புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_rcap 
54 Posts - 84%
mohamed nizamudeen
கண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_rcap 
3 Posts - 5%
Balaurushya
கண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
கண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
Karthikakulanthaivel
கண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Shivanya
கண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_lcapகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_voting_barகண்ணாடி இதயங்கள் ( 1 ) - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாடி இதயங்கள் ( 1 )


   
   

Page 2 of 2 Previous  1, 2

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 13, 2010 1:30 am

First topic message reminder :

அத்தியாயம் ஒன்று: காதலின் நிறம் கறுப்பு

கருமையாகி விட்ட நீல வானம் உலகத்தின் அநீதிகளை எண்ணி எண்ணி அழுதது, ஓ ஓ என்று கதறிக் கதறி அழும்போது பக்கவாத்தியமாய் இடியும் கோபத்துடன் மின்னலும் தோன்றித் தோன்றி மறைந்தன. வீதிகளில் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. பகலில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் கடைகள், வாகனங்களின் நடமாட்டம் அப்பகுதி ஒரு நகரம் என்பதை உறுதிப்படுத்தியது..

உயர வளர்ந்து எம்மூரில் பார்த்ததெல்லாம் பனை மரத்தையும் தென்னை மரத்தையும் தான், இங்குதான் அவற்றை எல்லாம் விட பல மடங்கு உயரமான கட்டடங்களைப் பார்க்கின்றான் குணாளன். இங்கு வந்து ஒரு சில மாதங்களே ஆகியிருக்கும், இங்கு வருவதற்கு அவன் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கையில் இருந்த காசு எல்லாம் இழந்து நிறுவனப் பிரதிநிதி ஒருவனால் ஏமாற்றப் பட்டு....அவை எல்லாம் சாதாரணமாகவே இந்த உலகத்தில் நடப்பதென்பதை இப்போழுதுதான் தெரிந்து கொண்டான்.

பின்னர் நண்பன் ஒருவனின் உதவியுடன் உல்லாசப்பயணி போன்று ஒருமாத அவகாசத்தில் இங்கு ஷார்ஜா வந்து சேர்ந்துள்ளான். இன்னும் ஐந்து நாட்களே இங்கு இருக்கலாம், முந்தய நாட்களில் நாட்கள் அவன் அலையாத இடமே கிடையாது, உனது படிப்பிற்கு வேலை இலகுவாகக் கிடைத்துவிடும் என்று அவனைச் சார்ந்தோர் கூறியதால்தான் இருந்த பணம் எல்லாம் செலவழித்து, ஒரே ஒரு வீட்டை அடைமானம் வைத்து மேலும் பணம் போதாமல் இருக்கவே வட்டிக்கு வேண்டி இங்குவந்துள்ளான். நாளை கடைசி நேர்முகத் தேர்வு, ஊரில் படித்த கணினித் தொழில்நுட்ப வேலைக்கு இங்கு நல்லதொரு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் கடைசி நாள்.

ஷார்ஜா பெரிய தபால் நிலையம் அருகே இருந்த அவன் நண்பன் குடியிருக்கும் வாடகை வீடொன்றில் குணாளன் தங்கியிருந்தான்.

“குணா.... மச்சான்...ஒருக்கா..அல்-மதீனா சுப்பெர்மார்கேட்டுக்குப் போய் வாரீயா..? மீனும் கோழியும் வேண்டவேனும்..சமைக்க ஒன்றுமில்ல..”
“சரிடா மச்சி...நாளைக்கு கடைசி நாளடா...எனக்குப் பயமா இருக்கு..வேண்டின கடன் எல்லாம் சேர்த்து சுமார் பத்து லட்சம் ரூபா ஆகுது...என்ன செய்யப் போகிறேனோ தெரியலடா...உனக்கும் இப்ப நான் பாரமா...”
“சும்மா இர்டா..எனக்கு ஒன்றும் நீ பாரமில்லை...உங்கட அப்பா எங்கட குடும்பத்துக்கு அந்தக் காலத்தில செய்த உதவிய நாங்க ஒருபோதும் மறக்கமாட்டோம் தெரிஞ்சுதா...ஒரு காலத்தில எப்படி இருந்த குடும்பம் உங்கட..இப்ப....எல்லாத்துக்கும் ஒரு காலம் கட்டாயம் உண்டு..நீ கவலைப் படாதே..இன்னும் ஒரு மாதம் டூரிஸ்ட் விசாவ நீட்டலாம்..நான் உனக்கு உதவுறன்..ஆனா..என்னட்ட அதுக்கு பணம் இல்ல..எப்படியும் ஆயிரம் த்ராம்ஸ் தேவை...என்ட முதலாளிட்டத்தான் கேக்கவேண்டும் இன்றைக்கு வெள்ளிகிழமை...ஞாயிறு வேலைக்கு போகும்போது கேக்குறன்....கவலைப்படாதே...” ஒரு பெருமூச்சுடன் பேசி முடித்தான் அவன் நண்பன் நீலன்.
“நீலா...உன்னை நண்பனா அடஞ்சதுக்கு நான் கொடுத்தது வச்சிருக்கோணும்”

அந்தப் புழுதி மண்ணில் சங்கமித்த மழைத்துளிகளால் ஏற்பட்ட மண்ணின் வாசனையை முகர்ந்து கொண்டே அல்-மதீனா சந்தைக்கடைக்கு சென்றான். அங்கு அப்போதுதான் கவனித்தான் ஏதோ ஒரு தெரிந்த முகம், ஒரு பெண்..மிகவும் விலை உயர்ந்த உடைகளுடன் ஆடம்பரமாக உடுத்து, அழகு சாதனப் பொருள் உள்ள இடத்துக்கு அருகாமையில், அவன் அந்தப் பெண்ணையே நோக்குவதைக் கண்ணுற்றதாலோ என்னவோ அவள் அவனை நோக்கி வந்தாள்.
“என்ன யாரென்று யோசிக்கிறமாதிரி தெரியுது? என்னைத் தெரியவில்லையா...? கெஸ்...குணா...நீங்க இங்க ஷர்ஜாக்கு வந்த விடயம் முந்தாநாள்தான் எங்களுக்குத் தெரியும்...”
“நீங்க...முகம் பார்த்தமாதிரி இருக்கு, ஆனால்...ஞாபகமில்லை...”
“அட..போச்சுடா..நான்...அமுதினி....என் பெயராவது ஞாபகம் இருக்கா...?”
“ஐயோ....அமுதாவா...நீங்க அமுதாவா...? ஆளே வித்தியாசமா..கடைசியா உங்களை வேறு நிலையில சந்திச்சது இப்ப இப்படி....அதுதான்....உங்கட சொந்தப் பெயர் மல்லிகாதானே?”
“ம்ம்ம்...சத்தமாப் பேசாதீங்க...நான் அங்க இருந்தது...இங்குள்ள ஒருவருக்கும் தெரியாது.....”
“உண்மைய சொன்னா...நீங்க எல்லோரும் இறந்திட்டீங்க என்றுதான் ஊரில கதை...கடவுள் புண்ணியம்...எப்படியோ காப்பாத்திட்டார்....இந்தச் செய்திய சொன்னா நீலன் சந்தோசப்படுவான்...”
“இல்லை குணா...நீலனுக்குத் தெரியும் நான் இங்க இருக்கிறது...அதுமட்டுமல்ல எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டுது..தாயகத்தில இருந்தா பிரச்சனை என்று வேறு எங்காவது போகவேணும் என்று தீர்மானிச்ச போது எனக்குக் கை கொடுத்தார் ரமணன்..அவர் இங்க பெரிய கம்பியூட்டர் நிறுவனம் வச்சிருக்கார்...நீங்க எப்ப வந்தீங்க..”
அவன் தனது கதையை சுருக்கமாகச் சொன்னதும்,
“நீங்க இந்த வேலை கிடைக்காட்டி கவலைப் படவேண்டாம்..அவரிட்ட சொல்லி உங்களுக்கு வேலை ஒழுங்கு படுத்துறன்”
“தேங்க்ஸ் அமு..இல்லை இல்லை..மல்லிகா. உங்களுக்கு வானதி எங்க என்று தெரியுமா...?”
“குணா...இன்னும் அவள நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்களா...? அப்ப ஒரு குட் நியூஸ்...”
“என் நிலைமை இப்ப சரியில்ல...ஆனாலும் அவள என்னால மறக்கமுடியாது...என்ன குட் நியூஸ்?”
“வானதி வேறு யாருமில்ல..அவரின்ட தங்கச்சிதான்...அவளும் எங்களோடதான் இருக்காள்.” என்று சொல்லி குணாளனைப் பார்த்து மெல்லிதாக புன்னகை புரிந்தாள்.
மல்லிகா சிறு வயதில் இருந்தே நீலனுக்குத் தெரிந்த...நீலனின் பாடசாலைக்காலத்துக் காதலி, ஆனால் பின்னர் நாட்டின் மேல் கொண்ட பற்றினால் மல்லிகா போராடச் சென்றுவிட்டாள். மல்லிகாவுக்குத் தெரிந்த ஒரு அழகு முல்லைதான் வானதி. வானதி மல்லிகாபோல் போராட்டம் என்று செல்லவில்லை. குணாளன் வானதியைக் கண்டது மல்லிகா வீட்டில்தான், பின்னர் வானதி வீட்டை மோப்பம் பிடித்து பாடசாலைக் காதல் வைபவத்தில் கலந்துகொண்டான். திடீரென எழுந்த இடம்பெயர்வால் திசை மாற்றம் அடைந்த அவனது ஒரு பக்கக் காதல், காதலை வானதியிடம் கேட்காமலேயே முற்றுப் பெற்றது. இப்போது மீண்டுமந்த வானதி என்றதும் மனதில் ஒரு சில பட்டாம்பூச்சிகள் இறக்கை கட்டத் தொடங்கின.

“என்ன மச்சான்...இவ்வளவு நேரம்...நான் வெங்காயம் எல்லாம் நறுக்கிவிட்டு உன்ன பாத்துக் கொண்டிருக்கிறன்..”
“நீலா....நான் மல்லிகாவைப் பார்த்தன்...அதுதான்...”
“ஸ்டாப்...மேல பேசாத....” முகம் சிவக்க கோபத்துடன் சீறினான்.
“என்னடா..இது...அவளுக்கு பெரிய கஷ்டம் ஏற்பட்டு..இப்ப நல்லா இருக்காள்...அதப் போய் சந்தோசம் கொள்ளாம...நீ உண்மையிலேயே அவளை காதலிச்சு இருந்தா...அவள் செத்திட்டாள் என்ற நியூஸ் வந்த பின்னர் உண்மை எது என்று அலசிப் பார்த்திருப்பாய்...அவளும் உன்னைத் தேடி இருப்பாள் கிடைக்கேல..இப்ப வானதியின் அண்ணாவ..”
“அத நான் ஒத்துக்கொள்ள மாட்டன்...அவளுக்கு என் மேல காதல் இருந்தது உண்மையென்றால்....நானும் இஞ்சதான் அஞ்சு வருஷமா டிரைவர் வேல பார்த்துக்கொண்டிருக்கன்.அவளுக்கு தெரியும்....என்னாலயும் அவள கூப்பிட முடியும்...என்னட்ட ஒரு வார்த்தை கேட்டாளா...? இல்லடா...அவளுக்கு காசும் பகட்டு வாழ்க்கையும்தான் முக்கியமாப் போச்சுது...ஏதோ விடுதலைக்காக சில காலம் பாடுபட்டாள் என்பதால்....ம்ம்....வேண்டாம் அந்தக் கதை...”
“அவளுக்கு இப்பதான் தெரியும் நீ இங்க இருப்பது...”
“பொய்...நல்லா பொய் சொல்லுறாள்...முதல்ல படிக்கிற காலத்தில...என்னை காதலிச்ச மாதிரி நடிச்சிட்டு, பிறகு அங்க தேவையில்லாம போய்ச் சேர்ந்திட்டு...காதல் இருந்தா...என்ன அப்பயே விட்டு போயிருக்க மாட்டாளே..!”
“நீலன்...நீ எதையும் சொல்லு...ஆனா போராட்டத்தை மட்டும் கொச்சை படுத்தாதே...பிறகு....”
“என்னடா...பிறகு...நீயும் என்ன விட்டுப் போய்விடுவீயாக்கும்....ஓகோ....அந்தச் சிறுக்கி சொல்லியிருப்பாள்...வாங்கோ...குணா...உங்களுக்கு வேலை நாங்க தாறோம் என்று....அதுவும் உன்ட வானதியப் பற்றியும் சொல்லியிருப்பாளே..”
“அப்ப....வானதி இருக்கிறது தெரிஞ்சு கொண்டுதான் இத்தனை நாளும் நீ எனக்குச் சொல்லவில்ல...அதுவும்...அவங்களிட்ட சுலபமாக வேலை கிடைக்கும்...அதையும் சொல்லேல...நீயும்...”
“என்ன...வா...வா...சொல்லு..நீயும் ஒரு நண்பன் என்று சொல்லத்தானே ட்ரை பண்ணற....இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்தான் ‘உன்னைப்போல நண்பன் கிடைக்க...என்று பிதற்றினாய்...” தொண்டை கிழியக் கத்திய நீலனின் கைகள் அருகிலிருந்த சிகரட் பெட்டியைத் தொட்டது.
“டேய்...நீலன்...கூல்...சரி இப்ப அந்தக் கதை வேண்டாம்...ஓகேயா..? இந்த சிகரட் குடிக்கிறத முதலில நிப்பாட்டு...”
“கதைய மாத்தாத....நீ வானதி என்று அவளிட்ட போனாய்...உனக்கும் இந்தக் கதிதான் தெரிஞ்சுகொள்...இந்தக் காலத்தில காதல் என்று ஒன்றுமில்ல...உனக்கு ஒண்டு தெரியுமா...காதலுக்கு நிறம் என்ன என்று ஆராவது கேட்டா...நான் சொல்றபதில்...கறுப்பு..”

(தொடரும்....)




பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun May 30, 2010 3:56 am

நன்றி சம்சுதீன்...

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக