புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10 
366 Posts - 49%
heezulia
கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10 
25 Posts - 3%
prajai
கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_m10கையெழுத்தும் தலையெழுத்தும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையெழுத்தும் தலையெழுத்தும்


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:37 am

¨ஒவ்வொருமுறை நாம் எழுதும்போதும் நம்மை அறியாமல் நம்மைப் பற்றிய விபரங்களை காகிதத்தில் விடுகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

என்ன எழுதுகிறோம் என்பதிலிருந்தல்லாமல் எப்படி எழுதுகிறோம் என்பதிலிருந்து நம் இயல்புகளைக் கணிப்பதுதான் கையெழுத்தியலின் சிறப்பம்சம்.

பதினேழாம் நூற்றாண்டில் காமிலோ பால்டி என்ற இத்தாலியரால் வித்திடப்பட்ட இந்த கையெழுத்தியல்,இன்றைய நவீன உலகில் குற்றவியல், மனநலமருத்துவம், மணப்பொருத்தம், மனிதவள மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பயனுள்ளதாக விளங்கிவருகிறது.

கையெழுத்தியல் அறிவுபூர்வமானதா?

மூளையின் கட்டளையின்படி கண்கள்,கரங்கள் என உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டில் உருவாவதுதான் கையெழுத்து. சிறியதும் பெரியதுமாய் கிட்டத்தட்ட இருபது தசைகள் ஒருங்கிணைந்து உழைத்தால்தான் கைஎழுத்து உருவாகமுடியும். இதில் ஒரு தசையில் குறைபாடு இருக்குமானாலும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு அதன் தாக்கம் கையெழுத்தில் தெரியத்தானே செய்யும் என்கிற வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது.

ஒரு மனிதன் பேசும் விதத்திலிருந்தும் அங்க அசைவுகளிலிருந்தும் அவனின் எண்ண ஓட்டங்களைக்கணிக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்வோமானால் ஏறக்குறைய அதே செயல்பாடுகளின் அடிப்படையில் உருவாகும் கையெழுத்தின் மூலமும் அவற்றைக்கணிக்க முடியும் என்றும் ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்?

உதாரணாமாக, எல்லா வேலைகளையும் அவசரகதியல் செய்யும் ஒருவரால் எழுதும்போது மட்டும் நிதானமாய் எழுதமுடியுமா?

ஒருவரின் கையொப்பம் அவர் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார், எப்படி இருக்க விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தும் தடயம் என்கிறது கையெழுத்தியல்.

இந்தக் கையொப்பத்தைப் பாருங்கள்:

கையெழுத்தும் தலையெழுத்தும் Osama

உங்கள் மனதில் இந்தக் கையொப்பத்துக்குரியவரைப்பற்றி என்ன தோன்றுகிறது....

உங்கள் ஊகங்களுக்கு ஒசாமா பின் லேடன் பொருந்துகிறாரென்றால், கையெழுத்தியலைப் பற்றிய சந்தேகங்கள் இனி உங்களுக்கு எழாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:39 am

கையெழுத்தின் மூலம் என்னென்ன விபரங்களை அறியலாம்?

- ஒருவரின் இயல்புகளை அறியலாம் (நேர்மையானவரா? பொறுப்பானவரா? கலகலப்பானவரா போன்ற பல குணாதிசயங்களை அறியலாம்)

- திறமைகளை அறியலாம்

- உடல் நலக்குறைவை அறியலாம்

- மனநிலையை அறியலாம்

இவற்றை எப்படி அறிந்து கொள்வதென பின்னால் காணலாம்.

கையெழுத்தியல் என்னென்ன துறைகளில் பயன்படுத்தப்படுகிறது?


கையெழுத்தியல் பற்பல துறைகளின் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைக் கீழே காணலாம்:

குற்றவியல்

கையெழுத்தியல் எத்தனையோ குற்றவாளிகளை அடையாளம் காட்ட உதவி இருக்கிறது. கள்ள ஆவணங்களைக் கண்டறிவதில் கையெழுத்தியலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தொடர் கொலைக் குற்றவாளிகளின் கையெழுத்தைக் கொண்டு அவர்களின் குணாதிசயங்களையும் அவர்களைக் கண்டறிய உதவிய மற்ற பல தகவல்களையும் கைஎழுத்தியலாளர்கள் பலமுறை தந்ததுண்டு.

சமீபத்தில் அமெரிக்காவைக் கலக்கிய ஆந்த்ராக்ஸ் கடிதத்தின் பிரதி இது:
கையெழுத்தும் தலையெழுத்தும் Anth

கைஎழுத்தியலாளர்கள் இதை அனுப்பியவரின் இயல்புகளை விரிவாகக் கண்டறிந்துள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், இதை எழுதியவர் மிகுந்த மன அழுத்தத்துக்காளான ஆனால் தனது நம்பிக்கைகளில் மிகவும் உறுதியான மனிதராகச் சித்தரித்திருக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:41 am

மனித வள மேலாண்மை(Human Resource Management) மற்றும் பணியாளர் தேர்வு

80% பிரெஞ்சு நிறுவனங்கள் விண்ணப்பதாரர்களை மதிப்பிட கையெழுத்தியலைப் பயன் படுத்துகின்றன. இதன்மூலம் நேர்முகத் தேர்வுக்கான நேரம் கணிசமாகக் குறைக்கப்படுகிறது. கையெழுத்து மூலம் பணியாளர்களின் திறமைகளையும் குறை நிறைகளையும் கண்டறிந்து அவர்களுக்கேற்ற பயிற்சிகளை அளிக்கவும் கைஎழுத்தியல் பயன் படுத்தப்படுகிறது.

கல்வி

கையெழுத்தியல் மூலம் மாணவர்களின் திறமைகளையும் விருப்பு வெறுப்புகளையும் அறிந்து அவர்களுக்கேற்ற மேற்கல்வியை சிபாரிசு செய்கின்றன சில மேல்நாட்டுப் பள்ளிகள்.

மனப்பொருத்தம்

கையெழுத்து உறவுகளில் ஏற்படும் விரிசல்களின் அடிப்படையை ஆராய உதவுகிறது. காரணம் அறியப்பட்டால் தீர்வு காண்பது எளிதுதானே?

கணவன் - மனைவி உறவு மட்டுமல்லாமல், பெற்றோர் - குழந்தைகள், மேலாளர் - பணியாளர் போன்ற பல உறவுகளை ஆராய்ந்து குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளைக் களையவும், நிறுவனங்களின் செயல்திறனை உயர்த்தவும் கையெழுத்தியல் உதவியாக இருந்து வருகிறது.


மனநலசிகிச்சை


மனநோயாளிகளின் உண்மையான மனநிலையையும் அதற்கான அடிப்படைக்காரணங்களையும் அறிந்து பொருத்தமான சிகிச்சை முறைகளைத்தேர்ந்தெடுக்க மனநல மருத்துவர்களால் பல இடங்களில் கையெழுத்தியல் பயன் படுத்தப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:42 am

கையெழுத்து தலையெழுத்தைக் காட்டுமா?

'இல்லை' என்பது பெரும்பாலோரின் கருத்தாக இருந்தாலும் கையெழுத்திலிருந்து எதிர்காலத்தைக் கணிக்க 'முடியும்' என்கிற கருத்தை சிலர் வலியுறுத்தத்தான் செய்கிறார்கள்.

கையெழுத்து தலையெழுத்தை மாற்றுமா?

கையெழுத்தை மாற்றுவதால் நம் வாழ்க்கைநிலையை மாற்றமுடியும் என்ற கருத்தை அநேகமாக அனைத்து கையெழுத்தியலாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

கைஎழுத்தினை வாழ்க்கைக்குக் சாதகமான வகையில் மாற்றும் பயிற்சி மனநல சிகிச்சைக்கு (psychotherapy) சமமாகக் கருதப்படுகிறது. கைஎழுத்துப்பயிற்சி ஆழ்மன எண்ண ஓட்டங்களை மாற்றி விரும்பத்தக்க விளைவுகள ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, ஒரு மனிதரின் குழப்பம் அவரின் ஆழ்மனதிலிருந்தும் மூளையிலிருந்தும் வருகிற கட்டளைகளின் விளைவு என அனைவரும் அறிந்ததே. இந்தக் குழப்பத்தைக் கைஎழுத்து பிரதிபலிக்கிறது. அதாவது கைஎழுத்து ஆழ்மனதின் பிம்பமாக அமைகிறது. கைஎழுத்துப் பயிற்சியின் வழியாக இந்தக் குழப்பத்துக்கான தடயங்களை கைஎழுத்திலிருந்து நீக்குவது மூலம், குழப்பத்துக்கான மூல காரணங்கள் ஆழ்மனதிலிருந்து நீக்கப்படுகின்றன. இந்த முறை ஆங்கிலத்தில் graphotherapy என அழைக்கப்படுகிறது.

விமலா ரோட்ஜர்ஸ் என்ற அமெரிக்கப் பெண்மணி கைஎழுத்தில் நல்ல பண்புகளைப் பிரதிபலிக்கும் அம்சங்களை ஒன்று திரட்டி ஆங்கில எழுதுக்களின் வடிவில் சில மாறுதல்களைச் செய்திருக்கிறார். இவற்றின் அடிப்படையில் குழந்தைகளுக்குக் கைஎழுத்துப் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களை நல்ல பண்புகளைக் கொண்ட முழுமையான மனிதர்களாக உருவாக்கலாம் என்று உறுதியாய்ச் சொல்கிறார்.

பெரியவர்களிடமும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக பல பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். இந்த பயிற்சி பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறது. இதில் ஆர்வமுள்ளவர்கள், அவருடைய 'Your Handwriting Can Change Your Life!' என்ற புத்தகத்தைப் படிக்கலாம்.

கையொப்பம் சொல்வதென்ன?

ஒருவரின் கையொப்பம் அவர் தன்னைப்ப்ற்றி என்ன நினைக்கிறார், எப்படி இருக்கவிரும்புகிறார், மற்றவரிடம் தம்மை எப்படி காட்டிக்கொள்ள விரும்புகிறார் என்பவற்றைப் பொறுத்தே அமைகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கையொப்பம் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் தாட்சருடையது:
கையெழுத்தும் தலையெழுத்தும் Marg

பெரியதாகக் கையொப்பமிடுவதிலிருந்து அவர் பெயரையும் புகழையும் விரும்புகிறவர் என்பது தெரிகிறது.கையெழுத்துக்குக் கீழே உள்ள கோடு அவருக்குத் தன்னை முக்கியமானவராகக் காட்டிக்கொள்வதிலுள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. அவருடைய பெயரான மார்கரெட் என்பதிலுள்ள 'M' அவர் கணவரின் குடும்பப் பெயரான தாட்சரிலுள்ள 'T' -யை விடப் பெரியதாக இருப்பதைக் காணுங்கள். தன்னை முன்னிலைப்படுத்துவதிலுள்ள அவரின் ஆர்வம் தெரியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:48 am

கையெழுத்தாளர்களுக்குத் தேவையான கையெழுத்து மாதிரி எப்படி இருக்கவேண்டும்?

- கையெழுத்து இயல்பானதாக இருக்கவேண்டும்.

- எழுதிய விஷயங்கள் எழுதியவருடைய சொந்த முயற்சியால் எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும். புத்தகத்திலிருந்து பிரதி எடுத்திருக்கக்கூடாது.

- கோடு இல்லாத தாளில் எழுத வேண்டும்.

- குறைந்தது 15 வரிகள் இருத்தல் அவசியம். ஒரு முழுப்பக்கம் இருத்தல் மிகவும் நல்லது.

- எந்தவித எழுதுகோலும் உபயோகித்திருக்கலாம்

- கையொப்பம் இருத்தல் நலம்.

- பெரும்பான்மையான கையெழுத்தியலாளர்கள் ஆங்கில எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு செயல் படுவதால், கையெழுத்து மாதிரி எந்த மொழியிலிருக்கவேண்டும் என்பதில் தெளிவு வேண்டும்.

கவனிக்க வேண்டியவை

1.கையெழுத்திலுள்ள ஒரு அம்சத்தை மட்டும் வைத்து அதற்குரிய இயல்புகளை கைஎழுத்துக்குரியவர் கொண்டிருப்பதாக எண்ணிவிடக் கூடாது. கைஎழுத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, அதனோடு ஒத்த மற்ற அம்சங்களையும் கருத்தில் கொண்டே இயல்புகளை நிர்ணயிக்க வேண்டும்.

உதாரணமாக, இடதுபக்கம் சாய்ந்த எழுத்துக்கள். 'தனிமை விரும்பி', 'உணர்ச்சிபூர்வமானவர்' என்பது போன்ற சில குணாதிசயங்களைக் குறிக்கும். இதில் எந்த குணாதிசயம் அந்தக் கைஎழுத்துக்குரியவருக்குப் பொருந்தும் என்பதை நிர்ணயிக்க, கைஎழுத்தின் மற்ற அம்சங்கள் உதவும்

2. ஒரு முழுமையான கைஎழுத்தியலாளராவதற்கு மிகுந்த பொறுமையும் அனுபவமும் அவசியம்.

மனிதர்களைப் படிக்க விருப்பமா?

'கையெழுத்திலுள்ள ஒரு அம்சத்தை மட்டும் வைத்து அதற்குரிய இயல்புகளை கைஎழுத்துக்குரியவர் கொண்டிருப்பதாக எண்ணிவிடக் கூடாது.' என்பது கைஎழுத்தியலாளர்களுக்கான அடிப்படைவிதி என்றாலும், கைஎழுத்திலுள்ள சில அம்சங்கள் சராசரி மனிதருக்குஒரு நல்ல எச்சரிக்கையாக பல சமயங்களில் அமைவதுண்டு.அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்:
கையெழுத்தும் தலையெழுத்தும் Hell1

மேலே உள்ள படட்திலுள்ள 't' மற்றும் 'd' எழுத்துக்களில் காணப்படும் அகன்ற கண்ணிகள் தன்னைப் பற்றிய விமரிசனங்களை அறவே வெறுக்கும் குணாத்தைக்குறிக்கின்றன.
கையெழுத்தும் தலையெழுத்தும் Trait2

இந்த 'O' - ல் காணப்படும் முடிச்சு மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படுகிறது.மனசாட்சியற்ற பொய்யர்களின் எழுத்துக்களில் இம்மாதிரி முடிச்சுகள் காணப்படுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:53 am

கையெழுத்தும் தலையெழுத்தும் Trait4

இப்படி கீழ்ப்பகுதிகளில் கண்ணிகள்(loop) தட்டையாகக் காணப்பட்டாலோ அல்லது கீழ் நோக்கி வரையப்பட்ட கோடு கீழேயே நின்றுவிட்டாலோ கையெழுத்துக்குரியவர்கள் மற்றவரை எளிதில் நம்ப மாட்டார்கள். இவர்களைப் பற்றி மற்றவர் அறிந்துகொள்ள இடம் தரவும் மாட்டார்கள்.

கையெழுத்தும் தலையெழுத்தும் Trait't' - ல் உள்ள குறுக்குக்கோடு பல விஷயங்களைச் சொல்லும்:

- கூர்மையான குறுக்குக்கோடு ஒருவிதமான குரூரத்தைக்காட்டும். அது மற்றவர் மனதை வருத்தும் கேலியிலிருந்து உடல் ரீதியாகத் துன்புறுத்தும் செயல்வரை எதுவாகவும் இருக்கலாம்


கையெழுத்தும் தலையெழுத்தும் Trait6
- இந்தக் குறுக்குக்கோடு மேலிருந்து கீழ் நோக்கி வரையப்பட்டிருந்தால், அந்த நபர் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கக்கூடும்.

- குறுக்குக்கோடு எவ்வளவு உயரத்தில் வரையப்பட்டிருக்கிறதோ அது ஒருவர் தன் மேலுள்ள நம்பிக்கையின் அளவைக்குறிக்கும்.

- குறுக்குக்கோட்டின் நீளம் ஒருவருக்குள்ள ஆற்றலைக் குறிக்கும்.


கையெழுத்தும் தலையெழுத்தும் Trait5
மேல்கண்ட எழுத்துக்களில் காணப்படும் கொக்கிகள் (hooks), எதிர்பாலாரிடம்(opposite sex)இருக்கும் கோபத்தைக் காட்டும். இம்மாதிரிக் கைஎழுத்துடையவர்களுக்கு எதிர்ப்பாலாரை வீழ்த்துவதில் ஒரு எல்லையற்ற ஆனந்தம் இருக்கும்.

கையெழுத்தும் தலையெழுத்தும் Slant

ஒருவரின் கையெழுத்தில் எழுத்துக்கள் இருபுறமும் சாய்ந்து காணப்படுமானால் அவர்களுக்கு இருவேறு பரிமாணங்கள் இருக்கக்கூடும். எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். 'moody' ஆன மனிதர்கள் இவர்கள். இவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்.

இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்கள் கைஎழுத்தியலில் உள்ளன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2009 9:57 am

கையொப்பம் வாழ்க்கைநிலைய மாற்றுமா?

கையொப்பத்தை மாற்றுவதால் வாழ்க்கை நிலை மாறும் என சில கைஎழுத்தாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதற்கு அறிவியல்பூர்வமான தடயங்கள் எவையும் கிடையாது.இருந்தாலும், சிறந்த கையொப்ப அம்சங்களாக இந்தக் கைஎழுத்தியலாளர்களால் கருதப்படும் சிலவற்றைப் பார்க்கலாம்:

1. கையொப்பம் படுக்கைவசத்தில் இருத்தல் நலம். எடுத்துக்காட்டு:
கையெழுத்தும் தலையெழுத்தும் Sign2

'2.. அழுத்தமாக இருக்கவேண்டும்.

3.அடிக்கோடுகளோ புள்ளிகளோ இருக்கக்கூடாது.

4. பின்னோக்கிய 'strokes' இருக்கக்கூடாது.முன்னோக்கிய 'finishing strokes' இருந்தால் நலம்.

கீழுள்ள படத்திலுள்ள முன்னோக்கிய 'finishing stroke' வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.

.கையெழுத்தும் தலையெழுத்தும் Sign3







கீழே இருக்கும் கையொப்பத்தைப் பாருங்கள்:
கையெழுத்தும் தலையெழுத்தும் Sign4

துவக்கத்திலும் இறுதியிலும் பின்னோக்கிய strokes காணப்படுகின்றன.

5.கையொப்பம் தெளிவாகத் தனித்து நிற்கவேண்டும்.அடித்தல் திருத்தல்கள் இருக்கக்கூடாது.

(முடிவுற்றது)
மூலம்: நிலாச்சாரல்


avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:19 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 03, 2009 8:02 pm

அருமை
கையெழுத்தும் தலையெழுத்தும் 000203CE









avatar
Guest
Guest

PostGuest Fri Jul 03, 2009 8:03 pm

நல்லா௫க்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக