புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Manimegala
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 12:39 am

First topic message reminder :

சங்கத் தமிழ்ப் புலவர்கள் கூறும் புவியியல் தகவல்களைப் (GEOGRAPHICAL FACTS) படிப்போர், அவர்களுடைய பரந்த அறிவை எண்ணி வியப்பார்கள்.

'குமரி முதல் இமயம் வரை' என்று இன்று நாம் பயன்படுத்தும் சொற்றொடரை முரஞ்சியூர் முடிநாகராயர், ஆலந்தூர்க்கிழார், காரிக்கிழார், குறுங்கோழியூர்க்கிழார், முடமோசியார், பரணர், குமட்டுர்க் கண்ணனார் முதலிய புலவர்கள் பயன்படுத்துகின்றனர்.

உலகிலேயே உயரமான மலை இமயமலை என்பது, இன்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உயரத்தை அளப்பதற்கு நவீன விஞ்ஞானக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே, மிக உயரமான மலை இமயம் என்பதைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனால் தமிழ் மன்னர்களை, "இமயம் போல வாழ்க" என்று வாழ்த்தினர்.

உதியஞ் சேரலாதனை முருஞ்சியூர் முடிநாகராயரும் (புறம் 2), விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழாரும் (புறம் 166), கோப்பெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனாரும் (புறம் 214) இவ்வாறு வாழ்த்துகின்றனர்.

"அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே" (புறம் 2)

............... நெடுவரைக் கசவளர் இமயம்போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலமிசையானே (புறம் 166)

................ இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை
நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே (புறம் 214)

ஏறக்குறைய 25 இடங்களில் இமயத்தைப் புகழ்ந்து பாடுகின்றனர் சங்கப் புலவர்கள். அது மட்டுமல்ல, பரணர் என்ற புலவர் இமயமலைக் காட்சிகளைத் தத்ரூபமாக வருணிக்கிறார். அதிலுள்ள புகழ்பெற்ற "பொற்கோடு" என்ற சிகரத்தையும் பல புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"காஞ்சன சிருங்கம்" என்று வடமொழியில் கூறப்படும் இது மருவி, "கஞ்சன் ஜங்கா" என்று இன்று அழைக்கப்படுகிறது.

"பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன" (பரணர், புறம் 369)

"ஆரியர் அலறத்தாக்கி, பேர் இசைத் தொன்று
முதிர் வடவரை வணங்குவில் பொறித்து" (பரணர், அகம் 396)

"கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை
எல்லை இமயமாகத் தென்னங்குமரியோ டாயிடை அரசர்" (பரணர், ப.பத் 43)

இதில் "கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை" என்பது காளிதாசனின் "தேவதாத்மா ஹிமாலய:" என்ற வரியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. குமரி முதல் இமயம் வரை உள்ள பகுதிகளை பரணர் அறிந்திருந்தார். குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவரும் (ப.பத் 11) இதே கருத்தைப் பாடியுள்ளார். இமய மலையிலுள்ள அன்னப் பறவைகளையும் பரணர் (நற்.356) வருணிக்கிறார்.

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியும் (மேகாலயா, இந்தியா) இமயமலைத் தொடரில்தான் உள்ளது. இதை அறிந்துதானோ என்னவோ சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாராட்டும் ஆலத்தூர்க்கிழார் இவ்வாறு கூறுகிறார் :-

"சான்றோர் செய்த நன்றுண்டாயின் இமயத்து ஈண்டி
இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே!" (புறம் 34)

"இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்மை இருக்குமாயின், இமயமலையில் திரண்டு இனிய ஓசையை உண்டாக்கிவரும் பெரிய மேகம் பெய்த நுட்பமான மழைத் துளிகளைவிடப் பலகாலம் வாழ்வாயாக" என்று ஆலத்தூர்க்கிழார் வாழ்த்துகிறார்.

கடல் பற்றி பரணர் கூறும் கருத்தும் அற்புதமானது. கடலில் மழை மேகங்கள் எவ்வளவு உண்டானாலும் நீர் அளவு குறையாது. கடலில் எவ்வளவு நதிகள் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினாலும் கடல் நிரம்பி வழியாது.

"மழை கொளக் குறையா புனல்புக நிறையா" (ப.பத் 45)

பலரும் சிந்தித்துப் பார்க்காத புவியியல் உண்மை இது. பல்லாயிரக்கணக்கான ஆறுகள் ஒவ்வொரு நிமிடமும் பலகோடி கனஅடி நீரைக் கொட்டிய போதிலும் கடல் நிறைவதில்லை. அதே போலக் கடலிலிருந்து எவ்வளவு மழை மேகம் திரண்டாலும் கடல் குறைவதில்லை. இது இயற்கை நியதி.

தமிழர்கள் எந்த அளவுக்கு பூமியை உற்றுக் கண்காணித்தனர் என்பதற்கு இது ஒரு சான்று. கப்பலைத் தாக்கி அழிக்கும் மீன் வகைகள் பற்றியும் பரணர் குறிப்பிடுகிறார்.

'தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இரவின் குப்பை அன்ன' (அகம் 152)

பிண்டன் என்பவனின் படை, தங்கம் கொண்டு வரும் கப்பலைத் தாக்கி அழிக்கும் இரால் மீன் கூட்டம் போன்றது என்று இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.

ஒரு வகைக் கடற்புழுக்கள் கப்பலின் அடியில் ஒட்டிக் கொண்டு கப்பலையே அரித்து அழித்து விடும் என்று தற்கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரணர் குறிப்பிடும் 'இரவின் குப்பை' இத்தகைய வகைக் கடற்புழுக்களா என்பது ஆராய வேண்டிய தகவலாகும்.

- ச. சாமிநாதன், தமிழ் ஆசிரியர்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 14, 2010 3:13 pm

jahubar wrote:வாழ்க தமிழ் வளர்க தமிழன்..
[You must be registered and logged in to see this image.]

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக