புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
81 Posts - 65%
heezulia
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
224 Posts - 37%
mohamed nizamudeen
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகப் போர்கள் - Page 3 I_vote_lcapஉலகப் போர்கள் - Page 3 I_voting_barஉலகப் போர்கள் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் போர்கள்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:10 am

First topic message reminder :

முதல் உலகப்போர்


இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் உலகப் போர். உலக நாடுகள், இரு பிரிவாகப் பிரிந்து 1939 முதல் 1945 வரை போர் புரிந்தன. இந்தப் போரில், ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட்டு, லட்சக் கணக்கான மக்கள் மாண்டனர். இரண்டாம் உலகப் போரைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், முதல் உலகப்போரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இரண்டு போர்களுக்கும் தொடர்பு உண்டு.


முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப் பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.

செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா, இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன. 1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.


avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:28 am

போர் டைரி 1941

பிப். 6: ஜெர்மனி ராணுவம், வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டது.

ஏப். 6: žகோஸ்லேவியா, கிரீஸ் நாடுகளை ஜெர்மனி தாக்கியது.

ஏப். 8: 70 ஆயிரம் கிரேக்கப் படை யினரை ஜெர்மனி ராணுவம் சிறை பிடித்தது.

ஏப். 12: žகோ தலைநகருக்குள் ஜெர்மனி படைகள் புகுந்தன.

ஏப். 16: லண்டன் மீது ஜெர்மனி நடத்திய விமானத் தாக்குதலால் 2,300 பேர் கொல்லப்பட்டனர்.

ஏப். 17: ஜெர்மனியிடம் செக்கோஸ் லேவியா சரண் அடைந்தது.

ஏப்.18: ஈராக் நாட்டுக்குள் பிரிட்டிஷ் படைகள் புகுந்தன.

மே 10: லண்டன் மீது ஜெர்மனி விமானங்கள் குண்டு வீசியதில் 1,400 பேர் மாண்டனர். இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடம் சேதம் அடைந்தது. ரஷியா மீது படையெடுப்பு

ஜுன் 22: ரஷியா மீது ஜெர்மனி படையெடுத்தது.

ஜுலை 26: தூரக்கிழக்கு நாடு களில் உள்ள அமெரிக்கப் படைகளின் தளபதியாக மக்ஆர்தர் நியமிக்கப்பட்டார்.

ஜுலை 27: வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.

ஜுலை 27: ரஷியாவுக்குள் ஜெர்மனி படைகள் முன்னேறின.

ஜுலை 27: திறமை குறைவான ரஷிய தளபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆக. 2: ஜெர்மனி படைகளின் முன்னேற்றத்தை ரஷியா தடுத்து நிறுத்தியது.

ஆக. 7: ரஷியாவின் முப்படை களின் தலைமை தளபதி பொறுப்பையும் அதிபர் ஸ்டாலின் ஏற்றார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:29 am

ஆக. 25: ஜெர்மன் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க, "லெனின் அணை" என்ற பெரிய அணையை ரஷியா தகர்த்தது.

செப். 24: லெனின் கிராட் பகுதிக்குள் ஜெர்மனி படைகள் Žழைந்தன. மாஸ்கோவை நோக்கி முன்னேற்றம்

அக். 2: ரஷியத் தலைநகர் மாஸ் கோவை நோக்கி ஜெர்மனி படைகள் முன்னேறின.

அக். 16: மாஸ்கோவில் உள்ள ரஷிய அரசு அலுவலகங்கள் காலி செய்யப்பட்டன. ஸ்டாலின் மட்டும் மாஸ்கோவை விட்டு வெளியேறவில்லை.

அக். 17: ஜப்பான் பிரதமர் பதவியை விட்டு கோனோயே நீக்கப்பட்டார். தளபதி டோஜோ ஜப்பான் பிரதமர் பதவியை ஏற்றார்.

நவ. 22: ஜெர்மனி படைகள், லெனின் கிராட் நகரத்தை அடைந்தன.

டிச. 2: மாஸ்கோவை நெருங்கிய ஜெர்மனி படை மீது ரஷியப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. "பெர்ல்" துறைமுகம் மீது தாக்குதல்

டிச. 7: அமெரிக்கா வசம் உள்ள ஹவாய் தீவில் உள்ள "பெர்ல்" துறைமுகத்தின் மீது ஜப்பான் விமானங்கள் குண்டு வீசி தாக்கின.

டிச. 10: மலாயா மீதும் வடக்கு பிலிப்பைன்ஸ் மீதும் ஜப்பான் படையெடுத்தது.

டிச. 12: மாஸ்கோவில் ஜெர்மனி படைகள் தோல்வியை தழுவின.

டிச. 19: ஜெர்மனி ராணுவ தளபதி பொறுப்பையும் ஹிட்லர் ஏற்றார்.

டிச. 25: ஹாங்காங் தீவை ஜப்பான் ராணுவம் கைப்பற்றியது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:30 am

இரண்டாம் உலகப்போர் (ஹிட்லரை கொல்ல முயற்சி)


ஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல்வான் ஸ்டப்பன்பர்க்.

1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு "சூட்கேஸ்" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். "இது இங்கு எப்படி வந்தது? யார் வைத்தது?" என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.

தரையில் 'சர்' என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:34 am

குண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.

கறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. "அவரை தூக்கில் போட வேண்டாம்" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார்ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர். "அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்!" என்று கூறினார், ஹிட்லர்! அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:34 am

ஹிட்லர் தோல்விப்பாதையில் சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் ஜப்பானும் தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தது. உலகப்போர் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் திடீர் என்று மரணம் அடைந்தார். நிžயார்க் நகரில் 1882 ஜனவரி 30-ந்தேதி பிறந்தவர் ரூஸ்வெல்ட். இவருடைய தந்தை பெரிய பணக்காரர். உயர் கல்வி பயின்றபின், சட்டம் பயின்று வக்கீல் ஆனார். அப்போது அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்க மேலவை உறுப்பினரானார். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சன் அவரை கடற்படை உயர் அதிகாரியாக நியமித்தார்.

குண்டு வெடிப்புக்கு காரணமான அதிகாரி மீது விசாரணை 23-வது வயதில் திருமணம் நடந்தது. மனைவி பெயர் எவியனார். தனது 39 வயதில் ரூஸ்வெல்ட் ஒருநாள் மாலை குளிர்ந்த நீரில் குளித்தார். படுக்கைக்கு சென்றபோது, அவருடைய கால்கள் மரத்துப் போய்விட்டதை உணர்ந்தார். டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்தனர். அவர் பக்கவாத நோயினால் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். அவருடைய நெஞ்சில் இருந்து கால் வரை செயல் இழந்துவிட்டது. பயங்கர நோயினால் பாதிக்கப்பட்ட ரூஸ்வெல்ட், மனம் தளர்ந்துவிடவில்லை. டாக்டர்களின் யோசனைப்படி, பல பயிற்சிகளைச் செய்தார். ஊன்று கோல் உதவியுடன் நடக்கும் அளவுக்கு குணம் அடைந்தார். அவர் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில், ஒரு கார் தயாரிக்கப்பட்டது. இப்படி உடல் ஊனமுற்றபோதிலும், அவருடைய மதிŽட்பத்தால் அரசியலில் புகழ் பெற்றார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:34 am

கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பல சிறந்த திட்டங்களை அமுல் நடத்தினார். மக்கள் மத்தியிலும், அரசியலிலும் அவர் செல்வாக்கு உயர்ந்தது. 1933-ல், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஒரு கோடியே 70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுமட்டுமல்ல; தொடர்ந்து நான்கு முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரலாற்றுப் புகழ் பெற்றார். யுத்தத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்த ரூஸ்வெல்ட், 1945 ஏப்ரல் 12-ந்தேதி மூளையில் ரத்தக்குழாய் வெடித்து மரணம் அடைந்தார்.

துணை ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன், ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றார். ட்ரூமன் மிகுந்த திறமைசாலி. அரசியல் விïகங்கள் வகுப்பதில் வல்லவர். யுத்தத்தில், ரூஸ்வெல்ட்டுக்கு முக்கிய ஆலோசனைகள் கூறி வந்தவர் அவர்தான். ரூஸ்வெல்ட் மறைவினால், போரில் அமெரிக்காவின் முன்னேற்றம் தடைப்படும் என்று பலர் எண்ணினார்கள். ஆனால், போரையே முடிவுக்குக் கொண்டுவரும் சக்தி படைத்தவராக ட்ரூமன் விளங்கினார். "இரண்டாம் உலகப்போரின் மாவீரர்" என்ற புகழ், ரூஸ்வெல்ட்டுக்கு பதிலாக ட்ரூமனுக்குத்தான் கிடைத்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:36 am

இரண்டாம் உலகப்போர் (முசோலினி டிஸ்மிஸ்)


இரண்டாம் உலகப்போரில், ஹிட்லருக்கு அடுத்த பெரிய சர்வாதிகாரியான முசோலினி போரில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 1943 ஜுலையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஹிட்லர் வாழ்க்கையைப் போலவே, முசோலினியின் வாழ்க்கையும் திகிலும், திருப்பங்களும் நிறைந்தது.

இத்தாலியில், இரும்புப் பட்டறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883-ம் ஆண்டு ஜுலை 29-ந்தேதி பிறந்தவர் முசோலினி. தாயார் பள்ளி ஆசிரியை. அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்து வந்தது. முசோலினியின் தந்தை, "மன்னர் ஆட்சி ஒழிந்து, மக்கள் ஆட்சி மலரவேண்டும்" என்ற கருத்துடையவர். தன் இரும்புப் பட்டறைக்கு வருகிறவர்களிடம் எல்லாம் அரசியல் பேசுவார். அதனால், முசோலினிக்கும் இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்ததும், சில காலம் ஆசிரியராகப் பணி யாற்றினார்.

லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஆங்கிலம் முதலிய மொழிகளையும் கற்றறிந்த அவர், பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் மிக்கவர். ஆசிரியர் தொழிலை விட்டு சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றினார். பிறகு, கம்ïனிஸ்ட் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரானார். பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கின.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:36 am

ஒரு கட்டுரைக்காக அவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்து விடுதலையானபோது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை சிறை வாசலில் வரவேற்றனர். மறுநாளே, "அவந்தி" என்ற புரட்சிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் 1914-ம் ஆண்டில் முதலாம் உலகப்போர் மூண்டது. முசோலினி ராணுவத்தில் சேர்ந்தார். (இதே ஆண்டில்தான் ஜெர்மனியில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) போரில் முசோலினி படுகாயம் அடைந்து, ஊருக்குத் திரும்பினார். 1919-ல் உலகப்போர் முடிந்தது. போரில், இத்தாலியில் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள். மேலும் 10 லட்சம் பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.

இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்து எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தாண்டவமாடின. நாட்டில் கலகங்கள் மூண்டன. இந்தச் சூழ்நிலையில் 1920-ல் "பாசிஸ்ட்" கட்சியை முசோலினி தொடங்கினார். 1921-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் முசோலினி கட்சி ஆட்சியைப் பிடிக்கமுடியா விட்டாலும் 30 இடங்களைக் கைப்பற்றியது. முசோலினி பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித்தலைவரான முசோலினி, பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேசச் சொற்பொழிவுகள், ஆளும் கட்சியினருக்கு அச்சமூட்டின.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:36 am

பாராளுமன்றத்தை அமைதியாக நடத்த விடாமல் கலாட்டா செய்து கொண்டிருந்தார் முசோலினி. அதுமட்டுமல்ல, ஊர் ஊராகச் சென்று பொதுக் கூட்டங்கள் நடத்தி, உணர்ச்சி ததும்பப்பேசி, ஆளும் கட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டார். ரவுடிகள் சாம்ராஜ்யம் மக்கள் தன் பேச்சில் மயங்கிக்கிடக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட முசோலினி, ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் நடத்தி, அரசு அலுவலகங்களைக் கைப்பற்றும்படி தன் கட்சியினருக்குக் கட்டளையிட்டார். அதன்படி அவர் கட்சியினர் ரவுடிகளையும், பொது மக்களையும் அழைத்துக்கொண்டு, பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவலகங்களைத் தாக்கினார்கள். ஊழியர்களை விரட்டி அடித்துவிட்டு, அலுவலகங்களையும், கஜானாக்களையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.

1922 அக்டோபரில், முசோலினியின் "கருஞ்சட்டைப்படை" இத்தாலியின் தலைநகரைப் பிடிக்கத் திரண்டு சென்றது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், அமைச்சரவையை ராஜினாமா செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டார். மந்திரிசபை பதவி விலகியதும், ஆட்சிப்பொறுப்பை முசோலினியிடம் ஒப்படைத்தார். அடக்கு முறை ஆட்சிக்கு வந்த முசோலினி, "இத்தாலியின் முன்னேற்றத்திற்காக, நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். இதை எதிர்ப்பவர்களை அடியோடு அழித்துவிடுவேன்" என்று அறிவித்தார்.

எதிர்க்கட்சிகளைத் தடை செய்தார். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கினார். தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார். அது மட்டுமல்ல. தன் எதிரிகளைச் "சிரச்சேதம்" செய்யும்படி (தலைகளைத் துண்டிக்கும்படி) உத்தரவிட்டார். மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல்! இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி, மக்களைக் கவரப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 1:36 am

விவசாயிகளுக்கு இயந்திரக்கலப்பைகள் வழங்கினார். அதனால் உணவு உற்பத்தி பெருகியது. வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வரிகள் குறைக்கப்பட்டன. மருத்துவ வசதிகள் பெருகின. இதனால், முசோலினியை மக்கள் ஆதரித்தனர். நிலைமை தனக்குச் சாதகமாக இருந்ததால், பொதுத் தேர்தலை நடத்தினார்முசோலினி. அதில் அவர் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. அதன்பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் தானே எடுத்துக்கொண்டார்.

1922-ம் ஆண்டு முதல் இத்தாலியின் மாபெரும் சர்வாதிகாரியாக முசோலினி விளங்கினார். 1933-ல் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லர் முசோலினியின் நண்பரானார். 1934-ல் வெனீஸ் நகருக்குச் சென்று, முசோலினியைச் சந்தித்துப் பேசினார் ஹிட்லர். அதைத்தொடர்ந்து, இத்தாலி ராணுவத்தைப் பலப்படுத்தவும், ஆயுதத் தொழிற்சாலைகளை அமைக்கவும் ஹிட்லர் உதவினார். இந்த நிலையில், அரசாங்க விருந்து ஒன்றில் கிளாரா என்ற அழகியை முசோலினி சந்தித்தார். அவள் அழகில் மனதைப் பறிகொடுத்தார். ஏற்கனவே திருமணம் ஆன முசோலினி, கிளாராவை எப்படியும் அடைந்தே தீருவது என்று தீர்மானித்தார். கிளாரா, விமானப்படை அதிகாரி ஒருவரை மணந்து விவாகரத்து பெற்றவள்.

இரண்டாண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்தாள். தனது வசீகரப் பேச்சால் கிளாராவைக் கவர்ந்த முசோலினி, அவளைத் தன் ஆசை நாயகியாக்கிக் கொண்டார். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரும், முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர். முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. மக்கள் புகழ்ந்தனர். பிறகு போரின் போக்கு மாறியது. மக்களின் வெறுப்புக்கு உள்ளாயினர். போர் முனையில் இத்தாலி ராணுவம் தோல்வியை சந்தித்ததால்முசோலினியை 1943 ஜுலை 9-ந்தேதி "பாசிஸ்ட்" கட்சி மேலிடம் டிஸ்மிஸ் செய்தது. அவரையும், அவர் குடும்பத்தினரையும், ஆதரவாளர்களையும் கைது செய்து, வீட்டுக் காவலில் சிறை வைத்தது.

Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக