புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 10 of 50 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 30 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed May 12, 2010 4:33 am

தமிழநம்பி wrote:
வழிப்போக்கன் wrote:

எண்ணிடும் போதில் இனிக்கும் தமிழே
கண்ணின் மணியாய்க் கண்டேன் உனையே!

மிகச்சிறப்பு.

மனமார்ந்த பாராட்டு.

தொடர்ந்து படித்து எழுதுங்கள். மற்றவர்களையும் எழுத ஊக்கம் கொடுங்கள்.

ஈகரைத் தமிழ் உள்ளங்களே!
எளிதாக மரபுப்பாடல் எழுத வருக!
அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்க என அழைக்கிறேன்.

நன்றி ஐயா நிட்சயமாக மற்றவரையும் ஊக்கப் படுத்துவேன், ஈகரைக்கு நீங்கள் கிடைத்தது அரிய பொக்கிஷம் மேலும் தொடருங்கள் கற்றிட ஆவலாக உள்ளேன் நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 12, 2010 10:30 am

எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் எழுத முடியவில்லையே ஐயா! சரி, கையை நீட்டி அடியை வாங்கிக் கொள்கிறேன்! (மெதுவாக அடிக்கவும்)

Spoiler:




மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed May 12, 2010 10:33 am

சிவா wrote:எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் எழுத முடியவில்லையே ஐயா! சரி, கையை நீட்டி அடியை வாங்கிக் கொள்கிறேன்! (மெதுவாக அடிக்கவும்)

Spoiler:

அண்ணா இப்படி செய்தால் விட்டு விட மாட்டார்கள்...
கையில் புத்திரேகை நல்லாதானே இருக்கு முயற்சி பண்ணுங்க கண்டிப்பா வரும்... (ஆனா வராது மரபுப் பா பயிலரங்கம் - Page 10 514396 )

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed May 12, 2010 12:35 pm

சிவா wrote:எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் எழுத முடியவில்லையே ஐயா! சரி, கையை நீட்டி அடியை வாங்கிக் கொள்கிறேன்! (மெதுவாக அடிக்கவும்)

[spoiler]மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Pradachaish28914_1[
/spoiler]

அடிக்கின்ற ஆசிரியன் அல்லன்.

ஏதாவது நான்கு சொல்லை - சீரை - எழுதினால்...
அதைப் பாட்டாக்கி
நீட்டுகிற கையிலே பாட்டைத் தருபவன்!

நன்றி சிவா.

நந்திதா மற்றும் நண்பர்களைக் காணோமே!

குறைந்தது பத்துப் பேராவது எனக்கு ஊக்கமளிக்கப் பாட்டெழுத வாருங்கள் என அழைக்கிறேன்.
பிழையாகிவிடும், தவறாகிவிடும் என்றெல்லாம் எண்ணித் தயங்க வேண்டா!
முதலில் பிழையாக எழுதுகிறவர்களே திருத்தமாக எழுதுகிறவர்களாகிறார்கள்!
பெரும் பாவலர்களும் பிழையாக எழுதியவர்களே!

தயங்காமல் எழுத அன்புள்ளங்களை அழைக்கிறேன்.
எதை எழுதினாலும் அது பாட்டாக வரும் என்று நம்புங்கள்.
அன்புடன்,
த.ந.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri May 14, 2010 10:01 pm

அடுத்த வகைப் பாடலை நான்கைந்து நாட்கள் இடைவெளிக்குப் பின் எழுதப் பயில்வோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 14, 2010 10:12 pm

தமிழநம்பி wrote:அடுத்த வகைப் பாடலை நான்கைந்து நாட்கள் இடைவெளிக்குப் பின் எழுதப் பயில்வோம்.

நன்றி ஐயா!!! மரபுப் பா பயிலரங்கம் - Page 10 678642 மரபுப் பா பயிலரங்கம் - Page 10 678642



மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue May 25, 2010 8:11 am

அடுத்து, நாம் எழுதும் பாட்டு வெண்தாழிசை

1. இது ஒரு மூன்றடிப்பாடல்.
முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.

2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.

3. கடைசிச் சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.

4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச்சீர்கள்.

(அசை பற்றிப் பயிலரங்கின் 2ஆம் பகுதியிலும், அசைபிரித்தல் பற்றி 3ஆம் பகுதியிலும் சீர் பற்றி 4ஆம் பகுதியிலும், ஓரசைச்சீர் பற்றி 6ஆம் பகுதியிலும் விளக்கியுள்ளதை மறுபடியும் ஒருமுறை படித்துக் கொண்டால் எழுதல் எளிது)

எடுத்துக்காட்டுப் பாடல்:

கண்ட கண்ட உணவை உண்டால்
கொண்ட உடலில் நோய்கள் தாக்க
மண்டும் துன்பம் மிகும். - புதுவைப் பாவலர் அரங்க.நடராசன்.

இன்னொன்று :

தன்னின் நலமும் தானுறு குடும்ப
இன்னலந் தமையுமே எண்ணி இயங்குவார்
என்னினத் தலைவரா? ஏய்ப்பு!

அன்பார்ந்த தமிழ்நெஞ்சங்களே, தயக்கமின்றி எழுதுங்கள் பிழை இருப்பின் திருத்திக் கொள்ளலாம். உங்கள் எண்ணங்களைப் பாட்டாக்கி மகிழுங்கள்!
எழுத்த் தொடங்குங்கள்!

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Fri May 28, 2010 4:53 pm

எந்த வகையில் எடுத்துக் கூறியும்
சொந்த மாக எழுது தற்கே
இந்தத் தயக்கம் எதற்கு?


இதுவும் வெண்தாழிசைப் பாட்டே.
பெயரைப் பற்றிக் கவலைப்பட வேண்டா.
மேலே உள்ளதைப்போல் மூன்று வரி எழுதுங்கள்.
தானே பாட்டு அமையும்.

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Fri May 28, 2010 4:54 pm

பாடகன்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri May 28, 2010 5:24 pm

மிக அருமையான பாடம் ஐயா மிக்க நன்றிகள் எனது முயற்சி

மண்ணில் உயிர்கள் மரிக்கவே யெண்ணி
பண்ணியே வைத்திடும் ஆயுதம் பாராய்
மனிதம் தொலைந்த உலகு!

(ஆயுதத் தொழிசாலைத் திரி பார்த்ததால் மனதில் எழுந்த தாக்கத்தில் உருவானது)



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மரபுப் பா பயிலரங்கம் - Page 10 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



Page 10 of 50 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 30 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக