புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_m10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_m10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_m10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_m10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_m10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Karthikakulanthaivel
சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_m10சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

Srinivasan23

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 11:35 pm

உலகில் உள்ள பெரும்பாலானோரை இன்று அச்சுறுத்திக் கொண்டிருப்பது "சர்க்கரை நோய்'. ஏனெனில் தற்போது சர்க்கரை நோய் காரணமாக நகரங்களில் வசிக்கும் 3 கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6 முதல் 8 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயைப் பொருத்தவரை கிராமப்புற புள்ளிவிவரம் இன்னும் கசக்கும். உடல் உழைப்புக் குறைவு காரணமாக கிராமப்புறங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 4.5 சதவீதமாக இருந்த சர்க்கரை நோயின் தாக்குதல், தற்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இனி சர்க்கரை நோய் வரப் போவதை அறிவிக்கும் உடலின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன, ஆண் - பெண்ணுக்கு உரிய இயல்பான இடுப்புச் சுற்றளவு என்ன, சர்க்கரை நோய்க்கான இயல்பான அறிகுறிகள் என்ன, சர்க்கரை நோயைக் கண்டுபிடிக்க எளிய சோதனை என்ன, சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்ள வழி என்ன ஆகியவை குறித்த கேள்வி - பதில்:-

சர்க்கரை நோய் வர இருப்பதை அறிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?

உடல் எடை இயல்பானதைவிட அதிகரித்துக் கொண்டே போவது, வயிற்றுப் பகுதியில் கொழுப்புச் சத்து சேர்ந்து தொப்பையுடன் கவலைப்படாமல் இருப்பது, இடுப்புச் சுற்றளவு இயல்பான அளவுக்கு மேல் இருத்தல் ஆகியவை சர்க்கரை நோயை வரவேற்கும் "சிவப்புக் கம்பளங்கள்'.

இடுப்புச் சுற்றளவு அல்லது வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்புச் சத்துக்கு முக்கியத்துவம் தரப்படுவது ஏன்?

உடல் எடை அதிகரித்தல் காரணமாகவே 60 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளிவிவரம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் வயிற்றுப் பகுதி அதிக கொழுப்புச் சத்து அல்லது இயல்பானதைவிட அதிக இடுப்புச் சுற்றளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இயல்பான இடுப்புச் சுற்றளவு என்ன?

இந்தியா உள்பட ஆசிய நாடுகளைப் பொருத்தவரை ஆண்களுக்கான இயல்பான இடுப்புச் சுற்றளவு - 88 செ.மீ.

பெண்களுக்கான இயல்பான இடுப்புச் சுற்றளவு - 80 செ.மீ.

தொப்புளுக்கு சற்றுக் கீழே, அளவை நாடாவைச் சுற்றி இடுப்புச் சுற்றளவை அளந்து பார்க்க வேண்டும். இடுப்புச் சுற்றளவைப் போன்று உயரத்துக்கு ஏற்ற இயல்பான எடையை மதிப்பீடு செய்யும் "பி.எம்.ஐ.' - BMI அட்டவணையும் உள்ளது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 11:36 pm

அதிக இடுப்புச் சுற்றளவைத் தவிர வேறு முக்கிய அறிகுறி ஏதும் உண்டா?

கழுத்து அருகில் கருப்பான தேமல் (ACANTHOSIS) இருந்தால் சர்க்கரை நோய் உள்ளதன் அறிகுறியாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே இடுப்புச் சுற்றளவு அதிகமாக இருத்தல், கழுத்துப் பகுதியில் தேமல் ஏற்பட்டிருந்தால் சர்க்கரை நோய்க்கான பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் செயல்படும் தன்மையை இழப்பது, இன்சுலின் ஹார்மோன் சுரப்புக்குக் காரணமான பீட்டா செல்கள் செயலற்றுப் போவது ஆகிய இரண்டும் சேர்ந்து சர்க்கரை நோயை ஏற்படுத்தும்.

இதில் பீட்டா செல்கள் முற்றிலும் செயல்படாத நிலைக்குத் தள்ளப்படும்போது ஏற்படுவது குழந்தைகளுக்கு வரும் முதல் வகை சர்க்கரை நோயாகும்.

பெரியவர்களுக்கான இரண்டாவது வகை சர்க்கரை நோய் ஏற்பட முக்கியக் காரணம் என்ன?

பரம்பரைத் தன்மை, கொழுப்புச் சத்து நிறைந்த - உடல் எடையை அதிகரிக்கும் உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாத பரபரப்பான வாழ்க்கை முறை ஆகியவை பெரியவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட முக்கியக் காரணங்கள்.

சர்க்கரை நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன?

உடல் எடை குறைதல், அடிக்கடி பசி எடுத்தல், இனிப்புகளை அதிகம் சாப்பிடத் தூண்டும் உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் சோர்வு ஆகியவை சர்க்கரை நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 11:41 pm

சர்க்கரை நோயை உறுதிப்படுத்த சோதனை என்ன?

வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அளவுப் பரிசோதனை அல்லது 75 கிராம் குளுக்கோஸ் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் செய்யப்படும் ரத்த சர்க்கரை அளவுப் பரிசோதனை. இதில் ஏதாவது ஒன்றைச் செய்தால்கூடப் போதும்.

வெறும் வயிற்றில் செய்யப்பட்ட பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 126 மில்லி கிராமுக்கு மேல் இருந்தாலோ அல்லது குளுக்கோஸ் கொடுத்துச் செய்யப்பட்ட பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 200 மில்லி கிராமுக்கு மேல் இருந்தாலோ சர்க்கரை நோய்வந்துவிட்டதாகக் கொள்ள வேண்டும்.

இதே போன்று சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை ("ப்ரீ டயபட்டீஸ் ஸ்டேஜ்'), சர்க்கரை நோய் நிலை ("டயபட்டீஸ்') ஆகிய அடுத்தடுத்த நிலைகளுக்கான ரத்த சர்க்கரை அளவுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த அளவுகள் அட்டவணையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ரத்த சர்க்கரை அளவு
1
வெறும் வயிற்றில்
100 மி.கி.க்கு குறைவாக
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து
140 மி.கி.க்கு குறைவாக
இயல்பானது
2
வெறும் வயிற்றில்
101 - 125 மி.கி.க்கு குறைவாக
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து
140 - 200 மி.கி.க்குக் குறைவாக
சர்க்கரை நோய்க்கு
முந்தைய நிலை
3
வெறும் வயிற்றில்
125 மி.கி.க்கு அதிகமாக
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து
200 மி.கி.க்கு அதிகமாக
சர்க்கரை நோய்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 11:43 pm

சர்க்கரை நோய் வருவதைத் தடுத்துக் கொள்ள முடியுமா?

வருவதைத் தடுக்கவும் முடியும்; தாமதப்படுத்தவும் முடியும். எல்லாம் உங்கள் மன உறுதியில் இருக்கிறது. இடுப்புச் சுற்றளவு, உடல் எடை ஆகியவை அதிகரிக்கும் நிலையிலேயே உடற்பயிற்சியைத் தொடங்குங்கள். ரத்த சர்க்கரை அளவு பரிசோதனையில் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்துவிட்டாலோ தினமும் நடைப் பயிற்சி செய்யுங்கள்.

உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். வாரத்துக்கு மொத்தம் 150 நிமிட நடைப் பயிற்சி போதுமானது.

உடற்பயிற்சி, உணவு முறை மாற்றத்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாதபோதுதான் மாத்திரை அளிக்கப்படும்.

சர்க்கரை நோய் சிகிச்சையின் முக்கிய "கதாநாயகர்கள்' யார்?

நடை உள்பட தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி, இனிப்புச் சத்து இல்லாத - நார்ச் சத்து மிகுந்த உணவு முறை மாற்றம்தான் சர்க்கரை நோயின் முக்கிய "கதாநாயகர்கள்'.

ஏனெனில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரில் உடற்பயிற்சி - உணவு முறை மாற்றத்தை மட்டும் மேற்கொண்டதில் 59 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் உணவு முறை மாற்றத்துக்குப் பதிலாக மாத்திரை அளிக்கப்பட்டால் 38 சதவீதம் பேருக்கு மட்டுமே ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 11:44 pm

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா?

மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவற்றைத் தவிர எல்லா பழங்களையும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிடலாம். கஞ்சி குடிக்க வேண்டாம். ஏனெனில் கஞ்சி காரணமாக பசி அடங்காது.

சர்க்கரை நோயாளிகள் பின் விளைவுகளைத் தடுத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

"செல்களில்' 3 மாதங்களில் சேர்ந்துள்ள ரத்த சர்க்கரை அளவைக் கண்டறிய "எச்பிஏ1சி'- பரிசோதனை உதவும். இந்தப் பரிசோதனையை ஆண்டுக்கு இரண்டு முறை செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கால் விரல் இடுக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடியை வைத்து பாதங்களைப் பார்ப்பதும் அவசியம்.

சர்க்கரை நோயுடன் ரத்த கொழுப்புச் சத்து அளவுகள் அதிகமாக இருந்தால் இதயத்துக்கு ஆபத்து. எனவே ரத்தத்தில் கெட்ட கொழுப்புச் சத்து (எல்.டி.எல்.) 100-க்கு அதிகமாக இருந்தாலோ அல்லது "டிரைகிளைசரைட்ஸ்' எனப்படும் ஒருவித கெட்ட கொழுப்புச் சத்து 150-க்கு அதிகமாக இருந்தாலோ இதய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

கண்ணின் விழித் திரையைப் பாதுகாக்க ஆண்டுக்கு ஒரு முறை "ஃபண்டஸ் எக்ஸாமினேஷன்' பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும். சிறுநீரகங்களைக் காக்க "மைக்ரோ ஆல்புமின்' சோதனை அவசியம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Apr 16, 2010 1:03 am

பயனுள்ள பதிவிற்கு நன்றிகள்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக