புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
6 Posts - 86%
cordiac
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
251 Posts - 52%
heezulia
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
18 Posts - 4%
prajai
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
5 Posts - 1%
cordiac
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_m10யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் பெரியவன்? தொடர் கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sat Jul 08, 2023 6:53 pm

யார்  பெரியவன்?
◆ ◆ ◆
யார்  பெரியவன்?
நானா? இல்லை நீயா?
◆ ◆ ◆
இது
சாதாரண கேள்வி அல்ல
பல  சாம்ராஜ்ஜியங்கள்
சரிந்து போக
சாவுமணி அடித்த கேள்வி.
பல அரண்மனைகள்
அதிர்ந்து போக
அட்சாரமிட்ட கேள்வி.
◆ ◆ ◆
பல தேசங்கள்
நேசமின்றி போக வைத்த
நாசகரமான கேள்வி.
◆ ◆ ◆
பல இல்லங்களை
இன்னலுக்கு உள்ளாக்கிய
இடியோசை கேள்வி.
◆ ◆ ◆
பல உறவுகளை
உலுக்கி போட்டு எடுத்த
உச்சாணி கேள்வி.
◆ ◆ ◆
நாடாளும் வேந்தன் முதல்
நமோ சொல்லும் ஞானி வரை
சதா நச்சரிக்கும் கேள்வி.
ஏறக்குறைய
எல்லார் மனங்களிலும்
எழுந்து மறையும்
மின்னல் கேள்வி.
******************
ஆம்
அப்படி ஒரு கேள்வி தான்
அன்றும் எழுந்தது
◆ ◆ ◆
அதுவரையில்
கூடி குலாவி
கும்மாளமிட்ட
பஞ்ச பூதங்களும்
தம்மில் யார் பெரியவன்
என்கிற தர்கத்துக்கு
தம்மை தயார் படுத்திக் கொண்டன
இன்னும்  வ(ள)ரும்
பூதங்களுக்குள்
பூதாகரம் எடுத்தது பிரச்சனை
◆ ◆ ◆
அதுவரையில்
பாசத்தை பந்தி வைத்த
பங்காளி கூட்டத்துக்குள்ளே
பாக பிரிவினை
பாங்காக தொடங்கியது
◆ ◆ ◆
அகங்காரம் நெஞ்சிக்குள்
ரீங்காரம் இட ஆரம்பித்துவிட்டால்
ஓம்காரத்தின் நாதம் கூட
ஓசை இல்லாமல் போய்விடும் போல
◆ ◆ ◆
அங்கும் அதே சூழல் தான்
முதலில்
காற்று மையம் கொண்டது
◆ ◆ ◆
கர்வம் கொண்டவர்களே!
சர்வமும் நான் என்பதை உணராதவர்களே!
உருவம் இல்லாத நான் இல்லாமல் போனால் - இங்கே
பருவம் ஏது? உயிர் கருவும் ஏது?
◆ ◆ ◆
வளி தானே - உயிர் வாழ்வதுக்கான
வழி நானே
◆ ◆ ◆
காற்று மேலும்
செருக்குடன் செப்பியது
எங்கும்
பூ மணம் பரப்புபவன் நான் தான்
புல்லாங்குழல் புகுந்து
புது ராகம் படைப்பவனும் நான் தான்
◆ ◆ ◆
இதயம் அற்றவர்களே!
உங்கள்
இருதயம் இயங்க
காரணமானவன் நானே!
◆ ◆ ◆
காற்றின் பேச்சில்
காரம் இருந்த்தது
◆ ◆ ◆
அது
அகம்பாவம் கொண்டது
அதன்
அகமும் பாவம் கொண்டது
◆ ◆ ◆
நெருப்பு அறியாமல் துருவங்கள் வாழும்
நீர் அறியாமல் சில உருவங்கள் வாழும் - என்
இருப்பு இல்லாமல் போனால்
இந்த பிரபஞ்சம் முழுதும் தாழும்.
புயல் கரையை கடந்து நின்றது
◆ ◆ ◆
அதுவரையில்
தன்னை அவகாசபடுத்தி கொண்ட
ஆகாயம்
அடுத்து பேச வந்தது
வளியின் பேச்சில்
வலி கொண்ட வானம்
வார்த்தைகளை கோர்த்து
வானுயர பேசலானது
இன்னும் வ(ள)ரும்
ஆகாயம் நீர் கோர்த்து சிந்தலானது!
கொண்டல் கொஞ்சும் ககனம்
சீண்டல் பேச்சால்  சினம் கொண்டு எழுந்தது.
◆ ◆ ◆
காயம் பட்ட காரணத்தால்
ஆ(காயம்) கண்ணீர்  வார்த்தைகளை கொட்டியது
அடே வீணர்களே!
அறிவிழந்த மூடர்களே!!
◆ ◆ ◆
அத்தனைக்கும் ஆதாரம் நான் என்பதை
அறியாதவர்களே!!!
◆ ◆ ◆
உப்பிட்ட கடல்நீரை உளமார  உண்டு
உலகம் செழிக்க அமிர்தம் உமிழும் முகிலை
உள்நெஞ்சில் சுமப்பவன் நானே!
◆ ◆ ◆
அன்றாடம் ஆயிரம் விந்தைகள்
அரங்கேற ஆசனமிட்டு ஆட்சி புரிபவனும் நானே!!
இடியும் மின்னலும் சப்தஜாலம் காட்டிலும்
என்றும் முடியாய் மகுடம் சூடுபவனும் நான் தானே!!!
◆ ◆ ◆
வெண்மதி மிதப்பதும்
விண்மீன்கள் விளையாடுவதும்
என்னுடன் அன்றி யாருடன்?
வெளி வெகுண்டெழ -- மற்றவரின்
முழி பிதுங்கியது.
◆ ◆ ◆
ஊதா கதிர்களின் உஷ்ணம் தெரியுமா உங்களக்கு?
உலா வரும் கோள்களின் நாள் கணக்கு தெரியுமா
உங்களக்கு?
கேள்வி கணைகளால்
வேள்வி செய்தது வானம்!
◆ ◆ ◆
உயர்த்தவரும் தர்க்கத்தில் இழப்பது நிதானம்! -- இதுவே
உலகம் உரக்க சொல்லும் நிதர்சனம்!!
இன்னும் வ(ள)ரும்
வான் முட்டி தள்ளிய வார்த்தைக்களால்
வாயடைத்து நின்ற நிலம் - தன்
வாதத்தை எடுத்து மொழிய
வாய் திறந்து நின்றது.
◆ ◆ ◆
ஞானம் குன்றி
நால்வர் பேச
ஞாலம் தான் என்செய்யும் பாவம்!
◆ ◆ ◆
தாங்குதல் தானே
தரணியின் இயல்பு!
◆ ◆ ◆
அகழ்வாரை மட்டும் அன்றி
இகழ்வாரையும் பொறுத்தல் தானே
புவியின் குணம்.
நிலம் நடுக்கம் காணாமல்
விளக்கும் வகையில் பேசலானது
இன்னும் வ(ள)ரும்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sat Jul 08, 2023 6:56 pm

அத்தனை ஜீவன்களுக்கும்
அடிப்படை ஆதாரம் நான் தானே !
◆ ◆ ◆
என்னை காட்டிலுமா
நீங்கள் உயந்தவர்கள்?
சொல்லுங்கள்!!
◆ ◆ ◆
மாந்தர் அணிகலன்
முத்திரை பொன்னும்
மானம் காக்கும்
முழுநீள ஆடையும்
மண்ணில் இல்லா(து)
விண்ணிலா வந்தது?
◆ ◆ ◆
பிஞ்சு மழலை
பாதம் எடுத்து
கொஞ்சி விளையாடுவது
என்னுடன் அன்றி யாருடன்?
◆ ◆ ◆
இளந்தளிர் முட்டி
இரவல் வெளிச்சம் ஒட்டி
இலை விரித்து நிற்பது
இப்புவனத்தின் மீது இல்லா(ம)ல் எங்கு?
◆ ◆ ◆
குவலயத்தின் கேள்விகளால்  
கு த்தி
குலை நடுக்கம் வந்தது நால்வருக்கும்.
◆ ◆ ◆
அகலிடம் இன்றி -உயிர்களுக்கு
புகலிடம் ஏது?
◆ ◆ ◆
கரும்பாறை மலைகளும்
கடல் கொண்ட அலைகளும்
கவிபாடி மகிழ்வது என்னுடன் தான்
கண்டதில்லையோ நீங்கள்?
◆ ◆ ◆
பாலைவன மணலும்
சோலைவன குயிலும்
சொந்தம் கொண்டு ஆடுவது
மேதினி மேல் தான் - என்பதை
மேலும் சொல்லவோ?
◆ ◆ ◆
அண்டத்தின் வாதமானது
கண்டம் தாண்டியும் சென்றது.
◆ ◆ ◆
அந்தரத்தில் தொங்கும்
அடிமை வாழ்விலும்
அன்னை மடி விரித்து
அரவணைப்பது யார்?
◆ ◆ ◆
தரணி
பரணி
பாடியது.
◆ ◆ ◆
பொழில் பொழிந்த
வார்த்தைகளால்
எழில் குன்றி நின்ற நீர்
வார்த்தை போர் புரிய வசப்பட்டது
தன்னிலை மறந்து
தலைகனம் கொண்டீரே! மூடரே!!
◆ ◆ ◆
தண்ணீர் இல்லாமல் போனால்
தரணி எது?
அது பாடும் பரணி எது?
◆ ◆ ◆
நின்று விழுந்தால் அருவி!
நீட்டி படுத்தால் ஆறு!
சென்று சேருகையில் நதி!
சேர்வேன் கடலில் - அதுவே என் விதி!
◆ ◆ ◆
எந்நிலை கொண்டபோதும்
நன்னிலை செய்வதே என் பணி!
◆ ◆ ◆
என்னை விடவா
நீங்கள் உயர்ந்தவர்கள்?
சொல்லுங்கள்.
துளி துளியாய்
கண்ணீர் விட்டும்
துவளாத வாதம்
எடுத்தது நீர்.
◆ ◆ ◆
உலகின் முக்காலும் நானே!
உதிரத்தின் முக்காலும் நானே!
◆ ◆ ◆
உயிர்களின் முதல் உணவும் நானே!
உயிர்மையின் முதல் வரவும் நானே!!
◆ ◆ ◆
தர்க்கத்தில் - வீழ்ச்சி காணாது
எழுச்சி கொண்டது நீர்!
◆ ◆ ◆
பேதமை மறுப்பவன் நான்!
பெய்யும் மழை துளியும் நான்!!
◆ ◆ ◆
என் ஓட்டம் நின்றால்
உங்களின் ஆட்டம் எது?
அறல் தன் வாதத்தை
அறமுடனே தைத்தது
◆ ◆ ◆
விசும்பில்
விஷம் கலப்பதென்பது எது?
◆ ◆ ◆
அமிர்தம் நான்
பொழிய மறுத்தால்
அகிலத்தின் ஜீவராசிகளுக்கு
அடைக்கலம் எது?
◆ ◆ ◆
நீர் ஆறாய் கரை தொட்டு நின்றது!
◆ ◆ ◆
புனல் மொழிந்த மொழியால்
தணல் பற்றி எரிந்தது
◆ ◆ ◆
தன் தரப்பு வாதம் வைக்க
இறுதியாய் வந்தது
(இரு) (தீயாய்) வந்தது!
◆ ◆ ◆
மதி குன்றி போனதோ?
மயக்கம் ஏதும் சேர்த்ததோ?
◆ ◆ ◆
மழலை போல்
உணர்வு கொண்டு
தணல்(ஐ )  ஏன்
மறந்து போனீர்?
◆ ◆ ◆
ஆதவன் என்பது
ஆரம்ப நெருப்பு
அகிலம் என்பது(ம்)
ஆறிய நெருப்பு
◆ ◆ ◆
ஆகும் என்னால் என்பது
ஆணவ நெருப்பு
அடிவயிற்றிலும் கழன்று
எறிவது நெருப்பு
◆ ◆ ◆
எங்கும் உள்ளது
எந்தன் இருப்பு
ஏனோ இறுமாப்புடன்
கொண்டீர் சிரிப்பு!
◆ ◆ ◆
அமிலம் உமிழும் வண்ணம்
அக்கினி வார்த்தையால் சுட்டது!
◆ ◆ ◆
சுவாச காற்றிலும்
உள்ளது நெருப்பு
சுடர் விடும் ஒளியிலும்
மிளிர்வது நெருப்பு
◆ ◆ ◆
ஆரல் வார்த்தைகளால்
ஆர்ப்பரித்து நின்றது!
◆ ◆ ◆
பந்தம் வெறுத்த (தீ)
தீப் (பந்தம்) தூக்கி நின்றது!
◆ ◆ ◆
அஞ்சும் போரிட்டது
அஞ்சாமல் போரிட்டது!
இன்னும் வ(ள)ரும்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sat Jul 08, 2023 6:57 pm

விவாதம் வேர் கொண்டது!
பிடிவாதம் போர் கொண்டது!
◆ ◆ ◆
ஆணவம் பகடை ஆனது!
அறிவு சகடை ஆனது!
◆ ◆ ◆
நெருடல் முற்றி போனது!
நேரம் வற்றி போனது!
◆ ◆ ◆
நீண்ட தர்க்கம்
நிறைவு பெறுவதாயில்லை!
◆ ◆ ◆
நீதியரசர் ஒருவரை நாடலாம்
நீலக்கோள் நீட்டி முடித்தது!
நல்லதொரு யோசனை
நீலவானம் நயன்றது
◆ ◆ ◆
நீர் என்ன
நினைக்கிறீர் என்று
(நீர்)இடமும் கேட்டது.
◆ ◆ ◆
நீதிமான் வரவுக்கு
நீரும் இசைந்தது.
◆ ◆ ◆
நிரூபணம் செய்வேன்
நீதிபதியை வர சொல்
என்று
(தீ)யும் சுட்டது.
◆ ◆ ◆
கொண்டலும் தயக்கமின்றி
கொண்டு வா என்றது.
◆ ◆ ◆
ஐகாரமும்
ஒரு சேர
ஒன்றாய்
ஒலித்தது!
சரி
யாரை நாடலாம்
◆ ◆ ◆
மீண்டும்
ஐவரின்
சிந்தனை
சிந்து பாட தொடங்கியது
◆ ◆ ◆
நீதி சொல்ல
நடுநிலை தன்மை வேண்டும்!
நா பிறழாமை வேண்டும்!
◆ ◆ ◆
அறம் திரியா
அன்பு நிலை அகமும் வேண்டும்.
◆ ◆ ◆
விருப்பு, வெறுப்பறியா
நெருப்பு எந்தன் குணம் வேண்டும்
நேர்படவே சொன்னது (தீ).
எழுநா சொன்னதில்
ஏதும் தவறில்லை
யவரொருவர் அப்படி இருப்பார் -என்னும்
பெருங்குழப்பம் தீர்ந்தாயில்லை!
◆ ◆ ◆
உலக உயிர்கள் தான்
உண்மை நிலை சொல்ல வேண்டும்
உலகம் மீண்டும் உருண்டு சொன்னது.
◆ ◆ ◆
எதோ உள்நோக்கம் உண்டென்று
உரக்க சொன்னது வானம்.
◆ ◆ ◆
ஏன் அப்படி
எதிர்வாதம் வைத்தது பூமி!
◆ ◆ ◆
உலக உயிர்கள்
உம்மை விட்டு தருமா?
◆ ◆ ◆
தாங்கி பிடிக்கும் உன்னிடம் - உயிர்கள்
ஏங்கும் ஏக்கம் எனக்கு தெரியாதா?
◆ ◆ ◆
அன்னை பூமி என்றும்
உன்னை சாமி என்றும்
கைதொழும் கூட்டம்
உன்னை எப்படி விட்டு விடும்.
◆ ◆ ◆
உடன்பாடு இல்லை
உரக்க சொன்னது ஆகாயம்.
சரி தான் என்பது போல்
சலசலத்தது நீரும்.
◆ ◆ ◆
இல்லை
அப்படி ஏதும் இல்லை
உலக உயிர்கள்
ஐவருக்கும் பொதுவானவைதான்
கருத்து சொன்னது காற்று!
கழுத்தை ஆட்டியது புவனம்.
சரி
உலக உயிர்கள் என்றால்
எந்த ஜீவனிடம் கேட்பது
உலகம் மீண்டும் உலுக்கியது
◆ ◆ ◆
புரை நீக்கி
நீதி சொல்ல
பூமியின் உயிர்கள்
பொருத்தம் என்று
புவனம் சொன்னதால்
உண்மை சொல்லும்
உயிரை கண்டுகொள்ள
உச்சி மாநாடு தொடங்கியது.
◆ ◆ ◆
குரங்கை அழைக்கலாமா?
குரல் கொடுத்தது காற்று!
அலைபாயும் மனது
ஆளுக்கு ஒன்றாய் சொல்வான்.
அலைக்கழித்தல் செய்தது அருவி.
◆ ◆ ◆
யானையை அழைக்கலாமா?
யதார்த்தமாய் கேட்டது தீ.
மதம்பிடித்த விலங்கு
மனுநீதி சொல்லாது
மறுதலித்தது வானம்.
◆ ◆ ◆
நரி?
என்று
பொறி தட்டியது
தென்றல் காற்றுக்கு.
வேண்டவே வேண்டாம்.
தந்திர புத்திக்காரன்
தர்க்கத்துக்கு உதவுவான் அல்ல
தடாலடியாய் தள்ளியது நீர்.
◆ ◆ ◆
சிங்கம், புலி?
சிணுங்கியது மீண்டும் அகிலம்.
கொடுங்கோல் விலங்குகள்
செங்கோல் அறம் சொல்லாது
கோவமாய் பதில் வந்தது
அக்னி குஞ்சிடம்.
◆ ◆ ◆
சரி
பசு என்று
பவ்வியமாய்
வருடியது காற்று
வாயில்லா ஜீவன்
வாய்தா செல்லும்
வழக்கு முடியாது.
◆ ◆ ◆
பறவை இனங்கள்?
பாச பறவைகள்
பகுத்தறிந்து பதில் சொல்லாது.
◆ ◆ ◆
மண்ணின் உயிர்களில்
மனிதன் தான் சிறந்தவன்
நம்
மகத்துவம் அறிந்தவன்
மடை திறந்து சொன்னது நீர்
◆ ◆ ◆
மௌனம் நிலவியது
சில கணங்கள்.
மறுப்பவரும் இல்லை
மறுதலித்தலும் இல்லை
மீண்டும்
அதே மௌனம்.
◆ ◆ ◆
முடிவெடுக்கும்
முக்கிய நிர்வாகிகள்
முடங்கி போனால்
முடிவு என்னவாகும்?
முணுமுணுத்தது வானம்?
◆ ◆ ◆
மணித்துளிகள் சிந்திக்கலாம்
மாற்றுக்கருத்துகளை சந்திக்கலாம்
மகத்தான முடிவுகள் வர
மாமாங்கம் கூட ஆகலாம்.
பொறுமை கொள்!
பொதுவாய் பதில் வந்தது பூமியிடம்.
◆ ◆ ◆
சரி
பகுத்தறிவு' ஜீவன் அவன்
பதில் சொல்ல ஏற்றவன்
வர சொல்
வாஞ்சையாய் சொன்னது வளி
◆ ◆ ◆
மனிதனை அழைப்பதென்று
மாமன்றம் முடிவெடுத்தது.
இன்னும் வ(ள)ரும்.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 7:25 pm

யார் பெரியவன் என்ற ஆணவத்தால் தானே உலகம், நாடு, சமுதாயம், வீடு என அனைத்துமே அழிவை சந்திக்கிறது...

கவிதை நயம், வார்த்தைக் கோர்வைகள் மிக அழகு.

பாராட்டுக்கள்.

coderthiyagarajan1980 இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 08, 2023 8:08 pm

அருமை அய்யா .
ரசிக்க முடிந்தது

ஆமாம் அத்தியாயம் 1 / 2 & 3 தனித்தனி பதிவாக வேண்டாமே!!

ஒரே பதிவில் 1 / 2 /3 ஆக பதிவிட்டு இருக்கலாமே!

படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.

வாழ்த்துகள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sun Jul 09, 2023 4:40 pm

சத்தியம் நிலைபெற
சாட்சியம் சொல்லிட
சமயோஜிதக்காரன் மனிதன் தான்
சங்கல்பம் நிறைவேறியது.
◆ ◆ ◆
பூதங்களின்
பூதாகர தர்க்கம் நீக்க
பூவுலகில்
பூதவுடல் மானுடன்
தேவை என்று ஆனது.
◆ ◆ ◆
மனுநீதி சொல்ல
மானுடன் அழைக்கப்பட்டான்.
மறுகணமே
மாமன்றத்தில் வந்து நின்றான்.
◆ ◆ ◆
யாதும் ஊரே
யாவரும் கேளீர் என்றவன்
யதார்த்தமாய்
யாவருக்கும் வணக்கம் வைத்தான்.
யாதும் நடத்திவிட்டு
யாதொன்றும் அறியாத
யாதவனை போல்
◆ ◆ ◆
எதோ பிரச்சனை
என்பதை உணர்த்திருந்தும்
யாதும் அறியாதவனாய்
யான் அழைக்கப்பட்ட
காரணம் கேட்டான்.
◆ ◆ ◆
கேளடா மானிடா
கேள்வியின் நாயகா
◆ ◆ ◆
எம்மில் யார் பெரியவர்?
என்பதே யாம் கொண்ட தர்க்கம்.
உயர்ந்தவர் யார் என்பதை
உரைக்கவே ஏற்றோம் உன்னை
ஏனெனில் நீயே எங்களின் வர்க்கம்.
சொன்னது புவனம்
மனிதன் காதுகள்
கொண்டது கவனம்.
◆ ◆ ◆
ஐவரில் நானே உயர்ந்தவன் என்று
ஆணித்தரமாய் சொல்வாய் இன்று
நீ
சொல்லும் சொல்லில்
சுடர் விடுவேன் நானும் வென்று
சுட்டது நெருப்பு.
◆ ◆ ◆
உறுதி கொண்டு சொல்வாய் நீ
உன்
செங்குருதியில் ஓடும் நீரே
சிறந்தவன் என்று
சிந்தியது கண்ணீர்.
◆ ◆ ◆
மானிடா!
நீஎன்பது வெறும் இருப்பு
என்னால் கொண்டாய் உயிர்த்துடிப்பு
நானே உயர்ந்தவன் என்று சொல்
இதுவே உன் பொறுப்பு.
காற்று  கம்பிரமாய் சொன்னது.
◆ ◆ ◆
வான் போல நீ
வளர்ச்சி காண
வானம் தான் உயர்ந்தவன் என்று
வாயார சொல்லிவிடு
வளைத்து போட வசியம் செய்தது வான்
◆ ◆ ◆
தீர்ப்பு சொல்ல வேண்டும்
நீஇன்று
ஐந்தும் ஒன்றாய் சொன்னது.
மனிதன் நின்று யோசித்தான்
மழலை போல் வாசித்தான்
◆ ◆ ◆
ஐம்பெரும் சக்திகளே!
ஆதார யுத்திகளே!
அறிந்ததை சொல்கிறேன்
அவசரம் வேண்டாம்.
அடியவனின் வார்த்தைகளில்
அறம் என்றும் பிறழாது.
மௌனம் கலைந்த மனிதன்
மறுமொழி பேச வந்தான்.
◆ ◆ ◆
விந்தணுவில் உயிர் பெற்று
விந்தையெல்லாம் நான் கற்று.
சிந்தையில் தெளிவு பெற்று
சேர்த்த மதிகொண்டு
உம்மில் உயர்ந்தவர் இவரென்று
உரைத்திடும் ஞானம் கிடையாது
எனக்கு
◆ ◆ ◆
நானோ
ஐந்தில் வளர்த்தவன்
ஐந்தால் வளர்த்தவன்
நீங்களோ
என் நெஞ்சில் நிறைந்தவர்.
விளக்கிடவா
சற்று விரிவாக
ரோமம்
தோல்
தசை
எலும்பு
நரம்பு
மண்மகளின் மகத்தான பரிசு
◆ ◆ ◆
ரத்தம்
கொழுப்பு
பித்தம்
கழிவுநீர்
நீர் அவளின் சிறப்பு.
◆ ◆ ◆
பசி
தாகம்
தூக்கம்
நெருப்பின் இருப்பு
நான் கொண்ட
சுவாசம்
அசைவு
சுருக்கம்
விரிவு
காற்றின் கலப்பு
◆ ◆ ◆
வயிறு
இதயம்
மூளை
ஆகாயத்தின் உடனான  எந்தன் தொடர்பு
பூதங்களின்
பூலோக புத்திரன் நான்
◆ ◆ ◆
அண்டம் கொண்டதெல்லாம்
பிண்டம் கண்டதாலே
பகுத்து சொல்லும்
பக்குவம் இல்லை எனக்கு!
ஆனால்
ஆனால்
◆ ◆ ◆
சில
விஞ்ஞான கூற்றுகளை
விளக்கிட விழைகிறேன்
நான்
பிரபஞ்சம் வெடித்து
நெருப்பு கொண்டது
நெருப்பின் கருவில்
நிலமும் வந்தது
நீர் யாரும் தனித்தவர் அல்ல
நீர் என்பதும் தனித்து வந்தது அல்ல!
இன்னும் வ(ள)ரும்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2023 5:44 pm

மிகவும் நன்றாக உள்ளது.

தொடருங்கள்

உங்களுக்கு ஓர் தனிமடல் அனுப்பியுள்ளேன். படிக்கவும். பின்பற்றவும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sun Jul 09, 2023 6:06 pm

நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 09, 2023 6:07 pm

உங்களின் யார் பெரியவன் என்கிற 4 பதிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

உங்களின் அடுத்த யார் பெரியவன் 5 இருக்குமெனில் இதில் தொடருங்கள்.

பார்வையாளர்களும் முன்னும் பின்னும் செல்லவேண்டாம்.

உங்கள் நான் எழுதிய தனிமடலையும் படிக்கவும்.பின்பற்றவும்.
தற்சமயம் அதற்கு மறுமொழி எழுதும் வசதி உங்களுக்கு இல்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and coderthiyagarajan1980 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 09, 2023 6:09 pm

T.N.Balasubramanian wrote:உங்களின் யார் பெரியவன் என்கிற 4 பதிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

உங்களின் அடுத்த யார் பெரியவன் 5 இருக்குமெனில் இதில் தொடருங்கள்.

பார்வையாளர்களும் முன்னும் பின்னும் செல்லவேண்டாம்.

உங்கள் நான் எழுதிய தனிமடலையும் படிக்கவும்.பின்பற்றவும்.
தற்சமயம் அதற்கு மறுமொழி எழுதும் வசதி உங்களுக்கு இல்லை.


மிகச்சிறப்பு தலைவரே... யார்  பெரியவன்?  தொடர் கவிதைகள்  3838410834

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக