புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
48 Posts - 43%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
414 Posts - 49%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை


   
   

Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jul 31, 2010 4:34 am

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.



நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Oct 19, 2010 1:59 am

அட்சியில் அமர்ந்த மூன்றாவது மாதமே புலிகளுடன் பேச்சுவார்த்தைக்காக அழைத்தார் பிரேமதாசா. விடுதலைப் புலிகளும் சம்மதித்தனர்.

வன்னிப் பகுதியில் இருந்த புலிகளை, உலங்கு வானூர்தியில் ஏற்றிக் கொண்டு கொழும்பில் உள்ள ஹில்டன் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்தனர். மே 1989, அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி முடித்திருந்தார்கள் புலிகள் சார்பில் அன்ரன் பாலசிங்கம் மற்றும் மாத்தையா உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்துக் கொண்டனர். அரசாங்க சார்பில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

பிரேமதாசா விடுதலைப் புலிகளை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். பேசி பேசி நேரத்தைக் கடத்துவது. கத்தை கத்தையாக ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்வது. அப்படியே அவர்களை தன் பக்கம் இழத்துக்கொள்வது. ஆட்சிகள் மாறினாலும் சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரும் குள்ளநரியாகவே இன்று வரை இருந்து வருகின்றனர். பிரேமதாசாவின் உள்நோக்கத்தைப் புரிந்துக் கொண்ட பிரபாகரன், அமைதிப்படையைக் காரணம் காட்டியே, சிங்களவனிடமிருந்தே பணத்தையும் ஆயுதங்களையும் வாங்கிக் குவித்தார்.

யூலை 13, 1989. TULF தலைவர்களான அமிர்தலிங்கமும் யோகேசுவரனும் அமிர்தலிங்கத்தின் வீட்டு மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சிவ சிதம்பரமும் இருந்தார். கீழே வீட்டுப் பணி செய்துக் கொண்டிருந்த அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்கரசிக்கு மாடியில் இருந்து வெடிச் சத்தம் கேட்டது. போய்ப் பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். யோகேசுவரன் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் தலையை தொங்கப் போட்டபடி சிவசிதம்பரம். அருகில் அமிர்தலிங்கம், உயிரற்ற உடலாய். இவர்களைச் சுட்டுக் கொன்ற விசு, அலோசியஸ் என்ற இரண்டு புலி மறவர்கள் அமிர்தலிங்கத்தின் பாதுகாவலர்களால் சுடப்பட்டு இறந்துக் கிடந்தனர்.

யூலை 18,1989. மாம்பலப்பிட்டியாவில் PLOTE தலைவர் உமா மகேசுவரன் உடல் கண்டெடுக்கப்பட்டது. மார்பில் மூன்று தோட்டாக்கள். அப்போது அவ்வியக்கத்துக்குள் பல உட்பூசல்கள் இருந்ததால், புலிகளை யாரும் சந்தேகிக்கவில்லை.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 4:49 am

யூலை 20, 1989. ‘தி இந்து’ சென்னையில் இருந்து கொட்டை எழுத்துக்களில் ஒரு செய்தியை வெளியிட்டது.
பிரபாகரன் கொலை! மாத்தையா அவரைக் கொன்றுவிட்டார்.!

தூர்தர்சனிலும், ஆல் இந்தியா ரேடியோவிலும் கூட இதே செய்திதான். விரைவில், கொழும்பிலும் இதே செய்திதான். இந்தச் செய்தி உண்மையென பத்திரிக்கையாளர்களிடம் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத்முதலி.

தினமலர் ஒரு படி மேலே சென்றது. எட்டு பத்தி செய்தி. உடன் இரண்டு படங்கள். ஒன்று மாத்தையாவுடையது. மற்றொன்று இறந்துபோன பிரபாகரனுடையது. உபரி செய்தியாக கிட்டுவும் இறந்துவிட்டாரென. வவுனியாவில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் பிரபாகரனுடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. பிரபாகரனை எதற்கு கொன்றாரென மாத்தையா பேசிய ஆடியோ கேசட் சிக்கியுள்ளது. பிரபாகரனுடைய உடல் வல்வெட்டித்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்படும்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 4:51 am

பிரேமதாசா, விடுதலைப் புலிகளின் இணைப்பின் மூலம் அதிகம் பயனடைந்தவர்கள் புலிகளே. இந்திய இராணுவத்தை விரட்டினார்கள். தமிழ் துரோகிகளை ஒழித்தார்கள். மில்லியன் கணக்கில் பணம். விதவிதமான ஆயுதங்கள். சிறையில் அடைப்பட்டிருந்த 12 புலிகளை விடுவித்துக் கொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகு மிக சொற்ப காலமே மதிவதனியுடன் செலவிட்டார் பிரபாகரன். யுத்தம். மோதல். எதிரிகள். ஐரோப்பாவிற்கு ஏதோ ஒரு நாட்டிற்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். ஆறு ஆண்டுகள் கழிந்தபின், சனவரி 20,1990-ம் ஆண்டு மதிவதனி, மகள் துவாரகா(இரண்டரை வயது), மகன் சார்லஸ் அன்ரணி(ஐந்து வயது) மூவரையும் அன்ரன் பாலசிங்கமும் அவரது மனைவி அடேல் பாலசிங்கமும் அழைத்து வந்தனர். இலங்கையில் இருந்து அரசாங்க உலங்கு வானூர்தி மூலம் வன்னிக்கு அழைத்து வரப்பட்டனர்.

சிறிது காலம் போர் வேண்டாம் என இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். ஆனால் இலங்கை இராணுவத்தால் சும்மா இருக்க முடியவில்லை.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 4:54 am

EPRLF தலைவர் பத்மநாபன் சென்னை சூளைமேட்டில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் அவரை சந்திக்க சாந்தன் என்பவர் பார்க்கவந்தார். பத்மநாபனின் பக்கத்து வீட்டில் இருந்தவர். உட்கார வைத்து தேநீர் கொடுத்தார். இருவரும் உற்சாகமாக பேசினார்கள். இலங்கையைப் பற்றி, சென்னை வெயிலைப் பற்றி, EPRLF பற்றி. அடிக்கடி வந்து பேசிக் கொண்டிருந்தார்.

யூலை 6,1990. சாந்தன் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். இன்று மாலை ஒரு மீட்டிங் நடக்கப்போகிறது. EPRLF உறுப்பினர்கள் பலர் வரப் போகிறார்கள்.

ன்று மாலை மீட்டிங் நடந்துக் கொண்டிருந்தது. பத்மநாபனின் மனைவி ஆனந்தி அப்போது வீட்டில் இல்லை. எங்கிருந்து வந்தார்கள்? எத்தனை பேர் வந்தார்கள் என தெரியவில்லை. ஓயாமல் சுட்டார்கள். தனது பன்னிரண்டு சகாக்களுடன் பத்மநாபன் இறந்துபோனார்.

பின்னர் தான் தெரிந்தது, சாந்தன் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 5:01 am

பத்மநாபாவின் கொலை EPRLF இயக்கத்தை நடுங்க வைத்தது. EPRLF அழிக்கப்பட்டது. விரைவில் அந்த இயக்கத்தைச் சேர்ந்த மிச்ச போராளிகளும் காணமல் போனார்கள். வரதராசப் பெருமாள், இந்தியாவிற்கு தப்பி வந்தார். கடந்த ஆண்டு நடந்த நான்காம் ஈழப் போர் வரை ராஜஸ்தானில் பத்திரமாக இந்திய உளவு அமைப்புகளால் பாதுகாக்கப்பட்டார் வரதராச பெருமாள் என்று ஒரு கேள்வி. இன்று இலங்கையில் உள்ளார்.

1989-ல் நடாத்தப்பட்ட தேர்தலில் EPRLF கலந்துக் கொண்டது.. இத் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணித்தனர். அன்று முதல் EPRLF இந்தியாவின் கைப்பாவையாக செயல்படத் துவங்கியது. இந்தியா தும்ம சொன்னால் தான் EPRLF தும்மியது. இது புலிகளை ஆத்திரப்படுத்தியது. அதன் விளைவாக EPRLF அழிக்கப்பட்டது. EROS அமைப்புக்கு முன்பாக TELO அமைப்பு அழித்தொழிக்கப்பட்டது. ஏப்ரல் 20, 1986 முதல் TELO இயக்கத்தினரை தாக்க ஆரம்பித்தனர் விதலைப் புலிகள். அளவட்டி, கட்டுவன், வட்டுக்கோட்டை, மானிப்பாய், கோப்பாய், மயிலட்டி, நவாந்துளை, மிருகவில் – எங்கெல்லாம் TELO அமைப்பினர் முகாம்கள் அமைத்தார்களோ அங்கெல்லாம் சென்று தாக்கினார்கள். விரைவில் அத்தனை முகாம்களும் மறைந்துப் போயின. TELO இயக்கத்தின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் கோண்டாவில் என்னும் பகுதியில் ஒளிந்துக் கொண்டார். கிட்டுவின் தலைமையில் சென்ற குழு அவரை அங்கேயே சுட்டுக் கொன்றது.

EROS இயக்கம் தன்னை முழுவதுமாக கலைத்துக்கொண்டு விடுதலைப் புலிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டது. உமா மகேசுவரனின் மறைவிற்கு பின் தனக்குத் தானே திரை மூடிக் கொண்டது PLOTE.

ஆனால் புலிகளை சிறுமைப்படுத்துவதற்காக இந்திய உளவு அமைப்பான ‘றோ’ இதனை சகோதர யுத்தம் என அவதூறு பரப்பியது.

சற்று யோசித்துப் பாருங்கள். 1983-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மிஞ்சிப்போனால் ஐம்பது பேர் இருந்தார்கள். அதாவது முழு நேரப் போராளிகள். அப்போது அவர்கள் வசம் இருந்த ஆயுதங்களின் எண்ணிக்கை இருபதாக இருக்கலாம் என்று Tigers Of lanka நூலின் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான எம்.ஆர்.நாராயணசாமி ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாணத்து மக்களுக்கு அப்போது புலிகளைத் தெரியும். பிரபாகரனைத் தெரியும். கிழக்கு மாகாணத்தில் யாருக்கும் தெரியாது. LTTE என்ற பதத்துக்கு விரிவாக்கமே பலபேருக்கு தெரியாது.

ஆனால் நான்கு வருடங்களில், 1987-ம் ஆண்டு – புலிகள் பெற்ற கவனமும் வீச்சும் வேறு எந்த இயக்கமும் பெற்றிருக்கவில்லை. கணக்கற்ற உறுப்பினர்கள். ஏராளமான ஆயுதங்கள். தடையற்ற பணப்புழக்கம். வந்து குவியும் நிதி. மக்களின் ஆதரவு.

ஏன் TELOவுக்கு இல்லை? ஏன் EPRLFக்கு இல்லை? ஏன் EROSசால் முடியவில்லை? ஏன் PLOT பின் தங்கிப் போனது? இந்தியாவின் உதவியால் தான் முன்னுக்கு வர முடியும் என நினைத்த மற்ற இயக்கங்கள் இருந்தபோது தன் முயற்சியால் புலிகள் முன்னுக்கு வர காரணம் என்ன?
அப்படி ஒரு அசுர வளர்ச்சி சாத்தியம் என்றால் பிரபாகரன் ஏன் பிற இயக்கங்களின் வளர்ச்சி கண்டு அஞ்சவேண்டியிருக்கும்? வாய்ப்பில்லை அல்லவா? அதனாலா கொன்று ஒழிக்க நினைத்திருப்பார்? சாத்தியமில்லை அல்லவா?

ஈழத்தின் பிறப் போராளி இயக்கங்கள் இந்தியாவின் செல்லப் பிள்ளைகளாக, கிளிப்பிள்ளையாக வளர்ந்ததும், வடகிழக்கில் EPRLF ஆட்சி புரியத் தொடங்கியதும் அவர்களது அத்துமீறல்கள் அளவுகடந்து போனதும் அப்பாவி மக்கள் தினந்தோறும் அவர்களால் பாதிக்கப்பட்டதும் தான் அடிப்படைக் காரணம்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 5:06 am

சனவரி 13, 1993. இந்தியப் பெருங்கடலில் மிதந்து மிதந்து செல்லும் அந்தக் கப்பலைத் தடுத்து நிறுத்தியது இந்தியக் கடற்படை. இந்திய எல்லையில் கூட அல்ல. சர்வதேச கடற்பரப்பில். வயர்லெஸில் நிறுத்தச் சொல்லி உத்தரவு. கிட்டுவுக்கு புரிந்துவிட்டது. யோசிக்கவேயில்லை. இந்தியக் கப்பல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நடுக்கடலில் கிட்டுவின் கப்பல் வெடித்துச் சிதறியது.

விடுதலைப் புலிகளுக்கு கப்பல் வெடித்தது பற்றிக் கூட கவலையில்லை. அவர்கள் தெரிந்துக் கொள்ள விரும்பியது எல்லாம், அந்தக் குறிப்பிட்ட கப்பலில் கிட்டு வருவது எப்படி கசிந்தது? குறிப்பாக யார் மூலமாக? மாத்தையா மீது சந்தேகம் திரும்பியது.

மாத்தையா இயக்கத்தின் உப தலைவர். பிரபாகரனின் நேரடி கவனிப்பின் கீழ் வரும் முக்கியமான நபர். அவர் மீது முதல் சந்தேகப் புள்ளி விழுந்தது 1989-ம் ஆண்டில். தனியொரு குழுவை அமைத்தார்கள். மாத்தையாவின் நிழலாக மாறி அவரைக் கண்காணிக்க வேண்டும்.

இந்திய இராணுவம் இலங்கையில் முகாமிட்டிருந்த போதே, மாத்தையா அவ்வப்போது கொழும்பு சென்று, நட்சத்திர விடுதிகளில் மது அருந்தி, இந்திய இராணுவ அதிகாரிகளை அடிக்கடி சந்தித்துள்ளார் என பொட்டு ஒம்மான் ஆதாரங்களை அடுக்கினார். பின் கிட்டுவின் மரணம் சந்தேகத்தை நிறுபித்தது.

அரசியல் பிரிவின் பொறுப்புகளில் இருந்து மாத்தையா கீழிறக்கப்பட்டார். அகதிகள் நலனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு. மாத்தையா தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார். அவருக்கு கீழ் வேளை செய்யும் ஒருவரை கைது செய்து விசாரித்த போது மாத்தையாவின் குற்றத்தின் முழுப் பரிமாணமும் வெளிவந்தது. இந்திய உளவுதுறைக்கு அடிக்கடி செய்திகள் அனுப்புகிறார்.

மார்ச் 31 1993 அன்று கொக்குவில் என்ற இடத்திலுள்ள மாத்தையாவின் இரகசிய இடத்திலிருந்து சிறிய எதிர்ப்புக்கு பின் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி கொண்டு செல்லப்பட்டார். பின் அவரைப் பற்றி, யாரும் பேசவில்லை. பிரபாகரன் உள்பட. அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. மாத்தையாவிற்கு வேண்டப்பட்டவர்கள் எடுத்த தனி முயற்சிகள். இந்திய உளவு அமைப்புகள் தலை கீழாக நின்று பார்த்தது. எதுவும் முடியவில்லை.

இரண்டு வருடம் விசாரணை நடைப்பெற்று, அவரின் சொந்தக் குரலில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, மற்ற போராளிகளின் முன்னிலையில் போட்டு காண்பிக்கப்பட்டது. பின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவரின் கடைசி ஆசையாக தன் மனைவியை சந்திக்க விரும்பினார். நான்கு புலி வீரர்கள் அனுப்பப்பட்டனர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். அவர் சொன்னது, “ என் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள், ஏனென்றால், அது அவருக்கு பிறந்தது. ஆனால், நான் திருமணம் செய்து கொண்டது ஒரு போராளியை. ஒரு துரோகியை அல்ல. நான் சந்திக்க விரும்பவில்லை.”

மாத்தையா தூக்கிலிடப்பட்டார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 11:02 pm

இலங்கை அரசியல் களம் கொதி நிலையில் இருந்தது. பிரேமதாசாவுக்கு எதிராக லலித் அதுலத்முதலி, காமினி திஸ்ஸநாயகே இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் இருவரும் பிரேமதாசாவின் கட்சியில் இருந்து பிரிந்து சென்று புதுக் கட்சி தொடக்கியவர்கள். DUNF(Democratic united National Party) கட்சியைத் தொடங்கினார்கள். 1993 ஏப்ரல் 23. கொழும்பில் ஒரு மேடையில் கைகளை உயர்த்தி ஆக்ரோசமாக பேசிக் கொண்டிருந்தார் லலித் அதுலத்முதலி. அபோது முன்வரிசையில் இருந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மே தினக் கொண்டாட்டங்கள் கலைக்கட்டின. கட்சி ஊர்வளம் நடந்துக் கொண்டிருந்தது. பச்சை நிறத் தொப்பிகளில் Victory என எழுதியிருந்தது. பிரேமதாசா உற்சாகமாக சென்று கொண்டிருந்தார். ஆர்மர் சாலை சந்திப்பில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதனை சரி செய்ய பிரேமதாசா முனைந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. சாலையின் நடுவில் இருந்து, கைகால்களை அசைத்து, போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, எங்கிருந்தோ வந்தது ஒரு மிதிவண்டி. பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தப்போது. வெடித்துச் சிதறியது.

சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பிரேமதாசாவைக் காணவில்லை. அவரது பிரத்யேக மருத்துவர் வந்து இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் பிரேமதாசா கண்டுபிடிக்கப்பட்டார். உயிரற்ற உடலாய்.

மே 7. பிரதமர் திங்கிரி பண்டா விஜெதுங்கா தற்காலிக பிரதமராக பதவியேற்றார். ஆறு மாதங்கள் மட்டுமே பணியில் இருந்தார். ஆனால் ஒரு மக்கள் பணியும் செய்யவில்லை. இராணுவ அதிகாரிகளுடன் மட்டுமே விவாதித்தார். யூலை 25, 1983 இனப்படுகொலை நடந்து முடிந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியானதைக் குறிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் மூன்று இராணுவ முகாம்களைக் கைப்பற்றியது. ஆறு மாதங்கள் முழுவதும் தோல்வியையே சந்தித்து விஜெதுங்கா பதவி முடிவுக்கு வந்தது.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 11:08 pm

பண்டாரநாயகா குடும்பத்திற்கு ஒரு ஆழமான நம்பிக்கை உண்டு. தங்களால் மட்டுமே இலங்கையை ஒழுங்காக ஆட்சி செய்ய முடியும் என்று. சிங்களர்களையும் அவ்வாறே சிந்திக்க வைத்தனர். வாய்க்கு வாய் சிங்களம் வாழ்க என்று சொல்லியே ஆட்சி செய்தவர் S.W.R.D. பண்டாரநாயகா. புத்தம் சரணம் கச்சாமி என்று பாடிக் கொண்டிருந்த பவுத்தர்களை வன்முறை மார்க்கத்துக்கு மாற்றிய மகா புருசர். பிக்குவை எடுத்தவன் பிக்குவாலயே இறப்பான் என மெய்ப்பித்தவர். பின் அவரது மனைவி ஆட்சிக்கு வந்தார்.

இப்படியே விட்டால், பண்டாரநாயகா வீட்டு பூனைக்குட்டி கூட ஆட்சிக்கு வந்துவிடும் நிலை இருந்தபடியால், ஒரு மாற்று அரசியல் ஆட்சி அளிக்கிறேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்தார் ஜெயவர்தனே. அவருக்கு பின் பிரேமதாசா. சிறிது காலம் பண்டாரநாயக குடும்பம் அமைதி காத்தது. பின் அமைச்சர் நாற்காலி காலி என்று தெரிந்ததும் சிறிமாவோ தன் மகளை முன்னுக்கு நகர்த்தினார்.

ஆகஸ்ட் 19, 1994 அன்று நாடாளுமன்றத்தில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார் சந்திரிகா. போர், போர் என்று தொண்டைத் தண்ணீர் வற்றும் அளவுக்கு கத்திய இலங்கை அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அமைதி என்னும் புதிய வார்த்தையை சந்திரிகா பயன்படுத்தியது அனைவரையும் ஈர்த்தது. தமிழ் மக்களையும் தான். பதவி ஏற்றவுடன், தமிழர் பிரதேசங்களில் பிரேமதாசா விதித்திருந்த பொருளாதார தடைகளை ஓரளவு நீக்கினார்.

செப்டம்பர் 2, 1994 அன்று பிரபாகரன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

புதிய பிரதமருக்கு எங்கள் வாழ்த்துக்கள். தடைகளை முற்றிலுமாக நீக்கிக்கொண்டால் நன்றாக இருக்கும். போரை நிறுத்திக் கொள்ளவும் பேச்சு வார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தவிரவும், நாங்கள் கைது செய்துள்ள பத்து காவல்துறையினரை விடுதலை செய்ய முன்வருகிறோம்.

இதனை கனவா நினைவா என இலங்கையே வாய் பிளந்து நின்றபோது, சந்திரிகா பிரபாகரனுக்கு மறுகடிதம் எழுதினார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 11:13 pm

செப்டம்பர் 9,1994.

அன்புள்ள பிரபாகரன் அவர்களுக்கு,

யாழ்ப்பாணத்துடன் நல்லுறவை மேற்கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்துடன் தான் முந்தைய அரசாங்கம் விடுத்திருந்த தடைகளை அகற்றினோம். இதனை விடுதலைப் புலிகள் வரவேற்றிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். காவல்துறையை சேர்ந்த பத்து பேரை விடுதலை செய்வதை நாங்கள் வரவேற்கிறோம். வடகிழக்கு பிரச்சனை குறித்து சுமூகமாகத் தீர்வு காண தாங்கள் காட்டும் முன்முயற்சிக்கு நன்றி.


தீவிரவாதி என்று அரசாங்கத்தால் கருதப்பட்ட ஒருவருக்கு, இலங்கையின் பிரதமர் கடிதம் எழுதியது, அந்நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறை. எல்லாருமே குழம்பி தான் போனார்கள். சந்திரிகா, விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக மாறிவிட்டாரா? இது பயமா? இது பணிவா? ஆனால் விடுதலைப் புலிகள் அதற்கு விடையை கண்டுபிடித்தனர். இராஜதந்திரம்.

நவம்பர் 1994, அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் சந்திரிகா குமாரதுங்க போட்டியிட்டார். அவருக்கு எதிராக காமினி திஸ்ஸனாயக. சந்திரிகாவிற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கொழும்பில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் மீட்டிங் நடந்தது. நள்ளிரவு நேரம். காமினி பேச ஆரம்பித்தார். இரண்டாவது வரிசையில் இருந்த ஒரு நபர், விசையை அழுத்தினார். காமினி திஸ்ஸனாயகே உள்ளிட்ட 56 பேர் மரணம். இது நடந்தது அக்டோபர் 23-ம் தேதி.

செய்தது விடுதலைப் புலிகள் என்பதற்கான எவ்விதமான ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 11:19 pm

பிரதமர் சந்திரிகா, அதிபர் சந்திரிகாவாக மாற்றம் அடைந்ததற்கு முக்கிய காரணம் அவர் மக்கள் மீது செலுத்தியிருந்த தாக்கம். தான் அமைதியை மட்டுமே விரும்புவதாகவும், இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் எனவும், அதற்காக மட்டுமே தான் பாடுபட போவதாகவும் சென்ற இடத்திலெல்லாம் கூறினார். விளைவு… மாபெரும் வெற்றி கிட்டியது. 62.5 சதவிகித வாக்குகள் பெற்றார். யாழ்ப்பாண பகுதி தவிர மற்றைய பகுதியிலுள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்தனர். நவம்பர் 12,1994 அன்று சந்திரிகா அதிபரானார். வெற்றி கிடைத்த பிறகு எதற்கு இன்னும் பசு வேடம் போட வேண்டும் என நினைத்தாரோ என்னவோ, வேடத்தைக் கலைத்தார்.

ஒரு வாரத்திற்கு போர் நிறுத்தத்தை அறிவித்தது புலிகள் அமைப்பு. இதனை ICRC(International Committee Of Red Cross) மூலமாக கொடுத்து அனுப்பினர். இதன் மூலமாக தான் சந்திரிகாவும் அனுப்புவார். இதற்கு பதிலாக இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு அளித்த பரிசு, சின்னத்தம்பி பத்மநாபன்(மாலி) என்பவரைக் கைது செய்து, அவர் தலையை தனியாக வெட்டி எடுத்தது.

சு.ப.தமிழ்செல்வன் இலங்கை அரசாங்கத்திடம் எழுதிக் கேட்டார். ஒரு வாரம் போர் நிறுத்தம் அறிவித்திருந்த எங்களுக்கு இராணுவம் அளிக்கும் பரிசா இது? பாதுகாப்பு அமைச்சகம் மறுமொழி அனுப்பியது. ஒரு வாரமா? அறிவிப்பா? போர் நிறுத்தமா? யாரிடம் சொன்னீர்கள்? எங்களுக்கு விடயமே தெரியாதே. கொதிப்பை அடக்கிக் கொண்டு தமிழ்செல்வன் மீண்டும் எழுதினார். கொல்லப்பட்ட மாலியின் தலை எங்களுக்கு வேண்டும். இல்லை என்றது இராணுவம், மிகவும் சிதிலமடைந்திருந்ததால் எரித்துவிட்டோம். இருந்தாலும், நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரின் சாம்பலை அனுப்புகிறோம்.

மூன்றாவது ஈழ யுத்ததிற்கு இலங்கை தயாராகிக் கொண்டிருந்தது.


Sponsored content

PostSponsored content



Page 10 of 13 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக