புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
49 Posts - 43%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Manimegala
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
413 Posts - 49%
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை


   
   

Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Jul 31, 2010 4:34 am

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.



நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 10:55 am

வேலுப்பிள்ளை நெருங்க முடிந்த இடத்தை, போலீஸால் நெருங்க முடியாதென்ன? ஆகையால் தினமும் இடத்தை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. இது மிகவும் பிரச்சனையாக இருந்தது. எவ்வளவு நாள் தான் ஓடிக்கொண்டே இருக்க முடியும்? நிரந்தரமாக ஒரு இடம் வேண்டாமா? யோசித்தார்கள்.
இந்தியாவிற்கு போகலாமா என்று தங்கதிரை கூறினார். அவர்களுக்கும், சரி என்று பட்டது. ஒரு தோணி இருந்தால் போதும், இந்தியாவிற்கு சென்றுவிடலாம். வேதாரணியம் சென்றடைந்தால் போதும், அங்கிருந்து எங்கு வேணாலும் செல்லலாம்.
தங்கதுரை, குட்டிமணி, பெரியஜோதி, பிரபாகரன் நான்கு பேரும் கிளம்பினார்கள். குட்டிமணியும், தங்கதுரையும் சேலம் சென்றனர். ஆனால், பிரபாகரனுக்கு, சேலம் செல்ல விருப்பமில்லை. ஆகையால், பெரியஜோதியோடு, வேதாரணியத்திலேயே தங்கினார். பிரபாகரனுக்கு, சென்னை செல்ல விருப்பம். சென்னையில் தமிழக தலைவர்களை சந்திக்கலாம். ஈழத்தில் தமிழர்களின் நிலை குறித்து எடுத்து சொல்லலாம். முடிந்தால், அவர்களின் உதவியை பெறலாம்.
ஒரு நண்பனின் உதவியுடன், பிரபாகரனும், பெரியஜோதியும் சென்னை சென்றனர். ஆனால், அவர்களுக்கு சென்னை சலிப்பூட்டியது. யாழ்ப்பாணம் சென்றுவிடலாம் என நச்சரிக்கத் தொடங்கினார். அதற்கான ஏற்பாடுகளை தொடங்கிய போது, அவர்களுக்கு அந்த செய்தி கிடைத்தது. அப்போது தான், அவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்தது. அனுராதபுர சிறையிலிருந்து தப்பித்த செட்டி தனபாலசிங்கம், மயிலாப்பூரில் தான் வசித்து வருகிறார். பிரபாகரனுக்கு, தனபாலசிங்கத்தை முன்னரே தெரியும். உடனே, மயிலாப்பூர் சென்று தனபாலசிங்கத்தை சந்தித்தார்.
செட்டியோடு, பிரபாகரன் சேர்வதில், பெரியஜோதிக்கு, விருப்பமில்லை. காரணம், செட்டி ஒரு கிரிமினல் என்பதால். குட்டிமணிக்கும், தங்கதுரைக்கும் அதே எண்ணம் தான். ஆனால், பிரபாகரன் தன் முடிவில் திடமாக இருந்தார். உங்களைப் போன்று, செட்டியும் என் நன்பண் தான். அவன் ஒரு கிரிமினல் தான் ஆனால் துடிப்பானவன். இப்போது அவனை பொன்றவர்கள் தான் தேவை. எந்த காரணம் கொண்டும் என் அடையாளத்தை நான் இழக்க மாட்டேன். கவலைப்படாதீர்கள்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 11:02 am

1974-ம் ஆண்டு. யாழ்ப்பாண வீரசிங்கம் அரங்கத்தில், ஜனவரி 3 முதல் ஜனவரி 10 வரை நான்காவது உலகத் தமிழ் மாநாடு கொண்டாடுவதாக திட்டம். உலகம் முழுவதிலுமிருந்து, தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என யாழ்ப்பாணத்தில் குவிந்தனர். அரசியல் காரணங்களால் நொந்து போயிருந்த தமிழர்கள், இம்மாநாட்டை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். தமிழின் மேன்மையை, பாரம்பரியத்தை, அருமை பெருமைகளை இப்போதெல்லாம் யார்தான் பேசுகிறார்கள்..?
ஐம்பதாயிரம் பேர் திரள்வார்கள் என யார் தான் நினைத்திருப்பார்கள். விழா ஏற்ப்பாட்டாளர்களுக்கு விழி பிதுங்கிவிட்டது. அவர்கள் அனைவரையும் நிற்க வைக்க கூட இடமில்லை. திறந்தவெளி அரங்கில், இடம் கிடைத்தால் நல்லது.
தர முடியாது என திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார், ஆல்ஃபிரட் துரையப்பா. யாழ்ப்பாண மேயர். ஏற்ப்பாட்டாளர்கள் அவரை கெஞ்சும் நிளைக்கு தள்ளப்பட்டனர். நீங்களும் ஒரு தமிழர் தானே. தமிழனுக்கு தமிழனே உதவாமல் இருக்கலாமா? தயவு செய்து அனுமதி கொடுங்கள் என மன்றாடினர். ஆனாலும் துரையப்பா ஒத்துக்கொள்ளவில்லை. துரையப்பா தன்னை ஒரு தமிழனாக என்றும் தன்னை கருதிக் கொண்டது கிடையாது. தமிழன் என்ற அடையாளத்தை துறந்த்தால்தானே அரசாங்க பதவி கிடைத்தது.
ஆயிரம் பிரச்சனைகளுக்கு மத்தியிலும், மாநாட்டை ஆரம்பித்தார்கள். தமிழர்களே என பேசத் தொடங்கும் போதே, காவல் துறையின் வாகனங்கள் அரங்கத்திற்குள் நுளைந்தது. பாதுகாப்புக்காக தான் வந்திருப்பார்கள் என மக்கள் நினைத்தனர்.
லத்தியை சுழற்றிக்கொண்டே தான் உள்ளே நுழைந்தனர். வேண்டுமென்றே மக்களை கீழேப் பிடித்து தள்ளினார்கள். வாகனங்களின் கண்ணாடிகள் உடக்கப்பட்டன. சைக்கிள்கள் தூக்கி எறியப்பட்டன. கூட்டத்திற்குள் கண்ணீர் புகை குண்டை வீசினார்கள். அனைவரும் சிதறி ஓடினார்கள். ஐயோ பிள்ளையைக் காணோமே என தாய்மார்கள் கதறினார்கள். காலில் ஏதோ மிதிப்படுவதைப் போல இருந்தது, ஆனால், குனிந்து பார்க்க நேரமில்லை. தன் உயிரைப் பாதுகாக்க மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
எல்லாம் முடிந்தது. மொத்தம் ஒன்பது பேர். மிதிப்பட்டு, மூச்சுத் திணறி இறந்து போயிருந்தார்கள்


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 11:17 am

சிவக்குமரன் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். முதலில் சந்திரசேகர். காவல் துறை அதிகாரி. கலகத்தை திரி கொளுத்தி தொடங்கியவன். அவனை அகற்றிய பின்னர், ஆல்ஃபிரட் துரையப்பா.
குட்டிமணி-தங்கதுரை குழுவினருடன் சிலகாலம் இருந்தார், சிவக்குமரன். ஆனால், அவருடைய கனவுகள் வேறுதிசையில் இருந்தன. அதிரடியாக அடித்து விளையாடுவதே அவருடைய விருப்பம். கூடி பேசி, திட்டம் தீட்டி பொழுதை வீணாக்க விரும்பவில்லை. துப்பாக்கியை எடுத்தோமா, சுட்டோமா அவ்வளவு தான். அதற்கு மேல் யோசிப்பதற்கு எதுவுமில்லை. ஆகையால் அவர்களுடனிருந்து தன்னை துண்டித்துக் கொண்டார்.
மாநாட்டு சம்பவம் சிவக்குமரனின் இரத்தத்தை கொதிக்க செய்தது. பார்த்து பார்த்து விழா அலங்காரங்களை செய்தவர் அவர். இரத்தக் கறைகளையும், சிதிலமடைந்த பூக்களையும் உடைந்த நாற்காலிகளையும் பார்க்கும் தெம்பு அவரிடம் இல்லை.
கைலாசநாதர் கோவில் முனையில், சந்திரசேகரின் காரை கைமறித்து நிறுத்தினார். அவன் தலைக்கு நேரே துப்பாக்கியை நீட்டினார். சுட்டார். ஒன்று, இரண்டு, மூன்று. துப்பாக்கி வேலை செய்யவில்லை. ஓட்டம் பிடித்தார். அப்போதாவது நிதானித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், அவர் சிவக்குமரன் இல்லை. ஒரு பாலத்தின் அருகில், துரையப்பாவின் காரை மறித்தார். அப்போதும் துப்பாக்கி வேலை செய்யவில்லை. மீண்டும் தப்பி ஓட்டம்.
தொடர் தோல்விகள். ஏமாற்றம். எரிச்சல். வேலை செய்யாத துப்பாக்கி மீது. அதை எடுத்துச் சென்ற தன் மீது. ஒட்டுமொத்த காவல் துறையும் சிவக்குமரனைத் தேடியது.
சிவக்குமரன் நிதானிக்கவேயில்லை. வா! போகலாம் என்றார் தன் சகாக்களுக்கு. பக்கத்தில் தான் மக்கள் வங்கி. ஒரே ஒரு காவல்காரன். அவனை சுட்டு வீழ்த்திவிட்டு, பணத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றுவிடலாம்.
ஜூன் 5,1974. அவர்கள் புறப்பட்டார்கள். கோபே வங்கி. ஒரே ஒரு காவல்காரன் தான். சிவக்குமரன் இரண்டு முறை சுட்டார். அனால் இரண்டும் குறீ தவறியது. துப்பாக்கியை தூக்கிக் கொண்டு, துரத்த ஆரம்பித்தான், அந்த காவலன்.
துப்பாக்கியை தூக்கிபோட்டு ஓட ஆரம்பித்தார் சிவக்குமரன். அந்த காவலன் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டான். ஓடிக்கொண்டே தன் கழுத்திலிருந்த சயனைட் குப்பியை அறுத்தார் சிவக்குமரன். திரும்பிப் பார்த்தார். ஒரு முறை பாய்ந்தால், பிடித்துவிடக் கூடிய தொலைவு தான் இருந்தான் அந்த காவலன். ஏய்! ஏய்! என்ன செய்கிறாய்? நில்.
சிவக்குமரன் சயனைட் சுவைத்தார்.
சயனைட் உட்கொண்டு, தமிழின விடுதலைக்காக உயிர் கொடுத்த முதல் தமிழ் போராளியாக சிவக்குமரன் ஆனார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 11:19 am

தமிழர்கள் வாழும் பகுதியில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மொத்தம் பதினைந்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர். இது யாழ்ப்பாணத்திற்கு புதுசு.
சிவக்குமரனின் உடல் முன்பு இளைஞர்கள், வீர சபதம் எடுத்துக் கொண்டனர். “எங்கள் தியாகியே, கவலைப்படாதே. உன் பாதையில் நாங்கள் செல்வோம். தொடர்ந்து போராடுவோம். தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும்வரைப் போராடுவோம்.”தம்பி சிவக்குமரனின் பாதை தவறானதாக இருந்தாலும், அவரது சீறிய நோக்கத்திற்காக தலை வணங்குகிறேன் என செல்வநாயகம் தன் அறிக்கையை வாசித்தார். பகத்சிங் மீது காந்தி கொண்டிருந்த பொறாமையின் காரணமாக அவர் வாசித்த அறிக்கை. நோக்கம் சிறந்தது. பாதை தான் தவறு.
ஒரு தமிழனை சிறையில் தள்ள காவல்துறைக்கு எந்த பெரிய காரணமும் தேவைப்பட்டதில்லை. ஒரு வேளை, தப்பித்தவறி யாராவது கேட்டாலும் சொல்லிவிடலாம். கலகம் செய்ய நினைக்கிறார்கள். முந்தைய பிறவியில் கலகம் செய்திருக்கலாம். இனி வரும் காலங்களில் ஏதாவது தப்பு செய்ய வாய்ப்புண்டு. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அவன் தோலின் நிறம் எனக்கு பிடிக்கவில்லை. பதினோறு மணிக்கு மேலே சைக்கிளை தள்ளிக் கொண்டு போனான். ஏதோ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான். இது போன்ற காரணங்களும் ஏற்ற்க் கொள்ளத்தக்கதே. சிறையில் தள்ள. விசாரணை இல்லாமல் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காவலில் வைக்க. அடிக்க, உதைக்க, தேவைப்பட்டால், பரலோகத்திற்கு அனுப்ப.
1974-ன் மத்தியில், யாழ்ப்பாணம் திரும்பினார் பிரபாகரன். பிரபாகரன் மனதில் ஒரு திட்டம் வைத்திருந்தார். சிறிமாவோ அரசுக்கு ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாக வேண்டும். என்ன செய்யலாம்? யாழ்ப்பாணம் முழுதும் குண்டு வைத்தால் என்ன?
மார்கெட். இரயில் நிலையம், காவல்துறைக் கட்டிடம் என சில முக்கியமான இடங்களைத் தேர்ந்தெடுத்தார். அத்தனை இடங்களிலும் ஒரே நேரத்தில் குண்டுகள் வெடிக்க வேண்டும்.
ஒன்று விடாமல் அத்தனை குண்டுகளும் வெடித்தன. ஆனால் ஒரு உயிர் கூட போகவில்லை. தமிழர் எவரும் பாதிக்கக்கூடாது என கணக்கிட்டே நிகழ்த்தப்பட்டது. சிறிமாவோ பீதியுடன் பார்த்தார். பிரபாகரன் தனக்குள் சொல்லிக் கொண்டார்.
பொறுங்கள் அம்மையாரே. இனி தான் ஆரம்பம்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 11:22 am

அதற்கு முன்னால் வேறொரு காரியம் செய்ய வேண்டியிருந்தது. ஃபெடரல் கட்சியின் நீண்ட கால கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது. அதிகாரத்தை பங்கிட்டுக்கொள்வதன் மூலம், மாற்றம் கொண்டு வரலாம் என நம்பும் செல்வா. தேர்தல் ஜனநாயகத்தில் இன்னும் நம்பிக்கை கொண்டிருக்கும் செல்வா. காங்கேசன் துறை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு உதவுவது நம் கடமை. அவர் நமக்கு உதவமாட்டார். ஆனாலும் நாம் அவருக்கு உதவுவோம்.
தேவை அமைதி. தேவை தனி தேசம். தேவை தமிழீழம். வாக்காளப் பெருமக்களே சிந்திப்பீர். தந்தை செல்வாவிற்கு வாக்களியுங்கள். பிரபாகரனும் அவர் நண்பர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்கள். ஓய்வு ஒளிச்சல் இல்லாத சூறாவளிப் பணி. சிங்கள அரசுக்கு எதிராக திரளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்கள்.
TNT தொடங்கி எதுவுமே செய்யவில்லையே என கிசுகிசுத்த நண்பர்களிடம், இனி நம் வேலைகள் ஆரம்பம் என்றார் பிரபாகரன். அவர்களுக்கு எதுவும் பிரியவில்லை.
ஆல்ஃபிரட் துரையப்பாவை அகற்ற முடிவு செய்துவிட்டார் பிரபாகரன். அப்போது பிரபாகரனுக்கு வயது இருபது.
பிப்ரவரி 6,1975 அன்று தேர்தல். தந்தை செல்வா மகத்தான வெற்றி பெற்றார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 11:28 am

இரண்டு துருப்பிடித்த துப்பாக்கிகள் கிடைத்தன. சில கையெறி குண்டுகளும். அவர்களுடன் முப்பது பேர். இது போதும் என்றார் பிரபாகரன். செலவுக்கு பணம். புது ஆயுதங்கள் வாங்க. சாப்பாடு எல்லாம் பிரச்சனையாக இருந்தது. வங்கிகளை கொள்ளையடிக்கலாம் என்றார் செட்டி. பிரபாகரனுக்கு செட்டி மீது அபாரமான நம்பிக்கை இருந்தது.
வங்கியில் கொள்ளையடித்த பணத்தை தானே வைத்துக் கொண்டார் செட்டி. அதில் ஒரு காரும் வாங்கிக் கொண்டார். போலீசிலும் சிக்கிக் கொண்டான். பிரபாகரன் அதிர்ச்சியடைந்தார். நம்பிக்கை துரோகம் கொடிய வலி தரக் கூடியது. ஆனால் தவிர்க்கமுடியாதது. தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டார். ஆனால் பிரபாகரனுக்கு கவலை வேறு. நாலு தட்டு தட்டினால், செட்டி அனைத்தையும் உளரிவிடுவான். நம் நண்பர்களையும், இருப்பிடத்தையும் காட்டி கொடுக்கமாட்டான் என என்ன நிச்சயம்?
வேதாரணியத்தில் அனுபவித்த அதே சங்கடங்கள். சாப்பாடு இல்லை. உறக்கம் இல்லை. ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். தேவைப்படும் போதும் சந்திக்கல்லாம் என அனைவரையும் பிரிந்துப் போக சொல்லிவிட்டார்.
குட்டிமணி கள்ளப்படகுடன் தமிழ்நாட்டில் மாட்டிக் கொண்டார். படகு முழுவதும் வெடிப்பொருட்கள். தங்கதுரை மறைவிடத்தில். அருளர் என்பவர் தலைமையில் ஒரு குழு அதிரடியாக ஒரு செயலை செய்திருக்கிறது. 1975 உலகக் கோப்பை சிரிக்கெட் போட்டி மான்செச்டரில் நடைப்பெற்ற போது, சிங்கள அரசை கண்டிக்கும் வகையான வாசகங்களை பலகைகளில் எழுதி, கேமரா கடந்து போகும் போது எல்லாம் உயர்த்திப்பிடித்து, உலகுக்கு சிங்கள அரசின் தமிழர் விரோத போக்கை தெரிவித்தனர். இது ஒரு கவன ஈர்ப்பு போராட்டம். இவர்கள் ஈழப் புரட்சிகர மாணவர் விடுதலை அமைப்பை (EROS) சேர்ந்தவர்கள்.
நான். என்னுடன் மூன்று பேர். ஆல்ஃபிரட் துரையப்பாவை அகற்றும் பணி எங்களுடையது. மற்றவர்கள் துரையப்பாவின் நிலலாகவே மாற வேண்டும். அவரின் தினசரி நடவடிக்கைகள் என்ன? எங்கே போகிறார்? எத்தனை மணிக்கு? எங்கே டிபன் சாப்பாடு சாப்பிடுகிறார்? நண்பர்கள் யார் யார்? பொழுதுபோக்கு ஏதாவது உண்டா? தனிமையில் இருக்கும் சமயம் என்ன? எல்லாமும் வேண்டும்.
ஜீலை 27, 1975. வரதராஜ பெருமாள் கோவில் வாசலில் அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு காத்திருக்க ஆரம்பித்தார்கள். துரையப்பாவின் கார் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தது. கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தார் துரையப்பா. பிரபாகரனும் நண்பர்களூம் ஓடிச் சென்று அவரை வணங்கி நின்றனர். பவ்வியமாக நிற்கும் இளைஞர்களைப் பார்த்து புன்னகைத்தார் துரையப்பா. அதற்குள் பிரபாகரன் துப்பாக்கியை எடுத்துவிட்டார்.
நெஞ்சில் குண்டு வாங்கி சுருண்டு விழுந்தார் துரையப்பா. டிரைவரை கீழே தள்ளிவிட்டு, அதே காரில் ஏறிச் சென்றார்கள்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 11:31 am

தமிழீழ விடுதலைப் போரில் அது முதல் பலி.
சிங்கள அரசு, காவல் துறை, சிறிமாவோ பண்டாரநாயகா அத்தனை பேரும் பயந்து பின்வாங்கினர்.
யாழ்ப்பாணத் தமிழர்கள் திருவிழா போல் துரையப்பா மரணத்தைக் கொண்டாடினார்கள். துரையப்பாவின் இறுதி சடங்கு முடிவதற்குள், அந்த கிரிமினல்களை கைது செய்ய சிறிமாவோ உத்தரவிட்டார். மாணவ அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள் என அனைவரையும் காவல்துறை மொய்த்தது. அமிர்தலிங்கத்தை வசைபாடினர். பாருங்கள் உமது தமிழ் இளைஞர்கள் என்ன செய்து இருக்கிறார்கள். நீங்கள் கூட்டிவைத்து பேசிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா, அதன் பயனைப் பாருங்கள்.
அவர்கள் சொன்னது ஓரளவு உண்மையே. அமிர்தலிங்கத்துக்கும் போராளி தமிழ் இளைஞர்களுக்கும் தொடர்பு இருந்தது. புரட்சிகர குணமுள்ள, துடிப்புள்ள இளைஞர்களை வரவேற்று உபசரித்து உரையாடும் வழக்கம் அமிர்தலிங்கம் கொண்டிருந்தார். இது செல்வநாயகத்தின் ஏற்பாடும் கூட. எடுத்தோம். கவிழ்த்தோம் என வன்முறையில் இறங்கிவிடக் கூடாது என்பதற்கு தான் இந்த பணி. அவர்களின் தோள் மீது கை போட்டு பேசி அவர்களின் கோபத்தை மட்டுப்படுத்துவதே அவரின் தலயாயப் பணி.
தொடக்க காலத்தில், அமிர்தலிங்கம் பிரபாகரனையும் கூடச் சந்தித்திருக்கிறார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 11:37 am

எல்லோரும் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக இரண்டு விதிகள்.

ஆயுதம் இல்லாமல் எங்கும் செல்ல வேண்டாம். வீட்டுக்கு போக வேண்டாம். தங்க வேண்டாம். குடும்பத்தினரைப் பார்க்கும் ஆசையை விட்டுவிடுங்கள். இப்போதுதான் நம் பணியை துவங்கியுள்ளோம். நன் மீது இன்னும் சந்தேகப் பார்வை விழவில்லை. ஒவ்வோரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். ஆயுதம் இல்லையே என பயப்பட வேண்டாம். நம்மிடம் இப்போது இரண்டு ரிவால்வர்கள் தான் உள்ளன. கத்தியும் கூட ஆயுதம் தான். தேவைப்பட்டால் மிளகாய்ப் பொடியையும் எடுத்து கொள்ளுங்கள். எதற்கும் தயாராக இருங்கள்.

மற்றொரு விடயம். உங்கள் காதுகளை நன்றாக திறந்து வைத்துக் கொள்ளுங்கள். வாயைத் திறக்கவே வேண்டாம். தெரிந்தவர், உறவினர், மனைவி, அம்மா, அப்பா, குழந்தைகள், உயிர் நண்பன் ஒருவரிடமுன் நம் திட்டங்களைப் பற்றி பேசக் கூடாது. TNT பற்றியோ, நம்மைப் பற்றியோ, நம் நண்பர்கள் பற்றியோ, நம் செயல் திட்டங்கள் பற்றியோ, நம் கனவுகள் பற்றியோ பேச வேண்டாம். நம்மைப் பற்றிய பெருமிதங்கள் கூட வேண்டாம்.

யார் எப்போது நமக்கு எதிராக மாறுவார்கள் என தெரியாது. நம்மைக் காட்டிக் கொடுக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் ஏதாவது உளறிவிடக்கூடும்.
ஆறுமுகம் கிருபாகரன். கலாபதி. துரையப்பா சம்பவத்தில் தொடர்புள்ள இருவரும், பிரபாகரனின் இரு விதிகளையும் மீறினார்கள். வீட்டுக்கு சென்றார்கள். படுத்து தூங்கினார்கள். காவலர்கள் வந்தபோது, நிராயுதபாணியாக மாட்டிக் கொண்டார்கள்.

பிரபாகரன் பற்றியும், TNT பற்றியும், முதன்முதலில் உலகிற்கு முக்கியமாக காவல்துறை அறிந்துக் கொண்டது அவர்களிடம் இருந்துதான்.

பிரபாகரனா? வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை மகனா? அவனா இப்படி ஒரு காரியத்தை செய்தான்? நம்ப முடியவில்லையே… தம்பி தம்பி என்று அழைப்போமே. அந்த பிரபாகரன் தானா? சரியாகத் தெரியுமா? ஊர் முழுக்க இதுவே பேச்சு.

யாழ்ப்பாணத் தமிழர்கள் பெருமிதத்தில் பரவசமடைந்தார்கள். அந்த தம்பியா? நீதானா அந்த புலிக்குட்டி? எங்கள் குலத்து சீமானே. வல்வெட்டித்துறை வீரனே. நீயாவது இருக்கிறாயே ராசா. எங்களை கறும்புச் சக்கைப்போல் பிழிந்துக் கொண்டிருக்கிறார்களப்பா. ரோந்து வரும் போது எங்கள் வீட்டு பெண்டுகளை இழுத்துச் சென்றார்கள், என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இரண்டு வருடங்கள் ஆச்சு. ஒரு தகவலும் இல்லை.

பிரபாகரின் இறுப்பிடத்தை இளைஞர்கள் வலைப் போட்டுத் தேடினார்கள். கண்டுபிடித்தவர்கள் தன் விருப்பத்தை தெரியப்படுத்தினார்கள். அவர்களையும் இணைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டார்கள். உயிரையும் கொடுக்க அவர்கள் சித்தமாக இருந்தார்கள். பேபி என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் இப்படி வந்து இணைத்து கொண்டவர்தான். பின்னர், வன்னி பிரதேசத்துக் கல்வி பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார்.


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Sep 27, 2010 11:44 am

வவுனியாக் காடுகளை தனது இருப்பிடமாக தேர்வு செய்திருந்தார் பிரபாகரன். அடர்ந்த வனப்பகுதி. பயிற்சிகளை மேற்கொள்ள மிகச்சிறந்த இடம். பதுங்கிக் கொள்ளவும் தான்.

வவுனியாவில் இருந்து மூன்று கிலோமீட்டர் தள்ளி இருந்த பகுதி அது. இது நம்முடைய பூந்தோட்டம் என்றார் பிரபாகரன். அதுவே பெயராக அமைந்தது. சுமார் நாற்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம். விவசாய நிலமாக அமைந்ததால் பிரபாகரன் மகிழ்ச்சியடைந்தார்..

குடிசைகள் அமைக்கும் பணி ஒரு பக்கம் நடக்கும். மற்றொரு பக்கம், தோட்டப் பணி. ஒரு மூலையில், ஜூடோ, கராத்தே பயிற்சிகள், ஒரு மேட்டின் மேலேறி உடற்பயிற்சிகள் பழகுவார்கள். மல்யுத்தம் செய்வார்கள். தக்காளி விதைகளை தூரத்தில் வைத்துவிட்டு, துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். அதுவரை துப்பாக்கியை வைத்திருந்தவர்கள், வெண்டைக்காயை உடைத்து, சோதித்துக் கொண்டிருப்பார்கள்
.
உடற்பயிற்சி முடித்த கையோடு, சமையலில் இறங்கிவிடுவார்கள். ஓய்வு நேரம் அரிதாகத் தான் கிடைக்கும். கிட்டத்தட்ட இராணுவ பயிற்சி. முன்பொரு சமயம் எடுத்துக் கொண்டார்கள் அல்லவா, அதைவிடக் கூடுதலாக. கடுமையாக. புதிதாக வந்து இணையும் இளைஞர்களை பூந்தோட்டத்துக்குத் தான் அழைத்து வருவார்கள்
.
பிரபாகரன் எப்போது ரோந்து வந்துக் கொண்டெ இருப்பார். அதிகார தோரணையுடன் அல்ல. புதிதாக வரும் இளைஞர்களுக்கு சொல்லித்தருவதற்க்கு. துப்பாக்கி பிரித்து இணைக்கும் தொழில்நுட்பத்தை அருகிலிருந்து கற்றுக் கொடுப்பார். அவரின் முதல் பயிற்சியும் அது தானே..

மரத்தின் மீது சாக்பீசால், ஒரு மனித உருவத்தை வரைந்திருப்பார். குறிப்பிடும் பாகத்தை சுடவேண்டும். அனைவரும் இந்த பயிற்சியை மேற்க்கொள்ள வேண்டும். ஏனென்றால், சிவக்குமரனின் குறி தவறாமல் இருந்திருந்தால், இயக்கத்திற்கு ஒரு துடிப்புள்ள வீரன் ஒருவன் கிடைத்திருப்பான்.

பிரபாகரனின் இடுப்பில் எப்போதும் ஒரு ரிவால்வர் அதற்குறிய பட்டியில் சொருகப்பட்டிருக்கும். பேசிக் கொண்டே நடப்பார். திடீரென்று அரைவட்டம் அடித்து, மின்னல் வேகத்தில், ரிவால்வரை விடுவித்து, மரத்தில் வரைந்துள்ள சிவப்பு பிள்ளியை குறி தவராமல் துல்லியமாகச் சுடுவார். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மனதிற்குள் எண்ணி எடுத்து வைக்கிறாறோ எனத் தோன்றும்.

குறி தவறி சுடும் இளைஞர்களை பல முறை சாடியிருக்கிறார். ஐயோ..! இந்தத் தவறை நம் எதிரியிடம் செய்திருந்தால், இந்நேரம், அவன் உன்னை சுட்டுப் பொசுக்கியிருப்பான்.
ம், மீண்டும் பயிற்சி செய்…!


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Oct 16, 2010 5:46 pm

செலவுகளை சமாளிக்க பணம் வேண்டும். வங்கிகளை கொள்ளையடிப்பது தான் ஒரே வழி. ஆனால், அது மக்களின் பணம் அல்லவா? மக்களின் பணத்தை கொள்ளையடித்தா நம் இயக்கத்திற்கு செலவு செய்ய வேண்டும்? பிரபாகரன் ஒரு வழி கூறினார். அரசாங்க வங்கிகளை கொள்ளையடிப்போம். அரசாங்கம் மக்களிடம் அநியாயா வரி வசூலிக்கிறது. ஆனால் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நல்லதையும் செய்வதில்லை. ஆதலால், அரசாங்க வங்கிகளை கொள்ளையடித்து, மக்களுக்கு ஏதாவது உருப்படியாக செய்வோம்.

புதூர் வங்கிக் கிளையிலிருந்து ஆரம்பித்தார்கள். வங்கியில் எத்தனைப் பேர்? பாதுகாப்பு ஏற்பாடு எப்படி? எப்போது திறக்கிறார்கள்? எப்போது மூடுகிறார்கள்? எப்போது இடைவெளி? காசாளர் எங்கே அமர்கிறார்? தேவைப்படும் அத்தனை விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

மார்ச் 5,1976. துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார்கள். ஒரு குழு மேலாளரின் அறைக்குள் நுழைந்தார்கள். எங்களுடன் ஒத்துழைக்கும் பட்சத்தில், உங்களுக்கு எதுவும் ஆகாது. பணியாளர்கள் அனைவரும் மேலாளரின் அறைக்கும் அடைக்கப்பட்டனர். காசாளர் அரைக்குள் மற்றொரு குழு. பணம், நகைகள் தனித் தனியாக மூட்டைக் கட்டிக் கொண்டு கிளம்பினார்கள். உங்களுக்கு ஏற்ப்பட்ட இடைஞ்சலுக்கு வருந்துகிறோம் என்றார் பிரபாகரன்.
போயேவிட்டார்கள். பணமாக ஐந்து லட்சம். நகையாக இரண்டு லட்சம். யாழ்ப்பாணத்தின் முதல் வங்கிக் கொள்ளை, ஐந்தே நிமிடத்தில் நடந்து முடிந்தது.


Sponsored content

PostSponsored content



Page 4 of 13 Previous  1, 2, 3, 4, 5 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக