புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? I_vote_lcapநவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? I_voting_barநவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? I_vote_lcapநவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? I_voting_barநவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? I_vote_lcapநவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? I_voting_barநவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 01, 2023 11:35 pm

நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? DfB4I2z

நவராத்திரி இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் நேரடி அர்த்தம் ஒன்பது இரவுகள். இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவதுர்காவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி பெரும்பாலும் செப்டம்பர் – நவம்பர் மாதங்களில் வருகிறது. இது இலையுதிர்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாறும் நேரம். இந்த நேரத்தில் பூமியின் வடக்கு கோளம் சூரியனை விட்டு விலகி இருக்கும். இதனால் பகல் ஒளி என்பது குறைவாகவும் இரவு அதிகமாகவும் காணப்படும். இதனால் வடக்கு பகுதியில் குளிர் பரவும். சூரிய ஒளி பூமியில் படும் நேரம் குறையும். இந்த குளிரால் மனித உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் வர வழி வகுக்கும். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பயிற்சியாகவே இந்த நவராத்திரி விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்து புராணங்கள் படி, அரக்கர்கள் அரசன் மகிஷாசூரன் மூன்று லோகங்கலான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில், அவனை வதம் செய்ய மாபெரும் சக்தி தேவைப்பட்டது. இதற்கான காரணம், படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசரனை வீழ்த்த முடியும் என்ற வரம் அளித்துள்ளார்.

எனவே மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து, அரக்கர்கள் அரசனான மகிஷாசுரனை வதம் செய்ய துர்கா தேவியை அதாவது, பராசக்தியை உருவாக்கினார்கள் என்று இந்து புராணங்கள் கூறுகிறது. 15 நாட்கள் நீண்ட போருக்கு பிறகு, பராசக்தி அவனை மாளைய அமாவாசை அன்று திரிசூலத்தால் வதம் செய்தார். அதற்குப் பிறகான 9 நாட்களுக்கு, பாராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில், அவதாரங்களில் வழிபடத்துவங்கினார்.

விரதம் இருக்கும் முறை ?


இந்த முறைப்படி இந்த 9 நாட்களும் மக்கள் இடைவிடாத விரதம் செய்கிறார்கள். காலையில் இருந்து விரதம் இருப்பதால் உடலில் உள்ள கூடுதல் கொழுப்புகள் கரைய வழிசெய்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் கூடுதல் கொழுப்பு உடலில் இருப்பதால்தான் நோய்கள் பல வருகின்றன. அவர் இந்த குளிர் காலத்தில் பெரிதளவில் கரையும் வாய்ப்புள்ளது. உடல் எடை குறைக்க போராடுபவர்கள் இந்த 9 நாள் விரதத்தை நிச்சயம் எடை குறைப்பிற்கு பயன்படுத்தலாம்.

நவராத்தி 2023 எப்போது?


ஜோதிடத்தின்படி, சித்ரா நட்சத்திரம் அக்டோபர் 14ம் தேதி மாலை 4.24 மணிக்கு தொடங்கி அக்ரோபர் 15ம் தேதி மாலை 6.13 வரை இருக்கும். மறுபுறம், அபிஜீத் முஹுர்த்தம் அக்டோபர் 15 அன்று காலை 11.04 முதல் 11.50 வரை இருக்கும்.

அதனால் இந்த இரண்டு ஷரதியா நவராத்திரி அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24 வரை இருக்கும். இம்முறை நவராத்திரி ஒன்பது நாட்கள் நடைபெறுவது சிறப்பு. நவராத்திரி சனி, செவ்வாய்க்கிழமைகளில் தொடங்கும் போது அம்மன் குதிரையில் வலம் வருவார்.

துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள்


அக்டோபர் 15ம் தேத ஷைலபுத்ரி வழிபாடும், அக்டோபர் 16ம் தேதி பிரம்மச்சாரிணி வழிபாடும், அக்டோபர் 17ம் தேதி மா சந்திராகாண்டா வழிபாடும், அக்டோபர் 18ம் தேதி மா கூஷ்மாண்டா வழிபாடும், அக்ரோபர் 19ம் தேதி மா ஸ்கந்தமாதா வழிபாடும் நடைபெறும்.

அக்டோபர் 20ம் தேதி காத்யானி வழிபாடும், அக்டோபர் 21ம் தேதி மா காலாத்திரி வழிபாடும், அக்டோபர் 22ம் தேதி மா சித்திதாத்தி வழிபாடும், அக்டோபர் 23ம் தேதி மகாகெளரி வழிபாடும், அக்டோபர் 24ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.



நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma and Mahihere இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 01, 2023 11:36 pm

நவராத்திரி, சரஸ்வதி பூஜை... விசேஷங்கள் நிறைந்த அக்டோபர் மாதம்


இந்தாண்டு அக்டோபர் மாதம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, நவராத்திரி என பண்டிகைகள் நிறைந்த மாதமாக உள்ளது. சரஸ்வதி, விஜயதசமி ஆகியவை கல்வி வளம் செழிக்க பூஜை செய்து வழிபாடு செய்யப்படுகிறது.

தொழில் சிறக்க ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த நாட்களின் துர்கா தேவிக்கு பூஜை செய்து வழிபாடு செய்யப்படும். 9 நாட்களும் துர்கா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படும்.

இந்தாண்டு அக்டோபர் 15-ம் முதல் 24-ம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில் வீடுகளில் கொலு வைத்தும் வழிபாடு செய்யப்படும்.

இந்த மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பது குறித்து பார்ப்போம்.


அக். 1- முதியோர் தினம் (ஞாயிறு)

அக். 2- சங்கடஹர சதுர்த்தி, காந்தி ஜெயந்தி ( திங்கள்)

அக். 3- கார்த்திகை விரதம் ( செவ்வாய்)

அக். 6- மகாலட்சுமி விரதம் முடிவு (வெள்ளி)

அக். 10- ஏகாதசி விரதம் ( செவ்வாய்)

அக்.11- பிரதோஷம் ( புதன்)

அக். 12- மாத சிவராத்திரி ( வியாழன்)

அக். 14- அமாவாசை ( சனி)

அக். 16- சந்திர தரிசனம், சோமவார விரதம் (திங்கள்)

அக். 18- சதுர்த்தி விரதம், துலா சங்கராந்தி, சபரிமலை நடை திறப்பு (புதன்)

அக். 19- லலிதா பஞ்சமி ( வியாழன்)

அக். 20- சஷ்டி விரதம் ( வெள்ளி)

அக். 21- துர்கா பூஜை ( சனி)

அக். 22- துர்காஷ்டமி ( ஞாயிறு)

அக். 23- ஆயுதபூஜை, மகாநவமி, சரஸ்வதி பூஜை, ( திங்கள்)

அக். 24- விஜயதசமி (செவ்வாய்)

அக். 25- ஏகாதசி விரதம் (புதன்)

அக். 26- பிரதோஷம் ( வியாழன்)

அக். 28- பௌர்ணமி விரதம், பெளர்ணமி, ஐப்பசி பௌர்ணமி

அக்.30- கார்த்திகை விரதம் ( திங்கள்)



நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram and Mahihere இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 5:35 pm

9 நாள் நவராத்திரி கொண்டாட்டம்: அம்மனை வழிபடும் பெண்கள் எந்த நாளில் என்ன நிறத்தில் ஆடைகள் அணிவார்கள்?


மங்கலங்கள் அருளும் நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது மரபு. இதனால் அம்பிகை மனம் மகிழ்ந்து நம் இல்லத்தில் சகல சுபிட்சங்களையும் நிறையச் செய்வாள் என்பது நம்பிக்கை.

இந்தாண்டு நவராத்திரி விழா, அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஆண்களும், பெண்களும் அந்தந்த நாளுக்கான நிறத்தில் ஆடைகள் அணிந்து அம்மனை வழிபட்டு மகிழ்வார்கள். அதன்படி, 9 நாட்கள் எந்தெந்த நிறம் மற்றும் எந்த நாள் அன்னை பராசக்தியை என்ன அவதாரத்தில் வணங்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

நாள் 1 (15 அக்.) வெள்ளை



ஷைலபுத்ரி தேவியை வணங்கும் முதல் நாளன்று வெண்ணிற ஆடைகளை அணிந்து, பராசக்தியின் ஆசீர்வாதத்தைப் பெறலாம்.

நாள் 2 (16 அக்.) சிவப்பு



பிரம்மச்சாரிணி தேவியை வணங்கும் நாளில் சிவப்பு நிற ஆடை அணிவது நல்லது.

நாள் 3 (17 அக்.) அடர் நீலம்



சந்திகாண்டா தேவியை வணங்கும் நாளில் அடர் நீல நிறத்தில் (Royal blue) ஆடைகள் அணியலாம்.

நாள் 4 (18 அக்.) அடர் மஞ்சள்



குஷ்மான்டா தேவி நாளில், பெண்கள் அடர் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து வழிபடலாம்.

நாள் 5 (19 அக்.) பச்சை



ஸ்கந்தமாதா தேவியை வணங்கும் இந்நாளில் பச்சை நிற ஆடை அணியலாம். பச்சை நிற ஆடைகளில் அம்பாளுக்கு பூஜை செய்தால், உங்கள் வாழ்வில் நிம்மதியும், செழிப்பும் நிலைத்து நிற்கும்.

நாள் 6 (20 அக்.) சாம்பல்



காத்யாயனி தேவியை வணங்கும் இந்நாளில் சாம்பல் நிற ஆடைகளை அணியலாம்.

நாள் 7 (21 அக்.) ஆரஞ்சு



நவதுர்கை தேவியை வணங்கும் நாளில் ஆரஞ்சு நிற ஆடைகளை அணியலாம். ஆரஞ்சு நிறத்தில் நவதுர்கை தேவியை வழிப்படுவது மிகவும் நல்லது

நாள் 8 (22 அக்.) மயில் பச்சை



மயில் பச்சை மிக அழகான நிறங்களில் ஒன்று. மஹா கௌவுரியை வணங்கும் இந்நாளில் மயில் பச்சை நிற ஆடைகளை அணியலாம்.

நாள் 9 (23 அக்.) பிங்க்



சித்திதாத்ரி தேவியை வணங்கும் இந்நாளில் பிங்க நிற ஆடைகளை அணிய வேண்டும்.



நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Mahihere இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 5:37 pm

நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? NsUCDP2ycHIrXFNBPpg8

வீட்டில் கொலு ? எந்த படியில் எந்த பொம்மையை வைப்பது?


நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்பதே அது.

நவராத்திரி என்பது மகாசக்திக்கான காலம்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரையும் வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். இந்த ஒன்பது நாட்களும் எவர் வீட்டில் ஆத்மார்த்தமாக வணங்கி, உரிய முறையில் விரதம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும். குழந்தைகள் கல்வி கலைகளில் சிறந்து திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

இந்தாண்டு நவராத்திரி தவிழா, அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்குகிறது.

நவராத்திரி வழிபாடுகளில் கொலுவும் ஒன்று.

இந்த ஒன்பது நாளிலும் யார் வீட்டில் கொலு வைத்திருந்தாலும் அந்த கொலுவைப் பார்த்து ரசிப்பதும் வேண்டிக்கொள்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்!

கொலு எப்படி வைக்க வேண்டும்?


நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது.

மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பொருட்டே 9 படிகள் வைத்து, அதில் பொம்மைகளை அடுக்கி வைப்பது வழக்கம்.

அவரவர் வசதிக்கேற்ப 3, 5, 7, 9 படிகள் அமைத்து கொலு வைக்கலாம்.

இதில் முதல் படியில் மரம், செடி, கொடி ஆகிய ஓரறிவு உயிரினங்கள், இரண்டாவது படியில், நத்தை, சங்கு போன்ற ஈரறிவு உயிரினங்களை வைக்கலாம். அந்தக் காலத்தில் திண்ணைகளில் அமர்ந்து சோழி உருட்டி விளையாடுவது வழக்கம். இந்தச் சோழிகளையும், சோழிகளால் செய்யப்பட்ட பொம்மைகளையும் இரண்டாம் படியில் வைக்கலாம்.

எறும்பு, கரையான், சிறு பூச்சிகள், மண் புழு போன்ற மூன்றறிவு உயிரினங்களை மூன்றாம் படியிலும், வண்டு, நண்டு, பட்டாம்பூச்சி உள்ளிட்ட 4 அறிவு உயிரினங்களை நான்காம் படியிலும் அடுக்க வேண்டும்.

தொடர்ந்து ஐந்தாம் படியில் ஐந்தறிவு உயிரினங்களான பறவைகள், விலங்குகள் பொம்மைகளை வைக்க வேண்டும்.

ஆறாம் படி மனிதர்களுக்கானது. இதில், திருமணங்கள் போன்ற சடங்குகள், வியாபாரம், நடனம் ஆடும் பொம்மைகள், தலைவர்களின் பொம்மைகளை வைக்கலாம்.

ஏழாம் படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள் ஆகியோரை வைக்க வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார் ஆகியோரின் பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாம் படியில், தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவகிரக அதிபதிகள், இந்திரன், சந்திரன் ஆகிய தெய்வ உருவங்களை மண் பொம்மைகளாக வைக்கலாம்.

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தேவியருடன் அமர்ந்திருக்கும் சிலைகளை வைக்க வேண்டும். இவற்றின் நடுவில் ஆதி பராசக்தி இருக்குமாறு அமைக்க வேண்டும். இங்கே பூரண கும்பத்தை வைத்து நிறைவு செய்யலாம்.

மனிதன் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று நிறைவாகத் தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே, இவ்வாறு கொலு வைக்க வேண்டும்.

முக்கியமாக, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தாம்பூலம் மற்றும் இனிப்புகள் வழங்கினால் உறவுகளுக்குள்ளும் அக்கம்பக்கத்திலும் நல்ல இணக்கம் ஏற்படும். அன்பு மேம்படும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.



நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma and Mahihere இந்த பதிவை விரும்பியுள்ளனர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 03, 2023 10:48 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: நல்ல திரி சிவா புன்னகை........ சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 12:33 am

நவராத்திரி தகவல்கள்


நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? Kalkionline%2F2023-10%2F5136986b-12b2-4dbc-9fda-9d01600107c4%2Fnalam_tharum_Navarathiri.png?auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=1

* பராசக்தி பண்டாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாம் நாள் அவனை வதம் செய்த வெற்றித்திருநாள் விஜயதசமி ஆகும். முற்காலத்தில் அரசர்கள் விஜயதசமி அன்று சிம்மாசனம் வெண்கொற்றக் குடை, படைக்கலன்கள் ஆகியவற்றிற்கு பூஜை செய்திருக் கிறார்கள்.

* அர்ஜுனன் விஜயதசமியன்று, தான் வைத்திருந்த ஆயுதங்களை பூஜை செய்து, எடுத்துச் சென்று மகாபாரதப் போரில் வெற்றி பெற்றான்.

* சாமுண்டீஸ்வரி தேவியை யானை மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சியே மைசூரில் தசராவாகக் கொண்டாடப்படுகிறது‌. 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர்கள், தசரா விழாவை ஹம்பி நகரில் ஆரம்பித்து வைத்தனர். பிறகே மைசூருக்கு மாற்றப்பட்டது.

* திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள சரஸ்வதி தேவிக்கு நான்கு தலைகள் உள்ளன. இந்த தேவியை வணங்குவதால் நான்கு வேதங்களிலும் சிறந்து விளங்குவதுடன், பிரம்மனின் அருளும் கிட்டும் என்பது ஐதீகம்.

* வேத நூல்களில் சரஸ்வதி தேவியின் வாகனம் மயில் என்று கூறப்பட்டுள்ளது. வேறு சில ஆன்மீக நூல்களில் அன்னப்பறவை வாகனமாக சொல்லப்பட்டுள்ளது.‌ வட மாநிலங்கள் சிலவற்றில், சரஸ்வதி தேவி, ஆடு மீது அமர்ந்து காட்சி தருகிறாள். மேஷ வாகனா என்று அங்கு சரஸ்வதிக்கு பெயர். யாளி வாகனத்திலும் சிம்ம வாகனத்திலும் சரஸ்வதி எழுந்தருளுகிறாள் என்று பௌத்தர்கள் வழிபடுகின்றனர்.

* ஒடிசா மாநிலத்தில் நவராத்திரி விழா சோடச பூஜை என்று 16 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையன்று பூரி ஜெகநாதர் கோயிலில் ஜெகநாதரின் கரங்களில் உள்ள சங்கு சக்கரங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.



நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Mahihere இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 07, 2023 12:35 am

இன்னும் சில நாட்களில் நவராத்திரி ஆரம்பமாகிவிடும். சக்தியை வழிபடும் இந்த நவராத்திரி நாட்களில் நமக்குள்ளேயே நாம் நவசக்திகளை வளர்த்துக்கொண்டால், நிச்சயம் 'வெற்றி நமதே!  

• காலையில் சொல்ல வேண்டிய மந்திரம்:



ஒவ்வொரு நாளைத் துவக்கும் போதும். நமக்கான ஒரு வெற்றி மந்திரமாக, 'இன்று நான் செய்யப் போகும் அத்தனை வேலைகளையுமே திறம்படச் செய்து முடிக்கப் போகிறேன் என்று கூறி தொடங்குவது.

• உயர்ந்த எண்ணம்:



நம் எண்ணம்தான் நாம் செய்யும் செயலாக வெளிப்படும். எனவே, உயர்ந்த எண்ணங்களை மட்டுமே வளர்ப்போம்.

• குறை சொல்லாமல் இருப்பது:



யாரைப் பற்றியுமே எதைப் பற்றியுமே குறை சொல்லாமல் இருக்கப் பழகுவோம்.

• இன்றே செய்வோம்:



இன்று செய்து முடிக்கவேண்டும் என பட்டியலிட்ட வேலைகளை இன்றே செய்து முடிப்போம்.

• யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருப்போம்:



நாம் வைக்கும் கொலுவாக இருந்தாலும் சரி, அல்லது நம் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, ஒருபோதும் எதையும், யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்கும் குணத்தை வளர்த்துக் கொள்வோம்.

• 100 சதவிகித அர்ப்பணிப்பு:



நாம் செய்யும் வேலைகளை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக செய்யாமல், 100 சதவிகித அர்ப்பணிப்போடு செய்யப் பழகுவோம்.

• பிறரை உளமாரப் பாராட்டுவது:



மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே பாராட்ட ஆரம்பிப்போம்

* பாசிட்டிவ் வார்த்தைகள்:



பாசிட்டிவான வார்த்தைகளை மட்டுமே உச்சரிக்க வேண்டும் எனத் தீர்மானித்து அப்படியே பேசப் பழகுவோம்.

• நன்றியுணர்வோடு இருத்தல்:



தினமும் இரவு தூங்கப் போவதற்கு முன் அன்றைய தினம் நடந்த குறைந்தபட்ச மூன்று விஷயங்களுக்காக, இறைவனுக்கு உளமார நன்றி சொல்லுவோம்.



நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Mahihere இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 10, 2023 11:28 pm


நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? Kalkionline%2F2023-10%2F06f7731f-1f9b-41f9-8b38-e709d6bb3c4c%2FKOlam_2.jpg?auto=format%2Ccompress&format=webp&dpr=1

நவராத்திரியில் எந்த மாதிரி கோலங்கள் போட வேண்டும்?


பெண்ணானவள் தன்னுடைய கற்பனா சக்தியை நவராத்திரி காலங்களிலும், மார்கழி மாதத்திலும்தான் கோலங்கள்மூலம் வெளிப்படுத்துவாள். நவ என்றால் ஒன்பது என்கிற அர்த்தத்தை தவிர, புதியது என்கிற பொருளும் கூறப்படும். நவராத்திரி நாட்களில் ஒன்பது நாட்களும் ஒன்பது புதுப்புது கோலங்கள் போட்டு, தான் மகிழ்ச்சி அடைவதுடன் பிறரையும் பிரமிப்பிற்கு ஆளாக்குவது பெண்களின் தனிச்சிறப்பு.

கோலங்களில், ஃப்ரீ ஹேண்டு கோலம், புள்ளி வைத்த சிக்குக் கோலம், கம்பிக் கோலம், படியிறக்கிக் கோலம், வண்ணப் பொடி கோலம் போன்று வகைவகையான கோல வகைகள் இருக்கின்றன.

ஒருவருக்கு எவ்வளவுதான் நன்றாக கோலம் போடத் தெரிந்தாலும் நவராத்திரி ஒன்பது நாட்களிலும் சில வகையான கோலங்களை போடுவதுதான் முப்பெரும் தேவியருக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். அவை என்ன? எப்படி போட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

முதல் நாள்

– அரிசி மாவினால் பொட்டு வைத்த கோலம்.

இரண்டாம் நாள்

– கோதுமை மாவினால் கட்டங்கள் அமைவதுபோல் கோலம்.

மூன்றாம் நாள்

– முத்துக்கள் கொண்டு மலர்ந்த பூ அமைகிறாற்போன்ற கோலம்.

நான்காம் நாள்

– மஞ்சள் கலந்த அட்சதையைக்கொண்டு படிக்கட்டு இறக்கி கோலம்.

ஐந்தாம் நாள்

– கருப்பு கொண்டைக் கடலையைக் கொண்டு பறவையினங்கள் போன்ற கோலம்.

ஆறாம் நாள்

– கடலைப் பருப்பினால் முப்பெரும் தேவியரின் ஒன்பது நாமங்களை (துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவியர்களின் நாமங்களை தலைக்கு மூன்று வீதம்) கோலமாகப் போட வேண்டும்.

ஏழாம் நாள்

– எந்தவிதமான கோலம் வேண்டுமானாலும் போடலாம். ஆனால் வெள்ளை மலர்களால் ஆன கோலமாகப் போடவேண்டும்.

எட்டாம் நாள்

– காசு பத்மம் என்று கூறப்படும் தாமரைக் கோலம்.

ஒன்பதாம் நாள்

– கற்பூரத்தினால் சூலாயுதம் வடிவம் அமைத்து, வாசனைப் பொடிகளைக் கலந்து கோலமிடவேண்டும்.

மேற்கண்ட ஒன்பது நாட்கள் கோலமும் பூஜை அறையில் போடலாம். அல்லது கொலு வைத்த இடத்தில் போடலாம். வெளி வாசலில் போடக்கூடாது.

வெளிவாசலில் எந்த வகையான கோலங்கள் வேண்டுமானாலும் போடலாம். வாயில் நிலைப்படியில் இழைக்கோலம் போடுவது மிகவும் அவசியம். தினமும் செம்மண் பூசுவது சுபிட்சத்தைத் தரும்.

கோலங்கள் போடுவோம்; நவராத்திரியை, கோலாகலமாகக் கொண்டாடுவோம்.



நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and Mahihere இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 10, 2023 11:30 pm

கோரிய பலன் கைக் கூட நவராத்திரி நாட்களில் 'நவதுர்கா ஸ்துதி’!



* வந்தே வாஞ்சித லாபாய சந்த்ரார்த்த க்ருத சேகராம்I

வ்ருஷாரூடாம் சூலதராம் சைலபுத்ரீம் யசஸ்வினீமII

* ததாநாகர பத்மாப்யாம் அக்ஷமாலா கமண்டலூர்I

தேவி ப்ரஸ்தது மயி ப்ரஹ்மசாரிணி அநுத்தமாII

* பிண்ட ஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதாI

ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ரூதாII

* ஸுராஸம்பூர்ண கலசம் ருதிராப்லுத மேசவ I

ததாநா ஹஸ்த பத்மாப்யாம் க்ஷஷ்மாண்டா சுபதாஸ்துமேII

* ஸிம்ஹாஸநகதா நித்யம் பத்மாஞ்சித கரத்வயாI

சுபதாஸ்து ஸதா தேவீ ஸ்கந்தமாதா யசஸ்விநீII

* சந்த்ர ஹாஸோ ஜ்வலகரா சார்தூல வரவாஹனாI

காத்யாயநீ சுபம் தத்யாத் தேவீ தாநவ காதிநீII

* ஏகவேணீ ஜபாகர்ணபூரா நக்நாக ராஸ்திதாI

லம்போஷ்டீ கர்ணிகாகரணி தைலாப்யக்த ஸரீரிணீII

* வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணாI

வர்தந் மூர்த்தத்வஜா கிருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீII

* ஸ்வேத வ்ரூக்ஷேக்ஷ ஸமாரூடா ஸ்வேதாம்பர தராஸுசிI

மஹாகௌரி சுபம் தத்யாத் மஹாதேவ ப்ரமோததாII

* ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை அஸிரைரபிI

ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்தி தாயிநீII

* நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவாI

யோக கம்யா அகிலாதாரா துரீயா யா ச ஸம்ஸ்த்துதாII

* தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா!

மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி சஸ்த்ரிய:

தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத்II



நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Mahihere இந்த பதிவை விரும்பியுள்ளார்

Mahihere
Mahihere
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 11/10/2023

PostMahihere Wed Oct 11, 2023 9:37 pm

நவராத்திரி விரத நாட்க்களுக்கு அவசியமான தகவல்கள். நல்ல பதிவு. மிக்க நன்றி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக