ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by ayyasamy ram Today at 13:42

» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 11:31

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 11:30

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 11:28

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 11:25

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 11:24

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 11:23

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 11:23

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 11:21

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:53

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 9:35

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:04

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 20:58

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 20:57

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 20:51

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 20:45

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 20:39

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 14:58

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 14:57

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 14:56

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 14:55

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 14:49

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 14:48

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 14:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 14:03

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 13:59

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 13:57

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 13:56

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 13:55

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 13:41

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 13:13

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri 30 Sep 2022 - 22:35

» Link
by ayyasamy ram Fri 30 Sep 2022 - 22:33

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri 30 Sep 2022 - 22:15

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri 30 Sep 2022 - 22:09

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri 30 Sep 2022 - 18:28

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri 30 Sep 2022 - 18:01

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri 30 Sep 2022 - 17:23

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri 30 Sep 2022 - 14:32

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri 30 Sep 2022 - 14:17

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri 30 Sep 2022 - 14:16

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:33

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:33

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:32

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:30

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:29

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu 29 Sep 2022 - 17:29

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed 28 Sep 2022 - 23:11

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed 28 Sep 2022 - 23:08

» ஊழல் கரை..!
by ayyasamy ram Wed 28 Sep 2022 - 23:07

நிகழ்நிலை நிர்வாகிகள்


தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

+15
ரா.ரா3275
ஜாஹீதாபானு
ராஜா
மாணிக்கம் நடேசன்
ரேவதி
V.Annasamy
புவனா
மோகன்
கலைவேந்தன்
Aathira
guruprasath
அன்பு தளபதி
சிவா
tthendral
krishnaamma
19 posters

best தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Thu 28 Oct 2010 - 18:28

First topic message reminder :

தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும்.


Last edited by krishnaamma on Sat 12 Mar 2022 - 14:21; edited 2 times in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down


best மோஹன் தால்'

Post by krishnaamma Mon 6 Oct 2014 - 20:17

தேவையானவை:

Condensed milk 400 gms tin 1
கடலை மாவு 3 கப்
பிஸ்தா, பாதாம் , முந்திரி பொடித்து வைத்தது 3 டேபிள் ஸ்பூன்
நெய் 1 கப்
பால் 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் நெய்விட்டு கடலை மாவை கருகாமல் வறுக்கவும்.
இதற்கு ஒரு 10 -12 நிமிடங்கள் ஆகும்.
பொறுமையாக வறுக்கணும்.
அப்புறம் ஈசிதான். புன்னகை
அடுப்பை சின்னதாக்கி விட்டு, condensed மில்க் ஐ விட்டு நன்கு கிளறவும்.
கைவிடாமல் கிளறவும், அது மொத்தமாய், சுருண்டு வரும் வரை கிளறவும்.
நெய்தடவிய தட்டில் கொட்டவும்.
சமப்படுத்தவும்.
இப்போ உடைத்த பருப்புகளை அதன் மீது தூவி அலங்கரிக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடலாம்.
அவ்வளவு தான் 'மோஹன் தால்' ரெடி.
வாயில் கரையும் அற்புதமான ஸ்வீட் ரெடி.
எங்க கிருஷ்ணா அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் இது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best "பாசந்தி"

Post by krishnaamma Mon 6 Oct 2014 - 21:23

தேவையானவை :

பால் – 2 லிட்டர் (ஃபுல் கிரீம் மில்க் )
சர்க்கரை – சுவைக்கேற்ப
குங்குமப்பூ – சிறிதளவு
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்பருப்பு - ஐந்து - தேவையானால்
முந்திரிப்பருப்பு – ஐந்து - தேவையானால்

செய்முறை :

ஒரு கனமான உருளியில் பாலை விட்டு  அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு கரண்டி (அ) ஸ்பூனால் பால் மேலே வரும் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டு வரவும்.
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
குறுக்கிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும்.
நான்கு கொதித்தது மீண்டும் கூறுகினதும், பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.
நன்கு ஆறினதும் பரிமாறலாம் அல்லது ஃபிரிஜ் இல் வைத்து பிறகு பரிமாறலாம்.
குளிர்ச்சியாக கப்புகளில் எடுத்துக் கொடுக்கும்போது பாதம் மற்றும் முந்திரியை மெல்லியதாக சீவி போட்டுக்கொடுத்தால் ........ அமிர்தமாய் இனிக்கும்.."பாசந்தி"


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best பாதுஷா

Post by krishnaamma Mon 6 Oct 2014 - 21:27

பாதுஷா - எல்லோருக்கும் பிடித்த 'இனிப்பு' குறைவான இனிப்பு இது புன்னகை செய்வது ரொம்ப கஷ்டம் என்று நினைக்க வேணாம் ரொம்ப சுலபம்.

தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் ! - Page 9 6JvOPY54ROeW2RQVExw2+260720141056

இதோ அதன் ரெசிபி :

தேவையானவை :

1 கப் மைதா
பேக்கிங் சோடா 1/4 டீ ஸ்பூன்
சமையல் சோடா ஒரு சிட்டிகை
சர்க்கரை 1/2 ஸ்பூன் (பொடிக்கவும் )
தயிர் 1 டேபிள் ஸ்பூன்
நெய் - உருக்கியது - 1/8 கப்
வாசனை இல்லாத எண்ணெய் - 1/2 டீ ஸ்பூன்

சர்க்கரை பாகு வைக்க :

1 1/2 கப் சர்க்கரை
1 1/2 கப் தண்ணீர்
ஏலப்பொடி கொஞ்சம் அல்லது ரோஸ் எசன்ஸ்

பொறிக்க : எண்ணெய்

செய்முறை :

முதலில் மைதாவை சோடா உப்பு மற்றும் பேகிங் சோடா போட்டு சலிக்கவும்.
ஒரு பேசினில் சலித்ததை போடவும்.
வேறு ஒரு சின்ன கிண்ணி இல் தயிர் மற்றும் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
மாவில் நெய் மற்றும் எண்ணையை விட்டு நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் அது பார்க்க 'பிரட் துகள்கள்' போல இருக்கும்.
அப்படி இருந்தால் பதம் சரி என்று அர்த்தம்.
இப்போ கிண்ணி இல் இருக்கும் தயிர் மற்றும் சர்க்கரையை நன்கு கரைத்து, மாவில் விடவும்.
'மெத்' என்று பிசையவும்.
தேவையானால்......தேவையானால் துளி ... துளியே துளி தண்ணீர் விட்டுக்கலாம்.
அவ்வளவு தான் இதை அப்படியே சுமார் 1 மணிநேரம் , மூடி வைத்து விடவும்.
1 மணி நேரத்துக்கு பிறகு ஒரு உருளி அல்லது வாணலி இல் தண்ணீர் விட்டு சர்க்கரையை போடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
'ஒரு கம்பி 'பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் எண்ணெய் வைக்கவும்.
அடுப்பை 'சிம்' இல் வைக்கவும்.
பிறகு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உள்ளங்கை இல் வைத்து கட்டை விரலால் உருண்டை இன் நடுவில் அழுத்தி பள்ளம் போல செய்யவும்.
இது போல செய்வதால் , பாதுஷாக்கள் நன்கு பொறியும். எனவே இதை மறக்க வேண்டாம்.
இதே போல மற்ற எல்லா மாவையும் செய்யவும்.
நான் கொடுத்துள்ள அளவிற்கு 15 'மினி பாதுஷாக்கள்' வரும்.
இப்போ வாணலி இல் எண்ணெய்விட்டு சில நிமிடங்களிலேயே , அது ரொம்ப சூடாவதர்க்குள் பாதுஷாக்களை போடணும்.
அதாவது, எண்ணெய் இல் ஒரு துளி மாவை போட்டால் அது 1 நிமிடம் கழித்துத்தான் மேலே வரணும்.
உடனே மேலே வந்தால் எண்ணெய் இன் சூடு அதிகம் என்று அர்த்தம்.
அவசரப்படாமல் காத்திருக்கவும்.
2 -3 நிமிடங்கள் கழித்து திருப்பி விடவும்.
நன்கு பவுன் கலர் வந்ததும் எடுத்து பாகில் போடவும்.

அவ்வளவு தான் சூப்பர் பாதுஷாக்கள் ரெடி.
கொஞ்சம் ஆறினதும் சாப்பிடலாம்.
விண்டு பார்த்தால் உள்ளே 'லேயர் லேயராக' இருக்கணும்.
அது தான் பதம்.
மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு இருக்கும்.
ஆனால் அதுக்கு ஓர் 12 மணி நேரம் காத்திருக்கணும் ! ரிலாக்ஸ்
ஆனால் உடனே சாப்பிட்டு பார்க்கலாம் புன்னகை

குறிப்பு: மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு வரவேண்டாம் என்றால், சர்க்கரை பாகில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு விடணும்.
இதற்கான படங்களை கிழே கொடுத்துள்ளேன் ; பார்க்கவும்.
படிக்கத்தான் இவ்வளவு பெரிசா இருக்கே தவிர 10 நிமிஷத்தில் செய்து விடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best தட்டை

Post by krishnaamma Sat 11 Oct 2014 - 21:36

தட்டை

தேவையானவை:

1cup அரிசி மாவு ( களைந்து உலர்த்தி அரைத்து )
3sp வெண்ணை
2 -3sp உளுந்து பொடி (வறுத்து அரைத்து )
2 -3sp தேங்காய் துருவல்
2sp கடலை பருப்பு (ஊறவைத்து )
2sp மிளகாய்பொடி
1sp எள்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மேல் கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.
பிறகு சிறிது தண்ணிவிட்டு கெட்டியாக பிசையவும்.
ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இல்லை துண்டில் எண்ணெய் தடவவும்.
சிறிதளவு மாவு எடுத்து தட்டை போல் தட்டவும்.
அது போல் 4 - 5 தட்டினதும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
தட்டி வைத்துள்ள தட்டைகளை போடவும்.
நிதானமாக திருப்பவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இது போல் செய்யவும்.  
கர கரப்பான தட்டை ரெடி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best 'தேங்காய் பால் ரிப்பன் பகோடா !

Post by krishnaamma Tue 21 Oct 2014 - 21:39

தேவையானவை :

2 cup அரிசி மாவு
1 1 / 2cup கடலை மாவு
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
2 - 3 டேபிள் ஸ்பூன் தேங்காய்  பால் பவுடர் ( அல்லது 1/2 கப் தேங்காய் பால் )
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு,மிளகாய்பொடி,சோடா உப்பு, உப்பு மற்றும் நெய் யை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தேங்காய் பால் என்றால் அப்படியே விட்டுக்கொள்ளுங்கள், இல்லை தேங்காய் பால் பவுடர் என்றால், வெந்நீரில் கரைத்து கொள்ளவும்.
'தேங்காய்  பால் விட்டு நன்கு பிசையவும்.
வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
'தேங்காய்  பால்  ரிப்பன் பகோடா' தயார்.
ரொம்ப அருமையாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best ஷோகன் ஹல்வா :)

Post by krishnaamma Wed 22 Oct 2014 - 22:01

ஷோகன் ஹல்வா புன்னகை

இந்த ஹல்வா சாக்கலேட்   போல இருக்கும்................மிருதுவாக இருக்காது புன்னகை நல்லா 'கடக் முடக்' என்று இருக்கும்........பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை

தேவையானவை:

கடலை  மாவு 1 கப்
சர்க்கரை 2 கப்
நெய் 2 கப்
ஏலப்பொடி கொஞ்சம்
தேவையானால் உடைத்த பாதாம் முந்திரி பருப்புகள் 1 டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு தட்டில் நெய் தடவி வைத்துகொள்ளவும்.
ஒரு வாணலி இல் 2 கப் சர்க்கரை மற்றும் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
ஏலப் பொடி  போடவும்.
1 கம்பி பதம் வரும் வரை கொதிக்கட்டும்.
அதற்குள், மற்றும் ஒரு வாணலி இல் அல்லது ஆழமான உருளி இல்  1 கப் நெய்விட்டு கடலை மாவை வறுக்கவும்.
நெய்விட்டதும் அது 'liquid ' ஆக ஆகிவிடும்...........அப்படியே அடுப்பை 'சிம்' இல் வைத்து கை விடாமல் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
கொஞ்சம் பிரவுன் ஆகும் வரை இப்படி வறுக்கணும்.
பக்கத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகை எடுத்து  இந்த கடலை மாவில் விடவும்.
பொங்கி வரும்...பத்திரம்.............நன்கு கிளறவும்.
பொடித்து வைத்துள்ள பருப்புகளை போடவும்.
மீதி  உள்ள நெய்யையும் கொட்டி கிளறவும்.
நுரைத்து , நன்கு சுருண்டு வரும்போது ஏற்கனவே நெய் தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
கொஞ்சம் ஆறினதும் துண்டம் போடலாம்.
'சூப்பரா ஆக' இருக்கும்..............இன்று தான் செய்தேன்.............போட்டோ எடுத்திருக்கேன் அப்புறம் போடுகிறேன் புன்னகை

தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் ! - Page 9 KqLmpyNZTsqskiKO9GNJ+211020141261


Last edited by krishnaamma on Thu 23 Oct 2014 - 14:33; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by யினியவன் Wed 22 Oct 2014 - 22:14

அல்வா திங்காம அல்வா குடுக்க நெனச்சா அம்மா ஷோ (இங்) கன் அண்ட் பயமுருத்திங் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Wed 22 Oct 2014 - 22:23

யினியவன் wrote:அல்வா திங்காம அல்வா குடுக்க நெனச்சா அம்மா ஷோ (இங்) கன் அண்ட் பயமுருத்திங் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098596

இதை பயப்படாமல் சாப்பிடலாம்; வாய் ஒட்டிக்காது இனியவன்......சாக்கலேட் போல இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by T.N.Balasubramanian Wed 22 Oct 2014 - 22:48

சோன் ஹல்வா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று .
டெல்லி சென்றால் , அஜ்மல்கான் ரோட் , அல்லது கரொல்பாக்ஹ் பஞ்சாப் ச்வீட் ஸ்டாலில் கிடைக்கும் .
நீண்ட நாட்கள் வைத்து இருந்தாலும் கெட்டுப் போகாது . ஒரே நெய் .ஆனால் கை நோ பிசுபிசு .
உடைத்து வாயில் போட்டுக்கொண்டு , நாக்கில் எச்சில் ஊற ஊற ---------------
(6/8 இன்ச் வட்டங்களில் கிடைக்கும் )

ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Thu 23 Oct 2014 - 0:16

T.N.Balasubramanian wrote:சோன் ஹல்வா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று .
டெல்லி சென்றால் , அஜ்மல்கான் ரோட் , அல்லது கரொல்பாக்ஹ் பஞ்சாப் ச்வீட் ஸ்டாலில் கிடைக்கும் .
நீண்ட நாட்கள் வைத்து இருந்தாலும் கெட்டுப் போகாது . ஒரே நெய் .ஆனால் கை நோ பிசுபிசு .
உடைத்து வாயில் போட்டுக்கொண்டு , நாக்கில் எச்சில் ஊற ஊற ---------------
(6/8 இன்ச் வட்டங்களில் கிடைக்கும் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098610

ம்..............ரொம்ப சரி ஐயா புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by மாணிக்கம் நடேசன் Thu 23 Oct 2014 - 8:27

மிக்க நன்றி அக்கா. அக்கான்னா அக்கா தான். சமையல்ல சூப்பர் அக்கா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Thu 23 Oct 2014 - 14:16

மாணிக்கம் நடேசன் wrote:மிக்க நன்றி அக்கா. அக்கான்னா அக்கா தான். சமையல்ல சூப்பர் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1098639

நன்றி மாமா, உங்க உடல் நிலை தேவலாமா?..............தலை தீபாவளி நல்லா ஆச்சா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by ஜாஹீதாபானு Thu 23 Oct 2014 - 14:19

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

கண்டிப்பா பிள்ளைகளுக்கு செய்து குடுக்கனும்.

நேத்து உங்களுக்கு கால் செய்தேன் பிசி டோன் கேட்டுட்டே இருந்தது.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31335
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by krishnaamma Thu 23 Oct 2014 - 14:27

ஜாஹீதாபானு wrote:ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

கண்டிப்பா பிள்ளைகளுக்கு செய்து குடுக்கனும்.

நேத்து உங்களுக்கு கால் செய்தேன் பிசி டோன் கேட்டுட்டே இருந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1098693

அடாடா............சாரி பானு, நேத்து நிறைய போன் calls .............எப்பவும் இப்படி இருக்காது...............நேத்து கொஞ்சம் அதிகம் புன்னகை ...................போன் கிடைக்கலை என்றாலும், உங்க அன்புக்கு நன்றி பானு புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by ஜாஹீதாபானு Thu 23 Oct 2014 - 14:29

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

கண்டிப்பா பிள்ளைகளுக்கு செய்து குடுக்கனும்.

நேத்து உங்களுக்கு கால் செய்தேன் பிசி டோன் கேட்டுட்டே இருந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1098693

அடாடா............சாரி பானு, நேத்து நிறைய போன் calls .............எப்பவும் இப்படி இருக்காது...............நேத்து கொஞ்சம் அதிகம் புன்னகை ...................போன் கிடைக்கலை என்றாலும், உங்க அன்புக்கு நன்றி பானு புன்னகை அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1098698

புரிஞ்சிக்கிட்டேன்மா...புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31335
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

best Re: தீபாவளி பலகாரங்கள் ! - தீபாவளி லேகியம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை