புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Baarushree
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Rutu
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
viyasan
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 3%
Rutu
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 3%
manikavi
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_m10அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 9:53 am

First topic message reminder :

காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி

இரண்டாவது மாநில மாநாடு -
பொதுச் செயலாளர், நாவலர் நெடுஞ்செழியன்

தம்பி!

"கப்பலிலா போகப்போகிறீர்கள் - எந்தெந்தத் தேசம் - எவ்வளவு நாளாகும் திரும்பிவர - மாநிலமாநாடு நடைபெற வேண்டுமே'' - என்றெல்லாம் கேட்டிருக்கிறாய், - கனிவு ததும்பும் கடிதம் மூலம். தினத்தந்தியிடம் மட்டும் சொல்லிவிட்டா நான் வெளிநாடு பயணமாவேன் - உன்னிடம் கூறாமலா - என் உள்ளத்துக்கு மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டும் தம்பிமார்களின் "அனுமதி' பெறாமல், வெளிநாடு போகத்தான் முடியுமா?

ஆமாம் - வெளிநாடுகளுக்குப் போய்வருவது என்பது என்ன எளிதான காரியமென்றா எண்ணுகிறாய் - பத்திரிகைகளில் தலைப்புப் போடுவதும் - படம் போடுவதும் எளிது - பாஸ்போர்ட் கிடைப்பது அவ்வளவு எளிது என்றா எண்ணுகிறாய்! நான், அவ்வளவு சுலபத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்று எண்ணவில்லை. வேண்டுமானால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு "பாஸ்போர்ட்' கேட்டால் கிடைக்கக்கூடும்! பிறகு? பணம் வேண்டும். "பாஸ் போர்ட்' போலவேதானே அதுவும். "அண்ணா! இப்படியா கூறுவது, நாங்கள் இருக்கிறோம்'' என்று, அடுத்த கடிதத்தில் எழுதிட எண்ணுவாய் - ஆனால், முதலில் பணம் திரட்டு தம்பி, என் வெளிநாட்டுப் பயணத்துக்காக அல்ல, மாநில மாநாட்டுக்கு!

ரூபாய் இருபத்து ஐயாயிரம் தேவை!

ஒரு ஆயிரம் மட்டுமே தரப்பட்டிருக்கிறது - இந்த இலட்சணத்தில், பொருளாளர் என்று பட்டம் தரப்பட்டு விட்டிருக்கிறது.

நான் வெளிநாட்டுக்கு போவது என்பது இப்போதைக்கு இல்லை - இருபத்து ஐயாயிரம் சேர்த்து - இரண்டாவது மாநில மாநாட்டைச் சிறப்புற நடத்திவிட்டு, பொதுத் தேர்தல் குறித்துக் கலந்தாலோசித்து. பணியாற்றிவிட்டு - பிறகே வெளிநாடு - இடையில் சிறைக்குள் தள்ளப்படாமலிருந்தால்!

எனவே நடைபெற வேண்டிய காரியத்தைக் குறித்து, நண்பர்களுடன் கலந்தாலோசித்துக் காரியமாற்று; நான் போகும் கப்பல் தினத்தந்தியில் படமாக வரும் - வேடிக்கையாகப் பார்த்துக் கொள்ளலாம்!

நடைபெற்றாகிவிட்ட பிறகு, சர்வசாதாரணமாகத் தோன்றும்; ஆனால் சிறிது எண்ணிப் பார்த்தால்தான், நாம் எவ்வளவு அருமையான "கட்டம்' வந்திருக்கிறோம் என்பது விளங்கும்.

நாவலர் நெடுஞ்செழியன், இப்போது நமக்குப் பொதுச் செயலாளர்!

தஞ்சையிலும் மதுரையிலும் நான், பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியபோது, புயலே கிளம்பிற்று - எனக்குச் சிறிது சீற்றம் கூடப் பிறந்தது. ஆனால் மெள்ள மெள்ள ஆனால் வெற்றிகரமாகச் சபலத்தைக் கடந்து விட்டோம் கழகம் புதியதோர் கட்டம் வந்து சேர்ந்திருக்கிறது - நாம் வலிவும் பொலிவும் கொண்டதோர் அமைப்புப் பெற்றிருக்கிறோம் என்கிற நம்பிக்கை நமக்கெல்லாம் ஏற்பட்டுவிட்டது பெருமைக்குரிய செய்தி.

தோழர் நெடுஞ்செழியன் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது இரண்டாண்டுக் காலமாகவே என் உள்ளத்திலே வளர்ந்த வண்ணம் இருந்த எண்ணம்.

ஓராண்டுக்கு முன்பு இலங்கை "சுதந்திரன்' ஆசிரியர் சென்னை வந்திருந்த போது, அவரிடம் கூறினேன் - அவர் தமது இதழில் வெளியிட்டிருந்தார்.

நான் மட்டுமல்ல, நமது கழகத்திலே பெரும்பாலானவர்கள் புதிய பொதுச் செயலாளராகத் தோழர் நெடுஞ்செழியன் வர வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற்றனர்.

இந்த எண்ணம் எனக்குத் தோன்றிய நாள்தொட்டு நான் தோழர் நெடுஞ்செழியனை இந்தப் பொறுப்புக்குப் பக்குவப் படுத்துவதாக எண்ணிக் கொண்டு, அவருடைய இல்லத்தை என் இருப்பிடமாக்கிக் கொண்டேன்! சிறிதளவு, என்னிடம், பழகுவதில் கூச்சமுள்ள சுபாவம் அவருக்கு - எனவே, அவருடைய இல்லத்தை இருப்பிடமாக்கிக் கொண்டால்தான், என் எண்ணங்கள், நான் சரியென்று கருதும் முறைகள், என் ஆசைகள், எனக்குள்ள அச்சங்கள், இவை பற்றியும், துணைக் கழகங்கள், துளைக்கும் கழகங்கள், தூதுவிடும் கழகங்கள், வம்புக்கு இழுக்கும் கழகங்கள் ஆகியவை பற்றி என் கருத்து யாது என்பது பற்றியும், உரையாடி உரையாடி எடுத்துக்காட்ட முடியும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, அவர் வீட்டுச் "சைவத்' தைத் தாங்கிக் கொண்டிருந்தேன்!!

அவரிடம் நேரடியாகக்கூட பிரச்னைகளைப்பற்றிப் பேசுவதில்லை - பிரச்னைகளை நான் மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் உடன் இருப்பார்! மிக முக்கியமான கட்டங்களின் போது, புன்னகையாவது பிறக்கும், புருவத்தையாவது நெறிப்பார்! இவ்வண்ணம் இரண்டாண்டுகள்.


துவக்கத்திலே நான் கொண்ட நம்பிக்கை வளர்ந்து, கனியாகி விட்டது. நமது கழகத்தை அதன் கண்ணியம் கெடாத வகையில் மட்டுமல்ல, வளரும் வகையில், நமது புதிய பொதுச் செயலாளர்
நடத்திச் செல்வார் என்ற உறுதியை என்னால் நிச்சயமாக அனைவருக்கும் அளிக்க முடியும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது.

உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் - நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணுகிறேன் - தாடியுடன் நெடுஞ்செழியனை!

அப்போது, தோழர் அன்பழகன் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றி வருபவர் - தோழர் நெடுஞ்செழியன் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் போக்கினராகத் தோற்ற மளித்து வந்தார். நான் அப்போது தோழர் அன்பழகன், கல்லூரியிலிருந்து வெளியேறியதும் கழகத்தில் வந்து சேருவார்,தோழர் நெடுஞ்செழியன் எங்காவது கல்லூரியில் கம்பனின் கவித்திறமை பற்றி (கட்டாயத்தாலும்) இளங்கோ அடிகள் பற்றி (விருப்பத்துடனும்) எடுத்துரைத்துக் கொண்டு, தமிழின் எழிலைக் கண்டும் காட்டியும் பணியாற்றி வருவார் என்றே எண்ணிக்கொண்டேன். அதுபோல நடந்திருக்கக் கூடாதா என்று ஆயாசத்துடன் கேட்கும் அவர் துணைவியார் தெரிகிறார்கள்!!

என்ன செய்யலாம்! அவரோ புயலில் குதித்து விட்டார்!!

தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம் பேச்சுடன் கலந்து வரும்போது எத்தகைய இன்பமளிக்கும் என்றெல்லாம் நான் பலமுறை எண்ணிப் பார்த்ததுண்டு - மனதிலே உருவெடுத்துக் கொண்டிருந்த ஆசை நடமாடக் கண்டேன், தோழர் நெடுஞ்செழியன், கழக மேடையில் பேசத் தொடங்கியதும்.

கருவூர் ஆற்று மணலில் - நினைவிருக்கிறது - பெரியாரும் இருந்தார் - தோழர் நெடுஞ்செழியன் இலக்கியத்தை இனிய முறையிலே எடுத்தளித்தார். நல்ல விருந்து - ஆயினும் என்ன செய்வது?

நாளாவட்டத்தில், தரத்தைச் சிறிதளவு தளர்த்தச் சொல்லி வற்புறுத்த வேண்டித்தான் வந்தது. தரத்தை வளரச் செய்யும் போக்கிலா ஆளவந்தார்கள் நம்மை விட்டு வைக்கிறார்கள்!!

நடை இருக்கட்டும், நண்பரின் திறம் இருக்கிறதே, அது கண்டு நான் வியப்புற்றேன்.

என்னிடம் இல்லாத - நான் விரும்பாததால், அல்ல, இயலாததால் - ஒரு அருங்குணம் அவரிடம் உண்டு - கண்டிருப்பீர்கள். ஓயாது உழைப்பது! எப்போதும் எங்கேயும் எதையாவது, எப்படியாவது செய்து கொண்டே இருப்பது.

என்னாலே இதைக் கண்டு இரசிக்க முடியும் - ஆனால் என்னை அந்நிலைக்கு மாற்றிக் கொள்ள இயலவில்லை. நான் அடிக்கடி கனவு காண்கிறேன், சோலையில் சொகுசாக உலவுவதுபோல அல்ல - அந்தக் காலம் மலை ஏறிவிட்டது - பொதுப் பிரச்னை களைப்பற்றி. தோழர் நெடுஞ்செழியன் எப்போதும் காரியமாற்றிக் கொண்டே இருக்கும் இயல்பினர். நேரம் வீணாகிவிட்டது என்று கூறத்தக்க போக்கிலே, அவர் இருந்ததை நான் கண்டதே இல்லை. இந்த இயல்பு, கழகத்துக்குப் பெருந்துணையளிக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

வீட்டிலே என் குறும்புப் பார்வையைக் கண்டு தளருவார், எனினும் இயல்பு அவரை விடாது, மறுகணம், ஏதாவது வேலையைத் துவக்கிக் கொள்வார்.

சிறையில் மூன்று திங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம் - அங்கு என்ன வென்று கருதுகிறீர்கள் - ஆச்சாரியார் ராஜினாமாச் செய்வது போல, அவசரச் சட்டம் பிறப்பிப்பது போல, பாதுகாப்புக் கைதியாக ஆக்கப்படுவதைப் போல, பெரியார் கட்டித் தழுவிக் கொள்வது போல, இப்படிப் பலப்பல "கனவுகள்' - விழித்தபடி - நான் கண்டு கொண்டி ருப்பேன். அவர்? - வேலை! வேலை! வேலை! ஏதாவது செய்தபடி இருப்பார்.

இந்த அருங்குணத்தை நாம் நன்றாகப் பயன்படுத்தி, கழகத்தை மேன்மையுறச் செய்து கொள்ள வேண்டும்.

என்னிடம் சில குறைபாடுகள் உண்டு - குறைபாடுகள் என்று சம்பிரதாய முறையில் சொல்கிறேன் - அதிலே ஒன்று தான் கனவு காண்பது; மற்றொன்று மிகக் கஷ்டமான நெருக்கடியின்போது சர்வ சாதாரணமாகக் கருதிக் கொண்டு சிரித்துக் கிடப்பது. இதிலே எனக்குச் சரியான ஜோடி சம்பத்துதான்! பெரியாரின் "சர்டிபிகேட்டே' உண்டு இதற்கு.

திருச்சியிலே திராவிடர் கழக மாநில மாநாடு - அதற்காக வேலை செய்வதற்காக ஒரு மாளிகையில் தங்கியிருக்கிறோம், நானும் சம்பத்தும் - பெரியார் வேலை செய்கிறார் - விசாரப்படுகிறார் - தொல்லைப் படுகிறார். நானும் சம்பத்தும் மாடியில் ஏதேதோ பேசுகிறோம், சிரிக்கிறோம், பாடுகிறோம்.

(யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்) கவலையற்று! பெரியாருக்குக் கோபம் பொங்கி வழிந்தது! எப்படிப்பட்ட சமயம்! இந்த இரண்டு பசங்களும் சிரித்துக் கொண்டு இருக்கிறார்களே! துளியாவது கவலை இருக்கிறதா? ஒரு பெரிய மாநாடு நடக்கவேண்டும், அது பற்றித் துளியும் கவலைப்படாமல், தின்பதும், திரிவதும், ஆடுவதும், பாடுவதும், செச்சே! - என்று பேசினார்.

அப்போது நான் செல்லப் பிள்ளை! இகழப்பட்ட போதும் பழிக்கப்பட்ட போதும், அன்பு காட்ட வேண்டிய வர்கள் பகைக்கும்போதும் சிரித்துச் சோகத்தைச் சிதறடிப்பது என் முறை - மிகச் சிறியவனாக இருந்தது முதலே சம்பத்துக்கும் இது முறை. "விளையாட்டுப் பிள்ளைகள்' என்று இதனைக் கொண்டு பெரியார் கூறுவதுண்டு. அதற்கும் நாங்கள் இருவரும் சிரித்தோம். அவரால் சகிக்கவே முடியவில்லை. எனவே, டிக்கட் விற்பனை என்ற ஏற்பாட்டின்படி, சம்பத்தைக் கருவூருக்கே அனுப்பிவிட்டார்!

சிரிக்கத் தெரியாமலிருந்தால் எனக்குப் பொதுவாழ்க்கை யிலே ஏற்பட்ட சங்கடங்களால், பைத்தியமே பிடித்துவிட்டிருக்கும். விளையாட்டுத்தனமல்ல, அது - விசாரத்திலே மூழ்கிக் குழப்பமடைந்து போகாமலிருக்க, அது தகுந்த முறையாக அமைந்திருந்தது.

குறைபாடுகள் என்று இவைகளைக் கருதலாம் - விவரம் கூறப்படா முன்பு.

தோழர் நெடுஞ்செழியனைப் பெரியார், தமது மேற்பார்வையில் வைத்திருந்து பார்த்தார் - அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும் ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம், அவராலும் ஒரு குறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை.

அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார்.

அவருக்குக் கிடைத்திருக்கும் கழகமோ, சாமான்யமான தல்ல!

ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகள்!

இடைவிடாத பொதுமக்கள் தொடர்பு கொண்ட இயக்கம்.

களம் கண்ட காளைகள், தியாகத் தழும்பேற்ற தீரர்கள், கண்ணியத்தைக் காப்பாற்றும் பண்பினர் எண்ணற்றவர்கள்.

விழியில் நீர் வழிய வீதியில் விரட்டப்பட்டோம் - இன்று நமக்கென்று ஒரு தலைமை நிலையம், நம்முடையது என்று பெருமையுடன் கூறிக்கொள்ளத் தக்க ஒரு அச்சகம், நாம் செய்தோம் என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொள்ளத் தக்க செயல் பட்டியல் - இவைகளைப் பெறுகிறார் தோழர் நெடுஞ்செழியன் - பன்மடங்கு இந்த வனப்பை, வலுவை, அதிகமாக்கிக் காட்டப் போகிறார்.

நமக்கென்று ஒரு தலைமை நிலையம், என்றேன் - மகிழ்கிறீர்கள் - நானோ, அந்த இடத்தில் சில பகுதி கலனாகி வருவதையும், ஆகவே கட்டிடம் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அதற்கான செலவினையும் எண்ணிக் கவலைப் படுகிறேன். தோழர் நெடுஞ்செழியனை, அந்த இடத்திலே அழைத்துக் கொண்டுபோய் அமர்த்திவிட்டோம். அவருடைய "நாட்களில்' நிலையம் புதிய உருவும் எழிலும் பெற வேண்டும் - அதற்கான வசதியை நாம் அவரிடம் தேடித் தர வேண்டும்.

நமக்கென்று ஒரு அச்சகம் என்று பெருமையுடன் பேசுகிறோம் - ஆனால் நான் எவ்வளவு முயன்றும் "நம் நாடு' பெரிதாகி விடவில்லை. அந்தப் பொறுப்பும், அவரிடம், இப்போது, அதற்கான ஆதரவு திரட்டி அவரிடம் ஒப்படைக்க வேண்டியது, நமது கடமை.

மாநில மாநாடு! மிகப் பெரிய பொறுப்பு, நம்மை எல்லாம் அறைகூவி அழைக்கிறது. அதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு நமது பொதுச் செயலாளருக்கு நாம் துணை நிற்கவேண்டும்.

இவைகளையும் இவை போன்ற வேறுபல கடமைகளையும் நாம் நிறைவேற்றிக் கொடுத்தால்தான், நமது பொதுச் செயலாளர் மூலம் நமது கழகம் பெறவேண்டிய புதிய பொலிவுக்கும் வலுவுக்கும் வழி செய்தவர்களாவோம்.

நேற்றுத்தான், கண்ணீருடன் வெளிவந்தது போல் இருக்கிறது.

இதற்குள் என்னென்ன கட்டங்கள்!! எவ்வளவு எதிர்ப்புகளைத் தாண்டி, இந்தக் கட்டம் வந்திருக்கிறோம்!

இதுகளாவது - கட்சி நடத்துவதாவது - என்ற ஏளனம் ஈட்டி போலக் குத்திற்று. இதோ இரண்டாவது பொதுச் செயலாளர் - இரண்டாவது மாநில மாநாடு!!

இதுகளாவது ஒன்றுகூடி வாழுவதாவது - என்ற சாபம் மிரட்டிற்று.

ஒன்றுகூடி வாழ்வது மட்டுமா - ஒருவரை நம்பி ஒருவர் வாழக் கற்றுக் கொண்டோம் - தனி மனிதர்களைவிட ஒரு அமைப்பே முக்கியம் என்ற தத்துவம். நடைமுறைக்கு வந்து விட்டது. வளர்ச்சி சாதாரணமானதல்ல!!

ஏ! அப்பா! பாரேன், இதுகளுக்குள் மூண்டுவிடப் போகிற வம்பு வல்லடிகளை, போட்டி பொறாமைகளை, பூசல் ஏசல்களை என்று கருவினர் - இதோ ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து உடனிருந்து பணியாற்றுகிறோம், புதிய பொதுச் செயலாளருடன்.

தம்பி! நான் இந்த மகிழ்ச்சியிலே திளைத்திருக்கிறேன்.

வெளிநாடு போகும் திட்டம் பற்றி எண்ணிக் கொண்டில்லை.

ஒரு திங்கள் ஓய்வு கொடு - பிறகு மாநில மாநாட்டுக்கு நிதி திரட்டி வைத்துக் கொண்டு, எந்தப் பட்டி தொட்டிக்கு வேண்டுமானாலும் கூப்பிடு, வருகிறேன்.

ஓய்வு எடுத்துக் கொண்டு உல்லாச வாழ்வு நடத்தவா, உள்ளத்திலே ஓராயிரம் ஈட்டிகள் குத்துவது போல, மாற்றார் நடந்து கொண்டதைச் சகித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும், கழகத்தை அமைத்து, இந்தக் கவர்ச்சிகரமான கட்டத்திற்கு வந்திருப்பது! கழகம் பணியாற்ற வேண்டிய துறைகள் பல உள வெளிநாடு சென்று தெரிந்துகொண்டு வந்து பணியாற்ற வேண்டிய கட்டம் இது அல்ல - இப்போது உள்ள கட்டம், நமது நாட்டை முழுதும் நாம் பார்த்துப் பாடம் பெறும் கட்டம். அந்தக் கட்டத்தில், நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி உன் சீரிய யோசனையைக் கூறுவதுடன் - சிறிதளவு பணமும் சேர்த்துத் தர வேண்டுகிறேன், மாநில மாநாட்டுக்கு, புதிய கட்டம், புதிய பொதுச் செயலாளர், அவர் தலைமையில் இரண்டாவது மாநில மாநாடு - அதைச் சிறப்புற நடத்தித் தருவதிலேதான், கழகத்தின் மற்றோர் கட்டம் மலர இருக்கிறது.

அணிவகுத்து நின்று, நாம் நம் கடமையைச் செய்ய வேண்டும். சில்லரைத் தகராறுகளைச் சிரித்து விரட்டுங்கள் - பெரிய இலட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம் என்ற எண்ணம் கொழுந்து விட்டெரியட்டும்.

புதிய பொதுச் செயலாளரின் திறத்தையும் அருங் குணத்தையும் கழகம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் நமது கடமையைத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும், முயற்சி எடுக்க வேண்டுமென்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில்,
தம்பி! முயற்சி எடுத்தால் போதும்; முடித்தே காட்டுவீர்கள் என்பதை அனுபவத்தில் கண்டவனல்லவா நான், அதனால்தான்.

சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டிலே கூடியது போல, குறைந்தது இரட்டிப்பு மடங்கு மக்கள் கூடுவர், திருச்சியில் - நடு நாயகமல்லவா, அதனால்.

அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்திக் கொடுக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள நேரத்தில், காகிதக் கப்பலின் மீது கவனம் செலுத்தலாகாது; மாநாட்டுக்கான யோசனைகளை நண்பர்களுடன் கலந்து பேசி, தலைமை நிலையத்துக்குத் தெரியப்படுத்து. மாநில மாநாட்டிலே கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளை இப்போதிருந்தே உள்ளூர்க் கிளைக் கழகத்தில் கலந்து பேசுங்கள் - திட்டம் தயாரித்து அனுப்புங்கள் - தம்பி! - பணமும் அனுப்பு!


அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Anna_sign
05-08-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:05 am

அவர், தமது துணைவியை உடன் அழைத்து வராததாலேயே, அதுதான் முறை, தமது இல்லக்கிழத்தியுடன் வருபவர்கள், நாகரீக மற்றவர்கள் என்று பேசுவது அறிவுடைமையாகுமா!

அதுபோலத்தான், இவர்களால் கலையைப் பிரசாரத்துக்குப் பயன்படுத்த முடியவில்லை.

அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கிட்டவில்லை.

இதைக் கொண்டு, கலையை நல்லறிவுப் பிரசாரத்துக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தும் மற்றவர்களைப் பார்த்து, பொம்மனாட்டிகளை ஏன் அழைச்சிண்டு வரணும் என்று கேட்கும் போக்கில், கலையில் பிரசாரம் இருக்கலாமா, என்று இந்த "மேதைகள்' பேசுகிறார்கள்.

தம்பி! நான் இப்படிச் சொல்வதால், சுவையும் அழகும் கொண்ட வகையில் எழுதக்கூடியவர்கள் நம்மவர்கள் மட்டும்தான், மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கு அவ்விதம் எழுதவே தெரியாது, என்று அகம்பாவம் கொள்கிறேன் என்று எண்ணிக் கொள்ளப்போகிறார்கள் - சொல்லிவிடு அவர்களுக்கு நான் அப்பப்பட்டவனல்ல என்பதை!

அவர்கள் தோல்வி அடைவதற்குக் காரணம் அழகாக, அருமையாக எழுதத் தெரியாததால், அந்தத் திறமை இல்லாததால் அல்ல! அவர்களின் தோல்விக்குக் காரணம், அவர்கள் மனதிலே, தெளிவான திட்டமான கொள்கையும், அதைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்ற நேர்மையும் இருப்பதில்லை.

பழைமை செத்து விடுகிறதே என்ற துக்கம் குடைகிறது. அதேபோது இந்த நாட்களில் பழைமையை ஆதரிப்பதா என்ற வெட்கமும் வேலாகிக் குத்துகிறது. எந்த முகாமில் இருப்பது, என்பது பற்றி முடிவெடுக்க இயலாமல், அவர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள்! அந்தக் குழப்பம், அவர்களின் திறமையை மண்ணாக்கி விடுகிறது.

இந்தக் கதையையே பாரேன்? கல்லுக்கு மந்திர சக்தி ஊட்டுகிறார்கள் தெய்வம் ஆகிறது - என்ற பழைமையைப் "பாரியாள்' கூறிடக் கேட்டோம். இது நமக்குப் புரிகிறது! ஓஹோ! இது பத்தாம் பசலி! எவ்வளவு சொன்னாலும் ஏறாது!! என்பது தெரிகிறது. ஆனால் இலக்கிய ஆய்வாளனாகவும், அந்த மாது சிரோமணியின் மணவாளனாகவும் இருப்பவரின் போக்கு எப்படி இருக்கிறது? பழைமையின் பக்கம் நிற்கிறாரா! புதுமைக்காகப் போர்முரசு கொட்டுகிறாரா? என்று பாருங்கள்; குழம்புகிறார், வேறென்ன!

புதுமைக் கருத்திலே திளைத்தவர் போல மனைவியிடம், "கஜனி மகமதும் அவருடைய ஆட்களும் கோயில்களை இடித்துத்தள்ளி விக்ரஹங்களை எல்லாம் மசூதியிலே வாசற் படிகளாகப் போட்ட காலத்தில் இந்த யந்திர மந்திரங்கள் ஒன்றும் பலிக்கவில்லை. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுள், நரசிம்மாவதாரத்தில் வந்தது போல அந்த வாசற் படிகளிலிருந்து வந்து கஜனியின் ஆட்களை ஹிரண்யனைக் கிழித்தது போலக் கிழித்து விடவில்லை,'' என்று கூறி, ஏன் என்று கேட்கிறார்? எவ்வளவு தீவிரத் தன்மை சுடர்விடுகிறது! எத்துணைப் பகுத்தறிவுக் கதிர் தெரிகிறது! ஆனால் எற்றுக்கு!!

நேக்கு இந்த வம்பு தும்பு தெரியாது என்று கூறிவிட்டு அந்த அம்மை இட்லிக்கு மாவு அரைக்கச் சென்று விடுகிறார். நான் அந்த அம்மையை மதிக்கிறேன். நமக்குத் தெரியாது தேவையற்றது இந்தப் பிரச்னை என்ற தன்னடக்கம் இருக்கிறது, இவர்களிடம். சரியோ, தவறோ, பழமைதான் பிடித்தமாக இருக்கிறது! அதற்கு ஆதாரம் தேட வேண்டாம் என்ற அவசியமும் தோன்றவில்லை! அவர்களின் நிலை, புரிகிறது, நன்றாக. ஆனால் இவர்! அசகாயசூரர் போல ஒரு பிரச்னையைக் கிளப்புகிறார். தூணிலிருந்து வெளிப்பட்ட துளசிமாலையோன், ஏன் கஜனி மகமதைக் கிழித்தெறியக் கல்லிலிருந்து வெளிவரவில்லை என்று கிளப்பி விட்டு, பதில் அளிக்கிறாரா, எந்தப் பக்கமாகவாவது? அதுதான் இல்லை! அம்மைசுட்டுத் தரப்போகும் இட்லிக்குக் காத்துக் கொண்டிருக்கிறவராகத் தெரிகிறதே தவிர, கடவுள் எங்கு இருப்பார், கல்லிலா, நெஞ்சத்திலா என்ற சிக்கலான பிரச்னையைக் கிளப்பி விட்டோமே, ஒரு கதையில்; இதற்கு ஏதாவதோர் சார்பில் பதில் தரவேண்டாமா என்ற பொறுப்புக் கொண்டவராகத் தெரியவில்லை.

"தெற்கே போகிற வண்டிங்களா! நீங்க எங்கே மதுரைக்குப் போகிறிங்களா?'' என்று பன்னிப் பன்னிக் கேட்டு விட்டு, "அந்த ரயில் வந்ததும் வராததும் எனக்குத் தெரியாதுங்க'' என்று பேசும் திம்மப்பன்போல, "யாருக்கு? உன் மக கலியாணமா! ஆவணி பதினைந்தா! ஆற்காட்டிலா! ஆறு பவுனிலா செயின் போடனும்! செலவு ஆயிரத்துக்கு மேலே ஆகுமோ! நல்ல மனுஷன், உனக்குச் சகாயம் செய்ய யாருக்கும் இஷ்டம்தான், பகவான் எல்லாக் காரியத்தையும் சுபமாக முடித்து வைப்பார், கவலைப்படாதே'' என்று உபசாரத்தை வாரி வழங்கிவிட்டு, கடைசியில், "இப்ப என்னிடம் பணம் இல்லையே, வேறே இடம் பாரப்பா!'' என்று கடன் தந்து உதவாமல் விரட்டிவிடும் திமிரப்பன் போல், கடவுள் கல்லில் இருந்தால் கஜினியைக் கிழித்தெறிந்திருக்க வேண்டாமா என்று சூரத்தனமான கேள்வியைக் கிளப்பிவிட்டு, சுட்டுக் கொண்டு வா, இட்லியை என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடுவதா!!

இந்தப் போக்கினால்தான், இவர்களைவிட இலக்கியத் திறமையும் எழுதும் திறமையும் குறைந்த அளவு பெற்றுள்ள நம்மவர்கள் பெறுகிற வகையான அளவுள்ள வெற்றியை இவர்களால் பெற முடிவதில்லை. ஆச்சாரியாரல்லவா இந்தக் கோஷ்டிக்'க்குத் தலைமை வகிக்கிறார்! எவ்வளவு பரிதாபம் பாருங்கள்? இந்தத் தள்ளாத வயதில், இதுநாள் வரை தாம் பெற்ற அனுபவத்தின் காரணமாக பெறக் கிடைக்கும் அரசியல் நுணுக்கங்களை எழுத வேண்டியவர், அனுமனின் வாலில் மூட்டப்பட்ட தீ பற்றி எழுதிக் கொண்டிருக்க வேண்டி நேரிடுகிறது!

பழமைக்கு ஏதோ புது விளக்கம் கொடுத்து, நம்மவர்களின் வாதங்களைத் தவிடு பொடியாக்கி விடுவதாக மனப்பால் குடிக்கிறார்கள்; புதுமையோ எந்தத் திக்கிலும் இவர்களைத் தாக்கித் தகர்த்த வண்ணம் இருக்கிறது!



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:06 am

இவர்களின் பழைமைப் பிரசாரத்தின் காரணமாக, பக்தர்'களாக இருந்து வருபவர்கள், இவர்கள் நமக்குச் சமாதானம் கூறுவதற்காக விளக்கங்கள், தத்துவார்த்தங்கள் தருகிறார்களே. அவைகளையாவது ஏற்றக்கொண்டு, அவைகளின்படியாவது தங்கள் போக்கை மாற்றிக் கொள்கிறார்களா என்று பார்த்தால், அதுவுமில்லை

வயலில் விளைச்சல் அதிகம் வேண்டும் - அதற்கு வனதேவதைக்கு நரபலி கொடுக்க வேண்டும் என்ற பழைமை எண்ணம் பிடித்த ஆதிவாசிகள், கடந்த கிழமைதான், எட்டு வயதுப் பாலகளைக் கொன்று படைத்திருக்கிறார்கள்!

எத்தன் இவன் பணத்தை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டினான் என்கின்றனர் போலீசார்; பிடிபட்ட பாஸ்கரராவ் என்பவனோ, நான் பக்தன் எத்தனல்ல! பணத்தை எடுத்தேன்; செலவிட்டேன்; எதற்கு? பகவானைப் பிரத்யட்சமாகக் காட்டுவதாகப் பக்கிரிசொன்னான், அவன் சொன்னபடி பூஜை பல செய்யவே செலவிட்டேன்! களவு என்கிறீர்கள், கடவுளைத் தேடிக காணச் சென்ற என் புண்ணிய காரியத்தை! என்று வாதாடுகிறான்.

புதுமையின் வேகத்தையும் தடுக்க முடிவதில்லை - பழைமையாளர்களையும், நாசுக்காகவாவது திருத்தமடயச்செய்ய முடிவதில்லை. காரணம், இவர்கள் திறமையற்றவர்கள் என்பதல்ல; உள்ள சரக்கு மகாமட்டம். ஊசல் சரக்கை உண்மை அறிந்த மக்கள் குப்பைக்குப் போடுகிறார்கள்; இவர்கள் அதைக் குனிந்தெடுத்து, கூவிக் கூவி விற்கிறார்கள்! வியாபாரம் மிக மந்தமாக இருக்கிறது!

தம்பி, ஆச்சாரியார் போன்ற அதிமேதாவிகளுக்கே ஏற்படும் குழப்பத்தைப் பாரேன், நிலைமை விளங்கும்.

சேக்கிழார் திருநாளில் பேசுவதற்காக, ஆச்சாரியாரை அழைத்தனர். சென்ற கிழமை. சைவர்களுக்கு அவ்வளவு ஆள்பஞ்சமா என்று கேட்காதே தம்பி! அவர்களுக்கு அவ்வளவு சமரச ஞானம் என்று எண்ணிக்கொள்! இப்போதெல்லாம், அரியும் அரனும் ஒண்ணு! சென்ற இடத்தில் ஆச்சாரியாருக்கு உள்ள குழப்பம், அவர் பேச்சிலே, எப்படி பளிச்செனத் தெரிகிறது பார், வேடிக்கையாக இருக்கும்.

திருநீறு, திருநாமம், இவைகளை அணிந்து கொள்ள வேண்டும். அது பக்திக்கு அடையாளம், பரிகாசத்துக்கு உரியதல்ல, என்று வலியுறுத்துகிறார் ஆச்சாரியார். கேள் அவர் பேச்சை,

"சைவம் வைஷ்ணவம் என இரண்டு விதமான சமயம் நாட்டில் பரவி வருகிறது, முக்கியமாக முகத்தில் போடும் நாமக் குறியிலிருந்து தெரிகிறது. இதில் மறைவு கிடையாது. எல்லாருக்கும் தெரியும்படியாகப் போட்டுக்கொள்ளும்படி ஆச்சாரியார்கள் சொல்லியிருக்கிறார்கள்.''

இவ்விதம் பேசி, திருநாமம் அணிந்தாக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். சைவர்களிடமா என்று ஆச்சரியப்படாதே. அவர்கள் திருநீறு பூசட்டும், வைணவர் திருநாமம் தரிக்கட்டும் என்பது பொருள், என்று பெருந்தன்மை யுடன் ஒப்புக்கொள்வோம்.

திருநாமத்தின் அவசியத்தை இவ்வளவு வலியுறுத்தி ஆச்சாரியர்கள் ஆக்ஞையிட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டிப் பேசினாரேதவிர, அவருக்குக் குழப்பம் வராமலில்லை. அவர் நெற்றியில் நாமம் இல்லை! மற்றவர்களுக்கு நாமம் போடச் சொல்லி வலியுறுத்துகிறார். அதன் மகிமையை எடுத்துக் கூறுகிறார். அவர் நெற்றியிலே நாமம் இல்லை. என்ன எண்ணிக் கொள்வார்களோ, என்று குழம்புமல்லவா! எனவே சொல்கிறார், அதேபோது,

"எனக்கு நாமக்குறியில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். வேஷத்தில் பக்தி இல்லை'' என்று கூறுகிறார்!

எப்படி இருக்கிறது வாதம்? எவ்வளவு குழப்பம், எவ்வளவு பெரியவருக்கு?'

திருநாமம் தரித்தல் அவசியம் - ஆச்சார்யாள் சொல்லியிருக்கிறார்கள்! இதைச் சொல்வதும் ஆச்சாரியார்தான - நாமக்குறி இல்லாவிட்டால் என்ன, வேஷத்தில் பக்தி இல்லை என்று சொல்பவரும், அவரேதான்!

வேஷம் பக்தியல்ல என்பதை நம்பினால், நாமம் போட்டாக வேண்டும், அதுவும் எல்லோருக்கும் தெரியும்படி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கத் தேவையில்லை.!

நாமம் தரித்தாக வேண்டும், ஆச்சார்யாளின் கட்டளை அது, அதனை மீறக் கூடாது என்பதிலே உறுதியும் நம்பிக்கையும் இருந்தால், நாமம் தரித்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும்.

எதிலும் உறுதிப்பாடும் உத்வேகமும் இல்லை, எனவே உள்ளத்தில் ஒரே சேறு!!

இந்நிலை இவருக்கு என்றால், சில்லரைகள் சிரமப் படுவதிலே ஆச்சரியமென்ன.

தம்பி! இவைபற்றி நான் எழுதுவதற்குக் காரணம், இவர்களைக் கேலி பேசிக் களிப்பூட்ட வேண்டும் என்பதல்ல. நாம் பெற்றுள்ள கருத்துகள், மேற்கொண்டுள்ள பணி, எவ்வளவு மாண்புள்ளது என்பதை விளக்கத்தான்! திறமை முழுவதையும், ஆற்றல் அவ்வளவையும், தந்திரம் அத்தனையையும் உபயோகித்தாலும், வெற்றி காண முடியாத நிலையில் ஆச்சாரியார் போன்றோர் தள்ளப்பட்டுள்ளனர் - காரணம், அவர்கள் செத்த பாம்பின் முன்பு மகுடி ஊதிப்பார்க்கிறார்கள்!! இவர்களைவிட "எனக்கொன்றும் தெரியாது. இட்லி மாவு அரைக்க வேண்டும்'' என்று கூறிவிட்டுச் சென்ற அம்மையார் எவ்வளவோ மேல், என்பேன். செத்த பாம்பைப் படமெடுத்தாடச் சொல்லி மகுடி ஊதும் இந்த மகானுபாவர்களைவிட இந்த மாது சிரோமணி எவ்வளவோ மேல்தான், சந்தேகமின்றி!

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Anna_sign
26-6-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:07 am

பேசட்டும், தம்பி, பேசட்டும்

ராஜா சிதம்பரத்தின் காங்கிரஸ் நுழைவு -
அமைச்சர் சுப்பிரமணியம் -
தொழில் துறையில் சென்னையின் பின் தங்கிய நிலை.

தம்பி!

அமைச்சர் சுப்பிரமணியம் ரொம்ப ரொம்ப ரோஷக்காரர்!

நிறுத்து அண்ணா! யார் ஒப்புக்கொள்வார் இதை? துளியாவது அவருக்கு ரோஷம் இருப்பதாகக் காணோமே? என்று கூற எண்ணுகிறாய்.

தம்பி, சென்ற கிழமை அவர் லால்குடியிலும் திருச்சியிலும் பேசியதைப் பத்திரிகையில் பார்த்திருப்பாயே, அதற்குப் பிறகுமா, அவர் ரோஷக்காரர் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறாய் என்கிறேன் நான்.

போ! போ! அண்ணா! ஏதோ இரண்டோர் கூட்டத்திலே தலைகால் தெரியாமல் அந்த ஆசாமி துள்ளிக் குதித்து, கண்மண் தெரியாமல் பேசிவிட்டதாலேயே, அவரைரோஷக் காரர் என்று கூறிவிட முடியுமா? எத்தனையோ வில்வங்கள், துளசிகள் விதவையானதுகள், இதைவிடக் கடுமையாகத் தாக்கிப் பேசி, தமது எரிச்சலைக் குறைத்துக்கொள்ள முயன்றன. இதை ஒரு காரணமாகக் கொண்டு, அமைச்சர் சுப்பிரமணியத்தை ரோஷக்காரர் என்று கூறினால், நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஒருவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ரோஷக்காரர்தான் என்பதை நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்பொன்று அவருக்குக் கிடைத்தது - ஆனால், அவரோ தமது ரோஷத்தைச் சுருட்டி வைத்துக்கொண்டு, அகப்பட்டதை விடுவேனா என்று கூறினாரே தவிர, ரோஷக்காரராக நடந்து கொள்ளவில்லை, என்று கூறுவாய்.

தம்பி! கிடக்கட்டும்; நமக்குள் ஏன் தகராறு? அவர் கோபக்காரர், அதை ஒத்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறேன் - மறுக்க முடியாதல்லவா உன்னால்!! அதிலும் சென்ற கிழமை "கோபாதிபதி' அவருக்கு உச்சஸ்தானத்தில் இருந்திருக்கிறான்! எப்படி இல்லாமலிருக்க முடியும்? குடந்தையில் வரவேற்பு, திருச்சியில் விழா, சென்னையில் கொண்டாட்டம், கோவையில் குதூகலம், மதுரையில் மகத்தான வரவேற்பு என்றெல்லாம் பத்திரிகையில் செய்திகள் வருகின்றன - எல்லாம் தீனா மூனா கானக்களுக்கு! இதோ அவர் இருக்கிறார், அமைச்சர் வழக்கறிஞர், ஆச்சாரியாரின் அத்யந்த நண்பர்; அவரை அல்லவா நாடு இப்படிக் கொண்டாடவேண்டும். நாவலர் நெடுஞ்செழியனுக்கா இப்படிப்பட்ட நல்வரவேற்புகள் என்று எண்ணும்போதே உள்ளம் எரிமலையாகிறது - கக்கிவிட்டார்!!

சப்தரிஷீஸ்வரர் கோயில் அதிகாரிகள் பூர்ண கும்பம் எடுத்து வரவேற்க, எடயாத்து மங்களந்தைச் சேர்ந்த ஸ்ரீ ஹாலாஸ்யநாத குருக்கள், லால்ழுடி தாலூகா அர்ச்சகர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு உபசாரப் பத்திரம் வாசித்தளிக்க, வருக, அமருக! மாலை அணிந்து கொள்க! என்று வட்டாரப் பெரியவர், ராஜா சிதம்பரம் அன்பு ஒழுக ஒழுக உபசரிக்கப் பவனிவந்த, சென்னை ராஜ்ய நிதி அமைச்சர் கனம் சுப்ரமணியம் அவர்கள், பிரம்மானந்தமடைந்து, "ஓஹோ ஹோ! நமக்கும் இவ்வளவு அமோகமான ஆதரவு இருக்கிறதா, இனி என்ன தயக்கம், இதுகளை இதே நேரத்தில் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான்' என்று தீர்மானித்து, நமது கழகங்களின்மீது பாய்ந்திருக்கிறார் சென்ற கிழமை!! ஆஹா ஹாரம் செய்து தமது மலைபோன்ற உடல் குலுங்கக் குலுங்க ராஜா சிதம்பரம் நகைத்திருப்பார்; அவ்வளவு காரசாரமாகப் பேசினாராம் அமைச்சர், ராஜா சிதம்பரம் அவர்களின் வீரதீரத்தைப் பாராட்டினாராம்!!

ராஜா சிதம்பரம் முன்பு காங்கிரசை எதிர்த்துவந்தார்; இப்போது காங்கிரசில் சேர்ந்துவிட்டார்; இது கோழைத்தன மல்ல; இதுதான் வீரம்! மந்திரியின் மணிவாசகம் இது. இதன் பொருள் பற்றிய விளக்கத்தைப் பிறகு கவனிப்போம், தம்பி! முதலில், இவர் இது போலப் பேசவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதுபற்றி எண்ணிப் பார்த்தால், ருசிகரமான பல விஷயங்கள் தெரியும்.

யாராரோ ஏதேதோ பேசி இருக்கிறார்கள், ராஜா சிதம்பரத்தின் போக்குப்பற்றி! அமைச்சரிடமே சிலர் கூறியிருக்கக் கூடும் - பலர் அவர் காதில் படும்படி பேசி இருக்கவேண்டும். அல்லது, தன் போக்கைக் கேவலமானது, நாணய மற்றது நயவஞ்சகமானது என்ற பலரும் கூறி ஏசுகிறார்கள் என்று ராஜா சிதம்பரம் அவர்களே, அமைச்சரிடம் கூறி அழுதிருக்க வேண்டும்.

"பாரப்பா பார்! இந்தப் பெரிய மனிதர்களுடைய யோக்கியதை எப்படியிருக்கிறது பார்? ராஜா சிதம்பரம், காங்கிரஸ் மந்திரியை வரவேற்கிற காட்சியைப் பார்! காங்கிரசை முழு மூச்சாக எதிர்த்த கனவானப்பா இவர்! இப்போது பார், காவடி தூக்கி ஆடுகிறார்.''

"காங்கிரஸ் கவிழ்ந்துவிடப் போகிறது. எதிர்க் கட்சிகளுக்குத்தான் சான்சு. அதிலே இருந்தால்தான் நமக்கு ஒரு மந்திரி வேலை கிடைக்கும் என்கிற ஆசை மனுஷனைப் படாதபாடு படுத்திற்று - பிறகோ, காங்கிரஸ், பீடத்திலே உட்கார்ந்து கொண்டது. ஆசாமிக்குச் சப்பிட்டுவிட்டது - இனிக்காங்கிரசிலே சேர்ந்தாத்தான் ஏதாச்சும் துண்டு துணுக்காவது கிடைக்க முடியும் என்கிற எண்ணம் ஏற்பட்டது- இப்போது, எங்கள் மந்திரி! எங்கள் மந்திரி! என்ற மங்களம் பாடுகிறார்! பதவிப்பித்தம் இருக்கே, அடே அப்பா! ஆட்டிப்படைக்குது!''

"பெரிய வீராதிவீரர்போலே பேசி வந்தார், காங்கிரஸ் பதவிக்கு வராது என்கிற தைரியத்திலே! இப்போது ஒரே பயம் பிய்த்துத் தின்னுது. எதிர்க்கட்சியிலே இருந்தா ஒரு காசுக்கும் பிரயோஜனமில்லே என்கிற பயம் வந்து விட்டது. எனவே சரணாகதிப் படலம் ஆரம்பமாகிவிட்டது''

இப்படிப் பலர் பலவிதமாகப் பேசாமலிருந்திருக்க முடியுமா!

இவ்வளவு சாவதானமாகவும் அமைதியாகவும் பேச முடியாதவர்கள், சுருக்கமாகப்பேச, சுடு சொற்களைப் பயன்படுத்தி இருக்கக் கூடும்.

கோழைத்தனம் - பதவிப்பித்தம் - சுயநலவெறி

என்பனபோன்ற பட்டங்களைச் சூட்டியிருக்கக்கூடும். இது பற்றி ஏதோ ஓர் அளவுக்குத் தெரிந்ததால்தான், அமைச்சர் சுப்பிரமணியம், ராஜா சிதம்பரத்தின் போக்கை ஆராய்ந்திட வேண்டிய அவசியம் வந்தது. அந்த அறிஞர் பெருமானின் அபார ஆராய்ச்சியின் முடிவு யாதெனின், ராஜா சிதம்பரம் காங்கிரசிலே வந்து சேர்ந்தது கோழைத்தனமாகாது, அதுதான் வீரம் என்பதாகும்.

காட்டிக்கொடுத்தவர் - கட்சி மாறியவர் - என்றெல்லாம் கண்டிக்கிறார்கள் ஊரார், இதோ ஒரு "கனம்' வருகிறார். வாழ்க வீராதி வீரனே! என்று வாழ்த்துகிறார், விருதளிக்கிறார்.

பொதுமக்கள், ராஜா சிதம்பரத்தின் போக்கை, எப்படி வரவேற்றனர், எத்தகைய தீர்ப்பளித்தனர், என்பது மாவட்ட ஆட்சிமன்றத் தேர்தலில் தெரிந்தது. மிகமிகச் சாமான்யர் தர்மு, நமது கழக மாவட்டச் செயலாளர், அவர் தூக்கி அடித்தார் இந்த கிங்காங்கை இப்போது குப்புற விழுந்தவருக்குத் தங்கத் தோடா தருகிறார், அமைச்சர்! ராஜா சிதம்பரத்தைப் பாராட்டி, வீரராக்கி, உபசரித்ததுடன் இருந்திருந்தால் நமக்கு வேலையே எழாது. அமைச்சர் அத்துடன் விடாமல், பெரியாரென்றும் அறிஞர் என்றும் சொல்லிக் கொண்டால் போதுமா? அவர்களுக்கு இத்தகையவீரம் வர வேண்டாமா!! என்று கேட்டிருக்கிறார்! அருமை, அருமை!! அமைச்சர் பெருமானே! உமது அறிவின் முதிர்ச்சி இருக்கிறதே, அருமையினும் அருமை!! ராஜா சிதம்பரத்தைப் பிடித்துக்கொண்ட வீரம் எமக்கும் பிடிக்கவேண்டும் என்கிறீர்; எவ்வளவு அழகாக, வட்ட வடிவமாக, வெண்ணிலவு போல உடலெங்கும் காட்சி அளிக்கிறது, என்று குஷ்ட நோயாளியைப் பாராட்டிவிட்டு, அதுபோல உமக்கும் வரலாகாதா என்று வேறு கூறுவதுபோல இருக்கிறது, உமது பேச்சு - என்றெல்லாம் கூறத் தோன்றவில்லை., தம்பி! எனக்கு நான் முறுக்குத் தளராத வாலிபனாக இருந்தபோது கேள்விப்பட நேரிட்ட ஒரு கதை - நிஜச்சம்பவம் நினைவிற்கு வந்தது.

மணி பத்தாகும் - பாவை பாகு கனிமொழி தருவாள், பாலில் சீனியும் சேர்த்துத் தருவாள் - பருகுவான், என் நண்பன். எனினும் அவன் நினைவு பத்மாவின் பஞ்சணை மீதிருக்கும் - பத்மா அவன் மாதவி, அவன் கண்ணகியின் பெயர் குணவதி, அவனுக்குப் பெயரோ அன்பரசன்! கொட்டாவி விடுவான். கோகிலம், அவன் குறிப்பறிந்து வெற்றிலை மடித்தளிப்பாள்! குதப்பிவிட்டு, கடைவீதி சென்று நொடியில் வருகிறேன் - ஒரு கப் சாயா சாப்பிட்டுவிட்டு என்பான்! குணவதி, இதற்கு ஏன் வெளியே போக வேண்டும், இதோ நொடியில் நான் தயார் செய்கிறேன், என்பாள். செச்சே! காலை ஆறு முதல் இரவு பத்து வரை தான் வேலை செய்து அலுத்துக் கிடக்கிறாயே, இனியும் உனக்கேன் சிரமம், இதோ ஒரு அரைமணி நேரம் வந்து விடுகிறேன், என்று கூறுவான். பத்மா அழைக்கிறாள் அவன் என்ன செய்வான்! சீக்கிரம் என்பாள், குணவதி கொஞ்சு மொழியில்! "இதோ' என்பான், அவனும் கொஞ்சவதுபோல; எதற்கும் கதவைத் தாளிட்டுவை, என்று கூறிவிட்டு, கோடிவீதிக்கு, ஓட்டம் பெருநடையாகச் செல்லுவான். சாயாக் கடை திறந்திருக்கும், அங்கு அவன் செல்லான், நில்லான், நேரே அங்கு!!

கதவு தாளிட்டிருக்கும், இடுக்கின் வழியாகப் பார்த்தால் விளக்கொளி மினுக்கிடும்.

மெள்ளத் தட்டுவான், "பத்மா! பத்மா!''



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:07 am

பத்மா படுக்கையில் - தூக்கமல்ல, கோபம்!

கதவு தட்டுவான் அவள் கண் மூடுவாள்! இதழில் புன்னகை இருந்திடும்!!

பத்மா! பத்மா! - மெல்லிய குரலில்தான் கூப்பிட முடியும். அண்டை அயலார் காதில் விழக்கூடாது.

பத்மா, அவன் படும்பாடு அறிவாள். எனினும், தான் படும் பாடு அறியாமல் நடந்துகொள்வதற்குத் தண்டனை தருவதாக எண்ணிக்கொண்டு, நீண்ட நேரம் கதவு திறக்கவே கூடாது என்று துணிவாள்.

பத்மா! பத்மா! ஏ! பத்மா!

அவள் மனம் இளகிவிடும். இன்ப இரவு இப்படி சங்கடத் தோடு தொடங்கலாமா! அப்போதுதான் விழித்துக் கொண்டவள் போல. யாரது? என்பாள், "நான் தான். . . . பத்மா நான் தான்' என்கிறான். சாயா சாப்பிடக் கிளம்பியவன். "நான் தான் என்றால்'' என்று கேட்டபடி, பூங்கொடி அசைந்தாடி வருகிறது, கதவு திறக்கிறது, கைவளை ஒலிக்கிறது, கன்னம் படாதபாடு படுகிறது.

"போதும் உங்களோட கொஞ்சுதலும், சரசமும்!''

"என்ன பத்மா! ஏன் ஒரு மாதிரியா இருக்கறே?''

"மணி என்ன இப்ப?''

"பத்து இருக்கும்''

"குணா கடியாரத்திலே பத்து - பத்மாவீட்டுக் கெடியாரம் இப்ப பன்னிரண்டு அடித்தது''

"இருக்காதே!''

"சரி, ஒரு அரையோ காலோ குறைவாக இருக்கட்டும் - ஆனா, ஏனுங்க இப்படி என் மனசைச் சங்கடப்படுத்தறிங்க. எவ்வளவு நேரம் விழிச்சிக்கிட்டு இருக்கிறது - பத்து மணிக்காச்சும் வரப்படாதா.''

"எப்படி, பத்மா, அவ்வளவு பொழுதோடு வரமுடியும். யாராவது பார்த்து விட்டால். . . .''

"பார்த்துவிட்டால்தான் என்னவாம்! அட அடா! இந்தப் பாழாய்ப்போன பயம் ஏன் உங்களுக்கு இவ்வளவு இருக்கிறதோ?. . .''

"கண்டவர் கண்டபடி பேசுவார்களே என்கிற பயம் தான். . .''

"பயம்! பயம்! பயம்! செச்சே, இவ்வளவு கோழையாக இருக்கக் கூடாது - ஆண்பிள்ளைதானே நீங்கள் . . . பக்கத்து வீட்டு மக்கு இருக்கே, சொக்கு, உங்க சினேகிதர் சிதம்பரத்தோட ஜோடி . . . அவர் எத்தனை மணிக்கு வந்தார் தெரியுமா, எட்டுக்கூட அடிக்கல்லே அவர் வருகிறபோது. . . உங்களைப் போல பயந்து பாதிராத்திரிக்குத் திருடன் போலவா அவர் வருகிறார். அவருக்கு இருக்கிற தைரியம் ஏன் உங்களுக்கு வரக்கூடாது. பயந்து பயந்து சாகிறீர்களே. . . செச்சே இவ்வளவு கோழைத்தனம் கூடாது. . .''

இப்போது கனம் சுப்பிரமணியனார் பத்மா பாணியில் பேசுகிறார்; கதை நினைவிற்கு வந்ததும் எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. ராஜா சிதம்பரம் எவ்வளவு தைரியமாகக் கட்சி மாறினார்.மக்கள் எக்கேடோ கெடட்டும், எப்படி வேண்டு மானாலும் பேசட்டும். காரியம் பெரிதே தவிர, கண்ணியம், நாணயம் இவைகளெல்லாம் அல்ல, என்று துணிந்து கதராடைக் கூடாரத்துக்குள் நுழைந்திருக்கிறார். இதைப் பார்க்கிறீர்களே, ஏன் உங்களுக்கு அந்தத் தைரியம், வீரம் வரவில்லை என்கிறார். வழிதவறி நடந்திடும் வாலிபனுக்கு விருந்தளித்து வசியப்படுத்த முனையும் வழுக்கி விழுந்த வனிதையின் பேச்சுப்போல, நாட்டில் மாபெரு:ம போராட்டம் நடாத்தி விடுதலை பெற்றுத் தந்ததென விருது படைத்த காங்கிரசில் கலந்து, கனமானவர் பேசுவது, ஆசை வெட்கமறியாதாமே!!

அமைச்சர் பெருமானின் அகராதிக்கு, நாம் மதிப்பளிக்க மறுக்கிறோம்; அவருடைய அழைப்பு, ராஜா சிதம்பரம் போன்றோரோடு நிற்கட்டும். தமக்கென்று ஒரு கொள்கையும் அதிலே வெற்றிகாணப் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியும் திறமையும் பெற்றோர்களிடம் இத்தகைய அழைப்பும் அங்கலாய்ப்பும், நிந்தனையும் நையாண்டியும் வீசிப்பயனில்லை.

இதை ஓரளவுக்கு உணர்ந்து, அமைச்சர், கடைக் கண் காட்டுவதை நிறுத்திக் கொண்டு, கனலை உமிழ்ந்து பார்த்தி ருக்கிறார்; கனிமொழி கேட்டுச் சொக்கிடாத நிலை மட்டுமல்ல, கனலைக் கண்டு கலங்கிடாத உள்ளமும் நாம் பெற்றிருக்கிறோம் என்பதை, அவர் அறியார் போலும்! அவருடைய குருநாதரிடம் அக்கினி யாஸ்திரங்களைக் கண்டு கெக்கலி செய்தவர்களிடம், இவர் தீக்குச்சி யாஸ்திரங்களை வீசிப் பார்ப்பது விந்தைதான்!

அமைச்சர், நாம் ஐந்தாண்டுத் திட்டத்திலே காட்டப்பட்ட ஓர வஞ்சனை பற்றிக் கூறிவருவது கண்டு, பீதி அடைந்திருக்கிறார்.

இவர் மட்டுமல்ல, காங்கிரஸ் வட்டாரத்தை, ஐந்தாண்டுத் திட்ட கண்டன நாள் கூட்டங்கள், ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது.

மந்திரிகளாம், மந்திரிகள்! சுளை சுளையாகப் பணம் மட்டும் வாங்குகிறார்கள் சம்பளமாக! துளியாவது சூடுசொரணை காணோம். சூறாவளிபோலப் பிரசாரம் நடைபெறுகிறது, வடநாடு, தென்னாடு என்று! தடுத்திடும் ஆற்றல் காணோம் - நம்மைக் காணும்போது மட்டும், தாசானுதாசன் என்று தோத்தரிக்கிறார்கள்! ஏன் அந்தப் பிரிவினைக் கிளர்ச்சிக் காரருக்கு எதிர்ப்பிரசாரம் செய்யக்கூடாது? இதைவிட வேறு என்ன வேலை இவர்களுக்கு? இதையும் செய்ய முடியவில்லை யானால் இவர்களுக்கென்ன பட்டம், பதவி! என்று மேலிடம் இடிக்கும்போலத் தெரிகிறது - அந்த இடி தாங்காமல், இப்போது கனம்கள் "வடநாடு, தென்னாடு' பேதம் பேதமை, அதைப் போக்குவதே எமது கடமை என்று பேச ஆரம்பித்துள்ளனர்.

"புது டில்லியில் இருந்துகொண்டு மத்திய சர்க்கார் ஆட்சி செய்து வருகிறது. ஆகையால் தென்னாடு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. என்று தென்னாட்டில் பலத்த சந்தேகத்தைப் பலர் கிளப்பி வருகின்றனர் இதில் என்ன விசேஷமென்றால், சமீபகாலத்தில் நன்கு படித்தவர்கள் கூட இந்தப் பிரசாரத்தினால் ஓரளவு பாதிக்கப்பட்டிருப்ப தாகத் தெரிகிறது.''

அழகேசனார் திருவாய் மலர்ந்தருளுகிறார் இதுபோல குடந்தையில் இந்தத் திங்களில் - தமது திக்விஜயத்தின்போது - மன்னிக்க வேண்டுகிறேன் - தீர்த்த யாத்திரையின்போது!!

பலத்த சந்தேகம் பரவி இருக்கிறது.

நன்கு படித்தவர்கள்கூட இந்தப் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தெரிகிறதா நிலைமை!!

இந்தப் பிரசாரம் பரவாது "பிசுபிசுத்து' விடும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம், இப்போது பார்த்தாலோ, இது பரவிக்கிடக்கிறது. நன்றாகப் படித்தவர்கள்கூட இதை ஒப்புக் கொண்டு பேசுகிறார்கள் - என்பது அழகேசனாரின் கருத்துரை. அம்மி நகருகிறது என்று பொருள்!! பாடுபட்டு வருகிறோம் பலன் தெரியத் தொடங்கிவிட்டது! அமைச்சர்கள் "ஜல்லடம்' கட்டுகிறார்கள் - அவர்களை அந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது, நமது பிரச்சாரம்!!

என்னதான் சமாதானம் சொல்லுங்கள், வடநாடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்திய அரசியல் சட்டதிட்டமே வடநாட்டு ஆதிக்கத்துக்கு வழி வகுப்பதாகத் தானே அமைந்திருக்கிறது

ஐந்தாண்டு திட்டத்தின் புள்ளிவிவரம் கூறும் கதையைப் பார்த்தால், நன்றாகத் தெரிகிறதே தென்னாடு புறக்கணிக்கப்படுவது.

இவ்விதமெல்லாம் படித்தவர்கள், அழகேசனார் காதுபடச் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு மறுப்புரை, தெளிவுரை கூற முடியாமல் திண்டாடி இருக்கிறார் என்றும் தெரிகிறது - எனவேதான் திடுக்கிட்டுப்போன நிலையில் பேசுகிறார் திருவாளர் அழகேசனார், நன்றாப் படித்தவர்களும். . . .! இப்படி எண்ணுகிறார்களே, என்று கூறி, ஆயாசப்படுகிறார். அடுத்த கட்டம் அச்சம்!! வேறென்னவாக இருக்க முடியும்!!

அமைச்சர் சுப்பிரமணியம் திகைப்புக்கு இடமளிக்கவில்லை; தீ மிதிக்கிறார்! தென்னாடு ஐந்தாண்டுத் திட்டத்திலே புறக்கணிக்கப்பட்டது, ஓரவஞ்சனையாக நடத்தப்பட்டது என்ற புகாரை, நான் அதிகார பூர்வமாக மறுக்கிறேன், என்கிறார்!!

அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது, அதனால் மறுக்கிறார் என்பதுதான் இதற்குப் பொருள்!



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:07 am

அமைச்சர் அதிகாரம் இவருக்கு அளிக்கப்பட்டிருப்பதே இப்படி மறுப்புரைகள் பேசத்தான் என்பதும் நமக்குப் புரிகிறது.

ஆனால், மக்கள் அறிய விரும்புவது, இவருக்கு உள்ள அதிகாரம் எத்தகையது என்பது அல்ல; அவர்கள் இன்று நினைவுப் பரணையிலே, பல மாஜி அமைச்சர்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள் - வர்க்கியும் மாதவமேனனும், குருபாதமும் ஜோதியும், அவினாசியாரும் வேங்கடசாமியாரும், ராஜா ராமரும் பிறரும், அதிகாரம் பெற்றிருந்தவர்கள் - இன்று, . . . பார்மோசாக்களிலே வாசம்! கனம் சுப்பிரமணியம் அவர்கள் மட்டும் என்ன! கனமாவதற்கு முன்பு அவரை நாடு அறியாது; கனம் குறைந்ததும் நாடு நாடாது! எனவே, அவர் நமது குற்றச்சாட்டுகளை "அதிகாரபூர்வமாக' மறுக்க முனைய வேண்டாம். நமக்கு நல்லறிவு கொளுத்தவாவது புள்ளி விவரம் காட்டி மறுக்க முன்வரட்டும்! வக்கு ஏது அதற்கு? திருச்சிக் கூட்டத்துச் சுப்பிரமணியனாரை, பெரியநாயக்கன்பாளையத்தில் பேசிய சுப்பிரமணியனார், இழித்தும் பழித்தும், என்னே இச்சிறுமதி! ஏனோ இந்தக் கெடுமதி! இங்கொன்று அங்கொன்றா? உள்ளொன்று புறமொன்றா?- என்று இடித்து இடித்துக் கேட்பாரே!

ஒரு அநீதியும் இழைக்கப்படவில்லை என்று திருச்சியில் பேசிய திருவாய், ஏன் பெரியநாயக்கன்பாளையத்திலே, வேறு விதமாக மென்றது என்று அறிய நாட்டார் விரும்புகிறார்கள். அங்கு அவர்,

வடநாடு சென்றறியாதவர்கள்தான், இப்படிப் பேசுகிறார்கள் என்ற பேசி, நம்மை நிந்திப்பதாக எண்ணிக் கொண்ட இவரை ஒத்த நிலையிலுள்ள பலரைப் பழித்துப் பேசுகிறார்.

வடநாடு செல்கிறர், இவர்; அறிவோம்: காவடி தூக்கிடும் கனம் செல்லவேண்டும் அடிக்கடி, அறிந்திருக்கிறோம். வடநாடு நாம் சென்றறியோம் என்று பேசி, தமது ஞான சூன்யத்தைக் காட்டிக் கொள்ளட்டும், குறுக்கிடவில்லை: ஆனால் நாம் போனதில்லை என்றே வைத்துக்கொள்வோம், அம்புஜம் அம்மையாரென்ன, அனுமந்தையா என்ன, கேசவமேனன், அன்னா மஸ்கரினீஸ், சுதேசமித்திரன் ஆசிரியர் சீனுவாசனென்ன, இவர்களெல்லாம் கண்டித்திருக்கிறார்களே வடநாட்டு ஆதிக்கத்தை - அமைச்சர் அப்போதெல்லாம், ஏன் வாயடைத்துக் கிடந்தார்!!

"தொழில் முறையில் சென்னை மாகாணம் பின்தங்கிய நிலையிலிருக்கிறது. முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் எந்த அளவுக்கு இந்திய அரசாங்கத்தின் கவனத்தைத் தென்பகுதி பெறவேண்டுமோ அந்த அளவுக்குப் பெறவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை'' என்று தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது தமிழ் நாடு 24-6-55-இல்!!

அமைச்சர் என்ன பதிலளிக்கிறார் இதற்கு!! அடுக் கடுக்காக ஆதாரங்களைக் கொட்டிக் குவித்துக் காட்டி வருகிறோம். எதை மறுத்தார் - எதை மறுத்திட முடியும்? நாள் தவறாமல் வந்த வண்ணமிருக்கிறதே, நன்றாகப் படித்தவர் களையும் கவரும் வகையில்! எப்படி இதனைத் தடுத்திடப் போகிறார் வாய்ப்பறை கொண்டு ஊர்ப்பகை தேடிக்கொள்ளும் இந்த உத்தமர்!

காரமான ஒரு சிறு துண்டு தருகிறேன் - இப்போதுதான் பறித்தெடுத்தது அமைச்சர் பதவியைச் சுவைத்திடும் வாயால் இதையும் சிறிதளவு சுவைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.

இங்கு, மிளகாய் உற்பத்தி அதிகமாகிச் சரக்குத் தேங்கிக் கிடக்கிறது.

இதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடும் அனுமதி டில்லிதான் தரவேண்டும்! ஆதிக்கம் அவ்விதம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மிளகாய்க்கு மட்டுமல்ல, எதற்கும் இதேதான் நிலைமை கிடக்கிறது, வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவு டில்லி நிர்ணயித்திருப்பது போதுமானதாக இல்லாததால்.

எனவே, டில்லி பாதுஷாக்களே! அருள் கூர்ந்து, மிளகாய் ஏற்றுமதியின் அளவைச் சற்றே அதிகப்படுத்தித் தருவீராக - என்று சென்னை வர்த்தக சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்ற செய்தி, அமைச்சர் தீப்பொறி பறக்கத் திருச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போது வெளிவருகிறது ஜூன் 21ஆம் தேதிய பத்திரிகைகளைப் பார்க்கலாம் - தேசய இதழ்களையே!!

தென்னாட்டின்மீது வடநாடு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இது சான்று அல்லவா!

வடநாட்டு ஆதிக்கம் இருப்பது மட்டுமல்ல, இந்தச் செய்தி மூலம் தெரிவது.

வர்த்தக சபை கூறுகிறது. இங்கிருந்து மிளகாய் வெளிராஜ்யங்களுக்கு (வடக்கே உள்ள ராஜ்யங்கள் சென்று அங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.)

தம்பி, தெரிகிறதா இதிலே காணப்படும் அக்ரமம்!

வெளிநாட்டுக்கு, மிளகாய் நாம் நேராக அனுப்ப முடியாது; டில்லி அனுமதிக்க வேண்டும்.

டில்லியோ, மிகக் குறைந்த அளவுதான் ஏற்றுமதிசெய்ய அனுமதி அளிக்கிறது.

இங்கே சரக்குத் தேங்கிவிடுகிறது.

தேங்கிக் கிடக்கும் சரக்கை, வடநாட்டு ராஜ்யங்கள் இங்கிருந்து தருவித்துக் கொள்கின்றன.

அங்ஙனம் தருவித்திடும் சரக்கை, அந்த ராஜ்யங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இலாபத்தை அனுபவிக்கின்றன.

"அனுகூலம் இங்குள்ள உற்பத்தியாளருக்கோ வியாபாரிக் கோ கிடைப்பதில்லை.'' என்று வர்த்தக சபை தெரிவிக்கிறது, நாசுக்காக. பச்சையாகக் கூறுவதானால், இங்குள்ள விவசாயி வயிற்றிலும், வியாபாரியின் வாயிலும் அடித்து, வடநாடு மிளகாய் ஏற்றுமதி மூலம் இலாபம் பெறுகிறது, என்பதுதான்!

இதற்கு என்ன பெயரிடுவது - பாரத்வர்ஷத்தின் விரிந்த பரந்த மனப்பான்மை என்றா? - நேரு சர்க்காரின் நேர்மை என்றா? - அல்லது அமைச்சர் பதவியை சுப்பிரமணியனார்கள் ஆண்டு அனுபவிப்பதற்காக, நாட்டு மக்கள் தரும் "முறிப்பணம்' என்பதா - என்ன பெயரிடச் சொல்கிறார் அமைச்சர் - எப்படி இந்த அக்ரமத்தைச் சகித்துக்கொள்ள முடியுமென்கிறார். வடநாடு தென்னாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தாமலிருந்தால், இந்த அநீதிக்கு இடம் ஏது?

மிளகாய் பற்றிய சம்பவம் காரம் அதிகம் கொடுத்திடும்; "கனம்' தாங்கமாட்டார். எனவே, தம்பி, அவருக்குச் சிறிது ருசியும் பசையும் உள்ள பண்டம் குறித்த சம்பவத்தைத் தருவோம்.

பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து, இங்கு, பருப்பு நவதானியம் தருவிக்கப்பட்டு வருகிறது. தம்பி! இதற்கு இரயில்வே வாகன்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஏன்? வாகன்களின் அளவு குறித்து அனுமதி அளித்திடும் அதிகாரம் அங்கே இருக்கிறது - டில்லியில்! இதனால் போதுமான அளவு வாகன்கள் கிடைக்காமல், திகைப்பும் பொருள் இழப்பும் ஏற்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு வாங்கி வைக்கப் பட்டுள்ள சரக்கு, வாகன்கள் கிடைக்காததால், பஞ்சாபிலும் ராஜஸ்தானிலும் கிடைக்கின்றன - வெயிலும் மழையும், எலியும் பிறவும் பண்டத்தைப் பாழாக்குகின்றன - இங்கு மார்க்கட்டில் விலை சூடு பிடிக்கிறது, அங்கே வாங்கிய சரக்கு, முடமாகிக் கிடக்கிறது, ஏன் தம்பி! இந்த நிலை வரவேண்டும்? வடநாடு பார்த்து வைப்பதுதான் சட்டம், திட்டம் என்று இருப்பதால் தானே, வாகன் கிடைக்குமா என்று இங்குள்ளவர்கள் தவம் கிடக்கவேண்டி வருகிறது, வரம் தாருமய்யே என்று தென்னிந்திய வர்த்தக சங்கம் அறிக்கை மூலம் இறைஞ்சுகிறது டில்லியை! ஜுன் 21-ஆம் நாள் இதழில் இதையும் காணலாம்.



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:08 am

அக்ரமம், இன்னும் வெளிப்படையாகவே தெரிகிறது தம்பி, அந்த அறிக்கையில்.

பம்பாய் - கல்கத்தாவுக்கு மட்டும் வாகன்கள் தேவையான அளவு ஒதுக்கப்பட்டு சென்னை புறக் கணிக்கப்படுகிறது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

பதவியைச் சுவைத்திடும் மகிழ்ச்சியில், "கனம்' இங்கு நம்மீது காய்கிறார். பாய்கிறார்!

தம்பி! "கனம்' சைவரோ, சுவையும் சத்தும் தேவை என்பதற்காக "அன்னிய பதார்த்தம்' சாப்பிடுகிறவரோ, எனக்குத் தெரியாது - சைவராக இருந்தால் சிறிது நெடியாக இருக்கும்; இல்லையானால் நாவில் நீர் ஊறும், இப்போது தரப்போகும் சம்பவத்தைக் கவனித்தால்.

ராட்டு என்கிறார்கள் - இறா என்பார்கள் - அந்தக் கடற்கனி ஏராளமாகப் பர்மாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, திருவிதாங்கூர் கொச்சிப் பகுதியிலிருந்து, பெரும் அளவில். இதை நம்பி வாழும் மீனவர்கள் ஏராளம் - வியாபாரிகளும் உளர். இப்போது பர்மா சர்க்கார், இதற்கான அனுமதி வழங்கும் முறையிலே நட்டுத் திட்டம் கடுமையாக ஏற்பத்திவிட்டி ருக்கிறது; இந்த ஏற்றுமதி சிதைந்துவிட்டது. இதன் பயனாக இலட்சக்கணக்கான சிறியதல்ல குடும்பங்கள் அல்லற் படுகின்றன. பிரச்சினை சிறியதல்ல தம்பி! பண்டம் வேண்டுமானால், சாதாரணம் என்பர். எட்டு இலட்சம் மீனவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது. மூன்று கோடி ரூபாய் பெருமானமுள்ள பண்டம் தேங்கிக் கிடக்கிறது. அஜீத் பிரசாத் ஜெயின் எனும் வடநாட்டு மந்திரியிடம்தான் முறையிட்டுக்கொள்ள வேண்டிஇருக்கிறது. பர்மா போன்ற வெளிநாட்டுச் சர்க்காரிடம் பேசவும், வசதி வாய்ப்பு, சலுகை உரிமை இவைகளைப் பெறவும் இங்கே உள்ள அமைச்சர் அவைக்கு அதிகாரம் ஏது? எல்லாம் டில்லியப்பன்தானே! எதற்கும் டில்லியப்பன் துணையும் தயவும் இருந்தால்தான் நடக்கும். எனவே, அஜீத் பிரசாரத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்படுகிறது, "ஐயனே! மீனவரைப் பாரீர்! அவர் குறை தீர்த்திட வாரீர்! பட்டினியால் வாடுகிறோம், பண்டம் பாழாகிறது, பிழைப்பிலே மண் விழுகிறது'' என்று கெஞ்சுகிறார்கள். "அப்படியா, உமக்குற்ற குறை பற்றி நாம் இனி எண்ணிப் பார்த்திடுவோம். எமது அண்டை நாடாம் பர்மாவின் இந்தப் போக்குக்க உள்ள காரணம் யாவை என ஆராய்ந்த பின், யாது செய்திடல் முறை என்பது பற்றி எண்ணித் துணிவோம்!'' என்று பேசுகிறார் அஜீத்! அவரா பேசுகிறார், வடநாட்டு ஆதிக்கம் பேசுகிறது!! திருச்சியில்பாருங்கள், திரிலோகமும் புகழும் சுந்தரன்! வீரன்! சூரன்! யானே.'' என்று கனம் பாடுகிறார்.

ராஜா சிதம்பரனார்,

"ஆமாம! இதை அறியேன் முன்னாலே.

"ஆகவே என் பிழை பொறுத்து ஆதரிக்க வருவீர், ஐயே!'' என்று "ட்யூட்' பாடுகிறார்!

செக்கிழுத்தார் சிதம்பரனார் என்ற நெஞ்சை நெக்குருகச் செய்யும் சேதியை எடுத்துச் சொல்லிச் சொல்லி, பெரும் பலன் கண்டனர் காங்கிரசார். "கப்பலோட்டிய தமிழன்'' வாழ்க்கைக் கலம் சுக்கு நூறாயிற்று. அந்தச் சோகக் காதையைக் கூறிக்கூறி, இன்று அரசியல் உல்லாசப் படகினிலே ஒய்யாரமாகச் செல்கின்றனர் பலர்! இதோ கேள், தம்பி, ஒரு கப்பலின் கதை கூறுகிறேன்.

சென்னை-ரங்கூன் செல்லும் கப்பலொன்று, சிந்தியா கம்பெனியார் நடத்தி வந்தனர்.

முன்பு வெள்ளைக்காரக் கம்பெனி நடத்திவந்த தொழில், சுதேசி இயக்க தத்துவம் காரணமாக, சிந்தியாவுக்குக் கிடைத்தது.

சிந்தியா கப்பல்விட ஆரம்பித்ததும், வெள்ளைக்காரக் கம்பெனி விலகிக்கொண்டது.

இருபது நாட்களுக்கு ஒரு முறை சிந்தியா கப்பல் செல்லும்.

இதிலே இங்கிருந்து, ஏழை எளிய மக்களே ஏராளமாகச் செல்வர் - கட்டணம் அதற்குத் தகுந்தபடி இருந்து வந்தது.

பர்மாவுக்கு இங்கிருந்து பண்டங்கள் போகும்.

பர்மாவிலிருந்து தேக்கு முதலிய பண்டங்கள் இங்குவரும்

மொத்தத்தில், தென்னாட்டவருக்கு வசதியானது இந்தக் கப்பல் போக்குவரத்து.

நஷ்டம் என்று காரணம் காட்டியும், கப்பல் பழசு பழுதாகிவிட்டது. புதுப்பிக்கப் பெரும் பொருள் செலவாகும், என்று கூறியும், சிந்தியா இப்போது இந்தக் கப்பலை நிறுத்திவிட்டது.

ஏழைக்கு இடி! சென்னை-ரங்கூன் வியாபாரத் தொடர்புக்குத் தாக்குதல் - கண்டனம் கிளம்பி இருக்கிறது.

இனி, சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குக் கப்பலில் சென்று, அங்கிருந்து பர்மாவுக்குக் கப்பல் தேட வேண்டும்.

அந்தக் கப்பலில், ஏழைகளுக்கான "மேல் தட்டு' பிரயாணவசதி மலிவான கட்டண வசதி - அதிகம் கிடையாது.

இப்போது செலவாவது போல இரட்டிப்புச் செலவாகும்.

பண்டங்களை அனுப்புவதிலும், பாரம் ஏறும்.

பாரம் ஏறினால், வடக்கே வங்கம், வங்கத்துக்கு அருகே உள்ள இடங்களிலிருந்து கிளம்பும் சரக்குடன், தென்னகத்துச் சரக்கு போட்டியிட்டுச் சமாளிக்க முடியாது.

இவ்வளவு இன்னல் இருக்கிறது! ஏன் என்று கேட்கவோ, சிந்தியா போனால் என்ன, இதோ ஒரு விந்தியா என்று கூறிக் காரியமாற்றவோ, சென்னையால் முடியாது! டில்லி கண் திறக்க வேண்டும்!

நஷ்டஈடு தந்து சிந்தியாவைத் தொடர்ந்து கப்பலை நடத்தச் சொல்லலாம்.

புதிதாகக் கப்பல் உதவலாம், அல்லது பழுது பார்க்க வசதி செய்து தரலாம்.

எதையாவது இந்திய சர்க்கார் செய்ய வேண்டும்.

தினமணியின் அழுகுரல் கேட்கிறது இதுபோல ஜுன் 23இல். ஏன் சிதம்பரனாரின் கண்ணீரும் செந்நீரும் சிந்திப் புனித புரியாக்கப்பட்டுள்ள தென்னகத்துக்கு, அந்த அவல நிலை, என்று நாம் கேட்கிறோம்? வடநாடு தென்னாட்டை அடிமைப் படுத்திற்றா? யார் சொன்னது? இதோ என்னைப் பாருங்கள், என்று கேட்கிறார். அமைச்சர் சுப்பிரமணியனார், "பார்க்கிறேன்! பெருமூச்சு எறிகிறேன்! பாவியேன் இந்தப் "பரிசு' கிடைக்குமா கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கிறேன்! கனமாகும் காலத்தை, கடவுளே! சீக்கிரம் தாருமே'' என்று மலைபோன்ற உடலை வில்போல வளைத்தபடி, வரம் கேட்கிறார். வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் "இன்சால்வென்ட்' போட்டிடும் போக்கில், தேர்தலின்போது மக்களிடம் அளித்திட்ட வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டு விட்டு, சேற்றை வாரியும் நம்மீது வீசிட முற்பட்டிருக்கும் ராஜா சிதம்பரனார்! அந்தச் சிதம்பரனார் பிறந்த அதே நாட்டில் இப்படியும் ஒரு சிதம்பரனார்!

தம்பி! நமது கழகத்துக்கு நாட்டிலே வளர்ந்து வரும் செல்வாக்குக் கண்டு, ரோஷம் பொங்கி இப்படிப் பேசுகிறார் போலிருக்கிறது இந்த "கனம்' - ஒப்புக்கொள்ள மறுக்கிறாய் - துவக்கத்திலேயேதான் சொல்லிவிட்டாயே, காரணம் எனக்கும் தெரிந்ததுதானே - ரோஷக்காரராக இருந்திருந்தால் இவர் ஆச்சாரியாருடைய தொண்டரடிப்பொடி ஆழ்வாராக இருந்தபோது புகுத்திப் போற்றிப் பாராட்டிய குலதர்மக் கல்வித் திட்டத்தை, காமராஜர் கட்டளையிட்டதும் குழிதோண்டிப் புதைத்துவிட்டுச் சுடலைக் காசுபோலப் பதவியைப் பெற்றுக் கொண்டிருப்பாரா? "என் திட்டம் இல்லையா. அப்படியானால் நான் பதவியில் இரேன். நான் ரோஷக்காரன், கொங்கு வேளாளர் குடிப்பிறந்த எவரும், இப்படிக் குட்டக் குட்டக் குனிந்து கொடுத்து, எட்டுக் குட்டுக்கு ஆறணா எடு, ஆறுôறு முப்பத்தாறு இரண்டேகால், ரூபா. என்று கேட்கும் போக்கில் இருக்க மாட்டார்கள். அதற்கு வேறு ஆளைப் பாருமய்யா. நான் இதோ பதவியை விட்டுப் போகிறேன். கோர்ட் அழைக்கிறது, கொங்கு நாடு அழைக்கிறது, மானம் கட்டளையிடுகிறது, ரோஷம் குத்திக் குடைகிறது'' - என்று கூறியல்லவா, வெளி ஏறியிருந்திருக்க வேண்டும். மந்திரியாகத்தானே இருக்கிறார்.

"அவர் கட்டிய தாலியை இதோ அறுத்தெரிந்துவிட்டேன், சுவரேறிக் குதித்து வந்த சுந்தரனே! கட்டுதாலி உன்கையாலே! அதற்கும் விருப்பம் இல்லையேல், அதுவும் வேண்டாம், வேளைக்குச் சோறு, சாயம் போகாச் சேலை, சாயந்திரத்தில் மல்லி, சாய்ந்துகொள்ள மெத்தை. . .'' என்று பட்டியல் கூறிடும் கண்வெட்டுக்காரி, மன்றம் ஏறிவாழும் வழி பற்றிப் பேசிடுவ தில்லை; அமைச்சரல்லவா, பேசுகிறார்! பேசட்டும் தம்பி! பேசட்டும்! பூர்ணகும்பம், அர்ச்சகர் சங்க வரவேற்பு, நிலப்பிரபுவின் விருந்துபசாரம். இது கூடவா, பேசக் கூடாது? பேசட்டும் தம்பி, பேசட்டும். நமது வேலையை இந்தப் பேச்சும் ஏச்சும், துளியும் பாதிக்காது.

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Anna_sign
3-7-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:09 am

குருபீடம்

தோழர் என்.வி. நடராசன் அவர்களின் காங்கிரஸ் வாழ்க்கை-
காங்கிரசில் புதியதோர் நுழைவு-
செட்டி நாட்டு அரசர்.

தம்பி!

வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக்கான காரணங்களை நான் விளக்கி எழுதியதை, பண்புள்ள காங்கிரஸ் நண்பர்களுக்குப் படித்துக் காட்டியதாக எழுதியிருப்பது கண்டு, மகிழ்கிறேன். அவர்களிடம், நீ படித்துக் காட்டியபோது, நிச்சயமாக அவர்கள் பெருமூச்செறிந்திருப்பார்கள் - அவர்களால் இப்போதைக்கு வேறெதுவும் செய்யமுடியாது. இன்னமும் பண்டிதர் ஊட்டும் மயக்கம் வேலை செய்கிறது. அவர்களாலே அவ்வளவு சுலபத்தில், எளிதாக அந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியாது. மெள்ள மெள்ளத்தான் உண்மை அவர்கள் உள்ளத்திலே நுழையும். அதுவரையில் நமக்குத்தான் பொறுமை வேண்டும். நமக்கு நமது கொள்கையில் திடமான நம்பிக்கை இருக்கும் போது பயமென்ன? எப்படியும் இன்றுமாற்று முகாமில் உள்ளவர்களிலேயே பலர், நம்மோடு சேரும் நாள் வரத்தான் போகிறது! உனக்கு நமது நண்பர், ஓயாது உழைக்கும் என்.வி. நடராசன் தெரியுமல்லவா! அவரை என்ன வென்று எண்ணிக் கொண்டாய்!! ஏ! அப்பா! அதி தீவிரக் காங்கிரஸ் காரராச்சே! சண்டமாருதச் சிங்கம் சத்தியமூர்த்தியின் பிரத்யேகப் பயிற்சிக் கூடத்தில் பல ஆண்டுக்காலம் இருந்தவர்! சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியிலே உறுப்பினர் எதிர்கால கார்ப்பரேஷன் மெம்பர் என்றும், ஒரு சான்சு அடித்தால் எம்.எல்.ஏ ஆகலாம் என்றும் கூறி வந்தனர் - சென்னையில் எங்கு பார்த்தாலும் இந்த "எலும்பு மனிதர்' காங்கிரசல்லாத கட்சிகளின்மீது கண்டனம் பொழிவார்! வசை மொழியால் என்னை அர்ச்சிப்பதில் அவருக்கு அப்போது அலாதி ஆசை!! நான் கார்ப்பரேஷன் தேர்தலில் ஈடுபட்டபோது என்னைத் தோற்கடிக்க, முழுமூச்சாக வேலை செய்தவர். அப்போதெல்லாம், அவரிடம் "நாலாம் தமிழ்' நடமாடும்! நாலாம் தமிழ் என்றால், தெரியவில்லையா, இயல் இசை நாடகம் - முத்தமிழ்! வசை, நாலாம் தமிழ்!! என்ன அப்படி பிரத்யேகப்பெயரிட்டு அழைக்க வேண்டிய அளவுக்கு வசை இருந்தது, என்கிறாயா கேள், தம்பி; சொல்கிறேன்! நீ, எத்தனையோ விபூதி வில்வங்கள் ஏசிப் பேசக் கேட்டிருப்பாய், இதுபோலக் கேட்டதுண்டா சொல், பார்ப்போம்.

"நெஞ்சிலே இருக்கிற மஞ்சா சோறு வெளியே வரும் - ஆமாம்.''

இதற்கு நாலாம் தமிழ் என்று தனிச் சிறப்பு அளிக்காம லிருக்கலாமா, சொல்லு.

பொருள் என்ன தெரியுமோ இதற்கு - ஒரு தாக்குத் தாக்கியதும் கிறுகிறு என்று தலைசுற்றி, வாந்தி எடுக்க வேண்டி நேரிடும் - அப்போது உண்ட சாதம் மஞ்சள் மஞ்சளாக வெளியே வரும்! இது தான் பொருள்!

பேசினது - நம்ம நடராசன்! எனக்குத்தான் இந்த அர்ச்சனை! தேர்தல் காலம்! தேச பக்தி அவருக்குத் தலையில் ஏராளமான! தூபம் போட சத்தியமூர்த்திகள்; எனவே நாலாம் தமிழைத் தாராளமாகப் பொழிந்தார்; எனக்கு அவர் எப்படி அந்த நடையை இப்போது மறந்துவிட்டார் என்று கூடச் சில சமயங்களிலே ஆச்சரியமாக இருப்பதுண்டு.

நடை இது; உடை கதர்! படையும் உண்டு. மாலைக் கலகத்துக்கு ஆறணா; இரவுக் கலகத்துக்கு எட்டணா; நோட்டீசைக் கிழிக்க ஒரு ரூபாய்; சாணிவீச இரண்டணா; கனைத்துக்காட்ட ஒரு அணா; முண்டா தட்ட மூன்றணா; மூலை முடுக்கிலே நின்று வம்புச் சண்டை போட மூன்று ரூபாய் இப்படி "ரேட்' பேசிக் கொண்டு, பாரதமாதாவுக்குச் சேவை செய்யும் படை வீரர்கள் உண்டு! இத்தனைக்கும் எனக்கு அவர் அப்போதும் நண்பர்தான்! தொழிலாளர் இயக்கக் காரியத்தில் ஒன்றாகவே வேலை செய்வோம். உன்னிடம் உண்மையைச் சொல்வதிலே தவறு என்ன, ஆங்கிலத்திலே ஏதாவது தொழிலாளர் சங்கத்துக்குக் கடிதம் வந்துவிட்டால்,என்னிடம்தான் கொண்டுவந்து காட்டுவார்!! காலையில் இது-மாலை வந்தாலோ "போலோ பாரத்மாதாக்கீ' யாகி விடுவார்!

அப்படிப்பட்டவர் இன்று, எவ்வளவு அரும்பணியாற்றி வருகிறார், திராவிடர் இயக்கத்தில், என்பதைப் பார்க்கிறாயல்லவா!

கட்டாய இந்தியை நுழைத்தார் ஆச்சாரியார்.

இந்தி எதிர்ப்புப் போர் துவங்கிற்று! நாம் பதறாமல் பகை வளர்த்துக் கொள்ளாமல், தமிழ்ப் பண்பு கெடாமல், கொள்கை வழுவாமல், குறிக்கோள் மறவாமல், எதிர்ப்புக்கு அஞ்சாமல், பணியாற்றினோம் - காங்கிரஸ் வட்டாரத்திலேயே நமக்கு ஆதரவு அரும்பிற்று; நடராசன் போன்ற பல காங்கிரஸ் நண்பர்கள். நாங்களும் தமிழர்களே! எங்களுக்கும் தமிழார்வம் உண்டு! நாங்களும் இந்திக்கு அடிமையாக மாட்டோம்' என்று பேசினர் - முதலில் நம்மவர்களைச் சந்திக்கும் போது - பிறகு தங்களுக்குள்ளேயே - அதற்கும் பிறகு காங்கிரஸ் மேடைகளிலேயே!!

இதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.

இந்தி எதிர்ப்பும் பேசும் காங்கிரஸ்காரர்களை அடக்கியாக வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது, சத்தியமூர்த்திகளுக்கு.

சத்தியமூர்த்திகள் தடை விதித்தாலும் மீறி, தாய் மொழியைக் காக்கும் பணிபுரிந்தாக வேண்டும் என்ற கட்டம் வந்துவிட்டது, நடராசன் போன்றோருக்கு.

சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியில் இந்தப் பிரச்சினை கிளம்பிவிட்டது! நல்ல வார்த்தை சொல்லி நடராசனைக் கோட்டையில் பூட்டிவிடச் சத்தியமூர்த்தி திட்டமிட்டார்! தாய்மொழிப்பற்றுக்கு இடமளித்து விட்ட பிறகு, நடராசன் காங்கிரசின் கட்டுதிட்டத்தை உடைத்தெறிந்து விட்டு வெளி வந்து விடுவார் என்று எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது.

எனவே, சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடைபெறும் நாளே, நான், நமது நண்பர்கள், சென்னை பெத்துநாயக்கன்பேட்டையில் நடத்தும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில், காங்கிரசை விட்டு விலகிய என்.வி. நடராசன் பேசுவார் என்று துண்டு அறிக்கை அச்சிட்டு, காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறும் இடத்துக்கே நண்பர் கணேசன் மூலம் அனுப்பி விட்டேன்.

உள்ளே, கெஞ்சுதல், கொஞ்சுதல், மிரட்டல், சபித்தல் ஆகிய எல்லா ரசமான கட்டமும் நடந்தேறி, நடராசன் ராஜிநாமா செய்துவிட்டு வெளியே வந்தார் - அவரிடம் இந்த "நோடீஸ்' தரப்பட்டது - "எப்படி இதற்குள் அச்சிட்டு விட்டீர்கள்' என்று கேட்டார் - இது காலையிலேயே அச்சாகிவிட்டது. இதுபோலத்தான் நடக்கும் என்று தெரிந்து அச்சிடப்பட்டது என்று கணேசன் கூற, நடராசன், அப்படியா? என்று கேட்டுவிட்டு, நேரே, இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்தார். அன்று துவக்கப்பட்ட அரும்பணி, நாளாகவாக, தரமும் திறமும் வளரும் வகையில் நடைபெற்றவண்ணம் இருக்கிறது, எனவே தான் தம்பி, "நான் சொல்வது, காங்கிரஸ் நண்பர்களிடம், நமது கொள்கையை எடுத்துக் கூறுவதிலே, பண்புவேண்டும் என்று அவர்கள் இன்று கோபம் கொண்டவர்களாக இக்கிறார்களென்றால், நாம் இன்னும் அவர்கள் உள்ளத்தில் புகத்தக்க விதமாக, நமது கொள்கையை எடுத்துரைக்கவில்லை என்று தான் பொருள்! நடராசர்கள், எங்கும் இருக்கிறார்கள் அவர்களை "நம்மவர்'களாக்கிக் கொள்ளும்திறமை நமக் கெல்லாம் வளரவேண்டும்!! அவர்கள் எப்போதும் எதிர் முகாமிலேயே இருந்து தீருவோர்கள் என்று எண்ணி, அவர்களைக் கண்டதும் முகத்தைச் சுளித்துக் கொள்வதும், அவர்கள் உருட்டு விழி காட்டினால் நாமும் அது போலாவதும் கூடாது. நாளாகவாக அவர்களுக்கு, காங்கிரஸ் இன்று யாருடைய கூடாரமாகி வருகிறது என்பது புரியத்தானே போகிறது! உழைக்க ஒரு கூட்டம், அரசியல் உல்லாச வாழ்வு நடாத்த வேறோர் கூட்டமல்லவா வந்துவிட்து! தடியடியும் சிறைவாசமும், முத்துராமலிங்கத் தேவருக்கு! மந்திரிப் பதவியும் அதனால் கிடைக்கும் மதிப்பும், ராமநாதபுரம் ராஜாவுக்கு - அதாவது ராஜாவாக இருந்தவருக்கு!! பட்டேல் வருகிறார் - பணப்பை ஜாக்கிரதை!! என்று லட்சக்கணக்கில் எச்சரிக்கை நோடீஸ், அபாய அறிவிப்புத்தாட்களை அச்சிட்டு வழங்கிய வட்டி வேந்தர்கள், காங்கிரஸ் வட்டாரத்திலே இன்று வட்டமிடுகிறார்கள். உண்மை ஊழியம் செய்து, காங்கிரசை ஊராளும் கட்சியாக மாற்றி அமைத்த காங்கிரஸ்காரர்களுக்கு இந்தக் காட்சி, பெருமையும் பூரிப்புமா தரும் என்றுஎண்ணுகிறாய்! அவர்களும் மனிதர்கள்தானே, தம்பி! மனம் படாதபாடு படத்தான் செய்யும்.

செட்டிநாடு அரசர் இன்று காங்கிரசுக்கு ஒரு செல்லப் பிள்ளையாக இருக்கிறார்! இது காங்கிரசின் வளர்ச்சியையா காட்டும்!! தியாகத் தழும்பேற்ற காங்கிரசார்களைப் பார்த்து, கேபேசும் கண்களல்லவா, செட்டி நாட்டரசருக்கு இருந்திடக் காண்கிறோம்! ஆளுங்கட்சிக்கு எந்நாளும் ஆதரவாளர் நாங்கள் - முன்பு வெள்ளையன் ஆண்டு வந்தான், வெண்சாமரம் வீசி நின்றோம். இடையே தமிழார்வம் ஓங்கி நின்றது, ஆட்சி தமிழரிடம் வந்து சேரும்போல் தோன்றிற்று, உடனே அவர்களோடு குலவினோம். செங்கோட்டையில் காங்கிரஸ் கொடி ஏறிற்று, உடனே எங்கள் கோட்டையிலும் மூவர்ணக் கொடி ஏற்றிவிட்டோம் - எப்போதும் ஆளவந்தாரின் ஆதரவாளர் நாங்கள் என்று தானே செட்டி நாட்டரசரின் புன்னகை பேசுகிறது. இது காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியாதா!

கொடியைக் கரத்தில் ஏந்திக்கொண்டு, தமிழர் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டுக் கொண்டு ப்யூக்கும் செவர்லேயும் இருக்க, தங்கசாலைத் தெருவிலிருந்து, கடற்கரைவரையில் நடந்து வந்தார், இன்றைய செட்டி நாட்டரசர், அன்று குமாரராஜா. நாமாவது அவரை ஓரளவுக்கு வேலை வாங்கினோம் - மணிமாடத்துக்குச் சொந்தக்காரர். அவர், எனினும் மணல்மேடுகளுக்கு இழுத்து வந்தோம்! வியர்வை அரும்புமோ என்று எண்ணினாலே வெட்டிவேர் விசிறி கொண்டு வீசிட ஏழெட்டுபேர் எப்போதும் தயாராக இருந்தனர் அவருக்கு - கொட்டிடும் வியர்வையைத் துடைக்கவும் கூச்சப்பட்டுக் கொண்டு, கொடி பிடித்து ஊர்வலத்தில் நடந்தார் குமாரராஜா! நாம், குமாரராஜாவுடன் கூட்டுறவு வைத்துக் கொண்டதால், அவருக்கு ஏற்றபடி கொள்கையைக் குறுக்கிக் கொள்ளவில்லை, கொள்கையின் குணமும் மணமும் வளர்ந்தது - வளருகிறது - காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது, அவர் அந்தப் பக்கம் திரும்பினார், அங்கு அழைப்புக் கிடைத்தது. சென்றார், வென்றார்; வென்றார் என்றால் உண்மைக் காங்கிரசைக் கொன்றார் என்று பொருள் - நாமோ, இருந்தார், சென்றார்; நாம் இலட்சியபுரி நோக்கி நடைபோடுவோம், என்று தொடர்ந்து நமது பணியினை ஆற்றி வருகிறோம் காங்கிரஸ் நண்பர்களுக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்! இவை தெரியாதது போல இருக்கிறார்கள் - ஆனால் நமது கழகம் மக்கள் மன்றமாகி விட்டதையும் காங்கிரஸ் சிங்காரச் சீமான்களின் மாளிகையாகிவிட்டதையும் அவர்கள் அறியாமலில்லை - அறிந்தோர் மனதிலே ஆயாசம் எழாமலில்லை! வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள் - அதுவும் கொஞ்சகாலம் வரையில் தான்!

தம்பி! சென்ற கிழமை, காங்கிரசின் உண்மை உழைப்பாளியின் உள்ளன்பைப் பெற்று உயர்இடத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவப்படத்தை, மத்திய சர்க்கார் மந்திரி டி.டி. கிருஷ்ணமாச்சாரியார் திறந்து வைத்து, பாராட்டுரை வழங்கியிருக்கிறார், என்றோர் செய்தி வந்தது, பார்த்திருப்பாய். யார், இந்த, டி.டி.கி.? காமராஜர் வனவாசம் செய்த போது உடன் இருந்தவரா? இல்லை! இல்லை! அப்போது சுகவாசம் செய்து கொண்டிருந்தவர்! சிறையில் தோழரோ? இல்லை உப்புச் சத்தியாக்கிரகத்துக்கும் திட்டம் தீட்டிய தீரரோ? கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்ட கர்ம வீரரோ! அன்னியச் சாமான்களை பகிஷ்கரித்த ஆற்றல்மிக்க தேசபக்தரோ? இல்லை, தம்பி, இல்லை. சோப்புச் சீமான்; சொகுசான வாழ்க்கை நடத்தி வந்தவர், அன்னிய நாட்டு லக்சும், வினோலியாவும் அவருடைய கதர், கைராட்டை, காங்கிரசைத் தேர்தலிலே எதிர்த்து முறியடித்து, ஒரு முறை சென்னை சட்டசபையில் எதிர்க்கட்சியிலும் வீற்றிருந்தார். ஆகஸ்டுப் புரட்சி, செப்டம்பர் சத்தியாக்கிரகம், எதிலும் அவர் ஈடுபட்ட தில்லை. ஆனால் இன்று, அவர் மத்திய சர்க்கார் மந்திரியானார்! அவர் திருக்கரம் பட்டால் மதிப்பு, அவருடைய திருவாயால் புகழுரை சொரிந்தால் பெருமை என்று கருதும் வகையில் அவரைக்கொண்டு காமராஜரின் திருவுருவப்படத்தைத் திறக்கச் செய்தனர். அந்த நேரத்தில், அந்நாள் இந்நாள் நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் உள்ளம் கொண்ட உண்மைக் காங்கிரஸ் காரர் வெட்கமும் வேதனையும் அடையாமலிருக்க முடியுமா? வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள் - உள்ளத்திலே வேதனை அரித்தபடிதான் இருக்கும். அவர்களெல்லாம், ஒரு கொள்கை புனிதமானது, திட்டம் தேவையானது, என்று உணரும் வரையில்தான் நம்மீது காய்வர், பாய்வர். ஆனால் நாம் எடுத்துரைக்கும் கொள்கை நியாயமானது, திட்டம் தேவையானது என்று உணர்ந்து விட்டால், நிச்சயமாக, நம்மைப்பின்னணியில் தள்ளிவிட்டு, முன்னணியில் நின்று, வீரப்போர் புரியக்கூடியவர்கள்-இதை அவர்களிடம் பேச நேரிடும் போதெல்லாம் மட்டுமல்ல, நம்மைப் புரிந்து கொள்ளாததால் அவர்கள் நம்மை ஏசும் போதெல்லாம்கூட நினைவிலே வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:09 am

மேடை தவறாமல் நம்மை நிந்தித்துத்தான் வருகிறார்கள் - ஐந்தாண்டு திட்டத்தை நாம் கண்டிப்பது அக்ரமம் என்று பேசத்தான் செய்கிறார்கள். ஆனால் குற்றாலத்திலேகூடி என்ன தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தாயா, தம்பி. தென்னாட்டிலே சில பெரிய கனரகத் தொழிற் சாலைகளையாவது அமைத்தாக வேண்டும் என்று, வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்கள்.

"இப்படியாவது ஒரு தீர்மானம் போடாவிட்டால் மக்களின் மனம் எரிமலையாகும்.''

"வடநாட்டாருக்கு, நாமும் விழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டியாக வேண்டும்.''

"குட்டக் குட்ட குனிந்து கிடப்பது, அறிவுடைமையு மல்ல, ஆண்மையுமாகாது.''

"முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில்தான் துரோகம் செய்தனர்-ஏமாற்றப்பட்டோம்-இரண்டாவது திட்டத்தி லாவது நியாயம் கிடைக்கவேண்டும்''

"கழகக்காரர்கள் மானம்போகிற மாதிரிப் பேசு கிறார்கள் - அவர்கள் சொல்வதும் உண்மையாகதான் இருக்கிறது. வடநாடு, நம்மைக் கேவலமாகத்தான் நடத்துகிறது''

"கழகம் கிடக்கட்டும், சுதேசமித்திரன் கார்ட்டூனுக்கு என்ன சொல்கிறீர்கள்?''

"அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்; தூங்குபவன் துடையில் கயிறு திரிக்கத்தான் செய்வார்கள்''

இதுபோலவும், இதைவிடக் கடுமையாகவும் பேசினவர்கள், எத்துணை பேரோ, யார் கண்டார்கள்.

ஒரு தீர்மானம் போட்டாக வேண்டிய நிலைமை பிறந்திருக்கிறது - சாதாரணமென்றா இதற்குப் பொருள்!

குற்றாலத்துத் தீர்மானம், கண்களை இறுக மூடிக்கொண்டு, காதுகளையும் அடைத்துக் கொண்டு இருப்பதுபோலக் காணப்பட்டு வந்த காங்கிரஸ் நண்பர்கள், உண்மையில், நாம் கூறிவந்ததை மிகக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள் என்பதையும், நம்மைக் கண்டித்துப் பேசியவர்கள், அதேபோது உள்ளூர வடநாட்டு வஞ்சனையைப் கண்டித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையும்தானே, காட்டுகிறது. இல்லையானால். இப்படி, ஒரு தீர்மானம் தீட்டவேண்டிய அவசியமும் அவசரமும் என்ன வந்தது? தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது என்ற உண்மை உள்ளத்தை உறுத்துவதாலேதான், இரண்டாவது திட்டதிலாவது நியாயம் கிடைக்கச் செய்யுங்கள் என்று கேட்கவேண்டி வந்தது. இல்லையானால் வீரதீரமாக, வடநாடு தென்னாட்டுக்கு ஐந்தாண்டுத்திட்டத்தில் துரோகம் செய்தது என்று கூறுவது தேசத்துரோகம்-என்று கனல் கக்கிடும், தீர்மானம் நிறைவேற்றி விட்டல்லவா மறு காரியம் பார்த்திருப்பார்கள்.

தம்பி! நம்மைவிட அடிக்கடி, வடநாடு போய் வருகிறவர்கள்தானே, காங்கிரஸ் தலைவர்கள்! அங்கே பொங்கிடும் வளமும், அதன் பயனாக ஓங்கிடும் கர்வமும் அவர்கள் காணாமலா இருக்கிறார்கள்! கண்டு வெட்கமும் வேதனையும் கொண்டு, பிறகு, கட்சி கட்டு திட்டம் இவைகளை எண்ணி விம்முகிறார்கள்! வீறுகொண்டெழும் காலம் வெகு தொலைவில் என்று கருதாதே - விரைவிலே வரக்கூடும். நீயும் நானும், அவர்களுடைய இதயத்தைத் தொடும் வகையில், விஷய விளக்கம் தரவேண்டும்.

எங்களுக்கும் தெரியும் - என்று ஆரம்பத்தில் ஆதீன கர்த்தா பாணியில் பேசுவர்.

எங்களுக்கு மட்டும் தெரியாமலா இருக்கிறது - என்று அன்பாகப் பிறகு கூறுவார்.

எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதற்காவன செய்வோம் - என்று உறுதி அளிக்க முன்வருவார்கள் அடுத்த கட்டத்தில்.

நாம் ஒன்றுபட்டுக் கேட்டால்தான், வடநாடு வழிக்கு வரும்!

கொஞ்சியது போதும் - இனி கிளர்ச்சிதான்!

மயிலே மயிலே இறகு போடென்றால் போடுமா!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே ஒருகை பார்த்தோம்; இந்த மார்வாடி ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதா முடியாத காரியம்!

விழித்தெழுவீர் விடுதலைப் போரில் ஈடுபடுவீர்!

திராவிடநாடு திராவிடருக்கே!

இவ்விதமெல்லாம், படிப்படியாகத்தான், பிரச்சினை உருவெடுக்கும்.

அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டியதுதான் நமது பொறுப்பு.

திருவாவடுதுறை ராஜரத்தினம் பாணி, தம்பி, உனக்குத் தெரியுமோ என்னமோ!

அவருடைய உள்ளத்தில் நன்றாக வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்துவிட வேண்டும். பிறகு, கேளேன் அந்த நாத இன்பத்தை! வீணையும் பிடிலும், குழலும், ஷனாயும், கோட்டும் பிறவும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு, வெளியே உலவி, கேட்போரின், மனமெல்லாம் இசைமயமாக்கி விடுகிறது. அவரிடம் உள்ள நாயனம் நமக்கு நல்ல இசை அமுது அளிக்க வேண்டுமானால், நமக்கு மகிழ்வளிக்க வேண்டும் என்று அவர் எண்ணினால்தானே! கால் ஆயிரம் தருகிறேன் காம்போதி வாசித்துக் களிப்பூட்டு; ஆயிரம் தருகிறேன், தோடி நடக்கட்டும்; மேலும் தருகிறேன், மோகனம் நடக்கட்டும், என்று கூறினால், இசையா கிடைக்கும்? கங்கிரசிலுள்ள உண்மை ஊழியர்கள், இதுபோலத்தான், அவர்களின் உள்ளம், நமது கோரிக்கைக்கு இடமளிக்கவேண்டும்-பிறகு பாரேன், அவர்களின் தீவிரத்தை! தீரத்தை! அந்த நிலையைப் பெற, நாம்தான், முறையாகப் பணியாற்ற வேண்டும்.

இழிமொழி, பழிச்சொல், ஈனத்தனமான தாக்குதல், இட்டுக்கட்டிப் பேசுவது, இல்லது புனைதல், ஏசல் வீசுதல், என்பன போன்ற எத்தகைய கணையும் நம்மை நிலை இழக்கச் செய்யக்கூடாது. இந்தப் பரிபக்குவம் நமக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் இல்லாமற் போகவில்லை - இருந்து விட்டு வந்த இடத்தில் நுழைந்து கொண்டு, நோட்டம் பார்க்கும் நண்பர் வீசும் நரகல் நடை நமக்கு வேறு எதற்குப் பயன்படுகிறது என்று எண்ணுகிறாய்! இந்தப் பரிபக்குவம் பெறத்தான்! ஒரே கலத்தில் உண்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளத்தக்க அளவுக்கு உறவு இருந்த இடத்திலிருந்தே நித்த நித்தம், குறி தவறினாலும் கவலைப் படாமல், ஏசல் பாணங்கள் சரமாரியாகக் கிளம்புகிறது - துவக்கத்தில் தம்பி, உன் போன்றவர்களுக்குக் கோபமாகக்கூட இருந்தது. இப்போது நாலு நாளைக்கு அவ்விதமான பாணம் கிளம்பாவிட்டால், ஐயோ பாவமே; என்ன உடம்புக்கு, என்று கேட்கும் பரிதாப உணர்ச்சி அல்லவா வருகிறது - அந்த தூற்றல் பாணங்களைப் பார்த்துப் பார்த்து பழகிவிட்ட நமக்கு, காங்கிரஸ் வட்டாராம் ஏவும் கண்டனக் கணை பிரமாத மானதாகத் தெரியக் காரணமில்லை. நம்மைப் புரிந்து கொள்ளாததால், காங்கிரஸ் வட்டாராம் கணைவிடுகிறது. நாம் பிரிந்துவிட்டதால் குருபீடம் கணைவிடுகிறது!! பொறுமை, அமைதி, கண்ணியம் எனும் அருங்குணத்தையும் பெறவும்; தூற்றலைத் தாங்கிக் கொள்ளும் மனத்திடத்தையும்; நோக்கத்தை மாற்ற முனைவோர் வீசும் நிந்தனையைப் பொருட்படுத்தலாகாது என்ற உள்ளப்பாங்கையும் நாம் பெற இப்போதும் குருபீடம் அருள் புரிகிறது!! இன்னும் நமக்கென்ன குறை!!

குருபீடத்தில் நாமெல்லாம் குற்றேவல் புரிந்துகொண்டு கேட்டறிந்த உபதேசத்தை மறவாமல், நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

என்னைப் பொறுத்த வரையில், தம்பி! நான் அங்கு இருந்தபோது கிடைத்த பாடத்தைவிட, அரும்பெரும் பாடத்தை, இப்போது குருபீடத்திலிருந்து பெறுகிறேன். ஏசல் கணைகள் மூலம்-என் உள்ளம், தாங்கும் சக்தியை மிகத் திறம்படப் பெற்று வருகிறது. எனவேதான், என்னால் மாற்றுக் கட்சிக்காரரிடம் மனமாச்சரியம் துளியும் கொள்ளாமல், கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பக்குவம் நிரம்பத் தேவைப்படும் வகையான பணியாற்றும்படி, உன்னைக் கேட்டுக் கொள்ளமுடிகிறது; அண்ணனுக்குக் கிடைத்துள்ள மனப்பாங்கு, தம்பிக்கும் உண்டு என்ற நம்பிக்கையுடன் தான் இவ்விதம் கூறுகிறேன்.

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Anna_sign
3-7-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:10 am

அங்கே பவனம் இங்கே படம்!

பம்பாயில் பீரஹத் பாரதிய சமாஜம்-
வெளிநாடு களில் திராவிடர் நிலை -
நம் நாட்டில் அகதிகள் உயர்நிலை.

தம்பி!

ஆறடுக்கு மாடிகொண்ட மாளிகை எழும்பப் போகிறது - பன்னிரண்டு இலட்ச ரூபாய் செலவில்!

சர்க்காரின் திட்டங்களிலே ஒன்று போலும் என்று எண்ணிவிடாதே தம்பி! ஒரு சமாஜம் கட்டப்போகும் அரண்மனை இது. அரண்மனை மட்டுமல்ல, ஆராய்ச்சிக் கூடமுங்கூட!

பீரஹத் பாரதிய சமாஜம் என்பது இதன் பெயர்-இதன் பணி, வெளிநாடுகளிலே சென்று தங்கியுள்ள இந்தியர்களுக்கும் இடையே தொடர்பு, தோழமை ஏற்படுத்தி வைப்பது. இது மட்டுமல்லாமல், வெளிநாடு சென்றோரின் வரலாறு பற்றிய நுணுக்கங்கள், செல்லவேண்டிய காரணம் என்ன, சென்றபோது அடைந்த சிரமம் எப்படிப்பட்டது, சென்று அங்கு கண்ட அனுபவம் எத்தகையது என்பன போன்றவைகளைக் குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்படும்.

இத்தகைய நேர்த்தியான நோக்கத்துக்காக, அண்ணாந்து பார்ப்போரின் கழுத்து வலி எடுக்கும் அளவு உயரமாக, அன்னிய நாட்டினர் பார்த்து ஆச்சரியப்படத் தக்கவகையில், சமாஜக் கட்டிடம் சமைக்கப் போகிறார்கள்.

மாளிகை அமைக்க 12 இலட்சம், அதிலே மற்ற வசதிகள், ஒரு படிப்பகம் உட்படக் காண மற்றோர் நாலு இலட்சம்.

இதற்கு நிதி குவிகிறது.

இந்திய சர்க்காரிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் நன்கொடை எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்தறிந்தால் போதாதா, நன்கொடை வாயு வேகம் என்கிறார்களே, அவ்விதம் வந்து சேரப்போகிறது.

பம்பாயில்! - இங்கா கட்டுவார்கள்! பம்பாயில்தான்.

கோடீஸ்வரர்களின் கோட்டத்தில்தானே, இத்தகைய கொலு மண்டபம் அமைக்க முடியும்; அமைக்கிறார்கள்.

இந்த பவனத்தில், வெளிநாட்டார் வந்து தங்க, வகை வகையான ஏற்பாடுகள்.

வெளியிலிருந்து இங்கு வரும் மாணவர்களுக்கு அறுசுவை உண்டி.

செவிச் சுவை உண்டு.

சிந்தனைக்கும் விருந்து தருவார்கள் - படிப்பக மூலம்.

இவைகளுக்கான நிதி திரட்டும் ஏற்பாடு, விமரிசையாகத் துவக்கப்பட்டு, வேகமாக வளர்ந்து, இப்போது வெற்றிக் கட்டத்தை நோக்கித் துரித நடைபோட்டுத் செல்கிறது.

வெளிநாடுகளிலே வதியும் இந்தியர்கள்! - என்ற சொற்றொடரைக் கவனித்தாயா, தம்பி. பொருள் எளிதாயிற்றே, இதை ஏன் கவனப்படுத்துகிறாய், என்று கேட்டுவிடாதே. பொருள் எளிதுதான், ஆனால் இதிலே புதை பொருளும் இருக்கிறது, அதைக் கண்டெடுப்பது அவ்வளவு எளிதல்ல.

இந்தியர்கள் என்ற பட்டியலில் நாமும் இருக்கிறோம்.

நம்மவர்கள் வெளிநாடுகளிலே இருக்கிறார்கள் - ஆமாம். பல இலட்சம்! வடக்கத்தியர்களும் வெளிநாடுகளிலே இருக்கிறார்கள். வெளிநாடுகளிலே சென்றுள்ளவர்களை, வடவர் திராவிடர் என்று இரு பிரிவாக்கிக் காட்டுவதற்குக் காரணமும் இருக்கிறது - அதிலே நாடு அறியவேண்டிய கருத்தும் நிச்சயமாக இருக்கிறது. வடவர் வெளிநாடுகள் சென்று வதிகிறார்கள் - திராவிடர் வெளிநாடு சென்று வதைபடுகிறார்கள்.. வெளிநாடு சென்றுள்ள வடவரில் பதினான்கணாபாகம், முதலாளிகளாய், நிலச்சுவான்தார்களாய், ஆலைகளின் சொந்தக்காரர்களாய் வாழ்கிறார்கள்.

அவர்கள் சென்று வாழும் இடங்களிலே, அரசியல் சூத்திரக் கயிறுகளையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

வெளிநாடு சென்றுள்ள வடவரிலும், கிழக்கு ஆப்பிரிக்கர் மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய பகுதிகளிலே சென்று தங்கி, சீரும் செல்வாக்கும் பெற்றுள்ள வடவர்களுக்கு அங்கே உள்ள பிரச்சினை; சொத்துகள் வாங்க உரிமை தரப்படவேண்டும்; அரசியல் ஆதிக்கத்திலே கிடைக்கும் பங்கின் அளவு அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும்; வேறு வேறு நாட்டவரிடமிருந்து கிளம்பக்கூடிய வியாபாரப் போட்டிகளை வேரறக்களைவதற்கு இந்திய சர்க்கார் தக்க திட்டம் தயாரித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும்; என்பவைகளாகும்.

கூலி போதவில்லை, கும்பி நிரம்பவில்லை, கொட்டும் குளிரைத் தாங்கிக் கொள்ளச் சக்தி இல்லை, கொடுக்கும் கசையடியால் பீறிட்டு வரும் குருதியைத் துடைக்கவும் நேரமில்லை, வேலையில் நிம்மதியுமில்லை. அது நிலைத்து இருக்கும் என்பதற்கும் உறுதி இல்லை, - இவைகளல்ல, பவனபுரியினருக்குள்ள பிரச்சினைகள்.

இந்தப் பிரச்சினைகளெல்லாம் நம்மவர்களுக்கு - நாடாண்ட இனம் என்று கூறுகிறோமே, அந்தத் திராவிட மக்களுக்கு - வெளிநாடுகளிலே வாழ்பவர்களுக்கு அல்ல - வதைபடுவர்களுக்கு!

பவனம் அமைகிறது, அவர்களுக்கு
படகு அழைக்கிறது, நம்மவர்களை!
பல்வேறு நாடுகளிலே பரங்கியர் போலாகி
விட்டுள்ளனர், அவர்கள்.
சென்ற இடமெங்கும் வறுமைச் செந்தேள்
கொட்டுகிறது, திராவிடரை.

தேயிலைத் தோட்டம் அமைக்கிறார்கள், மோட்டார் பஸ்கள் நடத்துகிறார்கள், பல சரக்குக் கிடங்குகள் அமைக்கிறார்கள், அவர்கள்.

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து, அட்டைக்கடி அரணைக்கடி பெற்று, ஆவி பிரியாதது ஒன்றுதான் பாக்கி என்று கூறத்தக்க அவல நிலையில் இருக்கிறார்கள், திராவிடர்!

ராஜாங்கத்திலே நாங்கள் ஏன் நடு நாயகர்களாக்கப் படக் கூடாது? என்று கேட்டு, புருவத்தை நெரித்துக் காட்டுகிறார்கள், அவர்கள்.

ரப்பர் பாலை எடுத்துவிட்டு, இராத்தூக்கமின்றி, கைகளைப் பிசைந்தும், கண்களைக் கசக்கிக்கொண்டும், கலங்கி நிற்கிறார்கள், திராவிட மக்கள்.

அவர்கள் எதிர்காலத்தை மேலும் எழிலுள்ளதாகவும், நிலையை ஏற்றமுள்ளதாகவும் செய்ய, பவனம்!

நம்மவர்களுக்கு, இந்த ஒரு வேளைக் கஞ்சியும் ஏன் தரவேண்டும் என்று சிங்களம் பேசிக்கொண்டு, சிங்கக் கொடி சர்க்கார் படகுகளைக் காட்டுகிறது, ஏறிச்செல்-எங்கள் நாட்டிலே இடமில்லை, போ, போ! என்று.

இவர்களுக்கு, ஒரு குடில் இல்லை இங்கு.

அவர்களுக்காக அக்கறை காட்டும் அன்பர் குழாம், ஆறடுக்கு மாடி கட்டுகிறது - ஆனந்தத்துடன் சிந்து பாடுகிறது!

ஏன்?

அவர்கள், ஆளும் இனத்தினர்! திராவிடர், அடிமை இனத்தவராக்கப்பட்டுவிட்டனர்!

வேங்கைக் காட்டிலேதான் நரி ஆட்சி நடக்கிறதே - நரிக்குத்தானே பிறகு, எல்லா வைபவமும் கிடைக்கமுடியும்.

திராவிடர்கள் இலங்கையில், பர்மாவில், மலாய் நாட்டில் எங்கும் இன்று இடர்ப்பட்டு, இழிமொழிகளைத் தாங்கிக் கொண்டு உள்ளனர். அவர்களின் வாழ்வு துலங்க, வகை என்ன, வழி என்ன என்பதற்கு, ஓர் அறிவியற்கூடம் இல்லை, ஆற்றல் அரங்கு காணோம். அங்கே ஆறடுக்கு மாடி அமைத்து அந்தப் பவனத்தில் ஆராய்ச்சி நடத்தப்போகிறார்கள், ஏன் சென்றனர்? எப்படிச் சென்றனர்? சென்று எவ்வகையில் அங்கு வாழ்வு பெற்றனர்? என்பன பற்றி! துரத்தி அடிக்கிறதே இலங்கை சர்க்கார், அந்தத் துயரக் கடலில் மூழ்கித் தவிக்கும் திராவிட மக்களுக்கு, மீட்சிக்கு மார்க்கமுண்டா, என்று கேட்க நாதியில்லை, கவனிக்க நேரமில்லை. கண் இருக்கிறது, கருத்தும் இருக்கிறது, ஆனால் இந்தப் பிரச்சினையைக் கவனிக்க அல்ல.

இலங்கை சர்க்கார், திராவிட மக்களைத் தேளெனக் கொட்டி, அம்மக்கள் தேம்பித்தவித்துக் கொண்டிருந்தபோது,விஜயலட்சுமி பண்டிட் அங்கு பவனி சென்றதும், அதுபோது ஆசியாவின் ஜோதியின் குடும்பக் குமரிகள், குதூகல விருந்திலே கலந்து கொண்டது மட்டுமல்ல, கொத்தலாவலையுடன் மேனாட்டு முறையில் நடனமாடி ரசித்ததும் தம்பி, நாடு கண்ட காட்சி! கண்ணீர் பொழிகிறான், காவிரிக் கரைக்காரன்; பன்னீரில் குளித்தெழுந்து, பரிமள கந்தம் பூசி, பட்டுப் பட்டாடை அணிந்து கொண்டு, பரங்கியர் முறையிலே "பால் டான்சு' ஆடினர், பண்டிதரின் இல்லத்துச் செல்வக் குமாரிகள் - படாடோபம் கூடாது - ஆர்ப்பாட்டம் ஆகாது - செல்வச் செருக்கு கூடாது - ஏழை மக்கள் புழுப் போலத் துடிக்கும் போது பணக்காரர்கள் பகட்டாக வாழ்ந்து காட்டுவது வெந்த புண்ணிலே வேல் சொருகுவதாகும் என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் பண்டிதர், இந்த அக்ரமத்தைக் கண்டித்தாரில்லை.

பிரான்சுப் புரட்சி வெடிக்கும் முன்பு இது போல நடை பெற்ற துண்டு - மாளிகையிலே மதுக்குடம் உருளும், இடை நெளியும், கடைசிவக்கும், கனவான்கள் கனகப் பந்துகளைப் பெறுவர் காரிகையர் கோலமயில் போலாடுவர், குயிலெனக் கூவுவர், சாகசச் சமரில் யாருக்கு யார் தோற்பது என்பதறிய முடியாதது பிரச்னையாகும், இந்த அநீதியைத் தடுத்திட "காய்கதிர்ச் செல்வனே! நீ யாவது முயன்று பார்'' என்று கூறிவிட்டு, நிலவு மங்கை மறைவாள். கோழி கூவும், கோகிலங்களின் குறட்டை கேட்டு அஞ்சும் - அதே நாட்டில், வயலில் செந்நீரும் கண்ணீரும் சேறாகும்; கருவுற்ற காரிகையின் கதறலொலியைக் கேட்கக் சகியாத கணவன், கர்த்தனின் ஆலயமணிச் சத்தத்தைக் கிளப்பி, சிந்தனையை வேறு பக்கம்திருப்பிட முயல்வான். சவுக்கடி ஒரு புறம், சகதியில் வீழ்தல் மற்றோர் புறம், பட்டினிச் சாவு ஒரு பக்கம், பயங்கர நோய் மற்றோர் பகுதியில், என்று இவ்வண்ணம் ஏழை எளியோர் வதைபடுவர்.

பவனம் அமைக்கிறார்கள், பம்பாயில், திருட்டுப் படகேறியா வந்தாய், திரும்பிப் போ, என்று துரத்துகிறார் கொத்தலாவலை, திரு இடத்தவரை.

வடநாட்டினன் என்றால் அவன் அகதியாகட்டும், அன்னிய நாடுகளில் வசிப்பவனாகட்டும், ஆளும் இனத்தவன் என்ற காரணத்தால், மதிப்பும் சலுகையும் பெறுகிறான்.

அகதிகளுக்காக இந்திய சர்க்கார் அள்ளித் தந்த பணம் கொஞ்சமா?



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 16, 2010 10:11 am

அகதிகளுக்கு இங்கு எல்லாவகையான வியாபாரமும் செய்து கொள்ள, வழியும், வசதியும் தரப்பட்டன.

புதிய அங்காடிகளே அமைக்கப்பட்டன.

அலுவலகங்களிலே நுழைவர் அகதிகள் -ஆடவனாக இருந்தால் ஆத்திரத்தோடு சொல்வான், நானோர் அகதி - என் சொத்து அத்தனையும் பாகிஸ்தானில் பறிபோய்விட்டது - பத்து ரூபாய் தருவாயா - என்று கேட்பான். இரண்டோ மூன்றோ கிடைக்கும், இவ்வளவு அற்பனா நீ, என்று கேட்பது போல, நம்மை முறைத்துவிட்டு, பணத்தைப் பெற்றுக் கொண்டு போவான் ஆரணங்குக்கோ இதழில் கீதம், கண்ணில் நடனம், - நம்மவர்களோ, நாலோ ஐந்தோ அதிகம் தர இயலவில்லையே என்ற கவலையுடன் தருவர். ஒரு நமஸ்தே, கிடைக்கும்; ஒரு பெருமூச்சுப் பிறக்கும்.

அகதிகளுக்காக ஆற்றோரத்தில் அழகு நகர்கள் உண்டாக்கப்பட்டன திராவிடத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் தரப்பட்டன.

இதோ இலங்கையில் இடர்ப்படுகிறார்கள் திராவிடர் - நாட்டற்றவர்கள் என்று நையாண்டி செய்யப்படுகிறார்கள் - யார் அவர்களைக் காப்பாற்றக் கவலை கொள்கிறார்கள்?

இந்தப் பிரச்சினையைச் சென்னை சர்க்கார் கவனித்துக் கொள்ளும் என்று தேஷ்முக் தெளிவளிக்கிறார். எவ்வளவு திகைப்பூட்டும் பிரச்சினையையும் மிகச் சாதாரணமாகக் கருதி மிகத் தாராளமாக வாக்களித்துக் கொண்டு வரும் காமராஜரோ, இது ஒரு பிரச்சினையே அல்ல - இலங்கையிலிருந்து வருபவர்கள், தாங்களாகவே இங்கு வேலைதேடிக் கொள்வார்கள், பிழைத்துப் போவார்கள் என்று கூறிவிடுகிறார்.

பம்பாய் மாகாணக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் படீல், கிழக்கு ஆப்பிரிக்கா சென்று, அங்கு வாழும் இந்தியர்களிடம் பல இலட்ச ரூபாய் வசூல் செய்து கொண்டு வந்திருக்கிறார் - இந்த பவனம் அமைக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

இலட்சக் கணக்கிலே பணம் தந்து, பட்டீலை மகிழ்விக்கச் செய்ய முடிகிறது, வடவரால்,

கண்ணீரைத்தான் காண்கிறோம் இலங்கையில் இடர்ப்படும் திராவிடரிடம் - அதைக் காண வெட்கமும் வேதனையும் அடைகிறோம்.

அவர்களுக்கென்று இங்கோர் தாயகம் இருக்கிறது.

எல்லா வளமும் கொஞ்சும் நாடு.

எனினும், அவர்களுக்கு இங்கு ஒரு கவளம் சோறு இல்லை.

அவர்கள் படும் அவதியைத் துடைத்திடும் ஆற்றல் படைத்த ஒரு சர்க்கார் இல்லை.

அவர்கள் சொந்த நாட்டிற்கே அகதிகளாக வந்து சேரும் போது, விதவை மகளைக் கட்டித் தழுவி விம்மிடும் நலிவுற்ற தாய் போலாகிறது நாடு.

வாழ்கிறார்கள் வளமாக வெளிநாடுகளிலேயும், வடவர்; அந்த வசீகரத்தின் மெருகு கெடாதிருக்கச் செய்வதற்காக பம்பாயில் பவனம் கட்டுகிறார் படீல்.

"தாராவி எங்கே இருக்கிறது?-'' என்று நான் கேட்டேன் - என்னை அழைத்துச் சென்ற பெரியாரிடம். பம்பாய் சுயமரியாதை இயக்கத் தோழர்களின் அழைப்பின் பேரில் அங்கு போயிருந்தோம்.

"தாராவியா?...'' என்று கேட்டபடி, இப்புறமும் அப்புறமும் பார்த்தார். அவருடைய நாசி விரிந்தது, குவிந்தது,- என்ன இது என்று நான் கூர்ந்து கவனித்தேன். "இதோ அருகாமையில் தான் தாராவி - நாற்றமடிக்கிறதே, தெரியவில்லையா?'' என்று கேட்டார் - கேட்டுவிட்டு விளக்கமளித்தார். தோல் பதனிடுகிறார்கள், அந்தத் துர்நாற்றம் அடிக்கிறது. இப்படிப் பட்ட இடம்தானே நம் மக்களுக்குக் கிடைத்திருக்கும், அதனால் தான் தாராவி அருகாமையில் இருக்கிறது என்று கூறினேன் என்றார். உண்மையாகவே, தாராவியை நெருங்கிக் கொண்டிருந்தோம்.

திராவிடர் வடநாடு ஆனாலும் இலங்கையானாலும், சென்று வாழ்கின்றார்கள் என்பதல்ல பொருள், வதைபடுகிறார்கள்.

கங்கைகொண்டான், இமயத்தில் கொடி பொறித்தான்' ஈழம் சென்றான், கடாரம் வென்றான், சாவகம் சென்றான், யவனம் கண்டான் என்றெல்லாம் ஆராய்ச்சி அறைகிறது - உண்மையிலேயே, நமது இதயத்திலே அறைவது போலத்தான் இருக்கிறது, ஆராய்ச்சியாளர் கூறும்போது. இன்றோ! பம்பாயில் பவனம் கட்டுகிறாôகள், பதினாறு இலட்சம் செலவிடுகிறார்கள் - பாண்டியன் பரம்பரை என்ற பட்டயம் பெற்றுள்ள திராவிடர்கள் "கள்ளத் தோணிகள்' என்று நிந்திக்கப்படுகிறார்கள்.

தொழிலெல்லாம் அங்கே, துரைத்தனம் அங்கே என்று ஆகிவிட்ட போது, ஒரு பவனம் தானா கட்ட முடியும்!

வடநாடு, தென்னாடு என்று பேதம் பேசாதே, பவனம் பம்பாயில் இருந்தால் என்ன, அதற்குச் சாக்கடை சுத்தம் செய்யும் மேஸ்திரி யார் தெரியுமா? நான் தான்; தெரிந்து கொள் - என்று நம்மை மிரட்டுகிறார் அழகேசனார். அவர்களின் கருத்திலே, இலங்கைத் திராவிடர் பிரச்சினை என்று ஒன்று இருப்பதாகக் கூடத் தெரிவதில்லை - பிரன்சுப் பிரபுக்களிடம் பில்லைச் சேவகம் பார்த்துப் பிழைத்து வந்தவர்கள், பிரபு போதை மிகுதியால் மயங்கிக் கிடக்கும் நேரத்தில், கோப்பையில் மிச்சமாக இருந்த பானத்தைப் பருகிவிட்டு, நானும் இப்போது பிரபுதான் என்று குளறுவராம். கேளுங்கள் கோவைக் கோமானை, விருதுநகர் அண்ணலை, சோப்புச் சீமானை, தண்ணீரில்லாத ஆறுக்கு இரும்பே சேராத பாலம் கட்டிப் பரவசப்படும் ஓமலூர் கனவானை - செச்சே! தொழில் எங்கே வளர்ந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில்தானே - என்ற சமரசம் பேசுகிறார்கள் - அதற்காகச் சம்பளமும் தருகிறார்கள்!

ரகுபதி ராகவ ராஜாராம் -
பதீத பாவன சீதாராம் -
கியாகர்ணா பகவான் -
வைஷ்ணவ ஜனதோ

இப்படிப் பஜனைப் பாடுகிறார்கள்; பகவத் நாமத்தைக் கூறுகிறார்கள் பாலகர்கள்.

பாபா! மாராஜ்! பாய்யோ! சேட்ஜீ! நமஸ்த்தே; நமஸ்த்தே! என்று கூவிப் பிச்சை எடுக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசம், அசாம், பீகார், மேற்குவங்கம் இங்கிருந்தெல்லாம், சிறார்களை ஒரு கயவாளிக் கூட்டம் ஏய்த்து அழைத்துக் கொண்டு போகிறதாம். உங்களுக்கு நல்ல சாப்பாடு; நல்ல துணிமணி, படிப்பு சொல்லித் தருகிறோம் எங்களோடு வந்து விடுங்கள் என்று ஆசை வார்த்தை சொல்லி ஏழை எளியவர் வீட்டுப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகிறார்கள். தொலை தூரத்தில் அழைத்துச் சென்று அந்தச் சிறுவர்களை பிச்சையெடுக்கச் சொல்லிப் பயிற்சியளிக்கிறார்கள். பஜனை பாட,பல்லைக் காட்டிக் கெஞ்ச, நமஸ்த்தே சொல்ல, கண்ணீர் சிந்த - இத்தகைய பாடம் சொல்லிக் கொடுத்து, சிறார்களை பிச்சை எடுக்கச் செய்கிறார்கள். அந்தச் சிறுவர்கள், இம்சை தாளாமல், பிச்சைக்காரர்களாக, குழல் ஊதிக் கொண்டும், மேளம் கொட்டிக் கொண்டும், உண்டி குலுக்கிக் கொண்டும், உள்ளம் உருகச் செய்யும் பாடல்கள் பாடிக் கொண்டும், தெருத் தெருவாகப் பிச்சை எடுத்து, அந்தக் கயவர்களிடம் பணத்தைக் கொடுக்கிறார்களாம் - சோறு, கந்தல் - இவை கிடைக்குமாம் சிறுவர்களுக்க. ஓடிவிட முயன்றால, உதை, குத்து. பிச்சைக் காசு குறைந்தால் தலையில் குட்டு, கன்னத்தில் அறை, இப்படிக் கொடுமைகள்!

1400-சிறுவர்கள்; 147-சிறுமிகள் காப்பாற்றப்படும் ஒரு ஆஸ்ரமத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் - நீங்கள் தருகிற பணம் அந்த ஆசிரமத்துக்குத்தான் என்று புளுகிப் பிச்சை எடுக்கும்படி, சிறுவர்களை, அக் கயவர்கள் மிரட்டி வேலை வாங்கி வருகிறார்கள். போலீசுக்கு, இந்த அக்ரமம் தெரிந்து, இப்போது கயவர் சிலர் பிடிட்டதாகச் செய்தி வந்திருக்கிறது.

டில்லி சர்க்காரில் மந்திரி வேலை பெற்றுக் கொண்டு, இங்கே அடிக்கடி பவனிவந்து வடநாடு தென்னாடு என்று பேசுவது கூடாது, அகில பாரதம், ஏக இந்தியா, என்ற தத்துவத்தைத் தாரகமாகக் கொள்ள வேண்டும் என்று இங்கு "பிரசங்கம்' செய்பவர்களின் மீது நினைவு சென்றது எனக்கு, இந்தச் செய்தியைப் படித்தபோது.

ஏய்த்துப் பிழைப்பவர்கள் ஏமாளிச் சிறுவர்களைப் பிச்சைக் காரர்களாக்கி, பணம் பறிக்கிறார்கள்.

பதவிக்குப் பல்லிளிப்போரை, பசப்பிடத் தெரிந்த வடநாட்டுத் தலைவர்கள், மந்திரி வேஷம் போடச் செய்து, தொண்டரடிப்பொடி ஆழ்வார்களாக்கி, திராவிடத்திலே "பஜனை' செய்யச் சொல்கிறார்கள்.

இங்கே வரி வசூலித்துத் தருகிறார்கள் - பஜனையும் நடத்துகிறார்கள் - பாதி தேங்காய் மூடியும் ஒரு பிடி சுண்டலும் கொஞ்சம் வெண் பொங்கலும் கிடைக்கிறது - உண்டு, உருசி உருசி! என்று கூவி ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறார்கள் இந்த அடிவருடிகள். இவர்களின் இனத்தவர், திராவிடர், வெளிநாடு சென்றாவது வாழ்வு நடத்துவோம் என்று கடல் கடந்து சென்றும், வறுமையையே கண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் சார்பாக வாதாடவும் வகையற்றுக் கிடக்கிறார்கள். - அதேபோது, வெளிநாடுகளிலே வியாபாரக் கோமான்களாகி வடவர் கொழுக்கிறார்கள் - வெளிநாடு சென்றுள்ளவர்களின் சீர்சிதையாதிருக்கப்பாதுகாப்புத் தேடப்படுகிறது, ஆறடுக்குப் பவனம் கட்டப்படுகிறது.

அங்கே பவனம்!
இங்கே?

தம்பி, அழகேசர்களின் கவனமெல்லாம், தங்களுக்கு அடுத்த முறை என்ன பதவி கிடைக்கும் என்று ஆருடம் பார்ப்பதிலும். நேருவின் தயவைப் பெற்றால் எங்காவது ஒரு ராஜபவனத்தில் கொலுவிருக்கும் பாக்கியம் கிடைக்குமே என்று ஏங்கிக் கிடப்பதிலும்தான் செல்லும். அவர்கள், ஏன் வடநாடு, தென்னாடு என்று பேசுவது பேதமை என்று கூறுகிறார்கள் என்ற சூட்சமம் மக்களுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது; எனவே, அவர்களின் பேச்சுப் பற்றிக் கவலைப் படாமல், நீ, வடநாட்டவர்கள் பவனங்களில் வாழ்வதை எடுத்துக் காட்டி, இது நியாயமா? ஏன் இதனை அனுமதிக்க வேண்டும்? எத்தனை காலத்துக்கு இதைச் சகித்துக் கொள்ள முடியும்? நமக்கென்று ஓர் நாடு இல்லையா? அது ஏன் அன்னியரின் வேட்டைக்காடாகி இருக்கிறது? என்று கேட்டுக் கேட்டு அவர்களின் முகம் கேள்விக் குறியாக மாறும்படி செய். தம்பி! பிறகு பார், இந்த அழகேசர்களின் நிலையை! ஆப்பசைத்த மந்தி கதை தெரியுமல்லவா - சிறுவனாக இருக்கும் போது சொல்வார்களே - அந்த நிலைதான்!

அங்கே பவனம், தம்பி, இங்கே படகுப் பயணம்.

அங்கே ஆறு அடுக்கு மாளிகை, இங்கே சேரி.

இதை எடுத்துக் காட்டு, தம்பி; நித்த நித்தம் எடுத்துக் காட்டு; தொடுக்கப்படும் தூற்றல் கணைகளைத் துச்சமென்று எண்ணி தூய உள்ளத்துடன் தாயக விடுதலைக்கான தன்னிகரற்ற தொண்டாற்றிக் கொண்டிரு. பிறகு பார், நாட்டிலே புதியதோர் பொலிவு பூத்திடுவதை; உன் பணியினால், நம் நாடு பொன்னாடு ஆகத்தான் போகிறது. ஒப்பற்ற பணியிலே தம்பி, நாம் ஈடுபட்டிருக்கிறோம்; உன் அருந்திறனை நம்பித்தான், மார்தட்டி நின்று மாற்றாரிடம் சொல்லி வருகிறேன், திராவிட நாடு திராவிடருக்கே என்று.

அன்புள்ள,
அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Anna_sign
17-7-1955



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக