புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:58 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 4:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
58 Posts - 45%
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Manimegala
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
2 Posts - 2%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
418 Posts - 48%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
293 Posts - 34%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
28 Posts - 3%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 5:07 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:51 am

எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சையில் மாணவர்கள் அதிக மார்க்குகள் பெறுவதற்காக, அதற்கான பாடங்களை பத்திரிக்கையில் தொடங்கிய முதல் பெருமை "தினமலர்' இதழுக்குத்தான் உண்டு. அனுபவம் கொண்ட பல ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுப் பாடங்களை மிகவும் பயன்உள்ளதாக எழுதி மாணவர்களுக்கு உதவி வருகிறது. பள்ளிகள் உருவாக்குவது மட்டுமல்ல, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் நிலை அன்று மிகவும் பரிதாபமாக இருந்தது. இந்த ஆசிரியர்களை ஒற்றுமையாக்கி, ஓர் அமைப்பில் கொண்டு வரத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்க முயற்சிகள் நடைபெற்றன. அக்காலங்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய பல மாநாடுகளில் டி.வி.ஆர்., கலந்து கொண்டு, ஆசிரியர்களை உற்சாகமூட்டி இருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:52 am

ஊருக்குழைத்திடல் யோகம்.


இளமைக் காலம் முதல், பொதுப் பணிகள் ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற அடக்க முடியாத ஆர்வம் டி.வி.ஆரிடம் இயல்பாகவே இருந்து வந்துள்ளது. "தினமலர்' தொடங்குவதற்கு முன் அன்றைய நாஞ்சில் நாட்டில் அவர் பொதுக் காரியங்கள் பலவற்றை தானே முன்னின்று நிறைவேற்றி உள்ளார். ஒரு தனி மனிதர் தாம் எண்ணும் பொதுக் காரியங்களை நிறைவேற்ற ஒரு சக்திமிக்க ஆயுதம் தேவை என்ற நினைப்பிலேயே அவர் பின்னர் பத்திரிக்கை தொழிலைத் தேர்ந்தெடுத்தார் என்று கூடச் சொல்லலாம். அன்றைக்கு அவர் ஈடுபட்டுச் சிறப்பாகச் செய்து வைத்த சில பொதுப் பணிகளைப் பார்க்கலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:52 am

நாகர்கோவில் குடிநீர்த் திட்டம்

நாகர்கோவில் நகருக்கான இன்றைய முக்கடல் குடிநீர்த் திட்டம் குறித்து டி.வி.ஆர்., அவர்களே கூறுகிறார்:

திருவிதாங்கூர் ராஜவம்சத்தினர், பரம்பரையாகவே சரித்திரப் பூர்வமான காரணங்களால் நாஞ்சில் நாட்டு மக்களிடத்தில் தனிப்பற்று உடையவர்களாக இருந்தனர். திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயருக்குத் தமிழ் மக்களிடம் பாசம் மிகவும் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் நகரம் குடிதண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. அழகிய பாண்டியபுரம், கன்னியாகுமரி சாலைக்குக் கீழ்ப்பகுதி முழுவதும் எங்கு தோண்டினாலும் உப்பு கலந்த நீரே வரும். அந்தச் சாலைக்கு மேற்குப் பகுதியில் கிணறுகளில் நல்ல தண்ணீர் உண்டு. அதுவும் எல்லா இடங்களிலும் நல்ல தண்ணீர் கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை. பெரும்பான்மையான இடங்களில் கிணற்றின் ஆழம் 80 முதல் 100 அடி வரை இருந்தது.

குடிதண்ணீருக்காக மக்கள் வெகுகாலமாகப் போராடி வந்தனர். ஒவ்வொரு வார்டிலும் லாரிகளில் பெரிய "டாங்க்' வைத்து நல்ல தண்ணீரைக் கொண்டுவந்து குறைந்த விலைக்கு விற்று வந்தனர். சோறு சமைக்கவும், குடிக்கவும் மட்டும் பொதுமக்கள் அந்த தண்ணீரை வாங்கிக் கொண்டு, மற்ற தேவைகளுக்குக் கிணற்று நீரை உபயோகித்து வந்தனர்.

இந்த நிலைமையில் சர்.சி.பி.ராமசாமி ஐயர் நாகர்கோவில் குடிதண்ணீர் திட்டத்திற்காக பத்து லட்சம் ரூபாய் அனுமதித்து, பாதி மான்யமாகவும், மீதம் கடனாகவும் தரப்படும் என்று அறிவித்தார்.

நாகர்கோவிலில் இருந்து ஏழு மைல் தொலைவில், வடதிசையிலிருக்கும் முக்கடல் என்ற ஊரில் ஒரு சிறிய அணையைக் கட்டி, அங்கிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவதுதான் திட்டத்தின் தொடக்கம். தீவிரமாக வேலை நடந்து கொண்டிருக்கும்போது, ராவ்பகதூர் நீலகண்டய்யர் என்ற ஓர் ஓய்வுபெற்ற இன்ஜினியர், திடீரென்று ஓர் அபாய அறிவிப்பை விடுத்தார். அது பின்வருமாறு:

அரசாங்கத்தாரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த குடிநீர்த் திட்டம் வீண் பணச்செலவு; நகரசபையையும், மக்களையும் வருங்காலத்தில் பெரிய கடனாளியாக்கிவிடும். அதற்குப் பதில், செலவு மிகக் குறைந்த ஒரு திட்டத்தை நான் வகுத்திருக்கிறேன். அதை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்' என்று சொல்லி ஒரு நீண்ட மனுவை, சர்.சி.பி.ராமசாமி ஐயரிடமும், மகாராணி அம்மையாரிடமும் கொடுத்தார். அவர் ஒரு பெரிய இன்ஜினியர். ஆகவே, அவரது திட்டத்தை அலட்சியம் செய்வதிற்கில்லை. அவரது திட்டம் நியாயமாக இருக்கும் என்று கருதி அதைக் குடிநீர் வாரியத்தின் பரிசீலனைக்கு அரசாங்கம் அனுப்பி வைத்தது. நாகர்கோவில் நகரக் குடிநீர்த் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டது போலவே தோன்றியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:52 am

நீலகண்டய்யரின் திட்டம் இதுதான்: நாகர்கோவில், கோட்டார் பகுதிகளில் அச்சன்கிணறு என்று ஒரு கிணறும் , ஜில்லாக் கோர்ட் காம்பவுண்டிற்குள் இருக்கிற ஒரு கிணறும், கிருஷ்ணன் கோவில் கிணறும் வற்றாத கிணறுகள். இவற்றை நன்றாக ஆழப்படுத்தி, மேல்நிலைத் தொட்டி கட்டி, மின்சார பம்புசெட் வைத்து, நகரை மூன்று பிரிவுகளாக்கி, குழாய்கள் மூலம் எல்லா வீடுகளுக்கும் தண்ணீர் கொடுத்து விடலாம். மிகக்குறைந்த செலவில் இத்திட்டம் அமலாகும் என்றும், திட்ட விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது. நான் அடிக்கடி திருவனந்தபுரத்திற்குப் போய்வரக்கூடியவன். ஒரு தடவை போகும்போது, ஒரு முக்கியக் காரியமாகத் தலைமைச் செயலகத்திற்குப் போனேன். தலைமைச் செயலக அதிகாரி என்னிடம் கூறினார்: " உங்கள் ஊர்க் குடிநீர்த் திட்டம் கோவிந்தா ஆகிவிடும் போலிருக்கிறதே!' என்று. "என்ன? ஏது?' என்று நான் பரபரப்புடன் கேட்க, மேலே கண்ட விஷயம் முழுவதையும் என்னிடம் கூறினார். உடனே எனக்கு மனதில் பெரிய அச்சம் வந்து விட்டது. கிணற்று தண்ணீர் இறைப்பு என்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்பது என் கணிப்பு. இன்னும் இதை வெளிப்படையாகச் சொன்னால், பைத்தியக்காரத்தனமான திட்டம் என்றே தோன்றியது.

உடனே நான் திருவனந்தபுரத்தில் எனக்குள்ள வேலையை அவசர அவசரமாக முடித்துவிட்டு, நாகர்கோவிலுக்கு வந்து, ஒரு மனுவைத் தயாரித்தேன். அதில், கிணற்றுத் திட்டம் வேண்டாம். அரசாங்கம் ஏற்கனவே தயாரித்த திட்டம் தான் நாகர்கோவில் மக்களுக்கு வேண்டும். அதற்கான கடன் சுமையைத் தாங்க நாங்கள் தயார் என்று விபரமாகக் குறிப்பிட்டேன். அந்த மனுவை நானே நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு எடுத்துச் சென்று, அவர்களிடம் விஷயத்தை எடுத்துக் கூறி, அந்த மனுவில் எழுபது, எண்பது வழக்கறிஞர்களிடம் கையெழுத்து வாங்கினேன். மனுவை அரசாங்கத்துக்கு, திவானுக்கு, அரண்மனைக்கு என்று தனித்தனியாக அனுப்பி வைத்தேன்.

இதுதவிரவும், அப்பொழுது நகரசபைத் தலைவராக இருந்த என் நண்பர் சத்திய வாகீஸ்வர ஐயரிடம் நாகர்கோவிலுக்கு வர இருக்கும் ஆபத்தை விளக்கினேன். அவர் ஒரு பி.இ., பட்டதாரியானதால் அவருக்கு முழு விஷயமும் விளங்கிவிட்டது. இருவரும் கலந்து நகரசபைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினோம். அதில் கலந்து கொள்ள நீலகண்டய்யருக்கும் விசேஷ அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அவரும் வந்து தனது திட்டத்தைக் கூட்டத்தில் விளக்கிச் சொன்னார். ஓர் உறுப்பினருக்குக் கூட அது சரியெனப்படவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:53 am

உடனே அவரது திட்டத்தை நிராகரித்து, அரசின் முந்தைய திட்டத்தை அமலாக்கக் கோரியும், கடன் பொறுப்புக்களை ஏற்பதாகவும் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, மகாராஜாவிற்கும், திவானுக்கும் அடுத்த நாள் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் குடிநீர் வாரியப் பொறுப்பாளர் பாலகிருஷ்ணராவ் கிணற்றுத் திட்டத்தில் உள்ள மூன்று கிணறுகளையும் சோதித்துக் கொண்டிருந்தார். பொதுமக்கள், நகரசபை மனுக்களைப் பார்த்து அரசாங்கம் விழித்துக் கொண்டது. திரைமறைவில் ஏதோ சூது நடக்கிறது என்றும் அது கருதியது. முதல் திட்டத்தை கைவிடும் எண்ணத்தை அவர்கள் மாற்றிக் கொண்டனர்.

ஒவ்வொரு கிணற்றிலும் 3 இஞ்ச் விட்டமுள்ள பம்பு வைத்து 15 நிமிடம் அடித்தவுடன் கிணறு வற்றி விடுகிறது. 15 நிமிடம் தண்ணீர் ஏற 12 மணி நேர இடைவெளி வேண்டும். ஆகவே இது அர்த்தமற்றது. தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அறிக்கை சமர்ப்பித்தார் பாலகிருஷ்ணராவ். இது கிடைத்தவுடன் மகாராஜாவும், திவானும் பழைய திட்டத்தை வேகமாக நிறைவேற்ற உத்தரவு போட்டனர்.

பின்னர் ஒரு நாள் நான் பாலகிருஷ்ணராவைச் சந்தித்து நன்றி கூறினேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்: "நீலகண்டய்யர் ஒரு பெரிய இன்ஜினியர் என்பதால், அவரது திட்டம் ஏற்கப்பட்டு நாகர்கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட பத்து லட்ச ரூபாய் கோட்டயத்திற்கு மாற்றி உத்தரவாகிவிட்டது. தக்க சமயத்தில் நீங்கள் அனுப்பிய மனு வந்தது, நகரசபைத் தீர்மானமும் உடனே அதைத் தொடர்ந்து வந்தது. இந்த நெருக்குதல் காரணமாக போட்ட ஆர்டரை நிறுத்தி (அதாவது கோட்டயத்திற்கு போக வேண்டிய பணத்தை நிறுத்தி) கிணற்றுத் திட்டத்தைப் பரிசோதிக்கக் கூறினர். இப்போது எல்லாம் சுமூகமாக முடிந்தது. இனி விரைவில் நாகர்கோவிலுக்குக் குடிநீர் தந்து விடுகிறேன்' என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:53 am

ஒரு பெரிய விஷயம் தடைபடாமல் முடிவதற்கு என்னுடைய ஒரு சிறு முயற்சி காரணமாக இருந்தது. இதை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. சில காரியங்கள் சில வேளைகளில் நடைபெறாமல் போனால், இருபது, முப்பது வருடம் கழித்துத்தான் நடக்கும் என்ற நிலை வந்துவிட்டது. ஒரு சிறிய உதாரணம், பி.எஸ்.குமாரசாமி ராஜா முதல் மந்திரியாக இருந்தபோது, ராஜபாளையம் நகருக்குக் குடிநீர்த் திட்டம் வந்தது. ராஜாவோ, தான் முதன்மந்திரியாக இருக்கும்போது தன் ஊருக்குச் செய்தார் என்று கூறுவார்கள் என யோசித்தார். தன்னிடம் அதிகாரம் இருந்தும் கூட, அவரது நியாயமான போக்குக் காரணமாக அதை செய்யாமல் தள்ளிப்போட ராஜபாளையம் எவ்வளவு கஷ்டப்பட்டது என்பது எனக்குத் தெரியும்' என்றார்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 8 PHOTO_05


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:54 am

காலா காலத்தில் பணியைத் திட்டமிட்டு முடுக்கிவிடுவதில் டி.வி.ஆர்., சளைத்ததே இல்லை. ஜூன் 20, 1945ல் திருவனந்தபுரம் இளையராஜா மார்த்தாண்ட வர்மா நாகர்கோவில் குடிநீர்த் திட்டத்தை தொடங்கி வைத்தார். மக்கள் தொகை 33 ஆயிரம். நாகர்கோவிலில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் முக்கடல் குடிநீர்த் தேக்கம் அமைக்கப்பட்டது.


நாகர்கோவில் குடிநீர்த்திட்ட அனுபவங்கள், டி.வி.ஆருக்கு, குடிநீர்த் திட்டங்கள், அதற்கான நடைமுறைகள், செயல்படுத்துவதில் காட்ட வேண்டிய ஊக்கம் இவற்றை மிகவும் தெளிவாக்கி இருந்தது.

கோவில்பட்டி பெரிய நகரம், தாலுகாவின் தலைநகர். அது போல அதை அடுத்துள்ள எட்டயபுரம் நகருக்கும் பல சிறப்புக்கள் உண்டு. இவை வானம் பார்த்த பூமி, குடிதண்ணீர் இங்குக் கிடையவே கிடையாது. இருந்த ஒருசில கிணற்றுத் தண்ணீரை விற்றே சிலர் லட்சாதிபதியாகி விட்டனர்.

பிரச்னை தீர 20 ஆண்டுகளாக இதற்காகக் கடும் முயற்சி. இதில் ஈடுபட்டவர்களும் மக்களும் சோர்ந்து போகாமல் தொடர் செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டு "தினமலர்' தனது முழுப்பங்கையும் செலுத்தியிருந்தது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் இத்திட்டம் பற்றி ஏதாவது சிறு தகவல் தந்தாலும் உடனே அது "தினமலர்' இதழில் மிகப் பெரியதாக வரும். அப்பகுதி நிருபர் இந்தச் செய்திகளுக்காகக் கடுமையாக அலைந்து வேலை செய்ய டி.வி.ஆர்., தனி உத்தரவே போட்டிருந்தார். கோவில்பட்டி குடிநீர்த் திட்டம் நிறைவேறத் "தினமலர்' எடுத்த முயற்சிகளை 15 ஆண்டுக்கால "தினமலர்' இதழ் நெடுகப் பார்க்க முடிகிறது.
நாம் இதுவரை டி.வி.ஆரின் சமுதாயப் பார்வைகளையும், சமுதாயப் பணிகளையும் பார்த்தோம். இவை அனைத்தும் "தினமலர்' தொடங்குவதற்கு முன், 30 ஆண்டுகள் அவரால் நடத்தப்பட்ட பணிகளாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:55 am

பேராசிரியர் டாக்டர் வி.ஐ.சுப்பிரமணியம் இதுபற்றி விமர்சிக்கையில்:

இப்படிப்பட்ட குணநலன்கள், செயல்களை நாங்கள், "கடல் வட்டம்' என்போம். கடலில் முதலில் ஒரு சிறு புள்ளி வட்டம் தோன்றி, அது, அடுத்தடுத்துப் பெரிதாகிக் கொண்டே பலவட்டங்களாகப் பெருகும். அதை, பொதுநலத் தொண்டுள்ளவர்களது வாழ்க்கையிலும் பார்க்கலாம். டி.வி.ஆர்., தனது கிராமத்தில் இருந்த காலத்தில் அக்கிராமக் கமிட்டிக்கு அவர்தான் தலைவர். ஏற்கனவே இருந்த கல்யாண மண்டபத்தைப் புதுப்பித்துப் பழைய பாத்திரங்களை விற்று, நல்ல பாத்திரங்கள் வாங்கி பயன்படுத்த முன் வந்ததும், தழுவிய மகாதேவர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டதும், நல்ல வாசகசாலை அமைத்துப் பலரின் அறிவு விருத்திக்குப் பாடுபட்டதையும், அப்பகுதி மக்கள் இன்றும் பெருமையுடன் கூறுகின்றனர். இதுதான் அவரது வாழ்க்கை என்னும் கடலில் தோன்றிய, முதல் கடல் வட்டமாகும்.

"அதன்பின்னர், நாகர்கோவில் நகரில் மேற்கொண்ட பணிகள். அதைத் தொடர்ந்து குமரி மாவட்டப் பணிகள். அதன் பின்னர் தமிழர், தமிழர் உரிமைகளுக்காகப் பிரச்னைகள். பின்னர் குமரிக்குக் காஷ்மீரில் இருந்து ரயில் பாதை இணைப்பு. குமரியில் ஒரு பல்கலைக்கழகம். இப்படியாகப் பிறந்த ஊர், அவ்வூரின் தலைநகர், மாவட்டம், மொழி, இனம் என்றெல்லாம் இந்தக் கடல் வட்டங்கள் பெரிதாகிக் கொண்டே செல்வதைப் பார்க்கலாம். இதுவே பின்னர் மிகவும் பெரிதாகி நெல்லை மாவட்டம், மதுரை, ராமநாதபுரம் மாவட்டம், திருச்சி, சென்னை, கோவை என்றெல்லாம் மக்கள் பிரச்னைகளில் அவரை, அவரது பத்திரிக்கை மூலம் ஆழமாகப் பார்க்க வைத்தது' என்று கூறினார்.

அவரது விமர்சனம் மிகச் சரியானதே என்ற முடிவுக்கு அவர் வந்து வெகு காலமாயிற்று. தேசமும் சுதந்திரம் பெற்று விட்டது. இனி மக்கள் பிரச்னையைச் செயலாக்கத் தனக்கு ஒரு பெரிய கருவியைத் தயார் செய்தாக வேண்டும் என்ற உந்துதலின் காரணமாகவே அவர் பத்திரிக்கைத் தொழிலில் காலடி எடுத்து வைத்துள்ளார். டி.வி.ஆரது பொதுநலப் பணிகள் சில:

ஒவ்வொரு பணிக்கும் அவர் தனித்தனிக் குழு அமைத்து அவர்களை ஜனநாயகப் பூர்வமாக இயங்க அனுமதித்திருந்தார். தன்னுடன் பழகிய நண்பர்கள் பலரை இப்படிப்பட்ட இயக்கங்களில் ஒருங்கிணைத்துக் கொண்டார். தனது நண்பர்களைத் தன்னுடன் பழகியவர்களை அவர் கடைசிக்காலம் வரை மறக்கவே இல்லை. அது ஒரு குடும்ப பாசமாகவே அவரிடம் வளர்ந்திருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:55 am

கவிமணி

தேசிய விநாயகம் பிள்ளை (கவிமணி) ஜூலை 14, 1876ல் தேரூரில் பிறந்தார். தேரூரில் ஆரம்பக் கல்வி. கோட்டாரில் ஆங்கிலப் பள்ளியில் மெட்ரிக்குலேஷன். பின்னர் கல்லூரிப் படிப்பு. 19ம் வயதிலேயே குருவின் ஆணையின் பேரில் தேரூரில் குடி கொண்டுள்ள அம்பாளின் பெயரால், "அழகம்மை ஆசிரிய விருத்தம்' எனும் சிறு நூலை வெளியிட்டார்.


கோட்டார் ஆரம்பப் பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி, திருவனந்தபுரம் பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இங்கெல்லாம் ஆசிரியர் பணி. 1936ல், 'காந்தளூர்ச் சாலை' ஆங்கில ஆராய்ச்சி நூல் வெளியிடப்பட்டது. 1940ல் சென்னை மாநிலத் தமிழ்ச்சங்க 7வது ஆண்டு விழாவில், "கவிமணி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மலரும் மாலையும், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உமர் கயாம் பாடல்கள், இளந்தென்றல் போன்ற ஏராளமான புகழ் பெற்ற நூல்களைத் தமிழ் உலகிற்கு வழங்கியவர். கவிஞரது 70வது ஆண்டுப் பாராட்டு விழா, 1945ல் நாகர்கோவிலில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 3:56 am

கவிமணிக்கு முதல் பாராட்டு விழா

டி.வி.ஆர்., கூறுகிறார்:

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை புத்தேரியில் வசித்து வந்தார். வயது நிரம்ப ஆகிவிட்டது. பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் தோன்றிய மிகச்சிறந்த கவி. அவருடைய கவிதையில் விசேஷம் ஒன்று உண்டு. இதற்கு முன், தமிழ் இலக்கியத்தில், ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தமிழ்க் கவிதை போன்றே இருக்கும்படி செய்தவர் யாருமிலர். அப்போதைய கவிதைகள், தமிழ்ப் பண்பாட்டில் ஊறிப் போனதாகவோ, வடமொழியிலிருந்து எடுத்தாண்டதாகவோ இருக்கும்.

"கவிமணி ஒருவர்தான், துணிந்து ஆங்கில மூலத்திலிருந்து தமிழ்க் கவிதையைப் போலவே எளிமையாகத் தமிழாக்கம் செய்தார். அதில் பிட்ஜரால்டு (FITZERALD) எழுதிய, "லைட் ஆப் ஆசியா' என்ற புத்தரின் கவிதையும் ராமகாவியத்தின் கவிதைகளும் முக்கியமானவை. வேறு சில கவிகள் இவற்றைத் துணுக்குத் துணுக்காகத் தமிழாக்கம் செய்திருந்தாலும், கவிமணி ஒருவரே அதில் முழு வெற்றியும் பெற்றார்.

அவர்களிடத்தில் அநேகமாக வாரந்தோறும், அல்லது சமயம் கிடைக்கும் போதெல்லாம், நான் போய் அளவளாவுவது உண்டு. வேறு பலரும் சில நாட்களில் அங்கு வந்ததுண்டு. கவிமணி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பார். "எக்ஸிமா' என்ற நோயால் கவிமணி துன்பப்பட்டுக் கொண்டிருந்தார். எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் நிரம்ப உண்டு. ஆனாலும், என்னிடத்தில் அவர் தனி அபிமானம் கொண்டிருந்தார். அது என் பாக்கியம் என்றே கருதி வந்தேன். அவர்களிடத்தில் அவர் இயற்றிய கவிதையை நாம் புகழ்ந்து பேசினால், அதை அவர் ரசிப்பதில்லை. அவர் தற்புகழ்ச்சியைச் சிறிதும் விரும்பியதில்லை. இவ்வளவு உயர்ந்த கவியை நாஞ்சில் நாட்டு மக்கள் பெருமைப் படுத்தாமலே இருந்தனர். எனக்கு அது மனவேதனையைத் தந்தது.

சிறிதளவாவது அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற உந்துதலினால் அன்னாரது 70வது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்தேன்.

நான் கவிமணியிடம் இந்தக் கருத்தைத் தெரிவித்து, நீங்கள் அந்தப் பிறந்த தினக் கூட்டத்திற்கு வரவேண்டுமென கேட்டுக் கொண்டேன்:

Sponsored content

PostSponsored content



Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக