புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
4 Posts - 3%
Manimegala
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
423 Posts - 48%
heezulia
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
29 Posts - 3%
prajai
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_m10தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் தேசியத் தலைவரின் நேர்க்காணல்கள்-1

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 24, 2010 10:54 am

1984

தமிழீழம் என் தாகம்

வே.பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமாவார். இவரது வயது முப்பது. ‘விடுதலைப் புலிகள்’ இயக்கம் 1972ம் ஆண்டு ஒரு தலைமறைவு விடுதலை இயக்கமாக தோற்றம் கண்டது. 1978 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசாங்கம் இந்த இயக்கத்தை தடை செய்தது. சிறீலங்கா அரசாங்கம் வலை விரித்துத் தேடும் போராளிகளில் இவர் முதன்மையான இடத்தை வசிக்கிறார். இவரது தலைக்கு சிறீலங்கா அரசு வைத்திருக்கும் விலை பத்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும். இவர் அன்பானவர், பண்பானவர், மிகவும் பலம் வாய்ந்த விடுதலை இயக்கத்திற்கு தலைமைத் தாங்கி வழிநடத்துபவர் என்கிற முறையில் அவர் சிங்கள ஒடுக்குமுறைகளிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் உய்ர்ந்த இலட்சியத்தில் தீவிரமும் உறுதியும் மிக்கவராக விளங்குகிறார்.

வழக்கமான அரசியல் அமைப்பில் இருந்து விலகவும், ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கவும் உங்களைத் தூண்டியது எது? அத்தகைய ஒரு விடுதலை இயக்கம் சட்ட விரோதமாக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?

இலக்கையின் சனநாயக பாராளுமன்ற அமைப்பு அல்லது நீங்கள் சொல்வதைப் போல இலங்கையின் வழக்கில் உள்ள அரசியல் அமைப்பு, எப்போதுமே பெரும்பாண்மையினரின் ஆதிக்கத்தை சிறுபாண்மையினர் மீது திணித்து வந்திருக்கின்றது. இந்த அரசு அமைப்பானது எங்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது என்பதுடன், எமது நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது. காலம் காலமாக அரசின் ஒடுக்குமுறை ஆட்சியானது, எம் மக்களின் வாழ்வு நிலையைச் சகிக்க முடியாததாகவும், துன்பகரமானதாகவும் மாற்றிவிட்டது. எம் மக்கள் நடத்திய சாத்வீக சனநாயக போராட்டங்கள் இராணுவத்தால் நசுக்கப்பட்டன. எமது நியாயமான கோரிக்கைகள் முற்று முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டதுடன், இந்த அடக்குமுறையானது தமிழ் மக்களின் உயிர் வாழ்வுக்கே ஆபத்தாக அமைந்தது. இத்தகைய சூழ்நிலைகளே என்னை ஒரு விடுதலை இயக்கத்தை உருவாக்கத் தூண்டின. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, சிங்கள அடக்குமுறையிலிருந்து இறுதியாக தங்களை விடுவித்துக் கொள்ளவும் எம் மக்களுக்கு ஆயுத போராட்டமே நடைமுறைச் சாத்தியமான ஒரே வழியென்று நான் உணர்ந்தேன். எங்கள் இயக்கம் தடை செய்யப்படும் என்பது எனக்கு முன்கூட்டியேத் தெரியும். அதனால்தான் எங்கள் இயக்கத்தை அதன் ஆரம்பகாலத்திலிருந்தே ஒரு தலைமறைவு இயக்கமாக உருவாக்கினோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழயென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்பந்தித்த உங்களின் தனிப்பட்ட அனுபவங்களைச் சற்று கூறுவீர்களா? கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?

நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்தபோது அவர் இந்த இனவெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இனக் கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்பிலிருந்த அவரது வீட்டைத் தாக்கினார்கள். அவரது வீட்டுக்குத் தீ வைத்து, அவருடைய கணவரையும் குரூரமாக்க் கொலை செய்தனர். அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரது உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன் வீசிக்கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விபட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதையெல்லாம் கேட்கும்போது என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும், அன்பும் ஏற்பட்டன. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது. நிராயுத பாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிரான ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்.

எந்தக் கட்டத்தில் நீங்கள் பாராளுமன்ற அமைப்பில் நம்பிக்கை இழந்தீர்கள்? உங்கள் நம்பிக்கையை சிதைத்தது எது?

எழுபதுகளின் ஆரம்பத்தில், இளம் தலைமுறையினர் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையிழந்திருந்த காலகட்டத்தில்தான் நான் அரசியலில் நுழைந்தேன். ஆயுதம் தாங்கிய புரட்சியவாதியாகவே நான் அரசியலில் புகுந்தேன். அடுத்தடுத்து பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் எமது மக்களின் துன்ப துயரங்களை ஈவிரக்கமின்றி முற்றிலும் புறக்கணித்து வந்த காரணத்தினால் பாராளுமன்ற அரசியலில் எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது.

நீங்கள் விடுதலைபுலிகள் இயக்கத்தை எவ்வாறு ஆரபம்பித்தீர்கள்?

எம் மக்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டம்தான் ஒரேவழி என்பதில் முழுமையான நம்பிக்கையுடைய புரட்சிகர இளைஞர்களின் துணையுடன்தான் நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தேன்.

சண்டே(இந்தியா)
சந்திப்பு : அனிதா பிரதாப்
11-17.3.1984

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக