புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_c10என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_m10என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_c10என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_m10என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_c10 
2 Posts - 6%
heezulia
என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_c10என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_m10என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_c10என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_m10என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மண் என் மக்கள் யாத்திரை


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 13, 2023 7:42 pm

First topic message reminder :

என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 En-mann-en-makkal

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற கருப்பொருளில் மாநிலம் தழுவிய பாதயாத்திரையை தொடர உள்ளார். இந்தப் பாதயாத்திரை நிகழ்வானது இராமநாதபுரத்தில் தொடங்கி, மதுரை விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி வழியாக முதல்கட்டமாக கன்னியாகுமரி வந்தடைகிறது.

இந்தப் பாத யாத்திரையை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைப்பார் என்று தெரிகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் இன்று வடசேரி, கோட்டார், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, மாவட்டத் தலைவர் தர்ம ராஜ், பொருளாளர் முத்து ராமன், மீனா தேவ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். மேலும் யாத்திரை பொறுப்பாளர்கள் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் நரேந்திரன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

அண்ணாமலை தனது பாத யாத்திரையின் ஒருபகுதியாக ஆகஸ்ட் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இவர் ராதாபுரம் தாலுகா வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் நுழைய உள்ளார். அப்போது கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

#என்_மண்_என்_மக்கள்
#அண்ணாமலை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 29, 2023 6:42 pm

வெற்றி பெற வாழ்த்துகள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 29, 2023 9:05 pm

என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 XCmSmkr

இடம்: வழிவிடு முருகன் கோவில், இராமநாதபுரம்.

தமிழக பாஜக தலைவர் திரு K.Annamalai அவர்களை தமிழ்ப்பண்பாட்டு நெறிமுறையில் வரவேற்க காத்திருக்கும் சகோதரிகள்...

#EnMannEnMakkal



என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 29, 2023 9:09 pm

நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள், நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த #EnMannEnMakkal நடைபயணம், தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களை, பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது.

தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது.

மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.

2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.

பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்கள், பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

-அண்ணாமலை




என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 30, 2023 12:50 pm

முதல்வர் குடும்பத்தின் பாவத்தை சுமந்து யாத்திரை பயணத்தில் எடுத்துரைப்பேன்! அண்ணாமலை



என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Tamil_News_large_3390015

ராமேஸ்வரம்: ''இலங்கையில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதால், முதல்வர் குடும்பத்திற்கு ஏற்பட்ட பாவத்தை அவர்கள் போக்காவிட்டாலும், அந்த பாவத்தையும் நாங்களே சுமந்து, யாத்திரை பயணத்தில் மக்களிடம் எடுத்துரைப்போம்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்த, 'என் மண் என் மக்கள்' பிரசார நடை பயணத்தை மேற்கொண்டுள்ள அண்ணாமலை நேற்று மாலை ராமநாதபுரம் சென்றார்.

வழியில் ராமேஸ்வரம் அருகே மண்டபம் தெற்கு கடற்கரையில் கூடியிருந்த மீனவர்களை சந்தித்து பேசினார். அப்போது, மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல், மீனவர்கள் கைது, படகுகளை மீட்க முடியாமல் இலங்கையில் உள்ள அவலம் குறித்து தெரிவித்தனர்.

இதற்கு, அண்ணாமலை, சமீபத்தில் கைதான 9 மீனவர்கள் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கையில் உள்ள தமிழக படகுகளை மீட்கவும் பிரதமர் மோடி உத்தரவுப்படி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அரசிடம் பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்தார்.

விரைவில் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும். கஷ்டங்களை சந்திக்கும் மீனவர்களுக்கு, பிரதமர் மோடி உறுதுணையாக நிற்பார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:

'என் மண் என் மக்கள்' யாத்திரை பயணத்தை கண்டு முதல்வரும், அவரது மகனும் பயப்படுகின்றனர். பதற்றமாக உள்ளனர். இதை, 'பாவ யாத்திரை' என, முதல்வர் கூறுகிறார். 2004க்கு பின், தமிழக மீனவர்கள், 85 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.

இலங்கையில் 1.04 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்நாளில் ஆட்சியில் இருந்த முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தான் இந்த பாவம் போய் சேரும் என்பதை மக்கள் அறிவர்.

முதல்வரும், அவரது குடும்பமும் இந்த பாவத்தை கழுவ ராமேஸ்வரம் கோவில் தீர்த்தமே உகந்த இடம். நீங்கள் வராவிடில் அந்த பாவத்தையும் சுமந்து, அதுகுறித்தும், தமிழகத்தில் நடக்கும் ஊழல் குறித்தும் யாத்திரை பயணத்தில் மக்களிடம் எடுத்துரைப்போம்.

இந்த பயணத்தின் போது, ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்களை சந்தித்து யாத்திரை குறித்து பேசுவேன். பயணம் வெற்றி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.



என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 30, 2023 1:05 pm

அண்ணாமலை யாத்திரையை கண்காணிக்கும் அமித்ஷா- தினமும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பப்படுகிறது



தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார். 3-வது நாளாக இன்று யாத்திரை நடந்து வருகிறது.

இந்த யாத்திரையில் பெருமளவு மக்கள் திரண்டு வருகிறார்கள். அண்ணா மலையும் பொறுமையுடன் அனைத்து மக்களுடனும் பேசி உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறார்.

இந்த யாத்திரை மூலம் மக்களை பா.ஜனதாவுக்கு ஆதரவாக திருப்ப வேண்டும் என்று அமித்ஷா உத்தர விட்டுள்ளார். அத்துடன் கட்சியில் ஒற்றுமையும் அவ சியம் என்பதையும் அமித்ஷா சுட்டிக் காட்டி யிருக்கிறார்.

இதற்கிடையில் இந்த யாத்திரையை தினமும் கண்காணிக்க ஒரு ரகசிய குழுவையும் அனுப்பி இருக்கிறார்.

கர்நாடகாவை சேர்ந்த இந்த குழு யாத்திரையை தினமும் கண்காணிக்கிறது. யாத்திரையில் கண்ட குறைகள், நிறைகள் அனைத்தையும் அறிக்கையாக தயாரித்து தினமும் அமித்ஷாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அறிக்கையை பார்த்து புதிய ஆலோசனைகள் வழங்கப்படும். அதற்கு ஏற்றவாறு குறைகளை நிவர்த்தி செய்வார்கள்.

இந்த குழுவினர்தான் கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசார வியூகம் அமைத்து கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 31, 2023 9:07 pm

என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 L7P4E2o
"மக்கள் மக்கள் என் பக்கம்
மாலை தென்றல் என் பக்கம்
சிட்டு குருவிகள் என் பக்கம்
செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழை தமிழர் என் பக்கம்
என்றும் தாய்குலம் என் பக்கம்
எட்டு திசையும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தி ஏடுப்பான்
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கம் தான் இணைந்து விட்டால்
கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்"



என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 02, 2023 10:52 pm

என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 TNVerdW

நேற்று, பெருமதிப்பிற்குரிய இராணி மதுராந்தகி நாச்சியார் அவர்களை, அவர்களின் சிவகங்கை அரண்மனைக்கு நேரில் சென்று சந்தித்தோம்.

பெருமதிப்பிற்குரிய ராணி அவர்களிடம், #EnMannEnMakkal பயணம் குறித்து எடுத்துக் கூறி, அவர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டோம். முன்னாள் மத்திய அமைச்சர் திரு @ponnaarrBJP மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

-அண்ணாமலை



என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 03, 2023 12:18 pm

என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 VANnn9w

ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து படித்து வந்து சாமான்யன் மனநிலை எப்படி இருக்கும்? ஒரு வேலை கிடைத்து அதிலே மேலேறி நிம்மதியான வாழ்வும் மேலதிக பதவியும் பெற்று நிம்மதியான வருமானத்துடன் நல்ல வசதியுடன் வாழ்வை நகர்த்த வேண்டும் என்றுதான் இருக்கும் அது உலக இயல்பு.

ஒரு இளம் காவல்துறை அதிகாரியின் சிந்தனை மேலதிக பதவிகளை பெற வேண்டும், பணி ஓய்வு காலத்தில் டி.ஐ.ஜி போன்ற பெரும் பதவிகளை பெற்று ஓய்வுக்கு பின்னும் தேர்வு கமிட்டி பயிற்சி கமிட்டி என செல்ல வேண்டும் என்றே வரும்.

காவல்துறையில் இருப்போர்க்கு இன்னொரு ஆசை வரும் அது மாபெரும் ஆலைகளுக்கு பாதுகாவல் வேலை ஏற்பது , தானே ஒரு பாதுகாப்பு படை உருவாக்கி தனியார் காவலை கொடுப்பது.\

இப்படி ஏழை சாமானிய வாரிசுக்கு சிந்தனை பொதுவாக இப்படித்தான் செல்லும்.

ஆனால் அந்த அண்ணாமலை இங்குதான் தனித்து நிற்கின்றார்.

பொதுவாக கட்டளை இட்டு பழகியவன் அந்த நிலையில் இருந்து இறங்கமாட்டான் மானிட சுபாவம் அது.

குள்ரூட்டபட்ட அறை , தனக்கு கீழ் எகபட்ட காவலர்கள், சாலையில் சென்றாலே தனி மரியாதை, யாரையும் எங்கேயும் தூக்கும் அதிகாரம், ஜனாதிபதியே தன் எல்லைக்கு வந்தால் தானே காவல் கொடுக்கும் கம்பீரம் என பெரும்செல்வாக்கோடு இருந்தவர் அவர்.

அப்படிபட்ட அண்ணாமலை எல்லாம் துறந்து தூசிபடிந்த தமிழக தெருக்களில் மாதகணக்கில் நடக்கின்றார், தன் வேலை பதவி அந்தஸ்து என எலலாம் தூக்கி வீசிட்டு அடிதட்டு மக்களை தேடி இந்த மண்ணில் நடக்கின்றார் என்றால் அவர் இந்த மகக்ளை மண்ணை எவ்வளவு நேசிக்கின்றார் என்பதை உணரமுடிகின்றது.

தன்னலத்துக்கும் பொதுநலத்துக்குமான வேறுபாட்டை அறியமுடிகின்றது.

அவருக்கு தன்னலம் இல்லை, இந்த மக்களும் மண்ணும் மீளவேண்டும் எனும் பொதுநலம் ஒன்றே அவரில் நிறைந்திருக்கின்றது, அந்த பொதுநலத்துக்காக எல்லாம் இழக்க தயாராகிவிட்டார் என்பது உருக்கமாக தெரிகின்றது.

பாரதம் முழுக்க கால் தேய தேய நடந்த விவேகானந்தர், மலேயா சிங்கப்பூரில் நேதாஜி இந்திய சேனைக்கு ஆள்திரட்டியபோது தமிழக தெருக்களில் அலைந்து நேதாஜி படைக்கு ஆள் திரட்டிய அய்யா பசும்பொன் தேவர் ஆகியோரெல்லாம் இப்போது நினவுக்கு வருகின்றார்கள்.

அண்ணாமலையின் நடைபயணம் அதனை நினைவுபடுத்துகின்றது.

அண்ணாமலை செல்லுமிடமெல்லாம் வரவேற்பு களைகட்டுகின்றது, மாபெரும் தலைவனை கண்டது போல் வரவேற்கின்றார்கள்.

கவனிக்கவேண்டிய விஷயம் அண்னாமலை 50 ஆண்டுகால அரசியல் செய்தவர் அல்ல, அவர் தாத்தாவும் தகப்பனாரும் அரசியல்வாதி அல்ல‌.
\
அண்ணாமலை சினிமா நடிகரும் அல்ல, கிரிக்கெட் ஆட்டக்காரரும் அல்ல, அரவிந்த்சாமி போல தோற்றம் கொண்டவரும் அல்ல‌.

அவர் சார்ந்திருக்கும் கட்சி பெரும் வாக்குவங்கி கொண்ட கட்சியும் அல்ல‌.

ஆனால் மக்கள் விழுந்து விழுந்து வரவேற்கின்றார்கள்,செல்லுமிடமெல்லாம் தங்கள் வீட்டு பிள்ளை போல கொணடாடுகின்றார்கள், கொஞ்சம் ஆழமாக வரலாற்றை புரட்டினால் 1972ல் எம்ஜிஆருக்கு என்ன வரவேற்பு மக்களிடம் இருந்ததோ அது அப்படியே இவருக்கும் இருக்கின்றது,

செல்லுமிடமெல்லாம் அங்குள்ள பிரச்சினைகளை பேசுகின்றார், நியாயவிலை கடையில் கருபப்ட்டி வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பதெல்லாம், கள் விற்க அனுமதி வேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் பெரும் வரவேற்பை மக்களிடம் பெறுகின்றது.

எந்த அரசியல்வாதியும் செய்யாத விஷயமாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை சந்திக்கின்றார், இன்னும் நாட்டுக்காக உழைத்த அத்தனை பேரையும் சந்திக்கின்றார்.

இந்த பயணம் நிச்சயம் திட்டமிட்டபடி ஜனவரி 4ல் முடியாது, இடையில் வரும் மழைகாலம் வெள்ளம் வரும் காலம் இது தாமதமாகும், அநேகமாக பெப்ரவரியில் முடியலாம்.

அதன் பின் ஏப்ரலில் அவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது இதே ஆதரவு தேர்தலில் மாற்றத்தை கொடுக்கலாம்.

இந்த பயணம் என்பது சாதாரணம் அல்ல், ஓய்வில்லா பயணம் , அலுக்காத சந்திப்பு, இடைவிடாத பேச்சு என அவர் செய்து கொண்டிருப்பது தன்னை ஒறுத்து ஒரு தவம்.

அந்த தவம் வெற்றியடைய வாழ்த்துவோம்.

அவரின் பயணத்தையும், தன்னை வருத்தி அவர் தமிழகம் மீட்க படும்பாட்டையும் கவனித்தால் பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன‌.

"எங்கிருந்தோ வந்தான் க‌டைச்சாதி நான் என்றான்
மாடுகன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்
கற்ற வித்தை யேதுமில்லை காட்டு மனிதன் ஐயே
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன் சற்றும் நயவஞ் சனைபுரியேன்
என்றுபல சொல்லி நின்றான்
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் மண்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான் வீடு சுத்த மாக்குகிறான்
இங்கிவனை யாம் பெறவே என்னதவஞ் செய்து விட்டோம்"

#பிரம்ம_ரிஷியார்



என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 03, 2023 12:44 pm

என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 GajJLmv

சீமான் இஸ்லாமியர் கிறிஸ்தவர்களை விமர்சிப்பதும் - பதிலுக்கு ராஜ்கிரண், ஜவஹிருல்லா வகையறாக்கள் எதிர்வினையும் -

🚩அண்ணாமலையின் நடை பயணத்தின் மீதான மக்களின் கவனத்தை மடை மாற்றுவதற்கான முயற்சியே!

🚩தேசிய - தெய்வீக சக்திகள் எவரும் இவர்களின் மோதலைக் கடந்தே செல்வோம்!

🚩இவர்களின் மோதல் நமக்கான "அஜெண்டா" அல்ல - நமது இலக்கு அண்ணாமலை நடை பயணம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை POSITIVE VIBRATIONS களாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதே.

🚩இவர்களுக்கு பதில் கொடுப்பதோ, இவர்களில் யார் செய்தது சரி, தவறு, இவர் அத்துமீறல், அவர் சரியான பதிலடி என்றெல்லாம் தீர்ப்பு சொல்வதோ நமது வேலை அல்ல.

🚩இரண்டு பேர் பித்த வாந்தி எடுக்கும் போது நடுவில் புகுந்து பஞ்சாயத்து பண்ணினால் - இருவரும் சேர்ந்து நம்மை ரத்த வாந்தி எடுக்க வைத்துவிடுவார்கள்.

🚩இன்னமும் நடை பயணம் நிறைவடைவதற்குள் இது போன்ற ஏகப்பட்ட "டூல் கிட்" கள் களத்தில் இறக்கப்படும்.

🚩யாரோ ஒரு பிராமண "முற்போக்கு" மாமி அசல் மாம்பலம் தமிழில் அண்ணாமலையை தாறுமாறாகப் போட்டுத் தாக்கும் வீடியோ வெளியாகலாம்.

🚩கவுண்டர் சமூகப் பெண்கள் உடுத்தும் பாணியில் பின் கொசுவம் வைத்து சேலை கட்டிய - விவசாய வேலை பார்க்கும் கொங்கு மகளிர் - அது போல் வேடமிட்டே கூட - கொங்குத் தமிழில் அண்ணாமலையை வசைபாட வைக்கப்படலாம்!

1967 தேர்தலுக்கு முன்பு கும்பகோணத்தில் சங்கராசாரியார் படம் திராவிடர் கழகத்தவரால் எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.

அப்போது ஈ.வே.ரா - பெருந்தலைவர் காமராஜரை - "பச்சைத் தமிழர்"- என்று கொண்டாடியபடி காங்கிரஸை ஆதரித்துக் கொண்டிருந்தார்!

இதை ஜெயகாந்தன் தனது - "ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்"- புத்தகத்தில் விவரிப்பார்.

"காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பதற்காக மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுகளும், திமுகவினரும் சங்கராசாரியாருக்காகப் பாகாக உருகினர்! சாட்சிக்கு 'சுதந்திரா'க்கள் நின்றனர்!"

🚩அதே டூல் கிட் இப்போதும்.

🚩சீமான் இந்துக்களுக்காகப் பாகாக உருகலாம் - இஸ்லாமிய கிறிஸ்தவர்களை ஏசலாம் - பதிலுக்கு அவர்கள் சீமானை விளாசலாம்!

🚩ஆனால் இவை எல்லாமே அண்ணாமலை பாதயாத்திரை மக்களிடையே ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட எழுச்சியில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரமே!

🚩நமது இலக்கு ஒன்றே ஒன்றுதான்!

🚩அண்ணாமலை பாத யாத்திரை உண்டாக்கியுள்ள உத்வேகத்தை அதன் சூடு தணியாமல் - 2024 வரை கொண்டு செல்வதுதான்.

ஒரு படத்தில் மோடி மஸ்தான் வித்தையை வேடிக்கை பார்க்கப் போன வடிவேலு - சட்டைப் பையில் இருந்த காசை எல்லாம் - போட்டுவிட்டு - வெறுங்கையோடு போனது போல...

🚩நமது கவனத்தை எல்லாம் - சக்தியை எல்லாம் இவர்கள் காட்டும் மோடி மஸ்தான் வித்தைகளில் லயித்துப் போய் செலவிட்டு சிதற விடக் கூடாது!

🚩இந்த திமுக - காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள் - இப்போது புதிதாக "நடு சென்டர்" க்ரூப்பின் குச்சி வாத்தியார் ஒருவர்....

🚩இவர்களது பதிவுகள் எதற்கும் போய் கமெண்ட் போட்டு - பதில் கொடுத்து நேரத்தை விரயம் செய்யாதீர்கள்!

🚩"மோதிஜி தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?"- ஒரு கோடி புத்தகம் அச்சிட்டு வினியோகம் செய்கிறார்கள்.

🚩உங்களால் முடிந்தால் அதில் 10 புத்தகத்தை உங்கள் நண்பர்களுக்குக் கொடுங்கள் - உறவினர்களுக்குக் கொடுங்கள்.

🚩அதுதான் நம்மிடமுள்ள பயனுள்ள உருப்படியான நல்லவகையான "டூல் கிட்"..!



என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 13, 2023 11:46 am

ஹிந்தி மொழிக் கற்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தற்போதைய தெலுங்கானா மாநிலங்களில் எல்லாம் அவர்களின் தாய்மொழிகள் அழிந்தா போய் விட்டது?



எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை மக்களுக்கும், எங்களுக்கும் ஏற்படுத்தியிருக்கும் இந்த பாதயாத்திரை, 13 நாட்களை கடந்திருக்கிறது. தீப்பெட்டிகளின் தொழில் நகரமான சாத்துாரையும், கடலை மிட்டாய்க்கு பெரும் புகழ்பெற்ற கோவில்பட்டியையும், யாத்திரையில் சந்தித்தோம். பாதயாத்திரை செல்லும் வழி எங்கும் மக்கள் அளித்து வரும் உற்சாகமான வரவேற்பும், அன்பும், ஆதரவும், நம் பாரத பிரதமர் மோடியின் மூன்றாவது வெற்றியை உறுதி செய்கிறது.

சாத்துார்



சாத்துாரில் நடந்த பாதயாத்திரையில் தெருவுக்கு தெரு 'டாஸ்மாக்' கடைகள். குடிகாரர்களின் எண்ணிக்கையை ஊக்கப்படுத்தும் எண்ணத்தில், 'டாஸ்மாக்' கடைகள் பெருகி உள்ளன.

ம.தி.மு.க., என்றொரு கட்சி இருக்கிறதா? அவர்களுக்கு என்ன சின்னம் என்று, மக்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது, இந்த முறை விருதுநகரில் போட்டியிட்டு, எம்.பி.,யாக வேண்டும் என்று வைகோ மகன் துரைக்கு ஆசை வந்துள்ளது.

ஸ்டாலின், மக்களுக்கு சாராயத்தை விற்கிறார் என்றால், துரை, சிகரெட் மொத்த வியாபாரி; நல்ல பொருத்தம் தான் இவர்களுக்கு.

சாத்துாரின் தீப்பெட்டி தொழிற்சாலைகளை எல்லாம் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், சுதந்திரத்திற்கு முன்பே, ஒரு நார்வே நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது.

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரும், அப்போதைய தொழில் அமைச்சருமான டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி, 200 குறுந்தொழில்களின் நலன்களை பாதுகாப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு, சாத்துாரில் தீப்பெட்டி தொழிற்சாலை திறம்பட நடப்பதற்கு காரணமாக அமைந்தார்.

கோவில்பட்டி



அடுத்ததாக பயணித்த பகுதி கோவில்பட்டி. தி.மு.க., கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது ?

● கோவில்பட்டி லிங்கம்பட்டியில், 54 ஏக்கரில் 25 கோடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, 18 மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது

● துாத்துக்குடி நான்கு வழிச்சாலைக்கு, கோவில்பட்டியிலிருந்து இணைப்புச் சாலை போடப்படும் என்று சொன்னீர்களே என்ன ஆச்சு?

● கயத்தாறு, கடம்பூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீர்களே... இவையெல்லாம் என்ன ஆச்சு?

கோவில்பட்டி நகராட்சி 20வது வார்டு உறுப்பினராக இருப்பவர் பா.ஜ., விஜயகுமார்.

ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை தொடர்பாக, பல மனுக்களைக் கொடுத்தும், துாத்துக்குடி தொகுதி தி.மு.க., - எம்.பி., கனிமொழியும், அமைச்சர் கீதா ஜீவனும் பாராமுகமாகவே இருக்கின்றனர். இன்று வரை குடிநீர் பிரச்னை தீரவில்லை.

இதுவா கற்புக்கு யோக்கியதை?



பிரதமரை சிலப்பதிகாரம் படிக்க சொல்கிறார் கனிமொழி. பிரதமர் படிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் பெரியாரை ஒழுங்காக படித்தீர்களா என்று சந்தேகம் வருகிறது.

கடந்த 1951, ஜூலை 22ல், சேலம் பொதுக்கூட்டத்தில் பெரியார், 'கோவலன் இறந்த பின், கண்ணகி கோபங்கொண்டு சபிக்கிறாளாம்... உடனே மதுரையே தீப்பிடித்து எரிகிறதாம்... நம்ப முடியுமா? பாண்டியன் நடந்து கொண்ட அயோக்கியத்தனத்திற்கு, மதுரை மக்கள் சாம்பலாக வேண்டுமா? இதுவா கற்புக்கு யோக்கியதை?' என்று சிலப்பதிகாரத்தை இழித்து பேசியிருக்கிறார்.

'பெரியார், பெரியார்' என்று கூப்பாடு போடும் கும்பல், பெரியாரை படிப்பதே இல்லை போல. தமிழ் மொழியை கும்மிடிப்பூண்டி தாண்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம், தமிழை பற்றி கூச்சமின்றிப் பேசுகிறீர்களே? இந்த லட்சணத்துல பிரதமர் சிலப்பதிகாரம் படிக்கணுமாம்.

இதை விடவா வேறு வேண்டும்?



தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டிருக்கும் மாநிலக் கட்சிகள் கூட செய்யாத பல அரிய செயல்களை, நம் பாரத பிரதமர் மோடி, தமிழுக்காக செய்து காட்டி இருக்கிறார்.

தமிழ்மொழியின் பெருமையை, தமிழ் மொழியிலேயே தமிழ் மக்களுக்கு மத்தியில், தமிழ்நாட்டிற்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

அதை மாற்று மொழியிலே, வேற்று மக்களிடையே, வெளி மாநிலங்களில், வெளிநாடுகளிலேபேசுவதால் தானே தமிழன் பெருமையை பரப்ப முடியும். அதை மிக நன்றாக பிரதமர் செய்து கொண்டிருக்கிறார்.

இதுவரை தமிழக ஆட்சியாளர்கள் செய்யாத, செய்யத் தவறிய, மிக முக்கியமான செயல், தமிழை கட்டாய பாடம் ஆக்குவது. பிரதமர் வகுத்த தேசிய கல்விக் கொள்கை, தமிழ் மொழியை கட்டாய பாடமாக்குவதோடு, பயிற்று மொழியாகவும் ஆக்கியிருக்கிறது.

இதை விட தமிழுக்கு வேறு எவரும் எப்போதும் செய்திருக்க முடியாது. இதை தமிழர்கள் உணர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

மும்மொழி கொள்கை



ஹிந்தி வந்து விடும் என்று சொல்வர். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, மும்மொழி கொள்கையில் ஹிந்தி மொழிக் கற்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தற்போதைய தெலுங்கானா மாநிலங்களில் எல்லாம் அவர்களின் தாய்மொழிகள் அழிந்தா போய் விட்டது?

மாறாக, ஹிந்தி மொழி கற்பதால், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளிலும், அரசு பணி தேர்வுகளிலும், அவர்கள் சிறப்பான இடங்களை பெற்று, முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

-அண்ணாமலை



என் மண் என் மக்கள் யாத்திரை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக