புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
2 Posts - 1%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
2 Posts - 1%
சிவா
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
435 Posts - 47%
heezulia
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
30 Posts - 3%
prajai
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_m10மரபுப் பா பயிலரங்கம் - Page 21 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபுப் பா பயிலரங்கம்

Page 21 of 50 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 35 ... 50  Next

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :

  • எழுத்து

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.

அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.

உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.

எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.

குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.

புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.

எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.

இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.

அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 25, 2010 9:28 pm

நன்றி ஐயா,

மாற்றங்கள் கவனத்தில் கொண்டேன். தொடர்ந்துகவனிப்பேன்.

நிறையப்படிக்க இருக்கிறது. நல்ல சொற்றொடர்கள் பல நினைவுக்கு வர மறுக்கிறது. மனம் உல்லாசமாக இருந்தால் வருகிறது. மனதை சந்தோஷப்படுத்த என்ன இருக்கிறது இங்கே? நன்குசுவர்களும் ஒரே மோட்டார் வாகனங்களின் சத்தமும் கட்டடங்களும், மக்கள் நெரிசலும். இயற்கையை எங்காவது தொலை தூரத்தில் தேடிகண்டுபிடிக்கவேண்டும். மின்சாரக் குளியலில் நிலவே மறந்துபோய்விடுகிறது. எரிச்சலாகத்தான் இருக்கிறது

சிறுவயதில் ஈழத்தில் இயற்கையின் மடியில் தவழ்ந்தோம் அவைகள் கனவுகள். ம்...!

அடுத்தபாடத்துக்காக காத்திருக்கிறோம்
அன்புடன் கிரிகாசன்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Mon Jul 26, 2010 10:46 pm

18. வெளிமண்டிலம் – 1

நாம் அடுத்து பயிலவிருப்பது வெளிமண்டிலப் பாடல் வகையாகும்.

இப் பாடல்...

1. நான்கடி கொண்ட வெளிமண்டில வகையாகும்
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக
(ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.

எடுத்துக்காட்டு :

அலைபாய் வங்கக் கடலால் விளங்கும் - புதுச்சேரி
மலைபோல் கலைகள் மறையா திருக்கும் – புதுச்சேரி
நிலையாய் வளங்கள் நிறைந்து சிறக்கும் – புதுச்சேரி
குலையா ஒழுக்கம் கொண்டவர் வாழும் - புதுச்சேரி
- புதுவை அரங்க.நடராசனார்.

இப்பாடலில் தனிச்சொல்லாக நான்கு அடிகளின் இறுதியிலும் புதுச்சேரி அமைந்துள்ளதைக் காண்க. மற்ற சீர்கள் அனைத்தும் ஈரசைச்சீர்கள்.

இன்னொன்று :

இன்பத் தமிழில் ஏனோ அயற்சொல் - எண்ணிடுக!
அன்பர்க் களிக்கும் அடிசிலில் கல்லேன்? - எண்ணிடுக!
தென்பளி பாலில் தீநஞ் சிடுவதோ? - எண்ணிடுக!
என்புயிர் தோய்ந்த எந்தமிழ் அழிக்கவோ - எண்ணிடுக!

பிறிதொன்று :

செந்தமி ழினத்தினைச் சிங்களர் அழித்தனர் - எம்ஐயா!
முந்தியித் தாலியின் மூளிப் பேய்துணை - எம்ஐயா!
சொந்த இனங்கொலத் துணையருட் செல்வனும் - எம்ஐயா!
இந்த இழிவினர்க் கெங்ஙனம் உய்தியே – எம்ஐயா!

ஐயம் எதுவாயினும் தயங்காமல் கேளுங்கள்.
இனி, எழுதத் தொடங்குக. விருப்பமான கருத்தமைத்து வெளிமண்டிலம் எழுதுக!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 27, 2010 1:04 am

ஐயா ஒரு சந்தேகம்.
கீழ்காணும் பயிற்சிப் பாடலை எழுதிய பின்புதான் இது ஏற்பட்டது. இறுதிச் சொல் அடியின் தொடராக உள்ளது. அப்படி இருக்கலாமா? தாங்கள் குறிப்பிட்டது தனிச்சொல்லாக அமைய வேண்டுமென்ற விதியை இது மீறுகிறதா?

எங்கள் தமிழே உன்னை மெதுவாய்க் - கொல்லுகிறார்
தங்கக் கயிறே தூக்காய் மாட்டிக் - கொல்லுகிறார்
பொங்கும் அமுதில் போடும் நஞ்சாய்க் - கொல்லுகிறார்
எங்கும் பொய்யால் ஏய்த்தே மறைத்துக் - கொல்லுகிறார்

(இதை மாற்றினேன்)

எங்கள் தமிழே உன்னைப் பகைவர் - கொல்லுகிறார்
தங்கக் கயிற்றில் தூக்குச் செய்தார் - கொல்லுகிறார்
பொங்கும் அமுதில் போட்டார் நஞ்சே - கொல்லுகிறார்
எங்கும் பொய்யால் ஏய்த்தே மறைத்தார் - கொல்லுகிறார்

கொல்லும் வாளைக் கண்டும் அச்சம் - கொள்ளுவதோ
வெல்லும் எண்ணம் விளையா துயிலும் - கொள்ளுவதோ
கல்முட் பாதை கண்டே புறமும் - கொள்ளுவதோ
நில்லாய் என்றால் நினைவில் மாற்றம் - கொள்ளுவதோ

இன்னல் என்றால் இன்றே துணிவாய் - எழுந்துவிடு
மின்னல் வேகம் முழங்கும் இடியாய் - எழுந்துவிடு
இன்னும் கண்கள் இல்லா தவனா - எழுந்துவிடு
அன்றேல் பயணம் ஆவோர் வழிவிடு - எழுந்துவிடு

உள்ளம் மீதில் உணர்வே அன்னை - தமிழாகும்
அள்ளும் இன்பத் தேனும் அமுதாம் - தமிழாகும்
கள்ளும் வேம்பாய் காணும் இனிதோ - தமிழாகும்
தெள்ளுத் தமிழுக் கொன்றே நிகராம் - தமிழாகும்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Jul 27, 2010 9:29 am

காலை வணக்கம் அய்யா, தங்கள் உடல் நலன் காக்க!

என் முயற்சி . சரியாக உள்ளதா எனக்கூறுங்கள்.

முதற்சீரும் மூன்றாவது சீரும் மோனையில் அமையவேண்டும் என்ற கட்டாயம் இல்லைதானே? அமைந்தால் சிறப்பென்று தானே கூறியுள்ளீர். தயவுசெய்து விளக்கவும்

ஓடியே சிறுவர் விளையாடி மகிழ்வர் - களித்து
பாடியே பெண்கள் அரங்கில் மகிழ்வர் - களித்து
கூடியே புலவர் பண்ணொடு மகிழ்வர் - களித்து
நாடியே காதலர் அன்பில் மகிழ்வர் - களித்து

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Jul 28, 2010 4:31 pm

கிரி,
ஒவ்வொரு அடியிலும் ஒரு செய்தியைக் கூறித் தனிச்சொல்லொடு தொடர்பு படுத்தலாம்.
ஓரடியின் கருத்தோடு தொடர்பாக அடுத்த அடிக் கருத்தும் வரலாம் – தனிச்சொல் மட்டும் தனியாக வரும்.
கீழ்க்காணும் இரண்டு பாடல்களையும் காண்க :

ஆவா! என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் – ஒருசாரார்;
கூகூ! என்றே கூவிளி கொண்டார் – ஒருசாரார்;
மாமா! என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்;
ஏகிர் நாகீர்! என்செய்தும் என்றார் – ஒருசாரார்.

ஏதங்கள் நீங்க எழிலிளம் பிண்டிக்கீழ் – புறாவே!
வேதங்கள் நான்கும் விரித்தான் விரைமலர்மேல் – புறாவே!
பாதம் பணிந்து பரவுதும் பல்காலும் – புறாவே!

(மேற்கண்ட பாடல்கள் நாம் இப்போது எழுதும் வகையின அல்ல. உங்கள் ஐயம் தீர்க்க இவற்றை எடுத்துக்காட்டினேன்)

ஓர் அடியில் கருத்தைக்கூறி அதன் தொடர்பான தனிச்சொல்லை இறுதியில் அமைக்கலாம். இப்படி...

உள்ளத் துறையும் உணர்வே நீதான் – தமிழன்னாய்!
அள்ளும் இன்பத் தேனமு தானாய் – தமிழன்னாய்!
கள்ளும் வேம்பாய்க் காணும் இனிதிலை – தமிழன்னாய்!
தெள்ளு தமிழே! நின்னிகர் நீயே! – தமிழன்னாய்!

ஓர்அடியின் கருத்து அடுத்த அடியிலும் தொடர்வது போலவும், தனிச்சொல் தனியாக வருவது போலவும் அமைக்கலாம். இப்படி...

எங்கள் தமிழே உன்னைப் பகைவர் – என்சொல்வேன்?
தங்கக் கயிற்றில் தூக்கிடத் துணிந்தார் – என்சொல்வேன்?
பொங்கும் அமுதில் போட்டார் நஞ்சே – என்சொல்வேன்?
எங்கும் உன்றன் ஏற்றம் மறைத்தார் – என்சொல்வேன்?

இவ்வாறாகப் பாடல்கள் அமைதல் சிறப்பு.

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Wed Jul 28, 2010 4:54 pm

Yaadhumanaval wrote:காலை வணக்கம் அய்யா, தங்கள் உடல் நலன் காக்க!

என் முயற்சி . சரியாக உள்ளதா எனக்கூறுங்கள்.

முதற்சீரும் மூன்றாவது சீரும் மோனையில் அமையவேண்டும் என்ற கட்டாயம் இல்லைதானே? அமைந்தால் சிறப்பென்று தானே கூறியுள்ளீர். தயவுசெய்து விளக்கவும்

ஓடியே சிறுவர் ஆடி மகிழ்வர் - களித்து
பாடியே பெண்கள் அரங்கில் மகிழ்வர் - களித்து
கூடியே புலவர் குலாவி மகிழ்வர் - களித்து
நாடியே காதலர் அன்பில் மகிழ்வர் - களித்து

அன்புடன்
யாதுமானவள்
முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைதல் சிறப்பு. பாடலுக்கு மதிப்பு. அவ்வாறு அமையாத பாடல் பிழை என்றாகாது. நீங்கள் எழுதியுள்ள பாடல் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu Jul 29, 2010 5:42 am

வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

இன்ன்று இனோர் முயற்சி செய்துள்ளேன் மூன்றாம் சீரில் மோனையமைத்து. சரியாக உளதா என கூறுங்கள்.

இருவரி பாடலில் ஈடிலா அதிசயம் - திருக்குறள்
விருப்புடன் படித்திட விவரங்கள் பொதிந்தது - திருக்குறள்
கருத்துடன் படிப்பவர் கருத்தினை நிறைத்திடும் - திருக்குறள்
இருப்பவை அனைத்தையும் இருப்பினில் கொண்டது - திருக்குறள்

அன்புடன்
யாதுமானவள்

avatar
தமிழநம்பி
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009

Postதமிழநம்பி Thu Jul 29, 2010 8:06 am

Yaadhumanaval wrote:வணக்கம் அய்யா, தங்கள் நலன் காக்க!

இன்ன்று இனோர் முயற்சி செய்துள்ளேன் மூன்றாம் சீரில் மோனையமைத்து. சரியாக உளதா என கூறுங்கள்.

இருவரிப் பாடலில் ஈடிலாப் புதுமை - திருக்குறள்
விருப்புடன் படித்திட விளக்கம் பொதிந்தது - திருக்குறள்
கருத்துடன் படிப்பவர் களிமகிழ் வெய்திடும் - திருக்குறள்
இருப்பவை அனைத்தையும் இருப்பினில் கொண்டது - திருக்குறள்

அன்புடன்
யாதுமானவள்
அருமை! இயன்றவரை அயற்சொல் நீக்கி எழுதுங்கள்; மறைமலை அடிகள், பாவாணர், வ.சுப.மா., பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாரதியார், எழுத்தாளர் நா.பா. போன்றோர் வலியுறுத்தும் அறிவுரையைப் பின்பற்றுவோம். தொடர்ந்து எழுதுக.

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jul 30, 2010 8:17 am

அன்பு வணக்கங்கள் ஏற்பீர்:

இன்றைய முயற்சி:

கூறுமிக ஒழுக்க குலமதில் உதித்தனர் - தமிழர்
பேருமிகப் பெற்று பெருத்து வாழ்ந்தனர் - தமிழர்
வேறுவேறு தொழில்கள் விரும்பி செய்தனர் - தமிழர்
ஊருலகம் போற்ற உயர்ந்து வாழ்ந்தனர் - தமிழர்

அன்புடன்
யாதுமானவள்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Jul 30, 2010 8:46 am

இன்னொரு முயற்சி:

கண்ணீர் துடைக்கக் கைவிரல் கொடுப்பது - நட்பு

எண்ணம் சிறக்க எண்ணச் செய்வது - நட்பு

பண்புக ளெல்லாம் பகிர்ந்து கொள்வது - நட்பு

கண்ணிய உறவினைக் கருத்தினில் ஏற்பது - நட்பு

அன்புடன்

யாதுமானவள்

Sponsored content

PostSponsored content

Page 21 of 50 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 35 ... 50  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக