புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
426 Posts - 48%
heezulia
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
29 Posts - 3%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா


   
   

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 12:51 am

First topic message reminder :

"ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது!" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.

என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.

"நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். "இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். "அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்" என்று நான் கேட்டேன். "கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். "போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்" என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்? பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன்.

ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.

காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு.

"விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே" என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் 'பிகு'வை விட்டுவிடலாமா? "சேச்சே! நான் அதை மறந்தே விட்டேனப்பா! வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, "எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா!" என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், "சரி போவோமா! கோயிலுக்கா, ஆற்றோரமா?" என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை. அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. 'சரி! ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது! என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.

ராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் "அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. "ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை! பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்" என்றான். "சரி! சொல். இப்போது ராதா எங்கே? அடுத்த வீட்டில் தானே?" என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "நீ அவளைக் காதலிக்கிறாயா?" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு "என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை! காதலாம் காதல்" என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, "நண்பா! நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்" என்றான் சோகக் குரலில்.

என் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வளவு துயரச் செய்தியைக் கூறினாலும், 'சகஜம்' என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார்? எங்கே இருக்கிறாள்? என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. "என்னடா இது, விளையாடுகிறாயா? ராதா, கலியாணமானவளா? எதையோ மறைக்கிறாயே! என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது?" என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.

நாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். "சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு..." என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, "ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உனக்குத் தங்கை ஏது?" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, "நாகு! என்னடா இது, விடுகதை பேசுகிறாய்! உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை! விபரீதமாகவும் இருக்கிறதே! என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்" என்று கேட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:19 am

ஆனால், ஒரு திருத்தம் செய்தாள். "அம்மா! நீ எவ்வளவு நல்லவர்களிடம் சொல்லி அனுப்பினாலும், அவர்கள் ஒன்றுக்கு இரண்டாக்கித்தான் சொல்லிவிடுவார்கள். அதனால், காரியம் கெட்டுவிடக்கூடுமே. எதற்கும் விஷயம் முக்கியமானதாக இருப்பதால், குழந்தையின் நன்மையை உத்தேசித்து, நீயே சென்று தங்கத்திடம் சகல விஷயத்தையும் கூறினால், பலன் இருக்கும். இல்லையானால் கெட்டுவிடும்" என்று சொன்னாள். யோசித்துப் பார்த்ததில் அவள் யோசனை சரியென்றே எனக்குப் பட்டது. உன் பொருட்டு நான் அந்தத் தங்கத்திடம் சென்று வருவது என்று துணிந்தேன். என் வாழ்வைக் கெடுத்தவள் தான் தங்கம். இருந்தாலும், உன் வாழ்வு கெடாதபடி தடுக்கும் சக்தி அவளுக்கு இருந்தது. அதற்காக அவளை அடுப்பது என்று துணிந்தேன். சென்றேன். துளிகூட என்னை அவள் எதிர்பார்க்கவில்லை அல்லவா! திடுக்கிட்டுப் போனாள், ஒரு விநாடி. மறுவிநாடியே சமாளித்துக் கொண்டு, "வா அக்கா!" என்று வாய் குளிர அழைத்தாள்; அவள் தான் அந்த வித்தையிலே கைதேர்ந்தவளாயிற்றே. கொஞ்ச நேரம் பேசவே இல்லை நான். பிறகு சர்வ சாதாரணமான விஷயங்களைப் பேசினோம். "என் மீது உனக்குக் கோபம் இருப்பது சகஜம் அக்கா.

ஆனால், நான் வேண்டுமென்றே உனக்கு ஒரு கெடுதியும் செய்ததில்லை, நீ அதை நம்பமாட்டாய்" என்று உபசார வார்த்தை பேசினாள். நான் பதில் கூறவில்லை. என்ன கூற முடியும்? அவள் பசப்புகிறாள். எனக்கு அது பழக்கமில்லை. "அக்கா குழந்தையை வந்து பார்க்கவேண்டுமென்று கொள்ளை ஆசை எனக்கு. வரலாம் என்று பலதடவை புறப்பட்டேன். வந்தால், என்னுடன் நீ முகங்கொடுத்துப் பேசுவாயோ மாட்டாயோ, குழந்தையைத் தொடக்கூடாது என்று கூறி விடுவாயோ என்று எண்ணினேன். அத்தானை மட்டும் அடிக்கடி கேட்பேன், குழந்தை எப்படி இருக்கிறானென்று" என்றாள். அத்தானைக் கேட்பாளாம்! அத்தான் என்ன பதில் கூறி இருக்க முடியும். உன்னைத்தான் அவர் கையிலே எடுத்ததே இல்லையே! சரி என்னவோ சாகசம் பேசுகிறாள். பேசட்டும் என்று நான் எதற்கும் பதிலே கூறாமல் இருந்துவிட்டேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நான் மெள்ள விஷயத்தை ஆரம்பித்தேன். "தங்கம்! உன்னிடம் அவர் பிரியமாக நடந்துகொள்கிறாரா?" என்று கேட்டேன். அவள் பதில் கூறவில்லை. முகத்தில் தோன்றிய புன்னகை பதில் அளித்தது. "அக்கா அவர் உன்னைக் கொடுமைப் படுத்துவதற்கு நானல்ல காரணம். இது சத்யம்; நீ நம்பமாட்டாய். கூடப் பிறந்தவளைக் கொடுமைக்கு ஆளாக்கவேண்டுமென்று எந்தக் கல்நெஞ்சக்காரியும் எண்ணமாட்டாள். ஆனால், நான் என்ன சொன்னாலும் உனக்கு நம்பிக்கை ஏற்படாது" என்று தங்கம், சமயத்தை நழுவவிடாமல் தன் கட்சியைப் பேசலானாள். நான் இடைமறித்து, "என் சுகதுக்கம் என்னோடு இருக்கட்டும் தங்கம்; யாரால் எனக்கு இந்தக் கதி வந்தது என்பதைப்பற்றிய ஆராய்ச்சியை மறந்து கூட நெடுநாளாகிவிட்டது. என்னவோ என் கதி அதுபோலாகிவிட்டது. நான் அதைப்பற்றிக் கவலைப்படுவது கூடக் கிடையாது" என்று கூறினேன். என் பேச்சிலே காணப்பட்ட சோகத்தை அவள் நன்றாகத் தெரிந்துகொண்டு கொஞ்ச நேரம் அசைவற்று இருந்தாள். பிறகு, நான் மெதுவாக விஷயத்தின் முக்கிய பகுதிக்குள் புகுந்தேன்.

"தங்கம்! ஆண்களின் சுபாவம் ஒரு நிலையானதல்ல. உன் அத்தான் என்னிடம் காட்டிய ஆசையைக் கண்டவர்கள், அவர் என்னை இப்படிக் கைவிடுவார் என்று கனவிலும் கருதியிருக்க முடியாது. அதுபோலவே உன்னிடம் அவர் வைத்திருக்கும் அன்பு எப்போதும் நிலைத்து இருக்கும் என்று எண்ணிவிடாதே" என்றேன். பாவம்! அவள் என்ன பதில் கூறுவாள் அதற்கு. நான் வேண்டுமென்று வலுச்சண்டைக்கு வந்திருக்கிறேன் என்றுகூட எண்ணிக்கொண்டிருந்திருப்பாள். "அது சரி அக்கா! இந்த ஆண்களே இப்படித்தான்" என்று பொதுவாகப் பேசினாள். அவள் முகத்திலே இலேசாகப் பயம் தட்டியிருந்ததைக் கண்டேன். சரி என்று மேற்கொண்டு பேச ஆரம்பித்தேன்.

"எதற்காகக் கூறுகிறேனென்றால், தங்கம்! அவரை நீ என்னைவிட்டுப் பிரித்து, உன்னிடம் சேர்த்துக் கொண்டாய், அந்தக் காரியத்தை வேறே ஒருத்தி இப்போது செய்யக் கிளம்பிவிட்டாள். திகைத்து என்னடி பயன்! ஆண் மனம் அப்படிப்பட்டதுதான். என்னிடம் கொஞ்சிக் குலாவுகிறாரே அவர் ஏன் வேறோர் மாதைத் தேடப்போகிறார் என்று சொல்லுவாய், பைத்தியம்! உன்னை அவர் விரும்பியதற்கு ஒரு காரணம் இருக்கும். உன் அழகிலே மயங்கினதுபோல இன்னொருத்தியின் பாட்டிலேயோ நாட்டியத்திலேயோ மயங்கி இருக்கக்கூடும்" என்றேன். "அக்கா! நீ பேசுவது எனக்குப் புரியவில்லையே" என்றாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:20 am

"இது புரியவில்லையா உனக்கு. உன் அத்தானுக்குச் சிந்தாமணி என்றொருத்தி சொக்குப்பொடி போட்டு வருகிறாள். சதா சர்வகாலமும் சிந்தாமணி ஸ்மரணைதான். அவளைப்பற்றிக் கூற ஒரு தூதன் இருக்கிறான். அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறார் இவர். அவளிடம் அவர் கொண்டுள்ள மோகத்தின் அளவு சொல்லுந்தரத்ததல்ல. அவளிடம் அவர் தஞ்சமடையத் தயாராகிவிட்டார். அப்படி நேரிட்டுவிட்டால், பிறகு உன் கதியும் என் கதியேதான். குடும்பம் பாழாகும் - சொத்து அழியும் - பிறகு நாமெல்லாம் பராரிகளாகவேண்டும், அல்லது அந்தச் சிந்தாமணிக்குப் பணிவிடை செய்துகொண்டு உயிர் வாழவேண்டும். இந்த ஆபத்துத் தலைமீது இருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், பிறகு குடும்பமே நாசமாகும் என்பதைக் கூறிப்போகவே வந்தேன். எனக்கு அந்தச் செல்வாக்கு இல்லை. உனக்காவது அவரைத் திருத்தும் செல்வாக்கு இருக்குமென்று நம்பி வந்தேன். நாம் கெட்டு விடுவதோடு முடியாது. நாளைக்கு உனக்கு ஒரு குழந்தை பிறந்தால், அதுவும் நடுத்தெருவிலே நிற்கவேண்டியதுதான். அந்த விதமான கதி வரக்கூடாதே என்பதற்காகத்தான் நான் எச்சரிக்கை செய்து போக வந்தேன். அவளிடம் ஒரேயடியாக அவர் தஞ்சமடைவதற்குள், தடுத்துவிடு; இல்லையானால்" என்று சொன்ன உடனே தங்கம் - மேலும் பயந்தாள். "யாரக்கா அந்தச் சிந்தாமணி? எப்படி இருப்பாள்? எந்த ஊர்? என்ன வயது? எப்படி இவருக்குத் தெரிந்தாள்?" என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் போட்டாள். "எனக்கென்ன தெரியும், அவளைப்பற்றி.

அந்தப் பாவியுடன் பேசிக்கொண்டிருந்தார். அதைக் கேட்டேன். அவ்வளவுதான். அவர் அவளைப் பற்றிப் பேசும்போது உருகுவதைக் கண்டு, நானாக யூகித்துக் கொண்டேன், அவள் யாரோ பலே கைகாரியாக இருக்கவேண்டுமென்று. அவளை நான் பார்த்ததில்லை" என்றேன். "என்னக்கா செய்வது இதற்கு? எப்படித் தடுப்பது?" என்று தங்கம் என்னையே யோசனை கேட்கலானாள். "பயப்படாமல் அவரைக் கேள், எனக்கும் துரோகம் செய்யாதே. ஒருத்தியைக் கெடுத்தது போதும், அவள் பொறுத்துக் கொண்டாள். நான் அவ்விதம் இருக்கமாட்டேன். ஊரறியக் கூறி உம்முடைய மானத்தை வாங்கிவிடுவேன். ஒன்றுக்கு இரண்டு இருக்கிறது; மூன்றாவது தேடப்போகிறார், இதுதான் யோக்கியதையா? ஊரிலே பெரிய மனிதர் என்ற பெயர் இந்த லட்சணத்தில்! என்று கண்டித்துக் கேளேன். என்ன பயம்" என்று யோசனை கூறினேன். "கேட்கலாம் அக்கா. இன்னும் இதைவிடக் காரமாகவும் கோபமாகவுங்கூடக் கேட்கலாம்; ஆனால் பலிக்கவேண்டுமே" என்றாள்.

"தங்கம், நீயாக யோசனை செய்! என்ன திட்டம் போடுவாயோ தெரியாது. எப்படியாவது இந்த ஆபத்து ஏற்படாதபடி தடுத்தாகவேண்டும். அடி அம்மா! என் பொருட்டு அல்ல இவ்வளவும், நான் ஒரு குழந்தை வைத்திருக்கிறேன். அதன் நன்மைக்காகத்தான் நான் வெட்கத்தை விட்டு உன்னிடம் வந்து குறையைக் கூறினேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். தங்கத்தின் கண்களிலும் நீர் ததும்பிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:22 am

எந்தத் தங்கத்தால் என் வாழ்வு சீர்குலைக்கப்பட்டதோ அவளிடமே சென்று குறையைக் குறி உதவி கோரினேன். அவள் இதனால் கர்வம் கொண்டாலும் சரி, மேலும் என்னைக் கொடுமைக்காளாக்கினாலும் சரி என்று துணிந்தே இதைச் செய்தேன். ஆனால் நான், சிந்தாமணி விஷயமாகக் கூறியதும் தங்கம் என்னைவிட அதிகமாகத் திகிலடைந்தாள் என்பது அவள் பேச்சிலேயே நன்கு தெரிந்தது. கண்களில் நீர் ததும்ப அவள் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அவள் மனதிலே என்னென்ன எண்ணினாளோ? ஏறக்குறைய என் நிலைக்கு அவள் வந்து கொண்டிருந்தாள். தங்கமும் ரங்கமாகித்தானே தீர வேண்டும், புதியவள் வந்து சேர்ந்தால்! தங்கம், ரங்கம் என்று தனிப்பட்ட பெயர்களைக்கூடத் தள்ளிவிடு தம்பி! பொதுவாகவே பெண்களுக்கு நிலைமை இதுதானே. ஒரு நாள் ராதா, ரங்கோனில் யாரோ ஒரு புலவர் எழுதிய பாட்டைப் படித்துக் கொண்டிருந்தாள். "என்னடி எழுதியிருக்கு அதிலே? அவ்வளவு சுவாரஸ்யமாகப் படிக்கிறாய்" என்று கேட்டேன். "பெண்களின் முகத்தைச் சந்திரபிம்பம் என்று வர்ணிக்கிறார்களே அதைப்பற்றி ஒரு புலவர் அழகாக எழுதி இருக்கிறார்" என்றாள். "இதிலே என்ன புது அதிசயம் கண்டுவிட்டாயடி; நாம் கூடத்தான் சின்னக் குழந்தைகளை ஏதேதோ சொல்லிக் கொஞ்சுகிறோம். நமக்கு ஏதெது கிடைக்கவேண்டுமென்று எண்ணுகிறோமோ, எவை எவை விலையுயர்ந்தவை, மதிக்கத்தக்கவை என்று எண்ணுகிறோமோ அந்தப் பொருளின் பெயரை வைத்துக் குழந்தையைக் கூப்பிட்டுக் கொஞ்சுகிறோம். இது போலவே, பெண்களைப் பல காலமாகப் புகழ்ந்து வருகிறார்கள்" என்றேன். "அம்மா! நீ சொல்வதுதான் உண்மை. ஆனால் இதைப் படிக்கும்போது எனக்கு வேறோர் விஷயம் புலப்பட்டது.

முகம் சந்திரபிம்பம் என்கிறார்களே அது சரியோ, தவறோ? பெண்களின் வாழ்வு சந்திரன் போலத்தான் இருக்கிறது. இருண்ட இடத்துக்கு ஒளி, வெப்பம் நீக்கும் குளிர்ச்சி, பார்க்க ஆனந்தம், இவ்வளவும் நிலவும் தருகிறது; நாமும் தருகிறோம். ஆகையால் பெண்களின் முகத்துக்கு நிலாவை ஈடாகக் கூறுவதைவிட, பெண்களுக்கே நிலவை உவமை கூறலாம்" என்றாள். "ஆமாடி அம்மா! நிலவுக்கு இருப்பது போலத்தான் நமது வாழ்விலும் தேய்பிறையும் வளர்பிறையும் இருக்கிறது" என்று சொல்லிவிட்டு நான் வேதனையை மறைத்துக் கொள்வதற்காகச் சிரித்தேன். "அம்மா! அதை நான் அறியாமல் இல்லை. வளர்பிறை தேய்பிறை சந்திரனுக்கு இருப்பதுபோலத்தான் வனிதையர் வாழ்விலும் இருக்கிறது. வளர்பிறை, பூலோகத்துக்கு மகிழ்ச்சி தருகிறது. முழு நிலவு காண எவ்வளவோ ஆனந்தமாக இருக்கிறது. அதன் அழகிலே சொக்காதவர்கள் கிடையாது. கவி பாடுகிறான் களிப்புடன்.

பாமரருக்கும் ஏதோ ஓர் வகையான களிப்பு. நிலாக்காலம் - முழுநிலவு நாள் - இவைகளையே பல கதைகளிலே அழகாகத் தீட்டுகிறார்கள். அது போலத்தானம்மா, பெண்களின் வாழ்விலும் முழுத் திருப்தியும் மகிழ்ச்சியும் நிரம்பி, ஒளி வீசினால், அதனால் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆடவர் உலகுக்கும் நன்மைதான் ஏற்படும். தேய்பிறையின் போது தெருவும் வீடும் சாலையும் இருண்டு விடுகின்றன. மக்கள் பாழாய்ப்போன இருட்டுக்குப் பயந்து வீட்டோ டு இருப்பார்கள். அருவருப்பு, பயம் இவைகளால் பீடிக்கப்படுகிறார்கள். முன் இருட்டு, பின் இருட்டு, முழு இருட்டு, மை இருட்டு என்று விதவிதமாகப் பிரித்துக் காட்டி வருத்தப்படுகிறார்கள். வெளியிலே உல்லாசமாக உலவவோ ஒளி இல்லை - வீட்டுக்குள்ளே இருந்தாலோ நிம்மதி இல்லை; இருட்டுக் காலமே கள்ளருக்கு வேலை மிகுதியான நாள். ஆகவே, வீட்டிலே உறக்க முற்றுக் கிடப்பர். இவ்வளவும் நிலவு இல்லாததால் வரும் கேடு. அதுபோலவே, பெண்ணின் வாழ்வு இருண்டு கிடந்தால், கஷ்டம் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆடவருக்குத்தான்" என்றாள் என் மகள். "ராதா! நீ சொல்வது சரி. ஆனால், பெண்களின் வாழ்வு ஏன் இப்படி வளர்பிறை தேய்பிறையாகவே இருக்கிறது? இதற்கு ஒரு மாற்றம் கிடையாதா? தேய்வது, வளர்வது மீண்டும் தேய்வது அடியோடு இருண்டுபோவது, முழு அழகுடன் பிரகாசிப்பது என்றுள்ள இந்த முறை மாறக்கூடாதா? இதன் காரணத்தை அந்தப் புலவர் ஏதாவது கூறியிருக்கிறாரா?" என்று கேட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:22 am

"அவர் ஏனம்மா அதைக் கூறப்போகிறார்? முகம் சந்திரபிம்பம் என்று ஆரம்பித்தவர், பாட்டின் நாலாவது அடி வருவதற்குள், கைலாயத்துக்கு அல்லவா போய்விட்டார்! நிலவின் அழகைக் கண்டு மயங்காதவர் இல்லை. மன்மதனையே சுட்டெரித்த சிவபெருமானே நிலவின் அழகிலே இலயித்து, பிறைச் சந்திரனைத் தமது ஜடையிலே சூட்டிக் கொண்டாரென்றால், நிலவின் அழகை விளக்கவும் வேண்டுமோ என்று அவர் ரொம்ப உயரம் போய்விட்டாரே! எப்படி அவர் பெண்ணினத்தின் வாழ்வு நிலவு போல் இருக்கிறது என்பது பற்றியோ, குறித்தோ எழுதப் போகிறார்? சொல்லப்போனால், அம்மா! அவர் நிலவைப்பற்றிக் கூற ஆரம்பித்த நோக்கமே அதே சாக்காகச் சிவபெருமானைப் பற்றிப் பாடலாம் என்றுதான் எனக்குத் தெரிகிறது. புலவர்கள் மிக உயரமாக அல்லவா போகிறார்கள். தங்கள் காலடியில் காணப்படும் எந்த விஷயம் தான் அவர்களின் கண்ணுக்குத் தெரிகிறது" என்று கேட்டாள். ராதாவுக்கு, தம்பி தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதென்றால் ரொம்பப் பிரியம். அதே போது, புலவர்கள் எதை எதையோ எழுதுகிறார்களே யொழிய, வாழ்க்கையிலே காணப்படும் விஷயங்களை மறந்து விடுகிறார்களே என்று கோபிப்பாள். "போகட்டும் ராதா! புலவர் கைலாயமோ வைகுந்தமோ போகட்டும். நீதான் சொல்லு, ஏன் பெண்களின் வாழ்வு இப்படி வளர்பிறை தேய்பிறையாக இருக்கிறது?" என்று நான் கேட்டேன். "அம்மா! நிலவுபோல இருக்கிறது நமது வாழ்வு என்றேனே, அதிலேயே சகல விளக்கமும் இருக்கிறதே! நிலவு தன்னாலே பிரகாசிப்பதில்லையே! சூரியனிடம் வெளிச்சத்தைக் கடன் வாங்கித்தானே பிரகாசிக்கிறது.

கடன்பட்டு வாழ்பவர்கள் வளர்வதும் தேய்வதுமாகத் தானே இருக்க முடியும்? இரவில் வெளிச்சம், எப்போதும் ஒரே விதமாக இருக்க முடியாதே! பெண்களின் வாழ்வு ஆடவரால் தானே அமைக்கப்படுகிறது? அவர்களாகத் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் சௌகரியம், சக்தி, உரிமை இருந்தாலல்லவா, ஏன் தேய வேண்டும், ஏன் குன்ற வேண்டும், என்றும் ஒரே அளவு களிப்புடன் இருக்கும்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமே என்ற எண்ணம் ஏற்படும். எண்ணம் பலிக்கவும் வழி பிறக்கும். நிலவுக்கென்று தனி ஒளி இல்லை. அதுபோலவே நமக்கென்று தனி வாழ்வு இல்லை. அண்ணன், அப்பா, புருஷன், மகன், பேரன் என்று இப்படித் தானே இரவல் வெளிச்சத்தில் வாழவேண்டி இருக்கிறது; ஆடவரிடமிருந்து நாம் வாழ்வுக்கு ஒளி தேடுகிறோம். எனவே அவர்கள் இஷ்டப்பட்டு எந்தெந்தச் சமயத்தில் எந்தெந்த அளவு வெளிச்சம் தருகிறார்களோ அந்த அளவுக்குத்தான் நாம் பிரகாசிக்க முடிகிறது. நமது எதிர்வீட்டுக்காரர், மேயர் ஆனாரல்லவா? அதுவரையில் அவர் தமது மனைவியை, வீட்டுக்குள்ளேயேதான் வைத்திருந்தார். மேயரான பிறகு, அவர் விருந்து வைபவம் எதற்காவது போனால் மனைவியுடன் வரவேண்டும், அதுதான் முறை, நாகரிகம் என்று தெரிந்தது. உடனே அவர் தம் மனைவிக்குக் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தந்தார் - அம்மா இப்போது, பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குத் தலைமை வகிக்கிறார்கள் - பிள்ளைகளுக்குப் பரிசளிக்கிறார்கள் - எங்கோ ஓர் கல்நாட்டு விழாக்கூடச் செய்தார்கள். இந்த 'வெளிச்சம்' சொந்தமல்லவே! அவர் கொடுத்த 'இரவல்'. எவ்வளவு காலத்துக்குப் பயன்படும்! உரியவர் கேட்டுப் பெற்றுக் கொள்ளக் கூடுமல்லவா? எங்கள் பள்ளிக்கூடத்திலே ஒரு வேடிக்கை நடந்ததம்மா போன வாரம். மீனா ஒரு 'ப்ரோச்' போட்டுக் கொண்டு வந்தாள். வாத்தியாரம்மா அதிகக் கஷ்டமான கணக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், கொஞ்சம் கோபத்துடன்.

ஏனெனில் கணக்கு மிகச் சுலபம் என்று கூறி எங்களை எல்லாம் திட்டிவிட்டு, அவர்கள் அதைப் போட்டுக் காட்ட ஆரம்பித்தார்கள். மூன்று தடவை கணக்கு தவறாகவே முடிந்தது. நாலாவது முறை கோபத்துடன் அந்தக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று மீனாவைப் பார்த்துவிட்டு, கணக்கையும் நிறுத்திக்கொண்டு, அவளை அருகே அழைத்து 'ப்ரோச்'சை ஆசையுடன் பார்த்து, "ரொம்ப அழகாக இருக்கு மீனா" என்று புகழ்ந்தார்கள். மீனா பெருமையடைந்தாள். இதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் கமலா. மறுநாளே 'ப்ரோச்' கமலாவுக்குப் போய்ச் சேர்ந்தது. மீனாவின் முகம் வாடி விட்டது. கமலாவின் தங்கை காந்தா மீனாவுக்கு இரவல் கொடுத்தது அந்த 'ப்ரோச்'. இரவல் பொருள் எவ்வளவு அழகாக இருந்தால் என்ன? அதுபோல் இருக்கிறது பெண்ணின் வாழ்வு. நிலவுக்கு ஒளிதரும் சூரியன் இயற்கை நியதிப்படி, அளவும் காலமுமறிந்து ஒளி தருகிறான். பெண்ணுக்கு வாழ்வு அமைக்கும் ஆடவனோ எந்த நீதிக்கும் கட்டுப்பட்டவனல்ல. அவன் இஷ்டம்! இது மாறவேண்டுமானால், பெண்களுக்குத் தங்கள் வாழ்வைத் தாங்களே அமைத்துக்கொள்ளக்கூடிய திறமை, வசதி, உரிமை ஏற்படவேண்டும். சுலபத்தில் ஏற்படக் கூடியதா" என்று ராதா சொன்னாள். அவள் சொன்னது அவ்வளவும் உண்மைதானே. உன் அப்பா எனக்கு மகிழ்ச்சியும் பிறக்கச் செய்தார். அவரே அதனை மங்கவும் செய்தார். பௌர்ணமி அமாவாசை இரண்டும் ஏற்பட்டுவிட்டது என் வாழ்வில். தங்கம் மட்டும் எப்படித் தப்புவாள்? ராதா சொன்னது போல் அவளும் நிலவுதானே! சொந்தத்தில் வாழ்வு ஏது? இரவல் பிழைப்புத்தானே! அதற்குச் சிந்தாமணியால் சீரழிவு வருமா என்று எண்ணி அவள் யோசித்ததிலே ஆச்சரியமில்லை. உண்மையிலேயே தங்கம் திகைத்துத்தான் போனாள். தேம்பி அழவில்லை என் எதிரில். ஆனால் வந்துவிட்ட பிறகு நிச்சயம் அழுதுதான் இருப்பாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:23 am

தங்கத்திடம் நான் கொண்டிருந்த கோபம் கூடக் கொஞ்சம் குறைந்தது. பாவம்! அவள் மட்டும் என்ன சுகப்பட்டாள்! எப்படிச் சுகம் கிடைக்கும் என்று எண்ணிப் பரிதாபப்பட்டேன். அதுகூட வேடிக்கையல்ல தம்பி! சிந்தாமணியின் மீது இருந்த சீற்றம்கூட எனக்குக் குறையலாயிற்று. நானே எண்ணிப் பார்த்தேன். நாம் அவளைத் திட்டுகிறோம், சபிக்கிறோம்; வாழ்வைக் குலைக்க வந்தாளே சண்டாளி என்கிறோம். எல்லாம் சரி. ஆனால் பாவம், அவள் மீது மட்டுமா குற்றம்? அவர் அவளிடம் என்னென்ன பசப்பினாரோ, என்னென்ன ஆசை வார்த்தைகள் சொன்னாரோ, யார் கண்டார்கள்? அவளை எப்படி எப்படியோ சொல்லி நம்ப வைத்ததாலேதானே, அவள் இரண்டு மனைவிமார் இருந்தாலும் பரவாயில்லை, நாம் அவருடைய ஆதரவைப் பெறலாம் என்று எண்ண முடிந்தது. ஆண்கள் இந்த வித்தையிலே தேர்ச்சி பெற்றவர்களாயிற்றே. "உனக்கு ஒரு குறைவும் வராது" என்ற பேச்சு அவர்களிடம் கிளம்பாத நேரம் ஏது! உன் அப்பாவாவது பணத்தாசை பிடித்தவர். பரமசாது போல நாணயஸ்தர் போல வெளிவேஷம் போட்டுக் கொண்டு ஊரை ஏய்த்தவர்.

அவருடைய சொல்லைக் கூடத் தள்ளிவிடு. ராதாதான் சொன்னாள் தசரத சக்ரவர்த்தி எவ்வளவு பெரியவர்! கடவுளுக்கே தகப்பனார் ஆகக்கூடிய யோக்யதை அவருக்கு இருக்கத்தானே கதை எழுதினார்கள். அப்படிப்பட்டவர் பெண்கள் விஷயத்திலே எப்படி நடந்து கொண்டார். கௌசலை, சுமத்திரை ஆகியவர்களிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தவர், கைகேயி வேண்டும் என்று கிளம்பினாரே; நியாயமா? ராதா எனக்கு முழு உண்மையும் சொன்னாள், ஏதோ ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தைப் படித்துவிட்டு. கிழவராம் தசரதர், ஏற்கெனவே இரண்டு மனைவிகளாம். கைகேயி நல்ல பருவம், நல்ல அழகு; அவளும் ஒரு ராஜகுமாரிதான். அவளைத் தனக்குக் கலியாணம் செய்துதரச் சொன்னாராம், கிழவர். கைகேயின் தகப்பனார், தங்களுக்குத்தான் இரண்டு தேவிமார்கள் இருக்கிறார்களே, மூத்த மனைவி தானே பட்டமகிஷி; அவளுக்குப் பிறக்கும் மகனுக்குத்தானே பட்டம். என் மகளை உமக்குக் கொடுத்தால் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கு என்ன நிலை இருக்க முடியும்? வேண்டாம் இந்தக் கலியாணம். கைகேயியைப் பட்டமகிஷியாக்கிக் கொள்ளக்கூடிய, மணமாகாத மன்னருக்குத் தருவேன்.

அவளுடைய மைந்தன் மகுடம் பூண்டு அரசனாக வேண்டும் என்பது என் ஆசை என்றானாம். இந்தக் கிழ ராஜா கைகேயிக்குப் பிறக்கும் பிள்ளைக்கே அயோத்யா ராஜ்யம் கிடைக்கச் செய்கிறேன் என்று கூறிச் சத்யமே செய்து விட்டாராம். பார் தம்பி! சமயத்திற்கு ஏற்றபடி நடக்கும் தந்திரத்தை. கைகேயி அதே எண்ணத்தோடுதானே இருந்திருப்பாள். பிறகு மூத்த மகனுக்குத்தானே பட்டம் என்று அதே ராஜா சட்டம் பேச ஆரம்பித்து விட்டாரல்லவா? கைகேயி, என் தங்கை தங்கம் போல, கிழட்டு அரசனின் காமப் போக்கை உணர்ந்தவள் ஆட்டிப் படைத்தாள். இன்று வரையிலே உலகம் கைகேயியைக் கண்டிக்கிறதே தவிர, இந்த அரசன் ஒரு இளம் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசையால், இது தருவேன் அது தருவேன் என்று சொல்லி நம்ப வைத்தானே, ஆசை காட்டினானே, பிறகு அவனே மோசம் செய்யத் துணிந்தானே; இது சரியா என்று உலகம் கேட்கிறதா? இல்லையே! அதுபோலத்தான் இந்தச் சிந்தாமணியை வசியப் படுத்த இவர் என்னென்ன ஆசை காட்டினாரோ? நம்பும்படி செய்வதற்காக எவ்வளவோ வாக்குறுதிகள் தந்துதான் இருப்பார். அந்தப் பேதையும் அதனை நம்பி ஏமாந்துதான் போயிருப்பாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:23 am

ஆயிரம் தடவை ராமாயணம் படித்தாலும் இந்தச் சூட்சமத்தை எங்கே உணரப் போகிறார்கள் பெண்கள். ராதா அடிக்கடி சொல்லுவாள், ராமாயணத்தை தான் புதிய முறையில் எழுதப் போவதாக! இதை எல்லாம் எண்ணினதால் எனக்குச் சிந்தாமணி மீது இருந்த கோபம்கூடக் கொஞ்சம் குறைந்தது. வீட்டிற்குள் சென்றதும் கிழவி, என் முகத்திலே முன்புபோலக் கோபக்குறி அதிகம் இல்லாததைக் கண்டு, "என்ன விஷயம்? அக்காவும் தங்கையும் சேர்ந்துவிட்டீர்களா? சரி! சிந்தாமணி இனித் தொலைந்தமாதிரிதான்" என்று கேலியாகக் கூறினாள். "இதற்குள் சொல்லிவிட முடியுமா? தங்கம், இனிமேல்தானே பேச ஆரம்பிப்பாள்!" என்று நான் சொன்னேன். "நீயும் கூடச் சேர்ந்தே போர் நடத்தினாலும் உங்கள் எதிரே சிந்தாமணி வரமாட்டாள்" என்றாள் கிழவி. "ஏன்?" என்று கேட்டேன். "அடி பைத்தியக்காரி! நானும் பைத்தியம் தான். சிந்தாமணியும் கிந்தாமணியும்; வேடிக்கை, வேடிக்கை" என்று கூறிக்கொண்டே சிரித்தாள் கிழவி. "என்ன வேடிக்கை; என்ன பைத்தியம்! என்ன சொல்கிறாய்?" என்று பதைபதைத்துக் கேட்டேன்.

"இவ்வளவு சிரமமும் வீண். சோகமடைந்ததும் வீண் வேலை, தங்கத்திடம் போனதும் வீண் வேலை" என்று கிழவி கூறினாள். "வீண் வேலையா? எப்படி? சிந்தாமணி ஏற்கெனவே வந்தாகி விட்டதா?" என்று நான் சீற்றத்துடன் கேட்டேன். "உட்காரம்மா உட்கார்! சிந்தாமணிமீது போர் தொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. சக்களத்தியும் அல்ல, சாகசக் காரியுமல்ல, சிந்தாமணி பெண்ணல்லடி, பைத்தியமே!" என்றாள் கிழவி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:24 am

"சிந்தாமணி, பெண்ணல்லடி" என்று கிழவி சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. "என்ன! என்ன?" என்று கேட்டேன் திகைப்புண்டு. கிழவி சிரித்துக் கொண்டே, என்னை அருகே அழைத்து தழுவிக் கொண்டு, "பயப்படாதே! எனக்குப் புதுச் சக்களத்தியாகச் சிந்தாமணி வருகிறாள் என்று பீதி அடைந்தாயே, அது வேண்டாம். சிந்தாமணி, சிந்தாமணி என்று உன் புருஷனும் அந்த உருட்டுக்கண்ணனும் பேசிக் கொண்டது ஒரு பெண்ணைப் பற்றியதல்ல. உன் புருஷனுக்கு இருக்கும் பேராசையை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்திருக்கும் அந்த எத்தன், ஏதோ ஒரு வகையான குளிகை செய்து தருவதாகவும், அது இருக்குமானால் நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றும், அதன் பெயர் சிந்தாமணி என்றும் சொல்லி, ஏமாற்றி இருக்கிறான். நீ வெளியே சென்றிருந்தபோது அவனும் உன் புருஷனும் இந்த விஷயமாகக் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசிக் கொண்டனர்.

அதனால் தான் தெரிந்து கொள்ள முடிந்தது" என்றாள். என் திகைப்பு நீங்கவில்லை. "நிஜமாகத்தானா அல்லது அவர்கள் பேசியதைத் தவறாக நீ அர்த்தம் செய்து கொண்டாயா" என்று நான் பன்னிப் பன்னிக் கேட்டேன். "தவறாகத்தான் நாம் இருவரும் இது வரையிலே அர்த்தம் செய்துகொண்டோ ம். சிந்தாமணி என்ற பேச்சை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று தப்பு எண்ணம் கொண்டிருந்தோம். பாவம்! நீ மனதை ரொம்பக் குழப்பிக் கொண்டாய்" என்றாள் கிழவி. என் மனம் சமாதானப்படவில்லை. எப்படியாகும்? சிந்தாமணி, சிந்தாமணி என்று அவர் அடிமூச்சுக் குரலிலே பேசியதைக் கேட்டவள் நான். சிந்தாமணிக்குத் தனி ஜாகை வேண்டும் என்றும், சிந்தாமணி நிச்சயமாகச் சில நாட்களில் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் கவலை வேண்டாம் என்றும் அந்த உருட்டுக் கண்ணன் உரைத்ததையும் கேட்டிருக்கிறேன். சிந்தாமணி பெண் அல்ல என்று இப்போது கிழவி கண்டுபிடித்ததாகக் கூறினால், எப்படி எனக்கு நம்பிக்கை பிறக்கும். குழம்பினேன். "ஆமாம்! எப்படி நீ, சிந்தாமணி பெண்ணல்ல, பொருள் - கேட்டதைத் தரும் மாந்திரீகக் குளிகை என்று கண்டுபிடித்தாய்? அப்படி நீ கண்டுபிடிக்கக்கூடிய விதத்திலே அவர்கள் என்ன பேசினார்கள், விவரமாகக் கூறு" என்று கேட்டேன்.

"பைத்தியமே! கவலைப்படாதே. 'சிந்தாமணியை வைத்து வைக்கத் தங்கத்தால் பெட்டி செய்வதா? வெள்ளியால் பெட்டி செய்வதா?' என்று உன் புருஷன் கேட்டார். அந்த எத்தன், தங்கத்தால் செய்வது என்றும் நல்லது என்றான். 'அளவு எப்படி' என்று உன் புருஷர் கேட்டார். 'அரை ஜாணுக்கு அரை ஜாண் இருந்தால் போதும்' என்றான் எத்தன். இன்னும் என்ன வேண்டும், சிந்தாமணி பொருள்தான், பெண்ணல்ல என்பதை விளக்க. உனக்குச் சக்களத்தியாக வருபவள் அரை ஜாணுக்கு, அரை ஜாண் அளவா இருப்பாள்! அப்படிப்பட்ட அளவிலே எலிக்குட்டி இருக்கும்; பெண் இருக்க முடியுமா?" என்று கூறிவிட்டுச் சிரித்தாள்.

"என்னவோ எனக்குத் திருப்தியாக இல்லையே, நீ சொல்வது? இதையா, இவ்வளவு இரகசியமாகப் பேசி இருப்பார்கள்?" என்று நான் கேட்டேன். "ஆமாடி அம்மா, இதே தான். உன் புருஷர் கேட்டார், 'இந்தச் சிந்தாமணி இன்னும் எவ்வளவு பேரிடம் இருக்கிறது' என்று. அந்த எத்தன் ஒரு நாலைந்து ராஜாக்கள் பேர் கூறி அவர்களிடமெல்லாம் சிந்தாமணி இருப்பதாகச் சொன்னான். இன்னமுமா சந்தேகம்!"



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:25 am

கிழவி இவைகளைக் கூறிக்கொண்டு வரும்போதெல்லாம் என் மனதிலே, ரட்சை, தாயத்து, மந்திரித்த கயிறு, குளிகை இவைகளைப் பற்றி ஜனங்கள் ஆவலாகப் பேசுவது, பித்தளையைப் பொன்னாக்கும் இரசவாதத்தைப் பற்றிய பிரேமை இருப்பது, மாந்திரீக மை, அதைத் தடவிக்கொண்டால் யார் கண்ணிலும் படாமல் இருப்பது, காணாததைக் கண்டெடுப்பது, புதையலைக் கண்டுபிடிப்பது என்று இப்படி எல்லாம் ஜனங்கள் பேசிக் கொள்வார்களே, இதெல்லாம் கவனத்திற்கு வந்தது. இது போலவேதான், கேட்டதை எல்லாம் கொடுக்கும் ஒரு வஸ்து இருக்கிறது, அதன் பெயர் சிந்தாமணி என்று அந்த எத்தன் ஏமாற்றியிருப்பான். பணப்பித்தம் தலைக்கேறிய என் புருஷர், அதை நம்பி இருப்பார் என்ற நம்பிக்கை உண்டாக ஆரம்பித்தது என்றாலும், மீண்டும் மீண்டும் கிழவியைச் சகல விவரத்தையும் கூறச் சொல்லிக் கேட்டேன். நெடுநேரத்திற்குப் பிறகே, எனக்குச் சிரிப்பு வந்தது. கிழவி கூறியது போல, நான் ஒரு பைத்தியக்காரி தான் என்ற எண்ணம் நிலைத்தது. எதையோ, எதுவாகவோ எண்ணிக்கொண்டு ஏக்கம் கொண்டு மனதைப் புண்ணாக்கிக் கொண்டதுடன், தங்கத்திடம் வேறு இதைக் கூறி, அவளையும் சோகத்தில் விழச்செய்தேன். வீண் சந்தேகம் இவ்வளவு வேதனையைக் கொடுத்துவிட்டது! ஆனால் என்ன செய்வது! உன் அப்பாவின் போக்கும் சுபாவமும், என்னை அப்படி எல்லாம் எண்ணும்படி செய்தது. என்னுடைய அன்பை அபிஷேகித்து வந்தேன். அதுபோது தங்கத்தைத் தேடிக் கொண்டவர்தானே? அதுபோலச் சிந்தாமணி என்ற வேறோர் பெண்ணைத் தேடிக் கொண்டு அலைகிறார் போலும் என்று நான் தீர்மானித்ததிலே தவறு என்ன? ஆண்களின் சுபாவம், பெண்ணை அப்படி எல்லாம் எண்ணச் செய்கிறது. தம்பி! ஒரு வேடிக்கை, நீ நினைத்துப் பார்.

"ஆஹா! அந்த அமிர்தா என்ன அழகு தெரியுமா!"

"சுந்தரி பாடினால், சொக்கிவிடுவேன் நான்."

"கமலா ஆடினால், என் மனம் கூடவே ஆடும்."

இப்படி எல்லாம் ஆடவர்கள், சொந்த மனைவியிடமே தாராளமாகக் கூறுவர் - சகித்துக் கொண்டு அவள் கேட்டுக் கொண்டாக வேண்டும். முகம் கூடச் சுளிக்கக்கூடாது. வர்ணித்துக் கொண்டே இருப்பார்கள், வேறு மாதரைப்பற்றி. இன்னும் சிலர், வேறு மாதர்களை வர்ணிப்பதோடு நிற்க மாட்டார்கள்.

"நீ இருக்கிறாயே சுடுமூஞ்சி! சுந்தரியின் முகத்தைப் பார்த்தாலே, இருக்கிற கஷ்டம் அத்தனையும் பறந்து போகுமடி."

"நீயுந்தான் இருக்கிறே, நகைதாங்கியாக. இன்று ஒரு பெண்ணைப் பார்த்தேன். ஆறு ரூபா சேலைதான். கையிலே கண்ணாடி வளையல், காதிலே ஒரு தொங்கட்டம், இவ்வளவு தாண்டி! எப்படி இருந்தா தெரியுமா? பார்த்த உடனே... என்னத்தைச் சொல்ல! நீ இருக்கிறாயே பட்டுச் சேலை கட்டினா பத்திரகாளிபோல, நூல் சேலை கட்டினா மகமாயிபோல; அவள் அழகும் குணமும்..."

இப்படிப் பிற மாதரை வர்ணித்தும், தன் மனைவியைக் கேவலப்படுத்தியும் பேசுவர். அவள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, எவளாவது, எந்த ஆடவரையாவது, அவர் ரூபத்தைக் கூட அல்லது, குணத்தைப் புகழ்ந்தாலும் போதும், ஆடவனின் முகம் கடுகடுக்கும், மனதிலே சந்தேகம் பிறக்கும். ரங்கோனில் ஒரு குடும்பம் தம்பி! நோயாளி மனைவி. ஒரு டாக்டர் வைத்தியம் செய்துவைத்தார். "நம்ம டாக்டர் ரொம்ப நல்லவர். அவர் பேசுகிற அன்பான பேச்சே, பாதி நோயைத் தீர்த்துவிடும்" என்று சொன்னாள். அவ்வளவுதான். "சரி, சரி! பேசாமே கிட. உடம்பை அலட்டிக் கொள்ளாதே" என்று அதட்டினான் புருஷன். தம்பி! நீ ஆச்சரியப்படுவாய். மறுதினமே வேறே டாக்டர். இவ்வளவு சந்தேகமும், கோபமும் ஒரே ஒரு குற்றமில்லாத வார்த்தையை அவள் சொன்னதற்காகத்தான். இப்படிப்பட்டதுதானே ஆடவரின் சுபாவம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:25 am

"இந்தச் சனியனைக் கட்டிக் கொண்டு அழுவதை விட!"

"என் தலையிலே கொண்டு வந்து தள்ளினார்களே."

"முகத்திலே விழிக்காதே."

"உன் முகத்துக்குப் பவுடர் வேறே கேக்குதோ?"

"நீ யாரடி என்னைக் கேள்வி கேட்க? எங்கே போனா உனக்கென்ன? எவளுடன் குலாவினா உனக்கு என்ன?

இந்தப் பேச்சுக்கள் சர்வ சாதாரணமாகப் படித்த ஆடவர் கூறிக்கூட நான் கேட்டிருக்கிறேன் தம்பி. மனிதர்களைக்கூடத் தள்ளு தம்பி! நம்ம சாமிகள் கதையே கூட இப்படி இருக்கிறது. ராதா ஒரு நாள் சொன்னாள் எனக்கு ஒரு கதை. அந்த இந்திரன், யாரோ ரிஷிபத்தினி அகலிகையைக் கெடுத்தானாமே; அவள் புருஷன் அவளைக் கல்லாகும்படி சபித்துவிட்டானாம். ஆனால் இந்திரனுடைய தப்பு நடத்தைக்காக, இந்திராணி ஏதாவது கண்டிக்க முடிந்ததோ - சாபம் கொடுக்கக்கூடத் தேவையில்லை - கண்டித்தாள், பேசமாட்டேன் என்றாள் என்றாவது கதை இருக்கிறதா என்று கேட்பாள்; அதுபோலத்தானே இருக்கிறது சகல கதைகளும். ஆண் சாமிகள் பெண் சாமிகளைப் பொம்மைகளாக்கிச் சில சமயங்களிலே கொடுமைப்படுத்தியதாக எல்லாம் கூடக் கதை இருக்கிறது. 'ஏன் இருக்காதம்மா? இந்தக் கதைகளை எல்லாம் யார் எழுதினார்கள்? ஆடவர்கள்தானே!' என்று ராதா கூறுவாள். அப்படிப்பட்ட ஆடவர்களிலே, பேராசையும் கடுஞ்சித்தமும் நயவஞ்சகமும் கொண்டவர் உன் அப்பா! அவர் சிந்தாமணியைத் தேடுகிறார் என்றால் நான் சந்தேகிக்காமல் என்ன செய்ய முடியும்? நல்ல வேளையாக, சிந்தாமணி அவருடைய பெண்பித்தை அல்ல, பணப்பித்தைக் காட்டுகிறது என்பதைக் கிழவி கண்டறிந்து கூறி, என் மனதிலே நிம்மதி உண்டாகச் செய்தாள்.

முதலிலே எனக்குச் சந்தேகந்தான் என்றாலும் பிறகு தெளிவு பெற்றேன். பணத்தைப் பெறுவதற்கு அவர் எதுவும் செய்வார். இல்லாவிட்டால் நல்லவர்கள் கூடச் சேர்த்துக் கொள்ளக் கூசும் அந்த உருட்டுக் கண்ணனுக்கு, ஏன் அவ்வளவு உபசாரம் செய்யப்போகிறார். உன் அப்பா, உபசாரம் செய்கிறார்... அன்புடன் பேசுகிறார் - மரியாதை காட்டுகிறார் யாருக்காவது என்றால், சூட்சமம் இருக்கும். அவர்களால் ஆகவேண்டிய காரியம் ஏதாவது இருக்கும் - இலாபம் இல்லாமல் அன்பு காட்டவே மாட்டார். தங்கத்திடம் கொண்ட அன்புக்கே காரணம், பணந்தானே - இலாபந்தானே தம்பி! ஒரு வேடிக்கை கேள். ஒரு தடவை நமக்குத் தூரபந்து ஒருவர் - கிழம் - பெரிய குடிகாரர் - குடித்துவிட்டால் கண்டபடி பேசுவார் - அவரைக் கண்டாலே யாருக்கும் பிடிக்காது - என்னவோ வியாபாரம் செய்து இலாபம் கிடைத்ததாம் - அதைக் கொண்டு, நாலு ஏக்கர் நல்ல நஞ்சை வாங்கினார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:26 am

அவருக்கு நோய் வந்தது. உன் அப்பா என்ன செய்தார் தெரியுமா? சதா அவர் வீட்டுக்குப் போவார் - வைத்தியரை அனுப்புவார் - பாவம்! அந்தக் கிழவனுக்கு யாரும் திக்கு இல்லை. ரங்கம்! கஞ்சி போட்டுக் கொடு என்று எனக்குச் சொல்லுவார். எவ்வளவு அன்பு பார் முதலியாருக்கு என்று இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் பேசிக்கொள்ளும். கடைசியிலே நடந்தது என்ன தெரியுமா? அந்தக் கிழவன் சாகும்போது, நிலத்தை எல்லாம், நெல்லியம்மன் கோயிலுக்கு, அபிஷேகச் செலவுக்கு என்று உயில் எழுதி, அதை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு, உன் அப்பாவுடையது என்று எழுதிவிட்டான். அபிஷேகம் நடந்தது, ஆறு இளநீர், அஞ்சு பலம் எண்ணெய், ஆகக்கூடி ஆறு ரூபாய் செலவில். மற்றது உன் அப்பாவுக்குத்தான்! அப்படிப்பட்ட இலாப வேட்டைக்காரர் உன் அப்பா. அவர் ஏன் தேடமாட்டார் சிந்தாமணியை!

"ஒழியட்டும், நமது பயம் தீர்ந்தது" என்று நான் கிழவிக்குக் கூறினேன். "உன் பயம் தீர்ந்தது என்று சொல்லடியம்மா! சிந்தாமணி என்றொரு சக்களத்தி வந்து முளைப்பாளோ என்று நீ கொண்டிருந்த பயம் போய்விட்டது. ஆனால், எனக்கு அப்படியில்லையே; இப்போது பயப்பட வேண்டியவள் நானடியம்மா நான்!" என்றாள் கிழவி. "ஏன்?" என்று கேட்டேன். கிழவி பதில் கூறவில்லை. மிரட்சி நிரம்பிய கண்களுடன் என்னைப் பார்த்தாள்.

சிந்தாமணி பெண்ணல்ல, யாரோ ஒரு புரட்டன் காட்டிய ஆசைக்குறி என்று சொன்ன கிழவி, பிறகு இனித் தனக்குத்தான் ஆபத்து என்று மிரட்சியுடன் கூறக்கேட்டு நான் திடுக்கிட்டேன். பன்னிப் பன்னி, விவரம் கேட்டேன். விளக்கச் சொன்னேன்; கிழவி பதிலே சொல்லவில்லை. என் கவனத்தை வேறு வேறு விஷயங்களிலே திருப்பிவிட முனைந்தாள். எதையோ வாய் தவறிச் சொல்லிவிட்டுப் பிறகு, அதை மறைக்க முயல்வார்களே அதுபோன்று இருந்தது. நானும் கெஞ்சினேன், கோபித்துக் கொண்டேன், மிரட்டினேன், சலித்துக் கொண்டேன், ஒன்றும் பலிக்கவில்லை. "ரங்கம்! திக்கற்றுத் தெருச் சுற்றிக் கொண்டிருந்த இந்தக் கிழவியை நீ காப்பாற்றினாய்; நீ சுகமாக வாழவேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. நான் வேறு என்ன செய்ய முடியும் உனக்கு. என்னால் முடிந்ததை எதைக் கொடுத்தாகிலும் செய்வேன். இது சத்தியம். எவ்வளவோ சுகமாக வாழ வேண்டிய உன்னைப் படாத பாடு படுத்திவிட்டான் உன் கணவன் - நீயும் எவ்வளவுதான் தாங்கிக் கொள்வாய். இவ்வளவு கஷ்டத்துக்கிடையேயும், உனக்கு எவ்வளவு நல்ல சுபாவம் இருக்கிறது. தெருவில் சுற்றும் நாய்கள் கூட என்னைக் கண்டு குரைத்தன. என் முகத்தைக் கண்டதும், கதவுகளைத் தாளிட்டு விடுவார்கள். நான் ஒரு வேண்டாப் பொருளாகிக் கிடந்தேன். என்னை நீ ஆதரித்தாய். இந்த உதவிக்கு ஈடாக என் உயிரையே கொடுத்தாலும் தகும்" என்று நெஞ்சு உருகும் விதமாகக் கிழவி பேசினாள்.

முதலிலே ஆபத்து என்று சொன்னாள், பிறகு உயிரையும் கொடுக்கலாம், தகும் என்றாள். எனக்கு அவளுடைய பேச்சு பயமூட்டுவதாக இருந்தது. நெடுநேரம் முயன்றேன், அவளிடமிருந்து விளக்கம் பெற முடியவில்லை - சலிப்பு ஒரு புறம் - அத்துடன், சிந்தாமணி வருவாள் என்று கொண்டிருந்த பயம் போய்விட்டதால், மகிழ்ச்சியும் ஒரு புறம் இருந்தது. எனவே கிழவி விஷயத்தைக் கொஞ்சம் அலட்சியப்படுத்திவிட்டு, பிறகு கவனிக்கலாம் என்று விட்டுவிட்டு என் மனதுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியிலேயே மூழ்க ஆரம்பித்தேன். நான் அப்போது அறியேனடா கண்மணி, கிழவிக்கு உண்மையிலே ஆபத்து வர இருப்பதை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக