புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்த ஊருக்கு எழுதும் மடல்
Page 1 of 1 •
அம்மாவைப்போல்என்னைவளர்த்த ஜென்மபூமியேஉன்மணல்புழுதியில்உருண்டு விளையாடியசின்னமகன் எழுதும் அன்புக் கடிதம்
நீ நலமா ?உன் கருவேலம் முட்களும்கள்ளிச் செடிகளும் நலமா?
என்னைநீ நலமாவென திருப்பிக்கேட்டால்சொல்லுவதற்குஎன்னடம்நல்ல பதிலே இல்லைஉன்னை விட்டுவெகுதூரம் சென்ற நான்எப்போதாவது வரும்உன்னினைவால் பெருகின்றசந்தோஷத்தை தவிறபெரிதாக எதையும் பெற்றிடவில்லை
ஒட்டைவிழுந்தகால்சட்டையும்ஒருபிடி சோறும்தான்உன்னிடம் இருக்கும்போது இருந்ததுஆனாலும்நெஞ்சம் எல்லாம் நிறைந்துக் கிடந்தது
உன்னோடுஉள்ளபோது பெற்ற சாந்தியைஇங்கே வந்துவிற்று வசதிகளை வாங்கினேன்இன்றுவசதிகளை விற்றாலும்அமைதி கொள்ள வழியில்லை
நாசியை விற்றுபூக்களை வாங்கியவன்போல்கண்களை விற்றுகண்ணாடி வாங்கியவன்போல்மழலையை விற்றுவீணை வாங்கியவன்போல்மனைவியை விற்றுஇல்லறம் வாங்கியவன்போல்உன்னை விற்றுஆடம்பரம் வாங்கிய நான்ஒரு முட்டாள் வியாபாரி!
கல்யாணம் செய்தபிறகுதான்பிரமச்சரியத்தின் பெருமை தெரியும்விடிந்த பிறகுதான்இரவின் இனிமை புரியும்
கொத்தியப்பிறகுதான் நாகத்தின் அழகு தெரியும்கொட்டியப் பிறகுதான்பாதரசத்தின் வலிமை புரியும்இழந்தப் பிறகுதான்எளிமையின் வளமை தெரியும்ஆம்!உன்னை இழந்தப் பிறகுதான்உன் சௌந்தர்யம் தெரிகிறதுஉன் சௌகர்யமும் புரிகிறதுபானையை உடைத்து விட்டுபதபதைத்து ஆவதென்னஉன்னைபிரிந்து விட்டு உருகிஅழுவதால் என்ன பயன்
என் கதை கிடக்கட்டும்எப்போதும் அது திருப்பதி குப்பைதான்கிளற கிளற சிக்கல்களே வரும்என்னைப்போல்உனக்குஏராளமான பிள்ளைகள் உண்டுஅவர்களெல்லாம் நலமா ?அவர்களின் வாரிசுகளும் நலமா ?
காலையும் மாலையும்உன்னைஅலங்கரிக்க நீண்ட துடப்பத்துடன்கம்பீரமாய் நடப்பானே பகடை!அவனும்அவன் சாராயபுட்டியும்அவனின் ஒவ்வொரு அடிக்கும்புதுப்புது கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பாளேஅவன் மனைவிஅவளும் நலமா ?
சலவைக்குப் போட்டகால் சட்டையைதொலைத்து விட்டதனால்கல்லால் அடிப்பதாககந்தனை திட்டினேன்அந்தக் கந்தன் நலமா ?அவனுக்கு அழகானஒருபெண் உண்டேஅவள்பெயர் கூட மறந்து விட்டதுஅவளும் நலமா?
உன் வடபுரத்தில்வரிசையாகநிற்குமே தென்னை மரங்கள்அதில் அசைந்தாடியப்படிதொங்குமேதூக்கணாங் குருவிக் கூடுகள்அவைகள் நலமா ?
வாசகச்சாலைமதில்சுவர் மீது வரிசையாய்உட்கார்ந்துகிசுகிசு பேசுமே சிட்டுக் குருவிகள்அந்தக் குருவிகளை பிடிக்கபதுங்கி நிற்பார்களேகால்சட்டை போடாத பொடிசுகள்பொடிசுகளைசின்னக்கல் வீசி துறத்துமேபல்போன பெருசுகள்அவர்கள் எல்லோரும் நலமா?
நாராயண ஸ்வாமி கோயில்கிணற்றிலிருந்துதண்ணீர் எடுத்துவரும்மங்கையரின் நடையழகைகண்களால் தின்பதற்குவீட்டுத் தின்ணைகளில்வரிசையாய்காத்திருக்குமே வாலிபக் கொக்குகள்.....
கொக்குகளை துரத்துவதாய்பாசாங்கு செய்துதானும் மேயுமே கிழட்டு நாரைகள்.....கொக்குகளையும்நாரைகளையும் கண்மறைத்துபடகுகளுக்கு தூண்டில்போடுமே மான்விழி மீன்கள்.....அந்தக்காட்சிகளை இப்போதும்காண முடியுமாஉன் வீதி முனையில் ....?
பைப்படியில்சத்தமிடும் பெண்கள்அந்த சந்தத்திற்குதலையாட்டும் ஆண்கள்கைப்பிடியில்அடங்காத பிள்ளைகள்பம்பரம் கோலிபந்தாட்டம்கில்லி என்றுகுதியாட்டம் போடும்அரைக்கால் சட்டைகள்
பிரண்டையில் ராட்டிணம்பப்பாளி கிளையில் ஊதுகுழல்ஆட்டாம் புழுக்கை குத்திய ஓலைக்காற்றாடிகுருவி முட்டை அவியல்தலை உடைந்தப் பானையில்கூட்டாஞ்சோறுஓணானுக்கு துண்டுபீடிபிஞ்சுபோன சைக்கிள் டையரில் ரேஸ்என்று எவ்வளவோ கும்மாளம்இந்தக் கும்மலில்காலத்தைமறந்த சில நரைமுடிகள்
நெஞ்சை நிமிர்த்திகைகளை பின்னால் கட்டிஆண்பிள்ளைப் போல் நடப்பாளேநவலடியாள்!அவள்முதுகுக்குப்பின்பதுங்கி நடப்பாரே பூனை புருஷன்?அவர்முதுகு இப்போதாவது நிமிர்ந்திருக்கிறதா?
ஆவணிமாதத்துஅம்மன் கொடைவிழாவில்தாவணிப்போட்டபட்டாம்பூச்சிக்களை வலைவீசி பிடிக்கதலைசீவிநடைபழகும் விடலைமீசைகள்முளைப்பாரி பின்னால்கையில் பக்தியும் கண்ணில் தூண்டிலுமாய்திரிவார்களேஅவர்கள்இப்பவும் அப்படியே இருக்கிறார்களா?
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்கோரோசனை வாங்கலையோ கோரோசனை!குடை ரிப்பேர்அம்மி கொத்தனுமா அம்மிஎன்ற குரல்கள்
வளையல்காரனிடமும்பூக்கார முனியனிடமும்வம்பளக்கும் பெண்களின் வெடிச்சிரிப்பு
வண்டியிழுக்கும்மாடுகளின் மணியோசைஅவ்வப்போது ஏழும்பும்குடிகாரர்களின் ஓலம்இப்படி எல்லா ஓசைகளும்இப்போதும் உன் வீதிகளில் கேட்கிறதா?
சங்குடு பாட்டிஇன்றைய மாலைநேரத்திலும்வைகுண்டஸ்வாமி கோயிலுக்கு போகிறார்களா?மதியக் குழம்புக்குமீன் வாங்கமீன்கார துரைராஜ் வீட்டுக்கு முன்னால்காலையிலிருந்தே காத்திருக்கிறார்களா கிழவிகள்?
காதலனுடன்ஓடிப்போகும் போது மாட்டிக் கொண்டசிவராஜக்கனி அக்காவிற்குஅர்த்தராத்தியில்கல்யாணம் நடந்த அரசமர மேடைஇன்னும் அப்படித்தான் இடிந்து கிடக்கிறதா?அந்த மேடையில்தான்பிடிபட்டசில்லரைத் திருடர்களைஇன்னும் கட்டி வைக்கிறார்களா?
மாதாக் கோயில் மணியோசையும்அம்மன் கோயில் மேளமும்ஒரே நேரத்தில்தான் ஒலிக்கிறதா?
சுருட்டுப் புகைத்தப்படிநகைச்சுவை நறுக்குகளைவாரி இரைப்பாரேலிங்கத்துரை அண்ணன்அவர் அதே இளமையோடுதான்வாழைக்கு நீர் பாய்க்க செல்கிறாரா?
தினம்தினம்இரவு நேரம்விளக்கு கம்பத்தின் கீழ்குழந்தைகளைவட்டமாய் உட்கார வைத்துநல்லத்தங்காள் அல்லி அரசானிகதைகளைஒப்பாரி பாடலுடன் சொல்வார்களேதங்கபுஷ்பம் பெரியம்மாஅவர்கள் இன்னும்அதே வித்தைக் கர்வத்துடன்தான் நடக்கிறார்களா?
எல்லாமே அப்படித்தான்உள்ளதென்றால்ஒரு சின்ன அஞ்சல் அட்டையில்""ஆம்''என்று மட்டும் எழுதிப்போடுஅடுத்த நொடியேஅங்குவருகிறேன்இல்லையென்றால்மௌனமாய் இங்கு முடங்கிக்கொள்கிறேன்மொட்டை மரத்தைப்பார்க்கும் தைரியம் எனக்கில்லை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1