புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
98 Posts - 49%
heezulia
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
7 Posts - 4%
prajai
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
2 Posts - 1%
sanji
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
225 Posts - 52%
heezulia
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
18 Posts - 4%
prajai
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
2 Posts - 0%
Barushree
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கருணாநிதி 100 Poll_c10கருணாநிதி 100 Poll_m10கருணாநிதி 100 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி 100


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 01, 2023 3:17 pm

கருணாநிதி 100 Vikatan%2F2023-06%2Facb23495-c55d-45ca-8eee-62fcac1932a7%2FWhatsApp_Image_2023_06_01_at_11_54_48__1_

Thug Life - சமீப ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று. ஒரு விஷயத்தில், எதிர்பாராத வகையில் உடனுக்குடன் கொடுக்கும் பதிலடிகளை `தக் லைஃப்’ என்று அழைக்கிறார்கள் இந்தக் காலத்து இளைஞர்கள். இப்படியொரு வார்த்தையே தமிழ்நாட்டில் உபயோகத்தில் இல்லாத சமயத்தில், பல்வேறு `தக் லைஃப்' பதிலடிகளைத் தனக்கே உரிய பாணியில் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில் அவரது `தக் லைஃப்' சம்பவங்களைச் சற்று திரும்பிப் பார்ப்போம்..!

* 1969-ம் ஆண்டு நடந்த சட்டசபைக் கூட்டத் தொடரின்போது திருத்தணி எம்.எல்.ஏ-வாக இருந்த விநாயகம், ``மெரினா கடற்கரையில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் `லவ்வர்ஸ் பார்க்'கில் மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் மட்டும் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்துமா?'' என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த கருணாநிதி, ``இந்த விஷயத்தில் சட்டமன்ற உறுப்பினர் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்ளும்'' எனச் சொல்லி முடிக்க அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வெடித்துச் சிரித்துவிட்டனர்!

* இதேபோல 1971-ம் ஆண்டு சட்டசபையில், ``கூவம் ஆற்றில் முதலை இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதனால் அங்கே அசுத்தம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆகையால், அங்கு முதலைகளை விட்டால், அசுத்தம் முழுவதுமாகக் குறையும். இது பற்றி அரசு ஆலோசிக்கலாமே?'' என்று கூறினார் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அப்துல் லத்தீஃப். இதற்கு, ``ஏற்கெனவே அரசு கூவம் ஆற்றில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் `முதலை' (சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதியைக் குறிப்பிடுகிறார்) போட்டிருக்கிறது'' என்று கருணாநிதி நகைச்சுவையாகப் பதிலளிக்க அப்துல் லத்தீஃப் உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.

* 1973-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ காமாட்சி, ``வைரக் கிரீடம், வைர அட்டிகை என மதுரை மீனாட்சிக்கு இருக்கும் மொத்த நகைகளின் மதிப்பை மாண்புமிகு அமைச்சர் சொல்லுவாரா?'' எனக் கேள்வியெழுப்ப, அறநிலையத்துறை அமைச்சருக்கு பதிலாக முதலமைச்சராக இருந்த கருணாநிதியே எழுந்து பதிலளித்தார். ``மதுரை மீனாட்சிக்கு இருக்கும் சொத்து மதிப்பைச் சொன்னால் (காஞ்சி) காமாட்சிக்கு (கேள்வியெழுப்பிய எம்.எல்.ஏ பெயரும் காமாட்சி) பொறாமை ஏற்படாதா?'' என்று கேட்டு சட்டமன்றத்தில் சிரிப்பலையை உண்டாக்கினார்.

* `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற மசோதாவை ஆதரித்துப் பேசினார் கருணாநிதி. இதை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்தநாயகி, ``எதற்காக இந்தச் சட்டம்... எங்கள் ஊரிலுள்ள பிடாரி கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள்தான் பூசாரியாக இருக்கிறார்கள்'' என்று கேள்வியெழுப்ப, ``தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகராவதை பிடாரிகள்கூட ஏற்றுக்கொள்கிறார்கள். சில அடங்கா பிடாரிகள்தான் ஏற்க மறுக்கிறார்கள்'' என்று தனக்கே உரிய நக்கலுடன் பதிலளித்தார்.

* ``கோயிலுக்கே போகாத கருணாநிதிக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் செல்ல அனுமதி இல்லாதது குறித்து என்ன கவலை'' என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்தநாயகி கேட்க, ``கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குச் செல்கிறார்கள்... வாதாடுபவர்களும்தானே செல்ல வேண்டும்'' என்று பதிலடி கொடுத்தார்.

* காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருந்த சமயத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் #கருணாநிதி. `மாணவர்கள் மத்தியில் நீங்கள் அரசியல் பேச வேண்டாம்' என அவரிடம் கேட்டுக்கொண்டது கல்லூரி நிர்வாகம். இதையடுத்து பேசிய கருணாநிதி, ``என்னை அரசியல் பேசக் கூடாது என்றார்கள். எனவே, நான் இப்போது அரசியல் பேசப்போவதில்லை. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சாப்பிட்டு முடித்தவுடன் `இலை'யைத் தூர வீசிவிட்டு, `கை'யை மறக்காமல் கழுவிவிடுங்கள்'' என்று பேசி மாணவர்கள் மத்தியில் ஸ்கோர் செய்தார்.

* ஒரு முறை முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமியின் வீட்டுக்குச் சென்றிருந்தார் கருணாநிதி. அப்போது தனது வீட்டைச் சுற்றிக்காட்டிய நாராயணசாமி, `இது திண்ணை, இது கூடம்' எனச் சொல்லிக்கொண்டே வந்தவர், `இதுதான் முத்தம் (வீட்டின் முற்றத்தைச் சிலர் பேச்சுவழக்கில் முத்தம் என்பார்கள்). இந்த முத்தத்தில்தான் நான் பிறந்தேன்' என்றார். இதைக் கேட்ட கருணாநிதி, ``நீங்க மட்டுமா... எல்லோருமே முத்தத்தில்தானே பிறந்தோம்'' என்று கூற, நாராயணசாமி உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.  

* தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலைஞரிடம், ``இத்தனை ஆண்டு வாழ்க்கையில் என்றைக்காவது ஒரு கணம், ஒரு நிமிடம் கடவுள் இருந்தாலும் இருப்பாரோனு நினைச்சிருக்கீங்களா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. சிறிதும் யோசிக்காமல் இந்தக் கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, ``என் வாழ்க்கையில் அந்தக் கணம் குறுக்கே வராததற்கு அந்தக் கடவுள்தான் காரணமோ என்னமோ தெரியல'' என்றார்.

* 2007-ம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரிய பொன் விழாவில் பேசிய கருணாநிதி, ``ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். நான் பொறுப்பிலிருக்கும் ஒவ்வொரு முறையும் எதோ ஒரு துறைக்கு வெள்ளி விழாவோ, பொன் விழாவோ நடக்கிறது. எனவே, நான் விழா முதல்வராகிவிட்டேன்... அதாவது விழா(த) முதல்வர் என்று கூறினேன்!'' என்றார்.

* டாஸ்மாக் கடைகளின் நேரத்தைக் குறைத்து அரசாணை வெளியிட்டார் கருணாநிதி. இதையொட்டி பேசிய பா.ம.க நிறுவனரும் மருத்துவருமான ராமதாஸ், ``நான் கேட்டது அறுவை சிகிச்சை, கருணாநிதி செய்திருப்பது முதலுதவி'' என்றார். ``அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், மருத்துவம் படித்தவருக்குத் தெரியாமல் போனது ஆச்சர்யம்'' என்று பதிலளித்தார்.

* பல மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த கருணாநிதி, அங்கிருந்த லிஃப்ட்டில் ஏறினார். அவருடன் வந்த சிலரும் லிஃப்டில் ஏறியதும், ``ஓ... இது பாண்டவர் லிஃப்ட்டா?'' எனக் கருணாநிதி கேட்க, உடன் வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் முழித்தனர். அப்போது, `ஐவர் மட்டும்னு போட்டுருக்கு பாருங்க' என மேலே கையைக் காட்டினாராம் கருணாநிதி.

விகடன்


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jun 01, 2023 6:06 pm

சமயோஜித பதில்கள் பல அவரின் சொத்து .ஆங்கிலம் அறியா PUNடிதர் அவர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 02, 2023 1:26 am

பெண்கள் முன்னேற்றத்தில் கருணாநிதியின் பங்கு


தமிழ்நாடு, அனைத்து திட்டங்களுக்கும் முன்னோடியாகயிருக்கிறது. அதில் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் ’ஆர்ட்’ என்றால், அதன் ’ஆர்டிஸ்ட்’ கலைஞர் கருணாநிதி. ‘பெண் சுதந்திரம்’ குறித்து பகுத்தறிவுக் கருத்துகளை விதைத்தது திராவிட இயக்கங்களே. ஆனால், வெறும் இயக்கக் கருத்தாகயிருந்த பெண் சுதந்திரத்துக்கு இயங்குதளம் அமைத்து அதற்கு உயிர்கொடுத்தவர் மு.கருணாநிதி. எல்லா நிலைகளிலும் இருக்கும் பெண்கள் முன்னேற பல வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். ’கல்வியில்’ பெண்கள், ’வீட்டில்’ பெண்கள், ’சமூகத்தில்’ பெண்கள், `வேலையில்’ பெண்கள் என அனைத்துத் தளங்களிலும் புரட்சிகர திட்டத்துக்குக் கையெழுத்திட்டவர். அவரின் நூற்றாண்டு பிறந்தநாளில் பெண்களுக்காக அவர் ’மை’ வரைந்த முக்கியத் திட்டங்கள் சில இங்கே….

பெண்களுக்குச் சொத்துரிமை


பெண்களை ஓர் உயிராக மதிக்காமல் இருந்த குடும்பங்களை அதே பெண்கள் பெயரில் உயில் எழுத வைத்தவர். 1989 -ம் ஆண்டு தமிழகத்தில், குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை இருக்கிறது என்னும் சட்டத்தை உருவாக்கியவர் கருணாநிதி. அது இந்தியா முழுவதும் செல்ல, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. 2020-ம் ஆண்டு, ‘தந்தை இறந்தாலும் பெண்களுக்குச் சொத்தில் பங்கு இருக்கிறது’ என தமிழகத்தில் முதன்முதலில் எழுதப்பட்ட வரலாற்றை மீண்டும் ஒரு முறை எழுதியது உச்ச நீதிமன்றம்.

பெண்கள் காவல் நிலையம்


’பெண்களுக்கு ஆண்கள்தானே காவலாகயிருக்க வேண்டும்’ என பாடம் எடுத்தவர்கள் மத்தியில் மகளிர் காவல் நிலையங்களை உருவாக்க 1973-ம் ஆண்டு விதை போட்டவர் கருணாநிதி. அடுத்த ஆண்டு, பெண்கள் காவல்துறையில் இணைந்து பயிற்சி பெற்றனர். அவர்களின் முதல் அணிவகுப்பு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க ஆட்சியில் 1992-ல் முதல் மகளிர் காவல் நிலையம் ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைக்கப்பட்டது. இந்திய அளவில் அதிக மகளிர் காவல்துறையினர் இருக்கும் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு இருந்துவருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மகளிர் காவலர்களின் ’பொன்விழா’ ஆண்டு கொண்டாடப்பட்டது.

33% இட ஒதுக்கீடு


1996-ம் ஆண்டு தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொண்டுவந்தார் கருணாநிதி. கிராம, நகரப் பகுதிகளில் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டது. பெண்கள்மீது அதிகாரம் செலுத்தியவர்கள் மத்தியில் பெண் கையெழுத்திடும் அதிகாரம் வழங்கி அவர்களை அரியணையில் அமரவைத்த பெருமை அவரையே சாரும். அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாகத்தான் அ.தி.மு.க ஆட்சியில் 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

சுய உதவிக் குழுக்கள்


பெண்களுக்காக பெண்களே நடத்தும் (பெண்கள்) சுய உதவிக் குழுவை அறிமுகம் செய்ததும் கருணாநிதிதான். பொருளாதாரரீதியில் மிகவும் பின்தங்கியிருந்த தருமபுரியில் சுய உதவிக் குழுவை 1989-ல் தொடங்கினார். பிறகு அது அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவடைந்தது. தற்போது, ஆண்டுக்கு 30,000 கோடிக்குத் தொழில் செய்யும் முனைவோர்களாகப் பெண்களை மாற்றியிருக்கிறது இந்த சுய உதவிக் குழுக்கள். இது சுயமாக தங்கள் பொருளாதார உயர்வை உறுதிசெய்ய பேருதவியாகயிருக்கிறது.

’மறுமணம்’ திட்டம்


திருமணம் முடிந்து கணவன் இறந்தால், பெண்கள் உடன்கட்டை ஏறியோ, இல்லை மூலையில் இருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் உணர்வை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு இப்படியான இயற்கைக்குப் புறம்பான செயல்களைத் தவிர்க்க மறுமணம் செய்ய வேண்டும் என்னும் கோஷம் திராவிட இயக்கங்கள் சார்பாக மற்றும் பல போராளிகளாலும் முன்வைக்கப்பட்ட கருத்து. அதற்குச் சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கி, அவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தைச் சீர்த்திருத்தவாதி தர்மாம்பாள் பெயரில் 1975-ம் ஆண்டே இயற்றினார்.

சாதி மறுப்புத் திருமணம்


சாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஆணவக் கொலை நடப்பது தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இந்தச் சூழலில் அவர்களுக்குப் பாதுகாப்பு தருவது அவசியம். அதேநேரம், சுயமாக வாழ தொடக்கக் காலத்தில் பொருளாதார தேவையைப் பூர்த்திசெய்ய சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி பெயரில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் இரண்டு பிரிவுகளில் செயல்படுகிறது. முதல் பிரிவில் திருமணம் செய்துகொள்பவர்களுள் ஒருவர் பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராகயிருக்க வேண்டும். இரண்டாவது பிரிவில் ஒருவர் முற்பட்ட வகுப்பையும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பையும் சேர்ந்தவர்களாக இருப்பது அவசியம். அவர்களுள் படிக்காதவர்களுக்கு ரூ.25,000, 4 கிராம் தங்க நாணயம், பட்டதாரிகளாகயிருந்தால் ரூ.50,000, 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

இலவச டி.வி திட்டம்


பக்கத்து வீட்டில் டி.வி பார்ப்பது என்பது மிக இயல்பான ஒரு செய்கையாக இருந்தது. குறிப்பாக, ஏழை வீட்டுப் பெண்கள், குழந்தைகள் பணக்காரர்கள் வீட்டுக்கு டி.வி பார்க்கச் செல்வார்கள். எனவே, அனைவருக்கும் தொலைக்காட்சி சென்று சேர வேண்டுமென கருணாநிதி எண்ணினார். இதனால் அனைத்து வீடுகளுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி கொடுத்தார். அது ’கலைஞர் டிவி’ என அழைக்கப்படுகிறது. இது என்ன அவளோ பெரிய திட்டமா... எனக் கேட்பார்கள். ஆனால், வழங்கப்பட்ட டி.வி அந்தக் குடும்பத்துக்கு மட்டும் சொந்தமல்ல. எப்போது வேலை, வியர்வை, தனிமை, வெறுமை மட்டுமே உணர்ந்த குடும்பத் தலைவிகளுக்குக் கிடைத்த பெரும் சொத்து.

இலவச காஸ் அடுப்பு


மண்ணெண்ணெய் வாங்க லைனில் நிற்பது, பல மைல் தூரம் கடந்து விறகு சுமந்து வருவது, ஊதுகுழலில் ஒட்டுமொத்த மூச்சையும் நிறுத்தியது என 80, 90-களில் குடும்பத் தலைவிகள் இப்படித்தான் இருந்தார்கள். இவர்கள்படும் இன்னல்களைக் குறைக்கவே 2007-ம் ஆண்டு இலவச காஸ் அடுப்பை கருணாநிதி வழங்கினார். இலவச காஸ் அடுப்பு, எரிவாயு இணைப்பை வழங்கி பெண்களுக்குப் பெரும் தளர்வை வழங்கியவர் கருணாநிதி.

நிதி உதவித் திட்டங்கள்


மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், தமிழ்நாட்டின் ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கான இந்தத் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் நினைவாக, கருணாநிதியால் 1989-ல் ரூ. 5,000 திருமண நிதியுதவியாக தொடங்கப்பட்டது.

ஈ.வே.ரா மணியம்மையார் நினைவுத் திட்டத்தின் கீழ் ஏழை விதவையர்களின் பெண் குழந்தைகளின் திருமணத்துக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

அன்னை தெரசா நினைவுத் திட்டம் வாயிலாக ‘ஆதரவற்ற பெண்கள் மற்றும் தாய், தந்தை இல்லாத பெண்களுக்கு’ பொருளாதார வகையில் திருமணத்துக்கு உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

பெண்களுக்காக கருணாநிதி தீட்டிய திட்டங்கள் ஒவ்வொன்றும் வைரங்கள்தான். அவைதான் தமிழகப் பெண்கள் வாழ்க்கையில் ஒளிர்ந்துவருகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 02, 2023 12:44 pm

நல்லவற்றைப் பாராட்ட வேண்டியது நல்லோர் கடன்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 02, 2023 7:32 pm

நலத்திட்டங்கள் வரவேற்கப்படவேண்டியதே

இலவசங்களில் ஒரு முடிச்சு உள்ளது.ஊழல் இங்குதான் ஆரம்பமாகிறது.
தெரிந்த உற்பத்தியாளர் அல்லது தெரிந்தவர் மூலமாக  மொத்தமாக வாங்கி
மக்களை முட்டாளடிப்பது. TV எவ்வளவு பேரிடத்தில் ஒழுங்காக வேலை செய்தது
அதை TV  ரிப்பேர் கடைகளில் கூட வாங்க மறுக்கப்பட்டது. அதைப்பற்றி பேச
ஆரம்பித்தால் நீ..........ண் ........டு கொண்டே போகும்.

இலவசங்கள் மக்களை முட்டாளாக மாற்றி சுமரியாதையை மறந்து இலவசங்களுக்கு
ஏங்கும் மனிதகுலமாக்கி மாற்றிவிட்டது. தமிழ்நாட்டில் ஆரம்பித்த இந்த கலாச்சாரம்
மாற்றமாநிலங்களுக்கும் பரவி தேசிய வியாதியாக மாறிவிட்டது.

ஆமாம் இந்த இலவச திட்டங்களை ஆரம்பித்து வைத்தது யாரென நினைவு வருகிறதா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 02, 2023 9:52 pm

`பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!


தமிழ்நாட்டில் தமிழ் மொழியையும் ஓர் அரசியல்வாதியையும் பிரித்துப் பார்க்க முடியாதென்றால் அது கலைஞர் கருணாநிதி மட்டும்தான்.

கலைஞரின் பேனா


கலைஞர் மு.கருணாநிதி அதிகாலை எழுந்ததும் கையிலெடுக்கும் பொருள்களில் முதன்மையானது அவரின் பேனா. இளம் வயதில் நடத்திய 'மாணவ நேசன்' இதழ் தொட்டு, 1942-ல் அவர் தொடங்கிய 'முரசொலி' இதழ் எனத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் தீராமல் எழுதிக்கொண்டே இருந்தது கலைஞரின் பேனா.

இயல், இசை, நாடகம் மட்டுமில்லாமல் சுவைத்தமிழ், வீணைத்தமிழ், கவித்தமிழ், பொங்குதமிழ், பொன்தமிழ் என 92 அடையாளங்களால் தமிழை உருவகப்படுத்தினார். தமிழை மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆளுமைகளையும் கொண்டாடத் தவறவில்லை அவர். ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டவர். 1940-கள் வரை 'M' என ஆங்கிலத்தில் தன் முதலெழுத்தை எழுதிய கருணநிதி, பின்னர் அதை தமிழில் 'மு' என எழுதத் தொடங்கினார். பெரும்பாலும் கறுப்பு மையையே பயன்படுத்தினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் `தமிழ்’


1930-களின் பிற்பகுதியில் திருவாரூரில் பள்ளி மாணவனாக இருந்தபோதே கருணாநிதியின் தமிழ்ப்பணி தொடங்கியது என்கிறார்கள். 1938-ல் ராஜாஜி இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென முடிவெடுத்ததை பெரியார், அண்ணாதுரை போன்றோருடன் தமிழறிஞர்கள் பலரும் எதிர்த்தனர். அப்போது, 14 வயது சிறுவனான கருணாநிதி, பள்ளி மாணவர்களுடன் இந்தியை எதிர்த்து, கையில் தமிழ்க்கொடியுடன் திருவாரூர் தெருக்களில் ஊர்வலம் வந்தார். ‘வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம் /வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்’ என அவர் எழுதிய வார்த்தைகள், ஊர்வலத்தில் முழக்கமாக எதிரொலித்தது.

இந்தக் காலகட்டத்தில் வீதி பிரசார ஊர்வலம் ஒன்றைத் தலைமை ஏற்று நடத்திக்கொண்டிருந்தபோது, கருணாநிதியின் இந்தி ஆசிரியர் சாலையில் நடந்து சென்றார். தன்னுடைய மாணவர்கள் இந்தி எதிர்ப்பு பதாகைகளையும், சுவரொட்டிகளையும் வைத்திருந்ததை அவர் பார்த்தார். கருணாநிதி தன்னுடைய ஆசிரியருக்கும் ஒரு துண்டறிக்கையை வழங்கினார். இதைப் பற்றி அவர் எழுதியிருக்கும் சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி' எனும் நூலில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். தனது இந்தி ஆசிரியரை நேருக்கு நேர் சந்தித்ததில் தனக்கு அச்சம் ஏதும் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

"இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்னும் என்னுடைய முழக்கம் என் நரம்புகளில் ஓடிக்கொண்டிருந்த உணர்வு. சிலர் இதை வெறி என்றுகூட சொல்லலாம். ஒருவர் காட்டும் அன்பை வெறி என்று கூறினால் அத்தகைய வரையறையை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்றும் அவர் எழுதியிருக்கிறார்

"இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு" என்று அக்டோபர் 13, 1957-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.

முதல் கவிதை - சிதம்பரத்தில் நுழையத் தடை


"பரணி பலபாடிப் பாங்குடன் வாழ்ந்த
பைந்தமிழ் நாட்டில்
சொரணை சிறிதுமில்லாச் சுயநலத்துச்
சோதரர்கள் சிலர்கூடி
வருணத்தை நிலைநாட்ட வகையின்றிக்
கரணங்கல் போட்டாலும்
மரணத்தின் உச்சியிலே மானங்காக்க
மறத்தமிழா! போராடு!
வருணாசிரமம் வீழ்க!"

சிதம்பரத்தில் நடந்த தீட்சிதர் மாநாட்டைக் கண்டித்து எழுதப்பட்ட இந்தக் கவிதை முரசொலி துண்டுப் பிரசுரத்தில் அச்சாகி இருந்தது. முதல் மனைவி பத்மாவதியுடனான திருமணம் முடிந்ததும் இந்தக் காலத்தில்தான். திருமணம் முடிந்து இந்தத் துண்டுப் பிரசுரத்துடன் சிதம்பரத்துக்குள் நுழைய அவருக்கு காவல்துறை தடை விதித்தது.

வள்ளுவனும் கருணாநிதியும்...


ஒரு சமூகம் தன்னெழுச்சியோடு, சுயமானத்தோடு நிற்க வேண்டும் என்றால் அது பற்றிக்கொள்ள அடையாளம் ஒன்று வேண்டும். தமிழ்நாடு இன்றைக்கும் இந்துத்துவவாதிகளுக்கும், சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறது என்றால் தமிழ் என்கிற அடையாளத்தைப் பற்றிக்கொண்டதுதான். இப்படித் தமிழர்களுக்கான மிக முக்கியமான அடையாளம் ஒன்றை, கலைஞர் கருணாநிதி உருவாக்கித் தந்திருக்கிறார். அதுதான் திருவள்ளுவர்.

1963-ம் ஆண்டு தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டமன்றத்தில் திருவள்ளுவரின் படத்தை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் கருணாநிதி. கருணாநிதி திருவள்ளுவர் படத்தை வாங்கித் தருவதாக இருந்தால் சட்டமன்றத்தில் வைக்க ஆட்சேபனை இல்லை என்று கிண்டலாக தெரிவித்தார் அப்போதைய சபாநாயகர் கிருஷ்ணராவ். கிருஷ்ணராவ் கிண்டலுக்குச் சொன்னதை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஓவியர் வேணுகோபால் சர்மாவைக் கொண்டு திருவள்ளுவர் படத்தை வரையச் செய்தார். அதற்கு முன்பு வரையப்பட்ட திருவள்ளுவர் படங்களில் எல்லாம் திருவள்ளுவர் மத அடையாளங்களுடன் அமர்ந்திருப்பார்.

திருவள்ளுவரை முன்வைப்பதே இந்து சனாதனத்துக்கு எதிராகத்தான் என்பதால், எந்த மத அடையாளங்களும் இருக்கக் கூடாது என்று முடிவுசெய்தார் கருணாநிதி. அந்த ஓவியத்தை காமராஜர், அண்ணா என இருவரிடமும் காட்டி ஒப்புதலும் பெற்றார்.

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!
திராவிட இயக்கங்களுக்கும் திருக்குறளுக்குமான பந்தம் நீண்ட நெடியது. திருக்குறள் மாநாடு என்று பெரியார் நடத்திய மாநாடு அந்தக் காலகட்டத்தில் முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியது. பின் நாளில் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வும் திருக்குறளைக் கொண்டாடியது. அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, பேருந்துகளில் திருக்குறள் திட்டத்தை முழு வேகத்தில் அமல்படுத்தினார். இது மக்கள் மத்தியில் திருக்குறள் ஒரு முக்கிய பேசுபொருளாக மாற அடித்தளமிட்டதுடன், பட்டிதொட்டியெல்லாம் திருக்குறளைக் கொண்டுசேர்த்தது.

1969-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வரானபோது திருவள்ளுவரின் பிறந்தநாளைத் தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கருதினார். 1923-ம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழறிஞர் ஆய்வுக்கூட்டத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் திருவள்ளுவர் என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது. இதை மையமாக வைத்து , திருவள்ளுவர் பிறந்தநாளை பொங்கலுக்கு அடுத்த நாள் என நிர்ணயம் செய்தார் கலைஞர் கருணாநிதி. பொங்கல் என்பது தமிழர் திருநாள், விவசாயிகளின் பண்டிகை. எனினும் பொங்கல் திருநாளை சிலர் இந்துக்களின் திருநாளாக மட்டும் கட்டமைக்க முயற்சிகள் நடந்துவந்தன. இந்தச் சூழலில்தான் பொங்கல் என்பது அனைத்து மதத்தினருக்குமானது என்பதைக் குறிக்க பொங்கல் கொண்டாட்டத்துக்குள் திருவள்ளுவர் தினத்தையும் சேர்த்தார் கலைஞர் கருணாநிதி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அதோடு நில்லாமல் 1974-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். திராவிடக் கட்டடக் கலையை மையமாகக்கொண்ட வள்ளுவர் கோட்டத்துக்கு பல சிறப்புகள் இருக்கின்றன.

1975-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், `கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்' என முடிவெடுக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம், தமிழகத்தின் தெற்கு எல்லையான கன்னியாகுமரியின் அடையாளமாக விவேகானந்தர் பாறைதான் இருந்தது. வடநாட்டவர், அதுவும் ஓர் இந்து மதத் துறவியின் பெயரில் ஒரு பாறையை, தமிழ்நாட்டின் தென்கோடியின் அடையாளமாக வைத்திருந்தனர். இதை முறியடிப்பதற்காகவே பிரமாண்டமான வள்ளுவர் சிலையை அமைக்க முடிவெடுத்தார் கலைஞர். 1976-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, அந்தப் பணியும் அப்படியே முடங்கிப்போனது. மீண்டும் 1989-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றதும் வள்ளுவர் சிலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தினார் கலைஞர் கருணாநிதி.

1990 செப்டம்பர் 6-ம் தேதி வள்ளுவர் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கலைப்பு, பிறகு ஆட்சி மாற்றம் என்று பலதடைகள் வந்தன. இறுதியாக கலைஞர் ஆட்சியில், 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 133 அடி உயரத்தில் 7,000 டன் எடையுடன் உருவாக்கப்பட்டதை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. சுனாமிக்குக்கூட தாக்குப்பிடித்த திருவள்ளுவர் சிலை, இன்று கன்னியாகுமரிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே அடையாளமாகத் திகழ்கிறது. பட்டேல் உள்ளிட்ட தலைவர்களை அடையாளமாக நிலைநிறுத்த பெரும் சிலைகள் நிறுவப்படும் இந்தக் காலத்துக்கெல்லாம் முன்பாகவே திருவள்ளுவரை அடையாளமாக்கினார் கருணாநிதி.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
தமிழ்த்தாய்க்கு கோயில், தமிழ் வளர்ச்சிக்கென்று தனி துறை, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கம், கட்டாயப் பாடமாக தமிழ், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு இவையெல்லாம் தமிழையும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் இணைக்கும் கூற்றுகளில் சில. அடுக்குமொழி தமிழும் குறும்பு வசனங்களும் கருணாநிதியையும் தமிழையும் பிரிக்க முடியாது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.

கடவுள் எதிர்ப்பும் ராமானுஜரும்!


"அம்பாள் என்றைக்கடா பேசினாள்? அறிவு கெட்டவனே" என தன் காத்திரமான வசனங்களால் திராவிட சினிமா என்ற வகைமைக்குத் தனித்துவ அடித்தளமிட்டவர் கருணாநிதி. 2018-ம் ஆண்டு நடந்த கோவா திரைப்பட விழாவில் பா.ஜ.க இந்தத் திரைப்படத்தைத் திரையிட தடை விதித்ததில் இருந்தே இந்தப் படம் இன்றளவும் சமகால அரசியலுடன் பொருந்திப் போவதை உணர முடியும். "ஏய்..., பூசாரி.., முதலில் உன் ஜாதகத்தைக் கணித்துக்கொள்" எனக் கொந்தளித்த அதே கருணாநிதிதான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை தொலைக்காட்சித் தொடராக எழுதினார்.

இது குறித்து பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன், " கலைஞருடைய தொலைக்காட்சித் தொடரைப் பாராட்டி திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அர்ச்சகர்கள் வந்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவருக்கு மரியாதை செய்த புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. சுற்றிலும் வைணவ சின்னங்களுடன், பூணூலுடன் பிராமணர்கள் சூழ்ந்திருக்க கலைஞர் நடுவில் வீற்றிருக்கும் காட்சி வரலாற்றின் சுவாரஸ்யமான முரண்களில் ஒன்று எனப் பலரும் கருதலாம்.

திராவிட இயக்கத்தின் இலக்கு, லட்சியம் எல்லாம் சமூகநீதி என்பதற்கும், ஏற்றத்தாழ்வு நீக்கம் என்பதற்கும் அந்தப் புகைப்படத்தைவிட வேறென்ன சான்றாதாரங்கள் தர முடியும்" என்றார். `தென்பாண்டிச் சிங்கம்', `ரோமாபுரி பாண்டியன்', 'பொன்னர் சங்கர்' எல்லாவற்றிலும் வெளிப்படுவது கலைஞரின் போர்க்குணம்தான்.

கலைஞரின் நாடகங்கள்


"ஒரு நாடகம் 100 பொதுக்கூட்டங்களுக்குச் சமம்" என்பார் பெரியார். அதை மெய்ப்பிப்பது போலவே கலைஞர் கருணாநிதியின் நாடகங்கள் அமைந்தன. `நச்சுக்கோப்பை' முதல் `உன்னைத்தான் தம்பி' வரை கலைஞர் எழுதிய 19 நாடகங்களும் அவருடைய தீவிர திராவிட எழுச்சிக்கான செயல்பாட்டின் ஒரு பகுதிதான். படிப்பறிவற்ற மக்களிடம் கலைஞரின் நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கமே தமிழர்களை திராவிட உணர்வாளர்களாக மாற்றி இயக்கத்தையும், தி.மு.க-வையும் நோக்கிப் படையெடுக்க வைத்தன. `நச்சுக்கோப்பை' நாடகத்தை எழுதியபோது அவருக்கு வயது 18. செல்வ சந்திரா என்ற முதல் கதையை எழுதும்போது அவருக்கு 15 வயது.

கலைஞரும் ராஜ ராஜ சோழனும்


தஞ்சை பெருவுடையார் கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவைக்கொண்டாடிய கருணாநிதி, கோயிலின் உள்ளே ராஜ ராஜ சோழனின் சிலையை வைக்கப் போராடி, கடைசியில் கோயிலின் வாயிலில் அதை நிறுவினார். ராஜ ராஜ சோழன் போன்ற பேரரசர்களை தன் கதையின் நாயகர்களாக ஆக்கவில்லை என்பதை உற்றுக் கவனிக்க வேண்டியதிருக்கிறது என்கின்றனர் தமிழறிஞர்கள்.

ஒரு முறை கவிஞர் இளையபாரதி கலைஞர் கருணாநிதியிடம் அவரின் `பச்சைக்கிளி' என்ற கவிதை குறித்து வியந்து பேசியிருக்கிறார். உடனே அறையிலுள்ள கவிதை நூலை எடுத்து வரச் சொல்லி அந்தக் கவிதையை இளையபாரதியை வாசிக்கச் சொல்லியிருக்கிறார். வாசித்து முடித்த பிறகு சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, "நான் செத்த பிறகுதான்யா பாராட்டுவாங்க. அதுவரைக்கும் யாரும் பேசமாட்டாங்க" என்று கூறியிருக்கிறார்.

இந்த வார்த்தைகள் கலைஞரின் தமிழுக்கு மட்டுமல்ல அவரது அரசியல் வாழ்க்கைக்கும் பொருந்தும். சாவுக்குப் பிறகும் தன் தமிழால், தான் பேசிய அரசியலால் சண்டை செய்து கொண்டிருப்பவர்தான் கலைஞர் கருணாநிதி.!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 02, 2023 9:54 pm

`கார் விபத்து; கண்ணில் பாதிப்பு; கறுப்புக் கண்ணாடி’ - கருணாநிதியே பகிர்ந்த அந்தக் கதை



`கறுப்புக் கண்ணாடியும், மஞ்சள் துண்டும்' என்று சொன்னாலே அது மறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியைத்தான் எல்லோருக்கும் நினைவுபடுத்தும். கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதற்குப் பின்னால் ஒரு கதை இருப்பதைப்போல, கறுப்புக் கண்ணாடி அணிவதற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. வலியும் சோகமும் நிறைந்த சம்பவங்களால் ஆனது அந்தக் கதை! ``கையில் இருந்த பேனாவையும் தாளையும் வீசி எறிந்துவிட்டு, `ஐயோ’ என்று அலறினேன்’’ என்று கருணாநிதியே உடைந்து சொல்லும் அளவுக்கு அந்த நாளில் என்ன நடந்தது... அந்தக் கதைதான் என்ன?

மறைந்த முதல்வர் மு.கருணாநிதி அவர்களே பகிர்ந்த அந்த துயரக் கதை இங்கே...

``1953-ம் ஆண்டு, முகவை மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டுவிழாப் பொதுக்கூட்டம். அதில் கலந்துகொள்ள சென்னையில் மாலை மூன்று மணிக்கு காரில் புறப்பட்டேன். குறித்த நேரத்தில் பரமக்குடிக்குப் போய்ச் சேர வேண்டுமே என்பதற்காக கார் சற்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. திருச்சி அருகில் சென்றுகொண்டிருந்தபோது, கொம்பு நீளமாக உள்ள ஒரு கொடி ஆடு, காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால் கார் பழுதாகி, வேறொரு வாடகை காரை எடுத்துக்கொண்டு பரமக்குடிக்குப் புறப்பட்டேன்.

என்னுடன் காரில் அன்பில் தர்மலிங்கம், திருச்சி பராங்குசம், திருவாரூர் தென்னன் ஆகியோர் வந்தார்கள். மேடைக்குச் செல்லும்வரை மதுரை முத்து கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். நான் போனதும் பேசத் தொடங்கி, இரவு ஒரு மணிக்குக் கூட்டம் முடிவுற்றது.

மறுநாள் திருச்சி தேவர் மன்றத்தில் சிறப்புக் கூட்டம். திரும்பும்போது அசதியின் காரணமாக நானும் நண்பர்களும் கண்ணயர்ந்துவிட்டோம். வாடகை காரை ஓட்டிய தோழரும் சற்றுக் கண்ணயர்ந்து விட்டார். அதனால் திருச்சிக்கு வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதிக்கு அருகில் கார் மைல் கல்லில் மோதி, மைல் கல்லும் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதிக்கொண்டு நின்றது. இதற்கிடையே காருக்குள் இருந்த நாங்கள் உருண்டோம். நண்பர்களுக்குக் காயம் எதுவும் இல்லை. ஆனால், என் மூக்குக்குள்ளேயிருந்து ரத்தம் `குபு குபு’வெனக் கொட்டியது. முதலுதவி சிகிச்சை செய்துகொண்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் காலையில் முகமே வீங்கி, என்னுடைய இடது கண்ணில் வலி தொடங்கியது.

வலியோடு திருச்சி நிகழ்ச்சியிலும், கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சென்னைக்குத் திரும்பிய பிறகு, நண்பர் முல்லை சத்தி பிடிவாதமாக என்னை வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கேதான் மருத்துவர் கண்ணுக்குள் ஒரு சிறு நரம்பில் கீறல் ஏற்பட்டிருப்பதாகவும், குறைந்தது ஆறு மாத காலத்துக்காவது எழுதவோ, கூட்டங்களில் பேசவோ, படிக்கவோ கூடாது என்று கூறினார். பொதுவாழ்வில் ஈடுபட்ட எனக்கு அதையெல்லாம் கடைப்பிடிக்க முடியுமா என்ன?

அரசியலிலும், கலை உலகிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்., நடிகமணி டி.வி.நாராயணசாமி ஆகியோரின் விருப்பத்தை நிறைவேற்ற, சென்னையில் ஹோட்டல் ஒன்றில் `மணிமகுடம்’ நாடகத்தின் கடைசிக் காட்சிகளை எழுதிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று என் இடது கண்ணில் ஒரு ஈட்டி பாய்ந்தது போன்ற வேதனை! கையில் இருந்த பேனாவையும் தாளையும் வீசி எறிந்துவிட்டு, `ஐயோ’ என்று அலறினேன்.

எப்படியோ வீடு வந்தேன். வீட்டார் என்னைப் பார்த்துக் கதறினார்கள். இடது கண் பெரிதாக வீங்கிவிட்டது. குத்தல் வலி உயிரைப் பிளந்தது. தாங்க முடியாத வேதனை. சென்னையில் மிகச் சிறந்த மருத்துவர் முத்தையா வந்து பார்த்துவிட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றார். கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அறுவை சிகிச்சை நடைபெற்றது. பன்னிரண்டு முறை அறுவை சிகிச்சை நடத்தினார்.

1953-54-ம் ஆண்டிலிருந்து அந்தக் கண் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வேதனைகளைத் தாங்கிக்கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தேன். 1967-ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஏற்பட்ட பயங்கர கார் விபத்து ஒன்றில் நான் சிக்கி, கண்ணில் ஏற்கெனவே இருந்துவந்த வலி மேலும் அதிகமாயிற்று. அவ்வப்போது மருத்துவர்கள் முத்தையா, ஆப்ரகாம், இராமலிங்கம், மதுரை வெங்கடசாமி போன்றவர்கள் சிகிச்சை அளித்து வந்தபோதிலும், கண்ணில் ஊசியால் குத்துவது போன்ற வேதனை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. ஏன், அந்த வலி இன்றும் என்னை வேதனைப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது" என 2016, பிப்ரவரி 8-ம் தேதி மு.கருணாநிதி வேதனையுடன் இந்தச் சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது முதலே கறுப்புக் கண்ணாடியும் கருணாநிதியின் ஓர் அங்கமாகிவிட்டது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 02, 2023 9:59 pm

கருணாநிதியின் நூற்றாண்டு இலச்சினை வெளியீடு - குறியீட்டின் அர்த்தம் இதுதான்!



கருணாநிதி 100 Vikatan%2F2023-06%2Fef04e826-c5fb-4141-b08f-8f8f15081aeb%2FWhatsApp_Image_2023_06_02_at_13_50_52

”கலைஞரின் முகம்தான் நமது இலச்சினை, கலைஞரின் கொள்கைகள்தான் நமது லட்சியங்கள்” என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக இருந்து ஆட்சிசெய்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை, தி.மு.க அரசு ஓராண்டு காலத்துக்கு விமர்சையாகக் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு தரப்பிலும், தி.மு.க தரப்பிலும் இந்த நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் பரபரத்துக்கொண்டிருக்கின்றன. அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

நூற்றாண்டு விழாவை முன்னெடுத்து சிறப்பாக நடத்த அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள்கொண்ட குழுக்கள் விரைவில் அமைக்கப்படவிருக்கின்றன. அந்தக் குழுக்களின் மூலம் கருணாநிதி நிகழ்த்திய சாதனைகள், மக்கள் பணிகளைக் கொண்டாடும்விதமாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றன.

அதன் முதற்கட்டமாக இன்று கருணாநிதியின் இலச்சினை வெளியிடும் விழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில் `கலைஞர் நூற்றாண்டு இலட்சினை' வெளியிடப்பட்டது.

குறியீட்டின் அர்த்தம் என்ன?


கலைஞரின் வயது ’100’. எனவே, அதைப் பிரதிபலிக்கும் வகையில் `கலைஞர் 100' என்ற இலச்சினை, முடிவற்றதன்மையைக் (Infinity) குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இலச்சினை வெளியீட்டின்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கலைஞரின் முகம்தான் நமது இலச்சினை, கலைஞரின் கொள்கைகள்தான் நமது லட்சியங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முடிவற்றத்தன்மையைக் குறிக்கும் இலச்சினை குறித்துப் பேசும் தி.மு.க-வினர், ``கலைஞரின் புகழுக்கு முடிவில்லை, திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி இல்லை, சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கலைஞர் கொண்டுவந்த ஒவ்வொரு திட்டமும் முடிவில்லாமல் இந்த திராவிட ஆட்சியில் தொடரும் என்பதைக் குறிக்கும் வகையில்தான் இப்படியான இலச்சினை வடிவமைக்கப்பட்டிருக்கிறது" என்கின்றனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக