புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
87 Posts - 65%
heezulia
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
423 Posts - 76%
heezulia
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
6 Posts - 1%
prajai
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
3 Posts - 1%
sram_1977
சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_m10சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 7:46 pm

சிதம்பரம் ஆலயத்தில் என்ன பிரச்சினை என்றால் முதல் பிரச்சினை அந்த ஆலயம் அறநிலைய கைக்கு வராமல் இன்னும் இந்து ஆகமவிதிபடி இயங்குவதுதான் இவர்களுக்கு முதல் பிரச்சினை, அந்த ஒரு காரணத்தில் இருந்து அடிக்கடி வருவது அடுத்தடுத்த பிரச்சினைகள்

சிவனுக்கு ஐந்து சபைகள் உண்டு, திருவாலங்காடு ரத்தினசபை,நெல்லை தாமிர சபை, குற்றாலத்தில் சித்திரசபை, மதுரை சோமநாதருக்க் வெள்ளி சபை, அப்படியே சிதம்பரத்தில் அவருக்கு தங்க சபை உண்டு

சிவாலயங்களின் இந்த சபையில் அவர் நடனமாடும் தோற்றத்தில் தோன்றி அருள்புரிவார் இது ஐதீகம்

இப்படியான நிலையில் அந்த சிதம்பரத்தில் சிவனுக்கு ஐந்து உட்சபைகள் உண்டு

அது சித்சபை, கனகசபை, இராஜசபை, நிருத்த சபை, தேவ சபை என ஐந்து

இதில் சித்சபை என்பது கருவறை, அதைத்தான் சிற்றம்பலம் என்பார்கள், அங்கேதான் அவர் நிரந்தரமாக இருப்பார்

இந்த ஆலயத்தில் சில கால அளவுகளில் அபிஷேகங்கள் உண்டு, அப்போது வேறு வேறு இடத்துக்கு வந்து அவர் பெற்றுகொள்வதாக ஐதீகம், அப்பொழுது இடம்மாறுவார்

சித்திரை, மாசி, ஆவனி, புரட்டாசி மாத அபிஷேங்களை அவர் கனசபைக்கு வந்து பெறுவார், மீதமுள்ள இரு முக்கிய அபிஷேகமான ஆனி, மார்கழி மாத அபிஷேகங்களை ராஜசபையில் பெறுவார்

இது பெரும் கூட்டத்தை கட்ட்படுத்தும் வழியாகவும் எல்லோரும் சிவனை காணும் ஏற்பாடாகவும் அன்று இருந்தது

இது 48 வருடத்துக்கு ஒருமுறை இன்னும் மாறும் அந்த மண்டல கும்பாபிஷேகத்தின் போது தேவ சபையில் சிவன் தரிசனமாவர்

நிருத்தசபைதான் அவர் தேவியுடன் போட்டியிட்டு வென்ற இடம், ஆனால் மாலிக்காபூர் கால படையெடுப்பின் அழிவுக்கு பின் அங்கே சிவன் நிற்கும் பாரமபரியம் பின்பற்றபடவில்லை

இப்போது விஷயத்துக்கு வரலாம்

கனகம் என்றால் தங்கம், இந்த சித்சபை அதாவது கருவறைக்கு முன் இருக்கும் அந்த மண்டபத்தின் கூரைக்கு தங்கம் வேயபட்டிருக்கும் அதுதான் கனகசபை

இந்த பொற்கூரை சோழர்காலத்தில் முதலில் செய்யபட்டது பின் மாலிக்காபூர் எல்லாவற்றையும் கொள்ளையிட்டு சென்றபின் பொற்கூரை இல்லாமல் இருந்தது

1677ல் சிதம்பரம் வந்த சிவாஜி இதுகுறித்து பெரிதும் வருந்தினான், பின் அவன் மகன் சாம்பாஜி இப்போது இருக்கும் பொற்கூரையினை அமைத்தான்
சித்சபை கனகசபை என இரண்டுமே உருவத்திலொன்றுபோலத்தான் இருக்கும், சிவன் இரு இடங்களிலும் தங்குவார்

இது பரம்பொருள் மற்றும் ஆத்ம தத்துவம், சிதம்பர ஆலயத்தினை மனித உடலாக கொண்டால் இதயம் இருக்குமிடத்தில்தான் சிற்சபை இருக்கும் கனகசபை அதை காப்பது போல் அமைந்திருக்கும்

ஜீவாத்மா பரமாத்மா தத்துவத்தில் கட்டபட்ட அமைப்பு இது

ஜீவாத்மாவில் இருந்து பரமாத்மாவினை காணலாம் என சொல்லபட்டதே நாளடைவில் கனசபையில் இருந்து சிவனை காணலாம் என திரிந்தது, அப்படி கனசபை ஏறி சிவனை காணும் வழக்கம் வந்தது

இது சோழர்காலத்திலே உண்டு ராஜராஜசோழன் படங்களில் இக்காட்சி உண்டு, இதற்கு அனுமதி உண்டு

பொதுவாக வருடத்தில் நான்கு முறை சித்சபை இறங்கி நடராஜர் கனகசபைக்கு வரும் போது கனகசபை மீது ஏற வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை, அதற்கு அவசியமும் இல்லை. காரணம் நடராஜர் அருகே இருக்கிறார்.

ஆனால் ஆனி உத்திர திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா திருமஞ்சனம் போது இயல்புகள் வேறாக இருக்கும். விழாவின் போது இரண்டு நாட்கள் நடராஜர் சபையில் இருப்பதில்லை.

காரணம் முதல் நாள் இரவு தேர் பவனிக்கு நடராஜர் ஆயத்தமாகி சபையில் திருமுக தரிசனம்(மற்றவை மறைக்கப்பட்டு) காட்சித் தருவார். அன்று இரவே கனகசபையில் அடுத்த நாளுக்கு உரிய ஆறு கால பூஜைகளும் நடைபெறும்.

மறுநாள் நடராஜர் தேர் ஏறிவிட்ட பிறகு, அவர் இருந்த இடத்தில் சொர்ணகால பைரவரும், சந்திரசேகரரும் (சபைக்கு உள்ளே இருப்பவர்கள்) இருப்பார்கள், கனகசபை மூடப்படும். கனகசபையில் நடக்கும் பூஜைகள் சித்சபை உள்ளேயே நடைபெறும்.

இவை அனைத்தும் பதஞ்சலி சூத்திரம்(சிதம்பரம் கோயில் பூஜை முறை விளக்கும் நூல், வேதம் ஆகமம் கலந்தது) முறைப்படி இரகசியமாக நடைபெறும்.

அதில் பொது மக்கள் கலந்துக்கொள்ள அவசியமில்லை நடராஜரே சபை நீங்கிய பின்னர், யாரைக் காண வேண்டும்?

இதனால் இக்காலகட்டத்தில் கனகசபை ஏற அவசியமில்லை என்பதால் அனுமதிக்கமாட்டார்கள், இந்த வழக்கமான நடைமுறைதான் இப்போதும் வந்தது, இதற்குத்தான் இவ்வளவு சர்ச்சைகள்

அந்த குறிப்பிட்ட நாளுக்கு பின் ஆனிமாதம் அவர் அந்த ராஜமண்டத்தில் எழும்போது வழக்கம்போல கனகசபையில் பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள், அது தொடங்கிவிட்டது

ஆக நடந்தது ஆலயத்தின் வழமையான ஒரு நடைமுறை, தேர் திருவிழா காலங்களில் கனகசபை ஏற அவசியமில்லை என்பதாலும் இன்னும் சில நடைமுறைகளாலும் சில நாட்கள் அது காலம் காலமாக பூட்டபடும் அதுதான் நடந்தது

இதற்கு பிரச்சினை உண்டாக்கி அறநிலையதுறை அமைச்சர் வரை வரிந்துகட்டுவடுதான் ஆச்சரியம்

இதற்கு இரு காரணங்கள் முதலில் கனகசபை என்றால் என்ன என்பதே பலருக்கு தெரியவில்லை, அதில் ஏறி சிவனை காண்பது ஆத்மா பரமாத்மாவினை காணும் ஒரு குறியீடு என்பது தெரியவில்லை

இரண்டாவது அந்த ஆலயநடைமுறைபடி ஆனி தேரோட்ட காலங்களில் அந்த மண்டபத்தில் ஏற அவசியமில்லை என்பதால் அது பூட்டபட்டிருக்கும்

இன்னும் சில மூலிகை பூச்சுக்கள் அக்காலத்திலும் இப்போதும் அந்நேரம் பூசுவார்கள் என்பதாலும் அனுமதி இல்லை

ஆக வழக்கமான நடைமுறைகளும் அதன் ஆத்மார்த்த அர்த்தங்களும் தெரியாமல் வீண் சர்ச்சை செய்வது சரியல்ல‌

இவ்வளவு பேசுபவர்கள் சிதம்பரம் தென்னக வாயில் ஏன் அடைபட்டது என்பதை, இன்னும் சில வலிகளின் நினைவுகள் எஞ்சியிருப்பதை சொல்வார்களா?

மாலிக்காபூர் அந்த ஆலயத்தை எவ்வளவு கொடூரமாக சுரண்டிபோட்டான் என்பதை அந்த வலியின் நினைவாலே தென்னக சுவர் அடைபட்டிருகின்றது என்பதை சொல்வார்களா மாட்டார்கள்

அந்த ஆலயம் எவ்வளவு பாரம்பரியமானதோ அவ்வளவு வலி மிக்கது, மாலிக்காபூரால் அது அழிந்தபோது நாயக்கர்கள் வந்து காத்தார்கள்

பின் பிஜப்பூரில் இருந்த ஆப்ரிக்க சித்திகள் ஆப்கானிகள் அதை அழிக்க நினைத்தபோது வீரசிவாஜி வந்தான்

அப்படி பல போராட்டங்களை கடந்து நிற்கும் ஆலயம் அது , எவ்வளவோ சிக்கல்களை சந்தித்து மீண்டு நிற்கும் ஆச்சரியமது

அதன்மேல் வீசபடும் எல்லா குற்றச்சாட்டுக்கும் வரலாற்றிலும் ஞான ஆன்மீகத்திலும் சுத்தமான இந்து மரபிலும் பதில் உண்டு,அதை பற்றி அறியாமல் தெரியாமல் வேண்டுமென்றே சர்ச்சை செய்வது சரியல்ல‌

வரலாற்றில் யாரெல்லாமோ அதனோடு மோதினார்கள் ஆனால் யார் வென்று நிலைத்தார்கள் என்றால் கனகசபை உள்ளிட்ட ஐந்து சபைளின் அதிபதியான சபாபதி சிவனேதான் வென்றார், அதுதான் இன்னும் நடக்கும்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 7:48 pm

சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிட கூடாது: அண்ணாமலை



சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்  Tamil_News_large_336144820230629134815


'சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும், தலையிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என தி.மு.க-வுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளை சிதைக்கும் வகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

வருடாவருடம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் விழா முடிந்து 4 நாட்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை, பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலை, தமிழக அரசு கட்டுப்படுத்த நினைப்பது பக்தர்களை மட்டும் அல்ல. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை அரசு அதிகாரிகளும், அமைச்சரும் நினைவில் கொள்ள வேண்டும்.

13.12.1951, 2591/1951 மனு மீதான விசாரணைக்கு பிறகு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சிதம்பரம் தீட்சிதர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 2660 வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இந்து சமயத்தின் ஒரு உட்பிரிவு (Denominated community) என்றும், 668/1951 என்ற மனுவின் மீதான விசாரணைக்கு பிறகு வழங்கிய தீர்ப்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாக அதிகாரம் தீட்சிதர்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதனை எதிர்த்து 1953 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதி 107ன்படி இந்து சமயத்தின் உட்பிரிவுகள் (Denominated Community) நிர்வகிக்கும் கோவில்களில் தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இன்று நடக்கும் அத்துமீறல் போல், முந்தைய தி.மு.க ஆட்சியிலும், சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர 2009ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்தது. 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது. 2021ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தொடர்ச்சியாக நிர்வாக இடைஞ்சல் ஏற்படுத்தி, கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள நகைகள், தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் கோரிக்கை, தீட்சிதர்களால் ஏற்கப்பட்டு அரசால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாமல் விரக்தியில் இருந்த இந்த திறனற்ற திமுக அரசு தொடர்ச்சியாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் எதோ ஒரு பிரச்னையை உருவாக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

அதிகார வரம்பை மீறும் செயலாக சென்ற ஆண்டு மே மாதம், தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. கனகசபை மீது அனைவரும் ஏறி வழிபடலாம் என்ற அறிவிப்புடன் வெளியான அந்த அரசாணையை கூட தீட்சிதர்கள் எதிர்க்கவில்லை.

ஆனித் திருமஞ்சனம் விழாவின்போது, கோவில் நகைகள் அனைத்தும் தில்லை நடராஜருக்கு அலங்காரமாக அணிவிக்கப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக நான்கு நாட்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இல்லாத ஒரு கோவிலில் அத்துமீறி நுழைந்து கோவில் நடைமுறையில் தலையிட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 3,500 ஏக்கர் நிலத்தைப் பராமரித்து வரும் தமிழக அரசின் சிறப்பு வட்டாட்சியர் கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வந்த வருவாய் கணக்குகளை தெரிவிக்கவில்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த நிலத்தின் மூலமாக வரும் வருவாயை, சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் அளிக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள 37,000 -க்கும் மேற்பட்ட கோவில்களின் வருவாய் செலவினங்களை தனியார் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட மதிக்காமல் செயல்பட்டு வரும் அமைச்சர் சேகர் பாபு தனது அதிகார வரம்பை உணர்ந்தால் நன்று.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களின் சொத்துக்கள், கொள்ளை அடிக்கப்படுவதை கை கட்டி வேடிக்கை பார்ப்பதையும், ஆட்சியின் அவலங்களை மறைக்க, கோவில்களில் புதுப்புது பிரச்னைகளை உருவாக்குவதையும் தி.மு.க நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தி.மு.க-வின் செயல்பாடுகள், இந்து சமயத்திற்கு எதிராக மட்டும் அல்ல. அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் எதிரானது.

எனவே சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு, மேலும் தலையிட்டால், தி.மு.க விளைவுகளை சந்திக்க நேரிடும்' என கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 8:40 pm



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 8:51 pm



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக