புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_lcapஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_voting_barஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_lcapஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_voting_barஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_lcapஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_voting_barஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_lcapஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_voting_barஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_lcapஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_voting_barஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_lcapஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_voting_barஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_lcapஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_voting_barஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_lcapஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_voting_barஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_lcapஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_voting_barஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_lcapஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_voting_barஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:00 pm

First topic message reminder :

இந்தக் கட்டுரை ஜகத்குரு ராமானுஜரின் ஆயிரமாவது வருடத்தை முன்னிட்டு தினமலரில் வெளிவந்தது. இதை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 HppFuRE


சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோயில்...சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப்பெருமாள்...அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர்.  இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:23 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 B02psos

(தினமணியில் இந்தக் கட்டுரையின்  16  வது பாகம் இல்லை....யாரிடமாவது இருந்தால் தயவுசெய்து இங்கு பதிவிடுங்கள் )



மறுநாள் யாதவப்பிரகாசர் கோயிலுக்கு சென்றார். ராமானுஜர் அவரைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை செய்தார். அவருக்கு இருக்கை கொடுத்தார். யாதவப்பிரகாசர் தன் முன்னாள் சீடனின் பணிவான தன்மையை மனதுக்குள் போற்றினார். இருப்பினும் தொட்டில் பழக்கம் கடைசி வரை வருமாமே! அவர் தன் வழக்கமான பாணியில், அதிமேதாவித்தனத்தன கேள்வி ஒன்றைக் கேட்டார். ராமானுஜா! உன் தோளில் சங்கு, சக்கரம் பொறித்துள்ளாய். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாமா? இதைப் பார்க்கும் போது நீ குணங்களுடன் கூடிய பிரம்மத்தை (உருவத்துடன் கூடியது) வணங்குவதையே சரியானதென நினைப்பதாக கருதுகிறேன். இதற்கு சாஸ்திரம் ஏதாவது ஆதாரம் வைத்துள்ளதா? சொல், என்றார். ராமானுஜர் கூரத்தாழ்வார் பக்கம் திரும்பி, இதோ! கூரத்தாழ்வார் இருக்கிறாரே. அவர் சாஸ்திர வல்லுநர். அவர் உங்களுக்கு தக்க விளக்கமளிப்பார், என்றார். கூரத்தாழ்வார் மடைதிறந்த வெள்ளமென தன் சாஸ்திர உரையைத் துவக்கினார். ஞாபகசக்தியில் சிறந்தவர் அல்லவா? அதனால், அவ்விடத்தில் பக்தி மழை பொழிந்தது என்று சொல்வதை விட கொட்டித் தீர்த்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். முன்னாள் ஆசிரியர் யாதவப்பிரகாசர் உட்பட. ஆசிரியர் கோமானே! எங்கள் ஆச்சாரியர் உத்தரவுப்படி உங்களிடம் பேசுகிறேன். சங்கு, சக்கர சின்னங்களை அக்னியில் அழுத்தி அதை உடலில் பதித்துக் கொண்டவன் பரமாத்மாவுடன் இணைகிறான். அவன், பிரம்மலோகத்தில் வாழத் தகுதியுள்ளவன் ஆகிறான். பூணூல் தரிப்பது எப்படியோ, அதுபோல வைணவர்கள் சங்கு, சக்கர பொறியை உடலில் தரித்துக் கொள்ள வேண்டும். இது பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க உதவும். இவ்வுலகில் நாராயணனே முடிவான உண்மை. அவனே நமக்கு புகலிடம் தருபவன், என்று கூரத்தாழ்வார் பேசப் பேச யாதவப்பிரகாசர் பேச வாயே திறக்காமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார்.

தன்னால் கொடுமைக்கு ஆளான சீடனின் சீடனே இப்படி இருந்தால், ராமானுஜரிடம் எவ்வளவு விஷயம் இருக்கும் எனக் கருதிய அவர், அப்படியேச் எழுந்தார். ராமானுஜர் முன் போய் நின்றார். தடாலென காலில் விழுந்து விட்டார். அம்மாவின் விருப்பம், திருக்கச்சிநம்பி மூலமாக பெருமாளே சொல்லி அனுப்பியது எல்லாம் சரியானதே என்பதை உணர்ந்தார். ராமானுஜா! நீ சாதாரணமானவன் அல்ல. அந்த ராமபிரானின் தம்பி தான்.  கந்தை என் கண்களை மறைத்திருந்தது. இனி நீயே எனக்கு கதி. என்னை சீடனாக ஏற்றுக்கொள், என்றார். ராமானுஜர் அவரைத் தனது சீடராக ஏற்றார்.  தன்பிறகு அவரது போக்கே மாறிவிட்டது. முந்தைய கெட்ட எண்ணங்கள் அறவே அழிந்தன. ராமானுஜரின் உத்தரவுப்படி வைணவர்களின் கடமை குறித்து யதிகர்ம-சமுச்சயம் என்ற நூலையும் எழுதினார் யாதவப்பிரகாசர். அவரது எண்பதாவது வயதில் இந்நூல் முடிவுற்றது.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:23 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 DrnrDox
இதன்பிறகும் சில காலம் வாழ்ந்த அவர் திருமாலின் திருவடிகளை எய்தினார். யாதவப்பிரகாசர் ராமானுஜருக்கு சீடரானது, அவரது பக்திமயமான தோற்றம், இறைவனிடம் தன்னை அர்ப்பணித்து விட்ட பாங்கு எல்லாமே சுற்றுப்புறத்திலுள்ள வைணவர்களிடையே பரவியது. எல்லாரும் கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்தனர். தண்ணீர் இறைத்து தஞ்சாம்பாளுடன் ஏற்பட்ட பிரச்னையில் ஸ்ரீரங்கம் திரும்பி விட்ட, பெரியநம்பி ஸ்ரீரங்க மடத்துக்கு தலைவர் இல்லையே என்ற கவலையில் இருந்தார். ஆளவந்தாருக்கு பிறகு, மடத்தில் திருமாலின் திருக்குணங்கள் பற்றி பேசுவதற்கு கூட சரியான ஆளில்லை. ஆளவந்தார் இருந்த போது, ராமானுஜரை ஒரு தெய்வீக புருஷர் என்று சொன்னது அவர் நினைவில் மாறி மாறி வந்தது.

அவரைக் காஞ்சிபுரத்தில் இருந்து கையோடு அழைத்து வந்து விடலாம் எனப் போனால், அந்த வரதராஜனின் சித்தம் எப்படியிருந்ததோ புரியவில்லை. அங்கே தன் மனைவிக்கும், ராமானுஜர் மனைவிக்கும் எப்படியோ ஒரு பிரச்னை ஏற்பட்டு அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. என்ன செய்வது என கலங்கிப் போயிருந்த அவர், அந்த ரங்கநாதனிடமே சென்றார். ரங்கநாதா! இது என்னப்பா சோதனை. ஸ்ரீரங்கமடத்தைக் காக்க ஆளில்லை. உன் பக்தர்களை வழி நடத்த சரியான ஒருவர் இல்லை. ராமானுஜன் ஒருவன் தான் அதற்கு தகுதியுடையவன் என உனக்கு தெரியும். இப்போது அவன் துறவியாகவும் மாறிவிட்டான் என அறிந்து சந்தோஷப்படுகிறேன். ஆனால், அந்தத்துறவி உனது தலத்துக்கு வர வேண்டும். இதற்கு நீ தான் அருள் செய்ய வேண்டும், என உருக்கத்தோடு கேட்டார். சயனத்தில் இருந்த அந்த ரங்கநாதன் பெரியநம்பியிடம் பேசினான். நம்பி! என் அன்புக் குழந்தையே! கவலைப்படாதே. ராமானுஜன் பேரருளாளன் வரதராஜன் உத்தரவின்றி அங்கிருந்து கிளம்ப மாட்டான். எனவே வரதராஜனைப் பாடிப்புகழ்ந்து, அவனிடம் அனுமதி பெற வேண்டியது உனது பொறுப்பு. பாடுவதற்கு தகுதியான ஆள் திருவரங்க பெருமாளரையர். அந்த சங்கீத கலாநிதியை காஞ்சிபுரத்துக்கு அனுப்பு. வரதராஜன் சங்கீதப்ரியன். அவன் சங்கீதத்துக்கு மகிழ்ந்து அவன் வரம் கொடுக்கும் வேளையில், ராமானுஜனை கேட்டு பெற்று விடச் சொல், என்று சொல்லி விட்டான். பெரியநம்பி உடனடியாக மடத்துக்கு வந்தார். திருவரங்க பெருமாள் அரையரை உடனடியாக காஞ்சிபுரத்துக்கு புறப்படச் சொன்னார். பெருமாளின் கட்டளையை விளக்கினார். பெருமாள் அரையரும் காஞ்சிபுரம் சென்றார். வரதராஜனைப் பற்றி உளமுருகிப் பாடினார். ஆனால், பேரருளாளன் வரதராஜனுக்கோ ராமானுஜரை அங்கிருந்து அனுப்ப மனமில்லை. அவன் பாட்டை ரசித்தானே ஒழிய, பதில் ஏதும் சொல்வதாகத் தெரியவில்லை. பெருமாள் அரையர் விடாப்பிடியாக பாடிக் கொண்டிருந்தார். தன் சக்தியனைத்தையும் திரட்டிப் பாடினார்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:25 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 UKI1PI0

ஒருவழியாக பேரருளாளன் வரதராஜன் கண் திறந்தான். பெருமாள் அரையர் வரதராஜனிடம் ராமானுஜரை தன்னோடு அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். பெருமாளுக்கு அதில் இஷ்டமே இல்லை. மிகுந்த பிரயாசையின் பேரில், பெருமாளிடம் அனுமதி பெற்றார் அரையர். ராமானுஜரும் அரையருடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். உலகமே போற்றும் மாபெரும் சகாப்தத்தைப் படைப்பதற்காக ஸ்ரீரங்கத்துக்கு அந்த மகான் சென்று கொண்டிருந்தார். அங்கு சென்றதும் பெரியநம்பியையே தன் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியநம்பிக்கு ராமானுஜர் மடம் வந்து சேர்ந்ததில் அலாதி மகிழ்ச்சி. தன் மகன் புண்டரீகாட்சரை ராமானுஜரின் சீடனாக்கினார் என்றால் அவர் மீது நம்பி கொண்டிருந்த பாசத்திற்கு எல்லை கூறுவதற்கில்லை. இப்படியிருக்க ராமானுஜருக்கு தன் தம்பி கோவிந்தரைப் பற்றிய நினைவு வந்தது. இவர் ராமானுஜரின் சித்தி மகன் என்பது ஏற்கனவே அறிந்த விஷயம் தான். ராமானுஜர் யாதவப்பிரகாசருடன் காசி சென்ற போது, அவர் ராமானுஜரைக் கொலை செய்ய முயற்சித்த தகவலை சொல்லிக் காப்பாற்றி விட்டு, காளஹஸ்தியில் சிவ வழிபாட்டில் இறங்கி விட்டார். அக்காலத்தில் சைவர்கள், வைணவர்கள் கடுமையாக மோதிக் கொள்வார்கள். ஒரு வைணவனை பார்த்தாலே போதும்! ஒரு சைவன் எங்காவது குளித்து விட்டுத்தான் வீட்டுக்கு போவான். அந்த அளவுக்கு இந்து மதத்திற்குள்ளேயே இரு பிரிவாக பிளவுபட்டிருந்த நேரம். ராமானுஜர் கோவிந்தனை வைணவத்துக்கு திருப்ப விரும்பினார். கோவிந்தன் தன் அருகில் இருப்பது மிகப்பெரிய பலம் என கருதினார். அப்போது திருமலையில் (திருப்பதி) பெரிய திருமலை நம்பி என்பவர் வெங்கடாசலபதிக்கு தொண்டு செய்து கொண்டிருந்தார். அவருக்கு ராமானுஜர் கடிதம் எழுதினார்.

கடிதத்தில், தாங்கள், காளஹஸ்தியில் சிவப்பணியில் ஈடுபட்டுள்ள என் தம்பி கோவிந்தனுக்கு தக்க அறிவுரை சொல்லி ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பி வையுங்கள், என குறிப்பிட்டிருந்தார். பெரிய திருமலை நம்பி கோவிந்தரை சந்திக்கச் சென்றார். கோவிந்தர் அங்குள்ள குளக்கரையில் தினமும் மலர் பறிக்க வருவார். ஒருநாள் வெண்தாடியுடன் வைணவப் பெருமகனார் ஒருவர் குளக்கரையில் தன் சீடர்களுக்கு, பல்வேறு சாஸ்திரங்கள் குறித்து போதனை செய்து கொண்டிருந்தார். கோவிந்தன் ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டார். அந்தப் பெரியவரின் பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 9:25 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 6q679Vj


மரத்தில் இருந்து இறங்கி, மலர்களுடன் அவர் இருந்த இடத்தைக் கடந்து சென்றார். வயதில் மிகவும் சிறியவராயினும் கூட பெரிய திருமலை நம்பி கோவிந்தனை. மகாத்மாவே, இங்கு வாருங்கள் என மரியாதையுடன் அழைத்தார். கோவிந்தனும் பணிவுடன் அவர் அருகே சென்றார். இருவருக்கும் அருமையான உரையாடல் நிகழ்ந்தது. சுற்றியிருந்தவர்களுக்கு தேனாய் இனித்தது அந்த உரையாடல். விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களின் பெருமையை நாவினிக்க அவர்கள் பேசினர். தம்பி! இந்த பூக்களை யாருக்கு கொண்டு செல்கிறீர்கள்? என்றார் பெரியவர். சுவாமி! சிவனை வழிபடுவதற்காக இதனைப் பறித்துச் செல்கிறேன், என்றார் கோவிந்தன். நம்பி: சிவனுக்கு பூ வழிபாடு சரியாக இருக்காது. அவர் ஆசைகளை வேரறுத்து எரித்து அதனை வெண்ணீறாக பூசியிருப்பவர் அல்லவா? அவருக்கு இந்த பூக்களின் மீது ஆசையிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவர் மயானத்தில் வசிப்பவர். நாராயணன் மீது அபிமானம் உள்ளவர். இந்த பூக்கள் கல்யாண குணங்கள் கொண்ட திருமாலுக்கு தானே பொருத்தமாக இருக்க முடியும்?

கோவிந்தன்: பெரியவரே! தாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். இறைவன் என்பவன் எல்லாம் உடையவன். அவன் தான் நமக்கு கொடுப்பவனே ஒழிய, நம்மால் பக்தியை மட்டுமே அவனுக்கு திருப்பி செலுத்த இயலும். சிவன் விஷத்தைக் குடித்து உலகத்தைக் காத்தவர். அவருக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். அதற்கு இந்த மலர்களும் தேவையில்லாமல் இருக்கலாம். வெறும் வணக்கம் மட்டுமே போதும். உள்ளத்தில் இருந்து பக்தி பூக்களைச் சொரிந்தால் போதும். இருப்பினும் மலர் தூவி வழிபடும் சம்பிரதாயம் மூலம் பக்தி வளருமென்று கருதுகிறேன் பெரியவரே. நம்பி: நீங்கள் சொல்வது மிகமிக சரி. அறிஞர்கள் மட்டுமே இவ்வாறான கருத்தைக் கூற முடியும். உன் பக்தி மெச்சத்தகுந்தது. பகவான் ஹரி வாமனின் தான் என்ற அகந்தையை அடக்க வந்தவர். அவரிடமே நம்மை ஒப்படைக்க வேண்டும் என்பதே என் கருத்து. அது மட்டுமல்ல. கீதையில் பகவான் ஒருவன் அவனது சொந்த தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என சொல்லியுள்ளார். அதன்படி பார்த்தால், நீங்கள் பகவான் ஹரியை வழிபடுவதே முறையானது. கோவிந்தன்: திருமாலுக்கும், சிவனுக்கும் தாங்கள் பேதம் கற்பிக்க வேண்டாம். கண்டாகர்ணன் என்ற பக்தனின் கதை தங்களுக்கு தெரியாததல்ல. அவனைப் போன்ற பக்தியுள்ளவன் என என்னை எண்ணாதீர்கள். கண்டாகர்ணன் சிவனை மட்டுமே வழிபட்டான். சிவன் அவனை திருத்த எண்ணி, நாராயணனின் உடலைத் தன்னோடு சேர்த்து, சங்கர நாராயணனாக காட்சியளித்தார். அப்போதும் அவன் சிவன் இருந்த பகுதியை மட்டுமே வணங்கினான். தான் காட்டிய தூபத்தின் வாசனை சிவனின் பக்கமே செல்லும் வகையில் விசிறினான். இதற்காக சிவன் அவனை தண்டித்து ஒரு கிராமத்தில் துன்பம் நிறைந்த வாழ்க்கையைக் கொடுத்து வாழ வைத்தார். என்ன துன்பம் தெரியுமா? ஒரு வைணவக் கிராமத்தில் தங்க வைத்தார். அங்கிருந்தவர்கள் விஷ்ணுவைப் புகழ்ந்து பாடினர். அப்போதும் திருந்தாத அவன் தன் காதுகளில் கண்டாவைக் (மணி) கட்டிக் கொண்டு, விஷ்ணு என்ற சப்தம் விழாமல் இருக்க அடித்துக் கொண்டே இருந்தானாம். இப்படிப்பட்ட ஒரு சார்ந்த பக்தி தேவையில்லை எனக் கருதுகிறேன். இப்படியாக அவர்களின் உரையாடல் தினமும் தொடர்ந்தது. பெரிய திருமலை நம்பி, கோவிந்தனை விடுவதாக இல்லை.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:34 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 SXL9xFs

ஒரு வழியாக கோவிந்தனின் மனதை மாற்றிய பெரிய திருமலைநம்பி, அவரை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ராமானுஜரின் சீடராகிவிட்டார் கோவிந்தன். கோவிந்தன் தனது அருகில் இருந்ததால் ராமானுஜருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீமன் நாராயணனையே கோவிந்தன் வழிபட ஆரம்பித்தார். பெரிய நம்பியை தனது குருவாக ஏற்றுக்கொண்ட ராமானுஜர் அவரிடம் பல நூல்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் பற்றி கேட்டுத்தெரிந்து கொண்டார். கவனமுடன் அவற்றைப்படித்தார். சில சமயங்களில் தனது சீடரின் அபரிமிதமான அறிவைக்கண்ட பெரிய நம்பி, தனது மகன் புண்டரீகாட்சரை ராமானுஜரின் சீடராக்கினார். ஒரு முறை ராமானுஜரிடம் பெரிய நம்பி,சீடனே! ஸ்ரீரங்கத்திலிருந்து நான் கற்றுத்தந்த விஷயங்களை மட்டுமே தெரிந்துகொண்டாய். உனது ஆன்மிக அறிவுக்கு இது மட்டும் போதாது. இங்கிருந்து சில மைல் தூரத்தில் திருக்கோஷ்டியூர் என்ற தலம் இருக்கிறது. அந்த தலத்தில் திருக்கோஷ்டியூர் நம்பி வசிக்கிறார். அவர் மிகப்பெரிய அறிஞர். தூய்மையானவர். அவரைப்போன்ற வைணவரை உலகில் வேறு எங்குமே காண இயலாது. திரு எட்டெழுத்து என்ற மந்திரத்தை அவர் அறிந்திருக்கிறார். அதற்குரிய பொருள் அவருக்கு மட்டுமே தெரியும். மற்றவர்கள் திரு எட்டெழுத்து மந்திரம் பற்றி தெரிந்திருந்தாலும் கூட அவரளவுக்கு கற்றுத்தருவார்களா என்பது சந்தேகமே. எனவே நீ அங்கு சென்று அவரிடம் திருமந்திரத்தை பொருளுடன் படித்து வா. இவ்விஷயத்தில் எவ்வித தாமதமும் வேண்டாம்,என்றார். ராமானுஜர் சற்றும் தாமதிக்கவில்லை. உடனடியாக திருக்கோஷ்டியூர் கிளம்பி விட்டார்.

நம்பியின் இல்லத்திற்கு சென்று அவரது பாதங்களில் பணிந்தார். திரு எட்டெழுத்து மந்திரத்தை பயில வேண்டும் என்ற தன் ஆர்வத்தை தெரிவித்தார். நம்பியோ அவரது கோரிக்கையை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இன்னொரு முறை இங்கு வா. அப்போது பார்த்து கொள்ளலாம், என சொல்லி விட்டார். ராமானுஜருக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவ்வளவு பெரிய மகானை வற்புறுத்தும் சக்தியும் அவரிடம் இல்லை. ஆழ்ந்த வருத்தத்துடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீரங்கத்திற்கு வந்தார். ரங்கநாதப்பெருமானை சேவித்தார். அப்போது பெருமான் நம்பியிடம்,நம்பியே! ராமானுஜன் மிகவும் புத்திசாலி. அவனுக்கு நீ திரு எட்டெழுத்து மந்திரத்தை கற்றுக்கொடுப்பாயாக, என்றார். நம்பி அப்போதும் ஒப்புக்கொள்ளவில்லை. ரங்கநாதா! திரு எட்டெழுத்து மந்திரம் என்பது சாதாரணமானதல்ல. நீயே ஒரு முறை தவம் செய்யாதவனுக்கும், சரியான வழிபாடு செய்யாதவனுக்கும் இந்த மந்திரத்தை கற்றுக்கொடுக்க கூடாது என உத்தரவு போட்டிருக்கிறாய். இப்போது, அந்த உத்தரவை நீயே மீறச் சொல்கிறாய். மனிதன் குறிப்பிட்ட காலமாவது தவம் செய்திருக்க வேண்டும். தவம் செய்யாதவனின் மனது சுத்தமாக இராது. அது மட்டுமல்ல! இந்த மந்திரத்தை யார் ஒருவன் கற்றுக்கொள்கிறானோ, அவன் மனத்தூய்மை இல்லாதவனாக இருந்தால், இம்மந்திரத்தின் சக்தியை தாங்கி கொள்ள மாட்டான். இதையெல்லாம் நீ அறியாதவனா என்ன? என சொன்னார். ரங்கநாதன் கலகலவென சிரித்தார். நம்பியே! ராமானுஜனுடைய மனசுத்தம் பற்றி நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் சாதாரணமானவன் அல்ல. இந்த உலகத்தை பாதுகாக்க வந்தவன். நீயே இதை அறிவாய். அவ்வாறு அறியும் காலம் வந்த பிறகு நீயே கற்றுத்தருவாய், என கூறி விட்டார். அதன் பிறகு பெருமானும், நம்பியும் பேசிக்கொள்ள வில்லை. திருக்கோஷ்டியூர் நம்பிசேவையை முடித்து விட்டு ஊர் திரும்பி விட்டார்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:35 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 NAa8eXQ

ராமானுஜருக்கு எப்படியேனும் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திரு எட்டெழுத்து மந்திரத்தை பயின்றாக வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அவர் திருக்கோஷ்டியூருக்கு வந்து போனார். ஸ்ரீரங்கத்திலிருந்து பதினேழு முறை நடந்தே திருக்கோஷ்டியூர் வந்து நம்பியை தரிசித்தும் கூட அவர் கண்டுகொள்ளவே இல்லை. நாராயணனே சிபாரிசு செய்தும் கேட்காத அவர், ராமானுஜர் சொல்லியா கேட்கப்போகிறார்? இப்படியே ஆண்டுகளும் புரண்டு கொண்டிருந்தன. திருக்கோஷ்டியூருக்கு பதினெட்டாவது முறையாக ராமானுஜர் வந்தார். அப்போதும் நம்பி அவரை தனது சீடனாக ஏற்கவில்லை. மந்திரத்தின் பொருளை கற்றுக்கொடுக்க மறுத்து விட்டார். ராமானுஜருக்கு கண்ணீர் முட்டியது. இறைவா! என் மனதில் உண்மையிலேயே ஏதோ மாசு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் மந்திரத்தின் பொருளை கற்றுக் கொடுக்க நம்பி மறுக்கிறார். நாம் இத்தனை முறை இங்கு வந்தும் பலனேதும் இல்லை. என்று தான் நம்பியின் மனம் கனியப்போகிறதோ? என புலம்பி அழுதார். திருக்கோஷ்டியூர் வாசிகள் சிலர் ராமானுஜர் அழுவதை கவனித்தனர். அந்த இளைஞரின் மீது இரக்கம் கொண்டனர். நடந்த விஷயத்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளின் காதுக்கு கொண்டு சென்றனர். ராமானுஜரை வரவழைத்தார். மனம் பதைக்க ராமானுஜர் நம்பியின் முன் நின்று கொண்டிருந்தார். என்ன நடக்கப்போகிறதோ என்ற ஆதங்கம் மனத் துடிப்பை அதிகமாக்கியது. சற்று நேரம் கழித்து, திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார். அவரைக்கண்டதும் வேகமாக எழுந்தார் ராமானுஜர். நம்பி என்ன சொல்லப்போகிறாரோ என்ற ஆர்வத்துடனும், அதே நேரம் கவலையுடனும் அவரது முகத்தையே ஏறிட்டு பார்த்துகொண்டிருந்தார்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:36 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 Hn80o9Y

ராமானுஜரின் மனம் குளிரும் வண்ணம் திருக்கோஷ்டியூர் நம்பியின் பதில் அமைந்தது. அப்பா ராமானுஜா! நீ கேட்டு வந்துள்ள உயர்ந்த மந்திரத்தை உனக்கு நான் உபதேசிக்கிறேன். கலியுகத்தில் இம்மந்திரத்தை கேட்கும் தகுதி உனக்கு இருப்பதால் தான், பரந்தாமன் உன்னை என்னிடம் அனுப்பியுள்ளான். ஆனால், இந்த மந்திரத்தை நீ மட்டுமே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இம்மந்திரம் தெரிந்தவர் இறந்த பின் வைகுண்டத்தை அடைவார். பிறவாவாழ்வெனும் முக்தி பெறுவார். அந்த பரந்தாமனுடன் ஐக்கியமாவார். வேறு யாருக்கும் இம்மந்திரத்தைச் சொல்லக்கூடாது, என்றார். பின்னர் ராமானுஜருக்கு ரகசியமாக அந்த மந்திரத்தைக் கற்பித்தார். அந்த மாத்திரத்திலேயே ராமானுஜர் தெய்வீக சக்தி பெற்றார். உள்ளத்தில் அமைதி நிலவியது. உலகத்தையே தன் கைக்குள் அடக்கியவன் எப்படி மகிழ்வானோ, அப்படியே மகிழ்ந்தார் ராமானுஜர். குருவின் பாதத்தில் விழுந்து தம் நன்றியைத் தெரிவித்தார். மந்திரம் தெரிந்த மகிழ்ச்சியுடன் ஸ்ரீரங்கத்துக்கு கிளம்பினார். புறப்பட இருந்த சமயத்தில் ராமானுஜரின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. நாம் படித்த மந்திரம் வைகுண்டம் செல்ல உதவும் என்பது குருவின் வாக்கு. இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்பது அவரது கட்டளை. குருவின் கட்டளையை மீறக்கூடாது என்பது உண்மையே. அதே நேரம் இம்மந்திரம் தெரிந்த குருவும், நானும் மட்டுமே வைகுண்டம் செல்வதென்பது என்ன நியாயம்? ஊரில் எல்லாருக்கும் தெரியட்டுமே! எல்லாருமே இப்பிறவி துன்பத்தில் இருந்து நீங்கி, பரந்தாமனுடன் கலக்கட்டுமே! இதில் தவறென்ன இருக்கிறது? குருநாதர் ஏன் இப்படி சொல்கிறார்? என தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். சிந்தித்தார் சில நிமிடங்கள். இதை எல்லாருக்கும் சொல்லி விட வேண்டும். குருவின் கட்டளையை மீறுவதற்குரிய பாவத்தை நாம் ஏற்றுக் கொள்வோம். நாம் அழிந்தாலும், பிறர் வாழ வேண்டும், என்றவராய், திருக்கோஷ்டியூர் கோயில் வாசலுக்கு சென்றார்.

முதலில் தன் சீடர்களான முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகியோருக்கு இம்மந்திரத்தை போதித்தார். அடுத்து மக்கள் கூட்டத்தை அழைத்தார். அன்பர்களே! உங்களுக்கு நான் உயர்ந்த மந்திரம் ஒன்றைக் கற்றுத் தரப்போகிறேன். செல்வம், உலக இன்பம் இவற்றையெல்லாம் விட உயர்ந்த ஒன்று உங்களுக்கு இதைக் கேட்பதால் கிடைக்கும், என்றார். எல்லாரும் ஒருமித்த குரலில் அம்மந்திரத்தைக் கூறுமாறு கேட்டனர். ஊருக்குள் இதற்குள் செய்தி பரவி விட்டது. நம் ஊருக்கு வந்துள்ள மகான் ஒருவர் ஒரு மந்திரத்தைச் சொல்லப் போகிறாராம். இதைச் சொன்னால், கிட்டாத பொருள் ஒன்று கிட்டுமாம். அது என்னவென தெரியவில்லை. நமக்கு இன்னும் பொருள், பொன், நினைத்த பெண்...இப்படியெல்லாம் கிடைத்தால், இன்னும் நல்லது தானே, என பாமரர்களும், ஏதோ ஒரு தெய்வீகப்பொருள் கிடைக்கப் போகிறதெனக் கருதி கற்றறிந்தவர்களும் அங்கு கூடினர். ராமானுஜர் என்ற கருணைக்கடல் மக்களுக்கு அம்மந்திரத்தை ஓதியது. அந்த மந்திரத்திற்கு எத்தனை எழுத்துக்கள் தெரியுமா? எட்டே எட்டு. இத்தொடரை வாசித்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அந்த மந்திரம் என்னவென்று அறியும் ஆவல் இருக்கும். அதுமட்டுமல்ல, அதை ஓதினால், எங்களுக்கும் பரந்தாமனுடன் கலக்கும் பாக்கியம் கிடைக்குமே என்ற ஏக்கத்துடன் இருப்பீர்கள் அல்லவா? இதோ! பகவான் விஷ்ணு திருக்கோஷ்டியூர் நம்பிக்கு அறிவித்து, அவர் மூலம் ராமானுஜர் மக்களுக்கு அறிவித்த அந்த மந்திரம் இதுதான். உரக்க படியுங்கள். உங்கள் இல்லம் முழுவதும் இந்த மந்திரத்தின் ஒலி பரவட்டும். பக்தியுடன் படியுங்கள்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:38 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 Tjcw7wg


அந்த பரந்தாமனை மனதுக்குள் கொண்டு வாருங்கள். சொல்லுங்கள்....உரக்கச் சொல்லுங்கள்...
ஓம் நமோ நாராயணாய....ஓம் நமோ நாராயணாய...ஓம் நமோ நாராயணாய
 :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: ராமானுஜர் சொன்ன இம்மந்திரத்தை அனைவரும் மும்முறை முழங்கினர். எல்லாருமே வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைந்தனர். அடுத்து எங்கிருந்து இடிவரும் என்பதை ராமானுஜர் அறிந்திருப்பாரே! திருக்கோஷ்டியூர் நம்பியைச் சந்திக்க அவரே சென்று விட்டார். உள்ளே நுழைந்தது தான் தாமதம். அங்கே அதிகபட்ச வெப்பத்தில் பால் பொங்குவது போல, திருக்கோஷ்டியூர் நம்பி கொதித்து நின்றார். அடத்துரோகியே! குருவின் வார்த்தையை மீறிய உன்னிலும் பெரிய துஷ்டன் உலகில் யாருமில்லை. என் கண்முன்னால் வந்து, உன்னை பார்த்த பாவத்தை எனக்கு தராதே. குருவின் வார்த்தையை மீறிய நீயும் ஒரு மனிதனா? நீ பேயை விடக் கொடியவன். உன்னை நரகத்தில் சேர்க்கக்கூட யோசிப்பார்கள். அதையும் விட கொடிய இடத்திற்கு நீ செல்வாய், என்று உணர்ச்சியை வார்த்தைகளாக வடித்து கொட்டித் தீர்த்து விட்டார். குருவின் நிந்தனை கண்டு ராமானுஜர் சற்றும் கலங்கவில்லை. பலருக்கு நன்மை செய்த தனக்கு, குரு சொல்வது போல, கொடிய நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை எனக் கருதியவர், குருவிடம், ஆச்சாரியாரே! தாங்கள் சொல்வது முழுவதும் நியாயமே. நான் செய்தது தவறென்பது எனக்கும் தெரியும். ஆயினும், இந்த தவறுக்காக எனக்கு கொடிய நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனால், இந்த மந்திரத்தைக் கேட்ட ஆயிரக்கணக்கானவர்கள் வைகுண்டம் செல்வார்களே! அதைக்கண்டு நான் மகிழ்வேன். அவர்கள் பரந்தாமனுடன் கலக்கும் காட்சியை என் மனக்கண்ணால் காண்கிறேன். எனக்கு கிடைக்கப் போகும் துன்பத்தை விட, மக்கள் அடையும் நன்மையே பெரிதாகத் தெரிகிறது, என்றார் பணிவுடன். ராமானுஜர் பேசப்பேச, திருக்கோஷ்டியூர் நம்பியின் முகம் மாறியது.
தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:40 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 U14NpBd


திருக்கோஷ்டியூர் நம்பியின் முகமாற்றம் கண்டு, ராமானுஜர் மகிழ்ந்தார். ஏனெனில் சற்று முன்பு வரை தன் செயலால் கோபப்பட்டு, கடுகடுத்து நின்ற அவரது முகம் திருமாலின் பத்தினி அமர்ந்திருக்கும் செந்தாமரை போல் மலர்ந்தது. அது மட்டுமல்ல, ராமானுஜரை அதுவரை ஒருமையில் அழைத்த நம்பிகள், திடீரென மரியாதையாக பேசினார். ராமானுஜரே! தங்கள் பணிவு என்னைக் கவர்ந்தது. ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற தங்களது பரந்த மனப்பான்மை யாருக்கு வரும்? என்றவர், அனைவரும் எதிர் பாராத வகையில், மற்றொரு ஏவுகணையையும் வீசினார். ராமானுஜரே! இனி தாங்கள் தான் என் குரு. உங்கள் விரிந்த இதயத்தைப் பார்த்தால், நீங்கள் நிச்சயமாக அந்த மாலவனின் அம்சம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் தோன்றவில்லை. தாங்கள் முன்னால், மிகவும் தாழ்ந்த நிலையில் நிற்கும், நான் செய்த தவறை மன்னித்தருளுங்கள், ? என்றார். ராமானுஜர் அப்படியே நம்பிகளின் காலடிகளில் விழுந்து விட்டார். அன்பிற்குரிய ஆசிரியரே! என்ன வார்த்தை சொன்னீர்கள். தங்களைப் போன்ற மகாத்மாக்கள் இந்த சிறியவனிடம் மன்னிப்பு கேட்பதா? தாங்கள் எவ்வளவு சக்தி மிக்கவர் என்பதை தங்களாலேயே தெரிந்து கொள்ள முடியவில்லை. உலகையே உய்விக்கும் ஓம் நமோ நாராயண என்ற மந்திரம் தங்கள் திருவாயிலிருந்து வந்ததால், அதன் சக்தி பலமடங்கு பெற்றதாக இருந்தது. என்னைத் தங்கள் சீடனாக மட்டுமல்ல, மகனாக நினையுங்கள். தங்கள் தொண்டனாகவே நான் என்றும் இருப்பேன், என்றார்,. அந்த அரியகாட்சி கண்டு மக்கள் சிலை போல் நின்றனர். திருக்கோஷ்டியூர் நம்பி விடுவதாக இல்லை. ராமானுஜரே! தாங்கள் என் மகன் பொய்கையாழ்வானை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள், என்றார். குருவின் கட்டளையை ஏற்று, பொய்கையாழ்வானுடன் திருக்கோஷ்டியூரில் இருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டார் ராமானுஜர்.

இச்சம்பவம் மூலம் வாசகர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விதை விதைத்த அன்றே அது செடியாகி மரமாகி காய் காய்த்து பழம் கையில் கிடைத்து விட வேண்டும் என்ற மனநிலையிலேயே நாம் இருக்கிறோம். எதையும் உடனே அடைந்து விட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், இறைவன் என்ன செய்கிறான். செடி வளர ஒரு மாதம், மரமாக மாற இரண்டு மாதம், பூ பூத்து காயாக மாற இரண்டு மாதம், பின் கனியாக மாற ஒருமாதம் என நம்மைக் காக்க வைக்கிறான். அப்படியானால் தான் கனிக்கு மதிப்பு. நேற்று விதை, இன்று கனி என்றால் கனிக்கு எப்படி மரியாதை இருக்கும்? இதுபோல் தான், திருக்கோஷ்டியூர் நம்பி மூலமாக ஒரு விளையாடலை அந்த ரங்கநாதன் நிகழ்த்திக் காட்டியுள்ளான் என எண்ண வேண்டியுள்ளது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 09, 2024 10:42 am

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! - Page 4 6hYJvWl

ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரம் (ஓம் என்பது ஒரே எழுத்து) அஞ்ஞானிகளுக்கு மிகச் சாதாணமாக பட்டிருக்கலாம். ஆனால், இதன் மதிப்பு என்ன என்பதை இச்சம்பவம் நிகழ்ந்ததன் மூலம் தான் உணர முடிகிறது. அதாவது, கஷ்டப்பட்டால் தான் எதுவும் கிடைக்கும். அப்படி கஷ்டப்பட்டு கிடைக்கும் பொருளையே கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என்ற மனநிலை இருக்கும். இதற்காகத்தான் குழந்தைகள் கேட்டவுடன் எதையும் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது. அவர்களுக்கு அப்பொருளின் மதிப்பை உணர்த்த வேண்டும். அப்படியானால் தான் அதை நீண்ட நாள் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்குள் வரும். எதிர்கால வாழ்க்கைக்கு இப்பழக்கம் பெரிதும் உதவும்.

சரி... மீண்டும் கதைக்கு திரும்புவோம். இதை இன்னும் சில சம்பவங்கள் மூலமும் ராமானுஜர் நிகழ்த்திக் காட்டினார். ஒருமுறை ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான், ஒரு ஸ்லோகத்திற்கு பொருள் விளக்கம் கேட்டார். எல்லாவற்றையும் துறந்து, நானே கதியென சரணடைந்தால், எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெறலாம், என்ற பொருளில் வரும் ஸ்லோகத்திற்குரிய விளக்கமே அவர் கேட்டது. ராமானுஜர் இதற்கு உடனடியாக விளக்கம் தரவில்லை. கூரேசா! நீ கேட்ட இந்த ஸ்லோகத்தின் பொருளைச் சொல்வதற்கு எனது குரு திருக்கோஷ்டியூர் நம்பி சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதற்கு கட்டுப்படுபவர்களே இதை அறியமுடியும், என்றார் ராமானுஜர். கூரேசா! நீ கேட்ட இந்த ஸ்லோகத்தின் பொருளைச் சொல்வதற்கு எனது குரு திருக்கோஷ்டியூர் நம்பி சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதற்கு கட்டுப்படுபவர்களே இதை அறியமுடியும், என்றார் ராமானுஜர். கூரேசர் அந்த நிபந்தனையை ஆவலுடன் செவிமடுத்தார். கூரேசா! இதன் பொருள் அறிய விரும்புபவர் ஒரு வருடகாலம் ஐம்புலன்களையும் அடக்கி, சிறிதும் ஆணவமின்றி, குருவுக்கு தொண்டு செய்ய வேண்டும். அவரே இதன் பொருள் அறிய முடியும், என்றார். அதற்கு ஆழ்வான், குருவே! தாங்கள் சொல்வதில் சிறு சந்தேகம். இந்த வாழ்க்கை நிலையற்றது. இன்னும் ஓராண்டு நான் வாழ்வேன் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அப்படியானால், நான் இதன் பொருளை அறிய முடியாமலே போய்விடுவேனே, என்றார். சரி... இதற்கு பதிலாக காலத்தைக் குறைக்கும் மாற்று ஏற்பாடு இருக்கிறது. அதாவது, ஒரு மாத காலம் பிச்சையெடுத்து வாழ வேண்டும். அப்படி செய்வது ஓராண்டு கால புலனடக்கத்திற்கு ஒப்பாகும், என்றார் ராமானுஜர். கூரத்தாழ்வார் குருவின் சொல்லை ஏற்றார். ஒருமாதம் பிச்சையெடுத்தார். பிச்சையெடுக்கும் இடங்களில் அவமானம் ஏற்படுமே! அதையெல்லாம் பொறுத்துக் கொண்டார். பொறுமையாக இருப்பவனே நினைத்ததை அடைய முடியும் என்ற தத்துவம் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டது. ஒரு மாத கால பிச்சை வாழ்க்கைக்கு பிறகு, ராமானுஜர் அப்பொருளை உபதேசித்தார். இதன் பிறகு ராமானுஜரின் மற்றொரு சீடரும், உறவினருமான முதலியாண்டான் இதே ஸ்லோகத்தின் உட்பொருளை அறிய ராமானுஜரை அணுக வந்தார். ராமானுஜர் அவருக்கு வைத்த பரீட்சை கடுமையானதாக இருந்தது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக