புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
48 Posts - 43%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
414 Posts - 49%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
28 Posts - 3%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 4:36 pm

இதே குணங்களால் டி.வி.ஆர்., பிற்காலத்தில் பல பெரிய சாதனைகளைச் செய்துள்ளார். அவரது இளமைக்கால வாழ்க்கை லட்சியங்கள் கொஞ்சமல்ல... மிக அதிக வித்தியாசமானதாகவே இருந்துள்ளது என்பதைப் பின்னர் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கோட்டார் உயர்நிலைப்பள்ளியில் 1925ல் தாங்கள் ஒன்றாகப் படித்ததாக தேரூர் பிரபல டாக்டர் முத்துக் கருப்ப பிள்ளை கூறுகிறார்: அந்தக் காலத்திலேயே விளையாட்டில் அவருக்குத் தனி ஆர்வம் இருந்தது. சிறந்த டென்னிஸ் வீரர். டென்னிசில் அதிக ஆர்வம் இருந்ததாக நகர சபைத் தலைவர், எம்.எல்.ஏ., போன்ற பதவிகளில் இருந்த அனந்தராமன் கூறினார்.


பிற்காலத்தில் டவுன் கிளப்பின் செயலாளராக டி.வி.ஆர்., இருந்தபோது, அங்கு அவர் உருவாக்கிய டென்னிஸ் கோர்ட் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், தமிழ் நாட்டிலும் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்றும் கூறினார்.



"அந்த நாளில் நகரில் இருந்த உயர்ந்த கல்லூரிப் படிப்பான எப்.ஏ., (F.A) அதாவது, இண்டர் மீடியட் பாசானவர்' என்று வெ.நாராயணன் கூறுகிறார். கல்லூரிப் படிப்பு மட்டுமே எல்லாவற்றையும் சாதித்து விடும் என்பது அன்றும் இல்லை; இன்றும் இல்லை. அனுபவம், பயிற்சி, கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல், இவை மிகப் பெரிய கல்லூரிப் படிப்பும் தராத கல்வியைத் தரவே செய்கிறது. அதைத்தான் டி.வி.ஆர்., வாழ்க்கையிலும் நாம் காண்கிறோம்.

திருமணத்திற்குப் பின் டி.வி.ஆர்., பல பொதுக் காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டார். திருமணத்திற்கும் அவரது பொதுக் காரியங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவரது வாழ்க்கை முறைகளைச் சரியாக சொல்லக்கூடியவர்கள் நமக்குக் கிடைக்காதது ஒரு பெரும் குறையே.

ஒன்றை மட்டும் நாம் நிச்சயமாக ஊகிக்க முடிகிறது... இளமைக் காலத்தில் இருந்தே டி.வி.ஆர்க்குத் தாம் பிறந்து வளர்ந்த இந்தச் சமுதாயத்திற்குத் தம்மால் இயன்ற பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்திருக்கிறது. இதைப் பின்னால் உள்ள வாழ்க்கை நிகழ்ச்சிகள் நமக்குத் தெளிவாக விளக்குகின்றன.

அதில் மிகவும் முக்கியமானது ஜாதி, உயர்வு தாழ்வுகளை நீக்கப் பாடுபட்டாக வேண்டும். இந்த எண்ணமே மேலோங்கி நின்றுள்ளது. தான் தன் சொந்தக் காலில் நிற்கும் நிலைக்கு வராத நிலையில் இவற்றைச் செய்வது சரியல்ல என்றும் அவர் எண்ணி இருக்கிறார். வெகு விரைவிலேயே அவர் தனது திறமையால், தன் காலில் பலமாக நிற்கவும் தொடங்கி விட்டார். அந்த நிலை வந்ததும், தனது சமூகப் பணிகளைத் தீவிரமாக செயலாக்கத் தொடங்கி உள்ளார். அதில் முக்கிய பங்கு வகிப்பது அரிஜன முன்னேற்றப் பணிகளாக இருப்பதால் அதைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:04 am

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டு அரிஜனங்களின் நிலை எப்படி இருந்தது?



எவ்வளவு சொத்துடையவர்களாக இருந்தாலும், ஏன் ராஜாக்களாக இருந்தவர்கள் கூடத் தாங்கள் அன்னியருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோமே என்று நினைக்காத காலமது. சுதேச சமஸ்தானமோ இன்னும் மோசம். கல்வி வளர்ச்சியே இல்லாத காலமது. தான் அன்னியனுக்கு அடிமையாக இருந்தாலும் பரவாயில்லை, தனக்குக் கீழ் பல அடிமைகள் இருக்க வேண்டுமென்பதில் விடாப் பிடியாக இருந்தவர்களே அன்று அதிகம்.

அதிலும் நிலம் வைத்திருப்பவனுக்குக் கூலி வேலை செய்து பிழைக்க ஒரு கூட்டமே தேவைப்பட்டது. சிறிது நிலமிருந்தாலும் போதும். அது ஒத்தி, அடமானம் கிடந்தாலும் பரவாயில்லை, "தான் பண்ணையார்' என்ற ஒரு கித்தாப்பு இருக்கத்தான் செய்தது. அதிலும் மிகப் பெரிய மரியாதைக்குரியவர்களாக எண்ணிக் கொள்ளும் ஒரு சமுதாயத்தினர், தமக்கு அடுத்த ஜாதிக்காரரைக் கூடத் தமக்குச் சமமாக மதிக்காத காலத்தில் அரிஜனங்களைப் பற்றி என்ன எண்ணம் வைத்திருப்பார்கள்?

இந்தியாவுக்குச் சுதந்திரம் வேண்டுமென்ற எண்ணம் உருவான காலத்தில் அரிஜனங்கள் என்ற ஒரு பெரும் பகுதியினர் மதிக்கப்படாமல் ஒதுக்கப்படுவது தவறு என்ற எண்ணம் பொதுவாக எழுந்தது என்பது வரலாற்று உண்மை. மகாகவி பாரதி இதில் தீவிரமாக இருந்தான். கவிதைகளில் மட்டுமல்லாது, கட்டுரைகளில் குலத்தின் அடிப்படையிலோ, ஜாதியின் அடிப்படையிலோ, ஒரு பகுதியினரை ஒதுக்குவது பாவம் என்றே கூறுகிறான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:04 am

காந்தி அடிகள்

ஆனாலும் கூட அரிஜனங்களுடைய பிரச்னையைப் பேரியக்கமாக உருவாக்கிய பெருமை காந்திஜிக்குத்தான் உண்டு. வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஜாதி இந்துக்களால் அடிமைகள் போல நடத்தப்பட்ட அரிஜனங்களது விடுதலை மிகமிக முக்கியம் என்பது அவரது கருத்து. தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லையே எடுத்து விட்டு, அவர்களுக்கு அரிஜனங்கள் என்ற பெயரைச் சூட்டியவரே காந்திஜிதான். அரிஜனங்களை தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட கூட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டுமென்ற கருத்து தேசத்தில் பலரை வெகுவாகக் கவர்ந்து, அதற்காகச் செயல்படவும் வைத்தது.

மேல்தட்டு மாணவர்களின் கேலிக்குரிய எந்தக் காரியத்தைப் பள்ளியில் டி.வி.ஆர்., செய்தார்? அவர் அனைத்து ஜாதி மாணவர்களுடனும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். இதுவே அன்றைக்குக் கேலிக்குரியதாக இருந்துள்ளது.

பள்ளிப் பருவத்தில் பெற்ற இந்த லட்சியம் பின்னர் விரிவாகி, அரிஜனங்களைச் சமமாக மதிப்பது, அவர்கள் வாழ்க்கையை முன்னேற்றுவது என்று, விஸ்வரூபம் எடுத்துள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:05 am

தாம்பூல அழைப்பு: "இவன் ரொம்பப் பெரிய மனுஷன். தாம்பூலம் வைத்து அழைக்கணுமோ?' என்று கேட்பர். தாம்பூலத்தின் மதிப்பு சில பைசாக்கள் தான்; ஆனால், அதற்குத் தனிப் பெருமை உண்டு. கம்பருக்குச் சோழ மன்னர் அடைப்பக்காரனாக இருந்து, தாம்பூலம் மடித்துக் கொடுத்ததைப் பெருமையாகக் கூறுவர். நாஞ்சில் நாட்டில் திருமணம் என்றால் தனது சொந்த மைத்துனரானாலும் சம்பந்தப்பட்டவர் தாம்பூலம் வைத்து அழைத்தால்தான் வருவர்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியதேர், சுற்று வட்டாரக் கிராம மக்கள் மொத்தமாக வந்து இழுக்கா விட்டால் ஒரு அங்குலம் கூட நகராது. கோயில் பிரதானிகள் தேர் இழுக்கக் கிராமம் கிராமமாகச் சென்று தாம்பூலம் வைத்து அழைக்க வேண்டும். வெறும் வெற்றிலை பாக்குத்தானே என்று தாம்பூலத்தைக் கருதிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த பீடிகை.

இந்தத் தாம்பூலம், நாஞ்சில் நாட்டில் ஒரு சமயம் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரிஜனங்களை ஓர் இடத்தில் மொத்தமாகக் கூட்ட வேண்டும்; அது ஒன்றும் பெரிய காரியமல்ல. பெரிய ஜாதிக்காரர்கள் என்று கருதப்பட்டவர்கள் கூப்பிட்டு அனுப்பினால், வந்து இடுப்பில் துண்டைக் கட்டி, கைகட்டி, தூர நின்று உத்தரவுக்குக் காத்திருந்த காலம் அது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:05 am

"அது சரியான வழியில்லை; முதலில் நாம் அவர்களைச் சமமாக மதிக்க வேண்டும். அதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு அதிகாரம் அல்லது ஆணை அவர்களைத் தலைநிமிரச் செய்யாது, நாமே நமது பண்பாடு, கல்வி, உலக ஞானம் இவை காரணமாக இறங்கி வந்து விடலாம். அதுவே அவர்களை நம் மீது நம்பிக்கையோடு, நம்முடன் வந்து நிற்க, வைத்து விடலாமல்லவா? நாம் ஏன் அவர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று தாம்பூலம் வைத்து அழைக்கக் கூடாது?' இப்படிப்பட்ட புதுமையான, புரட்சிகரமான எண்ணம் செயல்பட்ட இடம் நாஞ்சில் நாடு.

காலம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு. இந்தப் புதுமையான நோக்கோடு, அழைப்பு முறையைச் செயலாக்கிய முன்னணி வீரர் டி.வி.ஆர்., அன்றைக்கு முன்னணியில் இருந்து செயல்பட்ட விவரங்களை அவருடைய நண்பர்கள் பலர் மனம் திறந்து பாராட்டிக் கூறினர். அவற்றில் சில:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:06 am

* டாக்டர் எஸ்.முத்துக் கருப்பப்பிள்ள

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்த தேரூரில் ஏப்., 23, 1909ல் பிறந்தவர் எஸ்.முத்துக் கருப்பப்பிள்ளை. 1932ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றார். தான் பிறந்த சிறிய கிராமத்தில் 1933லேயே ஒரு மருத்துவமனையை நிறுவி, அங்கேயே பணி செய்தார். மாநில, அகில இந்திய மருத்துவக் கழகங்கள் பலவற்றின் உறுப்பினர். இந்தியாவின் பல மருத்துவ மாநாடுகளிலும், 1976ல் கனடா மருத்துவ மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.



1948ல் மகாத்மா காந்தி தேசிய நினைவு நிதி அமைப்பாளர். 1944ல் இருந்து மூன்று ஆண்டுகள் ஸ்ரீமூலம் சட்டமன்ற உறுப்பினர். 1957ல் தீண்டாமை ஒழிப்புக்கான தமிழ்நாடு அரசின் தங்கப் பதக்கம் பெற்றார்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 PHOTO_03


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:06 am

தேரூர் டாக்டர் முத்துக்கருப்ப பிள்ளை

அப்போதெல்லாம் டி.வி.ஆர்., தீவிரமாக அரிஜன இயக்கங்களில் ஈடுபட்டார். சேரிக்குச் சென்று சுத்தமாக்குவது, தீண்டாமை விலக்குப் பிரசாரங்கள் செய்வது, அரிஜனங்களுக்கு உதவுவது என்பதைத் தினசரிப் பழக்கமாகக் கொண்டு அவர் நடந்த காலமது.

"கா அண்ணாச்சி' என்று அழைக்கப்படும் பி.எஸ்.சுப்பிரமணியப் பண்டாரத்துடன் சேர்ந்து, தீண்டாமை ஒழிப்புப் பிரசாரத்திற்காக, "நந்தனார்' நாடகத்தை நாகர்கோவிலிலும், பின்னர் திருவனந்தபுரத்திலும் நடத்தினோம். அதன் மூலம் வசூலான தொகை, அரிஜன சமுதாய நிதிக்காக செலவிடப்பட்டது. இதில் எல்லாம் டி.வி.ஆர்., முன்னணியில் இருந்தார், என்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:06 am

* ஏ.சி.சுந்தரம் பிள்ளை
(படேல் சுந்தரம் பிள்ளை)

நாகர்கோவில் பொது வாழ்வில் பெரும் பங்கு கொண்ட முதுபெரும் அறிஞர் படேல் சுந்தரம் பிள்ளை, கொல்லம் ஆண்டு 1085ல் பிறந்தவர். இவரது தொழில்நுட்பத் திறனைப் பாராட்டி லண்டன் தொழில் கல்வி நிலையத்தார் 1935ல் இவருக்கு எப்.சி.ஐ., பட்டம் வழங்கினர். தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் சமீப 50 ஆண்டுக்கால வரலாற்றை ஆவணங்களோடு சேர்த்து வைத்துள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:07 am

படேல் சுந்தரம் பிள்ளை

அந்தக் காலத்தின் அரிஜன முன்னேற்றப் பணிகளில் டி.வி.ஆர்., தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஜூன் 13, 1940ல் வடசேரி வி.எஸ்.ஆறுமுகம்பிள்ளை எம்.எல்.சி., தலைமையில் திருவிதாங்கூர் சாம்பவர் மகாஜன சங்கச் சார்பில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் அரிஜனங்களின் முன்னேற்றத்தின் அவசியம் குறித்து டி.வி.ஆர்., அருமையாகச் சொற்பொழிவு ஆற்றினார். பேச்சோடு மட்டும் நிற்பதில்லை; சேரிகளுக்கு நாங்கள் சென்று அரிஜன சகோதரர்களைக் கூட்டி வைத்து, அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றவும் பாடுபட்டோம், என்கிறார்.

அரிஜன சேவைகளைப் பாராட்டி தமிழக அரசு தங்கப் பதக்கம் வழங்கிய, குமரி மாவட்டத்தின் பழம்பெரும் அரிஜனத் தொண்டர் சுவாமி செல்லையா தன் நினைவுகளைக் கூறுகிறார்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:07 am

* சுவாமி செல்லையா

விவசாயத் தொழிலாளி. குமரி மாவட்ட அரிஜனங்களின் அவல நிலை கண்டு இளம் வயதிலேயே வேதனைப்பட்டு அரிஜன முன்னேற்றத்திற்காக உழைக்கச் சபதம் ஏற்றார். இவரது அரிஜனத் தொண்டுகளைப் பாராட்டி, அன்றைய முதல்வர் காமராஜர், அமைச்சர் கக்கன் ஆகியோர் தங்கப் பதக்கங்கள் வழங்கி உள்ளனர்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 4 PHOTO_03b


Sponsored content

PostSponsored content



Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக