புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
89 Posts - 38%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
340 Posts - 48%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
24 Posts - 3%
prajai
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 11 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை


   
   

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jul 31, 2010 4:34 am

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.



நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 11:25 pm

தமிழர்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்ற இலங்கை இராணுவம் நடாத்தும் பிரயத்தனங்கள், இலங்கை அரசு கைப்பற்றி இருக்கும் தமிழர்களின் பிரதேசங்களை விடுவிக்க புலிகள் நடாத்தும் போராட்டங்களை உள்ளடக்கியது தான் இன்றைய நவீன இலங்கையின் சரித்திரம். தனக்கு சமமாக ஓர் இயக்கம் நிழல் அரசாங்கம் நடாத்துவதை இலங்கை அரசால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதே சமயம் ஈழத்தை தமிழ் மக்களுக்கு விட்டுத்தர இலங்கை அரசுக்கு மனமும் இல்லை.

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைப்பெற்ற போராட்டங்களைக் கணக்கிட வேண்டுமானால் ஆண்டு வாரியாக, மாதம் வாரியாக கணக்கில் எடுக்க வேண்டும். அது மிக நீண்டதொரு பட்டியலாக நீளும். ஆனால், மிக முக்கியமானவையாக எடுத்துக் கொண்டால் இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று, ஈழ யுத்தக் காலகட்டம். மற்றொன்று ஓயத அலைகள் காலக்கட்டம்

யூலை 1983 கலவரம். திம்பு பேச்சுவார்த்தை தோல்வி. 1987-ல் இலங்கை அரசு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்தியாவின் தலையீடு. இந்தியா-இலங்கை ஒப்பந்தம். இந்திய அமைதிப் படை(கூலிப் படை) வருகை. இது முதல் ஈழப் போர் காலக்கட்டமென்று அழைக்கப்படுகிறது.

பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம். அமைதி ஒப்பந்தம் முறிவு. சூன் 11,1990 துவங்கி புலிகள் நடாத்திய தாக்குதல்கள். 1991-ல் இராசீவ் காந்தி களையெடுக்கப்பட்டது. 1993 –ல் பிரேமதாச கொலை. இரண்டாம் ஈழப் போர் பக்கங்களில் மிக முக்கியமானவை இவை. பிறகு வட இலங்கை இசுலாமியரின் கட்டாய வெளியேற்றம்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 11:30 pm

ஒக்ரோபர் 30,1990 அன்று வந்தது ஓர் அறிவிப்பு. அறிவித்தது விடுதலைப் புலிகள். இசுலாமிய அன்பர்களின், பனிவான கவனத்திற்கு. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உடனடியாக வெளியேருமாறு கேட்டுக் கொள்கிறோம். இதுவரை நீங்கள் அளித்துக் கொண்டிருந்த ஒத்துழைப்புக்கு நன்றி. உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்.

இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் 7 சதவிகிதம் இசுலாமியர் ஆவர். இவர்கள் பிரதானமாக வசிப்பது வடகிழக்கு பிரேதேசங்களில். அவற்றுள் பிரதானமாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் வசித்தனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறி புத்தளம், அனுராதபுரம் பகுதிகளில் குடியேறினர். மொத்த எண்ணிக்கை 58,500.

நாங்கள் செய்த இமாலய தவறு அது. என்ன காரணம் சொல்லியும் அதனை நியாயப்படுத்த முடியாது என ஏப்ரல் 2002-ல் அன்ரன் பாலசிங்கம் ஒரு பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார். அதற்குப் பிறகு மீண்டும் சிறிது சிறிதாக குடியேற ஆரம்பித்தனர்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 11:37 pm

இராசீவ் காந்தி விவகாரத்தில் தேடப்படும் முதன்மைக் குற்றவாளியாக பிரபாகரன் சேர்க்கப்பட்டார். அவரை ஒப்படைக்குமாறு இந்தியா சந்திரிகா அரசைக் கேட்டுக் கொண்டது. இசுரேலிய படைகளுடன் இணைந்து இலங்கைக்குள் நுழைந்து எப்போது வேண்டுமானாலும் இந்தியா பிரபாகரனை வேட்டையாடலாம்.

பிரபாகரனின் கவலை இதுவல்ல. பொருளாதாரத் தடைகளை நீக்கிக்கொள்வதாக சந்திரிகா அறிவித்தது அறிவித்தபடியே உள்ளது. யாரும் கண்டுக்கொள்வதாக இல்லை. வவுனியாவிலுள்ள இராணுவ சோதனைச் சாவடிகல் அப்படியே இருந்தன. மார்ச் 28,1995 வரை அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் அவர்களை விலக்கிக்கொள்ளுங்கள் என்றார் பிரபாகரன். அந்த எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே இலங்கை அரசு கருதவில்லை. பொறுமையாக காத்திருந்தார் பிரபாகரன். மார்ச் 28-ல் இருந்து ஏப்ரல்-19 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அப்போதாவது அரசாங்கம் விழித்திருக்கலாம். அல்லது இராணுவத்தின் கொட்டங்களையாவது நிறுத்திக் கொள்ள சொல்லியிருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை.

விடுதலைப் புலிகளிடமிருந்து இறுதிக் கடிதம் வந்து சேர்ந்தது. நாங்கள் கொடுத்த கால அவகாசம் இத்துடன் முடிவடைகிறது. இந்தக் கடிதம் சந்திரிகாவின் கையில் கிடைத்தது ஏப்ரல் 19, இரவு 10:30 மணிக்கு.

சந்திரிகா பதறியடித்து படுக்கையிலிருந்து எழுந்தார். அவசரம். மிக மிக அவசரம். முக்கிய செய்தி வந்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்கள் வெடித்துச் சிதறிவிட்டன. சிதறடித்தவர்கள் கரும்புலிகள். உறைந்து போனார் சந்திரிகா. ஒரு கப்பல்(சூரியா). சீன அரசால் பரிசளிக்கப்பட்டது. மற்றொன்று(ரனசுரு). 20.85 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது.

சந்திரிகா இராணுவ அதிகாரிகளை வரவழைத்தார். இனி புலிகள் என்ற அமைப்பே இருக்கக் கூடாது. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். என்ன வேண்டும் உங்களுக்கு? அதிகளவில் ஆயுதங்கள் வேண்டும் என்றார்கள். துப்பாக்கிகள், பீரங்கிகள், கப்பல்கள் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அதிகாரம் கொடுத்தார்.

மீண்டும் அதிகாரிகள் சந்திகாவை அனுகினார்கள். என்ன வேண்டும் என்றார். புதிதாக வாங்கிய இரண்டு ஏவ்ரோ விமானங்களை தகர்த்துவிட்டனர். சந்திரிகா அதிர்ந்து பின் வாங்கினார். இன்னும் ஸ்டிக்கரைக் கூட பிரிக்கவில்லையே. அதையும் அழித்துவிட்டார்களா?

காலையில் இருந்து செய்திகள் வந்துக் கொண்டே இருந்தன. இத்தனை மில்லியன் பொருள் சேதம். இத்தனை விமானப் படை அதிகாரிகள் மரணம். இத்தனை இராணுவ அதிகாரிகள். இத்தனை படை வீரர்கள். இத்தனை காவலாளிகள். மொத்த கணக்கு தலை சுற்றுகிறது.

மாதா மாதம் என்றில்லாமல் வாரா வாரம் ஏதாவதொரு மூலையில் விடுதலைப்புலிகளால் பாரிய இழப்பு. உயிர்ச் சேதம். பொருள் சேதம். விடுதலைப் புலிகளின் முழுப் பலத்தையும் சந்திரிகா புரிந்துக் கொண்ட சமயம் அது.

1995-ம் ஆண்டு இலங்கை இராணுவம் அடைந்த இழப்புகள் கடந்த பதினொரு ஆண்டுகளில் அடைந்த இழப்புகளை விட அதிகம். 2,026 இராணுவ வீரர்களை இலங்கை இழந்தது. பல கப்பல்கள், விமானங்கள் தகர்க்கப்பட்டன. அதி நவீன ஆயுதங்கள் கொல்லையடிக்கப்பட்டன. பில்லியன் கணக்கில் இழப்பு.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 11:49 pm

ரிசம்பர் 5, 1995. இலங்கை இராணுவம் சுதாகரித்து எழுந்து பதில் தாக்குதல் நடாத்த ஆரம்பித்திருந்த சமயம் அது. புதிய திட்டம். புதிய படை. இலக்கு ஈழத்தின் மையப்பகுதி. விடுதலைப்புலிகளின் கோட்டை. அடித்தால் அங்கே அடிக்க வேண்டும். இனி எழுந்திரிக்க முடியாத அளவிற்கு அடிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தைக் குறி வைத்தார்கள். ஆப்பிரேஷன் சன்ஷைன். 40 நாட்கள் முற்றுகை. யாழ்ப்பாணத்தைக் கைபற்றினார்கள். வெற்றி. வெற்றிக் களிப்பில் இருந்தார்கள். களிப்பு மயக்கமாக மாறியது. மயக்கம் போதையாக மாறியது. போருக்கு பின் எத்தனை தமிழர்கள் இறந்தார்கள் என கணக்கு தெரியவில்லை. யாழ்ப்பாணம் வீழ்ந்தது என்று தான் சொல்ல முடியும். ஆனால் புலிகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கே சென்றார்கள் ஆவர்கள்?

யூலை 18, 1996. விடுதலைப் புலிகள் அதிகாலை 1:30 மணிக்கு முல்லைத்தீவைத் தாக்கத் தொடங்கினர். இடைவிடாத தாக்குதல். பின் சிறிது நேர ஓய்வு. பின் மீண்டும் தாக்குதல். மெல்ல மெல்ல, இலங்கை இராணுவத்திடமிருந்த ஆயுதத் தளவாடங்களைக் கைப்பற்றினர். மதியம் நெருங்குவதற்குள் இராணுவ முகாம் முழுவதும் புலிகள் வசம் வந்தது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் இரண்டு ஆட்டிலரி பீரிங்கிகளும் அடங்கும்.

முகாம், ஆயுதங்கள், வீரர்கள் அனைத்தையும் இழந்த பின்பும் இலங்கை இராணுவம் மேலும் படைகளை முல்லைத்தீவிற்கு அனுப்பியது. முல்லைத்தீவிற்கு தெற்கே மூன்று மைல் தொலைவில் அளம்பில் என்னும் கிராமத்தில் இவ்வீரர்களைக் கடல் மார்க்கமாக தரையிறக்கியது. இலங்கை அரசின் முப்படைகளும் கவனமாக திட்டமிட்டு நடாத்திய தரையிறக்கம் இது. ‘திரிவிட பகர’ என்று அதற்கு பெயரிட்டனர்.

கடற்புலிகள் அவர்களை கவனித்துக் கொள்வது எனவும், முல்லைத்தீவை மற்றைய படைப்பிரிவுகள் கைப்பற்றும் என பிரபாகரன் ஆணை பிறப்பித்தார். கடற்புலிகள் திரிவிட பகர படை நகர்வை கனவாக்கினர். இறுதியில் முல்லைத்தீவு, புலிகள் வசம் வந்தது.

மொத்தம் 1,200 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டதாக விடுதலை புலிகள் அறிவித்தனர். அவ்வளவெல்லாம் இல்லை. சிறிய சேதம்தான் என சிங்கள அரசு தெரிவித்தது. எப்பொழுதும் போல சிங்கள அரசு குறிப்பிட்ட அளவு உடல்களை மற்றும் பெற்றுக் கொண்டு மற்றவர்களைக் காணாமல் போனவர்கள் என்று அறிவித்தது. மற்ற உடல்களை செஞ்சிலுவை சங்கம் மூலமாக விடுதலைப் புலிகள் ஒப்படைத்தனர். அதனையும் பெற்றுக் கொள்ள மறுத்தது இலங்கை அரசு. குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயம். ஆகையால் விடுதலைப் புலிகளும் வன்னி மக்களும் பூரண இராணுவ மரியாதையுடன் அந்த உடல்களை தகனம் செய்தனர்.

ஓயாத அலைகள் ஒன்று முடிவடைந்தது.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 11:53 pm

முல்லைத்தீவு வீழ்ந்ததை சந்திரிகாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால், அந்த ஆண்டு முடிவுக்குள் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஏதேனும் முக்கிய பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

சத்ஜெய. இப்பெயருடன் மூன்று படைகளை அடுத்தடுத்து அனுப்பி கிளிநொச்சியைக் கைப்பற்றியது. வவுனியா சிங்களரின் கையில் வீழ்ந்த மமதையில் இடைப்பட்ட பிரதேசங்களைக் கைப்பற்றும் முனைப்புடன் ஜெயசிகுரு(Operation Jaya Sikuru) என்னும் பெயரில் அடுத்த படையெடுப்பை நடாத்தியது. தளபதி கருணா தலைமையின் கீழ் சிங்கள வீரர்களை இடையில் வழிமறித்து அதிரடித் தாக்குதல் நடத்தினர். சிங்கள வீரர்களால் தாக்குபிடிக்க முடியாமல் சிதறி ஓடினர்.

பிப்ரவரி 2,1998. கிளிநொச்சியை கைப்பற்றும் முனைப்புடன் பிரபாகரன் தனது படைகளை முன் நகர்த்தினார். பெரிய வெற்றி என கூற இயலாவிட்டாலும் சில பகுதிகளை விடுவித்தனர். திலீபனின் பதினொராம் ஆண்டு நினைவு தினமான செப்டம்பர் 26 அன்று தொடுக்கப்பட்ட தாக்குதல் மூலமாக கிளிநொச்சி முழுவதையும் கைப்பற்றினர்.

ஓயாத அலைகள் இரண்டு முடிவிற்கு வந்தது.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Oct 20, 2010 11:57 pm

ஓயாத அலைகள் மூன்று இரண்டு கட்டங்களைக் கொண்டது.

மாங்குளத்துக்கும் ஏ-9 நெடுஞ்சாலைக்கு கிழக்கே உள்ள ஒட்டுச்சுட்டான் பகுதியை இராணுவம் கைப்பற்றியிருந்தது. இதனை விடுவிக்கும் பொருட்டு நவம்பர் 1,1999 அன்று முதல் கட்டத் தாக்குதல்களை நடத்தினர் புலிகள். தொடர்ந்து, அடுத்த நான்கு நாட்களில் நெடுங்கேணி, அம்பகாமம், கரிப்பட்ட முறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் அத்தனையும் கைப்பற்றப்பட்டன. நவம்பர் 5-ம் தேதி, ஏ-9 பாதையின் தெற்கே அமைந்துள்ள விளக்குவைத்த குளம் பகுதி கைப்பற்றப்பட்டதோடு முதல் கட்டம் முடிவடைந்தது.

இரண்டாம் கட்டம், நவம்பர் 7-ம் தேதி ஆரம்பமானது. இராணுவத்தின் பிடியில் இருந்த மன்னார் பகுதியை விடுவிக்க தொடுக்கப்பட்ட போராட்டம். தாக்குதல் ஆரம்பித்தது. பள்ளமடுவில், பள்ளமடு, பெரியமடு, தட்சணாமருதமடு, மடுத்தேவாலயப்பகுதி உள்ளிட்ட பகுதிகளை புலிகள் கைப்பற்றினர்.

டிசம்பர் 22, 1999-ம் ஆண்டு, 54 வயதில் சந்திரிகா மீண்டும் பிரதமரானார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Oct 21, 2010 12:05 am

2000 ஆண்டு புத்தாண்டை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் போது ஈழத்தில் துப்பாக்கிகளும் குண்டுகளும் வெடித்துக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் அனைவரும் மரணத்தை சுவாசித்துக் கொண்டிருந்தனர். சனவரி-1 அன்று 73 உடல்கள் ஆனையிறவுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டன. இராணுவத்தினர் சிலர், புலிகள் சிலர், தமிழர்கள் பலர். சனவரி 5. பிரதமரின் அலுவலகத்திற்கு சென்று ஒரு கரும்புலி வெடித்துச் சிதறி 12 சிங்கள இனவெறியரையும் சிதறடித்தார்.

அதே சனவரி மாதம், தமிழர்களால் நேசிக்கப்பட்ட தலைவர், குமார பொன்னம்பலம் சாந்தன் என்பவனால் காரில் அழைத்துச் செல்லப்பட்டார். காவல்துறையால் சீட்பெல்ட் அணிந்த நிலையில் ரவைகளால் துளைக்கப்பட்ட பொன்னம்பலத்தின் உடல் கைப்பற்றப்பட்டது. புலிகள் அவருக்கு மாமனிதர் பட்டம் அளித்தனர்.

மார்ச் மாதம் புலிகள் ஓயாத அலைகள் மூன்றைத் துவக்கினர். ஆனையிறவில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. சந்திரிகா ஒரு முடிவுக்கு வந்திருந்தார். இந்த மோதல்கள் நிற்கப் போவதில்லை. புலிகள் நிறுத்திக் கொள்ளப்போவதில்லை. நாமும் நிறுத்தப் போவதில்லை. முல்லைத்தீவு, ஆனையிறவு என்று புலிகள் ஒவ்வொன்றாக வீழ்த்திக் கொண்டிருந்தனர்.

புலிகளை இராணுவத்தினரால் கட்டுப்படுத்தமுடியவில்லை. குறைந்தது, இதுபோன்ற செய்திகள் மக்களை சென்று அடைவதையாவது தடுக்கலாம். புலிகளின் பலம் கூடிக்கொண்டு போவதை மக்கள் அறிந்தால், ஆபத்தைத் தரும். வடகிழக்கு மக்களுக்கு ஆனந்தத்தைத் தரும். சிங்களர்கள் சுணங்கிவிடுவார்கள்.

சிங்கள மீடியாவை மட்டுமே ஓரளவுக்கு கடுப்படுத்த முடிந்தது 50 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டால், ஒரு சுழியத்தைக் குறைத்து 5 என்று கணக்கு கூறினர். 200 பேர் இறந்தால், 20 என்றனர். அதேபோல், இரண்டு புலிகள் இறந்தால் 20 என்றனர். ஏப்ரல்-21 அன்று புலிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. ஆனையிறவு முகாம்களை முழுமுற்றாக அழித்துவிட்டோம். கிட்டத்தட்ட ஆயிரம் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஆனையிறவு எங்களிடம்.

டைம் பத்திரிக்கை இலங்கை அரசின் முகத்தில் அறைந்தது. மே-15ம் தேதி வெளியான அறிக்கையின் சாரம் இது.

பத்தாயிரம் அரசாங்க வீரர்களால் வெறும் நான்காயிரம் புலிகளைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. ஆனையிறவை தற்காத்துக் கொள்ள அரசுக்குத் தெரியவில்லை.

இலங்கையின் இராணுவ வருடாந்திர செலவு வரவு கணக்கு ராக்கெட்டில் பறந்துக் கொண்டிருந்தது. 880 மில்லியன் டாலர்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Oct 21, 2010 12:11 am

சந்திரிகா தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தார். புலிகள் எவ்வாறு செயல்படுகின்றனர்? எங்கிருந்து இவ்வளவு மூர்க்கமான வீரர்க்ளை பிடிக்கின்றனர்? எங்கே வைத்து பயிற்சி அளிக்கிறார்கள்? ஒரு காட்டில் ஒரு பொந்தில் வைத்து எப்படி இத்தகைய பயிற்சிகளை அளிக்க இயலும்? இராணுவத்துடன் மோத வேண்டும் என்ற நிலை வந்தால் எப்படி எங்கிருந்து வருகிறது மூர்க்கமான வெறி? இத்தகைய உத்வேகம்? தமிழர்கள் அனைவரும் இயல்பிலேயே வீரர்களா? அப்படியென்றால், வடகிழக்கு தமிழர்கள் ஏன் சுலபமாக பலியாகிறார்கள்? மில்லியன் கணக்கில் கொட்டிக் கொண்டிருக்கிறோம். அலைந்து திரிந்து, நான்கு பேரிடம் கொட்டேசன் கொடுத்து, உயர் இராணுவ அதிகாரிகளை அனுப்பி, ஆயுதங்களை வாங்குகிறோம்., போர்க் கப்பல்கள் வாங்குகிறோம். குண்டு வீசும் விமானங்கள் வாங்குகிறோம். என்ன பயன்?

விடுதலைப் புலிகள் எங்கிருந்து எவ்வாறு ஆயுதங்கள் வாங்குகின்றனர்? ஒவ்வொரு முறை மோதும்போது இராணுவம் பிடரியில் கால் பட ஓடுகிறது. புலிகள் இராணுவத்தை விட அதிநவீன ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களாம். கப்பல்கள் வைத்திருக்கிறார்களாம். ஏவுகணைகள் வைத்திருக்கிறார்களாம். மின்னல் வேகத்தில் இயக்குகிறார்களாம். நம்மை வீழ்த்தி நமது ஆயுதங்களைக் கைப்பற்றிக் கொள்கிறார்களாம். அதைவிடுங்கள். கடைநிலை வீரன் முதல் தளபதி வரை ஒரே மாதிரியான துடிப்பும் வேட்கையும் இருக்கிறது என்கிறார்கள். நம்மிடம் இரண்டுமே இல்லையே ஏன்?

கரும்புலிகளை நினைத்தாலே உடல் நடுங்குகிறது. ஆயிரம் ஏவுகணைகள் நூறாயிரம் குண்டு வீசும் விமானங்கள் இருந்தாலும் அழிக்க முடியாத பெரும்படை அது. அதில் பெண்களே அதிகம் இருக்கிறார்களாமே? பெண்களா அவர்கள்? சக்தியின் முழு வடிவமாகவல்லவா இருக்கிறார்கள். எப்படி முடிகிறது அவர்களால்? எப்படி வீட்டிலிருந்து கிளம்புவார்கள்? இன்று நான் இறக்கப் போகிறேன் என்றேவா கிளம்புவார்கள்? பெற்றோர்களிடம், நண்பர்களிடன் என்ன சொல்லிவிட்டு கிளம்புவார்கள்? போய் வருகிறேன் என்றா, போகிறேன் என்றா? சாதரண மரணமா அது? மூளை சிதறி விழுமே. உடல் நூறு சதை துணுக்குகளாக சிதறி விழுமே. எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்?

வற்புறுத்தி செய்யக்கூடிய வேளையா அது? போ. அழித்துவிட்டு வா என்று சொன்னாலே, முடிக்காமல் திரும்பி வருகிறார்கள். ஆனால், அழித்துவிட்டு, நீயும் அழிந்து போ என்று அனுப்புகிறதே புலிகள் அமைப்பு. எவ்வாறு முடிகிறது அவர்களால்? எவ்வளவு கோடி கொட்டிக் கொடுத்தாலும் இப்படிப்பட்ட வீரர்கள் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார்களே. விடுதலைப் புலிகள் என்ன கொடுக்கிறது அவர்களுக்கு? நிச்சயம் பணம் அல்ல. அது அவர்களுக்கு தேவைபடாது அவர்களுக்கு. வேறு ஏதோ.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Oct 21, 2010 12:17 am

உலகில் தற்கொடைப் படையை திறமையாக பயன்படுத்தும் மிகச்சில அமைப்புகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு மிக முக்கியமானது. தற்கொடை வீரர் ஒருவரின் பலம் என்ன என்பதை உலகிற்கு உரத்த அறிவித்தவர் மேதகு பிரபாகரன் அவர்கள். புலிகள் அமைப்பில் தற்கொடை படை கரும்புலிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு புலி வீரனும் கரும்புலியாவதற்கு தவமாய் தவம் இருக்கிறான். தாயக விடுதலைக்காக உயிரைக் கொடுப்பதற்கு எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்? தமிழனைத் தவிர யாருக்கு வரும் இந்த துணிவு? இலங்கை அரசின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் பிரிவு அது. இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி மற்ற வீர்ர்களுக்கு அளிக்கப்படுவதை விட மிக அதிகம். கடினமும் கூட.

ஆனால், வெறும் பயிற்சிகளால் மட்டும் ஒரு தற்கொடை போராளியை உருவாக்கிடமுடியாது. வலுவான ஒரு சித்தாந்தத்தால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். என் உயிர் பெரிதல்ல. நான் கொண்டிருக்கும் கனவே பெரிது என்று அவர் அழுத்தம் திருத்தமாக உணரவேண்டும். கட்டளையை ஏற்று நிறைவேற்றும் பக்குவமும் கீழ்படியும் குணமும் வேண்டும். எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் இயங்கத் தயராக இருக்க வேண்டும்.

ஒரு கரும்புலியாக மாறுவது மிகவும் பெருமிதம் தரக்கூடிய விடயம் என்னும் உணர்வு புலிகளின் மத்தியிலும் தமிழர் மத்தியிலும் ஆழமாக வேறூன்றியுள்ளது. உயிரைத் துறந்த ஒரு கரும்புலியை ஆராதிக்கும், கொண்டாடும் வழக்கம் தமிழரிடத்தில் பிரசித்தமானது. தனக்கு இடப்பட்டிருக்கும் பணியை முடிக்க, அதாவது, தன்னை மாய்த்துக் கொள்ள செல்லும் முன், அந்த கரும்புலி பிரபாகரனை சந்திப்பார். அன்றைய உணவு அவருடன் தான். தலைவருடன் விருந்து என்பது புலிகள் மத்தியில் மிகவும் பெருமைக்குறிய விடயம்.

வசந்தன் என்னும் கப்டன் மில்லரால் முதல் தற்கொடை தாக்குதல் யூலை 5,1987 ஆன்று நிகழ்த்தப்பட்டது. சிங்கள இராணுவத்தினரை யாழ்ப்பாணத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்க்காக லாரி முழுவதும் வெடிகுண்டுகளை நிறப்பிக் கொண்டு சென்று வெடித்துச் சிதறினார் அவர்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Oct 21, 2010 12:23 am

புலிகள் மாவீரர் தினம் கொண்டாடுவதைப் பார்த்து, சூன் 7,2000 அன்று போர் வீரர்கள் தினத்தை ஆரம்பித்து வைத்தார் சந்திரிகா. அன்றைய தினம் அனைவரும் அவரவர் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும். இறந்து போன சிங்கள அரக்கர்களை ஆராதிக்கவாம். தொலைக்காட்சிகளில் தோன்றி உருக்கமாக பேசினார் சந்திரிகா. சீக்கிரம் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறோம். ஏற்கனவே ஏராளமான பணத்தை போருக்கு செலவு செய்தாகிவிட்டது. இனியும் செய்ய இயலாது. நமது வீரர்கள் நிச்சயம் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

செப்டம்பர் 26, 2000. ஓயாத அலைகள் நான்காம் பாகம் இன்றுடன் ஆரம்பம் என்றது புலிகள் அமைப்பு. முகமலை கிளாலி பகுதியில் ஆரம்பித்து வைத்தார்கள். 150 இராணுவத்தினர் ஆரம்பித்து வைத்தனர். 500 பேர் படுகாயம். மற்றொரு புறம், சந்திரிகா ஒக்ரோபர் 10 அன்று தேர்தல் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சந்திரிகா வெற்றி பெற்றார். ஆனால் பெரும்பாண்மையை இழந்தார். தவிரவும் பிரதமராக இருந்த சிறிமாவோ, வாக்களித்த கையோடு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். புதிய அமைச்சரவையை அமைத்தார் சந்திரிகா. மகிந்த ராசபக்சேவுக்கு மீன்வளத்துறை அளித்தார். பாம்புக்கு பால் வார்க்க ஆரம்பித்தார்.


Sponsored content

PostSponsored content



Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக