புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 13 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:56 am

"தொன்மை நிறைந்த மொழிகள் எனக் கருதப்படும் சீன, சமஸ்கிருத மொழிகள் கடந்த காலத்தில் எத்தனையோ மாறுதல்களுக்கு ஆளாகிவிட்டன. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழி சிறிதும் மாறவில்லை. எழுத்தறிவில்லாதவர்கள் கூடத் தமிழ்க் காவியங்களைப் பிறர் படிக்கக் கேட்டுப் புரிந்தக் கொள்ளக்கூடியப் பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. இந்தக் காரணத்தால்தான் உலகின் எந்த மொழியையும் விடத் தமிழ்மொழி சிறந்ததெனக் கருதப்படுகிறது,' என்று தமிழ் மொழி பற்றி தமது கருத்துக் களைக் கூறினார். தொடர்ந்து எழுத்தாளர்கள் அரசியலில் ஈடுபடாமல் தங்கள் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் மொழி வழியாய் வெளியிட வேண்டும், என்று கூறித் தமது தொடக்க உரையை முடித்தார், விஞ்ஞான ஆராய்ச்சி, கலாச்சார இலாகா அமைச்சர், பேராசிரியர் ஹுமாயூன் கபீர் அவர்கள்.

"பிறகு பலத்த கரகோஷங்களுக்கு இடையே தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரும், ஆறாவது மாநாட்டுத் தலைவரும் ஆன அறிஞர் வெ.சாமிநாதசர்மா அவர்கள் தமது தலைமை உரையை அரங்கேற்றினார்.

"தமிழ் எழுத்தாளர் சங்கம் தோன்றிய காலத்தில் இருந்து அதற்கு முறையே தலைமை தாங்கித் திறம்பட நடத்தி வந்த அறிஞர்கள் ஐவருக்கும் முதலில் தமது அஞ்சலியைத் தெரிவித்துப் பேசலுற்றார்.

"தமிழில் சிறுகதை இலக்கியம் வளர்ந்திருப்பது போல் நாவல், நாடக இலக்கியங்கள் வளரவில்லை. கட்டுரைகளும், கடித இலக்கியங்களும், அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலிய துறைகளில் நல்ல நூல்களும் எழுதப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

"சமூகம், மனோதத்துவம், தாவரம், பிராணி வர்க்கங்கள் உடற்கூறு ஆகிய சாஸ்திரங்களைப் பற்றித் தமிழில் சரியான நூல்கள் வரவில்லை என்பதை வருத்தத்தோடு சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:56 am

"சுயமாகத் தொழில் விரும்புவோர், இப்பொழுது ஆங்கிலத்தின் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கிறது. தொழில் நுட்பங்களைக் கூறும் புத்தகங்கள் தமிழில் வேண்டாமா? எழுத்தாளர்களே இதைப் பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள். இந்தத்துறை நோக்கி நமது எழுதுகோலைச் செலுத்த வேண்டும். நாம் சீக்கிரமாகவும், வேகமாகவும் செலுத்த வேண்டும்,' என்று, தலைவர் அவர்கள் தமது நீண்ட தலைமை உரையில் குறிப்பிட்டார்.

அதன் பிறகு நாஞ்சில் நாடு பெற்ற தவச் செல்வர் தசாவதானி ஜனாப் செய்குதம்பிப் பாவலர் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துத் தமக்கே உரிய தமிழ் உரையை நிகழ்த்தினார் தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள்...

"செய்குதம்பிப் பாவலரின் நினைவாட்சித் திறன் இணையற்றது. இமயம் போன்றது. அவர் படிக்காத தமிழ் நூல்களும், அவர் மனத்தில் பதியாத தமிழ்ப்பாக்களும் கிடையாது. ஒரே சமயத்தில் நூறு பேர் நூறுவிதமாகக் கேட்கும் கேள்விகளை மனத்தில் அடுக்கி வைத்து விட்டு அவர்களுக்குத் தகுந்த பதிலை அடுத்தடுத்துத் தரும் அவரது ஆற்றலைக் கண்டு வையமே வியக்கும்.

நீலத்திரை கடல் ஓரத்தில் நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி
கன்னியாகுமரி மாவட்டத்தையும், தமிழகத்தையும்
காத்து எல்லாம் பெருகச் செய்வாளாக.
வாழ்க தமிழ்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:56 am

தமிழ் அறிஞர்களென்றால்...

உலகின் வயதில் மூத்த மொழி என்ற பெருமையைத் தமிழ் பெற்றுள்ளது. இதுபோல் பல உலக மூத்த மொழிகள் இன்றைக்கு நலிந்து, சிதைந்து, ஆய்வாளர்கள் மட்டுமே அணுகும் வகையில் ஒதுங்கி விட்டன. அது மக்கள் மொழியாக வளராமல் போனது என்? வயது அதிகம் என்பது ஒன்று மட்டுமே ஒரு மொழிக்குப் பெருமையாகி விடாது. காலம் காலமாகப் பல்வேறு அறிஞர்கள் தங்களுடைய உழைப்பால் மொழியை வளப்படுத்தி ஏற்றமுறச் செய்து வந்தது தான் இந்தப் புகழுக்கெல்லாம் காரணம். தொல்காப்பியர் தொட்டுப் பாரதி வரை இந்தப் பரம்பரை தொடர்கிறது. இது வரலாறு.

ஆனாலும், தமிழ்நாட்டின் பெரிய துரதிருஷ்டம் தமிழ் மொழிக்கு ஏற்றம் தரப் பாடுபடும் அறிஞர்கள் போதிய அளவு மதிக்கப்பட்டதில்லை. அவர்களது. ஆய்வுகளுக்கு ஒட்டு மொத்தமான அங்கீகாரம் கூடக் கிடைக்கவில்லை. வாழ்நாளெல்லாம் இந்த அறிஞர்கள் வறுமையில் வாடினர். தங்களது ஆய்வுகளுக்குப் பொருளுதவி கேட்டு இவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இவர்களது. பெரும் தியாகங்களால் மட்டுமே தமிழ் மொழி இன்றைக்கும் சீர் இளமைத் திறன் கொண்டு உலக அரங்கில் விளங்குகிறது என்பதைப் புரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு.

இந்தப் பெருங்குறை டி.வி.ஆர்., இதயத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றி இருந்தது. தன்னந்தனியாகத் தமிழ் மொழியின் ஏற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் அறிஞர்களைப் போற்றுகின்றவர்களும், பாராட்டுகின்றவர்களும், உதவுகின்றவர்களும் இல்லாமல் போனால் மொழி வளர்ச்சி என்பதெல்லாம் ஏட்டோடு நின்று விட வேண்டியது தான்.

இந்த வகையில் தனது இறுதிக் காலம் வரை டி.வி.ஆர்., பல்வேறு துறையைச் சார்ந்த தமிழ் அறிஞர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடம் பரிவும், பாசமும் கொண்டு அன்பு செலுத்தி, உதவிய உதவிகள் ஏராளம். மொழி வளர்ச்சி பழைய தலைமுறையோடு நின்று விடக்கூடாது. இளம் தலைமுறையினரும் இதில் ஆர்வமுடன் கலந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அவருக்குத் தணியாத ஆவல் இருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:56 am

பேராசிரியர் பா.வளன் அரசு

பாளையங்கோட்டைத் தூய யோவான் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பா.வளன் அரசு பாளையங்கோட்டையில் 1940ல் பிறந்தார். பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் பயின்ற இவர், காரைக்குடி அழகப்பாவில் எம்.ஏ., பட்டமும், மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., பட்டமும் பெற்றார்.


சிறந்த எழுத்தாளர். கட்டுரைக் களஞ்சியம், நாடும் ஏடும், வீரமாமுனிவர் ஒரு விளக்கம், பாரதியின் புதுமை நலம், துறை தோறும் திரு.வி.க., தேம்பாவணித் திறன் போன்ற பல்வேறு நூல்களையும் இருபதிற்கு மேற்பட்ட சிறப்பு மலர்களையும் வெளிக்கொண்டு வந்தார். இலக்கியத் துறையில் பல்வேறு விருதுகள் பெற்ற இவர் சிறந்த பேச்சாளர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:57 am

திருநெல்வேலி வந்த பின்னரும் இந்தப் பணி மிகச் சீராகவே தொடர்ந்து நடைபெற்றது. இதுபற்றிப் பேராசிரியர் வளன் அரசு கூறுவதைக் கேட்கலாம்:

எனக்கு டி.வி.ஆரிடம், '58ல் இருந்து தொடர்பு உண்டு. அன்றைக்கு நெல்லையில் தமிழ்ப் பற்று மிகவும் அதிகமாகக் கொண்ட இளைஞர்கள் பலர் ஒன்றாகக் சேர்ந்து தமிழ்த் தொண்டில் ஈடுபட்டிருந்தோம். தச்சநல்லூரில் "தினமலர்' அலுவலகம் வத்த பின்னர் நாங்கள் டி.வி.ஆருடன் தொடர்பு கொண்டோம். அப்போது இளைஞர்களான எங்களை அவர் வழிப்படுத்திய முறையை, ஆர்வத்தை, இன்றைக்கும் கூட எண்ணி எண்ணி வியக்கிறேன். அப்போது நாங்கள் ஆண்டுக்கு எப்படியும் மூன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வோம். எந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைத்தாலும் டி.வி.ஆர்., கண்டிப்பாக அதற்கு வருவார். எல்லா உதவிகளையும் செய்வார். "தினமலர்' எங்கள் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். எந்த அலுவல் இருந்தாலும் எங்களைக் கண்டு விட்டால் அவற்றை ஒதுக்கி விட்டு எங்களுடன் நீண்ட நேரம் விவாதிப்பார். அவரிடமுள்ள ஆழ்ந்த தமிழ்ப் பற்றை நாங்கள் முழுதும் கண்டு வியப்பில் ஆழ்வோம். அவரது தமிழ்ப் பற்று மேலெழுந்தவாரியாக இருக்காது.

தமிழில் நல்ல பயிற்சி பெற்ற இளைஞர் பலருக்குத் தனது அலுவலகத்தில் வேலை கொடுத்தார். அவரது ஆதரவில் பலர் தமிழகம் பெருமைப்படத்தக்க வகையில் இன்று முன்னணியில் உள்ளனர். நாங்கள் "தனித்தமிழ் இலக்கியக் கழகம்' என்று ஒர் அமைப்பு வைத்திருந்தோம். முதன் முதல் இதில் ஒரு கூட்டத்திற்கு வந்த டி.வி.ஆர்., "தனித்தமிழ்க் கழகமா? மற்ற உலக மொழிகளில் இருந்து நீங்கள் தனியாக இருக்க ஆசைப்படுகிறீர்களா? "என்று கேட்டார். நாங்கள் சொன்னோம், "அப்படியல்ல; அரசியல் சார்பு இல்லாமல் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தனிததுப் பாடுபடும் கழகம் இது, "என்று. உடனே டி.வி.ஆர்., "அரசியல் தொடர்பு ஒரு மொழிக்கு மிகவும் அவசியம். மக்களாட்சியில் அது இல்லாமல் மொழி முன்னேற முடியாது. எந்த ஒரு வகையில் எடுத்தாலும் நாம் "தனி' என்ற உணர்வு கூடாது. தனிமைப்பட்டு விடுவோம். அதற்காக மொழிக்கு ஒரு சிறிதும் சம்பந்தமில்லாத அரசியல்வாதிகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதல்ல என் கருத்து,' என்று நல்லாசிரியர் போன்று எங்களுக்கு எடுத்துக் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:57 am

"வட்டாரச் செய்திகளுக்கு மட்டுமல்ல, முதலில் நமது வட்டாரத் தமிழ் அறிஞர்கள் பற்றி, நாம் பெருமைப்பட வேண்டும். அவர்களை நமது படைக்கு முன்னணித் தளபதிகளாக்க வேண்டும் என்று கூறுவார். இந்த வகையில் அவருக்குப் பாரதி, வ.உ.சி., இருவரிடமும் மிக அதிகமான பற்று இருந்தது. வ.உ.சி.,யின் தமிழ்ப் பணிகள் வெளிவர வேண்டுமென்று அன்றைக்கே அவருக்குப் பெருவிருப்பம் இருந்தது. ஒட்டப்பிடாரத்தில் ஆண்டுதோறும் வ.உ.சி., விழா எடுக்க அவரது தூண்டுகோல் மிக முக்கியமாயிருந்தது. அந்த விழாக்களுக்குத் "தினமலர்' தனி முக்கியத்துவம் தரும்.

"தமிழ் இலக்கியத் தொபர்பாக ஒரு தமிழ்ப் பத்திரிக்கை அன்றைக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்த பெருமை மட்டுமல்ல. மற்றத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் இதற்கு உதவ முன்வர தினமலரும் ஒரு காரணமாகும்.

"வீரமாமுனிவரது முன்னூறாது ஆண்டு விழா 1977ல் வந்தது. அதைச் சிறப்பாகக் கொண்டாட எங்களைத் தூண்டியவர் டி.வி.ஆர்., விழாவில் கலந்து கொண்டு ஓர் அறிவுரையே நிகழ்த்தினார். "வீரமாமுனிவர் ஓர் இத்தாலிக்காரர். போக்குவரத்து வசதி இல்லாத காலம் அது. கடல் கடந்து இங்கு வந்து தமிழ் மொழியைக் கற்று அவர் எவ்வளவு ஆராய்ந்து எழுதி நமது தமிழ்மொழியை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் பார்த்தீர்களா? மொழி வளர்ச்சி என்பதில் மதம், இனம், எதுவும் தலையிடக் கூடாது. எந்த வளர்ச்சிக்கும் அது தடையாகவே இருக்கிறது. வீரமாமுனிவரை நீங்களும் பின் பற்றிப் பாடுபட முன்வர வேண்டும். மொழி உணர்வு தேவை. வெறி கூடாது. நாடு கடந்து தமிழ் மொழியின் புகழ் மேலோங்க நீங்கள் ஒவ்வொருவரும் வீரமாமுனிவராக வேண்டும்,' என்று கேட்டுக் கொண்டார்.

"டி.வி.ஆருக்கு வள்ளலாரிடம் ஈடுபாடு உண்டு. நெல்லை நகரில் நடைபெறும் வள்ளலார் விழாக்களுக்குத் தவறாது வருவார். நாங்கள் அறிந்தவரை அன்னதானம் போன்றவற்றை அவர் விரும்புவதில்லை. ஆனால், வள்ளலார் விழாவில் அன்னதானம் இருப்பது அவசியம் என்று அவர் கூறியதோடு அதற்குப் பொருளுதவியும் செய்து விட்டு, "நான் உதவினேன் என்பது வெளியில் தெரிய வேண்டாம்,' என்பார்.

கூடியவரை எளிய தமிழில் பேசுவது நல்லது என்பது அவரது கொள்கை. ஒரு காலத்தில் சமஸ்கிருதத் தமிழ், பின் இன்று ஆங்கிலத் தமிழாக உள்ளது. சுத்தமாகத் தமிழ் என்பது இந்த விஞ்ஞான உலகில் கடினம். தமிழின் தனித்தன்மை கெட்டு விடக்கூடாது. அதற்காக மக்களுக்குப் புரியாதக் கொடுந்தமிழ் தேவை இல்லை என்பார்.'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:57 am

பெ.நா.அப்புசாமி

"தமிழ் மொழியில் அறிவியல் என்றவுடன் நினைவுக்கு வருபவர் பெ.நா.அப்புசாமி. தமிழ் வளர்த்த பரம்பரையில் நெல்லை மாவட்டத்தில் பெருங்குளத்தில் டிச.,31, 1841ல் பிறந்த அப்புசாமி, அடிப்படையில் சிறந்த வழக்கறிஞர். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார்.


கலைமகள் பத்திரிக்கையில் ஆரம்ப காலத்தில் தமிழில் விஞ்ஞானம் பற்றி எழுதத் தொடங்கி 70 ஆண்டுகள் எழுதிக் குவித்தவை ஏராளம். இவருக்கு வட மொழி, ஆங்கிலப் புலமை உண்டு. இவை அனைத்தையும் தமிழ் மொழி வளர்ச்சிக்குச் செலவிட்டார். கம்ப ராமாயணத்தில் ஆராய்ச்சியும் ஈடுபாடும் அதிகம் கொண்டவர். சிறந்த மொழி பெயர்ப்பாளர். தமிழில் அறிவியலை எழுத இயலும் என நிரூபித்தவர். மே 16, 1986ல் காலமான இவர் தமிழ் மொழிக்குச் செய்த பணி மிகவும் சிறப்பானது.


தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 13 PHOTO_6f


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:58 am

அறிவியல் தமிழ் என்பது இன்றைக்கும் இயலுமா? இயலாதா? என்று விவாதம் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. உலகம் அறிவியல் துறையில் வெகு வேகமாக முன்னேறிவிட்டது. தாய்மொழி மூலம் அறிவியல் வராதபோது தமிழருக்கு இயல்பாக உள்ள சொந்தமான அறிவியல் சிந்தனைகள், கண்டுபிடிப்புகள் வரும் என்று கனவு கூடக் காண வேண்டியதில்லை.

தனது வாழ்க்கையை அறிவியல் தமிழுக்காக ஒதுக்கிய முதுபெரும் ஆராய்ச்சியாளர் பெ.நா.அப்புசாமி. தமிழ் மூலம் அறிவியலைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்த அறிஞர் எழுதிக் குவித்தவை ஏராளம். "வாழ்க்கையை அந்தத்துறைக்கே ஒதுக்கினார்,' என்று கூறிவிடலாம். உண்மையில் இந்த முதுபெரும் எழுத்தாளர் ஒரு கட்டுரையை எழுதி "இந்து' பத்திரிக்கைக்குத் தபாலில் சேர்க்க தானே கொண்டு சென்று அங்கேயே தனது உயிரை விட்டவர். உண்மையில் இவரது இறுதி மூச்சும் தமிழ், தமிழ், தமிழ்தான்!

"இந்த மாமேதையிடம் டி.வி.ஆருக்கு உள்ள தொடர்புகள், கால் நூற்றாண்டைத் தாண்டியதாகும்,' என்றார், பேரறிஞரது மகள் அம்மணி சுப்பிரமணியம். டி.வி.ஆர்., பற்றித் தனது நினைவில் உள்ளவற்றை அவர் கூறுகையில்: "1972ல் சென்னையை விட்டு என் தந்தையார் இங்கு (நெல்லைக்கு) வந்து விட்டார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் டி.வி.ஆர்.,- பெ.நா.அ., தொடர்புகள் மிக நெருக்கமானதாகவே இருந்தது.

"தமிழ் மூலம் அறிவியல், மக்களிடம் செல்ல பத்திரிக்கைகள் பொறுப்பேற்க வேண்டு மென்பது என் தந்தையின் ஆசை. இதுபற்றி இருவரும் பலகாலம் நீண்ட விவாதம் நடத்தி உள்ளனர். "நாம் கண்டு பிடிக்காத ஒன்றுக்குப் பழம்பெரும் தமிழ் நூல்களில் அதற்குத்தக்க சொல் உண்டா? என்று தேடுவது தேவையில்லை. அதைத் தமிழில் அந்த மொழிச் சொல்லாகவே வைத்துக் கொண்டு முன்னேற வேண்டும்,' என்று இருவரும் கூறுவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:58 am

விஞ்ஞானப்பூர்வமாகத் தமிழ்மொழி தன்னை மாற்றிக் கொள்ள, முதலில் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் ஏற்று நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று இருவரும் முடிவுகள் எடுத்தனர். இதை டி.வி.ஆர்., முதன் முதலில் தனது பத்திரிக்கை மூலம் நடைமுறைப் படுத்தினார்.

நான் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை. எனது கல்விப் பணியில் டி.வி.ஆருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எங்கள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக்க டி.வி.ஆர்., பெரும் முயற்சி மேற்கொண்டார். பெண்கள் கல்வியில் வெகுவாக முன்னேற வேண்டும் என்பதில் எனது தந்தையார் போல டி.வி.ஆரும் தீவிரம் காட்டியதுண்டு.

"இருவரும் புரட்சிகரமான, முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள். இருவரும் பழமையில் உள்ள நல்ல அம்சங்கள் சிலவற்றை தவிர பழமையை அப்படியே ஏற்றுக் கொண்டதில்லை. தமிழ் மொழி உலக அரங்கில் எல்லாத் துறைகளிலும் உலக மொழிகளுக்கு ஈடாக மிக விரைவில் முன்னேற வேண்டுமென்பதே இவர்களது விவாதமாக எப்போதும் இருந்து வந்தது.

"வயதில் என் தந்தையார் டி.வி.ஆரை விடப் பெரியவர் என்பதால், டி.வி.ஆர்., என் தந்தையாரிடம் கலந்து பேச அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்.மணிக்கணக்கில் இருவரும் ஏதோ புதிய உலகில் இருந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவை பொழுது போக்குப் பேச்சுக்கள் அல்ல. ஏனெனில் இருவருக்கும் தங்கள் பணிக்குப் பொழுது காணாதே என்ற கவலைதான் இருந்து வந்தது.

ஏராளமான நூல்களை இருவரும் கொடுத்து வாங்கிக் கொள்வர். அறிவியல், தமிழ், நவீனகால அறிவியல், தமிழில் சிறுவர்களுக்கானஅறிவியல் என்ற அடிப்படையில் இவர்கள் ஏராளமான ஆசைகளை, திட்டங்களை வைத்திருந்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:59 am

"புதுமையை ஏற்கும் ஆர்வம் டி.வி.ஆரிடம் இருப்பது, என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும். வெகுவாக அதை அவர் பாராட்டுவார். வாரம் ஒரு முறை "தினமலர்' இதழுடன் "சயன்ஸ்'சப்ளிமெண்ட் கொண்டு வர என் தந்தை டி.வி.ஆரிடம் யோசனை கூறிய துண்டு. அதற்கு டி.வி.ஆர்., "தமிழில் சயன்ஸ் பற்றி நீங்கள் ஒருவரே சிந்தித்து எழுதுகிறீர்கள். உங்கள் முயற்சியினால் பல இளைஞர்கள் இந்தத் துறைக்கு வருவர் என எதிர்பார்க்கிறேன். அப்படி வரும் போது நிச்சயம் "சயன்ஸ் சப்ளிமெண்ட்' கொண்டு வர நான் தயாராக இருக்கிறேன். தமிழில் சயன்ஸ் சப்ளிமெண்ட் கொண்டு வர நான் தயாராக இருக்கிறேன். தமிழில் சயன்ஸ் பற்றி எழுத எழுத்தாளர்கள் இல்லாமல் என்ன செய்வது? எனத் தனது வேதனையைக் கூறி உள்ளார். டி.வி.ஆரின் திட்டங்களில் அதுவும் ஒன்று!

"என் தந்தையாருக்கு மதுரைப் பல்கலைக் கழகம் "தமிழ்ப் பேரவைச் செம்மல்!' என்ற பட்டம் வழங்கியது. அதற்கானப் பாராட்டு விழா நெல்லையில் டி.வி.ஆர்., தலைமையில் நடைபெற்றது. (ஆகஸட் 17, 1977)

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 13 PHOTO_06g

"இருவரும் தமிழ் மொழியை உலக அரங்கில் மீண்டும் புகழ்மிக்க மொழியாக அரியணையில் ஏற்ற பெரும் பாடுபட்டார்கள்,' என்றார்.

Sponsored content

PostSponsored content



Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக