புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:55

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 20:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 20:37

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 19:57

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 18:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:43

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:28

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:28

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:11

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:13

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 13:55

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:44

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
61 Posts - 46%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
2 Posts - 2%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
419 Posts - 48%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
28 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 44 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

Page 44 of 50 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu 4 Mar 2010 - 0:46

First topic message reminder :

  • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.

எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.

குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue 8 Feb 2011 - 20:04

அன்பார்ந்த கிரி,

நீங்கள் எழுதிய ஏழு பாடல்களில் ஒவ்வொன்றைப் பற்றியும் நேற்றே குறிப்பு எழுதினேன். முன்பார்வைக்காகச் சொடுக்கிச் சரிசெய்துவிட்டு, அதைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டிருக்கிறேன். அன்பர்களின் திருமண வேலைகள் தொடர்பாக ஈடுபட்டதால் முன்னரே காலந்தாழ்ந்த நிலையில் என் பிழையும் காலத்தாழ்த்தத்தை நீட்டித்துவிட்டது. சரி, பாடல்களைப் பார்ப்போம்.

இயற்கை:

தூரத்தே மின்னுமெழில் தாரகையும் நீள்வான
ஓரத்தே வெண்மதியும் ஓங்கியெழு சூரியனும்
யாரங்கு வைத்தவள் சக்தி

ஈற்றுச்சீர் ஓரசைச்சீராக அமைக்க.

தென்னை இளங்காற்று திங்கள் மதுமலரும்
என்னதோர் சுகமென்று எண்ணஇடி காற்றுமழை
மின்னலையும் பின்வைத்த தேன்

என்னதோர் சுகமென்று – விளம் முன் நிரை வந்துள்ளது. திருத்துக.

வாழ்க்கை

பேயின் குணம்பெற்ற பித்தர்கை செங்கோலும்
நோயின் மனம்கொள்வர் நீதியற் றரசுமென
பூமிக்குப் போட்டவிதி யேன்?

யாப்பு சரி. இரண்டாம் அடியின் கருத்து- எனக்கு விளங்கவில்லை.
விளக்கும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

மானிடம் கொன்றவர் மன்னரென ஊரழிய
தானிடர் செய்தார் தலைவரென ஆவரேல்
பூவுலகம் பேயுலகாப் போம்.
சிறு திருத்தம்! நீங்களே வேறு வண்ணமாகவும் திருத்தலாம்.

தூரத்துத் தாரகைகள் தூயநில வோடுகீழ்
ஒரத்தில் ஞாயிறும் ஓங்கியொளி வீசல்காண்
மானிடமொன் றில்லாமை யாம்

சரியாக உள்ளது. மூன்றாம் அடியின் பொருத்தத்தை விளக்கும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

அழகு:

ஓடுநதி தானிவளின் ஒய்யார மென்னடையை
ஆடுமெழில் அரவமென ஆற்றா திழிவுசெய்
தோடியவள் போலசையு மாம்.

ஆடுமெழில் அரவமென – காய் முன் நிரை வந்துள்ளது.
திருத்துக.

வானெழுந்த சூரியனும் வண்ணமுகம் கண்டயர்ந்து
தேனழைந்த வெண்ணிலாத் தோற்றயிது இரவென்று
தான்மறைய ஓடுமெழில் காண்

தேனழைந்த – தேனமைந்த என்றிருக்க வேண்டுமா?

திருதங்கள் செய்து பாடல்களை மறுபடியும் தருக.
தொடர்ந்து எழுதுக.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue 8 Feb 2011 - 20:10

kirikasan wrote:ஐயா அவசரத்தில் மேலே யுள்ளவை பல பிழைகளுடன் செய்துவிட்டேன்
மன்னிக்கவும் திருத்துகிறேன்

திருத்தம்:

செந்தமிழ் சொல்சேர்த்து சிந்தியல்வெண் பாசெய்து
தந்தனன் முன்னே தருவினிலை பின்கனியாய்
நின்றநிலை கண்டனன் இங்கு

அன்புடனே நோக்கி அமைந்தகுறை தான்களைய
இன்பமுற வேண்டி இறைஞ்சினேன் இங்கிவன்
சிந்தியல் வெண்பாவும் செய்து
அருமை. இரண்டு பாக்களும் சரியாக உள்ளன.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue 8 Feb 2011 - 20:14

nandhtiha wrote:ஐயா அவர்களுக்கு வணக்கம்

எந்த னிதயம்தான் எஃகா யிருந்திடினும்
சொந்தங்கள் தீயிற் சுருண்டதனை எங்ஙனம்யான்
சிந்தியலில் பாப்புனைவேன் செப்பு?

என்றும் மாறா அன்புடன்

நந்திதா
அருமை. சரியாக உள்ளது.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed 9 Feb 2011 - 1:57

வணக்கம் அய்யா. தங்கள் நலன் காக்க!

எங்கள் பதிவிற்குப் பின் பயிலரங்கில் சிறு அமைதி நிலவுவதாக உணர்ந்ததால், அவ்விறுக்கத்தைத் தளர்த்த வேகமாய் நானிட்ட பதிவுதான் நேற்றைய இரு வெண்பா முயற்சிகள். அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருமுன் ஐந்து நிமிடத்தில் எழுதி தவறுகள் இருக்கிறதா என்று சோதிக்கும் நிலையில் கூட இல்லாமல் இட்ட பதிவு. தாங்கள் திருத்திய வெண்பாக்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டேன். நன்றிகள் பல.

அந்த எண்ணத்தை இங்கு சிந்தியல் வெண்பாவில் முயன்றுள்ளேன்.

நேற்றைய என்பதிவு பாவரங்கில் நீடித்த
மாற்றத்தைச் சீராக்க மாணாக்கி நானிட்ட
குற்றமற்ற உற்ற செயல்.

இலக்கணத்தில் ஏதும்பிழை இல்லையென் றேதான்
சிலகணப் பொழுதிற்குள் சிந்தனைக்கு எட்டியதை
ஏட்டினில் தந்தேன் நான்

பனையோலை கேட்டுநா னெழுதிய பாடலின்
வினைதிருத்தி சீராக்கி வோதும்வித் தைகண்டு
வியந்து மகிழ்கின்றேன் நான்.

சகோதரி நந்திதாவிற்கு,

தண்டனை ஏதும் இல்லை தமிழிடம் கோபம் இல்லை
கண்ணின் மணியைப் போலநாம் காப்போம் தமிழின் எல்லை
தண்ணொளி வீசும் நம்தமிழை தாகம் தீரப் பருகவந்த
பெண்டிர் நமக்குள்ளே கருத்து பகிர்வதில் தடையும் இல்லை

அன்புடன்
யாதுமானவள்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed 9 Feb 2011 - 2:03

வணக்கம் அய்யா,

முந்தைய பாடலின் திருத்தம்.

நற்குணமும் நல்மதியும் நல்லனவாய்ச் சேர்ந்ததினால்
சொற்சிதற வாழ்த்தஎமை சிந்தியலைக் கொண்டாரே
நற்கவியின் மாணவரிம் மாது.

மிக்க அன்புடன்,
யாதுமானவள்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed 9 Feb 2011 - 15:11

நேற்றைய என்பதிவு பாவரங்கில் நீடித்த
மாற்றத்தைச் சீராக்க மாணாக்கி நானிட்ட
குற்றமற்ற உற்ற செயல்.

இலக்கணத்தில் ஏதும்பிழை இல்லையென் றேதான்
சிலகணப் பொழுதிற்குள் சிந்தனைக்கு எட்டியதை
ஏட்டினில் தந்தேன் நான்

பனையோலை கேட்டுநா னெழுதிய பாடலின்
வினைதிருத்திச் சீராக்கி வோதும்வித் தைகண்டு
வியந்து மகிழ்கின்றேன் நான்.

முதல் பாடல் சரியாக உள்ளது.

இரண்டாம் பாடலில் –
ஏதும்பிழை – கனிச்சீராக உள்ளது.
சிலகணப் பொழுதிற்குள் – விளம் முன் நிரை உள்ளது.
திருத்துக.

மூன்றாம் பாடலில் –
பாடலின் வினைதிருத்தி – விளம் முன் நிரை வந்துள்ளது.
தைகண்டு வியந்து – காய் முன் நிரை வந்துள்ளது.
திருத்துக.

தொடர்ந்து எழுதிப் பழகின் எளிமையாக இருக்கும்.
சிறப்பாகவும் அமையும்.
நன்றி.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed 9 Feb 2011 - 15:13

நற்குணமும் நல்மதியும் நல்லனவாய்ச் சேர்ந்ததினால்
சொற்சிதற வாழ்த்தஎமை சிந்தியலைக் கொண்டாரே
நற்கவியின் மாணவரிம் மாது.

சரியாக அமைந்துள்ளது. தொடர்ந்து எழுதுக.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed 9 Feb 2011 - 15:44

எனது பயிற்சியின் திருத்தம் ஐயா!

தூரத்தே மின்னுமெழில் தாரகையும் நீள்வான
ஓரத்தே வெண்மதியும் ஓங்கியெழு சூரியனும்
ஈந்தவள் சக்தியெம் தாய்

தென்னை ஒளிமதியம் தென்றல் மலர்வாசம்
இன்பமென் றாக்கினாய் ஈசனே காற்றுமிடி
மின்னலைப் பின்தந்த தேன்

வாழ்க்கை

பேயின் குணம்பெற்ற பித்தர்கை செங்கோலும்
நோயின் மனம்கொள்வர் நீதியற் றாட்சியென
பூமிக்குப் போட்டவிதி யேன்?

(பேய்க்குணம் கொண்டவர் கையில் செங்கோலும், நோய் கொண்ட மனம் படைத்தவரும் அநீதியான அரசை செலுத்துபவருமே
அரசனாக வேண்டுமென்றும் பூமிக்கு(இலங்கையை எண்ணி) சட்டம் போட்டது யார்?)

மானிடம் கொன்றவர் மன்னரென ஊரழிய
தானிடர் செய்தார் தலைவரென ஆவரேல்
பூவுலகம் பேயுலகாப் போம்.

தூரத்துத் தாரகைகள் தூயநில வோடுகீழ்
ஒரத்தில் ஞாயிறும் ஓங்கியொளி வீசல்காண்
மானிடமொன் றில்லாமை யாம்

(தாரகைகள் நிலவு சூரியன் இவைகள் ஒளி வீசுகின்றன. அதற்குக் காரணம் அங்கெல்லாம்
மனிதர் இல்லாததால் போலும். இருந்தால் அதன் தூய்மை கெட்டு
ஒளியின்றிப்போயிருக்குமோ (பூமியைப்போல) என்று கற்பனை செய்தேன்)

அழகு:
ஓடுநதி தானிவளின் ஒய்யார மென்னடையை
ஆடுமொரு நாகமென் றாற்றா திழிவுசெய்
தோடியவள் போலசையு மாம்.

வானெழுந்த சூரியனும் வண்ணமுகம் கண்டயர்ந்து
தேனமைந்த வெண்ணிலாத் தோற்றயிது இரவென்று
தான்மறைய ஓடுமெழில் காண்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri 11 Feb 2011 - 23:50

வணக்கம் அய்யா,
தங்கள் நலன் காக்க!

திருத்தங்கள் செய்திருக்கின்றேன். சரியாக உள்ளனவா என அறியத்தருவீர்.

இலக்கணத்தில் இல்லைபிழை என்றெண்ணி யேதான்
சிலகண நேரத்தில் சிந்தைக்கு எட்டியதை
ஏட்டினில் தந்தேன் நான்.

பனையோலை கேட்டுநா னெழுதிய பாவின்
வினைதிருத்திச் சீராக்கி ஓதும்வி தம்கண்டு
வியந்து மகிழ்கின்றேன் நான்.

அய்யா எனக்கு இங்கு ஒரு சந்தேகம். நான் முதலில் எழுதிய பாவில் "ஓதும்வித் தைகண்டு" என்று எழுதியிருந்தேன். இப்போது எனக்கு ஒரு குழப்பம். சீரின் தொடகத்தில் வரும் "ஐ" எழுத்து நெடிலாகக் கொள்ளப்படும் என்று கூறினீர் அல்லவா? தைகண்டு இதில் தை/கண்/டு = நேர்/நேர்/நேர் - தேமாங்கனி என பிரித்தல் தவறா? அன்புகூர்ந்து என் ஐயத்தை நீக்குக.

[quote="தமிழநம்பி"][size=18]3. அசை பிரித்தல்

சீர் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அசைபிரிப்பது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

4. சீரின் தொடக்கத்தில் நிற்கும் வரிசை எழுத்துக்கள் நெடிலாகக் கொள்ளப்படும்; இடையிலும் இறுதியிலும் அவை குறிலாகக் கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டு :

கையில் கை நெடில் > நேரசை.(சீரின் முதலில் வரிசைச் சொல்)

போகையில் கையில் குறில்இணை ஒற்று > நிரையசை (சீரின் இடையில் வரிசைச் சொல்)

புன்னகை னகை குறிலிணை > நிரையசை. ( சீரின் இறுதியில் வரிசைச்சொல்)

மிக்க நன்றி.
அன்புடன் யாதுமானவள்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Sat 12 Feb 2011 - 19:20

kirikasan wrote:எனது பயிற்சியின் திருத்தம் ஐயா!

தூரத்தே மின்னுமெழில் தாரகையும் நீள்வான
ஓரத்தே வெண்மதியும் ஓங்கியெழு சூரியனும்
ஈந்தவள் சக்தியெம் தாய்

தென்னை ஒளிமதியம் தென்றல் மலர்வாசம்
இன்பமென் றாக்கினாய் ஈசனே காற்றுமிடி
மின்னலைப் பின்தந்த தேன்

வாழ்க்கை

பேயின் குணம்பெற்ற பித்தர்கை செங்கோலும்
நோயின் மனம்கொள்வர் நீதியற் றாட்சியென
பூமிக்குப் போட்டவிதி யேன்?

(பேய்க்குணம் கொண்டவர் கையில் செங்கோலும், நோய் கொண்ட மனம் படைத்தவரும் அநீதியான அரசை செலுத்துபவருமே
அரசனாக வேண்டுமென்றும் பூமிக்கு(இலங்கையை எண்ணி) சட்டம் போட்டது யார்?)

மானிடம் கொன்றவர் மன்னரென ஊரழிய
தானிடர் செய்தார் தலைவரென ஆவரேல்
பூவுலகம் பேயுலகாப் போம்.

தூரத்துத் தாரகைகள் தூயநில வோடுகீழ்
ஒரத்தில் ஞாயிறும் ஓங்கியொளி வீசல்காண்
மாந்தரங் கில்லாமை யால்.

(தாரகைகள் நிலவு சூரியன் இவைகள் ஒளி வீசுகின்றன. அதற்குக் காரணம் அங்கெல்லாம்
மனிதர் இல்லாததால் போலும். இருந்தால் அதன் தூய்மை கெட்டு
ஒளியின்றிப்போயிருக்குமோ (பூமியைப்போல) என்று கற்பனை செய்தேன்)

அழகு:
ஓடுநதி தானிவளின் ஒய்யார மென்னடையை
ஆடுமொரு நாகமென் றாற்றா திழிவுசெய்
தோடியவள் போலசையு மாம்.

வானெழுந்த சூரியனும் வண்ணமுகம் கண்டயர்ந்து
தேனமைந்த வெண்ணிலாத் தோற்றயிது இரவென்று
தான்மறைய ஓடுமெழில் காண்
அருமை, கிரி. தொடர்ந்து எழுதுங்கள்.

Sponsored content

PostSponsored content

Page 44 of 50 Previous  1 ... 23 ... 43, 44, 45 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக