புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 34 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 34 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 34 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
மரபுப் பா பயிலரங்கம் - Page 34 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 34 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 34 Poll_c10 
2 Posts - 20%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 34 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 34 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 34 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்


   
   

Page 34 of 50 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 42 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.



உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.



எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.



க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.



இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.



குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Nov 15, 2010 9:30 am

nandhtiha wrote:தமிழ் ஐயாவுக்கும் அன்புச் சகோதரிக்கும் வணக்கம்.
இங்கு ஆசிரியர் ஐயா அவர்கள் தாம், ஆர்வக் கோளாறினால் நான் என் பதிவை வைத்துவிட்டேன், பிறகு தான் இது அதிகப் பிரசங்கித் தனம் என்றுணர்ந்தேன். இருவரும் என்னை மன்னிக்கவும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
தவறில்லை, நந்திதா! ஒருவருக்கொருவர் நல்லெண்ணத்துடன் கருத்துக்கூறலாம். நான் கவனிக்காதவற்றையும் சுட்டிக்காட்டலாம். ஆக்கமாக செய்வனவற்றை வரவேற்கின்றேன்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Nov 22, 2010 1:13 am

மதிப்பின்மிகு ஆசிரியர் அய்யா,

மீண்டும் என் சிறு முயற்சியைக் கொடுத்துள்ளேன். சரியாக உள்ளதா என அறியத்தருவீர்

கடனாகத் தந்தவொன்றைக் கேட்காமல் விட்டிடின்
உடனாகும் ஓயாப் பகை.

முதுநூல்கள் கற்றறிந்து தாய்மொழியைக் காத்திட
புதுநூல்கள் ஓயாது செய்க.

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Tue Nov 30, 2010 9:21 pm

கடனாகத் தந்தவொன்றைக் கேட்காமல் விட்டும்
உடனாகும் ஓயாப் பகை.
முதுநூல்கள் கற்றறிந்து முன்தாயைக் காத்தே
புதுநூல்கள் ஓயாது செய்.

இரண்டு பாடல்களிலும் செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்க. ஐயமிருப்பின் தயங்காது வினவுக. தொடர்ந்து எழுதுக.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Dec 01, 2010 4:44 pm

26. குறள்வெண்பா – 2

தமிழ்ப் பாக்கள் நான்கு வகையின என்று இதற்கு முந்திய பயிலரங்கப் பகுதியில் அறிந்தோம்.
ஒவ்வொரு வகைப் பாவிற்கும் தனி ஓசை உண்டென்றும் அறிந்தோம்.
அந் நான்குவகைப் பாக்களில் வெண்பா செப்பலொசை உடையது என்றும் கூட தெரிந்துகொண்டோம்.

நாம் இதுவரை எழுதிய குறட்பாக்களில் ஈரசைச் சீர்களும் (மூவசைச் சீர்களில்) காய்ச்சீரும் கலந்து எழுதினோம். இறுதிச் சீர் ஓரசைச்சீராக இருந்தது.

இவ்வாறு ஈரசைச் சீர்களும் காய்ச்சீரும் கலந்து எழுதும் குறள்வெண்பா ஒழுகிசைச் செப்பலோசைக் குறள் வெண்பா ஆகும்.

இனி, அடுத்தவகைக் குறள்வெண்பா:

1.இவ்வகையில், குறள்வெண்பா எழுதும் பொது இலக்கணம் பின்பற்றப்படும்.
2. இறுதிச்சீர் தவிர மற்றவை தேமாங்காய், கூவிளங்காய் ஆகிய இரு காய்ச்சீர்களாக அமைந்து இருக்கும்.
இதனால், வெண்சீர் வெண்டளை மட்டுமே இடம்பெறும். (அதாவது, காய் முன் நேர் மட்டும்)
3. இரண்டடியிலும் எதுகையும், முதலாம் மூன்றாம் சீர்களில் மோனையும் அமைதல் சிறப்பு.
4. இறுதிச்சீர் நாள், காசு என்ற வாய்பாட்டில் அமைந்திருக்க வேண்டும்.

இவ்வாறு எழுதும் குறள்வெண்பா, ஏந்திசைச் செப்பலோசைக் குறள்வெண்பா ஆகும்.

எடுத்துக்காட்டுப் பாடல் :

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
(கு.397)

இன்னொன்று :

எல்லாமும் எல்லார்க்கும் என்றநிலை எய்திவிடின்
இல்லாரும் பொல்லாப்பும் இல்.


இனி, நீங்கள் எழுதலாமே.




.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 01, 2010 9:49 pm

ஐயா

எனது முயற்சியின் பெறுபேற்றைத் தருகிறேன். தங்கள் வழிகாட்டலை வேண்டி நிற்கிறேன்.


தீபவொளி எங்குமவர் தேடியழும் உற்றவர்கள்
தூபமிடும் கார்த்திகையின் நாள்

வெட்டியடி மின்னலெனும் வேகங்கொள் வீரமைந்தர்
விட்டகுறை நீமுடித்து வெல்

வீரர்படை போர்முடிக்க வென்றகதை தென்றலது
ஊரறியச் சொல்லுமாம் ஓடி

கூடுமிவர் தீரநடை கொள்ளஇடி மேகமென்று
ஆடுமொரு தூறலெண்ணித் தோகை

அன்புடன்
கிரிகாசன்

******************
பிற் சேர்க்கை

ஏற்கனவே தந்ததை அழித்து திருத்தாமல் மூன்றாவதில் பிழையுணர்ந்து திருத்தம் போடுகிறேன்.

வீரர்படை போர்முடிக்க வென்றகதை தென்றலது
ஊரறியச் சொல்லிவரும் ஓடி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Dec 02, 2010 1:42 pm

ஐயா தங்களின் பிறந்ததின வாழ்த்தாக எழுதியது. இப்படி தொடராக ஒரே கருவைப்பிரதிபலிக்க எழுதலாமோ என்ற ஐயம் இருப்பினும் பயிற்சியாக இருக்கட்டுமெ என எழுதினேன்

செந்தமிழாம் பாலினையே சிந்தாமல் தான்கடைந்து
இன்கவிதை என்றமுதம் கொள்

என்றபயில் பாவரங்க ஈகரையின் ஆசானாம்
நன்தமிழ நம்பியவர் தான்

இன்றுலகு வந்ததினம் இன்பமுடன் ஏற்றமுற
அன்புமலர் தூவுகிறோம் நாம்

செந்தமிழ்போல் அன்புமனம் சிந்துமெழில் கொண்டுலகில்
நின்றுயர இன்பமடை வீர்!

அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Dec 02, 2010 6:44 pm

அன்பார்ந்த கிரி,
உடனே எழுதிய முயற்சிக்குப் பாராட்டு.

தீபவொளி எங்குமவர் தேடியழும் உற்றவர்கள்
தூபமிடும் கார்த்திகையின் நாள்

வெட்டியடி மின்னலெனும் வேகங்கொள் வீரமைந்தர்
விட்டகுறை நீமுடித்து வெல்

வீரர்படை போர்முடிக்க வென்றகதை தென்றலது
ஊரறியச் சொல்லுமாம் ஓடி

கூடுமிவர் தீரநடை கொள்ளஇடி மேகமென்று
ஆடுமொரு தூறலெண்ணித் தோகை

முதல் பாடல் சரியாக உள்ளது.

இரண்டாம் பாடல் சிறப்பாக உள்ளது.

மூன்றாம் பாடலில் முதற்சீர் கனிச்சீராக (தேமாங்கனி) உள்ளது. வெண்பாவில் கனிச்சீரே இடம்பெறக்கூடாதென்பதை நினைவில் நிறுத்துக. ஆறாம் சீர் கூவிளமாக உள்ளது. இவ் விரண்டையும் காய்ச்சீராக மாற்றுக. இறுதிச்சீர் ‘ஓடி’ என்பது நாள், மலர் வாய்பாட்டில் அமையாமை காண்க. இக்குறைகளை நீங்களே சரி செய்ய முடியும். செய்க. ஐயமிருப்பின் தயங்காது கேளுங்கள்.

நான்காம் பாடலில்,
மேகமென்று ஆடுமொரு – சேர்ந்தால் மேகமென் றாடுமொரு என்றாகும். மேகமென்-கூவிளமாகிவிடும். அதைத் திருத்துக. இறுதிச்சீர் நாள், காசு என்ற வாய்பாட்டில் அமைக்க. (தோகை – தேமா) இவையெல்லாம் நீங்களே எளிதில் திருத்தக் கூடியவையே. ஐயமிருப்பின் தயங்காது வினவுக.

உடனுக்குடன் நான்கு பாடல் எழுதியமைக்கு மீண்டும் பாராட்டு.
தொடர்ந்து எழுதுங்கள்.



manithann
manithann
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 01/12/2010
http://wellgaatamil.blogspot.com/

Postmanithann Thu Dec 02, 2010 7:15 pm

மரபுப் பா பயிலரங்கம் - Page 34 865843

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Dec 02, 2010 10:11 pm

செந்தமிழாம் பாலினையே சிந்தாமல் தான்கடைந்து
இன்கவிதை என்றமுதம் கொள்

என்றபயில் பாவரங்க ஈகரையின் ஆசானாம்
நன்தமிழ நம்பியவர் தான்

இன்றுலகு வந்ததினம் இன்பமுடன் ஏற்றமுற
அன்புமலர் தூவுகிறோம் நாம்

செந்தமிழ்போல் அன்புமனம் சிந்துமெழில் கொண்டுலகில்
நின்றுயர இன்பமடை வீர்!

கிரி,
நன்றி.
பாடல்கள் தவறின்றி அமைந்துள்ளன.
தொடர்ச்சியான கருத்தறிவிப்பிற்குக் குறள்வெண்பா இயல்பாகப் பயன்படுத்துவதில்லை.
அவ்வாறு எழுதுவது தவறில்லை என்றே கருதுகிறேன்.
ஆழ்ந்த சிந்தனையுடன் சிறந்த கருத்தமைய அயற்சொல் நீக்கித் தொடர்ந்து எழுதப் பயிலுங்கள்.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Dec 02, 2010 10:14 pm

அனைவருக்கும் வணக்கம்
ஐயா அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள், தங்களை இங்கு கண்டு இறும்பூது எய்தினேன், இன்னும் பல்லாண்டு வாழ்ந்து செந்தமிழின் சீர்த்தியை வளர்க்க வேண்டுகிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nandhtiha

Sponsored content

PostSponsored content



Page 34 of 50 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 42 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக