புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
47 Posts - 45%
heezulia
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_m10கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து

'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:48 pm

நாப்பது வருசத்துக்கு முன்ன நடந்த கத; சொக்கத்தேவன்பட்டி பெறந்த காலத்துலயிருந்து மறக்க முடியாத கத.

சடையத்தேவர்கூட பிறந்தவுக அண்ணந் தம்பிக ஏழு பேரு. ஏழு பேருக்கும் பிள்ளையில்ல.

பிள்ள பெறக்காம இல்ல; பெறக்கும் பிள்ளைக ஒரு வாரத்துக்கு மேல தங்கல; எறந்துபோகுதுக.

என்ன விதியோ... என்ன தலையெழுத்தோ இல்ல மூதாக்கமாரு செஞ்ச பாவமோன்னு ஏழு குடும்பமும் மனசுக்குள்ள வெந்துவெதும்பிக் கூட்டம் கும்மலுக்குக்கூட வர முடியாமச் சங்கடப்பட்டு, ஊர்வாயில விழுந்துகெடக்கிற நாளையில மாறுகண்ணுத்தேவருக்கு மகளா வந்து பெறந்தா சொர்ணக்கிளி.

ஏழு அப்பன்மார்களுக்கும் செல்லப் பிள்ளையா செல்வத்துலயும் செல்வாக்கியத்துலயும் வளர்றா. அவுக வம்சத்துலயே இல்லாத செவுப்புத் தோலு அவளுக்கு. தலைக்குச் செழிம்பா எண்ண வச்சு,அழுத்தி வாரி, வெடவெடன்னு சட போட்டு, தலைச் சொமையாப் பூவச்சு, பாவாட கட்ன குத்துவெளக்கா சொர்ணக்கிளி தெருவுல நடந்துபோனா, ஆணும் பொண்ணும் மாடும் கன்டும் அவளையே வெறிச்சு வெறிச்சுப் பாக்கும். அவ பளீர்னு சிரிச்சு வாய் மூடினா நெலா செத்தவடம் வந்துட்டுப் போயிட்டு வாரேன்னு போயிரும்.

சொர்ணக்கிளி சொதந்திரக் கிளி. தண்ணியெடுக்கவும் போவா. காடுகரைக்கும் போய்வருவா. பெரிய மனுசியாகிப் பூத்துக் குலுங்கிப் புதுப் பாள போட்டு நிக்கிறா. வழக்கமா அவுக குடும்பத்துப் புள்ளைகளுக்கு வாரம் ஒண்ணுல வார எமன், சொர்ணக்கிளிகிட்ட வாரானய்யா வருசம் பதினேழுல பெரியமூக்கி தம்பி செயில்ராசு ரூவத்துல.

பெரியமூக்கி புருசன் துரைச்சாமி, சடையத்தேவருக்குச் சொந்த மச்சினன். மொதலக்கம்பட்டியில பெரியமூக்கியப் பெண்ணெடுத்துக் கூட்டி வாரப்ப வண்டிமாடு ஓட்டிட்டுக் கூடவே வந்தவன்தான், அவ தம்பி செயில்ராசு. அவன் பெறக்கறப்ப அவன் அப்பன் செயில்ல இருந்ததுனால அவனுக்கு அந்தப் "பட்டம்".

சக்கரவள்ளிக் கெழங்கு மூட்டையில சமயத்துல சாரப்பாம்புக் குட்டியும் சேந்து வந்திருமா இல்லையா... சக்கரவள்ளிக் கெழங்கு பெரியமூக்கி. சாரப்பாம்புக் குட்டி செயில்ராசு. ஊருக்கு வந்தன்னிக்கே செயில்ராசு ஆரம்பிச்சுட்டான் அவன் கிருத்திரியத்தை. மூணாம் நாளே ஊருபூராத் தெரிஞ்சு போனான்.

மந்தையில அரசமரத்தடியிலயே காத்தக் குடிச்சுக் கெடக்குற கெழடுகட்டைகளுக்குப் பலகாரம் மிச்சரு அல்வான்னு பொட்டணம் பொட்டணமா வாங்கிக் குடுத்து "மகராசன் நல்லாருக்கணும்"ங்கிற நல்ல பேரு வாங்கிட்டான்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:48 pm

பொதுக்கெணத்துல தண்ணியெடுக்க வார பொம்பளைகளுக்கெல்லாம் இவனே தண்ணியெறச்சு நெப்பி... தூக்கிவிடுற சாக்குல தொட்டும் அனுப்பினான்.

ஊருக்குள்ள யார் வீட்ல யாரிருக்கா, வீடுகள்ல என்னென்னா இருக்குன்னு சட்டையக் கழத்தி உருமாக் கட்டி நெஞ்சத் தூக்கி நடந்து தெருத்தெருவாத் திரிய ஆரம்பிச்சுட்டான்.

பொம்பளைக ரெண்டு பேரு ஒரல்ல சோளம் போட்டு ஒலக்க குத்திக்கிட்டிருந் தாகன்னா ஓடிப்போயி ரெண்டு பேரையும் ஒதுங்கி நிக்கச் சொல்லிட்டு, ரெண்டு கையிலயும் ரெண்டு ஒலக்கைய வாங்கி, இவனே மாத்தி மாத்திக் குத்திப் பொடச்சும் குடுத்திட்டுப் போயிருவான். யார் வீட்லயும் கூசாம நொழஞ்சு அம்மியில ஆறவெச்சிருக்கிற களியில இவனா கொழம்ப அள்ளி ஊத்தித் தெனாவெட்டாத் தின்டுபிட்டு, உப்போ ஒறப்போ கம்மின்னும் சொல்லிப்புட்டு வேட்டியில கையத் தொடச்சு வெளியேறிருவான்.

கல்யாணமாகாத மூத்த கொமரிகள... புருசன் வீட்லயிருந்து கோவிச்சிட்டு வந்து பெறந்த வீட்ல பேன் பாத்துக்கிட்டிருக்கிற வாழாவெட்டிகள... "சோங்கு" பண்றதுல இவனுக்கொரு சொகம் இருக்கு.

"ஊருக்குள்ள ஒரு தும்பு திரிச்ச மாடு துள்ளிக்கிட்டுத் திரியுதே அத லேசாத் தட்டிவைங்கப்பா"னு வெடலப் பயககிட்ட ஊர்ப் பெருசுக சொல்ற அளவுக்கு அத்துமீறிப் போயிக்கிட்டிருக்கு அவன் அக்குறும்பு.

"ஏம்மா பெரியமூக்கி! சொக்கத்தேவன் பட்டிக்கு வாக்கப்பட்டு வந்தவளே! ஒன் தம்பியக் கொஞ்சம் தட்டிவைக்கக் கூடாதா?"ன்னு கேட்டதுக்கு, "ஆம்பளப் பயன்னா அப்படித்தான் இருப்பான்"னு பெரும்போக்கா அவ சொல்லப்போக, "அப்ப சொக்கத்தேவன்பட்டியில ஆம்பளப்பயலே இல்லேன்றியா?"ன்னு சடையத்தேவர் வீட்டு ஆளுக கேக்க... அப்பவே கசமுசாவாகி, அஞ்சாறு மாசமாப் பேச்சுவார்த்தை இல்ல ரெண்டு வீட்டுக்கும்.

ஒரு புரட்டாசி மாசம். அப்பவே அடிக்க ஆரம்பிச்சிருச்சு, அடுத்த மாச மழைக்குண்டான சிறு காத்து. பொழுசாய நேரம்... வாரேன் வாரேன்ங்குது இருட்டு... போறேன் போறேங்குது வெளிச்சம். மொதப் பறவை கூடு சேந்திருச்சு; கடைசிப் பறவை இந்தா வந்திட்டேன்ங்குது.

ஊருக்கு மேற்க கரட்டடிய ஒட்டியிருக்க கம்பங்காட்டுக்குள்ள செடிசெத்தையப் பரப்பி,அதுக்கு மேல சக்கரவள்ளிக் கெழங்க அடுக்கி, சோளத்தட்டைய மேல போட்டுச் சுட்டுத் திங்கத் தோது பண்ணிக்கிட்டு இருக்கான் செயில்ராசு.

அப்ப... "சல்லு சல்லு சல்லு"ன்னு ஒரு சத்தம்; அந்தக் காடு கேக்காத சத்தம்; மனசக் கொழச்சு மண்ணு மிதிக்கிற சத்தம்.

"ஆள் இல்லாத அனாதிக் காட்ல இது என்னடா கொலுசுச் சத்தம்?"ன்னு பாத்தா, தலையில பருத்திச் சாக்கச் சொமந்து ஒத்தையடிப் பாதையில ஒத்தையில வந்துக்கிட்டிருக்கா சொர்ணக்கிளி.

பார்த்தான்...

கெழங்கு சுடறதுக்குள்ள மனசு வெந்துபோச்சு அவனுக்கு. கொடியில சீல காயறதக் கண்டாலே "படக்"குன்னு பார்வைய எடுக்க முடியாத பய புத்தி கொதிச்சுப்போயி நிக்கிறான்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:53 pm

[You must be registered and logged in to see this image.]

"ஏ சொர்ணக்கிளி! தலைச் சொமைய எறக்கிவச்சுட்டுச் சக்கரவள்ளிக் கெழங்கு தின்டுட்டுப் போறது?"

"வேணாம் மாமா. பொழுதுபோயிருச்சு. வீடு போயிச் சேரணும்."

"நீ கெழங்கு தின்டுட்டுப் போறதாயிருந்தா, வீட்டுவரைக்கும் ஒன் தலைச் சொமைய நான் தூக்கிட்டு வாரேன்."

"நெசமாவா?"

"பொய்யா சொல்றேன். ஒனக்குக் கால் வலிச்சா ஒன்னையுந் தூக்கி இடுப்புல வச்சுக்கறேன்". பாதையில போனவள முன்னுக்கு வந்து மறிச்சு, அவ தலைச் சொமைய வம்படியா அவனே எறக்கி வைக்கிறான்.

தொட்டும் தொடாம அவள ஓரங்கட்டி ஒதுக்குறான்.

கங்குகளத் தள்ளி வெந்தும் வேகாமக் கெடந்த கெழங்குகள்ல ஒண்ண எடுத்து, "தின்னு சொர்ணம்... தின்னு"ன்னு அவ கையில திணிக்க, குருத்துவாழை எலையில சுடுசோறு விழுந்த மாதிரி கெழங்குச் சூட்டுல உள்ளங்கை வெந்து, அவ "யாத்தே"ன்னு கத்த, இதான் சாக்குன்னு கையப் புடிச்சு "உஸ் உஸ்ஸு"ன்னு அவன் ஊதிவிட, அந்த அணுக்கத்த அனுகூலமாக்கி சாச்சுட்டான் அவளக் கம்பங்காட்ல.

குரங்குலருந்துதான் மனுசன் பொறந்தான்ங்கிறாங்க. ஆனா, மனுசனுக்குள்ளருந்து சிங்கம், புலி, கரடி, ஓநாய் இதெல்லாம் பூமியில நித்தம் நித்தம் பொறந்துகிட்டே இருக்கு. பலது கண்ணுக்குத் தெரியறதில்ல; கணக்குல வாரதில்ல.

ஒரு தெய்வச் செலையக் களவாணிப்பய திருடி உருக்கி விக்கிற மாதிரி, ஆளில்லாத காட்ல ஒரு சின்னப் புள்ளையச் சீரழிக்கிறான். ஒவ்வொரு துணியா உருவி எறியிறான்; கத்திக் கதையக் கெடுத்திருவாளோன்னு அவ வாய அடைக்கிறான் தாவணியப் பந்து சுருட்டி. ஒரு மிருகம் கூடுதய்யா மனுசப் பொம்பளைய.

காடே கதிகலங்குது. கம்பங்காட்ல வந்து அடைஞ்ச தட்டச் சிட்டுக, தானியத்த அள்ளித் தலைக்கு மேல எறிஞ்ச மாதிரி செதறி ஓடுதுக. காடை கதுவாளிக என்னமோ ஏதோன்னு பதறி, சொந்த பந்தங்களே சூதானம்ன்னு அடுத்த காடு கேட்க அலறிக் கத்துதுக. அங்கங்க ஊறித் திரிஞ்ச பாம்பு பூரான் எல்லாம் சட்டுன்னு சுருண்டு பிரிமணை மாதிரி சுத்திச் செத்தது மாதிரி கெடக்குக சத்தமில்லாம. ஈரக்கொல நடுங்கி விர்றுவிர்றுன்னு வீசுது காத்து.

எல்லாம் முடிஞ்சுபோச்சு.

இப்ப நல்லா வெந்திருக் கும்ன்னு கங்குகளக் கிண்டிக் கெழங்குகள எடுத்து ஊதி ஊதித் தின்டுபிட்டுத் திரும்பிப் பாத்தா, அவ இன்னம் எந்திரிக்கல. காலப் புடிச்சு ஒரு ஆட்டு ஆட்றான். கொலுசு சத்தம் போடுது; அவ அசையல. வாயில அடைச்ச தாவணிய உருவுனா, வாய் தொறந்தே கெடக்கு; மூடல. மூக்குல கைய வச்சுப் பாக்குறான். மூச்சில்ல.

"யாத்தே! செத்துப்போனாளே!"

செத்தவடம் புத்தி மாறிப்போயிப் பயந்து ஒக்காந்தவன் சுதாரிச்சு எந்திரிக்கிறான். சுத்தியும் முத்தியும் பாக்குறான்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:54 pm

அவ சொமந்து வந்த பருத்திச்சாக்கு இருக்கு. சாக்க அவுத்தான்; பருத்திய ஒதறிவிட்டான். ஒட்டுத்துணிகூட இல்லாமக் கெடந்தவளத் தூக்கி குத்தவச்சமேனிக்கு ஒக்காரவச்சு சாக்குக்குள்ள திணிச்சான். ஏற்கெனவே பருத்திச் சாக்கக் கட்டியிருந்த கயித்தப் பதட்டத்துல எங்க எறிஞ்சானோ... தெரியல...

காணல. இடுப்புல இருந்த சூரிக்கத்திய எடுத்து அவ குடுமியவே அறுத்து, முடியக்கொண்டே முடி போட்டான் மூட்டைக்கு. "பொணத்த எங்கயாவது பாங்கெணத்துல போட்டுட்டுக் கங்காணாத சீமைக்கு ஓடியே போகணும் ஓடி."

காடு இருட்டுக்கட்டிப்போச்சு. மங்கலா வழி தெரியுது. "பொணம் எளம் பொணம்; கனக்கல; ஆனா, மனசு மட்டும் பாறாங்கல்லாக் கனக்குதே"ன்னு சொல்லிக்கிட்டே பயத்தையும் சொமந்து நடக்கிறான். "பொணத்தத் தலையில புடிச்சு உசுரக் கையில புடிச்சு இதென்னடா பொழப்பு?"ன்னு அடுத்த அடி வைக்கவும் ஆள் மொனகுற சத்தம் வருது.

"யாத்தே! யாராச்சும் பின்னாலயே வாராகளா, இல்ல காட்டுக்குள்ள காத்துகருப்பா?'

கம்பங்காடு கடந்து, ஒத்தப்பனமரப் பாதை வழியா சோளக்காட்டுக்குள்ள நொழைய "என்னிய விட்ரு; என்னிய விட்ரு"ன்னு சத்தம் வருது. பய பயந்து கழிஞ்சுபோனான்.

வேர்த்து விறுவிறுத்து, தலைச் சொமையோட ஒரு முழுச்சுத்தும் சுத்தி, எங்கயிருந்துடா வருதுன்னு பாத்தா, கடைசியில சாக்குக்குள்ளருந்து வருது சத்தம்.

"பொத்"துன்னு மூட்டையப் போட்டுட்டு நாலடி பின்னால நகந்து நின்னு பாத்தா, அவுந்துபோன மூட்டைக்குள்ளருந்து குத்தவச்சு ஒக்காந்த மேனிக்குக் கும்புட்டு அழுகுறா சொர்ணக்கிளி; அவ சாகல.

ஒடம்புல ஒரு ஒட்டுத்துணியில்லாம, கூந்தல எடுத்து அங்கங்க மூடிக்கிட்டு, கும்புட்டுக்கிட்டே மார்ப மூடிக்கிட்டு "நடந்தது நடந்துபோச்சு; என்னிய விட்ரு மாமா"ன்னு சாரைசாரையா அவ அழுகறதக் கண்டா ஓநாய் புலி பேயாயிருந்தாலும் 'போயிட்டு வா தாயி!'ன்னு போயிரும்.

பேயி பிசாசு மிருகம் மனுசன்னு எதுலயும் சேக்க முடியாது இவன.

"அடியே சொர்ணம்! ஒரு வகைக்கு நீ செத்தது நல்லது. எனக்கு சாட்சியிருக்காது. இப்ப நீ பொழச்சது கெட்டது. ஒன்னிய இப்படியே விட்டா, நான் காடு கடக்கு முன்ன என்னியப் பொணமாக்கிப்பிடுவானுக ஒங்கப்பன்மாருக. அதுனால, நீ செத்தது செத்ததாவே இருக்கட்டும்."

இடுப்புல சூரியத் தேடினான்; காணோம். பதட்டத்துல எங்கேயோ விழுந்துபோச்சு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:55 pm

வரப்புமேட்ல கெடந்துச்சு ஒரு கத்திக்கல்லு. அந்தக் கல்ல மண்ணோட பேத்தெடுத்த கொலகாரப்பாவி, கும்புட்டுக் கெடந்தவ தலையில நச்சுநச்சுன்னு குத்தி ரத்தம் ஒழுகவிட்டான்.

அவ கத்திக் கதறி ஊர்ச்சாமி பேரையெல்லாம் கூப்பிட்டு அழுதுபார்த்தா; ஒரு சாமியும் வரல; உண்மையாவே செத்துப்போனா. திரும்பவும் அவளச் சாக்குல போட்டு, பொணம் சொமந்து கருவேலங்காட்டுக்குக் கெழக்க இருக்குற பாங்கெணத்துல போட்டுட்டுப் போயிட்டான்.

ராத்திரியோட ராத்திரியா அப்பன்மாருக ஆளுக்கொரு தெசையா அலைஞ்சதும், விடிஞ்சு பொணம் கண்டுபுடிச்சு மாடுக மாதிரி கதறி அழுததும், கம்பங்காட்ல கெடந்த சூரிய வச்சு இதச் செஞ்சவன் செயில்ராசுதான்னு கண்டுபுடிச்சு, அருவா வேல்கம் போட அவன ஆளாளுக்குத் தேடுனதும், இது தெரிஞ்சு அவன் சிறுமலையில மருந்து குடிச்சுச் செத்துக்கெடந்ததும், அன்னைக்கிருந்து மாறுகண்ணுத்தேவர் பேச்சு நின்னுபோனதும் ஊருக்கே தெரியும். ஆனா, மாறுகண்ணுத் தேவர் கடைசியாச் சொல்லிட்டுச் செத்தது சடையத்தேவருக்கு மட்டுந்தான் தெரியும்.

"அண்ணந்தம்பி ஏழு பேர் பெறந்து, இப்ப நீயும் நானுந் தான் இருக்கமடா தம்பி. இப்ப நானும் போயிச் சேந்திருவேன் போலிருக்கு. ஒண்ணே ஒண்ணு சொல்லிட்டுச் சாவேன். செய்வியா?" "சொல்லுண்ணே..."

"நம்ம ஆச மக சொர்ணக்கிளியக் கொண்டு புட்டான்ங்க. நம்ம வம்ச வெளக்க அழிச்ச குடும்பத்துல என்னைக்காச்சும் ஒரு ஒச்சம் உண்டாக்காட்டி செத்துச் சுடுகாடு போனாலும் என் ஆவி அடங்காதுடா தம்பி, செய்வியா?"

"செய்றண்ணே!" இது நடந்து பதினஞ்சு வருசத்துக்கப்புறம் சடையத்தேவருக்கு மகனா வந்து பெறக்குறான் கட்டையன். அதுக்கு அங்கிட்டு அஞ்சு வருசம் கழிச்சுப் பெரியமூக்கிக்கு மகளா வந்து பெறக்குறா கருவாச்சி.

வஞ்சத்தையும் சாராயத் தையும் ஊத்தி ஊத்தி வளக்கிறாரு சடையத்தேவரு, கட்டையன. பொண்ணு கேக்குற மாதிரி கேட்டு, கல்யாணம் முடிக்கிற மாதிரி முடிச்சு அவளச் சீரழிச்சுச் சின்னாபின்னமாக்கி, "ஓஞ்சதடீயாத்தா ஓங் கத... தீந்ததடியாத்தா எங்க பழி"ன்னு வீட்லயே போயி விட்டுட்டு வந்துட்டான்ங்க. பஞ்சாயத்தக் கூட்டித் தீத்துக்கட்டவும் திட்டம் போட்டுட்டாங்க.

கரிச்சாம்பாறையில கருவாச்சியப் போட்டு வறுத்தெடுத்து, அவ குடுமிக்கு அடியில கையக்கோத்து இறுக்கிக்கிட்டு, சொர்ணக்கிளி கதையக் கட்டையன் சொல்லச் சொல்ல, பூரான் பாம்பு தேளெல்லாம் புகுந்து கொடஞ்சிருச்சு கருவாச்சி புத்திக்குள்ள. அந்தக் கொடச்சலும், ஒடம்புபட்ட ஒலச்சலும் எதையும் வெளிய சொல்லாம மனசுக்குள்ளயே போட்டு அமுக்கி வைக்கிற கொணமும் சேந்துதான் அவளப் பேயாடவச்சுப் பெருங்கூத்துப் பண்ணிருச்சு.

கருவாச்சி மூலியமா சொர்ணக்கிளி தன் கதையச் சொல்லச் சொல்ல, அழுது மூஞ்சி வீங்கிப்போச்சு ஆணும் பொண்ணும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:56 pm

[You must be registered and logged in to see this image.]

கோடாங்கியும் இப்ப எறங்கி வந்து கேக்குறாரு.

"யம்மா சொர்ணக்கிளி! நீ வேற எங்கயும் போயி வெளையாட்டுக் காட்டாம, ஏன் சொந்தக்காரப் பிள்ளையச் சுத்திட்டு அலையிற?

சிங்காரச் சொர்ணக்கிளி
சீதபெத்த எளையகிளி
ஒனக்குக்
குண்டுமல்லிப் பூவு வேணுமா?
கோழிக்கறிச் சாறு
வேணுமா?
வேணுங்கறத வாங்கி
வெளியேறு தாயி..."
"போறேன். அப்பப்ப வருவேன்."

"இது கெட்ட பேச்சு. இனிமே எங்க பிள்ளையத் தொடப்படாது. எங்க பிள்ள வீட்லயிருந்தாலும், வெளியிலயிருந்தாலும், ஆத்தங்கர கொளத்தங்கர வெங்காடு வெள்ளாமக்காட்டு வழி ஒத்தசத்தையில போய்வந்தாலும் இந்த மங்கையத் தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணி வெளியேறு. என்ன வேணுமோ, எங்க சக்திக்கு உட்பட்டதக் கேளு, தாரோம்."

"பால்பணியாரம், பனநொங்கு, சுட்ட கருவாடு, அச்சுவெல்லம், உப்புக்கண்டம், புதுச் சீல குடுப்பியா?" "ஒரு கொறையில்லாக் குடுத்திடுறோம் தாயி; வந்த வழியே போயிடுறியா?" "போயிடுறேன்."

ராத்திரியெல்லாம் உடுக்கடிச்சு ஓட்டி ஓட்டி விடியக்காலம் பேய் எறங்கிருச்சு. கைத்தாங்கலாப் புடிச்சுக் கருவாச்சிய வெளியே கூட்டியாந்து தலையில கல்லத் தூக்கி வச்சு, தலைவிரி கோலமா ஓட்டமும் நடையுமா அவள முன்னவிட்டுப் பின்னாலயே போறாக ஊராளுக.

உடுக்குச் சத்தமும் போகுது ஊரோட சேந்து.

சுடுகாட்டுப் புளியமரத்தடி வந்ததும் "எறிஞ்சிரு"ன்னு சொன்னதும் கல்ல "மடார்"ன்னு கீழ போட்டா கருவாச்சி. "கட்டையன் தலையில போட்டுருக்கணும்"ன்னான். ஒருத்தன். "ஏன் சடையத்தேவன் தலையில போட்டா "மாட்டேன்"னு சொல்லுமா கல்லு?" இது இன்னொருத்தன். கருவாச்சி குடுமியில ஒரு கத்தைய எடுத்து அதை ஆணியில ரெண்டு மூணு சுத்துச் சுத்தி, புளியமரத்துல அத நச்சு நச்சுன்னு அறஞ்சு, அடிக்குடுமிய அருவாளவச்சு அறுத்து அவள விடுதல பண்ணி "போ! திரும்பிப் பாக்காமப் போ"ன்னு ஓங்கி உத்தரவு போடுறாரு கோடாங்கி.

சொந்த புத்தியோ சுவாதீனமோ இல்லாம ஒறக்கத்துல நடந்து போறவ மாதிரி போறவள ஆளுக்கொரு பக்கமாத் தாங்கிப் புடிச்சுப் போறாக பொம்பளைக. ஊர் எல்லை வந்திருச்சு.

அங்கதான் சாங்கியப்படி சடங்கு பண்ணியாகணும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:56 pm

ஏழு எருக்கில சாணிச்சட்டி பீத்தமொறம் பீத்த செருப்பு பீத்த வெளக்கமாறு... இதுகளயெல்லாம் கருவாச்சி தலைய மூணு சுத்திச் சுத்தி எறிஞ்சுட்டு ஒலக்கையப் போட்டாக அவ குறுக்க. "தாண்டி வாடியம்மா; தாண்டு." அவஒலக்கையத் தாண்டுனா. அஞ்சு பொம்பளைக கூடி அஞ்சு பானத் தண்ணிய அவ தலையில சொதசொத சொதன்னு ஊத்துனாக. அந்த ஊர்ல அவளுக்கு மட்டும் மழ பேஞ்சது மாதிரி நனஞ்சு நடந்து போறா கருவாச்சி.

வெந்நி கொதிக்கவிட்டு வேப்பங்கொழையும் மஞ்சளும் போட்டுத் தலைக்குத் தண்ணி ஊத்தி, பழைய சீலய வச்சுக் கரகரகரன்னு அவ தலையத் தொவட்டிக்கிட்டே பெரியமூக்கி பொலம்ப, பச்சரிசிய ஒரல்ல போட்டு மாவிடிச்சுக்கிட்டிருந்தாக வைத்தியச்சியும் பவளமும். இடிச்ச மாவ நல்லா அவிச்செடுத்து வெள்ளத்துணியில கட்டி வேது குடுக்க, எங்க தொட்டாலும் வலிக்குதுன்னு கத்துறா கருவாச்சி. இவ ஆடின பேயாட்டம் பாதி; இவமேல இவ புருசன் ஆடின பேயாட்டம் பாதி. எப்படித்தான் தாங்கும் அந்த எளவாழத்தண்டு?

வேதுவைக்க அவிச்ச மாவுலயே புட்டுச்செஞ்சு அதுல நல்லெண் ணெய் ஊத்திக் கருப்பட்டித்தூளு போட்டுப் பெணஞ்சு பெணஞ்சு ஊட்றா பெரியமூக்கி மகளுக்கு. ஒரு வாய் ரெண்டு வாய் தின்னதும் தட்டத் தட்டிவிட்டுட்டுப் பாயில போயி விழுந்து சும்மாடு மாதிரி சுருண்டு படுத்துக்கிட்டா கருவாச்சி.

மகளுக்கு அடிச்சு ஊத்த "வெடக் கோழி இருக்கா வெடக் கோழி"ன்னு தேடி நடந்துபோறா பெரியமூக்கி தெருத் தெருவா.

"யப்பே! பஞ்சாயத்துக் கெடு முடிய இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. நம்ம கூட வம்பிழுக்க அருவா கம்போட வாங்கடான்னு பெரியமூக்கி மொதலக்கம்பட்டிக்கு ஆள் சொல்லி விட்ருக்காளாம். அந்தூருக்காரங்க இந்தூருக்கு வந்து கம்பு சுத்தி வெள்ள வேட்டியோட வீடு போய்ச் சேரவா? நான் சும்மா இருப்பனா?" "நீ செய்யிறதச் செஞ்சுக்கடா மகனே! ஆனா, எதுலயும் ஒரு நிதானம் இருக்கட்டும்."

தகப்பன்ங்கிட்ட நெலமையச் சொல்லி யோசனையும் கேட்டுக்கிட்ட கட்டையன் பன்னியான்பேரன், சலம்பல்பாண்டி, ஒலக்கையன் மூணு பேரையும் கூப்பிட்டான். ஆடுமாடுக அடங்கி, சனங்கள்ளாம் ஒறங்கி, காவல் நாய்கூட கடைசியாக் கொலச்சிட்டு கண்ணு மூடப்போன பின் சாமத்துல, பஞ்சாயத்து நடக்கப்போற அரசமரத்தடி மந்தையில அங்கங்க குழியத் தோண்டி, வெட்டருவா வேல்கம்ப உள்ளவச்சுப் பொதச்சு, மண்ணத் தள்ளி மறைக்கிறாங்க கட்டையன் கையாளுக.

அரசங்கௌ இடுக்கு வழியா இதப் பாத்துக்கிட்டேயிருந்து பயந்து தேயுது நெலா!

விடிஞ்சா பஞ்சாயத்து.

ஊரே ஒறங்குது.

எனக்கும் தூக்கம் வருதுன்னு சந்துபொந்துகள்ல புகுந்து சத்தமும் ஒறங்கிப்போச்சு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:57 pm

[You must be registered and logged in to see this image.]

முழிச்சுக்கிட்டிருக்கிறது காடாவெளக்கும் கருவாச்சியும் மட்டும்தான்.

என்னமோ சோட்டுக்காரிகிட்ட ஒப்பிக்கிற மாதிரி காடாவெளக்குகூடப் பேசுறா கருவாச்சி: "எம் பொழப்பு ஏன் இப்படி ஆகிப்போச்சு காடாவெளக்கே? என்ன குத்தத்துக்கு நான் இப்படிக் குத்துயிரும் கொல உயிருமா கெடக்கேன்? என்னா பாவம் பண்ணேன்? எவ சோத்துல மண்ணள்ளிப் போட்டேன்? கறிய மட்டும் எடுத்துக்கிட்டு எலும்ப நாய் துப்புற மாதிரி துப்பிட்டானே என்னிய. செத்துப்போடீன்னு சொன்னவன்கிட்ட எப்படிச் சேந்து வாழ முடியும்? பஞ்சாயத்துல எப்படியும் அத்துவிட்றப் போறாக. அதுக்குப் பெறகு என்ன பண்ணலாம்?

கல்யாணச் சேலயக் கழுத்துல சுத்தி நான்டுக்கிட்டுச் செத்துப் போகலாம். இல்ல, அரளி வெதைய அரைச்சுக் குடிச்சுட்டுப் பழைய சீலயப் பொத்திப் படுத்துக்கிரலாம். பொம்பளைக பொதுவா இதத்தான செய்வாக! அத நானும் செய்யணுமா? செய்ய மாட்டேன் காடாவெளக்கே. ஒத்தத் திரிய வச்சுக்கிட்டு ஊதக்காத்த எதுத்து நிக்கிற நீயி. சீமத்தண்ணி கடைசிச் சொட்டு வத்திப்போனாலும் திரியில ஊறியிருக்கிற மிச்சத்த வச்சு உசுர் புடிச்சு நிக்கப் பாக்குற. ஒனக்குக் கொறஞ்சவளா நானு? ஒவ்வொரு பெறவிக்கும் ஒரு காரணமிருக்கா இல்லையா? எம் பெறவிக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுட்டுப் போயிடறேன். சாவு என்னைக்கோ ஒரு நாளைக்கு நம்மளத் தேடி வரத்தான் போவுது. அது வாரப்ப வரட்டும் பாத்திருவோம்; "வா"ன்னு கேட்டிருவோம். இதுவரைக்கும் கொழகொழன்னு இருந்த மனசு, வாங்குன அடியில இப்ப இறுகிக் கெடக்கு; எல்லாம் நல்லதுக்குத்தான். வரணுங்கிற துன்பம் வந்துதான தீரும். ஒல கொதிக்காம அரிசி வேகுமா? ஒவ்வொரு பொம்பள பொழப்பும் ஒரு ஒலதான். இப்ப என் ஒல கொதிக்குது; கொதிக்கட்டும்."

அவ ஒரு முடிவுக்கு வந்துட்டா.

இப்பக் காடாவெளக்கும் ஒறங்கிப் போச்சு; அவ மட்டும் முழிச்சிருக்கா.

அரச மரத்தடி மந்தையில ஊரே கூடி ஒக்காந்திருக்கு. கருவாச்சி பொழப்பு என்னாகப் போகுதோங்கிற கவலையும், பஞ்சாயத்துல கலகம் வந்து ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆகிப்போயிரு மோங்கிற பதட்டமும் திட்டுத்திட்டாத் தெரியுது ஊர்க்காரக மூஞ்சியில.

உருமாப்பெருமாத்தேவரு பெருங்குரலெடுத்துப் பேசுறாரு. "இந்தா பாரப்பா கட்டையா... சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்காம நல்ல முடிவுக்கு வாப்பா. ஆம்பளைக்கு அருங்கேடு நெனச்சாலும் பொம்பளையப் பொறம்பேசப்படாதப்பா. நாப்பது வருசத்துக்கப்புறம் சேந்த குடும்பம் சேந்ததாவே இருக்கட்டும். ஊரே ஒண்ணுகூடிச் சொல்றோம்... வச்சுப் பொழச்சுக்கப்பா அவள."

உட்கார்ந்திருந்த கட்டையன் விசுக்குன்னு எந்திரிச்சான்.

"பெருசுக கூடி ஒரு தீர்ப்பச் சொல்லிட்டு நீங்க பாட்டுக்குப் போயிருவீக. வச்சு வாழப்போறது நானு. ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம் எதுக்கு? வீடு வெளங்க. வாரிசு உண்டாக. இந்த ரெண்டுக்கும் லாயக்குப்பட மாட்டா இந்த ரெண்டுங்கெட்ட சிறுக்கி. வேணாம்; வெலக்கிவிட்ருங்க."

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:58 pm

"இல்லாதது பொல்லாததச் சொல்லி எம் பிள்ள பொழப்பக் கெடுத்திர வேணாம்னு சொல்லுங்கப்பா. அந்தாளு சொல்றத நம்பாதிக. தங்கத்தட்டு மாதிரி போயிச் சல்லடையாத் திரும்பி வந்திருக்கா என் பொண்ணு." முந்தானைய ஒதறி இழுத்து இடுப்புல செருகிக்கிட்டு, தரையவிட்டுப் பந்து மாதிரி எந்திரிச்சு அழுது பேசுறா பெரியமூக்கி. "ஆமா, பெரிய சீமையில இல்லாத பொண்ணு. மொளகு ரசம் வையிடின்னா எலிப் புழுக்கைய அள்ளிப் போட்டு இதுதான் மொளகுங்குற பொண்ணு; "போ"ன்னா போயிர வேண்டியது தான..."

"ஏய்! "வா"ன்னா வாரதுக்கும், "போ"ன்னா போறதுக்கும் எங்க ஐத்த மக என்ன அவுசாரியாடா? பொண்ணு கேட்டு வந்தது நீதான?" மொதலக்கம் பட்டியிலிருந்து பஞ்சாயத்துக்கு வந்திருந்த பெரியமூக்கி அண்ணன் மகனுங்க நாலு பேரும் ஒண்ணு சொன்னாப்புல எந்திரிச்சுட்டானுக.

"தாட் பூட்"டுன்னு அவன்ங்க தவ்வவும், பல்லக் கடிச்சுக்கிட்டுக் கட்டையன் லேசாத் திரும்பிப் பாக்கிறான். ஆயுதம் பொதைச்ச எடத்துல அடையாளம் வச்சு ஒக்காந்திருந்த பன்னியான் பேரன், ஒலக்கையன், சலம்பல்பாண்டி மூணு பேரும் லேசாப் பள்ளம் பறிக்கிறாங்க.

"வாடா போடான்னு பேசுனா ஏடாகூடமாயிப் போயிருமப்பா. நல்லது கெட்டது பேசத்தான் நாங்க இருக்கம்ல.... ஒக்காருங்க" காவக்காரச் சக்கணன் கையமத்தவும், தோள்ல போட்ட துண்டத் தரையில போட்டு ஒக்காந்துட்டானுங்க நாலு பேரும்.

"ஏம்ப்பா... சடையத்தேவா! நீ பெரிய மனுசன்... நீ என்ன சொல்ற?"'

நடுவெரலையும் கட்ட வெரலையும் ஒண்ணா வாயில வச்சு அழுத்தி, ரெண்டுக்கும் மத்தியில இருக்கிற இடைவெளியில "புளுச்"சுன்னு எச்சி துப்பி, எச்சி விழுந்த எடத்த எடது கையால மண்ணப் போட்டு மூடிக்கிட்டே சடையத்தேவர் சொன்னாரு...

"தவள தண்ணிக்கிழுக்குது, ஓந்தி மேட்டுக்கிழுக்குது... பிரிச்சுவிட்ருங்கப்பா." "சடையத்தேவா! நீ பிள்ளைக பொழப்ப நெனைக்கல. ஏதோ ஒரு மாசு இருக்கு ஒன் மனசுல. அது பரம்பரைக்கு நல்லதில்லப்பா. கடைசியாக் கருவாச்சியையும் ஒரு வார்த்தை கேட்ருவோம்... கூப்பிடுங்கப்பா அந்தப் பிள்ளைய"ன்னாரு உருமாப்பெருமாத்தேவரு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 10:59 pm

[You must be registered and logged in to see this image.]
வந்தா கருவாச்சி. முன்ன இருந்த பயமில்ல அவளுக்கு. கண்ணுல ஒரு ஒளி இருக்கு. கையெடுத்துக் கும்பிட்டா. "யம்மா கருவாச்சி! ஒம் புருசன் ஒம் மேல குத்தஞ் சொல்லி, 'வேணாம்... வெட்டிவிட்ருங்க'ன்னு பஞ்சாயத்துல பிராது குடுத் திருக்கான்; ஒம் பக்க நியாயத்த நீ சொல்லு தாயி."

அவ ஒரு பேச்சும் பேசாம அரசமரத்துல அணில் பாத்துக்கிட்டிருந்தா. நான் வேற என் வாலு வேறன்னு ஒடம்பு அசங்காம வால மட்டும் என்னா ஆட்டு ஆட்டுது அந்த அணிலு.

"புசுபுசுபுசு"ன்னு என்னா அழகு அந்த வாலு? யான காது கொடைய ணும்னா அணில் வாலுதான் லாயக்கு.

அவ என்ன சொல்லப் போறானு சபையே அவ வாயப் பாத்திருக்க, மரம் ஏறி அணில் வாலத் தொட்டுத் தரையில குதிக் குற அவ மனசு நிதானத்துக்கு வருது.

"எம் மேல ஒரு குத்தமும் இல்லீங்க. இது பஞ்சாயத் துக்கும் தெரியும்; நாங் கும்புடற சாமிக்குந் தெரியும். மத்தபடி கடவுளும் ஊரும் என்ன தீர்ப்புச் சொல்லுதோ கட்டுப்படறேன்."

"சாமி அருள்வாக்குச் சொல்ற மாதிரி பேசுறாய்யா கருவாச்சி. இந்த தெய்வச்செலய வச்சுப் பொழைக்காதவனும் ஒரு மனுசனா?"

"எப்பவோ யாரோ செஞ்ச பாவத்துக்கு இப்பப் பழிவாங்கறானப்பா இந்தப் பச்ச மண்ண."

பஞ்சாயத்தே சோகங்கட்டிக் கெடக்கு.

"ஏம்மா பெரியமூக்கி... பஞ்சாயத்து எப்பவும் பிரிக்க நெனைக்காது. சேத்துவிடத்தான் நெனைக்கும். ஆனா, அந்தப் பயலோ அத்துவிடுங்க ஆளவிடுங்கன்னு புடிச்ச புடியிலயே நிக்கிறான். நீ என்னாத்தா சொல்ற?" விக்கி விக்கி அழுதா பெரியமூக்கி. சல்லுன்னு மூக்குச் சிந்தித் தரையில எறிஞ்சிட்டு முந்தானையில மூக்கத் தொடச்சுக்கிட்டே சொல்றா:

"பிள்ள சேந்து வாழணுமேன்னு பெத்த வயிறு பத்தி எரியுது. ஆனா அனுப்பிவச்சா எம் பிள்ள என்னதில்லேன்னு போயிருமோன்னு பயமா வேற கெடக்கு. இதுக்கு மேல என்ன சொல்லப்போறேன்? பஞ்சாயத்துக்குப் பாத்தியப்படுறேன்."

அம்பலக்கல்லுல ஒக்காந்திருந்தபஞ்சாயத்துப் பெருசுக பெரிசா ரெண்டு மூணு பெருமூச்சு விட்டாக. யோசிச்சு ஒதடு பிதுக்கி தலைய அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டிக்கிட்டாக. பெறகு ஒருத்தருக்கொருத்தர் காது கடிச்சுக் கிட்டாக. கடைசியா அடித் தொண்டையில ஒரு கனைப்புக் கனைச்சாரு உருமாப் பெருமாத்தேவரு. அந்தக் கனைப்பு ஒண்ணும் தொண்டையில பிசிறு போறதுக்கில்ல; சலசலன்னு சலம்பல் பண்ணிக்கிட்டிருக்கிற சபையைத் தம் பக்கம் திருப்புற ஒரு சாடை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக