புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
24 Posts - 53%
heezulia
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 2%
nahoor
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
78 Posts - 73%
heezulia
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
prajai
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
nahoor
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Barushree
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:00 pm

First topic message reminder :

இந்தக் கட்டுரை ஜகத்குரு ராமானுஜரின் ஆயிரமாவது வருடத்தை முன்னிட்டு தினமலரில் வெளிவந்தது. இதை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 HppFuRE


சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோயில்...சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப்பெருமாள்...அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர்.  இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:10 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 WeFJZl7

ராமானுஜர் அப்படி என்ன தான் பேசினார், அங்கு என்னதான் நிகழ்ந்தது? ராமானுஜர் பேச ஆரம்பிக்கிறார். நான் திருமாலின் நெறியில் வாழ்வேன். மக்களின் அறிவின்மையை போக்குவேன். அவர்களுக்கு, வலது தோளில் சக்கரத்தையும், இடதுதோளில் சங்கையும் வேதமந்திரம் கூறி முத்திரையாகப் பதிப்பேன். திருமாலின் 12 நாமங்களைச் சொல்லி திருமண் கொண்டு நாமம் இடுவேன். தொண்டர்களைக் கவுரவிக்க வைணவப் பெரியவர்களின் பெயர் வைப்பேன். சீடர்களுக்கு திருமாலை வழிபட வேண்டும் என ஆணையிடுவேன். மந்திர உபதேசம் செய்து வைப்பேன், என்றதும், ஆளவந்தாரின் மடங்கியிருந்த ஒரு கைவிரல் விரிந்து நேராக நின்றது. ஆ...இது என்ன பேரதிசயம். இந்த இளைஞர் பேச ஆரம்பித்ததும், இறந்து போனவரின் கைவிரல் விரிகிறதென்றால், இதை விட என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? என சீடர்களெல்லாம் விக்கித்து நின்றனர். மீண்டும் ராமானுஜர் பேசினார். மக்களைப் பாதுகாக்க தத்துவ ஞானத்தை தொகுத்து ஸ்ரீபாஷ்யம் இயற்றுவேன், என்றதும், மூடியிருந்த இன்னொரு விரல் நேரானது. விஷ்ணு புராணத்தை எழுதியருளிய பராசர முனிவரின் பெயரை, படித்த வைணவர் ஒருவருக்கு வைப்பேன், என்றதும் மூடியிருந்த மூன்றாவது விரலும் நேராக நின்றது. இந்த அதிசயம் நிகழ்ந்ததும், ஆளவந்தார் போல இவரே ஒரு காலத்தில் வைணவர்களின் தலைவர் ஆவார் என அங்கிருந்தோரெல்லாம் பேசிக் கொண்டனர். பின்னர் ராமானுஜர் ஊர் திரும்பி விட்டார். ஆனால், அவரிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு இளைஞருக்குரிய எவ்வித நடவடிக்கையும் இல்லாமல், ஏதோ முதிர்ச்சியுடன் நடந்து கொண்டார். பெரும்பாலான நேரத்தை திருக்கச்சி நம்பியுடன் கழித்தார். குடும்பத்தை கவனிக்காததால், அவரது மனைவி தஞ்சமாம்பாள் வருத்தமடைந்தார். அவருக்கு கோபம் பொங்கியது. ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். வீட்டுப் பொறுப்பை தனித்து ஒரு பெண்மணி கவனித்துக் கொள்வது என்பதும் சிரமம்தானே! ஆனாலும், ராமானுஜர் தன் போக்கில் சென்று கொண்டிருந்தார்.

தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி திருக்கச்சி நம்பியிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். அவரும், நீர் பிராமணர், நான் வேளாளன், என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், ராமானுஜர் அவரிடம், என்னைத் தாங்கள் சீடனாக ஏற்காததன் காரணம், நான் அதற்கு தகுதியற்றவன் என்பதால் தானே, என்றும் சொல்லிப் பார்த்தார். நம்பி அவருக்கு ஆறுதல் கூறினார். ராமானுஜரே! வருத்தம் வேண்டாம். நம் வரதராஜனிடம் பக்தி கொள்ளுங்கள். இப்போது போலவே, பெருமாளின் அபிஷேகத்திற்கு சாலக்கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வாருங்கள். ஆளவந்தாரிடம், நீங்கள் செய்த உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு தகுந்த குருவை இறைவன் வெகு விரைவில் தருவார், என்றார். ராமானுஜருக்கோ அவர் தன்னை சீடனாக ஏற்க மறுப்பதை பொறுத்துக் கொள்ளவே இல்லை. ஜாதியின் பெயரால் இவர் ஒதுங்கிக் கொள்வதை என்னால் ஏற்க முடியவில்லை. இறைவனிடம் நேரில் பேசும் ஒருவர் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தால் என்ன! இவரை என் குருவாக்கியே தீருவேன். அதற்குரிய வழியைக் கண்டுபிடிப்பேன்,எனக் கருதியவராய், ஒருநாள் தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து, வேளாளரான அவர் சாப்பிட்டு மீதம் வைப்பதை பிரசாதமாகக் கருதி, தான் உண்டுவிட்டால், அவர் நம்மைப் பாராட்டி, சீடனாக ஏற்றுக்கொள்வார் என்பது அவரது திட்டம். திருக்கச்சிநம்பி விருந்துக்கு வர மனமுவந்து ஒத்துக் கொண்டார். தங்களைப் போன்றவர்கள் வீட்டில் அமுதுண்ண அடியேன் கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்று ராமானுஜரிடம் சொன்ன அவர், குறித்தநாளில் வீட்டுக்கு வந்து விட்டார்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:11 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 ELfQHvU

தஞ்சமாம்பாளிடம் ராமானுஜர், திருக்கச்சிநம்பி தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரப்போகும் தகவலைச் சொன்னார். ஆனால், நம்பி சாப்பிட்ட பிறகு, அவர் மீதம் வைப்பதை சாப்பிடப் போகிறேன் என்பதைச் சொல்லவில்லை. பிராமணர் என்ற தங்கள் அந்தஸ்து இதன் மூலம் குறையக்கூடும் என மனைவி தடுத்து விட்டால் என்னாவது என்பது அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

வருபவர் திருப்தியாக சாப்பிட வேண்டும் என்பதற்காக மிகச்சிறந்த உணவாக அமைய வேண்டும், பட்சணங்கள் சில இருக்க வேண்டும் என்றெல்லாம் மனைவிக்கு உத்தரவாயிற்று. மறுநாள் அதிகாலையே தஞ்சாம்பாள் கணவரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பலவகை உணவு சமைத்தார். ராமானுஜர் நம்பியை அழைத்து வருவதாக சொல்லி வெளியே கிளம்பிவிட்டார். ராமானுஜர் தனது எச்சிலை சாப்பிடப் போகிறார் என்ற தகவல், பெருமாளுக்கு ஆலவட்டம் வீசிக் கொண்டிருந்த திருக்கச்சிநம்பிக்கு தெரிந்து விட்டது. பெருமாளுடன் பேசிக்கொள்பவராயிற்றே அவர்! அவரிடம் பெருமாள், நம்பி! உன் சீடனாக விரும்பும் ராமானுஜன், நீ வைக்கும் எச்சிலை சாப்பிட முடிவு செய்திருக்கிறான். நீ என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள், என்று நமுட்டு சிரிப்புடன் கூறிவிட்டான், அந்த குறும்புக்காரன். விடுவாரா நம்பி! அடடா! இந்த சிறுவன் ராமானுஜனுக்கு தான் நம்மீது எவ்வளவு பக்தி, அந்த பிராமணன் நம் எச்சிலை சாப்பிட்டால், பாவத்தை அல்லவா சுமக்க வேண்டி வரும். வேண்டாமப்பா, வேண்டாம். ஏதாவது ஓர் உபாயம் செய்து, என் இலையில் இருக்கும் எச்சிலை சாப்பிட விடாமல் செய்து விட வேண்டும், என முடிவெடுத்தார். ராமானுஜர் தன்னை அழைக்க, ஆஸ்ரமத்துக்கு போய் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் வீட்டுக்கு திரும்புவதற்குள், விருந்தை முடித்து விட வேண்டுமெனக் கருதி, வேறொரு வழியில் ராமானுஜரின் வீட்டுக்கு சென்றார். தஞ்சமாம்பாள் இருவரின் வரவுக்காகவும் காத்திருந்தார். நம்பிகள் ஒன்றும் தெரியாதவர் போல, அம்மா! தங்கள் கணவரை எங்கே? என்றார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:13 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 60UPRnI

சுவாமி! அவர் உங்களைத்தானே தேடி வந்தார், என்றார் தஞ்சமாம்பாள். சரியம்மா! எனக்கு உணவைக் கொடுங்கள். நான் சாப்பிட்டு விட்டு கிளம்புகிறேன். பெருமாள் கைங்கர்யத்துக்கு அவசரமாக செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் அது தாமதமாகக் கூடாது, என்றார். திருக்கச்சிநம்பி, எதற்காக அவசரப்படுகிறார் என்பது தஞ்சாம்பாளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர் வேகமாக உணவைப் பரிமாறினார். திருக்கச்சிநம்பி, பெயருக்கு சாப்பிட்டு விட்டு, அவர் கையாலேயே இலையை எடுத்து வெளியே போட்டு விட்டு, ராமானுஜர் வீட்டுக்கு வருவதற்குள் வெளியேறி விட்டார். பிராமணர் அல்லாத ஒருவர் தன் வீட்டில் சாப்பிட்டதால், தஞ்சமாம்பாள் வழமை போல, அவர் சாப்பிட்ட இடத்தைக் கழுவிவிட்டு, மிச்சம் மீதியை வெளியே கொட்டிவிட்டு, மீண்டும் ஒருமுறை குளித்து, புதிதாக சமையலை தொடங்கி விட்டார். வெளியே சென்ற ராமானுஜர், அவசர அவசரமாய் வீடு திரும்பினார். தஞ்சா...தஞ்சா...நம்பி இங்கு வந்தாரா? அவசர அவசரமாகக் கேட்டார். ஆமாம் சுவாமி! அவர் உணவருந்தி விட்டு, அவசரமாக பெருமாள் கைங்கர்யம் இருப்பதாக சொல்லி சென்றுவிட்டார். அவர் சாப்பிட்ட இலையை அவர் கையாலேயே தூக்கி வீசிவிட்டார். வேளாளருக்கு போட்ட மிச்சத்தை உங்களுக்கு எப்படி பரிமாறுவது? அதை வேலைக்காரிக்கு கொடுத்து விட்டு, வீட்டைக்கழுவி, புதிதாக தங்களுக்கு சமைத்துக் கொண்டிருக்கிறேன், என்றார். ராமானுஜருக்கு கோபமே வந்து விட்டது.

அடிப்பாவி! என்ன காரியம் செய்தாய்? அவர் சாப்பிட்ட எச்சத்தை தின்றாவது, அவருக்கு சீடனாக முயன்றேனே! அத்தனையையும் கெடுத்து விட்டாயே! அவர் எவ்வளவு பெரிய மகான். ஜாதியில் வேளாளராயினும், பெருமாளிடமே நேரில் பேசுபவராயிற்றே. பெருமாளே ஒருவரிடம் பேசுகிறார் என்றால், அவருக்கு ஏதடி ஜாதி! அவர் அமர்ந்த இடத்தை கழுவிவிட்டதாகச் சொல்லி தீராத பழி தேடிக் கொண்டாயே! என திட்டித் தீர்த்தார் பின்னர் வருத்தத்தில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இங்கிருந்து தப்பிய திருக்கச்சிநம்பி, நேராக வரதராஜனிடம் சென்றார். பெருமாளே! பேரருளாளா! இதென்ன சோதனை! நான் காலமெல்லாம் உனக்கு ஆலவட்டம் வீசி சேவித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். நீயோ, என்னை ராமானுஜருக்கு குருவாக்க விரும்புகிறாயே! அவர் சாதாரணமானவரா? ராமபிரானின் தம்பியான லட்சுமணனின் அவதாரம் அல்லவா? அவருக்கு குருவாகும் தகுதி எனக்கேது? அவர் என்னை வீட்டுக்கு வரழைத்து, நான் உண்ட எச்சத்தை சாப்பிட்டு, என்னை குருவாக ஏற்று, பெரிய மனிதனாக்க பார்க்கிறார். உன் அடியவர்களுக்கு தொண்டு செய்ய விரும்பும் என்னை ஒரு அடியவனாக்கி, எனக்கு தொண்டு செய்ய ராமானுஜர் விரும்புகிறாரே! இனி கொஞ்சநாள் நான் இங்கிருக்கக்கூடாது. திருமலையில் வேங்கடாஜலபதியாய் காட்சி தரும் உன் திருமுகத்தை சேவித்தபடி, அங்கேயே சில காலம் தங்கி விடுகிறேன். அதற்கு அனுமதி கொடு, என்று பெருமாளிடம் பிடிவாதமாய்க் கேட்டார். பெருமாள் தான் இவரிடம் பேசுபவர் ஆயிற்றே. இவரது சொல் கேட்க மறுத்தால், பக்திக்கே களங்கமாகி விடும் என்பதை அவர் அறியாதவரா என்ன? அந்த மாயக்காரன் அனுமதி கொடுத்து விட்டான்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:13 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 AspfJOB


சரி...நம்பி, எங்கிருந்தாலும், நீர் எனக்கு தான் சேவை செய்யப் போகிறீர். திருமலைக்கு வாருமே, என பச்சைக்கொடி காட்டிவிட்டார். திருக்கச்சிநம்பியும் திருமலைக்கு சென்றுவிட்டார். ராமானுஜர் நம்பி திருமலைக்கு சென்ற தகவல் அறிந்து, அவர் வருகைக்காக காத்திருந்தார். இதனிடையே காஞ்சிபுரத்தில் கடும் வெயில், பேரருளாளன் வரதராஜனும் வெப்பத்திற்கு தப்பவில்லை. நம்பி திருமலைக்கு போய் ஆறுமாதம் கழிந்து விட்டது. ஒருநாள் வேங்கடவன் அவரிடம், நம்பி! நீ காஞ்சிபுரத்துக்கே வா. இங்கே நான் கடும் வெயிலால் அவதிப்படுகிறேன். இச்சமயத்தில், நீ என் அருகில் இருந்து ஆலவட்டம் வீசினால், வெப்பத்தின் பிடியில் இருந்து தப்புவேன் அல்லவா? என்றார். குளிர்ந்த மேனியைக் கொண்ட அந்த கள்வனின் நாடகத்தைத்தான் பாருங்களேன். பொறுக்குமா நம்பிக்கு...ஆ...வரதராஜா! இதோ, இந்தக் கணமே கிளம்பி விடுகிறேன். அவர் கிளம்பி விட்டார். ராமானுஜர் அவர் வந்ததை அறிந்து மகிழ்ச்சியுடன் சென்று சந்தித்து பேசினார். நீண்ட நேரமாக பரமனின் புகழ் பேசிக் கொண்டிருந்தனர். ராமானுஜர் அவரிடம் சில சந்தேகங்களைச் சொன்னார். அந்த ஆன்மிக சந்தேகங்களுக்குரிய பதிலை பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்களேன் என திருக்கச்சிநம்பியிடம் அவர் கூறினார். நம்பியும் கோயிலுக்குச் சென்று, பெருமாளிடம் பேசிக் கொண்டிருந்த போது, ராமானுஜர் கேட்ட கேள்விகளை அடுக்கினார். பெருமாளும் பதில் சொன்னார். நம்பி மறுநாள் ராமானுஜரை அழைத்து, ராமானுஜரே! தங்கள் கேள்விக்கு பேரருளாளன் பதில் சொன்னார். அது மட்டுமல்ல, இதை உடனடியாக உங்களிடம் சொல்லியாக வேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார், என்றார். ராமானுஜர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன...பெருமாள் என் பெயரைச் சொல்லி, என்னிடமே சொல்லச் சொன்னாரா? நான் செய்த பாக்கியம் தான் என்னே! சொல்லுங்கள் சுவாமி! அதைக் கேட்க நான் ஆவலாயிருக்கிறேன், என்றார். திருக்கச்சி நம்பி, பெருமாள் சொன்னதையெல்லாம் ஒவ்வொன்றாய் சொல்ல, ராமானுஜர் பரவசத்தின் உச்சிக்கே போய்விட்டார்.பேரருளாளா! என் சந்தேகம் தீர்ந்தது, சந்தேகம் தீர்ந்தது, என ஆவேசமாய் கத்தி னார். தன்னை மறந்து ஆடினார். அப்படி என்ன தான் சொல்லியனுப்பினார் பெருமாள்?
தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:14 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 FcfLvYm

திருக்கச்சிநம்பி ராமானுஜரிடம் பெருமாள் சொன்ன விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். நானே அனைத்தும்; நானே பரப்பிரம்மம். ஜீவர்களுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் உறுதியாக இருக்கிறது. இனியும் பிறக்காமல் முக்தியடைய வேண்டுமென விரும்புவோர், என்னையே சரணமடைய வேண்டும். சரணாகதி தத்துவமே உயர்ந்தது. ஒருவன் இறக்கும் சமயத்தில் என்னை நினைக்க மறந்து விட்டாலும் பரவாயில்லை; காலமெல்லாம், அவன் என் பக்தனாய் இருந்ததற்காக அவனுக்கு நிச்சயமாக முக்தி அளிப்பேன். அவர்கள் இறந்தவுடனேயே வைகுண்டத்தை அடைந்து விடுகிறார்கள். பெரிய நம்பியே இனி உனக்கு குரு. அவரது திருவடிகளைப் பற்றிக் கொள்,. இதுதான் ராமானுஜருக்கு, பெருமாள் சொல்லி அனுப்பிய விஷயம். ராமானுஜரோ குருவைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர். வைணவத்தலைவர் ஆளவந்தாருக்கு அடுத்தபடியாக பெரியநம்பி பெரிதாக மதிக்கப்படுபவர். பெருமாளே அவரைப் பற்றிக் கொள் என கூறியபிறகு, இனி குருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாக அவர் மகிழ்ச்சிக் கூத்தாடினார். தனக்காக பெருமாளிடம் பேசி தன் சந்தேகத்தை தீர்த்து வைத்ததுடன், ஒரு குருவையும் அடைய வழிகாட்டிய திருக்கச்சிநம்பியின் கால்களில் விழப்போனார் ராமானுஜர். அவர் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், சுவாமி! தங்களை விட பூமியில் உயர்ந்தவர் யாருமில்லை, என்றவாறு அவர் கால்களில் விழுந்துவிட்டார். இந்தக் கணத்தில் இருந்து ராமானுஜர் வீட்டை மறந்தார். மனைவியை மறந்தார். சொந்தபந்தம் எதுவும் நினைவுக்கு வரவில்லை. வீட்டில் சொல்லிக் கொள்ளாமலேயே ஸ்ரீரங்கத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நேரத்தில் ஸ்ரீரங்கமடத்தில் ஆளவந்தாருக்கு பிறகு மடத்தின் பொறுப்பில் இருந்த திருவரங்க பெருமாள் அரையர் சிஷ்ய கோடிகளிடையே பேசிக் கொண்டிருந்தார். ஆளவந்தார் வேத விளக்கங்களில் கரை கண்டவர். அரையரும் இதில் வல்லுநர் தான் என்றாலும், ஆளவந்தாரின் அளவுக்கு தேர்ந்தவர் அல்ல. எனவே அவர் சிஷ்யர்களிடம், சீடர்களே! நீங்கள் என்னிடம் மரியாதை வைக்கும் அளவுக்கு நான் உயர்ந்தவன் அல்ல. பரமனுக்கு பூஜை செய்கிறேன்; அவன் புகழ் பாடுகிறேனே ஒழிய ஸ்ரீஆளவந்தாருக்கு பிறகு, அவரைப் போலவே வேத விளக்கங்களை உங்களுக்கு என்னால் தர முடியவில்லை. இவ்விஷயத்தில் மிகவும் அற்ப சக்தியுள்ளவனாகவே இருக்கிறேன். வேத விளக்கங்களில் விற்பன்னரான, ஒருவர் நமது மடத்துக்கு தலைவராக வேண்டும். நானும், அவரது தலைமையின் கீழ் செயல்பட வேண்டும்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:14 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 AXl18nM


ஆளவந்தார் முக்தியடைவற்கு முன்பு, ராமானுஜரை அழைத்து வரச் சொல்லியிருந்தார். அவரே, ஒருவரை அழைக்கிறார் என்றால், அந்த மகான் கல்வியில் மிகச்சிறந்தவராகவும், வேத விளக்கங்களை தெளிவாக அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இளைஞராயினும் கூட, அவரது தலைமையின் கீழ் இந்த மடம் செயல்படுவதே சரியானதென்று எண்ணுகிறேன். யாராவது ஒருவர் அவரைச் சந்தித்து, அவரை இங்கு அழைத்து வாருங்கள். ஆளவந்தார் மறைந்த நாளில் அவர் இங்கு வந்தார். அப்போது அவர் பேசப்பேச ஆளவந்தாரின் கை விரல்கள் நிமிர்ந்ததை என்னால் மறக்க முடியவில்லை, என்றார்.

நமது மகான்களின் வரலாறை இளைய தலைமுறை கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது இதனால் தான். இப்போதெல்லாம், ஒன்றும் தெரியாதவர்கள் பலர் பதவிக்காக போட்டி போட்டு, தங்களையும் அழித்துக் கொண்டு, தாங்கள் சார்ந்துள்ள நிறுவனங்களையும் அழித்து விடுகிறார்கள். தெரியாத ஒன்றை தெரிந்தது போல் காட்டி நாடகமாடும் வழக்கம் மகான்களிடம் இல்லை. அரையர் போன்றவர்களின் வரலாறை சிறுவயதில் படித்திருந்தால், இந்நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்காது. இதை சீடர்கள் எல்லாரும் ஏற்றனர். ராமானுஜரை அழைத்து வர பெரியநம்பியை அனுப்புவது என முடிவாயிற்று. சீடர்கள் பெரியநம்பியிடம், சுவாமி! தாங்கள் ராமானுஜரை அழைத்து வாருங்கள். ஒருவேளை ராமானுஜர் இப்போதே வரத் தயங்கினால் அவரை வற்புறுத்த வேண்டாம். அரங்கநாதனின் சித்தப்படி அவர் எப்போது வரவேண்டுமென உள்ளதோ, அப்போதே வந்து சேரட்டும். ஆனால், நீங்கள் உடனடியாகத் திரும்பி விட வேண்டாம். ஒரு ஆண்டு ஆனாலும் பரவாயில்லை. காஞ்சிபுரத்திலேயே தங்கியிருந்து, திவ்ய பிரபந்தங்களைக் கற்றுக் கொடுங்கள். அவர் இன்னும் பல விஷயங்களில் தேர்ச்சி பெறட்டும். அவரை தலைவராக்க உள்ளோம் என்ற செய்தியையும் அவர் இங்கு வரும் வரை சொல்ல வேண்டாம், என்றனர். அந்த மடத்தில் திருமணமான சீடர்கள் சிலரும் இருந்தனர். ஆனால், ஊருக்கு வெளியே அவர்களை குடி வைத்திருந்தார்கள் சீடர்கள். பெரியநம்பியும் திருமணமானவர். அவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார். செல்லும் வழியில் மதுராந்தகம் கோயிலில் தங்கினார். கோயில் குளக்கரையில் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது, ஒரு இளைஞன் அவர் திருவடியில் விழுந்து வணங்கினான். யார் இவன்? முன்பின் தெரியாத ஊரில், முன்பின் தெரியாத இந்த இளைஞன் காலடிகளில் விழுந்து கிடக்கிறானே! பெரியநம்பி அவனை, எழுந்திரப்பா! நீ யார்? என்றார்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:17 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 FuOub0H



பெரியநம்பியின் காலில் விழுந்த இளைஞர் எழுந்தார். ஆஹா...தெய்வசித்தம் என்பது இதுதானோ? யாரைத் தேடிப் போகிறோமோ, அவர் எதிரே வந்து விட்டால், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி என்போம். அந்நிலையில் தான் பெரியநம்பி இருந்தார். ராமானுஜா! உன்னைத் தேடித்தான் நான் காஞ்சிபுரம் வந்து கொண்டிருக்கிறேன். ஓய்வு எடுத்துவிட்டு செல்லலாமென மதுராந்தகத்தில் இறைவனின் இக்குளக்கரையில் சற்றுநேரம் தங்கினோம். நீ இங்கே வந்து விட்டாய். என்ன விஷயமாக இங்கு வந்தாய்? என்றார் பெரியநம்பி. சுவாமி! தங்களை குருவாக ஏற்கும்படி வரதராஜப் பெருமாள் திருக்கச்சிநம்பி மூலமாக திருவாய் மலர்ந்தருளினார். தங்கள் பாதங்களில் சரணடைந்து, என்னை சீடனாக ஏற்க வேண்டும் என்று வேண்டியே நான் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டேன். வரும் வழியில் உங்களைக் காண்கிறேன். நம்மை சந்திக்க வைத்ததும் அவனே, என்றார் நெகிழ்வுடன் ராமானுஜர். இதைக்கேட்டு மகிழ்வெய்திய பெரியநம்பி, சரி...இன்னும் இங்கு இருக்க வேண்டாம். தாமதிக்காமல், காஞ்சிபுரம் செல்வோம். அங்கே பேரருளாளளின் சன்னதியில் பஞ்ச சம்ஸ்காரம் (தீயில் வாட்டிய சங்கு, சக்கர சின்னங்களை கையில் முத்திரையிடுதல், பிரபந்தங்களை படித்தல் முதலானவை) செய்து, உன்னை ஏற்றுக் கொள்கிறேன். ஒரு வருடம் நாம் காஞ்சிபுரத்திலேயே தங்கியிருப்போம். அதன்பிறகு ஸ்ரீரங்கம் கிளம்பலாம், என்றார். ராமானுஜர் அதைப் பணிவுடன் ஏற்றார். அது மட்டுமல்ல, உடனே அவரது சீடராக வேண்டும் என்ற ஆர்வத்தில், சுவாமி, எமன் நேரம் காலம் பார்க்கமாட்டான். சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், தூங்கிக் கொண்டிருந்தாலும், ஓடிக் கொண்டிருந்தாலும், நடந்து போனாலும்...அவன் எதையும் கண்டுகொள்ளாமல், ஆயுள் முடிந்தவர்களின் கதையை முடித்து விடுவான். அந்நிலை எப்போதும் யாருக்கும் வரலாம். எனவே, காலத்தை வீணாக்காமல் இப்போதே புறப்பட்டு விடுவோம், என்றார் ராமானுஜர்.

அவர்கள் காஞ்சிபுரத்தை அடைந்தனர். தன் வீட்டின் ஒரு பகுதியை சுத்தம் செய்து, அங்கே பெரியநம்பியையும், அவரது மனைவியையும் தங்க வைத்தார் ராமானுஜர். மறுநாள் ராமானுஜருக்கும், அவரது மனைவி தஞ்சமாம்பாளுக்கும் சங்கு, சக்கர முத்திரைகளை பெரியநம்பி பதித்தார். அவர் சாப்பிட்ட மீதத்தை சாப்பிட்டனர். இவ்வாறாக தனக்கு ஆச்சாரியார் இல்லாத குறையைப் போக்கிக் கொண்டார் ராமானுஜர். பாடங்களும் துவங்கின. ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் திவ்விய பிரபந்தப்பாடல்களை பொருளுடன் விளக்கினார் பெரியநம்பி. பயிற்சி வெகுவேகமாக நடந்து கொண்டிருந்தது. இறைவன் எல்லாரையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏனெனில், தான் இருப்பது மனிதர்களுக்கு நினைவிருக்க வேண்டும் என்பதில் அவன் விட்டுக் கொடுக்கவே மாட்டான்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:17 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 Fpgdh48

இன்பத்தை மட்டும் தா இறைவா என யார் கேட்டாலும் அவன் கொடுக்க மாட்டான். எவ்வளவு புண்ணியம் செய்தவரும் அவனிடம் துன்பத்தை ஏற்றே தீர வேண்டும். இந்த துன்பம் மீண்டும் ஒருமுறை மனைவி ரூபத்தில் வந்தது ராமானுஜருக்கு. ஏற்கனவே திருக்கச்சிநம்பியை அழைத்து உபசரித்த விஷயத்தில் மனைவி அவசரப்பட்டு விட்டதாக ராமானுஜர் அதிருப்தியில் இருந்தார். இப்போது, மீண்டும் ஒரு துன்பம் அவளால் வந்தது. ஆனால், முன்பு வந்ததை விட பேரிடியாக இது அமைந்தது. அதேநேரம், காரண காரியமில்லாமல் இறைவன் இந்த துன்பத்தை அவருக்கு கொடுக்கவில்லை. ஒருநாள் கிணற்றடியில் தஞ்சமாம்பாள் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கே பெரியநம்பியின் மனைவியும் தண்ணீர் இறைக்க வந்தார்.

தஞ்சமாம்பாள் ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் இறைத்து வைத்திருந்தார். பெரியநம்பியின் மனைவி தண்ணீர் இறைத்த போது, தாம்புக்கயிறிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் தஞ்சமாம்பாள் இறைத்து வைத்திருந்த தண்ணீரில் பட்டுவிட்டது. அவ்வளவு தான்! கிணற்றடி சண்டை துவங்கி விட்டது. பெண்கள் இப்போது தான் என்றில்லை. ராமானுஜர் காலத்திலேயே இச்சண்டையை நடத்தி புகழ் பெற்றிருக்கிறார்கள்! தஞ்சமாம்பாள் தான் சண்டையைத் துவக்கினார். ஏனம்மா! இங்கே நான் தண்ணீர் இறைத்து வைத்திருப்பது உங்கள் கண்ணில் படவில்லை! இப்போது கயிற்றுத் தண்ணீர் இதில் தெறித்து விழுந்ததே! இதை இனிமேல் நான் எப்படி பயன்படுத்துவேன்? நான் இறைத்த பிறகு நீங்கள் இறைக்க வேண்டியது தானே! இப்போது என்ன கொள்ளை போகிறதாம்! நீங்கள் என் கணவரின் ஆச்சாரியரின் மனைவி என்பதற்காக உங்கள் அதிகாரத்தை காட்டுகிறீர்களோ! அதற்காக, நான் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, என்று சூடாக வார்த்தைகளைக் கொட்டினார். சே...இதென்ன வெட்டி வேலை,என்றவளாய், தண்ணீரை கீழே கவிழ்த்தார். விறுவிறுவென வீட்டுக்குள் போய் விட்டார். பெரியநம்பியின் மனைவி அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அந்த அம்மையாரின் கண்களில் கண்ணீர். அவர் தண்ணீரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் போய் விசும்பிக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில், ராமானுஜரும், பெரியநம்பியும் வீட்டில் இல்லை. சற்று நேரத்தில் அவர்கள் வந்தனர். பெரியநம்பி வீட்டுக்குள் சென்றார். மனைவி அழுது கொண்டிருந்ததைப் பார்த்து, ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது இங்கே? எனவும், நடந்ததை விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார் மனைவி. நம்பியின் முகம் அதைக் கேட்டு என்னவோ போல் ஆகிக் கொண்டிருந்தது.

தொடரும்....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:18 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 1aEbY22

பெரியநம்பி மனைவியிடம், என் பிரியமானவளே! ஆண்டவன் எதையும் காரணமின்றி செய்வதில்லை. ஸ்ரீரங்கநாதன் நம்மை இவ்வளவு நாள் தான் இங்கிருக்க வேண்டும் என விதித்திருக்கிறான். அதை யாரால் மாற்ற முடியும்? இறைவனுக்கு ஒரு குணம் உண்டு. அதாவது, அவன் ஒருவனை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என நினைத்தால், அவனுக்கு பிரியமில்லாத சொற்களை காதில் விழ வைத்து விடுவான். அதை அவனே மற்றவர்கள் மூலமாகப் பேசுவான். இதற்காக நாம் கோபம் கொள்வது முறையல்ல. எல்லாம் அவன் செயல். நாம், இங்கிருந்து புறப்பட்டுச் செல்வோம். ராமானுஜனுக்கு இது தெரிய வேண்டாம். பக்கத்து வீட்டில் தகவல் சொல்லிவிட்டு அமைதியாய் கிளம்பு. தஞ்சமாம்பாள் சொன்ன வார்த்தைகளை மனதில் கொள்ளாதே, என்றார். அந்த அம்மையார் கணவர் பேச்சுக்கு மறுசொல் பேசாதவர். உடனே புறப்பட்டு விட்டார். இதற்கிடையே, ராமானுஜர் ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியபிரபந்தத்தில் முழுமையாக பயிற்சி முடிந்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக, குருவின் வீட்டிற்கு பழம், வெற்றிலை, புதுத்துணி உள்ளிட்ட 16 பொருட்களுடன் அவர் அங்கே சென்றார். அங்கே யாருமில்லை. பக்கத்து வீட்டில் விசாரித்தார். ராமானுஜா! அவர்கள் ஸ்ரீரங்கம் கிளம்பிப் போய்விட்டார்கள். என்னிடம் சொல்லி விட்டு சென்றார்கள், என்றார். ராமானுஜருக்கு கண்ணீர் முட்டியது. ஐயோ! என்ன பாவம் செய்தேன் நான்! ஆச்சாரியார் நம்மிடம் சொல்லாமல் கொள்ளாமல் போகுமளவு நான் செய்த தவறு கொடியதாக இருந்துள்ளதே! அவர் மனம் புண்படும்படி நான் நடந்து விட்டேனோ? எதற்கும் தஞ்சமாம்பாளிடம் கேட்பபோம். அவளிடமுமா சொல்லாமல் போயிருப்பார்கள்? என மனதில் நினைத்தவர், பதைபதைப்புடன் வீட்டுக்கு ஓடி வந்தார்.

தஞ்சா...தஞ்சா... அவசரமாக அழைத்த அவரிடம், என்ன...எதற்காக வாசலில் இருந்தே கத்திக் கொண்டு வருகிறீர்கள்? என்றாள் அந்த புண்ணியவதி. தஞ்சா...ஆச்சாரியாரும், அவரது மனைவியும் ஸ்ரீரங்கம் கிளம்பி போய் விட்டார்களாம். உன்னிடம் ஏதாவது சொன்னார்களா? என்றவரிடம், அடேங்கப்பா! உங்களுக்கு கிடைத்தவர் சரியான ஆச்சாரியர் தான்! இதற்கே அந்த பெரிய மனிதருக்கு கோபம் வந்து விட்டதா? குரு என்றால் கோபம் கொள்ளாதவராக இருக்க வேண்டும் என்பது கூட அந்த மகானுக்கு தெரியாதோ? என்றாள் மொட்டையாக. ராமானுஜருக்கு இப்போது புரிந்து விட்டது. தன் குரு இங்கிருந்து கிளம்பக் காரணம் தன் மனைவி தான் என்பதைப் புரிந்து கொண்டார். அவர் கோபத்துடன், அடியே! ஆச்சாரியருக்கு கோபம் வரும் வகையில் என்ன செய்து தொலைத்தாய்? என்றார். அவள் நடந்ததைச் சொன்னாள்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:18 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 3 SemzgzE

அடிப்பாவி! ஒரு சொட்டு தண்ணீர்...அதுவும் கயிறில் இருந்து தெறித்து விழுந்தது...இதனால் என்னடி குடிமுழுகிவிடும்! இதற்காக பதிபக்தியில் சிறந்த அந்த அம்மையாரை இகழ்ந்திருக்கிறாயே. ஆச்சாரியர் அதனால் தானே கோபித்துக் கொண்டு போயுள்ளார். நீண்ட நாளைக்குப் பிறகு எனக்கு ஒரு குருவை அந்த வரதராஜனே அமர்த்திக் கொடுத்தானடி. அவன் எனக்கு தந்த தங்கத்தினும் மேலான மேதாவியை என்னிடமிருந்து பிரித்து விட்டாயேடி. பிசாசினும் கொடியவளே! இனிமேல் உன் முகத்தில் விழிக்கமாட்டேன், என்று கத்தித் தீர்த்தவர், வேகமாக வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு நடந்தார்.

கோயிலுக்குள் சென்று, வரதராஜா! நீ இப்படி செய்யலாமா? வேண்டாமப்பா...வேண்டாம். இந்த சம்சார பந்தம் வேண்டாம். குடும்பம் வேண்டாம். இனி, உன் சேவை மட்டுமே எனக்குப் போதும், என்றவர், அந்தப் பெருமாளின் காலடியில் விழுந்து கண்ணீர் உகுத்தார். ராமானுஜர் வீட்டில் இருந்து வெளியேறிய சமயம் பார்த்து, அவரது வீட்டுக்கு ஒரு ஏழை பிராமணர் வந்தார். வீட்டுக்குள்ளிருந்த தஞ்சமாம்பாளிடம், அம்மா! பசிக்கிறது. ஏதாவது இருந்தால் கொடுங்கள் தாயே, என்றார். அவள் ஏற்கனவே கணவர் திட்டித்தீர்த்த கோபத்தில் இருந்தாள். யாரோ ஒருவருக்காக, தன்னை பேயே, பிசாசே என திட்டி விட்டாரே. தன்னை விட அவர்கள் தானே உசத்தியாக போய் விட்டார்கள் அந்த மனிதருக்கு...என்ற ஆத்திரத்தில் இருந்தவள், உள்ளிருந்தபடியே, ஓய்! வேறு எங்காவது போய் பிச்சை கேளும். இங்கே நீர் வருவீர் என தெரிந்து வடித்தா வைத்திருக்கிறேன். நேரம் காலம் தெரியாமல் இங்கு வந்து உயிரை வாங்குகிறீரே, என்றாள். அவர் வருத்தத்துடன் அங்கிருந்து அகன்று, வரதராஜப் பெருமாள் கோயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தார். ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்தார். எதிரில் பிராமணர் வந்தார். சுவாமி! தாங்கள் வருத்தத்துடன் வருகிறீர்களே, பசியால் மிகவும் களைத்துள்ளது போல் தோன்றுகிறது. வீட்டில் ஏதாவது கேட்டு வாங்கியிருக்கலாமே, என்றார். நான் உமது வீட்டுக்குத்தான் போனேன். அம்மையார் ஒன்றுமில்லை என சொல்லி திட்டி அனுப்பி விட்டாள், என்றார். ராமானுஜரின் வருத்தம் இன்னும் அதிகமாயிற்று. சுவாமி! வருந்தாதீர்கள். நான் தங்களிடம் ஒரு கடிதம் தருகிறேன். அத்துடன் பழம், பூ, புதுத்துணியும் தருகிறேன். அவற்றை என் மனைவியிடம் கொடுங்கள். நான் சொல்வதைப் போல் அவளிடம் சொல்லுங்கள். அதைக்கேட்டு, அவள் உங்களுக்கு ராஜ உபசாரம் செய்வாள், என்றார். பிராமணருக்கு ஏதும் புரியவில்லை. கடிதத்தையும், பொருட்களையும் வாங்கிக் கொண்டார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக