந்த சன்னியாசிகள் கூட்டம் கூட்டமாக - அவர்களின் பராமரிப்புக் காக இலட்சக் கணக்கில் பொருட் செலவு - அவர்களோ இகலோகத்தின் இழிதன்மையைப் பற்றியும் பரலோகத்தின் பெருமையைப் பற்றியும் உபதேசம் செய்வர். இந்த விசித்திரக் காட்சி, என் உள்ளத்தில் ஓராயிரம் எண்ணங்களைக் கிளறும். இப்படியும் ஒரு நாடா? ஊரார் உழைப்பைத் தின்று கொழுத்துக் கொண்டு, முக்திக்கு வழி காட்டுவதாகக் கூறிக்கொண்டு, ஒரு "பட்டாளமே'' இருக்கிறதே! எந்த நாட்டிலாவது இப்படி ஒரு பயனற்ற கூட்டத்தை அனுமதிப்பார்களா! இங்கு அடிதொழுது கொண்டிருப்பதைப் பெறற்கரிய பேறு என்றல்லவா கருதுகிறார்கள்; வேதனை நிரம்பிய விசித்திரமாக இருக்கிறதே, என்றெல்லாம் எண்ணிக் கொள்வேன்.

சம்சாரி உழைத்து
சன்யாசி கொழுக்க
தருமம் புரி எனல் ஆஸ்திகமா?
அது சரியில்லை என்பது நாஸ்திகமா?

என்று உடுமலை நாராயணகவி "சொர்க்கவாசல்'' படத்துக்குப் பாடல் தீட்டினார். கே. ஆர். ராமசாமி பாடினார். நண்பர்கள் சிலரும் கேட்டு இன்புற்றோம். நீ கேட்டிருக்க முடியாது தம்பி. சென்சார் அதைக் கத்தரித்து விட்டு பாரதப் பண்பை காப்பாற்றி விட்டதாகப் பூரிப்படைந்தனர். அந்தப் பாடலும் அதற்குரிய காட்சியும் தயாரிக்கப்பட்டபோது எனக்கு ஹரித்துவாரக் காட்சி நன்றாகத் தெரிந்தது.

நேரு பண்டிதருக்கு, இந்த "மாமிச மலைகளை''க் கண்டதும், உண்மையிலேயே கோபம் கொந்தளித்திருக்கிறது ஆனால், பாமர மக்களின் அன்பை இழக்க நேரிடுமே என்ற அச்சம் அவரை வாட்டி வதைத்தும் இருக்கிறது; எனவேதான் அவர் ஹரித்துவாரத்தில் கண்ட "ஆள்விழுங்கிகளை'ப்' பற்றிய கண்டனத்தை, வேறொரிடம் சென்று, ஜாடைமாடையாகக் குறிப்பிட்டுப் பேசினார் - 50 இலட்சம் சாதுக்கள் இருக்கிறார்கள் நமது நாட்டில் - இவர்களில் ஒரு சிலர் உண்மையானவர்களாக இருக்கலாம், - பெரும் பாலானவர் பிறர் உழைப்பைத் தின்று கொழுப்பவர்கள் - இவர்கள் நாட்டுக்குப் பெரியதோர் சுமை - நஷ்டம் - என்ற கருத்துப்பட நேரு பண்டிதர் பேசினார்.

அதுமட்டுமல்ல! ஹரித்துவாரத்தைப் பற்றியே அலட்சியமும் அருவருப்பும் கலந்த முறையில் குறிப்பிட்டார்.

அவர் பேசினார், "ஹரித்துவாரம் இந்துக்களின் புண்ணியஸ்தலமாகக் கருதப்பட்டு வருகிறது'' என்று.

கவனித்தாயா, தம்பி! அவர் பேச்சை. ஹரித்துவாரம். புண்ணிய ஸ்தலம் என்று கூறவில்லை - அப்படிக் கருதப்பட்டு வருகிறது! நான் கருதவில்லை, பாமரர்கள் கருதுகிறார்கள் அவ்விதம் என்ற கேலி அதிலே தொக்கி நிற்கிறது. தெரிகிறதா. அவர் அப்படி ஒன்றும் கேலி பேசவில்லை. நீயாகக் கற்பனை செய்கிறாய் என்று பக்தர்களும் கூறக்கூடும். காங்கிரஸ் நண்பர்களும் கூறக்கூடும். ஏன் வீண் சந்தேகம்? பண்டிதரின் பேச்சு முழுவதையுமே கூறுகிறேன், அப்போது விளக்கமாகி விடுகிறது.

"ஹரித்துவாரம் இந்துக்களின் ஸ்தலமாகக் கருதப் பட்டு வருகிறது. ஆனால் எனக்கு நாட்டில் எங்கெங்கு அபுவிருத்தி வேலைகள் நடந்து வருகின்றனவோ அந்த இடங்களே புண்ணிய ஸ்தலங்களாகத் தோற்றமளிக்கின்றன.''

நேரு பண்டிதர் சொகுசான வாழ்க்கை நடத்துவதற்காகச் சாமியார் கோலம் பூண்ட சோற்றுத் துருத்திகளைப் பற்றி, நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார் என்பதை அறியும்போது, உண்மையிலேயே மகிழ்ச்சி பிறக்கத்தானே செய்யும் - அவர்களுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டு காலம் கழித்துவிடுவோம் என்று வேதியத் தலைவர் இங்கு நடந்து கொள்ளும் முறையுடன் இதை ஒப்பிடும்போது, நேரு பண்டிதரிடம் மதிப்புக்கூட பிறக்கிறது. ஆனால் அந்தோ! மறு கணமோ, அவர் பிரச்சினையை விட்டுவிட்டு, வெகு வேகமாக வேறு பக்கம் சென்றுவிடுவதைக் காண நேரிடுகிறது. கோபமும் வருகிறது. வருத்தமாகவும் இருக்கிறது.

நச்சரவம் புரளுகிறது என்று தெரிந்து தெரிவித்துவிட்டு, என்ன செய்யச் சொல்லவேண்டும் - நச்சரவம் நெளியும் இடம் இது. இதைப்போய் நாதன் அருள் பெறும் தலம் என்கிறார்களே. நல்லவர்களே! நாசத்துக்கு இடமளிக்காதீர்கள். நச்சரவத்தை ஒழித்திட வாரீர். நச்சரவம் குடிபுகும் புற்றுக்களை ஒழிப்போம். புற்றுக்கள் தோன்றக்கூடிய காட்டினையே அழிப்போம், கிளம்புங்கள், என்று சொல்லத்தானே வேண்டும். தண்டச் சோற்றுத் தடிராமன்கள் இலட்சக்கணக்கிலே உலவுகிறார்கள், இவர்களை நம்பி உழைத்துச் சேர்த்ததைக் கொட்டி அழ வேண்டாம், என்று தானே அறிவுரை கூற வேண்டும்; ஏமாளிகளை ஏய்த்துப் பிழைப்போரைச் சாடவேண்டும். சட்டத்தின் துணையையும் நாடி இத்தகைய சழக்கர் கூட்டத்தைக் கலைக்கவேண்டும்; மக்களுக்குத் தெளிவும் துணிவும் பிறந்திடத் தக்கவகையில் பகுத்தறிவு புகட்ட வேண்டும். நேரு பண்டிதர் இதைச் செய்கிறார் இல்லை!! நச்சரவம் உலவுகிறது. நாவற் பழமும் தின்போம் வாரீர்! என்று ஒன்றுக்கொன்று ஒட்டாத முறையில், எதையோகூற விரும்பி, இடையே பயந்து, வேறு எதையோ பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

ஹரித்துவாரத்தை அவர் புண்ணிய ஸ்தலமாகக் கருதவில்லை - கூறுகிறார்.

நீங்களும், பேதமை கொள்ளாதீர்கள். புண்ணிய ஸ்தலமாவது பாப பூமியாவது என்று மக்களுக்கு அறிவுரை கூறுகிறாரா

இல்லை!!மாறாக, கும்பமேளம் கண்டு களிக்கும் பெரும் கூட்டத்தை, இவர் கண்டு களிப்படைகிறார்!!

சாதுசன்யாசிகள் என்றபேரால் சோம்பித்திரிந்து, சொகுசாக வாழும் சழக்கரைக் கண்டித்துவிட்டு, அடுத்தகணம் ஐந்தாண்டுத் திட்டம், அணுகுண்டு யுகம், ஐசன் அவர் போக்கு என்று, வேறு பிரச்சினைகளை எடுத்துக் கொள்கிறார்!

புண்ணிய ஸ்தலம் எனக்கு ஹரித்துவாரமல்ல, எங்கெங்கு அபிவிருத்தி வேலைகள் நடக்கிறதோ, அவைதாம் எனக்கு புண்ணிய ஸ்தலம் என்கிறார்; ஆனால், இவர் பெற்றுள்ள இந்தப் புத்தறிவை மற்றவரும் பெற வேண்டும் என்று விரும்புவதாகத் தெரியவில்லை! எனக்குச் சீரகச் சம்பாவில் சாதம், தக்காளி சூப், கோழிக் கறி வறுவல் இவைதான் பிடிக்கும் என்று, புளித்த காடியும் புழுத்துப்போன கருவாட்டையும் சுவையான உண்பண்டம் என்று எண்ணிக் கிடப்போனிடம் கூறிப் பயன் என்ன?



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:01 am

அவர்களின் மனப்போக்கை அல்லவா மாற்றவேண்டும்.

அவர்களைச் சாது சன்யாசிக் கோலத்தில் உலவும் சடலங்களைக் கொழுக்கச் செய்யும்'' சேவை''யில் ஈடுபட விட்டுவிட்டு எனக்கு இது பிடிக்காது, என் காசி சிந்திரி, என் கங்கை பக்ரா நங்கல், என் கயா சித்தரஞ்சன், என் புண்ணியஸ்தலம் அபிவிருத்தி வேலை நடக்கும் இடம் என்று பேசிப் பயன் என்ன?

இங்குதான், நாம் தேவைப்படுகிறோம், தம்பி! பெரிய இடத்திலே உள்ளவர்கள், பாமரரின் சீற்றத்தைக் கிளறிவிடக் கூடிய ஒரு சொல்லும் கூறமாட்டார்கள்! உலகுக்கு உபதேசம் செய்வார்கள்! ஊராரிடம் பகுத்தறிவு பேசமாட்டார்கள். "ஓட்டு'' இருக்கிறதே தம்பி, அது "வாய்ப்பூட்டு'' போட்டு விடுகிறது!! நாம்தான் இந்தப் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் பணியினைத் தொடர்ந்து செய்கிறோம், துணிந்து செய்கிறோம், தூய்மையின் நோக்கத்துடன் செய்கிறோம். தக்க பலன், மலரவும் காண்கிறோம், மகிழ்கிறோம்.

பட்டவர்த்தனமாக, மூடத்தனத்தைக் கண்டித்துப் பேசினால், பாமர மக்கள் சீறிப் பாய்வர், அரசியல் பீடத்தி லிருந்து உருட்டிவிடக் கிளம்பக்கூடும் - எனவே ஜாடைமாடை யாக மட்டுமே கூற முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்; அறிவு முதிர்ச்சியின் காரணத்தால் அல்ல, தம்பி, அச்சத்தால்தான். நமக்கு அவ்விதமாக அச்சம் எழக் காரணம் இல்லை. நாமோ அரசியல் ஆண்டிப் பண்டாரங்கள்! எனவே பிறர் அச்சத்தால் வாயடைத்துப் போகும் நிலையிலும், நாம் பேசுகிறோம்; ஏசுகிறார்கள், மேலும் பேசுகிறோம்; கல் வீசுகிறார்கள், தொடர்ந்து பேசுகிறோம்; காலிகளை ஏவுகிறார்கள், எனினும் பேசுகிறோம். நாம் இம்முறையில் துணிந்து செயலாற்றினால்தான், அச்சம் காரணமாக வாயடைத்துக்கிடப்போரும், நமக்கென்ன என்று ஒதுங்கிக் கொள்வோரும், நம்மால் ஆகுமா என்று பெருமூச்செறிவோரும், நாம்தானா இதற்கெல்லாம் என்ற சலிப்படைவோரும், மெள்ளமெள்ளத் தமது போக்கை மாற்றிக் கொண்டு, ஜாடைமாடையாக முதலிலும், வெளிப்படையாகவே பிறகும், வீரத்துடன் எதிர்காலத்திலும் பேச முற்படுவர்;

குன்றக்குடி அடிகளாரின் போக்கைக் கவனித்து வருகிறார்யல்லவா தம்பி! பார்க்கிறாயல்லவா அவர் சைவ மாவட்டத்தில் சுயமரியாதை மாநாடு நடத்திவரும் வேடிக்கையை பயனுள்ள வேடிக்கையை.

அதுபோல எண்ணற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்ட உள. ஹரித்துவாரத்தை புண்ணிய ஸ்தலம் என்று ஏற்றுக் கொள்ள மறுத்து, எங்கெங்கு அபிவிருத்தி வேலை நடக்கிறதோ அவைகளே என் புண்ணிய ஸ்தலங்கள் என்று பேசிடும் பண்டிதரின் கருத்துரையை அலசிப் பார் தம்பி. புண்யம் என்றால் என்ன? எதைப் பாமர மக்கள் புண்ணியம் என்று எண்ணி ஏமாறுகிறார்கள்? அறிவுத் தெளிவுள்ளோர் எதைப் புண்ணியம் என்று கொள்வர்? மக்கள் வாழ வழி செய்வதும், வாழ்வின் வளத்தைப் பெருக்குவதும்தான் "புண்ணியம்' அதற்கான வேலைகள் நடைபெறும் இடமே புண்ணிய ஸ்தலம். மடங்களிலே உள்ள சடலங்களாலல்ல, தொழிற்சாலைகளிலே நரம்பு முறியப் பாடுபடும் பாட்டாளிகளால்தரன் நாடு செழிக்கும். புண்ணிய தீர்த்தத்தால் அல்ல, புதிய புதிய நீர்த் தேக்கங்களால் தான் பாலைவனம் சோலைவனம் ஆகும். ஆறுகால பூஜை, அபிஷேகம், ஆராதனை இவைகளால் அல்ல, அணைக்கட்டு, மின்சார நிலையம், உர உற்பத்தி இவைகளால்தான் மக்களின் வாழ்வு மேம்பாடு அடையும் என்ற இன்னோரன்ன கருத்துக்களெல்லாம் ஊற்றெடுத்து ஓடிவரும்! ஆனால் அலசிக் காட்டும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்..

தம்பி! ஐந்தாண்டுத் திட்டத்திலே நடைபெற்ற ஓர வஞ்சனையைப்பற்றி, நாம் உள்ள உரத்துடன், ஊராள்வோரின் பகைபற்றிக் கவலைப்படாமல் காங்கிரசில் இருப்போரும் நுழைவோரும் கண்டிப்பது பற்றிச் சட்டை செய்யாமல் எடுத்துக் காட்டியதால்தான், இப்போது காங்கிரஸ் வட்டாரமேகூட அதுபற்றிப் பதைத்தும் பதறியும் துக்கம் தொண்டையை அடைக்க, வெட்கம் பிய்த்துப் பிடுங்கும் நிலையில் பேசிடக் கேட்கிறோம். சதேசமித்திரன் கேலிச்சித்திரம் போட்டிடக் காண்கிறோம். தலைமை நிலையத்திலிருந்து உங்கள் ஊருக்கு வந்திருக்குமே படம்!!

தம்பி! இடையே இதையும் சொல்லி வைக்கிறேன்.

எவ்வளவோ செலவாகிறது. எதெதற்கோ செலவாகிறது, எதையாவது குறைத்து பணம் சேர்த்து அந்தக் கேலிக் சித்திரத்தைப் பெரிய அளவில் பத்தாயிரம் மக்கள் கொண்ட கூட்டத்திலும், கோடியில் உள்ளவருக்குப் பளிச்சென்று தெரியும் வகையில் துணியில் ஓவியமாக்கி வைத்துக்கொண்டு, நமது கழகக்கூட்டங்கள் நடைபெறும்போது மேடை அருகில் அதைத்தொங்கவிடு - ஒரு மணிநேரச் சொற்பொழிவை அந்தப் படம் தந்துவிடும்.

காங்கிரஸ் வட்டாரமே இப்போது துணிந்து கிளம்புகிறது தம்பி, வடநாட்டின் போக்கைக் கண்டிக்க. ஆமாம், வீணுக்கா உழைத்தோம், தூவிய விதை என்ன, பதறா? காங்கிரஸ் நண்பர்களின் மனம்தான் என்ன வறண்ட பாலையா? பலன் தெரிகிறது மெள்ள மெள்ள!

பல இதழ்கள், சில சோகமாகவும், சில கோபமாகவும், மத்திய சர்க்காருக்கு அநீதியை எடுத்துக் காட்டுகின்றன.

வடநாட்டுச் சர்க்கார் என்று விளக்கமாக நாம் சொல்கிறோம். இந்த ஏடுகள், மத்திய சர்க்கார் என்ற விநயமாகச் சொல்கின்றன.

ஆரம்பக் கட்டமல்லவா, கூச்சம், அச்சம், இருக்கிறது. காதல் கனிரசமா, துவக்கத்திலேயே கிடைத்துவிடுகிறது, கடைக்கண் வீச்சுதானே, தம்பி, அது என்ன சாமான்யமானதா!! எத்தனை இன்பக் கனவுகளைக் கிளறிவிடுகிறது!!

அதுபோலத்தான், இந்த இதழ்கள் அச்சத்துடனும், கூச்சத்துடனும் இப்போது எழுதுவது!!

யாராவது பார்த்துவிட்டால்!! வெட்கமாக இருக்கிறது!; உஹும், நாளைக்கு! சோலையில்!? என்று கொஞ்சுமொழி பேசி விட்டுக் காதலன் பிடியிலிருந்து தப்பிச் செல்லும் நத்தை, என்று வைத்துக்கொள்ளேன்!

சமயம் கிடைக்கும் போதெல்லாம், இந்த ஏடுகள் இப்போது மத்திய சர்க்காரின் போக்கைப் பற்றி எழுதுகின்றன - கவனித்தாயா!!

ஹரித்துவாரம் பற்றிப் பேசிய நேரு பண்டிதர், புண்ணிய ஸ்தலம் என்பதுபற்றி தமது கருத்துரையை அளித்தவ ரல்லவா. அதையே, சாக்காக வைத்துக் கொண்டு ஒரு காங்கிரஸ் ஏடு மத்தியச் சர்க்காரின் போக்கை இடித்துரைத்திருக்கிறது. கன்னத்தில் இடித்து "காலை பிறந்ததும் என் நினைவே போய்விடுமல்லவா, கண்ணாளா'' என்று கேட்கும் காரிகை போல, கதைகளில் இந்த ஏடு எழுதுகிறது - இத்தனைக்கும், விகடன் செய்யும் வேலையை மேற்கொண்டுள்ள ஏடுதான்!! ஆனந்தவிகடன், அது எழுதுகிறது.

"அரித்துவாரம் இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாகக் கருதப் பட்டு வருகிறது. ஆனால் எனக்கு நாட்டில் எங்கெங்கு அபிவிருத்தி வேலைகள் நடந்து வருகின்றனவோ அந்த இடங்களே புண்ணிய ஸ்தலங்களாகத் தோற்றமளிக்கின்றன என்று கூறித் தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் அனைவரும் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

புண்ணிய ஸ்தலங்கள் என்னும்போது வடஇந்தியாவை விடத் தென்இந்தியாவிலேயே இவை அதிகம் என்று கூறலாம். எனினும் பொருளாதாரத் துறையில் தென்னிந்தியா பின்னணியிலேயே இருந்துவருகிறது. முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயும், தென்னிந்தியா நேருஜியின் அர்த்தப்படி புண்ணிய ஸ்தலங்களாகச் சீர்பட வில்லை. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலேயும் தென்னிந்தியா பொருளாதாரப் புண்ணிய ஸ்தலமாகத் திகழும் பாக்கியம் பெறாதோவென ஐயுற வேண்டி யிருக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் வடஇந்தியாவிலேயே நிர்மாணிக்கப்படுவதைப்பற்றியும், தென்னிந்தியா அலட்சியம் செய்யப்படுவதைக் குறித்தும் வினவினால், நிதி மந்திரி தேஷ்முக் உட்பட இந்திய சர்க்கார் மந்திரிகள் அனைவரும் சரியான பதில் அளிப்பதில்லை.

தம்பி! எப்படி, எந்த இடத்திலிருந்து நமது பிரச்சாரம் பலன் அளித்திருக்கிறது பார்!!

காரம் இல்லை என்பாய் - ஆமாம் - எப்படி இருக்கமுடியும் - இப்போது?

எழுதுகிற பாணிகூட அரசியல் எழுச்சி ஊட்டத்தக்கதாக இல்லை - தெரியாததால் அல்ல, ஏ அப்பா! வெளிநாட்டு விவகாரங்களைப் பற்றி எழுதும்போது பார், புரட்சி படமெடுத் தாடும் இந்த ஏடுகளில்! ஆனால் நேருஜியை பற்றி எழுதும்போது, நாம் நெளிய வேண்டியிருக்கிறது, "நெஞ்சில் இடம் கொண்டான்'' ஆயிற்றே அதனால்.

அவளுக்குத்தானா கண்ணா! பாரிஜாதம்! எனக்குக் கிடையாதா! என்னிடம் அன்பு இருந்தால் எனக்குப் பாரிஜாதம் தரவேண்டும்' என்று, ராதா கேட்கிறாள் கண்ணனிடம். பாரிஜாத புஷ்ப ஹரணம் பார்த்திருப்பாயே நாடகம். பத்துப்பதினைந்து வருஷங்களுக்கு முன்பு நடக்கும். அந்தப் பாணியில் எழுதுகிறது விகடன்-என்றாலும், விஷயத்தைச் சொல்ல வேண்டிய கட்டம் வந்துவிட்டது அல்லவா, இதற்காக நாம் பட்ட கஷ்டம் கொஞ்சமா?

எல்லாத் தொழிற்சாலையும் வடநாட்டில், தென்னிந்தியா அலட்சியப்படுத்தப்படுகிறது.

விகடனிடமிருந்து இந்தக் கருத்துரை - இடித்துரை - வருமென்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்?

திராவிடம் என்ற சொல்லையே கூற முடியவில்லை விகடனால். தென்னிந்தியா என்று எழுதுகிறது, - பரவாயில்லை. அதனால் என்ன - அத்தான் என்று அன்பு சொட்ட அழைத்திட ஆரணங்கால் முடிகிறதா? "அப்பா எங்கேடா கண்ணு!'' என்று குழந்தையைப் பார்த்துக் கேட்பதுதான் தெரியுமே நமக்கு. அதுபோல் இது என்று எண்ணிக் கொள்வோம்.

விகடன் மட்டும் அல்ல, வேறு வேற வேலையாகக் கூறிடும்போது, யாராருக்கோ இந்தக் கருத்துதான் வருகிறது! யார் உள்ளத்தையும் இந்தக் கருத்துச் சும்மா விடுவதில்லை. புகுந்து குடைகிறது!?

தங்களுக்கு இப்போதுள்ள அதிகாரம் போதாது, மேலும் சில பல அதிகாரம் வேண்டுமென்று கேட்க மாநாடு நடத்துகிறார்கள், சென்னை ராஜ்ய நகராட்சி மன்றத் தலைவர்கள்! அங்கு "ஏகமனதாக'' நிறைவேறியிருக்கும் தீர்மானம் இதுதான் - முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது எல்லா பெரிய தொழிற்சாலையும் வடநாட்டிலேயே அமைத்து விட்டார்கள். இந்த இரண்டாவது திட்டத்திலாவது தென்னாட்டில் அதிகமான பெரிய தொழிலும், திட்டமும் வேண்டும்.

சாலையிலே, சோலையிலே, ஆற்றோரத்தில், அக்கிர காரத்தில், பத்திரிகை நிலையத்தில், கமிட்டிக் கூட்டங்களில், வியாபாரச் சங்கத்தில், விசேஷ மாநாடுகளில், அமைச்சர் மாளிகையில், அரசாங்க அலுவலகங்களில், எங்கும் பேசப்படும் பிரச்சினையாகிவிட்டது - எங்கும் நிறைநாதமாகிவிட்டது - செங்கொடிக்காரன் இடம் தவிர. அவர்களுக்குப் பாவம், ஒரே அதிர்ச்சி, அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி, எனவே இந்த எழுச்சி புக இடமில்லை - நேரமுமில்லை. அந்த ஒரு இடம் தவிர, மற்ற எல்லா இடத்திலும், சிந்தனையைக் கிளறி விட்டிருக்கிறது நாம் எடுத்துக் காட்டியிருக்கும் பிரச்சினை.

ஐயே! உங்களைத்தான், காதிலேயே விழலையா நான் கூப்பிடறது - இந்தாருங்கோ காப்பி! - என்று கதவிற்குப்பின் புறம் மறைந்து நின்றபடி, காரிகை அழைக்கும்காட்சி தெரிகிறதா, கைவளை ஒலி கேட்கிறதா!!

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Anna_sign
12-6-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:02 am

மானே! தேனே!!

தென்னவர் பற்றி வடவர் பசப்பு!
திராவிடத்தின் சிறப்பு -
வட நாடு, தென்னாடு வேற்றுமை

தம்பி!

"ஏனோதானோ'' என்று அந்நாள் வரை இருந்து வந்தவன், "மானே! தேனே!' என்று மயக்க மொழி பேசினான். அடிமூச்சுக் குரல் அன்பின் அறிகுறியாக மட்டுமல்ல, நம்பினோரை நாசமாக்கவும் பயன்படும் என்பதை அறியாமல், நாரீமணி, பூங்கொடி தென்றலில் ஆடுவது போலானாள். புது வாழ்வு பிறந்தது என்று எண்ணிக் கொண்டாள். அவனோ, அவளை இன்பபுரிக்கு அழைத்துச் செல்லவில்லை; அவளிடமிருந்து இருபது பவுன் "செயினைப்'' பெற்றுக்கொண்டு, நடையலங்காரி ஒருவளை நாடிச் சென்றான்!

கதை, தம்பி கதை. காதலின்பம் பெறவேண்டிய காரிகையர் சிலர் கருத்தழிவதைக் காட்டும் கதை.

"கொழுந்தே, உனக்கு மிட்டாய் வேணுமா, ஊதுங்கோல் வேண்டுமா, ஆடும் குதிரை, பாடும் பறவை எல்லாம் வாங்கித் தரட்டுமா?''

"மிட்டாயா, வாங்கிக் கொடுங்கோ மாமா, எனக்கு ரொம்ப இஷ்டம்.''

"கடைத் தெருவுக்குப் போகலாம வா, கண்ணு.''

"ஐயோ, அம்மா அடிக்குமே. நான் போய் அம்மாவிடம் சொல்லிவிட்டு. . .''

"அம்மாவிடம் சொன்னா, உன்னை அனுப்பமாட்டாங் களே, மிட்டாய் தின்னப்படாதுன்னு சொல்லுவாங்க.''

"அம்மாவுக்கு தெரியாமெ, ஓடிப்போய் மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்துவிடலாமா?''

நஞ்சு நிறை நெஞ்சினன் என்பதறியாத அந்தப் பிஞ்சு, வயலோரத்தில் கசக்கிப் போடப்படுகிறது - கையிலே மிட்டாய் இருக்கிறது - ஆனால் கைவளையும் காது லோலாக்கும் இல்லை.

திருவிழாக்களின் போது கேள்விப்படுகிறோம், இது போன்ற நிகழ்ச்சிகளை.

கனி மொழி, சுவையுள்ளதுதான், ஆனால் நஞ்சுக்கு அதனை உரையாக்கிடும் போக்கினரும் உண்டு - எனவேதான் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்கிறார்கள்.

அழகும் மணமும் கொண்ட செந்தாழை இருக்கிறது பார் தம்பி, அதிலே, இதழ்களின் இடையே, ஒட்டிக்கொண்டிருப்ப துண்டாம் சிறுநாகம் - தீண்டினால் தீர்ந்து போவார்களாம்! அதனால், அனுபவமுள்ளவர்கள் செந்தாழையைப் பிரித் தெடுக்கும்போது, ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பர்.

தம்பி, முரட்டுத்தனத்தினாலே மட்டுமே, தீயகாரியங் களைச் சாதித்துக்கொள்வது என்ற முறை, இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது - தீய காரியம் குறையவில்லை முறை மாறிவிட்டிருக்கிறது.

"கழட்டடி கழுதே! உங்கள் அப்பன் வீட்டிலே போட்டா என்னவாம்? இப்ப கழட்டிக் கொடுக்கறயா, இல்லையானா, இடுப்பை முறிச்சிக்கப் போறியா?''

இந்தக் "கணவன்'' இப்போது -

"என்ன செய்யறது; வேற எங்கேயும் கிடக்கலையாம், என் உயிரை வாங்கறான் வேலாசாமி. கலியாண வேலையை முடிச்சிட்டு உடனே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்னு கெஞ்சறான்; பரிதாபமாயிருக்கு; நம்மிடம் இருக்கவே நானும் அவனுக்கு வேண்டியவனாக இருக்கிறதாலே, ஒரு நாலு நாளைக்கு இரவல் கொடுன்னு கேட்கறான். இதுக்கு என்னமோ மூக்காலே அழறியே. எடு! எடு! கொடு! கொடு! நேரமாவுது, ரயிலுக்கு'' என்று பேசி நகையைப் பறித்துக் கொள்ளவும், அதைக் கிண்டி ரேசுக்குப் பயன்படுத்தவும், பயிற்சி பெற்றுவிட்டான்.

முரட்டுத்தனமாக அவன் இருந்த போதாவது பரவாயில்லை. அடி உதை கிடைத்தாலும், அண்டை அயல் பஞ்சாயத்துக்கு வருகிற முறையில், அழுகுரல் கிளம்பி இருக்கும். சில வேளைகளில், அதற்கு அஞ்சி, அவன், புற்றுக்குள் புகுந்து கொள்ளும் பாம்பாகிவிடவும் கூடும்.

மானே! தேனே! என்று அவன் தித்திப்பு ஊட்டும்போது, பாபம், அவள் தப்ப வழியே கிடைக்காதல்லவா!

ஆதிக்கக்காரர்களின் போக்கிலே இப்போது இதுபோன்ற மாறுதல் ஏற்பட்டுவிட்டிருக்கிறது - இதன் பயனாக ஆபத்தும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

புலி, உறுமும் - அந்தச் சத்தம் கேட்டு, கிலி பிறப்பினும், ஒரு படை திரட்டிவிடவும், அதை வேட்டையாடிக் கொன்று போடவும், வழியும் கிடைக்கக்கூடும். ஆனால், முல்லை பறித்திட மலர்த்தோட்டம் சென்று, பச்சைப் பட்டோ என்று பரவசப் படத் தக்க பசும் புற்றரையில் நடந்து செல்லும் போது, அரவமின்றி ஊர்ந்து வந்து தீண்டிவிடும் நாகமாக இருந்தால், என்ன கதியாவது?

ஆதிக்கக்காரர்கள் புலியாக இருப்பதாலே ஏற்படும் ஆபத்தை உணர்ந்து கொண்டு, இப்போது புற்றரைப் பாம்பாகி இருக்கிறார்கள்.

எல்லோருமே அவ்விதம் எப்போதுமே அவ்விதம், என்று சொல்லவில்லை; இப்போதும் பழைய முறையே சாலச் சிறந்தது என்று எண்ணும், போர்ச்சுகீசிய ஆதிக்கக்காரர் இருக்கத்தான் செய்கிறார்கள் - கொக்கரிக்கிறார்கள், சுட்டெரிக்கிறார்கள். ஆனால் குறிப்பிடத் தக்க அளவிலே, புலி, பாம்பாகிவிட்டிருக்கிறது.

கதை படித்திருப்பாயே, சிறு வயதில்?

பல்லின் கூர்மையும், நகத்தின் கூர்மையும் பட்டுப்போன கிழப்புலி பாய்ந்து சென்று தாக்கி, பிய்த்து ரத்தம் குடித்துப் பசி தீர்த்துக் கொள்ள முடியாது என்ற தெரிந்துகொண்டு தங்கக் காப்பைக் காட்டி, ஆசையை மூட்டி, அருகே வருபவனை அடித்துத் தின்றது, என்றோர் கதை உண்டு.

பேராசைக்காரப் பார்ப்பான் ஒருவன். இப்படி ஒரு கிழப்புலியிடம் சிக்கிக் கொண்டான் என்பது கதை.

பேராசைக்காரப் பார்ப்பான் என்று சொல்லக்கூட, இந்த சர்க்காரிலே அனுமதி கிடைக்காது போலிருக்கிறது, தம்பி! இதற்கோர் கண்டனக் கூட்டம் போட்டு, இருபதாம் தேதி மாறடித்தழுவோம் என்று "இந்து' தீர்மானித்துவிடக் கூடும்! நாடு அவ்வளவு முன்னேறிவிட்டிருக்கிறது. "நம்ம காமராஜா'' என்று சொல்லிச் சொல்லி நாக்குக்கூடத் தழும் பேறிவிட்டிருக்கும்; எனினும், "அவர்களின்' போக்கிலே மாறுதல் காணோம்.

அது கிடக்கட்டும் - அந்தப் பிரச்னை தீர, விருதுநகர் வித்தகரிடமா மருந்து கிடைக்கப்போகிறது?

ஆதிக்கக்காரர்களின் போக்கிலே ஏற்பட்டு வரும் மாறுதலைக் கூர்ந்து கவனித்த வண்ணம் இருக்கவேண்டும் என்பதைக் கூறத்தான் விரும்புகிறேன். தம்பி! இடையே இந்த சர்க்கார் கவனம் வந்தது, விட்டுத் தள்ளு.

சென்னையில் ஒரு பகுதிக்கு இப்ஹஸ்ரீந் பர்ஜ்ய் கருப்பர் ஊர் என்ற துணிந்து பெயரிட்டனர், வெள்ளையர்!

அது, கொடுக்கிறாயா, கொல்லட்டுமா? என்று கேட்கும் நிலை.

பிறகு, கருப்பர் பட்டினம் ஜார்ஜ் டவுன் என்று ஆயிற்று - வேலாசாமி இரவல் கேட்கிறான் என்று புளுகி, நகையைப் பறித்த கட்டம் போன்றது.

கருப்பர் - இன்று, அன்பர், நண்பர், தோழர், என்றெல்லாம் ஆகிவிட்டது!

ஏகாதிபத்யம் போக்கை மாற்றிக் கொண்டது - நீதி, நேர்மை, நியாயம் இவைகளுக்காகவா? செச்சே! அதற்கல்ல; நோக்கம் நிறைவேறப் பழைய முறை உதவாது என்று புரிந்துவிட்டதால்.

திராவிடத்தைத் தமது ஆதிக்கத்துக்கு உட்படுத்திக் கொண்டுள்ள வடநாட்டுத் தலைவர்கள் சிலர், வரலாறு காட்டும் இந்த நிலைமைகளை நன்கு அறிந்து கொண்டி ருக்கிறார்கள்; எனவே அவர்கள், அச்ச மூட்டுவதால் பலனில்லை, ஆசை காட்டவேண்டும் என்று புரிந்து கொண்டு, செயலாற்றத் தொடங்கியுள்ளனர்.

காட்டு மிருகங்களை வேட்டையாடுவது போல நாட்டு மக்களைச் சுட்டுத்தள்ளிய வெள்ளைக்காரனே, காலம் தெரிந்து, கருத்தை மறைத்திடவும், கனி மொழி பேசிடவும் கற்றுக் கொண்டான் என்றபோது, "அதிர்ஷ்டப் பரிசு''ச் சீட்டு வாங்கியவனுக்கு ஆறு இரட்சம் கிடைத்ததுபோல, களத்தில் கடும் போரிட்டு அல்ல, வீர தீரத்தைக் காட்டியல்ல, நமது கோட்டைகளைத் தாக்கித் தகர்த்து கொடி மரங்களை வெட்டி வீழ்த்தி, நம்மைப் புறமுதுகிட்டு ஓடச்செய்து அல்ல, வெளியேறிய வெள்ளையனுடைய கண் பார்வையில் இருந்த ஒரே காரணத்தால், திராவிடத்தை ஆளும் நிலையை வடநாட்டுத் தலைவர்கள் பெற்றனர் - அப்படிப்பட்டவர்கள், கனிமொழி பேசித்தான் காரியத்தைச் சாதித்துக் கொள்ளவேண்டும் என்று முறை அமைத்துக் கொள்வதிலே, ஆச்சரியம் என்ன இருக்கிறது.

வெள்ளையன் இங்கு நுழைந்த நாளிலிருந்து வெளியேறிய நாள் வரை, நடை, நொடி, பாவனை, மதம், மொழி, வாழ்க்கை, வழி ஆகிய எல்லாவற்றிலும்தான் வேறுபட்டவன் மட்டுமல்ல மேம்பட்டவன் என்று நம்பிக்கொண்டிருந்தான்; கூசாமல் சொல்லியும் வந்தான்.

வடநாட்டுத் தலைவர்கள் அப்படியல்ல - காங்கிரஸின் துணைக்கொண்டு, "பந்த பாசம்'' இருப்பதாகச் சொல்லி, பாரத தேசம், பாரத மக்கள், இந்தியர் என்ற இனிப்புப் பண்டமளித்து, திராவிடரை மயக்கி வைத்திருந்தனர். நாடகங்களிலே பார்க்கிறோ மல்லவா இருவகையான கொலைக் காட்சிகள் - ஒன்றில், வாள் வாளைச் சந்திக்கும், இரத்தம் கொட்டப்படும், ஓடிஓடிப் போரிடுவர், உயர இருந்து கீழே குதிப்பர், கூடம் களமாகும், எதிரேயிருக்கும் சாமான்கள் உடைபடும், கடைசியில் ஒரு கொலை! மற்றோர் வகையிலே, வாள் உறையிலே தூங்கும், வாட்கண் அவன் நெஞ்சத்தைத் துளைக்கும்; அவள் இடை அசையும், இவன் இதயம் விம்மும்; அவள் கடைகாட்டுவாள், இவன் கருத்திலே ஏதேதோ கொந்தளிக்கும், கண்ணாளா! என்பாள்; இவன் கட்டிக் கரும்பே! என்பான்; மாமோகம் கொண்டேன் என்பாள்; இவன் கட்டிக் கரும்பே! என்பான்; மாமோகம் கொண்டேன் என்பாள்; இவன் கனவல்லவே கட்டழகி! என்ற குழைந்து கூறுவான்; அவள் புன்னகை புரிவாள். இவன் புத்தி தடுமாறும்; அவள் இதோ கனிரசம் என்று அளிப்பாள், அவன் அவள் கரம் தொட்டு அதைப்பெற்றுப் பருகுவான், கண்ணிலே ஒரு திரை போடுவது போலாகும், கால் நடுக்குறும், அழகால் அழிவு தரும் ஆரணங்கை ஆசையுடன் பார்த்தபடி அருகே நெருங்குவான்; அவள் "இலாவகமாக'' ஒதுங்கிக் கொண்டு ஒரு பசப்புச் சிரிப்பொலி கிளப்புவாள்; இதற்குள் இவன் பார்வை மங்கும், பூமியில் கால் பரவாது, கீழே சாய்வான், பிணமாவான்!



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:03 am

தென்னாட்டவர், தீரர், வீரர், தேச பக்தர்!

தென்னாட்டவர், என்னாட்டவரும் வியக்கத்தக்க நுண்ணறிவு படைத்தவர்கள்; எதையும் சாதிக்கவல்லவர்கள். எத்துணை கஷ்டத்தையும் பொருட்படுத்தாதிருக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள்.

தென்னாட்டவருக்கு எத்தனை மொழி கற்பதானாலும், சிரமமிராது - பாண்டித்யம் பெறமுடியும்.

தென்னாட்டவர் இந்தியைக் கற்பது மட்டுமல்ல, வெகு விரைவில் வடநாட்டுக்கே இந்தி ஆசிரியர்களாகி விடக்கூடிய திறமைசாலிகள்!

தென்னாடு! அறிவாளிகள் நிரம்பிய இடம்!

எல்லாக் கலையும் கொஞ்சி விளையாடும் பூந்தோட்டம் தென்னாடு!

அழகிய மங்கையரின் முக விலாசமும், அறிவாளர்களின் முக தேஜசும், இயற்கை எழிலுடன் சேர்ந்து, தென்னாட்டைக் காந்தர்வபுரியாக்குகிறது!

தென்னாட்டின் அருமை பெருமைகளை அறியாதார் அறியாதாரே!

முல்லை காட்டி, பாகு கலந்த சொல்லமுது ஊட்டி, பாவை பம்பரமாக ஆட்டிவைக்கிறாள்!

மாவ்லங்கர், தத்தர், தேபர், மகதாப் என்று வந்த வண்ணம் இருக்கிறார்கள் வட நாட்டுத் தலைவர்கள், இத்தகைய மயக்க மூட்டும் நோக்குடன்.

ஒருவர் இயற்கை வளத்தைப் புகழ்கிறார். இன்னொருவர் மொழி வளத்தைக் கண்டு வியப்படைகிறார். தேச சேவையை பாராட்டித் தேன் கொட்டுகிறார் ஒருவர். தெய்வ பக்திமிகுந்த இடமல்லவா என்று பரவசம் பாய்ச்சுகிறார் இன்னொருவர். அனைவருக்கும் ஒரே நோக்கம். ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது என்பதுதான்! அதற்கு ஆர்ப்பரிப்பு பலனில்லை, அன்பு ஆலாபனமும், புகழ் பல்லவியும் தாஜா'' செய்யும் தாளமும் தேவை என்பது முறையாக்கப் பட்டிருக்கிறது.

பன்னெடும் காலமாகவே திராவிடர், இப்படி பசப்பு வோரிடம் நம்பிக்கை வைத்து நாசமாகி இருக்கிறார்கள். இல்லையானால், காய்ந்த புல்லைக் கையிலே கொண்டிருந்த கூட்டத்திடம், கட்கமேந்திப் போரிடுவதைக் காதலுக்கு ஈடான நிலையில் வைத்துப் புகழ் ஈட்டிய திராவிட இனம், அடிமைப் பட்டிருக்கவே முடியாதே!

வடநாடு, ஒழுங்கு முறைக்கு உட்படுத்தப்படாமலிருந்த நாட்களிலேயே, இங்கு திராவிடம் ஒழுங்கு படுத்தப்பட்டு, ஒழுக்கத்தை ஓம்பி வளர்த்திடும் திருநாடாக இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

செல்வம் கொழிக்கும் நிலையும், செங்கோல் ஓச்சும் மன்னர்களும் பெற்ற நிலையில், வடநாடு சித்தரிக்கப்படும் கட்டத்தைக்கூட, வேண்டுமானால் திராவிட நாட்டு வரலாற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லு, தம்பி, திராவிடத்தின் தனிச் சிறப்பு விளக்கமாகத் தெரியும்.

மன்னர் இருந்தனர். இங்கும், அங்கும் மணிமுடி இருந்தது, இரு மன்னர் முடியிலும். எனினும் இரு வேறு முறையன்றோ காண்கிறோம் அவர் தம் போக்கில்.

மக்களுக்காக அரசு. அரசு செம்மையாக நடந்துவர மன்னன் என்பது திராவிடத்தில், தத்துவமாக மட்டுமல்ல, திட்டமாக இருந்து வந்தது அந்த நாட்களிலும்.

மன்னன் செம்மையாக வாழ ஒரு அரசு, அந்த அரசு வளமுடன் இருக்க மக்களின் உழைப்பு என்ற தன்மை இருந்து வந்தது வடக்கில்.

வெட்டிப் பேச்சல்ல, தம்பி. மன்னன் தன்னிடம் அரசாளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகக் கருதிப் பணியாற்றினான் இங்கு. அங்கு அங்ஙனமல்ல! நாடு மன்னன் உடைமை! அதன் பயனைப் பெறும் அனுமதியை மன்னன் மக்களுக்கு அளிக்கிறான் அங்கு. எனவேதான் காண்கிறோம், நாடு மன்னனால் எப்படி வேண்டுமானாலும் ஆக்கப்பட்டுவிடும் அக்கிரமத்தை!

கேகயன் மகள் ஒரு கோகிலம்! தசரதமன்னன் நரைத்த தலையினன்!! அங்கம் தங்கம், அந்த அரசிளங்குமரிக்கு; உடலெங்கும் காலம் தந்த சுருக்கம் இந்த அரசனுக்கு. எனினும் அந்த சிற்றிடைச் சிங்காரியைச் சரசக் கருவியாகக் கொள்ள வேண்டுமென்று இந்த சத்திழந்தவர் விரும்பினார் - என்ன செய்தார்? என்னைக் களிப்பிக்கும் தொண்டு புரிய இந்தத் தோகை இசையட்டும். நான், அவள் வயிற்றில் உதிக்கும் மகனுக்கே என் இராஜ்ஜியத்தைத் தருகிறேன் - இப்போதே, இதோ என் இராஜ்ஜியத்தைத் தந்து விடுகிறேன் என்று வாக்களிக்கிறான்.

வயோதிகருக்கு அந்தக் கணை புகுந்தால், கருத்து எப்படி ஆகிவிடுகிறது என்பதைக் கவனிக்கச் சொல்லவில்லை - இதை அறிய இராமாயண காலத்துக்கா போக வேண்டும், நமது நாட்களிலேயே பார்க்கிறோமே!!

கொடுத்த வாக்குறுதியைத் தசரதன் காப்பாற்றாதது குற்றமல்லவா என்று "இராமதாசர்களை''க் கேட்கும்படி கூடச் சொல்லவில்லை - இதைவிடக் காரசாரமான கேள்விக் கணைகளால் தாக்குண்டு, அவர்கள் வைகுண்ட வாசனிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் உன்னை கவனிக்கச் சொல்வது எது தெரியுமா தம்பி, தசரதன் தன் ஆட்சியில் இருந்து வந்த இராஜ்ஜியத்தை, தன் இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் தர முடிகிறது.

இது வடநாட்டில்தான், இங்கு இதுபோல் நடைபெற்றதில்லை.

சூதாடித் தோற்கிறான் இராஜ்ஜியத்தை - நளன் - தருமன்.

தானமாகக் கொடுத்து விட்டுச் சுடலை காக்கச் செல்கிறான் அரிச்சந்திரன்.

இவை வடநாட்டு மன்னர்களின் முறை - மன்னர்களிடம் நாடு உடைமையாக்கப்பட்டு விடும் - கேடான கொள்கையைத் தென்னகம் ஏற்றுக் கொண்டதில்லை.

பெரிய தத்துவத்துக்குப் போவானேன் தம்பி, ஜவருக்கு ஒரு மாது பத்தினியாக இருக்கலாம் என்பதைக் கற்பனைக்கும் ஒத்ததாகத் திராவிடர் கருதவில்லை - வடக்கே அப்படிப்பட்ட பத்தினி பற்றிய காதை எழுதி, அந்த அம்மையின் உற்ற "இரக்ஷகராக'' பகவானே உடனிருந்து வந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது.

பண்பு நிச்சயமாக இங்கே வேறுதான் - அங்கே இருந்து வந்த "ஆசாபாசங்களை'' பண்பு என்று கூறக் கூசுகிறது.

எல்லாம் சரி! ஆனால் இன்று என்ன நிலைமை?

வடநாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகிறார்கள், புகழ் கிறார்கள், நமது அருமை பெருமை கண்டு அகமகிழ்கிறார்கள், ஏன்?

இப்படிப்பட்ட பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியதான பொன்னாடு, தங்களின் பிடியில் இருக்கிறது என்ற பூரிப்பு!!

ரோம் நாட்டவர் கிரேக்க நாட்டைத் தோற்கடித்து அடிமைப்படுத்தினர். பொன்னும் மணியும் வண்டிவண்டியாகக் கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றுடன் கிரேக்கர்பலரை அடிமைகளாகக் கொண்டு சென்றனர்.

மாளிகையில் மந்தகாசமாக, ரோம் வீரன் அமர்ந் திருப்பான்; நண்பர் அவனுடன் உரையாடுவதும், தங்கக் கோப்பையிலே வார்த்துத் தரப்படும் திராக்ஷை ரசத்தைப் பருகுவதும், போதை ஏறிய நிலையில், பொழிலில் கண்ட கடைக் கண்ணழகி பற்றியும், செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட காலால் சேயிழை தன் மார்பகத்தே உதைத்த போது அடைந்த உவகை பற்றியும், பேசிக் களிப்பர். "ஆஹா! மறந்தேபோனேன், நண்பர்களே! வெண்ணிலவில் வேல்விழியாளுடன் ஆற்றோரம் உலவினால் அடையும் ஆனந்தம் பற்றிய அரும் கவிதை ஒன்று இருக்கிறது, கேட்டதில்லையே நீங்கள் - சுவையுள்ள கவிதை என்பான் விருந்தளிப்போன், "அப்படியா! கவிதையா! பாடிக் காட்டு நண்பா!'' என்று கேட்பர் விருந்துண்போர். "நானா பாடுபவன்! என்னிடம் இருக்கிறான் ஒரு அடிமை அழகழகாகப் பாடுவான்'' என்று கூறி அழைப்பான் புலமைமிக்க கிரேக்கன், அடிமைக் கோலத்திலே வந்து நிற்பான், "ஏ! கவி! நேற்று பாடிக் காட்டினாயே கவிதை, அதைப் பாடு இப்போது, இவர்கள் கேட்கட்டும்' என்று கூறுவான். அடிமை பாடுவான். கீர்த்தி மிக்க கிரேக்க நாடு தாழ்ச்சியுற்ற போது நேரிட்ட, நெஞ்சைப் பஞ்சாக்கும் சோகச் சம்பவம்.



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:03 am

இப்போது, பரதநாட்டியம், கருநாடக சங்கீதம், கதகளி, திராவிடமொழி, திராவிடச் சிற்பம், இவைகளை இன்னும் பதம் கெடாமல் பாதுகாத்திடும் வித்தகர்களின் திறமை, புலமை ஆகியவற்றை வடநாட்டவர் பாராட்டிப் பேசும் போது, எனக்குத் தம்பி! ரோம் நாட்டின் மாளிகையிலே கண்ணீரையும் கவிதையையும் சேர்த்து வடித்துக் கொடுத்த கிரேக்க அடிமையின் கவனம்தான் வருகிறது.

"மிகப் பழங்கால முதற்கொண்டே வளமாக இருந்த திராவிடம்' என்று அவர்கள் புகழ்கிறார்கள். திராவிடரோ மலேயா காடுகளிலே மிருக வாழ்க்கையில் இருக்கிறார்கள் - கடல் கடந்து சென்று கைகட்டிச் சேவகம் செய்வது மட்டுமல்ல, கட்டை வெட்டுகிறார்கள், கல் உடைக்கிறார்கள், குப்பை கூட்டுகிறார்கள்.

மிக உயர்ந்த மொழி திராவிடத்தில் இருக்கிறது என்று அவர்கள் பாராட்டுகிறார்கள். பாராட்டிவிட்டு, எனினும் "இந்தி'' படித்தால்தான் வாழ்வு உங்களுக்கு என்று துணிந்து கூறுகிறார்கள்.

அறிவாளரின் வாழ்விடம், கலையின் பிறப்பிடம் என்றெல்லாம் பேசுகிறார்கள் - பேசிவிட்டு, இவ்வளவு தகுதி இருப்பதால், தனி அரசு அமைத்துக் கொண்டு தரணியில் ஒரு மணி விளக்காகத் திகழ்வீர் என்றா கூறுகிறார்கள்? "இந்தியப் பேரரசின்'' ஒரு பகுதி என்று பசப்புரை கூறி, அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

பொன் விளையும் பூமி என்கிறார்கள் - தரித்திரம் போக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். அவசரப்படாதீர்கள் என்கிறார்கள்.

அவர்களின் புகழுரை நாணயமானதாக இருந்தால், ஏன் திராவிடம் தனி நாடாகத் திகழ்வதற்கு இசைவு தரக் கூடாது?

இவ்வளவு புகழுரைகளுக்கு ஏற்றதாக ஒரு எழில் நாடு இருக்க, ஏன் அதனை அடிமைக்காடாக்கி வைத்திருக்கிறார்கள்?

நல்ல பெண்! மிக நல்லவள்! கொஞ்சம் கூச்சம்! பயம்!! அடே அப்பா! கரத்தைப்பிடித்திழுத்ததும் சிவந்தேவிட்டது? கன்னத்தைத் தொட்டேன், மலர், மலரே தான்! மஞ்சம் சென்றபோது, சிறு குழந்தை போல, விக்கிவிக்கி அழுதாள்! பிறகு மயங்கிக் கீழே வீழ்ந்தாள்! தரையில் அவள் கிடந்த போது, சிற்பி செதுக்கிய சித்திரப்பாவை தவறிக் கீழே விழுந்து கிடந்தது போல இருந்தது.

இப்படி ஒரு காமுகன் பேசினால், அதைக் கேட்டுக் காரிகையின் பெற்றோர், பெருமையா கொள்வர்? பூரிப்பா அடைவர்? சிறிதளவு ரோஷமுள்ளவர் சீறிப் போரிடுவர் - அது அற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வர்.

அமைச்சர் சுப்பிரமணியம் வடநாட்டுத் தலைவர்கள் வழங்கும் புகழுரைகளைக் கேட்டுப் பூரித்துப் போகிறார், புளகாங்கித மடைகிறார்!

அவரால் முடிகிறது! அவர் போன்றோரால் முடிகிறது! நம்மால் முடியவில்லையே? நமக்குத் திராவிடம் அன்று வாழ்ந்த பெருவாழ்வுடன் இன்று அடைந்துள்ள அவல நிலையை ஒப்பிடும்போது, அணி மணி பறிகொடுத்த ஆரணங்கு, கழுத்து நெறிக்கப்பட்ட பேசும் பசுமை, மானமழிக்கப்பட்ட மாது - இத்தகைய கொடிய காட்சிகளல்லவா நினைவிற்கு வருகிறது! நெஞ்சு நெருப்பிலிட்ட புழுவாகாமலிருக்குமா? அவர்கள் மகிழ்கிறார்கள் - அத்தனைக்கும் ஈடாக அமைச்சர் பதவி கிட்டிவிட்டது என்று! நமக்கோ அரசு இழந்தோம், முரசு இழந்தோம், வளம் இழந்தோம். வகை இழந்தோம், தன்மானமும் அழிந்து படவேண்டும்? என்று எண்ணம் பிறக்கிறது.

"பைத்தியக்காரர்களே! என்னைப் பாருங்கள்! நான் உங்களைப் போல உதவாக்கரைக் கருத்துகளுக்கு என் மனதில் இடமளித்து இருந்தால், இந்த நிலையிலா இருந்திருப்பேன்? மூலையிலல்லவா முக்காடிட்டு அழுதபடி இருந்திருக்க வேண்டி நேரிட்டிருக்கும்?'' என்ற கருத்துப்பட "கனமான' சுப்பிரமணியம் கழறுகிறார்!

புகழுரையை அபினாகத்தரும் புதுமுறையில் ஈடுபட்டுள்ள வடநாட்டுத் தலைவர்களிலே ஒருவர், தத்தர் என்பார் பேசிய கூட்டத்திலே, அமைச்சர் சுப்பிரமணியம் தீப்பொறி பறக்கப் பேசி, "தீகா' வாவது என்று ஏசினாராம்!

அரிய உண்மையையும் அருளியிருக்கிறார் அது போது. பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர் பேச்சைக் கேட்டு இருந்தால் நான் என்ன கதியாகி இருப்பேன்? இப்போது இந்த தீகா தீமுகா தலைவர்கள் இருக்கிறார்களே அதுபோல எங்கோ ஒரு மூலையில் அல்லவா கிடந்திருக்க வேண்டி நேரிட்டிருக்கும்? என்று பேசியிருக்கிறார்.

இதிலே ஒரு அரிய உண்மை இருக்கிறது, தம்பி; நிச்சயமாக இருக்கிறது.

காங்கிரசில் சேர்ந்தால்தான், சுப்பிரமணியம் போன்றார், சபை நடுவில் சன்னத்துடன் இருக்கமுடிகிறது! இல்லையேல், மூலை முடுக்குதான்; சந்தேகம் இல்லை! காங்கிரசின் தயவு இருக்கிறது என்ற தகுதி தவிர, தமது நிலைமைக்கு வேறு தகுதி இல்லை என்பதை அவர் நெஞ்சார உணருகிறார்! நேர்மையாகச் சொல்லியும் விட்டார்! ஆனால் மற்றோர் பேருண்மை அவருக்குப் புலப்படவில்லை - இன்று அவர் இருக்கும் நிலையில் புலப்படாது!

"அது சரிடி அம்மா! அந்தப் பாவியோட குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தா, இன்னேரம் கூலிக்காரியாகி, புளித்த கூழுக்கும் அழுகல் மாங்காய்க்கும் அலைந்து திரிந்து கிடக்க வேண்டித்தான் வந்திருக்கும்'' என்று துணிந்து கூறுகிறார்; கொண்டவன் வறுமையின் பிடியில் இருப்பது கண்டு குலுக்கி நடந்து குட்டிக் குபேரனை வலையிட்டு, அவனுடன் வாழ்க்கை நடத்தி, வங்கி ஒட்டியாணத்துடன் மாங்காய் மாலையும் வைர ஓலையும் பச்சை மோதிரமும் பத்து ஏக்கர் நஞ்சையும் பங்களா தோட்டமும், "சம்பாதித்த'' சல்லாபி! ஆனால் உலகம், காரி உமிழ்கிறது! ஆஹா! அப்படியா! அம்மணீ! வாழும் வழி கற்றுக்கொடுத்த வனிதா மணியே! வாழி! வாழி!! என்று கூறி வாழ்த்துவதில்லை. அவளிடம் வண்டி ஒட்டி வயிறு கழுபவன் கூட, வாழ்த்த மாட்டான் - பாழும் அங்கத்தை வளர்க்க இந்தப் பங்கப்பட்ட பாவியிடம் அல்லவா வேலை செய்ய வேண்டி "விதி'' இருக்கிறது என்றெண்ணி வேதனைப்படுவான்.

ஆனால் இதெல்லாம் சாமானியர்கள் விவகாரம்!

பேசினவர் அமைச்சர்; உன்னையும் என்னையும் போல "உருப்படத் தெரியாத'' வரா!

எனக்கும் உனக்கும் தம்பி! அவர் போல "அந்தஸ்து'' பெறுவதற்கு என்ன வழி என்பது தெரிய வேண்டாம் - நாடு பொலிவு பெற, தன்னரசு பெற்றுத் திகழ வழி என்ன என்ற விஷயம் புரியட்டும் - போதும்.

புகழுரை பொழிவதன் மூலம் மயக்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் வடநாட்டுத் தலைவர்களுக்கு, நாம் ஏமாளிகள் அல்லவென்பதை எடுத்துக்காட்ட வேண்டும்.

வந்த வண்ணம் இருக்கிறார்கள் வட நாட்டுத் தலைவர்கள். அவர்களின் உண்மை நோக்கத்தை உணர்ந்ததாலேதான், சேலத்தில் தோழர்கள், சீறி எழுந்து கண்டனக் குரலைக் காட்டினர். மேலும் விளக்கமாவதற்காகக் கருப்புக் கொடியும் காட்டினர்.

"அடிக்கடி செல்வோம், அன்பாகப் பேசுவோம், புகழ்பாடுவோம், புன்னகை காட்டுவோம், அவர்கள் ஏமாந்து போவார்கள், "எடுபிடி'' யாகி விடுவார்கள்!'' என்று எண்ணு கிறார்கள், முறையை மாற்றினால் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து விடலாம் என்று எண்ணும் வடநாட்டுத் தலைவர்கள்.

சாகஸத்துக்குப் பலியாக மறுத்திடும் அணிவகுப்பு ஒன்று இருக்கிறது. அது வளர்ந்த வண்ணமும் இருக்கிறது, என்பதைக் காட்டியாக வேண்டும்.

எனவே இனி திராவிடம் வந்து "தந்தினம்'' பாடி மேலும் தலைகளைப் பூட்டிட எண்ணும் வடநாட்டுத் தலைவர்களுக்கு, கழகம் கருப்புக்கொடிமூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தைத் தோழர்கள் பலர் கூறியுள்ளனர் - நான் முறைப்படி அதனை நமது பொதுச் செயலாளருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

தடியடி! துப்பாக்கி! சிறை! கலகம்! குழப்பம்! கல்லெறி! எனும் பலப்பல கிளம்பக் கூடும் - எனினும் இவைகளைக் கண்டு கண்டு நாம் பழக்கப்பட்டவர்கள் தம்பி! உன் கருத்து என்ன?

கண்ணே! மணியே! கற்கண்டே! என்று அன்புடன் பேசுகிறோம்; அக்ரமக்காரர்களே, எங்களுக்குக் கருப்புக் கொடியா காட்டுகிறீர்கள், என்று வடநாட்டுத் தலைவர்கள் நெருப்பைக் கக்கக் கூடும்.

காட்டு மிராண்டிகள்! பைத்தியக்காரர்கள்! சிறு பிள்ளைகள்! என்று மீண்டும் ஒரு முறை நேரு பண்டிதர் நாக்கைத் தீக் கோபமாகக்கக் கூடும்.

ஆனால், நமக்கு வடநாட்டுத் தலைவர்கள் நம்மைப்பற்றி எப்படிப் பேசுகிறார்கள், புகழ்ந்தா? இகழ்ந்தா? வெல்லமா? வெடிமருந்தா? என்பதல்ல, கவனிக்க வேண்டிய பிரச்னை. தம்பி! மலத்தை மிதித்து விட்டாலும், கழுவி விட்டால் நாற்றம் போய் விடுகிறது; பூசிய சந்தனம் வியர்வையில் கரைந்து காற்றோடு போய்விட்டாலும், மணம் மடிந்து படுகிறது!

நம்மை வடநாட்டுத் தலைவர்கள் புகழ்கிறார்களா, இகழ்கிறார்களா - சந்தனம் பூசுகிறார்களா, நரகல் நடையில் ஏசுகிறார்களா, என்பதல்ல பிரச்னை.

நமக்குள்ள பிரச்னை - நம்மைப் போன்ற சாமான்யர் களுக்கத்தான் தம்பி, அமைச்சர்களுக்கு அல்லவே அல்ல - வடநாட்டார் நமது தாயகத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான்! அடிமைத்தலை பூட்டியா, அல்லது நேசநாடாக்கிக் கொண்டா என்பதுதான் பிரச்னை. வழுக்கி விழுந்த வனிதாமணிகள் வந்தார்க்கு விருந்தளிக்கட்டும்; தாயகத்தின் தலை ஒடித்திட நாம் பணியாற்றுவோம் - நமது பங்கினை செலுத்துவோம்.

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Anna_sign
19-6-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:04 am

மகுடி ஊதும் மகானுபாவர்கள்!

கலையைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்துதல் -
ஆச்சாரியாரின் இலக்கிய நுழைவும் குழப்பமும்

தம்பி!

"ஆமாம். இவர்கள் பூஜையும் பக்தியும் பத்தி எரிஞ்சாப் போலத்தான் இருக்கு சுட்ட செங்கல்லை வைத்துச் செய்கிற பூஜைக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?'' என்றாள். அவர்கள் பூஜித்த தெய்வம் செங்கல்லால் ஆனதுதான்.

எனக்குக் கோபம் வந்தது. "நீ கோவிலிலேபோய்க் குடும்பிகிற கருங்கல் சாமியிடம் மாத்திரம் என்ன இருக்கிறதாம்?'' என்றேன்.

"போதும்' பேசாமல் இருங்கள். கோவில்களிலே மந்திரங்கள், யந்திரங்கள் எல்லாம் செய்து விக்ரஹங் களைப் பிரதிஷ்டை பண்ணுகிறார்கள். அந்த விக்ரஹங் களும் இந்தச் சுட்ட செங்கல்லும் ஒன்றாய்விடுமாக்கும்?'' என்றாள்.

"அது எனக்குத் தெரியாது. முன்பு கஜனி மகமதும் அவனுடைய ஆட்களும் கோயில்களை இடித்துத்தள்ளி, விக்ரகங்களை எல்லாம் மசூதிகளில் வாசற்படிகளாகப் போட்ட காலத்தில், இந்த யந்திர மந்திரங்கள் ஒன்றும் பலிக்கவில்லை. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள், நரசிம்மாவதாரத்தில் வந்ததுபோல், அந்த வாசற்படிகளி லிருந்து வந்து. கஜனியின் ஆட்களை; ஹிரண்யனைக் கிழித்தது போல கிழித்துவிட வில்லை. பூஜைக்குக் கருங்கல்லாய் இருந்தாலென்ன? தெய்வம் கல்லுக் குள்ளேயா இருக்கிறது? நெஞ்சுக்குள்ளே வேண்டும்'' என்றேன்.

ராணியும் நானும் இப்படிப் பேசிக்கொண்டோம் என்று எண்ணிவிடாதே - வாதாடும் அளவுக்கு நேரம் கூடக் கிடைக்கிறதா! இது சில நாட்களுக்குமுன் நான் படித்த கதையில், ஒரு புருஷனும் மனைவியும் நடாத்தும் உரையாடல், சிறுகதை பெரிய தத்துவ விளக்கத்துக்காகத் தீட்டப்படும் "ரகம்'' இது என்று முன்னுரை சிபாரிசு செய்கிறது. கதை கூறுகிறேன். ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறான் ஒரு இலக்கிய ஆய்வாளன்! வெளியில் ரிக்சாக் காரர்கள் செங்கல் ஒன்றை நிறுத்திவைத்துப் பூச்சொரிந்து பூஜை செய்கிறாôகள். சரஸ்வதி பூஜை!! இந்த இலக்கிய ஆய்வாளரும், சரஸ்வதி பூஜையை முடித்துவிட்டுத்தான் உட்காருகிறார். ரிக்ஷாக்காரர் நடத்தும் பூஜையில் உண்மையான பக்தி இருப்பதை இவர் உணருகிறார். (இவர் உணர்ந்து என்ன பலன்! கடவுளல்லவா உணர வேண்டும்! உணர்ந்தால் இந்த ஜென்மங்களை ஏன் மனித மாடுகளாக்கி வேதனைப் படுகுழியில் தள்ளவேண்டும்? என்று கேட்பாய், தம்பி.) உணர்ந்து உவகையுடன் தன் இல்லாளைக் கூப்பிட்டு, இதோ பார்! இவர்கள் நடத்தும் பூஜையை. இதிலல்லவா உண்மை பக்தி இருக்கிறது'' என்று கூறுகிறார். அந்த அணங்கு, செங்கல்லை வைத்துக் கும்பிடுவதைக் கேலி செய்கிறாள். உடனே, இவர், இலக்கிய ஆய்வாளர் அல்லவா, ஒரு தத்துவத்தை எடுத்து வீசுகிறார்; "கடவுள் கல்லிலா இருப்பார், நெஞ்சிலல்லவா இருக்கிறார்'' என்கிறார். கூறிவிட்டு "மறுப்பாயோ இதனை'' என்று கேட்கிறார்; மாது சிரோமணி "எனக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம். இட்டிலிக்கு அரைக்கணும்'' என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார்கள்.

சுயமரியாதைக்காரர் தவிர வேறு யாரால் இப்படிப்பட்ட கருத்துக் குலுங்கும் கதை தீட்ட முடியும் என்று எண்ணிக் கொள்வாய். நீ மட்டும் என்ன தம்பி, நானும் அப்படித்தான் எண்ணினேன்; எழுதினவரும் நாமெல்லாம் அவ்விதம் எண்ணிக்கொள்ள இடம் வைத்துத்தான் எழுதினார். ஆனால், கதையின் நோக்கம் முற்றிலும் வேறு!!

எழுதியவர், சுயமரியாதைக்காரராக இருக்கத் துணிய வில்லை; "மேதை'' யாகிவிட விரும்புகிறார். எனவே கடவுள் எங்கு உறைபவர்? கருத்திலா, கல்லிலா, என்ற விவாதத்தைத் துவக்கி, முடிவு கூறாமல், அம்மையை மாவு அரைக்க அனுப்பி விட்டு, ஐயாவைக் கொண்டு, கார்ல் மார்க்ஸைத் தோற்கடிக்கச் செய்கிறார்!!

ஜன்னலுக்கு வெளியே இருந்து பார்த்தாரல்லவா, பக்தியுடன் பூஜை செய்யும் ரிக்ஷாக்காரர்களை. அவர்கள் அன்று இரவு குடித்துவிட்டு அடிதடியில் இறங்கி ஆபாசமாக நடந்து கொண்டார்களாம். இதைக் கண்டு இவர் மிக வருந்துகிறார். இவ்வளவுதானா இவர்களின் பூஜையும் பக்தியும் என்ற எண்ணி உள்ளம் நைந்து போகிறது. இந்தக் கட்டத்தோடு கதையை முடித்துப் பூஜைகள் செய்து விடுவதாலேயே, போக்கு மாறிவிடுவதில்லை. பூசல் ஒழிந்து போவதில்லை, புத்தி தெளிவாவதில்லை என்று அறிவுரை தருகிறாரா என்றா கேட்கிறாய். தம்பி? அது நமது "முறை' - மேதைகள் அப்படிச் செய்வார்களா?

இலக்கிய ஆய்வாளர் இல்லக்கிழத்தியுடன், கல்லிலா கடவுள் இருப்பார், இருந்திருந்தால் கஜனி மகமது கண்டதுண்ட மாக்கப்பட்டிருக்க மாட்டானா? என்று வாதாடினாரல்லவா! அதே முறையில், கல்லைக் கடவுளாகக் கருதிக் கும்பிடுவதும், பூஜை செய்வதும், கன்னத்தில் அடித்துக் கொள்வதும், காப்பாற்று சாமி என்று வேண்டிக் கொள்வதும், நல்லறிவையும் நன்னெறியையும் தரக்கூடுமானால், காலையிலே (இவர் பார்த்து மெச்சத்தக்க வகையில்) பூஜை செய்த ரிக்ஷாக்காரர்கள், மாலை குடித்துவிட்டு வந்து கும்மாளமடிக்கும் நிலை வந்திருக்கலாமா, என்றெல்லாம் ஆராயவில்லை.

ஆராய்வாரா! "மேதை' யாக இருக்க வேண்டுமானால், அத்தகைய ஆபத்தான ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாதே! சுயமரியாதைக் காரணாக்கி விடுமே!

இவருடன் வாதாட முடியாமலோ, விருப்பமில்லாமலோ, மனைவி, இட்லிக்கு மாவு அரைக்கச் சென்றுவிட்டார்கள்; இவர், இந்தக் காட்சி கிளறிவிடக் கூடிய கருத்துக்களைச் சந்திக்க அஞ்சி, தூங்கச் செல்கிறார்.

காலையில் மார்க்கட்டுக்குச் செல்கிறார்.

குடிபோதையில், எந்தச் சாமி, பந்தலை ரிக்ஷாக்காரர் பிய்த்திப் போட்டனரோ, அதை அவர்கள் செப்பனிட்டுக் கொண்டிருக்கக் காண்கிறார்!

இவர், உங்கள் மனதிலே நேற்றைய பூஜை உயரிய எண்ணங்களைத் தரவில்லையா! மனிதன் தேவனாகக் கூடும் பூஜா மகிமையால் என்று கூறப்படுகிறது. நீங்களோ கேவலம் மிருகமாகி விட்டீர்களே நேற்றிரவு - என்று விரிவுரையாற்றி னாரா? இல்லை! சிறிதளவு பயம் இருந்திருக்கலாம், "சரிதான், போசாமி! சும்மா என்னமோ எங்களைத் திட்டறே! வா, சாமி, என்கூட! எத்தினி பெரிய பார்ப்பானுங்களெல்லாம் குடிச்சிப் போட்டு மில்ட்டேரி ஒட்டல்லே பிரியாணி குர்மாவைத்தின்னு ஏப்பம் விடறானுங்கோன்னு காட்டறேன்'' என்று ரிக்ஷாக்காரன், "வம்பு தும்பு' பேசிவிடக் கூடும். எனவே, இவர் இதமாக அவர்களிடம் பேசி, குடிக்கக்கூடாது என்று உபதேசிக்க, அவர்களும் சாமி சாட்சியாகக் குடிப்பதில்லை என்று சத்தியம் செய்கிறார்கள்.

இதுதான் கதை! இதிலிருந்து இவர் பெற்று, படிப்போரு க்குத் தரும் பாடம் என்ன தெரியுமோ? கபந்த தத்துவத்தைப் போதித்த கார்ல் மார்க்சின் போதை சித்தாந்தம் கொஞ்சமும் உண்மையில்லை - என்பது பாடம் - பாடமாம்!!

இவர் தீட்டிய கதைக்கும் மார்க்சின் தத்துவத்துக்கும், என்ன தொடர்பு? எந்தச் சம்பவம் மார்க்சின் தத்துவத்தைப் பொய்ப்பிக்கிறது? - இவை பற்றி விளக்கினாரா - இல்லை! ஏன் விளக்க வேண்டும்! மேதைகளுக்கு அதுவா வேலை!!

மார்க்ஸ், மதம் மக்களுக்கு அபின் என்றார்.

அபின் போதை தருவது, மதமும் மக்கள் மனதிலே ஒரு மயக்கமளிக்கிறது, என்பது பொருள்!

அந்தத் தத்துவம் பொய் என்று கதை எங்கே காட்டுகிறது?

மதம் - பூஜை செய்ய வைத்தது - செய்தனர்.

குடி - சண்டையைக் கிளப்பிற்று - சண்டை போட்டனர்.

சண்டையை நிறுத்தி சன்மார்க்கத்தில் ஈடுபடுத்த மதமா பயன்பட்டது? இல்லை! குடிக்காதீர்கள் என்ற அறிவுரை பயன்பட்டது.

குடித்துவிட்டுக் கூத்தாடிய ரிக்ஷாக்காரர்கள் தெளிவு பெறுகிறார்கள், இவர் "போதை' கொள்கிறார் - மதபோதை!!

இதைக் கக்க, ஒரு கதை!

இந்தக் கதையின் இடையே கடவுள் எங்கே இருக்கிறார். கல்லிலா, நெஞ்சிலா என்று ஒரு விவாதம் - முடிவு பெறாமல்!!

மேதைகளென்றும், மறுமலர்ச்சி எழுத்தாளர்களென்றும் தங்களைக் கூறிக் கொள்பவர்கள், பெரும்பாலும், இதே "பாணி'யில் தான் எழுதுகிறார்கள்.

முற்போக்குக் கருத்துகள் தூவப்படும்! பிறகு, அது மறைக்கப்படும் அளவுக்குப் பழைமை கொட்டப்படும்!!

இந்தப் போக்கினர்தான், கதை, நாடகம், சினிமா இவைகளிலே பிரச்சாரம் கூடாது - பொதுவாகக் கலையைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினால், அதன் மேன்மையே குலைந்து போகிறது, தூய்மை நாசமாகிறது என்று "இலக்கிய உபதேசம்'' செய்பவர்கள்.

கார்ல் மார்க்சின் தத்துவத்தைக் கண்டிக்கவேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது இதிலே? ஏன் அதைச் சொருகிக் காட்டுகிறார்! இது பிரசாரமல்லவா?

பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற பேசுபவர்கள், தமது ஒவ்வொரு முயற்சியிலும் பிரசாரத்தில்தான் ஈடுபடுகிறார்கள் - வெற்றி பெறுவதில்லை, பாபம். அதனால் தான், வெந்த உள்ளத்துடன், பிறர் வெற்றிகரமாகக்கலையை நல்லறிவுப் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவது கண்டு வெகுண்டு, கலையைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறார்கள்.

"அது என்ன வழக்கம், சார்? எனக்குத் துளியும் பிடிப்ப தில்லை, மனைவியைக் கூட்டிக் கொண்டுதான், "பீச்' சுக்கு வர வேண்டுமா? பொம்பனாட்டிங்களோடு அவளை வரச் சொல்லிவிட்டு, வரப்படாதோ! நான் அப்படித்தான்'' என்கிறார் எம்பெருமாளய்யங்கார்! காரணம் இருக்கலாம் - அவரைப் பொறுத்த வரையில்! அம்மையின் திருப்பாதங்கள். கஜமுகன் அருள் பாலிக்கப்பட்டவையாக இருக்கலாம், வெளியே அழைத்து வந்தால், ஆபாசமாக இருக்குமென்று ஐயங்கார் சுவாமிகள் கருதியிருக்கலாம்.

"இந்த "ஜட''த்தோடு யார் போவா, பீச்சுக்கு? இது மூஞ்சியும் முகரக் கட்டையும் பார்த்தாலே, "பீச்'சுக்கு வர்ரவா, கேலியான்னா பேசுவா? இதனோட "தொணதொணப்பை' ஆத்திலே சகிக்கிறது போதாதுன்னு, பீச்சுக்குப் போய் வேறே பிராணனை விடணுமா? - வேண்டாம்டிம்மா நான் போகல்லே, அவரோட'' என்று சகதர்மணி கூறிவிட்டிருக்கலாம்.

அநாகரிகமான வேறு பல காரணங்களும் இருக்கலாம்.



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக