புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_m10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10 
251 Posts - 52%
heezulia
செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_m10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_m10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_m10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_m10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10 
18 Posts - 4%
prajai
செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_m10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10 
5 Posts - 1%
Barushree
செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_m10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_m10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_m10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_m10செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 20, 2023 8:49 pm

செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? OmIz3nf

செவ்வாய் என்கிற மங்களகாரகன் ஜாதகத்தில் மிக முக்கியமான கிரகம் ஆவார். செவ்வாய் கேந்திர திரிக்கோணத்தில் இருந்தால் தொழில், நிலம் மற்றும் அபரிமிதமான சொத்து, உடன்  பிறப்புகளால் உதவி, வீர தீர செயலுக்கு முக்கிய காரகனாக இருப்பார். அதேசமயம் மறுபக்கமாக ஒரு சில பாவங்களில் (கட்டங்களில்) தீமை என்ற நிலையையும் உருவாக்கும் அவை தோஷத்தையும் ஏற்படுத்துவார். களத்திர பாவங்கள் தொடர்புடன்  செவ்வாய் ஒருவருக்கு  இருந்தால் கோபம், ஆக்ரோஷம், அதீத உணர்ச்சியில் வேகமுடன் இருப்பார்கள். அதனால் தான் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது ஒருவருக்கு ஒருவர் ஈடுகொடுக்கும் அளவுக்கு தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்கிறார்கள். ஆனாலும் அது ஒரு சில நேரங்களில் தவறாக முடிகிறது.

செவ்வாய் என்பது ரத்த சம்பந்தமான காரக கிரகம். அறிவியல் ரீதியாக செவ்வாய் தோஷம் இருப்பவருக்கு ரத்தத்தில் Rh factor நெகட்டிவாக இருக்கலாம். இது குழந்தை பிறப்புக்கு பிரச்னையை தரவல்லது. வீட்டில் கல்யாணம் என்ற பேச்சு பேசியவுடன் ஆண் பெண் இருவருக்கும் திருமண பொருத்தம் மற்றும் தோஷங்கள் உள்ளதா எனப் பார்ப்போம். தோஷங்களில் செவ்வாய் தோஷத்தை நினைத்து ஒருவித பயம் பெற்றோர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். ஜாதக கட்டத்தை எடுத்தவுடன் அனைவர் கண்களிலும் படுவது செவ்வாய் தோஷம் தான். லக்கினத்திலிருந்து செவ்வாய் 2,4,7,8,12ல் இருந்தால் தோஷத்தை தருவார். அதேபோல் அடுத்தபடியான தோஷத்தை சந்திரன், சுக்கிரன்  இருக்கும் இடத்திலிருந்து செவ்வாய் 2,4,7,8,12ல் இருந்தால் குறைத்து தருவார்.

எடுத்துக்காட்டாக 2ல் செவ்வாய் இருந்தால் பேச்சில் விஷம் கக்கும் சொல் இருக்கும். இதனால் திருமண வாழ்க்கை சுகம் குறையும். ஏழு என்பது எதிர் பாலினத்தை ஆக்ரோஷத்தைக் குறிப்பது. எட்டு என்பது ஆயுளையும், 12ம் பாவம் அயணம் /மெத்தை சுகத்தை கெடுக்கும். அதில் முக்கிய பாவமான 7,8,12ல் இருந்தால் திருமண முறிவு மற்றும் உடல் பிரச்னை ஏற்படுத்தும். இவைகளே தோஷம் என்று கூறுகிறோம். திருமண பொருத்தத்தை விட மன பொருத்தம் மிக முக்கிய பொருத்தம் ஆகும். தோஷம் இருந்தாலும் இதன் அடிப்படையில் பலபேர் திருமணம் முடித்து அவர்கள் ஓரளவு சீரான வாழ்க்கையை நடத்துகிறார்கள். பெண்கள் ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திர லக்னத்தில் பலம் எது என்று பார்த்து அதற்கு ஏற்ற ராசியை கொண்டு தோஷத்தைக் கணிக்க வேண்டும்.

செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும் எப்பொழுது பிரச்சனை கொடுக்கும் என்று பார்த்தால், களத்திர சம்பந்தம் கொண்ட பாவத்தோடு தொடர்பு கொண்டால் தாமத திருமணம், குடும்ப உறவு பிரிவு, நோய், குழந்தைப் பேற்றில் சிக்கல் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக திருமணம் ஆன ஒருவர் அவர் சுய ஜாதகத்தில் செவ்வாய் களத்திரம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் இருந்து, செவ்வாய் தசை ஏற்பட்டால் களத்திர பிரிவு நிகழும். அதுவே அந்த நபருக்கு செவ்வாய் தசை மற்றும் புத்தி பல வருடங்களுக்குப் பின் வந்தால், அவருக்கு தோஷமே இருந்தாலும் ஒன்றும் செய்யாது.

தோஷம் உள்ளவர்கள் -செவ்வாய் நீச்ச சுக்கிரனுடன் சேர்க்கை, செவ்வாய் அஸ்தமனமானால், செவ்வாய் ராகு நெருங்கிய பாகையில் இருந்தால், செவ்வாய் கிரக யுத்தத்தில் இருந்தால் தோஷம்  உண்டு ஆனால் பரிகாரம் கிடையாது என்று ஜோதிட ஆராய்ச்சியில் சொல்லப்படுகிறது. ஆண்களுக்கு ஜாதகத்தில்  குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்களான 2,7 பாவங்களும், பெண்களுக்கு ஜாதகத்தில் களத்திர மற்றும் மாங்கல்ய ஸ்தானமான 7,8ம் இடங்களில் செவ்வாய் இருந்தால் முழு தோஷம் வெளிப்படும்.

எல்லாருக்கும் செவ்வாய் தோஷம் என்று எடுத்த எடுப்பில் சொல்லக்கூடாது. அதற்கென்று ஒருசில விதிவிலக்கு உண்டு, அவை:

1. செவ்வாய் சுப கிரகங்களுடன் சேர்ந்தாலும் அல்லது சுப பார்வை பட்டாலும் செவ்வாய் தோஷம் என்ற தன் குணத்தை மாற்றி சுப பலன்களை கொடுப்பார் என்று பல நூல்களில் கூறப்படுகிறது.

2. செவ்வாய் ஆட்சி வீடான மேஷம், விருச்சிகம், உச்ச வீடான மகரம்,  யோகராக செயல்படும் கடகம் மற்றும் சிம்ம லக்னக்காரர்களுக்கு செவ்வாய் முழு சுபர் எனவே செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

3. செவ்வாயை குரு பார்த்தால் அல்லது குருவோடு சேர்ந்தால் தோஷம் அகன்று போகும். செவ்வாய் என்ற நெருப்பு கிரகம் தேவ குரு வீடான தனுசு, மீன வீட்டில் இருந்தால்  தோஷம் கிடையாது.

4. நவாம்சத்தில் குரு செவ்வாய் சேர்ந்திருந்தால் தோஷம் இல்லை. இதுதவிர செவ்வாய் குரு நட்சத்திரம் கூடி இருந்தால் பரிகாரம் மூலம் தோஷ நிவர்த்தி செய்யலாம்.

5. செவ்வாய் மேஷம் விருச்சிகம் மகர ராசியிலிருந்து அவரை புதன், வளர்பிறை சந்திரன், குரு பகவான் இவர்களில் ஒருவர் பார்த்தால் தோஷமில்லை.

6. சூரியன் மூலதிரிகோண வீடுகளான சிம்மம் என்கிற சூரிய பகவான் வீட்டிலும் மற்றும் சனி வீடான கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது.

"ஸம்ஹ கும்ப நதோஷ ஸ்யாத் ப்ரத்யபக்ஷம் தேவகோணம்"l கும்பம் சிம்ம ராசியில் இருந்தால் தோஷம் கிடையாது என்று தேவ கேரளம் நூலில் எழுதியுள்ளது.

7. ஜாதக கட்டத்தில் மறைவிடமான 12ம் வீடு புதன் வீடாக இருந்து அங்கு செவ்வாய் இருந்தால், தோஷம் கிடையாது. மற்றும் ஒருசிலர் ஜோதிட வல்லுநர்கள் புதனுடன் சேர்ந்தால் மற்றும் பார்த்தால்  தோஷம் அல்ல என்று கூறப்படுகிறது.

8. செவ்வாயின் மித்திரன் சூரியன், சந்திரன் குரு சேர்ந்து பார்த்து இருந்தால் தோஷம் இல்லை.

9. சரராசியில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

10. பாவிகளான  சனி ராகு கேது ஆகிய கிரகங்கள் யாரேனும் செவ்வாயுடன் சேர்ந்து இருந்தாலும் பார்த்தாலும் தோஷம் இல்லை.

11. செவ்வாய் நின்ற ராசிநாதன் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் தோஷம் இல்லை. அவர் தன் வீட்டை பார்த்தாலும் தோஷமில்லை.

12. லக்கினத்திருக்கு சந்திரனுக்குக்கோ 4வது இடம் ரிஷபம், துலாம் வீட்டில் இருந்தால் தோஷம் கிடையாது.

13. நீர் கிரகமான சந்திரன் உடன் உஷ்ண கிரக செவ்வாய் தோஷத்தை தனிக்கும்.

14. செவ்வாய் 2,4,7,8,12 உள்ள பொழுது அங்குள்ள ராசிநாதன் உச்சமாகவோ ஆட்சியாகவோ இருந்தால் செவ்வாய் தோஷம் விலகும்.

15. புதன் வீடுகளான மிதுனம் கன்னியில் 4,7,8,12இல் செவ்வாய் இருந்தால் அதிக தோஷத்தை  வெளிப்படுத்துவார்.அதுவே மிதுனத்திற்கு 2இல் செவ்வாய் நீச்சம். மிதுனம் கன்னி லக்கினமாக இருந்து செவ்வாய் 2,12ல் இருந்தால்  தோஷமில்லை.

16. செவ்வாய் நின்ற ஒருசில நட்சத்திரங்களிலும் தோஷம் தரவல்லது. எடுத்துக்காட்டாக அஸ்வினி 3, பரணி 2ல்  செவ்வாய் இருந்தால் கடுமையான தோஷம் . ரிஷபம், துலாம்  லக்கினமாக இருந்து செவ்வாய் 12ல் மறைய பெற்றால் தோஷமில்லை.

செவ்வாய் தோஷம் பல்வேறு வகையில் விதிவிலக்கு நம் மூல நூல்களில் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. முக்கியமாக 12 ராசி கட்டத்தில் 8 ராசிகட்டம் மற்றும் சுப கிரக சேர்க்கை பார்வை பெற்று இருந்தால் தோஷம் வலு இழக்கப்படும். பின்பு அனைவரும் செவ்வாய் தோஷத்தைப் பார்த்து பயம் வேண்டாம். இவற்றை சொல்லியே திருமணம் பலபேருக்கு தாமதம் ஆகின்றது. இன்னும் நுணுக்கமான முறையில் பார்த்தால் செவ்வாய் தோஷத்திற்கு விலக்குகளை ஆராய்ந்து சொல்லலாம். செவ்வாய் தோஷம் இல்லாதவரை தோஷமுற்ற ஆண் /பெண் திருமணம் செய்வது கெடுதல்.

முருகரும் துர்கையும் செவ்வாய் தோஷத்திருக்கு சிறந்த பரிகார தெய்வங்கள்

லக்கினம் /ராசி - நீர் மற்றும் காற்று தத்துவம் கொண்டிருந்தால் திருச்செந்தூர் அல்லது மலை மேல் உள்ள முருகருக்கு பால்/ பன்னீர் அபிஷேகம்  செய்து, ஜாதகர் பெயரில் அர்ச்சனை செய்யலாம்.

லக்கினம்/ராசி நெருப்பு மற்றும் நில தத்துவம் கொண்டிருந்தால் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் பழம்பெரும் முருகர் கோவிலுக்குச் சென்று பசு நெய் விளக்குப் போடலாம். சஷ்டியில் விரதம் இருந்து காவடி எடுக்கலாம்.

கோவிலில் முருகனுடைய  பாடல்கள் மற்றும் சஷ்டி கவசம் சொல்லலாம்.

பௌர்ணமி மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் துர்க்கைக்கு பூஜை செய்து, 9 சுமங்கலிக்கு உணவுடன் தாம்பூலம் கொடுக்கலாம்.

இந்த தோஷம் முற்றிலும் அகல மருத்துவரின் பரிந்துரை பேரில் அவ்வப்பொழுது ரத்த தானம் செய்யலாம்.

#செவ்வாய்_தோஷம்

ஜோதிடர் பார்வதி தேவி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக