புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
24 Posts - 53%
heezulia
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
1 Post - 2%
Barushree
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
1 Post - 2%
nahoor
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
1 Post - 2%
prajai
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
78 Posts - 73%
heezulia
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
4 Posts - 4%
prajai
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:00 pm

First topic message reminder :

இந்தக் கட்டுரை ஜகத்குரு ராமானுஜரின் ஆயிரமாவது வருடத்தை முன்னிட்டு தினமலரில் வெளிவந்தது. இதை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 HppFuRE

சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோயில்...சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப்பெருமாள்...அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர்.  இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:43 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 VRrDhfC

முதலி! நீ என் சொந்தக்காரன். எனவே, நான் உனக்கு இந்த ஸ்லோகத்திற்குரிய பொருளைக் கற்றுத்தருவது முறையாக இராது எனக் கருதுகிறேன். ஒருவேளை நீ குற்றம் செய்தவனாக இருந்தால், என் உறவினன் என்ற முறையில் அது என் கண்ணில் படாது. எனவே, நீ திருக்கோஷ்டியூர் செல். அங்கு நம்பியிடம் சென்று, இதன் பொருளை அறிந்து கொள், என்றார். குருவின் சொல்லை ஏற்று, முதலியாண்டானும் அங்கு சென்றார். நம்பி அவரை நீண்ட நாட்களாக கண்டு கொள்ளவில்லை. அவர் பல முறை அலைந்தது கண்டு இரக்கப்பட்டு இறுதியாக, ராமானுஜர் போன்ற உயர்ந்தவர்கள் உறவினர்களாயினும், அவர்களது குணம் தெரிந்தே சீடர்களைத் தெரிவு செய்வர். நீ அவரையே சரணடை. அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள், எனச் சொல்லி அனுப்பி விட்டார். முதலியாண்டான் ராமானுஜரிடம் வந்து நடந்ததைச் சொன்னார். அந்நேரத்தில் பெரியநம்பியின் திருமகள் அத்துழாய் அங்கு வந்தாள். அவள் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வழிந்தது. அண்ணா! தங்களைக் காண அப்பா என்னை அனுப்பி வைத்தார். என் பிரச்சனையைத் தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும், என்றாள். ராமானுஜர் அவளிடம் மிகவும் கனிவுடன், முதலில் இங்கே உட்கார். அமைதியாயிரு. உன் பிரச்சனையை தயங்காமல் சொல், என்றார். அண்ணா! வீட்டில் எனக்கு என் மாமியாரால் பிரச்னை. நான் தினமும் மிகவும் தூரத்திலுள்ள குளத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன். அது காட்டுப்பாதை. மிகவும் சிரமப்படுகிறேன். காலையும், மாலையும் புதுத்தண்ணீர் எடுத்து வந்து தான் சமையல் வேலையைச் செய்ய வேண்டியுள்ளது. இது மிகவும் கஷ்டமாக உள்ளது என என் மாமியாரிடம் வாய் தவறி சொல்லி விட்டேன். அவ்வளவு தான். அவளுக்கு கோபம் உச்சந்தலையில் ஏறிவிட்டது.

ஏ அத்துழாய், மனதில் பெரிய சீமான் வீட்டுப் பெண்ணென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? உனக்கு அலைந்து திரிந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை என்றால், உன் பிறந்த வீட்டிலிருந்து ஒரு வேலைக்காரனை அழைத்து வர வேண்டியது தானே என கத்தினாள். என் மனது மிகவும் கஷ்டப்பட்டது. அப்பாவிடம் வந்து, மாமியார் சத்தம் போட்டதை சொன்னேன். அவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்து, உன் அண்ணன் ராமானுஜனிடமே உன் பிரச்சனையைச் சொல். அவன் தீர்த்து வைப்பான் எனச் சொல்லி அனுப்பி வைத்தார். தாங்கள் தான் என் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும், என்றாள். ராமானுஜர் அவளைத் தேற்றினார். சகோதரி! கவலை கொள்ளாதே, இது சிறு விஷயம். இதோ! இந்த முதலியாண்டானை உன்னுடன் அழைத்துச் செல். அவன் உன் வீட்டுக்கு வந்து சமையல் வேலை, தண்ணீர் எடுக்கும் வேலையை எல்லாம் கவனித்துக் கொள்வான், என்றார். முதலியாண்டான் குருவின் சொல்லை சிரமேல் ஏற்றார். அத்துழாயுடன் அவளது ஊருக்குச் சென்றார். அவளது வீட்டில் நீண்ட நாட்களாக தங்கியிருந்து, அவள் இட்ட ஏவல்களை முகம் சுளிக்காமல் செய்து வந்தார். அவ்வூர் மக்கள் முதலியாண்டானை சாதாரண சமையல்காரனாகவே நினைத்தனர். ஒருநாள் அவ்வூருக்கு ஒரு பெரியவர் வந்தார். வேதத்திலுள்ள ஒரு மந்திரத்தின் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். முதலியாண்டான் அக்கூட்டத்திற்குச் சென்றார். அந்த பெரியவர், தப்பும் தவறுமாக பொருள் சொல்வதைக் கேட்ட முதலியாண்டான், அவரது பேச்சை இடைமறித்தார். பெரியவரே! தாங்கள் சொல்லும் பொருள் சரியானதல்ல, என்று கூறியதும், பெரியவருக்கு மட்டுமல்ல, கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. நீ சாதாரண சமையல்காரன். உனக்கு வேதத்தைப் பற்றி என்ன தெரியும். பேசாமல் உட்கார், என்றனர்.
தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:45 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 DvPpmF2

முதலியாண்டான் அவர்கள் சொன்னதற்காக உணர்ச்சிவசப்படவில்லை. மிகவும் அமைதியுடன், என்னை பேச அனுமதியுங்கள். நான் சொல்லும் பொருள் சரியில்லை என தாங்கள் முடிவெடுத்தால், இங்கிருந்து நான் வெளியேறி விடுகிறேன், என்றவர், அம்மந்திரத்துக்குரிய பொருளை மிகவும் எளிமையாகவும், விளக்கமாகவும் சொன்னார். கூட்டம் அசந்து விட்டது. அந்தப் பெரியவர் மேடையில் இருந்து இறங்கி, முதலியாண்டானின் கால்களிலேயே விழுந்து, தவறான பொருள் சொன்னதற்காக தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இம்மந்திரத்துக்கு பொருள் தெரிகிறதென்றால், நீங்கள் சாதாரணமானவராக இருக்க முடியாது. நீங்கள் சமையல்காரர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தாங்கள் யார்? என்றார். ஒரு பெரியவர் அவரிடம், ஆஹா... எவ்வளவு பெரிய மகானின் சீடர் தாங்கள். நாங்கள் தினமும் காலையில் எழுந்ததும் அந்த மகான் இருக்கும் திசை நோக்கி வணங்கிக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட தாங்களா அத்துழாய் வீட்டில் சமையல்காரராக இருந்தீர்கள். ஏன் இப்படி செய்தீர்கள்?என்றார். முதலியாண்டான் நடந்த விபரங்களை எல்லாம் சொன்னார். குருவின் கட்டளையை ஏற்று, அகந்தையை அழித்து, சாதாரண வேலை செய்த அவரைப் பாராட்டினர். உடனடியாக அவர்கள் ஸ்ரீரங்கம் புறப்பட்டனர். ராமானுஜரைச் சந்தித்து, முதலியாண்டானின் பெருமையை எடுத்துக் கூறினர். மகானே! தாங்கள் அவருக்கு வைத்த சோதனை போதும். தாங்கள் மீண்டும் அவரை ஸ்ரீரங்கம் அழைத்து, மந்திர உபதேசம் செய்யுங்கள், என்றனர். ராமானுஜர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தன் சீடனை பெருமைப்படுத்த எண்ணிய அவர், அத்துழாயின் வீட்டுக்கே வந்துவிட்டார். சீடனைப் பாராட்டி மந்திரத்தின் பொருளை உபதேசித்தார்.

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:46 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 6hA3T6Y

இப்படியாக பல அற்புதங்களைச் செய்து சீடர்களை அதிசயிக்கச் செய்தார் ராமானுஜர். ஒருமுறை பெரியநம்பி கூட, ராமானுஜரின் கால்களில் விழுந்து வணங்கினார். சீடர்கள் அதிர்ந்தனர். குருவே! உங்கள் குரு உங்கள் கால்களில் விழுகிறார். நீங்கள் அதைத் தடுக்கவில்லையே, என்றனர் சற்றே கோபத்துடன். அப்போது பெரிய நம்பியே சொன்னார். சீடர்களே! வருந்த வேண்டாம். நான் இவரிடம் நம் குரு ஆளவந்தாரைக் கண்டேன்; அதனால் அவரைப் பணிந்தேன், என்றார். ராமானுஜர் சீடர்களிடம், ஒரு சீடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெரியநம்பி நமக்கு காட்டியருளினார். அதனால் தான் அதைத் தடுக்காமல் இருந்தேன், என்றார். இந்நிலையில் ராமானுஜருக்கு கடும் சோதனை வந்தது. காஞ்சிபுரத்தில் கிரிமிகண்டன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் தீவிர சிவபக்தன். ஸ்ரீரங்கத்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமானுஜர் வைணவநெறி வளர்ப்பது குறித்து கவலையடைந்த அவன், ராமானுஜரை அழைத்து வரும்படி சில பணியாளர்களை அனுப்பினான். பணியாளர்கள் எல்லாருமே பருமனான தோற்றம் கொண்டவர்கள். அவர்கள் எல்லாரும் ஸ்ரீரங்கம் வந்து ராமானுஜர் எங்கே? என விசாரித்தனர். மடத்தில் ராமானுஜர் இருப்பதை அறிந்து அங்கு சென்ற போது, விஷயம் அவரது உள்ளார்ந்த சீடரான கூரத்தாழ்வானுக்கு தெரிந்து விட்டது. அவர் வேகமாக ராமானுஜரிடம் ஓடினார். குருவே! கிரிமிகண்டன் தன் ஆட்களை ஏவி, வைணவத்தை மட்டுமல்ல, உங்களையே அழிக்க ஆட்களை ஏவியுள்ளான். அவர்களுக்கு உங்களை அடையாளம் தெரியாது. எனவே நீங்கள் என் வெள்ளை ஆடையை அணிந்து கொண்டு இங்கிருந்து தப்பி விடுங்கள். நான் தங்கள் காவியாடையுடன் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறேன். எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். ஆனால், நீங்கள் இவ்வுலகுக்கு தேவை. உங்களால் உலக மக்கள் உய்வடைய வேண்டும். என்னை அனுப்புங்கள், என்றார்.

ராமானுஜர் சற்றே யோசித்தார். பின்னர் சரியென ஒப்புக்கொண்டார். உடனடியாக இருவரும் உடையை மாற்றிக் கொண்டனர். ராமானுஜர் அங்கிருந்து தப்பி விட்டார். கூரத்தாழ்வான் வெளியே வந்தார். அவரை ராமானுஜர் என நினைத்துக் கொண்ட அந்த குண்டர்கள் காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். மன்னன் கிரிமிகண்டன் அவரை வரவேற்கவே செய்தான். ராமானுஜர் வைணவர் என்றாலும் கூட அவர் மீது மரியாதை வைத்திருந்தான். கொள்கையில் இருந்த கருத்து வேறுபாடு மட்டுமே அவனது கோபத்துக்கு காரணமாக இருந்தது. இதற்கெல்லாம் இன்னொரு காரணமும் உண்டு.

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:49 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 0y9FhaT

ராமானுஜரின் ஆன்மிக வாழ்வின் துவக்கத்தில் அவர் ஒரு இளவரசியிடம் இருந்த பிரம்ம ராட்சஸை ஓட்டினார் அல்லவா? அந்த இளவரசியின் உடன்பிறந்த தம்பி தான் கிரிமிகண்டன். ஒரு காலத்தில், தன் சகோதரியைக் குணப்படுத்தியவர் ராமானுஜர் என்ற வகையில் அவன் இவர் மீது மதிப்பு வைத்திருந்தான். வந்தவரை ராமானுஜர் என்று நினைத்துக் கொண்ட அவன், ராமானுஜரே! தங்களுடன் வேறு எந்த விரோதமும் எனக்கில்லை. இவ்வுலகில் சைவம் மட்டுமே தழைக்க வேண்டும். சைவமே அனைத்துக்கும் அடிப்படை. சிவனே முழுமுதற் கடவுள். அவரையே தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் வழிபட வேண்டும், என்றான். கூரத்தாழ்வார் விடவில்லை. சிவனை விடவும் த்ரோணம் பெரிது என்றார் அவர். இவை அளவைகளைக் குறிக்கும். சிவன் என்றால் மரக்கால். த்ரோணம் என்றால் பதக்கு என்ற அளவை. மரக்காலை விட பதக்கு அளவில் கூடியது. திருமாலே உலகின் முதற்பொருள். அந்த பரந்தாமனின் திருவடிகளுக்கு மட்டுமே என் தலை வணங்கும், என்றார் ஆவேசமாக. அவ்வளவு தான். அங்கிருந்த சிவப்புலவர்கள் அவர் மீது பாய்ந்து விட்டனர். வாதப்பிரதிவாதம் வெகுநேரமாக நடந்தது.

மன்னனுக்கு ஆத்திரம். இப்போது மரியாதையை விடுத்து, யோவ் சாமியாரே! எங்கள் சிவனையா பழித்தீர். என் சகோதரியை குணப்படுத்திய நன்றிக்காக உம்மை உயிரோடு விடுகிறேன். சிவனை பெரியவர் என ஒப்புக் கொள்கிறீரா இல்லையா? என்றான் சிம்மாசனத்தில் இருந்து எழுந்தபடி. கூரத்தாழ்வார் அசையவில்லை. அவர் முற்றும் தெளிந்த ஞானி. ஞானிகள் உயிருக்கு அஞ்சுவதில்லை. என்ன நடந்தாலும் சரி, தூக்கு மேடைக்கே சென்றாலும் சரி...தன் வாதமே சரியென்பதில் அவர் தளர்ந்து கொடுக்கவே இல்லை. மன்னன் ஏவலர்களை அழைத்தான். இந்த திமிர் பிடித்தவனை இழுத்துச் செல்லுங்கள். இவன் தலையைக் கொய்தாலும் தவறில்லை. இருந்தாலும் செய்ந்நன்றி தடுக்கிறது. இவனது கண்களை பழுத்த கம்பி கொண்டு குத்தி குருடாக்கி விடுங்கள், என உத்தரவிட்டான். ஏவலர்கள் கூரத்தாழ்வரின் கண்களைக் குருடாக்கினர். அவர் அந்த ஏவலர்களிடம், என் சகோதரர்களே! கண்ணிருக்கும் போது தெரிந்த மாய உலகம் இப்போது மறைந்து முற்றிலும் பரந்தாமன் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறான். இதற்காக உங்களுக்கு நன்றி. நீவிர் பல்லாண்டு வாழ்க, என்றார். அவர் தங்களை வாழ்த்தியதைக் கண்ட அந்த காவலர்கள் அவர் மீது கருணை கொண்டு, ஒரு பிச்சைக்காரனை அழைத்து அவனுக்கு பணம் கொடுத்து, இந்த பெரியவரை ஸ்ரீரங்கத்தில் கொண்டு விட்டுவிடு, என்றனர். அவர்கள் ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தனர். இதற்குள் இங்கிருந்து தப்பிய ராமானுஜர், ஸ்ரீரங்கத்தின் மேற்கே இருந்த அடர்ந்த காட்டுக்குள் சீடர்களுடன் புகுந்தார். கால்களில் முள் தைத்தது. ஆங்காங்கே கற்குவயில் பதம் பார்த்தது. அவர்கள் களைத்து தாகம், பசியோடு காட்டில் சுற்றி, ஏதும் கிடைக்காமல் பாதி மயக்கத்தில் ஓரிடத்தில் அமர்ந்தனர். அப்போது காட்டுக்குள் இருந்து கும்பலாக ஒரு கூட்டத்தினர் கன்னங்கரேலென்ற நிறத்துடன் அவர்களை நோக்கி ஓடி வந்தனர்.

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:50 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 N39D1C9

கும்பலாக வந்தவர்கள் அந்த காட்டில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட குலத்தினர். அவர்களது கையில் பழங்களும், விறகும் இருந்தன. அவற்றை ராமானுஜர் முன்பு அவர்கள் வைத்தனர். ஜாதியில் தாழ்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது அன்பான காணிக்கையை ஏற்றுக்கொண்டார் ராமானுஜர். இதனிடையே ராமானுஜருக்குப் பதிலாக மன்னன் கிரிமிகண்டனிடம் சிக்கி கண்களை இழந்த கூரத்தாழ்வான், ராமானுஜரைத் தேடி வந்தார். இச்சம்பவத்துக்கு பிறகு கிரிமிகண்டன் இறந்து விட்டதாக அவர் அறிந்தார். ராமானுஜருக்கு இனி எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை உணர்ந்த அவர் ராமானுஜரை தரிசித்தார். தனக்காக கண் இழந்த கூரத்தாழ்வானை ராமானுஜர் அன்புடன் தழுவிக் ண்டார். கூரத்தாழ்வா! கலங்காதே, உனக்கு மீண்டும் கண் கிடைக்கும். நீ காஞ்சிபுரத்திற்கு சென்று வரதராஜப்பெருமாளிடம், கண்களை மீண்டும் தா எனக்கேள். அவன் உனக்கு கொடுப்பான்,என்றார். அதன்படியே கூரத்தாழ்வான் அங்கு சென்று கண்களைப்பெற்றார். இரண்டாண்டுகள் இப்படியே கழிந்தன. கூரத்தாழ்வான் நோய்வாய்ப்பட்டார். படுத்த படுக்கையான அவர் பெருமாளின் திருவடிகளை அடைந்தார். அவரது மறைவால் ராமானுஜர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார். கண்களில் நீர் பெருக,கூரத்தாழ்வானின் மகன் பராசர பட்டர் இனி உங்களது தலைவராக இருப்பார். அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்,என்று கூறி தலையில் மலர்க்கிரீடம் சூட்டினார். அவரை அணைத்துக் கொண்டு தன் சக்தி முழுவதையும் அவருக்குள் செலுத்தினார். இந்த சம்பவம் நடந்த போது ராமானுஜருக்கு 60 வயது ஆகியிருந்தது. அதன் பிறகு அவர் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. 120 வயது வரை அங்கேயே இருந்தார். ஒருநாள் தன்னுடைய சீடர்களிடம் பல ஆன்மிக ரகசிய தத்துவார்த்தங்கள் பற்றி விளக்கி கொண்டிருந்தார்.

திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மவுனமானவர், ஜடம் போல அசைவற்று இருந்தார். சீடர்கள் கலங்கிப்போனார்கள். அவரை அசைத்துப்பார்த்தும் பலனில்லாமல் போனது. பதைபதைப்புடன், அவர் சுயநினைவுக்கு வரும் வரையில் பொறுத்திருந்தனர். சற்று நேரம் கழித்து அவர் கண் திறந்த பிறகே, அவர்களுக்கு சென்ற உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. திடீரென ஜடநிலைக்கு சென்றது குறித்து அவர்கள் அவரிடம் விசாரித்தனர். அன்பர்களே! என்னை யாரோ கட்டிப்போட்டது போல இருந்தது. கண்மூடி அதுபற்றி சிந்தித்தேன். என்னையே மறந்து விட்டேன். நான் பிறந்த ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்பர்கள் எனக்கு ஒரு விக்ரகம் செய்துள்ளனர். கல்லால் செய்யப்பட்ட அந்த விக்ரகத்தை சற்று முன் பிரதிஷ்டை செய்து, அவர்களது அன்பால் என்னைக்கட்டிப்போட்டு விட்டனர். அதனால் தான் அப்படி இருந்தேன்,என்றார்.

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:51 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 6fpqQn4

இப்படி 120 ஆண்டுகள் இந்த உலகத்தில் ராமராஜ்யத்தை நடத்திய ராமானுஜர் பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்கு சித்தமானார். தன்னுடைய சீடர்கள் அனைவரையும் அழைத்து தன் கருத்தை சொன்னார். சீடர்களும் பக்தர்களும் அதைக்கேட்டு மனம் குலைந்தனர். கண்ணீர் விட்டு அழுதனர். ராமானுஜர் அவர்களை தேற்றினார். என் அன்புக்குரிய குழந்தைகளே! ஞானிகள் மரணம் கண்டு துன்பப்படுவதில்லை. ஆனால், நீங்கள் ஏதோ மயக்கத்தில் இப்படி நடந்து கொள்கிறீர்கள். மரணத்திற்காக யாரும் அழக்கூடாது,என்றார். சீடர்களால் ஆறுதல் அடைய முடியவில்லை. அழுது கொண்டே இருந்தனர். குருவே! உங்கள் பிரிவைத் தாங்கும் சக்தி எங்களிடம் இல்லை. இன்னும் சில நாட்களாவது எங்களோடு இருந்து அருள் செய்ய வேண்டும். உங்கள் திருமேனி இவ்வுலகில் வாழும் காலத்தை நீட்டிக்க வேண்டும்,என்றனர்.

ராமானுஜர் அவர்களிடம்,உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். ஆனால், இன்னும் 3 நாட்கள் மட்டுமே உங்களுடன் இருப்பேன்,என்றார். அந்த 3 நாட்களிலும் தன் சீடர்களுக்கு 74 போதனைகளை செய்தார். இந்த உபதேசங்களில் ஏதாவது ஒன்றையாவது பின்பற்றி நற்கதி அடைய வலியுறுத்தினார். இதைக்கேட்டபிறகு சீடர்களின் மனம் தெம்படைந்தது. மரணம் குறித்த பயம் நீங்கியது. அவர்கள் ராமானுஜரின் பாதங்களில் பணிந்து,குருவே! தங்கள் திருமேனி அழிந்தாலும் கூட அது அழியக்கூடாது. அத்திருமேனியைத் தினமும் தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு வேண்டும், என பணிவுடன் கேட்டனர். ராமானுஜர் அதற்கு ஒப்புக்கொண்டார். மூன்றே நாட்களில் அவரைப்போன்ற சிலை வடிக்கப்பட்டது. அந்த சிலையை காவிரியில் நீராட்டினர். அதை ஒரு பீடத்தில் நிலை நிறுத்தினர். தன் சீடர்களிடம்,அன்புக்குழந்தைகளே! இது எனது இரண்டாவது ஆத்மா. நானும் இந்த வடிவமும் ஒன்றே. எனது நிஜமான திருமேனி வயது காரணமாக மெலிந்து விட்டது. எனவே இந்த புதிய திருமேனியில் நான் குடியிருக்கப் போகிறேன்,என்றார். தனது தலையை தனது சீடர் கோவிந்தன் எனப்படும் எம்பாரின் மடியில் சாய்த்துக்கொண்டார். திருவடிகளை மற்றொரு சீடரான வடுகநம்பியின் மடியில் வைத்தார். தனது குருவான ஆளவந்தாரின் இரண்டு பாதுகைகளையும் பார்த்தபடியே தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நிலையிலேயே பரமபதத்தை அடைந்தார். அன்று சக ஆண்டு 1059 (கி.பி. 1137) மாசி மாதம் வளர்பிறை தசமி திதியாகும். இதன் பிறகு அவர் நியமித்த பராசர பட்டரின் தலைமையில் வைணவர்கள் ராமானுஜரின் நல்லாசியுடன் எம்பெருமானுக்கு திருத்தொண்டு செய்து பேறு பெற்றனர்.

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:53 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 NVr6NL5

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:54 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 Y6yb0Y9

ஸ்ரீமத்ராமானுஜர் 120 வருடங்கள் வாழ்ந்தார். அதில் கடைசி 60 வருடங்கள் ஸ்ரீரங்கத்திலே இருந்து விட்டார். இறுதியாக ஸ்ரீரங்கநாதனிடம் இந்த உடலில் இருந்து விடுதலை கேட்டார். ஸ்ரீரங்கநாதன் முதலில் மறுத்தாலும் பின்னர் சரி என்று பதிலளித்தார். அந்த நாள் சந்தோஷமாக மடத்திற்கு வந்து தன்னுடைய விருப்பத்தை சிஷ்யர்களுக்கு சொன்னார். அவர்களுக்கு அடக்க முடியாத துக்கம் வந்தது. ராமானுஜர் அவர்களை சமாதனப்படுத்தி அவர்களனைவரையும் இரவில் அழைத்து சந்தித்து தனது சரமச்செய்தியை இவ்விதமாகக் கூறினார்.

நீங்கள் மந்திரோபதேசம் செய்த குருவினை எவ்வாறு கவுரவிப்பீர்களோ அவ்வாறு ஸ்ரீவைஷ்ணவர் (விஷ்ணு பக்தர்)களை கவுரவிக்க வேண்டும். பூர்வாசிரியார்களின் உபதேசங்களை முழுமையாக நம்பவேண்டும். நீங்கள் எப்பொழுதும் இந்திரியங்களுக்கு அடிமையாகக் கூடாது. லோக ஞானத்தில் திருப்தி கொள்ளக்கூடாது. பகவானின் அனந்த கல்யாண குணங்கள், அவருடைய படைப்புகளில் உள்ள தொடர்புகளை குறிப்பிடும். கிரந்தங்களை தினமும் படித்தல் வேண்டும். உங்கள் குருவின் மூலம் ஞானோதயம் ஏற்பட்டால் உங்களிடமுள்ள தீயக்குணங்கள் தானாக குறைந்து விடும். உங்களுடைய விருப்பங்களை ஆலோசனைகளை அலட்சியம் செய்வதை கட்டுப்படுத்த வேண்டும்.

பகவான் நாம சங்கீர்த்தனம், குண சங்கீர்த்தனம் எப்படி செய்கிறோமோ அதேபோல் பக்தர்கள் மீதும் நாம சங்கீர்த்தனம், குண சங்கீர்த்தனம் செய்தல் வேண்டும். பக்தர்களுக்கு சேவை செய்பவர்கள் துரிதமாக பகவான் பாதையை சேர்வார்கள். பகவானுக்கு, பக்தர்களுக்கு சேவைகள் செய்யாவிட்டால் மோட்சம் கிடைக்காது. ஸ்ரீவைஷ்ணவராக பிறத்தலால் மட்டும் எவ்விதமான நன்மைகள் இல்லை. குடும்ப பாசபந்தங்களிலிருந்து விடுபட்டு பகவான் நினைவாகவே இருத்தல் வேண்டும்.

உங்களுக்கு உபதேசம் செய்த குருவின் மகிமைகளை தினமும் ஒரு மணி நேரமாவது நினைத்தல் வேண்டும். தினந்தோறும் ஆசாரியர் மற்றும் ஆழ்வார்கள் திவ்ய கிரந்தங்களை படித்தல் வேண்டும். பிரபத்திமார்க்கத்தில் இருப்பவர்களை நண்பர்களாக செய்து கொள்ளுதல் வேண்டும். பிரபத்தி மார்க்கமல்லாத மார்க்கத்தில் செல்லுதல் கூடாது. செல்வம் சேர்க்கின்றவர்களுடனும், தீய நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுடனும் நட்பு கூடாது. பகவானிற்கு சேவையை செய்யும் பக்தர்களுடன் நட்பு கொள்ள வேண்டும். குலம் பிரிவினை பார்த்து ஒருவரை மதிப்பிடக்கூடாது. திவ்ய தேசங்களில் உள்ள விக்ரஹங்களை வெறும் சிலைகளாகவும், நமக்க மந்திரோபதேசம் கற்று கொடுத்த குருவினை வெறும் மனிதனாகவும், பக்தர்களின் பாபங்களை போக்குகின்ற ஸ்ரீபாத தீர்த்தத்தினை வெறும் நீராகவும், சர்வஜகத் நாராயணனை இதர தெய்வங்களுடன் ஒப்பிடுபவர்கள் நரகத்திற்கு செல்லுவார்கள் என்பதை உணர வேண்டும்.

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:56 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 HBOmsz2
எங்களுடைய இறுதி காலத்திற்கு முன்னர் வரை நாங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று சிஷ்யர்கள் கேட்க அதற்கு இராமாநுஜர் பதிலளித்தார்.

முழுமையாக தெய்வத்தை நினைப்பவர்கள் தம்முடைய வருங்காலத்தை நினைத்தல்கூடாது. நீங்கள் பகவானின் சொத்து. ஆகையால் அவரே உங்களுடைய நன்மை, தீமைக்கு முழுபொறுப்பாவார். உங்களுக்காக நீங்களே வருந்தினால் அது எதற்கும் உதவாமல் போய்விடும். அது உங்களிடம் உள்ள குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்தும். உங்கள் வாழ்க்கை உங்களுடைய பூர்வ ஜென்ம கர்மத்தின் அடிப்படையில் அமைகிறது. அதில் அவனைப் பற்றி அறிய வேண்டிய அவசியமில்லை. உங்கள் பணிகளை உங்கள் கடமைகளுக்காக மட்டுமல்லாமல் பகவத் சேவையின் பகுதியாக நினைத்தல் வேண்டும்.

ஸ்ரீபாஷ்யம் படித்து மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும். இது மிகவும் பகவானுக்கு விருப்பமான ஒன்றாகும். இது சாத்தியமில்லாத போது சடகோப முனிவர் எழுதிய இதர கிரந்தங்களை படித்து, தகுந்த சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது. இது சாத்தியமில்லாதபோது புண்ணிய க்ஷேத்திரங்களில் பகவத்சேவை செய்தல் வேண்டும். இது சாத்தியமில்லையெனில் ஓர் குடில் அமைத்து அமைதியாக வாழ்க்கை நடத்த வேண்டும். இதுவும் முடியவில்லையெனில் நீங்கள் இருக்குமிடத்தில் த்வய மந்திரத்தை ஜபித்து கொண்டிருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட எதுவும் சாத்தியமில்லையெனில் பக்தி, ஞானம், வைராக்கியம் உள்ள ஸ்ரீவைஷ்ணவரிடம் சென்று உங்களிடம் அவருடைய தயை இருக்கும்படி நடந்து கொள்ளுதல் வேண்டும். ஒரு துளி கோபம், அகந்தை கூட இல்லாமல் அவர்கள் சொல்லுவதை செய்தல் வேண்டும். இதுவே மோட்சத்தின் மார்க்கம்.

தொலைநோக்குப் பார்வையால் உங்களுடைய நண்பர்கள், பகைவர்கள், உதாசிணப்படுத்துபவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். விஷ்ணு பக்தர்கள் உங்களுடைய நண்பர்கள். பகவானை நினைக்காதவர்கள் உங்களுடைய பகைவர்கள் (அ) எதிரிகள். உலக வாழ்க்கையே முக்கியம் என்று வாழ்பவர்கள் உதாசிணப்படுத்துபவர்கள். உங்கள் நண்பர்களை பார்த்தால் நிறைந்த தாம்பூல தட்டினை பார்த்தது போல் மகிழ வேண்டும். பகைவர்களைப் பார்த்தால் அக்னி நல்லது திருடனைப் பார்த்ததுபோல் பயப்பட வேண்டும். ஸ்ரீவைஷ்ணவரோடு இருப்பது உங்களுக்கு ஆன்மீக உயர்நிலையை அளிக்கும். நீங்கள் பகைவர்களுடன் ஒரு பொழுதும் பழக வேண்டாம். அவர்களை கவுரவித்தலால் கிடைத்திடும் நன்மைக்காக அவர்களிடம் பழகத் தேவையில்லை. அவ்வாறு பழகினால் பகவானுக்கு எதிரியாவது உறுதி. எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நடவடிக்கைகள் தூய்மையாக இருக்கும். மற்றவர்களிடம் குறைகளைத் தேடாதீர்கள். குறையில்லா மனிதன் இல்லை. மற்றவர்களிடம் குறை தேடும் அதிகாரம் எவருக்கும் இல்லை. உங்களுக்கு தேவையானவை எல்லாம் இறைவன் கொடுப்பான் என்ற நம்பிக்கை கொண்டு இருத்தல் வேண்டும்.

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:

என்கிற பகவான் வாக்கின்படி நம்பிக்கை கொள்ள வேண்டும். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:59 am

இனி ராமானுஜர் பற்றிய கதைகள் சிலவற்றாய்ப் பார்ப்போம்புன்னகை

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 LYxab4V

திருமலை திருப்பதியில் ராமானுஜர் தம் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது மோர் விற்கும் பெண்மணி ஒருத்தி சென்று கொண்டிருந்தாள். அவளிடம் குடிப்பதற்கு மோர் கேட்டனர் சீடர்கள். அவளும் விலை ஏதும் சொல்லாமல், சீடர்களுக்கு வேண்டிய அளவுக்கு மோர் கொடுத்தாள். ராமானுஜரையும், சீடர்களையும் கண்ட அவளுக்கு மனதிற்குள் தானும் இவர்களைப் போல பக்தியில் லயித்து முக்தி பெற வேண்டும்  என்ற எண்ணம் உண்டானது. ராமானுஜர் அவளிடம், “மோர் என்ன விலை?” என்று கேட்டார். “சுவாமி! எனக்கு காசு வேண்டாம். பெருமாளுடன்  வாசம் செய்யும் பரமபதத்தில் மோட்சம் பெற வழிகாட்டுங்கள்” என்று கேட்டாள். “உனக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும். ஆனால், மோட்சத்தை  வழங்கும் தகுதி தான் எங்களுக்கு இல்லை.

திருமலையின் மேலே நம் எல்லோரு க்கும் மோட்சம் தரும் பெருமாள் அமர்ந்திருக்கிறார். அவரிடம் போய் கேள்!” என்றார் ராமானுஜர். “சுவாமி!  திருமலையில் இருக்கும் பெருமாள் வாய் திறந்து பேச மாட்டாரே! நீங்கள் தான் எனக்காக சிபாரிசு ஓலை தரவேண்டும்” என்றாள். ராமானுஜரும் மோர் விற்கும் இடைச்சியின் நம்பிக்கையை மதித்து சிபாரிசு கடிதம் ஒன்றினை திருமலை திருப்பதி பெருமாளுக்கு எழுதத் தொடங்கினார். சீடர்கள்  அனைவரும் வேடிக்கை செய்கிறாரா, விநோதம் செய்கிறாரா என்று புரியாமல் விழித்தனர். ராமானுஜரின் சீட்டோலையை வாங்கிய மோர் விற்கும்  பெண், திருமலைக்கு புறப்பட்டாள். பெருமாளின் சன்னதி அர்ச்சகர்களிடம் ஓலையைக் கொடுத்தாள். “இது என்ன சீட்டோலை?” என்று அவர்கள்  கேட்டனர். ராமானுஜர் எழுதிய ஓலை என்பதை அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பெருமாளின் திருமுன் சமர்ப்பித்தனர். பெருமாளே கைநீட்டி  ஓலையை எடுத்துக் கொண்டு,“உனக்கு மோட்சம் கொடுத்தேன்” என்றார். அப்போது வானில் ஒரு பிரகாசமான விமானம் ஒன்று வந்தது.  விஷ்ணுதூதர்கள் மோர் விற்கும் பெண்ணை ஏற்றிக் கொண்டு பரமபதம் கிளம்பிவிட்டனர்.

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 5 4zxfNi6

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக